Home Blog Page 244

ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

madurai govt land sale - 2026
#image_title

டி எஸ் வெங்கடேசன்

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம் ஆவார்.  இப்போது இவர் மற்றொரு புகாரை அளித்துள்ளார். அதில் சுமார் 1,200 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அமலாக்கத் துறை, சிபிஐ, தமிழக டிஜிபி, மதுரை காவல் ஆணையர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளார்.

காண்க : https://www.facebook.com/groups/2833924983556597/permalink/3797757177173368/?mibextid=Nif5oz

இம்மாதம் 29ம் தேதியிட்ட இந்த மனுவின் பிரதி கட்டுரையாளரின் பார்வை வசம் உள்ளது. அதில் தே தேவசகாயம் ´மதுைர தாலுக, மதுரை மாவட்ட, தல்லாகுளம் கிராமத்தில் சர்ச்க்கு சொந்தமான, 31 ஏக்கர் 10 சென்ட் அதிக மதிப்புள்ள நிலத்தை ரூ 1200 கோடி ரூபாய்க்கு  கிரிமினல் சதி, ஏமாற்று,மோசடி செய்தல் மற்றும் முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக சிஎஸ்ஐ ( தென்னிந்திய சர்ச் மதுரை ராமநாதபுரம் மறைமாவட்டத்தின் பதிவாளராகப் பதவி வகித்த வழக்கறிஞர் சி பெர்ணான்டஸ்,  தற்ேபாது தென்னிந்திய திருச்சைபயின்) பொது செயலாளர் , தி.ஜான்சன் . மதுரை- ராம்நாடு மறை மாவட்டத்தின் சொத்து அதிகாரியாக பதவி வகித்து வந்த, தற்போது மதுரை-ராமநாதபுரம் மறைமாவட்டச் செயலாளர் மற்றும் வேறு சிலர் மீது புகார் அளித்துள்ளார்.

தென்னிந்திய திருச்சபை மற்றும் மதுரை ராமநாதபுரம் மறை மாவட்ட உறுப்பினராக உள்ளதாகவும், கிறிஸ்துவ சீர்திருத்த மக்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ள தே. தேவசகாயம் கிறிஸ்துவ திருசபை அமைப்புகளின் முறைகேடுகளை, சொத்துக்களை மடைமாற்றி விற்பது, கையாடல் உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராடி வழக்காடி வருகிறார்.

மனுவில் “ மதிப்பு மிக்க நிலமான சர்வே எண் 163/சி(9.75 ஏக்கர்) 163/பி (160 ஏக்கர்) 163/ஜி (13.75) ஏக்கர்  மற்ரும் 334 (6 ஏக்கர் ஆகியவற்றில் உள்ள அனைத்து ஏசி 31.10 சென்ட் நிலம் மதுரை வட்டம், மாவட்டம் தல்லாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சர்வே எம் 6/2,3,4,5, மற்றும் 6 ஆகியவை முதலில் மாநில அரசால் கிறிஸ்துவ என்ஜிஒக்கு வெளிநாடுகளின் அமைப்புகளுக்கான அமெரிக்க கழகம் என அழைக்கப்பட்ட தற்போது உலக அமைச்சக அமைப்பான ஐக்கிய திருச்சபை கழகத்துக்கு ( American Board of Commissioners for Foreign Mission (ABCFM) now United Church Board for World Ministries (UCBWM) ஒதுக்கப்பட்டதாக கூறுகிறார். 

ஏழை பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தொழிலகங்களை நிறுவவும், தையல் , ஜரிகை வேலை, கைப்பின்னல் (எம்பிராய்ரி) தோட்டக்கலை, கோழி வளர்ப்பு மற்றும் பால் பண்ணைத் தொழில் ஆகியவற்றில் பயிற்சி அளித்து அதிகாரம் மளிக்கும் வகையில் அமெரிக்க மிஷினின் அப்போதைய அலுவலக பொறுப்பாளரின் வேண்டுகோளை ஏற்று அரசு வழங்கியது.  அத்துடன் புத்தகம் கட்டுதல், நெசவுத் தொழில் மற்றும் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கத்துடன் நிலம் நிபந்தனைகளுடன் கொடுக்கப்பட்டதாக தேவசகாயம் தெரிவிக்கிறார்.

இதற்காக 1912ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி 31.10ஏக்கர் நிலத்தை அமெரிக்க மிஷனுக்கு அரசு ஒதுக்கியது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சர்ச் ஆப் செளத் இந்தியா மதுரை –ராமநாதபுரம் மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.  இதன் கட்டுப்பாட்டின் கீழ் 24 மறைமாவட்டங்களில் மதுரை –ராமநாதபுரமும் ஒன்று.

“குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கறிஞர் பெர்ணர்ன்டஸ், பதிவாளராக பதவி வகித்த ரத்தின ராஜா, தற்போதைய தென்னிந்திய திருச்சபையின் பொது செயலாளராகவும் உள்ள ஜான்சன்,  மதுரை-ராமநாதபுரம் மறை மாவட்டத்தின் சொத்து அதிகாரி பதவி வகித்து, தற்போதை அதன் செயலாளராக இருக்கும் இஸ்ரேல் இணைந்து  சில நபர்களுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டு சட்ட விரோதமாக என்ஜிஓக்கு வழங்கப்பட்ட நிலத்தை நிபந்தனைகளுக்கு புறம்பாக விற்பனை செய்து பணம் ஈட்டியுள்ளதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.  மேலே கூறப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியில் வணிக வளாகத்தை கட்டி அதை வாடகைவிட்டு வணிகர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான கோடிகளை பகடியாக ( சட்ட விரோத வைப்புத் தொகையாக) பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்.

“இந்த 31.10 ஏக்கர் நிலத்தை பொறுத்த வரையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மூன்றாம் நபர்களுக்கு  ( தல்லாக்குளம் எஸ் ஹூசைன் காதர் -4-2-2008ச தல்லாகக்குளம் ஷ்ரேயஸ் அறக்கட்டளை -16-2-2008, ஐஐஎஃப்எல் ரியால்டி -15-2-2008)ஆதரவாக விற்பனை பத்திரங்களை உருவாக்கியுள்ளனர். இந்த சட்ட விரோத பரிவர்த்தனைக்களுக்கு மேற்குறிப்பட்டவர்கள் காரணம் என்றும், அவர்கள் தென்னிந்திய திருச்சபை மற்றும் தென்னிந்திய திருச்சபை அறக்கட்டளை சங்கம் மற்றும் அப்போதைய மதுரை ராமநாதபுரம் மறைமாவட்ட பேராயர் மற்றும் பொருளாளர்  ஜி வி சவாரி மூலம் தவறான புகார்களை அளித்துள்ளனர் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல கோடி ரூபாய்களை கருப்புப் பணமாக பெற்றுள்ளனர் என்றும், உண்மைகளை மறைத்து வீடு கட்டும் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாருக்குள்ளாகி உள்ளவர்கள்  344க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி 100 கோடி ரூபாய்க்கு மேல் அதாவது கடை ஒன்றுக்கு ரூ 30 லட்சம் வீதம் வியாபாரிகளிடமிருந்து99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்றுள்ளனர்.  இது கிட்டதட்ட சர்ச் நிலங்களை விற்பனைச் செய்வதற்கு ஈடாகும்.  இதன் மூலம் அவர்கள் பல நூறு கோடி ரூபாய அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும் தேவசகாயம் கூறுகிறார்.  இவற்றின் இன்றைய மதிப்பு தோராயமாக ரூ 1200 கோடி என்றும் கூறுகிறார்.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்ததாகவும் டிவிஷன் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு 31.10 ஏக்கர் நிலம் , நில நிர்வாக ஆணையரால் விசாரிக்கப்பட்டு அவை மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். புகார் கூறப்பட்டவர்கள் பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகளை வீடு, நிலம், தங்கம் போன்றவற்றை வாங்கி குவித்துள்ளதாகவும் இவற்றை உடனடியாக பறிமுதல் செய்து காவல்துறையினர் கையகப்படுத்த வேண்டும் என்றும் அதில் கோரிக்கை வைத்துள்ளார்.  இவர்கள் மீது 120 குற்றச் சதி, ஏமாற்றுதல், மோசடி, பண துஷ்பிரயோகம், ஆட்மாறறாட்டம், நில அபகரிப்பு, சட்ட விரோத பணபரிவர்த்தனை உள்ளிட்ட குற்றங்களுக்காக குற்ற வழக்குப் பதிந்து சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தேவசகாயம் தெரிவித்துள்ளார்.

பாரதத்தின் வளத்தை கேள்விப்பட்டு வர்த்தகம் புரியும் போர்வையில்  வந்த ஆங்கிலயேர்கள், அனைத்துயம் சுரண்டி, மக்களிடையே பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தி சுகம் கண்டனர். சுபாஷ் சந்திர போஷ், கோகலே, வீரர் சாவர்க்கர், வஉசி, பாரதி, வாஞ்சிநாதன், வ வே சு, நீலகண்ட பிரமசாரி போன்ற தீவிர வாத சிந்தனைக் கொண்டவர்களின் போராட்டம், சிப்பாய் கலகம், மக்களிடையே கடும் எதிர்ப்பு காரணமாக ( ஆளுநர் ரவி கூறியது போல) நாட்டை விட்ட ஓட முடிவெடுத்தனர். போகும் முன்பாக அரசு நிலங்களை கிறிஸ்துவ என்ஜிஓக்கள், தனிநபர்களுக்கு அவர்கள் வசித்து வந்த பங்களாக்கள், வீடுகள், தோட்டம் துரவுகளை, அரசு நிலங்களை தானமாகவும், குறைந்த கட்ட குத்தகைக்கும் கொடுத்தனர். சில நிபந்தனைகளை விதித்தனர். காலப் போக்கில் இவை பல கைமாறி தனியார் பட்ட நிலங்களாக மாறிவிட்டன. ஆனால் தேவசகாயம் போன்றவர்கள் ஆதாரங்களுடன் கிறிஸ்துவ என்ஜிஓக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு நிபந்தனைகளுக்கு எதிராக விற்கப்படுகின்றன என்பதை நீதிமன்றம் மூலம் உலகுக்கு எடுத்துரைத்து வருகிறார்.

இவரைப் போன்றவர்கள் ஈடுபட்டால், மதமாற்ற வியாபாரிகளின் கைவசம் இதுபோன்று உள்ள நிலங்கள், சொத்துக்களை மீட்டு அரசுக்கு கொடுக்க முடியும் என்பது பெரும்பலானோரின் ஆதங்கமாக உள்ளது. இந்துக்களின் கோயில்கள் மீது இஸ்லாமியர்கள் மசூதிகளை கட்டி உரிமை கொண்டாடி வருவது அயோத்தியா ராம புண்ணிய பூமி மீட்புக்கு புிறகு வேகமெடுத்துள்ளது. காசி, மதுரா இடங்கள் தொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இதுபோன்ற புகார்கள் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆ.ராசாவின் ‘லூஸு’ பேச்சு; பல்லு படாமல் மெல்லக் கடிதோச்சிய பழனிசாமி!

annamalai stalin edappadi
அண்ணாமலை – ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

‛‛எம்ஜிஆர்., குறித்து 2ஜி ஊழலில் சிறை சென்ற திமுக., எம்பி., ஆ.ராசா கூறிய ‘லூஸு’ விமர்சனம் சமூகத் தளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களைப் பெற்று வந்த நிலையில், இரு நாட்கள் தாமதமாக, ‘ஆ.ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது” என அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். ஒரு லூஸு என மிகவும் தரம் தாழ்ந்த வகையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் திமுக.,வின் 2ஜி ஊழல் புகழ் ஆ.ராசா. அவரது பேச்சு சமூகத் தளங்களில் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியது. குறிப்பாக, அதிமுக.,வினர் மட்டுமல்லாது, பாஜக.,வைச் சேர்ந்தவர்களும், எம்.ஜி.ஆர் ரசிகர்களும் ஆ.ராசாவுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து, கருத்துகளைப் பகிர்ந்தனர்.

ஆனால் இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, கண்டனக் கூட்டங்களை நடத்தி, மிகப் பெரும் அளவில் தங்களை திமுக.,வின் முழுமுதல் எதிர்ப்பாளர்கள் என்று காட்டிக் கொள்ள வேண்டிய, எம்.ஜி.ஆரை., வைத்து அரசியல் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கக் கூடிய அதிமுக.,வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மிகவும் சாவகாசமாக வெறும் ஒரு சாதாரண கண்டனச் செய்தியை மட்டும் தனது எக்ஸ் தளப் பதிவில் வெளியிட்டார். இது எம்.ஜி.ஆர். ரசிகர்களை மேலும் கோபத்தில் தள்ளி விட்டுள்ளது.

ஊழல்வாதிகள் என்பது குறித்து தனது பேச்சினூடே ஜெயலலிதாவையும் போகிறபோக்கில் பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை சொன்னதற்காக, கூட்டணியையே முறித்துக் கொண்டு அரசியல் செய்த அதிமுக.,வினர், இப்போது தங்களது பரமை வைரிகள் என்று சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கக் கூடிய திமுக.,வினரின் எம்.ஜி.ஆர்., எதிர்ப்புப் பேச்சுகளை வாய் மூடி மௌனியாகக் கேட்டுக் கொண்டு, ‘பல்லு படாமல் சொல்லு சுடாமல் மெல்லக் கடிதோச்சி மயிலிறகால் வருடிக் கொடுக்கின்றனர் என்று அதே எக்ஸ் தளப் பக்கங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். இதன் மூலம், திமுக.,வின் முழு எதிர்ப்பாளர்கள் பாஜக.,வினர் தானே தவிர, அதிமுக., அல்ல என்றும், திமுக.,வும் அதிமுக.,வும் பங்காளிகள்தான் என்றும் நிரூபிக்கப் பட்டிருப்பதாக கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

திமுகவினையும் தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலினையும் எதிர்த்து முழுமூச்சாக அரசியல் செய்ய வேண்டிய எடப்பாடி பழனிசாமி, வாய் மூடி மௌனியாக இருக்கும் இடம் தெரியாமல் சென்று கொண்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உக்கிரமான அரசியலை மேற்கொண்டு இருந்தார். அப்போது எதிர்க்கட்சி என்றால் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்ற கேள்வியை வேறு எழுப்பினார். ஆனால் இன்று ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் எதுவும் செய்யாமல், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக அவியல் கிண்டி கொண்டிருப்பதைப் பார்த்து தமிழக வாக்காளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எம்ஜிஆர்., குறித்து பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்தும், அதற்கு எடப்பாடி பழனிசாமி சமூகத் தளத்தில் தெரிவித்த சாதாரண கண்டனமும்…

எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது…

இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் , என்றும் இன்றும் மக்கள் மனங்களில் இதயதெய்வமாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற மாண்புமிகு பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் குறித்து திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆண்டிமுத்து ராசாவின் வாடிக்கை, அவர் பேசிய பாணியில், அவரைப் போல் அல்லாமல் , பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் தெரியும் என்றாலும், தரம் தாழ்ந்த திமுக அளவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் தரம் தாழாது .

இந்த விடியா திமுக ஆட்சியில், எனது தலைமையிலான கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதி அவர்களின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டியும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் , கழகத்தின் இதயதெய்வங்களான புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகழுக்கு இணையாக கருணாநிதியின் பெயரை என்ன முயற்சித்தும் உயர்த்த முடியவில்லை என்ற ஆற்றாமையில் தான் ஆண்டிமுத்து ராசா போன்றோர் இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதாக நான் கருதுகிறேன்.

வரலாறு நெடுக எங்கள் இதயதெய்வங்களை பிம்பச்சிறையிட திமுகவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் படுதோல்வியையே சந்தித்துள்ளன. அதே போல, இனிவரும் காலங்களிலும் திமுகவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மக்கள் மனங்களில் வாழும் இதயதெய்வங்களின் புகழை எள்ளளவும் குறைக்கமுடியாது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆண்டிமுத்து ராசாவிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். “கல்லை வடித்தால் அது வெறும் சிலை- அதை மக்கள் தொழுதால் மட்டுமே தெய்வம்”

ஏற்கெனவே, இதே ஆண்டிமுத்து ராசா எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து மிக மிக மோசமான முறையில் அறுவெறுப்பான அவதூறுக் கருத்துகளைப் பேசிய போதும், அதைக் கேட்டுக் கொண்டு ‘இது நல்லது இல்லீங்க’ என்ற அளவில் பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் காட்டாமல் சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி!

ஞானவாபியில் வழிபட… 31 ஆண்டு தடைகளுக்குப் பின் இந்துக்களுக்கு அனுமதி!

1760756 gyanvapi mosque - 2026

ஞானவாபியில் ஹிந்துக்கள் வழிபட, 31 ஆண்டுகளுக்கு தடைகளுக்குப் பிறகு தற்போது தடையை விலக்கி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்துக்களின் புனிதத் தலமான வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி, புனிதமான கோயிலை இடித்து கட்டப்பட்டதாகவும், அதில் இந்துக் கடவுளரின் சிலை இருப்பதாகவும், அதனால் தங்களை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இந்து மதத்தைச் சேர்ந்த சில பெண்கள் நீதிமன்றத்தை நாடினர்.

இதை அடுத்து, நீதிமன்றம் இது தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மசூதி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியாக ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புகளுடன் மசூதியில் தொல்லியல்துறை அறிவியல்பூர்வ ஆய்வை மேற்கொண்டது. அதன் ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தொல்லியல்துறை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் மசூதிக்குள் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதை சுட்டிக் காட்டியதாக தகவல் வெளியானது.

இது தொடர்பான வழக்கு இன்று வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் “ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதி அடிபாகத்தில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. காசி விசுவநாதர் கோவில் அறக்கட்டளை வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்க வேண்டும் பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என உத்தரவிட்டது.

இதை அடுத்து, அடுத்த ஏழு நாட்களுக்குள் பூஜைகள் நடத்தப்படும் என இந்துக்கள் தெரிவித்தனர். இந்து தரப்பு வழக்கறிஞர் சுதிர் திரிபாதி இதுகுறித்துக் கூறுகையில் “வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த 7 நாட்களில் எந்த நாட்களிலும் வழிபாடு தொடங்கப்படலாம்” என்றார்.

இந்து தரப்பினர் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் விஷ்ணு ஷங்கர் ஜெயின் “நாங்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வோம்” என்றார். மற்றொரு வழக்கறிஞர் சுபாஷ் நந்தன் சதுர்வேதி “இன்று பூஜை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மாவட்ட அதிகாரிகள் தீர்ப்பை ஒருவாரத்திற்குள் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது” என்றார்.

கடந்த 2021-ம் ஆண்டு ஹிந்துப் பெண்கள் சிலர், ஞானவாபி மசூதி தெற்குச் சுவரை ஒட்டி உள்ள இந்து தெய்வங்களை வழிபட அனைத்து நாட்களும் அனுமதிக்க வேண்டும் என வாராணசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் இருந்து இந்த விவகாரம் இந்திய அளவில் விசுவரூபமெடுத்தது. கடந்த 2022 ஏப்ரல் மாதம் நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அப்போது அங்கே சிவலிங்கம் காணப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். ஆனால் மசூதி நிர்வாகம், அவர்கள் கூறும் பகுதி ஒரு நீரூற்று பகுதி என்றும், மசூதியில் தொழுகை நடத்த வருபவர்கள், கை கால் கழுவதற்கான தொட்டியில் நீர் நிரப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

ஆனால், சிவலிங்கத்தை நீருக்குள் அழுத்தி, அதில் முஸ்லிம்கள் கால் கழுவி வருவதாக இந்துக்கள் தரப்பு தெரிவித்ததை அடுத்து இந்தப் பிரச்னையின் அடி ஆழத்தை மனதில் வைத்து உச்சநீதிமன்றம் அந்த இடத்தை சீல்வைக்க அதே மாதம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

நம்ம ஊரு சுற்றுலா: ஆத்துப்பாக்கம் சரசுவதி ஆலயம்

athupakkam sarasswathi temple - 2026
#ஆத்துப்பாக்கம் சரசுவதி கோயில் | படம்: சரசுவதி கோயில் மண்டபப் படிக்கட்டில் எங்கள் மாணவர்கள் குழு

5. ஆத்துப்பாக்கம் சரசுவதி ஆலயம்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          பெரியபாளையம் கோவிலில் இருந்து வெளியில் வந்து பிரதான சாலையில் ஒரு தேநீர்க்கடையில் அனைவரும் தேநீர் அருந்தினோம். அப்போது மணி காலை 0830. ஆத்துப்பாக்கம் சரசுவதி கோயில் அங்கிருந்து திருப்பதி செல்லும் சாலையில் சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பிரதான சாலையில் இடது புறம் திரும்பி சிறிது தூரம் சென்றால் இந்தக் கோயிலைக் காணலாம். இது ஒரு தனியார் கோயில்.

          வடசென்னைப் பகுதிகளில் இருந்து, குறிப்பாக பெரம்பூர், மாதவரம் பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் குழுக்கள் உண்டு. இந்தக் குழுக்களுக்கு முன்னால் ஒரு வேனில் உணவுப் பொருட்கள், அடுப்பு, சமையல் பாத்திரங்களுடன் மற்றொரு குழு செல்லும். பாதயாத்திரை வருபவர்களுக்கு காலை, மதியம், இரவு என உணவு அளிப்பது இவர்களின் பணி. இவ்வாறு யாத்திரிகர்களுக்கு சமைத்துப்போடும் ஒரு இடமாக இந்த சரசுவதி கோயில் இருந்திருக்கிறது.

          சமையல் செய்யத் தேவையான இடம், சுமார் 50 அல்லது 60 பேர் சாப்பிட ஒரு கூடம், கழிப்பறைகள், குளியலறைகள், தண்ணீர் வசதி அனைத்தும் இங்கே உள்ளது. அதோடு ஒரு சரசுவதி கோயிலும் இருக்கிறது. சரசுவதி சன்னிதிக்கு எதிரே சுமார் 50 பேர் அமர்ந்து பூஜை அபிஷேகங்களைக் காண ஒரு கல் மண்டபமும் கட்டியிருக்கிறார்கள். நான் அந்தக் கோயிலுக்கு மூன்று நான்கு முறை சென்றிருக்கிறேன்.  என்னுடன் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிலர் வருவார்கள். என் குடும்பத்தினரும் வருவார்கள். இரண்டு நாட்கள் முன்னதாக கோயிலுக்குச் சென்று நாங்கள் வரப்போவதைச் சொல்லி அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்வோம். நைவேத்தியத்திற்கு இரண்டு வகை சாதம் பிரசாதமாகச் செய்யச் சொல்லுவோம்.

          அச்சமயத்தில் அங்கே ஒரு இளவயது அர்ச்சகர் இருந்தார். அந்த அத்துவானக் காட்டில் அவர் தனது மனைவி, கைக்குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். அருகில் வீடுகள் கிடையாது; வீடு, கடைகள் எல்லாம் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால்தான் இருக்கும். இருந்தாலும் அந்த இளைஞர் கடவுளுக்குச் சேவை செய்து வந்தார்.

          நாங்கள் சென்றதும் கோயிலை சுத்தம் செய்வோம். கோயில் சுத்தமாகத்தான் இருக்கும். இருந்தாலும் வெட்ட வெளியில் இருப்பதால் தூசு, இலை தழைகள் சிதறிக்கிடக்கும். மாணவர்கள் ஆர்வமாக இந்த சுத்தம் செய்யும் வேலையைச் செய்வார்கள். அர்ச்சகர் அபிஷேகம் செய்யும்போது, சரசுவதி, அம்பாள் ஸ்லோகங்கள், பாடல்கள் எல்லாம் பாடுவோம். பூஜை முடிந்ததும் மாணவர்கள் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து அர்ச்சகர் ஆசீர்வாதம் செய்து பிரசாதம் தருவார். பள்ளியிறுதித் தேர்வில் நன்றாகத் தேர்வு எழுதுமாறு வாழ்த்துவார்.

          பின்னர் அனைவரும் அமர்ந்து சக்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம், எலுமிச்சை சாதம், புளிசாதம் போன்ற பிரசாதங்களை உண்போம். குளியலறை, கழிப்பறை எல்லாம் இருப்பதால் சவுகரியம். அர்ச்சகருக்கு சம்பாவனை செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சிறுவாபுரி முருகனைத் தரிசிக்கச் சென்றோம்.

அயோத்தி எங்கள் தாய் வீடு: ராமனை தரிசிக்க குவியும் தென்கொரியர்கள்!

ayodhya dham railway station - 2026
#image_title

கொரிய புராணத்தின் படி, அயோத்தியைச் சேர்ந்த இளவரசி ஒருவர் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படகில் கடலைக் கடந்து, கொரியாவுக்கு 4,500 கிலோமீட்டர் பயணம் செய்து, வட ஆசிய நாட்டில் கயா இராச்சியத்தை நிறுவிய கிம் சுரோவை மணந்தார். இளவரசி, சூரிரத்னா, பின்னர் ராணி ஹியோ ஹ்வாங்-ஓக் ஆனார்.

இந்தக்கதை இந்தியாவில் அரிதாகவே அறியப்படுகிறது, அல்லது தென் கொரியாவில் சுமார் 60 லட்சம் மக்கள் தங்களை சூரிரத்னாவின் வழித்தோன்றல்களாகக் கருதுகிறார்கள், அயோத்தியை தங்கள் தாய்வீடாகக் கருதுகிறார்கள். எனவே அவர்களில் பலர் ஜனவரி 22 அன்று தங்கள் வீடுகளில் இருந்து ஆன்லைனில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஆர்வத்துடன் பார்த்தது இயல்பான ஒரு செய்தியாகிப் போனது.

இப்போது அவர்கள், அயோத்தியில் பிரமாண்டமான புதிய ராமர் கோவில் வளாகத்தை அருகில் இருந்து பார்ப்பதற்காக நெடுநாட்கள் காத்திருக்க முடியாது. அதனால் இந்தியர்களுடன் போட்டி  போட்டுக் கொண்டு சாரிசாரியாக அயோத்திக்கு வருகிறார்கள். 

காரக் குலத்தைச் சேர்ந்த பலர் ஒவ்வோர் ஆண்டும் அயோத்திக்கு வருகின்றார்கள். உத்தரப்பிரதேசம் தென்கொரியா இடையேயான கூட்டு முயற்சியில் 2001 ஆம் ஆண்டு அயோத்தியில் சரயு நதிக்கரையில் அமைக்கப்பட்ட ராணி ஹியோ ஹ்வாங்-ஓக் ராணியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர். 

அரசாங்கம் மற்றும் தென் கொரியாவில் உள்ள கிம்ஹே நகரம் இந்த வகையில்  நெருங்கிய தொடர்புடன் திகழ்கிறது.

மத்திய காரக் கிளான் சொசைட்டியின் பொதுச்செயலாளர் கிம் சில்-சு இதுகுறித்துக் கூறுகையில், “அயோத்தியை நாங்கள் எங்கள் பாட்டியின் வீடாகப் பார்ப்பதால் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்றார். அயோத்தியில் உள்ள  ராணி ஹியோ மெமோரியல் பூங்காவிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலில், ஜன.22 அன்று நடைபெற்ற ராம் லல்லாவின் புதிய விக்ரஹத்தின் ‘பிராணப்பிரதிஷ்டா’ விழாவில் கலந்து கொண்டவர்களில் அவரும் ஒருவர்.

2,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்தப் பூங்காவில் தியான மண்டபம், ராணி மற்றும் அரசருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரங்குகள், பாதைகள், நீரூற்று, சுவரோவியங்கள் மற்றும் ஆடியோ வீடியோ வசதிகள் உள்ளன. பெவிலியன்கள் டைல்ஸ் சாய்வான கூரையுடன் வழக்கமான கொரிய பாணியில் கட்டப்பட்டுள்ளன.

“ஒவ்வோர் ஆண்டும் அயோத்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருகிறோம், இந்த முறையும் புதிய ராமர் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளோம். விழாவை ஆன்-லைனில் பார்த்தோம், என்ன ஓர் ஆனந்தமயமான உணர்வு. நான் பழைய தற்காலிக கோவிலுக்கு சென்றதில்லை. ஆனால் இந்தக் கோயிலின் வரலாற்று இடையூறுகள் தகராறுகள் பற்றி படித்துள்ளேன்,” என்றார் யு-ஜின் லீ. வரும் பிப்ரவரியில்  22 பேருடன் அயோத்திக்கு வர திட்டமிட்டுள்ளதாக, யு-ஜின் லீ, தென் கொரியாவில் இருந்து தொலைபேசியில் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

ராணி ஹியோ ஹ்வாங்-ஓக் கிம்ஹே ஹியோ குடும்பங்களின் முன்னோடித் தாயாக மதிக்கப்படுகிறார், பண்டைய கொரிய வரலாற்று நூலான  “சம்குக் யூசா”,  ராணி கி.பி 48 இல் கொரியாவிற்கு “அயோத்யா”விலிருந்து வந்ததாகக் கூறுகிறது. காரக் குலத்தின் கிம்ஹே ஹியோ குடும்பங்களின் முன்னோடித் தாயாக அவர் இன்றும் போற்றப்படுகிறார்.

எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில், தென் கொரிய தூதரகம் ஜனவரி 22 அன்று நடந்த புனித விழாவிற்கு இந்தியாவை வாழ்த்தியுள்ளது. “இந்த இடம் கொரியா-இந்தியா உறவுகளுக்கு ராணி ஸ்ரீரத்னா (ஹியோ ஹ்வாங்-ஓக்) இடையேயான திருமண இணைப்பின் அடிப்படையில் ஒரு பெரிய அடையாள முக்கியத்துவம் வாய்ந்தது. கி.பி 48 இல் கயா (கொரியா) வில் இருந்து அயோத்தி மற்றும் கிம் சுரோ,” என்று குறிப்பிட்டது. 

2015 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய முன்னாள் அதிபர் மூன் ஜே-இன் ஆகியோர் இந்த நினைவிடத்தை விரிவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

தென் கொரிய முதல் பெண்மணியான அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக், 2018 ஆம் ஆண்டு இந்தப்  பூங்கா அழகுபடுத்தும் பணியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். 2019 ஆம் ஆண்டில், ராணியின் நினைவாக ₹25 மற்றும் ₹5 அஞ்சல் தலைகளும் இந்தியாவால் வெளியிடப்பட்டன.

தென் கொரியாவில் தூதராகப் பணியாற்றிய இந்திய தூதர் என் பார்த்தசாரதி, சூரிரத்னாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை எழுதினார், “கொரியாவில் உள்ள அயோத்தி இளவரசியின் புராணக்கதை. இது கொரிய மொழியில் “பி டான் ஹ்வாங் ஹூ” அல்லது சில்க் இளவரசி என்று மொழிபெயர்க்கப்பட்டது. இது, சியோலில் வெளியிடப்பட்டது. பின்னர், நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகள் புத்தகத்தை வெளியிட்டது.

சீனாவைக் கண்டு பயப்பட வேண்டாம்; சீனாவைக் காட்டிலும் சிறப்பாகச் செய்ய அனுமதியுங்கள்: ஜெய்சங்கர்

jaishankar - 2026

சீனாவை கண்டு பயப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன். நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நான் என்னால் முடிந்ததைச் செய்வேன். சீனா ஒரு பெரிய பொருளாதார நாடு. இந்தியாவில் இரண்டு பிரச்னைகள் நிலவுகிறது. கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் மற்றும் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்து வருகிறது. இதற்காக, வணிக பாதையில் இந்திய கடற்படை இன்று பத்து கப்பல்களை நிறுத்தி உள்ளது. கடினமான சூழ்நிலைகளில் கூட, நாம் உண்மையில் உதவ வேண்டும். நம் சுற்றுப்புறத்தில் மோசமான விஷயங்கள் நடந்தால் பொறுப்பான நாடாக கருதப்பட மாட்டோம். 
ஜெய்சங்கர் (பாரத வெளியுறவுத் துறை அமைச்சர்)


கடினமான சூழ்நிலையில் அண்டை நாடுகளுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தினார். “இலங்கையின் நெருக்கடியில் உதவிய முதல் நாடு நாம்தான்” என்று அவர் கூறினார். சீனா என்ன செய்கிறது என்பதைப் பற்றிக் குறை கூறுவதை விட, “அதை விட சிறப்பாக செய்ய எனக்கு அனுமதியுங்கள்” என்பதே இந்தியாவின் பதில் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் மாணவர்களுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.  அப்போது,  பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்த சீனா தொடர்ந்து முயற்சித்து வருவதை சுட்டிக்காட்டி மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், “இது இந்தியாவின் அண்டை நாடு மற்றும் வளங்களை வரிசைப்படுத்தி தெற்காசியாவின் புவிசார் அரசியல் சூழ்நிலையை சீனாவின் வழியில் வடிவமைக்கப் போகிறது,” என்றார். .

மேலும் அவர் பேசுகையில்…  “பெய்ஜிங்கிற்கு நாம் பயப்பட வேண்டாம். நாம் போட்டியை வரவேற்க வேண்டும், அவர்களை விட சிறந்தவர்களாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்,” என்று இந்திய மேலாண்மை நிறுவனம் மும்பையில் மாணவர்களுடன் செவ்வாயன்று நடைபெற்ற உரையாடலின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறினார். 

உலகின் முக்கிய பொருளாதாரங்களில் சீனாவும் ஒன்று என்பதை ஒப்புக்கொண்ட ஜெய்சங்கர், பெய்ஜிங்கின் தந்திரோபாயங்களுக்கு புதுதில்லி பயப்படாமல், மற்ற தெற்காசிய நாடுகளுடன் தனது சிறந்த மற்றும் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று  கூறினார்.

கடினமான சூழ்நிலையில் அண்டை நாடுகளுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தினார். “இலங்கையின் நெருக்கடியில் உதவிய முதல் நாடு நாங்கள்” என்று அவர் கூறினார். சீனா என்ன செய்கிறது என்பதைப் பற்றி குறை கூறுவதை விட, “அதை விட சிறப்பாக செய்ய எனக்கு அனுமதியுங்கள்” என்பதே இந்தியாவின் பதில் என்று அவர் மேலும் வலியுறுத்தினார். 

எழுத்தாளர் விஜய் சௌதைவாலே நடத்தும் ‘டாக்டர் எஸ் ஜெய்சங்கருடனான உரையாடல் நிகழ்ச்சியின் போது,  செங்கடல் நெருக்கடி மற்றும் இந்தியாவின் அண்டை நாட்டு கொள்கை என்பதில் இத்தகைய கருத்துகள் வெளிவந்தன. 

கிழக்கு-மேற்கு வர்த்தகத்திற்கான முக்கிய வழித்தடமான செங்கடல் பகுதியில், வர்த்தக / சரக்குக் கப்பல்கள் மீதான, யேமன் – ஹூதி பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் தொடர்ச்சியான இடையூறுகளை சந்தித்து வருகிறது. இது எரிபொருள் மற்றும் செலவுகளைக் கூட்டுகிறது. நீண்ட பயணங்கள் மற்றும் தளவாடத் துறையின் திறன்களை  சிரமப்படுத்துவதால், நஷ்டத்தை  பெருமளவு கொடுத்து  வருகிறது. 

இந்நிலையில், ஜெய்சங்கர், இந்திய கடற்படையின் போர்க்கப்பல்களை செங்கடல் பகுதியில் வணிகக் கடற்படைக் கப்பல்கள் மீதான தாக்குதலைச் சமாளிக்க போர்க்கப்பல் நிலைநிறுத்துவது பற்றிப் பேசினார்.

 “எங்களுக்கு இரட்டைப் பிரச்சனை இருப்பதால் அதைச் செய்தோம்; எங்களுக்கு கடற்கொள்ளையர் பிரச்சனை உள்ளது, மேலும் ஏவுகணை ட்ரோன் பிரச்சனை உள்ளது. கடந்த இரண்டு நாட்களில், இந்திய கடற்படையின் கடல் ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா, இரண்டு கப்பல்களில் இருந்து 36 பணியாளர்களை மீட்டது, அவர்களில் 19 பேர் பாகிஸ்தானியர்கள்.” என்றார் ஜெய்சங்கர். 

மேலும், ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களின் குறிப்புகளைப் பயன்படுத்தி, மாணவர்களுக்கு ராஜதந்திரத்தை விளக்கினார் ஜெய்சங்கர். கோவிட் -19 இன் போது அண்டை நாடுகளுக்கு இந்தியா எவ்வாறு உதவியது என்பதற்கான உதாரணத்தை மேற்கோள் காட்டி, “இந்தியப் பெருங்கடலில் உள்ள பல நாடுகளுக்கு இராணுவ மருத்துவர்கள் உட்பட மருத்துவர்களை நாங்கள் அனுப்பினோம், அதனால்தான் நான் ராமாயணத்துடன் தொடர்பை ஏற்படுத்துகிறேன்” என்று கூறினார். 

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (37): இல்லறமும் துறவறமும்!

samskrita nyaya - 2026

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் -37

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன் 

கார்ஹஸ்த்ய சன்யாச பரீக்ஷா ந்யாய:

கார்ஹஸ்த்யம் – இல்லறம், சன்யாசம் – துறவறம், பரீட்சா – ஒப்பீடு.

இல்லறம் என்பது திருமணம் செய்து கொண்டு தம்பதிகள் இருவரும் இல்லற தர்மத்தைக் கடைப்பிடிப்பது. துறவறம் என்பது திருமணத்திலிருந்து விலகி, நிலையான இருப்பிடம் இன்றி சஞ்சரித்தபடி சமுதாயத்திற்கு ஞானத்தை போதித்து, தனிப்பட்ட ஆசைகள் இன்றி செயல் புரிவது. இந்த இரு புனிதமான ஆசிரமங்களில் எது உயர்ந்தது எது குறைவானது என்று விவாதிப்பது வீண் என்பது இந்த நியாயம் அளிக்கும் செய்தி. இவை பரஸ்பரம் ஒன்றுக்கொன்று கௌரவம் அளித்துப் பெறுபவை.

சன்யாச யோகம், கர்ம யோகம் இரண்டின் பலன்களும் வேறு வேறானவை என்று நினைப்பவர்களை கீதாசாரியன் இவ்வாறு விமர்சிக்கிறான்,

சாங்க்ய யோகௌ ப்ருதக்பால: ப்ரவதந்தி ந பண்டிதா: |
ஏகமப்யாஸ்தித சம்யக் உபயோர்விந்ததே பலம் ||

(பகவத்கீதை 5/4)

பொருள் – சன்யாச யோகம், கர்ம யோகம் இரண்டும் வேறு வேறு பலன்களை அளிக்கும் என்று எண்ணுபவர் முழுமையான அறிவு இல்லாதவர். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை நியமத்தோடு கடைப்பிடிப்பவர் இந்த இரண்டின் பலனான பரமாத்மாவை அடைவார்.

கர்ம, சன்யாச யோகத்தில் கிருஷ்ண பரமாத்மா கூறிய விஷயங்களே இந்த நியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளன என்று கருதலாம்.

சன்யாச ஆசிரமத்தில் இருப்பவர் இல்லற ஆசிரமத்தை உயர்வாகப் பேசுவார். இல்லறத்தில் இருப்பவர் துறவறத்தில் இருப்பவரை கௌரவிப்பார். அவர் பாதங்களில் விழுந்து வணங்குவார். ஏன்?

மனு ஸ்மிருதியில் இந்த ஆசிரமங்களின் விளக்கத்தைப் பார்க்கலாம் –

ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்தஸ்ச வானப்ரஸ்தோ யதிஸ்ததா |
ஏதே க்ருஹஸ்த ப்ரபவாஸ்சத்வார: ப்ருதகாஸ்ரமா: ||

(மனுஸ்ம்ருதி- 6/87)

பொருள் – பிரம்மச்சாரி, இல்லறம், வானபிரஸ்தம், துறவறம் இந்த நான்கும் வேறு வேறு ஆசிரமங்கள். இவர்கள் அனைவருக்கும் ஆதாரம் இல்லறத்தான். துறவறத்தில் இருப்பவருக்கும் பிரம்மச்சாரியாக வாழ்பவருக்கும் உணவளிக்கும் பொறுப்பு இல்லறத்தாருக்கு உள்ளது. 

மனு மகரிஷி இல்லறத்தின் உயர்வை இவ்வாறு குறிப்பிடுகிறார் –

யதாவாயும் சமாஸ்ரித்ய வர்தந்தே சர்வஜந்தவ:|
ததா க்ருஹஸ்தமாஸ்ரித்ய வர்தந்தே சர்வ ஆஸ்ரமா:||

(மனுஸ்ம்ருதி- 3/77)

பொருள் – அனைத்து உயிர்களும் காற்றை ஆதாரமாகக் கொண்டு வாழ்வது போல் அனைத்து ஆசிரமங்களும் இல்லறத்தானை அண்டி வாழ்கின்றன.

இல்லறத்தானே தினமும் மூன்று ஆசிரமத்தில் இருப்பவரையும் போஷிக்கிறான் அதனால் இல்லறத்தான் உத்தமமான ஆசிரமத்தில் இருக்கிறான். இல்லறத்தான் கடைப்பிடிக்கவேண்டிய முக்கியமான தர்மங்களில் அதிதிக்கு உபசாரசம் செய்வதும் ஒன்று. ஒரு இடத்தில் தங்காமல் அலைபவரை அதிதி என்பர்.

“அதிதி கச்சதி இதி அதிதி: ந வித்வதீ திதி: யஸ்ய ஸ: அதிதி:” – யாருக்கு இரண்டாவது  திதி இல்லையோ அவரே அதிதி எனபப்டுவார் என்பது அதிதி என்ற சொல்லின் விளக்கம்.

துறவி என்பவர் யார்? ஒரு இடத்தில் நிலையாகத் தங்காமல் கிராமம் கிராமமாக அலைபவர் பரிவ்ராஜகர். துறவறம் பூணுவதற்கான முதல் தகுதி இக லோக மற்றும்  பரலோக சுகங்களின் மீது கொள்ளும் திடமான வைராக்கியம். துறவிக்கு வீடு என்று ஒன்று இருக்காது ஆனால் நிலையான புத்தி இருக்கும். பொருட்களை சேர்த்து வைப்பதின் மீது ஆசை இல்லாமல், பரபிரம்மத்தின் மீது மனதை நிலை நிறுத்துவார். வெறும் பிச்சை எடுத்து வாழ்பவர் சந்நியாசி. தனியாக வாழ்ந்து பிச்சைக்காக மட்டுமே கிராமத்தில் நுழைவார்.

இவ்விதமாக புலனடக்கம், சுயநலமற்ற பணி என்பவை இல்லறம், துறவறம் என்ற இந்த இரண்டு ஆசிரமங்களுக்கும் மூல சூத்திரங்கள். இதில் எந்த ஆசிரமம் உயர்ந்தது? முக்திக்கு எது வழி வகுக்கும்? என்ற கேள்வி இந்த நியாயத்தின் முக்கியமான வாதம்.

சம்சாரத்தில் இருந்தபடியே தாமரை இலை மீது தண்ணீர் போல இருந்துகொண்டு இல்லற தர்மத்தை கடைப்பிடிப்பதில் ஆதரிசமாக இருந்து முக்தியைப் பெற்றவர்கள் பாரதிய வரலாற்றிலும் இலக்கியத்திலும் அநேகம் பேர் உள்ளனர். அதே போல் துறவறத்தில் இருந்து கொண்டு சமுதாயத்திற்குத் தேவையான வழிகாட்டுதல் புரிந்து உய்வடைந்தவர் பலர்.

ராஜ தர்மத்தைக் கடைப்பிடித்த ஞானியாகவும் ராஜ ரிஷியாகவும் பெயர் பெற்ற ஜனக மகாராஜா புராணங்களில் பிரசித்தமானவர். தன் அரசாட்சியில் குடிமக்களுக்குச் செய்ய வேண்டிய நன்மைகளை ஒரு புறம் யோசித்தபடி, ஞானிகளுக்குக் கூட ஞான போதனை செய்யும் சாமர்த்தியம் கொண்ட இல்லறத்தார் ஜனகர்.

சிறு வயதிலேயே சன்யாசம் ஏற்ற ஜகத்குரு ஆதி சங்கரர் தாய்க்கு கௌரவமளித்து, தாய்க்கு அளித்த வாக்குக்கு கட்டுப்பட்டு அவளுக்கு இறுதிக் கிரியை செய்தார். “நிரக்னி” (அக்னியை விட்டவன்) என்பது சந்நியாச தர்மம் ஆனாலும் கூட தாய்க்காக அதனை மீறினார். அதனால் சிலர் அவரை எதிர்த்தனர். பகிஷ்காரம் செய்தனர். காரியத்தைக் கடமையாக நிறைவேற்றிய உதாரணங்கள் எத்தனையோ உள்ளன.

நவீன பாரதத்தில் தன் உபன்யாசங்கள், எழுத்துக்கள் மூலம் உலகையே அசைத்த சுவாமி விவேகானந்தர் துறவறத்தில் இருந்து கொண்டு எத்தனையோ இல்லறத்தாருக்கு வழிகாட்டியாக விளங்கி அவர்களை கடமை வீரர்களாகச் செய்தார். அவர்களில் ராக்பெல்லர், மைசூர் மகாராஜா, க்ஷேத்ரீய மகாராஜ் போன்றோர் தத்தம் ஆசிரம தர்மங்களைக் கடைப்பிடித்தபடியே அனைவரின் போற்றுதல்களையும் பெற்றனர்.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தில் (RSS) பிரசாரக் என்ற (வெள்ளை ஆடை அணிந்த சந்நியாசி என்று சுவாமி சின்மயானந்தா புகழ்வார்) அமைப்பு உள்ளது. அவர்கள் திருமணம் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களும் சந்நியாசிகளைப் போலவே “காம்யானாம் கர்மணான்யாஸம்” என்பதற்கேற்ப சமுதாய நலனுக்காக பணி புரிவார்கள். பிரசாரக் எதனால் உயர்ந்தவர்? இல்லறத்தானாக இருக்கும் கார்யகர்த்தா எந்த விதத்தில் தாழ்ந்தவர்? என்று கேட்பது வீண் வாதம் என்பது இந்த நியாயம் எடுத்துரைக்கும் நியாயம்.

RSS ஐச் சேர்ந்த பிரசாரக் ஸ்ரீ மோரோபந்த் பிங்களேஜி இல்லறத்தில் இருந்துகொண்டு சமுதாய சேவை செய்தார். அவரை சமுதாயம் உயர்வாக மதிக்கிறது. அவர் சன்னியாசிகளை விட இல்லறத்தாரே உயர்ந்தவர் என்று கூறுவதற்கு ஒரு சம்பவத்தை உதாரணம் காட்டுவார். அவர் ஒரு முறை ரயிலில் பயணித்த போது உடன் பயணம் செய்த ஒருவர் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற கேட்டார். உத்தியோகம் என்று எதுவுமில்லை. சமுதாயப் பணி செய்கிறேன் என்று பதில் கூறினார். அப்படியா என்று கேட்டு சும்மா இருந்த அந்தப் பயணி அருகில் இருந்த இன்னொரு சங்க சாலக் ஸ்ரீ பிடே என்பவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார். பிடே இல்லற வாழ்க்கை வாழ்பவர். அவர்,   நான் ஒரு வக்கீல். வாராவாரம் சனி ஞாயிறுகளில் தவறாமல் பயணித்து பல சேவைப் பணிகளைச் செய்வேன் என்றார். அதற்கு அந்தப் பயணி மகிழ்ச்சியடைந்து அவரை கர்மயோகி என்று மெச்சினாராம்.

இல்லற தர்மம், சந்நியாச தர்மம் பரீக்ஷா நியாயம் என்ற இந்த நியாயத்தைப் பற்றி  புகழ்பெற்ற கதை ஒன்றை ஆச்சார்ய ரவ்வா ஸ்ரீஹரி அவர்கள் மேற்கோள் காட்டுவது வழக்கம்.. ஒரு ராஜ்ஜியத்தில் விஸ்வத்வஜன் என்ற ஜிஞ்ஞாசி (ஞானத்தில் விருப்பமுள்ளவன்) மகாராஜாவாக இருந்தான். இல்லற தர்மம், துறவற தர்மம் இரண்டையும் பற்றி பல நூல்களைப் படித்தாலும் அவனுடைய சந்தேகங்கள் தீரவில்லை. அவனுடைய ராஜசபைக்கு வந்த அறிஞர்களிடமும் துறவிகளிடமும்  இல்லற தர்மம் பெரியதா? சந்நியாசம் பெரியதா? முக்திக்கு எது வழிகாட்டும் என்று கேட்டு வந்தான்.

ஒரு நாள்  விஸ்வத்வஜனின் அரச சபைக்கு சிறந்த அறிவாளியான துறவி ஒருவர் வந்தார். அவரிடம்  நீண்ட காலமாகத் தன் மனதில் இருந்த கேள்வியைக் கேட்டான் மன்னன்.

அதற்குத் துறவி, அரசே, எந்த ஆசிரமமாக இருந்தாலும் கடைப்பிடிப்பவருக்கேற்ப கைவல்யம் கிடைக்கும். தத்தம் ஆசிரம தர்மங்களைக் கடைப்பிடிக்காதவருக்கு எதுவும் கிடைக்காது என்றார்.

ராஜா சந்தேகத்துடன் பார்த்ததைக் கண்ட  துறவி, தான் கூறியதை நிரூபிக்க விரும்பி, மன்னனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வேறு ஒரு ராஜ்யத்திற்குச் சென்றார். அங்கிருந்த அழகிய இளவரசியின் சுயம்வரத்திற்காகப் பல்வேறு நாடுகளிலிருந்து மன்மதனைப் போன்ற இளவரசர்கள் வந்தனர். ஆனால் இளவரசி அவர்கள் யாரையும் விரும்பாமல் இளம் சந்நியாசி ஒருவரை விரும்பி அவரது கழுத்தில் மாலையை அணிவித்தாள். ஆனால், அந்த இளம் துறவி அந்தப் பூவை தரையில் வீசிவிட்டு சென்றுவிட்டார். இளவரசி ஆச்சரியத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள்.

என் மகளைத் மணம் புரிந்து கொண்டால் உனக்கு பாதி ராஜ்ஜியம் தருகிறேன் என்றான் மன்னன். அந்த வார்த்தைகளை அலட்சியப்படுத்திய அந்த இளம் துறவி அங்கிருந்து சென்று விட்டார். மன்னரும் இளவரசியும் மறறோரும் அவரைப் பின்தொடர்வதை அறிந்த துறவி அருகில் இருந்த காட்டுக்குள் நுழைந்து மறைந்தார்.

இக்காட்சியைக் கண்ட விஸ்வத்வஜ மஹாராஜா வியப்படைந்தான். அழகும் செல்வமும் மிகுந்த இளவரசியை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிய இளம் துறவியின் வைராக்கியத்தை எண்ணி மனம் மகிழ்ந்தான். மீண்டும் விஸ்வத்வஜன் குரு சன்யாசியுடன் பயணத்தைத் தொடர்ந்தான். இரவு நேரம் நெருங்கியதும் இருவரும் ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்தனர்.

மன்னன் குளிரால் நடுங்குவதை அந்த மரத்தில் மனைவி குழந்தைகளுடன் வசித்த ஒரு ஆண் பறவை கண்டது. இவர்கள் நம் விருந்தாளிகள். இவர்களுக்குத் தேவையான வசதி செய்து தருவது இல்லறத்தாரான நம் கடமை  என்றெண்ணி ஒரு தீக்குச்சியை எடுத்து வந்து மரத்தின் கீழே போட்டது. அந்த நெருப்புக் குச்சியின் உதவியால் தீ மூட்டி இருவரும் குளிரைப் போக்கிக் கொண்டனர். வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களின் பசியைப் போக்க வேண்டும் என்று மரத்தின் மேலிருந்த பறவைகள் தீர்மானித்தன. என் மாமிசத்தை உண்டு சாப்பிட்டு அதிதிகள் திருப்தி அடையட்டும் என்று ஆண் பறவை நெருப்பில் விழுந்தது. இரண்டு பேருக்கும் என் கணவனின் இறைச்சியால் திருப்தி ஏற்படாது. நானும் விருந்தாக நெருப்பில் விழுவேன் என்று பெண் பறவையும் தீயில் குதித்தது. பின்னர் பறவைக் குஞ்சுகளும் தம் பெற்றோரின் வழியைப் பின்பற்றி அதிதிக்கு விருந்தோம்பல் செய்வதற்காக உயிரைத் தியாகம் செய்தன. 

துறவி, விஸ்வத்வஜனுடன் இந்த இரண்டு சம்பவங்களையும் குறித்து விரிவாக அலசினார். ஒரு இளம் துறவி அழகிய இளம் பெண்ணோடு கூட அரசாட்சியையும் துரும்பென உதறித் தள்ளினார். துறவறத்தின் மீது சற்றேனும் சலனம் இருந்தால் கூட அவர் அவ்விதம் செய்திருக்க மாட்டார் என்று கூறி சந்நியாசி புலனடக்கத்தைப் புகழ்ந்து பேசினார்.

இரண்டாவது கதையில் இல்லறத்தானின் கடமையை நிறைவேற்றுவதற்காக பறவையின்   குடும்பத்தில் இருந்த ஒவ்வொருவரும் உயிரைத் தியாகம் செய்தது வியப்பளித்தது. .

இல்லறத்தாராக இருந்தாலும் சரி துறவியாக இருந்தாலும் சரி ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பவர் முக்திக்கு தகுதியானவர் என்பதை நிரூபிக்கும் கதைகளை விஸ்வத்வஜன் கேட்டான். அவனுடைய ஐயங்கள் தீர்ந்தன. ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பது எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்தான்.

இந்த நீதிக் கதைகள் பகவத்கீதையின் கர்ம சந்நியாச யோகத்தில் உரையாசிரியர்களால் விரிவாகக் கூறப்படுகின்றன.

யோகசித்திகள் எவ்வாறு கிடைக்கும் என்று குறிப்பிடும் மேற்கோள்களில் கௌசிகருக்கு அகத் தூண்டலை அளித்த ஒரு இல்லத்தரசி மற்றும் தர்ம வியாதரின் கதை நாமறிந்ததே.

மனைவியின் தர்மத்தைக் கடைப்பிடித்து ஞானம் பெற்றாள் இல்லத்தரசி. பித்ரு தர்மத்தைக் கடைப்பிடித்து பெற்றோருக்குச் சேவை செய்து ஞானம் பெற்றார் தர்மவியாதர். அந்த இருவரையும் பார்த்து துறவறத்தில் இருந்த கௌசிகர் திகைத்தார் அல்லவா.

முடிவாக, இந்த நியாயம் கூறும் கருத்து ஒன்றுதான்.

ஸ்வேஸ்வே கர்மண்யாபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:| பொருள் – தத்தம் கடமைகளை சரியாகச் செய்பவன் இறைவனின் அருளைப் பெறுகிறான்.  எது பெரியது என்ற விவாதம் பொருளற்றது, பயனற்றது.

தேவை… எழுத்தாளர்- பதிப்பாளர் ஒழுங்காற்றும் சட்டம்!

bookfair stall2 - 2026

எழுத்தாளர்- பதிப்பாளர் ஒழுங்காற்றும் சட்டம்:
The Writers and Publishers Regulating Act

தமிழ் நாட்டில் எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் பெருகி வளர்ந்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இதன் வளர்ச்சியில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக்கண்காட்சி நடைபெறுவது வாசகர்களுக்கு ஒரு திரு விழா போல் பயன்படுகிறது. சென்னையில் 47 வது புத்தகக்கண்காட்சி ஜனவரி 3 முதல் ஜனவரி 21 வரை நடைபெற்று 10 கோடிக்கு புத்தக விற்பனையான செய்தி அறிந்து மகிழ்ச்சி.

நான் இப்போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பிரிஸ்கோ நகரிலுள்ள மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். அப்போது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் சிறுகதையைப் படித்து விட்டு இரவில் உறக்க வரவில்லை; காரணம் ஒரு எழுத்தாளருக்குப் பதிப்பாளரால் ஏற்பட்ட அவமான அதிர்ச்சியாகும். இந்த அவமானம் இனி வளர்ந்து வரும் காலத்தில் எந்த எழுத்தாளருக்கும் வரக்கூடாது என்னும் நோக்கில் இப்பதிவை எழுதியுள்ளேன்.

சென்னையில் பிரபஞ்சனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் குறிப்பிட்டது” எனக்கு இரண்டு வேளை உணவுக்கு உத்தரவாதம் கிடைத்தால் நான் இன்னும் பல படைப்புகளைத் தமிழுக்குத் தர முடியும்” என்று குறிப்பிட்டார். இவ்வளவு நாவலும், சிறுகதையும் எழுதியும் பதிப்பாளர்கள் ராயல் சொற்பானது என்று உணர முடிந்தது.
பதிப்பக வகைகள்:

  1. எழுத்தாளர்களிடம் படைப்புக்களை விரும்பி வாங்கி வெளியிடும் பதிப்பகங்கள்
  2. எழுத்தாளர்கள் பதிப்பகங்களைத் தேடிப் போய் படைப்புக்களை வெளியிட வேண்டியதால் வெளியிடும்
    பதிப்பகங்கள்
  3. எழுத்தாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நூல்கள்
    வெளியிடும் பதிப்பகங்கள்
    ஆனால் முதல் வகை பதிப்பகம் எழுத்தாளருக்குக் கொடுக்கும் ராயல்டி 10% கொடுக்கிறார்கள்.
    மற்ற பதிப்பகங்கள் ராயல்டி என்பதைக் கொடுப்பதே இல்லை. எழுத்தாளர்கள் தம் நூல் பதிப்பகத்தின் வழியாக வெளிவந்த மகிழ்ச்சியில் இன்றும் இருக்கிறார்கள்.இது பற்றித் தெரிந்து தான் எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் தேசாந்திரி பதிப்பகம் தொடங்கித் தம் நூல்களை விற்பனை செய்து வருகிறார்.
  4. எழுத்து இதழ் நடத்திய எழுத்தாளர் சி. சு செல்லப்பா தாம் எழுதிய நூல்களை விபனை செய்ய ஊரெல்லாம் சுமந்து வாயதான காலத்தில் சிரமப்பட்டார். அதுபோல் தாஸ்தாவெஸ்கி வாழ்க்கை வரலாற்றை மலையாளத்தில்
    பெரும்படவம் ஶ்ரீதரன் எழுதினார். அதில் தாஸ்தாவெஸ்கி பதிப்பாளரிடம் வாங்கிய பணத்துக்கு உரிய தேதியில் நூல் எழுதிக் கொடுக்க எதிர்கொண்ட நெருக்கடிகளை விவரித்துள்ளார். மலையாளத்தில் இது 4 லட்சம் பிரதிகள் விற்பனையாகியது. இதைக் கவிஞர் சிற்பி
    தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதை ஒரு பதிப்பகம் முதல் பதிப்பை வெளியிட்டு அரசு நூலாகத்துக்கு விற்பனை செய்து விட்டது.பெரும்பாலும் பதிப்பங்கங்கள் முதல் பதிப்பைப் போட்டு விற்பனை செய்து விடுவதால் இரண்டாம் பதிப்பு வராத பல நூல்கள் குவிந்து கிடக்கின்றன. கவிஞர் சிற்பி இம்மொழிபெயர்ப்பு நூல் இரண்டாம் பதிப்பை வெளியிட விரும்பியதால் எழுத்தாளர் சா. கந்தசாமி
    வேறொரு பதிப்பகத்தில் வெளியிட ஏற்பாடு செய்தார்.

இன்னும் ஒரு பிரச்சனை அரசு நூலகத்துக்கு நூல் விற்பனை என்பது 2015 வரை சரியாக நடந்தது. அதற்குப் பிறகு பதிப்பகங்கள் கூட்டணி அமைத்துப் பணம் கொடுத்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் செய்து சிறிய பதிப்பங்களை நசுக்கி விட்டார்கள். ஆனால் இன்னும் பலர் பணம் பெறாமல் சிரமப்படுகிறார்கள்.

எனவே தமிழக அரசும் மத்திய அரசும் பதிப்பகச் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், எழுத்தாளர் ராயல்டியை ஒவ்வொரு பதிப்பிக்கும் இலாபத்தில் விகிதாரத்தை வகுக்கவும், புத்தக விற்பனையை முறைப்படுத்தவும் வல்லுநர் குழு அமைத்துக்
கருத்துருப் பெற்று The Writers and Publisher Regulating Act உருவாக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும்.

இச்சட்டம் வந்தால் அனைத்துப் பதிப்பகமும் பதிவு செய்யப்படுவதால்எழுத்தாளர்- பதிப்பாளர் உரிமை காக்கப்பட்டு எழுத்துலகம் மதிப்பு அடையும் என்பது என் நம்பிக்கை. இது குறித்து நன்கு விபரம் அறிந்தவர்கள் இக்கோரிக்கையை இன்னும் வலுவான ஆதாரங்களுடன் அரசுகளுக்கு முன் வைக்க விரும்புகின்றேன்.

  • சுபாஸ் சந்திர போஸ்
    +91 94431 62085
    subassm1951@gmail.com

மாலத்தீவை நோக்கி நகரும் சீன உளவுக் கப்பல்! இந்தியாவின் நியாயமான அச்சம்!

chinese ship - 2026
#image_title

மாலத்தீவு நோக்கிச் சென்ற சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசிய கடலோரக் காவல்படையினரால் நிறுத்தப்பட்டது. இந்தோனேசிய கடலோர காவல்படை சீனாவின் “சியாங் யாங் ஹாங் 03” கப்பலை அதன் டிரான்ஸ்பாண்டரை மூன்று முறை அணைத்த பிறகு, சிவப்புக் கொடிகளை உயர்த்தி நிறுத்தியது.

இந்தக் கப்பல், இலங்கை வழியாக அடுத்த வாரத்தில் மாலத்தீவை நோக்கி நகரும் என்று கூறப்படுகிறது. எனினும், ஆராய்ச்சிக் கப்பல் என்ற பெயரில் இந்தியக் கடல் பகுதியில் சுற்றும் சீன உளவுக் கப்பல் குறித்து இந்தியா தனது அச்சத்தை வெளிப்படுத்தி வருகிறது. இது இந்தியப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் என்பதை இந்தியத் தரப்பு வெளிப்படுத்தி வருகிறது.

இதனிடையே, இந்தோனேசிய கடலோர காவல்படை (ஐசிஜி) அதன் தானியங்கி தகவல் அமைப்பை முடக்கியதால், மாலத்தீவுக்குச் செல்லும் சீன ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்தியதாக மாலத்தீவைச் சேர்ந்த ’அதாது’ ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. 

ஜனவரி 8 மற்றும் 12 க்கு இடையில் கப்பல், நாட்டின் கடல் வழியாக பயணிக்கும்போது, டிரான்ஸ்பாண்டரை மூன்று முறை அணைத்ததை அடுத்து இந்தோனேசிய அதிகாரிகள் இந்த நடவடிக்கை  எடுத்ததாக செய்திகள் வெளியாகின.

சீன அரசுக் கப்பலான “சியாங் யாங் ஹாங் 03” ஜனவரி 11 ஆம் தேதி சுந்தா ஜலசந்தி பகுதியில் ஐசிஜியால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அமெரிக்க கடற்படை நிறுவனம் தகவல் வெளியிட்டது. கப்பலில் இருந்த பணியாளர்கள் டிரான்ஸ்பாண்டரை அணைக்க மறுத்ததாகவும், அது தானாக உடைந்து விட்டதால் அணைக்க இயலவில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது..  

தானியங்கி அடையாள அமைப்பு டிரான்ஸ்பாண்டர்கள், மற்ற கப்பல்கள் மற்றும் கடலோர அதிகாரிகளுக்கு தானாகவே நிலை, அடையாளம் மற்றும் கப்பலைப் பற்றிய பிற தகவல்களை வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ICG – இந்தோனேஷிய கடலோர காவல்படை, சீனக் கப்பலில் ஏற முயற்சிக்கவில்லை, ஆனால் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தை விட்டு வெளியேறும்படி அது சீன கப்பலைக் கேட்டுக் கொண்டது என்று தி ஏசியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச கடல்சார் சட்டத்தின்படி, இந்தோனேசிய கடற்பகுதியில் உள்ள தீவுக்கூட்ட கடல் பாதைகளில் செல்லும் அனைத்து கப்பல்களும் இயங்கிக் கொண்டிருக்கும் டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

கடல் போக்குவரத்தை கண்காணிக்கும் தளங்கள் ஜனவரி 22 அன்று ஜாவா கடலில் கப்பலின் இருப்பிடத்தைக் காட்டியதாகவும், அதன் தற்போதைய இடம் தெரியவில்லை என்றும் மாலத்தீவின் ‘அதாது’ செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த மாதத் தொடக்கத்தில், சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS) ஒரு கட்டுரையை வெளியிட்டது: அந்தக் கட்டுரையின் தலைப்பு, “இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இரட்டை பயன்பாட்டு ஆராய்ச்சி செயல்பாடுகள் – என்பதாக இருந்தது. இது,. PLA நிறுவல்களுக்கு அருகில் இந்தக் கப்பல் சில மணி நேரங்கள் அல்லது நாட்களுக்கு இருளாக இருக்கும்’ என்று அது குறிப்பிட்டது.

“கடலின் இயல்பு நிலையில், அவை சிவப்புக் கொடிகளை உயர்த்தலாம். “ஏமாற்றுதல்” (தவறான அடையாளத் தகவலை வழங்குதல்) அல்லது “இருட்டாகப் போவது” (நீடித்த காலத்திற்கு தானியங்கு அடையாள அமைப்பு சிக்னல்களை முடக்குதல்) ஆகியவை முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளாகும். 

ஜனவரி 22 அன்று, மாலத்தீவு ஜனாதிபதி மொஹமத் முய்ஸு சீனாவிலிருந்து திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் – XIANG YANG HONG 03 – மாலே நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகத்  தகவல் வெளியானது. .

இதற்கு ஒரு நாள் கழித்து, மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியது, ஆனால், மாலத்தீவின் அதிகார பூர்வ செய்தியில், சீனக் கப்பல் மாலத்தீவு பிரதேசத்தில் ஆராய்ச்சி நடத்தாது என்று கூறியது. எனினும், இந்தியாவின் புவிசார் மூலோபாய நிபுணர் பிரம்மா செல்லனே, கப்பல் எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என்ற மாலேயின் கூற்று “நகைப்புக்கு உரியது” என்று குறிப்பிட்டார். 

“பிஎல்ஏ-இணைக்கப்பட்ட கப்பல் மாலத்தீவு கடற்பகுதியில் கடல்சார் ஆராய்ச்சியை மேற்கொள்ளாது என்று முய்ஸு அரசு கூறுவது நகைப்புக்குரியதுதான்! ஏனெனில் மாலத்தீவுகள் அத்தகைய செயல்பாட்டைக் கண்டறியும் திறனைக் கொண்டிருக்கவில்லை” என்று புவிசார் மூலோபாய நிபுணர் கூறினார்.

இந்தியக் கடல் படுகையில் இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த செயல்பாடுகளை அறிவதற்கும்,  இந்தியப் பெருங்கடல் படுக்கையை துல்லியமாக படமெடுப்பதிலும், நில அதிர்வு மற்றும்  புவியல் அளவீட்டுத் தரவுகளைச் சேகரிப்பதிலும் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக செல்லனே கூறினார். “மாலத்தீவுகள், அதன் புதிய இஸ்லாமிய-சார்பு, சீனா சார்பு அதிபரின் கீழ், ஒரு அடிவருடியாக மாறி வருகிறது,” என்றார் அவர்.

chinese ship - 2026
#image_title

முன்னதாக, கப்பல் கண்காணிப்பு இணையத்தளமான MarineTraffic இன் படி, சீனாவின் Xiang Yang Hong 3, துறைமுக நுழைவை இலங்கை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது, இது பிப்ரவரி மாத தொடக்கத்தில் மாலத்தீவுக்கு வரவுள்ளது.

இந்தியாவின் ஊடக அறிக்கைகள் தொடர்ந்து சீனா தனது கப்பலை “உளவுக்கு” பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், மாலத்தீவு கடற்பகுதியில் கப்பல் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளாது, என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் கூறியது. இந்தக் கப்பல் “துறைமுக சீரமைப்பு அழைப்புக்காகவும், பணியாளர்களின் சுழற்சி மற்றும் பணியமர்த்தலுக்காகவும்” மட்டுமே நிறுத்தப்படும் என்று மாலத்தீவு அரசு கூறியது. ஆனால், சீனாவில் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

எனினும், இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் நடமாட்டம் மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கு ஆகியவை குறித்து இந்தியா சந்தேகம் தெரிவித்து வருகிறது.

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் சீன சார்பு அதிபர் முகமது முய்சு வெற்றி பெற்றதில் இருந்தே, மாலே மற்றும் புது தில்லி இடையேயான உறவுகள் சரிந்துள்ளன. மூன்று உளவு விமானங்களை இயக்குவதற்காக மாலத்தீவில் நிறுத்தப்பட்டுள்ள 89 பாதுகாப்புப் பணியாளர்களை மார்ச் 15 ஆம் தேதிக்குள் இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று முய்ஸு கேட்டுக் கொண்டார். இருப்பினும், இந்தியப் படைகளுக்குப் பதிலாக சீனப் படைகளை மாற்றுவதன் மூலம், புதுதில்லியுடன் உறவுகளை மேம்படுத்த தான் விரும்பவில்லை என்பதை முய்ஸு தெரிவித்துள்ளார்.

முய்ஸுவின் மூன்று அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை “கோமாளி” மற்றும் “பயங்கரவாதி” என்று கூறியதையடுத்து புதுதில்லியுடன் மாலத்தீவுக்கு மோதல் வெடித்தது. இதை அடுத்து, பாலிவுட் நடிகர்கள் மற்றும் இந்தியாவின் சில கிரிக்கெட் ஜாம்பவான்கள், தங்கள் தெற்கு அண்டை நாட்டின் – பிரபலமான சுற்றுலாத் தலத்தை – புறக்கணித்து, அதற்குப் பதிலாக அடுத்த விடுமுறையை நம் நாட்டின் அருகில் அந்தமானில் கழிக்குமாறும் நட்பு அழைப்பு விடுத்தனர். இதை அடுத்து இந்தியர்கள் மாலத்தீவின் சுற்றுலாவைப் புறக்கணிக்கத் தொடங்கினர்.

மாலத்தீவுகள் சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்காக இந்தியாவையே நம்பியிருக்கிறது. இதைக் குறைப்போம் என்று முய்ஸு கூறினார். இதன் பின், வெளிநாட்டில் அரசாங்கத்தால் செலுத்தப்படும் சுகாதார சிகிச்சை தேவைப்படும் குடிமக்கள் செல்லக்கூடிய பட்டியலில் மேலும் பல நாடுகளைச் சேர்த்தார்.

இதற்கிடையில், 2022 ஆம் ஆண்டிலிருந்து இதேபோன்ற இரண்டு சீனக் கப்பல்கள் வருவதற்கு, இந்தியாவிடம் இருந்து ஆட்சேபனைகள் எழுந்த நிலையில், Xiang Yang Hong 3 கப்பல் தனது துறைமுகங்களுக்கு வர அனுமதிக்கப்படாது என்று இலங்கை சீனாவிடம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

சீனக் கப்பலான ஷி யான் 6, கொழும்பில் துறைமுக நுழைவுக்கு அக்டோபரில் அனுமதி அளிக்கப்பட்டது, பின்னர் இலங்கை அதிகாரிகள் சீனாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து கடல் ஆராய்ச்சியை மேற்கொள்ள 48 மணி நேர அவகாசம் அளித்தனர்.

மற்றொரு சீனக் கப்பலான யுவான் வாங் 5, விண்கல கண்காணிப்பில் நிபுணத்துவம் பெற்றது என்று கூறப்பட்டது. ஆனால், இந்தியா இதை உளவுக் கப்பல் என்று கூறியது. இந்நிலையில் இது 2022 இல் இலங்கைக்கு வந்தது. முன்னதாக, ஒரு ஜோடி சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் 2014 இல் இலங்கையில் நிறுத்தப்பட்டன. இது இந்தியாவிலிருந்து கடும் எதிர்ப்பை எதிர்கொண்ட பின் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை இலங்கை தனது துறைமுகங்களுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

இப்படி கப்பலை வைத்து சர்வதேச சீன சார்பு அரசியலை மாலத்தீவுகள் எடுத்துக்கொண்டிருக்க, அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் அதன் எதிரிடை அரசியலை கைக்கொண்டனர். இந்திய பிரதமர் மோடியிடம் மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினார். எல்லா வகையிலும் மாலத்தீவுக்கு உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை முகமது முய்சு கொண்டிருப்பதற்கு, அவர் மீது முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன!

இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன் அந்நாட்டு பார்லிமெண்ட் சிறப்புக் கூட்டத்தில் ஆளும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களுக்கும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி எம்.பி.,க்களுக்கும் இடையே அடிதடி நடந்தது. இந்தக் கைகலப்பு வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதன் எதிரொலியாக அதிபர் முகமது முய்சுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் மாலத்தீவின் பிரதான எதிர்கட்சியான எம்.டி.பி., எனப்படும் மாலத்தீவு ஜூம்ஹூரி கட்சி தலைவர் குவாசிம் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, பகையை வளர்த்து , இந்திய பிரதமர் மோடியை அவமதித்து விட்டார். இந்தியாவிடமும், இந்திய பிரதமர் மோடியிடம் அதிபர் முகமது முய்சு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சீனாவின் சதிவலையில் சிக்கிக்கொண்டு, இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகள் தற்போது தவித்து வருவது உலக அரங்கில் பரிதாபமாகவே பார்க்கப்படுகிறது.

கடற்கொள்ளையரிடம் இருந்து காப்பானாக இந்திய கடற்படை! சீனாவை பின்தள்ளிய உலகின் நம்பிக்கை நட்சத்திரம்!

indian navy - 2026
#image_title

ஏடன் வளைகுடா பகுதியில், ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்த எண்ணெய் கப்பலுக்கு உதவியதற்காக நம் இந்திய கடற்படைக்கு உலகம் முழுதுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருக்கும் இடையே கடந்த அக்.7 முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், ஏடன் வளைகுடா, அரபிக்கடல், செங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. ஈரான் ஆதரவு பெற்ற, ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி படையினர் இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் ஏடன் வளைகுடா பகுதியில் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ‘மார்லின் லுவாண்டா’ என்ற எண்ணெய்க் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடந்தது. இதில் கப்பலின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. இந்தக் கப்பலில் 22 இந்தியர்களுடன் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இருந்தனர். இவர்கள் உதவி கோரியதை அடுத்து, இந்திய கடற்படையினர், ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பல் சம்பவ இடத்துக்குச் சென்று, அந்தக் கப்பலில் இருந்த தீயை அணைத்து மீட்புப் பணிகளை துரித கதியில் மேற்கொண்டது.

இதை அடுத்து, நம் இந்திய கடற்படையின் இந்த உடனடி நடவடிக்கைக்காக, நம் நாட்டுக்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பிரிட்டன் பத்திரிகையாளர் மார்க் அர்பன், ”ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளில் நெருக்கடிகளுக்கு மத்தியில், சீனாவை விட, இந்தியா பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று ஆசிரியர் மார்ட்டின் சாயர்ப்ரே வெளியிட்ட சமூகத் தளப் பதிவில், ‘இந்தியா தலைமை தாங்குகிறது! அதன் சக்தி எழுச்சி பெறுகிறது. இனி சீனாவைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘மார்லின் லுவாண்டா’ எண்ணெய் கப்பலுக்கு அளிக்கப்பட்ட மீட்புப் பணிகள் குறித்து, நம் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், ”அவசர அழைப்பின்படி சம்பவ இடத்துக்குச் சென்ற ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் போர்க்கப்பல், ஆறு மணி நேரம் போராடி, கப்பலில் இருந்த தீயை அணைத்தது. ”இந்த கப்பலுக்கு உதவ, அமெரிக்கா மற்றும் பிரான்சும் முன்வந்தன. தொடர்ந்து பிராந்தியத்தில் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம்,” என்றார்.

இந்நிலையில், சோமாலியா கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஈரான் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பலை கடற்கொள்ளையர் கடத்தினர். அந்த கப்பலில் இருந்தவர்கள் உதவி கோரியதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற நம் இந்திய கடற்படையின் போர்க்கப்பல், கொள்ளையரிடம் இருந்து கப்பல் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பாக காப்பாற்றியது.

சோமாலியா கிழக்குக் கடற்கரை பகுதியில் ஈரான் கொடியுள்ள மீன்பிடிக் கப்பல் ஒன்று, 17 பேர்களுடன் சென்றது. அந்தக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியதுடன் அதிலிருந்தவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர். அவர்கள் அவசர உதவி கோரியதை அடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, நம் விமானப்படையின் ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல், சம்பவ இடத்துக்கு விரைந்து துரித நடவடிக்கையில் இறங்கியது. கடற்கொள்ளையரிடம் இருந்து கப்பல் மற்றும் அதிலிருந்தவர்களை காப்பாற்றியது.

இதுகுறித்து, நம் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியபோது… சோமாலியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில், கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கைகளில், ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல் ஈடுபட்டது. அப்போது, ஈரான் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பல் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதன்படி, சம்பவ இடத்துக்கு விரைந்த ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பலில் இருந்த அதிகாரிகள், கப்பலையும், அதிலிருந்த 17 பேரையும் பாதுகாப்பாக காப்பாற்றினர்… என்றார்.

இந்நிலையில், சோமாலியாவுக்கு கிழக்கே, சர்வதேச கடல் பகுதியில், கடந்த 27ஆம் தேதி, இலங்கையின் மீன்பிடிக் கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு பேர் இருந்ததாகவும், இந்தக் கப்பலை சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர் கடத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக அந்நாட்டு அரசுடன், இலங்கை அதிகாரிகள் பேசி வருகின்றனர்.

இதனிடையே, சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய பாகிஸ்தானைச் சேர்ந்த 19 மாலுமிகளை இந்திய கடற்படையினர் ஜன.30 இன்று மீட்டுள்ளனர். இது ஒரு சாதனையாகப் பார்க்கப் படுகிறது.

கடந்த 36 மணி நேரத்தில் ஈராக்கை சேர்ந்தவர்கள் 17 பேர் இந்திய கப்பற்படையினரால் மீட்கப்பட்ட சம்பவம் சாதனையாகப் போற்றப்படும் வேளையில் இன்றும் இந்திய படையினருக்கு இந்தப் பாராட்டு கிடைத்துள்ளது.

இன்று சோமாலிய கடற்பகுதி அருகே பாகிஸ்தானைச் சேர்ந்த மீன்பிடிக் கப்பலை வழிமறித்து கொள்ளையடிக்கவும் கப்பலில் இருந்தவர்களை கடத்தவும் கடற்கொள்ளையர் முயற்சி செய்துள்ளனர். இந்திய கடற்பைடையினருக்கு இது குறித்த தகவல் கிடைத்ததும், ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பல் விரைந்தது. கடற்கொள்ளையர்கள் 11 பேரை துப்பாக்கி முனையில் பிடித்த நம் கடற்படையினர், பாகிஸ்தானை சேர்ந்த மாலுமி, மீனவர்கள், மற்றும் ஊழியர்கள் 19 பேரை மீட்டனர்.