Home Blog Page 245

அயோத்தி போரின் வரலாறு!

ayodhya ram - 2026
#image_title

தெலுங்கில் – டாக்டர் முதிகொண்ட சிவப்ரசாத்
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்

அயோத்தி நகரம் –

அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா  புரி த்வாராவதீ சைவ சப்தைதே மோக்ஷதாயகா: – என்பது பண்டைய ஸ்லோகம். அயோத்தி சரயூ நதி தீரத்தில் இருக்கும்  இக்ஷ்வாகு அரசர்களின் தலைநகரம். ஸ்ரீ ராமச்சந்திர பகவான் பிறந்த இடம்.   இந்துக்களுக்கு பரம பவித்திரமான மதுரா, காசி மற்றும் அயோத்தி நகரங்களில்  அயோத்தி சிறப்புத்தன்மை வாய்ந்தது.

அயோத்திப் போர் –

வால்மீகி ராமாயணம் எந்த அளவுக்கு இருக்கிறதோ கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக  நடந்த அயோத்திப் போரின் வரலாறும் அந்த அளவுக்கு உள்ளது. புராண ஆதாரங்களோடு கூட பஹ்ரைன் கெஜட், பாபர் நாமா, லக்னோ கெஜட், மாடர்ன் ரிவ்யூ,  விஸ்வ தர்மவாணி போன்ற இதழ்களில் வந்த கட்டுரைகளையும் வைத்து இந்த நீண்ட போராட்டத்தின் வரலாற்றை நினைவுகூரலாம்.

நிந்தைகள்

அயோத்தியில் ராமர் எந்த அறையில் பிறந்தார்? என்று போலி மதச்சார்பின்மைவாதி கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பதிலாக சிறுநீர் கழிப்பிடத்தை கட்டுங்கள் என கிறித்துவ மத போதகர் கனிராம் கூறினார்.

ராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார்?  என்று கேலி செய்தார் தமிழக தி.மு.க. நாத்திக தலைவர் கருணாநிதி.

ராமர் கோவில் திறக்கப்பட்டது –

இந்த நிந்தைகள், குற்றச்சாட்டுகள், போராட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தகராறுகள் முடிவுக்கு வந்த பிறகு, 2024 ஜனவரி 22 அன்று அயோத்தியில் தெய்வீகமான ராமர் கோவில் திறக்கப்பட்டது.

இந்திய வரலாற்றில் இது ஒளிமயமான முக்கிய தருணம். தேச ஒற்றுமைக்கான ஒரே  மந்திரம் ராம நாமம்.  சூரிய வம்சத்தில் ஹரிச்சந்திரன், திலீபன், பகீரதன் போன்ற பல   சிறந்த க்ஷத்ரிய மன்னர்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் காலையில் எழுந்ததும் நினைக்கத் தக்கவர்கள். இவர்களுள் ஸ்ரீராமச்சந்திரன் மிகப் புகழ்பெற்றவர். அவருடைய சரித்திரத்தை வால்மீகி மகரிஷி சமஸ்கிருதத்தில் ராமாயண காவியமாக இயற்றினார்.    அதன் பிறகு பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான ராமாயணங்கள் வந்தன. ஆனால் அனைத்திற்கும் ஆதாரம் வால்மீகியின் படைப்பு.

புராதன ராமர் கோயில் –

ராமன் என்றால் சூரியன். சீதை என்றால் பூமி. இது ஒரு குறியீட்டு ஆய்வு. அனுமன் வாயுதேவன். ராவணன் பல்வேறு தீய குணங்களுக்கு அடையாளம். அயோத்தியில் ராமரின் நினைவாலயம் எத்தனை பழமையானது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் வரலாற்று ஆதாரங்களின்படி கி.மு. முதல் நூற்றாண்டில் உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்ய மகாராஜா 84  ஆதாரத் தூண்களைக் கொண்ட அற்புதமும் பிரம்மாண்டமுமான ராமர் கோயிலைக் கட்டினார் என்பது தெரிகிறது.

இது தொடர்பான ஒரு சம்பவம் உள்ளது. கந்தர்வசேனனுக்கு இரு புதல்வர்கள். மூத்தவரான பர்த்ருஹரி  சந்நியாசியானார். முடிசூட்டப்பட்ட இளவரசன் விக்கிரமாதித்யன் ஒரு நாள் ‘அகேட்’ காட்டில் (அயோத்தி, ஜாம்தராகாட்) இருந்த ஒரு  ஆம்ரா (மா) மரத்தின் கீழ் ஓய்வெடுத்த போது அவனுக்கு ராம தரிசனம் ஆயிற்று. அங்கு ராமர் கோவிலை விக்கிரமாதித்யன் புனர்நிர்மாணம் செய்ததாக ஐதிகம் உள்ளது.

இன்னும் பண்டைய காலத்தில் ராமர் கோவில் ராமரின் மைந்தன் குசனாலும்    பிற்காலத்தில் பிருஹத்வலன் என்பவராலும் கட்டப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. இங்கு பல நூற்றாண்டுகளாக நித்ய பூஜைகளும் பஜனைகளும் நடைபெற்று வந்தன.

அயோத்தியில் இறந்தால் மறுபிறவி இல்லை என்றும் ஒருவேளை பிறவி எடுத்தாலும்  சிறந்த பிறவி கிடைக்கும் என்றும் கூறி அயோத்தி காட்டுக்கு சடலங்களை எடுத்து வந்தார்கள்.

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராம மனோரமே  ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே என்று தியானம் செய்து வந்தார்கள். ர என்பது நாராயண மந்திரத்திற்கும் ம என்பது பஞ்சாக்ஷரிக்கும் மூல பீஜங்கள் எனபது விளக்கம். ராமோ விக்ரஹவான் தர்ம:.  வேதவேத்யன் ராமன். வேதம் ப்ராசேதனம் (வால்மீகி ராமாயணம்) – ராமரே வேதம்.   வேதம் மிகமிகப் பழமையானது, அசலானது.

பாபரின் வருகை –

14 ம் நூற்றாண்டில் சமர்கண்டைச் சேர்ந்த பாபர் என்ற துருக்கியன் இந்தியாவின் மீது படையெடுத்தான். அயோத்தியை ஆக்கிரமித்து அங்கிருந்த ராமர் கோயிலை அழித்தான். அவன் அந்த திட்டத்தை தன் ராணுவத்தைச் சேர்ந்த மீர் பக்கீ என்ற போர் வீரனிடம் (வஜீர்) ஒப்படைத்தான். அப்போது ராமர் கோவில், மஹந்த் ஷ்யாமானந்தஜி என்பவரின் தலைமையில் இயங்கியது.

ராணா சங்க்ராம சிம்ஹா –

ராஜபுத்திர வீரரான ராணா சங்க்ராம சிம்ஹாவோடு பாபர் போரிட்டான். போரில் முதலில் பாபர் தோற்கடிக்கப்பட்டாலும் பின்னர் வெற்றி பெற்றான். அங்கிருந்து கோவில்களை அழிக்க ஆரம்பித்தான். அர்ச்சகர்கள் ஆலயத்திற்குள் துருக்கப் படையை  நுழைய விடாமல் தடுத்தார்கள். அவர்கள் அனைவரையும் பாபரின் வீரர்கள் கொன்று தள்ளினார்கள். ஷ்யாமானந்தாஜி மகராஜ் மூல விக்ரகத்தை ரகசியமாக உத்தராகாண்டிற்கு எடுத்துச் சென்றார். ஆனால் பாபர் மசூதியைக் கட்டுவது அவ்வளவு சுலபமாக நிகழ்ந்து விடவில்லை. பகலில் கட்டிய சுவர்கள் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் இடிந்து விழுந்திருக்கும். அனுமன் அவைகளை இரவில் இடித்துத் தள்ளுவதாக அயோத்தியில் ஒரு வதந்தி பரவியது.

பக்தர்களின் சடலங்களே மசூதியின் படிகள் –

லக்னோ அரசிதழில் உள்ள அதிகாரப்பூர்வமான தகவலின்படி, அயோத்திக்கு தீர்த்த யாத்திரை சென்ற ஒரு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் பக்தர்களை பாபர் சிறையில் அடைத்தான். ஹால்டனின் கெஜட் தகவலின்படி, இந்துக்கள் அதாவது காஃபிர்களைக் கொன்று சடலங்களைக் குவியலாகக் குவித்து மசூதியின் படிகளைக் கட்டுங்கள் என்று பாபர் கட்டளையிட்டான். (பாபர் நாமா- பக்கம் 173)

சூரியவம்சி க்ஷத்திரியர்கள் –

நாங்கள் ராமரின் வழித்தோன்றல்கள். எமது குரு ரிஷி பரத்வாஜர். நம் அயோத்தியை நாம் பாதுகாக்க வேண்டும் என்று கூறி சூரிய வம்சி க்ஷத்திரியர்கள் சலாய், ராஜ்புரா போன்ற அருகிலுள்ள நகரங்களில் இருந்து வந்து மசூதியின் பிரதான நுழைவாயிலை இடித்துத் தள்ளிவிட்டு சங்குகளை முழங்கினர். அப்போது நடந்த கடும் போரில் சூர்ய வம்சத்தைச் சேர்ந்த சிறந்த க்ஷத்திரிகள் பலர் உயிரிழந்தனர்.

அக்பர் –

காலப்போக்கில் அக்பர் சக்ரவர்த்தியும் தன் முன்னோடிகளையே பின்பற்றினான். ஆனால் அக்பரின் அரசவையில் பணியாற்றிய ஹிந்துக்களான தோடர்மால், பீர்பால் போன்றோரின்   ஆலோசனையால் அக்பர் இந்துக்களுக்காக ஒரு சிறிய ராமர் கோவிலைக் கட்டி வழிபட அனுமதித்தான்.

கொரில்லா யுத்தம் –

ராமபக்த மகராஜும் வைஷ்ணவதாசும் பக்தர் படையைத் திரட்டி அஹல்யாகாட் அருகில் ஊர்வசிகுண்ட் பகுதியில் கொரில்லா போர் முறையில் முகலாய ராணுவத்தை எதிர்த்தனர். ராம ஜென்மபூமியின் பாதுகாப்பிற்காக இளம் குழந்தைகள் கொரில்லாக்களாகவும், தகவல் தருபவர்களாகவும் போராடி தம் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

ஔரங்கசீப் –

1646 ல் முகலாயப் பேரரசன் ஔரங்கசீப், தன் ஆட்சியின் போது நடந்த  ​​மற்றொரு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்து வீரர்களைக் கொன்று கந்தர்ப கூபத்தில் (கிணறு) குவியல் குவியலாக வீசினான்.

அமேதி அரசர் –

அமேதியின் அரசர் குருதத்த சிம்மன் சாதுக்களோடு சேர்ந்து நசிருத்தீன் காலத்தில் மீண்டும் ராம ஜென்மபூமியின் பாதுகாப்புக்காக எட்டு நாட்கள் போர் புரிந்தார் என்பது தெரிகிறது. ஹம்ஸபரா, மகரஹி, கஜுராஹட் போர்களும் வரலாற்றின் பக்கங்களில் காணப்படுகிறது.

நவாப் வசீத் அலிஷா –

நவாப் வசீத் அலிஷாவின் ஆட்சியின் போது ராம ஜென்மபூமிக்கான போரில் ஏராளமான இந்து பக்தர்கள் உயிரிழந்தனர்.

கிழக்கிந்திய கம்பெனி –

அதன் பிறகு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி காலத்தில் முஸ்லீம் பிரபுக்கள் ஆங்கிலேயர்களை இராணுவ ஒத்துழைப்பு வடிவில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதாவது  இந்துக்கள் ஒருபுறம் பிரிட்டிஷ் ராணுவத்தோடும் மறுபுறம்  முஸ்லிம் (முகலாய) ஆட்சியாளர்களுடனும் போராட வேண்டி வந்தது.

முகலாயரின் அட்டூழியங்கள் –

சுல்தான்பூர் கெஜட் (பக்கம் 36) முகலாயப் பேரரசன் பகதூர்ஷா செய்த கொடிய அட்டூழியங்களைக் குறிப்பிடுகிறது. மகான்கள் பலவாயு பாபா, ராம்சரண்ஜி தாஸ் ஆகியோரை அயோத்தியில் பிரிட்டிஷ் ராணுவம் தூக்கிலிட்டது. அப்போது கோண்டுகள்  பைசாபாத் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.

அயோத்தி தலைநகரம் –

பிற்காலத்தில் லக்னோ நவாப் அயோத்தியை தன் தலைநகராக மாற்றிக் கொண்டான்.  இந்த தொடர்ச்சியான போராட்டங்களில் ஹுமாயூன் காலத்தில்  ராணா மஹதாப்திங், ராஜா ரணவிஜய சிங் ஆகியோர் நடத்திய கொரில்லா போராட்டங்கள் மறக்க முடியாதவை.

குரு கோவிந்த்சிங் –

சீக்கியர்களின் பத்தாவது குருவான கோவிந்த சிங்,  பாபா வைஷ்ணவதாஸுக்கு ஒரு கடிதம் எழுதினார். அப்போது அங்கு வந்த இந்து ராணுவம் முகலாய ராணுவத்தை அயோத்தியிலிருந்து ஆக்ராவுக்கு விரட்டியது. இவ்வாறு ஐம்பது ஆண்டு காலமாக  இரவும் பகலும் போர் நடந்து கொண்டே இருக்கிறது. (பஹ்ரைன் கெஜட்- பக்கம் 73)

1680 ல் சஹாதத் கஞ்ச் அருகில் ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற யுத்தம் நடந்தது. குரு கோவிந்த்சிங் தனது குருத்வாராவைக் கட்டினார். இந்த சந்தர்ப்பத்தில் மூவாயிரம் பெண்கள் சேர்ந்த சேனை நடத்திய ராம ஜென்மபூமி போராட்டத்தையும் வரலாற்றின் பக்கங்களில் காணமுடியும். பீட்டி ராஜகுமார்,  ஜயதத்த சிங் ரௌனாஹி போன்றோர் நடத்திய தற்கொலைப் படையின் விவரங்களை ‘மதீதுல் அவுலியா’ விவரிக்கிறது.

சிப்பாய் கலகம் –

1857ல் நடந்த சிப்பாய் கலகத்தின் போது  ​​ஆங்கிலேய ராணுவத்தினர் அயோத்தியில் ராம பக்தர்களைத் தூக்கிலிட்டனர். அந்த பக்தர்களுக்கு ராமசரண் தாஸ் தலைவராக இருந்ததையும் மஹந்த் உத்தவதாஸின் தியாகத்தையும் கதைகளாகக் கூறுவர் அம்மக்கள். 

ராமஜென்மபூமிக்கான இரண்டாயிரம் ஆண்டுகாலப் போராட்டம் இப்படித்தான் தொடர்ச்சியாக நடந்து வந்தது.

1970க்குப் பிறகு –

1970க்குப் பிறகு இந்துக்கள் மீண்டும் ராமஜென்மபூமி இயக்கத்தைத் தொடங்கினர். விநோதமாக அதை காங்கிரஸ் அரசு நசுக்கியது. 1990 நவம்பர் 2ம் தேதி அயோத்திக்குச் சென்ற கரசேவகர்கள் உத்தரப் பிரதேசத்தில் அப்போதைய முதல்வர் முலாயம்சிங் யாதவால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு –

1992 ல் பாபர் மசூதியை இடித்த சம்பவத்தில் ஹிந்து சமுதாயத்தை, ஹிந்து அரசாங்கத்தில் அப்போது ஆட்சியில் இருந்த பிரதமர் பி.வி. நரசிம்மராவ், அர்ஜுன் சிங் போன்றவர்களே அடக்கினார்கள். விந்தை என்னவென்றால் ஹிந்துக்களை சுட்டுக் கொன்ற அதிகாரிகளும் இந்துக்களே. மதுகர் குப்தா, ஹிராலால் சர்மா, எஸ். புல்லார் (சிஆர்பிஎஃப்), பரமஜித் சிங், கமாண்டர் ராமச்சரண் ஸ்ரீவத்சவா (மாவட்ட மாஜிஸ்திரேட் போன்றோர்.

இது ஏன் நடந்தது?

உத்தரபிரதேச முஸ்லிம் வாக்குகளுக்காக முலாயம் (சிங்) கான் செய்த அக்கிரமம் இது.  அவருக்கு பத்ம விபூஷன் பட்டம் கொடுக்கப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் ஆந்திராவில் இருந்து சென்று உயிர் தியாகம் செய்த லட்சுமண யதீந்திரரை நினைவு கூர்வோம். கோத்ராவில் ரயில் பெட்டியில் எரிக்கப்பட்ட ராம பக்தர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம். நாடு முழுவதும் ராமர் கோவிலுக்காக போராட்டம் நடத்திய கோடிக்கணக்கான ஸ்வயம் சேவகர்களுக்கு நன்றி செலுத்துவோம். .

76 வரலாற்றுப் போர்கள் –

இது ஒரு நீண்ட, இரத்தம் தோய்ந்த பக்தி வரலாறு. ஜிஹாதி பயங்கரவாதத்திற்கும் தேச பாதுகாப்பிற்கும் இடையே நடந்த உயிர்த் தியாகங்களின் போராட்ட வரலாறு. மரணமடைந்த ஸ்ரீராமனின் சூர்ய வம்சத்தினர், மகான்கள் மற்றும் தேசபக்தர்களுக்காக கண்ணீருடன் அகல் விளக்குகளை ஏற்றுவோம். இதுவே நமது அஞ்சலி.

ராமசரிதமானஸ் –

கோஸ்வாமி துளசிதாசர் ராமசரிதமானஸ் எழுதுவதற்குக் காரணம் முகலாய ஆட்சியிலிருந்து நாட்டை விடுவித்து ராமரை அழைப்பதற்காகவே. இடைக்காலத்தில் ஓரிருமுறை சமரச முன்னெடுப்புகள் நடந்தன. ஒருபுறம் நமாசும் மறுபுறம்  பஜனையும்  செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டதே தவிர அந்த சமரசம் வெகு காலம் நீடிக்கவில்லை.  

ஆங்கிலேயரின் வஞ்சனை –

ஆங்கிலேயர்கள் வர்த்தகத்திற்காக கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் இந்தியாவுக்குள் நுழைந்தனர். அவர்களுக்கு இந்த அயோத்தி பிரச்னை பெரிதும் உதவியது. இரு மதங்களுக்கும் இடையே மோதலை வளர்த்து கிறிஸ்துவ மதத்தைப் பரப்பினார்கள். ஒருபுறம் மௌல்வியையும் மறுபுறம் ராமச்சரண தாசையும் தூக்கிலிட்டர்கள்.

மசூதியின் கதவுகள் –

1948 ம் ஆண்டு  காந்தியின் படுகொலையை சாக்காகக் கொண்டு கம்யூனிஸ்டுகளும் ஆங்கிலேயரும் காங்கிரஸ் கட்சியைக் கொண்டு ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தை தடை விதிக்கச் செய்தார்கள். மீண்டும் 1992 ல்  பாபர் மசூதி இடிப்பின் அடிப்படையில் சங்கத்தின் மீது சமூகமே தடை விதித்தது. உண்மை என்னவென்றால் பல தசாப்தங்களாக மூடிக் கிடந்த மசூதியின் கதவுகளை ராஜீவ் காந்தி திறந்து விட்டார்.

கையை விரித்த பிரிட்டிஷ் நீதிபதி –

1885ல் மஹந்த் ரகுவரதாஸ் பைஷாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 16 ம் நூற்றாண்டில் அக்பர் இந்த மசூதியைக் கட்டினார். மூன்று குவிமாடங்கள் பாபரால் கட்டப்பட்டன. பிரிட்டிஷ் நீதிபதி கர்னல் சாமியர், இது 356 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றார்.  

1934ல் நடந்த வகுப்புவாத கலவரத்தில் இரு தரப்பினரும் உயிர் இழந்தனர். இந்துக்கள் மீது எண்பத்து நான்காயிரம் ரூபாய் வரி விதித்து மசூதியின் குவிமாடங்களை பழுது பார்த்து சரி செய்தனர் ஆங்கிலேயர்கள்.  

பால ராமரின் சிலை –

1949 டிசம்பர் 2ம் தேதி இரவு அங்கு பால ராமரின் சிலை நிறுவப்பட்டது. அப்போது பண்டிட் கோவிந்த வல்லப பந்த் உத்திர பிரதேச முதலமைச்சராக இருந்தார். அன்றைய பிரதமர் நேரு, இந்த ராம் லல்லாவின் சிலையை அகற்றுங்கள் என்று கடிதம் எழுதினார். ஆனால் பைசாபாத் கலெக்டர் கே.கே. நாயர் அந்த வேலையைச் செய்ய முடியாது என்று சந்தேகமின்றிச் சொல்லி விட்டதால் கோயில் கதவு பூட்டப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பு –

1986 பிப்ரவரி 1ம் தேதி நீதிபதி உமேஷ் சந்திர பாண்டே, துறவிகளின் அழுத்தத்தின் பேரில் கோவிலின் பூட்டைத் திறக்கச் செய்தார். மஹந்த் பரமஹம்ச ஸ்ரீராமச்சந்திர தாஸ் மகராஜ் போன்றவர்கள் இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கினார்.

நீதிமன்றங்கள் இந்த விஷயத்தை ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பார்க்காமல் நிலத் தகராறாகவே கருதின. இதில் குவி மாடங்களின் பகுதி,  சீதையின் சமையலறை, நிர்மோஹி அகாடா, சபுத்ரா என்ற பாகங்கள் உள்ளன.

உண்மையில் இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமாசுகள் நின்றுபோயின.  கோவிலில் உள்ள சர்ச்சைக்குரிய இடங்கள் மீது நீதிமன்ற வழக்குகள் பல ஆண்டுகள் நடந்தன. இறுதியாக உச்ச நீதிமன்றம் இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

அற்புதமான ராமர் கோவில் –

அதன் மூலம்  2022 ல் ராமர் கோவிலின் புனரமைப்பு தொடங்கியது. “ராமர் கோவில் கட்ட இனி யார் தடை சொல்வார்” என்று பல கவிஞர்கள் கவிதை எழுதி தம்  எழுதுகோல்களை புனிதம் செய்து கொண்டார்கள். பல பெண்மணிகள் ராமர் கோயில்  கட்டி முடிக்கும் வரை நாங்கள் தலையை முடிய மாட்டோம் என்று திரௌபதியைப் போல சபதம் எடுத்தனர். ராமர் கோவில் கட்டுவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து தன்னார்வ நன்கொடைகள் வந்து குவிந்தன. இது வெறும் கோவில் அல்ல. பாரத இனத்தின் இதய ஈரம். அமிர்தத்தின் துளி

ராமா ராமா என்று பாடிய கிளியின் வாழ்வு உயர்ந்தது. ராமனுக்குப் பாலம் கட்டி உதவிய அணிலின் வாழ்வு சிறந்தது. 

தார்மீக ஒற்றுமைக்காக ராமாயணம் பாராயணம் செய்வோம்.

திரேதா யுகத்தில் முதல் ராமர் கோயிலைக் கட்டியவர் குசன். அதாவது அப்போதைக்கே யாக கலாச்சாரம், கோவில் கலாச்சாரம் இரண்டும் இருந்தன என்று அறியலாம்.

அயோத்தியில் கட்டப்படும் மசூதி –

மசூதி மேம்பாட்டுக் குழுத் தலைவர் ஹாஜி அராபத் ஷேக் கூறுகையில், அயோத்தியில் உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கிய இடத்தில் பிறை மற்றும் ஐந்து மினாரட்டுகளோடு தேசத்திலேயே மிகப் பெரிய மசூதி கட்டப்படும். 21 அடி உயரம், 35 அடி அகலத்தோடு உலகிலேயே மிகப் பெரிய குரான் இதில் வைக்கப்படும். ஒன்பதாயிரம் பக்தர்கள் இதில் பிரார்த்தனை செய்யலாம். மசூதி வளாகத்தில்  கல்வி, மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்.  அதோடு, கூடுதல் நிலங்களும் சேகரித்து வருகிறோம் என்று கூறினார். முஹம்மது பின் அப்துல் மஸ்ஜித் எனப் பெயரிடப்படும் இதற்கு காபாவில் (மக்கா) தொழுகை நடத்தும் இமாம் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி சர்வே –

அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமியின் சர்வேவை  ஷாஹி தர்கா தடை விதிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மூன்று வழக்கறிஞர்கள் மேற்பார்வையில் இந்த சர்வே நடத்தப்படும். இந்த மசூதி இருந்த இடத்தில் முன்பு கிருஷ்ணர் கோயில் இருந்து என்றும் அவுரங்கசீப் ஆட்சியின் போது கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட 18 மனுக்களும் ஒரே நேரத்தில் விசாரிக்கப்படும் என்றும்  இந்த விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

தெலுங்கில் ராமாயணங்கள் –

ராமாயணத்தை தெலுங்கில் எழுதியவர்களுள் திக்கனா,  எர்ரனா,  பாஸ்கரா, கோன புத்தா ரெட்டி, மொல்ல, அய்யல ராஜு ராமபத்ரா, ரகுநாத பூபாலர், புட்டபர்த்தி நாராயணாச்சாரி, விஸ்வநாத சத்தியநாராயணா, எம்.எஸ். ராமாராவு, செர்விரல பாகய்யா, ஸ்ரீனிவாச சிரோமணி ஆகியோர் குறிப்பிடத்தக்க கவிஞர்கள்.  சுரவரம் பிரதாபரெட்டியும் வெதுல சூர்யநாராயணாவும் இராமாயண வர்ணனையாளராக அறியப்படுகின்றனர்.


Source: ருஷிபீடம் – தெலுகு மாத இதழ், பிப்ரவரி 2024


ராம ராஜ்யம்!

ayodhya ram - 2026
#image_title

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

(ருஷிபீடம் மாத இதழ் தலையங்கம், பிப்ரவரி, 2024)

ஜய் ஸ்ரீராம்

யுகங்களுக்கு முன் விளங்கிய முதல் தலைநகரம், வைவஸ்வத மன்வந்தரத்தின் தொடக்கத்தில் உருவான மகாநகரம், காலையில் எழுந்தவுடன் நினைக்கவேண்டிய சக்கிரவர்த்திகள் அரசாண்ட தெய்வீக நகரம், மோட்ச பட்டணங்களில் முதன்மையாக  குறிப்பிடப்படும் தீர்த்தமும் க்ஷேத்திரமும் கொண்ட இடம்,  ஸ்ரீமந்நாராயணன் ஸ்ரீராமனாக அவதரித்து பல காலம் அரசாண்ட பாரத சாம்ராஜ்ஜியத்தின் ஆதார மையம் – அயோத்தி.

நாம் இழந்த ராமஜென்மபூமி ஆலயத்தை பல கால போராட்டங்கள், கவலைகள், வருத்தங்கள், இயக்கங்கள் முயற்சிகள், சிரமங்களுக்குப் பின் இன்று கட்ட முடிந்திருக்கிறது. மாபெரும் மகா உறச்சவமாக முன் எப்போதும் பார்த்தோ கேட்டோ இல்லாத விதமாக தேசம் முழுவதும் ஸ்ரீராமமயமாக உலகம் முழுதும் ஆனந்தமாக நினைக்கும் தருணம் இது. (ஆலய பிராண பிரதிஷ்டை தினத்திற்கு முன்பாத எழுதப்பட்டது இந்த கட்டுரை) 

இதன் முக்கியத்துவம், வரலாறு, அவசியம் ஆகியவற்றைப் மறந்து  அமானுஷ்யமான  சுயநல அரசியல் அவதூறுகளை எழுப்பும் கரதூஷணர்கள் இந்தச் சந்தர்ப்பத்திலும் தோன்றுவது வியப்பளிக்கிறது.

இந்த தெய்வீக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்த அனைத்து அரசியல்வாதிகளும், நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல,  நாங்கள் மதச்சார்பற்றவர்கள் என்று பசப்பு வார்த்தை கூறிவருவது முரண். அவர்கள் நிச்சயம் இந்து மத எதிர்ப்பாளர்கள். பிற மதங்களை திருப்திபடுத்துபவதற்காக பாடுபடுபவர்கள்.   

சோம்நாத் கோயிலை புனரமைப்பதில் முக்கியப் பங்காற்றிய சர்தார் படேல் எந்த கட்சியைச் சேர்ந்தவரோ அதே கட்சியைச் சேர்ந்தவர்களே இதனை எதிர்க்கிறார்கள். சர்தார் படேலின் நினைவைத் துடைத்தெறிந்து விட்டு, அந்நாட்களில் அந்த கட்சியில் இருந்த ஒரு பிரதான மனிதரை அனுசரித்து, பல தசாப்தங்கள் அரசாண்ட இந்து விரோத தலைவர்கள் எத்தகையவர்கள் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.

எந்தச் சூழ்நிலையிலும் ராமர் கோவில் கட்டப்படக்கூடாது என்று தம் பல பத்தாண்டு கால ஆட்சியில் அயராது உழைத்தார்கள். அது இந்துக்களுடையதே என்ற வரலாற்றுச் சான்றுகளை பொது மக்களிடமிருந்து மறைத்தார்கள். புராணம், இதிகாசம் மற்றும் காவியங்களின் ஆதாரங்களை கேலி செய்தார்கள். இவர்களுக்குத் துணையாக இடதுசாரிகள், நாத்திகர்கள் மற்றும் தேச துரோகிகள் ஒன்று கூடினார்கள்.

இப்போது, இது அரசியல் நோக்கத்திற்காக ஒரு கட்சி மற்றும் ஒரு சங்கம் செய்யும்  வேலை என்று காரணம் காட்டி ஒதுங்கி நிற்கிறார்கள். சொல்லப்போனால், இந்த சம்பவத்தை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பிற மதங்களை திருப்தி செய்யும்  அரசியலால் வாக்கு வங்கியைக் காக்கிறார்கள். இவர்கள்தான் அரசியல் நோக்கத்திற்காக செயல்படுகிறார்கள் என்பதை மக்கள் உணரமாட்டார்கள என்ன? 

இவர்களின் அக்கிரமத்திற்குத் துணையாக ஹிந்து மதப் பெரியவர்கள் சிலரைக் கொண்டு, கட்டி முடிக்காத கோவிலில் அதற்குள் பிராண பிரதிஷ்டை எதற்காக என்று கேட்க வைக்கிறார்கள். ஆனால், அந்த அரசியல் ஹிந்துத் தலைவர்கள் இந்து மத தர்மத்திற்கு   எதிராக, எதையும் யோசிக்காமல் பேசுவது கண்டிக்கத் தக்கது.. அதோடு ஏதோ சாஸ்திரத்திற்குப் புறம்பான செயல் நடைபெறுவதாக சில ஹிந்துக்களே எதிர் வாதங்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

சில ஹிந்து பெரியவர்கள் தமக்கென சில நிலையான கருத்துகளையும் வெறுப்புகளையும் உருவாக்கிக் கொண்டு அந்தக் கண்ணோட்டத்தில் தவறுகளைத் தேடி,  இல்லாததை  கற்பனை செய்து எதிர்த்து வருகிறார்கள். இதுவே பிறமதத்தின் கட்டிடமாக இருந்தால்   அம்மதத்தவர் யாருமே எதிர்க்க மாட்டார்கள். அவர்கள் ஒரே கட்டுப்பாட்டில் நிற்பார்கள். அத்தகு கட்டுப்பாடும் ஒருமித்த கருத்தும் ஹிந்துக்களிடையே இல்லாதது குறைபாடு.

ஏழைகளின் பசியைப் போக்கலாமல்லவா? மருத்துவமனைகளையும் கல்வி நிறுவனங்களையும் கட்டலாமல்லவா? என்று ஆட்சேபித்தவர்கள், தாம் பதுக்கி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் பணத்தில் அதைச் செய்யலாமே. இந்துக் கோவில்களின் வருமானத்தை அரசுக் கருவூலத்திற்கு அனுப்பி அநியாயமாகப் பயன்படுத்துபவர்கள் இந்தப் பேச்சுக்குத் தகுதியானவர்கள் தானா?  தங்களின் பல தசாப்த   கால ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்க முடியாத வைத்தியசாலைகள், கல்வி நிலையங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள் எல்லாம், கடந்த சில வருடங்களில் நாட்டில் நடப்பது இவர்களுடைய கண்ணில் படவில்லையா? எந்த பிற மதங்கள் தம் மத  நிலையங்களின் வருமானத்தை மத சார்பற்ற நோக்கங்களுக்காக செலவிடுகின்றன என்று சொல்ல முடியுமா?

உண்மையில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்களின் நிதியில் இந்தக் கோயில் கட்டுமானம் நடைபெறவில்லை. இது கட்சி நிகழ்ச்சி அல்ல. அரசு பணத்தில் கட்டப்படவில்லை. கோடிக்கணக்கான இந்துக்கள், சாமானியர் முதல் பெரியவர்கள் வரை தம் சேமிப்பிலிருந்து கட்டி கொள்ளும் ஆலயம் இது. வெளிநாட்டு மத அமைப்புகளின் சட்டவிரோத நிதி எதுவும் இதில் சேரவில்லை. இது ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறங்காவலர்களின் நிர்வாகத்தின் கீழ் நடக்கிறது. அந்த டிரஸ்டின் அறங்காவலர்கள் ஒவ்வொரு விவரத்தையும் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கின்றனர்.

கிராமங்களும் நகரங்களும் ஏழையும் பணக்காரரும் ஒன்று சேர்ந்து பக்தி சிரத்தையுடன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு கோவில் கட்டி வருகிறார்கள்.

தம் வாக்குறுதியில் ராமர் கோவில் கட்டுவதை முக்கியமாகக் குறிப்பிட்ட தலைவர்கள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றனர். பாரத தேசத்தின் பெருமைக்குரிய இந்த நிகழ்ச்சியை இராம பக்தரும் அனுஷ்டானத்தில் சிறந்தவரும் நன்னடத்தை கொண்டவருமான தேசத்தின் தலைவர் முதன்மையாக இருந்து நடத்துவதே சிறந்தது.

இந்த உண்மைகளைப் புறக்கணித்து, இந்துக்களில் அதிருப்தியடைந்த பிரிவினர் சிலரைப் பயன்படுத்தி, சில பாரம்பரிய சங்கரபீடங்களின் வார்த்தைகளைத் திரித்து, பொய்யான செய்திகளைப் பரப்புவதன்மூலம் பிரிவினை வாதம் செய்யும் முயற்சி கூட நடந்தது.   ஆனால் அந்த பீடங்களின் ஜகத்குருக்கள் இந்த பெருமைமிக்க பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு தம் முழுமையான திருப்தியையும் ஆசீர்வாதத்தையும் அளித்தது மட்டுமல்லாமல்,  தீபங்கள் ஏற்றி தீபாவளி பண்டிகையாக, ராம தாரக மந்திரத்தை ஜபம் செய்து இதனை  வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மக்களிடம் தெளிவாக அறிவித்து அழைப்பு விடுத்தனர். ராமர் கோவில் பிராண பிரதிஷ்டைகாக தீட்சையோடு பல்வேறு சடங்குகளையும் மேற்கொண்டார்கள். அவர்கள் தேச நலனையும் தர்ம நலனையும் கோருபவர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

அரசியல் சுயநல ஊடகங்கள் செய்திகளைத் திரித்து வெளியிட்டனவே தவிர, இந்த உண்மை நிகழ்வுகளையும் பீடாதிபதிகளின் ஆசிகளையும் வெளியிடவில்லை.. நம் தேசத்தில் மங்களகரமாக, மிக வைபவமாக நடக்கும் புகழ்பெற்ற ஒரு நிகழ்வுக்கு பொதுமக்களின் உணர்வைப் பிரதிபலிக்க முடியாத செய்தி நிறுவனங்கள் நம்பகத்தன்மையை இழக்கின்றன.

எது எப்படியானாலும் மகரிஷிகளின் நல்ல சங்கல்பமும் சில நூற்றாண்டுகாகச் செய்த  தியாகத்தின் பலனும் கோடிக்கணக்கான மக்களின் ராம பக்தியும் நிலையான தெய்வீக  ஆலயமாக உருக்கொண்டுள்ளது.

சாஸ்திர முறைப்படி மூல விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்வதற்குத் தேவையான முழுமையான நிர்மாணத்தோடு சம்பூரணமான சாத்திர முறைகளோடு நிஷ்டையோடு ஜபம் செய்த மந்திர சக்தியை நிரப்பிக் கொண்ட யந்திரங்களின் பிரதிஷ்டையோடு    ஸ்ரீராமர் சிலை நிறுவப்படுகிறது.

சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை அப்படியே திடமாக ஸ்ரீ ராமர் கோயில் தெய்வீக பாரதத்தின் ஆத்மாவாக முழு பிரபஞ்சத்திற்கும் ஒளியைப் பரப்பி பிரகாசமாக விளங்கும். 

ஸ்ரீராம ஜயராம ஜயஜய ராமா.

மனதின் குரல் …. 109ஆவது பகுதியில் பிரதமர் மோடி பேசியவை!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல் 109ஆவது பகுதி

ஒலிபரப்பு நாள் – 28.01.2024

தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

 எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  2024ஆம் ஆண்டின் முதலாவது மனதின் குரல் இது.  அமுதக்காலத்திலே ஒரு புதிய உற்சாகம், புதிய உல்லாசம்.  இரண்டு நாட்கள் முன்பாகத் தான் நாட்டுமக்கள் அனைவரும் 75ஆவது குடியரசுத் திருநாளை மிகுந்த கோலாகலத்தோடு கொண்டாடினோம்.  இந்த ஆண்டு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆவது ஆண்டும் கூட, உச்சநீதிமன்றத்தின் 75ஆவது ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது.  நமது ஜனநாயகத்தின் இந்தத் திருநாட்கள், ஜனநாயகத்தின் தாய் என்ற வகையிலே, பாரதத்தை மேலும் சக்தி படைத்ததாக ஆக்குகின்றன.  பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம் மிகுந்த ஆழமான கருத்தாய்வுக்குப் பிறகு தான் உருவாக்கப்பட்டது.  இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதியின் மூன்றாவது அத்தியாயத்தில், பாரதத்தின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது; 3ஆவது அத்தியாயத்தின் தொடக்கத்திலே, இராமன், அன்னை சீதை, லக்ஷ்மணன் ஆகியோரது சித்திரங்களுக்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர்கள் இடமளித்துள்ளார்கள் என்பது மிகவும் சுவாரசியமான விஷயம்.  பிரபு இராமனின் ஆட்சி, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிதாமகர்களுக்கும் கூட உத்வேகத்தின் ஊற்றாக இருந்திருக்கிறது; ஆகையினால் தான் ஜனவரி 22ஆம் தேதியன்று, அயோத்தியில் நான் “தெய்வம் முதல் தேசம் வரை” என்று பேசியிருந்தேன், “இராமன் முதல் நாடு வரை” என்றும் கூறியிருந்தேன்.

நண்பர்களே, அயோத்தியிலே பிராண பிரதிஷ்டை சந்தர்ப்பமானது, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஓரிழையில் இணைத்து வைத்தது.  அனைவரின் இறையும் ஒன்றே, அனைவரின் பக்தியும் ஒன்றே, அனைவரின் சொல்லிலும் இராமன், அனைவரின் இதயங்களிலும் இராமன்.  தேசத்தின் பலர் இந்த வேளையில் இராம பஜனைகளைப் பாடி, அவற்றை இராமனின் பாதாரவிந்தங்களிலே சமர்ப்பணம் செய்தார்கள்.   ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று மாலையிலே, நாடெங்கிலும் இராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது.  இந்த வேளையிலே, தேசத்தின் சமூகத்தன்மையின் சக்தி பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உளவுறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரமும் ஆகும்.  மகரசங்கராந்தி முதல் ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்.  இலட்சக்கணக்க்கானோர் மிகுந்த சிரத்தையோடு கூட, தங்களது பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களிலே தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள்.  பலர் இந்தப் பணியோடு தொடர்புடைய படங்களை, காணொளிகளை அனுப்பியிருக்கிறார்கள் – இந்த உணர்வு தடைப்படக்கூடாது, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும்.  சமூக இயல்பின் இந்தச் சக்தி, நமது தேசத்தை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.

என் அருமையான நாட்டுமக்களே, இந்த முறை ஜனவரி 26ஆம் தேதியன்று நடைபெற்ற அணிவகுப்பு, மிகவும் அற்புதமானதாக இருந்தது; ஆனால் மிக அதிக அளவு விவாதப் பொருளானது என்னவோ, அணிவகுப்பில் கலந்து கொண்ட பெண்கள் சக்தி தான்.  கர்த்தவ்ய பாதையில், மத்திய பாதுகாப்புப் படையினர், தில்லி போலீசாருடைய பெண்கள் பிரிவு, அணிவகுப்பைத் தொடங்கிய போது, அனைவரும் பெருமிதம் அடைந்தார்கள்.  பெண்களின் பேண்டு வாத்தியத்தின் அணிவகுப்பு, அவர்களின் அற்புதமான ஒருங்கிணைப்பு ஆகியவற்றைப் பார்த்த போது, நாட்டிலும், அயல்நாடுகளிலும் உள்ளோர் வியந்து போனார்கள்.  இந்த முறை அணிவகுப்பில் கலந்து கொண்ட 20 அணிகளில் 11 அணிகள் பெண்களின் அணிகளாகவே இருந்தன.  இடம்பெற்றக் காட்சி ஊர்திகள் அனைத்திலும் பெண் கலைஞர்களே இருந்ததையும் காண முடிந்தது.  நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளிலும் கூட, கிட்டத்தட்ட 1500 பெண்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  பல பெண் கலைஞர்கள், சங்கு, நாகஸ்வரம் மற்றும் நாகதா போன்ற பாரதீய இசை வாத்தியங்களை வாசித்து வந்தார்கள்.  பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமான DRDO வின் காட்சி ஊர்தி வந்த போது, அதுவும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.  எப்படி பெண்சக்தியானது நிலம்-நீர்-வானம், இணையம் மற்றும் விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது என்பது இதிலே வெளிப்படுத்தப்பட்டது.  21ஆம் நூற்றாண்டின் பாரதம், இப்படிப்பட்ட பெண்கள் வழிகாட்டும் முன்னேற்றம் என்ற மந்திரத்தோடு கூட முன்னேறி வருகிறது.

நண்பர்களே, அர்ஜுன் விருதுகள் வழங்கு விழாவினை நீங்கள் சில நாட்கள் முன்னர் பார்த்திருப்பீர்கள்.  குடியரசுத் தலைவரின் மாளிகையிலே, தேசத்தின் பல திறமையான விளையாட்டு வீரர்களும், தடகள வீரர்களும் இதிலே கௌரவிக்கப்பட்டார்கள்.  இங்கேயும் கூட மக்களின் கவனத்தை நன்றாக கவர்ந்த விஷயம் என்றால், அது அர்ஜுன் விருதுகளைப் பெறும் பெண்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் தாம்.  இந்த முறை 13 தடகள வீராங்கனைகளுக்கு அர்ஜுன் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.  இந்த வீராங்கனைகள், பல பெரிய பந்தயங்களில் பங்கெடுத்திருக்கிறார்கள், பாரதத்தின் கொடியை அங்கே பறக்க விட்டிருக்கிறார்கள்.  உடல்ரீதியான, பொருளாதாரச் சவால்கள் ஆகியவை எல்லாம், இந்த சாகஸம் படைத்த, திறமைவாய்ந்த வீராங்கனைகளின் முன்னே தாக்குப் பிடிக்க முடியவில்லை.  மாறிவரும் பாரதத்தில், அனைத்துத் துறைகளிலும் நமது சிறுமிகள், தேசத்தின் பெண்கள் அற்புதங்களை வெளிப்படுத்தி வருகிறர்கள்.  மேலும் ஒரு துறை உண்டு, அதிலே பெண்கள் தங்களின் அடையாளத்தைப் பொறித்திருக்கிறார்கள் என்றால் அது சுயவுதவிக் குழுக்கள்.  இன்று பெண்கள் சுயவுதவிக் குழுக்களின் எண்ணிக்கை தேசத்திலே அதிகரித்திருக்கிறது, அவர்களுடைய பணியாற்றும் எல்லைகளும் விரிவடைந்திருக்கின்றன.  கிராமங்கள்தோறும் வயல்களிலே, நமோ ட்ரோன் சகோதரிகள், ட்ரோன் வாயிலாக, வேளாண்மையில் உதவி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை.  உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச்சிலே, அங்கே இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி உயிரி உரம், உயிரிப் பூச்சிக்கொல்லி ஆகியவற்றைத் தயாரிக்கும் பெண்களைப் பற்றித் தெரிய வந்தது.  சுயவுதவிக் குழுக்களோடு இணைந்த நிபியா பேகம்புர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் பசுஞ்சாணம், வேப்பிலைகள், பலவகையான மருத்துவத் தாவரங்களைக் கலந்து, உயிரி உரத்தைத் தயார் செய்கிறார்கள்.  இதைப் போலவே இந்தப் பெண்கள், இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் மிளகாயைப் பசை போல அரைத்து, உயிரி பூச்சிக்கொல்லியைத் தயாரிக்கிறார்கள்.  இந்தப் பெண்கள் அனைவரும் இணைந்து உன்னதி ஜைவிக் இகாயி, அதாவது உன்னதி உயிரி அலகு என்ற பெயரிலான அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.  உயிரிப் பொருட்களைத் தயாரிப்பதில் இந்தப் பெண்களுக்கு இந்த அமைப்பு உதவிகரமாக இருக்கிறது.  இதன் வாயிலாகத் தயாரிக்கப்படும் உயிரி உரம், உயிரிப் பூச்சிக்கொல்லி ஆகியவற்றுக்கான தேவை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  இன்று, அருகில் இருக்கும் உள்ள கிராமங்களில் 6000த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இவர்களிடமிருந்து உயிரிப் பொருட்களை வாங்கி வருகிறார்கள்.  இதன் காரணமாக சுயவுதவிக்குழுவோடு தொடர்புடைய இந்தப் பெண்களின் வருமானம் அதிகரித்திருக்கிறது, அவர்களின் பொருளாதார நிலையும் மேம்பாடு கண்டிருக்கிறது.

என் மனம்நிறை நாட்டுமக்களே, சுயநலமில்லாத உணர்வோடு சமூகத்தையும், தேசத்தையும் சக்தியுடையதாக ஆக்கும் பணியில் ஈடுபடும் நாட்டுமக்களின் முயற்சிகளை மனதின் குரலில் நாம் முன்னிறுத்துகிறோம்.  அந்த வகையிலே, மூன்று நாட்கள் முன்பாக தேசத்தில் பத்ம விருதுகளை அறிவித்த போது, மனதின் குரலில் இப்படிப்பட்ட மனிதர்கள் குறித்த விவாதம் இயல்பாக நடக்கும் ஒன்று.  இந்த முறையும் கூட இப்படிப்பட்ட நாட்டுமக்கள் பலருக்கு பத்ம விருதுகள் அளிக்கப்பட்டிருந்தன, இவர்கள் களத்தோடு இணைந்து, சமூகத்தில் பெரியபெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய செயல்களைப் புரிந்திருப்பவர்கள்.  கருத்தூக்கமளிக்கும் உத்வேகம் நிறைந்த இந்த நபர்களின் வாழ்க்கைப் பயணம் பற்றித் தெரிந்து கொள்வது தொடர்பாக, தேசமெங்கும் அதிக ஆர்வம் காணப்பட்டிருக்கிறது.  ஊடகங்களின் தலைப்புச்செய்திகளைத் தாண்டி, செய்தித்தாள்களின் முதல்பக்கங்களுக்கு அப்பால், எந்த ஒரு புகழ் வெளிச்சமும் இல்லாமல் இவர்கள் சமூகச் சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  நாம் இவர்களைப் பற்றி மிகச் சிறிய அளவே ஒரு வேளை அறிந்திருப்போம் ஆனால், இப்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி அனைத்து விதங்களிலும் விவாதிக்கப்படுகின்றன, மக்களும் இவர்களைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கின்றார்கள்.  பத்மவிருதுகளைப் பெறும் பெரும்பாலானோர், தத்தமது துறைகளில் மிகவும் சிறப்பான செயல்களைப் புரிந்து வருகிறார்கள்.  சிலர் அவசரகால ஊர்திக்கு ஏற்பாடு செய்து தருகிறார்கள், சிலர் யாருமற்ற அநாதைகளுக்கு குடியிருக்க இடம் அமைத்துத் தருகிறார்கள்.  சிலர் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு, இயற்கைப் பராமரிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.  650க்கும் மேற்பட்ட நெல் ரகங்களைப் பாதுகாக்கும் பணியிலும் கூட சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.  சிலரோ, போதைப்பொருள் மற்றும் மதுபானத்தால் பீடிக்கப்பட்டவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.  சுயவுதவிக் குழுக்கள், குறிப்பாக பெண்சக்தி இயக்கம் வாயிலாக பலர் மக்களை ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  பத்ம விருதுகளைப் பெறுபவர்களில் 30 பேர் பெண்கள் என்பது நாட்டுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும்.  இந்தப் பெண்கள், கள அளவில் தங்கள் பணிகள் வாயிலாக சமூகத்தையும், தேசத்தையும் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.  

நண்பர்களே, பத்ம விருத்களைப் பெறும் அனைவரின் பங்களிப்பானது, நாட்டுமக்களுக்கு உத்வேகம் அளிக்கவல்லது.  இந்த முறை விருது பெறுவோரில் பாரம்பரிய இசை, பாரம்பரிய நடனம், நாட்டுப்புற நடனம், நாடகத்துறை மற்றும் பஜனை உலகிலே தேசத்திற்குப் பெருமை சேர்ப்போர் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.  பிராக்கிருதம், மாலவி, லம்பாடி மொழிகளில் பிரமாதமான செயல்களைப் புரிந்தோருக்கும் கூட கௌரவம் வழங்கப்பட்டிருக்கிறது.  அயல்நாடுகளைச் சேர்ந்த பலருக்கு பத்ம விருது அளித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது.  இவர்களின் பணிகளால் பாரத நாட்டு கலாச்சாரம், மரபு ஆகியவற்றுக்குப் புதிய உயர்வு கிடைத்து வருகிறது.  இவர்களில் ஃப்ரான்ஸ், தாய்வான், மெக்சிகோ, வங்கதேசத்தைச் சேர்ந்த குடிமக்களும் அடங்குவார்கள்.  

நண்பர்களே, கடந்த ஒரு தசாப்தத்திலே, பத்மவிருதுகள் வழங்கும் முறையானது முழுமையாக மாற்றமடைந்திருக்கிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.  இப்போது இது மக்களின் பத்மவாக மாறிவிட்டது.  பத்ம விருதுகளை அளிக்கும் முறையில் பல மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இதிலே இப்போது தங்களைத் தாங்களே முன்னிறுத்தும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.  இதன் காரணமாகத் தான், 2014ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த முறை 28 மடங்கு அதிக நியமனங்கள் கிடைத்திருக்கின்றன.  பத்ம விருதுகளின் பெருமை, நம்பகத்தன்மை, அதன்மீதான நன்மதிப்பு ஒவ்வொர் ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது என்பது நமக்கு விளங்குகிறது.  பத்ம விருதுகளைப் பெறும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, ஒவ்வொரு வாழ்க்கைக்கும் ஒரு இலக்கு உள்ளது, ஒவ்வொருவரும் ஒரு இலட்சியத்தை நிறைவு செய்யவே பிறப்பெடுத்திருக்கிறார்கள் என்று கூறப்படுவதுண்டு.  இதன் காரணமாக மக்கள் முழுமையான அர்ப்பணிப்போடு தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறார்கள்.  சிலர் சமூக சேவை வாயிலாக, சிலர் இராணுவத்தில் சேர்வது மூலம், சிலரோ அடுத்த தலைமுறைக்குக் கல்வி கற்பிப்பதன் வாயிலாக என்று தங்கள் கடமைகளின்படி ஒழுகி வருகிறார்கள்.  ஆனால் நண்பர்களே, வாழ்க்கையின் இறுதிக்குப் பிறகும் கூட, சமூக வாழ்க்கையின்பால் தங்களுடைய பொறுப்புக்களை நிறைவேற்றும் சிலரும் கூட நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள்.  இதற்கு அவர்கள் கண்டிருக்கும் வழிதான் உடலுறுப்பு தானம்.  தற்காலத்தில் நாட்டில் ஓராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களின் மரணத்திற்குப் பிறகு தங்களின் உடலுறுப்புக்களைத் தானமாக அளித்துச் சென்றிருக்கிறார்கள்.  இந்தத் தீர்மானம் எளிதானது அல்ல.   ஆனால் இந்தத் தீர்மானம் பலரது உயிர்களைக் காக்கவல்லது.  தங்களுடைய நெருங்கிய சொந்தங்களின் இறுதி ஆசைக்கு மதிப்பளித்த அத்தகையோரின் குடும்பங்களுக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.  இன்று தேசத்திலே பல அமைப்புகள் இந்த திசையிலே பல உத்வேகமளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.  சில அமைப்புகள் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் அதே வேளையில், சில அமைப்புகள் அங்கதானம் செய்ய விருப்பமுடையோரைப் பதிவு செய்வதில் உதவிகரமாகச் செயல்படுகின்றன.  இப்படிப்பட்ட முயற்சிகளால் உறுப்புதானம் குறித்த ஆக்கப்பூர்வமான சூழல் தேசத்தில் உருவாகி வருகிறது, மக்களின் உயிர்களும் காப்பாற்றப்பட்டு வருகின்றன.  

என் இனிய நாட்டுமக்களே, நோயாளிகளின் வாழ்க்கையை எளிதாக ஆக்கக்கூடிய, அவர்களின் பிரச்சினைகளைக் குறைக்கக்கூடிய ஒரு நம் நாட்டுக் கண்டுபிடிப்பு பற்றி உங்களிடம் தெரிவிக்க இருக்கிறேன்.  உங்களில் பலர் ஆயுர்வேதம், சித்தா அல்லது யுனானி மருத்துவமுறைகள் வாயிலாக சிகிச்சையை மேற்கொண்டிருப்பீர்கள்.  ஆனால் இந்த நோயாளிகள், இதே முறையின் வேறு ஒரு மருத்துவரிடம் செல்லும் போது இவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.  இந்த சிகிச்சை முறைகளில் நோய்களின் பெயர்கள், சிகிச்சை மற்றும் மருந்துகள் விஷயத்தில் பொதுவான பதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.  ஒவ்வொரு மருத்துவரும் தங்கள் வழிமுறைப்படி நோயின் பெயர் மற்றும் சிகிச்சை நெறிமுறைகளை எழுதுகிறார்கள். வேறு ஒரு மருத்துவருக்குப் பலமுறை புரிதலில் கடினத்தை அடிக்கடி இது ஏற்படுத்துகிறது.  பல தசாப்தங்களாகத் தொடர்ந்துவரும் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது.  ஆயுஷ் அமைச்சகம், ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ முறைகளோடு தொடர்புடைய தரவுகளையும், அகராதியையும் வகைப்படுத்தியிருக்கிறது, இதிலே உலக சுகாதார அமைப்பும் உதவி புரிந்திருக்கிறது.  இருவரின் முயற்சிகளின்படி ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா சிகிச்சை முறைகளில் நோய் மற்றும் சிகிச்சை தொடர்பான அகராதியின் தனிக்குறியீடு செய்யப்பட்டுவிட்டது.  இந்த தனிக்குறியாக்க முறையின் உதவியால், இப்போது அனைத்து மருத்துவர்களும் மருத்துவக் குறிப்பு அல்லது மருந்துச் சீட்டில் ஒரே மாதிரியான மொழியில் எழுத முடியும்.  இதனால் ஒரு நன்மை என்னவென்றால், நீங்கள் இந்தச் சீட்டை எடுத்துக் கொண்டு வேறொரு மருத்துவரிடம் சென்றீர்களென்றால், அந்த மருத்துவருக்கு இதன் முழு விபரமும் கிடைத்து விடும்.  உங்களது நோய், சிகிச்சை, மருந்துகள் என்னென்ன, எப்போதிலிருந்து சிகிச்சையை மேற்கொண்டு வருகிறீர்கள், உங்களுக்கு இருக்கும் ஒவ்வாமை என்ன என அனைத்துத் தகவல்களையும் தெரிந்து கொள்வதற்கு இந்தச் சீட்டு உதவிகரமாக இருக்கும்.   ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருப்போருக்கு இதனால் மேலும் ஒரு நன்மை உண்டாகும்.  பிற நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கும் கூட நோய், மருந்து மற்றும் அதன் தாக்கம் பற்றிய முழுத் தகவலும் கிடைக்கும்.  ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்லவும், பல விஞ்ஞானிகளோடு இணைவதாலும் இந்த சிகிச்சை முறை, மேலும் சிறப்பான விளைவுகளை அளிக்கும், மக்களுக்கும் இவற்றின்பால் ஈர்ப்பும் அதிகரிக்கும்.  இந்த ஆயுஷ் வழிமுறைகளோடு இணைந்திருக்கும் நமது மருத்துவர்கள், இந்தத் தனிக் குறியீட்டு முறையை மிக விரைவிலேயே பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.

எனது நண்பர்களே, ஆயுஷ் சிகிச்சை முறை பற்றிப் பேசி வரும் போது, என் கண்முன்னால் யானுங்க் ஜாமோஹ் லைகோவின் படமும் விரிகிறது.  செல்வி. யானுங்க், அருணாச்சல் பிரதேசத்தில் வசிப்பவர், மருத்துவத் தாவரங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.  இவர் பழங்குடி மக்களின் பாரம்பரிய சிகிச்சைமுறைக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டி, கணிசமான பணிகளைச் செய்திருக்கிறார்.  இந்தப் பங்களிப்பிற்காக இவருக்கு இந்த முறை பத்ம விருதும் அளிக்கப்பட்டிருக்கிறது.  இதைப் போலவே, இந்த முறை சத்தீஸ்கட்டின் ஹேமசந்த் மாஞ்ஜீ அவர்களுக்கும் கூட பத்ம விருது அளிக்கப்பட்டிருக்கிறது.  வைத்யராஜ் ஹேமசந்த் மாஞ்ஜீ அவர்களும் ஆயுஷ் சிகிச்சை முறையின் துணையோடு மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.  சத்தீஸ்கட்டின் நாராயன்பூரைச் சேர்ந்த ஏழை நோயாளிகளுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சேவையாற்றி வருகிறார்.  நமது தேசத்தின் ஆயுர்வேத மற்றும் தாவர மருந்துகளின் அறியப்படாதிருக்கும் களஞ்சியத்தைப் பராமரிப்பதிலே யானுங்க், ஹேமசந்த் போன்றவர்களின் பங்களிப்பு மகத்தானது.

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரல் வாயிலாக நமக்கிடையேயான உறவு, இது பத்தாண்டுகள் பழமையானதாக ஆகியிருக்கிறது.  சமூக ஊடகங்களும், இணையமும் கோலோச்சும் இந்தக் காலகட்டத்திலும் கூட, வானொலி நாடு முழுவதையும் இணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஊடமாக இருக்கிறது.  வானொலியின் பலம் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்தவல்லது, இதன் ஆச்சரியமான எடுத்துக்காட்டு, சத்தீஸ்கட்டிலே காணக் கிடைக்கிறது.  கடந்த ஏழு ஆண்டுகளாகவே இங்கே மக்களுக்கு விருப்பமான ஒரு நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பாகி வருகிறது.  இதன் பெயர் ஹமர் ஹாதீ – ஹமர் கோட்.  பெயரைக் கேட்டவுடனே வானொலிக்கும், யானைக்கும் என்ன தொடர்பிருக்க முடியும் என்று எண்ணமிடத் தோன்றும்.  ஆனால் இதில் தான் வானொலியின் அழகே அடங்கியிருக்கிறது.  சத்தீஸ்கட்டில் ஆகாசவாணியின் நான்கு நிலையங்களான அம்பிகாபூர், ராய்பூர், பிலாஸ்பூர் மற்றும் ராய்கட்டில், ஒவ்வொரு மாலையும் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது என்பதோடு, சத்தீஸ்கட்டின் காடுகளிலும், அதற்கருகில் இருக்கும் பகுதிகளில் வசிப்போரும் மிகுந்த கவனத்தோடு இந்த நிகழ்ச்சியைக் கேட்டு வருகிறார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.  யானைக்கூட்டம் காட்டிலே எந்தப் பகுதியில் சென்று கொண்டிருக்கிறது என்ற தகவல் ஹமர் ஹாதீ –ஹமர் கோட் என்ற இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படுகிறது.  இந்தத் தகவல் இங்கிருப்போருக்கு மிகவும் பயனுடையதாக இருக்கிறது.  வானொலி வாயிலாக யானைகளின் கூட்டம் பற்றிய தகவல் தெரிந்தவுடனேயே மக்கள் எச்சரிக்கை அடைகிறார்கள்.  எந்தப் பாதையில் யானைகள் பயணிக்கின்றன என்று அறிந்து கொண்டு, அங்கே செல்லாமல் இருப்பதால் அபாயம் தவிர்க்கப்படுகிறது.  இதனால் ஒருபுறம் யானைகளின் கூட்டத்தால் இழப்பிற்கான சாத்தியக்கூறு குறைகிறது, மறுபுறத்தில் யானைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதிலும் இது உதவிகரமாக இருக்கிறது.  இந்தத் தரவுகளின் பயன்பாடு, எதிர்காலத்தில் யானைகளைப் பாதுகாப்பதில் உதவிகரமாக இருக்கும்.  யானைகளோடு தொடர்புடைய தகவல்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்கப்படுகின்றன.  இதனால் காடுகளின் அக்கம்பக்கத்தில் இருப்போருக்கு, யானைகளோடு இசைவாக வாழ்வது எளிதாக ஆகியிருக்கிறது.  சத்தீஸ்கட்டின் இந்த விநோதமான முன்னெடுப்பு மற்றும் இதன் அனுபவங்களால் ஆதாயத்தைக் கண்டு, தேசத்தின் பிற வனப்பிரதேசங்களில் வசிப்போரும் இதைப் பின்பற்றி ஆதாயம் அடையலாம்.

என் மனம்நிறை நாட்டுமக்களே, இந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதியன்று நாமனைவரும் தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாடினோம்.  நமது கௌரவம்மிக்க ஜனநாயகப் பாரம்பரியங்களுக்கான ஒரு சிறப்பான தினம் ஆகும் இது.  இன்று தேசத்தில் சுமார் 96 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள்.  இந்தப் எண்ணிக்கை எத்தனை பெரியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.  இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை விடவும் மூன்று பங்கு பெரியது.  ஐரோப்பாவின் மொத்த மக்கள்தொகையை விடவும் இது ஒண்ணரை பங்கு அதிகமானது.  வாக்குச்சாவடிகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், தேசத்தில் இன்று இவற்றின் எண்ணிக்கை சுமார் பத்தரை இலட்சம் இருக்கிறது.  பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனும், தனது ஜனநாயகக் கடமையைப் பயன்படுத்த இயல வேண்டும் என்பதற்காக, நமது தேர்தல் ஆணையம், ஒரே ஒரு வாக்காளர் இருக்கும் இடங்களிலும் கூட வாக்குச் சாவடியை அமைக்கிறது.  தேசத்தில் ஜனநாயக மதிப்பீடுகளைப் பலப்படுத்தும் வகையில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நமது தேர்தல் ஆணையத்தையும் நான் பாராட்ட விரும்புகிறேன்.  

நண்பர்களே, இன்று தேசத்தில் உற்சாகமான விஷயம் என்னவென்றால், உலகின் பல நாடுகளில் வாக்களிப்போரின் சதவீதம் குறைந்து வரும் வேளையில், பாரதத்தில் வாக்களிப்போரின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது.  1951-52இலே, தேசத்திலே முதன்முறையாக தேர்தல் நடந்த போது, சுமார் 45 சதவீதம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தார்கள்.  இன்று இந்தப் புள்ளிவிவரம் கணிசமாக அதிகரித்திருக்கிறது.  தேசத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையோடு கூடவே, வாக்களிப்பும் அதிகரித்திருக்கிறது.  நமது இளையதலைமுறை வாக்காளர்களுக்கான பதிவிற்கான வாய்ப்பு அதிகம் அளிக்கப்பட வேண்டி, இதற்காக அரசாங்கம் சட்டமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.  வாக்காளர்களுக்கிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் பொருட்டு சமூக அளவிலும் பல முயற்சிகள் நடைபெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  சிலர் வீடுதோறும் சென்று வாக்களிப்பு பற்றி வாக்காளர்களுக்குத் தெரிவிக்கிறார்கள், சிலர் சித்திரங்கள் வாயிலாகவும், சிலரோ தெருமுனை நாடகங்கள் மூலமாகவும் இளைஞர்களின் கருத்தைக் கவரும் வகையில் பணிபுரிகிறார்கள்.  இப்படியான அனைத்து முயற்சிகளும், நமது மக்களாட்சி என்ற உற்சவத்திலே, பல்வேறு வண்ணங்களை இட்டு நிரப்புகிறது.  வாக்காளர் பட்டியிலில் உங்கள் பெயரை கண்டிப்பாக இணைத்துக் கொள்ளுங்கள் என்று முதல்முறையாக வக்களிக்கப்போகும் நமது வாக்காளர்களிடம் மனதின் குரல் வாயிலாக நான் கேட்டுக் கொள்கிறேன்.  தேசிய வாக்காளர் சேவைத் தளம் மற்றும் வாக்காளர் உதவி எண் செயலி வாயிலாக, அவர்கள் எளிதாக இதை இணையம் மூலமாக நிறைவு செய்ய முடியும்.  உங்களுடைய ஒரு வாக்கு, தேசத்தின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கக்கூடும், தேசத்தின் எதிர்காலமாக ஆகக் கூடும் என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.  

என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, இன்று ஜனவரி மாதம் 28ஆம் தேதியன்று பாரதத்தின் இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளின் பிறந்த நாளாகும்.  இவர்கள் பல்வேறு காலகட்டங்களில் தேசபக்தியின் உதாரணத்தை நிலைக்கச் செய்தவர்கள்.  பஞ்சாபின் சிங்கமான லாலா லாஜ்பத் ராய் அவர்களுக்கு இன்று தேசம் நினைவாஞ்சலிகளை அளித்து வருகிறது.  லாலா அவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் எப்படிப்பட்ட வீரராக இருந்தாரென்றால், அந்நிய ஆட்சியிடமிருந்து விடுதலை பெற்றுத்தரும் நோக்கத்தில் தனது இன்னுயிரையே ஆகுதியாக அளித்தார்.  லாலா அவர்களின் ஆளுமையானது சுதந்திரப் போராட்டத்தோடு மட்டும் நின்று போகவில்லை.  அவர் மிகுந்த தொலைநோக்குப் பார்வை உடையவராக இருந்தார்.  பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் பிற அமைப்புக்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார் இவர்.  இவருடைய நோக்கம் அந்நியர்களை நாட்டை விட்டு விரட்டுவது மட்டுமல்ல, மாறாக, தேசத்தைப் பொருளாதாரரீதியாக பலப்படுத்தும் தொலைநோக்கும் கூட இவருடைய எண்ணத்தில் முக்கிய பங்கு வகித்தது.  இவருடைய கருத்துக்களும், இவருடைய உயிர்த்தியாகமும் பகத் சிங்கின் மனதிலே பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.  ஃபீல்ட் மார்ஷல் கே. எம். கரியப்பா அவர்களுக்கும் நான் சிரத்தையுடனான அஞ்சலிகளை அளிக்கும் தினம் இன்று.  இவர் வரலாற்றின் மகத்துவமான காலத்தில் நமது படைக்குத் தலைமையேற்று, சாகஸம் மற்றும் வீரத்தின் எடுத்துக்காட்டாக விளங்கினார்.  நமது இராணுவத்தை சக்தியுடையதாக ஆக்குவதில் இவருடைய மகத்துவமான பங்களிப்பு உண்டு.

என் கனிவுநிறை நாட்டுமக்களே, இன்று விளையாட்டு உலகிலேயும் கூட பாரதம் தினம்தினம் புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது.  விளையாட்டுலகில் முன்னேறிச் செல்ல, விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும், தேசத்தில் நிறைய விளையாட்டுப் பந்தயங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பன அவசியமானது.  இந்த எண்ணத்தோடு கூடவே இன்று பாரதத்தில் புதியபுதிய விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.  சில நாட்கள் முன்பாகத் தான் சென்னையில் கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  இதிலே தேசத்தின் 5000த்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கெடுத்தார்கள்.  இன்று பாரதத்தில் தொடர்ந்து இப்படிப்பட்ட புதிய தளங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன, இவை காரணமாக விளையாட்டு வீரர்களுக்குத் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.  கடற்கரை விளையாட்டுக்கள் இதே போன்றதொரு தளமாக ஆகியிருக்கிறது.  தீவ் தீவிலே இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  தீவ் தீவு, மத்திய யூனியன் பிரதேசம் என்பதை நீங்கள் அறிவீர்கள், சோமநாத்துக்கு மிக அருகிலே இது இருக்கிறது.  இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தீவில் இந்தக் கடற்கரை விளையாட்டுக்கள் தொடக்கி வைக்கப்பட்டன.  இது பாரதத்தின் முதல் பல்விளையாட்டு கடற்கரை விளையாட்டுக்கள் ஆகும்.  இவற்றிலே டக் ஆஃப் வார், கடல் நீச்சல், பென்காக்சிலாட், மல்லகம்பம், பீச் வாலிபால், பீச் கபடி, பீச் கால்பந்தாட்டம், பீச் குத்துச்சண்டை போன்ற போட்டிகள் நடைபெற்றன.  இவற்றிலே அனைத்துப் போட்டியாளர்களுக்கும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது, கடல் பகுதிகள் இல்லாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கூட இந்தப் போட்டியில் கலந்து கொண்டார்கள் என்பது உங்களுக்குப் பேராச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும்.  இந்தப் போட்டியில் அதிக அளவில் பதக்கங்களை மத்திய பிரதேசம் வென்றது, இங்கே கடற்கரை என்பதே கிடையாது.  விளையாட்டுக்களின்பால் இந்தக் கண்ணோட்டம், எந்த ஒரு தேசத்தையும், விளையாட்டுக்களின் உலகின் மகுடமணியாக ஆக்கவல்லது.

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை இம்மட்டே.  பிப்ரவரியிலே மீண்டும் ஒருமுறை உங்களை வந்து சந்திப்பேன்.  நாட்டுமக்களின் சமூக முயற்சிகளால், தனிப்பட்ட முயற்சிகளால் எப்படி தேசம் முன்னேறி வருகிறது, இது குறித்தே நமது கவனம் இருக்கும்.  நண்பர்களே, நாளை 29ஆம் தேதியன்று காலையில் பரீக்ஷா பே சர்சா, தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.  தேர்வுகளை எதிர்கொள்வோமினுடைய இது 7ஆவது பதிப்பாகும்.  அனைவரும் எப்போதும் ஆவலோடு காத்திருந்து கேட்கும் வகையிலான நிகழ்ச்சி இது.  இதனால் மாணவர்களோடு உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது, அவர்களுடைய தேர்வுகள் தொடர்பான மனவழுத்ததைக் குறைக்கும் முயற்சிகளில் நான் ஈடுபடுகிறேன்.  கடந்த ஏழாண்டுகளிலே, பரீக்ஷா பே சர்ச்சா, கல்வி மற்றும் தேர்வுகளோடு தொடர்புடைய பல பிரச்சினைகள் குறித்து உரையாட ஒரு மிகச் சிறந்த ஊடகமாக ஆகி இருக்கிறது.  இந்த முறை இரண்டேகால் கோடிக்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் இதிலே தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள், தங்கள் உள்ளீடுகளையும் அளித்திருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  நாம் முதன்முறையாக 2018இலே இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிய வேளையில் இந்த எண்ணிக்கை வெறும் 22,000ஆக இருந்தது.  மாணவச் செல்வங்களுக்கு உத்வேகம் அளிக்கவும், தேர்வுகளின் அழுத்தங்கள் குறித்து விழிப்புணர்வைப் பரப்பவும், பல நூதனமான முயற்சிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.  நாளை சாதனைப் பதிவேற்படுத்தும் எண்ணிக்கையில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும், குறிப்பாக இளைஞர்களிடத்தில், மாணவச் செல்வங்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்.  உங்களோடு கலந்து பேசுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.  இந்தச் சொற்களோடு நான் மனதின் குரலின் இந்தப் பதிப்பினை நிறைவு செய்கிறேன், உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.  விரைவிலேயே நாம் மீண்டும் சந்திப்போம்.  நன்றிகள்.

*****

மதுரையில் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா!

thirumalai naickar birthdayu - 2026
#image_title

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றிய நாயுடு மகாஜன சங்கம் சார்பாக மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா சங்க வளாகத்தில் நடந்தது.

இந்த விழாவிற்கு , ஓன்றிய அமைப்பாளர் பொன் கமலக்கண்ணன் தலைமை தாங்கி திருமலை மன்னர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். கோவிந்தன் பூஜைகளை செய்தார். தி.மு.க பேரூர் அவைத் தலைவர் திரவியம், சங்க ஒன்றிய நிர்வாகி புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குப்புசாமி வரவேற்றார். இதில், கரிக்கடை பாண்டி, கற்பகம் சுதாகர், பாபு, துரைராஜ், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாஸ்கரன் நன்றி கூறினார்.


தேசிய வாக்காளர் தின உறுதி மொழி

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி தாதம்பட்டி-நீரேத் தான் மந்தை திடலில் எடுக்கப்பட்ட து.

இந்த நிகழ்சிக்கு, தாசில்தார் மூர்த்தி தலைமை தாங்கினார்.
செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், பேருராட்சித் தலைவர் மு.பால்பாண்டியன் வாக்காளர் உறுதி மொழி வாசித்தார். அப்போ து அவர் அதில் கூறியதாவது: –

மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலம் கருதும் மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் ,மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம் இனம் ஜாதி வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி வாக்களிப் போம் என்று உறுதி மொழி கூறுகிறோம் இவ்வாறு அவர் கூறினார். அதை மற்றவர்கள் தொடர்ந்து கூறினார். இதில், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெயகாந் தன், பூமிநாதன், மகளிர் சுயஉதவிக் குழுவினர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்பட பொதுமக்களும் கலந்து கொண் டனர். முடிவில் ,இளநிலை உதவியாளர் முத்துபாண்டி நன்றி கூறினார்.


சோழவந்தான்எம்விஎம் கலைவாணி பள்ளியில் நாட்டின் 75வது குடியரசு தின விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ளஎம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளியின் தாளாளர் எம் வி எம் மருது பாண்டியன் தேசிய கொடி ஏற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார் இதில் எம் வி எம் குழும தலைவரும் தொழிலதிபருமான மணி முத்தையா வள்ளி மயில் மற்றும் பள்ளி முதல்வர் செல்வம் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது இதில் கட்டுரை போட்டி பேச்சு போட்டி இலக்கியப் போட்டி போன்ற தனித்திறனை நிரூபிக்கும் போட்டிகள் நடைபெற்றது தொடர்ந்து மாணவ மாணவிகளின் மாறுவேட போட்டிகள் நடைபெற்றது இதில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் உருவம் தாங்கி மாணவ மாணவிகள் மேடையில் வந்து தங்களது திறமை வெளிப்படுத்தினர் குடியரசு தின விழா போட்டிகளில் கலந்து கொண்டஅனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்

திருப்பரங்குன்றம் தைப்பூச விழா; பால்குடம் அலகு குத்தி தேர் இழுத்த பக்தர்கள்!

thirupparankundram thaipoosa ther - 2026
#image_title

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் தைப்பூச விழா முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பால்குடம் அலகு குத்தி தேர் இழுத்தல் பறவை காவடி உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் தைப்பூச திருநாளன்று இரண்டு முருகன் தெய்வானை உற்சவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வீதி உலா நடந்தது.
கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூச திருவிழாவில் , சுவாமி தினமும் காலை மாலை இரு வேலைகளிலும் வீதியை வலம் வருவார். கடந்த 21 ஆம் தேதி பத்தாம் நாள் திருவிழா திருத்தேர் வீதி உலாவும், 22 ஆம் தேதி 11ஆம் நாள் கார்த்திகை நட்சத்திரத்தன்று தெப்ப திருவிழாவும் நடைபெற்றது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருநாளன்று பக்தர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

தைப்பூச திருநாளை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி அலகு குத்தி தேர் இழுத்து வந்தனர்.
மேலும் ,ஒரு சிலர் பறவை காவடி எடுத்து வந்தனர்.
மேலும் ,உற்சவர் முருகன் தெய்வானைக்கு பால், பன்னீர் , தேன், பஞ்சாமிருதம் , மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்கள் கொண்ட அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதேபோல், திருப்பரங்குன்றம் கோவிலின் உப கோவில் ஆன காசி விஸ்வநாதர் கோவில் செல்லும் வழியில் உள்ள பழனி ஆண்டவர் சந்நிதியில் பழனியாண்டவருக்கு காலை 10 மணிக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிருதம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது.

மேலும், தைப்பூசத் திருநாளன்று ஆண்டுக்கு ஒரு முறை இரண்டு முருகன், தெய்வானை உற்சவர் கள் சன்னதியில் இருந்து புறப்பட்டு பெரிய ரதவீதி ,கீழ ரதவீதி, மேல ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை சென்றடையும்.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரண்டு முருகன் தெய்வானை உற்சவர்கள் இரண்டு பல்லாக்கில் புறப்பட்டு கோவிலில் இருந்து வீதி உலா செல்வது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், சேஷ வாகனம், தங்க மயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் 9 நாள் நிகழ்ச்சியாக தெப்பம் முட்டு தள்ளுதலும், 10ம் நாளை தொடர்ந்து தெப்ப தேரோட்டமும் நடைபெற்றது. 11ஒஆம் நாள் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து, சுவாமி இரவு தங்க குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தைப்பூச திருநாள் விழாவினை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றியுள்ள நிலையூர் கூத்தியார் கொண்டு பெருங்குடி காரியாபட்டி திருமங்கலம் போன்ற ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரை ஆக கோவிலுக்கு நடந்து வருவார்கள். விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் செய்து வருகிறது…

காரமடை அருகே படியனூர் பழனியாண்டவர் தைப்பூச திருத்தேர்!

karamadai murugan utsav - 2026
#image_title

காரமடை அருகேயுள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 104 ஆம் ஆண்டு  திருத்தேர் பெருவிழாவையொட்டி முதல் நாள்  இரவு பால் குடம் எடுத்தல்,  அம்மன் அழைப்பு, திருக்கல்யாணம் நடைபெற்றது. தைபூச நாளில் காலை அபிஷேக பூஜை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் மூலவர் பழநி ஆண்டவர்.  

மாலை திருக்கோயில் திடலில் சென்னிவீரம்பாளையம் வள்ளி முருகன் கலைக்குழுவினரின் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இரவு 9 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து பக்தர்களால் இழுக்கப்பட்டது.வள்ளி தெய்வானை சமதே முருகப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி காட்சியளித்தார்.

இந்த திருத்தேர் பெருவிழாவில் சிக்காரம்பாளையம் ஊராட்சித் தலைவர் சா.ஞானசேகரன், துணைத் தலைவர்   மற்றும் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர்கள், படியனூர், சின்ன படியனூர், வடவள்ளி, சென்னிவீரம் பாளையம், சிக்காரம்பாளையம், கள்ளிபாளையம், கரிச்சிப்பாளையம், சின்னக்காரனூர், கன்னார்பாளையம்,  காளட்டியூர், வெள்ளிக்குப்பம் பாளையம் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும்  பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு திருவருட் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  • செய்தி: சரண், காரமடை

குடியரசு தின வாழ்த்தை திட்டமிட்டு புறக்கணித்த திமுக., அரசின் ஆவின்!

aavin milk - 2026

“தேசிய தினங்களுக்கான வாழ்த்துச் செய்தியை திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கும் ஆவின்” நிறுவனத்துக்கு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத்தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் ஆண்டுதோறும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும், “சுதந்திர தினம்”, “குடியரசு தினம்”, “தேசிய பால் தினம்” உள்ளிட்ட தேசிய தினங்களுக்கும் அனைத்து வகையான ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் வாழ்த்துச் செய்தி வெளியிடுவது வழக்கமாகும்.

அவ்வாறான வழக்கத்தை கொண்டிருந்த தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் மதவாத சக்திகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஆவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளுக்கும் கூட வாழ்த்துச் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் கடந்தாண்டு ஜனவரி 26, 74வது குடியரசு தினம்,  ஆகஸ்ட்-15, 77வது சுதந்திர தினம், நவம்பர் 26, தேசிய பால் தினம் உள்ளிட்ட முக்கியமான தேசிய தினங்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்தது.

இந்த நிலையில் இந்தியாவின் 75வது குடியரசு தினமான இன்று (ஜனவரி-26) ஆவின் பால் பாக்கெட்டுகளில் மீண்டும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி வெளியிடாமல், வழக்கமான நடைமுறையை தவிர்த்து, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக முக்கிய தேசிய தினமான குடியரசு தினத்தை மீண்டும்  புறக்கணித்துள்ளதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. 

மேலும் மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு புதிது, புதிதாக வாழ்த்துச் செய்தி வெளியிடும் நடைமுறையை அமுல்படுத்தி விட்டு தேசம் சார்ந்த முக்கிய தினங்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்திருப்பது தேசிய தினங்களை தமிழ்நாடுஅரசின் ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

தமிழ்நாடு அரசு சார்பில் புதிதாக கொண்டு வரப்படும் திட்டங்களுக்கும், புதியதாக அமைக்கப்படும் மருத்துவமனைகள், நூலகங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பல்வேறு விழா அரங்குகளுக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பெயரை சூட்டுவதற்கும், கலைஞர் நூற்றாண்டு விழாவை அரசு செலவில் கொண்டாடுவதற்கும் முனைப்பு காட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய குடியரசு, சுதந்திர தினம், “தேசிய பால் தினம்” உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடும் வழக்கமான நடைமுறையில் இருந்து விலகி, தேசிய தினங்களுக்கு மட்டும் வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணிப்பு வேலைகளை செய்யும் ஆவின் அதிகாரிகள் மீதும், அதனை கண்காணிக்கத் தவறிய பால்வளத்துறை அதிகாரிகள் மீதும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும், புறக்கணிப்பு பணிகள் தொடர்கதையாக இருப்பதும் வேதனைக்குரிய விசயமாகும். 

மத்தியில் ஆளுகின்ற, மாநிலங்களுக்குள் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகின்ற ஆட்சியாளர்களும் அவர்களின் கைத்தடியாக செயல்படும் தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவி உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு, திராவிடம் என்றாலே எட்டிக்காய் கசப்பது போல் ஒருவேளை ஆவினுக்கு, குறிப்பாக திமுக அரசுக்கு தேசியம் என்றாலே கசக்கிறதா..? என தெரியவில்லை.

ஏற்கனவே இந்தியாவின் குடியரசு, சுதந்திர தினம், தேசிய பால் தினம் உள்ளிட்ட தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்த ஆவின் நிர்வாகத்திற்கும், அதனை கண்காணிக்கத் தவறிய பால்வளத்துறைக்கும், நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, முக்கிய தேசிய தினங்களை புறக்கணித்து வரும் ஆவின் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி வருங்காலங்களில் இது போன்ற புறக்கணிப்புகள் நடைபெறாமல் தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் ஆண்டுதோறும் வாழ்த்துச் செய்தி வெளியிடப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

திராவிட மாடல் அரசின் செயலற்ற தன்மையால் கண்ணீர் வடிக்கும் மக்கள்: எல்.முருகன் கண்டனம்!

kilambakkam bus stand - 2026
#image_title
  • கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு ஆம்னி பேருந்துகளை அவசர கதியில் மாற்றுவதா?
  • இல்லாத பேருந்து  நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த நெருக்கடி தரும் திமுக அரசு.
  • போலி திராவிட மாடல் அரசின் செயலற்ற தன்மையால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…

சென்னை கிளாம்பாக்கத்தில்  கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில்  புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டது.

அதற்கான பணிகள் பெருமளவு முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பதவிக்கு வந்தது.

திமுக அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மீதமிருந்த பணிகளை கூட முழுமையாக முடிக்கவில்லை.  அதுமட்டுமல்லாமல் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் தேர்தல் ஆதாயத்திற்காக அவசர கதியில்  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.  மற்றவர்கள் செய்த பணிகளை ஸ்டிக்கர் ஓட்டி தங்கள் பணிகளாக காட்டுவதில் முனைப்பு காட்டும் திராவிட மாடல் திமுக அரசு இந்த பேருந்து நிலையத்திற்கும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிட்டது.

ஆனால் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாளில் இருந்தே அடுத்தடுத்து பிரச்சனைகள் உருவாகி வருகின்றன. சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து அங்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லை. கிளாம்பாக்கம் வந்து சேரும் வெளியூர் பயணிகளும் சென்னை நகருக்குள் செல்ல படாதபாடு படுகின்றனர்.

நூற்றுக்கணக்கான ரூபாய் கொடுத்து கார் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது.

இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்வோரும், சென்னைக்கு வருவோரும் சொல்லொண்ணா துயரத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளை சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்க தமிழக அரசு திடீர் தடை விதித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்க வேண்டும் என தமிழக அரசு நெருக்கடிக் கொடுத்து வருகிறது.

கிளாம்பாக்கத்துக்கு பயணிகள் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.  இதனால் பெரும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.  இதனால் பேருந்தை இயக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மட்டுமின்றி பொதுமககளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தைபூசம், குடியரசு தின விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில்  முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால் ஆம்னி பேருந்து ஏறுவதற்காக கோயம்பேடு வந்த பயணிகளை தடுத்த போலீஸார், கிளாம்பாக்கம் செல்லுமாறு திருப்பியனுப்புகின்றனர். கிளாம்பாக்கத்திற்கு வந்து சேர மக்களுக்கு எந்த வசதியும் இல்லை.  தமிழக அரசின் இந்த நெருக்கடியால் பயணிகள் கடும் துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர்.

கோயம்பேட்டில் தமிழக அரசின் செயலற்ற தன்மையால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அவசர கதியில் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் மாற்ற வேண்டிய அவசியம் என்பது தான் மக்கள் எழுப்பும் கேள்வி.

கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த இடமில்லை. தினமும் சென்னையில் இருந்து 850 ஆம்னி பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. விழாக் காலங்களில் 1200 பேருந்துகள் வரை இயக்கப்படும் நிலையில் ஒட்டு மொத்தமாக எல்லாபேருந்துகளையும் அங்கு கொண்டு வந்து நிறுத்தவோ, பயணிகளை ஏற்றி, இறக்கவோ போதுமான வசதி இல்லை.  100  பேருந்துகளை  மட்டுமே நிறுத்துவதற்கான இடவசதி செய்யப்பட்டுள்ளது.

வரதராஜபுரத்தில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டி முடிக்க பல மாதங்கள் ஆகும். அதுவரை பேருந்துகளை எங்கே நிறுத்த முடியும் என உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இந்த போலி திராவிட மாடல் அரசிடம் பதில் இல்லை.

ஆம்னி பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் பேருந்துகளை இயக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்களை தமிழக அரசு மிரட்டுகிறது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்களை மிரட்டுவதை விடுத்து அவர்களை அழைத்து தமிழக போக்குவரத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும். மக்களை வலுக்கட்டாயமாக கிளாம்பாக்கம் அனுப்பக்கூடாது.

கிளாம்பாக்கம் பேருந்துநிலைய பிரச்சனைகள் வரும் பொங்கலுக்குள் சரி செய்யப்படும் என அமைச்சர்கள் கூறினர். ஆனால் பொங்கல் முடிந்து தைபூசம் கொண்டாடடுகிறோம், ஆனால் பிரச்சனை தீர்க்கப்படாமல் இன்னமும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் அந்த பகுதியில்  பேருந்துகளை இயக்க போதிய சாலை வசதி இல்லை. அதுமட்டுமல்லாமல் அந்த பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு பயணிகளுக்கும் எந்தஒரு வசதிகளும் செய்துதரப்படவில்லை.

கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தை அவசரகதியில் திறந்த போலி திராவிட மாடல் திமுக அரசு அதனை மக்கள் பயன்படுத்த ஏதுவாக அனைத்து வசதிகளையும் உடனடியாக  செய்து தர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (36)- மலின தர்ப்பண ந்யாய:

samskrita nyaya - 2026

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன் 

மலின தர்ப்பண ந்யாய: – மலினம் – தூசி படிந்த, தர்பணம் – கண்ணாடி

‘கண்ணாடி பொய் சொல்லாது’ என்ற பழமொழி உண்மையானது. கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பம் பற்றித் தெரிவிக்கும் கூற்று இது. கண்ணாடி நம் அழகை அதிகமாக்கிக் காட்டாது. குறைத்தும் காட்டாது. உள்ளது உள்ளபடி காட்டக் கூடியது கண்ணாடி.

ஆயின், கண்ணாடியின் மேல் தூசி, அழுக்கு படிந்திருந்தால் பிரதிபிம்பம் சரியாகத் தெரியாது. இதுவே மலின தர்ப்பண ந்யாயத்தின் உட்பொருள். கண்ணாடியைத் துடைத்து சுத்தம் செய்தால் பிரதிபிம்பம் சரியாகத் தென்படும். தவறு யாருடையது? கண்ணாடியுடையது அல்ல. தூசியுடையது. அழுக்கைப் படியவிட்டவருடையதே தவறு. அழுக்கைத் தூய்மை செய்யாத நாம் கண்ணாடியை உண்மையையை காட்ட விடாமல் செய்துள்ளோம் என்பதை உணரலாம்.

அதே போல் நம் உள்ளம் தூய்மையாக இருந்தால் உலகம் நல்லதாகத் தென்படும். உள்ளத் தூய்மை இல்லாவிட்டால் உலகம் தீயதாகவே தென்படும். வண்ணக் கண்ணாடி அணிந்து பார்ப்பவருக்கு உலகம் அந்த வண்ணத்தில் தென்படும் என்பது அறிந்த ஒன்றே. இறைவன் அளித்த ஆரோக்கியமான கண்களால் பிரபஞ்சத்தைப் பார்ப்பவருக்கு  பிரபஞ்சம் உள்ளது உள்ளபடி தென்படும். சிவப்பு கண்ணாடி அணிந்தவருக்கு உலகமெங்கும் சிவப்பாகவே தென்படும். இடது சாரிகளைக் குறித்து இவ்விதம் கூறுவது வழக்கம்.

ஒரே செய்தியை இருவர் வெவ்வேறு விதமாக சிந்திப்பது எதனால்? ஒரே முகம் ஒருவருக்கு அழகாகத் தோன்றுகிறது. இன்னொருவருக்கு விகாரமாகத் தோன்றுகிறது. Beauty lies in the beholders eyes என்பார்கள். நம் தேசத்தில் நடக்கும் முன்னேற்றமும், உலகநாடுகளில் அதிகரிக்கும் பாரத தேசத்தின் மீதான பக்தியும் இடதுசாரி மற்றும் பிற எதிர்கட்சியினரின் கண்களுக்குத் தென்படுவதில்லை.

மின்சாரம் நின்று போனால் வீடுகளில் படும் அவஸ்தை அனைவரும் அறிந்ததே. இரவு நேரத்தில் லாந்தர் விளக்கை ஏற்றுவார்கள். காலையில் அந்த சிம்னியில் படிந்த கரியைத் துடைத்து தூய்மை செய்வார்கள். இல்லாவிட்டால் கரிபடிந்த சிம்னியால் தீபஒளி சரியாக பிரகாசிக்காது. தவறு தீபத்துடையதல்ல. மேலே படிந்த கரியுடையது.

செக்யூரலிஸ்ட்களின் கண்களுக்கு மஜ்லிஸ்களின் மதப் பற்று தென்படாது. அதுமட்டுமல்ல. உலகெங்கும் தொடர் கொலைகளைச் செய்துவரும் தீவிரவாதிகள், ஜிகாதிகள் போன்றோரின் மத வெறியும் கண்ணில் படாது. தேச பக்தர்கள், தேசிய வாத கட்சியினர் போன்றோரே இவர்களுக்கு பகைவர்களாகத் தென்படுவர். குற்றம் யாருடையது?

தர்மபுத்திரன், துரியோதனன் இருவரைக் குறித்தும் கூறப்படும் கதை இந்த மலின தர்பண நியாயத்திற்குச் சிறந்த உதாரணம். ராஜ்ஜியத்தில் நல்லவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தேடி வரும்படி துரியோதனனிடம் கூறினார் பீஷ்மர். தேசமெங்கும்  அலைந்து திரிந்து திரும்ப வந்து நல்லவர் ஒருவர் கூடத் தென்படவில்லை என்று கூறினான் துரியோதனன். தர்மபுத்திரனை கெட்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று தேடி வரும்படி அனுப்பியபோது தர்மபுத்திரனுக்கு அனைவரும் நல்லவர்களாகவே தென்பட்டார்கள். அலைந்து திரிந்து பார்த்து ராஜ்ஜியத்தில் ஒருவர் கூட கெட்டவர் இல்லை என்று கூறினான். பார்க்கும் பார்வையைப் பொறுத்தே நன்மையும் தீமையும் உள்ளது.

ராவண வதைக்குப் பின் ஸ்ரீ ராமன் சீதையிடம், “தீபோ நேத்ராதுரஸ்யேவ ப்ரதிகூலாஸி  மே த்ருடம்” என்று கூறினான். கண் நோய் உள்ளவனுக்கு தீபம் போல எனக்கு தீமை செய்பவளாக உள்ளாய் என்கிறான்.

ஃபோட்டோ ஃபோபியா என்ற நோய் உள்ளவனுக்கு வெளிச்சத்தைப் பார்த்தால் கண்ணில் கூச்சம் ஏற்படும். தவறு வெளிச்சதுடையது அல்ல. இது மலின தர்ப்பண நியாயத்திற்கு ஒரு உதாரணம். 

மனித மனம் கண்ணாடியைப் போன்றது. அது காமம் குரோதம் போன்ற ஆறுவித உட்பகைகளான தூசி படிந்து மலினமான கண்ணாடி போல மாறி, உண்மையை பிரதிபலிக்க இயலாமல் போகிறது. வண்ணக் கண்ணாடிப் போல மாறிய மனம் உண்மையைப் பார்க்க முடியாமல் போகிறது. தவறு வெளியில் இல்லை. நம்மில்தான் உள்ளது. நம்முடைய மனமாசைக் களைந்தால், துடைக்கப்பட்ட கண்ணாடி போல அது வாஸ்தவமான சத்தியத்தைக் காட்டும்.

‘கண்ணாடியைக் குறை கூறாதே. மாசை சுத்தம் செய்’ என்ற செய்தியை அளிக்கும் நியாயம் இது.

நம்ம ஊரு சுற்றுலா: இங்கேயும் அழகான பரசுராமர் தரிசனம்!

periyapalayam bavani amman temple - 2026
#image_title

பெரியபாளையம் ஆலயத்தில் பரசுராமர் சந்நிதி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பரசுராமருக்கு ஒரு தனி சன்னதி (சன்னிதி அல்லது சந்நிதி எனவும் எழுதலாம்) உள்ளது. இங்கே ஆண்களும் பெண்களும் வேப்பிலை ஆடை தரித்து கோவிலை வலம் வந்து வழிபடுகிறார்கள். இதற்குப் பின்னால் ஒரு கதை உண்டு. அதுதான் ரேணுகா தேவி கதை.

          பரசுராமர் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேதோ யுகம் ஆகும். இவர் ஜமதக்கினி – ரேணுகா இணையரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். தன் தந்தை ஜமதக்கினி முனிவர் வளர்த்த தேவலோகப் பசுவை கவர்ந்து சென்ற கார்த்தவீரிய அருச்சுனனை கொன்றவர். மேலும் சத்திரிய மன்னர்களின் 21 தலைமுறைகளைக் கருவறுக்க சபதம் பூண்டவர்.

தாயின் சிரம் கொய்த பரசுராமர்

          பரசுராமரின் தாய் ரேணுகாதேவி அதிகாலையில் எழுந்து கங்கையில் நீராடி நீரில் விரலால் வட்டம் வரைவாள். அப்போது நீர்க் குடமொன்று மேலே வரும். அதைக் கொண்டு, நீர் முகந்து வந்து கணவரின் பூஜைக்கு வழங்குவாள். இப்படி ஒவ்வொரு தினமும் செய்து வந்தாள். ஒருநாள் நீரில் வட்டம் வரைய அப்போது வானில் பறந்து சென்ற கந்தர்வன் ஒருவனின் அழகிய முகமும் உடலும் நீரில் தெரிந்தது. அதைக் கண்டவள் லேசாக மதி மயங்கினாள். இதனால் நீர்க்குடம் வரவே இல்லை. மனதில் சின்ன சலனம் வந்துவிட்டாலும் அவ்வளவுதான் புத்தியில் உள்ள தெளிவும் ஞானமும் கூட மங்கிப் போய்விடும்.

          தன்னுடைய தவ வலிமையால் நடந்தவற்றை அறிந்த ஜமதக்னி முனிவர் இதனால் கடும் கோபம் கொண்டார் அதன் பின்னர் ஜமதக்னி மகன்களை அழைத்து விவரம் சொன்னார். அவள் தலையை வெட்டித் தள்ளுங்கள் என்று கத்தினார் ஜமதக்னி. தந்தை சொன்னதைக் கேட்டு முதல் நான்கு மகன்களும் பின்வாங்கினார்கள் ஆனால் பரசுராமனோ தந்தை சொல்லைத் தட்டாத தனயனாக தன் கையில் இருந்த கோடரியால் அன்னை ரேணுகாதேவியை வெட்டினார். அவரைக் காப்பாற்ற ஊர் எல்லையில் இருந்த சேரியில் ஒரு பெண்மணி வர, அந்தப் பெண்ணையும் பரசுராமர் வெட்டினார்.

          என்னதான் தந்தை ஜமதக்னி முனிவர் சொன்னதைச் செய்தாலும் அம்மாவையே இப்படி கொன்றுவிட்டோமே என செயலுக்குப் பிறகு கலங்கினார் பரசுராமர் தந்தையிடம் முறையிட்டு மன்றாடினார். வெட்டிய தலையையும் உடலையும் பொருத்தினால் உயிர் பெற்று வருவாள் என வரம் அருளினார் ஜமதக்னி. உடனே ஊர் எல்லைக்கு வந்து அவசரத்தில் தாயின் தலையை மற்றொரு பெண்ணின் உடலோடும் அந்தப் பெண்ணின் தலையை தாயின் உடலோடும் பொருத்தி உயிர்கொடுத்துவிட்டார் பரசுராமர்.

          இதனால் ரேணுகாதேவியானவள் இனி ‘மாறுதலையைப்’ பெற்றதனால் ‘மாரி’ எனும் திருநாமத்துடனும் மற்ற பெண் ‘எல்லையம்மன்’ என்ற பெயருடனும் வாழ்வார்கள்; எல்லோருக்கும் அருள்பாலிப்பார்கள் என வாழ்த்தினார் ஜமதக்னி முனிவர்.

பச்சை வேப்பிலை மகத்துவம்

          ஜமதக்னி அவர் மனைவியான ரேணுகாதேவியும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர்.  கார்த்தவீரியனின் பிள்ளைகள் ஜமதக்னி முனிவரிடம் பகை கொண்டு அவரைக் கொன்று விட்டார்கள். கணவரை இழந்த ரேணுகாதேவி உயிர் வாழ விரும்பாமல் தீயில் இறங்கினாள். தெய்வமாகிய அவள் தீயில் இறங்கியது கண்டு, இந்திரன் வருண பகவானைக் கொண்டு மழை  பொழியச் செய்தான். தீ அணைந்தது. ஆனால், அதற்குள் ரேணுகாதேவியின் ஆடைகள் எல்லாம் எரிந்து, உடலில் தீக்கொப்புளங்கள் உண்டாயின. அவள் ஆடை இல்லாத நிலையில் காட்டிலிருந்த வேப்பிலையைப் பறித்து ஆடை போல் அணிந்து கொண்டாள். இவ்வாறு அம்மனுக்கு வேண்டிக்கொண்டு வேப்பிலை ஆடை அணியும் வழக்கம் உருவானது.

          இந்த ரேணுகா தேவி பெரியபாளையத்தில் தெய்வமாகக் கோயில் கொண்டிருப்பதாக ஒரு ஐதீகம். எனவே இங்கே பக்தர்கள் வேப்பிலை ஆடை தரித்து வேண்டுதல் செய்கிறார்கள். பரசுராமர் ரேணுகாதேவியின் புதல்வர் என்பதால் அவருக்கு ஒரு சன்னதி இருக்கிறது.