இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
நாமக்கல், காந்தமலை முருகன் ஆலயத்தில், புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு, தங்க கவச சிறப்பு அலங்காரத்தில், முருகப்பெருமான் காட்சி அளித்தார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூரில், சிறிய குன்றின் மேல் உள்ள, அருள்மிகு, காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில், முருகப்பெருமான், பக்தர்களுக்கு மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.
புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு, மூலவர் முருகப்பெருமானுக்கு, பஞ்சாமிர்தம், தேன் , பச்சரிசி மாவு, மஞ்சள், சந்தனம், பன்னீர், விபூதி கொண்டு, சிறப்பு அபிஷேகமும், பின்னர் சிறப்பு அலங்காரமாக, தங்க கவசம் சாற்றப்பட்டு, பல வகை வண்ண வாசனை நறுமலர்களால், அர்ச்சனை செய்யப்பட்டு, கோபுர தீபம் உள்பட, மஹா தீபம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது..இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாம் முருகப்பெருமானை வணங்கிச் சென்றார்கள்.
வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றப்பட்டது என்ற அரசியல் கருத்துகள், கடந்த 10 தினங்களாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதை வைத்து பல்வேறு கருத்துக்களும் அரசியல் மட்டத்தில் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மை நிலவரம் என்ன? இது குறித்து சமூக வலைதள பக்கங்களில் பலர் கருத்துக்களை எழுதி வருகின்றனர். அவற்றில் ஓர் இரு கருத்துகள் இங்கே..
இங்கே இணையத்தில் கடந்த பத்து நாட்களாக வந்தேபாரத் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பயண நேரம் குறித்து குற்றச்சாட்டுக்களும் விவாதங்களும் நடந்து வருகிறது. அவற்றில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பதை பார்ப்போம்.
வைகை எக்ஸ்பிரஸ் LHB வகை பெட்டிகளுடன் இப்போது காலை 6.40 மணிக்கு மதுரையில் கிளம்பி மதியம் 2.15 மணிக்கு எக்மூர் சென்றடைகிறது. இந்த சூப்பர் பாஸ்ட் ரயிலின் மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடம். அடுத்து வந்தே பாரத் காலை 7.55 க்கு மதுரையில் புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னையை அடைகிறது. இதன் பயண நேரம் 5 மணி 55 நிமிடம். செங்கல்பட்டு அருகே நேர மாற்றத்திற்கு முன்பும் இப்போதும் வைகை ஓரம் கட்டப்பட்டு வந்தேபாரத் முந்தி செல்கிறது.
காரணம்.இன்றி வைகையில் பயண நேரத்தை அரை மணி நேரம் அதிகரிக்கும் போது வந்தேபாரத்துக்கு முன்பே வைகை எக்மூர் நிலையத்தை அடைந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. சாதாரணமாக சென்னை மதுரை இடையே பயண நேரம் 7 மணிகள் மட்டுமே. இந்தப் பாதையில் அனுமதிக்கப்பட்ட அதிக வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் ஆகும். வந்தேபாரத் தேஜஸ் துவங்கி இந்தப் பாதையில் இப்போது ஓடும் ஒரே சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலான கொல்லம் 16101 வண்டி வரை இந்த வேகத்தில் தான் இயக்கப்படுகிறது. அதிலும் மாலை 5 மணிக்கு எழும்பூரில் கிளம்பும் இந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் நள்ளிரவில் 12 மணிக்கு மதுரையை மிகக்குறைந்த 7 மணி நேரத்தில் அடைகிறது.
இத்தனைக்கும் இது சூப்பர் பாஸ்ட் வண்டி அல்ல. பழைய ICF வகை பெட்டிகளைக் கொண்டுதான் இயங்குகிறது. இந்தப் பாதையில் என்ன அதி நவீன வகை வண்டிகளை செலுத்தினாலும் 110 கிமி வேகத்தை தாண்ட முடியாது. எனவே வந்தேபாரத் வண்டியின் பவிசை காக்கிறோம் என்று சொல்லிவிட்டு மற்ற வண்டிகளின் பயண நேரத்தை அதிகரித்துவிட்டார்கள் என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதில் ஓரளவுக்கு உண்மையும் உண்டு என்றே தோன்றுகிறது. காரணம் இரண்டு மார்க்கங்களிலும் இரவு வண்டிகளின் பயண நேரத்தையும் சற்றே அதிகப்படுத்தி உள்ளார்கள். காரணம் வந்தேபாரத் குறைந்த நேரத்தில் இயக்கப்படுவதாக நம்பவைக்கத்தான்.
என்னதான் நிர்வாக வசதிக்காக வண்டிகளுக்கு இடையே சீரான இடைவெளியைப் பராமரிக்க என்று துறை ரீதியில் காரணம் சொன்னாலும் அதை யாரும் நம்பத்தயாராக இல்லை.
முழுவதும் குளிரூட்டப்பட்ட ஜெர்மனியின் LHB வகை வண்டிகளை மணிக்கு அதிகபட்சமாக 200 கிமீ வேகத்தில் செலுத்த முடியும். ஆனால் இந்தியாவில் இதை 160 கிமீ வரை மட்டுமே இப்போது இயக்குகிறார்கள் உதாரணம் டெல்லி ஆக்ரா இடையே இயங்கும் கதிமான் எக்ஸ்பிரஸ். வந்தேபாரத் 180 கிமீ வரை செல்லக்கூடியது.
ஆனால் இதுவும் அநேகமாக 130 கிமீ வேகத்தை தாண்டி இயக்க முடியாத அளவில்தான் இங்கே பாதைகள் நிலை உள்ளது.
சென்னை கன்னியாகுமரி மார்க்கத்தில் இரட்டை வழி பாதைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அந்த பணி முடிந்ததும் அநேகமாக வந்தேபாரத் மற்றும் தேஜஸ் வண்டிகளின் பயண நேரம் 5 மணியாகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். விரைவில் நல்லது நடக்கட்டும். -ஜீனேந்திரன் ஜைனேந்திரன்
வந்தே பாரத் – ஹிப்பொக்ரஸி
இந்திய அரசில் வேலை செய்யும் இந்திய இஞ்சினியர்கள் உருவாக்கியுள்ள இந்த ரயிலின் மேல் என்ன வன்மம் எனப் புரியவில்லை.
இன்று பெங்களூர் – சென்னை வந்தே பாரத் – 940 ரூ ஷதாப்தி – 1130 ரூ ஷதாப்தி மீது யாருக்கும் எந்த பிராதும் இல்லை. வந்தே பாரத் மீதுதான்.
வந்தே பாரத் என்றவுடன் “ஏழை” யைத் தூக்கிக்கொண்டு வந்து விடுகிறார்கள். ஏழைகள் செல்லும் ரயில் எதையாவது மாற்றியா வந்தே பாரத் ஐ விடுகிறார்கள் ? விமானத்தில் சொகுசாகப் பயணிக்கும் இந்த “ஏழைப் பங்காளர்களை” பார்த்தால் வியப்பாக இருக்கிறது.
ஒரு நாட்டில் அனைத்துத் தட்டு மக்களுக்கும் அவர்களால் செலவழிக்க முடியும் அளவுக்கு சேவைகளைத் தர வேண்டும்.
உயர் தட்டு மக்களுக்கு விமான சேவை உள்ளது.விமான சேவையில் போய் இந்த “ஏழை” ஒப்பாரியை வைக்க மாட்டார்கள்.
ஏற்கனவே இருக்கும் ரயில்களிலேயே 1 ஏசி , 2 டயர் , 3 டயர் எல்லாம் இருக்கிறது. வந்தே பாரத் கட்டணம் 2 டயர் ஏசியை விட குறைவுதான்.
விமானத்துக்கும் , நான் ஏசி ரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்பத்தான் வந்தே பாரத். இது எந்த ஒரு பிரதமருக்கும் சொந்தமானது அல்ல. நம் தேசத்தின் உருவாக்கம்.
உதாரணமாக சென்னை – பெங்களூர் விமான சேவையை எடுத்துக்கொள்வோம்.
வீடு – விமான நிலையம் – 1 மணி நேரம் , விமான நிலையத்தில் 1 மணி நேரம் , விமானத்தில் ஒரு மணி நேரம் , விமான நிலையம் – வீடு 2 மணி நேரம். ஆக மொத்தம் 5 மணி நேரம் . விலை 3000 – 9000
வந்தே பாரத்திலும் இதே நேரம் தான் ஆகும். ஆனால் விலை 940. எந்த மடையனாவது இதை எதிர்ப்பானா ?
அதே போல பெங்களூரில் மதியம் 2.40 க்கு கிளம்பி , இரவு 11.30 க்கு ஹைதராபாத் சென்றடையும் வந்தே பாரத்தும் வரப்பிரசாதம் தான். விலை ரூ 1500 /-
காரணமில்லாமல் எதிர்க்கும் இந்த வன்ம வெறியர்கள் என்ன சொன்னாலும் , அனைத்து வந்தே பாரத்தும் மக்கள் ஆதரவுடன் டிரயின்ஃபுல்லாக ஓடிக்கொண்டுள்ளன.
நம் ஆட்களுக்கு மக்கள் முன்னேறவே கூடாது.அனைவரும் ஏழைகளாகவே இருக்க வேண்டும். மூத்திர நாத்தத்தில் , இடுக்கிக்கொண்டு அமர்ந்து வியர்வை வழிய பயணிக்க வேண்டும். — சரவண பாண்டியன்
இந்தியாவை போற்றுவோம் (வந்தே பாரத்) தொடரியில் பயண நிகழ்வுகள்.
நேற்று ஊருக்கு கிளம்ப எண்ணி முகப்பேர் கிழக்கு லிருந்து தானியில் (ஆட்டோவில்)( ₹80/- ) கோயம்பேடு மெட்ரோ வந்து மெட்ரோவில் எழும்பூர்
(₹20-+20-=40-) வந்து சேர்ந்தோம் மணி மதியம் 1.20 . நெல்லையிலிருந்து வந்த இந்தியாவை போற்றுவோம் (வந்தே பாரத்) தொடரி முதல் நடைமேடை யில் வந்து நின்றது. தெற்கு ரயில்வே நிர்வாகம் 14 நிமிட சுத்தம் செய்யும் புதிய நிகழ்வை செய்ய ஆயத்தம் ஆனது. இன்று முதல் இந்த பணி ஆரம்பம் ஆகின்றதாம். மிக சிறப்பாக இப்பணி ஒருங்கிணைக்கப்பட்டது.
பின்னர் 10-20 நிமிடங்களுக்கு பின் உள்ளே அனுமதித்தனர்.
C4 பெட்டி வியப்பாக இருந்தது. உள்ளே எண்ம பலகை ஒளிர்ந்து கொண்டே இருந்தது அதன் ஒலி வடிவம் தொடரியின் பயண விவரஙகளை தெரிவித்துக் கொண்டு இருந்தது. கோச் – ன் இரு எதிர் முனைகளிலும் ஒரு தொலைக்காட்சி பெட்டியிலும் ஒளிர்வு மட்டும் அறிவிப்புகளை ஒளி வடிவில் வெளியாகி கொண்டு இருந்தன.
சரியாக 2.50 க்கு வண்டி கிளம்பியது , தொடரி யின் பாதிப்பு ஏதும் இன்றி மென்மையான மிதவை போல மிதந்து சென்றது , வண்டியின் வேகம் (kmph) ஒளிர்ந்தது. வண்டியின் உட்புறம் நீட் & க்ளீன் ஆக ஆக ஒரு பெரு வணிக வளாக எணம திரை அரங்கம் போன்று இருந்தது. மேலிருந்து குளிர்விப்பான் மூலம் சீரான குளிர் காற்று சுற்றி உள்ள அமைப்பு வழி வீசிக் கொண்டிருந்தது. எல்.இ.டி ஒற்றை விளக்கு அதே போல சீராக குளிர்விப்பானை சுற்றி ஒளிர்ந்து கொண்டே இருந்தது. சாளரம் பெரிய கண்ணாடி வழி வெளி பகுதியை காட்டி நகர்ந்து கொண்டே இருக்க வெய்யில் நம் மீது பட்டால் அதிலிருந்து காத்து கொள்ள கண்ணாடிக்கு இணையாக ஒரு சிறு வளை போன்ற திரை மேலிருந்து கீழே இழுக்கும் வகையில் இருந்தது. சிறிது நேரத்தில்
The Hindu , தினமலர் , ஒரு லிட்டர் ரயில் நீர் பாலிதீன் பாட்டில் , வழஙகப்பட்டன. செய்தி தாளை சற்றே மேய்ந்து விட்டு சுற்றிலும் வேடிக்கை பார்த்தேன். அனைவருமே மகிழ்ச்சியாக காணப்பட்டனர். தன் படம் , & படங்கள் எடுத்து கொண்டும் வண்டியை புகழ்ந்தும் பேசியவாறே இருந்தார்கள். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஐ உருவாக்கி கொண்டும் இருந்தனர்.
மாலை 4.00 மணி வாக்கில் சிற்றுண்டி கொடுத்தனர். அவை :
ஒரு பருப்பு வடை சிறியதும் அல்லாத பெரியதும் அல்லாத ஒரு பொதுவான அளவில் (சைஸ்),
GranGranules instant cardamom tea mix 14 கிராம், ஒரு டீ கலக்கும் குச்சி , டிஸ்யூ பேப்பர், பின் ஒரு டம்ளர் ல் கடும் சுடுநீர் , அதில் மேற்சொன்ன டீ கரைசல் தூளை கலக்கி குடித்தோம்.
விழுப்புரம் வந்தது. பின்னர் குளிர்விப்பானின் குளிரை ஈடுகட்ட ஒரு காஃபி கேட்டேன் உடனே கொடுத்தனர்.
அதில் : UNIBIC Oats Digestive biscuits 20 கிராம்.
GranGranules beans instant coffee pre mix (Coffee Latte) 14 கிராம் + சுடு தண்ணீர்.+ ஒரு காபி கலக்கும் குச்சி , டிஸ்யூ பேப்பர், ₹20/. தனியாக காஃபி கேட்டால் விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம்.
திருச்சி , திண்டுக்கல் தாண்டியதும்
இரவு சிற்றுண்டி அதில் :
சப்பாத்தி 2 எண்,
பருப்பு தால். 125 கிராம்,
பனீர் கிரேவி 100 கிராம்,
வறுத்த அரிசி சோறு 125 கிராம், (Friderice) ,
குளோப் ஜாம் 2 எண்.
தயிர் ஒரு கப் 85 கிராம்.
உண்டு முடித்ததும் , மறுபடியும் ஒரு காஃபி குடித்தேன் & ₹ 20/- .
மதுரை , விருதுநகர் தாண்டியதும் , நெல்லையை குறிப்பிட்ட நேரமான இரவு 10.50 மணிக்கு பதில் 10.30 மணிக்கே வந்து சேர்ந்தது இந்தியாவை போற்றுவோம் (வந்தே பாரத்) தொடரி.
தெற்கு ரயில்வே யின் மிக சிறந்த பயண வண்டி , மேற்கத்திய கழிவு அறை இந்திய கழிவு அறைகள் மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருவது சிறப்பு. கோச் ஐ ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கி உள்ள பெரம்பூர் ரயில்பெட்டி, & லோகோ பேக்ட்டரிக்கு பாராட்டுகள்.
சாதாரண தொடரிகளிலும் இது போன்று செய்திட முயற்சிக்கலாமே !?
இறுதியாக IRCTC ஐயும் பாராட்ட வேண்டும். துல்லியமான நேர பயன்பாடு விருந்தோம்பல் அருமையாக செய்ததற்கு , வாங்கிய காசுக்கு ஏற்ற உணவு மற்றும் சிற்றுண்டி ஆகியவற்றை விநியோகித்தது சிறப்பு.
ஆம்னி பேருந்துகளில் சர்வ சாதாரணமாக ₹ 1500-1800 கேட்கின்றனர். அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.
IRCTC யும் இது போன்ற விருதோம்பல் ஐ பணம் வாங்கி அனைத்து தொடரிகளிலும் செய்து தர முயற்சிக்கலாமே…
ஆ.ரவிச்சந்திரன் து.வே.அ(ஓய்வு), சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி, ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில், மூலவர் கணபதிக்கு, புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு, உத்ஸவர் கணபதிக்கும், மூலவர் கணபதிக்கும் எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் கணபதிக்கும், உத்ஸவர் கணபதிக்கும், ஆலய சிவாச்சாரியார், பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு, தூப தீபங்கள் காட்டி, நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆரத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது. ஸ்ரீ விஸ்வகர்மா, சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற, புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விழாவைக் காண, ஏராளமான பக்தர்கள், ஆலயத்துக்கு வந்து, தரிசனம் செய்து, விநாயகப் பெருமான் அருள் பெற்றார்கள்.
கரூர் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலில் நடைபெற்ற ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேறறார்கள்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவிலில், வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக, வள்ளி கும்மி ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
கொங்கு ஒயிலாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும், சிறுவர், சிறுமியர் ஒரே வண்ணத்திலான, பாரம்பரிய உடை அணிந்து, ஒயிலாட்டம் ஆடினர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற, ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி நடன நிகழ்ச்சியை, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கண்டு ரசித்தார்கள். முன்னதாக மலைக்கோவில் முருகனுக்கு நடந்த சிறப்பு அபிஷேக பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், முருகப்பெருமானை மனமுருகி வேண்டி வழிபட்டார்கள்.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து புறப்பட்டு, 100 அடி ரோடு வழியாக வேளச்சேரியை அடைந்து, அங்கிருந்து NIOT சந்திப்பு வரை சென்று, இடதுபுறம் திரும்பி ராஜீவ்காந்தி சாலையை அடைய வேண்டும். பின்னர் காரப்பாக்கம், செம்மஞ்சேரி, நாவலூர், கேளம்பாக்கம் வழியாக திருப்போரூர் சென்றடைந்தோம். சுமார் 40 கிலோமீட்டர் தூரம்; ஒரு மணிக்குச் சற்று அதிகமான பயணநேரம். சுமார் எட்டு மணிக்கு கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் வந்த நாள் அதிகம் கூட்டம் இல்லாத நாள். எனவே எங்களுடைய கார் கிட்டத்தட்ட கோவில் வாசலுக்கே வந்தது.
முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து நிலம், ஆகாயம், கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார். அவர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். இவ்வகையில் அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும்.
அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்டபோது, மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர்புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் கண்டறிந்து முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இவ்வாறு மறைந்திருந்த அசுரர்கள், முருகப் பெருமானின் கண்களில் அகப்பட்ட இடமே இன்றும், கண்ணகப்பட்டு (கண் அகப்பட்டு) என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது. நாங்கள் சென்ற வழியில் திருப்போரூருக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அந்த ஊர் உள்ளது. அதைக் கடந்துதான் திருப்போரூர் செல்லவேண்டும்.
யுத்தம் நடந்த இடமாதலால் இதற்கு யுத்தபுரி, சமராபுரி, போரூர் எனப் பெயர் வந்தது. சமராபுரி வாழ் சண்முகத்தரசே நினைவுக்கு வருகிறதா? விக்ரம் நடித்த கந்தசாமி என்ற திரைப்படம் இந்த ஊரின் திருக்கோயிலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அப்படத்தில் சென்னை அடையாரிலிருந்து படகில் வருவது போலக் காட்சிகள் வரும். சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து மக்கள் படகு மூலம், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக திருப்போரூர் வந்திருக்கிறார்கள். இப்போது நல்ல பெருந்து வசதி உள்ளது.
திருப்போரூர் கந்தசுவாமி திருக் கோயிலை, மதுரை மீனாட்சி அம்மன் திருவருளால் நிர்மாணித்த மகான் சிதம்பர சுவாமிகளின் திருமடம் இங்கு அமைந்துள்ளது. ஒருமுறை சிதம்பர சுவாமிகள் தியானத்தில் அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். கூடவே மீனாட்சி அம்மன் தோன்றி, ‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் அமைந்துள்ளது அங்கே குமரக் கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோயில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்துவா அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருளி மறைந்தார்.
மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன் காட்டிய திசையில் பயணித்து, யுத்தபுரி, சமராபுரி, போரிநகர் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்போரூரை அடைந்தார் சிதம்பர சுவாமிகள். அப்போது அங்கு ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் மட்டுமே இருந்தது. இறுதியில் ஒரு பெண் பனை மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமான் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தார். சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோயிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் தோன்றி, சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார்.
அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோயிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோயில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார். அந்த காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது, நவாப் மனைவிக்கு திருநீறு பூச, அவரது வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோயிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். கோயில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று அழகிய திருக்கோயில் எழுந்தது. அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில் ஆகும்.
ஆலயத்தின் தெற்கே அமைந்துள்ள திருக்குளமான ‘வள்ளையார் ஓடை’ என்னும் சரவணப் பொய்கையில் நீராடி, கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும்.
முருகப் பெருமான் இங்கு பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் விளங்குகிறார். ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளது. இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிரிகள், பகைவர்கள் தொல்லை விலகும்.
கோவில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர், தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். எனவே இத்தல விநாயகரையும், சனீஸ்வரரையும், கந்தசுவாமியையும், பைரவரையும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகன்று விடும் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலின் ஸ்தல மரம் வன்னி மரம் ஆகும். இக்கோயிலில் பைரவர் நாய் வாகனம் இல்லாமல் தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் எழுந்தருளியிருப்பது சிறப்பு அம்சமாகும்.
ஆனால் இங்கே பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு முறையான தங்கும் வசதி இல்லை; கழிப்பறைகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவை கட்டப்பட்டன; ஆயினும் இன்னும் திறக்கப்படவில்லை. நாங்கள் கோயிலில் தரிசனம் முடித்துக்கொண்டு 0845க்குப் புறப்பட்டோம்.
காந்தி சிலைக்கு கதராடை, சந்தனமாலை அணிவித்து துப்புரவு பணி செய்த பா. ஜ. க வினர்.
மதுரை காந்தி பொட்டலில் உள்ள காந்தி சிலைக்கு, மதுரை மாநகர் மாவட்ட பா. ஜ. க. தலைவர் மகாசுசீந்திரன் தலைமையிலும், மாவட்ட பார்வையாளர் கார்த்திக்பிரபு, சுற்றுசூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்டத் தலைவர் வக்கீல் முத்துக்குமார், சிறுபான்மையினர் அணி மாநில செயலாளர். சாம்சரவணன், கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலாளர். பாஸ்கரன் முன்னிலையிலும், நிர்வாகிகள் வடமலையான், செல்விகிருஷ்ணன், சிவகுமார், முருகேஷ்பாண்டி, மணவாளன், கார்த்திகேயன், சிவசக்தி, மணிமாறன், மாணிக்கம் ஆகியோர் கதராடை சந்தனமாலை அணிவித்து மரியாதை செலுத்தி, துப்புரவு பணி செய்தனர்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி தேசிய அளவில் முக்கியமான ரயில் சேவைகள் நேற்றோடு மாற்றம் அடைந்துள்ளன. அந்த சேவைகள் என்னென்ன…
அக்டோபர் 1 முதல் 182 ரயில்களின் நேரத்தை மாற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புதிய ரயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. புறப்படும் நேரம், இடையில் நிற்கும் நேரம், சென்றடையும் நேரம், மொத்த பயண காலம் மாற்றப்படும்.
புதிய ரயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தென்னக ரயில்வேயில் பின்வரும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது,
கொல்லம் ஜங்க்சன். சென்னை எழும்பூர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-திருப்பதி கோவை டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் பாண்டிச்சேரி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்) பாண்டிச்சேரி-திருப்பதி எக்ஸ்பிரஸ் (தினசரி) பாண்டிச்சேரி- புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்) பாண்டிச்சேரி- தாதர் எக்ஸ்பிரஸ் (திரை-வாரம்) விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் (தினசரி) பாண்டிச்சேரி- ஹவுரா எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்) விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் (தினசரி) செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (தினசரி) கோயம்புத்தூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் விழுப்புரம்-திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் (தினசரி) பாண்டிச்சேரி- புது டெல்லி எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்) எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் (தினசரி) மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (தினசரி) மயிலாடுதுறை- திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ்- மதுரை-புன்னலூர் எக்ஸ்பிரஸ் புன்னலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் ஜே.என் தாதர் – திருநெல்வேலி தாதர் – திருநெல்வேலி பாலக்காடு-திருச்செந்தூர் திருச்செந்தூர்- பாலக்காடு மதுரை- திருவனந்தபுரம் கோவை ஜே.என்-மதுரை மதுரை-கோவை ஈரோடு-திருநெல்வேலி காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (தினசரி) கோவை ஜே.நிஜாமுதீன் எர்ணாகுளம்-திருவந்தபுரம் மங்களூர் – திருவனந்தபுரம் குருவாயூர்-திருவந்தபுரம் புனே-கன்னியாகுமரி மேற்கண்ட ரயில்கள் 10 – 60 நிமிடம் வரை இனி தாமதமாக புறப்படும். நிர்வாக காரணங்கள், வந்தே பாரத் ரயிலை இயக்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த ரயில்களின் புறப்படும், செல்லும் நேரங்கள் மாற்றப்பட்டு உள்ளது.
கேட்பதற்கு ஆளில்லை என்றால் ஆவின் நிர்வாகம் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு மற்றொரு உதாரணம் தான் ஆவின் பால் விற்பனை விலையை மறைமுகமாக லிட்டருக்கு 8.00ரூபாய் உயர்த்தும் நோக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகரில் ஊதா நிற பாக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட “செரிவூட்டப்பட்ட பசும்பால்” விநியோகத்தை நேற்று முதல் (01.10.2023) எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தி விட்டு, தற்போது அதற்குப் பதிலாக “டிலைட் பால்” என்கிற பெயரில் சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் விநியோகம் செய்யப்பட்டு வரும் அதே ஊதா நிற பால் பாக்கெட் விநியோகத்தை தொடங்கியிருக்கிறது.
மேலும் சென்னை மாநகரில் உள்ள நேரடி ஆவின் பாலகங்களுக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் 4.5%கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை எந்தவிதமான முன்னறவிப்பும் இன்றி 50% குறைத்து விநியோகம் செய்த நிலையில், மொத்த விநியோகஸ்தர்கள் வாயிலாக பால் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் 4.5%கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தையும் நாளை (அக்டோபர்-3) முதல் 50% குறைக்க முடிவு செய்துள்ளது பால் முகவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஆவின் 4.5%கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல்பட்டு வருவதோடு, அதிக விலை கொண்ட தனியார் நிறுவனங்களின் பாலினை வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் பால் முகவர்களோ நுகர்வோர் கேட்கும் ஆவின் பால் பாக்கெட்டுகளை சரியாக விநியோகம் செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தற்போது பச்சை நிற, நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளுக்கு மாற்றாக விநியோகம் செய்யப்படும் ஊதா நிற பால் பாக்கெட் பின்புறம் Toned Milk (சமன்படுத்தப்பட்ட பால்) என குறிப்பிட்டிருப்பதன் மூலம் பொதுமக்களையும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தையும் ஏமாற்றுகின்ற செயலில் ஆவின் நிர்வாகம் ஈடுபடுவது தெளிவாக தெரிகிறது.
ஏனெனில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளின் படி பசும்பால் (Cow Milk) என்றால் 3.5%கொழுப்பு சத்தும், 8.5%திடசத்தும் இருக்க வேண்டும். அதுவே சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) என்றால் 3.0%கொழுப்பு சத்தும், 8.5%திடசத்தும் இருக்க வேண்டும் என்கிற நிலையில் ஊதா நிற பாக்கெட்டில் “செரிவூட்டப்பட்ட பசும்பால்” என அறிமுகம் செய்து விட்டு, தற்போது அதனை “டிலைட் பால்” என மாற்றியிருப்பதும், ஏற்கனவே நீல நிற பாக்கெட்டில் “Toned Milk” (சமன்படுத்தப்பட்ட பால்) விற்பனையில் இருக்கும் போது தற்போதைய ஊதா நிற பாக்கெட் பின்புறமும் “Toned Milk” என போட்டிருப்பதன் மூலம் ஆவின் நிர்வாகம் இரட்டை வேடம் போட்டு, மக்களை ஏமாற்றும் செயலில், முறைகேட்டில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்கிறது.
ஏற்கனவே 5%, 10%, 20%என நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை தமிழகம் முழுவதும் படிப்படியாக குறைத்து வந்துள்ள ஆவின் நிர்வாகம் தற்போது சென்னை மாநகரில் ஒரேயடியாக 50% குறைத்துள்ளதை வைத்துப் பார்க்கும் போது தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக 1% கொழுப்பு சத்து குறைவான ஊதா நிற பாக்கெட்டினை விற்பனை செய்து, மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்திட திட்டமிட்டு வருவதாகவே தெரிகிறது.
ஏற்கனவே கடந்த இரண்டாண்டுகளில் 9முறை ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்திய ஆவின் நிர்வாகம், பால் விற்பனை விலையை நேரடியாக உயர்த்த முடியாமல், தற்போது நடைமுறையில் உள்ள பால் பாக்கெட்டுகளின் கொழுப்பு சத்து அளவையும், பால் பாக்கெட்டில் பாலின் அளவையும் குறைத்து, அதன் மூலம் லிட்டருக்கு முதல் 8.00ரூபாய் வரை மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்துவது போன்றவற்றை செய்து மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காத சூழலில் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக ஆவினுக்கான பால் வரத்து கடுமையாக சரிவடைந்ததால் வடமாநிலங்களில் இருந்து வெண்ணெய் மற்றும் பால் பவுடர் கொள்முதல் செய்து அதன் மூலம் ஆவின் பால் உற்பத்தி செய்யும் நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய பாலில் கொழுப்பு சத்து அளவையும், பால் பாக்கெட்டில் பாலின் அளவையும் குறைத்து, அதன் மூலம் லிட்டருக்கு 8.00ரூபாய் வரை மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்தி கொண்டிருப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதனால் ஆவின் பால் உபயோகிக்கும் நுகர்வோருக்கும், விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கும் திண்டாட்டமாகவும், ஆவின் அதிகாரிகளுக்கும், தனியார் பால் நிறுவனங்களுக்கும் கொண்டாட்டமாகவும் இருக்கிறது.
எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆவின் நிர்வாகத்தின் தன்னிச்சையான, சர்வாதிகாரமான முடிவுகளை தமிழக அரசு இனியேனும் அனுமதிக்காமல், ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்க பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, அத்துடன் ஆவின் பால் விற்பனை விலையையும் நியாயமான அளவில் மாற்றி அமைத்து, மக்கள் விரும்பி வாங்கும் ஆவின் பால் பாக்கெட்டுகளை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்து விநியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
#image_title
இன்று (02.10.2023) விநியோகம் செய்யப்பட்ட ஆவின் டிலைட் பால் பாக்கெட்.
கட்டுரையாளர்: நிறுவனத் தலைவர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
மகாபாரதம், வன பர்வம் இக்ஷ்வாகு மன்னன் குவலயஸ்வா மற்றும் அவனது 21000 மகன்களால் கொல்லப்பட்ட ‘துந்து’ என்ற அரக்கனை விவரிக்கிறது. துந்து உண்மையில் ஒரு எரிமலை, இது ஒரு ராஜா மற்றும் அவரது இராணுவத்தால் நிரந்தரமாக மூடப்பட்டது.
துந்து, மகாவிஷ்ணுவால் கொல்லப்பட்ட அசுரர்களான மது-கைடபர்களின் மகன் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. மதுவும் கைடபனும் உண்மையில் பிரளயம், எரிமலை போன்ற உலகப் பேரழிவுகள்.
குவலயஸ்வா இக்ஷ்வாகு வம்சத்தில் 14ஆவது மன்னராக இருந்தார், அவர் மகாபாரதம், பாகதவம் மற்றும் ஹரி வம்ச புராணத்தில் இவரைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. பாகவத புராணம், ஒன்பதாவது காண்டத்தில் ‘துந்து’ என்ற அரக்கனை விவரம் உள்ளது. துந்து குவலயஸ்வாவால் கொல்லப்பட்டதாகவும், துந்துவிலிருந்து வெளிப்பட்ட சாம்பலில் அவரது மகன்கள் எரிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. துந்துவைக் கொன்றதற்காக அல்லது அழித்ததற்காக, குவலயஸ்வாவுக்கு ‘துந்துமாரா’ என்று பெயரிடப்பட்டது.
துந்துவை ஒரு அரக்கனாக கவிஞர்கள் கற்பனை. செய்துள்ளனர். துந்துவின் அசல் விளக்கம் உத்தங்க முனிவரால் மன்னருக்கு மகாபாரதத்தில், வன பர்வத்தில், ஹரி வம்சம் என்ற பதினோறாவது பகுதியில் எரிமலை “துந்து மருதன்வா” என்று சொல்லப்படுகிறது.
“எனதுஆசிரமத்திற்கு அருகில்ஒருதரிசுநிலம்உள்ளது. அங்கே மக்கள்வசிப்பதில்லை. மருதன்வநாட்டில்உள்ளஇந்தசமதளமானநிலம்முழுவதும்கடல்மணலால்மூடப்பட்டுள்ளது. துந்துஎன்றஅரக்கன்மணலுக்குஅடியில்ஒளிந்திருக்கிறான். அவர்ஆழமான, பிரமாண்டமானபெருமூச்சைஅவ்வப்போது விடுகிறான். இதன்காரணமாகபூமியும்அதன்மீதுஉள்ளஅனைத்துமரங்களும்மலைகளும் நடுங்குகின்றன.ஏழுநாட்களுக்குசூரியனைமறைக்கும்அளவிற்கு பெரும்தூசிப்படலம் வானத்தில்எழுகிறது. நிலம்நெருப்பைக் கக்குகிறது;வானத்தில்நெருப்புபிரகாசிக்கிறது. ஒருவாரத்திற்குநிலநடுக்கங்களால்பூமிபயங்கரமாகநடுங்குகிறது. இதனால் என்ஆசிரமத்தில் தங்க முடியவில்லை. தயவுசெய்துஇதைநிறுத்துங்கள்.”
மேலே உள்ள விளக்கம் துந்து ஒரு எரிமலை என்பதை நிரூபிக்கிறது.
எரிமலை வெடிக்க மலையே தேவையில்லை. இது நிலத்தில் ஒரு விரிசல் மூலம் கூட வெடிக்கலாம். மருதன்வா என்பது குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள நிலத்தின் பண்டைய பெயராக இருக்க வேண்டும். கடந்த 15000-20000 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த எரிமலையும் வெடிக்கவில்லை என்பதை வரலாறு சொல்கிறது. எனவே இந்த சம்பவம் இந்த காலவரிசையை விட பழையதாக இருக்க வேண்டும்.
எரிமலை துந்து மருதன்வா கட்ச்
‘துந்து’ அரக்கன் பற்றி குவலயஸ்வா கேள்விப்பட்டு அவனுடன் போரிடப் படையெடுத்தான். அவன் மகன்களுடன் சேர்ந்து துந்துவுக்கு எதிராகப் போரிடச் சென்றான். அவர்கள் துந்துவைத் தேடிக் கொண்டிருக்கையில், ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அதில் அனைத்து இராணுவமும் குவல்யவனின் மகன்களும் எரிந்து சாம்பலானார்கள். மன்னன் அந்த மணலை தோண்டி கடலை அங்கே கொண்டு வந்தான். இந்த இடம் கட்ச் பகுதியில் அல்லது அரபிக்கடலுக்கு அருகில் உள்ள 2 பெரிய ஏரிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
குவலயஸ்வாவின் முயற்சியால் கடல் நீர் ஆழமாக கீழே சென்றதும் எரிமலை அமைதியடைந்தது. துந்து அரக்கன் கொல்லப்பட்டான்.
எரிமலை மலை மீதுள்ள உள்ள நரசிம்மர் கோவில்
மலைகள் அல்லது குன்றுகளின் மேல் கட்டப்பட்ட பல கோயில்கள் உண்மையில் கீழே உள்ள ஆற்றல்மிக்க எரிமலைகளை அடக்குவதற்காகவே உள்ளன.
ஆந்திராவில் குண்டூர் அருகே உள்ள மங்களகிரி மலையின் மீது ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு செயலற்ற எரிமலை ஆகும். இந்தியாவின் புவியியல் ஆய்வு 1800களில் இந்த உண்மையை உறுதிப்படுத்தும் பதிவுகளைக் கொண்டுள்ளது.
மலைக்கு அடியில் உறங்கிக் கிடக்கும் எரிமலையை பக்தர்கள் இறைவனுக்கு ஊற்றும் பானகம் (வெல்லம் தண்ணீர்) தணிக்கிறது என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். சர்க்கரைத் தண்ணீர் கலவை எரிமலையின் கந்தக சேர்மங்களுடன் எதிர் வினைபுரிகின்றன. ஊற்றப்படும் சர்க்கரைத் தண்ணீரில் பாதி எரிமலையால் உறிஞ்சப்பட்டு, மீதமுள்ளவை வெளியே வருகின்றன. தினமும் நிறைய வெல்லத் தண்ணீர் நிறையப் பயன்படுத்தப்பட்டாலும் இந்த மலையில் ஈக்கள் மற்றும் எறும்புகள் எதுவும் இல்லை, இது மலையின் கீழே உள்ள வெப்பத்தைக் குறிப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.