Home Blog Page 296

கரூரில் கொங்கு ஒயிலாட்டம்; பிரமாண்ட நோபல் உலக சாதனை நிகழ்வு!

கரூரில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன், வள்ளி கும்மி குழுவினரின் அரங்கேற்ற விழாவில் 1500 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட நோபல் உலக சாதனை நிகழ்வு.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அருகம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோடங்கிபட்டி பிரிவு அருகில் அமைந்துள்ள மைதானத்தில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா இன்று நடைபெற்றது.

அருகம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் கோவில் வளாகத்தில் இருந்து முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு மைதானத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு நடைபெற்றது அதில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அதனை தொடர்ந்து கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் 1200 பெண்கள் மற்றும் சிறுமியர் ஒரே வண்ணத்திலான பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடினர். மேலும் 300 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் வேட்டி சட்டை அணிந்து ஒயிலாட்டம் ஆடினர். 1500 பேர் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி குழு ஒருங்கிணைப்பாளர் ரவி பாரம்பரிய பாடல்கள் பாடி நடத்தினார். மாலை 7:45 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 12.45 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் இடைவிடாது நடைபெற்றதை தொடர்ந்து உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை நோபல் உலக சாதனை நிறுவனம் வழங்கியது.

நம்ம ஊரு சுற்றுலா: நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில்!

nanganallur hanuman temple - 2026
#image_title

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

பகுதி 4 – நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில்

          வடபழனியிலிருந்து அசோக்பில்லர், ஈக்காட்டு தாங்கல், கத்திப்பாரா மேம்பாலம், 100 அடி ரோடு வழியாக நங்கநல்லூர் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். இந்தக் கோவிலும் காலை 0530 மணிக்குத் திறந்துவிடும். காலை 0700 மணிக்கு காலசந்தி பூஜைக்காக அரை மணிநேரம் மூடிவிடுவார்கள். அதற்கு முன்னர் வந்தால்  பத்து நிமிடத்தில் தரிசனம் முடித்துவிட்டுப் பயணத்தைத் தொடரலாம்.

          1974ம் வருடம் மைலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி அருகில் இருக்கும் நாட்டு சுப்பராய முதலி தெருவில் வசித்து வந்த ஒரு பள்ளிகூட வாத்தியாரின் கனவில் இந்த நங்கநல்லூர் க்ஷேத்திரத்திற்கான சிந்தனை தோன்றியது. தெய்வ சித்தத்தின் படி, அந்தப்பள்ளி வாத்தியார், 32 மி.மீ. உயரமுள்ள வெண்கலத்தால் ஆன ஆஞ்சநேயர் சிலைக்கு பூஜைகள் விமரிசையாக செய்து வந்தார். அவரும் அவருடைய ஆன்மீக நண்பர்களும் சேர்ந்து மாருதி பக்த சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கி, ஹனுமத் ஜயந்தி விழாவை மிகவும் கோலாகலமாக் கொண்டாட ஆரம்பித்தனர். விழாவின் போது தினமும் நடக்கும் இன்னிசைக் கச்சேரியில் சம்பாவனையின்றி கலந்து கொண்டு ஸ்ரீஆஞ்சநேயரின் அருள் வேண்டி, பிரபல இசைக் கலைஞர்கள் போட்டி போட்டனர்.

          இப்படியே பத்து வருடங்கள் போனது. பின்னர் அத்தி மரத்திலான எட்டு அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கி, ஹனுமத் ஜயந்தியை மேலும் விமரிசையாக் கொண்டாடினர். கனவில் தோன்றிய ஆணையை பூர்த்தி செய்ய முயற்சிகள் பல செய்த “மாருதி பக்த சமாஜம் டிரஸ்ட்” காஞ்சி ஸ்ரீ பரமாசார்யாரின் முடிவுப்படி நங்கநல்லூரில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தனர்.

          நங்க நல்லூரில் உள்ள “ராம் நகரில்” ஏழு கிரவுண்ட் பரப்பளவு உள்ள நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ராம் நகரில் உள்ள ராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவன் பக்கத்திலேயே இந்த இடம் அமைந்தது. இந்த இடத்தில் பூமி பூஜை நடந்தது.

          32 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்க முடிவானதும் சிலைவடிப்பதற்கான கருங்கல் தேடும் படலம் தொடங்கியது. இதுவும் பல இன்னல்களைக் கொண்டதாக இருந்தது. முதலில் திருச்சி அருகில் யாசனை என்ற இடத்தில் இருந்த கல் பரிசோதிக்கப்பட்டு சிலை செய்யும் குணங்கள் முழுவதும் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. வேலூர் அருகில் உள்ள பாஷ்யம் என்ற இடத்தில் உள்ள கல் பரிசோதக்கப்பட்டு உகந்ததாக கண்டறியப்பட்டது. நில மட்டத்திலேயே இருந்ததால் எடுத்து வரும் வேலை சுலபமாக இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. சந்தோஷத்தில் முழுகிய குழு, முன் பணம் கொடுத்து வேலையை ஒரு காண்டிராக்டரிடம் ஒப்படைத்து ஒரு மாதம் கழித்து சென்று பார்த்த போது வேலை மந்தமாக இருப்பதுடன் காண்டிராக்டரையும் காணவில்லை. அது மட்டுமின்றி, கல்லிலும் ஒரு பெரிய விரிசல் தெரிந்தது. மேலும் பல முயற்சிகளுக்குப் பின் வந்தவாசி அருகில் உள்ள பரமநல்லூர் என்ற இடத்தில் உள்ள கல் தேர்ந்தெடுக்கப் பட்டது. ஆனால் கல்லின் மேல் பாகம் மட்டும் தான் நிலத்திற்கு மேல் தெரிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் சிலை செய்வதற்காக பிர்லா குழுமத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு அளவு போதாததால் எடுத்து செல்லப்படாத கல் என்று தெரிந்தும், குழு கல்லை வெளியே எடுக்கும் சிரமம் பாராமல், கல்லில் ஒரு சிறிய பாகத்தை வெட்டி எடுத்து காஞ்சி எடுத்துச் சென்றது. மௌன விரதத்தில் ஸ்ரீ பரமாச்சார்யார் அவர்கள் தன்னுடைய தீர்க்க தரிசனத்தினால், இந்தக் கல் சரியானதே என்று ஆசி கூறினார்.

          கருங்கல்லைப் பெயர்த்து எடுக்கும் வேலை பல சிரமங்களுடையே வெற்றிகரமாக நடந்தது. பதினாறு ஆக்ஸில் கொண்ட வண்டியில், முப்பதைந்து அடி நீளம், பத்து அடி அகலம், பத்து அடி பருமன் கொண்ட நூற்று ஐம்பது டன்கள் எடையுள்ள அந்தக் கருங்கல்லைக் கொண்டு வந்தனர். அந்தக் கல்லில் இருந்து சிற்பி முப்பதிரண்டு அடி உயரமான ஆஞ்சநேயர் சிலை உக்கிரம் சிறிதும் இன்றி, சாந்த ஸ்வரூபியாக அமைந்தது ஒரு பகவத் சங்கல்பமேயாகும்.

          சிலை முழுவதும் வடித்த பிறகு, தெய்வீக சக்தி பெறுவதற்கு, சிலைக்கு பால்வாசம், ஜலவாசம், பூவாசம், தான்யவாசம் என்று பல வாசங்கள் செய்யப்பட்டன. சிலையின் பீடம் தாமரை வடிவத்தில் செய்யப்பட்டது. சிலையின் அடிப்பாகத்தில் உள்ள முனை, தாமரைப் பீடத்தில் உள்ள குழியில் வைக்கப்பட்ட யந்திரங்களை நசுக்காமல், இடைவளி எதுவும் இல்லாமல் பொருந்துமாறு அளவு செய்யப்பட்டது. பின்னர் தொண்ணுறு டன்கள் எடையுள்ள சிலையை உயரத்திலிருந்து பீடத்தில் இறக்கினார்கள்.

          ஆஞ்சநேய ஸ்வாமியின் மூர்த்தி ப்ரதிஷ்டை செய்த பிறகு கோயில் நிர்மாணிக்கப்பட்டது. தொண்ணூறிரண்டு அடி உயரமுள்ள கோபுரத்தின் கலசம் செப்பினால் செய்யப்பட்டு தங்கத்தகடுகளால் மூடப்பட்டுள்ளது. ஆகம சாஸ்திரப்படி கோவில் கட்டபட்டது. ராமர், கிருஷ்ணர், கருடர், வினாயகர், நாகர் ஆகியவர்களுக்கு பிறகு சந்நதிகள் கட்டப்பட்டன.

          முதல் கும்பாஷேகம்: 1995 மே மாதம் 19ம் தேதியன்று லட்சக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக அனைத்து ஆகம சாஸ்திர விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தன்று நடைபெறவேண்டிய கோதானம், பூமிதானம் முதலிய எல்லா விதமான தானங்களும் குறைவின்றி நடந்தேறின. ஒரு மாதத்திற்கு குறைந்தது ஒரு லட்சம் பக்தர்கள் விஜயம் செய்யும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இந்தக் கோவில் இந்தியா முழுவதும் உள்ள ஆஞ்சநேய பகதர்களுக்கு ஒரு புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது.

          திட்டமிட்டபடி காலை 0645க்குள் நாங்கள் எங்கள் தரிசனத்தை முடித்துக்கொண்டு போரூர் நோக்கிப் புறப்பட்டோம்.

அக்டோபர் மாதத்தில் – தலைவர்களின் பிறந்த பலிதான நினைவு நாட்கள்!

Dhinasari Home page
   நமது பாரத தேசத்தில் அக்டோபர் மாதத்தில் பிறந்த/பலிதானமான/ மறைந்த தலைவர்களின் நாட்களை தங்களுக்கு நினைவூட்டுவதில் அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத், தமிழகம் & புதுச்சேரி மாநிலக் கிளைகள் பெருமிதம் கொள்கிறது.

(हमारे देश भारत में अक्टूबर माह में जन्मे/शहीद/निधन वाले नेताओं के दिन खुद को याद दिलाने में अकिला भारतीय पूर्व सैनिक सेवा परिषद,तमिलकमं और पुडुचेरी राज्य शाखाएँ गर्व।)

(Akil Bhaaratheeya Poorva Sainik Seva Parishad, Thamizhagam & Puducherry States(ABPSSP) reminds the dates of Our National Leaders in October month.)

பிறந்த நாட்கள்(जनम टिवस/JANMA DHINS)

அக்டோபர்(अक्टूबर/October):

-01 (1847-०१(१८४७): அன்னிபெசண்ட் அம்மையார்
(अननि बेसेण्ट अम्मौयार/Anne Besant Ammaiyaar);
-02 (1869-०२(१८६९):மகாத்மா காந்தி (महात्मा गाांधी/
Mahatma Gandhiji);
-02 (1904-०२(१९०४):லால்பகதூர் சாஸ்திரி
(लालबहादरु शास्त्रो/Laalbagadur Sastri);
-04(1904-०४(१९०४):திருப்பூர் குமரன்
(तिरुपुर कुमरन/ Thiruppur Kumaran);
-04(1884-०४(१८८४):சுப்பிரமணிய சிவா
(शुबरमणय शिवा/Subramaniya Siva);
-05(1524-(०५(१५२४):இராணி துர்காவதி
(रानी दुर्गावती/Raani Durgawathi);
-05(1823-०५(१८२३):இராமலிங்க வள்ளலார்
(रामलिगं वल्ललार/Raamalinga Vallalaar);
-08(1935-०८(१९३५):மில்கா சிங்(मिलका चिङ/Milka Singh);
-11(1902-११(१९०२):ஜெயப்பிரகாஷ் நாராயண்
(जयप्रकाश नारायण/Jayaprakash Naarayanan(J.P.);
-11(1906-११(१९०६):கே.பி.சுந்தராம்பாள்
(के.भि.सुांदरमवाल/K.B.Sundarambaal);
-12(1891-१२(१८९१):சா.வையாபுரி பிள்ளை
(चा.वैयापूरि पिल्लै/S.Vaiyapuri Pilla)i;
-15(1934-१५(१९३४):என்.இரமணி(एन.रमणि/ N.Ramani)
(புல்லாங்குழல்/बाांसुरी/Flute);
-15(1931-१५(१९३१):ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
(ए.पी.चे.अब्दलु कलाम/A.P.J.Abdul Kalam);
-16(1881-१६(१८८१):”பண்டிதமணி” மு.கதிரேசன்
செட்டியார் (भंडितमणि मु कतिरेस चेटंटियार/ “Pandithamani” Kathiresan Chettiyaar);
-22(1873-२२(१८७३):சுவாமி இராமதீர்த்தர்
(स्त्वामी रामतीर्थर/Swami Raamatheerthar);
-24(1914-२४(१९१४): கேப்டன் இலக்ஷ்மி
(कैप्टन लखशिम/Captain Lakshmi);
-28(1867-२८(१८६७):சகோதரி நிவேதிதை
(चहोतरि निवेदिता/Sakothari Nivethidai);
-30(1908-३०(१९०८):பசும்பொன் முத்துராமலிங்கத்
தேவர் (पसुपोन मुथूरामलिंग देवर/Pasumpon Muthuramlinga Devar);
-30(1909-३०(१९०९):ஹோமி ஜஹாங்கீர்
பாபா (होमि जहांगीर भाभा /Homi Jagankeer Baba);
-31(1875-३१(१८७५):சர்தார் வல்லபபாய் பட்டேல்
(सरटार वल्लभ पंटेल/Sardar Vallababaai Patel).

பலிதான நாட்கள்(बलिदानं टिवस/BALIDAANA DHINS):

-16(1799-१६(१७९९):வீரபாண்டிய கட்டபொம்மன்
(वीरपाांडांय कटंठबोममन/Veerapaandiya Kattapomman);
-24(1801-२४(१८०१):மருதுபாண்டிய சகோதரர்கள், ஊமைத்துரை (मरुधू सकोर्रकाल,ऊमौधुरौ/ Marudhu Brothers,Oomaitthurai).

நினைவு நாட்கள்(स्मरण टिवस/ SMARAN DHINS):

-02(1975-९२(१९७५):காமராஜர்(कामराजर/Kaamaraajar);
-03(1995-०३(१९९५):ம.பொ.சிவஞானம் (म.वो.चिवञानम / Ma.Po.Sivagnam);
-05(1991-०५(१९९१):இராம்நாத் கோயங்கா
(रामनाथ कोयड़का/Raamnaath Goyenka);
-08(1959-०८(१९५९):பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (पंटुकोडठौ कल्याणसुंरम/Pattukkottai Kalyanasundaram);
-08(1979-०८(१९७९):ஜெயப்பிரகாஷ் நாராயணன்
(जयप्रकाश नारायणन(जे.पी.)Jayaprakaash Naarayanan);
-10(1974-१०(१९७४):மு.வரதராசனார்
(मु.वाराधराजनार/Mu.Varadharajanar);
-13 (1911-१३(१९११):சகோதரி நிவேதிதை
(सकोतरि निवेतिई/Sister Nivethidai);
-17(1981-१७(१९८१):கண்ணதாசன் (कन्नदासन/ Kannadaasan);
-27(1906-२७(१९०६):சுவாமி இராமதீர்த்தர்
(स्त्वामी रामतीर्थर /Swami Raamatheerthar);
-30(1963-३०(३०(१९६३):பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
(पसुंपोन मुथूरामलिंग देवर/Pasumpon Muthuramlinga Devar);
-31(1883-३१(१८८३):சுவாமி தயானந்த சரஸ்வதி
(स्त्वामी दयानांद सरस्त्विी/ Swami Dayananda Saraswathi);
-31(1984-३१(१९८४):இந்திரா பெரோஸ் காந்தி
(इंदिरा बेरोश गाांधी/Indira Berosh Gandhi).

இதய நோய் அதிகரிக்கக் காரணம் என்ன?: மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் விளக்கம்!

madurai meenakshi mision hospital heart doctors - 2026
#image_title

தனிப்பட்ட உடல்நல இடர்களை அறியாமலேயே தீவிர உடற்பயிற்சி செய்வதும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்: மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள்.

மனஅழுத்தம் மற்றும் மாசு உட்பட தொடர்ந்து வரும் உடல்நல அச்சுறுத்தல்களே இதயநோய் சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருப்பதற்கான காரணமாக கருதப்படுகிறது.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியனுக்கும் அதிகமான நபர்களின் உயிரிழப்பிற்கு இதயநாள நோய்களே காரணமாக இருக்கின்றன. கடந்த தசாப்தத்தோடு ஒப்பிடுகையில், இந்த தசாப்தத்தில் உயிரிழப்புகள் 20% அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது. எனினும், தீவிர உடற்பயிற்சி, அதிக புரதம் உள்ள உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது, நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அலட்சியம் செய்வது, ஆகியவற்றால் தான் இதய நோய்களில் 80% ஏற்படுகின்றன என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 – ம் தேதியன்று அனுசரிக்கப்படும் உலக இதய தின நிகழ்வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள் ஆரோக்கியமான நபர்கள், இளவயதினர் உட்பட ஒவ்வொருவரும் உரிய கால அளவுகளில் மருத்துவ பரிசோதனைகளை செய்வது அவசியம் என வலியுறுத்தினர்.

இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு அளவு போன்ற காரணிகளோடு தொடர்புடைய ஆரோக்கியத்திற்கு ஆபத்து விளைவிக்கும் அம்சங்களை அறிந்துகொள்வது முக்கியம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். வாழ்க்கைமுறை, உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு உடல்நலப் பரிசோதனையும் அதன் முடிவுகள் குறித்த அறிவும் அத்தியாவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இதயவியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் என்.கணேசன், அதிகரித்து வரும் இடர் அம்சங்கள் பற்றி பேசுகையில், மனஅழுத்தமும் மற்றும் மனநலத்தைப் பாதிக்கும் பல்வேறு விஷயங்களும், சமூக நலவாழ்வில் குறைபாடுகள் இருக்கும்போது இதய ஆரோக்கியத்தின் மீது கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார்.

இப்போதைய நவீன காலத்தில், தனிமை , குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுடன் மகிழ்ச்சியற்ற உறவுகள் ஆகியவை சமூக நலவாழ்வை பாதிக்கும் அம்சங்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். “கடந்த காலத்தில், போதுமான உடலுழைப்பையும், உடற்பயிற்சியையும் உறுதிசெய்வது, புகைப்பிடிப்பது கைவிடுவது மற்றும் கொலஸ்ட்ரால், இரத்தஅழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற அம்சங்கள் பெரிதும் வலியுறுத்தப்பட்டன.

எனினும், தற்போதைய காலகட்டத்தில் மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வது, போதுமான நேரம் உறங்குவது மற்றும் காற்று மற்றும் ஒளி மாசுவிற்கு வெளிப்படுவதை குறைப்பது ஆகியவற்றிற்கான வழிமுறைகளை ஆராய்ந்து பின்பற்றுவதும் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை.” என்று அவர் கூறினார்.

இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். எஸ். செல்வமணி பேசுகையில், “ஆப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராஃபி (OCT) போன்ற ஊடுருவல் முறையிலான இமேஜிங் தொழில்நுட்பங்கள், கரோனரி / இதயநாளங்களில் மிகத்தெளிவான படங்களை எடுத்து வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றுவதாக உருவெடுத்திருக்கின்றன; இரத்தநாள கிழிசல், இதய தமனிகளில் ஏற்படும் உறைவு கட்டிகள் என எது காரணமாக இருப்பினும், அந்த பிரச்சனைகளுக்கான அடிப்படை காரணத்தை துல்லியமாக அடையாளம் காண்பதற்கு இப்படங்கள் உதவுகின்றன.

இந்த நவீன முன்னேற்றமானது, அவசியமின்றி இதய இரத்தநாளங்களில் ஸ்டென்ட்கள் பொருத்தப்படாமல் தடுக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மருந்துகளின் பயனளிக்கும் தன்மையும் சிறப்பானதாக இருப்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இத்தகைய நவீன முன்னேற்றங்கள், மருத்துவ இடையீட்டு செயல்முறைகள் வெற்றிபெறும் விகிதத்தை கணிசமாக அதிகரிக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.” என்று குறிப்பிட்டார்.

இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஆர். சிவக்குமார் கூறியதாவது: “கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறைகளில் முன்னோடித்துவ செயற்பணிக்காக இந்தியாவில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை புகழ்பெற்றிருக்கிறது.

சமீபத்தில், டவர் மற்றும் மிட்ராகிளிப் ஆகியவை உட்பட, மருத்துவ செயல்முறைகளிலும் நிபுணத்துவத்தை நாங்கள் மேம்படுத்தியிருக்கிறோம்.

டவர் என்பது, முழுமையாக திறக்காத, குறுகிவிட்ட பெருந்தமனி வால்வை மாற்றுவதற்கான ஒரு செயல் முறையாகும். மிட்ராகிளிப் என்பது, ஊடுருவல் அல்லாத, கதீட்டர் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையாகும்.

மனித இதயத்தில் உள்ள நான்கு வால்வுகளில் ஒன்றான மிட்ரல் வால்வு தொடர்பான சிக்கல்களுக்கு இது தீர்வு காண்கிறது. அறுவை சிகிச்சைகளில் அதிக ஆபத்துகளை கொண்டிருக்கின்ற வயது முதிர்ந்த நபர்களுக்கு இந்த மருத்துவ செயல்முறைகள் அதிக பயனளிப்பதாக இருப்பது நிரூபணமாகியிருக்கிறது.”

இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர்களான டாக்டர். எம். சம்பத்குமார் மற்றும் டாக்டர். பி. ஜெயபாண்டியன் ஆகியோர் பேசுகையில்… உரிய காலஇடைவெளிகளில் மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்வது மற்றும் அதன்மூலம் தனிநபருக்கான உடல்நல ஆபத்துகளை முன்கூட்டியே அறிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

“உயர்இரத்த அழுத்த நோயாளிகளில் 30% மட்டுமே மருத்துவ பரிசோதனையின் மூலம் நோயறிதல் முடிவை பெறுகின்றனர். மற்றும் அவர்களுள் 30% நபர்கள் மட்டுமே அதற்கான மேலாண்மைக்கு மருந்துகள் மற்றும் உடற்பயிற்சி போன்ற உரிய நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என்பது மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு மருந்துகளும், உடற்பயிற்சியும் இன்றியமையாதவை.” என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

உடற்பயிற்சி கூடங்களில் தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, மாரத்தான் நிகழ்வுகளில் பங்கேற்பது போன்ற கடுமையான, தீவிர உடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அவர்களது தனிப்பட்ட உடல்நல அம்சங்கள் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ஆபத்துகளை அறிந்திருப்பது முக்கியம் என்று எச்சரித்தனர்.

“தசை வளர்ச்சியை தூண்டுவதற்காக பெரிதும் பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டுகள் மற்றும் அதிக புரதம் அடங்கிய உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது போன்றவை எதிர்மறை விளைவுகளை தருபவையாக இருக்கக்கூடும்” என்று அவர்கள் விளக்கமளித்தனர்.

இதய மயக்கவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். எஸ். குமார் மற்றும் இதய அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். ஆர்.எம். கிருஷ்ணன் ஆகியோர் பேசுகையில், மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் விரிவான உடல்நல பரிசோதனை திட்டத்தின் வெற்றியை பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். அவசியமான முன்னெச்சரிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மீது வழிகாட்டலை இப்பரிசோதனைகள் வழங்குவதை சுட்டிக்காட்டினர்.

ஒருவரது உணவில் செறிவான புரதம் கொண்ட உணவுகளை சேர்த்துக் கொள்வதன் முக்கியத்துவம் பற்றி பேசுகையில், “உணவுமுறை பரிந்துரைகளில் சமீப காலத்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த காலத்தில், இதயத்திற்கு ஆரோக்கியமான உணவில் 60% மாவுச்சத்து, 25% புரதம் மற்றும் 15% கொழுப்பு அடங்கியிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், தற்போதைய பரிந்துரையானது, 35% மாவுச்சத்து, 50% புரதம் மற்றும் 15% கொழுப்பு அடங்கிய உணவே இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது என குறிப்பிடுகிறது.” என்று கூறினர்.

இம்மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர். பி.கண்ணன் மற்றும் முதுநிலை இதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். எம். ராஜன் ஆகியோரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

உலக இதய தின அனுசரிப்பையொட்டி மருத்துவமனை வளாகம் முழுவதும், இதய ஆரோக்கிய விழிப்புணர்வுடன் தொடர்புடைய நிறமான சிவப்பு நிற விளக்குகளால் ஒளிர்ந்தன. இம்மாதம் முழுவதிலும் சிறப்பு ஸ்க்ரீனிங் மற்றும் நோயறிதல் பரிசோதனைகள் மற்றும் மருத்துவர்களுடன் கலந்தாலோசனை சேவைகள் என பல்வேறு சேவைகளையும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை வழங்கி வருகிறது.

இம்மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ நிபுணர்களின் ஒரு பிரத்யேக குழு, மதுரை மாநகரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் சென்று இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் பற்றி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு சிறப்புரையாற்றி ஆலோசனை குறிப்புகளை வழங்கி வருகின்றனர்.

சுகமான சுற்றுலா: வடபழனி முருகன் கோயில்!

vadapalani murugan temple - 2026
#image_title

சென்னை – கண்டியூர் – பகுதி 3

வடபழனி முருகன் கோயில்

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

          நான் வசிக்கின்ற பெரம்பூரிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்கு எங்கள் கார் கிளம்பியது. முதல் நிறுத்தம் வடபழனி முருகன் கோவில்; அது பெரம்பூரிலிருந்து ஏறத்தாழ 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கோவில் அதிகாலை 0500 மணிக்குத் திறந்து விடும். நாங்கள் 0530 மணிக்கு கோயில் வாசலுக்குச் சென்றோம். அதிகாலை என்பதால் கோயில் வாசல் வரை கார் செல்லும். கோயிலுக்குள் சென்று முதலில் வரசித்தி விநாயகரைத் தரிசித்துவிட்டு, பின்னர் அப்பன் பழனியாண்டவரை நிதானமாக தரிசனம் செய்தோம்.

          இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜ கோபுரம் கட்டப்பட்டது. 2007ஆம் ஆண்டில் ஒரு முறையும் அண்மையில் சனவரி 2022இல் ஒருமுறையும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுல்ளது. 1890ஆம் ஆண்டு எளிய ஓலைகூரைக் கொட்டகையுடன் இக் கோயில் கட்டப்பட்டது. இன்று மக்களின் ஆதரவால் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7,000 தம்பதியர் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

          இக் கோவிலின் தலபுராணத்தில், முருக பக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர் முதலில் இருந்த கொட்டகையை அவரின் சொந்த வழிபாட்டிற்காக அமைத்தார் எனவும், அங்கு தென்பழநி முருகனின் வண்ணப்படத்தை வைத்து வழிபட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சமயம் தீவீர வயிற்றுவலியால் அவதிப்பட்டார். அந்நோய் தீருவதற்கு அவர் தவறாமல் திருத்தணி மற்றும் திருப்போரூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வந்தார். பின்னர், தென்பழநி யாத்திரையின் போது ஒரு சாது சொல்லியதற்கிணங்க, தான் தங்கியிருந்த கொட்டகையில் பழநி முருகனின் உருவப்படத்தை வைத்து வழிபடலானார்.

          அண்ணாசாமி நாயக்கர் தன் நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கை செலுத்தினார். இதற்கு “பாவாடம்” என்று பெயர். பாவாடம் காணிக்கையால் அவருடைய வயிற்றுவலி நீங்கப்பெற்றார். மேலும், அவர் நாளடைவில் அந்த இடத்தில் முருகனின் தெய்வீக சக்தியை உணர்ந்தார். அதனால் அவர் பிறரிடம் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் நடந்தேறின. அதனால் மக்கள் அவர் சொல்வதை “அருள்வாக்கு” என்று எடுத்துக்கொண்டனர். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான நோய் தீருதல், வேலை வாய்ப்பு மற்றும் திருமணம் ஆக வேண்டி அண்ணாசாமி நாயக்கரிடம் அருள்வாக்கு பெற்றனர் என்ற விபரம் கூறப்படுகிறது. அது முதல் அவர் அண்ணாசாமித் தம்பிரான் என அழைக்கப்பட்டார்.

          அவருக்குப்பின், அவரின் பிரதான சீடரான இரத்தினசாமி செட்டியார் என்பவரால் 1865ம் ஆண்டு தென்பழநியில் உள்ளது போல சிலை செய்யப்பட்டு கோவில் கட்டப்பட்டது. ஒரு நாள் இரத்தினசாமி செட்டியாரின் கனவில் அண்ணாசாமித் தம்பிரான் தோன்றி தன்னைப்போலவே “பாவாடம்” தரித்துக் கொள்ளுமாறு பணித்தார். அதனால் இவரும் பாவாடம் தரித்து, குறி சொல்லும் ஆற்றலைப் பெற்று இரத்தினசாமித் தம்பிரான் என அழைக்கப்பட்டார். தற்போது உள்ள கர்ப்பக்கிருகம், உட்பிரகாரம் மற்றும் கருங்கல் மண்டபம் போன்றவை இரத்தினசாமித் தம்பிரானின் சீடரான பாக்கியலிங்கத் தம்பிரான் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். இம் மூன்று தம்பிரான்களின் (சித்தர்கள்) சமாதியும் தமிழ்நாட்டில் உள்ள நெற்குன்றம் போகும் பாதையில் அமைந்துள்ளன. இங்கு சித்தர்கள் ஆலயம் அமைக்கப்பட்டு பௌர்ணமி பூசை மற்றும் குரு பூசை போன்றவை விமரிசையாக நடைபெறுகிறது.

          இக் கோவிலில் பல தெய்வங்களுக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. வரசித்தி விநாயகர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள் இங்கு உள்ளன. இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மூலவர் பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்கு முருகன் காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார். நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கென்று ஒரு தனிச் சன்னதி இருக்கிறது. மேலும் இங்கு தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன.

          இக்கோவில், திருமணங்களுக்கும் மத சொற்பொழிவுகளுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு விசாலமான மண்டபத்தைக் கொண்டுள்ளது. இந்தக் கோவிலின் முன்புற இராஜ கோபுரத்தில், கந்த புராணக் காட்சிகள் வண்ணமயமாக விளக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் முன்புறம் திருக்குளம் உள்ளது. இங்கு தைப்பூசம் மற்றும் விழாக் காலங்களில் ‘தெப்போற்சவம்’ நடைபெறுகிறது. இதன் கிழக்கு கோபுரம் 40.8 மீ உயரம் கொண்டது. இதில் 108 பரதநாட்டிய நடன அசைவுகள் காணப்படுகின்றன. இக்கோவிலின் தல விருட்சமாக அத்தி மரம் உள்ளது.

          இங்கு சுப்ரமண்ய ஸ்வாமி புறப்பாட்டிற்கான தங்க ரதம் ஒன்று உள்ளது. பக்தர்கள் அதனையும் தரிசிக்கலாம். முருகப் பெருமானுடன் தொடர்புடைய அத்தனை தினங்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அண்மையில் நடந்த கும்பாபிஷேகத்திற்குப் பின்னர் கோயிலில் பல புதிய மாற்றங்கள் வந்துள்ளன.

          இக் கோவிலில் வழிபாடு அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து காலசந்தி பூசை 7 மணிக்கும், உச்சிக்கால பூசை மதியம் 12 மணிக்கும், சாயரட்சை மாலை 5 மணிக்கும் மற்றும் அர்த்தசாம பூசை இரவு 9 மணிக்கும் நடைபெறுகிறது. விழாக்காலங்களில் பூசை நேரங்கள் மாறுபடும்.

          வடபழனி முருகனைத் தரிசித்துவிட்டு அங்கிருந்து நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்குக் கிளம்பினோம்.

அனந்தாழ்வான் வைபவத்துடன் பிரமோத்ஸவம் நிறைவு; ஶ்ரீமான் அனந்தாழ்வான் திவ்யசரிதம் நூல் வெளியீடு!

ananthazwan book release - 2026
#image_title

பகவத் ராமானுஜரின் உத்தரவுப்படி திருமலை திருப்பதியில் நந்தவனம் அமைத்து, புஷ்ப கைங்கர்யம் செய்தவர் சுவாமி அனந்தாழ்வான். பிரம்மோத்ஸவ விழா முடிந்த மறுநாள் திருமலையப்ப சுவாமி, அங்குள்ள அனந்தாழ்வான் தோட்டத்துக்கு எழுந்தருள்வது வழக்கம். அங்கே மகிழ மரமாக அனந்தாழ்வான் திருவரசு அமைந்த இடத்தில் தன்னுடைய பக்தனுக்கு சடாரி மரியாதை அளித்துவிட்டு, இடவலமாக அதாவது பின் சுற்றாக புறப்பட்டு ஆஸ்தானத்தை அடைவார்.

‘செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன்’ என்பது பாசுரம். திருமலைக்கு புஷ்ப மண்டபம் என்று பெயர் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் பிரமோத்ஸவம் நடந்து முடிந்த பின்னர், உத்ஸவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடத்துவது ஐதீகம்.

உத்ஸவர்களான ஸ்ரீ தேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு திருக்கல்யாண மண்டபத்தில் புஷ்ப யாக நிகழ்ச்சிகள் நடைபெறும். டன் கணக்கில் மலர்கள் கொண்டு வரப்படும். ரோஜா, முல்லை, மல்லி, சம்பங்கி, சாமந்தி மற்றும் துளசி, தவனம் போன்ற 14 வகை புஷ்பங்களால் உத்ஸவ மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்யப்படும்.இந்த யாகத்தோடு பிரம்மோத்ஸவம் நிறைவுபெறும். இவை யாவும் புதன் கிழமை நடைபெற்றன.

தொடர்ந்து, திருமலை ஸ்ரீ பெரிய ஜீயர் சுவாமி மற்றும் ஸ்ரீ சின்ன ஜீயர் ஸ்வாமி ஆகியோர் இணைந்து ‘தி இந்து பதிப்பகம்’ வெளியிட்ட ‘ஸ்ரீ அனந்தாழ்வானின் தெய்வீக வரலாறு’ என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலை திருமலையில் புதன்கிழமை வெளியிட்டார்கள்.

விழாவில் பேசிய திருமலையின் மூத்த மடாதிபதி, 1053 – 1138 காலகட்டத்தில் திருமலை மலையில் வாழ்ந்த மகத்தான ஸ்ரீ வைணவ ஆசார்யர் அனந்தாழ்வானின் வரலாற்றை இந்த புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றார்.

மலர்த் தோட்டம் அமைத்து திருமலை சந்நிதிக்கு புஷ்ப கைங்கர்யத்தை முன்னின்று நடத்திய அனந்தாழ்வான், தினமும் மாலை கட்டி, திருமலையப்பனுக்கு புஷ்ப கைங்கரியம் செய்தார். இன்று இந்தப் புத்தகம் அனந்தாழ்வான் தோட்டத்தில் அனுசரிக்கப்படும் பாக் சவாரி என்ற புனித நாளில் வெளியிடப்படுகிறது பொருத்தமானது” என்று குறிப்பிட்டார்.

குருவின் மீதுள்ள பக்தியின் சக்தியைப் புரிந்துகொள்ள இந்த நூலைப் படிக்குமாறு அவர் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தார். விஜயவாடாவைச் சேர்ந்த பக்தரான பி.வி.ராமி ரெட்டி என்பவரால் தெலுங்கில் எழுதப்பட்ட இந்த நூலை ஹைதராபாத்தைச் சேர்ந்த திருமதி ராஜி ரகுநாதன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலை தி ஹிந்து பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்த நூலைப் பற்றி…

ஸ்ரீமான் அனந்தாழ்வான் திவ்ய சரிதம் என்ற இந்த நூல், உண்மைச் சம்பவங்களால் ஆனது. குரு பக்தியையும் தெய்வ பக்தியையும் விளக்குகிறது. இதனைப் படிப்பதன் மூலம் வாசகர்களுக்கு குரு பக்தி என்றால் என்ன என்பது புரிவதோடு தெய்வ பக்தி கட்டாயம் ஏற்படும்.

ஏனென்றால் இதனை எழுதிய ராமிரெட்டி, சாட்சாத் திருமலை ஸ்ரீ வேங்கடேஸ்வர பெருமாளால் தூண்டப்பட்டு அவர் கூறியதை எழுதியிருப்பதாகக் கூறுகிறார். இதைப் படிக்கும் நமக்கும் அது நூற்றுக்கு நூறு உண்மை என்பது புரிய வரும்.

திருமலைக்கு எத்தனையோ முறை சென்று வரும் பக்தர்களுக்குக் கூட அனந்தாழ்வான் தோட்டத்தை பற்றி தெரியாமல் போவது துரதிருஷ்டமே. இதைப் படித்த பின்பாவது அந்த தவறை திருத்திக் கொள்வதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். நூலாசிரியர் எத்தனை பணிவோடு திருமலைக்கு வரும் பக்தர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார் என்று படிக்கும்போது, நம் உடன் பிறந்த சகோதரனாக நம்மை நல்வழிப்படுத்த அவர் நினைப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

திருமலை ஸ்ரீனிவாச பெருமாளின் தரிசனம் முடிந்ததும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிவரும் நமக்கு அவருடைய வேண்டுகோளைப் படிக்கும்போது இத்தனை நாள் அவ்விதம் செய்யவில்லையே என்ற வெட்கம் மேலிடுகிறது. இது ஆச்சார்ய பக்தியையும் தெய்வபக்தியையும் எடுத்துரைக்கும் ஆன்மீக நூலானாலும், சற்றும் தொய்வின்றி ஒரு நாவலைப் படிப்பது போல, எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை. அத்தனை ஆத்மார்த்தமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவரும், மொழிபெயர்ப்பு என்ற எண்ணம் துளியும் ஏற்படாத விதமாக மூல நூலே தமிழ்தானோ என்பது போல மொழிபெயர்த்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆன்மீக அன்பர்கள் இந்த நூலை வாங்கிப் படித்து, ஸ்ரீமான் அனந்தாழ்வானின் தெய்வ பக்தியையும் குரு பக்தியையும் அறிந்து கொண்டு தாமும் அவ்வழியில் முன்னேறலாம்..

அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணியிட நிரப்புதல்களுக்கு ஒப்புதல் கொடுங்க..!

hindu educational institutions meet - 2026
#image_title

தமிழ்நாடு ஹிந்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சங்க ஆண்டு பொது குழு கூட்டம்!

தமிழ்நாடு ஹிந்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சங்க ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியில், நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, சங்கத்தின் மாநில தலைவரும் கும்பகோணம் பாணாத்துறை மேல்நிலைப்பள்ளி செயலருமான டி.ஆர். சுவாமிநாதன், தலைமையேற்று நடத்தினார்.

சங்கத்தின் செயலர் தவத்திரு சுவாமி நியமனந்த மகராஜ் வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தின் துணைத் தலைவர்கள் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், எம்.கணேசன்,
எம்.அப்பர் மற்றும் எஸ்.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், திருப்பராய்த்துறை, இராமகிருஷ்ண தபோவனத் தலைவர் தவத்திரு சுவாமி சுத்தானந்த மகராஜ், சங்க பொருளாளர் தவத்திரு சுவாமி பரமானந்த மகராஜ் ஆகியோர் ஆசி உரையாற்றினார்கள். தமிழகம் முழுவதும் இருந்து பெரும் அளவில் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் வரவு செலவு பற்றிய விவரங்களை சங்கத்தின் மாநில தலைவர் டி.ஆர். சுவாமிநாதன் வாசித்தார். இக்கூட்டத்தில், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசு உதவி பெறும் சிறுபான்மை அற்ற பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்புதல் மற்றும் ஏற்கனவே, முறையான அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி உடன் ஒப்புதல் வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனியார் பள்ளிகள் ஒழுங்காற்று சட்டம் 2018 புனரமைக்கப்பட்ட விதி 2023-ல் உள்ள சில பகுதிகள் உதவி பெறும் பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வண்ணம் இருப்பதால், அந்தப் பகுதிகளை நீக்க தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி பயில அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியதைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இட உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் உயர் கல்வி பயில மாதம் ரூபாய் 1000 மற்றும் அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதை போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ள பராமரிப்பு மானியத்தை விரைந்து வழங்கிட தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தமிழக அரசால் கணினி, பிரிண்டர், இன்டர்நெட் போன்றவை வழங்கியவை போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என, தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பள்ளி தொடர்பான கடிதப் போக்குவரத்துகளை பள்ளி தாளாளர்/செயலர் மட்டுமே அனுப்ப பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குனர் அவர்களுக்கு வலியுறுத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், நிறைவாக சங்கத்தின் செயலர் கே. செந்தில்குமரன் நன்றியுரை ஆற்றினார்கள். 

மக்கள் கேக்குற கேள்வில… எங்க பகுதிக்கே போக முடியல: காலியான சிவகாசி மாநகராட்சிக் கூட்டம்!

sivakasi corporation councellors boycot - 2026
#image_title

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டத்தை 30க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு.

சிவகாசி மாநகராட்சி மொத்தம் 48 வார்டுகளைக் கொண்டது .இதில் திமுகவை சேர்ந்த சங்கீதா இன்பம் மேயராக உள்ளார்.

இந்நிலையில் மேயர் சங்கீதா தலைமையில் இன்று மாதாந்திர கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் 48 மாம் என்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களிடம் எந்த தகவலும் முறையாக அறிவிப்பதில்லை எனவும் பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாக இதனால் தங்கள் பகுதிக்குள் செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் கூறி துணை மேயர் விக்னேஷ் பிரியா உட்பட கூட்டத்தை புறக்கணித்தனர்.

மீதமுள்ள 18 உறுப்பினர்கள் கொண்டு மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் மீதமுள்ள உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் சாலை உள்ளிட்ட அடிப்படை வேண்டும் என அதிகாரியிடம் முறையிட்டனர்.

விருதுநகர்: காமராஜர் உருவச் சிலைக்கு ஆளுநர் ரவி மரியாதை!

governor in virudhunagar kamarajar mandap - 2026
#image_title

விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருஉருவசிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாலை அணிவித்து மரியாதை …

தென்மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுபயணம் மேற்கொண்ட தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி. அவர்கள் இன்று விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்

சுற்றுபயணத்தில் விருதுநகர் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர் என். ரவி அவர்கள் காமராஜரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதை தொடர்ந்து அங்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்வையிட்டு காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து தெரிந்து கொண்டார்.

தமிழக ஆளுநர் அங்கு இருந்த வருகை பதிவிட்டு கோப்பில் கையெழுத்திட்டார். ஆளுநருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் குறைபாடுகள்: ஆளுநர் குற்றச்சாட்டு!

governor ravi in rajapalayam - 2026
#image_title

விஸ்வகர்மா யோஜனா திட்டம் கீழ் 18 வகையான கைவினைக் கலைஞர்களை சந்தித்த தமிழக ஆளுநர்.

மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளன.- ஆளுநர் குற்றச்சாட்டு


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின்கீழ் 18 வகை கைவினை கலைஞர்களை சந்தித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில்…

நீங்கள் தான் நாட்டின் உண்மையான கதாநாயகர்கள். விவசாயமும் தொழிலும் இல்லாமல் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. அதேபோல் நீங்கள் இல்லாமல் இந்த நாட்டில் எந்த பணிகளும் நடக்கப் போவதில்லை. இத்திட்டத்தை பிரதமர் தைரியமாக நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தை சில தலைவர்கள் கூட முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.

கவனிக்கப்படாமல் உள்ள துறைகளை பிரதமர் கவனித்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். பொறியாளர்கள் விஸ்வகர்மாகள் தான் புனிதமான ஆத்மா. நாட்டை சிறப்பாக கட்டமைத்தவர்கள் விஸ்வகர்மா. தலைசிறந்த கலைஞர்களாக நிகழ்பவர்கள்.

உறுதியான பாரதம் உருவாக விஸ்வகர்மாக்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பிரதமர் கருதுகிறார். புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட போது முதலில் பாராட்டு தெரிவித்தது விஸ்வகர்மாவினர் களைத்தான்.

பொறியாளர்கள் திட்டமிட்டு கொடுத்தாலும் அதை வியர்வை சிந்தி சிறப்பாக செயல் வடிவம் கொடுப்பது நீங்கள் தான். இத்திட்டத்தின் முழு நோக்கம் உங்களது வாழ்வாதாரம் மேம்பாடு அடைவதுடன் சமுதாயத்தில் உயர்ந்த பங்கையும் வைக்க வேண்டும் என்பதுதான். சிலர் எல்லாவற்றையும் இங்கு அரசியலாக பார்க்கிறார்கள்.

தவறான தகவலை பரப்புகிறார்கள். குலக்கல்வி திட்டம் என்பது தந்தை பார்த்த தொழிலை மகன்தான் பார்க்க வேண்டும் என்று பரப்புகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான சமூக நீதி மறுக்கப்படுகிறது. பின் தங்கியவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டும்.

குடிநீர் திட்டம், மின்சார திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்காக அமல்படுத்தப்படுகிறது. எந்த திட்டத்திலும் வேறுபாடு காட்டப்படுவதில்லை. பிரச்சினையை தீர்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை அரசியல் நோக்கோடு சந்திக்கக்கூடாது.

மத்திய அரசு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வீடு கட்டும் திட்டத்தில் 40 சதவிகித நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் நிறைய குறைபாடுகள் உள்ளன. மாநில முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன்.

மக்களிடம் நினைத்த தொழிலை தொடங்குவதற்கான போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. உங்கள் பிரச்சனைகளை அறிந்து கொண்டேன். என் குடும்பத்தில் ஒருவராக உங்களை பார்க்கிறேன். மத்திய, மாநில அரசுகளிடம் எடுத்துச் சென்று உங்கள் குறைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்வேன் என்றார்.

தமிழகத்தில் பட்டியல் வகுப்பைச் சார்ந்த ஒரு பெண் பஞ்சாயத்து தலைவியாக 2 ஆண்டுகளுக்கு முன் தேர்வு செய்யப்பட்டு இதுவரை பதவி ஏற்காமல் இருப்பதை நான் நாளில் படித்தேன் இதுதான் தமிழக அரசின் சமூக நீதியான கேள்வி எழுப்பினார் இந்நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, விஸ்வகர்மா நிர்வாகிகள், பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னததாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பொதுமக்களை காலை 9 மணி முதல் மண்டபத்தில் அடைத்து வைத்து குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்காமல் இருந்த நிலையில் பொதுமக்கள் ஆத்திரத்துடன் குடிநீர் எங்கே என கேள்வி எழுப்பி குடிநீர் பாட்டிலை பெறுவதற்காக ஒரு ஒருவரை முந்தி அடித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த புதிய தமிழகம் கட்சியினர் வந்திருந்த நபர்களுக்கு தண்ணீர் உணவு கூட ஏற்பாடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .பலர் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர்


  1. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவை உலகம் உற்றுபார்கிறது. பாதுகாப்புத் துறையில் கடந்த காலங்களில் 18000 கோடி ரூபாய் அளவில் ,இந்தியாவில் உற்பத்தி நடந்தது.
  2. பிரதமரின் உறுதியும் உறுதியும் அரசியல் அக்கறைக்கு அப்பாற்பட்டு நாட்டின் நலனுக்காக உயர்கிறது.
  3. கடந்த காலங்களில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இந்த பிரதமர் வருவதற்கு முன்பு நிதியமைச்சர் சொல்வதைக் கேட்டோம்.
  4. சுகாதாரக் கல்வி உள்கட்டமைப்பு குடிநீரை ஒவ்வொரு வீட்டிற்கும் சமையல் எரிவாயு ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு நபருக்கும் ஆயுஷ்மான் திட்டத்தில் பயன் அடைகிறார்கள்.
  5. பல மாநிலங்களின் பெரிய மாநிலங்களை விட தமிழகத்தில் ரயில்வேயில் 35,000 கோடி முதலீடு தமிழகத்திற்கு உள்ளது.
  6. இங்குள்ளவர்களான தீப்பெட்டி, பட்டாசு , பேப்பர், பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டாலும் நீங்கள் அனைவரும் நாட்டுக்கு பெரும் சேவை செய்து வருகிறீர்கள்.
  7. இன்று பிரச்சனையில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் பற்றிய பிரச்னையை கேள்விப்பட்டேன், ஏனென்றால் பெரிய பிரச்னைகளுக்கு நீதிமன்றங்கள் உட்பட பல தடைகளை ஏற்படுத்தி உள்ளன.
  8. ஒரு தொழிலை நாடு முழுவதும் உள்ள 100 கோடி மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மகிழ்ச்சியின் வெளிப்பாடாக பட்டாசு உள்ளது. அதில் உள்ள கட்டுப்பாடுகள் நியாயமற்றவை அகற்றப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்…
  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி