இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சபரிமலை வரும் நவ 16 கார்த்திகை முதல் துவங்க உள்ள 41நாள் மண்டல பூஜைக்கான பணிகள் தொடங்கியது. சன்னிதானம் பம்பை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுத்தம் செய்ய 1000 பணியாளர்களை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை பாதைகள் சுகப்படுத்தப்படுவதற்கு ஆயிரம் பணியாளர்களை நியமிப்பதற்கு மாநில அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர். திவ்விய எஸ் அய்யர் கூறினார். சபரிமலை சானிடேஷன் சொசைட்டி யோகத்தில் கலந்து கொண்டு பத்தாம்பூர் கலாக்டரேட்டில் கலந்து கொண்டு கலெக்டர் பேசினார்.
சன்னிதானம், பம்பை, நிலக்கல், பந்தளம், குளநடத்தல் தீர்த்தோதனப் பாதைகள் சுத்தம் செய்ய இவர்களுக்கு கடந்த ஆண்டு 450 ரூபாய் வழங்கப்பட்டது. இதை மேம்படுத்துவதற்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்படுகிறது. பயண படி இனத்தில் 1000 ரூபாய் வழங்கப்படும். புனித ஸ்தாபனங்களின் செயல்பாடு மற்றும் நலனை மதிப்பீடு செய்ய வெல்ஃபெயர் அலுவலகம் நியமிக்கப்படும். புனித சேனாங்கங்களுக்கு பார் சோப், பாத் சோப், எண்ணெய், மாஸ்க், கிளௌஸ் போன்ற அத்தியாவசியசாதனங்கள் அரசு நிறுவனங்களில் இருந்து நேரடியாக வாங்கப்படும்.
யூனிஃபோம், டிராக் ஸ்யூட், சானிடேஷன் கருவிகள், யூனிஃபார்மில் முத்திரை பதிப்பிக்கல் ஆகியவற்றிற்காக குவட்டேஷன் அழைக்கப்படும். 14 டிராக்டர் டெயிலர்கள் வாடகைக்கு எடுக்கப்படும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் மூன்று வீதமும், நிலக்கல் எட்டு டிராக்டரும் வினியோகிக்கப்படுவதாகக் கூறினார். சபரிமலை சன்னிதானம் சொசைட்டியின் 2022-23 ஆண்டு வரவு செலவு கணக்குகள் கூட்டம் அங்கீகரிக்கப்பட்டது. கடந்த சபரிமலை தீர்த்தடன காலத்தின் புனித ஸ்தாபனத்தின் செயல்பாடுகள் சிறந்ததாக இருந்தது என்று மதிப்பிடப்பட்டது. மாவட்ட காவல் அதிகாரி வி.அஜித், ஏ.டி.எம்.பி. ராதாகிருஷ்ணன், திருவல்லா சப் கலெக்டர் சஃப்னா நஸ்ருதீன், வாஸ்துவித்யா குருகுலம் நிர்வாக இயக்குனர் டி.ஆர்.சதாசிவன் நாயர், பேரிடர்நிவாரணம் மாநகராட்சி கலெக்டர் டி.ஜி. கோபகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நடுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோட்டை கருப்பசாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டு கால பூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் திருக்கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நடுப்பட்டி கிராம பொதுமக்கள், செய்திருந்தனர்.
கரூர் பரணி பார்க் பள்ளியில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் 63வது மாநில அளவிலான சப்ஜூனியர், கேடட் கேரம் சாம்பியன்சிப் போட்டிகள் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது .
துவக்க விழா நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட கேரம் சங்க சேர்மனும் பரணி கல்விக் குழும தாளாளருமான எஸ்.மோகனரங்கன் தலைமை தாங்கினார்.
கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாநில கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகளை சம்பிரதாய முறைப்படி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக சுண்டாட்டம் சங்க மூத்த துணைத் தலைவர் சிவக்குமார், மாநில பொதுச்செயலாளர் ‘அர்ஜூனா விருதாளர்’ ‘இரு முறை முன்னாள் உலக சாம்பியன்’ மரிய இருதயம், மாநில கேரம் சங்க துணைத் தலைவரும், மாவட்ட தலைவரும், பரணி கல்விக்குழும முதன்மை முதல்வருமான முனைவர் ராமசுப்பிரமணியன், மாநில பொருளாளர் கார்த்திகேயன், பரணி கல்விக் குழும அறங்காவலர் சுபாஷினி, போட்டியின் தலைமை நடுவர் ஆல்வின் செல்வகுமார், தெற்கு மண்டல செயலாளர் சிவகுமார், கரூர் மாவட்ட செயலர் சுரேஷ், கரூர் மாவட்ட துணைத் தலைவர்கள் முகம்மது கமாலுதீன், சுதாதேவி, சேகர், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட இணைச் செயலர் ஜீவா உள்ளிட்ட மாநில, மாவட்ட கேரம் சங்க நிர்வாகிகள் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அக்டோபர் ஒன்றாம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் 63வது மாநில சுண்டாட்ட போட்டியில் கரூர் திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, கோயமுத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 மாணவர்கள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.
அக்டோபர் 1ம் தேதி மாலை 4 மணிக்கு 63வது மாநில சப் ஜூனியர், கேடட் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக கேரம் சங்க மாநில தலைவர் நாசர் கான் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளதாக போட்டி ஏற்பட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
கரூர் மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற, அம்மன் ஆலயங்களில் ஒன்றான, கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில், புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட, திருவிளக்கு பூஜை, சிறப்பாக நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையை முன்னிட்டு, ஆலய மண்டபத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தனித்தனியே அமர்ந்தார்கள். அவர்களுக்கு, வாழை இலை, விளக்கு திரி, விளக்கு எண்ணெய், மஞ்சள், பச்சரிசி, குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் ஆலயத்தின் சார்பாக வழங்கப்பட்டது.
அதன்பின், திருவிளக்கு பூஜை, சிறப்பாகத் தொடங்கியது. ஆலய திருவிளக்கு முன் அமர்ந்து, வேத மந்திரங்கள் ஓதியபடி, குங்குமத்தால் அர்ச்சனை நடைபெற்றது. அதன் பின், பக்தர்களும் தங்கள் முன் இருந்த திருவிளக்குகளுக்கு, குங்குமத்தால் அர்ச்சனை செய்தபின், தூப தீபங்கள் காட்டி, மகா தீபாராதனை செய்தனர்.
கரூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற, புரட்டாசி மாத பௌர்ணமி, திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும், ஆலயத்தின் சார்பில், விபூதி, குங்கும பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
அஷ்டமா நாகர்களும் தனித்தனியாக வழிபாடு செய்துள்ள வெவ்வேறு பழம்பெருமை வாய்ந்த தலங்கள் பல இருப்பினும் இந்த எட்டு நாகங்களும் ஆதிசேஷனுடன் சிவபெருமானை வழிபட்ட தொன்மையான தலமாக திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகேயுள்ள திருபாம்புரம் திருத்தலம் விளங்குகின்றது.
இங்கு ஸ்ரீ வண்டுசேர்குழலி உடனாய ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் சுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தலம் “தென் காளஹஸ்தி” எனப்பெறும் சிறப்புடையது.
அறம்,பொருள்,இன்பம்,வீடு எனும் நான்கையும் மக்கள் பெற்று உய்யும் வண்ணம் சிவபெருமான் திருவருளே திருமேனியாகக் கொண்டு இராகுவும், கேதுவும் ஏக சரீராமாக இருந்து ஈசனைப் பூஜித்து வழிபட்டதால் இராகு – கேது ஸ்தலம் என்றழைக்கப்படுகிறது. இங்கு வீற்றுள்ள பாம்பரசனான ஆதிசேஷனைச் சுற்றி எட்டுத் திக்குகளிலும் அஷ்டமா நாகங்களும் தாங்கிக் கொண்டிருப்பதாக புராண வரலாறு கூறுகிறது.எனவே இத்தலத்தில் ஒன்றறை ஆண்டுகளுக்கு ஒருமுறை இராகு – கேது பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இத்தலத்தில் அத்துணை நாகங்களும் ஒருசேர வழிபட்டமைக்கு பின்னணியில் ஒரு சுவையான புராணக் கதையும் உண்டு.
” ஒருசமயம் கைலாயத்தில் முழுமுதற் கடவுள் உள்ளிட்ட சகல தேவர்களும் சிவபெருமானைத் தொழுது பணிந்து நின்றிருந்தனர். பெருமானின் கழுத்திலிருந்த பாம்பு ‘தன்னையும் சேர்த்துத்தானே வணங்குகிறார்கள்’என்று சிலநொடிகள் கர்வம் கொண்டது. அதையுணர்ந்து சினம் கொண்ட பெருமான் “நாகர் இனம் முழுவதுமே சக்தி இழந்து போகட்டும்” என சபித்தார்.
இதனால் வலிவு குறைந்த நாகர்களால் பூமியைத் தாங்கும் பணியில் குறைவுபடுதல் ஏற்பட்டது. அல்லலுற்ற நாகர்கள் சிவபெருமானிடமே முறையிட, “சிவராத்திரியன்று நான்கு காலங்களிலும் பூலோகத்திலுள்ள நான்கு தலங்களில் தம்மை வழிபட விமோசனம் கிடைத்திடும்” என திருவாய் மலர்ந்தருளினார்.
அதன்படி, ஆண்டுதோறும் சிவராத்திரி நன்னாளில் முதல் காலத்தில் குடந்தையிலும் (நாகேஸ்வரர்),இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும் (நாகநாதர்),மூன்றாவது காலத்தில் திருப்பாம்புரத்திலும் (சேஷபுரீஸ்வரர்), நான்காவது காலத்தில் நாகூரிலும் (நாகநாதர்) வழிபட்டு நாகர்கள் சாபவிமோசனம் பெற்றனர் என்பது தலவரலாறு.
பாம்புகள் வழிபட்டதால் பாம்புரநாதர் என்றும்,ஆதிசேஷன் வழிபட்டதால் சேஷபுரீஸ்வரர் என்றும் இத்தலத்து பெருமானுக்கு திருநாமங்கள் உண்டாயின. தேவாரப் பாடல்பெற்ற இவ்வூரில் பாம்புகள் தீண்டி இதுநாள்வரை யாரும் மரணித்ததில்லை என்பதும், ஆலம் விழுதுகள் பூமியை தொடுவதில்லை வியப்பூட்டும் உண்மைகளாகும்.
புராணத்தகவலின்படி, ராகு கேது என்பன நிழல் கிரகங்கள். பாம்பினுடைய தலை உடைய கிரகம் ராகு என்றும்,எஞ்சிய உடல் பகுதி உடைய கிரகம் கேது என்றும் நம்பிக்கை உள்ளது. ராகுவிற்கு உரிய தலமாக திருநாகேஸ்வரமும், கேதுவிற்கு உரிய தலமாகக் கீழ்பபெரும்பள்ளமும் சிறப்பாகப் பேசப்படுகின்றன.
ஆனால் இராகு – கேது இரண்டிற்குமே உரித்தான ஒரே பரிகாரத் தலமாக விளங்கிடுவது திருப்பாம்புரம்தான் என்பது சிறப்பு.
ஜெனனகால ஜாதகத்தில் சர்ப்ப தோஷங்கள், களத்திர தோஷம், புத்திர தோஷம், ஆகியன இருப்பவர்களும்,இராகு – கேது தசாபுத்தி நடப்பு உடையவர்களும் இத்தலத்தில் வழிபட்டு பரிகார நிவர்த்தி பெறுகிறார்கள்.
அதுபோல, விஷக்கடிகளால் அல்லல் படுபவர்கள், கனவில் பாம்புகளைக் கண்டு துன்புறுபவர்களும் இத்தலத்தில் தோஷ நிவர்த்திக்கான பரிகார பூஜைகள் செய்து பலனடைகின்றனர்.
இத்தலத்தில் ஆதிசேஷனுக்கு மூல விக்கிரகமும், உற்சவர் விக்கிரகமும் உள்ளது தனிச்சிறப்பு. நாகர்கள் தவிர அம்பிகை, பிரமன்,சூரியன், சந்திரன்,அகத்தியர், தட்சன்,இந்திரன், கங்கை ஆகியோர்கள் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றிருக்கின்றனர்
பாம்புகளுக்குரிய தலம் ஆதலால் இன்றளவும் கோயிலில் பாம்புகளின் நடமாட்டம் உள்ளது கண்கூடு. குறிப்பிட்ட சில தினங்களில் தாழம்பூ அல்லது மல்லிகைப்பூ மணம் வீசுவது போல உணர்ந்தால், கோயில் பகுதியில் பாம்பு நடமாட்டம் உள்ளது என்று இன்றளவும் நம்பப்படுகிறது.
இத்தகைய பெருமைவாய்ந்த இத்தலத்தில் எதிர்வரும் புரட்டாசி மாதம் 21 – ம் தேதி (08.10.2023) ஞாயிற்றுக் கிழமை மதியம் 3.40 மணிக்கு, இராகு பகவான் …மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கும், கேது பகவான்… துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் இடம் பெயர்கின்றனர்.
எனவே இத்தலத்திற்கு வந்து தரிசித்து பரிகாரம் செய்ய வேண்டியவர்கள், மேஷம், ரிஷபம், சிம்மம்,கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்கார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாடெங்கிலிமிருந்து ஏராளமான பக்தர்கள் அன்றைய தினம் கூடுவார்கள் என்பதால் குடிநீர், கழிவறைகள், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முன் ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்தியா – கனடா இடையிலான உறவை சீர்குலைக்கும் நோக்கத்துடன், தனக்கு உதவிகரமாக இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நிகழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாபில் பிறந்து வளர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45), கனடாவில் குடியேறி சட்டவிரோதமாக அந்நாட்டு குடியுரிமை பெற்றார். அங்கு இருந்தபடி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டார். அதனால் அவருடன், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நெருங்கிவந்தது.
அவரது உதவியுடன், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை கனடாவில் நிகழ்த்தி, ஹர்தீப் சிங்கை ஐ.எஸ்.ஐ., தன் கூலியாளாக, பயன்படுத்தி வந்ததாம். இந்நிலையில், பஞ்சாபில் இருந்து கனடாவுக்கு புதிதாக வந்த காலிஸ்தான் ஆதரவாளர்களை ஆதரித்து உதவும்படி, ஹர்தீப் சிங்கை ஐ.எஸ்.ஐ., வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஐ.எஸ்.ஐ., ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொன்றுவிட்டு, பழியை இந்திய ஏஜன்டுகள் மீது சுமத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், அடிப்படை ஆதாரங்கள் இருந்தால் விசாரிக்க தயாராக உள்ளதாக இந்தியா பதிலடி கொடுத்திருந்தது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி வரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் அதிகளவில் குடியேறி வருகின்றனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் டைகர் போர்ஸ் என்ற அமைப்பின் தலைவரும் இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு இந்தியாவே காரணம் என்று அண்மையில் கனடா பிரதமர் முன்வைத்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்தது. இதனால் இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வந்த அமெரிக்கா, தற்போது திடீரென்று இந்திய அரசு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதனிடையே ஐநா பொது அவையில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், அரசியல் வசதிக்கு ஏற்ப தீவிரவாதத்தை கையாள்வதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்று கனடாவை மறைமுகமாக சாடினார்.
மேலும் தனியார் அமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அடிப்படை ஆதாரங்களை யாரேனும் வழங்கினால் அது குறித்து விசாரிக்க இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்தார். கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் தாக்கப்பட்டது, தூதரக அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே என்று குறிப்பிட்ட அவர், கனடாவில் உள்ள தீவிரவாத தலைவர்களை நாடு கடத்தும் கோரிக்கை நிலுவையில் உள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, ஆளுநர் ரவியிடம், விஷ்வ ஹிந்து பரிஷத் – வி.எச்.பி., தேசிய செயல் தலைவர் அலோக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டி ராஜ்பவனில், ஆளுநர் ரவியை புதன்கிழமை மாலை 4 மணிக்கு, வி.எச்.பி., தேசிய செயல் தலைவர் அலோக்குமார் சந்தித்துப் பேசினார். அப்போது, வி.எச்.பி., மாநிலத் தலைவர் சொக்கலிங்கம், வழக்கறிஞர் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், வி.எச்.பி.,யின் துறவியர் அமைப்பான அகில பாரதிய சந்த் சமிதி பொதுச்செயலர் சுவாமி ஜிதேந்திரானந்த சரஸ்வதி, கன்னியாகுமரி வெள்ளிமலை ஆசிரமத்தின் நிர்வாகிகள் சுவாமி சைதன்யானந்தா, சுவாமி மதுரானந்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சந்திப்புக்கு பிறகு அலோக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது:
உதயநிதி முதல்வரின் மகன் என்பதால், அவரது பேச்சை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. கோடிக் கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி, சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பும் பணியில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
வெறுப்பை வளர்க்கும் சக்திகளை தமிழக அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னர் ரவியிடம் நேரில் கோரிக்கை விடுத்தோம். அமைச்சர்களே ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பேசுவதால், அரசமைப்பு சட்டப்படி தமிழகத்தை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி, சேகர்பாபு ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்தோம்… என்றார்.
High level VHP Delegation meet TN Governor and submit a memorandum on Sanatan row!
Shri Alok Kumar demands suspension of the two ministers and action against others attacking Sanatan
Chennai. September 27, 2023. Vishwa Hindu Parishad, delegation headed by Dandi Swami Jeetendrananda Saraswati – General Secretary, Akhil Bhartiya Sant Samiti, Swami Chaitanyananda Swami Madurananda of Vellimalai Ashram, Shri. Alok kumar, Sr. Advocate, Central Working President, VHP, Dr. P Chockalingam President, VHP-North Tamilnadu, Su. Srinivasan Sr. Advocate, Central Co-Convenor, Legal Cell VHP have submitted a memorandum to The Honorable Governor of Tamilnadu Shri. R.N Ravi about the recent attacks on Santhana Dharma.
The delegation in its memorandum stated that it is a matter of grave concern that a conference was organized in Chennai on the subject of ‘Sanatan Abolition Conclave’. The Conclave was attended by Mr Udhayanidhi Stalin, a minister in Tamil Nadu Cabinet. The fact that he is the son of the Chief Minister of Tamil Nadu adds to the gravity of the situation.
The delegation requested the Honorable Governor, to impress upon the State Government of Tamilnadu to reign in the anti-national elements that are spreading hatred in the society by targeting Sanatana Dharma with false notions on daily basis and severely hurting the sentiments of millions and millions of followers of Sanatana Dharma. These comments have been unleashed by the ministers and members of the parliament of the DMK party and its alliance partners including Congress party.
Shri Alok Kumar stated the fact that the Minister in-charge of HR&CE attends this conference to eradicate Sanatan Dharm and lends his presence to the call for eradication of Sanatan Dharma makes it more ominous. This gives rise to apprehensions that a situation has arisen in which the Govt. of Tamil Nadu cannot be carried on in accordance with the provisions of the Constitution of India and requested The Honorable Governor to include them as notes in his report to the Hon’ble President of India and requesting the Honorable Governor to remove the Minsters from the Council of Ministers as they violated their oath. By, Vinod Bansal, National spokesman, Vishva Hindu Parishad
A delegation from Vishwa Hindu Parishad called on Governor Ravi and submitted a memorandum expressing their serious concern over the ongoing campaign against #SanatanaDharma in Tamil Nadu by persons who have taken oath in the name of Constitution. pic.twitter.com/UPUIiYiNcs
விழாக்காலமான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவைக்கு, ஆறு சிறப்பு ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுபோல், அதிக வருவாய் ஈட்டும் பொதிகை ரயில் வழித்தடத்தில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. ரயில்வேயில், 120 நாட்களுக்கு முன்பே, டிக்கெட் முன்பதிவு வசதி இருப்பதால், தென் மாவட்ட விரைவு ரயில்களில், தீபாவளிப் பண்டிகைக்காக ஊருக்குச் செல்பவர்கள் முண்டியடித்து, முன்பதிவு செய்தனர். இதனால், அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்தன. குறிப்பாக, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை, செங்கோட்டை, கோவை விரைவு ரயில்களில் காத்திருப்போர் பட்டியல், 300ஐத் தாண்டியுள்ளது.
எனவே சிறப்புரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை, ரயில் பயணிகள் மத்தியில் எழுந்தது. இதை அடுத்து, ஆறு சிறப்பு ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் வழித்தடத்தில், நான்கு சிறப்பு ரயில்களும், கோவை வழித்தடத்தில், இரண்டு சிறப்பு ரயில்களும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும். மேலும், முக்கிய விரைவு ரயில்களில், இரண்டு அல்லது மூன்று பெட்டிகளை கூடுதலாக இணைத்து இயக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது என்று கூறினர்.
தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில், பொதிகை அதிவிரைவு ரயிலுக்கு எப்போதுமே மவுசு அதிகம். எந்நேரமும் கூட்டம் மொய்க்கும் பொதிகை ரயிலிலும் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட வேண்டும் என்று ரயில்வே பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓதுவார்கள் நியமனம் தொடர்பாக, ஆளும் திமுக., அரசிடம் தருமை ஆதீனம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில்,
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நேற்று ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டவர்களில் சிலர் முழுநேரமாக முறையாக கற்று தேர்ந்தவர்கள் இல்லை என்பது ஊடகச் செய்திகள் வாயிலாக தெரியவருகிறது. முறையாக ஐந்தாண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களை பாதிக்கும்படி செய்யப்பட்ட தவறான நியமனமாக இதனை கருதுகிறோம். இது தவறான முன்னுதாரணமாகவும் ஆகும்.
80 ஆண்டு காலமாக தேவார பாடசாலை நடத்தி வருகிறோம், பெரும்பான்மையான ஓதுவார்கள் அனைவரும் இங்கு பயின்றவர்களே என்கிற தார்மீக அடிப்படையில் அரசின் கவனத்திற்கு இவற்றை கொண்டு வருகிறோம்.
ஐந்து ஆண்டு தேவார பாடசாலைகளில் பயின்றவர்களை மட்டுமே ஓதுவாராக முன்னர் பணி நியமனம் செய்துவந்தனர் அவர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. அதனை தளர்த்தி நான்காண்டு பல்கலைக்கழகத்திலும் மூன்றாண்டு இசைப்பள்ளியிலும் முழுநேரமாகப் பயின்றவர்களை நியமனம் செய்து வந்த நிலையில் தற்போது இன்னும் குறைபாடுடைய வகையில் மாதம் ஒருவகுப்பு ஈராண்டு 24 வகுப்பில் மட்டும் கலந்துகொண்டு பெற்ற சான்றிதழ் அங்கீகரிக்க பட்டமை முறையான தேர்ந்த நியமனமாயிராது. அது ஓதுவார் பணிக்கான பாடத் திட்டமும் கிடையாது.
தற்போது தேவாரப் பாடசாலைகள், பல்கலைக்கழகம், இசைப்பள்ளில் முழுநேரமாக அர்பணிப்போடு பயிலும் மாணவர்களின் எதிர்காலம் இதனால் பாதிக்கும், இத்துறைக்கு மாணவர்கள் சேர்வதும் குறைவும் ஆகையால் திருக்கோயிலில் ஓதுவார் பணிக்குரிய தரமான தகுதியான நியமனங்களையே செய்தல் வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் திருக்கோயில்களில் ஓதுவாமூர்த்தியாக பணி செய்வோர்க்குரியவர்களை கண்ணியதோடு நடத்தல் வேண்டும். ஓதுவார் பணியினை தவிர வேறு பணிகளில் ஈடுபடுத்தி புனிதமான திருமுறைகளை ஓதும் நன்நெறியுடையவர்களை தரம் தாழ்த்துவதும் மாற்றப்பட வேண்டிய நடைமுறை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
“பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம்… புள்ளிருக்குவேளுரே” – இவ்வாறு தருமை ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.