Home Blog Page 298

திமுக., அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்; இந்து முன்னணி தலைவர் கைது!

hindumunnani kadeswara subramaniam - 2026
#image_title

தமிழக அரசுக்கு எதிராக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடியோ செய்தி:

தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் இந்து ஆதரவாளர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சனாதனம் குறித்து இந்துக்கள் மனம் புண்படும்படி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் , இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் இந்து ஆதரவாளர்கள் மீது மட்டும் காவல்துறை பழிவாங்கும் நோக்கத்துடன் கைது நடவடிக்கை மேற்கொள்கிறது, என்று குற்றம் சாட்டி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பிய நிலையில், அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

என் பயணங்கள் – சுற்றுலாவில் சிறந்த பாரத நாடு!

kvb tourism series - 2026
#image_title

என் பயணங்கள் – பகுதி 2
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

          நான் ஒரு இந்து; ஸநாதன தர்மத்தைக் கடைபிடிப்பவன். எனவே என்னுடைய பயணங்களில் திருக்கோவில்கள் பல இடம்பெறுகின்றன. நான் அறிவியல் படித்தவன்; எனவே அறிவியல் தொடர்பான பயணங்கள் பல செய்திருக்கிறேன். தமிழிலும் வரலாற்றிலும் முதுகலைப் பட்டம் பெற்றவன் எனவே வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்குச் செல்லும் ஆர்வமுடையவன். எடுத்துக்காட்டாக ஹாதிகும்பா கல்வெட்டைப் பார்ப்பதற்காக நான் புவனேஷ்வரம் சென்றேன்.

          நம் நாட்டிலேயே பார்ப்பதற்கு பல இடங்கள் இருப்பதால் நான் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிச் சிந்திக்கவில்லை. நான் மட்டும் தனியாகச் சென்று இடங்களைப் பார்ப்பதில் நான் விருப்பமில்லாதவன். எங்கு சென்றாலும் என் மனைவி, மகள், மகனோடு செல்வதுதான் வழக்கம். தமிழகத்திற்குள் சுற்றுலா செல்லும்போது எப்போதும் ஒரு மகிழுந்தில் (கார்) செல்வதுதான் வழக்கம். வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்னர் என்னென்ன செலவுகள் செய்யப்போகிறோம் என்பதை குடும்பத்துடன் விவாதித்துவிடுவேன். வெளியூர் செல்லும்போது அங்கே எதையும் வாங்கும் வழக்கம் கிடையாது.

          காரில் செல்லும்போது எங்கே சாப்பிடவேண்டும் என்பதை முதலிலேயே முடிவு செய்துவிடுவோம். காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பதரை மணி வரை மட்டுமே பயணம். இடையிடையயே வாகன ஓட்டுநருக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் நிறுத்தங்கள் இருக்கும். வாகன ஓட்டுநரும் நாங்கள் சாப்பிடும் இடங்களில் எங்களுக்கு அருகில் அமர்ந்து அவருக்கு வேண்டியதைச் சாப்பிடுவார்.

          இரவில் நாங்கள் தங்கும் இடத்தில் வாகன ஓட்டுநருக்கும் நன்கு உறங்க இடம் அளிக்கப்படும். ஹோட்டலில் ரூம் புக் செய்தால் வாகன ஓட்டுநருக்கும் தனி அறை புக் செய்து தரப்படும். எனவே கடந்த பதினைந்து ஆண்டுகளாக நான் சுற்றுலா செல்லும்போது ஒரே வாகன ஓட்டுநர் எனக்கு வாடகைக்கு கார் ஓட்டுகிறார். 

          எந்த ஊருக்குப் போக விரும்புகிறேனோ அந்த ஊரின் வரைபடம் என்னிடத்தில் இருக்கும்; முதலிலேயே வாங்கி வைத்துவிடுவேன். இப்போது பிரச்சனை இல்லை. கூகிளில் நல்ல வழித்துணைப் படங்கள் கிடைக்கின்றன. கையில் நிறைய தின்பண்டங்கள், குடிப்பதற்குக் குடிநீர், பழங்கள் வாங்கி வைத்துக்கொள்வோம்.

          நான் ஆண்டிற்கு ஒரு முறை சென்னையிலிருந்து என்னுடைய சொந்த ஊரான குத்தாலம் செல்வேன். குத்தாலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. காலை பதினோரு மணிக்கு குத்தாலம் அருகில், திருமணஞ்சேரி செல்லும் வழியில் உள்ள கண்டியூர் என்னும் இடத்தில் உள்ள வடிவம்மன் கோயிலுக்குச் செல்வோம். அது எங்கள் குலதெய்வக் கோயில். சுமார் ஒரு மணிக்கு அங்கிருந்து கிளம்புவோம். சென்னைக்குத் திரும்பும் வழியில் வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி ப்ரும்மபுரீஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராசப் பெருமான் கோயில், திருவதிகை வீரட்டேஸ்வரர் கோயில் இவற்றுள் ஏதேனும் ஒரு கோயிலுக்குச் செல்லலாம்.

          சில சமயங்களில் காலை நேரத்தில் சென்னையிலிருந்து செல்லும்போது பாண்டிச்சேரி அருகே உள்ள பஞ்சவடி விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்குச் செல்வது வழக்கம். பொதுவாக கண்டியூர் கோயிலில் ஜூன் மாதத்தில் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அபிஷேக ஆராதனைகள் நடத்துவோம். அவ்வாறு நடத்தும்போது, சில சமயங்களில் சனிக்கிழமையும் விடுமுறை வந்தால். சனிக்கிழமை காலையிலேயே சென்னையிலிருந்து கிளம்புவோம்.

அப்படியொரு பயணத்தைப் பற்றி அடுத்த பகுதியில் காணலாம்.

சிவகாசி- பட்டாசு கடையில் வெடி விபத்து..

IMG 20230928 WA0171 - 2026
#image_title

சிவகாசி அருகே உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அந்த கடை முழுவதும் எரிந்து சேதம் 3 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு கடைகளில் முழுவதும் பட்டாசுகள் இறக்கி வைத்து பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அளவுக்கு அதிகமான பட்டாசுகள் வைத்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதனால் இன்று சிவகாசி அருகே உள்ள பாரப்பட்டி பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவகாசியைச் சேர்ந்த வைரவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் திடீரென பட்டாசுகள் வெடித்து சிதற தொடங்கியது அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வந்தே பாரத் தெரியாததை தெரிந்து கொள்வோம்!..

Screenshot 2023 09 29 10 11 08 292 comfacebookkatana - 2026
புதிய வந்தே பாரத்
profile image fb page dhinasarinews - 2026

வந்தே பாரத் தெரியாததை தெரிந்து கொள்வோம்!
தற்போது தமிழகத்தில் கேரளத்தில் ஏன் இந்தியா முழுவதும் வந்தேபாரத் அலை ஓய்ந்தபாடில்லை.

வந்தே பாரத் ரயில் பற்றிய தெரியாத தகவல்கள்! மற்ற ரயில் களுக்குள் இதற்கும்
என்ன வித்தியாசம்?நிறையவே உள்ளன.


வழக்கமாக விரைவு வண்டிகள் டபிள்யு.ஏ.பி4மற்றும் 7 வகை என்ஜின் கொண்டு இயங்குகிறது. இவற்றில் எல்ஹெச்பி பெட்டிகள் கொண்ட வண்டிகளில் டபிள்யு.ஏ.பி 7பயன்படுத்தப்படும். அதுவே பெட்டிகளின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும். இதனால் நிறைய டீசல் மிச்சம் ஆகும். என்ஜின் வண்டியை இழுக்கும். அந்த சக்தி கப்ளிங் மூலம் கடைசி பெட்டி இழுக்க சிறிது நேரம் ஆகும். பிரேக்கும் அப்படியே. எலக்ட்ரிக் பிரேக் போடும் போது LHB பெட்டியில் இடிப்பதும், கிருகிருவென அதிர்வும் உணரப்படும். என்ஜினில் 6 மோட்டார் இருக்கும்.

வந்தேபாரத் புதிய தொழில்நுட்பம். இதில் 8 பெட்டியில் 16 மோட்டாரும் 16 பெட்டியில் 32 மோட்டாரும் இருக்கும். அதனால் இதன் பிக் அப் அபாரம். அதாவது 1 நிமிடத்தில் 90 முதல் 100 கிமீ வேகம் அடைந்து விடலாம். பிரேக்கும் அப்படியே. வெகுதொலைவில் இருந்து போடுவதற்கு பதில் குறுகிய தொலைவில் போட்டால் போதும்.

கப்ளிங் இணைந்தே இருப்பதால் ஜெர்க் இருக்காது. இதனால் உச்ச வேகம் நீண்ட நேரத்தில் பராமரிக்க படுவதால் நிலையங்களுக்கு இடையே நேரம் குறையும். இதன் காரணமாக ஒரே எம்பிஎஸ் உள்ள போதும் பிற வண்டிகளை விட முன்பாக சென்று விடும்.

நிறைய நிறுத்தம் கொடுப்பதால் அதிவிரைவு ரயில் தகுதி இழந்து விடுமா?

நேரத்தை செலவு செய்தால் தான் மிச்சம் செய்ய முடியும் என்பார்கள். அதுபோல நிறுத்தம் இருந்தால் மற்ற வண்டிகளையும் விட விரைவாக செல்லும். நிறைய பயணிகளும் பயனடைவர்.

FB IMG 1695905838086 - 2026
வந்தே பாரத்

சாமானிய மக்களுக்கு அதிகம் என்றாலும் அதுவும் இலாபமே. ஒரு நாளைக்கு 540 பயணிகள் பயணம் செய்வார்கள். அதனால் அவர்களின் போட்டி இதர வண்டிகளில் கூட்டம், முன்பதிவு, தட்கல் போட்டி குறையும். கடைசி நேர பயணத்திற்கு வசதி. ஆம்னி பேருந்து கட்டணம் அளவில் இருப்பதால் பேருந்துடன் ஒப்பிடுகையில் சற்று காலாற நடக்கலாம் கழிவறை செல்லலாம், இருக்கையை திருப்பி அகன்ற கண்ணாடிகள் வழியாக வேடிக்கை பார்க்கலாம். மானியம், சலுகை கட்டணம், பாஸ் ஓசி பயணம் இல்லாததால் இரயில்வே நஷ்டம் குறையும்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… இந்த பெயரை கேட்டதும் அதிவிரைவு சொகுசு ரயில் பயணம் தான் பலருக்கும் நினைவில் தோன்றும். டிக்கெட் விலை அதிகமாக இருந்தாலும் ஒருமுறையாவது இந்த ரயிலில் போய் பார்த்துவிட வேண்டும் என்று யோசிக்காதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு நவீன மற்றும் சொகுசு வசதிகள் உடன் கூடிய ரயிலை இந்திய ரயில்வே உள்நாட்டிலேயே தயாரித்து வழங்கி வருகிறது. இவை சென்னை ஐ.சி.எஃப்பில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படுவது தமிழகத்திற்கு கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

​தமிழகத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை

2019ல் தொடங்கி தற்போது வரை 34 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதில் தமிழகத்திற்கு மட்டும் 4 ரயில்கள் கிடைத்திருக்கின்றன. அவை, சென்னை சென்ட்ரல் டூ மைசூரு, சென்னை சென்ட்ரல் டூ கோவை, சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் டூ விஜயவாடா ஆகியவை ஆகும். அடுத்தகட்டமாக 60க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் பரிந்துரை பட்டியலில் இருக்கின்றன.

​குருவாயூர் டூ ராமேஸ்வரம் வழித்தடத்தில் வந்தே பாரத் சேவை..

FB IMG 1695962423913 - 2026
#image_title

அதில் ராமேஸ்வரத்திற்கு ஒரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் மத்திய அரசின் ஆன்மீக சுற்றுலா திட்டத்தின் கீழ் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் தேர்வு செய்யப்பட்டுள்ள வழித்தடம் அப்படி. குருவாயூர் டூ ராமேஸ்வரம் வழித்தடத்தில் தான் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை விட இந்திய ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

​ஆன்மீக சுற்றுலா திட்டமாக குருவாயூர் என்றாலே குருவாயூரப்பன் கோயில் தான் நினைவில் தோன்றும். ராமேஸ்வரம் என்றால் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோயில் வந்துவிடும். இதற்கு இடைப்பட்ட வழித்தடத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. எனவே குருவாயூரில் தொடங்கி பழனி, மதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை விட்டால் பக்தர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

இரண்டு விதமான வழித்தடங்கள்இதை அறிந்தே ஆன்மீக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தற்போது பாலக்காடு – பொள்ளாச்சி வழித்தடத்தில் அதிவேகமாக ரயிலை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான தொழில்நுட்ப வசதிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். குருவாயூர் டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இரண்டு விதமான வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இரவு நேர பயணமாக பாலக்காடு வழியாக சென்றால் 796 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். கொல்லம் – செங்கோட்டை வழியாக சென்றால் 674 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். இரண்டு வழித்தடங்களுமே நீண்ட தூரம் கொண்டவை. எனவே இரவு நேரப் பயணத்தை தவிர்க்க முடியாது எனத் தெரிகிறது. ஆனால் இதுவரை அறிமுகம் செய்து வைக்கப்பட்ட அனைத்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

படுக்கை வசதிகள் கிடையாதுஎனவே தான் இருக்கை வசதிகள் மட்டும் கொண்டிருக்கின்றன. படுக்கை வசதிகள் எதுவும் கிடையாது. ஒருவேளை இரவு நேரத்தில் இயக்கப்பட்டால் படுக்கை வசதிகள் கட்டாயம் தேவைப்படும். இதை எப்படி சமாளிக்கப் போகிறது இந்திய ரயில்வே என்ற கேள்வி எழுகிறது.

​தமிழக பக்தர்கள் ஹேப்பர்.எனவே கூடுதல் பயண வசதிகள், தொழில்நுட்ப அம்சங்கள் உடன் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். குருவாயூர் டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயன்பாட்டிற்கு வந்தால் தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, பக்தர்களும் பெரிதும் மகிழ்ச்சியடைவர்.


தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா!

madurai thenur sundaravalli temple - 2026
#image_title

மதுரை, சோழவந்தான் அருகே, தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவில், புரட்டாசி பொங்கல் திருவிழா, சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு, சுந்தரவள்ளி அம்மன், சிறிய கோவிலில் இருந்து, பெரிய கோவிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கு, பக்தர்கள், பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து, அக்னிச்சட்டி, எடுத்து வந்தார்கள்.

மறுநாள் காலை, அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, ஏழு கரககாரர்கள் முன்னிலையில், சக்தி கிரகம் எடுத்து, முளைப்பாரி ஊர்வலம், வீதியுலா நடைபெற்றது. வழிநெடுக, அம்மனுக்கு பூஜைகள் செய்து, அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினார்கள்.

பக்தர்கள், நேர்த்திக்கடனுக்காக, சேத்தாண்டி வேஷம், மற்றும் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, அம்மன் உடன் வந்தார்கள். இரவு, அம்மன், பூப்பல்லக்கில் எழுந்தருளி, விடிய விடிய பவனி வந்து, அதிகாலை சிறிய கோவிலுக்கு வந்து சேர்ந்தார்.

இந்த விழா ஏற்பாடுகளை, கிராமப் பொதுமக்கள் செய்திருந்தார்கள். சமயநல்லூர் போலீசார், பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவாகச் செய்திருந்தார்கள்.

வீடியோ செய்தி:

பசுமை புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்!

ms swaminathan - 2026
#image_title

இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98) காலமானார்

பிரபல வேளாண் விஞ்ஞானியும் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் 28.09.2023 வியாழக்கிழமை இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98.

எம்.எஸ்.சுவாமிநாதன், கும்பகோணத்தில் 1925ம் ஆண்டு பிறந்தார். பள்ளிப்படிப்பு முடித்த பின்னர், திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டத்தையும் பெற்றார்.

பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில், இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தினார். வேளாண்மைத்துறை செயலாளர், நடுவண் திட்டக்குழுவின் உறுப்பினர் மற்றும் துணைத்தலைவர் என பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.

இவருடைய பணிகளுக்காக பல்வேறு விருதுகள் இவரை அலங்கரித்துள்ளன. இந்தியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன. தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகள், பெருமைமிகு மகசேசே விருது, கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக 1972-79 வரை இருந்த போது, அரிசி, கோதுமை விளைச்சலை அதிகரிக்க பசுமைப் புரட்சி திட்டங்கள் செயல்படுத்தியவர். அதிக விளைச்சல் தரும் புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தியவர். இவரது முயற்சிகளின் வெற்றி காரணமாக இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று கொண்டாடப்பட்டார்.

எம்.எஸ். சுவாமிநாதன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சோழவந்தானில் புரட்டாசி மாத பிரதோஷ விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு!

chozhavanthan temple - 2026

மதுரை, சோழவந்தான், வைகைக் கரையில் அமைந்துள்ள பிரளயநாத சுவாமி, சிவன் கோவிலில், புரட்டாசி மாத, வளர்பிறை பிரதோஷ விழா, மிகச் சிறப்பாக நடைபெற்ற்து.

இவ்விழாவை முன்னிட்டு, சனீஸ்வரர், லிங்கம், நந்திகேஸ்வரர், சிவனுக்கு, பால், தயிர் உட்பட, 12 திரவியப் பொருட்களால், அபிஷேகம் செய்விக்கப்பட்டது. ரவிச்சந்திர பட்டர், பரசுராம சிவாச்சாரியார் ஆகியோர் அபிஷேகம் செய்தனர்.

பின்னர் சுவாமியும் அம்மனும், ரிஷப வாகனத்தில், கோவில் பிராகாரத்தில் திருவீதி உலா வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும், சுவாமியுடன், திருக்கோவிலை வலம்வந்து, சிவாயநமஹ, சிவாயநமஹ என்று பக்தியுடன் சொல்லியபடியே வந்தார்கள்.

தொடர்ந்து, சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடைபெற்றது. பாஜக, விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர், எம் வி எம் குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம் வி எம் பள்ளி தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் உட்பட, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தி வீடியோ:

இதுபோல், மதுரை நகரில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பழைய சொக்கநாதர், இம்மையில் நன்மை தருவார், தெப்பக்குளம் முக்தீஸ்வரர், மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், வரசித்தி விநாயகர், மேலமடை சௌபாக்ய விநாயகர் ஆலயங்களில், பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

ஓஹோ… என்.டி.ஏ.,வா? எனக்கு இண்டியா கூட்டணின்னு காதுல விழுந்துடுச்சி… சமாளித்து பதிலளித்த ஓபிஎஸ்!

ops interview at madurai copy - 2026
#image_title

மதுரை விமான நிலையத்தில், மௌனம் காத்த ஒபிஎஸ்.

மதுரை விமான நிலையத்தில், சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்த ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறும் போது

என்.டி.ஏ. கூட்டணியில் தொடர்கிறீர்களா, என்ற கேள்வி கேட்டதற்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார் .

பின்னர், அவருடன் வந்த முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் செய்தியாளரிடம் என்ன கேள்வி கேட்டீர்கள் என்று விளக்கம் கேட்டார்.

அதற்கு என்.டி.ஏ.கூட்டணி குறித்து என சொன்னதும், செய்தியாளர் செல்போனில் தொடர்பு கொண்டு எம் டி ஏ கூட்டணி என்பது எனது காதில் இந்தியா கூட்டணி என்று விழுந்ததால், நான் பதிலளிக்காமல் வந்து விட்டேன் தேசிய ஜனநாயகர்கள் கூட்டணியில், பாஜக முறைப்படி கூட்டணி குறித்து அறிவித்த பின் எங்கள் நிலையை பற்றி நாங்கள் தெரிவிக்கின்றோம் என, ஓபிஎஸ் செல்போனில் பேசினார்.

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா அரசு தொடர்ந்து பாரபட்சமாக செல்வது குறித்த கேள்விக்கு:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுக்கின்ற செயல் அதனை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதியாத, குலைக்கின்ற செயலாக தான் அது தெரிகிறது என்றார்.

பாஜக, அதிமுக கூட்டணி பற்றி கேட்டதற்கு, நல்லவர்களைப் பற்றிய நாம் பேசுவோம் எனக் கூறினார்

மேலும், அதிமுக பாஜக கூட்டணி விலகல் குறித்து, அல்லது பாஜக ஒபிஎஸ் கூட்டணியுடன் தொடர்வது குறித்து, நாளை மாலை பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர்களிடம் தெரிவிப்பதாக ஓபிஎஸ் கூறினார்.

சுற்றுலா தின ஸ்பெஷல்: கேவிபி எழுதும் புதிய சுற்றுலா தொடர்!

kvb tourism series - 2026
#image_title

பயணம் – முதல் பகுதி

அததோ குமக்கட் ஜிக்ஞாஸ:

          நம்முடைய நண்பர் ஜெயகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்னர் “அததோ நியூஸ்” என்ற யூ ட்யூப் சேனல் நடத்தி வந்தார். அந்த நியூஸ் சேனலில் சில நாட்கள் தமிழில் அவர் தந்தச் செய்தித் துணுக்குகளை ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்து, அதனை என் குரலில் ஒலிக்கோப்புகளாகப் பதிவுசெய்து அவருக்கு அனுப்புவேன். சில நிமிடங்களில் அது அவரது யூ ட்யூப் சேனலில் உடனே வெளியாகும். நான் அதனை என் நன்பர்களுக்கு வாட்சப் மூலமாகவும் முகநூல் மூலமாகவும் பகிர்வேன்.

          அதிலே ஒரு நண்பர் ‘அததோ’ என்றால் பொருளென்ன எனக் கேட்டார். அவர் அந்தக் கேள்வியைக் கேட்டதும் எனக்கு நினைவுக்கு வந்தது ராகுல சாங்கிருத்யாயன் எழுதிய ஒரு கட்டுரையில் ‘அததோ குமக்கட் ஜிக்ஞாஸ:’ என்ற வரிதான். ஆனால் நம்முடைய நண்பர் ஜே.ஜேயிடம் ‘அததோ’ என்றால் என்ன எனக் கேட்டேன். அவர் அதற்கு ‘ப்ரும்ம சூத்ரத்தின்’ முதல் வரியிலிருந்து எடுத்ததாக அவர் கூறினார். ப்ரும்ம சூத்ரத்தின் முதல் வரி ‘அததோ ப்ரும்ம ஜிக்ஞாஸ:’. இதன் பொருள் என்னவென்றால் ‘இனி ப்ரும்மத்தைப் பற்றிய விசாரணை ஆரம்பமாகிறது’ என்பதாகும்.

          இதனை ‘ராகுல சாங்கிருத்யாயன்’ தனது கட்டுரையில் ‘அததோ குமக்கட் ஜிக்ஞாஸ:’ என்று பயன்படுத்துகிறார்.  இந்தக் கட்டுரை ஒவ்வொருவரும் சுற்றுலா அல்லது பயணம் ஏன் செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக் அவர் குறிப்பிடுகிறார். அவர் உத்தரப்பிரதேசத்தில் பிறந்தவர். ஆனால் இந்தியா முழுவதும் சுற்றியவர். தமிழகத்தில் சில வருடங்கள் இருந்தவர். இலங்கையில் சில ஆண்டுகள் இருந்தவர். ருஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்குச் சென்றவர்.

          இன்று ஒவ்வொரு மொழியிலும் பயண இலக்கியம் என்ற துறை நங்கு வளர்ந்து வருகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்றா இதிகாசங்களில் கூட இராமன், அர்ச்சுனன், பலராமன் ஆகியோரின் பயணங்கள் விவரிக்கப் பட்டுள்ளன. ஹோமரின் இலியட், ஒடிஸி இரண்டும் பயணத்தை அடிப்படையில் எழுதப் பட்ட காவியங்கள். பல மொழிகளில் பயணங்கள் அடங்கிய சாகசக் கதைகள் உள்ளன.

          தமிழில் பயண இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளர்கள் என ஏ.கே. செட்டியார், சோமலே, மணியன், நெ.து.சுந்தரவடிவேலு ஆகியோரைச் சொல்லலாம். இன்னும் பலர் உள்ளார்கள். எனக்கும் பயணங்கள் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. நமது அன்பிற்குரிய ‘தினசரி’ மின்-நாளிதழின் ஆசிரியர் திரு செங்கோட்டை ஸ்ரீராம் அவர்கள் அளித்த ஊக்கத்தில் என்னுடைய பயணங்கள் பற்றிய ஒரு தொடரை எழுத நான் முயற்சி செய்கிறேன்.

          நான் பயண இலக்கியங்கள் படைக்கத் தகுதியானவனா என்ற கேள்வியை நான் முதலில் என்னிடத்தில் கேட்டுக்கொண்டேன். என்னுடைய தகுதிகள் மிக, மிகக் குறைவு. பயணம் செய்பவர்கள் பயணம் செய்யும் பகுதிகளில் நீண்ட நாள் தங்குவர். அந்தப் பகுதியின் மக்களோடு பழகுவர். அந்தப் பகுதியின் உணவு வகைகளை உண்பர். பொது போக்குவரத்தில் பயணம் செய்வர். ஆனால் நான் அவ்வாறு பயணம் செய்யவில்லை.

          நான் அரசுப் பணியில் இருந்தேன். அதனால் அதிக நாள்கள் விடுப்பு எடுக்க இயலாது. எனவே பொதுப் போக்குவரத்தினை நான் பயன்படுத்த இயலவில்லை. ஒரு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் பயணத்தை முடிக்க வேண்டும் என்பதால் உணவு விஷயத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன். பயணம் செய்யும் பகுதிகளில் சாலையோரங்களில் கிடைக்கும் உணவை உண்பதற்கு முன்னர் பல முறை யோசிப்பேன்.

          இருப்பினும் நான் என் சிறு வயதிலிருந்தே பல பயணங்கள் செய்துள்ளேன். என்னுடைய தந்தையார் மறைந்த திரு கே.எஸ். வைத்தீஸ்வரன் அவர்கள் இரயில்வேதுறையில் பணிபுரிந்தவர். எனவே அவர் எங்கள் குடும்பத்தினரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

          இவ்வளவு குறைகள் என்னிடம் இருந்தாலும் என்னுடைய பயணங்கள் பற்றி என்னுடைய ஆசையால் எழுதுகிறேன். கம்பன் சொல்லியது போல 

ஓசைபெற்று உயர்பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் –

வாருங்கள் என்னோடு பயணிக்கலாம்.

வந்தே பாரத்-க்கு போட்டியாக பொதிகை… செம ஃபாஸ்ட்டாக தென்காசிக்கு வரலாம்!

podhigai express oct first - 2026

செங்கோட்டை – சென்னை பொதிகை அதிவிரைவு வண்டி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து, செங்கோட்டை – சென்னை, சென்னை – செங்கோட்டை பொதிகை அதிவிரைவு வண்டி, முழுதும் எலக்ட்ரிக் எஞ்சினில் ஓடப்போகிறது. இதுவரையில் சென்னை – மதுரை எலக்ட்ரிக் எஞ்சினிலும், மதுரை – செங்கோட்டை டீசல் எஞ்சினிலும் இயங்கி வந்தது பொதிகை. இதனால், மதுரையில் சற்று தாமதம் ஏற்பட்டது. இனி அந்தப் பிரச்னை இல்லை.

இதுவரை, வண்டி எண் 12661 – 8.55க்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு, திருச்சிக்கு 2.35க்கும், மதுரைக்கு 5.20க்கும் வரும் பொதிகை எக்ஸ்பிரஸ், தென்காசிக்கு 8.15க்கு வந்து கொண்டிருந்தது.

அக்டோபர் 1ம் தேதி முதல், 12661 பொதிகை சூப்பர்பாஸ்ட் வண்டி, சென்னை எழும்பூரில் 8.40க்குப் புறப்படும். தாம்பரம் 9.10, மதுரை 4.10, விருதுநகர் 4.50, சிவகாசி 5.15, ராஜபாளையம் 5.45, தென்காசி 7.00, செங்கோட்டை 8.00 மணி என இதன் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து தென்காசிக்கு சுமார் 10 மணி நேரத்தில் வந்துவிடலாம்.

அதுபோல், 12662 செங்கோட்டையில் இருந்து மாலை 6.30க்குப் புறப்பட்டு, தென்காசி- மாலை 6.35, மதுரை இரவு 9.35, திருச்சி – நள்ளிரவு 12.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு காலை 6.40க்கு சென்றடைந்தது.

இனி அக்.01 முதல், பொதிகை அதிவிரைவு வண்டி எண் 12662 செங்கோட்டையில் மாலை 6.20க்குப் புறப்பட்டு, தென்காசி-6.35, ராஜபாளையம் 7.40, சிவகாசி 8.10, விருதுநகர் 8.40, மதுரை 9.30, தாம்பரம் 4.50, சென்னை எழும்பூர் 5.40 என நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

ALSO READ: பொதிகை, சிலம்பு ரயில்கள் அக்.1 முதல் மின்சார இஞ்சினில் இயக்கம்!

தற்போது சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எட்டு மணி நேரத்துக்குள் வந்தடைகிறது. அதைவிட அதிகம் நிறுத்தங்களுடன் இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் சுமார் பத்து மணி நேரத்தில் தென்காசியை வந்தடைகிறது என்பது தென்காசி ரயில் பயணிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அது போல் இதுவரை வந்ததில் இருந்து, சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் வந்துவிடலாம் என்பது, ராஜபாளையம் சிவகாசி வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் அம்சம் தான்!