Home Blog Page 299

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மதுரையில் பேரணி!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மதுரையில் பேரணி நடைபெற்றது.

மதுரை, புதுமண்டபம் அருகே, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சுற்றுலாத் துறை சார்பாக, உலக சுற்றுலா தின, விழிப்புணர்வு பேரணியை, கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்தப் பேரணி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே தொடங்கி, மதுரை திருமலை நாயக்கர் மஹாலில்  முடிவடைந்தது. இந்தப் பேரணியில் மாணவ மாணவியர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

பலர் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள். இந்தப் பேரணியில், கலை நிகழ்ச்சிகளும், மக்களைக் கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

உலக சாதனை; 9 பந்தில் 8 சிக்ஸருடன் அரை சதம்! நேபாள வீரருக்கு குவியும் பாராட்டு!

nepal deependra singh - 2026
#image_title
  • ஆசிய விளையாட்டுப் போட்டி: நேபாளம் – மங்கோலியா அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் நேபாள் அணி 314 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
  • சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் (9) அரைசதமடித்த வீரர் என்ற உலகசாதனையைப் படைத்தார் நேபாள வீரர் திபேந்திர சிங் ஐரி.
  • சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் (34) சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் நேபாள வீரர் குஷால் மல்லா.

ஆசிய விளையாட்டில் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் நேபாள வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் 8 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இதன்மூலம் சர்வதேச டி-20 வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.

சீனாவின் ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெற்ற நேபாளம் – மங்கோலியா அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் டி20 போட்டியில், மங்கோலியா அணி ‘டாஸ்’ வென்று பந்து வீசிய்து.

முதலில் பேட் செய்த நேபாள அணியில் தொடக்க வீரர்கள் குசால் புர்டெல் (19 ரன்கள்), ஆசிப் ஷேக் (16 ரன்கள்) ஓரளவு சுமாரான விளையாடினர். பிறகு களமிறங்கிய வீரர்கள் அடித்து ஆடினர். கேப்டன் ரோகித் பவுடல் 27 பந்தில் 6 சிக்சர் 2 பவுண்டரியுடன் 61 ரன்களில் வெளியேறினார்.
மறுபுறம் அதிரடியாக விளையாடிய குசால் மல்லா சதம் விளாசினார்.

பின்னர் வந்த திபேந்திர சிங் முதல் பந்தில் இருந்து சிக்சராக அடித்துத் தள்ளினார். முதல் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்ட அவர் 7வது பந்தில் இரண்டு ரன்கள், அடுத்த இரு பந்துகளில் சிக்சர் என 9 பந்தில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார்.

முன்னர் இந்தியாவின் யுவராஜ் சிங் 12 பந்தில் அரைசதம் அடித்ததே சர்வதேச ‘டி-20’ வரலாற்றில் அதிவேக அரைசதமாக இருந்தது. இந்த நிலையில், யுவராஜ் சாதனையை முறியடித்தார் திபேந்திர சிங்.

இறுதியில் நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. இது ‘டி-20’ வரலாற்றில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன். இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் குவித்திருந்தது அதிக பட்சமாக இருந்தது.

பழனி அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால நாணய கண்காட்சி!

palani museum nanaya kankatchi - 2026
#image_title

திண்டுக்கல் பழனி அரசு அருங்காட்சியகத்தில், நாட்டின் வரலாறு சார்ந்த புகைப்படங்கள், உலோக பொருட்கள், மண் குடுவைகள், கற்கால கருவிகள் என பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது. அதன்படி, அருங்காட்சியகத்தில் பழங்கால நாணய கண்காட்சி தொடங்கியது.

இந்த கண்காட்சியில், சேர, சோழ, பாண்டியர் மற்றும் குப்தர் அரச கால பழங்கால நாணயங்கள், ஆங்கிலேயர், முகலாயர் காலத்து நாணயங்கள் மற்றும் சுதந்திரத்துக்கு முன்பு வெளியிடப்பட்ட நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் பகுதி குற்றச் செய்திகள் சில…

வடமதுரை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது.

திண்டுக்கல், வடமதுரை அருகே உள்ள குளத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30). கூலித்தொழிலாளி. இவர், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் தாயார் வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வடமதுரை அனைத்து மகளிர் காவல் துறையினர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை தேடி வந்த நிலையில், குளத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

நத்தத்தை சேர்ந்த இளைஞர் போக்சோவில் சிறையில் அடைப்பு!

திண்டுக்கல், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை பார்த்து கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த நத்தம், உலுப்பக்குடி பகுதியை சேர்ந்த பிரசன்னா(21). என்பவரை, சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

அரசு போக்குவரத்து கழக பணி நிறைவு பெற்ற ஊழியர்கள் போராட்டம்!

madurai transport employess protest - 2026
#image_title

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றவர் நல அமைப்பு சார்பில், தொடர் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்று, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோஷமிட்டனர்.

2015 முதல் வழங்க வேண்டிய அகவிலைப் படி உயர்வினை நிலுவையுடன் வழங்க வேண்டும் , ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , ஓய்வுபெறும் நாளன்றே பணப்பலன்களை வழங்கு,
1.4.2003க்குப் பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களை பழைய பென்ஷன் திட்டத்தில் இணைத்திட வேண்டும்,
நீதிமன்ற தீர்ப்புகளை முறையாக அமல்படுத்து உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், அதன், மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில், இந்த தொடர் காத்திருக்கும் போராட்ட
நடைபெற்றது.

இதில், தேவராஜ் மாநில துணை பொதுச் செயலாளர் சிறப்புரை ஆற்றினார். இந்த தொடர் காத்திருக்கும்
போராட்டத்தில், மதுரை திண்டுக்கல் மற்றும் எஸ்.இ.டி.சி. மதுரை நிர்வாகிகள், ஆண்கள் ,பெண்கள் சுமார் 1500-க்கு மேற்பட்டோர் இந்த தொடர் காத்திருக்கும் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

வீடியோ செய்தி:

மேலக்காலில் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா!

melakkal mariamman temple purattasi vizha - 2026
#image_title

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கோவில் முன்பாக செவ்வாய் சாற்றுதளுடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை கோவிலிலிருந்து வைகை ஆற்றிற்கு சென்று பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்கினி சக்தி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இன்று இரவு கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும் நாளை காலை கோவில் மண்டபத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு மற்றும் நாளை இரவு அம்மனுக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இரவு, கிராமத்தின் சார்பாக வள்ளி திருமணம் எனும் நாடகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, வியாழன் அன்று காலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்று பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று, திருவிழா நிறைவு பெறும்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, மேலக்கால் கிராம கமிட்டியாளர்கள் முதன்மை காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

வீடியோ செய்தி:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.1 கோடிக்கு மேல்!

madurai meenakshi amman palalayam - 2026
#image_title

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம் 1கோடியே 7 லட்சத்தி 30,553 ரூபாய் வசூல் – கோவில் நிர்வாகம் தகவல்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 11 கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை எண்ணும் பணி நடைபெறும்

இன்று மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது,
இதில், கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில்,உண்டியல் வருமானமாக 1 கோடியே 7 லட்சத்தி 30,553 ரூபாய் ரொக்கப் பணமும்,574 கிராம் தங்கமும், 1043 கிராம் வெள்ளியும், 440 வெளிநாட்டு பணமும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுளளது.

கரூர் தான்தோன்றிமலை கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

karur thanthondrimalai purattasi kodiyetram - 2026
#image_title

கரூர், தான்தோன்றிமலை புரட்டாசி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கரூர், தான்தோன்றிமலையில், தென்திருப்பதி என்று அழைக்கப்படும், அருள்மிகு வேங்கட்ரமண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கே ஆண்டுதோறும் புரட்டாசித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு புரட்டாசித் திருவிழா, கடந்த  15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புரட்டாசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், பெருமாள், உபய நாச்சிமாருடன் எழுந்தருளினார்.

மக்கள் கோவிந்தா, கோவிந்தா, என்ற முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுந்தனர். திருத்தேர் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து, தேர்நிலையை அடைந்தது. அங்கே வீற்றிருந்தவாறு பக்தர்களுக்கு பெருமாள் சேவை சாதித்தார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தார்கள். புரட்டாசி மாத தேரோட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு, மலை வீதியைச் சுற்றியுள்ள திருமண மண்டபங்களில், அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருநூறுக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீடியோ செய்தி:

வீ த லீடர்ஸ் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!

karur eye camp - 2026
#image_title

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,, வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி,, வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இலவச கண் சிகிச்சை முகாமில் பயனடைந்த மொத்த பயனாளர்கள் எண்ணிக்கை 161 ஆகும். இந்த முகாமின் மூலம் கண்டறியப்பட்டு, இலவச கண் அறுவை சிகிச்சைக்காக மதுரைக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை 62. இந்த முகாமுக்காக, 17 நபர்கள் கொண்ட மருத்துவ குழு வந்தது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விருந்தினர்களாக, Dr. சாந்தராஜார்ஜ் MBBS. (சிறப்பு மருத்துவர் – மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ), தமிழ்மணி (பஞ்சாயத்து தலைவர் – நாகம்பள்ளி), செங்குட்டுவன் (தாளாளர் – வள்ளுவர் கல்லூரி ), Dr. பிரபாகர் (முதன்மை ஒருங்கிணைப்பாளர் – வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை ) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் பங்கேற்று ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவித்தார் வீ தி லீடர்ஸ் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ந. பாஸ்கர்.

இந்த இலவச கண்சிகிச்சை முகாம், செப்.24 ஞாயிற்றுக் கிழமை புத்தாம்பூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் வைத்து நடைபெற்றது.

பாஜக., அதிமுக., தனிப்பாதை! எச்சரிக்கை – திமுக.,வுக்கே!

annamalai stalin edappadi
அண்ணாமலை – ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

— முரளி சீதாராமன் –

அ.தி.மு.க NDA கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது! நல்லது! இனி களம் மாறும்! காட்சிகளும் மாறும்! நாம் விரும்பியதும், எதிர்பார்த்ததும் இதுதான்! இவை எல்லாம் நடக்க வாய்ப்பு உண்டு!

திமுக இப்போதைக்கு மிகவும் மகிழக் கூடும். ஆனால் அண்டாவில் போடப்பட்ட ஆமை, அடியில் அடுப்பு பற்றவைக்கப் படுவதை அறியாமல், அண்டா நீரில் ஆனந்தமாக நீச்சலடித்த கதைதான் திமுக நிலை! இப்போது குளிர்ச்சியாக இருக்கும் – ஆனால் தேர்தல் சூடு ஏறும்போது தான்தான் “ஆமைக்கறி” ஆவோம் என்பதை திமுக உணரும்!

முதலில் காங்கிரசுக்கு ரூட் க்ளியர் ஆகிவிட்டது! அது இனியும் திமுகவை தூக்கிச் சுமக்க விரும்பாது. தமிழகத்தில் திமுக தரும் 9 சீட்டுக்காக – பாண்டிச் சேரியை சேர்த்தால் 10 – திமுக சநாதன விரோத – ஹிந்து விரோதப் போக்குகளுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தால் மத்தியப் பிரதேசமும், ராஜஸ்தானும் நாறிப் போய்விடும் என்பதை காங்கிரஸ் தலைமை நன்கறியும்.

கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென்மாநிலங்களிலும் – வட மாநிலங்களிலும் மிக ஆழமாகவும் வலுவாகவும் ஓடும் HINDU SENTIMENTS என்ற சமூக உள் நீரோட்டத்தை (STRONG UNDER CURRENT) காங்கிரஸ் நன்றாகவே உணர்ந்துள்ளது.

ஆனானப்பட்ட ராகுலே குஜராத் போனால் -“நான் காஷ்மீர் கௌல் பிராமணன்”- என்று வேடம் போட்டாவது சொல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே திமுகவின் முரட்டுத் தனமான ஹிந்து மத (சநாதன) எதிர்ப்புக்கு முட்டுக் கொடுத்து தனக்கு மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் உள்ள கொஞ்ச நஞ்ச VOTE BASE ஐயும் இழக்க காங்கிரஸ் விரும்பாது.

மேலும் பாஜகவின் IT WING மிக வேகமாக செயல்பட்டு – பாமர மக்களுக்கும் புரியக் கூடிய எளிய ஹிந்தியில் – திமுகவின் ஹிந்துமத எதிர்ப்பு போக்கை மிகப் பரவலாக வட மாநிலங்களில் கொண்டு சென்றுள்ளதாகத் தகவல்!

மேலும் வருங்காலங்களில் திமுகவின் “ஹிந்தி தெரியாது போடா”- டி.சர்ட் வாசக முழக்கங்களையும் வீடியோ ஆதாரங்களுடன் பாஜக வட மாநிலக் களத்தில் இறக்கக் கூடும்.

இவர்களின் ஹிந்தி எதிர்ப்பு – இதர இ.ந்.தி.யா. கூட்டணித் தலைவர்களையும் – குறிப்பாக அகிலேஷ், நிதீஷ் போன்றவர்களுக்கும் திமுக மீது “ஒவ்வாமை” யை உண்டுபண்ணும்.

எனவே கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் தலையில் சுமக்கும் திமுக என்ற “பாவமூட்டை”யை இறக்கி வைக்க காங்கிரஸ் தயங்காது.

ராஜீவ் காந்தியை கொலையாளியை விடுவித்தது, முதல்வர் அவனோடு கட்டித் தழுவிப் படம் எடுத்தது போன்றவற்றிலேயே – வாயில் துணியைக் கட்டி எதிர்ப்பு தெரிவித்தவர்கள்தானே தமிழகக் காங்கிரசார்!

அதிமுகவோடு கூட்டணி என்பது காங்கிரசின் கடந்து போன பொற்காலக் கனவு! தலைவர்கள் கதர்ச் சட்டை மடிப்புக் கலையாமல் “காண்டஸா” காரில் வந்திறங்க – அதிமுக தொண்டன் சிங்கிள் டீயை குடித்துவிட்டு “கை” சின்னத்துக்கு வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்த்த காலங்கள் அவர்கள் கண் முன் ஓடும்!

MGR ஃபார்முலா என்ற ஏற்பாட்டின் படி நாடாளுமன்ற இடங்களில் 2/3 பங்கை காங்கிரஸ் எடுத்துக் கொள்ளும். சட்டமன்ற சீட்களில் 2/3 பங்கை அதிமுக எடுத்துக்கொண்டு 1/3 காங்கிரசுக்குத் தரும்!

எம்.பி. தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு என்றால் 26 சீட்களில் காங்கிரஸ் போட்டி! சட்ட மன்ற சீட்களில் 1/3 பங்கு என்றால் சுமார் 78 சீட்களில் காங்கிரஸ் போட்டி! பொற்காலங்கள் அவை!

மூப்பனார் கோஷ்டி, வாழப்பாடி கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, சிவாஜி கணேசன் நண்பர்கள், ஆர்.வெங்கட்ராமன் (ஜனாதிபதி) QUOTA … என்று பல்வேறு அணிகளுக்கும் திருப்தியாக சீட்களை அள்ளி வழங்கி அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேர்தல்கள் காங்கிரஸ் கண்ணில் ஓடும்!

இப்போது அந்த அளவுக்கு அதிமுகவிடம் டிமாண்ட் பண்ண முடியாதுதான்! ஆனாலும் திமுகவிடம் 9 சீட்டுக்கு கை ஏந்தியபடி – இவர்களின் முரட்டு ஹிந்து விரோதத்துக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டு – வட மாநிலங்களிலும் அடி வாங்க வேண்டுமா? – என்ற கேள்வி காங்கிரசில் எழும்!

எனவே முதல் அணிமாற்றம் திமுகவை காங்கிரஸ் கை கழுவுவதாக இருக்கலாம்! காங்கிரசின் பார்வையில் – எப்போது பாஜக கூட்டு இல்லையோ – அப்போதே அதிமுக மீது படிந்த “மதவாதக் கறை” நீங்கி – அது “செக்யூலர்”- புண்ய தீர்த்தம் தெளிக்கப்பட்டதாகி விடுகிறது.

இதே நிலைதான் மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுகளுக்கும்!

1977 ஐ நினைத்துப் பாருங்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் – ஸ்தாபன காங்கிரஸ் (பின்னாளில் ஜனதா) – திமுக கூட்டு!

சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது – எதிரணியில் அதிமுக – காங்கிரஸ் – CPI தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை முறிந்து போய் காங்கிரசும், CPI யும் ஓரணியாக நின்று, அதிமுகவை கழட்டிவிட்டார்கள்!

அடுத்த நாளே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி போய் அதிமுகவுடன் ஒட்டிக் கொண்டது. “எப்போது எமர்ஜென்சி கொண்டு வந்து ஜனநாயகத்தை முடக்கிய காங்கிரசை விட்டு விலகினார்களோ அப்போதே அதிமுக மீதிருந்த கறை நீங்கிவிட்டது”- என்று வியாக்யானம் கொடுத்தார்கள் மார்க்சிஸ்டு கட்சியினர்!

இப்போது அதே பாணியில் – “எப்போது பாஜக கூட்டணியை விட்டு விலகினார்களோ அப்போதே அதிமுக மீதிருந்த மதவாதக் கறை நீங்கிவிட்டது – அது செக்யூலர் நிலைக்கு வந்துவிட்டது”- என்று சொல்லி அணிமாற வாய்ப்புண்டு.

காரணம் மார்க்சிஸ்டு கட்சியின் (CPM) மூலபலம் தொழிற்சங்கம். ஏற்கனவே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அமைப்பு “ஜாக்டோ – ஜியோ” வும், போக்குவரத்துத் தொழிலாளர்களும் தங்களது எந்தக் கோரிக்கையும் நிறைவேறாமல் குமுறிக் கொண்டுள்ளனர்.

எத்தனை நாளைக்குதான் அவர்களை – “திமுகவை ஆதரிக்காவிட்டால் பாஜக உள்ளே வந்துவிடும் தோழர்!”- என்று சொல்லி எத்தனை நாள்தான் தொழிற்சங்கங்களை சமாளிப்பது?

எனவே திமுகவை கழற்றிவிட்டு – “இப்போது அதிமுகவை ஆதரித்தால்தான் பாஜகவை உள்ளே வர விடாமல் தடுக்க முடியும் தோழர்!”- என்று புது வியாக்யானம் கொடுத்துவிட்டு – அணி மாறிவிட இது தக்க தருணம்!

எனவே அதிமுக – பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியது பாஜகவுக்கு அல்ல – திமுகவுக்கே பலவீனமாக ஆவதற்கு வாய்ப்பு உண்டு. “அரசியலில் நிரந்தர நண்பர்களுமில்லை – நிரந்தர எதிரிகளுமில்லை!”- என்று திமுக ஒரு காலத்தில் பேசிய வசனத்தை அதுவே கேட்கும் நிலை (யும்) ஏற்படலாம்!

அறநிலையத் துறை ஆகம ஆலயங்களில் அர்ச்சகர் நியமனம்; உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

supreme court of india - 2026

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்
உள்ள திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி என்று அழைக்கப்படும் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அல்லது ஏற்கனவே படித்துவிட்டு இருக்கும் மாணவர்களுக்கு பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி போன்ற திருக்கோயில்களில் ஏற்கனவே பணியில் இருக்கும் மூத்த அர்ச்சகர்களின் கீழ் ஓராண்டு பணி அனுபவம்
பெறவும், மேலும் அவர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 8000 தருவதற்கும் ஆணை பிறப்பித்து இருந்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பாக தொடுக்கப்பட்ட பல வழக்குகளில் கடந்த 2022 வருடம் ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி மற்றும் நீதியரசர் மாலா அமர்வு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில் கோயில்களில் ஆகம முறைப்படியே ஆதி சைவர்/ பட்டாச்சாரியார்கள் பணி அமர்த்த பட வேண்டும் என்று கூறியது. மேலும் ஆகமத்திற்கு விரோதமாக பணி அமர்த்தபடுவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது என்றும் கூறியது.

2021 ஆம் ஆண்டு தமிழக அரசினால் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் ஆகமத்தில் கூறப்பட்ட விதிகளுக்கு முரணாக பணி அமர்த்துப்பட்டு இருந்தால் அவர்களுடைய பணி செல்லுபடியாகாது என்றும் கூறியது.

மேலும் ஆதி சைவர்/ பட்டாச்சாரியார்கள் மட்டும் கோயிலில் பணி அமர்த்தப்படுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 16 ன் படி விரோதமானது கிடையாது என்றும் கூறியிருந்தது.

அதனை தொடர்ந்து வயலூர் முருகன் கோயிலில் ஆகம விதிகளுக்கு விரோதமாக பணி அமர்த்தப்பட்ட ஆதி சைவர் அல்லாத அர்ச்சகர் பயிற்சி பெற்ற இருவரை பதவி நீக்கம் செய்ய அந்த கோயிலின் சிவாச்சாரியார்கள் நீதி மன்றத்தினை அணுகினர். அந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றமானது, ஆதி சைவர் அல்லாதவர்கள் கோவிலில் பூஜை செய்வது ஆகம விதிகளுக்கு விரோதமானது என்று தீர்ப்பு கூறி, அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்த அந்த இரு மாணவர்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் பணி செய்ய 2018 ஆம் ஆண்டு வந்த விளம்பரத்திற்காக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆனது கடந்த 2023 ஜூன் மாதம் தீர்ப்பு கொடுத்தது.

அந்த வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பினை முறையாக கருத்தில் கொள்ளாமல், ஆகமம் படித்தவர்கள் ஜாதி பாகுபாடு இன்றி பணி அமைத்தப்படலாம் என்பதாக தீர்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இது அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 16 (5) க்கு முற்றிலும் முரணானதாகும்.

ஷரத்து 16(5) ஆனது அரசின் கீழுள்ள எந்த அலுவலகத்திலும் பணி நியமனம் குறித்த விவகாரங்களில் எல்லா குடிமகன்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்
என்று கூறுகிறது.

எனினும் இந்த சரத்தின் விதிவிலக்காக ஒரு மத நிலையத்தில் ஏற்கனவே உள்ள மத விஷயமான அல்லது மதப்பிரிவின் வழிபாடு தொடர்பான அலுவல்கள், பதவிகள், குறிப்பிட்ட மதத்தினர்தாம் இருக்கவேண்டும் என்பதோ, அல்லது, குறிப்பிட்ட தனிப்பிரிவினர்தாம் இருக்க வேண்டும் என்பதோ, அரசின் கீழ் உள்ள வேலைவாய்ப்புகளில் பாகுபாடு இன்மை என்கிற கோட்பாட்டின் கீழ் வராது என்று இருக்கிறது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யபட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு மனுதாரர் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யபட்டு இருந்தது. ஆகமம் படித்தவர்கள் ஜாதி பாகுபாடு இன்றி பணி அமைத்தப்படலாம் என்ற தீர்ப்பிற்கு தடை உத்தரவு தர தாமதம் ஆனதால் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில் உச்ச நீதி மன்றமானது சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் பணி நியமனம் செய்யக்கூடாது என்று தீர்ப்பு கூறி தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின்
கீழ் உள்ள கோயிலில் உள்ள மூத்த அர்ச்சகர்களின் கீழ் ஓராண்டு பணி அனுபவம் பெற கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆணையானது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிராக இருப்பதால் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதியரசர் A.S போபண்ணா மற்றும் நீதியரசர் M.M சுந்தரேஷ் அமர்வு இன்று விசாரித்தது. ஆகம கோயிலில் தமிழக அரசு எந்த ஒரு பணி நியமனத்தையும் செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கினை ஒத்தி வைத்தனர். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வள்ளியப்பன் ஆஜரானார்கள்