Home Blog Page 294

BHEL-பெல்லில் பொறியாளர் பணிக்கான வாய்ப்புகள்!

bhel - 2026

Bharat Electronics Limited – பெல்லில் பொறியாளர் வேலை இடங்கள் 232 காலியாகவுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரம்…

Advertisement No.: 17556/HR/All-India
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 04.10.2023

பணியிடங்கள்:

  1. பணியின் பெயர்: Probationary Engineering/ E-II
    காலியிடங்கள்: 124
    கல்வித்தகுதி: Electronics and Communication ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
  2. பணியின் பெயர்: Probationary Engineering/ E-II
    காலியிடங்கள்: 63
    கல்வித்தகுதி: Mechanical ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
  3. பணியின் பெயர்: Probationary Engineering/ E-II
    காலியிடங்கள்: 18
    கல்வித்தகுதி: Computer Science ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
  4. பணியின் பெயர்: Probationary Officer (HR)/ E-II
    காலியிடங்கள்: 12
    கல்வித்தகுதி: Human Resource ஆகிய பாட பிரிவுகளில் முதுநிலை பட்டத்தை/ MBA அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
  5. பணியின் பெயர்: Probationary Accounts Officer/ E-II
    காலியிடங்கள்: 15
    கல்வித்தகுதி: CA, CMA பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

பெல்லில் பொறியாளர் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்து தேர்வில் Respective Discipline General English, General Maths, General Intelligence ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைன் முறையில் 28.10.2023 ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். பின்னர் புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.

விண்ணப்ப கட்டணம்

ரூ.1000/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST மற்றும் மாற்றுதிறனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு கட்டணம் அளித்த பின்னர் எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

நிபந்தனைகள்

  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
  • பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
  • முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இந்தியாவில்… இன்று தொடங்குகிறது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

world cup cricket 2023 - 2026

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடர் நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

10 அணிகள் உலகோப்பைக்கு தேர்வு பெற்றது எப்படி?

ஐசிசி 50 ஓவர் 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு மோதுகின்றன. உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இந்தியா, நேரடியாக பங்கேற்கிறது.

ஐ.சி.சி., உலக கோப்பை சூப்பர் லீக் தொடரில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த 13 அணிகள் இடையிலான, 83 போட்டிகள் (இருதரப்பு மோதல்) முடிவில் ‘டாப்-7′ அணிகள் உலக தொடருக்கு முன்னேறின.

இதன்படி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் என 7 அணிகள் தகுதி பெற்றன. மீதமிருந்த 5 அணிகள் உலக கோப்பை தகுதிச்சுற்றில் மோதின. முடிவில் இலங்கை, நெதர்லாந்து முன்னேற, மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை அரங்கில் முதல் இருமுறை (1975, 1979) சாம்பியன் ஆனது வெஸ்ட் இண்டீஸ். தகுதிச்சுற்றில் ஏமாற்றிய இந்த அணி, 48 ஆண்டுகளில் முதன் முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெறாமல் வெளியேறியது.

உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் முன்னிலையில் உள்ளார்.

இவர், 45 போட்டியில், 6 சதம், 15 அரைசதம் உட்பட 2278 ரன் குவித்துள்ளார்.

‘டாப்-5’ பேட்ஸ்மேன்கள்

  • சச்சின் (இந்தியா) 45 போட்டிகளில் 6 சதம் உட்பட 2278 ரன்கள்
  • பாண்டிங் (ஆஸி.,) 46 போட்டிகளில் 5 சதம் உட்பட 1743 ரன்கள்
  • சங்ககரா (இலங்கை) 37 போட்டிகளில் 5 சதம் உட்பட 1532 ரன்கள்
  • லாரா (வெ.இ.,) 34 போட்டிகளில் 2 சதம் உட்பட 1225 ரன்கள்
  • டிவிலியர்ஸ் (தெ.ஆ.,) 23 போட்டிகளில் 4 சதம் உட்பட 1207 ரன்கள்

உலக கோப்பை அரங்கில் அதிக சதமடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின், ரோகித் சர்மா முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இருவரும் தலா 6 சதம் அடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இலங்கையின் சங்ககரா தலா 5 சதத்தை பதிவு செய்துள்ளனர்.

உலக கோப்பை அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத், முன்னிலை வகிக்கிறார். இவர், 39 போட்டியில், 71 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

இவ்வரிசையில் ‘டாப்-10’ பவுலர்கள்

  • மெக்ராத் (ஆஸி.,) 39 போட்டிகளில் 71 விக்கெட்கள்
  • முரளிதரன் (இலங்கை) 40 போட்டிகளில் 68 விக்கெட்கள்
  • மலிங்கா (இலங்கை) 29 போட்டிகளில் 56 விக்கெட்கள்
  • அக்ரம் (பாக்.,) 38 போட்டிகளில் 55 விக்கெட்கள்
  • ஸ்டார்க் (ஆஸி.,) 18 போட்டிகளில் 49 விக்கெட்கள்
  • வாஸ் (இலங்கை) 31 போட்டிகளில் 49 விக்கெட்கள்
  • ஜாகிர் (இந்தியா) 23 போட்டிகளில் 44 விக்கெட்கள்
  • ஸ்ரீநாத் (இந்தியா) 34 போட்டிகளில் 44 விக்கெட்கள்
  • தாகிர் (தெ.ஆ.,) 22 போட்டிகளில் 40 விக்கெட்கள்
  • பவுல்ட் (நியூசி.,) 19 போட்டிகளில் 39 விக்கெட்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சாதனை: பிரதமர் மோடி பாராட்டு!

asian games 2023 - 2026
#image_title

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-

சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் 03.10.2023 & 04.10.2023 இரு நாட்களிலும் இந்தியா பெற்றுள்ள பதக்கங்கள்

          இன்று வரை 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலப் பதக்கங்களை இந்தியா பெர்று பதக்கப் பட்டியலில் நான் காம் இடம் பெற்றிருக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இம்முறை இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியா அதிக அளவிலான பதக்கங்கள் பெற்று சாய்தனை புரிந்துள்ளது.

தங்கப்பதக்கம்

தடகளம், பெண்கள் 5000மீ: இந்தியாவின் பருல் சவுத்ரி 15:14.75 நிமிடங்களில் தங்கப் பதக்கம் வென்றார். இது இவருடைய இரண்டாவது பதக்கம்.

தடகளம், ஈட்டி எறிதல்: அண்ணு ராணி 62.92 மீட்டர் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

வில்வித்தை, கலப்பு இரட்டையர்: இந்தியாவின் ஓஜாஸ் டியோடேல் மற்றும் ஜோதி சுரேகா வென்னம் முதல் தங்கப் பதக்கத்தை வென்றனர்,

நீரஜ் சோப்ரா, ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம். (இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் இந்திய வீரருக்குக் கிடைத்தது)

ஆடவர் 4×400 மீ தொடர் ஓட்டப் போட்டி: அனஸ் முஹம்மது யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் வரியாதோடி மற்றும் ராஜேஷ் ரமேஷ் தங்கப் பதக்கம்.

வெள்ளிப்பதக்கம்

தடகளம், பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ்: இந்தியாவின் பருல் சௌத்ரி 9:27.63 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தடகளம், பெண்களுக்கான நீளம் தாண்டுதல்: ஆன்சி சோஜன் எடப்பிள்ளி வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் 6.63 மீட்டர் நீளம் தாண்டினார்.

தடகளம், கலப்பு அணி தொடர் ஓட்டம்: 4×400 மீ இலங்கை அணி லேன் விதிமீறலுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

தடகளம், ஆடவர் 800 மீ: முகமது அப்சல் 1:48.43 நேரத்துடன் வெள்ளி வென்றார்.

தடகளம், டெகாத்லான்: தேஜஸ்வின் சங்கர் 7666 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

குத்துச்சண்டை, பெண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவு: லோவ்லினா போர்கோஹைன் வெள்ளிப் பதக்கம்.

பெண்கள் 4×400 மீட்டர் தொடர் ஓட்ட அணி: வித்யா ராம்ராஜ், ஐஸ்வர்யா மிஸ்ரா, பிராச்சி மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

அவினாஷ் சாப்ளே, ஆடவர் 5000 மீ: வெள்ளிப் பதக்கம் வென்றார், 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது இரண்டாவது பதக்கம் அவர் வென்றார்.

ஹர்மிலன் பெயின்ஸ், பெண்களுக்கான 800 மீ.: வெள்ளி வென்றார்.

கிஷோர் ஜெனா, ஆண்களுக்கான ஈட்டி எறிதல்: வெள்ளிப் பதக்கம்.

வெண்கலப் பதக்கம்

டேபிள் டென்னிஸ், பெண்கள் இரட்டையர்: சுதிர்தா முகர்ஜி மற்றும் அய்ஹிகா முகர்ஜி நாட்டின் முதல் டேபிள் டென்னிஸ் பதக்கம் (வெண்கலம்)

தடகளம், பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ்: இந்தியாவின் ப்ரித்தி லம்பா வெண்கலப் பதக்கம் (இந்தப் போட்டியில் வெள்ளி, வெண்கலம் என இரண்டு பதக்கங்கள்)

கேனோ, ஆடவர் இரட்டையர் 1000மீ: இந்தியாவின் அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங் சலாம் ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம்.

குத்துச்சண்டை, பெண்கள் 54 கிலோ: பிரீத்தி, வெண்கலப் பதக்கம் பெற்றார்.

தடகளம், பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டம்: வித்யா ராம்ராஜ் 55.68 ரன்களை கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

தடகளம், ஆடவர் டிரிபிள் ஜம்ப்: பிரவீன் சித்திரவேல் தனது சிறந்த முயற்சியாக 16.68 மீ. தாண்டி வெண்கலம் வென்றார்.

குத்துச்சண்டை, ஆடவர் +92 கிலோ: நரேந்தர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

தடகளம், ரேஸ் வாக்: கலப்பு குழு 35 கிமீ ரேஸ் வாக் போட்டியில் இந்தியாவின் ராம் பாபூ மற்றும் மஞ்சு ராணி வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

ஸ்குவாஷ், கலப்பு இரட்டையர்: அனாஹத் சிங், அபய் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

குத்துச்சண்டை, பெண்கள் 57 கிலோ: பர்வீன் ஹூடா வெண்கலப் பதக்கம்.

சுனில் குமார், கிரேக்க-ரோமன் மல்யுத்தம்: 87 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சுனில் குமார், 13 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் கிரேக்க ரோமன் பதக்கத்தை வென்றார்.

சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இந்தியா 02.10.2023 வரை பெற்றுள்ள பதக்கங்கள்

தங்கப்பதக்கம்

  1. துப்பாக்கி சுடுதல் – 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆண்கள் அணி தங்கம்.
  2. இந்திய கிரிக்கெட் மகளிர் அணி டி20 கிரிக்கெட் தங்கம்
  3. இந்தியா குதிரையேற்ற டிரஸ்ஸேஜ் அணி தங்கம்
  4. துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கம்
  5. சிஃப்ட் கவுர் சாம்ரா துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் தங்கம்
  6. இந்திய ஆண்கள்அணி துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி தங்கம்
  7. இந்திய ஆண்கள் அணி துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 50மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் அணி தங்கம்
  8. பாலக் குலியா துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தங்கம்
  9. இந்திய அணி டென்னிஸ் கலப்பு இரட்டையர் – போபண்ணா & ருதுராஜ் தங்கம்
  10. இந்திய ஸ்குவாஷ் ஆண்கள் அணி தங்கம்
  11. இந்தியா ஷூட்டிங் ஆண்கள் ட்ராப் அணி தங்கம்
  12. அவினாஷ் சாப்ளே தடகளப் போட்டியில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் தங்கம்
  13. தஜிந்தர்பால் சிங் டூர் தடகளத்தில் ஆடவர் குண்டு எறிதல் தங்கம்

வெள்ளிப்பதக்கம்

  1. துப்பாக்கி சுடுதல் 10M ஏர் ரைபிள் பெண்கள்அணி வெள்ளிப் பதக்கம்
  2. இந்தியா துடுப்பு வலித்தல் ஆடவர் அணி – லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் – வெள்ளி
  3. இந்திய ஆடவர் அணி ரோயிங் எட்டு வெள்ளி
  4. நேஹா தாக்கூர் படகோட்டம் பெண் டிங்கி – ILCA4 வெள்ளி
  5. இந்திய மகளிர் அணி துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் அணி வெள்ளி
  6. ஈஷா சிங் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் வெள்ளி
  7. ஆனந்த்ஜீத் சிங் நருகா துப்பாக்கி சுடுதல் ஆண்கள் ஸ்கீட் வெள்ளி
  8. நௌரெம் ரோஷிபினா தேவி வுஷூ மகளிர் 60 கிலோ சாண்டா வெள்ளி
  9. இந்திய மகளிர் அணி துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி வெள்ளி
  10. இந்திய டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளி
  11. ஈஷா சிங் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் வெள்ளி
  12. ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் துப்பாக்கி சுடுதல் ஆடவர் 50 மீ ரைபிள் 3 நிலைகள் வெள்ளி
  13. இந்திய அணி துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி வெள்ளி
  14. கார்த்திக் குமார் தடகள ஆடவர் 10,000மீ வெள்ளிப் பதக்கம்
  15. அதிதி அசோக் கோல்ஃப் பெண்கள் கோல்ஃப் வெள்ளி
  16. இந்தியா அணி ஷூட்டிங் மகளிர் ட்ராப் அணி வெள்ளி
  17. ஹர்மிலன் பெயின்ஸ் தடகளப் பெண்களுக்கான 1500மீ வெள்ளிப் பதக்கம்
  18. அஜய் குமார் சரோஜ் தடகள ஆடவர் 1500மீ வெள்ளிப் பதக்கம்
  19. முரளி ஸ்ரீசங்கர் தடகள ஆண்கள் நீளம் தாண்டுதல் வெள்ளி
  20. ஜோதி யர்ராஜி தடகளப் பெண்கள் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளி
  21. இந்திய பேட்மிண்டன் ஆண்கள் அணி வெள்ளி

வெண்கலப் பதக்கம்

  1. இந்திய ரோயிங் ஆண்கள் ஜோடி – வெண்கலம்
  2. ரமிதா ஜிண்டால் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் வெண்கலம்
  3. இந்திய ரோயிங் ஆண்கள் நான்கு வெண்கலம்
  4. இந்திய அணி ரோயிங் ஆடவர் நான்கு மடங்கு வெண்கலம்
  5. ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் வெண்கலம்
  6. டீம் இந்தியா துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 25 மீ ரேபிட் பைல் பிஸ்டல் அணி வெண்கலம்
  7. ஈபத் அலி படகோட்டம் ஆண்கள் விண்ட்சர்ஃபர் – RS:X வெண்கலம்
  8. ஆஷி சௌக்சே துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 50 மீ ரைபிள் 3 நிலைகள் வெண்கலம்
  9. இந்திய துப்பாக்கி சுடுதல் ஆண்கள் ஸ்கீட் அணி வெண்கலம்
  10. விஷ்ணு சரவணன் படகோட்டம் ஆடவர் டிங்கி ICLA7 வெண்கலம்
  11. அனுஷ் அகர்வாலா குதிரைச்சவாரி டிரஸ்ஸேஜ் தனிநபர் வெண்கலம்
  12. இந்திய ஸ்குவாஷ் பெண்கள் அணி வெண்கலம்
  13. கிரண் பாலியன் தடகளப் பெண்கள் ஷாட் எட்டில் வெண்கலம்
  14. குல்வீர் சிங் தடகள ஆண்கள் 10,000 மீட்டர் வெண்கலம்
  15. கினான் சென்னை துப்பாக்கி சுடுதல் ஆண்கள் பொறி வெண்கலம்
  16. நிகத் ஜரீன் குத்துச்சண்டை பெண்கள் 50 கிலோ வெண்கலம்
  17. ஜின்சன் ஜான்சன் தடகள ஆண்கள் 1500மீ வெண்கலம்
  18. நந்தினி அகசரா தடகளப் பெண்கள் ஹெப்டத்லான் வெண்கலம்
  19. சீமா புனியா தடகள பெண்கள் வட்டு எறிதல் வெண்கலம்
  20. டீம் இந்தியா ரோலர் ஸ்கேட்டிங் பெண்கள் ஸ்பீடு ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலே வெண்கலம்
  21. டீம் இந்தியா ரோலர் ஸ்கேட்டிங் ஆண்கள் ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000மீ ரிலே வெண்கலம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வெல்வதில் முன் எப்போதும் இல்லாத சாதனையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியா முன்பை விட ஜொலித்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக “எக்ஸ்” சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் 70க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளனர். ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமையான தருணம். இது விளையாட்டு வீரர்களின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு துணிவு மற்றும் விளையாட்டு மனப்பான்மைக்கு சான்றாகும்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வெல்வதில் முன் எப்போதும் இல்லாத சாதனையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியா முன்பை விட ஜொலித்தது. நாடே பெருமை கொள்ளும் தருணம் இது; வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு பதக்கமும் கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தினை எடுத்துரைக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்

சிறுபான்மை கல்வி நிறுவன இட ஒதுக்கீடு விவகாரம்: இந்து முன்னணி சொல்வது என்ன?

kadeswara subramaniam hindu munnani - 2026

சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதால் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்க மாட்டோம் என்பது ஜனநாயக ரீதியில் ஏற்புடையது இல்லை‌ என்பது மக்களின் கருத்தாகும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

சென்னை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் தமிழக அரசின் இட ஒதுக்கீடு அமல்படுத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் அரசின் கொள்கை முடிவு அமல்படுத்தவது முடியாது எனக்கூறியுள்ளது. மேலும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவீதத்தை முறைப்படியும் மேலும் 50 சதவீத இடங்களை நிர்வாக ஒதுக்கீடாக சிறுபான்மையினரைக் கொண்டே நிரப்ப உரிமை உண்டு என்றும், இது நிதி உதவி பெறும் அல்லது நிதி உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் அரசு எந்த வகையிலும் தலையிட முடியாது என்பது உறுதிபடுத்தி உள்ளது.

இதேபோன்ற வேலூர் சி‌.எம்.சி. மருத்துவ கல்லூரி நீட் தேர்வு ஏற்கமாட்டோம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வரை சென்று அரசின் கொள்கை முடிவை ஏற்க தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதால் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்க மாட்டோம் என்பது ஜனநாயக ரீதியில் ஏற்புடையது இல்லை என்பது மக்களின் கருத்தாகும்.

இத்தீர்ப்பின் அடிப்படையில் சில சந்தேகங்கள் எழுகின்றன. இந்த வழக்கினை சரியான முறையில் நீதிமன்றம் முன்பு தமிழக அரசு வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

இந்நிலை குறித்து மக்கள் மன்றத்திலும் அரசின் கவனத்திற்கும் நாம் எழுப்பும் சில கேள்விகள்…

சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அவர்களுக்காகவே இருக்கையில் அரசின் கல்வி நிறுவனங்களில் சிறுபான்மை ஒதுக்கீடு ரத்து செய்வது சரியான செயல்பாடு தானே?

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி தாராளமாக வழங்கப்படுகிறது. நிதி உதவி வேண்டாம் கட்டண வசூல் மூலம் நடத்திக்கொள்கிறோம் என்று ஏன் சொல்வதில்லை?

சிறுபான்மை நிறுவனங்களில் அரசின் தலையீட்டை தடுக்கவே சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்து என்பதை பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுகிறது?

மேலும் கிறித்துவ கல்வி நிறுவனங்களில் கிறித்துவ போதனை கட்டாயம் என அந்நிறுவனங்களின் கையேட்டில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். அப்படி இருக்க மற்ற மதத்தினரை சேர்க்க எப்படி அனுமதி அளிக்கப்படுகிறது?

மாணவர்களின் மத உரிமை சுதந்திரத்தை நசுக்கி கிறித்துவ மதத்தை திணிப்பதால், கிறித்துவ கல்வி நிறுவனங்களை பொது கல்வி ஸ்தாபனம் என்ற அங்கிகாரம் தருவது அநியாயம் தானே?

திருநெல்வேலியில் ஒரு கிறித்துவ பள்ளியில் இந்து மாணவி குடும்பத்தோடு மதம் மாற வற்புறுத்தப்பட்டதால் அந்த அப்பாவி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கு இன்னமும் நிலைமையில் உள்ளது.

மத்திய மாநில அரசுகளின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாத நிறுவனங்களுக்கு சிறுபான்மை சலுகை அல்லது உரிமை என்பது எத்தகைய ஆபத்தானது என்பதற்கு உதாரணம் சென்னையில் அமெரிக்க சர்ச்சான செவன்ஸ் டே அட்வன்சர் நடத்தும் பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றவோ, தேசிய கீதம் பாடுவதோ தடுக்கப்பட்டது என்ற சர்ச்சை சில ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது.

இதுபோன்ற நிலையில் அங்கு படிக்கும் மாணவர்கள் மனதில் தேசத்திற்கு எதிரான சித்தாந்த திணிப்பிற்கு உள்ளாகும் அபாயத்தை அரசும் நீதிமன்றமும் உயர்ந்துள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

எனவே மத்திய மாநில அரசுகளின் மக்கள் நலனுக்கான கொள்கை முடிவை சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் செயல்படுத்த முடியாது என்றால் , சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு அரசு நிதி அளிக்கும்போது தனியாக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதும் அவசியமற்றது.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் அந்தந்த மதத்தினரை‌மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசு அறிவிக்க வேண்டும்.

இந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை இந்து முன்னணி சார்பில் மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இது குறித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில் கருத்துரங்குகள் கல்லூரி மாணவர்களிடம் நடத்தி தங்கள் உரிமைகளை காப்பாற்றி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தியாகி சுப்பிரமணிய சிவா 140வது பிறந்த நாள் விழா!

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், பாரத மாதாவுக்கு என தனியாகக் கோயில் கட்டி, அதில் பாரத மாதாவையே வழிபடும் தெய்வமாக அமைக்க வேண்டும். பாரதமாதாவையே தெய்வமாக வணங்கினால், சமய வேறுபாடுகளைக் கடந்து, மக்களை ஒன்றிணைக்க முடியும். இந்த தேசம் ஒன்றுபடும். இந்தக் கோயிலில் அர்ச்சகருக்கு வேலை இல்லை. இங்கே கிடைக்கப் பெறும் பணத்தைக் கொண்டு, ஏழைகளுக்கு தொழிற்சாலைகள் அமைப்போம். இப்படிக் கனவு கண்டவர், சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா.

அவரது பெரும் கனவு நனவாகவில்லை. ஆனால், அதே பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவில்லம் என தமிழக அரசு அமைத்தது. அப்படி பாரத அன்னைக்கு கோயில் கட்ட விரும்பிய, சுப்பிரமணிய சிவாவின் , 140வது பிறந்த நாள் இன்று.

சுதந்திரப் போராட்ட வீரர், தியாகி, சுப்ரமணிய சிவாவின் 140 வது பிறந்தநாள் விழா, தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே, ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள, தியாகி, சுப்ரமணிய சிவா மணிமண்டபத்தில், தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோட்டாட்சியர் கீதா ராணி கலந்துகொண்டு, தியாகி சுப்ரமணிய சிவா நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த, சுப்பிரமணிய சிவா படத்திற்கும், நினைவுத் தூணுக்கும் மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.

இதில் தருமபுரி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நம்ம ஊரு சுற்றுலா: மயிலம் முருகன் கோயில்!

mailam murugan temple - 2026
#image_title

பகுதி 6 – மயிலம்

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-

          திருப்போரூரிலிருந்து தண்டலம் வழியாக செங்கல்பட்டு வந்தடைந்து தேசிய நெடுஞ்சாலை 32 வழியாக மாமண்டூர் பாலாற்றுப் பாலத்தை அடைய வேண்டும்.  அங்கிருந்து மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிரப்பாக்கம் வழியாகச் செல்லும்போது இடதுபுறம் 99 கிலோமீடர் காஃபி ஷாப் ஒன்று வரும். அங்கு காரை நிறுத்தி ஒரு பத்து நிமிடம் இளைப்பாறலாம். நல்ல கழிப்பறை வசதிகளுடன் கூடிய (தற்போது) இரண்டு உணவகங்கள் உள்ளன. வாழைப்பூ வடை, சிறுதானிய தோசை என விதவிதமாக பாரம்பரிய உணவுகள் இங்கே கிடைக்கும். நாங்கள் பெரும்பாலும் காஃபி, வடை மட்டுமே சாப்பிடுவோம். இந்த இடத்திற்கு வருகையில் சுமார் 1030 மணி ஆகும். இங்கிருந்து புறப்படுகையில் 1100 மணி ஆகிவிடும்.

          இங்கிருந்து  சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் மயிலம் முருகன் கோயில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 32இலிருந்து 132க்கு மாறி, கூட்டேரிப்பட்டு என்ற இடத்தில் இடதுபுறம் சுமார் 15 கிலோமீட்டர் பயணித்தால் மயிலம் குன்றை நாம் காணலாம்.  இந்தச் சிறிய குன்றின் மீது பெரிய இராஜகோபுரத்துடன் காட்சியளிக்கும் மயிலம் முருகன் கோயில், பசுமையான மரங்கள் சூழ்ந்த மயில் தோகை விரித்தது போன்ற அழகான அமைப்பைக் கொண்டது. இக்குன்றின் உச்சியில் மயிலின் கொண்டை போல திருக்கோயில் அமைந்திருக்கிறது. மயில் போன்று காட்சியளிப்பதால் இக்குன்றுக்கு மயிலம் என்கிற பெயர் பெற்றுள்ளது.

          முருகப்பெருமானால் போரில் தோற்கடிக்கப்பட்ட சூரபத்மன் மயில் வடிவான மலையாக மாறி இங்கு கடும்தவம் புரிந்தார். தவத்தில் மகிழ்ந்த சுப்ரமணியர் காட்சியளித்தபோது, தன்னையே வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டினார் சூரபத்மன். மயில் வடிவாக அவர் தவம் புரிந்த அத்தலத்திற்கும் ‘மயூராசலம்’ என்கிற பெயரை வேண்டினார். முருகப்பெருமானும் அவரது தவத்தை ஏற்றுக் கொண்டார். ’பாலசித்தர்’ என்பவரால் சூரபத்மனின் கோரிக்கைகள் பிற்காலத்தில் நிறைவேறியது.  மயூராசலம் என்கிற பெயரே பின்னாளில் மயிலமாக மருவியது.

          இது பால சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடம். பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் புறப்படும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.

          இது பொம்மபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும் பாலசித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு. தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.

          இத்திருக்கோயில் காலை 0600 மணி முதல் மதியம் 1230 மணி வரையும் பின்னர் மாலை 1600 மணி முதல் இரவு 2000 மணி வரயும், ஞாயிறு மற்றும் விழாக் காலங்களில் முழுநேரமும் திறந்திருக்கும். காரில் வருபவர்கள் மலை மீது திருக்கோயில் வாசல் வரை காரில் செல்ல முடியும். பின்னர் சுமார் 30 படிகள் ஏறி முருகப் பெருமானைத் தரிசிக்க முடியும். நாங்கள் கோயிலுக்கு வருகையில் மணி 12ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. அவசர அவசரமாக முருகப் பெருமானைத் தரிசித்துவிட்டு நாங்கள் வெளியில் வந்தோம்.

அண்ணாமலைக்கு உடல் நலக் குறைவு: பாத யாத்திரை ஒத்திவைப்பு!

kanyakumari annamalai yatra - 2026
#image_title

தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மேற்கொண்டிருக்கும் என் மண் என் மக்கள் பாத யாத்திரை வரும் அக்.16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அண்ணாமலை அக்.04 இன்று, தனது மூன்றாம் கட்ட பாத யாத்திரையைத் தொடங்குவதாக இருந்தார். ஆனால் அவரது தில்லி பயணம் மேலும் ஒரு நாள் நீடித்ததால், சென்னையில் நடைபெறுவதாக இருந்த பாஜக.,வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்.05ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்ள வேண்டியிருப்பதால், அக்.06 அன்று அண்ணாமலையின் மூன்றாம் கட்டப் பாத யாத்திரை தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

ஆனால், திடீரென அண்ணாமலைக்கு மூச்சுக் குழாய் தொற்று ஏற்பட்டு, இருமல், தொண்டை வலி, உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னையில் அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இதனால், அவர் குறைந்தது இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனால், அக்.06ம் தேதி மேற்கொள்ளப்படவிருந்த அண்ணாமலையின் பாத யாத்திரை, மேலும் 10 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு, வரும் 16ம் தேதி தொடங்கும் என்று பாஜக., அறிவித்துள்ளது.

கடந்த இரு கட்டங்களாக நடந்த அண்ணாமலையின் என் மண் என் மக்கள் – பாத யாத்திரை பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஒவ்வொரு கட்ட பாத யாத்திரை முடிந்த பின்னும், தனது யாத்திரை குறித்த தகவல்களுடன், தில்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோருடன் கலந்து ஆலோசித்து வருகிறார் அண்ணாமலை. அவரது முதல் கட்ட பாத யாத்திரையை ராமேஸ்வரத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் தொடங்கி வைத்தவர் அமித் ஷா என்பதால், அவரது பாத யாத்திரை குறித்த அன்றன்றைய தகவல்களை ஆர்வத்துடன் கேட்டு வருகிறார் அமித் ஷா.

அதிமுக., வுடன் கூட்டணி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள புதிய சூழலில் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட பாத யாத்திரை தொடங்குவதால் அதற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்ரீவிலி அருகே கோலாகலமாக நடந்த “மது” பொங்கல் திருவிழா..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பில் கோலாகலமாக நடந்த “மது” பொங்கல் திருவிழா பெரும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.மது கலய ஊர்வலத்தில் பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்றனர்.

IMG 20231004 WA0168 - 2026
#image_title

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உள்ள வடக்காச்சி அம்மன் கோவிலில் நடந்த “மது” பொங்கல் திருவிழாவில் “மது” பொங்கியதால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

வத்திராயிருப்பு பகுதியில் புகழ்பெற்ற முத்தாலம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவையொட்டி அங்குள்ள வடக்காச்சி அம்மன் கோவிலில் மது பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இதில் விரதம் இருந்த சிறுமியின் தலையில் பல்வேறு தானியங்களின் மாவுக் கலவை அடங்கிய கலயம் ஒன்று வைக்கப்படும். அதற்கு “மது” கலயம் என்று பெயர். அதனை அச்சிறுமி தலையில் சுமந்தபடி வடக்காட்சி அம்மன் கோவிலை மூன்று முறை சுற்றி வருவார்.

கலயத்தை அவர் இறக்கி வைத்த சிறிது நேரத்தில் அதில் உள்ள மாவு கலவை பொங்கி வழியும். அவ்வாறு பொங்கி வழிந்தால் நன்கு மழை பெய்து ஊர் செழிப்படையும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.

பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகளைக் கொண்ட இத் திருவிழாவானது நேற்று கோவிலில் துவங்கியது காலையில் வடக்காட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் நடந்தது கோவில் முன்பாக உள்ள மைதானத்தில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். மாலையில் மது பொங்கல் விழா நடந்தது. இதில் சிறுமி கஞ்சி கலயத்தை சுமந்தபடி கோவிலை வலம் வந்தார். பக்தர்கள் அவரை பயபக்தியுடன் கோவில் முன்பாக ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

சிறுமி கலயத்தை பலிபீடம் முன்பாக இறக்கி வைத்தார். சிறிது நேரத்திலேயே கலயத்திலிருந்த மதுக்கலவை பொங்கி வழிந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் குலவையிட்டும், கைதட்டி ஆரவாரம் செய்தும் வழிபட்டனர். மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு தீபாராதனையும் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த விழாவான முத்தாலம்மன் கோவில் தேரோட்ட விழாவிற்கான பறைசாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

நடு இரவில் தீப்பந்தங்களுடன் தப்பை மேளம் முழங்க ஊர் முழுவதும் தேரோட்டம் நடைபெறும் தேதி நேரம் உள்ளிட்ட தகவல்கள் பறை அறிவிப்பு செய்யப்பட்டது. முத்தாலம்மன் கோவில் செயல் அலுவலர் சத்திய நாராயணன், ஊர் முக்கியஸ்தர்கள், கமிட்டி நிர்வாகிகள், முத்தாலம்மன் பக்த சபை தலைவர் சுந்தர்ராஜ பெருமாள், செயலாளர் விவேகானந்தன் விழா ஏற்பாடுகளை செய்தனர்.

மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர்

IMG 20231004 WA0069 - 2026
#image_title

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பாக பயின்று பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் ராம.கதிரேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பதக்கங்கள் வென்ற பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஆளுநர் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நந்தனார் பிறந்த ஊரான ம.ஆதனூர் கிராமத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் பங்கேற்றார். பின்னர் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் புதன்கிழமை மாலை நடைபெறும் அண்ணாமலைப் பல்கலைக்கழக 85வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

IMG 20231004 WA0075 - 2026
#image_title

ஆளுநருக்கு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் செய்த மார்க்சிஸ்ட் கம்யு கட்சியினர் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

நந்தனார் குருபூஜை விழாவில் பங்கேற்க காட்டுமன்னார்கோயிலுக்கு ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மா.ஆதனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நந்தனார் என்ற திருநாளை போவார் நாயனார் பிறந்து வசித்து வந்தார். ம.ஆதனூர் கிராமத்தில் புதன்கிழமை காலை நந்தனார் குருபூஜை விழாவிற்கு தமிழ் சேவா சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.மேலும் ஆயிரம் நபர்களுக்கு பூனூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் ஆளுநர் ஆர். என், ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் வருகைக்கு முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுமன்னார்கோவில் பெரிய குளம் அருகில் பிரகாஷ் தலைமையில் கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசி -பட்டாசு ஆலையில் வெடி விபத்து 3 பேர் நிலமை?..

IMG 20231004 WA0015 - 2026
#image_title

விருதுநகர் மாவட்டம் கங்கர் சேவல்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கர் சேவல்பட்டி கிராமத்தில் சிவகாசியைச் சேர்ந்த ராஜேந்திரராஜா என்பவருக்கு சொந்தமான விக்டோரியா என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. இதில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது மாலை நேரத்தில் பணி முடியும் நேரத்தில் எதிர்பாராத விதமாக ஒரு அறையில் தரையில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.அந்த அறையில் பணி புரிந்து கொண்டிருந்த கணேசன், ராஜா, முத்தம்மாள் ஆகிய மூன்று தொழிலாளர்கள் தீ விபத்து ஏற்பட்டு பலத்த படுகாயம் அடைந்தனர் .

உடனடியாக அங்கு இருந்தவர்கள் மூன்று பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில்.
தீவிர தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர் மேலும் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் .

இதில் கணேசன் மற்றும் ராஜா இரண்டு பேரும் 100% சதவீத காயத்துடன் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து ஆலை உரிமையாளர் உள்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு.ஆலையின் போர் மேன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வெம்பக் கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கங்கர்சேவல் என்ற இராஜேந்திரராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் கணேசன், முத்தம்மாள், ராஜா ஆகிய மூன்று பேர் காயமடைந்த விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆலையின் உரிமையாளர் இராஜேந்திர ராஜா, ஆலையின் போர் மேன் சக்கையா, மேலாளர் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு செய்த ஆலங்குளம் போலீஸார் போர்மேன் சக்கையாவை கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக இருக்கும் ஆலையின் உரிமையாளர் மற்றும் மேலாளரை தேடி வருகின்றனர்.