Home Blog Page 293

சாஸ்வத தர்மத்திற்கு வெற்றி நிச்சயம்!

hinduism - 2026

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்


தேசபக்தி, தேச முன்னேற்றம், தேசப் பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, ஊழலின்மை, அனைத்து மதங்களின் மீதும் சம பார்வை, கலாச்சாரத்தைக் காப்பாற்றுவது, உண்மையான வரலாற்றோடு தேசத்தின் பண்டைய வைபவத்தை நிலை நாட்டுவது, நம்முடையதேயான அழிக்கப்பட்ட கலைகளை மீண்டும் எடுத்து வருவது, நம் தேசத்திலிருந்தும் உலகின் நான்கு மூலைகளில் இருந்தும் கோடிக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடும் பக்தியோடும் வரும் க்ஷேத்திரங்களைப் பாதுகாப்பது போன்ற அனைத்தும் மிகச் சிறந்த பணிகள்.

இவற்றைச் செய்தால் பாரத தேசத்தின் புகழ் உலகில் அனைத்து நாடுகளும் போற்றும் விதமாகப் பரவும். அவ்விதம் பரப்பும் ஆட்சியைப் பாராட்டுவது ஒரு நல்ல பண்பாடு. இந்தப் பண்பாடு பிற நாடுகளில் இருப்பது போல நம் நாட்டில் பதவி மோகத்தோடு கூடிய அரசியல்வாதிகளுக்கும் அவர்களுக்கு ஜால்ரா போடும் மேதாவி வர்க்கங்களுக்கும் இல்லாமல் போவது வருத்தத்துக்குரியது.

பதவி கிடைத்தவுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பதவியைப் பிடிப்பதற்காக எப்போது பார்த்தாலும் தம் ஆஸ்தியையும் அந்தஸ்தையும் பெருக்கிக் கொள்வதற்காக அரசியல் தலைவர்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.

அப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு, முன்னோக்குப் பார்வையோடு பாரத தேசத்தை அனைத்து விதத்திலும் ஒருமித்து முன்னேற்றுவதற்காக, தூய்மையான   வரலாற்றோடும் அர்ப்பணிப்பு சிந்தனையோடும் முயற்சி செய்யும் ஆட்சி அமைப்பு பிடிப்பதில்லை. அந்த உயர்ந்த செயல்களை தவறு என்று நேராக சுட்டிக்காட்டும் வாய்ப்பு இல்லாமல் போவதால், அவை அனைத்தையும் மதக் கண்ணோட்டத்தோடு பார்த்து இந்த நல்ல செயல்களுக்கு மதவாதம் என்றும் அது ஹிந்து மத தத்துவம் என்றும் இல்லாத வீண்பழியை முத்திரையிட்டு  மக்களை ஏமாற்றி ஆட்சியை நிர்பந்தத்திற்கு உள்ளாக்க முயற்சி செய்வதும், அதற்காக கூட்டமாகச் சேர்வதும் அனைவரும் அறிந்த விஷயமே.

எதிர்க்கட்சிகளில் அமர்ந்துள்ளவர்களோடு கூட மாநிலங்களை ஆளும் சில பிராந்திய கட்சிகளும் கூட்டு சேர்ந்து இந்த ஆட்சியை இறக்கி விட வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு நாட்டின் மதிப்பு, மரியாதைகளை குறைப்பதற்கு கூட தயாராகின்ற கொடுமையை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

விண்வெளி விஞ்ஞானத்திலும் பொருளாதாரத்திலும் தேசப் பாதுகாப்பிலும் தேசத்தை  பலப்படுத்திக் கொண்டு வளர்ச்சிப் பாதையில் வேகமாக செல்லுகின்ற பாரததேசத்தின்   முன்னேற்றத்தையும் தன்மானத்தையும் பார்த்து பொறுக்க இயலாத பகை நாடுகள், தீவிரவாதக் கூட்டங்கள், முன்னேறிய தேசங்களின் அகம்பாவங்கள் – எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து எப்படியாவது பாரதத்தின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற முயற்சியில் உள்ளன. அவர்களோடு கை சேர்த்து பாரத தேசத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்று துடிக்கிறார்கள் இந்த எதிர்க் கூட்டுத் தலைவர்கள்.

தீவிரவாத, பயங்கரவாத மதவெறிகளுக்கு பாரத தேசத்தின் இந்த வளர்ச்சி தடையாக இருப்பதால் அவர்கள் கூச்சலிடுகிறார்கள். அதையே வாய்ப்பாகக் கொண்டு அந்த மத வெறியர்களின் துணையோடு நம் தேசத்தில் மதத்தின் பெயரால் வேறுபாடுகளை வளர்த்து தம் ஒட்டு வங்கிகளை நிரப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். கட்சியின் மேல் கொண்ட வெறுப்பு சனாதன தர்மத்தின் மீதான வெறுப்பாக மாற்றப்படுகிறது. தேசத் துரோகத்தில் ஈடுபடத் துணிகிறார்கள்.

தம் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஹிந்து மதமல்லாதவர்களுக்கே முதலிடம் என்று முழங்கி, அவர்களுக்காக மட்டுமே தேசத்தின் செல்வத்தை வழங்குவோம் என்று கூவி அறிவித்து, தம் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஹிந்துக்களின் மீது செய்யும் தாக்குதலை தொடர்ந்தபடி, தாக்குதல் செய்பவர்களுக்குத் துணை நின்று, மத மாற்றங்களை அதிக அளவில் ஊக்குவித்தபடி, பிற மதத்தவரைத் தம் ஓட்டு வங்கிகளாக வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். பிளவுபட்டுக் கிடக்கும் ஹிந்து ஓட்டுகள் தமக்குத் தேவையில்லை என்றும் தாம் ஹிந்துக்களின் எதிரி என்றும் வெளிப்படையாகவே கூறிக் கொள்கிறார்கள். சுயநலத்துக்காக பல ஹிந்து மேதாவிகள் அவர்களின் அடிவருடிகளாக நடந்து கொள்கிறார்கள்.

ஹிந்துமத வெறுப்பைச் சார்ந்துள்ள இந்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஒரு தலைவர் சனாதன தர்மத்தை வியாதியோடு ஒப்பிட்டு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று எல்லை மீறிப் பேசியுள்ளார். ஒரு நாய் குரைத்தால் உடனே மேலும் சில குரல்கள் சேர்வது போல, சிலர் அவருக்கு ஒத்தாசைக் குரல் கொடுத்தனர். அதிக எண்ணிகையில் உள்ள மக்கள் தொகை மீது ஒரு மத வெறியரைப் போல பேசுவதைத் தவிர, ஒரு தலைவரைப் போல பெருந்தன்மையோடு நடந்து கொள்ள அவரால் இயலவில்லை என்பதை ஒத்து ஊதுபவர்கள் அடையாளம் காணவில்லை.

ஒரு ஜனநாயக தேசத்தில் அதிக மக்கத்தொகை உள்ள ஒரு மதத்தை ஒழிப்பேன் என்று அறிவிப்பது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். இதனைப் பொறுப்புள்ளவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாதது வருத்தத்திற்குரியது.

ஹிந்து மதத்தின் சகிப்புத்தன்மை மீண்டுமொருமுறை உலகிற்கு தெரியவந்தாலும் பாரத தேசமெங்கிலும் உள்ள தர்மவாதிகளின் பண்பட்ட எதிர்ப்புகளும் கிளம்பாமலில்லை. எங்கோ ஓர் இடத்தில் பொறுக்க முடியாமல், தலையைக் கொண்டுவந்தால் பரிசு என்று ஆவேசத்தில் கூறப்பட்டாலும் அது பிற மதத்தவர் ஒலிக்கும் தீவிரக் குரல் அல்ல என்றும், பனை ஓலை சப்தமே என்றும், உண்மையில் நிந்தனை செய்தாலே தலையை எடுக்கவேண்டும் என்ற தீய எண்ணமோ தீவிரவாதமோ ஹிந்துக்களுக்கு என்றுமே இருந்ததில்லை என்பதும் எல்லோரும் அறிந்ததே.

ஆனால் அனைத்து மத மக்களின் ஓட்டுக்களால் வென்று பதவியைப் பிடித்த ஒரு தலைவர் சில மதங்களை திருப்தி படுத்துவதற்காக அவர்களின் ஓட்டுக்காக சனாதன தர்மத்தின் மீது வெறுப்பைக் கக்குவது மன்னிக்கக் கூடியதல்ல. இதற்கு தார்மிகமாக சரியான பலன் கிடைத்தே தீரும். யோகிகள், தர்ம வீரர்கள், தபஸ்விகளின் மனவேதனை சாபமாக மாறாமல் போகாது. கூட்டணியைக் உடைக்காமல் சும்மாயிருக்காது.

எது எப்படியானாலும், இந்த விவாதத்திற்குக் காரணமான – வாய்க்கு வந்தபடி அநாகரிகமாகப் பேசியவர் – கட்சியில் நாத்திகர். சமுதாயத்தில் பிற மதத்தவர், வீட்டிற்குள் ஹிந்து. இந்த வஞ்சகரின் பேச்சால் சில ஹிந்துகளின் உதவி கிடைக்காமல் போய் விடுமோ என்று ஓரிரு பிராந்திய கட்சித் தலைவர்கள் எங்களுக்கு சனாதன தர்மத்தின் மீது கௌரவம் உள்ளது என்று முதலைக் கண்ணீர் விட்டு வருத்தம் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் இப்போது வரை, இன்றும் கூட கடினமான ஹிந்து வெறுப்போடு தம் மாநிலங்களில் ஹிந்துக்களின் மீது அடக்குமுறையில் ஈடுபடுகிறார்கள் என்ற விஷயத்தை மக்கள் சமுதாயம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஒரு புறம் இருபது வெளிநாடுகள் உலக நலனுக்காகவும் உலக முன்னேற்றத்திற்காகவும் பாரத தேசத்தில் ஒன்று கூடிய அபூர்வமான மாநாட்டைப் பாராட்டிவரும் தருணத்தில், விண்வெளி வெற்றியோடும் சாமானியனின் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்களோடும்  தேசம் முன்னேறிவரும் நேரத்தில், அனைத்து வசதிகளும் ஏழைகளுக்கு கைவசமாகும் தருவாயில் – தேவையற்றதும் இல்லாததும் பொல்லாததுமான வெறுப்புக்  கொந்தளிப்புகளைக் கிளப்பும் கூட்டணிகளின் அதிகார தாகம் என்னும் விஷப் பாம்பு படமெடுத்தாடுகிறது.

அயோத்தியைச் சேர்ந்த நூறு வயதான சாது ஸ்ரீ ராமபத்ராசாரியார் கூறியது போல், ‘இது கட்சிகளின் இடையேயான போர் அல்ல. சனாதன தமர்த்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போர்’. உண்மைதான். வெற்றி யாருக்கு?

யதோ தர்மஸ்தத: க்ருஷ்ண:, யத: க்ருஷ்ண: ஸ்ததோ ஜய:

தர்மம் எங்கே இருக்குமோ கடவுள் அங்கே இருப்பார். கடவுள் எங்கே இருப்பரோ வெற்றி அங்கே இருக்கும். இது மகாபாரதம் கூறும் சத்திய சூத்திரம். மூன்று உலகங்களிலும் மாறாத தர்ம நிர்ணயம்.


(ருஷிபீடம் மாத இதழ் தலையங்கம், அக்டோபர், 2023)


நம்ம ஊரு சுற்றுலா: பஞ்சவடி பிரமாண்ட ஆஞ்சநேயர்!

panchavati - 2026
#image_title

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பகுதி 7 – பஞ்சவடி

மயிலம் முருகன் கோயிலுக்குப் பக்கத்திலேயே திருவக்கரை வக்ரகாளியம்மன், பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆகிய கோயில்கள் இருப்பதால் இவற்றையும் நாம் தரிசிக்கலாம். அன்று சனிக்கிழமை எனவே பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயரை நாம் தரிசிக்க முடியும் என்பதால் நாங்கள் எங்கள் காரை பஞ்சவடி நோக்கி செலுத்தினோம். சுமார் 1245 மணிக்கு நாங்கள் பஞ்சவடி வந்து சேர்ந்தோம். மயிலத்திலிருந்து பஞ்சவடி செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. முதல் பாதை மாநில நெடுஞ்சாலை 132 வழி. இரண்டாவது சிறிது தூரம் மாநில நெடுஞ்சாலையில் சென்று விட்டு, மீண்டும் தேசிய நெடுஞ்சாலை 32 வழியாகச் செல்வது. இரண்டாவது வழிதான் அருமையான வழி. புதுச்சேரிக்குள் நுழைய லைசன்ஸ் போட வேண்டும். லைசன்ஸ் போட்ட பின்னர் பஞ்சவடி கோயிலுக்குச் செல்லலாம்.

          பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் இருக்கும் இடம் விழுப்புரம் மாவட்டம், பஞ்சவடி என்னும் சிற்றூர். இங்கே ஆஞ்சநேயரின் பெயர் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகும்.        ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதுபற்றிய விபரம் ரமணி அண்ணா என்பவர் பார்த்த தேவபிரசன்னத்தில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது.

          ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகம் ஏன் என்பதற்கும் காரணம் உண்டு. இராமனுக்கும், இராவணனுக்கும் போர் நடந்த போது, இராவணன் ஆயுதங்களை இழந்தான். இதனால் இராமர் அவனை

‘ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த

பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு

நாளை வா’ என நல்கினன்–நாகு இளங் கமுகின்

வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

(கம்பராமாயணம், யுத்த காண்டம்)

          என்று அவனை நாளை ஆயுதங்களுடன், படைகளுடன் போருக்கு வருமாரு சொன்னார். இராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்கு என்பதை இராவணன் உணரவில்லை. மீண்டும் இராமருடன் போர் செய்ய நினைத்த இராவணன், “மயில்ராவணன்’ என்ற மற்றொரு அசுரனின் துணையுடன் போருக்கு வந்தான். இராமரை அழிக்க மயில்ராவணன் கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான். இந்த யாகம் நடந்தால் இராம இலட்சுமணரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று விபீஷணன் இராமரிடம் தெரிவித்தான். மயில்ராவணனை அழிக்க ஆஞ்சநேயரை அனுப்பினார் இராமன். நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்ற ஆஞ்சநேயருக்கு, அந்த தெய்வங்கள் தங்களின் சக்தியை அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார். இதனால்தான் ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள்.

          பன்னிரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோவில் அமைந்துள்ளது. இராமர், சீதை, இலட்சுமணன், சத்துருக்கனன், பரதன் ஆகியோர் ஒரு சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் 36 அடி உயர ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர விமானமும், அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்ய லிஃப்ட் இருக்கிறது. இந்த மூலவருக்கு பாலாபிஷேகம் செய்ய 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கி.மீ. தூரம் ஒலிக் கேட்கும். திருக்கோயிலுக்கு ஒரு பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டவை. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இங்கே ஒரு மிதக்கும் கல்லும் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (33): ஜல மந்தன நியாய:

samskrita nyaya - 2026

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி 33

தெலுங்கில் – பி.எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

ஜல மந்தன நியாய:

ஜலம் என்றால் தண்ணீர். மந்தனம் என்றால் கடைவது.

பாலைக் காய்ச்சி தயிர் தோய்த்து வைத்தால் தயிராக உருவம் மாறுகிறது. அந்தத் தயிரில் கொஞ்சம் தண்ணீர் கலந்து மத்தால் கடைந்தால் மோராகிறது. அந்த மோரைk கடையும் poது வெண்ணெய் திரண்டு வருகிறது. வெண்ணெயைக்  காய்ச்சினால் நெய்யாக மாறுகிறது. இது அனைவருக்கும் தெரிந்தது. இதில் ஒவ்வொரு மாறுபாட்டிற்கும் வாழ்நாள் காலம் Life Span அதிகரிப்பதை  கவனித்தால் இறுதியாக வருவது நெய். அது அமிர்தம் எனப்படுகிறது. அது நீண்ட நாள் கெடாமல் இருக்கும் மருத்துவ குணம் கொண்டது.

தேவர்களும் அசுரர்களும் ஆளுக்கொரு பக்கம் நின்று தெய்வீக சர்ப்பமான வாசுகியைக் கயிறாகவும் மந்தார மலையை மத்தாகவும் கொண்டு    பாற்கடலையைக் கடைந்த கதை உலகறிந்த வரலாறு. ஸ்ரீமத் ராமாயணம் பால காண்டத்தில், ஸ்ரீமகாபாரதம் ஆதி பர்வத்தில், ஸ்ரீமத் பாகவதம் கூர்மாவதார கட்டத்தில் பாற்கடலைக் கடைவதை வர்ணித்துள்ளார்கள்.

பாற்கடலை பல காலம் கடைந்த பின் முதலில் ஹாலகால விஷம் வந்தது. ஆனாலும் அஞ்சாமல் அமிர்தத்திற்காக பணியைத் தொடர்ந்தார்கள். நடுவில் பல  அபூர்வமான பொருட்கள் வந்தன. பரிஜாதம், ஐராவதம், காமதேனு, வாருணி, கல்பவ்ருக்ஷம், அப்சரசுகள் முதலானவை வெளிவந்தன. ஆனால் அவற்றோடு திருப்தியடையாமல் அமர்தம் கிடைக்கும் வரை ஓய்வெடுக்காமல் பணிபுரிந்தார்கள். இதுவே க்ஷீர சாகர மந்தனம்.

ஒரு கவிஞர் இந்த க்ஷீரசாகர மந்தனம் கற்றுத் தரும் பாடத்தை ஒரே வார்த்தையில் கூறினார். எப்போதும் நிறுத்தாதே. நெவர் கிவ் அப் என்று கூறினார். மற்றும் ஒரு விமர்சகர் லட்சியத்தை அடைவதற்காக அனைவரும் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்றார். நடுவில் வரும் கஷ்டங்களுக்கு அஞ்ச கூடாது. லட்சியம் நிறைவேறும் வரை நிற்கக்கூடாது. உயர்ந்த பலன் அளிக்கும் வேலைகளைத் தொடங்க வேண்டும். ஆயிரம் முறை தோற்றுப் போனாலும் இன்னொரு முறை முயற்சிக்க வேண்டும் என்றார்.

ஆனால் சாதாரண தண்ணீரைக் கடைந்தால் என்ன வரும்? நீரைக் கடைவது வீண் முயற்சி என்ற பொருளில் இந்த நியாயத்தை உபயோகிப்பார்கள். வீண் செயல்களைத் தொடங்குவதும் செய்வதும் நேர விரயமே என்பதை எடுத்துக் கூறுவதற்கு ஜலமந்தன நியாயத்தை உதாரணமாகக் கூறுவார்கள்.

க்ஷீர சாகர மந்தனம் Never give up என்ற செய்தியைக் கூறுகையில் ஜல மந்தனம் Never take up என்ற செய்தியைக் கூறுகிறது. பிரயோஜனம் இல்லாத வேலையைச் செய்யக் கூடாது என்று இந்த நியாயம் எச்சரிக்கிறது. உன் முதலீட்டை சரியான இடத்தில் போட வேண்டும். நேரத்தை வீணடிக்கக்  கூடாது என்று எச்சரிக்கை தருகிறது இந்த நியாயம்.

பொழுதுபோக்கு என்ற சொல்லை அடிக்கடி உபயோகப்படுத்துகிறோம். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக நேரத்தைச் செலவிடுவார்கள். நல்ல பொழுதாக போக்குவது அதாவது சத் காலட்சேபம் என்றால் என்ன என்று ஹிதோபதேசம் செய்பவர்கள் இவ்வாறு சுபாஷிதத்தில் கூறுகிறார்கள்.

காவ்ய சாஸ்த்ர வினோதேன காலோ கச்சதி தீமதாம்|
வ்யசனேன ச மூர்காணாம் நித்ரயா காலஹேனவா ||

காவியங்களையும் சாஸ்திரங்களையும் படிப்பதிலும் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும்  ஆரோக்கியமான விளையாட்டுகளில் ஈடுபடுவதிலும் அறிவாளிகள் நேரத்தைச் செலவிடுவார்கள். முட்டாள்கள் மது அருந்துவது போன்ற தீய பழக்க வழக்கங்களிலும் நேரம் கெட்ட நேரத்தில் தூங்குவதிலும் யாருடனாவது  எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதிலும் நேரத்தைச் செலவிடுவார்கள்.

நேரத்தை வீணடிக்காமல் அறிவைப் பெறுவதையே இலட்சியமாகக் கொண்டு இலக்கிய சர்ச்சைகளில் மகிழ்ச்சி அடைபவர்கள் க்ஷீர சாகர மந்தனம் போல  அறிவாளிகள். காலத்தின் மதிப்பு தெரியாமல் வெறுமே தின்றுவிட்டு தூங்குவது, பிறரோடு கலகம் செய்வது, அடுத்தவர் மீது குற்றம் சுமத்துவது என்று நேரத்தை கடத்துபவர்கள் ஜல மந்தனம் போல நேரத்தை வீணடிப்பவர்கள்.

மூர்க்கங்களின் மனதை மகிழ்ச்சியடைய செய்வதென்பது வெறும் நீரைக் கடைந்தால் வெண்ணைய வரும் என்று ஆசைப்படுபது போன்றதே என்பார்கள்  அறிஞர்கள்.

அங்ஞ: மாராத்யன்சுகதர மாராத்யதே விசேஷக்ஞ|
ஞானலவ துர்வித்கம் ப்ரஹ்மாபி நரம் ந ரஞ்சயதி !!

பொருள் –

தெரியாதவர்களுக்குக் கூறினால் தெரிந்து கொள்வார்கள். தெரிந்து கொண்டே தெரியாதது போல் நடிக்கும் மூர்க்கர்களுக்கு எடுத்துக் கூற முயற்சிப்பது வீண் முயற்சியே தவிர எந்தப் பலனும் இருக்காது.

பர்த்ருஹரி நீதி சதகத்தில் முட்டாள்களை விமரிசித்து எழுதிய புகழ்பெற்ற ஸ்லோகம் உள்ளது. மூர்க்கனை திருப்திப்படுத்தும் முயற்சி பிரயோஜனம் அற்றது.  “பசு மாட்டிற்கு கொடூர குணத்தையோ புலிக்கு சாத்வீக குணத்தையோ புகட்ட எண்ணுவது வீண் முயற்சி”.

கவி வேமனா இதனையே மிக சமத்காரமாகக் கூறுகிறார்.

எலுக தோலு தெச்சி ஏடாதி உதிகினா ‘
நலுபு நலுபே கானி தெலுபு ராது
பொக்கு பால கடுக போவுனா மலினம்பு
விஸ்வதாபிராம வினுர வேமா |

பொருள் –

எலியின் தோலை எத்தனைதான் தேய்த்துக் கழுவினாலும் அது கருப்பாகத் தான் இருக்குமே தவிர வெளுப்பாகாது. கரியை பாலால் கழுவி வெள்ளையாக்கலாம்  என்று எண்ணும் செயலும் அப்படிப்பட்டதே என்கிறார் வேமனா.


  • நிகழ்கால அரசியலை உதாரணமாக எடுத்துக் கொண்டால், அண்டை தேசங்களோடு செய்த நட்பு முயற்சிகள் எந்தப் பலனையும் கொடுக்கவில்லை என்பதை ஜல மந்தன நியாயமாக குறிப்பிடலாம்.
  • காமதேனுவும் கற்பக மரமும் பாற்கடலைக் கடைந்தால்தான் கிடைத்தன. உண்மையான கோரிக்கைகள் கடவுளின் அருளால்தான் கிடைக்குமே தவிர  சாதாரன மனிதனை சரணடைந்தால் கிடைக்குமா?  அதுவும் ஜல மந்தனம் போன்றதே. ஒருவேளை மனிதனை வேண்டினாலும் பிறருக்கு உதவும் வள்ளல் குணம் உள்ளவரை அண்டி உதவி கேட்க வேண்டுமே தவிர கஞ்சனிடம் கையேந்துவது வீண் பிரயத்னமே. சாதகப் பறவை பொழியும் மேகத்தையே எதிர்பார்த்திருக்கும். கர்ஜிக்கும் வெற்று மேகத்திடம் எதையும் கோராது.
  • சில சேனல்களில் காட்டப்படும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள் வெறும் நேர விரயமாக உள்ளனவே தவிர எவ்விதமான அறிவியல் ஞானமும் அதன் மூலம்  கிடைப்பதில்லை என்பதை கவனித்து வருகிறோம். அதே போல் நாத்திகர்களோடும் தேச எதிர்ப்பு சக்திகளோடும் நடக்கும் விவாதங்களும் ஜல மந்தன நியாயத்திற்கு உதாரணங்களே.
  • தனிமனித ஆளுமைக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படும் செயல்களை மட்டுமே செய்ய வேண்டும் என்பது இந்த நியாயத்தின் உட்பொருள். செல்போன் பயன்பாட்டை வீண் செயல்களுக்கும் காலத்தைப் போக்குவதற்கும் பயன்படுத்துபவருக்கு இந்த ஜலமந்தன நியாயம் கண் திறப்பாக அமைகிறது.  
  • Donot invest in wrong places என்னும் எச்சரிக்கை இந்த நியாயத்தில் உள்ளது. யோக்கியமில்லாத அயோக்யரிடம் முதலீட்டைச் செலுத்துவது தவறு. நேரம், செல்வம், உழைப்பு எதுவானாலும் சரியான இடத்தில், சரியான முறையில்    செலவிட்டால் நல்ல பலன் கிடைக்கும் அதற்கு மாறாக நடந்து கொண்டு பலன் கிடைக்கவில்லை என்று வருந்தினால் என்ன பயன்? Never waste you muscle என்பது இந்த ஜல மந்தன நியாயம் அளிக்கும் உயர்ந்த கருத்து.  
  • ஸ்ரீஹர்ஷர் எழுதிய புகழ்பெற்ற ஸ்லோகத்தில் ரசனைத் திறன் இல்லாதவர் முன்னிலையில் கலைகளை நிகழ்த்துவது செவிடன் காதில் சங்கு ஊதுவது போல என்று கூறுகிறார். அதாவது வெறும் நீரைக் கடைந்தார்போல என்று பொருள்.

இதர பாப பலானி யதேச்சயா விதரதானி ஸஹே சதுரானன|
அரசிகாய கவித்வ நிவேதனம் ஸிரஸி மாலிக மாலிக மாலிக|

பொருள் – ஓ பிரம்மதேவா, என் தலையில் எத்தனை பாவங்களின் பலனை எழுதினாலும் சகித்துக் கொள்வேன். ஆனால் ரசிகரல்லாதவரிடம் கவிதை பாடும் துர்பாக்கியத்தை மட்டும் என் நெற்றியில் எழுதிவிடாதே! எழுதிவிடாதே! எழுதிவிடாதே!

இலக்கிய இனிமையை அனுபவிக்க இயலாதவர் முன் கவிதை படிப்பது சாம்பலில் ஊற்றிய பன்னீர் போல வீண். இதுவும் ஜல மந்தன நியாயத்திற்கு உதாரணமாக ஏற்கக் கூடியதே.

  • நான் மிகவும் சிரமப்பட்டு உழைத்தேன் ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. என் நண்பனுக்கு வெற்றி கிடைத்து விட்டது என்று சிலர் வருந்துவதைப் பார்க்கிறோம். அதற்குக் காரணம் சரியான நேரத்தில், சரியான முறையில் முயற்சிக்கவில்லை என்பதே.

தயிரைக் கடைந்தால் வெண்ணெய் வரும். ஆனால் நீரைக் கடைந்தால்? அதற்குத் தகுந்த பலன்தானே கிடைக்கும்!


கரூரில் மணல் குவாரியை திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் மனு!

karur sand agents - 2026
#image_title

கரூரில் மணல் குவாரியை துவக்கி தங்களுக்கு மணல் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர் மாவட்டத்தில் வாங்கல் அடுத்த மல்லம்பாளையத்தில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் கரூரில் செயல்படும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள் மூடப்பட்டன.

மண்மங்களத்தை அடுத்த செம்மடையில் லாரிகள் நிறுத்தும் இடத்தில் ஆயிரக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 30 நாட்களுக்கும் மேலாக லாரிகள் நிறுத்தப்பட்டுளளதால் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அண்டை மாவட்டங்களான திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் அரசு மணல் குவாரிகள் செயல்பட துவங்கியுள்ள நிலையில், கரூரிலும் அரசு மணல் குவாரியை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ஏற்கனவே பணம் செலுத்திக் கொண்டு காத்திருக்கும் எங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மணல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.

கரூர் ஆசாத் சாலையில் உள்ள பொதுப் பணித்துறை மற்றும் நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். அப்போது, மணல் குவாரியில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணிகள் நடைபெற்று முடிந்து விட்டதாகவும், வரும் 12ம் தேதிக்குப் பிறகு குவாரிகள் முழுமையாக செயல்படும் என்று உதவி செயற் பொறியாளர் வெங்கடேஷன் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மணல் லாரி உரிமையாளர் சங்கத்தை சார்ந்த ஜெயசந்திரன், வரும் 12ம் தேதிக்குப் பிறகு மணல் லாரிகளுக்கு மணல் வழங்குவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். தவறும்பட்சத்தில் அனைத்து மணல் லாரி உரிமையாளர்களை ஒன்றிணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

ஏழு வருடங்களுக்குப் பிறகு… மதுரை விளாச்சேரி பகுதியில் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா!

  • ஏழு வருடங்களுக்குப் பிறகு மதுரை விளாச்சேரி பகுதியில் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா
  • 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

மதுரை திருநகர் உள்ள விளாச்சேரி பகுதியில், ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் ஸ்ரீ அய்யனார் கோவில் அமைந்துள்ளது.

விளாச்சேரி பகுதியில், ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் அய்யனார் கோவில் மிகவும் விசேஷமான ஒன்று. இந்தக் கோவிலின் 34 ஆம் ஆண்டு குதிரை எடுப்பு மற்றும் புரட்டாசி பொங்கல் விழா இன்று நடைபெற்றது.

இத்திருவிழாவில் விளாச்சேரி சுற்றியுள்ள  கிராமத்தில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு, நேர்த்திக்கடன்  வேண்டி குதிரை எடுத்தனர்.

சாமி குதிரையின் முன்னர், முதியவர்கள் இளம் பெண்கள், ஆண்கள் ஆட்டம் ஆடி 15க்கும் மேற்பட்ட குதிரைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.


மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் காப்புகட்டி அக்னிசட்டி, பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரி கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், பெண்கள் ஏராளமானோர் நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று அயன்பாப்பாகுடி கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனர். விழா ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் கிராம பெரியோர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Literary Luminary: Jon Fosse

0
Literary Luminary Jon Fosse - 2026
#image_title

-Janaki Balasubramanian-

In the literary world, certain names shine brightly, illuminating the path for generations to come. One such luminary is Jon Fosse. He is a distinguished Norwegian author and playwright. He has received the prestigious 2023 Nobel Prize in Literature as a token of appreciation. Fosse’s work is a testament to the power of words. It delves deep into the human psyche. Further, weaves stories that resonate with readers across the globe.

Born on September 29, 1959, in Haugesund, Norway, Fosse’s writing career has been nothing short of remarkable. His literary repertoire includes novels, poetry, essays, and plays. Each bears the distinctive mark of his profound insight. Most of his work brings complexities of human emotions and relationships. Fosse’s narratives have the rare ability to traverse the mundane and unearth the extraordinary. He invites readers to explore the depths of their own souls.

Fosse’s deep thoughts about life and his simple way of writing have made people compare him to famous authors like Samuel Beckett and Franz Kafka. He can beautifully express the ups and downs of life. Along with the big questions we all think about, making him a truly great writer.”

One of Fosse’s notable works is “Septology”. It is a series of novels that examine the human experience from various perspectives. Interconnectedness turns into has important feature of his narratives. He paints a vivid portrait of life, love, mortality, and the relentless passage of time. His characters are often ordinary people facing extraordinary circumstances. It makes his stories deeply relatable and profoundly moving.

Fosse’s impact extends beyond the confines of literature. Many notable theatres throughout the world staged his plays. It captivates audiences with its emotional depth and raw honesty. His words come to life on stage. It creates a powerful connection between the audience and the characters. It fosters a shared understanding of the human condition.

Jon Fosse received the Literature Nobel Prize in 2023. They not only recognised his literary prowess. They considered his ability to touch the hearts and minds of people from diverse cultures and backgrounds. His work serves as a testament to the unifying power of art. It transcends boundaries and fosters a sense of shared humanity.

Let us immerse ourselves in his writings. Allow his words to inspire, provoke thought, and remind us of the profound beauty inherent in the human experience. In honoring Fosse, we celebrate the enduring legacy of literature. its ability to illuminate the world with the brilliance of imagination and insight.

பகுதி நேர ஆசிரியர்கள் கைதை கண்டித்து கரூரில் கண்டன ஆர்பாட்டம்!

karur teachers strike - 2026
#image_title

பகுதி நேர ஆசிரியர்கள் கைதை கண்டித்து கரூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் – உலக ஆசிரியர் தினத்தில் மேற்கொண்ட கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தெரிவித்தனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சில தினங்களாக சென்னை டிபிஐ அலுவலகத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டம் தொடர்பாக அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. ‘நிதிச் சுமை இருப்பதால் எதுவும் செய்ய முடியாது, கலைந்து செல்லுங்கள். எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள்’ எனக் கூறியும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். இந்த கவிதை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50 ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்ததை கண்டித்தும், உலக ஆசிரியர் தினத்தன்று கைது நடவடிக்கை மேற்கொண்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தனர்.

கோடு போட்ட நீதிமன்றம்! ‘வசூல்’ ரோடு போட்ட அறநிலையத் துறை!

1783428 palani murugan temple - 2026

பழனி முருகன் கோவிலில், பக்தர்களின் செல்போனை பாதுகாக்க அக். 1-ம் தேதி முதல் ரூ.5 கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிலர், மலைக்கோவிலில் உள்ள மிகவும் அரிதான மூலவர் சிலையை (கருவறையை) வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். இதனால் பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு வர தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்தது. இது அனைத்து கோயில்களுக்கும் பொருந்தும் என்றது.

இதைத் தொடர்ந்து பழனி மலை கோவிலுக்கு, அக் . 1-ந்தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது. மேலும், பழனி கோவில் சார்பில் அடிவாரம் பாத விநாயகர் கோவில், மின் இழுவை ரயில் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையங்களில் செல்போன்களை பாதுகாக்க ‘ரேக்’ அமைக்கும் பணி தீவிரமாக நடந்து முடிந்தது.

இதை அடுத்து கடந்த வாரம், பழனி முருகன் கோவில் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 1-10-2023 முதல் செல்போன், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரும் பக்தர்கள் தங்களது செல்போன் மற்றும் வீடியோ எடுக்கும் சாதனங்களை பழனி கோவில் அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில்களான படிப்பாதை, மின் இழுவை ரெயில் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் ஒரு செல்போனுக்கு தலா ரூ.5 கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு மலைக்கோவிலுக்கு செல்ல வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் பாதுகாப்பு மையங்களில், நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 12 ஆயிரம் செல்போன்களை பக்தர்கள் ஒப்படைத்துள்ளனர். இதன் மூலம் ஒரே நாளில், ரூ.60 ஆயிரம் புதிய வகையில் வசூல் வேட்டை நடந்துள்ளது.

இது குறித்து பழனி முருகன் கோவில் தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியபோது, “பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிவாரம் பாத விநாயகர் கோவில், மின் இழுவை ரயில் நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை கொடுத்துச் சென்றனர். இதற்கு கட்டணமாக ஒரு செல்போனுக்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது. மேலும், கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்கிறார்களா? என சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் 12,000 செல்போன்களை பாதுகாப்பு மையங்களில் பக்தர்கள் ஒப்படைத்துவிட்டு மீண்டும் வாங்கிச் சென்றனர்” என்றார்.

முன்னர் செருப்பு பாதுகாப்பு கடை ஏலம் போட்டு ஒரு வித வசூல் நடத்தப்பட்டது. இப்போது செல்போன் மூலமாக வசூல் வேட்டையில் அறநிலையத்துறை இறங்கியுள்ளது. இது அறநிலையத்துறை வசம் உள்ள அனைத்துக் கோயில்களிலும் விரிவுபடுத்தப் பட்டுள்ளதால், இந்துக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருப்பதி போன்ற பெரிய தலங்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுகப்பட்டுள்ளன. செருப்புகள் வைக்க தனி கௌண்டர், செல்போன் பாதுகாப்புக்கு தனி ஏற்பாடுகள், காத்திருக்கும் நேரத்தில் உணவு, நீர், பால் இவற்றுடன், தொடர்பு கொள்ள ஏதுவான வசதிகளும் பக்தர்களுக்கு இலவசமாகவே செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கோயில் சொத்துக்களை கபளீகரம் செய்வது, கோயில்களைக் கொள்ளை அடிப்பது, கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து வசூல் வேட்டை நடத்துவது என்ற ஒன்றையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள திராவிட நாத்திக அரசுகள் கையில் ஆலயங்கள் அகப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை தங்களுக்கு சாதகமான ஒன்றாக மாற்றி அமைத்துக் கொண்டு, இப்போது செல்போன் பாதுகாப்பு என்ற வழியிலும் கொள்ளை அடிக்கின்றது.

பழைமையான கோயில்களில் சிலைகள், மண்டபங்கள், உயிரோட்டமான விஷயங்கள் சிதைக்கப்படுவதை பக்தர்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்து பொது வெளியில் போட்டு வந்ததால், ஓரளவு பயம் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இருந்தது. இப்போது நீதிமன்றத்தின் புண்ணியத்தில் அதுவும் இல்லாததால், அறநிலையத்துறையினர் அச்சமின்றி கொள்ளை அடிக்க ஏதுவாகிவிட்டது.

செல்போன் பாதுகாப்பு மையங்களிலும் ஒரு செல்போனுக்கு தலா ரூ.5 என்று வசூலிக்கப்படுகிறது. ஒரு பாதுகாப்பு பெட்டகத்துக்கு என்று வசூலிக்கப்படுவதில்லை. ஆறு பேர் கொண்ட ஒரு குழுவாக கோயிலுக்கு வருபவர்கள் என்றால், ஆறு பேரிடமும் இருக்கும் ஆறு செல்போன்களை தனித்தனியாகப் பெற்று ரூ.30 பெற்றுக் கொள்கின்றனர். மேலும் செல்போன்களை வைத்து முறைகேடுகளில் ஈடுபடவும் வாய்ப்பு உண்டு என்று பக்தர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டுகின்றனர்.

பழனி கோயில்ல் அமல்படுத்தப் படுவதற்கு முன்னதாகவே பல்வேறு கோயில்களில் இந்தத் திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. கோயிலுக்கு வரும் இந்து பக்தர்கள் பெருமளவு பணம் செலவழிக்காமல் தங்கள் வழிபாட்டைச் செய்து கொள்ள முடியாது என்ற நிலைக்கு அறநிலையத்துறை கொண்டு வந்துவிட்டது.

கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரம் என்பதை சொல்லிச் சொல்லியே, இப்போது அறநிலையத்துறையை கையில் வைத்திருக்கும் திராவிட நாத்திகர்களால், கோயில்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரம் என ஆக்கப்பட்டுள்ளதுதான் திராவிடம் செய்து காட்டிய பெரும் சாதனை!

நாமக்கல் ஸ்ரீபால ஐயப்ப சுவாமி ஆலயத்தில் 108 வலம்புரி சங்கு அபிஷேக ஆராதனை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், செட்டி தெருவில் அமைந்திருக்கும், அருள்மிகு, ஸ்ரீ பால ஐயப்ப சுவாமி ஆலயத்தில், புரட்டாசி மாத புதன்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீ பால ஐயப்ப சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

கணபதி ஹோமத்துடன் தொடங்கி, பின்னர் ஸ்ரீபால ஐயப்ப சுவாமிக்கு, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், கரும்புச்சாறு, இளநீர் ஆகியவற்றால் திருமஞ்சனம் நடைபெற்றது. பச்சரிசி மாவு கரைசல், மஞ்சள், சந்தனம், பன்னீர் விபூதி, சொர்ணம் , 108 வலம்புரி சங்கு, ஆகியவற்றுடன், கலசம் கொண்டு சிறப்பு அபிஷேகமும், பின்னர், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலர்களால் அர்ச்சனை செய்த பின், கோபுர தீபம் உட்பட, மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பகதர்கள் பங்கேற்று, ஸ்ரீபால ஐயப்ப சுவாமியை வணங்கி அருள் பெற்றார்கள்.

BHEL-பெல்லில் பொறியாளர் பணிக்கான வாய்ப்புகள்!

bhel - 2026

Bharat Electronics Limited – பெல்லில் பொறியாளர் வேலை இடங்கள் 232 காலியாகவுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரம்…

Advertisement No.: 17556/HR/All-India
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 04.10.2023

பணியிடங்கள்:

  1. பணியின் பெயர்: Probationary Engineering/ E-II
    காலியிடங்கள்: 124
    கல்வித்தகுதி: Electronics and Communication ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
  2. பணியின் பெயர்: Probationary Engineering/ E-II
    காலியிடங்கள்: 63
    கல்வித்தகுதி: Mechanical ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
  3. பணியின் பெயர்: Probationary Engineering/ E-II
    காலியிடங்கள்: 18
    கல்வித்தகுதி: Computer Science ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
  4. பணியின் பெயர்: Probationary Officer (HR)/ E-II
    காலியிடங்கள்: 12
    கல்வித்தகுதி: Human Resource ஆகிய பாட பிரிவுகளில் முதுநிலை பட்டத்தை/ MBA அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
  5. பணியின் பெயர்: Probationary Accounts Officer/ E-II
    காலியிடங்கள்: 15
    கல்வித்தகுதி: CA, CMA பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

பெல்லில் பொறியாளர் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்து தேர்வில் Respective Discipline General English, General Maths, General Intelligence ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைன் முறையில் 28.10.2023 ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். பின்னர் புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.

விண்ணப்ப கட்டணம்

ரூ.1000/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST மற்றும் மாற்றுதிறனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு கட்டணம் அளித்த பின்னர் எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

நிபந்தனைகள்

  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
  • பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
  • முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.