இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
“நாடு முழுவதும் அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வரும் விசுவ இந்து பரிசத் அமைப்பின் 60ஆவது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகளின் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தமிழகத்தில் மட்டும் தடை ஏன்?” என்ற கேள்வியை அந்த அமைப்பினர் எழுப்பியுள்ளனர். அதன் மூலம் இது தமிழ்நாடா அல்லது தாலிபான் நாடா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பினர் தெரிவித்த போது…
VHP யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தமிழகத்தில் தடை ஏன்? பாரதம் முழுவதும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60 வது ஆண்டு துவக்க விழா மற்றும் தேசம் காப்போம் தெய்வீகம் காப்போம் என்று ஹிந்து இளைஞர்களின் பஜ்ரங்தள் யாத்திரை செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 15 வரை பாரத முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டது. பிற மாநிலங்களில் மிகச் சிறப்பாக எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் விமர்சியாக நடந்து வருகிறது ஹிந்துக்களின் ஆதரவுடன்.
தமிழகத்தில் இந்து விரோத திராவிட அரசு வேண்டுமென்றே VHP யின் 60 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டங்கள் மற்றும் இளைஞர்கள் பஜ்ரங்தள் யாத்திரையையும் நடத்த தடை விதித்துள்ளது.
கடந்த செப். 30 ம் தேதி கன்னியாகுமரியில் பாரத மாதா பூஜை உடன் விஎச்பி., பஜ்ரங்தள் இளைஞர்கள் தேசபக்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக செல்ல இருந்தனர். அவர்களை பாரதமாதா பூஜை செய்ய விடாமல் தடுத்தும் கைதும் செய்தனர். மீண்டும் அதே இடத்தில் பாரத மாதா பூஜை செய்ய வேண்டும் என்று உணவு உண்ணாமல் தர்ணா செய்தனர். இரவு விடுவிக்கப்பட்டு அதே இடத்தில் பாரதமா பூஜை நடைபெற்றது.
அதே நாளில் விஎச்பி.,யின் 60வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. அகில பாரத இணைச் செயலாளர் ஸ்தானுமாலயன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். காவல் துறை அனுமதி உடன்.
அக்.1 -தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விஎச்பி., யின் 60 வது ஆண்டு துவக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது, காவல் துறையின் அனுமதி உடன்.
அக். 3 தேதி விஎச்பி., பஜ்ரங்தள் இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு செலுத்தும் விதமாக சிவகாசி சென்றபோது அங்கே காவல் துறை நோட்டீஸ் கூட விநியோகம் செய்ய அனுமதிக்க வில்லை. கடுமையான நெருக்கடியை கொடுத்து வந்தனர்.
அக். 4 ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மாலை நடைபெற இருந்த விஎச்பி 60ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் அனுமதி இல்லை என்று அன்று காலை நோட்டீஸ் கொடுக்கின்றனர் காவல்துறையினர்.
மாநில மாவட்ட நிர்வாகிகள் அன்று மாலை உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா சிலை முன்பு இந்து விரோத அரசின் இந்த செயலை கண்டித்து மனம்முருகி வேண்டி முறையிட்டனர், அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அக். 6ம் தேதி சிவகங்கை மாவட்டம் சிங்கப்பூனேரி பகுதியில் நடைபெற இருந்த விஎச்பி 60ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி பொதுக்கூட்டம் அனுமதி மறுப்பு என்கிற உத்தரவை பிறப்பிக்கின்றனர் காவல்துறையினர்.
அக்.8ம் தேதி நாளை திருச்சியில் நடைபெற இருக்கிற விஎச்பி 60ம் ஆண்டு துவக்கநிகழ்ச்சி பொதுக்கூட்டம் அனுமதி மறுத்து இருக்கிறது காவல்துறை.
ஆக, இது தமிழ்நாடா அல்லது தாலிபான்நாடா? ஹிந்துக்களின் ஒற்றுமைக்காக உலகம் முழுவதும் ஆன்மீக தொண்டாற்றி வரும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தில் மட்டுமே தடை! தமிழகத்தின் இந்து விரோத போக்கை மக்கள் மத்தியில் தொடர்ந்து சொல்லுவோம். ஆட்சிகள் மாறும் காட்சிகளும் மாறும் – என்று தெரிவித்தனர் விஎச்பி நிர்வாகிகள்.
இந்து சமய அறநிலையத்துறையின் பிடியில் இருந்து கோவில்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
– தமிழக பாஜக.,
சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில்களின் நிதியைக் கையாளுவதில் முறைகேடு செய்வதாகவும், கோவில் சொத்துக்களை மோசடி செய்வதாகவும், கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பதாகவும் தமிழக அரசின் மீது கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார். பிரதமருக்குப் பதில் சொல்கிறேன் என்ற பெயரில், வழக்கம்போல கையில் இருந்த துண்டுச் சீட்டைப் பார்த்துப் பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள எண்ணற்ற வழக்குகளை பரிசீலனை செய்ய, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினுக்கு நேரமோ நோக்கமோ இருக்காது என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியும். எனவே, இந்து சமய அறநிலையத்துறையின் அதிகார வரம்பு மீறிய செயல்பாடுகள் பற்றியும், இந்து சமய அறநிலையத்துறையின் பிடியில் இருந்து, கோவில்களை ஏன் விடுவிக்க வேண்டும் என்பதையும் அவருக்கு விரிவாக விளக்க விரும்புகிறோம்.
1984-85 ஆம் ஆண்டில், இந்து சமய அறநிலையத்துறை, தங்கள் நிர்வாகத்தின் கீழ், 5.25 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. இந்து சமய அறநிலையத் துறையின் சமீபத்திய குறிப்பின்படி, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கோவில் நிலங்களின் அளவு, இன்று 4.78 லட்சம் ஏக்கராகக் குறைந்துள்ளது. இவற்றிலும், 3.25 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு மட்டுமே இந்து சமய அறநிலையத்துறை பட்டா உள்ளது. எனவே, கடந்த 35 ஆண்டுகளில், 2 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
திமுக அரசு கூறுவது போல, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும், மீட்கப்பட்டதாக் கூறப்படும் கோவில் நிலத்தின் அளவு. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தின் அளவில் வெறும் 10%க்கும் குறைவே. மேலும் கடந்த 2 ஆண்டுகளில், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது திமுக அரசு எடுத்த நடவடிக்கையை, தமிழக மக்களுக்கு வெளிப்படையாகக் கூற முன்வருவார்களா?
இந்து சமய அறநிலையத்துறை, அதிகார துஷ்பிரயோகம் செய்வதையும், இந்து சமய அறநிலையச் சட்டப் பிரிவு 66(1)ன் விதிகளுக்கு புறம்பாக, கோவில் நிதியைப் பயன்படுத்துவதையும் எண்ணற்ற முறை சுட்டிக் காட்டியுள்ளோம். சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில், கல்லூரிகள் கட்ட கோவில் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள 4 கோவில்களில் இருந்து 99 லட்சம் ரூபாய் நிதியை எடுத்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. மதுரையில் உள்ள 5 கோவில்களில் இருந்து, 98 லட்சம் ரூபாய் எடுத்து, இந்து சமய அறநிலையத் அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. திருச்சியில் உள்ள 10 கோவில்களில் இருந்து, 1.46 கோடி ரூபாய் நிதி, இது போன்ற பிற பயன்படுத்தப்பட்டுள்ளது.
வேலூரில், ரூ.2.64 கோடி பணம், இந்து சமய அறநிலையத்துறைக்கான அலுவலகங்கள் கட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது போக, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 117 கோவில்களில், மோசடியான நிர்வாக அதிகாரிகள் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நியமனங்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறையால் முறையான நியமனக் கடிதங்களை வழங்க முடியவில்லை. மோசடி நியமனங்கள் நடந்துள்ள இந்தக் கோவில்கள், பக்தர்களின் உண்டியல் நன்கொடை அதிகமாக உள்ள கோவில்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் நிதியில் 85 சொகுசு கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், சிறிய எடுத்துக்காட்டுகள் மட்டுமே.
2 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள எந்த அறக்கட்டளையும், வெளித் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். இருப்பினும், தமிழக இந்து சமய அறநிலையத் துறை, ஒருபோதும் வெளித் தணிக்கையின் கீழ் கொண்டுவரப்படவில்லை. 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்து சமய அறநிலையத்துறையின் தணிக்கையை, தமிழக அரசின் நிதித்துறை மேற்கொள்ளும் என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் நிதித் துறை தணிக்கை என்பது வெளித் தணிக்கைக்கு இணையானதாக இருக்கும் என்று ஊழல் திமுக அரசு நம்புவது வியப்புக்குரியது. வெளித் தணிக்கை நடத்த தமிழக அரசு ஏன் பயப்படுகிறது?
இந்து சமய அறநிலையத் துறையானது, தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில் நகைகளைக் கணக்கெடுக்க, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகைத் தணிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழகக் கோவில்களில், நகைத் தணிக்கை கடந்த முறை எப்போது நடத்தப்பட்டது என்பது குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய திமுக அரசு தயாரா? திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே, 2000 கிலோ கோவில் தங்க நகைகளை உருக்க விரும்பியதால். மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு, கோவில் தங்க நகைகளை உருக்குவதைத் தடுத்தது. தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்ட தமிழக அரசு, தரம் குறைந்த தங்கம் எனப் பிரித்தது எத்தனை கிலோ எடை தங்கம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க முடியுமா?
கோவில் சொத்துகளைப் பொறுத்தவரை. இந்து சமய அறநிலையத் துறை, ஒரு சதுர அடிக்கு 1 ரூபாய் மட்டுமே வாடகைக் கட்டணமாக வசூலிக்கிறது. வெளித் தணிக்கை மூலமாக மட்டுமே, கடந்த பல ஆண்டுகளாக ஒவ்வொரு கோவில் சொத்துக்களும் எவ்வளவு சுரண்டப்பட்டுள்ளன என்பது தெரியவரும். கடந்த 30 ஆண்டுகளாக, இந்து சமய அறநிலையத்துறையின் உள் தணிக்கைகளில் கேட்கப்பட்ட 15000க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு, தமிழக அரசு இது வரை பதிலளித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை அழுக்கையும் தங்கள் முதுகில் சுமந்து கொண்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலையும், பாரிமுனை காளிகாம்பாள் கோயிலையும் தமிழக அரசு தங்கள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர விரும்புகிறது. கோவில் செல்வத்தைக் கொள்ளையடிப்பது மட்டுமே இவர்கள் நோக்கம்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில், கோவில்களை சீரமைத்து, புனரமைக்க, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக வாக்குறுதி அளித்தது. இன்று வரை அதில் 5% கூட, தமிழக அரசு கோவில்களுக்குச் செலவிடவில்லை. கோவில் உண்டியல் பணத்தை எடுத்துச் செலவழித்த நிதியையே தங்களின் வெற்றியாக விளம்பரம் செய்து வருகிறார்கள்.
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு. காணாமல் போன கால்நடைகள், சொத்துக்கள், தங்க நகைகள் இவையே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு . இவற்றை நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மிகச் சரியாகவே சுட்டிக் காட்டியுள்ளார். கோவில்கள் நமது வழிபாட்டுக்கான இடம், சுரண்டலுக்கான இடம் அல்ல என்பதை, தமிழக முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் பிடியில் இருந்து நமது கோவில்களை மீட்கப்படுவதை உறுதி செய்வோம்!
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், தமிழக அரசின் பிடியில் கோவில்கள் சுரண்டப்படுவது குறித்துக் கூறியிருப்பது மிகச் சரியே. கோவில்கள் நமது வழிபாட்டுக்கான இடம், சுரண்டலுக்கான இடம் அல்ல. தமிழக அரசின் பிடியில் இருந்து கோவில்கள் மீட்கப்படும்வரை ஓய மாட்டோம்!
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், தமிழக அரசின் பிடியில் கோவில்கள் சுரண்டப்படுவது குறித்துக் கூறியிருப்பது மிகச் சரியே.
கோவில்கள் நமது வழிபாட்டுக்கான இடம், சுரண்டலுக்கான இடம் அல்ல. தமிழக அரசின் பிடியில் இருந்து கோவில்கள் மீட்கப்படும்வரை ஓய மாட்டோம்! pic.twitter.com/P7L8ozBD4b
பாஜக-வுடன் இருந்த தோழமை உறவை முறித்துக் கொண்டு, தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்தும் விலகுவதாக, அதிமுக அறிவித்து விட்டது. “இரண்டு கோடி தொண்டர்களின் முடிவுப்படி கூட்டணியில் இருந்து விலகினோம்” என்று உலகமே நம்பாத ஒரு காரணத்தை மழுப்பலாகச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதன் உண்மையான காரணம் என்ன?
திமுக-விலிருந்து வெளியேற்றப் பட்ட எம்.ஜி.ஆர், அந்தக் கட்சியை எதிர்ப்பதற்காகத் தொடங்கிய புதுக் கட்சி அதிமுக. அன்றிலிருந்து, திமுக-வை சட்டசபைத் தேர்தலில் தோற்கடித்து மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதுதான் அதிமுக-வின் பிரதான அரசியல். அதுபோல், அதிமுக ஆரம்பிக்கப் பட்டதிலிருந்து அந்தக் கட்சியை எதிர்த்து மாநிலத் தேர்தலில் ஜெயிக்க முனைவதுதான் திமுக-வின் தலையாய அரசியல்.
மாறி மாறி திமுக-வும் அதிமுக-வும் மாநில ஆட்சியைப் பிடித்து, தமிழகத்தின் மக்களை ஏழைகளாக, இயலாதவர்களாக வைத்திருந்து, தாங்கள் பலவிதத்தில் செழிப்பதும் அரசு கஜானாவை அம்போ என்று விடுவதும் சொல்லி மாளாது, நமக்கு முழுவதும் புலப்படாது.
திமுக-வும் அதிமுக-வும் எத்தகைய கட்சிகளைத் தோழமைக் கட்சிகளாக, கூட்டணிக் கட்சிகளாக வைத்துக் கொள்ளும்? மாநிலத்தில் ஆட்சித் தலைமை ஏற்க ஆசைப்படாமல், அந்த அளவிற்கு அவற்றுக்கென்று மக்கள் சக்தி இல்லாமல் செயல்படும் சிறிய கட்சிகள்தான் அத்தகைய உறவுக்கு லாயக்கு. அந்த மாதிரி சிறிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டால், பெரிய கட்சியான திமுக-வுக்கோ அதிமுக-வுக்கோ மாநிலத்தில் நிறைய எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும், அந்தச் சிறிய கட்சிகளும் கூட்டணி பலத்தில் சில தொகுதிகளில் ஜெயித்து எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆகலாம் என்ற பரஸ்பர நன்மைகள் உண்டு.
பாஜக-வோடு என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக இருந்தால், பாஜக-வின் ஓட்டுக்களும் சேர்ந்து அதிமுக அதிக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி. தொகுதிகளில் வெல்லலாம். குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஜெயித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க அதிமுக-வுக்கு வாய்ப்பு அதிகரிக்கும். இதுதான் நிலவரம் என்றிருந்தால், பாஜக-வுடனான தோழமை உறவை அதிமுக முறித்துக் கொள்ளாது. ஆனால் இப்போதய நிலவரம் வேறு. அதுதான் அதிமுக-வுக்கு வெளியில் சொல்ல முடியாத பிரச்சனை.
இப்போதைய நிலவரம் என்ன, முன்பிலிருந்து அது எப்படி வேறானது?
அண்ணாமலை தலைமைப் பொறுப்பில் இருக்கும் தமிழக பாஜக, மாநிலத்தில் வெறும் சிறிய கட்சியாக இருக்க விரும்பவில்லை. ஒரு பெரிய கட்சியை அண்டி நின்று அந்தப் பெரிய கட்சியின் தயவில் சில எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தொகுதிகளில் ஜெயிக்கும் வாய்ப்பையும் தாண்டி அரசியல் செய்ய விரும்புகிறது, மக்கள் பணி ஆற்ற நினைக்கிறது தமிழக பாஜக. அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதற்கான துடிப்பும் உத்வேகமும் அசாதாரண தலைமைப் பண்பும் அண்ணாமலையிடம் பளிச் என்று தென்படுகின்றன.
அண்ணாமலை தற்போது மாநிலத்தில் நடத்தும் “என் மண், என் மக்கள்” நடைப் பயணத்தில் தாமாகக் கூடும் மக்கள் கூட்டத்தையும் அவருக்காக மக்கள் ஆர்ப்பரிப்பதையும் பாருங்கள். பாஜக-வைத் தமிழகத்தில் பெரிதாக்க நினைக்கும் அண்ணாமலையின் முனைப்பையும் அதன் ஆரம்ப வெற்றியையும் அவரது நடைப் பயணக் காட்சிகள் பறை சாற்றும். இதனால் அதிமுக-விற்கு நேர்வது ஒன்றுதான். கிலி.
பாஜக வட இந்தியக் கட்சி, அது தமிழ் நாட்டில் பெரிதாக வளர முடியாது, நம் நிழலில் பணிவான ஒரு சிறிய கட்சியாக மட்டும் பாஜக இருக்கும் என்று நினைத்த அதிமுக-விற்கு, பாஜக-வின் புதிய மாநிலத் தலைமையும் அதன் வீரியமும் அது ஈர்க்கும் மக்கள் சக்தியும் பேரிடி. காலப் போக்கில் திமுக-விற்கு மாற்றாக மக்கள் பாஜக-வைத் தான் முதலில் நினைக்கலாம், அப்போது என்ன ஆகும்? அதிமுக தமிழக பாஜக-வைப் பெரிய கட்சியாகப் பார்க்க வேண்டிவரும். அது நடந்தால், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் கனவும் நாற்காலிப் பயன்களும் கலையும், அவரைச் சுற்றி இருக்கும் அடுத்த கட்டத் தலைவர்களும் பெரு நஷ்டத்தை ஏற்க வேண்டும். இதற்கெல்லாமா அதிமுக கட்சியை நடத்துகிறார்கள் எடப்பாடியும் அவரது சகாக்களும்?
வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜக-வோடு கூட்டணி வைத்தால், பாஜக-விற்கு சில தொகுதிகள் அதிகம் கொடுத்து அவற்றில் அநேக தொகுதிகளில் பாஜக-வும் ஜெயித்துவிட்டால், என்ன ஆகும் என்று அதிமுக இப்படி நினைக்கும். அந்த வெற்றியே பாஜக-வை அரசியல் களத்தில் இன்னும் பெரிதாக அடையாளம் காட்டும், தமிழகத்தில் பாஜக-வின் மக்கள் செல்வாக்கு இன்னும் சில படிகள் உயரும், பிறகு இன்னும் எளிதாக அது பெரிய கட்சியாக வளர முற்படும், பிறகு 2026-ல் வரப் போகும் தமிழக சட்டசபைத் தேர்தலின் போது வளர்ச்சி பெற்ற பாஜக, அதிமுக-விடம் சீட் கேட்குமா, அல்லது அதிமுக பாஜக-விடம் சீட் கேட்க வேண்டி இருக்குமா?
இதெல்லாம் நடக்காமல் தடுக்க, அதிமுக தலைமையால் இப்போது சிந்திக்க முடிவது இதுதான்: பாஜக-வுடனான கூட்டணி உறவை உதறி விட்டால், தனித்து விடப்பட்ட பாஜக-வால் தமிழகத்தின் லோக் சபா சீட்டுக்களை அதிக அளவில் ஜெயிக்க முடியாது. அந்த மட்டுமாவது பாஜக-வின் வளர்ச்சி தமிழகத்தில் தடைப் படட்டும்.
சரி, பாஜக-வுடன் கூட்டணி வைக்கா விட்டால், தமிழகத்தில் திமுக-வை எதிர்த்து அதிக லோக் சபா மற்றும் சட்டசபைத் தொகுதிகளில் அதிமுக ஜெயிக்க முடியுமா, மாநிலத்தில் ஒரு கூட்டணி ஆட்சியாவது அமைக்க முடியுமா? அது மிகக் கடினம் என்று எடப்பாடியே உணர்ந்திருக்கிறார். “இந்தக் கூட்டணி முறிந்ததால் திமுக-வுக்கு எதிரான ஓட்டுக்கள் சிதறுமா என்றால், அது வாக்காளர்களின் கையில்தான் உள்ளது” என்று அவரே சொல்லிவிட்டார். பாஜக-வின் அருகே இருந்து தங்கள் கட்சி தேய்வதை விட, நேராகத் திமுக-விடம் தோற்பதை அதிமுக ஏற்றுக் கொள்ளுமோ என்னவோ!
தமிழகத்தில் பாஜக வளர வளர, அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளில் யார் மற்றவரிடம் இருந்து விலகுவதாக முதலில் அறிவிப்பது என்பது இரு கட்சிகளுக்கும் ஒரு பிரச்சனையாக இருந்தது. அதிமுக-வுடன் கூட்டணியில் தொடர்ந்தால் பாஜக-வின் வளர்ச்சி தடைப்படும். மக்கள் சக்தியைப் பெரிதாக ஈர்க்கும் அண்ணாமலை தலைவராக இருக்கும்போது, மத்தியில் மோடி ஆட்சி செய்யும் போது, பாஜக அதிமுக-வுடனான உறவை முறித்துக் கொள்வதாக இப்போது அறிவிக்காவிட்டால் பின்னர் இதற்கு ஒரு தோதான தருணம் வருமா என்பது சந்தேகம். பாஜக-வே இப்படி யோசிக்கையில், அதிமுக முந்திக் கொண்டு கூட்டணி உறவைத் தூண்டித்து விட்டது. பாஜக-விற்கு இதில் பெரிய நஷ்டம் வராது, தமிழக மக்களைத் தைரியமாக எதிர்கொள்ளலாம் என்பதுதான் அந்தக் கட்சியின் எண்ணமாகவும் இருக்கும்.
திமுக-வும் காங்கிரஸும் இப்போது ஒரே கூட்டணியில் இருக்கின்றன. ஏதோ ஒன்றிரண்டு தொகுதிகளைக் கூடுதலாக அழுது அடம் பிடித்து திமுக-விடமிருந்து வாங்கிவிடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. “சரி, இந்தா. சாமர்த்தாக இரு” என்று திமுக-வும் ஒன்றிரண்டு தொகுதிகளை அதிகமாகக் காங்கிரஸுக்கு கிள்ளிக் கொடுக்கலாம். ஆனால், “ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த நாங்கள் காங்கிரஸ் கட்சியை மீண்டும் பெரிதாக வளர்ப்போம். ஆட்சியையும் பிடிப்போம்” என்று மக்களிடம் பேசும் தெம்பான, திராணியான தலைவர் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்தால், அப்போது காங்கிரஸும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப் படும்.
சரி, பாஜக-விடம் உறவைத் தூண்டித்த அதிமுக, ஏதோ ஒரு கட்டத்தில் திமுக-விடமிருந்து சற்று கவுரமான எம். எல். ஏ, எம்.பி தொகுதிகளை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் சேராதா? திமுக அதை நிச்சயம் வரவேற்காதா? இப்போதுதான் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூவரும் இல்லையே?
வளர்ந்து வரும் பாஜக-வை எதிர்த்துத் தமிழகத்தில் ஆட்சியைக் கூட்டாகத் தக்கவைக்க, தங்களுக்குள்ளான புதிய கூட்டணியை ஒரு யுக்தியாக திமுக-வும் அதிமுக-வும் பார்க்கலாம் – அது நடப்பது, தமிழகத்தில் பாஜக அடையும் வளர்ச்சியின் அளவைப் பொறுத்தது.
திமுக-வும் அதிமுக-வும் போற்றும் பெரியாரும் அண்ணாவும், அந்தக் கட்சிகள் அவர்களுக்கு இடையே கூட்டணி அமைக்கும் யுக்திக்குக் கை கொடுப்பார்கள். “வாஜ்பாயி காலத்தை விட இந்தியாவில் இப்போது சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. மதத்தால் நாட்டைப் பிளவு செய்கிறது பாஜக. இதை எதிர்ப்பதற்காகத் திமுக-வும் அதிமுக-வும் ஒரே அணியில் சேர்க்கிறோம்” என்று ஒரே போடாக இரண்டு கட்சிகளும் ஒரு கூட்டறிக்கை கொடுத்தால் போயிற்று. ஆட்சிக்காக, அதன் பலன்களுக்காக, திராவிடம் எதையும் பேசும், என்னவும் செய்யும்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 100 பதக்கங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது. 100 பதக்கங்களை வாங்கிக் குவித்து, நாட்டுக்குப் பெருமை தேடித் தந்து, வரலாற்று சாதனை படைத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், ஒவ்வொரு நாளும் இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
வில்வித்தைப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. தென்கொரிய வீராங்கனையை 149- 145 என்ற புள்ளிகளில் வீழ்த்தி ஜோதி தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா இதுவரை 3 தங்கப் பதக்கம் வென்றுள்ளார். வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி சுவாமி வெண்கலம் வென்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய வில்வித்தை வீரர்கள் ஓஜாஸ் பிரவீன் தங்கமும், அபிஷேக் வர்மா வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
மகளிர் கபடிப் போட்டியில் சீன தைபே அணியை 26-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிள் கபடி அணி தங்கம் வென்றது.
இதை அடுத்து இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.
பிரதமர் மோடி வாழ்த்து
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை. 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவிற்கான இந்த வரலாற்று மைல்கல்லுக்கு வழிவகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரமிக்க வைக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சரித்திரம் படைத்து, நம் இதயங்களை பெருமையால் நிரப்பியது. வரும் 10ம் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
A momentous achievement for India at the Asian Games!
The people of India are thrilled that we have reached a remarkable milestone of 100 medals.
I extend my heartfelt congratulations to our phenomenal athletes whose efforts have led to this historic milestone for India.… pic.twitter.com/CucQ41gYnA
திருவண்ணாமலை கிரிவலப்பாதை, கோசாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இடைக்காடர் சித்தர் குடிலில் இடைக்காடரின் 39வது அவதார பெருவிழா இன்று வெகு விமர்சையுடன் நடைபெற்றது.
18 சித்தர்களில் முக்கிய சித்தராக விளங்கும் இடைக்காடர் சித்தர், திருவண்ணாமலையில் வாழ்ந்து ஐீவ சமாதி அடைந்தார் என்பது வரலாறு. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 6ஆம் தேதி அன்று இடைக்காடரின் அவதார பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இன்று கோசாலை பகுதியில் அமைந்துள்ள 18 சித்தர் குடிலில் இன்று அதிகாலை கோபூஜையுடன் தொடங்கி, மஹா யாகம், ஸ்ரீ இடைக்காடர் சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, இடைக்காடர் சித்தரை தரிசித்து அருள் ஆசி பெற்றனர்.
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி இரண்டாவது ஆட்டம், பாகிஸ்தான் vs நெதர்லாந்து ஹைதராபாத் -06.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பாகிஸ்தான் அணி (49 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 286 ரன், ரிஸ்வான் 68, ஷகீல் 68, நவாஸ் 39, லீட் 62 ரன்னுக்கு 4 விக்கட்) நெதலாந்து அணியை (41 ஓவர்களில் 205 ரன், லீட் 62, விக்ரம்ஜித் சிங் 52, ரவுஃப் 3/43, ஹசன் அலி 2/33)
பூவா தலையா வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. முதல் பவர் ப்ளே (1 முதல் 10 ஓவர்களில் பாகிஸ்தான் 3 விக்கட்டுகளை இழந்து 43 ரன்கள் எடுத்தது. 38 ரன்னுக்கு 3 விக்கட்டுகள் இழந்த நிலையில் இருந்த பாகிஸ்தானின் ஆட்டத்தை ரிஸ்வானும் ஷகீலும் தூக்கி நிறுத்தி, 158 ரன்னுக்கு 4 விக்கட்டுகள் என்ற நிலைக்கு கொண்டு வந்தனர்.
அதிரடி ஆட்டக்காரர் பாபர் அசம் இன்று 5 ரன்னில் ஆட்டமிழந்தார். பல பாகிஸ்தான் வீரர்கள் சரியாக விளையாடாத போதும் அந்த அணி 49 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 286 ரன் என்கிற கௌரவமான ஸ்கோரை எட்டியது.
மாக்ஸ் ஓ’டவுடின் விக்கட்டுக்குப் பின்னரும் நெதர்லாந்து பிரகாசமாக தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. விக்ரம்ஜித் சிங் தனது தாக்குதல் ஆட்டம் மூலம் பவர்பிளேயை அதிகம் பயன்படுத்தினார்.
மோசமான ஷாட் தேர்வு டச்சு இன்னிங்ஸில் இன்று நாம் கண்ட காட்சி. ஆனால் மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் பாகிஸ்தானுக்கு உண்மையான பயத்தை அளித்தது. பந்து வீச்சில் சிறப்பாக் செயல் பட்ட டி லீடே, சிங்கிடம் இருந்து ஆக்கிரமிப்பாளர்-பேட்டராகப் பொறுப்பேற்றார்.
கடைசி ஆட்டக்காரர்களில் வான் பீக் சற்று சிறப்பாக ஆடினார். மற்ற நெதர்லாந்து ஆட்டக்காரர்கள் சரியாக ஆடவில்லை; பெஉம்பாலானோர் ஒற்றை இலக்கைத் தாண்டவில்லை.
பாகிஸ்தான் அணியின் சுழப் பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் 9 ஓவர் வீசி 43 ரன் கள் கொடுத்து 3 விக்கட்டுகள் வீழ்த்தினார். நெதர்லாந்து 41 ஓவர்களில் 205 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
கரூரில் சித்தர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் சீடர்கள் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், பவித்திரம் கிராமம் குமார கவுண்டன்புதூர் என்ற இடத்தில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் ஜீவசமாதி 2012ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அன்று முதல் ஜீவ சமாதியில் நித்திய பூஜைகள், சிறப்பு பூஜைகள், அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டு சித்தர் பாலசுப்பிரமணியசாமி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஜீவசமாதி அமைந்துள்ள 41 சென்ட் நிலமானது பல்வேறு நபர்களிடமிருந்து விற்று, வாங்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு நாராயணன் என்பவர் கந்தசாமி என்பவரிடம் அந்த இடத்தை விற்பனை செய்துள்ளார். இந்த நிலையில் நாராயணன் அறக்கட்டளை நிர்வாகிகளை அணுகி அந்த இடத்தை வாங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார்.
அதனடிப்படையில் அறக்கட்டளை சார்பில் பத்தாயிரம் ரூபாய் முன் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை சப்டிவிஷன் செய்து அறக்கட்டளையின் பெயரில் பதிவு செய்து கொள்வதாக கூறியுள்ளனர். மேலும், நவம்பர் 2022ல் அதற்கான விண்ணப்பத்தையும் அளித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது வரை தற்போது வரை அந்த இடமானது சப் டிவிஷன் செய்து தரப்படவில்லை.
இதற்கிடையில் நாராயணன் மானாமதுரையைச் சேர்ந்த மற்றொரு அறக்கட்டளைக்கு மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த இடத்தை கிரயம் செய்து கொடுப்பதாக தகவல் கிடைத்தது. தகவலறிந்து சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த வந்த பாலசுப்பிரமணியசுவாமி அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சீடர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட இடத்தை பதிவு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
அந்த இடத்தை நேரில் சென்று கள ஆய்வு செய்த பிறகு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர போலீசார் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று ஆதவனின் கதிர்கள் என் முகத்தில் விழும் முன்னே நான் விழித்துக் கொண்டேன். கொஞ்சம் தென்றலாய் வந்த குளிர்காற்றினையும் ரசித்துக் கொண்டே சுடச்சுட தேநீரும் பருகினேன். யோகா நித்திரையில் மன்னிக்கவும் யோகா முத்திரையில் இருந்து விடுபட்ட என் கணவர்,” இன்னிக்கு அதிசயமாய் சூரியனைப் பார்க்கப் போற, நீ!, வாயேன் வாக்கிங் போகலாம்,” என்றார்.
“எனக்கு ஒரே சீரான பாதைல எல்லாரையும் போல வாக்கிங் போறது என்பது அவ்வளவாக பிடிக்கலை. ஒரு கரடுமுரடான பாதையில, மலைப்பாதை மாதிரி, மேடு பள்ளம் இருக்கிற மாதிரி இடங்களில் தான் எனக்கு வாக்கிங் போகப்பிடிக்கும்,” என்றேன், நான். அப்போதைக்கு தப்பித்துக் கொள்ள நான் நினைத்தேன். உடனே அவர் “வா, மயில் பார்க்க போகலாம். நேத்திக்கு கொஞ்சம் மழை வேற பெஞ்சுது. சேறு, சகதியாய் இருக்கும். போலாம் வா,” என்றார்.
வசமாய் மாட்டிக்கொண்ட நான் மயில் பார்க்க மோட்டர் பைக்கில் கணவருடன் சென்றேன். சாலையில் போகும் போது நான் என் கணவரிடம் “சமீப காலமாக வாக்கிங் போகிறவங்க ஜாஸ்தியாகிட்டாங்க,” என நான் கூற ” புதுசா பார்க்கறவங்களுக்கு அப்படித்தான் தெரியும்” என என் கணவர் என்னை நக்கல் செய்ய நான் அமைதியானேன்.
மெயின் ரோடிலிருந்து பிரிந்து மயில்கள் வாசம் செய்யும் பகுதிக்குள் திரும்பினோம், நாங்கள். சிறிது தூரம் சென்றவுடன் என் கணவர் ஒரு பாழடைந்த கட்டிடத்தைக் காட்டி “அங்கு மயில் ஆடறது பாரு,” என்றார். ஆம்! அந்த வீட்டின் மாடியில் ஒரு மயில் ஆடிக்கொண்டிருந்தது. உடனே நாங்கள் வண்டியை விட்டு இறங்கி கொஞ்சம் புதர்களை தாண்டி அந்த வீட்டின் மாடியை நோக்கிச் சென்றோம்.
அங்கு மாடிப்படிகள் இருந்ததே தவிர மொட்டை மாடிக்கு செல்ல முடியாமல் இரண்டு இரும்பு கம்புகளான தடுப்புகள் இருந்தன. அதனால், மாடிப்படிகளில் இருந்தே மயிலின் ஆட்டத்தை ரசித்தோம். அங்கேயே இருந்த இரண்டு பெண் மயில்களும் எங்களை கண்டவுடன் பறந்துச் சென்றன. உடனே, ஆண் மயிலும் தன் ஆட்டத்தை நிறுத்தி விட்டது.
அதனால், அங்கிருந்து இறங்கி இன்னும் கொஞ்சம் புதரில் நடக்கத் தொடங்கினோம். என்ன ஆச்சரியம்!! இன்னொரு ஆண் மயில் தன் தோகையினை விரித்து அற்புத நடனத்தை எங்களுக்காவே அரங்கேற்றியது போல் இருந்தது. அந்த மயிலின் அருகில் பெண் மயில் கூட இல்லை.
இன்று இயற்கையும், இறைவனும் நம் பக்கமே என எண்ணிக்கொண்டு எங்கள் வாக்கிங்கை தொடர்ந்தோம். மேடு பள்ளங்களை தாண்டி, எங்கள் இருவரின் காலணிகளில் எல்லாம் சகதியான போதும் மயில்களின் அகவலினால் உற்சாகமடைந்து மயில்களின் பின்னாலேயே சென்றோம்.
ஒரு கட்டத்தில் எனக்கு காலும் வழுக்கி, நான் காலணியையும் கழற்றி கையில் வைத்துக் கொண்டு, முள்ளும் குத்தி ஒரு மேட்டினை கடக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்க வர “ஐயோ, எனக்கு தாண்ட முடியுமா! தீயணைப்பு படையினரை தான் கூப்பிட வேண்டுமா?” என நான் என் கணவரை கேட்க, அவரோ,” இப்படி ஒரு ஆளுக்கு எல்லாம் நான் அவர்களுக்கு சொல்ல மாட்டேன்,” என்றார், நக்கலாக.
தட்டு தடுமாறி ஒரு வழியாக மேடு பள்ளத்தை கடந்து வேர்த்து வியர்த்து மயில்களை ரசித்த மகிழ்ச்சியில் நாங்கள் வண்டி வைத்த இடத்தை வந்தடைந்தேன். என் அந்த நிலமையைப் பார்த்த என் கணவர், “இனிமே வாக்கிங்கிற்கு மேடு பள்ளம், சகதி ரோடுல தான் வேணும்னு கேட்பியா?,” – என நினைத்திருப்பாரோ!!
இன்றைய மயில்களை பின்தொடரும் சம்பவமானது எனக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியானது. அங்கேயே ஒரு குட்டையில் வாத்துகள் நீந்திக் கொண்டிருந்தன. தூக்கணாம் குருவிகளின் கூடுகளும் கண்ணுக்கு விருந்தாயின.
கிளிகள், கிங்ஃபிஷர் பறவை, மரங்கொத்தி, சிட்டுக்குருவிகள், புறாக்கள், வெள்ளை நாரைகள், கறுப்பு நிறத்தில் பெரிய உருவம் கொண்ட பறவைகள் என அவ்விடமே ஒரு சிறிய பறவைகளின் சரணாலயமாய் இருந்தது. என் கட்டை விரலில் குத்திய முள்ளின் வலியும் ஒரு அருமையான வலியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஷட்டில் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து வெளியேறினார்.
சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஷட்டில் ஆண்கள் இரட்டையர் அரையிறுதிக்குள் நுழைந்தனர்.
மகளிர் அணி வில்வித்தை இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை 230-229 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இந்திய வில்வித்தை வீராங்கனைகள் ஜோதி சுரேகா வென்னம், அதிதி கோபிசந்த் சுவாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் அனல் பறக்கும் நிலையில், பரபரப்பான மோதலில் இந்தியா முதலிடம் பிடித்தது. ஆடவர் வில்வித்தை அணி இறுதிப் போட்டியிலும் இந்தியா தங்கம் வென்றது.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஹரிந்தர் பால் சிங் தங்கம் வென்றனர்.
எச்.எஸ். பிரணாய் தனது ஆடவர் ஷட்டில் காலிறுதி மோதலை வென்று அரையிறுதிக்குச் சென்றார். இதனால் அவருக்கு ஒரு பதக்கம் உறுதியானது.
இந்தியா தனது மகளிர் ஹாக்கி அரையிறுதியில் சீனாவிடம் 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, இப்போது அவர்கள் வெண்கலத்திற்காக போராடுவார்கள்.
ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் சவுரவ் கோசல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 53 கிலோ எடைப் பிரிவில் மல்யுத்த வீராங்கனை ஆன்டிம் பங்கல் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தியா இதுவரை பெற்ற பதக்கம் தங்கம்: 21, வெள்ளி: 32, வெண்கலம்: 33 மொத்தம் 86.
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி முதல் ஆட்டம், இங்கிலாந்து vs நியூசிலாந்து அகமதாபாத் -05.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இங்கிலாந்து அணியை (282/9, ஜோ ரூட் 77, ஜாஸ் பட்லர் 43, பெயர்ஸ்டோ 33, மேட் ஹென்றி 3/48) நியூசிலாந்து அணி (283/1, கான்வே 152, ரச்சின் ரவீந்த்ரா 123) வெற்றி பெற்றது.
முதல் போட்டி எப்போதுமே சென்ற உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிப் போட்டியில் பங்கு பெற்ற அணிகளுக்கிடையேதான் நடைபெறும். அவ்வாறு அகமதாபாத்தில் நடந்த இந்த முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி ஊதித்தள்ளியது. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இரு அணிகளின் சார்பிலும் மொத்தம் 14 சிக்ஸர்கள் அடிக்கபட்டுள்ளன. இதில் நியூசிலாந்து அணி 8 சிக்ஸர்களும் இங்கிலாந்து 6 சிக்ஸர்களும் அடித்துள்ளன. இரு அணிகளும் சேர்ந்து 51 பவுண்டரிகள் விளாசியுள்ளன. இதில் இங்கிலாந்து 21 பவுண்டரிகளும் நியூசிலாந்து 30 பவுண்டரிகளும் விளாசியுள்ளன. கான்வே மற்றும் ரவீந்திரா சிறப்பாக விளையாடி 273 ரன்கள் குவித்து நியூசிலாந்து இமாலய வெற்றி பெற உதவினர்.
அறிமுக உலகக் கோப்பைப் போட்டியில் கான்வே 121 பந்துகளில் 19 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 152 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். 96 பந்தில் 11 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 123 ரன்கள் குவித்த ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. அதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்த உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
இறுதியில் நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்களை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி நடைபெற்று வரும் அகமதாபாத்தில் நியூசிலாந்து ஆடும்போது பனிப்பொழிவு மெல்ல மெல்ல அதிகரித்தது.
283 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணிக்குப் பின்னடைவாக, வில் யங் தான் சந்தித்த முதல் பந்திலே டக் அவுட்டாகினார். நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் உலகக்கோப்பை வரலாற்றில் மூன்றாவது முறையாக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் அயர்லாந்து மற்றும் கனடா அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதே இதுவரை சாதனையாக உள்ளது.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
இங்கிலாந்து அணி விளையாடியபோது உலகக்கோப்பை வரலாற்றில் களமிறங்கிய 11 பேட்ஸ்மேன்களும் இரண்டு இலக்க ரன்கள் சேர்த்தனர். அவ்வாறு நடப்பது இதுவே முதல் முறை.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் சேர்த்தது.