
–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —
ஷட்டில் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து வெளியேறினார்.
சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஷட்டில் ஆண்கள் இரட்டையர் அரையிறுதிக்குள் நுழைந்தனர்.
மகளிர் அணி வில்வித்தை இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை 230-229 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இந்திய வில்வித்தை வீராங்கனைகள் ஜோதி சுரேகா வென்னம், அதிதி கோபிசந்த் சுவாமி மற்றும் பர்னீத் கவுர் ஆகியோர் அனல் பறக்கும் நிலையில், பரபரப்பான மோதலில் இந்தியா முதலிடம் பிடித்தது. ஆடவர் வில்வித்தை அணி இறுதிப் போட்டியிலும் இந்தியா தங்கம் வென்றது.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஹரிந்தர் பால் சிங் தங்கம் வென்றனர்.
எச்.எஸ். பிரணாய் தனது ஆடவர் ஷட்டில் காலிறுதி மோதலை வென்று அரையிறுதிக்குச் சென்றார். இதனால் அவருக்கு ஒரு பதக்கம் உறுதியானது.
இந்தியா தனது மகளிர் ஹாக்கி அரையிறுதியில் சீனாவிடம் 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, இப்போது அவர்கள் வெண்கலத்திற்காக போராடுவார்கள்.
ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் சவுரவ் கோசல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 53 கிலோ எடைப் பிரிவில் மல்யுத்த வீராங்கனை ஆன்டிம் பங்கல் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தியா இதுவரை பெற்ற பதக்கம் தங்கம்: 21, வெள்ளி: 32, வெண்கலம்: 33 மொத்தம் 86.