இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கரூரில், விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பூட்டி சீல் வைத்ததால் பரபரப்பு – 400 சிலைகளுடன் கூடிய 3 சிலை கூடத்திற்கு சீல் வைப்பு.
வரும் 18 ஆம் தேதி திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. வீடு மற்றும் பொது இடங்கள், கோவில்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இதற்காக, கரூரில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சிலை தயாரிப்பு கூடத்தில் சுமார் 400 விநாயகர் சிலைகள் தயார் நிலையில் இருந்தது.
இன்று திடீரென்று சோதனை மேற்கொண்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 400 சிலைகளுடன் இருந்த கூடத்திற்கு சீல் வைத்தனர்.
சிலை தயாரிப்பு விதிகளை மீறி பிளாஸ்ட் ஆஃப் ஃபாரிஸ் என்ற கெமிக்கல் கலவை கலந்து சிலை தயாரிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் சிலை தயாரிப்பு கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததாக கூறப்படுகிறது.
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் மூன்றே நாட்கள் உள்ள நிலையில் விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைக்கும் தகவல் அறிந்த சிவசேனா கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் அப்பகுதியில் திரண்டு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவின் நெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ.70, அரை லிட்டருக்கு ரூ. 50 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வந்தது.
ஆவின் நிர்வாகம் பால், நெய், வெண்ணெய் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் நெய் மற்றும் வெண்ணெய் விலையை உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, 15 மில்லி நெய் பாக்கெட் ரூ. 14-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு ரூபாய் உயர்த்தி ரூ. 15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 மில்லி பாக்கெட் ரூ.70-ல் இருந்து ரூ.80-ஆகவும், 500 மில்லி லிட்டர் பாட்டில் ரூ.315-ல் இருந்து ரூ.365-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630-ல் இருந்து ரூ.700-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெண்ணெய் விலை அரை கிலோவுக்கு ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அரை கிலோ வெண்ணெய் விலை ரூ.275-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை, இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில்….
மக்கள் விரோத திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடுமையான விலையுயர்வை மக்கள் தலையில் சுமத்துவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் பொருள்கள் விலையை, மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது
ஆவின் நெய் விலை லிட்டருக்கு ₹70 முதல் ₹100 வரை அதிகமாகவும், வெண்ணெய் விலை கிலோவுக்கு ₹30 முதல் ₹50 வரையிலும் உயர்த்தி, சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு இன்று (14.09.2023) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பொருள்களின் இந்த விலையுயர்வு, தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி, பால் கொள்முதல் விலையை ₹3 மட்டும் உயர்த்திவிட்டு, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் பால் பொருள்கள் விலையை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது திமுக அரசு. பால் உற்பத்தியாளர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காமல், ஆவின் நிறுவன பால் பொருள்கள் விற்பனை விலையை மட்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருப்பது, தனியார் பால் நிறுவனங்களை வளர்க்க, ஆவின் நிறுவனத்தையே அழித்து விட வேண்டும் என்று திமுக முடிவு செய்துள்ளதாகத்தான் தெரிகிறது
இன்னும் சில நாட்களில், தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள், வரவிருக்கின்றன. பால் பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஆவின் பால் பொருள்கள் விலையை உயர்த்தியிருப்பது, தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் அமையும்.
உடனடியாக, பொதுமக்களைப் பாதிக்கும் இந்த விலையுயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், ஆவின் பால் நிறுவனத்தை முடக்கும் முயற்சிகளை, மக்கள் விரோத திமுக அரசு கைவிட வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.
உழவன், அந்தியோதயா, பாமணி உள்பட 11 விரைவு ரயில்களில் செப்.20 முதல் தற்காலிகமாக கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செப்.20 ஆம் தேதி முதல் எழும்பூா் – தஞ்சாவூா் உழவன் விரைவு ரயில் (எண்: 16856/16866) கடலூா் துறைமுகத்தில் இரு மாா்க்கத்திலும் நின்று செல்லும்,
தாம்பரம் – நாகா்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (எண்: 20291/20692) சாத்தூரில் இரு மாா்க்கத்திலும் நின்று செல்லும்.
ராமேஸ்வரம் – அயோத்தி கண்டோன்மெண்ட் ஷ்ரத்தா சேது வாராந்திர அதிவிரைவு ரயில் (எண்: 22613/ 22614) ராமநாதபுரம் மற்றும் காரைக்குடியில் நின்று செல்லும்.
திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி விரைவு ரயில் ஏற்றமானூரில் நின்று செல்லும்.
திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் (16849/ 16850) கீரனூரில் நின்று செல்லும்.
அதே போல், திருப்பதி – ராமேஸ்வரம் வாரம் மூன்று முறை இயங்கும் விரைவு ரயில் (எண்: 16779/16780) செப்.24 – முதல் ஆரணி சாலையில் நின்று செல்லும்.
திருப்பதி – மன்னாா்குடி பாமணி விரைவு ரயில் செப்.25 – முதல் போளூா் மற்றும் திருக்கோவிலூரில் நின்று செல்லும்.
அஜ்மீா் – ராமேசுஸ்வரம் ஹம்ஷஃபா் வாராந்திர அதிவிரைவு ரயில் (எண்: 20973/20974) செப்.23 – முதல் புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் நின்று செல்லும்.
புருலியா – விழுப்புரம் வாரம் இருமுறை இயங்கும் அதிவிரைவு ரயில் (எண்: 22605/ 22606) செப்.25 – முதல் திருக்கோவிலூரில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ள ஓப்போ நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வரிசையில் 1டிபி ஸ்டோரேஜ் அளவு கொண்ட புதிய ஓப்போ ஏ38 ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்யவுள்ளது. அதுவும் பட்ஜெட் விலையில்!
ஓப்போ ஏ38 ஸ்மார்ட்போனில், 90Hz ரெப்ரேஷ் ரேட் கொண்ட 6.56இன்ச் கொண்ட எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட மீடியா ஹீலியோ ஜி80 சிப்செட்டுன் வருகிறது. இதோடு மாலி ஜி52 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு மற்றும் கலர்ஓஎஸ் 13.1 கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 50எம்பி மெயின் கேமரா, 2எம்பி போர்ட்ராய்ட் கேமரா உள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் ஏஐ போர்ட்ராய்ட் ரீடச்சிங் அம்சங்களும் உள்ளது. செல்பிக்காக 5எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. IPX4 தர ப்ளாஸ் ரெசிஸ்டன்ட் (Splash Resistant) வருகிறது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் டூயல் 4ஜி சிம், ப்ளூடூத் 5.3, வை-பை 802 , ஜிபிஎஸ் மற்றும் என்ஃஎப்சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள், டைப் -சி சார்ஜிங் போர்ட் வருகிறது. விலையை பொறுத்தவரையில், ரூ.11,699க்கு விற்பனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
83 வயது முதியவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் அவர்களை நள்ளிரவில் கைது செய்ததை கண்டிக்கிறோம் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தமிழக அரசின் எண்ணப்படி தொடர்ந்து தமிழக காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை நீதிமன்றமோ, ஊடகமோ கண்டுகொள்ளவில்லை. இது ஜனநாயக படுகொலைக்கு சமம்.
திரு. RBVS மணியன் அவர்கள் தேசியவாதி. ஆன்மீகச் சொற்பொழிவாளர். இன்று குமரியில் நாம் காண்கின்ற சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டப பணிக்காக தான் பார்த்துவந்த அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். விவேகானந்தர் நினைவு மண்டபம் உலகப் புகழ் பெற்றதாக விளங்குவதற்கும், குமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம் இன்று பிரம்மாண்டமான ஆலமரமாய் விளங்குவதற்கும் அந்தக் காலத்தில் திரு. ஏக்நாத் ரானடே அவரகளுடன் தோளோடு தோள் நின்று அடிப்படை அஸ்திவாரமாக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. தன் வாழ்நாள் முழுவதும் சனாதன தர்மத்தை காக்க வாழ்ந்தவர்.
இந்நிலையில் திரு. ஆர்.பி.வி.எஸ் மணியன் அவர்கள் பேசியதை ஒட்டியும், வெட்டியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்பி பதட்டத்தை சிலர் திட்டமிட்டு ஏற்படுத்துகின்றனர். இந்தப் போக்கை கடந்த சில வருடங்களாகவே பார்க்கிறோம். எது உண்மை எது பொய் என்பதைக்கூட யாராலும் தெரிந்து கொள்ள முடியாதவாறு அவை பரப்பப் படுகின்றன.
அவர் பேசிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொண்டாலும் அவரது கைது நடவடிக்கை தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்துக்களின் நம்பிக்கைளை கொச்சைபடுத்திய பல யுடீயூப் சேனல்கள் , சனாதனத்தை இழிவு படுத்தி பேசிய அமைச்சர்கள், இந்துமதததை இழிவு படுத்தியவர்கள், மாண்புமிகு பிரதமர், மேதகு ஆளுநர் ஆகியோரைத் தாக்கிப் பேசியவர்கள் என பலர் மீது பல இடங்களில் புகார் கொடுத்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் தமிழக காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் குற்றத்தின் தன்மையைவிட குற்றம் சாட்டப்படுபவர் பின்புலம் என்ன என்பதை வைத்துதான் நடவடிக்கை என்பதாக அமைந்துள்ளது.
ஆளும்கட்சியினரின் கண் அசைவே இந்திய குற்றவியல் சட்டமாக கருதப்படுகிறதா? என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் மனதிலும் எழுகிறது.
தொடர்ந்து சாதி வன்மத்தை இந்து விரோத தேச விரோத கருத்துக்கள் திட்டமிட்டு பதிவு செய்து வெளியிட படுகின்றன. அப்படிப்பட்டவர்களிடம் காவல்துறை விசாரணை கூட செய்ய தயங்குகிறது.
சமீப காலமாக சாதிய வன்முறை பேச்சுகளும், அநாகரிகமான செயல்களும் அரங்கேறி வருகிறது. ஆனால் சாதி சச்சரவுகளை தூண்டுவோரை கண்டு பிடித்து தண்டிக்கப்படுகிறார்களா? என்பதை ஊடகங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றோம்.
தமிழக முதல்வர் அவர்கள், ஆர்.பி.வி.எஸ். மணியன் அவர்களின் வயது, உடல்நிலை, குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு கைது நடவடிக்கயை தவிர்க்க காவல்துறைக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் வன்மத்தை தூண்ட சமூக ஊடகங்களில் எடிட் செய்து வெளிப்படும் விடீயோ ஆடியோக்களை தடுக்க தமிழக நுண்ணறிவு பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜனநாயக ரீதியில் கருத்து உரிமை மதிக்கப்பட வேண்டும்.
எனவே ஆர்.பி.வி.எஸ். மணியன் அவர்களை விடுதலை செய்ய இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.
என் மண் என் மக்கள் என்ற நடைப் பயணத்தில், அண்ணாமலை மேற்கொண்டிருக்கும் யாத்திரையின் அனுபவத்தைக் குறித்து அவர் பகிர்ந்திருப்பவை….
இன்றைய தினம், #EnMannEnMakkal பயணம், 12 வருடங்களுக்கு ஒரு முறை குறிஞ்சி பூ பூத்து குலுங்கும் இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் ஆர்ப்பரிக்கும் மக்கள் சூழ இனிதே நடந்தேறியது
பழனி தண்டாயுதபாணி முருகப்பெருமான் சிலையைப் போலவே நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட சிலை, பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை. மூன்று ஆயிரம் ஆண்டுகள் புராண வரலாறு உடைய பழமையான சிறிய கோயில். இங்குள்ள கிரந்த எழுத்துக்களும் பழங்கால சிலை அழகும் தொன்மைக்குச் சான்றாக உள்ளது
வான் இயற்பியல் துறையில் கடந்த 121 ஆண்டுகளாக பங்களித்து வரும் கொடைக்கானல் மண்; இந்த மாதம் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்திலுள்ள 7 உபகரணங்களில், பிரதானமான விஇஎல்சி (விசிபில் எமிஷன் லைன் கொரோனாகிராப்) என்ற உபகரணம், அதற்கு, கொடைக்கானல் சூரிய உற்றறிவகத்தின் (அப்சர்வேட்டரி) சூரியக் கரும்புள்ளிகள் குறித்த 100ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஆய்வுத் தரவுகள் பேருதவியாக அமைந்துள்ளன.
கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 7,000 ஏக்கர் பரப்பில் மலைப்பூண்டு விளைவிக்கப்படுகிறது. கொடைக்கானல் மலை பூண்டுக்கு நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் புவிசார் குறியீடு வழங்கி கொடைக்கானலின் மலைப்பூண்டு சாகுபடியை ஊக்குவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 8.2 கோடி ரூபாய் பழங்குடியினருக்கு சிறப்பு நிதியாக வழங்கியுள்ளார். மேலும், பிரதம மந்திரி ஆதி ஆதர்ஷ் கிராம திட்டத்தின் கீழ், 2.85 கோடி ரூபாய், பழங்குடியினர் நலனுக்காக அரசியல் அமைப்பு சட்டம் 275 (1)ன் கீழ் வழங்கப்படும் நிதி: 64 கோடி ரூபாய், பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினருக்கு வழங்கப்படும் நிதி: 33 கோடி ரூபாய், பழங்குடியினர் நலனுக்காக வேலை செய்யும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நிதி: 5 கோடி ரூபாய் , அரசு சாரா பழங்குடி பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை: 11 கோடி ரூபாய், கல்லூரிகளில் பயிலும் பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை: 132 கோடி ரூபாய். இப்படி கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 256 கோடி ரூபாய் நமது மத்திய அரசு தமிழகத்தில் பழங்குடியினர் நலனுக்காக வழங்கியுள்ளது.
மோடியின் முகவரி: கொடைக்கானல்
மத்திய அரசின் பழங்குடியினர் நலத்திட்டத்தில் பயன்பெற்ற திரு செல்வம், மத்திய அரசின் Spice Board of India நிறுவனத்தின் மூலமாக உதவிபெற்று ஏலக்காய் தோட்டம் வைத்த திருமதி பூதாயம்மாள், பிரதமரின் சிறு குறு உணவு பதப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற திருமதி ரோகிணி, சுவநிதி திட்டத்தின் கீழ் பயன் பெற்ற திருமதி ரூபி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு பெற்ற திருமதி மேரி, மத்திய அரசின் Coffee board காபி விவசாயிகளுக்கு வழங்கும் 70% மானியம் மூலம் பயன்பெற்ற திரு ராஜா, மகளிர் சுயஉதவி திட்டத்தில் 5 லட்ச மானியம் பெற்று சாக்லேட் தொழில் தொடங்கிய திருமதி பிரியா அவர்கள், உஜ்வாலா திட்டத்தில் 400 ரூபாய் மானியம் பெறும் இல்லத்தரசிகள். இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.
கொடைக்கானலுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, கொடைக்கானலில் அடிப்படை கட்டமைப்பு வசதி, பல்நோக்கு மருத்துவமனை, பழனி கொடைக்கானல் இடையே ரோப்கார், அரசு ஆண்கள் கலைக் கல்லூரி; கடந்த 30 மாதங்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த கல்லூரிக்கு இடம் தேர்வு செய்து கொண்டிருக்கிறார். ஹிந்து தர்மத்தை ஒழிப்போம் என்ற மாநாட்டில் பங்கேற்க அவருக்கு நேரம் இருக்கிறது. கல்விப் பணிக்கு நேரம் இல்லை.
இப்படி கொடுத்த எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றாமல் தற்போது 1 கோடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் என்று அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்பு அனைத்து மகளிருக்கும் என்று சொன்னார்கள். இப்போது தமிழகத்தில் 60 சதவீத மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் கிடைக்காது.
தமிழகத்தில் லட்சம் முதல் ஒரு கோடி வரை பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்கு இந்த வருடம் 1500 கோடி ரூபாய் வழங்கியுள்ளார் மோடி. அந்த 1500 கோடி ரூபாயை பட்டியல் சமுதாய மக்களின் மேம்பாட்டுக்கு செலவிடாமல் இவர்களின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற செலவிடுகிறார்கள்.
சென்னையில் ரக்சன் என்ற ஒரு 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலின் காரணமாக உயிர் இழந்துள்ளார். இதை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் சீரான குடிநீர் விநியோகம் இல்லாத காரணத்தினால் பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைத்த காரணத்தினால் தான் டெங்கு கொசு உருவாகி அந்த 4 வயது சிறுவன் உயிர் இழக்க காரணமாகிவிட்டது. இதை சரி செய்ய வேண்டியது அரசினுடைய கடமை. ஆனால் ஊழல் திமுக அரசின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொசுவத்தி படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். குழந்தை இறந்த துக்கத்தில் இருக்கும் குடும்பத்தாரை இன்னும் அசிங்கப்படுத்துவது போல் உள்ளது உதயநிதியின் செயல்பாடு. மூன்றாம் தலைமுறை வாரிசு அரசியல்வாதிக்கு எளிய மக்களின் கஷ்டம் எப்படித் தெரியும்?
தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், வாக்களித்த மக்களையும் கேலி செய்வது போல் பொறுப்பற்றுச் செயல்படும் ஊழல் திமுகவுக்கு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
மக்கள் நலனை முன்னிறுத்தி நல்லாட்சி தரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக்க, இந்த முறை தமிழகம் முன்னிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சனாதன ஒழிப்பு – என்ற பேனரில் நடத்தப்பட்ட மாநாட்டில், சனாதன தர்மத்தைக் காப்பதுதான் முதற்கடமை என்ற குறிக்கோளுடன் செயல்பட்டிருக்க வேண்டிய, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசியதற்கும், அவரது வாழைப்பழ கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, புதுக்கோட்டையில் இருந்து பாஜக.,வினர் 108 தோல் உரித்த வாழைப்பழங்களை அனுப்ப ஏற்பாடு செய்தனர். ஆனால் 108 வாழைப்பழங்கள் அனுப்பப் படுவதை ‘மோப்பம் பிடித்த’ போலீசார் தாங்களே அதை அவர்களிடம் இருந்து பறித்துக் கொண்டு சென்றனர்.
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘சனாதனம் என்பது வாழைப்பழ தோல் போன்றது. வாழைப்பழம் தான் ஹிந்து மதம்’ என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘அமைச்சர் சேகர்பாபுவின் வீட்டினர், இனி கடையில் வாழைப்பழங்களை வாங்கி, தோலை உரித்து அதை கீழே போட்டு விட்டு வெறும் வாழைப்பழத்தை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று பதில் அளித்திருந்தார்.
மேலும், சேகர் பாபு உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் இவ்வாறு பதவி விலகாவிட்டால் அனைத்து அறநிலையத்துறை அலுவலகங்களின் முன்பும் பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்துவார்கள் என்று அறிவித்தார்.
செப்டம்பர் 11ஆம் தேதி வரை சேகர்பாபு பதவி விலகாததால் பாஜகவினர் நேற்று மாநிலம் முழுதும் அறநிலையத்துறை அலுவலகங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில், நேற்று புதுக்கோட்டையைச் சேர்ந்த பாஜக., பிரமுகர் சீனிவாசன் என்பவர், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு 108 வாழைப்பழங்களை தோல் உரித்து கூரியர் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்தார்.
இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் போலீசார், உடனடியாக அங்குச் சென்று, தோலுரித்த வாழைப்பழங்களை தாங்களே எடுத்துக் கொண்டனர். அமைச்சருக்கு அனுப்ப வைத்திருந்த வாழைப்பழங்களை போலீஸார் பிடுங்கிக் கொண்டதால் ஏமாற்றம் அடைந்த சீனிவாசன், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை அடுத்து, அந்த 108 வாழைப்பழங்களையும் வலுக்கட்டாயமாக போலீஸார் எடுத்துச் சென்றனர்.
“சனாதனம்” – இன்று பலர் வாயில் விழுந்து சங்கடப்படுகின்ற சொல்லாக மாறிவிட்டது. இதில் தெளிவு கிடைக்க, மகாகவி பாரதியின் வாக்கினிலே சனாதனம் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்துகளைக் காண்போம்.
“மாகாளி கண்ணுற்றாள் ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி!” என்று ரஷ்யப் புரட்சியை வாழ்த்தியதன் மூலம், தமிழுக்குப் புரட்சி என்ற புதுச் சொல்லைத் தந்த புதுமையாளர் பாரதி. அதேநேரத்தில் பழம் பெருமையையும் போற்றுபவர். அதனால்தான் “பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர், இந்நினைவு அகற்றாதீர்” என்று நமக்கு அன்புக் கட்டளையிட்டார். ஆனால், அந்த நினைவை அகற்றத்தான் பல தீய சக்திகள் இன்று போர் தொடுக்கின்றன.
சனாதனம் என்ற சொல்லுக்கு தொன்றுதொட்டு வருகின்ற நன்மரபு என்று பொருள். அது நமக்கு வழிகாட்டும் வெளிச்சம். சனாதனத்தில் தவறில்லை. ஆயினும், அதைப் பின்பற்றும் சிலரிடம் தவறு இருக்கிறது, அதனைத் திருத்த வேண்டுமே தவிர, சனாதனத்தையே ஒழிக்க நினைப்பது, வேர்களை வெட்டத் துடிக்கும் மூடத்தனத்தின் மணிமகுடம். உடலிலே ஓர் நோவு ஏற்பட்டுவிட்டது என்பதற்காக உடலையே வெட்டி எறிந்துவிட முடியுமா? நோயைத்தானே விரட்ட வேண்டும்! எலி புகுந்துவிட்டது என்பதற்காக வீட்டைக் கொளுத்துவார்களா?
எது சனாதனம்? “ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி, ஒருதாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?” என்றார் பாரதியார். “உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே, அன்றி வேறு குலத்தினர் ஆயினும் ஒன்றே” என்றும் பாடியுள்ளார். இந்தச் சகோதர மனப்பான்மையைக் கொடுத்திருப்பது சனாதனம்.
“ஹிமாலயம் சமாரப்ய யாவதிந்து சரோவரம் யம் தேவம் நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே” என்கிறது ரிக் வேதம். இதனையே “வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்” என்று புறநானூற்றின் வரிகள், பாரத நாட்டின் வடக்குத் தெற்கு எல்லைகளாக வகுத்துக் கூறுகின்றன. இவற்றை அடியொற்றி காலச்சூழலுக்குத் தகுந்த வண்ணம் “சேதமில்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா” என்றும்,. “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றும் பாடினார் மகாகவி. இவ்விதம் தாய்நாட்டைத் தெய்வமாகப் போற்றுதல் சனாதனம். நாட்டைப் போற்றுவதையே மதத்தின் முதல் அடையாளமாகக் கொண்டிருப்பது நம் சனாதனம். ஆகையால்தான் பாரத மாதா என்கிறோம். தமிழ்த் தாய் என்று மொழியைத் தாய்க் கடவுளாகக் காண்பதும் இந்தச் சனாதனக் கண்ணோட்டமே.
சாதியை நம் சனாதனம் போதிக்கவில்லை. அனைவரும், அனைத்துமே ஆண்டவனின் அம்சம் என்பதே நம் சனாதனம். இதைத்தான் “காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் வானும் எங்கள் கூட்டம் நோக்குமிடமெல்லாம் நாமின்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்” என்றும், “யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மையெல்லாம் உன் தெய்வ லீலையன்றோ” என்றும் மகாகவி பாடினார். காக்கை சிறகினில்கூட நந்தலாலாவின் கரிய நிறத்தைக் கண்டார். “காண்பதெல்லாம் கடவுள்” என்ற சனாதனக் கருத்தை உள்வாங்கியதன் வெளிப்பாடே இந்த வைர வரிகள்.
நந்தனாரைச் சாதி பார்த்து பிரித்தது சமூகக் கொடுமை. அவரையே நாயன்மாராக உயர்த்தி வணங்குவதே நம் சனாதனம். பிராமணர் என்பது பிறப்பின் அடிப்படையில் அமைந்த சாதி அல்ல, அடையக்கூடிய தகுதி நிலை என்பதுதான் சனாதனம். இதை நாற்குலம், பிராமணன், ஜாதிபேத வினோதங்கள் ஆகிய கட்டுரைகளில் விவரித்துள்ளார் மகாகவி பாரதியார். பிராமணன் யார் என்ற கட்டுரையில் “வஜ்ர ஸூசி” என்ற உபநிஷதத்தில் பிராமணன் யார் என்று விளக்கப்பட்டிருப்பதை இவ்விதம் விண்டுரைக்கிறார்: “உயிராலோ, உடம்பாலோ, பிறப்பாலோ, அறிவாலோ, செய்கையாலோ, தர்மகுணத்தினாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிட மாட்டான். இரண்டற்றதும், உள்ளும் புறமுமாய் நிறைந்திருப்பதும் அனுபவத்தால் உணரக்கூடியதுமான இறுதிப் பொருளை நேருக்கு நேராக அறிந்து, காம, குரோத, லோப குற்றங்கள் நீங்கியவனாக வாழ்கிறோனோ அவனே பிராமணன். பிராமணன் ஆக நினைப்போர் மேற்சொன்ன தகுதிகளை அடைய முயற்சி செய்க” என்று கூறியுள்ளார் பாரதியார். இதை நடைமுறையிலும் சாதிக்கத்தான் கனகலிங்கத்துக்குப் பூணூல் போட்டு வேத உபதேசம் செய்தார்.
தத்வமஸி என்பது வேத மகா வாக்கியம், இதன் உட்பொருளை, தனது “புதிய ஆத்திசூடி”யில் “தெய்வம் நீ என்று உணர்” என எளிமையாகவும் தெளிவாகவும் பாரதியார் எடுத்துரைத்துள்ளார்.. “அறிவே தெய்வம்” என்ற கவிதையிலே, “சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ. பல பித்த மதங்களிலே தடுமாறி பெருமை அழிவீரோ?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதே கவிதையில், “வேடம் பல்கோடி ஓர் உண்மைக்கு உளவென்று வேதம் புகன்றிடுமே ஆங்கோர் வேடத்தை உண்மையென நீர் கொள்வீரென வேதம் அறிகிலதே” என்றும் பாடியிருப்பார். “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்கிற ரிக் வேதக் கருத்தின் விளக்கம் இந்தக் கவிதை வரிகள்.
என் கடவுளைத்தான் நீ வணங்க வேண்டும் என்று சனாதனம் சொல்வதில்லை, வழிபாட்டுச் சுதந்திரம் உனக்கு உண்டு, ஆனால் அதற்காகப் பிறர் நம்பிக்கையைப் பழிக்காதே என்பதுதான் சனாதனம் காட்டுகின்ற வழி. இதை, “யாரைத் தொழுவது” என்ற தலைப்பிலான கட்டுரையில் பாரதியார் விளக்கியுள்ளார். “பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாய் உபாசனை செய்ய ஹிந்து மதம் இடம் கொடுக்கிறது. சித்தத்தை ஒருமுகப்படுத்த இந்த பக்தி எளிய வழி- ஆனால் இதர தெய்வங்களை விஷயம் தெரியாமல் பழித்தால் வேத விரோதம்” என்கிறார். ஆனால், இதர தெய்வங்களைப் பழிக்கத்தான் அன்னிய மதங்கள் பெரும்பாலும் வலியுறுத்துகின்றன. அதற்கு அடிவருடிகளாக இருப்பவர்கள் கூறுவதுதான் சனாதன ஒழிப்பு.
“இனி” என்ற தலைப்பிலான கட்டுரையில் கோவில் எதற்காக என்பதற்கும் பாரதியார் விளக்கம் கொடுத்துள்ளார். “கடவுள் எங்கும் இருக்கிறாரே அவரை ஏன் ஓரிடத்தில் கூடித் தொழ வேண்டும் என்றால் ஜனங்களிடம் ஒற்றுமை ஏற்படுவதற்காக. கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது (இயங்குகிறது). இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து – ‘தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்’ என்பது முன்னோர் கொள்கை. எல்லாம் ஓர் உயிர். ஒன்றுகூடிக் கடவுளை வணங்கப் போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம ஒருமையை அவர்கள் தெரிந்துகொள்ள இடம் உண்டாகுமென்று கருதி முன்னோர் கோவில் வகுத்தார்கள். ஆயினும், கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறது என்று நம்பி நம்மைச் சூழ்ந்திருக்கும் ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?
“கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்கிறேன். ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம் உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களிடத்தே வெளிப்படாமல் (வெளியே தெரியாமல்) இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளிவீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.
ஆண் தெய்வமெல்லாம் நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண் மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன. சிவன் நீ, சக்தி உன் மனைவி; விஷ்ணு நீ, லக்ஷ்மி உன் மனைவி; பிரம்மா நீ, ஸரஸ்வதி உன் மனைவி. இதைக் காட்டி மிருக நிலையில் இருந்து மனிதரைத் தேவ நிலையில் கொண்டுசேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோவில்களாம்” என்கிறார். இதுதான் கோவிலை உருவாக்கிய நம் முன்னோர்களின் சனாதன தர்மம். ஆயினும் சனாதன எதிர்ப்பாளர்களைப் போலவே அதன் ஆதரவாளர்களும் இந்த உட்கருத்தை உணர்ந்துகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது!
பாரத ஜாதி என்ற கட்டுரையில் “கிறிஸ்தவர்களோ, முகமதியர்களோ, பார்ஸிக்களோ எங்கிருந்து வந்து எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டாடினாலும் பாரத பூமியிலே பிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களை பாரத ஜாதி என்று கணக்கிட வேண்டும். இது பிரிக்க முடியாதது அழிவில்லாதது இதற்கு ஆதாரமும் மூலபலமும் யாதெனில் ஆரிய சம்பத்து. அதாவது நமது மூதாதையரின் அறிவும் அந்த அறிவின் பலன்களும்” என்கிறார் மகாகவி பாரதியார். இவ்வாறு இந்த நாட்டைப் போற்றுகின்ற அனைவரையும் அரவணைக்கச் சொல்கிறது நமது சனாதனம்.
எவை எல்லாம் ஆரிய சம்பத்து? “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு (மக்கள் சமுதாயம்), நமது பாஷைகள், நமது சிற்பம், கவிதை, சங்கீதம், நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், இராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி ஆகிய அனைத்தின் பொதுப் பெயர் ஆரிய சம்பத்து” என்றும் விளக்கம் அளித்துள்ளார். இதே கட்டுரையில், “ஆரிய சம்பத்திலே துருப்பிடிக்க இடம் கொடுத்தால் பாரத ஜாதியை செல் அரித்துவிடும்” என்றும் எச்சரித்துள்ளார். அவ்வாறு செல் அரிக்க வேண்டும் என்று எண்ணும் நச்சுக் கருத்தாளர்கள் நடத்துவதுதான் சனாதன எதிர்ப்பு மாநாடு.
ஆர்ய என்பது இனத்தைக் குறிப்பதல்ல. உயர்ந்த, மேலான என்ற பொருள் கொண்டது என்பதைத் தெளிவாக அறிந்தவர் பாரதி. ஆகையால்தான் அச்சம் கொண்டவன் ஆரியனல்லன், ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரிய மந்திரம் வந்தே மாதரம் என்றெல்லாம் பாடியுள்ளார். பாரதி கூறும் ஆரிய சம்பத்தில் ஒன்று பகவத் கீதை. அதை வன்முறை நூல் என்கிறார்கள் சனாதன எதிர்ப்பாளர்கள். பகவத் கீதைக்கு பாரதி எளிய விளக்கம் அளித்துள்ளார். அதன் முன்னுரையில், “துரியோதனாதிகள் பாவச் சிந்தனைகள், அர்ஜுனன் ஜீவாத்மா, கிருஷ்ணர் பரமாத்மா- பாவச் சிந்தனைகளைக் கொன்றொழிக்குமாறு ஜீவாத்மாவுக்குப் பரமாத்மா போதிப்பதே கீதை. துறவு மாத்திரமே மோக்ஷத்தக்கு வழியில்லை இல்லறமும் ஏற்றதே என்பதே கீதையின் சாராம்சம். வீட்டில் இருந்தபடியே உறவினர்களுக்கும் பிறருக்கும் உபகாரம் செய்தபடி, மனுஷ்ய இன்பங்களை நேர்மையாக அனுபவித்துக்கொண்டு, கடவுளை உபாசனை செய்து ஜீவன் முக்தராய் வாழ்வதை கீதை போதிக்கிறது. ஸர்வமிதம் பிரஹ்ம – உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற வேதத்தின் கொள்கையை நிறுவுவதே கீதை” என்று பகவத் கீதையின் நோக்கத்தை பாரதியார் விவரித்துளார். எல்லாம் கடவுள்மயம் என்ற இந்தக் கோட்பாடுதான் சனாதனம்.
தத்துவம் என்ற கட்டுரையில் கணபதி என்ற துணைத்தலைப்பின் கீழ் பாரதி கூறியிருப்பதை ஒவ்வொரு சனாதனியும் நினைவில் நிறுத்த வேண்டும்: ”ஒன்றே மெய்ப்பொருள்; அதனை ரிஷிகள் பலவிதமாகச் சொல்லினர் என்று வேதமே சொல்லுகிறது கடவுளின் பல குணங்களையும் சக்திகளையும் பலமூர்த்திகளாக்கி வேதம் உபாஸனை செய்கிறது.
வேதகாலம் முதல் இன்று வரை ஹிந்துக்கள் தம் தெய்வங்களை மாற்றவில்லை. வேதம் எப்போது தொடங்கிற்றோ, யாருக்கும் தெரியாது. கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய தெய்வங்களெல்லாம் காலத்தில் மறைந்து போயின. ஹிந்துக்களுடைய தெய்வங்கள் அழியமாட்டா. இவை எப்போதும் உள்ளன” என்றுள்ளார் தீர்க்கதரிசியான மகாகவி பாரதியார். ஆகையால் சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர்கள்தான் ஒழிந்து போவார்கள் என்பதை திடப்படுத்திக் கொள்வோம்.
பரோபகார்த்தம் இதம் சரீரம் (பிறருக்கு உதவவே இவ்வுடல்) என்ற வேத வாக்கை “ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்று மொழிந்தவர் பாரதி. “யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா” (எங்கே பெண்கள் போற்றப்படுகிறார்களோ அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சியுடன் விளங்கும்) என்ற மனுஸ்மிருதியின் அடியொற்றி, “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்று ஆனந்தக் கூத்தாடியவர் பாரதி.
சனாதனத்தின் அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை அதாவது ஆண்-பெண் சமத்துவத்தை, “ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று வாழ்த்தியவர் பாரதி. “சர்வம் இதம் பிரஹ்ம” என்ற வேதவாக்கை, “எல்லோரும் ஓர் நிறை”என்று ஓங்கி உரைத்தவர் பாரதி. இதுபோன்ற உயர்ந்த கருத்துகளைக் கூறுகின்ற நாடு பாரதம் என்பதால்தான் “பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம், நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்” என்றும் கட்டளையிட்டுள்ளார்.
பாரத நாட்டின் உன்னதப் பாரம்பரியமான சனாதனத்தை மகாகவி பாரதி, தமது பல்வேறு கவிதைகளாலும், கட்டுரைகளாலும் விவரித்துள்ளார். அனைவருக்குள்ளும் தெய்வத்தைக் காணுதல், சாதி பேதம், வர்க்க பேதம், பாலினப் பாகுபாடு இவற்றைக் கடந்து அன்பு செலுத்துதல், இயற்கையைப் போற்றுதல், அனைத்து மனிதர்களையும் தெய்வ நிலைக்கு உயர்த்துதல் – இதுதான் சனாதனம்.இந்த சனாதனத்தைப் போற்றுவோம். இதை வேரறுப்போம் என்றெழும் சூளுரைகளைச் சுட்டெரிப்போம். அதுமட்டுமல்ல, “எல்லோரும் அமரநிலை எய்தும் வழிமுறையை இந்தியா உலகுக்கு அளிக்கும்” என்ற பாரதியின் வாக்கை நனவாக்கும் வகையில் நமது சனாதனத்தின் மாண்பை உலக நாடுகளிலும் மலரச் செய்வோம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. IRCTC இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஜன. 11 முதல் 17-ம் தேதி வரை பயணம் செய்ய, செப்.13 முதல் 19-ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்-ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் நாளை முதல் விரைவு ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதனால், சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பே திட்டமிட்டுள்ளவர்கள், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வர்.
அடுத்த ஆண்டு ஜன.14 ஞாயிறு அன்று போகி துவங்கி, 15ல் பொங்கல், 16ல் மாட்டுப் பொங்கல், 17ல் காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் நாளை முதல் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதாவது, ஜன. 11ல் பயணம் செய்ய நாளையும், ஜன.12க்கு வரும் 14லும்; ஜன.13க்கு வரும் 15ம் தேதியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர செப்.14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் tngasa.in மற்றும் tngasa.org என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.