Home Blog Page 305

உதயநிதி மீது கடும் நடவடிக்கை தேவை: தென்காசியில் சமூக ஆர்வலர் புகார்!

udayanidhi complaint - 2026
#image_title

சனாதன ஒழிப்பு மாநாட்டில், ஆளும் தமிழக திமுக., அரசின் அமைச்சராகக் கலந்து கொண்டு, சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தென்காசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பி.ராமநாதன், தென்காசி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்டதற்கான ரசீது அவருக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.

அவரது புகார்க் கடிதம்…

பி. ராமநாதன்
சமூக ஆர்வலர்

திருமலையப்பபுரம்,
பொட்டல்புதூர் அஞ்சல்,
தென்காசி மாவட்டம் 627423.
செல்: 97914 65876


தேதி: 14-09-2023

திரு. காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,

காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்,

தென்காசி.

பொருள்: தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டிவிடும் தமிழக அமைச்சர்உதயநிதி மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளல்.

பெருமதிப்பிற்குரியீர் வணக்கம்,

தமிழக அமைச்சர் உதயநிதி அவர்கள் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியிருக்கிறார். (முரசொலி நாளிதழ் 04.09.2023)

ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தில் தாங்கள் காண்பதாகத் தோன்றும் குறைபாடுகளை எதிர்ப்பது என்பது வேறு. அது அவர்கள் உரிமை. ஆனால் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் பிற மதத்தில் தாங்கள் காண்பதாகத் தோன்றும் குறைபாடுகளை எதிர்ப்பது என்பது வேறு இது அத்துமீறல் மட்டுமல்ல தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.

உதயநிதி ஸ்டாலின் ஒரு இந்துவாக இருந்து சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியிருந்தால் அது அவருடைய உரிமை ஆனால் உதயநிதி ஸ்டாலின் இப்போது இந்து அல்ல, கிறிஸ்தவர்.

“மக்களைச் சாதிகளாக்ப பிரித்து தனித்தனியாக இருக்க வேண்டும் என்று சொன்னதுதான் சனாதனம்” என்று சனாதனத்தைச் சாடியிருக்கிறார். கிறிஸ்தவ மதத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் சாதிப்பாகுபாடுகள் இல்லாமல் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே சாதி என்ற நிலைமை இருக்குமேயானால் அவர் சனாதனத்தை தாக்குவதில் ஒரு நியாயம் இருக்கிறது.

ஆனால் இந்து மதத்தில் தாழ்ந்த சாதியினராக இருப்பவர்கள் உதயநிதியின் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகும் கூட தாழ்ந்த சாதியினராகவே நீடிக்கிறார்களே, உதயநிதியின் மதம் அவர்களை உயர்ந்த சாதியினராக மாற்றிவிடவில்லையே!

கிறிஸ்தவர் உதயநிதி இதனை எதிர்த்தும் போராடியிருக்கிறாரா? போராடுவாரா? இந்நிலையில் அவர் இந்து மதத்திலுள்ள சாதிப்பாகுபாடுகள் பற்றி விமர்சிப்பது இந்துக்களைக் கலவரம் செய்யத்தூண்டும் செயல்தானே. இது தொடர்பாக ஒரு விஷயத்தைக் கூறவேண்டும்.

தமிழ்த்திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்கள் உதயநிதியைப்போல் பகுத்தறிவுப் பரம்பரையைச் சேர்ந்தவர் அல்ல. பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்பவரும் அல்ல. ஆயினும், கூட அவர் தன்னுடைய “அலைகள் ஓய்வதில்லை” என்னும் திரைப்படத்தில் ஒரு முற்போக்கான கருத்தைக் கூறியிருப்பார்.

அந்த திரைப்படத்தில் ஒரு இந்து இளைஞனும், ஒரு கிறிஸ்தவ இளம்பெண்ணும் காதலிப்பார்கள். அவர்கள் இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுடைய காதலுக்குப் பலத்த எதிர்ப்பு ஏற்படுகிறது. எனவே அவர்கள் தங்கள் காதலுக்காகத் தங்கள் மதங்களையே அவர்கள் துறந்து விடுகிறார்கள்.

அந்த இந்து இளைஞன் தனது மத அடையாளமான பூனூலை அறுத்து எறிந்து விடுகிறான். அந்த கிறிஸ்தவப் பெண் தனது கழுத்தில் அணிந்திருக்கும் சிலுவையுடன் கூடிய தங்கச் சங்கிலியையே அறுத்து எறிந்து விடுகிறாள். அவர்கள் ஒன்றும் முற்போக்கு சிந்தனையாளர்களோ பகுத்தறிவுப் பரம்பரையைச் சேர்ந்தவர்களோ இல்லை.

இப்பொழுது கிறிஸ்தவராக இருக்கும் உதயநிதி பிறவியிலேயே இந்து, பகுத்தறிவுப் பரம்பரையைச் சேர்ந்தவர். அவர் இந்துவாக இருந்தபோது ஒரு கிறிஸ்தவப் பெண்ணைக் காதலித்தார். அந்தப்பெண்ணும் இவரைக் காதலித்தாள். இந்நிலையில் மதம் என்ற சொல்லையே வெறுக்கும் பரம்பரையைச் சேர்ந்த உதயநிதி தன் காதலுக்காக தன் திருமணத்திற்காக தனது மதத்தை துறந்து அப்பெண்ணையும் தனது மதத்தைத் துறக்க செய்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் அவ்வாறு நடக்கவில்லையே, என்ன நடந்தது தெரியுமா?

பகுத்தறிவுக் குடுப்பத்தைச் சேர்ந்த மதத்தை வெறுக்கும் குடும்பத்தை சேர்ந்த- உதயநிதி கிறிஸ்தவ மதத்தைத் தழுவி விட்டார். அவரது காதலி மதம் மாறவில்லை, அதற்குப்பிள், பகுத்தறிவுக் குடும்பத்தைச் சேர்ந்த மதத்தை வெறுக்கும் குடும்பத்தை சேர்ந்த-உதயநிதி” நாள் கிறிஸ்தவளாக இருப்பதில் பெருமை அடைகிறேன்” என்றார்.

பொதுவாகவே ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்தை தழுவியவர்கள் தங்கள் பழைய மதத்தைவிட தங்கள் புதிய மதத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருப்பார்கள். புதிய மதத்தின் மீது தங்கள் விசுவாசத்தைக் காட்டும் விதத்தில் பழைய மதத்தை மிகவும் சாடுவார்கள்.

இந்த அடிப்படையில்தான் உதயநிதி சனாதன மதத்தை மிகவும் சாடுகிறார். உதயநிதி சனாதனத்தை தாக்கிப் பேசிய அந்த மாநாடு அதோடு முடித்திருந்தால் அதனை யாரும் பெரிதாக எடுத்துச் கொள்ள மாட்டார்கள். இப்பிரச்னையை அத்தோடு விட்டிருப்பார்கள்.

ஆனால் அந்த மாநாட்டில் உதயநிதி தனது விருப்பத்தைச் சொல்கிறார். “இது மிக மிக அவசியமான மாநாடு. நீங்கள் இந்த மாநாட்டை ஆண்டு முழுவதும் எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் நடந்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்”.

அதாவது, இந்த மாநாடுகள் அடிக்கடி நடக்க வேண்டும். உதயநிதி அவற்றில் கலந்து கொண்டு சனாதனத்தை தாக்கிப் பேச வேண்டும். இதுதான் அவருடைய ஆசை. இவ்வாறு நடந்தால் கிறிஸ்தவர் உதயநிதி இந்து சனாதனத்தை தாக்கும் போதெல்லாம் இந்துக்கள் அவற்றை பொறுமையாக சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் மதக்கலவரங்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படும்.

தமிழகத்தில் மதநல்லிணக்கம் நிலவுகிறது. இங்கு மதக்கலவரங்கள் நடக்கக்கூடாது. எனவே அந்த மாநாட்டில் உதயநிதி பேசியதற்காகவும் இனிமேல் அவர் அவ்வாறு பேசாமலிருப்பதற்காகவும், அவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது பற்றி இந்தியப் பிரதமருக்கும், இந்திய குடியரசுத் தலைவருக்கும் கோரிக்கை விடுக்க உள்ளேன்.

மிக்க நன்றி

பி.ராமநாதன்

அந்த ரெண்டு பேரை சேர்த்து வெச்சது மகிழ்ச்சி! மார்கழி திங்கள் – இசை வெளியீட்டு விழாவில்…

margazhi thingal music release - 2026
#image_title

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

வரவேற்புரை வழங்கிய சுசீந்திரன் பேசியதாவது…

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குந‌ர் இமயம் பாரதிராஜா மற்றும் மனோஜ் பாரதிராஜாவை ஒன்று சேர்த்து படம் தயாரிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

நடிகர் கார்த்தி பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், பாரதிராஜா ஐயா அவர்களுக்கு பெரிய வணக்கம். மனோஜ் பாரதிராஜா இவ்வளவு சீக்கிரம் திரைப்படத்தை இயக்குவார் என்று நான் நினைக்கவில்லை. இதற்கு காரணமான‌ சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. இளையராஜா சாரை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இப்போது வரை அவரை முன்மாதிரியாக வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் தொடர்ந்து நிறைய படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். இந்தப்படம் கண்டிப்பாக நல்லபடியாக‌ வரும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் பேசியதாவது…

இனிய மாலை வணக்கம். ‘மார்கழி திங்கள்’ டைட்டில் ரொம்ப அற்புதமாக இருக்கிறது. இப்படத்தில் நிறைய விஷயம் இருக்கும் என்று நம்புகிறேன். ‘அலைகள் ஓய்வதில்லை’ மாதிரி இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சுசீந்திரன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நல்ல படமாக அமைய வாழ்த்துகள்.

இயக்குந‌ர் திரு பேசியதாவது…

மனோஜ் மற்றும் சுசீந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக நல்ல படமாக அமையும் எனவும் வாழ்த்துகிறேன்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…

மனோஜ் கட்டாயம் இயக்குந‌ராக ஆவார் என்று நம்பினேன், அது தற்போது உண்மையாகி உள்ளது. சுசீந்திரன் மூலம் இது நடந்துள்ளது. பாரதிராஜா அவர்கள் இயக்குந‌ராக இருந்து இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். மனோஜின் திறமை மீது எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்.

தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் பேசியதாவது…

வாழ்த்த வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, பாரதிராஜாவிற்காக தான் அனைவரும் வந்திருக்கிறோம். சுசீந்திரன் சார் முதல் படம் தயாரித்திருக்கிறார். மனோஜ் நிறைய படங்கள் இயக்கி வெற்றி பெறுவார் என்று வாழ்த்துகிறேன்.

இயக்குந‌ர் பேரரசு பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், இயக்குந‌ர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், சிவகுமார் அவர்களுக்கும், சீமான் அவர்களுக்கும் வணக்கம். இசை என்றால் இளையராஜா தான், இயக்குந‌ர் என்றால் பாரதிராஜா தான் என்று மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். இளையராஜா மற்றும் பாரதிராஜா மீண்டும் இணைந்துள்ளது மிக்க மகிழ்ச்சி. டிரைலரில் பாரதிராஜா, கதாநாயகன் மற்றும் கதாநாயகி மிகவும் நன்றாக நடித்துள்ளனர். மனோஜ் பாரதிராஜா இயக்கியிருக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும்.

இயக்குந‌ர் சங்க செயலாளர் ஆர்.வி. உதயகுமார் பேசியதாவது…

மனோஜ் இயக்குந‌ராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். பல வருடங்களாக அவரிடம் இதை நான் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஒரு அற்புதமான இயக்குந‌ராக உருவாக்குவதற்கு மனோஜ் பாரதிராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்த திரு சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. இந்த திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை நினைத்துக்கொண்டேன். இதன் பாடல்கள் மிக அழகாக ‘காதல் ஓவியம்’ பாடல்களை நினைவூட்டின‌. இசைஞானி இளையராஜா மற்றும் பாரதிராஜா அவர்களை பிரிக்க முடியாது, அவர்கள் உறவு என்றும் மறையாது. மனோஜ் பாரதிராஜா அவர்கள் புதிய அத்தியாயத்தை இப்படத்தின் மூலம் தொடங்குவார். கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு வாழ்த்துகள். இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும் எனவும் வாழ்த்துகிறேன்.

கதாநாயகி ந‌க்ஷா சரண் பேசியதாவது…

‘மார்கழி திங்கள்’ குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாரதிராஜா சார் அவர்கள் மிகவும் நட்பாக‌ பேசுவார்கள். எனக்கு வாய்ப்பளித்த‌ மனோஜ் பாரதிராஜா மற்றும் சுசீந்திரன் அவர்களுக்கு மிகவும் நன்றி. படம் மிகவும் நன்றாக வந்துள்ளது.

கதாநாயகி ரக்ஷனா பேசியதாவது…

மனோஜ் பாரதிராஜா சார், சுசீந்திரன் சார் மற்றும் ‘மார்கழி திங்கள்’ படத்தின் அனைத்து குழுவினருக்கும் நன்றி. இளையராஜா சார் கையை வச்சா அது ராங்கா போனதில்ல. இந்த திரைப்படத்திற்கு அவர் இசை அமைத்துள்ளார், ரொம்ப நன்றி சார். இந்த திரைப்படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும், கண்டிப்பாக‌ அனைவரும் பார்க்கணும்.

கதாநாயகன் ஷியாம் செல்வன் பேசியதாவது…

மனோஜ் பாரதிராஜா அவர்களால் தான் நான் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் உதவி செய்த அனைவ‌ருக்கும் நன்றி. பாரதிராஜா மற்றும் இளையராஜா சார் அவர்களுக்கு நன்றி. நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி.

இயக்குந‌ர் லிங்குசாமி பேசியதாவது…

தமிழ் சினிமாவில் இயக்குந‌ர் என்றால் பாரதிராஜா சார் தான். திருப்பாவையில் வரும் முதல் வார்த்தை மார்கழி திங்கள். எனவே இது மிகவும் அருமையான தலைப்பு. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள். டிரைலர் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என நம்புகிறேன்.

இயக்குந‌ர் மனோஜ் பாரதிராஜா பேசியதாவது…

18 வருட போராட்டத்திற்கு பிறகு நான் இப்போது இயக்குந‌ராக வந்திருக்கிறேன். சுசீந்திரன் சாரிடம் நான் நிறைய கதைய சொல்லியிருந்தேன். திடீர் என்று ஒரு நாள் கூப்பிட்டு ‘நீங்க படம் பண்ணுங்க’ என்று கூறிவிட்டார். அதன் பின்னர் 15 நாட்களில் ஷூட்டிங் தொடங்கியது. என்னுடைய முதல் படத்தில் இளையராஜா மற்றும் பாரதிராஜா இணைந்திருப்பது எனக்கு பெருமை. கதாநாயகன் ஷியாம் நன்றாக நடித்துள்ளார். ரக்ஷனா மற்றும் அனைவரும் அருமையான பங்களிப்பை தந்துள்ளனர். இந்த திரைப்படம் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக‌ அனைவரும் பாருங்கள். என் கஷ்டங்களில் உடனிருந்த மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நன்றி. பத்திரிகையாளர்கள் என்றால் ஒரு குடும்பம் என்று சொல்லலாம். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.

பெப்சி தலைவரும் இயக்குநருமான‌ ஆர்.கே. செல்வமணி பேசியதாவது…

மனோஜ் பாரதிராஜாவிற்கு வாய்ப்பளித்த சுசீந்திரனுக்கு நன்றி. பாரதிராஜாவிற்கு நன்றி. திறமையானவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து கிடைத்துள்ளது. ‘மார்கழி திங்கள்’ என்று அழகான தமிழ் டைட்டில். இதைப் பார்க்கும்போதே மனதுக்குள் சந்தோஷம். மண் வாசனை நிறைந்த படமாக இருக்கும் என்றும், பிரம்மாண்டமாக‌ இருக்கும் என்றும் நம்புகிறேன். திரைப்படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். மனோஜ் பாரதிராஜாவை பத்திரிகையாளர்கள் மிகப்பெரிய இயக்குந‌ராக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். தந்தையை மிஞ்சிய தனையனாக‌ வருவதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது…

அனைவருக்கும் என்னுடைய அன்பும் வணக்கமும். என்னுடைய தம்பி இயக்குநராக ஆகியிருப்பது ஒரு மகிழ்ச்சியான தருணம். சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. மிகப்பெரிய சாதனை படைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவரது திறமைக்கு எதுவும் ஈடாகாது. உலகத்தின் தலைசிறந்த ஓவியராக‌ வரவேண்டியவர் பாரதிராஜா.

நடிகர் சிவகுமார் பேசியதாவது…

திரையுலகத்தை சேர்ந்த அனைவரையும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தில் ரொம்ப வருடங்களுக்கு பிறகு இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். இத்திரைப்படம் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசியதாவது…

என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். மேடையில் அமர்ந்திருக்கும் அத்தனை ஜாம்பவான்களுக்கும் நன்றி. நடிகனாக இருந்து இயக்குந‌ராக மாறுவது சுலபமில்லை, என் மகன் மீது நம்பிக்கை உள்ளது. டிரைலர் தான் காட்டியிருக்கிறான், மிக அற்புதமாக செய்துள்ளான். முக்கியமாக நான் நன்றி தெரிவிக்க வேண்டியவர் யார் என்றால் சுசீந்திரன் தான். காதலை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். அத்தனை இயக்குந‌ர்களும் என்னை அப்பா என்று தான் அழைத்தார்கள். மிகவும் மகழிச்சி. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி, கண்டிப்பாக இந்தப் படம் வெற்றியடையும், அப்போது என் மகனை பற்றி பேசுவேன்.

பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் தட்டுப்பாடு ஏன்?

file picture - representational image

“சென்னையில் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டிற்கு தட்டுப்பாடு”

– சு.ஆ. பொன்னுசாமி

சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி முதல் ஆவின் அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளும் 10% வரை குறைவாக அளவு நிர்ணயம் செய்து சீலிங் முறை வைத்து பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் பச்சை நிற பாக்கெட்டில் வரும் 4.5% கொழுப்பு சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளை இன்று (15.09.2023) முதல் 30% குறைவான அளவில் வழங்கி விட்டு, அதே விற்பனை விலை கொண்ட, ஆனால் அதை விட 1% கொழுப்பு சத்து குறைவான ஊதா நிற பாக்கெட்டில் வரும் 3.5% பசும்பால் பாக்கெட்டுகளை தான் வழங்க முடியும், அல்லது 10% குறைவான அளவில் தான் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்ய முடியும் என ஆவின் நிர்வாகம் சண்டித்தனம் செய்து வருகிறது.

இந்த நிலையில் பால் முகவர்களுக்கு எந்தவிதமான முன்னறிவிப்போ, சுற்றறிக்கையோ இல்லாமல்,

ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகாரம், மொத்த விநியோகஸ்தர்களின் அராஜகம் காரணமாக 30% அளவிற்கு பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகளின் விநியோக அளவு திடீரென குறைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக சத்து குறைவான பசும்பால் பாக்கெட்டுகளை வழங்கியுள்ளதால் அந்த பாக்கெட்டுகளை சில்லரை வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகம் செய்யும் கட்டாயத்திற்கு பால் முகவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே 10% பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 30% அளவு பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் அளவை குறைத்து  சத்து குறைவான பசும் பாலினை தான் வாங்கியாக வேண்டும் என நிர்பந்தம் செய்து வரும் ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கின் காரணமாக பால் முகவர்களிடம் சில்லரை வணிகர்களும், பொதுமக்களும் கருத்து மோதல்களில் ஈடுபடும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. 

அத்துடன்  பால் முகவர்களிடம் அந்த வகை பாலினை வாங்க மறுத்து சண்டையிட்டு வருவதால் இறக்கி வைத்துள்ள ஊதா நிற பாக்கெட்டில் வரும் பால் பாக்கெட்டுகளை என்ன செய்வது என தெரியாமல் பால் முகவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதால் ஆவின் பால் விநியோகம் செய்யும் தொழிலை செய்து தான் ஆக வேண்டுமா..?, பேசாமல் இந்த தொழிலை விட்டு ஒதுங்கி விடலாமா..? என்கிற மன நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

ஆவின் நிர்வாகத்தின் சண்டித்தனத்தையும், சர்வாதிகார போக்கினையும் தடுக்க வேண்டிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களோ ஆவினில் சதா ஆலோசனை கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறாரே தவிர ஆக்கபூர்வமான தீர்வுகளை காணாமல் இருப்பது வேதனைக்குரிய விசயமாகும்.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

employment career opportunities - 2026
#image_title

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை: வரும் செப். 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கர்நாடக மாநிலம் தும்குருவில் செயல்பட்டு வரும் ஹெலிகாப்டர் தொழிற்சாலை நிறுவமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 40 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளயிடப்பட்டுள்ளது.

இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Hindustan Aeronautics Ltd.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

  1. Fitter (Scale – C5) -17
  2. Electrician (Scale – C5) – 5
  3. Stores Clerical/ Commercial Asst/ Admin Asst (Scale – C5) – 4
  4. Accounts (Scale – C5) – 2
  5. Civil (Scale – D6) – 1
  6. Technician (Electrical) (Scale- D6) – 7
  7. Technician (Mechanical) (Scale -D6) – 2
  8. Assistant (IT) (Scale – D6) – 2

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயதுவரம்பு: 1.8.2023 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: Scale – C5 பணிகளுக்கு மாதம் ரூ.22,000, Scale – D6 பணிகளுக்கு மாதம் ரூ.23,000 வழங்கப்படும்.

  • விண்ணப்பிக்கும் முறை: http://www.hal-india.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
  • எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 8.10.2023
  • எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: 10.10.2023
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.9.2023

பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்!

735767 adhar - 2026

அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிறப்புச் சான்றிதழை, தனி அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 2023-ன்படி வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல், ஓட்டுநர் உரிமம், கல்விநிலையங்களில் சேர என பல்வேறு நடைமுறைகளுக்கும், தனி ஆவணமாக, பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம், பிறப்புச் சான்றிதழை கல்வி நிலையங்களில் அனுமதி பெறுவது, வாகன ஓட்டுநர் உரிமம் பெற, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை பெற, திருமணத்தைப் பதிவு செய்வதற்கு, அரசு வேலை பெறுவது போன்ற பணிகளுக்கு தனி ஆவணமாக அடையாளன் சான்றிதழாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், நாடாளுமன்றத்தில் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு மசோதாவை தாக்கல் செய்தார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி மக்களவையிலும் 7ஆம் தேதி மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இனி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்க மாட்டோம்: அமேசான் அறிவிப்பு!

Rs 2000 notes - 2026

இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம்.. என அமேசான் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது!

வரும் 19-ஆம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அமேசான் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில், மத்திய அரசு நிர்ணயித்த கால அவகாசம் வரும் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், இணைய வழி பொருட்கள் விநியோக நிறுவனமான அமேசான் அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் ”அமேசான் தற்போது வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொண்டு வருகிறது. இருப்பினும், வரும் 19-ஆம் தேதிக்கு பிறகு அமேசான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பணம் கொடுத்து பொருட்களை டெலிவரி பெறும் வாடிக்கையாளர்களிடம் ஏற்றுக்கொள்ளாது” என்று அறிவித்துள்ளது.

எழுமின்! விழிமின்!! சந்திரயான் -3

chandrayaan3 in moon - 2026
#image_title

சந்திரயான்-3 மீண்டும் உறக்கத்திலிருந்து எழுந்திருப்பது எப்பொழுது? இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்…

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் தூக்கத்தில் இருக்கும் நிலையில் மீண்டும் சூரிய ஒளி வரும்போது இவை இரண்டும் தனது தூக்க நிலையில் இருந்து வெளிவந்து தனது பணிகளை துவங்கும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட்டது. அதன்படி விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இஸ்ரோ திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கி மிகப்பெரிய சாதனையை படைத்தது.

அதன்படி இந்தியா நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடாகவும் தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடாகவும் மாறியுள்ளது. இந்த சாதனையை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்தது. அதன் பின் திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் மற்றும் அதன் உள்ளிருந்த பிரக்யான் ரோவர் தனது பணிகளை துவக்கியது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி இந்த லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை தனது பணிகளை செய்து பூமிக்கு இது குறித்த தகவல்களை அனுப்பி வைத்தது. இந்த லேண்டரும் சரி ரோவரும் சரி சூரிய மின்சக்தியால் இயங்கும் திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டன. இதனால் இது நிலவில் சூரிய ஒளி இருக்கும் நேரம் மட்டுமே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கிய அடுத்த 14 நாட்களுக்கு அது தரையிறங்கிய இடத்தில் சூரிய ஒளி இருந்தது. அந்த சூரிய ஒளியை பயன்படுத்தி லேண்டரும்,ரோவரும் செயல்பட்டது. நிலவில் 14 நாட்கள் பகலும் 14 நாட்கள் இரவும் இருக்கும். இதை கணக்கிட்டு 14 நாட்கள் தனது பணியை செய்த லேண்டர் மற்றும் ரோவர் சூரிய ஒளி மறையும் தருவாயில் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தற்போது நிலவில் விக்ரம் லேண்டர் தரை இயங்கிய பகுதி இருள் சூழ்ந்த இரவு நேர பகுதியாக இருப்பதால் லேண்டரும் ரோவரும் உறக்க நிலையில் இருக்கிறது. இதனால் தற்போது அந்த லேண்டர் மற்றும் ரோவர் இஸ்ரோ உடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அங்கு பகல் வருவதற்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த லேண்டரையும், ரோவரையும் வடிவமைக்கப்படும்போதே மீண்டும் சூரிய ஒளி வரும்போது இது தன்னைத்தானே செயல்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கியுள்ளனர். அதன்படி தற்போது விக்ரம் லேண்டர் தர இயங்கிய பகுதியில் சூரிய ஒளி எப்பொழுது வரும் என்ற தகவலை தற்போது இஸ்ரோவே வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் 22 ஆம் தேதி நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதியில் சூரிய ஒளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக சூரிய ஒளி வரும்போது விக்ரம் லேண்டரும் பிரக்யான் ரோவரும் மீண்டும் தன்னை உயிர்பித்துக் கொண்டு தனது ஆய்வுப் பணிகளை நிலவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து வருவதால் லண்டரும் ரோவரும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இப்படியாக விக்ரம் லேண்டர், பிரக்யான் விழித்துக் கொண்டால் மீண்டும் தனது ஆய்வு பணிகளை மேற்கொண்டு பூமிக்கு தகவல்களை அனுப்பும் இந்த தரவுகள் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவு குறித்து மேலும் ஆழமான புரிதல்களை மேற்கொள்ள முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த தரவுகள் எதிர்காலத்தில் இஸ்ரோ நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டும் நெரிசல் நேரத்தில் சென்னை மெட்ரோ சேவை நீட்டிப்பு!

chennai metro - 2026

சென்னையில் இன்று (செப்.15) ஒரு நாள் மட்டும் நெரிசல்மிகு நேரங்களில்  மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது:

வரும் திங்கள்கிழமை (செப்.18) அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அரசு பொது விடுமுறை அறிவிப்பை தொடர்ந்து, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, நாளை மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடத்திலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

புரட்டாசி மாத பூஜைக்காக செப்.17ல் சபரிமலை நடை திறப்பு!

1899138 sabarimala - 2026
#image_title

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செப். 17-ம் தேதி மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது.

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில், புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். 

பின்னர், செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். வழக்கான பூஜைகளுடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களசாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும்.

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு: ஒரே வாரத்தில் 37 பேர் அனுமதி!

fever caugh - 2026

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு : கோரிப்பாளையம் ஒரே வாரத்தில் 37 பேர் அனுமதி.!!

மதுரை மாநகராட்சியில் 7 நாள்களில் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் 7 நாள்களில் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவி வருகின்றன. இந்த நிலையில், மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு அதிகமாக பாதித்து வருகிறது. மதுரை மாநகராட்சியில் 7 நாள்களில் மட்டும் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதித்துள்ளது. 50 பேர் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி உள்ளது. இதையடுத்து, கடந்த 2 வாரங்களில் 37 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.70 உயர்வு! ஒரே நாளில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பரவாமல், இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை நகரில் பெரும்பாலான தெருக்களில் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் அதிக உற்பத்தியாக வாய்ப்புள்ளது.

மதுரை அண்ணா நகர், வீரவாஞ்சி தெரு, காதர் மொய்தின் தெரு, அன்பு மலர் தெரு, சௌபாக்யா விநாயகர் கோவில் தெரு மற்றும் வண்டியூர் ஆகிய பகுதிகளில் பள்ளிகளில் கழிவுநீர் பீரிட்டு வெளியேறுகிறது. இதை மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்து, கொசு உற்பத்தி தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க ,சமூக ஆர்வலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.