Home Blog Page 334

மதுரை அருகே பறிபோகும் கனிம வளம்: ஆட்சியர் கண்டு கொள்வாரா?

மதுரை அருகே பறிபோகும் கனிம வளம்: மதுரை மாவட்ட ஆட்சியர் கண்டு கொள்வாரா?

madurai minersls - 2026

சோழவந்தான்: மதுரை அருகே அனுமதி இன்றி குவாரி அமைத்து செம்மண் அள்ளுவதால் தரிசாகும் விவசாய நிலங்கள் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்தில் , உள்ள பன்னியான் கிராமத்தில், உள்ள பெரியகுளம் கண்மாயில் அரசு அனுமதியின்றி கிராவல் குவாரி அமைத்து செம்மண் மற்றும் கிராவல் மண் அள்ளுவதால், விவசாய நிலங்கள் பாழ் படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை, தெரிவித்துள்ளனர். இது குறித்து, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அனுமதியின்றி குவாரி அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டி ஒன்றியம் பன்னியான் கிராமத்தில் உள்ள பெரியகுளம் கண்ணமாயில், மூன்று, நான்கு வருடங்களாக தொடர்ந்து கனிமவளக் கொள்ளையில் பன்னியான் அரசு அதிகாரிகளின் உதவியோடு சிலர் இரவு நேரத்தில் விவசாயிகளின் அடிவயிற்றில் கை வைக்கும் விதமாக கண்மாயினை தனி நபர்களுக்காக அரசு அனுமதியின்றி கிராவல் குவாரியாக அமைத்துக் கொடுத்து செயல்பட்டு வருகின்றனர்.

இது போன்று, மண்ணிணை அள்ளுவதால், மழை காலத்தில் கண்மாயில் தண்ணீரை சேமிக்க முடியாமல் கண்மாயின் கரைப் பகுதி உடைந்து, விவசாய பயிர்கள் மற்றும் விளை நிலங்கள் மற்றும்,சூற்றுச்சுழல் பாதிக்கப்படுவதுடன், கண்மாயின் உட்பகுதியில் உள்ள மரங்கள் அழிக்கப் படுவதால் இந்தப் பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், இது போன்ற காரணத்தினால், விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் அரசு அதிகாரிகளே, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைக்கு உடந்தையாக செயல்பட்டு வருவதால்,
இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

அனுமதி இன்றி குவாரி அமைத்தவர்கள் இரவு பகல் என பாராமல், கிராவல், செம்மண், கிணற்று மண் என அள்ளுவதால் இரவு நேரத்தில் பன்னியான், கீழப்பட்டி, கழுங்கப்பட்டி, கண்ணணூர் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை மற்றும் விவசாயத்திற்க்கு தண்ணீர் பாய்ச்ச செல்ல முடியாத நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். ஏனென்றால், கிராவல் மண்களை அள்ளிச் செல்பவர்கள் குண்டர்களை வைத்துக்கொண்டு கனரக வாகனத்தை அதிவேகமாக இயக்கி வருவதால் இரவு நேரத்தில் ரோட்டோரத்தில் உள்ள வீடுகளில் ஆடு, மாடுகளை வைத்திருப்பவர்கள் உயிர் பயத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளதாக கூறுகின்றனர்.

இது குறித்து, பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். ஆகையால், மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு அனுமதி இன்றி குவாரி நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இந்தப் பகுதி விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராடும் நிலை உருவாகும் என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

திருவேடகம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா!

vishnudurgai temple mulaipari - 2026

சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுக்கரையில் அமைந்துள்ள கலியுகத்தில் கேட்ட வரம் கொடுக்கும் கண்கண்ட தெய்வமாகி அருள்பாலிக்கும் கிராம தேவதை கேட்ட வரமும் கிடைக்கும் நினைத்த காரியமும் ஜெயமாகும் ஸ்தலமான விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் 29 ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது.

முதல் மூன்று நாட்கள் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது.இதைத் தொடர்ந்து 4ம் நாள் திருவிளக்கு பூஜையும், 5ஆம் நாள் அம்மன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெற்று பூச்சொரிதல் விழா நடந்தது.6ம் நாள்,7ம் நாள் சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது.8ம் நாள் காலையில் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.9 ஆம் நாள் அம்மனுக்கு சந்தன காப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மன் வீதி உலா நடந்தது. பூசாரி துரை மணிகண்டன் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.10ம் நாள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று கிடாய் வெட்டுதல் நடந்தது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர.

ஆடி மாதம் என்பதால், பல கிராமங்களில், அம்மனுக்கு விழா எடுக்கின்றனர். சில கிராமங்களில், ஆடி வெள்ளிக்கிழமைகளில், கோயில் முன்பாக பக்தர்கள் கூழ்காய்ச்சி, மக்களுக்கு வழங்கி வருவது வழக்கமாக உள்ளது.

மதுரை அண்ணாநகர். யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், அம்மனுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில், சிறப்பு அபிஷேகமும்,அன்னதானமும் வழங்கபட்டது.

ஆடி சுவாதி விழா: மதுரை அண்ணாநகர், மேலமடை தாசில்தார் நகரில் அமைந்துள்ள சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், ஆடி சுவாதி நட்சத்திரத்தில் யொட்டி, இக் கோயிலில் அமைந்துள்ள நரசிம்மர் மற்றும் கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளர் வெட்டிப் படுகொலை!

விருதுநகரில், மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளர் சரமாரியாக வெட்டி கொலை… பெண் உட்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு!

maruthu senai treasurer murdered - 2026

விருதுநகர் : விருதுநகர் மேல ரதவீதி பகுதியைச்
சேர்ந்தவர் குமரவேல் (56). இவர் மருது சேனை அமைப்பின் மாநில பொருளாளராகவும், விருதுநகர் நகராட்சியின் மார்க்கெட் வசூல் உள்ளிட்ட ஒப்பந்ததாரராகவும், பல்வேறு தொழில்களும் செய்து வந்தார்.

விருதுநகர் மீன் மார்க்கெட் அருகேயுள்ள மாம்பழ பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் குமரவேல், அலுவலக கணக்காளர் ரூபி (41), ராம்குமார் (34), ஆகியோர் நேற்று மாலை இருந்த போது 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூச்சலிட்டபடி அலுவலகத்திற்குள் புகுந்தனர்.

இதனைக் கண்ட குமரவேல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அப்போது அந்தக் கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் குமரவேலை சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க முயன்ற ரூபி மற்றும் ராம்குமாருக்கும் வெட்டு விழுந்தது. குமரவேலை தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அரிவாள் வெட்டால் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக குமரவேல் உட்பட 3 பேரையும் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குமரவேல் சிகிச்சை பலனலிக்காமல், நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். ரூபி மற்றும் ராம்குமாருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், காரைக்குடியில் நடந்த கொலை சம்பவத்திற்கு பழிக்குபழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரிய வந்தது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த படுகொலை சம்பவத்தால் விருதுநகர் தேசபந்து திடல் பகுதி, பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் பதற்றம் இருப்பதால் அந்தப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

ஆடி சுவாதி நரசிம்மர் பூஜைகள்!

adi swathi pooja - 2026

மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விழா ஆலயத்தில், ஆடி சுவாதியை முன்னிட்டு, இக்கோவில் அமைந்துள்ள நரசிம்மர் மற்றும் கருடாழ்வாருக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக அச்சனையில் நடந்தது.

முன்னதாக, நரசிம்மர் மற்றும் கருடாழ்வார்க்கு பால், மஞ்சள் பொடி, திரவிய பொடி, போன்ற அபிஷேத் தெய்வங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரமாகி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில், பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்மர் மற்றும் கருடாழ்வாரை தரிசித்து விட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் ஆன்மீக குழுவினர் சிறப்பாக செய்தனர்

உலகக்கோப்பை கிரிக்கெட் (14): 2019 போட்டி

world cup cricket 2019 - 2026

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 14 – 2019 போட்டி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

2019 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 12ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகும். இது 2019ஆம் ஆண்டு மே 30 முதல் ஜூலை 14 வரை இங்கிலாந்தில் 10 மைதானங்களிலும், வேல்ஸில் ஒரு மைதானத்திலும் நடத்தப்பட்டது, இங்கிலாந்து ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையை நடத்தியது; வேல்ஸுக்கு இது மூன்றாவது முறையாகும்.

இந்தப் போட்டியில் 10 அணிகள் போட்டியிட்டன. 2015ஆம் ஆண்டு 14 அணிகள் போட்டியில் கலந்து கொண்டது நினைவிருக்கலாம். இதனால் போட்டியின் வடிவம் முதல் சுற்றில் ஒற்றை ரவுண்ட்-ராபின் முறையாக மாற்றப்பட்டு முதல் நான்கு அணிகள் நாக் அவுட் நிலைக்குத் தகுதி பெறும் வகையில் அமைக்கப்பட்டது. ஆறு வார ரவுண்ட்-ராபின் போட்டிகளுக்குப் பிறகு, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து முதல் நான்கு இடங்களைப் பிடித்தன. பாகிஸ்தான் நிகர ரன் ரேட் குறைவாக இருந்ததால் தகுதிபெறவில்லை.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இரு அணிகளும் 241 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடிவடைந்த பிறகு இறுதிப் போட்டி டையில் முடிந்தது, அதைத் தொடர்ந்து முதன் முதலாக சூப்பர் ஓவர் விளையாடப்பட்டது. சூப்பர் ஓவரிலும் சமமான ரன்கள் எடுத்ததால், பவுண்டரி கவுண்ட்பேக் விதியின் அடிப்படையில் இங்கிலாந்து பட்டத்தை வென்றது.

இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் சிறப்பாகவே விளையாடியது. குரூப் ஆட்டங்களில் அது முதலில் தென் ஆப்பிரிக்கா அணியைச் சந்தித்தது. இப்போட்டியில், தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. யுஸ்வேந்திர சாஹல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார், அவர் தென் ஆப்பிரிக்கா அணி பேட்ஸ்மேன்களை மொத்தம் 227 ரன்களுக்கு கட்டுப்படுத்த உதவினார். பதிலுக்கு, ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் எடுத்தார், இந்தியா 15 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றியை எட்டியது.

இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோரின் பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து அவர்களின் 13 ஓவர்களில் மொத்தமாக 113 ரன்கள் எடுத்தது, இந்தியா 352/5 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 117 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரின் அரை சதங்கள் இருந்தபோதிலும், ரன் வேட்டையில், ஆஸ்திரேலியா அவர்களின் இன்னிங்ஸில் தேவையான ரன் விகிதத்திற்கு பின்தங்கியிருந்தது, மேலும் 316 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நாட்டிங்ஹாமில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நடை பெறவில்லை. அடுத்த போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதின. ரோஹித் ஷர்மாவின் 140 ரன்கள் உட்பட இந்தியா 50 ஓவர்களில் 336/5 எடுத்தது. பதிலுக்கு, பாகிஸ்தான் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றது மற்றும் ஒரு கட்டத்தில் 117/1 என்ற நிலையில் இருந்தது, குல்தீப் யாதவ் மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவைத் திருப்ப, டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

சவுத்தாம்ப்டனில் நடந்த அடுத்த ஆட்டத்தில் இந்தியாவிடம் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்ததன் மூலம், போட்டியிலிடுந்து வெளியேறும் முதல் அணியானது. 50 ஓவர்களில் இந்தியாவை 224 ரன்களுக்கு மட்டுப்படுத்திய போதிலும், முகமது ஷமி எடுத்த ஹாட்ரிக்கினால் ஆப்கானிஸ்தானை 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

அடுத்த ஆட்டத்தில் ஓல்ட் ட்ராஃபோர்டில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 125 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது, முகமது ஷமி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகளை 143 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். இதன் விளைவாக மேற்கிந்தியத் தீவுகள் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.

அடுத்த ஆட்டம் இங்கிலாந்துடன் நடைபெற்றாது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் காயத்தில் இருந்து திரும்பியதால், இங்கிலாந்து அணி சரிவில் இருந்து தப்பிக்க உதவியது. வெற்றி பெற வேண்டிய முக்கியமான ஆட்டத்தில் இதுவரை தோற்கடிக்கப்படாத இந்தியாவுக்கு எதிராக 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராய் (66) மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் (111) ஆகியோருக்கு இடையேயான தொடக்க பார்ட்னர்ஷிப் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்தது, அதே நேரத்தில் ஸ்டோக்ஸ் தனது மூன்றாவது தொடர்ச்சியான அரை சதத்திற்கு 54 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார், இங்கிலாந்து 337/7 ஐ எட்ட உதவியது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 102 மற்றும் 66 ரன்கள் எடுத்திருந்த போதிலும், இந்தியா தோல்வியைச் சந்தித்தது.

அடுத்த ஆட்டத்தில் பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன், இந்தியாவுக்கு எதிராக ஒரு உலகக் கோப்பையில் 500 ரன்கள் மற்றும் 10 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ரோஹித் ஷர்மாவின் சதம் இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றது. இதன் பின்னர் லீட்ஸில், கே.எல். ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் சதங்களின் பின்னணியில், 265 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்தியா இலங்கைக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இது ஷர்மாவின் ஐந்தாவது சதமாகும், இது ஒரு உலகக் கோப்பையில் அதிகபட்சமாக இருந்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கைக்காக தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை அடித்தார், இவை அனைத்தும் இந்தியாவுக்கு எதிராக வந்தவை.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதிப் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, நான்காவது ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டிலை இழந்தது. கேன் வில்லியம்சன் ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் ராஸ் டெய்லருடன் இணைந்து முறையே 68 மற்றும் 65 ரன்களை எடுத்ததால், அதன் பிறகு இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமாக இருந்தது. நீஷம் மற்றும் டி கிராண்ட்ஹோம் ஆகியோரின் விக்கெட்டுகளைத் தொடர்ந்து நியூசிலாந்துடன் 211/5 என்ற நிலையில் 47வது ஓவரில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் மேற்கொண்டு விளையாட முடியாததால், போட்டி அதன் ரிசர்வ் நாளுக்குள் சென்றது. 50 ஓவர்கள் முடிவில் ஸ்கோரை 239/8 என்று பெற்ற கிவிஸ் அணிக்கு டெய்லர் மேலும் 7 ரன்கள் எடுத்தார்.

பதிலுக்கு இந்தியா ஆடியபோது நான்காவது ஓவரில் 5 ரன் கள் எடுத்திருந்த நிலையில் 3 விக்கட்டுகள் வீழ்ந்ததால் இந்திய அணி மோசமான தொடக்கத்தை பெற்றது, முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் அனைவரும் தலா ஒரு ரன், பின்னர் 10 ஓவர்களில் 24/4. ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே ஐந்தாவது விக்கெட்டுக்கு 47 ரன்கள் என்ற சிறிய பார்ட்னர்ஷிப்பின் பிறகு, ரவீந்திர ஜடேஜாவுடன் எம்எஸ் தோனியுடன் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்கு ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பை இந்தியாவிற்கு கடைசி மூன்று ஓவர்களில் 37 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த ஆட்டம் இந்தியாவுக்கான எம்எஸ் தோனியின் இறுதி ஆட்டமாக மாறியது, அவர் ஆகஸ்ட் 2020 இல் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற்றார். தோனி வெளியேறியவுடன் (ரன் அவுட்), நியூசிலாந்து கடைசி நான்கு விக்கெட்டுகளை வெறும் 13 ரன்களுக்கு வீழ்த்தியது. அவர்கள் தொடர்ந்து இரண்டாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர். இவ்வாறு நன்றாக விளையாடி வந்த இந்திய அணி அரையிறுதியில் சரியாக விளையாடததால் இறுதி ஆட்டத்தில் பங்குபெற முடியவில்லை

ஸ்டாலினுக்கு பத்து கேள்விகள்… பதிலென்ன சொல்லுவாரோ?!

1719347 mk stalin - 2026

‘மது ஒழிப்பு என்று நாடகம் போட்டுவிட்டு, ஆட்சியை அமைத்ததும் மக்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் மது விற்பது சரியா?’ என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது கேள்விகள்:

‘ஆறுகளுக்கு குறுக்கே தடுப்பணைகள் கட்டுவோம்’ என்று சொன்னீர்களே என்னாச்சு?

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது ஏன்?

80 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது என்று மேடைக்கு மேடை பொய் சொன்னீர்களே… உண்மையை சொல்லுங்கள்; வாக்குறுதிகளை எப்போது தான் நிறைவேற்றுவீர்கள்?

மது ஒழிப்பு என்று நாடகம் போட்டுவிட்டு, ஆட்சியை அமைத்ததும், மக்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் மது விற்பனை செய்வது சரியா?

தமிழகத்தின் கனிமவளம், டன் கணக்கில் கடத்தப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்காதது ஏன்?

பள்ளி, கல்லுாரிகளில், 15,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது ஏன்?

ஆட்சி அமைத்ததில் இருந்து மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்திவிட்டு, மின் வெட்டை சரி செய்யாதது நியாயமா?

தி.மு.க., ஹிந்துக்களின் விரோதி இல்லை என்று சொல்லிவிட்டு, கோவில்களை இடிப்பதும், ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்துவதும் வழக்கமாய் கொண்டிருப்பது சரியா?

தரமற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களாலும், அரசு மருத்துவமனைகளாலும், தமிழக மக்களின் உயிர் பறிபோவது உங்களுக்கு தெரியவில்லையா?

மத்திய அரசின் திட்டங்களுக்கு உங்கள் பெயரை, ‘ஸ்டிக்கராக’ ஒட்டுவதை எப்போது நிறுத்துவீர்கள்?

சிவகாசி அருகே வெடி விபத்து இருவர் பலி..

IMG 20230725 WA0170 - 2026

சிவகாசி அருகே கேப் வெடி தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது இரண்டு பேர் பலியாயினர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே தாயில்பட்டியில் சண்முகையா என்பவருக்கு சொந்தமான ஆர் எஸ்ஆர் கேப் வெடி தொழிற்சாலை இயங்கி வருகிறது இந்த ஆலையில் தொழிலாளர்கள் காலையில் வழக்கம் போல் கேப் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வரும் தரையில் உராய்வு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு பானு , முருகேஸ்வரி ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்தில் உயிர் பலி மேலும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த இடத்தில் சர்ச்: ஹிந்து முன்னணி கண்டனம்!

hindumunnani - 2026

பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த இடத்தில் கிறிஸ்தவ சர்ச்- கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்களை மிரட்டும் காவல்துறையினர் அராஜகத்தைக் கண்டிப்பதாக, இந்துமுன்னணி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பின் மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கை:

தென்காசி மாவட்டம் வி.கே புதூர் தாலுகா அச்சங்குன்றம் கிராமத்தில் TDTA கிறிஸ்தவ பள்ளி இயங்கி வந்த நிலையில் அந்தப் பள்ளிக்கூடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் பல ஆண்டுகளாக பழைய பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த இடத்தை தென்காசி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் திடீரென இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருத்தம் செய்து அங்கு கிறிஸ்தவ சர்ச் என்று பதிவு செய்துள்ளனர்.

கடந்த 25.3.2023 அன்று திடீரென எந்தவித அனுமதியும் பெறாமல் நடைபெற்ற சர்ச் கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்களை காவல்துறையினர் மூலம் கைது செய்து ஒரு கோவில் வளாகத்தில் மாலை வரை அடைத்து வைத்திருந்தனர். ஊர் மக்கள் அனைவரும் 3.4.2023-ல் தங்கள் ஊருக்கு TDTA கிறிஸ்தவ பள்ளி வேண்டாம் எனவும் தனியாக அரசுப் பள்ளிக்கூடம் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதன்படி 14 .4. 2023 அன்று TDTA பள்ளியில் படித்த மாணவர்கள் வேறு அரசு பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. அதேசமயம் அச்சங்குன்றம் பகுதியில் பள்ளிக்கூடம் அமைக்க தேவையான இடத்தை ஊர் மக்கள் தமிழக ஆளுநர் பெயரில் பத்திரபதிவு செய்து வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் தங்கள் ஊரில் பள்ளிக்கூடம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டி அச்சங்குன்றம் கிராம மக்களும், குழந்தைகளும் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு செய்தனர்.

ஆனால் சிறுபான்மையினர் நலத்துறை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் தூண்டுதல் காரணமாக நேற்றைய தினம் அச்சங்குன்றம் ஊர் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாதபடி காவல்துறையினர் மூலம் தடுக்கப்பட்டுளனர்.

பள்ளி மாணவர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமையாகும் அதனை தடுக்கும் விதத்தில் செயல்படும் தென்காசி மாவட்டம் ஆட்சியரையும், காவல்துறையினரையும் இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் தேசிய குழந்தைகள் ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.

A Tale to Tell: Swami and Friends 

0
rk narayan - 2026

–Janaki Balasubramanian–

Why R K Narayan? 

Many might have this question. 

But I have a short tale to tell. When I was 12 or 13, I recall having a lot of conversations with my father. Typically, he will conclude those discussions with his catchphrase, “Stop feeding your visuals with images, feed them with words.” I obviously disregarded those words because I am his daughter at the age of thirteen. When I was 14 years old, our family had an arrangement whereby children had to share a room during the summer vacation. At one point, my father took a few books off our bookshelves and gave them to my brother and me. Like the kite that fell into Rajini’s palm in the Baba movie, Swami and Friends by R. K. Narayan landed in my hand.

Swami and Friends is a semi-autobiographical novel by R.K. Narayan, first published in 1935. It follows the adventures and misadventures of Swaminathan, a 10-year-old boy living in the fictional town of Malgudi. Set in British colonial India, and the fictional town of Malgudi Town. 

The cover illustration is by RK Laxman, his illustrious cartoonist brother, who is a wizard on his own. The beauty of the cover brings out the three characters— Mani, with his club on the left, Swami, with his confused look in the middle, and Rajam, the rich son of the Deputy Superintendent of Police.

An overview of the novel, Swami is a lazy school boy, who prefers to while away his time, than concentrate on his studies. He lives with his Father, Mother, and Granny in Malgudi. He attends the Albert Mission School with his friends Samuel, Sankar, Somu, and Mani. The arrival of a new student, Rajam — the son of a wealthy police superintendent — threatens Swami’s popularity. After an initial rivalry, Swami and Rajam reconcile and become friends.

Swami joins a Gandhian movement (including burning the Lancashire cap that turns out to be Khadar) and flees his Albert Mission School after receiving charges with pelting stones and shattering windows. He eventually ends up at the more challenging Board High School.

Rajam, Swami and their friends form a cricket team called Malgudi Cricket Club ( MCC) and challenge another team. Swami, their bowling spearhead, received the nickname ‘Tate’ after the renowned Maurice Tate. But Swami is not able to turn up for practice because of his strict school routine, which prompts an intervention by Rajam that turns nasty for Swami. Swami runs away from Board High when the headmaster canes him.

He becomes disoriented after wandering into the neighbouring woods. Through the DSP and the District Forest Officer, a cart man named ‘Ranga’ transports him to his home. While Swami is still figuring out the adulation and attention he is getting from his family and friends, the shocking news that MCC has lost the match. Rajam breaks their friendship and Swami is heartbroken.

A few days later, he learns that Rajam is moving out of Malgudi, because of his father’s transfer. Heartbroken, he desperately tries to see Rajam, along with Mani. He tries to gift a book to him. Rajam’s response gets lost in the sound of the train engine as they shout.

The novel is notable for its gentle humour, its realistic portrayal of Indian life, and its focus on the ordinary people of Malgudi. Swaminathan is a relatable character, and his struggles with school, family, and friendship are sure to resonate with readers of all ages.

One of the key themes of the novel is the importance of friendship. Swaminathan’s friendships with Somu, Sankar, Mani, and Pea provide him with a sense of belonging and support. However, his friendships are also tested by conflict and jealousy. Another key theme of the novel is the conflict between tradition and modernity. Swaminathan is from a traditional family, but he finds himself drawn to the modern world. This conflict appears in his interactions with friends, family, and teachers. 

Narayan explores the innocence of childhood through Swami and Friends. Through, Swami, Narayan explains, the more enduring joys and heartbreaks of boyhood. ‘Swami and friends’ is an apt title because we watch the group form alliances, break them off and reform again. The boys seem easily offended, quick to make fun of others, and desperate to feel loved. Swami, at the centre of the story, goes through a series of juvenile emotions—he is rebellious, he feels guilty, he is playful, he is cruel, he is afraid and he seeks protection (from his grandmother). 

In addition, the most poignant scene in the book is the final one when Rajam leaves Swami behind at the railway station. Swami sends him Anderson Fairy Tales as a gift, but Rajam says nothing in response, implying that he (Rajam) is leaving childhood behind and entering a larger world, while Swami continues to be navigating the pleasures and pitfalls of boyhood.

Swami and Friends is a coming-of-age story that explores the themes of friendship, family, tradition, and modernity. It is a well-written and enjoyable novel that provides a glimpse into the life of a young boy in India.

கிரீடம் எப்போது எப்படி யாரால் உருவானது! சில தகவல்கள்!

greedam sri kirshhna - 2026

கிரீடம் – சில சுவையான தகவல்கள்

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்

கிரீடம் என்பது சமஸ்கிருதச் சொல். மணி முடி, மௌலி, மகுடம் என்றும் இதற்கு அர்த்தம் கொள்ளலாம். ஒருவர் ராஜா பதவி ஏற்கும் பொழுது அரசுச் சின்னமாக கிரீடம் அவர் தலையில் குல குரு மூலமாக அணிவிக்கப்படுகிறது.

அதேபோல நாம் வணங்கும் கடவுள்களும் தலையில் கிரீடம் அணிந்து இருப்பார்கள். மிக உயர்ந்த பதவிக்கு உரியவர்களை கிரீடத்தோடு சம்பந்தப்படுத்துவது உண்டு! உலகத்திற்கேத் தலைவர் இறைவன் என்பதால் அவர்களுக்கும் கிரீடம் உண்டு!!

ராமகாதையில் ராவணன் சுறாமீன்(மகரம்) பொறித்த ஒரு நீண்ட கிரீடத்தை அணிந்து வந்தான் என்று கம்பன் சுந்தர காண்டத்தில் சொல்கிறார். இது ஒரு அதிசயமான விஷயம். ஏனெனில் இப்படிப்பட்ட மணிமுடி பற்றிய குறிப்பு வேறு எங்கும் காணப்படுவது இல்லை!!

“வளர்ந்த காதலர் மகரிகை நெடுமுடி

அரக்கரை வரக் காணார்
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட
உயிரொடு தடுமாறி
களம் தவா நெடுங்கருவியில்கைகளில்
செயிரியர் கலைக் கண்ணால்
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவிபுக அலமரலுறுகின்றார்”

வசிஷ்டர் இராமனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் பொழுதும் கிரீடத்தை(மௌலி) தலையில் சூட்டுகிறார்.

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி

இதுவும் கம்ப ராமாயண பாடல். ராமனின் குல குரு வசிஷ்டர் கிரீடத்தை அணிவிக்கிறார் என்பதைப் இப்பாடல் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது!

மலையின் முடியே சிவலிங்கமாக காட்சி அளிப்பதால் “கொடுமுடி” என்று சேலத்திற்கு பக்கத்தில் உள்ள ஊரை அழைக்கிறார்கள். இங்கு எழுந்தருளி உள்ள சிவபெருமானை மகுடேசுவரர் என்று அழைக்கிறார்கள். மகுடேசுவரரின் திருமணத்தைக் காண திருமாலும், பிரம்மனும் இங்கு வந்தார்கள் என்பது ஐதீகம். கோவிலின் முன்பு காவிரி ஆறு செல்கிறது. கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பிப் பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்குச் செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது.

மதுரைக் கடவுளான சோமசுந்தரப் பெருமான் மணிமகுடத்தைப் பாண்டியர்களுக்கு வழங்கியதாகவும், இந்திர சபைக்குச் சென்று இருந்தபோது பாண்டிய மன்னரிடம் முத்துக்கள் பதிக்கப்பட்ட இந்திர ஆரத்தை தேவேந்திரன் வழங்கியதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.

பாண்டியர்களின் மணிமுடி பிரசித்தியமானது!! பாண்டியர்கள் காப்பாற்றி வந்த இந்த மணிமுடி(ரத்தினங்களும் முத்துக்களும் அலங்கரிக்கும்) இன்று இலங்கையில் இருப்பதாக நம்பப்படுகிறது.

பாண்டிய மன்னர்களில் ஒருவரான ராஜசிம்ம பாண்டியன், சோழரை எதிர்க்க வழி தெரியாமல் இலங்கைக்குத் தப்பி ஓடினார். அப்போது அவரிடம், பாண்டியர்களின் குலச் சின்னங்களான மணிமகுடம், இந்திர ஆரம் ஆகியவை இருந்தன.

அவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், அவற்றை இலங்கை அரசரிடம் அடைக்கலமாகக் கொடுத்துவிட்டு, ராஜசிம்ம பாண்டியன் தனது தாயார் வானவன்மாதேவியின் பிறந்த ஊரான சேர நாட்டிற்குச் சென்றுவிட்டார் என்று சொல்லப்படுகிறது!!

பாண்டிய நாட்டை முழுமையாக வென்று தனது குடையின் கீழ்க் கொண்டுவந்த சோழ மன்னர் பராந்தகன், மதுரையில் பாண்டிய அரசராக முடிசூடிக் கொள்ள, பாண்டிய குலச் சின்னமான மணிமகுடத்தைத் தேடினார். அப்போது அந்த மணிமகுடம், இலங்கை அரசரிடம் அடைக்கலப் பொருளாக இருப்பதை அறிந்து, அதனை மீட்டுவர மன்னர் பராந்தகன் தனது படையை இலங்கைக்கு அனுப்பினார்.

சோழர் படை வருவதை அறிந்த மன்னன் பாண்டியனின் மணிமகுடம், இந்திர ஆரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, இலங்கையின் தென்கிழக்கில் உள்ள ரோகணா என்ற காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டார். காடுகளுக்குள் சென்று ஒளிந்து கொண்ட அவரை, சோழர் படையினரால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது சரித்திர செய்திகளாகும் !!

அதன் பிறகு பாண்டியரின் மணிமகுடத்தையும், இந்திர ஆரத்தையும் கைப்பற்ற பராந்தகன் பல முறை முயன்றும், அவரது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. சோமசுந்தர கடவுள் அருளிய மணிமுடி என்பதால் சிவபக்தியில் தெளைத்த ராவணேஸ்வரன் பூமியில் அது இருக்கிறது போலும்!!

கிருஷ்ணர் தலையில் அணிந்த கிரீடத்தில் மயிலிறகு அழகு செய்கிறது. இந்த அலங்காரம் அவருக்கு எப்படி ஏற்பட்டது தெரியுமா? கம்சனின் கொடுமை காரணமாக கிருஷ்ணருடைய பெற்றோர் சிறைச்சாலையில் வாடநேரிட்டது. தங்கத்தொட்டிலில் இட்டு சீராட்டப்பட வேண்டிய குழந்தை மூங்கில் கூடையில் கிடத்தப்பட்டு கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறான்.

இதனால் ஆயர்பாடி புழுதியில் விளையாட வேண்டியவன் ஆகிறான் ஸ்ரீ கிருஷ்ணன். ஆனால் ராஜலட்சணம் பொருந்திய அவனது முகம் பார்ப்போரையெல்லாம் வசீகரித்தது. அவன் புதுப்புது உத்திகளைக் கையாண்டு சின்னச்சின்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டான். இதனால் கண்ணனை கவுரவிக்க விரும்பினார்கள் ஆயர்பாடி சிறுவர்கள். உடனே அங்கே சுற்றித்திரிந்த மயிலைப்பிடித்தார்கள். அதனிடம் இருந்து ஓர் இறகை எடுத்து கிருஷ்ணனின் தலையில் கிரீடம் போல் சொருகினார்கள். எனவேதான் கிருஷ்ணர் வேடம் அணிகின்றவர்கள் கீரிடத்தைச் சூட்டிக் கொள்ளும் பொழுது அதில் ஒரு மயில் இறகையும் சொருகுவார்கள்.

கிருஷ்ணனின் மருமகனான முருகனின் கீரிடத்திலும் மயில் இறகு உண்டு. அவனே மயில் வாகனன் தானே?

பல கோவில்களில் உள்ள சிலைகளைப் பார்த்தால் அந்த சிலைகளில் உள்ள கிரீடத்தையும் அதன் அழகையும் நாம் கண்குளிரப் பார்க்க முடியும். மணி முடி சூட்டும் வழக்கம் பழங்கால தமிழர்களிடம் இருந்த ஒன்று என்பதை அறிய முடிகிறது. பல கல்வெட்டு செய்திகளும் இதனை உறுதி செய்கின்றன.

கொடுமுடி கோவில், மயிலிறகு கொண்ட கிரீடம் அணிந்த ஸ்ரீ கிருஷ்ணர், ரங்கநாத பெருமானின் கிரீடம் ஆகியவற்றைக் காணலாம்!