Home Blog Page 335

வேலால் உருவான நதிகள்!

murugan - 2026

வேலால் உருவான நதிகள் உண்டு!!


கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்

நேற்று காலை என் நண்பர் ஒருவர் முருகப்பெருமானுக்கு அழகிய வேல் ஒன்றை வாங்கி அர்ப்பணிப்பதாகச் சொல்லி என்னிடம் அதைக் காட்டினார். மகிழ்ந்து போனேன். என் சிரசில் அந்த வேலை வைத்து மௌனமாக கொஞ்ச நேரம் நின்றேன். கண்ணில் ஒற்றிக் கொண்டு பின்னர் அவர் கையில் கொடுத்தேன். சிறப்பான பூஜைகளுக்குப் பின்னர் ஆடி வெள்ளிக்கிழமை அன்று முருகனுக்கு அந்த வேல் அர்ப்பணிக்கப்படுவதை எண்ணி அகம் மகிழ்ந்தேன்! வேல் பற்றி சில சிந்தனைகள் என் மனதில் எழுந்தன.

வேல் வழிபாடு முருக வழிபாட்டுக்கும் முந்தையது என்கிறார்கள். வேலுக்கென்றே தனிக்கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள் தமிழர்கள். அதற்கு ‘வேற்கோட்டம்’ என்று பெயர். ‘கோடு’ என்றால் மலை. அக்காலத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள கோயிலை கோட்டம் என அழைத்தனர். வேல் சிவந்த நிறம் உடையது. முருகனும் செம்மை நிறம் கொண்டவர். மலையின் மேல் கோயில் கொண்டவர்.

திருவிளையாடல் புராணம் மூலம் பாண்டிய மன்னன் கடல் கடந்து சென்று, தனது வேலால் பல நாடுகளை வென்று அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான் என்று அறிய முடிகிறது.

நல்லியக்கோடன் எனும் சிற்றரசனுக்கு முருகன் கனவில் தோன்றி அருளியவாறு, கேணியில் பூத்த பூக்களைப் பறித்து, அவன் பகைவர்கள் மீது எறிந்த போது, அவை வேலாக மாறி அவர்களை அழித்தன என்பதை சிறுபாணாற்றுப்படை என்ற சங்க இலக்கியம் மூலம் அறிகிறோம்.

முருகப்பெருமானின் கையில் உள்ள வேல் மகத்துவமானது. அந்த வேலுக்கு அற்புதமான அபார சக்தி உண்டு. வேல் வழிபாடு சிறந்ததொரு பலனைக் கொடுக்கக் கூடியது. ஆனால் வீட்டில் வைத்து வழிபடும் வேல் ஒரு அங்குலத்திற்கு மேல் இருக்கக் கூடாது!! நீளமான வேல்களை கோவிலில் வைத்து தான் வழிபட வேண்டும்.

வேல் பூஜை செய்கிறவர்கள் அவசியம் தினசரி வேலுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். சிவ பூஜை செய்கிறவர்கள் சாளிக்கிராமத்தை வைத்து பூஜை செய்கிறவர்கள் எப்படி மூர்த்தங்களை பட்டினி போடாமல் பூஜை செய்கிறார்களோ அதே போன்று வேலையும் எண்ணி நைவேத்தியம் செய்ய வேண்டும்.

முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும். நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடி அகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது வேல் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் வேல் தீர்த்தம் சிறப்புடன் விளங்குவதைக் காண்கிறோம்.திருச்செந்தூர், திருத்தணி, வள்ளிமலை முதலிய இடங்களிலும் முருகப்பெருமான் வேலாயுதத்தையூன்றி உண்டாக்கிய தீர்த்தங்கள் உள்ளன.கிணறு வடிவிலான தீர்த்தங்களை அமைத்ததோடன்றி முருகன் தனது வேலால் நதிகளை உண்டாக்கியதையும் காண்கிறோம்.

திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓடும் செய்யாறு, கன்னட நாட்டிலுள்ள குமாரதாரை முதலியன வேலால் தோன்றிய நதிகள் ஆகும். பூண்டி எனும் ஸ்லத்தில் குமரக் கடவுள் வேலாயுதத்தால் தீரத்தம் உண்டாக்கினார் என்று அவ்வூர்த் ஸ்தலபுராணம் கூறுகிறது.

முருகப்பெருமான் கண்ணாடி போன்ற தெளிந்த நீரை உடைய குளங்களை உண்டாக்கிய வேலாயுதத்தை உடையவன் என்பதை அருணகிரிநாதர் வயலூர்த் திருப்புகழில் ‘கண்ணாடியிற் தடம் கண்ட வேலா’ என்று குறித்துள்ளார். வயலூரில் உள்ள தீர்த்தம் சக்திவேலின் பெயரால் சக்தி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. வேலை சமஸ்கிருதத்தில் ” சக்தி ஆயுதம் “என அழைக்கிறார்கள்

வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!
சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்!
– என்பது நக்கீர பாடிய அடிகளாகும்.

“சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், ஏரகமும், நீங்கா இறைவன் கை “வேல் அன்றே!” என்று தொடங்கும் சிலப்பதிகார பாடலில் இளங்கோ அடிகள் வரிசையாக, “வேல் வேல்”-ன்னு ஒரு வேல் விருத்தத்தை.

அருணகிரி நாதருக்கு முன்பே பாடிவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது. சிலப்பதிகார வேல் வருணனையில், இசையும் கலந்து, ’பாட்டு மடை’யாகப் பெருகி வரும்! என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேலும் சங்கும் சக்கரமும் தமிழ் மன்னர்கள் பயன்படுத்திய சின்னங்கள் ஆகும்.

திருமங்கை ஆழ்வார் மன்னர் மரபில் வந்தவர். அவர் கையில் வேல் உண்டு!!

ஸ்கந்த புரணத்திலும் (ஸ்காந்தம்)அதன் தமிழ் மொழிபெயர்ப்பான கந்த புராணத்திலும் முருகனுக்கும் சூரபதுமனுக்கிடையே நடந்த போரில், இந்த வேலைப் பயன்படுத்தி முருகன் சூரபதுமனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மேல் தப்பிக்க வழியில்லை என்ற நிலையில் அசுரன், முருகனின் கண்களில் படாமலிருக்க ஒரு பெரிய மாமரமாக மாறி விடுகிறான்.

ஆனால் அவனது சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட முருகன் தனது வேலை எறிந்து மாமரத்தை இரண்டாகப் பிளக்க, அதில் ஒரு பாதி சேவலாகவும் மறுபாதி மயிலாகவும் மாறிவிடுகிறது.

முருகன் மயிலைத் தனது வாகனமாகவும் சேவலைத் தன் கொடியாகவும் ஆக்கிக் கொள்கிறார் என்பதை இல் இருபுராணங்கள் கூறு கின்றன. இதனால் வீரத்தின் அடையாளமான வேல், கொடியவர்களை அழித்து நல்லவர்களைக் காக்கும் சக்தியுடையது என்ற நம்பிக்கை முருக பக்தர்களிடம் உண்டு!!

உலகக் கோப்பை கிரிக்கெட் (13): 2015 போட்டி!

2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 11வது கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகும். இதனை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து 14 பிப்ரவரி முதல் 29 மார்ச் 2015 வரை நடத்தின.

cricket wordl cup 2015 - 2026

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 13 – 2015 போட்டி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 11வது கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகும். இதனை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து 14 பிப்ரவரி முதல் 29 மார்ச் 2015 வரை நடத்தின. மேலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டி இதுவாகும்.

இதற்கு முன்னர் 1992ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியானது 14 அணிகளைக் கொண்டிருந்தது, அவை ஏழு குழுக்கள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை தங்கள் குழுவில் விளையாடின.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளைக் கொண்ட நாக் அவுட் நிலைக்கு முன்னேறின. இறுதிப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

ஆஸ்திரேலியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐந்தாவது முறை கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. குரூப் A பிரிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து ஆகிய ஏழு அணிகள் இடம் பெற்றன.

இவற்றுள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேச அணிகள் காலிறுதிக்குத் தேர்வாயின. குரூப் B பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், அயர்லாந்து, ஜிம்பாபே, ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய ஏழு அணிகள் இடம் பெற்றிருந்தன. இவற்றுள் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தேர்வாயின.

காலிறுதி ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா இலங்கை அணியை வென்றது; நியூசிலாந்து மேற்கு இந்தியத்தீவுகள் அணியை வென்றது; பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலிய அணி வென்றது; இந்திய அணி வங்கதேசத்தை வென்றது. அரையிறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியையும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவையும் வென்றது.

இறுதிப் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் 183 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆட வந்த ஆஸ்திரேலிய அணி 33.1 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

குரூப் ஆட்டங்களில் இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. குறிப்பாக அடிலெய்ட் மைதானத்தில் பாகிஸ்தானோடு நடந்த ஆட்டத்தில் 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய பேட்ஸ்மென்களில் ஷிகர் தவான் 8 மேட்சுகளில் 412 ரன் எடுத்தார்; இதில் இரண்டு செஞ்சுரிகள் அடக்கம். ரெய்னா, கோலி, ரோஹித் ஷர்மா தலா ஒரு செஞ்சுரி அடித்தனர். உமேஷ் யாதவ் 18 விக்கட்டுகளும் ஷமி 17 விக்கட்டுகளும் எடுத்தனர்.

Indian English Writer – R K Narayan

0
rk narayan - 2026

–By Janaki Balasubramanian–

“R.K. Narayan’s writing is a gentle breeze that carries the essence of India to the hearts of readers around the world.”

R.K. Narayan was an Indian writer and novelist known for his work set in the fictional South Indian town of Malgudi. He was a leading author of early Indian literature in English along with Mulk Raj Anand and Raja Rao.

Narayan was born in Madras (now Chennai) in 1906. During his education, he studied English literature at the University of Madras. Following graduation, he held jobs as a journalist and a teacher before dedicating himself to writing full-time.

In 1935, Narayan released his debut book, Swami and Friends. It tells the story of a group of schoolboys growing up in Malgudi in a semi-autobiographical manner. The book was a commercial and critical triumph, and it made Narayan a well-known author in India. Later on, he produced several short stories and essays in addition to more than 30 novels. His writing has earned recognition for its subtle humour, accurate depiction of Indian culture, and emphasis on the common people of Malgudi.

Works

The English Teacher (1945), Waiting for the Mahatma (1955), The Guide (1958), The Man-Eater of Malgudi (1961), The Vendor of Sweets (1967), and A Tiger for Malgudi (1983) are a few of Narayan’s most well-known books. More than 30 languages have translated Narayan’s works.

Awards and Honors:

  • Sahitya Akademi Award: R.K. Narayan received the Sahitya Akademi Award in 1958 for his novel “The Guide.”
  • Padma Bhushan: In 1964, he was honored with the Padma Bhushan, the third-highest civilian award in India, for his exceptional contributions to literature.
  • AC Benson Medal: Narayan was awarded the AC Benson Medal by the Royal Society of Literature in 1980 for his outstanding service to English literature.
  • Padma Vibhushan: In 2000, he was posthumously awarded the Padma Vibhushan, the second-highest civilian award in India, for his exceptional and distinguished contributions to literature.

At the age of 94, Narayan passed away in 2001. He became known as one of the most significant writers from India throughout the 20th century.

Here are some of the themes that are often explored in Narayan’s work:

  • The conflict between tradition and modernity
  • The role of the individual in society
  • The importance of family and community
  • The search for meaning in life

The writings of Narayan have had a profound influence on Indian literature and culture. He contributed to the expansion of the readership for Indian literature and influenced how the rest of the world views India. Even today, many people read and respect his writing.

காவிரி மணல் திருட்டு, கனிம வளக் கொள்ளை… ‘விடியா அரசு’க்கு எதிராக கரூர் பாஜக., ஆர்ப்பாட்டம்!

bjp protest in karur - 2026

கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமைப்பு ரீதியாக உள்ள 22 நகர மற்றும் ஒன்றிய பகுதிகளில் ஆளுகின்ற மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து நகர வார்டு கிராம பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி அளவில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடும்ப அட்டை உள்ள அனைத்து மகளிர்க்கும் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும்,

திமுக அரசாங்கம் பதவி ஏற்ற காலத்தில் இருந்து இதுவரை தராமல் இருக்கும் மகளிர் உரிமை தொகையையும் சேர்ந்து வழங்க வேண்டும்,

மாதம் தோறும் மின்சார அளவை கணக்கீடு செய்ய வேண்டும். மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,

bjp protest in karur2 - 2026

காவிரி ஆற்றில் நடைபெறும் சட்டவிரோதமாக, அளவுக்கு அதிகமாக மணல் கடத்தலை தடுக்க வேண்டும்.

இது போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மேற்கு மாநகரம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவர் முருகேசன் தலைமை வைத்தார். மேற்கு மாநகர பொதுச்செயலாளர் மற்றும் விருந்தோம்பல் பிரிவு தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல் முருகன், மாவட்ட முன்னாள் ராணுவ பிரிவு ரத்தினம். மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டு பிரிவு தலைவர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

‘விடியா’ திமுக., அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் பாஜக., ஆர்ப்பாட்டம்!

செங்கோட்டை நகரில் பாஜக.,வினர் ஆர்ப்பாட்டம்.
செங்கோட்டை நகரில் பாஜக.,வினர் ஆர்ப்பாட்டம்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறிய திறனற்ற திமுக., அரசைக் கண்டிப்பது, தமிழகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் ரூ.1000 வழங்குவதாக வாக்குறுதி தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கண்ணீரில் வாழும் ஏழைக் குடும்பங்களை காக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டிப்பது.

மூன்று முறை மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வாகன பதிவுக் கட்டணங்கள் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்வு என மக்கள் மீது அனைத்து விதமான கட்டண உயர்வை விதித்து இருப்பதை கண்டிப்பது என்பது உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் பஞ்சாயத்துகள் வரை ஆயிரக்கணக்கான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் தங்கள் பகுதியில் கலந்து கொண்டனர்.

bjp protest madurai alankanallur - 2026

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் சந்தைமேடு பகுதியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, நகர் தலைவர் கார்த்திக், கிழக்கு மாவட்ட செயலாளர் சித்ரா தேவி ஆகியோர் தலைமை தாங்கினர். கிளைத் தலைவர்கள் கெங்கைவாசன், சுரேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மண்டல் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் இருளப்பன், ஶ்ரீமுருகன், காளிதாசன், கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாலமேட்டில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக.அரசைக் கண்டித்து சங்கர்கணேஷ் தலமையில் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது மாவட்டத் துணைத் தலைவர் சோணைமுத்து, மாவட்டச் செயலாளர் மாணிக்கம், மகளிர் அணி மாவட்ட பொது செயலாளர் முனீஸ்வரி சந்தானம், ராஜேஷ்/முனீஷ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மக்கள் விரோத, ஊழல் திமுக., அரசை எதிர்த்து அறப் போராட்டம் தொடரும்: அண்ணாமலை உறுதி!

bjp protest in chennai annamalai1 - 2026

தமிழகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்ப டும் என்று பாஜக., தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி இன்று பல்வேறு இடங்களில் பாஜக.,வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறிய திறனற்ற திமுக., அரசைக் கண்டிப்பது, தமிழகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் ரூ.1000 வழங்குவதாக வாக்குறுதி தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கண்ணீரில் வாழும் ஏழைக் குடும்பங்களை காக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டிப்பது.

மூன்று முறை மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வாகன பதிவுக் கட்டணங்கள் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்வு என மக்கள் மீது அனைத்து விதமான கட்டண உயர்வை விதித்து இருப்பதை கண்டிப்பது என்பது உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் பஞ்சாயத்துகள் வரை ஆயிரக்கணக்கான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் தங்கள் பகுதியில் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 200 வார்டுகளிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட 198-வது வார்டில் மாமன்ற உறுப்பினர் லியோ சுந்தரம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்…. மூன்றாவது முறையாக, “வேண்டும் மீண்டும் மோடி” என்ற குரல் நாடு முழுவதும் கேட்க தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது பாஜக., என்று கேட்பார்கள். இன்று வார்டு அளவிலும் பஞ்சாயத்து அளவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறோம். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத அரசாக திமுக., அரசு உள்ளது. நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்கள். ஆனால் 67 சதவீதம் பேருக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை.

இப்போது பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதிலும், எவ்வளவு பேரை குறைக்கலாம் என்று திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள். திமுக., தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும். பதவி ஏற்றது முதல் கணக்கிட்டு பதவி ஏற்றது முதல் கணக்கிட்டு ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.27 ஆயிரம் வழங்க வேண்டும். போலி திராவிட மாடல் ஆட்சியை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர்,

பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடுவார் என்பது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. திமுக., ஆட்சிக்கு வந்து 27 மாதங்களிலும் எதுவும் செய்யவில்லை. டாஸ்மாக் வருவாயை நம்பிதான் அரசு இருக்கிறது. தமிழகம் முழுவதும் என்ஐஏ., சோதனை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது தமிழ்நாடு தேச விரோதிகளின் புகலிடமாக மாறி உள்ளது. மணிப்பூர் பிரச்சினையை மத்திய அரசும், அந்த மாநில அரசும் இணைந்து தீர்த்து வைக்கும் என்றார்.

இதே போல் சென்னையில் கோட்டூர்புரத்தில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மேற்கு மாம்பலத்தில் எச்.ராஜா, கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் மாநில துணைத் தலைவர் கருநாக ராஜன், தியாகராய நகரில் வி.பி.துரைசாமி, வண்ணார பேட்டையில் பால்கனகராஜ், அண்ணா நகரில் மாவட்ட தலைவர் தனசேகர், வில்லிவாக்கத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் லதா சண்முகம், சைதாப்பேட்டையில் மாவட்ட தலைவர் காளிதாஸ் அண்ணாசாலை அஜீஸ் நகரில் ஊடகப் பிரிவு தலைவர் ரங்க நாயகலு, மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த், கே.கே.நகர் சிவன் பூங்கா அருகில் மாவட்ட செயலாளர் லலிதா மோகன், சாலி கிராமத்தில் வக்கீல் பிரிவு மாநிலச் செயலாளர் செந்தில் குமார், விருகை கிழக்கு மண்டல தலைவர் ஹரிஸ், வட்ட தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர்கள் பிரேம்நாத், ஊடகப் பிரிவு மாநில செயலாளர் செந்தில்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்றைய ஆர்ப்பாட்டம் குறித்து அண்ணாமலை சமூகத் தளத்தில் செய்த பதிவு:

மக்கள் நலனிற்கு எதிராகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் ஊழல் திமுக அரசைக் கண்டித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், கனிம வளக் கொள்ளையினைத் தடுக்க வேண்டும், பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பாக இன்று தமிழகமெங்கும், ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியிலும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

bjp protest in chennai annamalai - 2026

ஏழை எளிய மக்களை வதைக்கும் இந்த ஊழல் திமுக அரசினைக் கண்டித்து நடைபெற்ற இந்த அறப்போராட்டத்தில், சென்னை கிழக்கு மாவட்டம் 198வது வட்டத்தில், மாவட்டத் தலைவர் திரு சாய் சத்யன், 198 ஆவது மாமன்ற உறுப்பினர் திரு லியோ N. சுந்தரம் மற்றும் தமிழக பாஜக சகோதர சகோதரிகளுடன் நானும் பங்கேற்றேன்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, மக்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மது விற்பனை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிப்பது என ஒட்டுமொத்தமாக மக்கள் விரோதப் போக்கைத் தொடரும் இந்த ஊழல் திமுக ஆட்சிக்கு எதிரான தமிழக பாஜக அறப்போராட்டங்கள் தொடரும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் (12): 2011 போட்டி!

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பை 2011-
இந்தியா வென்றது

worldcup cricket 2011 - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்


2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மும்பையின் வான்கேடே மைதானத்தில் 2 ஏப்ரல் 2011 அன்று இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் தமது இரண்டாவது உலகக் கோப்பை வெற்றிக்காகப் போட்டியிட்டன; இலங்கை கடைசியாக 1996ஆம் ஆண்டிலும் இந்திய அணி 1983ஆம் ஆண்டிலும் வென்றன.

இறுதிப் போட்டியை நோக்கிய பயணம்

குரூப் A பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் இலங்கை நாக் அவுட்டுக்கு தகுதி பெற்றது. குரூப் ஆட்டங்களில் ஆறு ஆட்டங்களில் நான்கில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராகத் தோல்வியடைந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தோல்வியைச் சந்தித்தது. ஆஸ்திரேலியாவுடன் புள்ளிகள் சமநிலையில் இருந்ததால், நிகர ரன் ரேட் காரணமாக குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

B பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா, தென்னாப்பிரிக்காவை அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அவர்கள் தங்கள் ஆறு ஆட்டங்களில் நான்கில் வெற்றிகளைப் பெற்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தோல்வியடைந்தனர், அதே நேரத்தில் இங்கிலாந்துக்கு எதிரான அவர்களின் ஆட்டம் அதிக ஸ்கோரிங் ஆட்டமாக இருந்தபோதிலும் டையாக முடிந்தது.

காலிறுதியில் இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை அணி, துல்லியமாக இங்கிலாந்தை வீழ்த்தியது. இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களான திலகரத்ன தில்ஷான் மற்றும் உபுல் தரங்கா இருவரும் ஆட்டமிழக்காமல் சதம் அடித்து உலகக் கோப்பையில் முதல் விக்கெட்டுக்கு உலக சாதனை நிலைப்பாட்டை உருவாக்கினர். அரையிறுதியில் நியூசிலாந்துடன் மிகவும் ஆர்வத்துடன் போட்டியிட்டது; ஆனால் எளிதாக வென்றது. இந்தப் போட்டிகள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவின் திறமையான, வழக்கத்திற்கு மாறான பந்துவீச்சு, கட்டுப்பாடான பீல்டிங் மற்றும் இலங்கை டாப் ஆர்டரின் பேட்டிங் திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தியது.

இந்தியாவின் இரண்டு நாக் அவுட் போட்டிகளும் பரபரப்பான போட்டிகளாக இருந்தன. காலிறுதியில் ஆஸ்திரேலியாவைச் சந்தித்தது. ஆஸ்திரேலியா ஒரு வலுவான அணி; நடப்பு சாம்பியன்கள் வேறு. ஆஸ்திரேலியாவை 260 ரன்களுக்கு இந்தியா கட்டுப்படுத்தியது. இதற்கு இந்தியா மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின்னர் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த போதிலும் இலக்கை வெற்றிகரமாக எட்டியது. அரையிறுதி ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் சந்தித்தன; வரலாற்று ரீதியாக இந்த இரு அணியும் போட்டியாளர்கள்; மேலும் இரு நாட்டு பிரதமர்கள் இப்போட்டியைப் பார்க்க வந்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்தியா, இறுதியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இப்போட்டிக்கு முன்னர், இந்தியாவும் இலங்கையும் உலகக் கோப்பை வரலாற்றில் ஆறு முறை ஒன்றையொன்று எதிர்த்து விளையாடியிருந்தன. இலங்கை அணி நான்கிலும், இந்திய அணி இரண்டிலும் வென்றிருந்தன. இலங்கையை எதிர்த்து விளையாடிய ஒருநாள் போட்டிகளில் இந்தியா 67 வெற்றிகளையும், 50 தோல்விகளையும் பெற்றிருந்தது. 11 போட்டிகள் வெற்றி தோல்வியின்று முடிவடைந்தது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்பது இது மூன்றாம் முறையாகும். இந்தியா 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்றது; 2003ஆம் ஆண்டுப் போட்டியில் தோல்வி அடைந்தது. இலங்கை 1996 போட்டியில் வென்றும், 2007 போட்டியில் தோல்வியும் அடைந்தது. 1996 போட்டியில் துடுப்பாட்ட வரலாற்றில் உலக சாதனைகள் நடத்தியுள்ள சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன் இருவருக்கும் இதுவே கடைசி உலகக்கிண்ணப் போட்டியாக இருந்தது.

இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார டாசில் வென்று முதலில் மட்டையாடத் தீர்மானித்தார். சாகிர் கானின் சீரிய பந்துவீச்சையடுத்து இலங்கை அணி துவக்கத்தில் மெதுவாக ஆடியது. தனது முதல் மூன்று ஓவர்களில் ஒரு ரன் கூடக் கொடுக்காது தனது ஐந்து ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்த சாகிர் உபுல் தரங்கவின் விக்கட்டையும் கைப்பற்றினார். ஆனால் மற்ற முனையில் காயமடைந்த ஆசீஷ் நேராவிற்கு மாற்றாக வந்திருந்த ஸ்ரீசாந்த் தனது எட்டு ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்தார். இலங்கை 17வது ஓவர் முடிவில் 60/2 என்ற நிலையில் மகெல ஜயவர்தன ஆடப் புகுந்தார். 88 பந்துகளில் 103* ஓட்டங்கள் எடுத்து அணிக்குப் புத்துயிர் ஊட்டினார். இவருடன் இணைந்து நன்றாக அடித்து ஆடிய நுவன் குலசேகர மற்றும் திசாரா பெரேரா உதவியுடன் இலங்கை அணி தனது ஆட்ட முடிவில் 274/6 எடுத்தது.

இதற்கு எதிராக ஆடத்துவங்கிய இந்திய அணி துவக்கத்திலேயே சேவாக் மற்றும் சச்சினை இழந்து 31/2 என்ற நிலையை அடைந்தது. விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இணைந்து ஆட்டத்தை நிலைப்படுத்துமாறு ஆடி வந்தவேளையில் அணியின் ரன்கள் 114 ஆக இருந்தபோது கோலி, திலகரத்ன டில்சான் பந்துவீச்சில் பந்துவீச்சாளருக்கே காட்ச் கொடுத்து வெளியேறினார். இந்நிலையில் களமிறங்கிய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி கம்பீருடன் இணைந்து நான்காவது இலக்குக்கிற்கு 109 ரன்கள் சேர்த்து அணியை நல்ல நிலைக்கு முன்னேற்றினார். கம்பீர் 97 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறியபோது களமிறங்கிய யுவராஜ் சிங்குடன் இணைந்து ஆடிய தோனி 79 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து இந்திய வெற்றிக்கு வழிகோலினார். தோனி நுவன் குலசேகரவின் பந்தை களத்திற்கு வெளியே அடித்து ஆறு ஓட்டங்கள் பெற இந்தியா வெற்றி இலக்கை எட்டி உலகக் கோப்பையை வென்றது.

சாதனைகள்

எட்டு ஓவர்களில் 39 ரன் கொடுத்த முரளிதரனுக்கு இதுவே கடைசி ஒருநாள் போட்டியாகும். இவரது முதல் மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தியாவுடனேயே நிகழ்ந்தன. இலங்கையின் மகெல ஜயவர்தன உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஒன்றில் நூறு ஓட்டங்கள் எடுத்த ஆறாவது பேட்ஸ்மென் ஆவார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகளில் தோற்ற அணியில் நூறு அடித்த முதல் துடுப்பாட்டக்காரரும் அவரே. இதற்கு முன்னர் கிளைவ் லொயிட், விவியன் ரிச்சர்ட்ஸ், அரவிந்த டி சில்வா, ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் வெற்றிபெற்ற அணிகளில் நூறு அடித்துள்ளனர்.

ஆசிய நாடுகள் மட்டுமே பங்கேற்ற முதல் உலக கோப்பை இறுதி ஆட்டமாக இது அமைந்திருந்தது. 1992ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒரு ஆசிய நாடாவது பங்கேற்கும் ஆறாவது இறுதிப்போட்டியாகவும் இது அமைந்தது. 2007ஆம் ஆண்டும் இறுதிப்போட்டியில் பங்கேற்ற இலங்கை அணிக்கு இது தொடர்ச்சியான இரண்டாவது முறையாகும். இந்தியா, இலங்கை இருவருக்குமே இறுதிப்போட்டியில் இது மூன்றாவது முறையாகும்.

ஓர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மிக உயர்ந்த இலக்கினை எட்ட முயன்ற முயற்சியாக இந்தியாவின் 275 ஓட்ட இலக்கு அமைந்திருந்தது. இறுதிப்போட்டியில் இரண்டாவதாக ஆடிய அணி வெல்வது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர் இலங்கை 1996ஆம் ஆண்டும் ஆத்திரேலியா 1999ஆம் ஆண்டும் இவ்வாறு வென்றுள்ளன. உலகக் கோப்பையை ஒருமுறைக்கும் மேலாக வென்ற நாடாக இந்தியா தன்னை மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியாவுடன் இணைத்துக் கொண்டது.

உலகக் கோப்பை வரலாற்றிலேயே இரண்டாம் முறையாக ஓர் போட்டி நடத்தும் நாடு கோப்பையை வென்றுள்ளது. போட்டி நடத்தும் நாடுகளில் ஒன்றாக இருந்த இலங்கை 1996ஆம் ஆண்டு இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. இருப்பினும் போட்டி நடத்தும் நாடொன்று தன் நாட்டிலேயே அந்த வெற்றியைப் பெற்றது இதுவே முதல்முறையாகும்

நெல்லை, திருச்சி உள்பட, தமிழகத்தில் 9 மாவட்டங்களில் என்ஐஏ., அதிரடி சோதனை!

nia officials

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்த, பாமக., முன்னாள் நகரச் செயலாளரான ராமலிங்கம் (45) கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி இரவு அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அந்தப் பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதைக் கண்டித்து, அவர் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தக் கொலை தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிந்து பலரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்குதேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ.,) மாற்றப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் சார்ந்த எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில், ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இன்று மீண்டும் என்ஐஏ., அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர். திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை உள்ளட்ட 9 மாவட்டங்களில் சோதனை நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள எஸ்டிபிஐ., கட்சித் தலைவர் முபாரக் வீடு உட்பட தமிழகம் முழுவுதும் 24 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ.,) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரிழந்தூர் பட்டகால் தெருவில் வசிக்கும் முகமது ரபிக் மகன் நிஷார் அகமது.48. என்பவரது வீட்டிற்கு 5 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை நடராஜபுரம் தெற்கு காலனியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த அக்ரூதீன், கும்பகோணத்தை சேர்ந்த அப்துல் மஜீத், ராஜகிரி பகுதியை சேர்ந்த முகமது பாரூக், திருபுவனம் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா ஆகியோர் வீடுகளில் என்ஐஏ சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் சுமார் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள இப்ராஹிம் ராவுத்தர் வீதியில் பிஎப்ஐ அமைப்பின் முன்னாள் நிர்வாகி அப்பாஸ் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்(என்.ஐ.ஏ) சோதனை மேற்கொண்டனர்.

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ டிப்பிக்கல் சந்தானம் படம்தானாம்!

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

DD returns - 2026

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.

‘இவன் வேற மாதிரி’, ‘வேலையில்லா பட்டதாரி’ புகழ் சுரபி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், ரெடின் கிங்ஸ்லி, தீனா, தங்கதுரை, மசூம் ஷங்கர், மானசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் உடன் பணிபுரிந்தவரும், தனிப் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்தவருமான ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தீபக் குமாரும், படத்தொகுப்பை ஸ்ரீகாந்தும், கலை இயக்கத்தை மோகனும் கையாண்டுள்ளனர்.

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்:

“இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரையிலிருந்து வந்திருக்கிறேன். இப்படத்தின் டீம் மிகவும் அருமையான டீம். இன்றைய காலகட்டத்தில் அழ வைப்பதும் உணர்ச்சிவசப்பட வைப்பதும் மிகவும் சுலபம், ஆனால் மனம் விட்டு சிரிக்க வைப்பது கடினம். ஆனால் இந்த கலையில் சந்தானம் சிறந்து விளங்குகிறார். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை நான் பார்க்கும் போது பல இடங்களில் அடக்க முடியாமல் சிரித்தேன். ரசிகர்களும் அதே போல சிரித்து மகிழ்வார்கள் என்று நான் நம்புகிறேன்.”

பாடலாசிரியர் துரை:

“இசையமைப்பாளர் ஆஃப்ரோவும் நானும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி உள்ளோம். இப்படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பை கொடுத்ததற்கு மிக்க நன்றி. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்.”

ஒளிப்பதிவாளர் தீபக்

“சந்தானம் அவர்களுடன் இது எனக்கு நான்காவது படம். அவருடன் பணிபுரிவது குதூகலமான அனுபவம். நகைச்சுவை என்பது எளிதான விஷயம் அல்ல, ஆனால் இப்படக்குழு அதை சாதித்து இருக்கிறது. பேயுடன் கேம் விளையாடுவது தான் படத்தின் மையக்கரு, படத்தை பார்ப்பவர்களும் தாங்களும் இதை விளையாடுவது போல் உணர்வார்கள். மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதையை இயக்குநர் பிரேம் ஆனந்த் வடிவமைத்துள்ளார்.”

இசையமைப்பாளர் ஆஃப்ரோ

“சுயாதீன இசைக்கலைஞரான நான் தற்போது திரைப்பட இசையமைப்பாளராக மாறி உள்ளேன். ஆல்பங்களுக்கு இசையமைப்பது சற்றே எளிது, ஏனென்றால் விதிகள் எதையும் பெரிதாக பின்பற்ற தேவையில்லை. ஆனால் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் போது சூழலுக்கு ஏற்ப இசையமைக்க வேண்டும், அது கொஞ்சம் சவாலான விஷயம். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த சந்தானம், இயக்குநர் பிரேம் ஆனந்த், தயாரிப்பாளர் மற்றும் நண்பர் சேது ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.”

சண்டை பயிற்சியாளர் ஹரி

“சந்தானம் அவர்களுடன் இது எனக்கு 12வது திரைப்படம். இப்படத்தில் அனைத்து நடிகர்களும் பங்குபெறும் சண்டை காட்சிகள் உள்ளன. பார்ப்பதற்கு மிகவும் ஜாலியாக இருக்கும்.”

படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்

“இந்த வாய்ப்புக்காக சந்தானம் மற்றும் இயக்குநர் பிரேம் ஆனந்த் அவர்களுக்கு நன்றி. குழந்தைகள் உட்பட ஒட்டு மொத்த குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பேய் படமாக இது இருக்கும்.”

கலை இயக்குநர் மோகன்

“‘டிடி ரிடர்ன்ஸ்’ முழுக்க முழுக்க செட்களிலேயே எடுக்கப்பட்ட படம். எனவே எனக்கு நிறைய வேலை இருந்தது, மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மிக பிரமாண்டமான அரங்கங்களை படத்துக்காக அமைத்தோம். இயக்குநர் ஒவ்வொன்றையும் தெளிவாக திட்டமிட்டு எங்களிடம் வேலை வாங்கினார். இப்படம் தொடங்கியது முதல் முடிவு வரை சிரிப்பு மழையாக ரசிகர்களை மகிழ்விக்கும்.”

நடிகர் ரெடின் கிங்ஸ்லி

“தான் மட்டும் இல்லாமல் தன் குழுவினரும் வளர வேண்டும் என்று சந்தானம் அவர்கள் நினைப்பார். நானும் அக்குழுவை சேர்ந்தவன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நகைச்சுவை நிறைந்த திரைப்படம் இது, டிடி ரிட்டர்ன்ஸ் போன்று இன்னும் பல திரைப்படங்களில் சந்தானம் நடிக்க வேண்டும்.”

பெப்சி செயலாளர் சுவாமிநாதன்.

“பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் மிக அதிக பொருட்செலவில் இப்படத்தை எடுத்து உள்ளார்கள். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து மிகவும் மகிழ்ச்சி. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்.”

நடிகர் கூல் சுரேஷ்

“சந்தானமும் நானும் 25 வருடங்களாக நண்பர்கள். இப்படத்தில் அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி.”

நடிகை மசூம் ஷங்கர்

“இப்படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. சந்தானம் மிகவும் திறமை வாய்ந்த நடிகர். இயக்குநர் பிரேம் ஆனந்த் திறம்பட திரைக்கதை அமைத்து அதை படமாக்கியுள்ளார். இப்படம் வெளியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.”

குழந்தை நட்சத்திரம் மானஸ்வி பேசியதாவது…

“சந்தானம் அங்கிள், இயக்குநர் பிரேம் ஆனந்த் அங்கிள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் நடித்தது மிகவும் ஜாலியான அனுபவம். பிரேக் சமயங்களில் விளையாடிக் கொண்டிருப்போம். அனைவரும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளோம்.”

நடிகர் பிபின்

“இந்த படத்தின் நகைச்சுவை மிகவும் பேசப்படும். எனக்கும் முனீஷ்காந்துக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தும். படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளியுங்கள்.”

நடிகர் சாய் தீனா

“சந்தானம் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும், ஏனென்றால் சினிமாவை தாண்டி மனிதநேயம் அதிகம் கொண்டவர் அவர். அவரும் இயக்குநர் பிரேம் ஆனந்தும் சேர்ந்து இப்படத்தில் நகைச்சுவை விருந்து படைத்துள்ளார்கள், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.”

நடிகர் சேது

“நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார்கள், இது திரையரங்குகளில் கண்டு ரசிக்க வேண்டிய படம். காணத்தவறாதீர்கள்.”

நடிகர் தங்கதுரை

“சந்தானம் அவர்கள் எனக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார், மிக்க நன்றி. இப்படத்தில் அவர் கோஸ்டை ரோஸ்ட் செய்துள்ளார். நீங்கள் அனைவரும் இப்படத்தை ரசித்து மகிழ்வீர்கள்.”

நடிகர் மாறன்

“இப்படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம், ஒவ்வொரு சீனுக்கும் அவ்வளவு பணியாற்ற வேண்டியதிருந்தது, அது குறித்து விரிவாக திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசுவோம், நன்றி.”

நடிகர் பெப்சி விஜயன்

“இப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு குழந்தையும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை மீண்டும் மீண்டும் திரையரங்குகளை காண்பதற்காக அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களிடம் கேட்பார்கள். இதை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.”

நடிகை சுரபி

“இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல், ஏனென்றால் பேய் காமெடி படத்தில் இப்போது தான் முதல் முறையாக நடித்துள்ளேன். இப்படத்தின் குழுவினர் என்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சந்தானம் அவர்களுக்கும், இயக்குநர் பிரேம் ஆனந்த் அவர்களுக்கும் மிக்க நன்றி.”

இயக்குநர் பிரேம் ஆனந்த்

“இன்று உங்கள் முன்னால் இயக்குனராக நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் சந்தானம் அவர்களும் ராம்பாலா அவர்களும் தான். கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தது முதல் இன்று வரை சுமார் 18 ஆண்டுகளாக சந்தானம் அவர்களுடன் பணியாற்றிக் கொண்டு வருகிறேன். இதுவரை வந்த பேய் படங்களில் பார்த்தது எதுவும் இப்படத்தில் இருக்காது. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ மிகவும் ஃபிரஷ்ஷாக இருக்கும். இப்படத்திற்காக அயராது உழைத்த எங்கள் குழுவிற்கு மனமார்ந்த நன்றி.”

நடிகர் சந்தானம்

“நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னவர்களுக்காக ‘டிடி ரிட்டர்ன்சை’ முழுக்க முழுக்க சந்தானம் படமாக எங்கள் குழுவினர் அனைவரின் ஒத்துழைப்போடு உருவாக்கி உள்ளோம். ‘தில்லுக்கு துட்டு’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. டிடி ரிட்டர்ன்சும் மக்களின் மனங்களை கவரும் என்று நான் நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும், இயக்குநர் பிரேம் ஆனந்த் இப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படம் இருக்கும். படத்திற்கு தங்கள் மேலான ஆதரவை வழங்குமாறு ரசிகப் பெருமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்து, பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.  

ஆக.6ல் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்: இந்து முன்னணி!

hindumunnani - 2026

இந்து முன்னணி மத்திய சென்னை பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 21 நேற்று மாலை அமைந்தகரை பகுதி அய்யாவு திருமண மகாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் க. பக்தவத்சலம், மாநில செய்தி தொடர்பாளர் ஏ.டி. இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிகாட்டினார்கள்.

கடந்த 16ஆம் தேதி மத்திய சென்னை மாவட்டத்தில் 13 இடங்களில் சிறப்பாக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்தியதற்கு இந்தக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள்.

வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் சென்னை ஓட்டேரி ஹேமராஜ் பேலஸில் நடத்துவது.

ஆடி வெள்ளிக் கிழமைகளில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடத்துவது.

வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி சென்னை மாநகரத்தில் அனைத்து கோவில்களிலும் உழவாரப்பணி சிறப்பாக செய்வது. அதற்காக அனைத்து ஆன்மிக அமைப்புக்கள் சிவனடியார் திருக்கூட்டத்தார் ஆகியோரை இணைத்து நடத்துவது ஆகிய விஷயங்கள் முடிவு செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாநகர, மாவட்ட, தொகுதி, வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.