Home Blog Page 5613

தமிழகத்தின் ஊடகங்கள் நமக்கு கிடைத்த சாபங்கள் / அபாயங்கள்.

8-write-down8
தமிழக மக்கள் அறியப்பட வேண்டிய தமிழகத்தின் தலையாய பிரச்சனைகள் ஏராளம். அறிவிக்கப்பட்ட திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் இருப்பவை எத்தனையோ? மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய செய்திகளை நிகழ்வுகளை எல்லாம் காட்டப்படமால் அரசியல் கழிவுகளில் கேமராவை வைத்து அருவருத்தக்க விதமாக ஒளிபரப்பி வருகின்றனர். வெளிமாநிலங்களில் வாழும் அறிவார்ந்த நண்பர்கள் இது தான் இன்றைய தமிழக அரசியலா என கேலியாக கேட்பது வேதனையளித்து வெட்கப்பட வைக்கின்றது.

ஒவ்வொரு ஊடகமும் ஒரு சாதிப்பிரிவை, ஒரு சாதிக் கட்சியை தூக்கி சுமக்கின்றன. அயோக்கியத்தனம் செய்பவர்களையும் ஹரிச்சந்தர்கள் போல புனிதர்களாக காட்டுகின்றன.
மறைக்க வேண்டிய, மறுக்கப்பட வேண்டிய செய்திகளை எல்லாம் பேசப்படாமல் சில சில்லுவண்டுகளுக்கு சிகை அலங்காரம் செய்து காட்டுகின்றன. அத்துடன் முடிந்தால் கூட பரவாயில்லை. அதனை தலைப்பாக கொண்டு ஒரு மணிநேர விவாதம். விவாதம் நடத்துகின்றோம் என்ற பெயரில் இவர்கள் இலாபத்தை ஈட்டிவிடுகின்றனர். ஆனால் காண்பவர்களின் நேரம் விரயமாகின்றது. மக்களும் இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் அந்த விவாதம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். தொலைக்காட்சி விவாதங்களே கூடாது என சொல்லவில்லை. எதைப் பற்றி பேசுகின்றோம், யாரை வைத்து பேசுகின்றோம் என்பது தான் இங்கு பிரச்சனையே. இந்தியாவின் பொருளாதார பிரச்சனைகள், இந்தியாவின் வாழ்வாரார பிரச்சனைகள், இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் சரியா? வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம். GDP வீழ்ச்சி. அமெரிக்க-லத்தீன் நாடுகளைப் போல இந்தியாவும் பின்தங்குமோ என்ற பீதி. இவற்றை எல்லாம் குறித்து நடுநிலையுடன் பேசும் ஊடகங்கள் எத்தனை? இவர்கள் பேசாவிட்டாலும் பிரச்சனை இல்லை, அடுத்தவர்கள் பேசிவிடக் கூடாது என்பதற்காக பயனுள்ள பேச்சுக்களை இருட்டடிப்பு செய்ய வேண்டுமென தீபா வீட்டு வாயிலில் அல்லவா தீபம் ஏந்தி காத்துக் கிடக்கின்றார்கள். இவர்கள் ஊடகங்களா? உள்ளதை உள்ளபடி செய்தியாக காட்டும் இதழியல் இலக்கணம் இவர்களில் எத்தனைப் பேரிடம் இருக்கின்றது. ஊடக தர்மம் என்றால் ஊடகத்தினர் அரசியல்வாதிகளிடம் கேயேந்துவதா என்று சிந்திக்க வேண்டியதாகின்றது.

தமிழ் செய்தி தொலைக்காட்சிகளின் விவாதங்களில் ஒரு குறிப்பிட்ட சமூக ஆர்வலர்களும், ஒருசில பத்திரிகையாளர்கள் மட்டுமே பங்கெடுப்பது ஏன்? தமிழகத்தில் மூத்த பத்திரிகையாளர்களே இல்லையா? இதிலும், பலர் பகுதிநேரமாக ஒரு குறிப்பிட்ட பத்திரிகைக்கு மட்டும் எழுதி விட்டு அரசியல் ஆழம் அறிந்தவர் போல் பேச வைப்பது ஏன்? இது போன்றவர்களால் தங்களின் சில சுயவிருப்பங்கள் தீர்க்கப்படுவதால் அதுபோல் குறிபிட்டவர்களுக்கு தொலைக்காட்ட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் குழுவினர் வாய்ப்பு அளிப்பதாகக் கூறப்படு்கிறது. இந்தநிலை, ஆங்கிலம் மற்றும் இந்தி செய்தி தொலைக்காட்சிகளில் பார்க்க முடியவில்லை. இவர்கள் அந்த பிரச்சனை சம்மந்தப்பட்டவர்களை தேடிப்பிடித்து வெளியூர்களில் இருப்பினும் தொலைபேசி வாயிலாக விவாதத்தில் சேர்க்கிறார்கள். ஆனால், தமிழில் இதுபோல் அன்றி, சில குறிப்பிட்ட ஆர்வலர்களே அனைத்து அறிவு சார்ந்த பிரச்சனைகளிலும் விவாதம் செய்ய வருகின்றனர். அதேபோல், தேசிய அளவில் நடக்கும் முக்கிய சம்பவங்கள் தமிழில் இடம் பெறுவது அதிசயமே! ஆங்கிலம் மற்றும் இந்தி தொலைக்காட்சிகள் தேசியப் பிரச்சனிகளை விவாதிக்க, தமிழில் சசிகலா, ஒ.பி.எஸ் போன்ற எல்லையை விட்டு தமிழகப் பார்வையாளர்களை தாண்ட விடுவதில்லை. இந்த நிலை மாற வேண்டியது மிக, மிக அவசியம்.

இலங்கையில் நடந்த இன அழிப்பின் யுத்தக் காட்சிகளை மூடிமறைத்து முத்தக் காட்சிகளை தலையங்கமாக எழுதிய ஊடகங்கள் தானே இவை? இவர்களிடம் ஊடக தர்மம் எதிர்பார்ப்பது கொட்டும் தேள் கொடுக்கில் தேன் வடியுமா என எதிர்ப்பார்ப்பது போலாகும்.

கரப்ஷன் என்றால் வெறும் ஊழல் என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. அதில் எல்லா வகையான அயோக்கியத்தனமும் உள்ளடங்கும். இதழியியல் இலக்கணத்தை , ஊடக தர்மத்தை கடைப் பிடிக்காதவர்களும் குற்றவாளிகள் தான்! நடுநிலை என்று கூறிக் கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றுவதும் குற்றம் தான். நாட்டைப் பிடித்த நோய்களில் பத்திரிகையும் ஒன்று என்றார் பெரியார் எனும் தீர்க்கதரிசி. இந்த கிழவனை இந்த உலகம் சும்மாவா கொண்டாடுகின்றது என்ற கேள்விக்கும் மேற்கூறிய கருத்தே பதிலாக கிடைக்கின்றது. ஆனால் அவரையும் அவர் கூறியவற்றையும் மறந்துவிட்டு இவர்களிடம் இன்னமும் எதிர்பார்த்து ஏமார்ந்துக் கொண்டு இருக்கின்றோம் என்பதே நிதர்சனம்.

#Television #ஊடகங்கள் #நாளேடுகள் #வாராந்தரஇதழ்கள்
#தமிழகஊடகசாபம்
#இருட்டடிப்பு
#தொலைக்காட்சிவிவாதங்கள்

#KSRadhakrishnanpostings
#KSrpostinga
கே.எஸ் இராதாகிருஷ்ணன்
14-06-2017

விவசாயி கடன் தள்ளுபடி; மத்திய அரசு கைவிரிப்பது நியாயமல்ல: வைகோ

vai ko
விவசயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி விவகாரத்தில், மத்திய அரசு கைவிரிப்பது நியாயமல்ல என்று மதிமுக., பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

வங்கிகளின் வாராக் கடன் குறித்து வங்கித் தலைவர்களுடன் ஜூன் 12 ஆம் தேதி ஆலோசனை நடத்திய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும். அவ்விதம் தள்ளுபடி செய்வதற்கhன தொகையை மாநிலங்கள் தங்களது உள் வள ஆதாரங்கள் மூலம் திரட்ட வேண்டும். மத்திய அரசு நிதி உதவி அளிக்கhது” என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.

விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசு, மாநிலங்களுக்கு உதவ முடியாது என்று அருண்ஜெட்லி தெரிவித்துள்ள கருத்து மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பருவ மழை பொய்த்து, கடும் வறட்சியால் வேளாண்மைத் தொழில் முற்றாக நலிந்துவிடும் அபாயத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. கடன் சுமையைத் தாங்க முடியாமல் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 200 விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

விவசாயக் கடன் தள்ளுபடி கோரிக்கையை முன்வைத்து மராட்டியம் மற்றும் மத்தியப் பிரதேச மாநில விவசாயிகள் கடந்த பத்து நாட்களாக போராடி வருகின்றனர். தமிழகத்தில் விவசாயிகளின் வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியிலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு கhணாத வறட்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு ரூ.39595 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், மத்திய அரசு சார்பில் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1748.28 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொகை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவோ, வறட்சி நிவாரணப் பணிகளுக்கோ போதுமானது அல்ல. இந்நிலையில், விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசு உதவ முடியாது என்று கை விரித்து விட்டது நியாயமானது அல்ல.

மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் வரி வருவாய் 32 விழுக்கhடு அளவிலிருந்து 42 விழுக்கhடு அதிகரிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நிதி ஆயோக் வகுத்துள்ள புதிய விதிமுறைகளின்படி மக்கள் தொகை, வனப் பரப்பு மற்றும் வருமான அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால், வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று தமிழகத்திற்கு 13 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த நிதி ஒதுக்கீட்டின் அளவு 4.969 விழுக்கhட்டிலிருந்து, 14 ஆவது நிதிக்குழு பரிந்துரையில் 4.023 விழுக்கhடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு மத்திய வரிவருவாய் பகிர்ந்தளிக்கப்படுதில் பாரபட்சம் கhணப்படுகிறது.

வங்கிகளின் வாராக் கடன் அளவு ரூ.6 இலட்சம் கோடி ரூபாயை தாண்டிவிட்டதால் வாராக் கடனை வசூலிப்பதற்கு ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகhரங்கள் அளித்து மத்திய அரசு இயற்றி உள்ள சட்டத்திற்கு கடந்த மே 2017 இல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக அருண் ஜெட்லி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். தொழில் அதிபர்களும், பெரு நிறுவனங்களும் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை வசூலிக்க முடியாததால், மத்திய அரசு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை வழங்கி உள்ளது. பாரத Þடேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று ஏமாற்றிவிட்டு, வெளிநாடு சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் வங்கிக் கடனை வசூலிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.

இந்நிலையில் விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறுவதும், விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு உதவிட முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து இருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மாநிலங்களின் நிதிச் சுமைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

என்று அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

தீபா சார்பில் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு!

deepa_jayakumar

சென்னை:
ஜெ.தீபாவின் சார்பில் அவரது கையெழுத்துடன் கூடிய புகார் மனு ஒன்று செவ்வாய்க்கிழமை நேற்று சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது. தீபாவின் சார்பில் செய்தித் தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் என்பவர் புகார் மனுவை நேரில் வந்து கொடுத்துச் சென்றார்.

அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று எனது சகோதரர் தீபக் அழைத்ததின் பேரில், நான் எனது அத்தை ஜெயலலிதா வீட்டிற்கு சென்றேன். என்னுடன் எனது ஆதரவாளர்கள் ராஜா, ராமச்சந்திரன், கார்த்திக், பாலாஜி உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர். என்னுடன் பத்திரிகை நிருபர்களும் வந்திருந்தார்கள்.

டி.டி.வி.தினகரனின் தூண்டுதலின் பேரில், அவரது ஆதரவாளர்கள் எங்களை அடித்து வெளியே தள்ளினார்கள். எங்களுடன் வந்த பத்திரிகை நிருபர்களும் தாக்கப்பட்டனர். கோதண்டராமன் என்பவரும் அவர்களுடன் இருந்த மேலும் 6 நபர்களும் எங்களை தாக்கினார்கள். என்னை வரவழைத்த தீபக் துணையோடு டி.டி.வி. தினகரனின் தூண்டுதலின்பேரில் எங்கள் மீது தாக்குதல் நடந்தது. எங்களை தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். – என்று கூறப் பட்டிருந்தது.

முன்னதாக, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு அவரது அண்ணன் மகள் தீபா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சென்றார். அவருடன் அவருடைய ஆதரவாளர்களும் சென்றனர். அப்போது ஜெயலலிதா வீட்டில் தீபாவின் தம்பி தீபக் மற்றும் சிலருடன் ஏற்பட்ட மோதலில் தீபாவும், அவரது கணவர் மாதவனும், அவரது ஆதரவாளர்களும் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக புகார் கூறப்பட்டது. தீபாவும் மாதவனும் ஜெயலலிதா வீட்டு முன்பு நீண்ட நேரம் தர்ணா போராட்டம் நடத்தினர். போலீசார் சமாதானப் படுத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாதவன் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்தப் புகார் மனுவில், தீபாவுக்கும் தனக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் ஜெயலலிதா வீட்டில் தங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

“பெரியவாளைப் பற்றி இரண்டு வெளிநாட்டுப் பெண்களின் கருத்து”

0023 zpsf9c90622 - 2026

“எங்களுக்கு எல்லாம் தெரியும்.வேத புராண சாஸ்திரங்களை
எல்லாம் கத்துண்டுட்டோம்.இனி தெரிஞ்சுக்க எதுவும்
இல்லைன்னு நினைச்சுண்டு இருந்தோம் ஆனா,
மகாபெரியவாகிட்டே பேசினதும்தான் தெரிஞ்சுது.நாங்க
இன்னும் கத்துக்க ஆரம்பிக்கவே இல்லை, தொடக்கப்
பள்ளியிலேயே இருக்கோம்னு”-(இந்து மதத்தைப் பற்றி
படிச்சுத் தெரிஞ்சுண்டு அதுலயே ஆராய்ச்சி பண்ணி
டாக்டர் பட்டம் வாங்கிய வெளிநாட்டு பெண்மணிகள்)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
நன்றி-குமுதம் பக்தி-30-06-2016 இதழ் (சுருக்கம்)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

1967 வாக்குல ஒருநாள் பெரியவா தரிசனம் பண்றதுக்காக
வந்திருந்தார் ஒரு பக்தர்.மடத்துக்கு அடிக்கடி வர்றவர்.
நிறைய கைங்கரியம் எல்லாம் செய்யறவர். அதோட
ஆசார்யா மேல அபாரமான பக்தி உள்ளவர்ங்கறதால
மடத்துல எல்லாருக்குமே அவரைத் தெரியும்.

மடத்துக்கு அவர் வந்திருந்த அன்னிக்கு ஆசார்யாளை
தரிசிக்க நிறையவே கூட்டம் இருந்தது.ஆனா,பெரியவா
வழக்கமா தான் அமர்ந்து தரிசனம் தர்ற அறைக்கு வரவே
இல்லை. அதுக்கு பதிலா கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து
வெளிநாட்டுப் பெண்கள் ரெண்டுபேரோடு பேசிண்டு இருந்தார்.

வழக்கமான நேரத்தைவிட ஒரு மணி நேரம் கூடுதலா ஆச்சு.
கூட்டத்துல சிலர்,மெதுவா முணு முணுக்க ஆரம்பிச்சா.
அடுத்து ரெண்டு மணிநேரம் நகர்ந்தது.கொஞ்சம் சத்தமாகவே
பேசிக்க ஆரம்பிச்சா எல்லாரும்.

அந்த சமயத்துல மடத்துக்கு வழக்கமா வரக்கூடிய அந்த
பக்தர் கொஞ்சம் படபடப்பாவே ஆயிட்டார்.

“என்ன இது..பரமாசார்யா அந்த வெளிநாட்டுக்காரிகளோட
இவ்வளவு நேரம் பேசிண்டு இருக்காரே.அவாள்லாம் நம்ப
கலாசாரத்தையே இழிவா பேசறவாளாச்சே.அவாளுக்கு
எதுக்கு இத்தனை நாழி தரிசனம் தரணும்?.பெரியவாளையே
தெய்வமா நினைச்சு நாங்க எல்லாரும் காத்துண்டு
இருக்கறச்சே..அவாளுக்குப் போய் உபதேசம் செஞ்சுண்டு
இருக்காரே!” அப்படின்னெல்லாம் கொஞ்சம் உரக்கவே
பேச ஆரம்பிச்சுட்டார்.

ஒருவழியா வெள்ளைக்காரிகளோட பேசி முடிச்சுட்டு வந்தார்
பரமாசார்யா.அவர் வந்ததும் சட்டுன்னு எல்லாரும் வாயைப்
பொத்திண்டு பவ்யமா இருக்கிறமாதிரி மாறிட்டா.இதெல்லாம்
ஆசார்யாளுக்குத் தெரியாதா என்ன? அதனால அவர் வந்ததும்
தன்னோட பக்கத்துல நின்னுண்டிருந்த அணுக்கத் தொண்டரை
கூப்பிட்டார்.

“இந்த இங்கிலீஷ்காரிகள் அப்படி என்ன பெருசா பண்ணிட்டா?
அவாளுக்கு எதுக்கு உபதேசம்னு, இங்கே பலருக்கு
தோண்றாப்புல இருக்கு. அதனால வந்தவா யாரு? அவாகூட
என்ன பேசினேங்கறதை நீயே சொல்லிடு” அப்படின்னார்.

தொண்டர் சொல்கிறார்;

“மகாபெரியவாளை தரிசனம் பண்ணி அவரோட உபதேசத்தைக்
கேட்கறதுக்காக ஜெர்மனியல இருந்து வந்திருந்தா அந்த ரெண்டு
பெண்களும். இன்னிக்கு பரமாசார்யா அவாளோட பேசினதை
எல்லாரும் பார்த்தேள்.ஆனா,அவா மடத்துக்கு வந்து மூணு நாள்
ஆச்சு.மூணு நாளைக்கு முன்னால அவா வந்ததும்
பரமாசாரியார்கிட்டே போணும்னு சொன்னா. அப்போ அவா
ரெண்டுபேரையும் பார்த்து ‘ஜஸ்ட் வெயிட்!’னு சொல்லிட்டு
நகர்ந்து போயிட்டார் பெரியவா.

“அப்படி அவர் சொன்னப்போ அவா எங்கே நின்னுண்டு
இருந்தாளோ அதே இடத்துல உட்கார்ந்துண்டு ருத்ர ஜபம்
பண்ணிண்டு இருந்தா.ரெண்டொரு தரம் மடத்துல இருந்து
குடுத்த பாலும்,பழமும் மட்டும் சாப்டுட்டு விரதம் மாதிரி
உட்கார்ந்துண்டு இருந்தா.

“ஒருவேளை பெரியவா மறந்திருப்பாரோங்கற எண்ணத்துல
அவர்கிட்டே நினைவுபடுத்துட்டுமான்னு நானே இவாகிட்டே
கேட்டேன்.ஆனா, என்ன சொன்னா தெரியுமா?
“அவர் பெரிய மகான்.மறதியெல்லாம் அவருக்கு வரவேவராது
எங்களுக்கு எப்போ உபதேசம் பண்ணணும்கறது அவருக்குத்
தெரியும். கண்டிப்பா அவரே கூப்பிடுவார். நீங்க யாரும்
அவரைத் தொந்தரவு பண்ண வேண்டாம்” அப்படின்னு
இங்க்லீஷ்ல சொன்னா.

“மூணு நாளைக்கு அப்புறம் இன்னிக்குத்தான் அவாளோட
பேசியிருக்கார் ஆசார்யா. அவா ரெண்டுபேரும் நம்மளோட
இந்துமதத்தைப் பத்தியும், வேதபுராணங்கள்,பண்பாடு
இதையெல்லாமும் அமெரிக்காவுல உள்ள ஒரு
பல்கலைக்கழகத்துல படிச்சுத் தெரிஞ்சுண்டு அதுலயே
ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் வாங்கியிருக்கா.

அதேசமயம் நாங்கள் முழுசா தெரிஞ்சுண்டுட்டோமா?
இல்லை இன்னமும் பாக்கி இருக்கான்னு தெரியாம,
அமெரிக்க நாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள்கிட்டே
விளக்கம் கேட்டிருக்கா.அதுக்கு அதை நாமள்லாம்
தீர்மானிக்க முடியாது. உங்களோட சந்தேகத்துக்கெல்லாம்
விளக்கம் சொல்லக்கூடியவர் இந்தியாவுல காஞ்சி காமகோடி
மடத்து ஆசார்யாள இருக்கிற பரமாசார்யார் மட்டும்தான்.
அவர்கிட்டேயே போய்க் கேளுங்கோ!”ன்னு சொல்லியிருக்கா
அந்த அமெரிக்க பேராசிரியர்கள்.

அவாளுக்கு உபதேசம் பண்ணக்கூடிய சரியான ஞானி நம்ப
பெரியவா மட்டும்தான்கறதை தெரிஞ்சுண்டு,அவரோட பேசி
தங்களோட சந்தேகத்தை கேட்டுக்கத்தான் வந்திருந்தா அவா
வந்தவா, மூணுநாளா காத்துண்டு இருந்தும் ஒரு கிஞ்சித்தும்
முணுமுணுக்கலை.சலிச்சுக்கலை.பெரியவா மேல் அவ்வளவு
பக்தி!” அந்தத் தொண்டர் சொல்லி முடிச்சு அதேசமயத்துல
பிரசாதம் வாங்கிண்டு புறப்படறதுக்காக மறுபடியும் பெரியவா
முன்னால வந்தா அந்த வெளிநாட்டுப் பெண்கள்.

கூட்டத்துல ஒருத்தர்,”மகாபெரியவாளைப்பத்தி உங்களோட
அபிப்ராயம் என்ன?” அப்படின்னு அந்தப் பெண்கள்கிட்டே
இங்கிலீஸ்ல கேட்டார்.

“பிஃபோர் வீ மெட் ஹிஸ் ஹோலினஸ்..னு தொடங்கி
ஆங்கிலத்துல அவா சொன்னது என்ன தெரியுமா?

“இந்த மகாபுருஷரை தரிசனம் பண்றதுக்கு
முன்னாலவரைக்கும் எங்களுக்கு எல்லாம் தெரியும்.வேத
புராண சாஸ்திரங்களை எல்லாம் கத்துண்டுட்டோம்.இனி
தெரிஞ்சுக்க எதுவும் இல்லைன்னு நினைச்சுண்டு இருந்தோம்
ஆனா,மகாபெரியவாகிட்டே பேசினதும்தான் தெரிஞ்சுது.
நாங்க இன்னும் கத்துக்க ஆரம்பிக்கவே இல்லை, தொடக்கப்
பள்ளியிலேயே இருக்கோம் அப்படிங்கறது. இந்தப்
புண்ணியசீலரை தரிசிக்காம இருந்து இவ்வளவு நாளை
வீணடிச்சுட்டோமேன்னு தோணறது.எங்களோட ஆன்மா
இப்போதான் ஆனந்த நிலைன்னா என்னங்கறதை
தெரிஞ்சுண்டு. இருக்கு. இந்த மகான் இருக்கிற பூமிக்கு
வந்தோம்.அவரை தரிசித்தோம்.அவரோட பேசினோம்கறதே
எங்களுக்கு கிடைச்ச மகாபாக்யம்?” அப்படின்னு சொன்ன
அவா கண்ணுல இருந்து ஆனந்த பாஷ்பம் தாரை தாரையா
வழிஞ்சுது.

மகா பவ்யமா பெரியவாளைக் கும்பிட்டுட்டு பிரசாதத்தை
வாங்கிண்டு புறப்பட்டா அவா ரெண்டுபேரும்.

எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம்: இனியும் நீடிக்க வேண்டுமா பினாமி ஆட்சி?

kuuvaththur - 2026

தமிழ்நாட்டில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள சசிகலா – எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி செய்த முறைகேடுகள் மற்றும் தகிடுதத்தங்கள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த குற்றச்சாற்றுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதை அக்கட்சியின் உறுப்பினரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சசிகலா தலைமையிலான அணிக்கும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கும் பதவிச்சண்டை உச்சக்கட்டத்தில் இருந்தபோது சசிகலா அணியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அப்போது நடந்த பேரங்கள் தொடர்பாக இரு அணிகளையும் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பேசி, அவர்கள் தெரிவித்தக் கருத்துக்களை அவர்களுக்கே தெரியாமல் பதிவு செய்து ஆங்கிலத் தொலைக்காட்சியும், தமிழ்த் தொலைக்காட்சியும் வெளியிட்டுள்ளன.

பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சரவணனிடம் நடத்தப்பட்ட உரையாடலில்,‘‘சசிகலா அணியில் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் ரூ.6 கோடி தருவதாகக் கூறினர். அடுத்த நாள் பணம் தட்டுப்பாடு காரணமாக ரூ.2 கோடி பணமும், மீதத்திற்கு தங்கமும் தருவதாக உறுதியளித்தனர். அப்போதே அதைக் கொடுத்திருந்தால் நான் உட்பட யாருமே பன்னீர்செல்வம் அணிக்கு சென்றிருக்க மாட்டோம். பன்னீர் செல்வம் அணியில் சில உறுப்பினர்களுக்கு தலா ரூ. 1 கோடி கொடுத்துள்ளனர். வேறு சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வந்தால் அவர்களுக்கு பன்னீர்செல்வம் அணியில் அமைச்சர் பதவி வாங்கித் தருவேன்’’ என்று கூறியிருக்கிறார். சசிகலா அணியைச் சேர்ந்த சூலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜிடம் நடத்தப்பட்ட உரையாடலில், ‘‘சசிகலா அணி சார்பில் பணம் தரப்பட்டது உண்மை தான். அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற சில உதிரிக் கட்சி உறுப்பினர்களுக்கு ரூ.10 கோடிக்கும் அதிகமாக தரப்பட்டது’’ என்று கூறியுள்ளார்.

இரு சட்டப்பேரவை உறுப்பினர்களும் தெரிவித்த தகவல்கள் சிதம்பர ரகசியங்கள் அல்ல. அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். ஆனால், இந்த உண்மைகள் இப்போது ஆதாரங்களுடன் வெளிவந்திருப்பது தான் குறிப்பிடத்தக்கது ஆகும். அதிமுகவின் இரு அணியினரும் தங்களை உத்தமர்களாக காட்டிக் கொண்டாலும் அவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்க எப்படியெல்லாம் பேரங்களை நடத்தினார்கள் என்பது தமிழக மக்களுக்கு இப்போது புரிந்திருக்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்ல வாக்காளர்களுக்கு கையூட்டு, வென்று ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அதை தக்கவைத்துக் கொள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கையூட்டு, ஆட்சியமைக்க தடை ஏற்படுத்தாமலிருக்க உரியவர்களுக்கு கையூட்டு, இடைத்தேர்தலில் வெற்றி பெற முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மூலம் கையூட்டு, முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு கையூட்டு என ஆளும் அதிமுக பயணித்த பாதையைப் பார்த்தாலே அந்தக் கட்சியின் ஊழல் சாம்ராஜ்யத்தை உணர முடியும்.

தமிழக அரசியலை திமுகவும், அதிமுகவும் எந்த அளவுக்கு சாக்கடை ஆக்கியிருக்கின்றன என்பதற்கு இது சிறந்த உதாரணம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டு தருவது உள்ளிட்ட செலவுகளுக்காக அதிமுக ரூ.10,000 கோடியும், திமுக ரூ.6,000 கோடியும் செலவழித்திருக்கின்றன. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இத்தனை கோடிகளை வாரி இறைப்பவர்களால் எப்படி நல்லாட்சி வழங்க முடியும். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகம் சீரழிந்ததற்கு இரு கட்சிகளும் மறைமுகக் கூட்டணி அமைத்துக் கொண்டு அடித்தக் கொள்ளைகள் தான் காரணம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளைத் தடுக்க மத்திய, மாநில அரசு அமைப்புகளும் தவறி விட்டன. ஆட்சி மாற்றம் நடைபெற்ற நேரத்தில் இரு அணிகளின் உறுப்பினர்களுக்கு பணப் பட்டுவாடாவும், தங்கமும் போட்டிப்போட்டுக் கொண்டு வழங்கப்பட்டன என்பது குழந்தைகளுக்குக் கூட தெரிந்த உண்மை. ஒரு உறுப்பினருக்கு ரூ. 6 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணம் என்றால் சசிகலா அணியில் இருந்த 122 உறுப்பினர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.732 கோடி வினியோகிக்கப் பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு அமைப்புகளான சி.பி.ஐ, வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு, உளவுத்துறை ஆகியவற்றுக்கும், தமிழகக் காவல்துறைக்கும் தெரியாமல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினரிடம் இவற்றையெல்லாம் எவரும் வினியோகித்திருக்க முடியாது.

இராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு ரூ.4000 வீதம் கையூட்டு வழங்கப்பட்ட போது, அந்தப் பணம் எங்கிருந்து வினியோகிக்கப்பட்டிருக்கும் என்பதை சரியாக யூகித்து சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தி ஆதாரங்களை பறிமுதல் செய்தது. ரூ.4000 கொடுக்கப்பட்டதை கண்டுபிடித்த வருமானவரித்துறைக்கும் மற்ற அமைப்புகளுக்கும் ரூ.6 கோடி வீதம் கொடுக்கப்பட்டதைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதா? அல்லது இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனரா? என்பது மர்மமாக உள்ளது.

anbumani ramadoss - 2026

சசிகலா அணி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், பன்னீர்செல்வம் அணி உறுப்பினர்களுக்கும் கையூட்டு கொடுக்கப்பட்டதற்கு இதை விட வலிமையான ஆதாரம் தேவையில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆட்சியைப் பிடித்து, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கையூட்டு கொடுத்து ஆட்சியைத் தக்க வைத்து ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் பினாமி அரசு இனியும் நீடிக்கக் கூடாது. மேலும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 171(e) பிரிவின்படி கையூட்டு தருவதும், பெறுவதும் குற்றம் என்பதால் சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் மற்றும் கையூட்டு பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

– மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 

பா.ம.க. இளைஞரணித் தலைவர்

காஞ்சி மடத்தில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி: சுவாமிகளிடம் ஆசி

president in kanji mutt - 2026

சென்னை:
காஞ்சிபுரத்துக்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, இன்று மாலை காமாட்சியம்மன் கோயிலில் அம்மனை வழிபட்டார். காஞ்சிபுரம் வந்திருந்த அவரை மாவட்ட ஆட்சியர் பொன்னையா வரவேற்றார்.
காஞ்சிபுரம் சங்கரமடத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வரவேற்றார். தொடர்ந்து ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து அவர் ஆசி பெற்றார்.

president in kanchi mut - 2026

குடியரசுத் தலைவரது வருகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழர் நிலங்களை தமிழரே வாங்க வேண்டும்!

land srilanka Thellippazhai - 2026

யுத்தகாலத்தில் சிங்கள இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல் படைகளும்,அரசியல்வாதிகளின் பின்னணியுடனான ஜிகாதிக் குழுக்களும் இனப்படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிட்டும் அச்சுறுத்தியும் தமிழ்க் கிராமங்களை அபகரித்தன.

யுத்தத்தால் விவசாயம்,கால் நடைவளர்ப்பு,மீன்பிடி போன்ற தமிழ்க் கிராமங்களின் தொழில்கள் வீழ்ந்ததால் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்ததைப் பயன்படுத்தி எல்லையோரத்தில் ஆரம்பித்து படிப்படியாக அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி பல ஊர்களை விழுங்கிவிட்டார்கள்.

இதன் பிறகு சில தமிழ்க் கிராமங்கள் விழித்துக்கொண்டு நிலங்களை தமிழர் அல்லாதவர்களுக்கு விற்பதில்லை என்று தீர்மானித்தன.யாராவது நிலத்தை விற்கவிரும்பி அதை விலைகொடுத்து வாங்குவதற்கு தமிழர்கள் எவரும் இல்லாத நிலையில் அந்த நிலத்தை கோயில் பொதுநிதியிலிருந்து வாங்கும் செயற்திட்டத்தைக் கொண்டுவந்தன.இவ்வாறு தமிழ் நிலங்கள் பறிபோகாதவாறு கோயில்கள் நிதிநிறுவனங்களாகமாறிக் காத்தன.

இவ்வாறாக கிழக்கின் சில தமிழ் ஊர்கள் தமிழர்களுக்கு என்றென்றைக்கும் வழிகாட்டியான செயற்திட்டத்தை உருவாக்கித் தந்துள்ளன.

இதை முழு வடக்குக் கிழக்கும் பின்பற்றவேண்டும்.வடக்குக்கிழக்கு எங்கும் தமிழர்கள் நிலங்களைத் தமிழர்களுக்கே விற்கவேண்டும்.அவ்வாறு தமிழர்கள் யாரும் வாங்க முன்வராவிட்டால் கோயில்கள் தமது நிதிவளத்தைப் பயன்படுத்தி அவற்றை வாங்கிப் பாதுகாக்கவேண்டும்.பின்னர் நிலத்தின் சந்தை மதிப்பை தமிழர்கள் எவராவது கொடுத்து வாங்க முன்வந்தால் அவர்களுக்கு விற்றுவிடலாம்.

கருத்து: – நடேசபிள்ளை சிவேந்திரன்

தினகரனை சாய்த்த எடப்பாடி? எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பிம்பம் சாய்ந்தது!

edappadi dinakaran panneerselvam - 2026

சென்னை:

அதிமுகவில் தற்போது மூன்றாவது அணியை உருவாக்கி செயல்பட்டு வரும் தினகரன் அணிக்கு வெறும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஏற்கெனவே தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூறியிருந்தனர். தினகரனும் ஒதுங்கி இருப்பதாக கூறினார். ஆனால் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன் தான் மீண்டும் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக அறிவித்தார். மேலும் தன்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என கூறினார்.

இதையடுத்து சசிகலாவை சிறையில் சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் 60 நாட்கள் அமைதியாக இருக்கப்போவதாகவும், அதற்குள் அதிமுக அணிகள் ஒன்றிணையவில்லை என்றால் தான் தீவிரமாக இறங்க உள்ளதாகவும் கூறினார். ஆனால் அதிமுக அமைச்சர்கள் அவரை மீண்டும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். அவர் ஒதுங்கி இருப்பது நல்லது என அறிவுறுத்தினர். இதனையடுத்து தினகரனை வரிசையாக எம்எல்ஏக்கள் சந்தித்தவாறு இருந்தனர். இதனால் அதிமுகவில் மூன்றாவது அணி உருவானது.

தினகரனை சந்திக்கும் எம்எல்ஏக்கள் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் எடப்பாடி அணி சற்று கலக்கமடைந்தது. இறுதியாக 33 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர் என கூறப்பட்டது. இந்தச் சூழலில் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி அவர்களுடன் பேசினார்.

இந்தக் கூட்டத்துக்கு தினகரனை சந்திக்க சென்ற எம்எல்ஏக்களும் வந்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏ.,க்களிடம் பேசி அவர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொண்டார்.

உங்களுடைய தேவைகளை முழுமையாக நிறைவேற்றித் தருகிறேன் ஆனால் அமைச்சர் பதவி குறித்து என்னால் எந்த உறுதியும் அளிக்க முடியாது. அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் என எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏ.,க்களிடம் உருக்கமாகக் கூறினாராம். இதற்கு எம்எல்ஏ.,க்களும் செவி சாய்த்தனராம்.

இதை அடுத்து, ஆட்சிக்கு எதிராக தினகரன் செயல்பட இருந்தார். நாங்கள் அவருக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என எடப்பாடியிடம் உறுதி அளித்தனராம். இதன் மூலம் தற்போது தினகரன் அணியில் ஐந்து எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதாக அதிமுக., வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கார்டன் அரசியல்: விடாப்பிடி தீபா; விட்டுத்தள்ளும் தினகரன்; சாமர்த்திய சசிகலா!

0

veda nilayam jaya - 2026

சென்னை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தை கைப்பற்ற நான் முயற்சிக்கவில்லை என அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 11ம் தேதி காலை தீபா, ஜெ. வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவரின் சகோதரர் தீபக்கும் இருந்தார். ஆனால், தன்னை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை எனவும், அங்கு காவலுக்கு இருக்கும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தினர் தன்னை தாக்கியதாகவும் தீபா புகார் கூறினார். மேலும், சசிலாவோடு சேர்ந்து கொண்டு தனது சகோதரர் தீபக் சதி செய்கிறார் எனவும், அவர்தான் தன்னை அங்கு வரச் சொன்னதாகவும் கூறினார்.

மட்டுமில்லாமல், தனது அத்தை வாழ்ந்த போயஸ்கார்டன் வீடு தங்களுக்கு சொந்தம் எனவும், அதை சசிகலா மற்றும் தினகரன் தரப்பு பறிக்க முயல்வதாகவும் புகார் கூறினார். அதன் பின் ஒருவழியாக போலீசார் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தினகரன் “ஜெ. வாழ்ந்து வந்த அந்த வீடு எங்களுக்கு கோவில் போன்றது. அவர் எங்களுக்கு தெய்வம் போன்றவர். அவரது சொத்தை கைப்பற்ற நான் யார்?. அந்த வீடு அவரின் ரத்த வாரிசுகளுக்கு மட்டுமே சொந்தமானது. அப்படி இருக்கும் போது, தீபா என் மீது ஏன் புகார் தெரிவிக்கிறார் எனத் தெரியவில்லை. அவர்தான் ஜெ.வின் சட்டப்படியான வாரிசு என்பதை நிரூபித்து அவரின் சொத்துகளை பெற்றுக்கொள்ளலாம். இதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை” என அவர் தெரிவித்தார்.

ஆனால், தீபக்கை உசுப்பேற்றி தீபாவை வரவழைத்து அவரிடம் கையெழுத்து பெற்றுத் தரும் திட்டம்முன்வைக்கப்பட்டது என்று பரவலாகப் பேசப்பட்டது. இது, போயஸ் கார்டன் இல்லத்தைச் சுற்றிய அரசியலுக்கு மேலும் தூபம் போட்டுள்ளது. கார்டன் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவில்லமாக்க வேண்டும் என்று அதிமுக.,வின் ஒரு தரப்பு அரசை வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் விவசாயி அரசியல்: வல்லரசு கிடக்கட்டும் நல்லரசு கொடுங்கள் என பேச்சு!

vijay actor - 2026

சென்னை:

தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அதோ போல நடிகர் விஜயும் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என ரஜினியை போல ரொம்ப காலமாக தேர்தல் வரும்போது எல்லாம் கிசுகிசுக்கப்படும். இந்நிலையில் நேற்று நடிகர் விஜய் விருது வழங்கும் விழா ஒன்றில் பேசியது அவர் அரசியலுக்கு வருவதற்காகத்தான் இப்படி பேசியிருப்பார் என சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

பிஹைன்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய்-க்கு Samrat of South Indian Box Office என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக்கொண்ட விஜய் தன் படங்களின் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய விஜய் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசினார். நான் நன்றாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன். நாம் அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் விவசாயிகள் இன்று நன்றாக இல்லை. உழைப்புக்குக் கிடைத்த பலனாக இங்கு பலருக்கும் விருதுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், எந்தவொரு பலனுமே கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. உணவு, உடை, இருப்பிடம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். முதலிடத்தில் இருக்கும் உணவைக் கொடுப்பவர் விவசாயி. பசியை எளிதாகக் கடந்துவிடுவதால் தான் நாம் அவர்களைப் பற்றி நினைப்பதில்லை என நினைக்கிறேன். காசு கொடுத்தால் கூடச் சாப்பிடுவதற்கு எதுவுமே கிடைக்காது என்ற நிலை வந்தால் மட்டுமே நாம் விவசாயிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

அவர்களுடைய நிலையைப் புரிந்து கொள்வது அவசியம் என்பதை விட அவசரமும் கூட. இப்போது கூட நான் முழித்துக் கொள்ளவில்லை என்றால், அடுத்த சந்ததிக்கு அதுகூடக் கிடைக்காது. ஒரு ஜவுளிக்கடை முதலாளி இன்னொரு ஜவுளிக்கடைக்குச் சென்று துணி எடுக்க முடிகிறது, ஒரு நகைக்கடை முதலாளி இன்னொரு நகைக்கடைக்கு சென்று நகை வாங்க முடிகிறது. ஆனால், ஒரு விவசாயி மட்டும் தான் ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறான். ஏனென்றால் இலவச அரசிக்காக. வல்லரசு வல்லரசு என்று பேசிக்கொண்டிருக்கிறோம். வல்லரசு ஆவதெல்லாம் இருக்கட்டும். முதலில் நல்லரசு கொடுங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாருங்கள் என நடிகர் விஜய் பேசினார்.

இரு வருடங்களுக்கு முன்னர் விஜய் நடித்த புலி படம் வெளியானபோது, படத்தில் நடித்த பலர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில், விஜய் வீடு மட்டுமல்லாது சமந்தா, நயன்தாரா, தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. விஜய் 5 வருடங்களுக்கும் மேல் ஒரு பகுதி வரியை ஏமாற்றியுள்ளார் என்றும் அப்போது அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.