Home Blog Page 5612

பெட்ரோல் விலை நிர்ணயம் தினசரி காலை 6 மணிக்கு மாறுகிறது: பங்க் போராட்டம் வாபஸ்

Petrol-bunk-strike

நாளை முதல் பெட்ரோல் விலை நிர்ணயம் தினசரிக்கு மாறுகிறது. நாள்தோறும் காலை 6 மணிக்கு பெட்ரோல் விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது மாதந்தோறும் இரண்டு முறை, அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. மாதத்தின் முதல் நாள் மற்றும் 16-ம் தேதி வாக்கில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. இதனையடுத்து, இந்த நடைமுறையை மாற்றி நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை ஜூன் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை மாற்றி அமைக்கப்படும் என்று அறிவிப்புக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் ஜூன் 16-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். ஜூன் 16-ம் தேதி முதல் பெட்ரோல் வாங்கவோ, விற்கவோ மாட்டோம் என்று அறிவித்தனர் இதனிடையே, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அப்போது, நள்ளிரவு 12 மணிக்கு பதிலாக காலை 6 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என்று மத்திய அரசு ஒப்புக் கொண்டதை அடுத்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தினசரி விலை நிர்ணய முறை ஏற்கனவே 5 நகரங்களில் மே ஒன்றாம் தேதி முதல் நடைமுறையில் உள்ளதாகவும், தற்போது அது விரிவாக்கம் மட்டுமே செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ படியளந்ததை நீ படியால அளந்துண்டு இருக்கே போல இருக்கு!”-பெரியவா

20120835 KamakshiPeriyava - 2026

“காமாக்ஷி படியளப்பாள்னு சொன்னதை நம்ப முடியாம
முணங்கினியே…இப்போ அவ படியளந்ததை நீ படியால
அளந்துண்டு இருக்கே போல இருக்கு!”-பெரியவா

(இந்த பூமி வறண்டு கிடக்கறதைப் பார்த்தாலே
தெரியறதே.அம்பாள் படியளக்கறது”-முணங்கின
மடத்து நிர்வாகியிடம் பெரியவா சொன்னது மேலே)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
நன்றி-குமுதம் பக்தி-29-06-2017 இதழ் (சுருக்கம்)
(இன்று வெளிவந்த இதழ்-சுடச்சுட)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

1934-ம் வருஷம் காசியாத்திரை நடந்துண்டு இருந்த
சமயத்துல, ஒருநாள் வறட்சியான கிராமத்துவழியா
நடந்துண்டு இருந்த மகாபெரியவா, தான் அந்த இடத்துல
ரெண்டு மூணு நாள் தங்கப்போறதாக திடீர்னு அறிவிச்சு,
முகாமை அங்கே அமைக்கச் சொல்லிட்டு ஒரு
ஆலமரத்தடியில் உட்கார்ந்துட்டார்.

அவரோட யாத்திரை போயிண்டிருந்த மடத்துக்காரா
பலரும் ஆசார்யா அங்கே தங்கறதுக்கான ஏற்பாடுகளை
அவசர அவசரமா செய்ய ஆரம்பிச்சா.

எல்லாரும் பரபரப்பா இருந்த அந்த சமயத்துல ஒருத்தர்
மட்டும் கொஞ்சம் சிடுசிடுப்பா இருந்தார்.’திடுதிப்புன்னு
இப்படிச் சொன்னா எப்படி? காய்ஞ்சு கெடக்குற இந்த
கிராமத்துல தங்கினா, இந்த யானை,ஒட்டகைக்கெல்லாம்
தீனிபோடறது எப்படி? மடத்தை நிர்வாகம் பண்றதுக்கே
சிரம தசையில இருக்கறப்போ, தாரித்ரியம் பிடிச்சாப்புல
இருக்கிற இந்த இடத்துல தங்கினா எடுத்து செலவழிக்க
மடத்தில என்ன கொட்டியா கிடக்கு!” கொஞ்சம் வேகமாவே
வார்த்தைகள் வந்தது.மடத்து நிர்வாகியான அவர்கிட்டேர்ந்து.

மகாபெரியவா பீடத்துக்கு வர்றதுக்கு முன்னாலேர்ந்தே
மடத்துல இருக்கிற அவர், எதனாலேயோ அன்னிக்கு
கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை விட்டுட்டார்.

அவர் கொஞ்சம் சத்தமாவே பேசினதால,விஷயம்
நேரடியாவே மகாபெரியவா காதுல விழுந்தது.எல்லாரும்
மகாபெரியவா என்ன சொல்லப்போறாரோ! ஒரு வேளை
கோவிச்சுப்பாரோன்னெல்லாம் நினைச்சு படபடப்பா
பார்த்துண்டிருந்தா.

தன்னைத்தான் குறை சொல்றார்னு தெரிஞ்சும் கொஞ்சமும்
வருத்தமோ கோபமோ இல்லாம, சாந்தமா அவரைக்
கூப்பிட்டார், மகாபெரியவா.

“என்ன ஆயிடுத்து இப்போன்னு இப்படிப் பதட்டப்படறே?
என்னவோ நீயும் நானும்தான் இந்த மடத்தை ரக்ஷணம்
பண்ணிண்டு இருக்கோமா என்ன? எல்லாத்தையும் அந்தக்
காமாக்ஷின்னா நடத்திண்டு இருக்கா? நல்ல காரியத்தை
உத்தேசித்து நாம யாத்ரை பண்ணிண்டிருக்கோம்.
லோகத்துக்கே படியளக்கற அந்தக் காமாக்ஷி
கைவிட்டுடுவாளா என்ன? எல்லாம் அவ பார்த்துப்பா?
அமைதியாகச் சொன்ன ஆசார்யா அதுக்கப்புறம் கொஞ்ச
நேரம் தியானத்தில் ஆழ்ந்துட்டார்.

“ஆமாம் இந்த பூமி வறண்டு கிடக்கறதைப் பார்த்தாலே
தெரியறதே.அம்பாள் படியளக்கறது” மெதுவா
முணுமுணுத்துண்டார் அந்த ஆசாமி.

கொஞ்சநேரம் ஆச்சு.மழைக்காலம் தொடங்கறதுக்கு
முன்னால வரைக்கும் எங்கே இருந்ததுன்னே தெரியாம
திடீர்னு புறப்பட்டு வருமே புற்று ஈசல். அந்த மாதிரி
கூட்டம் கூட்டமா பக்தர்கள் புறப்பட்டு பரமாசார்யாளை
தரிசனம் பண்ணறதுக்காக அங்கே வர ஆரம்பிச்சுட்டா.

எந்த அறிவிப்பும் கிடையாது.மகா பெரியவாளோட
யாத்ரைப் பாதையில அங்கே தங்கப்போறதான
முன்னேற்பாடும் செய்யப்படலை. திடுதிப்புன்னு
ஆசார்யாளா தீர்மானம் பண்ணி முகாமிட்ட இடம்.
அப்படி இருக்கறச்சே இவ்வளவு பேருக்கு விஷயம்
தெரிஞ்சுது?ன்னு எல்லாரும் ஆச்சரியப்பட்டுண்டு
இருக்கறச்சே, இன்னொரு ஆச்சர்யமும் நடந்தது.

ஆசார்யாளை தரிசனம் பண்ணறதுக்காக கனி வர்க்கம்,
புஷ்பம் எல்லாம் எடுத்துண்டு வந்திருந்ததோட,பலரும்
அப்போதைய புழக்கத்துல இருந்த வெள்ளி நாணயம்,
ஒரு ரூபாய் நாணய காசுகளா கொண்டு வந்து
மகாபெரியவாகிட்டே சேர்ப்பிக்க ஆரம்பிச்சுட்டா.

ரெண்டு நாள் அங்கே முகாமிட்டிருந்துட்டு மறுநாள்
கார்த்தால அங்கேர்ந்து புறப்படலாம்னு சொன்னார்
மகாபெரியவா.

அப்போ அங்கே சேர்ந்திருந்த நாணயங்களை எண்ணி
முடியாதுன்னு தீர்மானிச்சு, படியால அளந்து அளந்து
கொட்டி மூட்டைகளா கட்ட ஏற்பாடு பண்ணினார்,
மடத்தோட நிர்வாகி.

அந்த சமயத்துல மெதுவா அங்கே வந்த ஆசார்யா,
“என்ன, லக்ஷ்யம் நல்லதா இருந்தா காமாக்ஷி
படியளப்பாள்னு சொன்னதை நம்ப முடியாம
முணங்கினியே…இப்போ அவ படியளந்ததை நீ
படியால அளந்துண்டு இருக்கே போல இருக்கு!”
அமைதியா புன்னகை தவழ சொன்னார்.

யாத்ரைப் பாதையில இந்த இடத்துல மடத்தோட
சிரமதிசை தீர்றதுக்கு அம்பாளோட அனுகிரஹம்
கிடைக்கப்போறதுன்னு மகாபெரியவாளுக்கு
முன்கூட்டியே தெரிஞ்சுதா? இல்லை,அம்பாள்
படியளப்பாள்னு சொன்ன பரமாசார்யாளோட வாக்கைக்
காப்பாத்தறதுக்காக அப்படி ஒரு அற்புதத்தை அந்த
அம்பாள் நடத்தினாளா?எந்த முன்னறிவிப்பும்
இல்லாமல் ஆயிரம் பேர் தரிசிக்க வந்தது எப்படி?

பரமாசார்யாளுக்கு மட்டும்தான் தெரியும்.

மானியக் கோரிக்கை விவாதம்: அரசுக்கு ஆதரவாக நின்ற ஓபிஎஸ் அணி!

tamil-nadu-secretariat-tamil-nadu-assembly

சென்னை:
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது குரல் வாக்கெடுப்பு நடந்தது. அதில் ஓபிஎஸ் அணியினர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழக சட்டப் பேரவை, அவைத்தலைவர் தனபால் தலைமையில் இன்று காலை தொடங்கியது. அவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ‘எம்.எல்.ஏ சரவணனின் வீடியோ காட்சிகள்’ குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார். எம்.எல்.ஏ. வீடியோ விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க முடியாது என அவைத்தலைவர் கூற, தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் விவாதிக்க முடியாது எனக் கூறிய சபாநாயகர், சபைக்கு கட்டுப்படுங்கள், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

கடும் அமளிக்கிடையே ஜி.எஸ்.டி. சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி மசோதாவைத் தாக்கல் செய்தார்.

சரவணன் எம்.எல்.ஏ வீடியோ தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவர வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர் உத்தரவிட்டதன் பேரில் அவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து தி.மு.க எம்.எல்.ஏக்களும் வெளியேற்றபட்டனர்.

இந்தப் பிரச்னை நடந்து கொண்டிருந்த போது ஓ.பி.எஸ்.அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைதி காத்தனர். எடப்பாடி பழனிச்சாமி பேசும் வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். பின்னர் மானியக் கோரிக்கை விவாதத்தில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

விவேகத்தின் இசை உரிமை: சோனி மியூசிக் பெற்றது

vivegam

அஜீத் நடிக்கும் விவேகம் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் இசைக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அனிருத் இசை அமைப்பது ஒரு காரணம். அஜித்தின் முந்தைய படமான ‘வேதாள’த்துக்கும் அவர் இசையமைத்திருந்தார். அதில் ‘ஆளுமா டோலுமா…’ பாடல் பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்று சேர்ந்த பாடல்.

அதனால் அஜித்-அனிருத் இணைக்கு ‘விவேக’த்திலும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் சுப்ரமணியம் கூறுகையில், ‘இது அஜித்துடன் எங்களுக்கு ஆறாவது படம். முந்தைய சாதனைகளை விவேகம் முறியடிக்கும்’ என்றார்.

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு ஜூலையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விவேகம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

கொல்லத்தில் சுவாரஸ்யம்: கணவரிடம் இருந்து ஆணையர் பொறுப்பைப் பெற்ற ஐபிஎஸ் மனைவி!

kollam ips ajeetha takes charge

கொல்லம் :

கொல்லம் நகர காவல் துறை ஆணையராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்ட அஜீதா பேகம் ஐபிஎஸ்., அப்பதவி வகித்து வந்த அவரது கணவர் சதீஷ் பினோவிடம் இருந்து பொறுப்புகளைப் பெற்றுக் கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அஜீதா பேகமும், கன்னியாகுமரியைச் சேர்ந்த சதீஷும் 2008-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள். இருவரும் ஜம்மு- காஷ்மீர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பணியில் இருந்தனர். பின்னர், இருவருக்கும் திருமணம் ஆனது. இதைத் தொடர்ந்து 2011-இல் கொல்லத்துக்கு பணி மாறுதல் பெற்று வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

கொல்லம் (ஊரகம்) வருவாய் மாவட்ட எஸ்.பி.யாக அஜீதா பணி புரிந்து வந்தார். அந்த மாவட்டத்தின் நகர்ப்புற எஸ்.பி.யாக சதீஷ் பினோ இருந்து வந்தார். இந்நிலையில் அஜீதா கரு தரித்ததால், மகப்பேறு விடுமுறையில் சென்றார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

அஜீதாவின் விடுப்பைத் தொடர்ந்து எஸ்.பி.யாக இருந்த சதீஷ் பினோ, கொல்லம் நகர காவல் துறை ஆணையராக பதவியேற்றார். மகப்பேறு விடுமுறை முடிந்து அஜீதா பணியில் சேர்ந்தபோது, அவரது கணவர் சதீஷ் வகித்து வந்த கொல்லம் நகர காவல் துறை ஆணையராக மாற்றப்பட்டார். அப்பணியில் இருந்து வந்த சதீஷ், பத்தினம்திட்டா மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டார்.

இதனால், கொல்லம் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அஜீதா, தனது கணவர் சதீஷிடம் இருந்து ஆணையர் பொறுப்பை பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மனைவியின் வளர்ச்சிக்கு கணவர் ஊக்குவிப்பதாக பலரும் பாராட்டினர்.

இது குறித்து அவர்களிடம் பேசிய அஜீதா, போதைப் பொருளை ஒழித்து, கொல்லத்தை பாதுகாப்போம் என்ற விழிப்பு உணர்வு பிரசாரத்தை கொல்லம் ஆணையராக இருந்த சதீஷ் தொடங்கியிருந்தார். அதை நானும் தொடர்ந்து செயல்படுத்துவேன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, கொல்லம் நகரில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பது உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று அஜீதா தெரிவித்தார்.

/ajeetha-ips-succeeds-husband-as-kollam-top-cop

குடியரசுத் தலைவராக அத்வானி: ஆதரவுக் குரல் எழுப்பினார் சத்ருகன் சின்ஹா

shatrughan-sinha

புதுதில்லி:
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் ஆவதற்கான முழுத் தகுதியும் பெற்றுள்ளவர் அத்வானி மட்டுமே என பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா தனது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவரை அமர்த்துவதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில் வரும் அந்தப் பதவிக்கான தகுதி வாய்ந்த வேட்பாளர் அத்வானிதான் என பாஜக எம்.பி.யும், நடிகருமான சத்ருகன் சின்ஹா கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சத்ருகன் சின்ஹா தன் ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜக.,வின் முக்கியத் தலைவரான அத்வானியே குடியரசுத் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர். அப் பதவிக்கான தகுதி, அனுபவம், திறமை, மரியாதை, என அத்தனையும் நிறைந்த பொருத்தமான தலைவர் அத்வானி. இவரே குடியரசுத் தலைவர் ஆக வேண்டுமென நான் விரும்புகிறேன். பெரும்பாலானோரின் மன எண்ணத்தையே என் கருத்தாக நான் பதிவு செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

குற்றாலத்தில் காற்றில் பறக்கும் உயர் நீதிமன்ற உத்தரவு; குடிமகன்களால் பாதிப்பு

courtallam

குற்றாலத்தில் திறந்தவெளியில் மது அருந்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், திறந்தவெளியில், சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கே குற்றாலம் பராசக்தி நகர் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த கடையில் பார் வசதி இல்லாததால், மது வாங்குபவர்கள் பலர் அந்த இடத்திலேயே மது அருந்துகின்றனர். இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், அறை எடுத்து தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்ளது.

மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தென்காசி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால், பராசக்தி நகர் டாஸ்மாக்கில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் இந்த கடைக்கு விரைந்து செல்வதற்காக பிரதான சாலையை விட்டுவிட்டு தனியார் வீடுகளின் சந்து பொந்துகளில் நுழைந்து ஏராளமானோர் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, குற்றாலத்தில் திறந்த வெளியில், சாலையோரத்தில், காரில் இருந்தபடி மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அங்கே மது அருந்துவோரிடம் இருந்து மதுபானங்களைப் போலீஸார் பறிமுதல் செய்ய வேண்டும். அவர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகள் போடப்பட்டுள்ளன. ஆனால் இந்த உத்தரவுகளை காவல்துறையினர் செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே இடையூறு ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை, வேறு இடத்திற்கு மாற்ற, பகுதிவாசிகள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குதிரை பேரம் நடந்ததால் ரகசிய வாக்கெடுப்பு கோரினோம்: ஸ்டாலின்

tamil-nadu-secretariat-tamil-nadu-assembly

சென்னை:

குதிரை பேரம் நடந்ததால்தான் ரகசிய வாக்கெடுப்புக்குக் கோரிக்கை விடுத்தோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக இன்று காலை சட்டமன்றம் கூடியதும், திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.  சட்டப்பேரவையில் சரவணன் எம்.எல்.ஏ வீடியோ விவகாரம் பற்றி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து அமளி ஏற்பட்டது.

ஆனால் இதற்கு, சபாநாயகர் தனபால் பேச மறுப்பு தெரிவித்தார்.  தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

இதை அடுத்து,  தலைமைச் செயலகம் எதிரே உள்ள காமராஜர் சாலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் சாலை மறியல், மற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராஜாஜி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர்.

ராஜாஜி சாலையில் திமுகவினரோடு சாலைமறியலில் ஈடுபட்டதால் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏக்களும் கைதுசெய்யப்பட்டனர்.

 

MLA-க்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்தும் தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும், கவிழ்க்கப்பட வேண்டும். அதிமுக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடந்ததால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரினோம் என்று  மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

முன்னதாக,  சட்டப்  பேரவையில் வில்லிவாக்கம் ரயில்வே பாலம் குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வில்லிவாக்கம் பாலம் குறித்து 2015-ம் ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியதாகவும், ரூ.7.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் பதில் அளித்தது என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு நிதி ஒதுக்கி 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னும் பாலம் கட்டாதது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

வேண்டாம் ரஜினி! ‘ரஜினி ரசிகன்’ முன்னாள் ஆசிரியர் துரையின் பகிரங்க கடிதம்!

rajinikanth

வேண்டாம் ரஜினி! என்ற தலைப்பிட்டு, ‘ரஜினி ரசிகன்’ இதழ் முன்னாள் ஆசிரியர் துரை  அவருக்கு பகிரங்க கடிதம்ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதம்….

ரஜினிக்கு,

ரஜினி ரசிகன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் துரை எழுதுவது

தங்களோடு நேரில் பேசிப் பழகியவன் என்ற முறையில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்! வீட்டில், படப்பிடிப்பில் விழாக்களில், எப்போதுமே தாங்கள் பதற்றம் நிறைந்தவராகவே காணப்பட்டீர்கள்.

கொடி பறக்குது, படப்பிடிப்பின் போது வெள்ளை பேண்ட்டில் இருந்து, காக்கி பேண்ட்டிற்கு மாறியபடி என்னிடத்தில் பேசினீர்கள். அந்த எளிமை எனக்கு பிடித்திருந்தது.

தங்களது இமேஜை காப்பாற்றி கொள்ளக்கூட பொய் சொல்லத் தெரியாதவர்கள் நீங்கள். என்னை பொறுத்தவரை அடிப்படையிலேயே ‘யூவார் எ டிஸ்டர்ப்டு சைல்டு’ எப்போதுமே பதற்றம் நிறைந்தது. தங்கள் நடவடிக்கை என்பது எனது பார்வை.

தவிர்க்கவே முடியாமல் எம்.ஜி.ஆரை குறித்து சில விஷயங்களை பேசியாக வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே வறுமை, பசி, பட்டினியை அறிந்தவர் கஷ்டமறிந்து பலருக்கு உதவியவர்.

தனது 20 வயதிற்குள்ளாகவே அரசியல் குறித்து அவருக்கு ஒரு கனவு இருந்தது. அதற்காக திட்டமிட்டு கட்சியில் இணைந்தார். தனது படங்களில் வசனங்களில் பாடல்களில் கட்சி கொள்கையை பரப்பினார்

அவரது படங்களில் அவரது பெயரே கூட உதயசூரியன், கதிரவன் இப்படி இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

5 ரூபாயிலிருந்து வசூலிக்க கூட்டங்களில் பங்கேற்றார். தலைவர்களோடு பேசிப் பழகினார்.

நடித்து சம்பாதித்த பணத்தை உதவி வள்ளல் என்று பெயர் எடுத்தார். கட்சியில் தன் முக்கியத்துவத்தில் எப்போதுமே கவனமாக இருந்தார். அமைச்சரவையை தீர்மானிக்கும் சக்தியாக கூட இருந்தார்.

தி.மு.கவிற்கும் அவரது ரசிகர் பட்டாளம் பலமாக விளங்கியது.

கட்சியில் இருக்கும்போதே சில மாறுபட்ட அதிரடி கருத்துக்களை முன்வைத்து தன் பலத்தை சோதித்து பார்த்தவர், எம்.ஜி.ஆர்

இதையெல்லாம் தாண்டி நாடோடி மன்னன் படத்திலேயே தனது அரசியல் ஆட்சி கருத்துக்களை ஆழமாக மக்கள் மனதில் பதிவு செய்தார்.

பெண்களின் வாக்கு வங்கி எம்.ஜி.ஆரைப் போல சாதகமாக வேறு யாருக்கும் இருந்ததில்லை

கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்றவர்களின் தொடர் பிரச்சாரத்தால் கூட இதைக் கலைக்க முடியவில்லை.

96ல் உங்களுக்கு இருந்த செல்வாக்கு வேறு; இப்போதைய நிலவரம் வேறு;

திரையுலகில் பாட்ஷா தான் உங்களது உச்சம்.

அதற்கு பின் வந்த படங்கள் எல்லாம் ஊதிபெருக்கி காட்டப்பட்டவையே. இன்றைக்கு

இதற்குள் உங்களுக்கும், உங்கள் ரசிகர்களுக்குமே கால இடைவேளி, வயது எல்லாம் மாறி விட்டது

நீங்கள் கார்ட்டூன் கேரக்டராக மாறி விட்டீர்கள்.

அதன் உச்சபட்சம் தான் கோச்சடையான் படுதோல்வி

ஜெயலலிதாவின் மறு எழுச்சிக்கு பின் உங்களுக்கு அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் இடமேயில்லை.

உங்களுக்கு பின் அரசியலில் குதித்த விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்து சரிந்து விட்டார்.

சினிமா வியாபாரத்தில் உங்களது பழைய பிம்பத்தை வைத்து சுமாரான பிசினஸ் இருக்கு. அதை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நீங்கள் அரசியல் தெரிந்து கொள்வது யாரிடம் வைரமுத்து விடம் தானே.

அவரால் தனது சொந்த ஊரில் ஒரு வார்டு கவுன்சிலராகக் கூட முடியாது.

அரசியலில் இரவல் மூளை பயன்படாது.

எம்.ஜி.ஆர். ஒரே நாளிதழை இரண்டு பேரை படிக்கச் சொல்லி கருத்துக் கேட்டு மூன்றாவதாக தனதாக ஒன்றை உருவாக்கி படிக்கப்பட்டவர்

கட்சி தொடங்கி 6 மாதத்தில் இடைத் தேர்தலில் தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்தது எம்.ஜி.ஆரின் பலம் மட்டுமல்ல; கருணாநிதிக்கு அப்போதிருந்த அதிகாரமானதை ஆளாவதும் கூட.

இருபத்தி நாலுமணி நேரமும் எல்லோருடனும் இருந்தாலும் எம்.ஜி.ஆர் எப்போது எதைச் செய்வார் என்ன அறிவிப்பார் என்று கூட இருந்தவர்களுக்கு புரியாத புதிராக இருந்தவர், அவர் உண்மையிலேயே லஞ்சம், ஊழலுக்கு எதிராக 2 ஆண்டு ஆண்டார்.

அந்த ஆட்சி கவிழ்ந்த பின் பணமில்லாமல் அரசியல் பண்ண முடியாது என்று அவர் சரிந்தது தான் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, இத்தனை பொறியியல் கல்லூரி

இதையெல்லாம் தாண்டி, அவரிடம் ஏழை மக்களிடம் தணியாத அக்கரையும், கனிவும் இருந்ததை பல சாட்சிகளோடு சொல்ல முடியும்.

உங்களது 67 வயது வாழ்க்கையில் அதற்கான சிறு வெளிப்பாடு கூட பார்த்ததோ, கேட்டதோ இல்லை

அமிதாப் பச்சன் போல வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடியுங்கள்; சம்பாதியுங்கள்; சந்தோஷமாக இருங்கள்.

அரசியலுக்கு அடிப்படை தேவை, பொறுமை அது உங்களிடம் எப்போதுமே இருந்தது கிடையாது. இதுவரை பொறுமையாகத் தானே இருந்தார் என்று சொல்லலாம். இதுவரை அவரிடம் இருந்தது பயம். பொறுமையல்ல. ஜெயலலிதா இல்லை. சசிகலா, தினகரன் சிறையில், இரட்டை இலை முடக்கப்பட்டு விட்டது. அதிமுக இரு அணிகளாக உள்ளது. இதுதான் தருணம் என்று பயம் கலைந்து இருக்கிறார் என்பதே உண்மை.

உங்கள் பெயரையே ஒரு தாளில் நூறு முறை எழுதச் சொன்னால் அந்த தாளை கிழித்து எறிந்து விடக் கூடியவர், நீங்கள்.

பாபா பட வெளியீட்டிலேயே ஸ்டிக்கர், டிசர்ட், கீ செய்ன் விற்பனையில் ஈடுபட்ட உங்கள் மனைவியை தட்டிக் கேட்க முடியாதவர் நீங்கள்.

ஐ.நா. சபையிலே உங்கள் மகளை பரத நாட்டியம் ஆட வைத்தீர்களே! அது ஒன்று போதும் தமிழர்களுக்கலைக்கும் நீங்கள் செய்த புண்ணியம்.

தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான். இது பஞ்ச் டயலாக் அல்ல; தமிழர்களின் முதுமொழி.

பச்சைத் தமிழன்னு அறிவிச்சச மேடையிலேயே தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ் தரமாக இருக்கிறாங்கண்ணு பேசினீங்க

அதே ஒரு சீமானோ, பாரதிராஜாவோ, சரத்குமாரோ இருந்தா——

நம்மாளுங்க ஏன் இப்படி கீழ் தரமாக இருந்தாங்கன்னு பேசியிருப்பாங்க

உங்கள் உள்ளத்தில் உள்ளதே உதட்டில் வந்தது.

எதிர்ப்பு மூலதனம் என்று ஆயிரம் பேர் முன்னால பேசி கைதட்டல் வாங்கலாம். நடைமுறைக்கு சாத்தியமல்ல.

எம்.ஜி.ஆர். உயிருக்கு குறி வைக்கப் பட்டது, அதையும் மீறி அவர் ஜெயித்தார்.

காலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும். நல்ல ஆசிரமம் அமைச்சு கடைசி காலத்துலேயாவது தான தர்மம் பண்ணுங்க

போகிற வழிக்கு புண்ணியம் சேரும்.

போங்க ரஜினி போங்க பேரன் பேத்திகளோட விளையாடி சந்தோஷமா இருக்குற உங்க ரசிகர்களை நிம்மதியா வாழ விடுங்க

ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு நினைச்சி குதிச்சிராதீங்க!

அன்புடன்,

துரை,

ஊடகவியலாளன்.

தெர்மகோல் ஞானின்னு கலாய்த்த எதிர்க்கட்சியினர்!

tamil-nadu-secretariat-tamil-nadu-assembly

சென்னை:

தமிழக சட்டப்பேரவையில், இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜு பேச எழுந்தபோதும், அவர் பேசும்போதும், அவரை தெர்மாகோல், தெர்மாகோல் என்று எதிர்க்கட்சியினரான  திமுகவினர் கலாய்த்தபடி கோஷம் எழுப்பினர்.

திமுக எம்.எல்.ஏ.க்களின் கோஷத்தால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

வைகை அணையில் நீர் ஆவியாகி குறையாமல் தடுக்க, தெர்மகோல் கொண்டு மூடும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் கே.ராஜு அண்மையில் செயல்படுத்தியதும், அவர் திரும்புவதற்குள் தெர்மகோல் அட்டைகள் கரை திரும்பியதும், அவரின் இந்தச் செயலைக் கலாய்த்து, சமூக ஊடகங்கள், டிவி.,க்கள், ஊடகங்களில் கருத்துகள் பரவியதும் குறிப்பிடத்தக்கது.