Home Blog Page 5611

அப்பா இயக்க மகள் நடிக்கும் ‘சொல்லிவிடவா’

sollividava

அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன்  “சொல்லிவிடவா” என்ற படத்தில் நடிக்கிறார்.

நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் “சொல்லிவிடவா” படத்தைத் தனது ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குயுள்ளார்.

காதலின் பொன் வீதியில் எனத் தலைப்பிடப்பட்ட இப்படத்தின் பெயர் தற்போது “சொல்லிவிடவா” என மாற்றப்பட்டுள்ளது.

இளமை ததும்பும் காதல், கலர்புல் காமெடி, அனல்பரக்கும் ஆக்ஷ்ன், சுவாரஸ்யமான திருப்பங்கள் என அனைத்து ரசிகர்களையும் கவரக்கூடக் கலவைகளை உள்ளடக்கி உருவாகியுள்ள “சொல்லிவிடவா” திரைப்படத்தில் இளமை துடுக்கான வேடத்தில் ஜஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். நடிகர் சந்தன் முதன்முறையாகத் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

இயக்குனர் கே.விஸ்வநாத், சுஹாசினி, பிரகாஷ்ராஜ், “மொட்டை” ராஜேந்திரன், மனோ பாலா, சதிஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இறுதிக்கட்ட பணிகளை நெருங்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.

தாய்நாட்டுக்கு பணம் அனுப்புபவர் பட்டியலில் இந்தியர் முதலிடம்

indiamap

புது தில்லி:
வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்புபவர் பட்டியலில் இந்தியர் முதலிடம் பிடித்துள்ளனர். சீனர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர்.

உலகம் முழுவதும் வேலை தேடி சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், அங்கே சம்பாதிக்கும் பணத்தை தாய்நாட்டிலுள்ள தங்களின் குடும்பங்களுக்கு அனுப்பி வைப்பர். அவ்வகையில், உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், கடந்த 2016ல் மட்டும் இந்தியாவுக்கு ரூ. 4,07,550 கோடி (62.7 பில்லியன் டாலர்) அனுப்பியுள்ளனர். இதன்மூலம் வெளிநாட்டுக்குச் சென்றவர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு அதிகளவு பணம் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தை சீனர்கள் பிடித்துள்ளனர். அவர்கள் தங்கள் நாட்டுக்கு ரூ. 3,96,500 கோடி (61 பில்லியன் டாலர்) அனுப்பியுள்ளனர்.

அப்பலோவுக்கு ரூ.6 கோடி: ஜெயலலிதா சிகிச்சைக்கு ஆன தொகையை கட்சி ஏற்றது

jeyalalitha

சென்னை:

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை வழங்கபபட்டது. 2 மாதங்களுக்கும் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டும் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார். அவருக்கான சிகிச்சைச் செலவு ரூ.6 கோடயை ஜெயலலிதா முதல்வராக இருந்ததால், அரசே ஏற்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த மருத்துவச் செலவை தற்போது அ.தி.மு.க. (அம்மா) கட்சியே ஏற்றுக் கொண்டு, வழங்குகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.6 கோடிக்கான காசோலை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது. அவர் இந்த காசோலையை அப்பல்லோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறார். எடப்பாடி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 8,000 ரன்கள் கடந்து விராட்கோலி சாதனை!

IMG 20170615 230633 - 2026

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 8,000 ரன்கள் கடந்து
கேப்டன் விராட்கோலி சாதனை படைத்துள்ளார்.

175-வது இன்னிங்சில் 8,000 ரன்களை கடந்து விராட்கோலி இந்த சாதனையை
படைத்துள்ளார்.

182-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் எடுத்திருந்த இந்த
சாதனையை வங்கதேசத்துக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியில் விராட்கோலி மு
றியடித்தார்.

புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி உண்ணாவிரதம்

nalini-srilankan-tamil.jpg

சென்னை:

தன்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உண்ணாவிரதம் இருக்கிறார்.
நளினி வேலூர் பெண்கள் சிறையில் தற்போது அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சிறைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் தனது மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. புழல் சிறையில் இருந்தால் திருமணத்துக்கு உதவ வசதியாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நளினி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

prisoner-nalini-hunger-strike-for-change-her-to-puzhal-prison

சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆள் சேர்த்த கர்நாடக இளைஞர்

shbhi-armar-isis

வாஷிங்டன்:

இந்தியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு ஆள் சேர்த்த கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞரான முகமது ஷபி அர்மானை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா. இதன் மூலம் சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் இடம் பெற்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் நபராக இவர் திகழ்கிறார்.

கர்நாடக மாநிலம் பக்தல் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் முகமது ஷபி மீது இன்டர்போல் போலீசாரின் ரெட் கார்னர் நோட்டீஸ் நிலுவையில் உள்ளது. இவருக்கு அமெரிக்கா தடை விதித்தது. இங்கே இந்தியன் முஜாகிதீன் அமைப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் துவங்கியதும், ஷபி அர்மர் தனது சகோதரருடன் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றார். தொழில்நுட்ப நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டிருந்த ஷபி, பேஸ்புக் மூலம் இந்தியா, வங்கதேசம், இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிற்கு ஆட்களைச் சேர்த்து வந்தார்.

சில வருடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்த போது, முகமது ஷபியின் ஐ.எஸ்.ஐ.எஸ், தொடர்பு வெளியில் வந்தது.. இதையடுத்து என்.ஐ.ஏ., போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்தியா, சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் முகமது ஷபியை சேர்க்குமாறு விடுத்த கோரிக்கையை அடுத்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் குழுவின் தலைவராக முகமது ஷபி அர்மர் செயல்பட்டார். இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட ஐ.எஸ்.ஐஎஸ், ஆதரவாளர்களைத் தூண்டினார். இதற்காக ஆள் சேர்த்தல், ஆயுதங்கள் வாங்குதல், பயங்கரவாத பயிற்சி அளித்தல் ஆகியவற்றில் அவர் ஈடுபட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

அதிர்ச்சி தரும் உயர்நீதிமன்ற தீர்ப்பு

tasmak11 - 2026

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

ஒரு கிராமத்தில் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று கிராமசபை தீர்மானம் இயற்றினால், திறக்கப்படும் கடை உச்சநீதிமன்ற வரைமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால், அந்த கிராம சபைத் தீர்மானம் செல்லாது.
கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து எங்களுக்கு டாஸ்மாக் கூடாது என்று ஒருமித்துச் சொல்லும்போது அதை விட உச்சநீதிமன்றத்தின் வரைமுறைகள் மேலானவை என்பது எந்த நியாயத்தில் சேர்த்தி என்பது எனக்குப் புரியவில்லை. கிராம சபை, பஞ்சாயத்து ராஜ்யம், மக்கள் அதிகாரம் என்பதெல்லாம் பொருள் இல்லாப் பிதற்றல்கள்தாமா?

வாதத்துக்கு இப்படிச் சொன்னால் கூட அதில் ஒரு நியாயம் இருப்பதாகச் எடுத்துக்கொள்ளலாம்..” நாட்டு வளர்ச்சிக்கான திட்டங்கள். மக்களுக்கு சரியாக எடுத்துச் சொல்லப்படவில்லை. தவறான வழிகாட்டுதல்கள். எதிர்க்கிறார்கள். எனினும் நடைமுறைப்படுத்தவேண்டியதுதான். அவர்களுக்கு விளக்கிச் சொல்லுவோம்.” இந்தக் கருத்து சர்ச்சைக்குட்பட்டதுதான். என்றாலும் ஒரு வாதத்துக்காகவே எடுத்துச் சொல்லுகிறேன். ஆனால் டாஸ்மாக் என்பது வளர்ச்சி சம்பந்தப்பட்டதல்லவே? அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதாயிற்றே?
உச்ச நீதி மன்றம் demonetization சமயத்தில் நாட்டில் riot situation வந்துவிடக்கூடாது என்று கவலை தெரிவித்தது. இப்போது கிராமங்களில் Roit situation உருவாகி வருவதை தொலைக்காட்சியில் எப்போதாவது ஒரு முறையாவது பார்த்திருக்க மாட்டார்களோ?
Courts’ ways, like God’s ways, are inscrutable.!

கருத்து: வேங்கடரமணி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டி: இந்தியா- பாகிஸ்தான் மோதல்

IMG 20170615 225808 - 2026

சாம்பியன்ஸ் டிராபி 2-வது அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்
வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு இந்திய அணி
முன்னேறியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற
முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி போட்டியை நடத்தும் இங்கிலாந்தை
வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில், இன்று நடந்த 2 வது
அரையிறுதி போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதியது. டாஸ் வென்ற இந்திய
அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 264
ரன்கள் எடுத்தது. இந்திய அணி பந்து வீச்சில் கேதார் ஜாதவ், புவனேஸ்வர் குமார்,
பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய
அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் – தவான் ஆகியோர் ஆரம்ப முதலே அதிரடியாக
விளையாடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தனர். தவான் 34 பந்துகளில் 46
ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து கேப்டன் கோலி -ரோகித் ஜோடி சிரான வேகத்தில் ரன்களை குவித்தனர்.
ரோகித் 111 பந்துகளில் தனது 11-வது சதத்தை பதிவு செய்தார். கோலியும் அரைசதம்
அடித்து அசத்தினார்.

ரோகித் சர்மா 123, விராட் கோலி 96 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை
உறுதி செய்தனர். இந்திய அணி 40.1 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 9
விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. 123 ரன்கள் எடுத்த
ரோகித்சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சாம்பியன்ஸ் டிராபி 2-வது அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை
வீழ்த்தி இறுதிபோட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

இதனையடுத்து வரும் 18-ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரிட்சை நடத்த உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா

indian-national-flag759
national flag floating on the eve of republic day in capital on Thursday,photo/RAVI BATRA 25 JAN 2007

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா.

இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முன்னதாக முதலில் பேட் செய்த வங்க தேச அணி, 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய இந்திய அணி, 41 வது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது, துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய ரோஹித் சர்மா ஆட்டம் இழக்காமல் 123 ரன் எடுத்து, ஆட்டநாயகன் விருது பெற்றார். அவருடன் களம் இறங்கிய ஷிகர் தவான் அதிரடியாக ஆடி 43 ரன் குவித்து ஆட்டம் இழந்தார். கேப்டன் விராட் கோலி ஆட்டம் இழக்காமல் அதிரடி ஆட்டம் காட்டி 96 ரன்கள் எடுத்தார்.

இதை அடுத்து இறுதிப் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முன்னதாக நடைபெற்ற சுற்றில், ஏற்கெனவே பாகிஸ்தானை இந்திய அணி வென்றிருந்தது குறிப்பிடத் தக்கது. இறுதிப் போட்டி ஜூன் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.

“நாராயணஸ்வாமி-யும் ந்யூமராலஜியும்”

17191009 10207817962959127 8598521855278255076 n - 2026

“நாராயணஸ்வாமி-யும் ந்யூமராலஜியும்”

(ஸ்வாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு ‘நம்பி,பிம்பி’ என்று பெயர்
வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; ‘கண்ணன் பெயரை வையுங்கள்’ என்று
ஓர் ஆழ்வார் பாடியிருக்கிறார்)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.

பரீட்சையில் நிறைய மார்க் வாங்கினால் தான் மேலே படிக்க முடியும்.
இல்லையென்றால் வெறும் போஸ்ட் கிராஜூவேட் படிப்புடன் நின்றுவிட வேண்டியதுதான்.”நான்
எவ்வளவு முயன்றும் எண்பதுக்கு மேல் வாங்க முடியவில்லை. தொண்ணூறாவது வேணும்
ந்யூமராலஜி பிரகாரம் பெயரை மாற்றி வைத்துக் கொண்டால் மார்க் நிறைய கிடைக்கும்
என்றார்கள்.எண் கணித ஜோதிடர் ஒருவரிடம் போனேன். நாராயணசாமி (Narayanaswami)
என்ற பெயரை ‘Narain’ என்று வைத்துக்கொள்ளச் சொல்கிறார். பெரியவா உத்திரவு
கொடுத்தால் நாரெய்ன்’ என்று வைத்துக்கொள்வேன்.

பெரியவா சந்நிதியில் பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்த போது தன்
விண்ணப்பத்தைச் சொல்லி முடித்தான், கல்லூரி மாணவன் ஒருவன்.

இதை சாக்காக வைத்துக்கொண்டு பெரியவாள் ஒரு சிறு சொற்பொழிவே
நிகழ்த்திவிட்டார்கள்.

“நாற்பது சமஸ்காரங்களில் ஒன்று நாமகரணம். பலபேர்கள் முன்னிலையில், வேத
மந்திரங்களைக் கூறி நிகழ்த்தப்படும் சடங்கு, நாமகரணம் செய்வதற்கு (பெயர்
வைப்பதற்கு)த்தான் வேத மந்திரங்கள் இருக்கின்றன நாமவிகரணத்துக்கு (பெயரை
சிதைத்து, மாற்றுவதற்கு) இல்லவே இல்லை.

ஸ்வாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு ‘நம்பி,பிம்பி’ என்று பெயர்
வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; ‘கண்ணன் பெயரை வையுங்கள்’ என்று
ஓர் ஆழ்வார் பாடியிருக்கிறார்.

நாராயணசுவாமியை, அவ்வளவு நீளமாகக் கூப்பிடாவிட்டாலும் , நாராயணா,நாராயணா என்று
அழைப்பார்கள். சுலபமா புண்ணியம் கிடைச்சிடும்.

ந்யூமராலஜி என்று சமீப காலத்தில் பிரசித்தமாக இருக்கு. ஒவ்வோர் இங்கிலீஷ்
எழுத்துக்கும் நம்பர் கொடுத்து,அதைக் கூட்டி ,’நல்லது கெட்டது’ என்கிறார்கள்.
இது, சுதேசிச் சரக்கு இல்லை என்பது தெரிகிறது. எண் கணிதப்படி பெயர் மாற்றம்
செய்து கொண்டவர்களில் பலர், நல்ல பலன் கிடைத்தது என்கிறார்கள்…. அது
போகட்டும்,ந்யூமராலஜியைப் பற்றி இப்போ தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை. பையனுக்கு
நிறைய மார்க் வாங்கணும் என்று கவலை, அதனால் பெயரைக் கொஞ்சம் மாற்றி
வைத்துக்கொண்டால்,
ஆதாயம் கிடைக்காதா என்று பார்க்கிறான்.அந்த ஆசை சரிதான்; வழி அவ்வளவு
சரியில்லையோ? என்று சிந்திக்க வைக்கிறது.

கல்வி அறிவை சரஸ்வதி கடாக்ஷம் என்பார்கள். சரஸ்வதியின் அருள் இருந்தால்
படிப்பு வரும்; மார்க் வரும். அதற்கு என்ன செய்யணும்.

சரஸ்வதி ஸ்தோத்திரம் இருக்கு.

சௌந்தர்யலஹரியிலே மூணு சுலோகம்,

ஸாரஸ்வத ப்ரயோகம்,மேதா ஸூக்தம்

என்று வேத மந்திரமே இருக்கு.

குமரகுருபரரின் சகலகலாவல்லிமாலை,

கம்பநாட்டாழ்வாரின் சரஸ்வதி ஸ்தோத்திரம் எல்லாம் பாராயணம் செய்யலாம்.

ஹயக்ரீவர் என்று விஷ்ணு அவதாரம். அவர்தான் சகல கலைகளுக்கும், ட்ரெஷர் ஹௌஸ்
என்பார்கள்.ஹயக்ரீவ ஸ்தோத்திரம்,மந்திரம் இருக்கு.

மேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரம் இருக்கு.

இவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் இங்கிலீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர்
மாற்றம் செய்து கொள்வது, சாஸ்திர சம்மதமாகப் படவில்லை.

“இத்தனை விஷயங்களையும் பொதுவாகச் சொல்லிவிட்டு, பின்னர் மாணவனைப்
பார்த்தார்கள் பெரியவாள்.

அவன் கண்கள் கெஞ்சிக் கொண்டிருந்தன.

தொண்டர் மூலமாகப் பிரசாதம் கொடுக்கச்சொன்னபோது, மாணவன் பெயரைக் கேட்கச்
சொன்னார்கள் பெரியவாள்.

“நாராயணஸ்வாமி” என்று கம்பீரமாகப் பதில் வந்தது.