Home Blog Page 5614

குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்ய குழுக்கள் அமைப்பு

rashtrapathi bhavan - 2026

புதுதில்லி :

குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்ய காங்கிரஸ், பாஜக., இரு தரப்புமே குழுக்களை அமைத்துள்ளது.

வேட்பாளரை முடிவு செய்ய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தரப்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குலாம்நபி ஆசாத் தலைமை வகிக்கும் இந்தக் குழுவில் திமுக, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்டிரிய ஜனதா தளம்,தேசியவாத காங்கிரஸ் , திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

அதேபோல், பாஜக., தரப்பில் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் முழு ஈடுபாடு காட்டி வருகிறது. பா.ஜ.க, தேசியத் தலைவர் அமித்ஷா, தனது அருணாச்சல பிரதேச பயணத்தை ஒத்திவைத்து விட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கட்சியின் முக்கியத் தலைவர்களிடம் பரிந்துரைகளை அளிக்குமாறு பா.ஜ.க, கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களிடமும் குடியரசுத்தலைவர் வேட்பாளர் குறித்த பரிந்துரைகளை அளிக்கும்படி கேட்டுள்ளது. மேலும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க, மூவர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதில், அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் இது தொடர்பாகப் பேசும்.

வரும் ஜூலை 17ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இத் தேர்தலுக்கான மனுத் தாக்கல் ஜூன் 14 ஆம் தேதி துவங்குகிறது. இதில் பதிவான ஓட்டுக்கள் ஜூலை 20 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

“அவன் செத்துப் போகல்லே…சிவலோகம் போயிருக்கான்” -பெரியவா

10482143 599228513527816 46027082804070919 n 1 - 2026

“அவன் செத்துப் போகல்லே…சிவலோகம் போயிருக்கான்” -பெரியவா.

(அவ்வூர்க்காரர் வந்து;”அவர் ( கிருஷ்ணமூர்த்தி) செத்துப் போய்விட்டார்”
சொன்னதுக்கு-பெரியவாளின் பதில் மேலே.)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ஆசாரசீலரான முதிய பக்தர் கிருஷ்ணமூர்த்தி. பையன்கள் வெளிநாடுகளில் வேலை செய்து
கொண்டிருந்தார்கள்.

அவருடைய மனைவி சமீபத்தில் தான் காலமாகி விட்டிருந்தாள்.

இவர் மட்டும் இங்கே எப்படித் தனியே இருப்பது?

பையன்கள் தங்களிடம் வந்து தங்கும்படி அன்போடு அழைக்கிறார்கள்.

“என்ன செய்வது என்றே புரியல்லே. பெரியவா உத்தரவுப்படி நடக்கிறேன்.”

பெரியவாளின் பார்வை எங்கெல்லாமோ சுழன்று விட்டு கிருஷ்ணமூர்த்தியின் மேல்
வந்து நின்றது.

“வெளிதேசம் எங்கேயும் போகவேண்டாம். வீட்டிலேயே ஸ்வயம் பாகம் பண்ணிச் சாப்பிடு.”

“சரி…”

“காவேரி ஸ்நானம்,சிவபூஜை,ஜபம்,கோயில் தரிசனம் செய்து கொண்டு – உன்
அப்பா,தாத்தா,கொள்ளுத் தாத்தா மாதிரி – கிராமத்திலேயே ஒரு ரிஷியைப் போல இரு…”

கிருஷ்ணமூர்த்திக்கு அளவற்ற திருப்தி!

“அப்பனே, குருநாதா! கொஞ்சநஞ்சமிருந்த சஞ்சலத்தையும் போக்கிவிட்ட
மகாபிரபுவே!…இந்த உபதேசத்தைக் கேட்பதற்காகத் தான் வந்தேன்.

பிரசாதம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்கள் பெரியவாள்

அதன் பின்னர் அந்தக் கிராமத்திலிருந்து யாராவது தரிசனத்துக்கு வந்தால்,
“கிருஷ்ணமூர்த்தி எப்படி இருக்கான்?” என்று நினைவாகக் கேட்பார்கள்.

வெகு நாள் கழித்து, அவ்வூர்க்காரர் வந்து; “அவர் செத்துப் போய்விட்டார்”
என்றார்,இரக்கம் தோன்ற.

பெரியவா பட்டென்று, “அவன் செத்துப் போகல்லே… சிவலோகம் போயிருக்கான்”
என்றார்கள்.

கேட்டுக் கொண்டிருந்த தொண்டர்களுக்கெல்லாம் உடம்பு சிலிர்த்தது.

பெரியவாளுடைய கருணை இன்னும் ஒருபடி மேலே போயிற்று. சிஷ்யர்களில் ஒருவரைக்
கூப்பிட்டு,

“நீ போய் கிருஷ்ணமூர்த்தியை மனசிலே நினைச்சுண்டு குளத்திலே ஸ்நானம் பண்ணிட்டு
வா” என்றார்கள்

கூவத்தூரில் பேசிய பேரம்: சசிகலா தரப்பை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த வீடியோ

kuuvaththur2 - 2026

கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த போது, அவர்களிடம் சசிகலா தரப்பு பேரம் பேசியது ஒரு வீடியோ மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணனிடம் தனிப்பட்ட முறையில் பேரம் பேசும் வீடியோவை டைம்ஸ் நவ் சேனல் தற்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டைம்ஸ் நவ் மற்றும் மூன் பத்திரிக்கை இணைந்து வெளியிட்ட செய்தியின் படி, சொந்த ஊரிலிருந்து சென்னை வந்த எம்.எல்.ஏக்களை விமான நிலையத்திலேயே மடக்கிய சசிகலா தரப்பு அவர்களை அங்கிருந்து எம்.எல்.ஏ விடுதிக்கு அழைத்துச் சென்றது. அப்போது அவர்களிடம் ரூ.2 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டுள்ளது. அதன்பின், அவர்களை பேருந்து மூலம் அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ரூ.4 கோடி தருவதாக கூறியுள்ளனர். அதன் பின் அவர்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது ரூ.6 கோடி வரை தருவதாக சசிகலா தரப்பு பேரம் பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஒரே நேரத்தில் பணமாகத் திரட்ட முடியாது என்பதால் பலருக்கு தங்கமாகவும் தர முன் வந்தனர் என்றும், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ தமீன் அன்சாரி, கொங்குநாடு இளைஞர் பேரவை எம்.எல்.ஏ தனியரசு மற்றும் முக்கலத்தோர் புலிப்படை கருணாஸ் எம்.எல்.ஏ ஆகியோருக்கு ரூ.10 கோடி வரை தருவதாக பேரம் பேசப்பட்டது என்றும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை நாறடிக்கும் கூவத்தூர் விவகாரம் : பிரபலமாகிவிட்ட பேரம்பேசும் வீடியோ

kuuvaththur - 2026

நெசமோ பொய்யோ நாற வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு
கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களுக்கு கோடிகளில் பணம்
கொடுக்கப்பட்டதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ காட்சி அகில
இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசும் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன்,
புறப்படும்போது 2 கோடி தருவதாக சொன்னார்கள். பிறகு அது 4 கோடி ஆகி இறுதியில்
கூவத்தூர் விடுதியை அடைந்த போது 6 கோடி ஆகிவிட்டதாக கூறினார். “என்னடா இது
கூடிக்கொண்டே போகிறது என்று நினைத்தேன்..

பின்னர் பணமாக கொடுக்க முடியாது. அதனால் தங்கக்கட்டிகளாக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். பணமாகக் கொடுத்தாலும் தங்கம்தான் வாங்கப் போகிறோம்; தங்கமாகவே கிடைத்துவிட்டால் நல்லதுதானே என்று வீட்டுக்கு ஃபோன் போட்டு சொல்லிவிட்டேன்” என்றும் அதிர்ச்சி தகவல்களை அடுக்கிக் கொண்டே போனார் சரவணன்.

தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோருக்கு ஆளுக்கு பத்து கோடி கொடுக்கப்பட்டதாகவும் மற்றவர்களுக்கு அந்த அளவுக்குப் பணம் வரவில்லை என்றும் சரவணன் அந்த வீடியாவில் வருத்தப்பட்டார்.*

*சரவணன் எம்எல்ஏ கூவத்தூர் விடுதியிலிருந்து தப்பிவந்து ஓ.பி.எஸ். அணியில்
இணைந்தவர் என்பதால் இதுபற்றிய வாதப் பிரதிவாதங்கள்தான் ஃபேஸ்புக் ட்விட்டர்
போன்ற சமூக வலைத்தளங்களின் டைம்லைன்களை நிறைத்து வருகின்றன.

தமிழகம் பற்றிய செய்தி ஒன்று அகில இந்திய அளவில் ட்ரெண்டானால் பெருமைப்படலாம்.

ஆனால் இந்த ட்ரெண்டில் நமது மானம் போகிறது என்று பெரும்பாலானவர்கள் ட்விட்
செய்துள்ளனர்.

ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்கிறது ஒரு ட்வீட். மற்றொருவர் நமது
எம்எல்ஏக்களின் விலை என்னவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கேட்டிருக்கிறார்.

இன்னொருவர் வாக்களித்தவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்கிறார்.

 

மொட்டை போட்டு புருவத்தையும் எடுத்த மாதிரி இருக்கிறது இன்றைய இசை : இளையராஜா

Ilayaraja hero image - 2026

சென்னை:
திருப்பதி சென்று மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து எடுத்தது மாதிரி உள்ளது இன்றைய இசையில் நிலைமை என்று இசைஞானி இளையராஜா வேதனை தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக, ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர். இவர், தன் ஒலிப்பதிவுக் கூடத்தில் தனது இசைக்குழுவைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது…

“நான் இசையமைத்த அந்த நாற்பது வருட காலம் எல்லாம் இப்போது முடிந்துவிட்டது. இசைக்கலைஞர்கள் எல்லாரும் முழுதாக அமர்ந்து பாடகர்களுடன் பாடி, இசையமைத்து, ஒலிப்பதிவு செய்வது என்பதெல்லாம் இனி இந்த உலகில் நடக்கப் போவதில்லை, அந்தக் காலக்கட்டம் முடிந்துவிட்டது. இன்றைக்கு இசையமைப்பாளர்கள் இல்லை, இசை அமைப்பவர்கள் இல்லை, இசை வாசிப்பாளர்கள் இல்லை, பாடுபவர்கள் இல்லை. சும்மா ஏதோ செய்து கொண்டிருக்கிறோம்.

சினிமாவில் வந்து கைய கால ஆட்டுகிறது போல், சண்டை போடுபவர்கள் எல்லாம் சண்டையா போடுகிறார்கள்? அது மாதிரிதான் இங்கே பாடுறவனும் பாடப் போவதில்லை. ஏனென்றால் நல்ல டியூன் இல்லை. இந்த இசை எவ்வளவு உயர்ந்தது, எத்தனை ராகங்கள், எத்தனை கலப்புகள், எவ்வளவு வாத்தியக் கருவிகள், வாசிக்கிற விதங்களில் எத்தனை எத்தனை பாவங்கள், எத்தனை உணர்வுகள், எத்தனை உணர்வு பூர்வங்கள்… எல்லாம் போயாச்சு.

திருப்பதியில் போய் மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து எடுத்தது போல்தான் இருக்கிறது இன்றைய இசையின் நிலை. இப்போது இசையுலகத்தில் இசையமைப்பாளர்களே கிடையாது என்று ஆகிவிட்டது. இந்தியா முழுக்க இதே நிலை தான். இசை உலகம் சிதைந்துவிட்டது என்றார் வருத்தத்துடன்!

பேய் பயம் இல்லாத திகில் படம் “உரு”

uru film - 2026
வையம் மீடியாஸ் படநிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்துவரும் புதிய படம் உரு. இதில் கலையரசன் கதாநாயகனாவும், சாய் தன்க்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் விக்கி ஆனந்த் கூறியதாவது, உரு என்றால் பயம் என்று பொருள் உண்டு. பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை என்பதால் இப்படத்திற்கு உரு என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

கதைப்படி நாயகன் கலையரசன் நல்ல குடும்பக்கதைகளை எழுதி வரும் எழுத்தாளர். ஆனால் இன்றைய மாறிவிட்ட சூழலில் இவரின் கதைகள் வரவேற்கப்படாமல் போகவே, தனது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள இன்றைய காலகட்டத்திற்கேற்ப ரசிகர்களை மிகவும் கவரும் திரில்லர் கதைகளை எழுத முடிவுஎடுத்து, மேகமலை என்ற ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் கதை எழுதத் தொடங்கும் போது அவரைச் சுற்றி சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் பரபரப்பான் திகில் கதை, என்றாலும் பேய் இல்லாத திகில் படம் இது.

இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், மேகமலை ஆகிய இடங்களில் பெரும்பாலும் இரவு நேரங்களில் நடத்தினோம். சில சமயங்களில் காட்டெருமை கூட்டத்துக்கு பயந்து நாங்கள் ஓடி ஒளிந்த வித்தியாசமான அனுபவம் எங்களுக்கு ஏற்பட்டது. படப்பிடிப்பு நடந்தது டிசம்பர் மாதம் என்பதால் ஜீரோ 4 டிகிரி குளிரில் மழைக்காட்சியில் கலையரசனும், தன்க்ஷிகாவும் ஹீட்டர் உதவி இருந்தாலும் மிகவும் சிரமப்பட்டு நடித்தனர்… என்கின்றனர் படப்பிடிப்புக் குழுவினர்.

இப்படத்தின் ஒளிப்பதிவை பிரசன்னா எஸ்.குமார் கவனிக்க, ஜோகன் இசையமைத்து வருகிறார். எடிட்டிங் பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்கிறார். “உரு” ஜூன் 16 ​-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

வையம் மீடியாஸ் வழங்கும் ‘உரு’ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள்
1. கலையரசன்
2. சாய் தன்ஷிகா
3. ‘மைம்’ கோபி
4. டேனியல் அன்னே போப்
5. தமிழ்செல்வி
6. கார்த்திகா

தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் – வையம் மீடியாஸ்
தயாரிப்பாளர் – V.P.விஜி
எழுத்து / இயக்கம் – விக்கி ஆனந்த்
ஒளிப்பதிவு – பிரசன்னா S.குமார்
இசை – ஜோஹன்
எடிட்டிங் – சான் லோகேஷ்
பாடல் வரிகள் – மதன் கார்க்கி
தயாரிப்பு மேற்பார்வை – கார்த்திக் ஆனந்தகிருஷ்ணன்
மக்கள் தொடர்பு – C.N.குமார்​

காவிரி  பாசன உழவர்களைக் காக்க வேண்டும்!

nellai fields - 2026
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும்  தீவிரமடையாததால் இந்த ஆண்டும் உரிய நாளில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
2011-&ஆம் ஆண்டில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு அதிகமாக இருந்ததால் ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாக தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின் கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை கூட குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து குறிப்பிட்டக் காலத்தில் தண்ணீர் திறக்கப்டவில்லை. இதனால் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் 10 பருவ சாகுபடி நடந்திருக்க வேண்டும். ஆனால், மூன்று பருவ சம்பா சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு  இருக்கிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை தமிழக அரசு ஈடு செய்யவில்லை.
கர்நாடகத்தின் மேற்குப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை பெய்து வந்தாலும், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சொல்லிக் கொள்ளும்படியாக மழை பெய்யவில்லை. இதனால், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் கபினி அணை முற்றிலுமாக வறண்டு விட்டது. மீதமுள்ள  கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 3 அணைகளிலும் சேர்த்து இன்றைய நிலவரப்படி மொத்தம் 4.46 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதேபோல், நான்கு அணைகளுக்கும் சேர்த்தே  இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 932 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய அடுத்த ஒரு மாதத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு வாய்ப்பு இல்லை. அதன்பிறகு தண்ணீர் வந்தாலும் கூட நாற்று வளர்த்து நடவு நட்டு அறுவடை செய்வதற்குள் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை பயிர்களை அழித்துவிடும். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திலாவது தண்ணீர் திறந்து விடப்படும் என்ற எதிர்பார்ப்பில் நாற்று வளர்த்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை செய்யவும் உழவர்கள் தயாராக இல்லை. காரணம் கடந்த காலங்களில் இப்படி செயல்பட்டதில் அவர்கள் பாடம் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
நடப்புக் குறுவைப் பருவம் சாகுபடி செய்யப்படாவிட்டால் காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் ரூ.3000 கோடிக்கும் அதிகமாக உழவர்களுக்கு இழப்பு ஏற்படும். கடந்த ஐந்தாண்டுகளாக அடுத்தடுத்து விவசாயம் தோல்வியடைந்து விட்டதால் கடனாளியாகித் தவிக்கும் உழவர்கள் இன்னொருமுறை இத்தகைய ஆபத்தான முயற்சியில் ஈடுபடத் தயாராக இல்லை. எனவே, மீண்டும் மீண்டும் தமிழக அரசுக்கு பாட்டாளி முன்வைக்கும் கோரிக்கை உழவர்களைக் காப்பாற்றுங்கள் என்பது தான். ஆனால், கூட்டுறவு வங்கிகளில் பெரிய விவசாயிகள் வாங்கியப் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதைப் பார்க்கும் போது உழவர்களின் துயரங்களை உணர்ந்ததாக தெரியவில்லை.
உலகுக்கே உணவு படைக்கும் கடவுள்களான உழவர்களை அவர்கள் இப்போது எதிர்கொண்டு  வரும் துயரத்திலிருந்து காப்பாற்றா விட்டால், பின்னாளில் உணவின்றி நாம் தவிக்கும் போது நம்மைக் காக்க யாரும் இருக்க மாட்டார்கள். இதை உணர்ந்து பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெற்ற அனைத்து வகையான  பயிர்க்கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரியில் தடையின்றி தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்தல், உழவர்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
கட்டுரை: மருத்துவர் அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. இளைஞரணித் தலைவர்

மு.க. ஸ்டாலின் அண்டப்புளுகு: ஐ.நா மனித உரிமை கவுன்சிலை வைத்து ஈழ வியாபாரம்!

Stalin DMK - 2026

ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் நடக்கவே நடக்காத ஒரு கூட்டத்திற்கு, மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டது போலவும், தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடுவதால் அதற்கு வர இயலவில்லை என அவர் மறுத்ததாகவும் – ஒரு மிகப்பெரிய மோசடி நாடகத்தை திமுகவினர் நடத்துகின்றனர்.

இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை” – ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை ஆணையாளருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

“நடக்காத கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லையாம்!”

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை (இக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரலை இணைப்பு படத்தில் காண்க.1). இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்தில் ‘தான் கலந்துகொள்ள இயலவில்லை’ என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் ‘காமெடி’ கடிதம் எழுதியுள்ளார்.

கூடவே மேலும் ஒரு கருத்தையும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்: “இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் இந்த முக்கியமான 35வது அமர்வில், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்” என்று மு.க. ஸ்டாலின் தனது ‘அண்டப்புளுகு’ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சி நிரலிலேயே இல்லாத கற்பனை கூட்டத்தால் எப்படி நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது மு.க. ஸ்டாலினுக்கே வெளிச்சம்!

“உண்மையில் நடப்பது என்ன?”

ஈழத்தமிழர் சிக்கலோ இலங்கை விவகாரமோ இப்போதைய 35 ஆவது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவே இல்லை. அடுத்து ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தில் தான் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படவுள்ளது. அதுவரை பேரவையின் பிரதானக் கூட்டத்தில் ஈழச்சிக்கல் பேசப்பட வாய்ப்பு இல்லை.

ஐநா மனித உரிமைப் பேரவையில் அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா அமைப்புகள் NGO துணைக் கூட்டங்களை நடத்த அனுமதி உண்டு. இது போன்ற பலக்கூட்டங்களை ஐநா மனித உரிமைகள் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு நடத்தியுள்ளது. இவ்வாறான கூட்டங்கள் அனைத்தும் அரசு சாரா அமைப்புகளின் முழுக்கட்டுப்பாட்டில் அவர்களே நடத்தும் கூட்டங்கள் ஆகும். இக்கூட்டங்களுக்கு யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்.

அது போல Tamil Uzhagam எனும் ஒரு NGO அமைப்பின் சார்பில் ஜூன் மாதம் 19 ஆம் தேதி “இலங்கையில் மனித உரிமை” எனும் கூட்டத்துக்கு கூட்ட அரங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது (இணைப்பு படத்தில் காண்க.2.). இக்கூட்டத்துக்கு இதே Tamil Uzhagam NGO அமைப்பினால் மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டுள்ளார். இதற்கும் ஐநா மனித உரிமை பேரவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை.

“மருத்துவர் அன்புமணியும் மு.க. ஸ்டாலினும்”

கடந்த மார்ச் மாதம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள், ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தில், ஐநா மனித உரிமைகள் ஆணையரின் முன்பாக, பேரவையின் தலைவர் அழைப்பின் பேரில் இலங்கை மீதான நேரடி விவாதத்தில் பங்கேற்று பேசினார். இது போன்ற ஐநா மனித உரிமைப் பேரவையின் நேரடி விவாதத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைக்கப்படவில்லை. மாறாக, ஒரு அரசு சாராத NGO அமைப்பின் பிரத்தியோக கூட்டத்திற்கு தான் மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டார்.

NGO அமைப்பின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட மு.க. ஸ்டாலின், அதில் கலந்துகொள்ள இயலவில்லை என்றால், அந்த Tamil Uzhagam NGO அமைப்புக்குத் தான் பதில் சொல்ல வேண்டும். அதை விடுத்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறுவதன் மூலம் – ஐநா அவைக் கூட்டத்திற்கே அவர் அழைக்கப்பட்டத்தைப் பொன்று, ஒரு போலியான மோசடி தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரே இப்படி போலியான கட்டுக்கதைகளை வெளியிடுவது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.

இப்படிக்கு,

பசுமைத்தாயகம்

மால், சினிமாவுக்கு போகாத மருமகள் தேவை!: ஆர்.எஸ்.எஸ். சிந்தனையில் ராப்ரி தேவி

lalu prasad yadav 70th birthday - 2026

பாட்னா:

என் இரண்டு மகன்களுக்கும், அடக்கமான மருமகள்தான் தேவை. சினிமா தியேட்டர், மால்களுக்குச் செல்லும் பெண்கள் தேவை இல்லை என, பீஹார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மனைவியுமான ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.

லாலு பிரசாத் யாதவின் 70வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தின் போது ராப்ரி தேவி கூறியதாவது:

சினிமா தியேட்டர்கள் மற்றும் மால்களுக்கு செல்ல விருப்பப்படும் பெண்களை என் மருமகள்களாக ஏற்க விரும்பவில்லை. அவர்கள் நல்ல பண்பாட்டை கொண்டிருக்க வேண்டும். என் மகள் தேஜ் பிரதாப்புக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். எனவே வீட்டை கவனித்து கொண்டு, மூத்தவர்களை மதித்து வெளி வேலைகளையும் திறமையாக கவனித்துக் கொள்ளும் பெண்களே என் மருமகள்களாக வர வேண்டும். குறிப்பாக அவர்கள் என்னை போல இருக்க வேண்டும் என்று கூறினார்.

பண்பாட்டையும் கலாசாரத்தையும் வலியுறுத்துவது குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாஜக.,வும்தான். ஆனால், ராஷ்டிரீய ஜனதா தளத்தின் தலைவர் வீட்டிலும் இந்தப் பண்பாட்டுக் குரல் ஒலிக்கத் தொடங்கியிருப்பது, பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

லாலுவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ்பிரதாப் யாதவ் ஆகியோர், தற்போதைய நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் அமைச்சர்களாக உள்ளனர். இதில் தேஜஸ்வி துணை முதல்வராக உள்ளார். தேஜ் பிரதாப் சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார். இவர்கள் மீதும், லாலு குடும்பத்தினர் மீதும் எதிர்க்கட்சித் தலைவரான பாஜக.,வின் சுஷில் குமார் மால்கள் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்களைக் கூறியிருந்தார். அவற்றை லாலு குடும்பத்தினர் வழக்கம்போல் மறுத்து வருகின்றனர்.

ஓபிஎஸ் அணியில் இணைந்தார் முன்னாள் மேயர்

sasikala panner - 2026

சென்னை:

ஓ.பன்னீர்செல்வம் அணியில் தஞ்சையின் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் இணைந்துள்ளார். மேலும் 500 பேர் இன்று ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளனர்.

சசிகலாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற ஓபிஎஸ் அணியினர் திட்டமிட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தையும் பெற ஓபிஎஸ் அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாநகர முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து அந்த அணியில் இணைந்துள்ளார். மேலும் 500க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளனர்.