Home Blog Page 5616

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

perumal - 2026

ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம் ||
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||

யஸ்ய த்விரத வக்த்ராத்யா பாரிஷத்யா பரிஸ்ஸதம் |
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம் தமாஸ்ரயே ||

வ்யாஸம் வஸிஷ்டநப்தாரம் ஸக்தே பௌத்ர மகல்மஷம் |

பராஸராத் மஜம் வந்தே ஸுகதாதம் தபோநிதிம் ||

வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே |

நமோ வைப்ரஹ்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நம: ||

அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே |

ஸதைக ரூபரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே ||

யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத் |

விமுச்யதே நமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே ||

ஓம் நமே விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே

ஸ்ரீ வைஸம்பாயந உவாச
ஸ்ருத்வா தர்மாந ஸேஷேண பாவநாநி ச ஸர்வஸ: |
யுதிஷ்டிர ஸாந்தநவம் புநரேவாப்ய பாஷத ||

யுதிஷ்டிர உவாச
கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம் |
ஸ்துவந்த : கம் கமர்ச்சந்த: ப்ராப்நுயுர் மாநவாஸ் ஸுபம் ||

கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத: |

கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜந்ம ஸம்ஸார பந்தநாத் ||

ஸ்ரீ பீஷ்ம உவாச

ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித: ||

தமேவ சார்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம் |
த்யாயந் ஸ்துவந் நமஸ்யம்ச யஜமாநஸ் தமேவச ||

அநாதி நிதநம் விஷ்ணும் ஸர்வலோக மஹேஸ்வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வதுக்காதிகோ பவேத் ||

ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம் |
லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம் ||

ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ திகதமோமத: |
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்ச்சேந் நர: ஸதா ||

பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப: |
பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் ||

பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம் |
தைவதம் தேவதாநாம் ச பூதாநாம் யோவ்யய: பிதா ||

யத: ஸர்வாணி பூதாநி பவந்த்யாதி யுகாகமே |
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புநரேவ யுக்க்ஷயே ||

தஸ்ய: லோக ப்ரதாநஸ்ய ஜகந்நாதஸ்ய பூபதே|
விஷ்ணோர்நாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம் ||

யாநி நாமாநி கௌணாநி விக்யாதாநி மஹாத்மந: |
ரிஷி பி: பரிகீதாநி தாநி வக்ஷ்யாமி பூதயே ||

ரிஷிர் நாம்நாம் ஸஹஸ்ரஸ்ய வேதவ்யாஸோ மஹா முநி: |
சந்தோ அநுஷ்டுப் ததா தேவோ பகவாந் தேவகீஸுத: ||

அம்ருதாம் ஸூத்பவோ பீஜம் ஸக்திர் தேவகீ நந்தந: |
த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய ஸாந்த்யர்த்தே விநியுஜ்யதே ||

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேஸ்வரம் |
அநேகரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம் ||

அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர் திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய |
ஸ்ரீ வேதவ்யாஸோ பகவாந் ரிஷி: |
அநுஷ்டுப் சந்த: |
ஸ்ரீ மஹாவிஷ்ணு: பரமாத்மா ஸ்ரீமந் நாராயணோ தேவதா |
அம்ருதாம் ஸூத்பவோ பாநுரிதி பீஜம் |
தேவகீ நந்தந: ஸ்ரஷ்டேதி ஸக்தி: |
உத்பவ: க்ஷோபணோ தேவ இதி பரமோ மந்த்ர: |
சங்கப்ருத் நந்தகீ சக்ரீதி கீலகம் |
சார்ங்க தந்வா கதாதர இத்யஸ்த்ரம் |
ரதாங்க பாணி ரக்ஷோப்ய இதி நேத்ரம் |
த்ரிஸாமா ஸாமக: ஸாமேதி கவசம் |
ஆநந்தம் பரப்ரஹ்மேதி யோநி: |
ருது: ஸுதர்ஸந: கால இதி திக்பந்த: |
ஸ்ரீ விஸ்வரூப இதி த்யாநம் |
ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரீத்யர்த்தே ஸஹஸ்ரநாம ஜபே விநியோக: |

த்யாநம்
க்ஷீரோதந்வத் ப்ரதேஸே ஸுசிமணி விலஸத் ஸைகதே மௌக் திகாநாம்
மாலா க்லுப்தா ஸநஸ்த: ஸ்படிகமணி நிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க: |

ஸுப்ரை ரப்ரை ரதப்ரை ருபரி விரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை:
ஆநந்தீ ந: புநீயா தரிநளிந கதா ஸங்கபாணிர் முகுந்த: ||
பூ: பாதௌ யஸ்ய நாபிர் வியத ஸுரநிலஸ் சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணாவாஸா: ஸிரோ த்யௌர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேய மப்தி: |

அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸுர நர கககோ போகி கந்தர்வ தைத்யை:
சித்ரம் ரம் ரம்யதேதம் த்ரிபுவந வபுஷம் விஷ்ணுமீஸம் நமாமி ||
ஓம் நமோ பகவதே வாஸுதேவாயா
ஸாந்தாகாரம் புஜக ஸயநம் பத்மநாபம் ஸுரேஸம்
விஸ்வாதாரம் ககநஸத்ருஸம் மேகவர்ணம் ஸுபாங்கம் |
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகிஹ்ருத்யாந கம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வ லோகைக நாதம் ||

மேகஸ்யாமம் பீத கௌஸேய வாஸம்
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத் பாஸிதாங்கம் |
புண்யோபேதம் புண்டரீ காயதாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வ லோகைக நாதம் ||

நமஸ் ஸமஸ்த பூதாநாம் ஆதி தேவாய பூப்ருதே |
அநேக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே ||

ஸஸங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம் ஸரஸீ ருஹேக்ஷணம் |

ஸஹார வக்ஷஸ் ஸ்தல ஸோபி கௌஸ்துபம்
நமாமி விஷ்ணும் ஸிரஸா சதுர்புஜம் ||

சாயாயாம் பாரிஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸ நோபரி
ஆஸீநம் அம்புதஸ்யாமம் ஆயதாக்ஷம் அலங்ருதம் |
சந்த்ராநநம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம்
ருக்மிணி ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் ஸ்ரீ க்ருஷ்ணமாஸ்ரயே ||

varadharajaperumal - 2026

 

ஓம் விஸ்வஸ்வை நம:

விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு: |
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந: || 1

பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி: |
அவ்யய: புருஷஸ் ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோ க்ஷர ஏவ ச || 2

யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸ்வர: |
நாரஸிம்ஹவபுஸ் ஸ்ரீமாந் கேஸவ: புருஷோத்தம: || 3

ஸர்வஸ் ஸர்வஸ் ஸிவஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர: || 4

ஸ்வயம்புஸ் ஸம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வந: |
அநாதி நிதநோ தாதா விதாதா தாதுருத்தம: || 5

அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ: பத்மநாபோ அமரப்ரபு: |
விஸ்வகர்மா மநுஸ்த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ: || 6

அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தந: |
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் || 7

ஈஸாந: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்டஸ் ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி : |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதந: || 8

ஈஸ்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |
அநுத்தமோ துராதர்ஷ: க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவாந்|| 9

ஸுரேஸஸ் ஸரணம் ஸர்ம விஸ்வரேதா: ப்ரஜாபவ: |
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யயஸ் ஸர்வதர்ஸந: || 10

அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதிரச்யுத: |
வ்ருஷாகபிரமே யாத்மா ஸர்வயோக விநிஸ்ருத: || 11

வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: || 12

ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வயோநிஸ் ஸுசிஸ்ரவா: |
அம்ருதஸ் ஸாஸ்வதஸ் ஸ்தாணுர் வராரோஹோ மஹாதபா: || 13

ஸர்வகஸ் ஸர்வவித்பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந: |
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித்கவி: || 14

லோகாத்யக்ஷஸ் ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ: || 15

ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ: |
அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி: புநர்வஸு: || 16

உபேந்த்ரோ வாமந: ப்ராம்ஸு ரமோகஸ் ஸுசிரூர்ஜித: |
அதீந்த்ரஸ் ஸங்க்ரஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: || 17

வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரயோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: || 18

மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி: |
அநிர்தேஸ்யவபு: ஸ்ரீமாந் அமேயாத்மா மஹாத்ரி த்ருத் || 19

மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்கதி: |
அநிருத்தஸ் ஸுராநந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி: || 20

மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: || 21

அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந்ஸ்திர: |
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா ஸுராரிஹா || 22

குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம: |
நிமிஷோ நிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: || 23

அக்ரணீர் க்ராமணீ: ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத் || 24

ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா ஸம்வருதஸ் ஸம்ப்ரமர்த்ந: |
அஹஸ் ஸம்வர்த்தகோ வஹ்நி ரநிலோ தரணீதர: || 25

ஸுப்ரஸாத: ப்ரஸந் நாத்மா விஸ்வருக் விஸ்வபுக் விபு : |
ஸத்கர்த்தா ஸதக்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோ நர: || 26

அஸங்க்யேயோ ப்ரமேயாத்மா விஸிஷ்டஸ் ஸிஷ்டக்ருச் சுசி: |
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்திஸாதந: || 27

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்த்தநோ வர்த்தமாநஸ்ச விவிக்தஸ் ஸுருதி ஸாகர: || 28

ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைகரூபோ ப்ருஹத்ரூபஸ் ஸிபிவிஷ்ட: ப்ரகாஸந: || 29

ஓஜஸ்தேஜோ த்யுதிர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந: |
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸுர் பாஸ்கர த்யுதி: || 30

அம்ருதாம் ஸூத்பவோ பாநு: ஸஸபிந்து ஸுரேஷ்வர: |
ஔஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்யதர்ம பராக்ரம: || 31

பூதபவ்ய பவந்நாத: பவந: பாவநோ நல: |
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத ப்ரபு: || 32

யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாஸந: |
அத்ருஸ்யோ (அ)வ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ர ஜிதநந்தஜித்|| 33

இஷ்டோவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்ட: ஸிகண்டி நஹுஷோ வ்ருஷ: |
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்த்தா விஸ்வபாஹுர் மஹீதர: || 34

அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவாநுஜ: |
அபாந்நிதி ரத்ஷ்டாந மப்ரமத்த: ப்ரதிஷ்டித: || 35

ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹந: |
வாஸுதேவோ ப்ருஹத்பாநுர் ஆதிதேவ: புரந்தர: || 36

அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸூரஸ் ஸௌரிர் ஜநேஸ்வர: |
அநுகூலஸ் ஸதாவர்த்த: பத்மீ பத்ம நிபேக்ஷண: || 37

பத்மநாபோ அரவிந்தர்க்ஷ: பத்மகர்ப்பஸ் ஸரீரப்ருத்|
மஹர்த்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: || 38

அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி: |
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ்ஜய: || 39

விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ வேகவா நமிதாஸந: || 40

உத்பவ: க்ஷோபணோ தேவஸ் ஸ்ரீகர்ப்ப: பரமேஸ்வர: |
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹநோ குஹ: || 41

வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் ஸம்ஸ்தாநஸ் ஸ்தாநோதோ த்ருவ: |
பரர்த்தி: பரமஸ்பஷ்டஸ் துஷ்ட: புஷ்டஸ் ஸுபேக்ஷண: || 42

ராமோ விராமோ விரஜோ மார்கோ நேயோ நயோநய: |
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம: || 43

வைகுண்ட: புருஷ ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |
ஹிரண்யகர்ப்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயு ரதோக்ஷஜ: || 44

ருதுஸ் ஸுதர்ஸந: கால: பரமேஷ்டி பரிக்ரஹ: |
உக்ரஸ் ஸம்வத்ஸரோ தக்ஷோ விஸ்ராமோ விஸ்வ தக்ஷிண: || 45

விஸ்தாரஸ் ஸ்தாவர ஸ்தாணு: ப்ரமாணம் பீஜமவ்யயம்|
அர்த்தோ நர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந: || 46

அநிர்விண்ணஸ் ஸ்தவிஷ்டோபூர் தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷாம: க்ஷாமஸ் ஸமீஹந: || 47

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாங்கதி: |
ஸர்வதர்ஸீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்|| 48

ஸுவ்ரதஸ் ஸுமுகஸ் ஸூக்ஷ்ம ஸுகோஷஸ் ஸுகதஸ் ஸுஹ்ருத்|
மநோ ஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர் விதாரண: || 49

ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்|
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்நகர்ப்போ தநேஸ்வர: || 50

தர்மக்ருத் தர்மகுப் தர்மீ ஸதஸத் க்ஷரமக்ஷரம்|
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராமஸூர் விதாதா க்ருதலக்ஷண: || 51

கபஸ்தநேமிஸ் ஸத்வஸ்தஸ் ஸிம்ஹோ பூதமஹேஸ்வர: |
ஆதிதேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்ருத் குரு: || 52

உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞாநகம்ய: புராதந: |
ஸரீர பூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: || 53

ஸோமபோம்ருதபஸ் ஸோம: புருஜித் புருஸத்தம: |
விநயோ ஜயஸ் ஸத்யஸந்தோ தாஸார்ஹஸ் ஸாத்வதாம் பதி: || 54

ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோ அமிதவிக்ரம: |
அம்போநிதி ரநந்தாத்மா மஹோததி ஸயோந்தக: || 55

அஜோ மஹார்ஹஸ் ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதந: |
ஆநந்தோ நந்தநோ நந்தஸ் ஸத்யதர்மா த்ரிவிக்ரம: || 56

மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதஜ்ஞோ மேதிநீபதி: |
த்ரிபதஸ் த்ரிதஸாத் யக்ஷோ மஹாஸ்ருங்க: க்ருதாந்த க்ருத்|| 57

மஹாவராஹோ கோவிந்தஸ் ஸுஷேண: கநகாங்கதீ|
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர: || 58

வேதாஸ் ஸ்வாங்கோ ஜித: க்ருஷ்ணோ த்ருடஸ் ஸங்கர்ஷணோச்யுத: |
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமநா: || 59

பகவாந் பகஹா நந்தி வநமாலீ ஹலாயுத: |
ஆதித்யோ ஜ்யோதிர் ஆதித்யஸ் ஸ்ஹிஷ்ணுர் கதிஸத்தம: || 60

ஸுதந்வா கண்ட பரஸுர் தாருணோ த்ரவிணப்ரத: |
திவிஸ்ப்ருக் ஸர்வத்ருக் வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ: || 61

த்ரிஸமா ஸாமகஸ்ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்|
ஸந்யாஸக்ருச் சமஸ் ஸாந்தோ நிஷ்டா ஸாந்தி: பராயணம்|| 62

ஸுபாங்கஸ் ஸாந்திதஸ் ஸ்ரேஷ்டா குமுத: குவலேஸய: |
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாக்ஷோ வ்ருஷ ப்ரிய: || 63

அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸ வக்ஷாஸ் ஸ்ரீவாஸ: ஸ்ரீபதிஸ் ஸ்ரீமதாம்வர: || 64

ஸ்ரீதஸ் ஸ்ரீஸஸ் ஸ்ரீநிவாஸஸ் ஸ்ரீநிதிஸ் ஸ்ரீவிபாவந: |
ஸ்ரீதரஸ் ஸ்ரீகரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்ரய: || 65

ஸ்வக்ஷஸ் ஸ்வங்கஸ் ஸதாநந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர: | விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திஸ் சிந்நஸம்ஸய: || 66

உதீர்ணஸ் ஸர்வதஸ்சக்ஷு ரநீஸஸ் ஸாஸ்வத ஸ்திர: |
பூஸயோ பூஷணோ பூதிர் விஸோக: ஸோகநாஸந: || 67

அர்ச்சிஷ்மா நர்ச்சித: கும்போ விஸுத்தாத்மா விஸோதந: |
அநிருத்தோ ப்ரதிரத: ப்ரத்யும்நோ அமித விக்ரம: || 68

காலநேமி நிஹா வீரஸ் ஸௌரி ஸூர ஜநேஸ்வர: |
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ: கேஸவ கேஸிஹா ஹரி: || 69

காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: |
அநிர்தேஸ்யவபுர் விஷ்ணுர் வீரோநந்தோ தநஞ்ஜய: || 70

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தந: |
ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மணப்ரிய: || 71

மஹாக்ரமோ மஹாக்ரமா மஹாதேஜா மஹோரக: |
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி: || 72

ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா ரணப்ரிய: |
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி ரநாமய: || 73

மநோஜவஸ் தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: |
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர் வஸுமநாஹவி: || 74

ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயண: |
ஸூரஸேநோ யதுஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸ் ஸுயாமுந: || 75

பூதாவாஸோ வாஸுதேவஸ் ஸர்வாஸு நிலயோ நல: |
தர்ப்பஹா தர்ப்பதோ த்ருப்தோ துர்தரோ தாபராஜித: || 76

விஸ்வமூர்த்திர் மஹாமூர்த்திர் தீப்தமூர்த்தி ரமூர்த்திமாந்|
அநேகமூர்த்தி ரவ்யக்தஸ் ஸதமூர்த்திஸ் ஸதாதந: || 77

ஏகோ நைகஸ் ஸவ: க:கிம் யத்தத் பதமநுத்தமம்|
லோகபந்துர் லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல: || 78

ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கஸ் சந்தநாங்கதீ|
வீரஹா விஷமஸ் ஸூந்யோ க்ருதாஸீ ரசலஸ்சல: || 79

அமாநீ மாநதோ மாந்யோ லோகஸ்வாமி த்ரலோக த்ருத்|
ஸுமேதா மேதஜோ தந்யஸ் ஸத்யமேதா தராதர: || 80

தேஜோ வ்ருக்ஷோ த்யுதிதரஸ் ஸர்வஸ் ஸத்ர ப்ருதாம் வர: |
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகஸ்ருங்கோ கதாக்ரஜ: || 81

சதுர்மூர்த்திஸ் சதுர்பாஹும் சதுர்வ்யூஹஸ் சதுர்கதி: |
சதுராத்மா சதுர்ப்பாவஸ் சதுர்வேத விதேகபாத்|| 82

ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம: |
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாஸோ துராரிஹா|| 83

ஸுபாங்கோ லோகஸாரங்க: ஸுதந்துஸ் தந்துவர்த்ந: |
இந்த்ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாகம: || 84

உத்பவஸ் ஸுந்தரஸ் ஸுந்தோ ரத்நநாபஸ் ஸுலோசந: |
அர்க்கோ வாஜஸநஸ் ஸ்ருங்கீ ஜயந்தஸ் ஸர்வவிஜ்ஜயீ|| 85

ஸுவர்ணபிந்து ரக்ஷோப்யஸ் ஸர்வவாகீஸ்வரேஸ்வர: |
மஹாஹ்ரதோ மஹாகர்த்தோ மஹாபூதோ மஹாநிதி|| 86

குமுத: குந்தர: குந்த: பர்ஜந்ய: பாவநோ நில: |
அம்ருதாம் ஸோம்ருதவபுஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வதோமுக: || 87

ஸுலபஸ் ஸுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச் சத்ருதாபந: |
ந்யக்ரோதோ தும்பரோ ஸ்வத்தஸ் சாணூராந்த்ர நிஷூதந: || 88

ஸஹஸ்ரார்ச்சிஸ் ஸப்தஜிஹ்வஸ் ஸப்தைதாஸ் ஸப்த வாஹந: |
அமூர்த்தி ரநகோசிந்த்யோ பயக்ருத் பயநாஸந: || 89

அணுர்ப்ருஹத் க்ருஸஸ் ஸ்தூலோ குணப்ருந் நிர்குணோ மஹாந்|
அத்ருதஸ் ஸ்வத்ருதஸ் ஸ்வாஸ்ய: ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந: || 90

பாரப்ருத் கதிதோ யோகீ யோகீஸஸ் ஸர்வகாமத: |
ஆஸ்ரமஸ் ஸ்ரமண: க்ஷாமஸ் ஸுபர்ணோ வாயுவாஹந: || 91

தநுர்த்தரோ தநுர்வேதோ தண்டோ தமயிதாதம: |
அபராஜிதஸ் ஸர்வஸஹோ நியந்தா நியமோயம: || 92

ஸத்வவாந் ஸாத்விகஸ் ஸத்யஸ் ஸத்ய தர்ம பராயண: |
அபிப்ராய: ப்ரயார்ஹோர்ஹ ப்ரியக்ருத் ப்ரீதிவர்த்தந: || 93

விஹாய ஸகதிர் ஜ்யோதிஸ் ஸுருசிர் ஹுதபுக் விபு: |
ரவிர் விரோசநஸ் ஸூர்யஸ் ஸவிதா ரவிலோசந: || 94

அநந்தஹூதபுக் போக்தா ஸுகதோ நைகதோக்ரஜ: |
அநிர்விண்ணஸ் ஸதாமர்ஷீ லோகாதிஷ்டாந மத்புத: || 95

ஸநாத் ஸநாத நதம: கபில: கபி ரவ்யய: |
ஸ்வஸ்திதஸ் ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண: || 96

அரௌத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜித ஸாஸந: |
ஸப்தாதிகஸ் ஸப்தஸஹ: ஸிஸிரஸ் ஸர்வரீகர: || 97

அக்ரூர: பேஸலோ தக்ஷோ தக்ஷிண: க்ஷமிணாம்வர: |
வித்வத்தமோ வீதபய: புண்ய ஸ்ரவண கீர்த்தந: || 98

உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ துஸ்ஸவப்ந நாஸந: |
வீரஹா ரக்ஷணஸ்ஸந்தோ ஜீவந: பர்யவஸ்தித: || 99

அநந்தரூபோ நந்தஸ்ரீ: ஜிதமந்யுர் பயாபஹ: |
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸ: || 100

அநாதிர் பூர்புவோ லக்ஷ்மீஸ் ஸுவீரோ ருசிராங்கத: |
ஜநநோ ஜநஜந்மாதிர் பீமோ பீம பராக்ரம: | | 101

ஆதாரநிலயோ தாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: |
ஊர்த்வகஸ் ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண: || 102

ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணப்ருத் ப்ராணஜீவந: |
தத்வம் தத்வ விதேகாத்மா ஜந்மம்ருத்யு ஜராதிக: || 103

பூர்புவ: ஸ்வஸ்த ருஸ்தாரஸ் ஸவிதா ப்ரபிதாமஹ |
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹந: || 104

யஜ்ஞப்ருத் யஜ்ஞக்ருத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞஸாதந: |
யஜ்ஞாந்தக்ருத் யஜ்ஞகுஹ்ய மந்நமந்நாத ஏவ ச || 105

ஆத்மயோநிஸ் ஸ்வயஞ்ஜாதோ வைகாநஸ் ஸாமகாயந: |
தேவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டா க்ஷிதீஸ: பாபநாஸந: || 106

ஸங்கப்ருந் நந்தகீ சக்ரீ ஸார்ங்கதந்வா கதாதர: |
ரதாங்கபாணி ரக்ஷோப்யஸ் ஸர்வ ப்ரஹரணாயுத: || 107

ஸ்ரீ ஸர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி
வநமாலீ கதீ ஸார்ங்கீ ஸங்கீ சக்ரீ ச நந்தகீ|
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோபி ரக்ஷது|| …………….3

ஸ்ரீ வாஸுதேவோபி ரக்ஷது ஓம் நம இதி

Sirupuliyur Krupasamudra Perumal - 2026

இதீதம் கீர்த்தநீயஸ்ய கேஸவஸ்ய மஹாத்மந: |
நாம்நாம் ஸஹஸ்ரம் திவ்யாநாம் அஸேஷேண: ப்ரகீர்த்திதம்|| 108

ய இதம் ஸ்ருணுயாந் நித்யம் யஸ்சாபி பரிகீர்த்தயேத் |
நாஸுபம் ப்ராப்நுயாத் கிஞ்சித் ஸோமுத்ரேஹ ச மாநவ: || 109

வேதாந்தகோ ப்ராஹ்மண ஸ்யாத் க்ஷத்ரியோ விஜயீ பவேத் |
வைஸ்யோ தநஸம்ருத்த ஸ்யாத் ஸூத்ரஸ் ஸுக மவாப்நுயாத் || 110

தர்மார்த்தீ ப்ராப்நுயாத் தர்ம மர்த்தார்தீ சார்த்த மாப்நுயாத் |
காமாநுவாப்நுயாத் காமீ ப்ரஜார்த்தீ சாப்நுயாத் ப்ரஜா: || 111

பக்திமாந் யஸ ஸ்தோத்தாய ஸுசிஸ் தத்கத மாநஸ: |
ஸஹஸ்ரம் வாஸுதேவஸ்ய நாம்நாமேதத் ப்ரகீர்த்தயேத் || 112

யஸ: ப்ராப்நோதி விபுலம் யாதி ப்ராதந்ய மேவ ச|
அசலாம் ஸ்ரிய மாப்நோதி ஸ்ரேய: ப்ராப்நோ த்யநுத்தமம் || 113

ந பயம் க்வசிதாப்நோதி வீர்யம் தேஜஸ்ய விந்ததி |
பவத்யரோகோ த்யுதிமாந் பலரூப குணாந்வித: | | 114

ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யதே பந்தநாத் |
பயாந் முச்யதே பீதஸ்து முச்யேதாபந்ந ஆபத: || 115

துர்காண்யதி தரத்யாஸு புருஷ: புருஷோத்தமம் |
ஸ்துவந் நாமஸஹஸ்ரேண நித்யம் பக்தி ஸமந்வித: || 116

வாஸுதேவாஸ்ரயோ மர்த்யோ வாஸுதேவ பராயண: |
ஸர்வபாப விஸுதாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம் || 117

ந வாஸுதேவ பக்தாநாம் அஸுபம் வித்யதே க்வசித் |
ஜந்ம ம்ருத்யு ஜராவ்யாதி பயம் நைவோபஜாயதே || 118

இமம் ஸ்தவ மதீயாந: ஸ்ரத்தா பக்தி ஸமந்வித: |
யுஜ்யேதாத்மா ஸுக்க்ஷாந்தி ஸ்ரீ த்ருதி ஸ்ம்ருதி கீர்த்திபி: || 119

ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நாஸுபாமதி: |
பவந்தி க்ருத புண்யாநாம் பக்தாநாம் புருக்ஷோத்தமே || 120

த்யௌஸ் சந்த்ரார்க்க நக்ஷத்ரா கம்திஸோ பூர்மஹோததி: |
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந: || 121

ஸஸுராஸுர கந்தர்வம் ஸயக்ஷோரக ராக்ஷஸம்|
ஜகத் வஸே வர்த்ததேதம் க்ருஷ்ணஸ்ய சராசரம் || 122

இந்த்ரியாணி மநோபுத்திஸ் ஸத்வம்தேஜோ பலம் த்ருதி: |
வாஸுதேவாத் மஹாந் யாஹு: க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ஏவ ச || 123

ஸர்வா கமாநாம் ஆசார: ப்ரதமம் பரிகல்பதே |
ஆசார ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுத: || 124

ரிஷய: பிதரோ தேவா மஹாபூதாநி தாவத: |
ஜங்கமா ஜங்கமஞ்சேதம் ஜகந்நாராயணோத் பவம் || 125

யோகோ ஜ்ஞாநம் ததா ஸாங்க்யம் வித்யா ஸில்பாதி கர்ம ச |
வேதாஸ் ஸாஸ்த்ராணி விஜ்ஞாநம் ஏதத் ஸர்வம் ஜநார்தநாத் || 126

ஏகோ விஷ்ணுர் மஹத்பூதம் ப்ருதக்பூதா ந்யநேகஸ: |
த்ரீந் லோகாந் வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விஸ்வ புகவ்ய்ய: || 127

இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோர் வ்யாஸேந கீர்த்திதம் |
படேத்ய இச்சேத் புருஷ: ஸ்ரேய: ப்ராப்தும் ஸுகாநி ச || 128

விஸ்வேஸ்வர மஜம் தேவம் ஜகத: ப்ரபுமவ்ய்யம் |
பஜந்தி யே புஷ்கராக்ஷம் ந தே யாந்தி பராபவம் || 129
நதே யாந்தி பராபவம் ஓம் நம இதி

vanamamalai perumal thayar - 2026

அர்ஜுந உவாச

பத்மபத்ர விஸாலாக்ஷ பத்மநாப ஸுரோத்தம |
பக்தாநாம் அநுரக்தாநாம் த்ராதா பவ ஜநார்தந ||

ஸ்ரீ பகவாநுவாச
யோ மாம் நாம ஸஹஸ்ரேண ஸ்தோதுமிச்ச தி பாண்டவ |
ஸோஹமேகேந ஸ்லோகேந ஸ்துத ஏவ ந ஸம்ஸய: ||

ஸ்துவ ஏவ ந ஸம்ஸய ஓம் நம இதி

வ்யாஸ உவாச
வாஸநாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் புவனத்ரயம் |
ஸர்வபூத நிவாஸோஸி வாஸுதேவ நமோஸ்து தே ||
ஸ்ரீ வாஸுதேவ நமோஸ்துத ஓம் நம இதி

பார்வதியுவாச
கேநேபாயேந லகுநா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம் |
பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோதுமிச்சாம் யஹம் ப்ரபோ ||

ஸ்ரீ ஈஸ்வர உவாச
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராம மநோரமே |
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராமநாம வராநநே || ………..3
ஸ்ரீராமநாம வராநந ஓம் நம இதி
ப்ரஹ்மோவாச
நமோஸ் த்வநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே
ஸஹஸ்ர பாதாக்ஷி ஸிரோரு பாஹவே |
ஸஹஸ்ரநாம்நே புருஷாய ஸாஸ்வதே
ஸஹஸ்ரகோடி யுக தாரிணே நம: ||
ஸஹஸ்ரகோடி யுக தாரிணே ஓம் நம இதி

ஸஞ்ஜய உவாச
யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர்தர: |
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி: த்ருவா நீதிர் மதிர் மம ||

ஸ்ரீ பகவாநுவாச
அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக்க்ஷேமம் வஹாம் யஹம் ||
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகே யகே||
ஆர்த்தா விஷண்ணஸ் ஸிதிலாஸ் ச பீதா:
கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமாநா: |
ஸங்கீர்த்ய நாராயண ஸப்தமாத்ரம்
விமுக்த துக்காஸ் ஸுகிநோ பவந்து ||

காயேந வாசா மநஸேந்தியைர் வா
புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
ஸ்ரீ நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

‘எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்’ (தோஷம் நீங்க பெரியவா சொன்ன பரிகாரம்)

17309425 418371555182589 581110579721556446 n - 2026

‘எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்’ (தோஷம் நீங்க பெரியவா சொன்ன பரிகாரம்)

(கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும்வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம்
தடுக்கறது. இருந்தாலும் எனக்குஎன்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! அவரோட மனசை
நோகவிட்டுடமுடியுமா?”)

​(தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும்பக்தியும் செலுத்தும்
பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்டகருணை,மகாபெரியவாளைத் தவிர வேறு
யாருக்கு இருக்கும்?)

”சொன்னவர்-அகிலா கார்த்திகேயன்.
(இவர் பிரதோஷம் மாமா உறவினர்)
தொகுப்பு-சாருகேசி
‘நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்
புத்தகம்-காமகோடி பெரியவா.

காஞ்சி மகா பெரியவாளின் பக்தர் ஒருவர், சாஸ்திர நியதிகளை உயிராகப் போற்றி
வந்தார். இவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. குடும்பநலனையும்
எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு,வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.
அந்த நாட்டின் சூழலும் பணியின் தன்மையும் திருப்தியே என்றாலும், சாஸ்திரத்தை
மீறிவிட்டோமோ’ என்கிற உறுத்தல்,பக்தரை வாட்டியது.தனது மனக்கலக்கத்துக்கு
மருந்தாக…மகா பெரியவாளை அனுதினமும் தியானித்து வந்தார்.

ஒரு விடுமுறையில் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை ஆசை ஆசையாகச செய்தார்.
குடும்பத்தாரைப் பர்க்கப் போகிறோம் என்பதைவிட,வெகு நாட்களுக்குப் பிறகு
காஞ்சிமகானைத் தரிசிக்க போகிறோம் என்கிற குதூகலமே அவருக்கு அதிகம் இருந்தது.

சென்னை வந்ததும்,விமானநிலையத்தில் இருந்து டாக்சி பிடித்து காஞ்சிபுரம்
சென்றார்.

காஞ்சிமடத்தில், அன்றைய சமையல் குறித்து சிப்பந்திகளிடம்பேசிக்கண்டிருந்தார்
மகா பெரியவா. தரசனத்துக்காக வந்திருந்தஅடியவரகளுக்குவியப்பு
.’சமையல்’இன்னின்னமாதிரியெல்லம்இருக்க
வேண்டும்என்பதுமுதறகொண்டுபெரியவாசிரத்தைஎடுத்துக்கொள்கிறாரே? இதுவரை
இப்படியல்லாம் சொன்னது கிடையாதே என்ற ஆச்சரியம் அவர்களுக்கு.

இந்த நிலையில்தான் மடத்துக்கு வந்துசேர்ந்தார் பக்தர். மகாபெரியவாளைக்
கண்டதும் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கினார். அவரை ஆசீர்வதித்த பெரியவா,
சிப்பந்திகளைஅழைத்து, ”இவருக்கு, உடனே ஆகாரம் பண்ணி வையுங்கோ” என்றார்.

வந்ததும் வராததுமாக அந்தப் பக்தரை சாப்பிட அழைத்துச் செல்லும்படிபெரியவா
சொல்வது ஏன் என்று ஊழியர் களுக்குப் புரியவில்லை. ஆனால்,கடல் கடந்து தன்
பக்தன் வந்திருக்கிறான்; வந்ததும், தன்னைத் தரிசிக்க ஓடிவந்துவிட்டான். எனில்,
அவனுடைய நிலை என்ன என்பது பெரியவாளுக்குத்தெரியாதா?!

வயிறாரச் சாப்பிட்டு முடித்த பக்தர், மீண்டும் மகாபெரியவாளுக்கு எதிரில் வந்து
நின்றார். அவரை உற்றுப் பார்த்த பெரியவா,

”என்ன… உன் விரதம் பூர்த்தி ஆயிடுத்தா?” என்றார் கருணையும்
கரிசனமும்பொங்க.. அதைக்
கேட்டு வியந்து நின்றார் பக்தர்; அவரிடமிருந்துவார்த்தைகளே வரவில்லை!
‘பெரியவா… பெரியவா…’ என்று திருப்பித்திருப்பிச் சொன்னபடியே இருந்தார்;
கண்களில் கரகரவென நீர் வழிந்தது!

மெள்ளப் புன்னகைத்த காஞ்சி மகான், ”நானே சொல்லி டறேன்!” என்றுஆரம்பித்தார்…
”இவர், வெளிநாட்டுலே இருந்து வர்றார். அங்கேபுறப்பட்டதுலேருந்து எந்த ஆகாரமும்
எடுத்துக்கல. என்னை வந்து பார்க்கறவரைக்கும் ஆகாரம் எடுத்துக்கறதில்லேன்னு ஒரு
சங்கல்பத்தோட விரதமாஇருந்து, இங்க வந்து சேர்ந்திருக்கார்…” என்றவர், பக்தரைப்
பார்த்து, ”என்னநான் சொல்றது சரியான்னோ?” என்று கனிவுடன் கேட்டார்.

அவ்வளவுதான்…தரிசனத்துக்காக நின்றிருந்த அனைவரும் அசந்துபோனார்கள். எனில்,
அந்தப்பக்தரை கேட்கவும் வேணுமா… நெக்குருகி நின்றார் அவர்!

இதற்கு நடுவில்இன்னொரு சம்பவமும் நடந்தது. அந்த பக்தர் சாப்பிடச்
சென்றிருந்தநேரத்தில், தன்னை தரிசிக்க வந்திருந்த
மற்றஅன்பர்களிடம்,”வெளிநாட்டுலேருந்து இப்ப இங்கே
வந்திருக்காரே…அவர்கிட்டேயிருந்து நான் என்ன கேட்டு வாங்கலாம்னு
சொல்லுங்கோ”என்று கேட்டாராம்

இதுவும் அங்கேயுள்ளவர்களுக்கு ஆச்சரியத்தைஅளித்தது. ஏனெனில், எவரிடமும்
‘இதைக் கொடு, அதைக் கொடு’ என்றுஎதையும் கேட்டறியாதவர் பெரியவர். ஆகவே, பதில்
சொல்லத் தெரியாமல் திகைத்துப் போனார்கள் அந்த அன்பர்கள்.

இந்த வேளையில்தான்… சாப்பிட்டுமுடித்து மீண்டும் பெரியவாளைத் தரிசிக்க வந்தார்
அந்த பக்தர்! அவரையும்சுற்றியிருந்த மற்ற அடியவர்களையும் மெல்லிய சிரிப்புடன்
பார்த்தமகாபெரியவா,

”இவருகிட்டேயிருந்து என்ன கேட்டு வாங்கலாம்னு யாருமேசொல்லலையே…” என்று
கேட்டுவிட்டு, அவரே தொடர்ந்தார்…

”சரி சரி… இவரை அழைச்சுண்டு போய், எள்ளு புண்ணாக்கையும் தையல்இலையையும்
எனக்காக வாங்கித் தரச் சொல்லி, வாங்கிக்கோங்கோ!”என்றார்.

அந்த பக்தர், பரம சந்தோஷத்தில் திளைத்தார். ‘தெய்வத்துக்குநிகரான காஞ்சி
மகான், தன்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டாரே’ என்றுநெகிழ்ந்தார்..ஆனால், மடத்தில்
கைங்கர்யம் செய்பவர்களுக்கு மட்டும் சற்றுதவிப்பு; ஆனால் பெரியவாளிடம் நேரே
கேட்கவும் தயக்கம்!

இதையெல்லாம்உணராமல் இருப்பாரா பெரியவா. அவர்களைப் பார்த்து புன்னகைத்தவர்,
”இந்த பக்தர், என் மேல ரொம்ப பக்தியா, அபிமானமா இருக்கார். எங்கிட்டஇருக்கற
பிரியத்துனால எனக்கு எதையாவது சேர்ப்பிக்கணும்னு ரொம்பவும்ஆசைப்படறார். ஆனா
கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும்வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம்
தடுக்கறது. இருந்தாலும் எனக்குஎன்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! அவரோட மனசை
நோகவிட்டுடமுடியுமா?” என்று கூறிவிட்டு சற்றே நிறுத்தியவர், மீண்டும்
தொடர்ந்துபேசினார்.

”இப்போ அவர் வாங்கிண்டு வர ர்எள்ளுப் புண்ணாக்கை, மடத்துல இருக்கிறபசு
மாட்டுக்குக் கொடுங்கோ அந்தப் பசுகிட்டே இருந்து தினமும் கறக்கிறபாலை எனக்குக்
கொடுங்கோ. நான் சந்தோஷமா ஏத்துக்கறேன். ஏன்னா,இப்போ அவர் கொடுத்த புண்ணாக்கைப்
பசுமாடு சாப்பிட்டு, அது கொடுக்கறபாலில் அந்த தோஷம் எல்லாம் போயிடறதோன்னோ? பசு
மாட்டு வழியாவந்தா எல்லாவிதமான தோஷமும் நிவர்த்தியாயிடும். அதனால அவர்மனசுல
நெனச்சபடி,எனக்குக் கொடுத்த மாதிரியும் ஆச்சு. அதை நான்ஏத்துண்ட மாதிரியும்
ஆச்சு. இல்லையா?” என்றா விளக்கம் சொல்வதுபோல!

இப்படி, தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும்பக்தியும்
செலுத்தும் பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்டகருணை,மகாபெரியவாளைத் தவிர
வேறு யாருக்கு இருக்கும்?

டாஸ்மாக் இருக்கும் ஊரில் குடியிருக்க மாட்டோம் பொதுமக்கள் போராட்டம்

Resized P6I8Q - 2026

திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஞாயிற்றுகிழமை
ஊரை காலி செய்வது போல் பாசாங்கு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை
நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த ஜுன் 1ஆம் தேதி முதல் தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுக்கடை அருகில் பந்தல் அமைத்து, சமையல்
செய்து சாப்பிட்டு வரும் அவர்கள் தினந்தோறும் புதிய நூதன யுத்திகளைப்
பயன்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

போராட்டத்தின் 11வது நாளான ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் ஊரில் குடியிருக்க
முடியாது என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் பெட்டி, படுக்கையுடன் ஊரை
காலி செய்வது போல் சிறிது தூரம் சென்றனர் தொடர்ந்து மன உறுதியுடன் போராடும்
மக்களை பக்கத்து கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்

என் ஆளோட செருப்ப காணோம்

0

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=VAJx4uPvQWQ&authuser=0″ autoplay=”yes”]

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 13)

varadharajaperumal - 2026

வரதன் வந்த கதை ( பகுதி – 13 )

இதோ காஞ்சியை நோக்கிப் பாய்ந்து வருகின்றாள் வேகவதி .. இரண்டிடத்தில் அணையாய்க் கிடந்து, இறைவன் ; தன்னைக் காட்டிடக் கண்ட கலைமகள் ; மீண்டுமொரு முறை அவனை தரிசித்திட ஆசைப்பட்டாள் ..அவனை தரிசிக்க இச்சை ( ஆசை ) தானே தகுதி !

“கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ ” என்றும் “போதுவீர் போதுமினோ” என்றும் தமப்பனாரும் திருமகளாரும் ( பெரியாழ்வாரும் , ஆண்டாளும் ) பாடியுள்ளமை ; அவனை அடைய ( நமக்கு )ஆசையே வேண்டியது என்பதனை உணர்த்தும் !

“ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே ” என்றார் லோக திவாகரர் ( திருமங்கையாழ்வார் ) !

ஸரஸ்வதியின்; நாரணனைக் கண்டுவிட வேண்டும் என்கிற ஆர்வமே நதியாய் வடிவு கொண்டதோ என்று சொல்லும்படி இருந்தது அவளது வேகம்.. !

அலையெறிகின்ற அந்நதியின் ஓசை கூட , அவள் எண்ணத்தினை உச்சரிக்குமாப் போலே இருந்தது .. அவளது எண்ணம் தான் என்ன ?!

இரண்டு முறை அவனைக் கண்டிருந்தும், அவனைக் கடந்திருந்தும் நாம் துதிக்காமல் போனோமே என்கிற வருத்தம் அவளை வாட்டிக் கொண்டிருந்தது ! மீண்டுமொரு முறை அவனைக் காண விரும்பியவள் , இம்முறை அவனைத் துதிப்பதோடு மட்டுமின்றி ; அவன் திருவடிகளையே உற்று நோக்கியபடி எந்நாளும் இருந்திட வேண்டும் என்கிற அவள் நினைப்பே ; அலைகளின் ஓசையாகப் பரிணமித்ததோ என்று கருதும்படியாயிற்று !!

தேவர்களும் பிரமனும் கூட ,பெருமானை இறைஞ்சினார்கள்..அத்தனை ஆபத்துகளிலிருந்தும் நம்மைக் காத்தவன் ; இதோ கச்சியிலும் ; ஹஸ்திசைலத்திற்கருகிலும் நிச்சயமாக நம்மைக் காப்பான் என்று உறுதிபட நம்பினார்கள் !

தன் பால் அன்புடையடியவர்க்கு எளியவன் ஆயிற்றே பகவான் ! தோன்றாதிருப்பனோ !

ஸேதுவாய் (அணையாய்) மீண்டும் சயனித்தபடி ” ஸகலரும் ( அனைவரும் ) காண ஆவிர்பவித்தான் அழகன்..

அவன் திருவடிகளை வருடியபடி , ஸரஸ்வதி நாணமுற்றவளாயும், அன்பினால் கனத்த நெஞ்சு உடையவளாகவும் , இதுவரை இருந்த விருப்பு, வெறுப்பு , கோபம் , வஞ்சம் போன்ற தீய குணங்கள் முற்றிலுமாக அழியப்பெற்றவளாயும் ” பரமனடி பாடி”க் கொண்டிருந்தாள் !

ஹஸ்திசைலத்திற்கு மேற்கே வேகாஸேதுவாய் ( வேகமாய்ப் பெருகி வந்த நதியைத் தடுத்திட ஒரு அணையாய் ) மலர்ந்த விழிகளுடனும் , மாறாத புன்னகையுடனும் ஸரஸ்வதியை நோக்கிப் பேசலானான் பெருமான் !

” மத்பாதஜாயா : கங்காயா அபி தே ச்ரைஷ்ட்யம் உத்தமம் ; தத்தம் மயா அதுநா க்ஷேத்ரே மதீயே புண்ய வர்த்தனே |

யஸ்மாத் வேகாத் அனுப்ராப்தா க்ஷேத்ரம் ஸத்ய்வ்ரதம் ப்ரதி ; தஸ்மாத் வேகவதீ இதி ஆக்யாம் லப்த்வா வஸ மதாஜ்ஞயா |

அஹம் சாபி உத்தரே தீரே தவ வத்ஸ்யாமி சோபனே || ”

(இந்த புராண ச்லோகங்களைப் படிப்பதும் கேட்பதும் நமக்கு நன்மை தரும் ! அதற்காகவே இவைகளை இங்கே காட்டியுள்ளேன் ! வாசகர்கள் படித்தின்புறுக !)

ஹே ! ஸரஸ்வதி ! நீ கங்கையை விடச் சிறந்தவள் என்று கொண்டாடப்படுவாய் ! வேகவதி என்றுன்னை அனைவரும் போற்றுவர் ! உனது வடகரையில் நான் நித்தியமாக வாஸம் செய்யப் போகிறேன் ! என்கிற வரங்களைத் தந்தான் வெஃகணைப் பெருமான் ! ( வேக அணை என்பது வேகணையாகி அதுவே வெஃகணை என்று திரிந்து அதுவே வெஃகா என்றாயிற்று )

ஸரஸ்வதி ஆனந்த பாஷ்பங்களுடன் பரமனைப் போற்றிக் கொண்டிருந்தாள் !

வேகாபகை ( வேகவதி ) என்கிற பெயர் எனக்கு எத்தனை பிடித்திருக்கிறது தெரியுமா !! ஆறு (நீர் ) வெள்ளத்தோடு பாய்ந்தால் அதற்கு ஆபகா என்று பெயராம் !

அப்படிப் பெருகி வந்த என்னை தடுத்தாட்கொண்டாய் தலைவா !

“வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே ” – உன்னை எங்ஙனம் போற்றுவேன் !

“உன்னிய யோகத்துறக்கத்தினை ” இங்கே காணப்பெற்ற இவ்வடியவள் தான் எத்தனை பாக்கியசாலி !! ” பாந்தன் பாழியில் ” ( பாம்புப் படுக்கையில் ) பள்ளி விரும்பி இங்கே எழுந்தருளினையோ ?!

கச்சிக்கிடந்தவனே – நீ இன்று தானா அணை என்று போற்றப்படுகின்றாய் !

” அம்ருதஸ்ய ஏஷ ஸேது : ” என்று வேதமும் உன்னைப் போற்றுகின்றமை பிரசித்தம் ! உன்னையடைய விரும்புகிறவனுக்கு, இந்த ஸம்ஸாரக் கடலிலிருந்து விடுபட நீயே அணை ஆகின்றாய் !!

இங்கு , உன் நிறமும் அழகும் பார்த்தால், உயர்ந்த “இந்திர நீலக் கல்லே ” ஒரு அணையாக ஆயிற்றோ என்று நாங்கள் வியந்து நிற்கிறோம் !

ஸகல லோகைக ஸேதுவான நீ , வேகவதியான என்னிடையே , அரவணையோடும் கூட அணையாகக் கிடப்பதை மூவுலகிலுள்ளவர்களும் கண்ணும் மனமும் களித்திடக் கண்டு நிற்கிறார்கள் !

நான் சினம் தவிர்ந்தேன் ! என் நிலை உணர்ந்தேன் ! நின்றவா நில்லா நெஞ்சுடையவளாய் , இவ்வேள்விக்கு எத்தனை எத்தனை இடையூறுகளை விளைத்திட்டேன் !

நீயோ என்னிடம் கோபிக்காது என்னை ஆட்கொண்டாய் ! என்று இவ்விதம் பலவாறாக அவள் துதிக்கவும், பிரமனும் மிகுந்த ஆனந்தத்துடன் அவளுடன் இணைந்து கொண்டான் !!

அணை ( எம்பெருமான் ) அவ்விணைக்கு ( பிரமன் – ஸரஸ்வதி ) ஆசி வழங்கியது !

சொன்ன வண்ணம் செய்பவனன்றோ நான் ! பீஜகிரிக்குக் கீழும், திருப்பாற்கடலிலும் தோன்றிய என்னை ; திரும்பவும் கண்டிட நீ ஆசைப்பட்டாய் ! வருகிறேன் என்றேன்.. சொன்ன
வண்ணம் வந்திடவும் செய்தேன் ! விச்வ ரக்ஷைக ஹேதுவான ( உலகினைக் காத்திடும் ஒரே காரணனான ) நான் இங்கேயே என்றும் இருந்து , அபீஷ்ட ஸித்தி( பக்தர்களின் ( ந்யாயமான ) கோரிக்கைகளைத் தரும் ஸாதனம் ) என்று அனைவரும் கொண்டாடிடத் திகழ்வேன் என்றான் !

பிரமனே ! இனி கவலையில்லை ! வேள்வி இனிதே நிறைவுறும் ! அச்சமில்லை !! உனக்கான பரிசு விரைவில் உன் கண் முன்னே !! அப்பரிசு உனக்கானதாக மட்டுமின்றி இவ்வுலகிற்கான பரிசாகவும் ஆகும் !!

காத்திருப்பாய் என்றான் !

நாமும் காத்திருப்போம் !!

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

-எல்லா மதமும் உயர்ந்ததே!-திருப்பூர் கிருஷ்ணன்.

246400 479182102136836 1433845875 n 1 - 2026

“அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும். நீங்க மூணு
வேளை சந்தியாவந்தனம் பண்ணுங்கோ. அதுதான் முக்கியம். லோகம் ஷேமமா இருக்கும்!’

( மடத்தின் அருகே ஒரு மசூதி உண்டு. அதிலிருந்து மாலைத் தொழுகைக்காக ஆறு மணியை
ஒட்டி ஒலிபெருக்கி மூலம் முழக்கம் எழுப்புவார்கள்.-(தொந்திரவாக இருக்கிறது
என்று சொன்ன தொண்டர்களிடம் பெரியவா-மேலே சொன்னது)

ஜூன் 10,2017-தினமலர்

காஞ்சிபுரம் மடத்தில் சந்தியாகாலத்தில் மாலை ஆறுமணியை ஒட்டி கூட்டம் அதிகமாகவே
இருக்கும். மடத்தின் அருகே ஒரு மசூதி உண்டு. அதிலிருந்து மாலைத் தொழுகைக்காக
ஆறு மணியை ஒட்டி ஒலிபெருக்கி மூலம் முழக்கம் எழுப்புவார்கள். புகழ்பெற்ற மடம்
இருக்கும் இடத்தில் இந்த ஒலி ஏன் என சிலர் கருதினர். பெரியவரிடம் அனுமதி
பெற்று, மசூதியைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி பேசலாம் என அவர்கள் முடிவு
செய்தனர்.

ஒருநாள் பெரியவர் பக்தர்களுக்கு தரிசனம் தர வந்து அமர்ந்தார். அன்பர்கள்
தங்கள் எண்ணத்தை சுவாமிகளிடம் தெரிவித்தனர். சுவாமிகள் அன்பர்களை அருள்பொங்கப்
பார்த்த பின் பேசினார்.

‘அந்த சப்தம் நமக்கு இடைஞ்சல்னு நாம நெனச்சோம்னா, இங்கே சந்தியாகாலத்துல
(மாலை) ஜனங்க அதிகம் வர்றதும், சப்தம் போட்டுப் பேசறதும் தங்களுக்கு
இடைஞ்சல்னு அவாளும் நெனக்கலாமோ இல்லியோ? நாம சொன்னா அவா சப்தத்தைக் குறைச்சு
வெப்பா. சந்தேகமில்லை. ஆனால் ஏன் சப்தத்தைக் குறைக்கணும்?

சாயங்காலம் கேட்கும் அந்த ஒலி தானே சந்தியாவந்தன காலத்தை ஞாபகப்படுத்தறது? அது
நல்லதுதானே? அவா அஞ்சு வேளை தொழுகை பண்றா. நாம திரிகால சந்தியாவந்தனம்பண்றோமா?
மூணுவேளை காயத்ரி ஜெபிக்கிறோமா?? அவா மத ஆசாரத்தை விடாம இருக்கறதைப்
பாத்தாவது, நமக்கு நம்ம மத ஆசாரத்தை அனுஷ்டிக்கணும்னு புத்தி வர வேண்டாமோ?’

பரமாச்சாரியார் தொடர்ந்தார்:

‘எல்லா மதமும் ஒண்ணுதான். எல்லாமே பகவானை அடையற மார்க்கங்கள் தான். இங்கே
இருந்து காசிக்குப் போறதுன்னா பஸ், ரயில், கார்..எதுல போனாலும் போய்ச்
சேர்வோம் தானே! எல்லா மதங்கள் மூலமாவும் பகவானை அடையலாம்.

ஆனா மதம் மாறறதோ, மாத்தறதோ தான் தப்பு. ஏன் தெரியுமா? எல்லா மதமும் சம
அந்தஸ்து உடையது. மதம் மாறறவன், தன் மதம் தாழ்வுன்னு நெனச்சுத்தானே மாறறான்?
அப்படி கருதறது மகாபாவம். அதனால தான் பிறவியில எந்த மதம் அமைஞ்சுதோ, அதை
ஸ்வீகரிச்சுண்டு அவாவா தங்களோட மத ஆசாரத்தை விடாம வாழணும்.’

சுவாமிகள் தொடர்ந்து சொன்னார்:

‘அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும். நீங்க மூணு
வேளை சந்தியாவந்தனம் பண்ணுங்கோ. அதுதான் முக்கியம். லோகம் ஷேமமா இருக்கும்!’

பெரியவர் வலக்கரம் உயர்த்தி ஆசிர்வதித்தபோது, அன்பர்கள் விழிகளில் பக்திக்
கண்ணீர் தளும்பியது

மே 17 – இந்திய இலங்கை வரலாற்றை, தமிழர் சரித்திரத்தை திருப்பிப் போட்ட நாள்!

prabakaran gun - 2026

98ல் டீ பார்ட்டி நடத்தினார் ஜெயலலிதா. செய்த ஊழல்களுக்கு கேடயமாக மத்திய அரசு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவருக்கு இடி! ஒத்தை ஓட்டில் ஓரங்கட்டி பழி தீர்த்தார். அந்த வகையில், தமிழர்களின் பேரழிவுகளுக்கு வித்திட்ட பெருந்தகையாளர் ஜெயலலிதா!

அவரால், அடுத்து 99ல் அவர் விட்ட இடத்தை திமுக., பிடித்துக் கொண்டது. புத்தம் புதிதாய் விஞ்ஞான ஊழல்களுக்கான வாசலைத் திறந்து கொண்டது. பேரம் படியவில்லை!

2004ல் அணியை மாற்றிக் கொண்டது. அதுவே மெகா ஊழல்களுக்கான நங்கூரம்! அந்த ஆட்சியின் இறுதிக் கட்டத்தில்தான், இலங்கையில் போர். அந்த நேரத்தில் எத்தனை நாடகங்கள் இங்கே! ஒருபுறம் குடும்பத்தாரின் பதவிகளுக்கு பாதிப்பு வரக்கூடாது. மறுபுறம் ஊழல் பணமும் ஒட்டு மொத்த செல்வமும் பறிபோய் விடக் கூடாது. மேலும் தொடர வேண்டுமானால் கெஞ்சிக் கூத்தாடியாவது மத்திய அரசில் தொடர வேண்டும். இத்தனைக்கும் மத்திய அரசின் முக்கிய கட்சி காங்கிரஸே கூட எட்டி மிதித்து வெளியில் தள்ளிய நிலையில், தில்லி சென்ற திமுக தலைவர், சோனியாவை சந்தித்து பூக்கொத்து கொடுத்து எப்டியாவது கழற்றி விட்டுவிடாதீர்கள் என்று கெஞ்சினார்.

ஆனால் அதே நேரம்… இலங்கையில் இறுதிக் கட்டப் போர். காங்கிரஸ் அரசு உதவியது இலங்கைக்கு! அங்கம் வகித்த திமுக சுயநலன் கொண்டு ஆதரித்தது. அப்போது, திமுக., காங்கிரஸில் இருந்து வெளியில் வந்து பழைய தே.ஜ.கூட்டணியில் சேரும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், திமுக., வெறும் மதவாதம் என்ற ஒற்றைச் சொல்லைக் கொண்டு, சுயலாபம் தேடியது. அதில் சாகடிக்கப்பட்டது – இலங்கைத் தமிழர்களின் எண்ணற்ற உயிர்கள்! அடுத்து, பிரபாகரனின் நம்பிக்கை!

திமுக., மட்டும் அப்படி ஒரு மாறுபட்ட முடிவு எடுத்திருந்தால்… 2009 தேர்தலின் முடிவே மாறிப் போயிருக்கும்! மத்தியில் மீண்டும் காங்கிரஸ் வந்திருக்காது. தொங்கு நாடாளுமன்றம் அமைந்தும் வடக்கத்தி உதிரிகளின் துணையுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைந்திருக்காது.

அந்த தேர்தல் முடிவு வந்த நாள்… 16.05.2009
காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கி முடிவுகள் டிவிக்களில் வெளிவந்துகொண்டிருந்தபோது, துவக்கம் முதலே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி முகத்தில் இருந்தது.

அங்கே இலங்கையில், அதற்கு முன்னர் வரை, மத்தியில் தே.ஜ.கூட்டணி அரசு அமைந்துவிடாதா என்ற நப்பாசையில் போரை இழுத்துக் கொண்டே சென்றார்கள் விடுதலைப் புலிகள்! திமுக.,வின் துரோகம் அவர்களுக்குப் பேரிடியாய் அமைந்திருந்தது. அதற்கு முன்னதாக 5 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மேற்கொண்ட தீவிர பழிவாங்கும் போக்கினால், போர் மூலம் தாங்கள் சந்தித்த இழப்பு, இந்தியாவில் ஆட்சி மாறினால் சரியாகிவிடக் கூடும் என்று நம்பிக் கொண்டிருந்தனர் புலிகள்.

ஆனால், இங்கே இந்தியாவில் தேர்தல் நடந்து கொண்டிருந்த போதுதான், மூர்க்கத்தனமாக இலங்கையில் போர் நடந்தது.

இங்கே தேர்தல் முடிவுகளை இந்திய மக்கள் மட்டும் ஆவலோடு நோக்கியிருக்கவில்லை, இலங்கையும்தான்! அதற்காக அந்த 16.05.2009 வரை பல்வேறு வழிகளில் பதுங்கி, படகுகளில் தப்பித்து, உயிர் தப்பி, கொஞ்ச நஞ்ச நம்பிக்கையுடன் புலிகள் பிரிந்து சென்றிருந்தார்கள்.

மே.17 அன்று காலை இந்தியாவில் ஐ.மு.கூட்டணி பெரும்பான்மை, மீண்டும் ஆட்சி என்று தலைப்புச் செய்திகள் சொன்னபோது… இலங்கையில் அதே நாள், போரில் புலிகள் படுதோல்வி, சரணடைந்தனர், பிரபாகரன் கொல்லப்பட்டார்… என்று தலைப்புச் செய்திகள்!

மே. 18 பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று இலங்கை அதிகாரபூர்வமாக அறிவித்தது. மே. 19ல் இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் மகிந்த மகிழ்ச்சியுடன் பல்லிளித்தபடி பிரபாகரனின் மரணத்தை அறிவிக்கிறார்….

இப்போது யோசித்துப் பாருங்கள்!

பிரபாகரன், விடுதலைப் புலிகள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இங்கே அரசியல் நடத்தும் திருமாவளவன், திமுக.,வுக்கு முட்டுக் கொடுக்கும் சீமான், மிஷனரிகளால் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ள மே.17 இயக்கம்… இன்னும் தமிழர் அமைப்புகள்… எல்லாம் இன்று என்ன பேசுகின்றன என்பதைக் கவனியுங்கள்!

ஆனால்…

2009ல் எந்த ஆட்சி மாற்றத்தால் இலங்கையில் விடிவுகாலம் பிறக்கும் என்று பிரபாகரனும் தமிழர்களும் நம்பினார்களோ…
அந்த ஆட்சி மாற்றத்தால்தான்…
அதுவும் இந்திய வடக்கத்தி வாக்காளர்களின் துணையுடன் ஆட்சிக்கு வந்த பாஜக.,வினால்தான்…
பிரபாகரன் கொல்லப் படவும், தமிழர்கள் இரக்கமற்ற வகையில் உயிர்க்கொலை செய்யப்படவும் காரணமாக அமைந்த ராஜபட்ச அரசையும் பின்னணியில் இயங்கிய பழிவாங்கும் அரசியலையும் தூக்கி எறிய, அதுவும் ராஜதந்திரத்தால் துரத்தியடிக்க முடிந்தது.

அதே ஆட்சி மாற்றத்தினால்தான் இன்று இலங்கையில் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தம்மாலான ஆக்க பூர்வ பணிகளைச் செய்ய முடிகிறது.

காரணம்… இலங்கை தனி நாடு. ஆனால், இந்தியாவின் வேர்களைக் கொண்டுள்ள தனித்துவமான நாடு. அந்நாட்டின் இறையாண்மை அதற்கு முக்கியம். ஆனால், அந்நாட்டின் ஆட்சியாளர்கள் துணை இல்லாமல் இலங்கைக்கு தாம் விரும்பும் நன்மைகளை இந்திய அரசால் செய்ய இயலாது. இந்தச் சிக்கல் நிறைந்த சூழலை மோடி திறம்படக் கையாள்கிறார்…

ஆனால்… எப்போதுமே உணர்ச்சித் தூண்டுதல்களுக்கு ஆட்பட்டு விடக்கூடிய, சிந்திக்கும் திறனை இழந்துவிட்டு, சோறு போடுபவனையே நிந்திக்கின்ற குணம் புகுந்துவிட்ட தற்காலத் தமிழர்கள்… இப்போதும் மோடி ஒழிக கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

மே. 17 … நமக்கு வரலாற்றை மட்டுமல்ல… தமிழனின் மறதியையும், கூடவே அரசியல் சித்து விளையாட்டுக்குள் புகுந்து கொண்டு குவாட்டருக்கும் பிரியாணிக்குமே அடிமைப்பட்டு விட்ட அயோக்கியத்தனத்தையும் தெள்ளத்தெளிவாய்ப் படம் காட்டும் முக்கிய நாள் ஆகிவிட்டது!

மே 17 நடந்த உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய நாள். உலகத் தமிழர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடிய நாள் அல்ல!

மலேசியாவில் நடந்தது என்ன? செய்தியாளர்களிடம் வைகோ விளக்கம்

vaiko in kl airport - 2026

மலேசியாவில் நடந்தது என்ன? என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வைகோ விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியவை…

மலேசியாவில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் முனைவர் இராமசாமி
அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளைய தினம் (சனிக்கிழமை)
நடைபெறுகின்றது. அதற்கு அவர் அழைப்பிதழ் அனுப்பியதோடு மட்டும் அல்லாமல்,
தனிப்பட்ட முறையில் எனக்குக் கடிதமும் அனுப்பி இருந்தார்.

பாஸ்போர்ட் வாங்குவதற்காகத்தான் நான் நீதிமன்றம் சென்று வந்தேன். நீதிமன்ற
அனுமதியின் பேரில் சென்னை மண்டல பாஸ்போர்ட்அலுவலகம் எனக்குப் புதிய
கடவுச்சீட்டு வழங்கியது. அதை வைத்துக் கொண்டுதான் சென்னையில் உள்ள மலேசியத்
தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்தேன். அவர்களும் கடந்த வாரமே எனக்கு விசா
வழங்கி விட்டார்கள்.

வாழ்க்கையில் எத்தனையோ அனுபவங்கள். இன்றைக்கு இது நல்ல அனுபவம். நேற்று இரவு
வீட்டில் சாப்பிட்டுவிட்டுச் சென்றதுதான். 24 மணி நேரம் ஆகின் றது. இதுவரை
வேறு எதுவும் நான் சாப்பிடவில்லை. அதனால் என்னுடைய செயலாளர் அருணகிரியும்
எதுவும் சாப்பிடவில்லை.

நான் கோலா லம்பூர் வானூர்தி நிலையத்தின் குடிவரவு பிரிவுக்குச் சென்று எனது
பயண ஆவணங்களைக் கொடுத்தேன். பெயரைத்தான் பார்த்தார்கள். Mr. Vaiko you are
block listed you cant enter into Malaysia என்று சொல்லி, பக்கத்து அறையில்
இருந்த உயர் அதிகாரிகளிடம் என்னை அழைத்துச் சென்றார்கள்.
அவர்கள் என்னிடம் Are You Tamil from Srilanka? நீங்கள் இலங்கைத் தமிழரா?
என்று கேட்டார்கள்.
இல்லை. நான் இந்தியாவில் உள்ள ஒரு தமிழன், இந்தியாவின் நாடாளுமன்ற
உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன் என்று சொல்லி அதற்கான அடையாள அட்டையைக்
காட்டினேன்.

Are you LTTE என்றார்கள்.

I am a supporter of LTTE என்றேன்.

உங்கள் மீது பல வழக்குகள் இருக்கின்றன. அதனால் உங்களை அனுமதிக்க முடியாது
என்றார்கள்.

நான் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக முறைப்படி சென்னையில் உள்ள மலேசியத்
தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்து அனுமதி பெற்று வந்துள்ளேன் என்று சொல்லி,
திருமண அழைப்பிதழ், பினாங்கு மாநிலத் துணைப்பிரதமர் அலுவலகத்தில் இருந்து
எனக்கு வந்த அழைப்புக் கடிதம் ஆகியவற்றைக் காட்டினேன்.

இதற்கு முன்பு 2014, 2015 களில் கோலாலம்பூருக்கு வந்துதான் பினாங்குக்குச்
சென்று வந்தேன் என்ற விவரங்களை எல்லாம் கூறினேன்.

அவர்கள் கேட்பதாக இலலை.

அதன்பிறகு பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களிடம்
தொடர்புகொண்டு சொன்னேன். அவர் மிகவும் கவலைப்பட்டார்.

எனக்கு அனுமதி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும்மேற்கொண்டார். பினாங்கு
முதலமைச்சர் லிம் குவான் யங் அவர்கள், மலேசியத்துணைப்பிரதமரிடம் பேசினார்.

சிறிது நேரம் கழித்து அவர் என்னைத் தொடர்புகொண்டு, you are security threat to
malaysia (உங்களால் மலேசியாவுக்கு பாதுகாப்புக்கு ஆபத்து) என்று
கூறுகிறார்கள். நாங்கள் அனைத்து முயற்சிகளும் செய்து பார்க்கிறோம் என்றார்.

காலை 11 மணி அளவில் குடிவரவு அதிகாரிகள் என்னிடம், மலேசியாவுக்குள் நுழைவதற்கு
உங்களுக்கு அனுமதி கிடையாது என்று துணைப் பிரதமர் அலுவலகத்தில் இருந்தும்,
உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்தும் உத்தரவு வந்துவிட்டது. எனவே, நீங்கள்
இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றார்கள்.

அதன்பிறகு என்னை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு ஓரமாக உட்கார
வைத்துவிட்டார்கள்.

விமான நிலையத்தில் உணவகங்கள் இருக்கின்றன. 11.30 மணி ஆகிவிட்டது. ஏதாவது
சாப்பிடலாமா என்று நினைத்தால், நீங்கள் இங்கிருந்து எங்கும் செல்லக்கூடாது.
உங்கள் செயலாளர் வேண்டுமென்றால் போய் வாங்கிக்கொண்டு வரட்டும் என்றார்கள்.

இப்படி அவர்கள் என்னை ஒரு கைதி போன்று வைத்ததால், எனக்கு ஒன்றும் வேண்டாம்
என்று கூறிவிட்டேன்.

அதிகாரிகளை நான் குறைசொல்லவில்லை. அங்கு இருந்த பெண் அதிகாரிகள் மிகவும்
அன்பாகத்தான் பேசினார்கள். மேலிடத்தில் இருந்து உத்தரவு; நாங்கள் என்ன செய்ய
முடியும்? என்றார்கள்.

காலை 6.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை16 மணி நேரம் ஒரே இடத்திலேயே
உட்கார்ந்து இருந்தேன். திருக்கிறேன். சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.
தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. அவர்களும் எதுவும் கேட்கவில்லை.

இந்தியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்; எனக்காக பினாங்கு முதல்வர்,துணை
முதல்வர் எல்லாம் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று தெரிந்தபிறகும் கூட
என்னை அங்கிருந்து அசைய விடவில்லை.

இதற்கு என்ன காரணம் என்றால், 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசு ஈழத்தமிழர்களைப்
படுகொலை செய்ததை நான் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டு இருந்தேன்.

அப்போது சென்னையில் இலங்கையின் துணைத் தூதரக அதிகாரியாக அம்சா இருந்தார்.
அவர் தற்போது பிரிட்டனில் இருக்கிறார். அவர் என்னைப் பற்றிய செய்திகளைத்
தொகுத்து, அனைத்து நாட்டு தூதரக அலுவலகங்களுக்கும் ஒரு அறிக்கை அனுப்பினார்.

என் மகளைப் பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு விசா வாங்கச் சென்றபோது, You are
ineligible to get Visa because you belong to a banned organisation
என்றார்கள். உங்களுக்கு விசா தர முடியாது; நீங்கள் தடை செய்யப்பட்ட அமைப்பில்
இருக்கின்றீர்கள் என்றார்கள்.

நான் அந்த அமைப்பின் உறுப்பினர் அல்ல. ஆதரவாளன் என்று சொன்னேன். I am not a
member of Organisation. I am supporter என்றேன். அவர்கள் அதை
ஏற்றுக்கொள்ளவில்லை.

பிறகு நான் மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டபோது, என்னைத் தனியாக அழைத்து இரண்டு
மணி நேரம் விளக்கம் கேட்டார்கள்.

ஈழத்தில் கடைசிக்கட்டப் போரின்போது, அப்போது கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள்
தலைமையகம் அடிபட்டதற்குப் பிறகு அங்கு எடுத்த வீடியோ, அவர்களுக்குக் கிடைத்த
முகப்படங்கள், ஆவணங்களை எல்லாம் எடுத்துக் காண்பித்தார்கள்.

1989 பிப்ரவரியில் 25 நாட்கள் வன்னிக்காட்டில் தலைவர் பிரபாகரன் அவர்களுடன்
நான் இருந்தேன். காட்டுக்குள் செல்வதால் பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகள்
அணியும் சீருடையைத்தான் அணிந்து இருந்தேன். அந்தப்படங்கள், பிரபாகரன்
அவர்களுடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் வட இந்தியாவில் உள்ள ஊடகங்கள்
பெரிதாகக் காட்டின. நான் விடுதலைப்புலிகள் அமைப்பில் அப்போது இருந்ததுபோன்று
செய்தி போட்டார்கள்.நம் தமிழ்நாட்டு ஊடகங்கள் அதைச் சரியாகக் காண்பிக்கவில்லை.

நான் ஈழத்திற்குச் சென்றபோது,
1989 இல் விடுதலைப்புலிகள் அமைப்புக்குத் தடை கிடையாது. அப்போது அங்கு சென்று
நான் இருந்தேன்.
இலங்கைத் தூதரக அதிகாரி அனைத்து நாடுகளுக்கும் என்னைப் பற்றித் தகவல்
அனுப்பியதால் எந்த நாட்டுக்கும் எனக்கு விசா கிடையாது.
பிரஸ்ஸல்ஸ்க்கு மட்டும் கிடைத்தது.

அங்கு சென்று இனப்படுகொலைக் குற்றத்திற்காக இலங்கை அரசைச் சர்வதேச
நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும். அனைத்து நாடுகளிலும்,
ஈழத்திலும் உள்ள ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற
கருத்தை நான் முன் வைத்தேன். அதுவரை அந்தக் கருத்தை யாரும் சொன்னது இல்லை.

இதன் பிறகு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய
நாடுகள் எனக்கு விசா கொடுக்கவில்லை. மலேசியாவில் மட்டும் துணை முதல்வர்
முயற்சியில் முன்பு எனக்கு இரண்டு முறை விசா கிடைத்தது. இதுதான் காரணம்.

இப்போது, மலேசியாவில் இந்திய தூதரக அதிகாரியாக திருமூர்த்தி என்ற தமிழர்
இருக்கின்றார். அவர் கேள்விப்பட்டு மாலை 5 மணி வாக்கில் மிகவும் வருத்தப்பட்டு
என்னிடம் பேசினார்.

இந்த நேரத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றோமே? இரண்டு மூன்று
நாட்களுக்கு முன்பு மலேசியச் செய்தித்தாள்களில் நீங்கள் திருமண வரவேற்புக்கு
வருவதாக பொதுவாகச் செய்தி வந்து இருந்தது. இன்றைக்கு நீங்கள் வருகிறீர்கள்
என்பது தெரியாது.

நீங்கள் சாப்பிடக்கூட இல்லை என்பது மிகவும் கவலையாக இருக்கிறது. என் வீட்டில்
இருந்து சாப்பாடு அனுப்பட்டுமா? என்று கேட்டார்.

இப்பொழுது நீங்கள் அனுப்ப முடியாது. எட்டு மணிக்கு என்னை விமானத்தில்
ஏற்றப்போகின்றார்கள். நீங்கள் கேட்டதே எனக்குச் சாப்பிட்டது போன்று இருக்கிறது
என்றேன்.

எனது அலைபேசியை அருணகிரியிடம் கொடுத்து விட்டேன். இவரையும் ஒரு ஓரமாக
வைத்துவிட்டார்கள். என்னைத் தனியாக வைத்துவிட்டார்கள்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டுத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தலைவர்களும்
கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்கள்.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற
மக்கள் அவைத்துணைத்தலைவர் மு.தம்பிதுரை,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் சகோதரர் மு.க.ஸ்டாலின்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் சகோதரர் திருநாவுக்கரசர்,
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரி தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.
ராஜா,
தமிழர் தேசிய அமைப்பின் தலைவர் அண்ணன்பழ.நெடுமாறன்,
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி.,
தேமுதிக தலைவர் சகோதரர் விஜயகாந்த்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சித் தலைவர் முத்தரசன் இப்படிப் பல தலைவர்கள் என்னை இதுபோன்று நடத்தியது
முறையில்லை என்று கண்டித்து அறிக்கை கொடுத்தற்கு அனைவருக்கும் நான் நன்றி
தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒன்று மட்டும் நான் உறுதியாகச் சொல்ல விரும்புகின்றேன்.

ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்தது மட்டும்அல்ல, அதைப்பற்றிப் பன்னாட்டு
அரங்குகளில் எங்கும் பேச விடக் கூடாது என்று இலங்கை அரசு நினைக்கின்றது.
வெளிநாடுகளில் பேசக்கூடாது. குறிப்பாக, சுதந்திரத் தமிழ் ஈழம் அமைப்பதற்காப்
பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நான் பிரஸ்ஸல்ஸ் நகரில் பேசியதுதான்
முதல் காரணம்.

அதனால், நான் எந்த நாட்டுக்கும் போகக்கூடாது; என் குரலே எழக்கூடாது என்று
நினைக்கின்றார்கள். சிங்கள அரசு அதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டு
இருக்கின்றது.

மலேசியக் குடிவரவு அதிகாரிகள் என்னிடம் அவர்கள் கேட்டது நீங்கள் எல்டிடிஈயா?
இலங்கைத் தமிழரா? உங்கள் மேல் நிறைய வழக்குகள் உள்ளன என்றெல்லாம் கேட்டனர்.

You are a Security threat உங்களால் மலேசியாப் பாதுகாப்பு ஆபத்து என்று
சொல்கிறார்கள் என்று பினாங்கு துணை முதல்வர் அவர்களே என்னிடம் கூறினார்கள்.

கொஞ்சம் கூட அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகின்றார்கள். எனக்கு மிகவும்
வேதனையாக இருக்கின்றது. எங்களால் இயன்ற எல்லா முயற்சிகளையும் எடுத்துப்
பார்த்தோம் என்கிறார்கள்.

அவர்கள் என்னை ஒரு சிறைக்கைதி போல வைத்து இருந்ததால்தான் உணவு அருந்த
வேண்டாம்,
பேசாமல் இருப்போம்என்று முடிவு எடுத்தேன்.

இரவு 9.30 மணிக்கு விமானத்தில் ஏற்றி விட்டார்கள். அவர்களுடைய பாதுகாப்பு
அதிகாரியே உடன் வந்தார். பாஸ்போர்ட்டை என்னிடம் தரவில்லை. ி
விமான கேப்டனிம்தான் கொடுத்தார்கள்.

செய்தியாளர்: இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு அதிகாரிகள் யாரேனும் உங்களுடன்
தொடர்பு கொண்டார்களா?

வைகோ: ஆம். மலேசியாவில் உள்ள இந்தியத் தூதர் திருமூர்த்தி அவர்கள் என்னோடு
பேசினார்கள். மிகுந்த கவலையோடு கேட்டார். அந்த நேரத்தில் அவரால் ஒன்றும் செய்ய
முடியாது. எனக்கு இந்தச் செய்தியே தெரியாது. ஊடகங்களில் செய்தியைப்
பார்த்தபிறகுதான் தெரிந்து கொண்டோம் என்று சொன்னார்.

செய்தியாளர்: இதன் பின்னணியில் வேறு யார் இருக்கின்றார்கள்?

வைகோ:
இலங்கை அரசுதான் இருக்கின்றது. பினாங்கில் உள்ளவர்கள் மூலமாக இதை நான் அறிந்து
கொண்டேன்.

2014,15 ஆம் ஆண்டுகளில் பினாங்கில் இரண்டு மாநாடுகள் International Tamil
Conference நடத்தினோம். நான் அதில் சிறப்புரை ஆற்றினேன்.
அந்த மாநாட்டில் சில தீர்மானங்களை வடித்தோம்.

உலகத்தமிழர் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கினோம். அதன் தலைவர் பேராசிரியர்
இராமசாமி.
அந்த அமைப்பின் சார்பாக நிறைவேற்றிய தீர்மானத்தில், ஈழத்தமிழர் இனப்படுகொலைக்
குற்றத்திற்காக இலங்கை அரசை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி
விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

இதுதான் காரணம். எனவே, என்னை எங்கும் போக விடக் கூடாது என்று
நினைக்கின்றார்கள்.
கடந்த முறை நான் சென்றபோதும் இதே பிரச்சினைதான். எனக்கு விசா கிடையாது
என்றார்கள்.

அப்பொழுது துணைப்பிரதமாக வேறு ஒருவர் இருந்தார். அவரிடம் நமது குலசேகரன்
உள்ளிட்ட மலேசியாவில் உள்ள அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரில்
சென்று முறையிட்டனர். கடைசி நிமிடத்தில்தான் விசா கொடுத்தார்கள்.

செய்தியாளர்:

ஈழத்தமிழர் இனப்படுகொலையை மறைப்பதற்கான முயற்சி என்று கருதுகின்றீர்களா?

வைகோ

ஆம்அதைப்பற்றிய பேச்சே எங்கும் எழக்கூடாது. விசாரணையே கூடாது என்று இலங்கை
அரசு நினைக்கின்றது.

செய்தியாளர்

பேராசிரியர் இராமசாமிக்கு இந்திய விசா வாங்குவதற்காக பிரதமர் நரேந்திர
மோடியைச் சந்தித்தீர்களே? அதுபோல இந்தப் பிரச்சினையைப் பிரதமரின்
கவனத்திற்குக் கொண்டு செல்வீர்களா?

வைகோ

பேராசிரியர் இராமசாமி அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசைக்
கடுமையாகக் குற்றம் சாட்டி, மொரீசியஸ் நாட்டின் பிரதமரையே காமன்வெல்த்
மாநாட்டுக்கு இலங்கைக்குப் போகவிடாமல் தடுத்து நிறுத்தினார்.

இன்றைக்கு உலகில் ஒரு பெரிய பொறுப்பில் இருக்கின்ற தமிழர் பேராசிரியர்
இராமசாமி அவர்கள்தான்.

அவர் இந்தியாவுக்குள் நுழையக்கூடாது என்று ஏழு ஆண்டுகள் தடுத்து வைத்து
இருந்தார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்துச் சொன்னேன். பேராசிரியர்
இராமசாமியின் பூர்வீகம் தமிழ்நாடு. மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் துணை
முதல்வராக இருக்கின்றார். அவர் ஒரு பேராசிரியர், கல்விமான். அவரை
இந்தியாவுக்கு வர விடாமல் தடுத்து வைத்து இருக்கின்றார்கள்.

இராஜபக்சே இந்தியாவுக்கு வருகிறார். இவர் ஏன் வரக்கூடாது? எனவே நீங்கள் அனுமதி
தாருங்கள் என்று கேட்டேன். அனுமதி கொடுத்தார்.

ஆனால், ஒன்பது ஆண்டுகளாக நான் என் மகளையோ பேத்திகளையோ பார்க்க
அமெரிக்காவுக்குப் போக முடியவில்லை. இதுவரையிலும் எனக்கு விசா
தரவில்லை.நீங்கள் வாங்கித் தாருங்கள் என்று பிரதமரிடம் கேட்டது இல்லை.

கேட்டால், செய்து கொடுத்து இருப்பார்கள்.

எனக்கு விசா இல்லை என்பதை நான்அதிகமாகச் சொல்லிக் கொள்வது இல்லை. இன்றைக்கு
அதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்து இருக்கின்றது.

இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஒரு பொது விசாரணை வேண்டும்,
சர்வதேச விசாரணை வேண்டும், ஐ.நா. பொதுச்சபையில் விசாரிக்க வேண்டும் என்ற குரல்
எங்குமே எழக்கூடாது என்று இலங்கை அரசாஙகம் நினைக்கின்றது.

செய்தியாளர்

உங்களுக்கு அனுமதி இல்லை என்று சொன்னபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள்?

வைகோ

அவர்கள் இப்படிச் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நான்
அவர்களிடம் திருமண அழைப்பிதழ், பேராசிரியர் தனிப்பட்ட முறையில் அழைப்பு
விடுத்து எனக்கு எழுதி இருந்த கடிதம், இதற்கு முன்பு நான் மலேசியாக வந்து போன
ஆவணங்கள், நான் இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் என்பதற்கான
அடையாள அட்டை எல்லாவற்றையும் கொடுத்தபோதிலும் கூட, நான் சொன்னது எதையுமே
அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

ஒரேயொரு பெண் அதிகாரி மட்டும் என்னிடம் வந்து தண்ணீர் குடியுங்கள் என்று
சொன்னார். அந்த அறையின் ஓரு மூலையில் உட்கார வைத்து இருந்தார்கள். சிறையில்
வைத்து இருப்பது போலத்தான் வைத்து இருந்தார்கள். நானும் ஒன்றும் சொல்லவில்லை.

பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் யங் அவர்களும் கடுமையாக
முயற்சித்தார்கள். அவர் மலேசியத் துணைப்பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம்
நேரடியாகத் தொலைபேசியில் பேசினார்.

அப்பொழுது துணைப்பிரதமர் என்னைப் பற்றிய எல்லாக்குறிப்புகளையும் கேட்டு
வாங்கிக் கொண்டார். அதனால் அவர்கள் என்னிடம் மாலை நான்கு மணிக்குள் அனுமதி
கிடைத்து விடும் என்று என்னிடம் சொன்னார்கள்.

ஆனால் காலை 11 மணிக்குக் குடிவரவு அதிகாரிகள் என்னிடம் ‘துணைப்பிரதமர்
அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு அதிகாரபூர்வமாகத் தகவல் வந்திருக்கின்றது.
நீங்கள் கருப்புப் பட்டியலில் இருக்கின்றீர்கள். மலேசியாவுக்குள் நுழைய
உங்களுக்கு அனுமதி இல்லை என்று சொன்னார்கள்.

செய்தியாளர்கள்:

சென்னையில் உள்ள மலேசியத்தூதரகம் உங்களுக்கு விசா கொடுதது இருக்கின்றார்களே?

வைகோ

அதுதான் எனக்கும் வியப்பாக இருக்கின்றது. இவர்கள் கடந்த வாரமே விசா கொடுதது
விட்hடர்கள்.
நான் மலேசியாவுக்கு வருகின்ற செய்தி மூன்று நாள்களுக்கு முன்னரே அங்கே
செய்தித்தாள்களில் வந்து விட்டது.

அதன்பிறகுதான், இலங்கை அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றது.

கருப்புப் பட்டியலில் என் பெயர் இருப்பது மட்டும் அல்ல, மலேசியாவுக்கே நான்
ஆபத்தானவன் (Security threat to Malaysia) என்று சொன்னதுதான் வியப்பாக
இருக்கின்றது.

நான் ஒரு சாதாரண ஆள். என்னை அந்த அளவுக்குப் பெரிய ஆளாக்கி விட்டாரகள்.

செய்தியாளர்: உங்களை ஒரு குற்றவாளி போல நடத்தினார்களா?

வைகோ அப்படி இல்லை. ஆனால் அடிப்படைப் பண்பாடு இல்லை. The common courtesty,
genuine courtersy were lacking.

செய்தியாளர்:

ஒரு இந்தியக் குடிமகனை மலேசியாவில் அவமதித்து இருக்கின்றார்கள். மத்திய அரசு
என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று எதிர்பார்க்கின்றீர்கள்.

வைகோ: இதுகுறித்து நான் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுத இருக்கின்றேன். நடந்த
நிகழ்வுகளை விளக்கி, இந்தப் பிரச்சினை குறித்து நீங்கள் மலேசிய அரசிடம்
விளக்கம் கோர வேண்டும் என்று கேட்பேன்.

செய்தியாளர்:
மலேசியா அரசாங்கத்திற்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

வைகோ

அவர்கள் இப்படி நடந்து கொண்டது மிகத்தவறானது. அவர்களுக்கும் நமக்கும் இடையே
நல்ல உறவுகள் இருக்கின்ற நிலையில், இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள்
உறுப்பினரா ன என்னை, மலேசியாவில் என் மீது எந்த வழக்குகளும் இலலாத நிலையில்
என்னை அந்த நாட்டுக்குள் அனுமதிக்காதது மிகவும் கண்டனத்திற்குரியது.

செய்தியாளர்கள்

தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் உங்களைத் திருப்பி அனுப்பியதைக்
கண்டித்து இருக்கின்றார்களே? அதுபற்றி உங்கள் கருத்து?

வைகோ

ஆம் அதைக் கேட்டு எனக்கு மிகவும் மகிழ்சசியாக இருக்கின்றது.
எதிலும் ஒரு நன்மை உண்டு.
நான் ஒன்றும் பெரிதாகப் பத்து மாதங்களோ ஓராண்டோ சிறையில் இருக்கவில்லை.
ஒரு 16 மணி நேரம உட்கார வைத்து இருந்தார்கள்.

ஆனால் அதற்காகத் தமிழகத்தின் அனைத்துக்கட்சித் தலைவர்களும் கண்டனம்
தெரிவித்ததால் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கினறேன்,

I extend my thanks to all the leaders of Tamilnadu.

அனைத்துத் தலைவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிதுக் கொள்கின்றேன்.

இவ்வாறு செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்தார்.

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்!

8-write-down8

மூலிகை மருத்துவம் என்ற பெயரில் அரசு பதிவில்லாத கல்வி தகுதியும் இல்லாமல் மருத்துவமனைகள் நடத்தி, ஊடகங்களில் தொடர் விளம்பரம் செய்து துணைக்கு இந்திய மருத்துவ துறையில் பணிபுரிந்த சில மருத்துவர்களின் புகைப்படத்தையும்,விழாக்களில் அவர்கள் பேசிய சில ஒளி பதிவுகளையும் பயன்படுத்தி, சித்த ஆயுர்வேத இளம் மருத்துவர்களை வேலைக்கு பெயரளவில் வைத்துக்கொண்டு அங்கீகாரம் இல்லாத மருந்துகளை விளம்பரத்தை பார்த்து வருகின்ற சாமானியர்களை ஏமாற்றி பணம் பறித்து நோயாளிகளின் அகால மரண நேரத்தில், நான் நிர்வாகி மட்டுமே, மருத்துவம் செய்தது நான் இல்லை என்று தப்பித்துக்கொள்ளும் விளம்பர மருத்துவர்களை ஊடகங்களின் சுய கட்டுப்பாடற்ற நிலையையும் நிறுத்த இந்திய மருத்துவ துறையும். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்களும். மருந்து சான்றளிப்பு அதிகாரிகளும் ஓமலூர் நிகழ்வுக்கு பின்னராவது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முறையற்ற இத்தகைய மருத்துவ நிலையங்கள் தங்கள் பெயரை பயன்படுத்துவதை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக தவிர்க்க சொல்லவேண்டும். போதுமான மருத்துவ உள்கட்டமைப்பை குறிப்பாக அதிக அக புற நோயாளர்களை மாணவர்கள் பயிற்சி காலத்தில் கற்கின்ற நெறியை இந்திய மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தவேண்டும் .

CCIM தன் கடமையை நேர்பட செய்ய வேண்டும்.இதுவே சரியான சிகிச்சைன்றி மரணமடைந்த செல்வி .பாக்யஸ்ரீக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். இல்லை என்றால் இந்திய முறை மருத்துவம் போலியானது என்று புறம் தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது.

டாக்டர் திருநாராயணன் திருமலைசாமி

பிரச்னையைக் கேட்காமலே தீர்வு செய்த பெரியவா

11016095 1598176140468929 6777485663409727415 n - 2026

“அல்கிலா விளையாட்டுடையான்னு பரமேஸ்வரனைச் சொல்வா. எல்லாத்தையும் பண்ணிட்டு
நான் சிவனேன்னு இருக்கேன்.எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்வாராம்”
(பிரச்னையைக் கேட்காமலே தீர்வு செய்த பெரியவா)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-23-03–2017 தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி-சுருக்கப்பட்டது)

மகாபெரியவாளை தரிசனம் பண்ண வந்த ஒரு தம்பதி அவா சொல்ல வந்ததை சொல்லாமலே
சங்கடத்துக்கு பரிபூரணமா நிவர்த்தி அடைஞ்ச சம்பவம்.

தம்பதிக்கு பரமாசார்யாகிட்டே ஏதோ சொல்லி தீர்வு கேட்கணும்னு கோரிக்கை
இருந்தது. ஆனா, அவா ஆசார்யா முன்னால வந்து நின்னதும் எதுவும் சொல்றதுக்கு
முன்னாலேயே குங்கும பிரசாதத்தைக்
குடுத்து அவாளை அனுப்பிவிட்டார் ஆசார்யா. அதனால
ரொம்பவே கவலையோட நகர்ந்த அவாகிட்டே மடத்து சிப்பந்தி ஒருத்தர் பெரியவாளோட
காஷ்ட மௌனத்தைப்
பத்தி சொல்லி,இன்னொரு நாள் மடத்துல இருக்கறச்சே வந்து பாருங்கோன்னு ஆறுதலா
சொல்லி அனுப்பினார்.

மறுபடியும் அதே தம்பதிகள் வேறொரு நாள் மடத்துக்கு வந்து,வரிசைல நின்ற அவாளோட
முறை வந்தது.
தன் முன்னால நின்ன அவாளை ஒருதரம் ஏற இறங்கப் பார்த்தார் ஆசார்யா. கைகளைக்
குவிச்சு நமஸ்காரம் செஞ்ச அவா, தங்களோட குறையை சொல்ல நினைச்சு “பெரியவா
எங்க..” அப்படின்னு ஆரம்பிச்சதுதான் தாமதம் சட்டுனு நிறுத்துங்கோங்கறமாதிரி
கையைக் காட்டினார்
பரமாசார்யா.

என்னடா இது நம்ப பிரச்னைக்கு தீர்வே இல்லையோ?.. சொல்றதுக்கு முன்னாலயே
வேண்டாம்னு தடுக்கறாரே பெரியவா. காரணம் என்னவா இருக்கும்னு அவா திகைச்சு
நின்னா.சுத்தி இருந்தவா, ஆசார்யா அவாளைத் தடுத்ததுக்குக்
காரணம் என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வப்பட்டா. ஆனா, இதெல்லாம் எதையும்
கவனிக்காதவர் மாதிரி, “நீங்க ரெண்டுபேரும் இப்போ திரும்பிப் போங்கோ..
தங்கத்தால சின்னதா ஒரு வேல் பண்ணி எடுத்துண்டு
அப்புறம் இங்கே வாங்கோ!” அப்படின்னார், மகாபெரியவா.

வந்தவாளுக்கு ஒரே குழப்பம்.’நாம சொல்லவந்ததை ஏன் பாதியிலேயே தடுத்தார்?
ஒருவேளை அதுக்குத் தீர்வே இல்லையோ! போனதரம் மௌன்விரதம்னு பேசாமே
இருந்துட்டார். இந்த தரம் இப்படி ஆயிடுத்து. ஏதாவது தெய்வ குத்தமா இருக்குமோ!
எதுக்காக வேல் பண்ணி எடுத்துண்டு வரச் சொல்றார்னு புரியலை. சரி, தங்களோட
கோரிக்கை என்னன்னு கேட்டுட்டு இதைச் சொல்லி இருந்தாலாவது
அதுக்கான பரிகாரம்னு நினைச்சுக்கலாம். ஆனா, அதைக்
கேட்டுக்காமலே சொல்றாரே..இது எதனால இருக்கும்? என்றெல்லாம் குழம்பினவா, சரி
எல்லாம் தெய்வ சித்தம்.
நாம போய் வேல் செஞ்சு எடுத்துண்டு வந்து பார்ப்போம்.
அப்பவாவது கோரிக்கையை கேட்டுண்டு தீர்வு சொன்னார்னா
போதும்’னு நினைச்சுண்டு புறப்பட்டா.

பத்துப் பதினைஞ்சு நாள் கழிச்சு, பெரியவா சொன்ன மாதிரியே
தங்கத்தால சின்னதா வேல் செஞ்சு எடுத்துண்டு வந்தா அந்தத்
தம்பதி. வரிசையில் நின்ற அவாளைப் பார்த்த பெரியவா, கிட்டே கூட்டிண்டு வரும்படி
ஒரு சீடனை அனுப்பினார்.

“பெரியவா நீங்க சொன்னமாதிரியே வேல் செஞ்சு எடுத்துண்டு வந்துட்டோம்.
எங்களுக்கு ஒரு…!” தம்பதிகள் முடிக்குமுன் இந்தமுறையும் அவாளை எதுவும் சொல்ல
வேண்டாம்கறமாதிரி
கையைக் காட்டினார், பரமாசார்யா.

“இந்த வேலை உங்க அகத்துல பூஜை அறையில் வைச்சு தினமும் பசும்பாலால் அபிஷேகம்
பண்ணு. அதோட வாரம் ஒரு தரம் செம்பருத்திப் பூவால முருகன் நாமாவளியைச் சொல்லி
அர்ச்சனை செஞ்சுண்டே வா!” சொல்லிட்டு கொஞ்சம் நிறுத்தினார் ஆசார்யா.

‘நம்ப கோரிக்கை என்னன்னே கேட்டுக்காம இவரா ஏதோ சொல்றார். ஒருவேளை நாம சொல்ல
வந்த விஷயத்துக்குத் தீர்வே கிடையாதோ இல்லை இப்போ இவர் சொல்றது ஏதாவது
பரிகாரமா இருக்குமோ? ஒண்ணும் புரியாம பிரசாதத்தை வாங்கிண்டு புறப்படலாம்னு
நினைச்சுண்டு பவ்யமா கையை நீட்டினா ரெண்டுபேரும்.

“என்ன,முக்கியமான விஷயத்தை சொல்லி முடிக்கறதுக்குள்ளே
அவசரமா? இன்னும் நான் சொல்லி முடிக்கலை. அதையும்
கேட்டுட்டுப் புறப்படுங்கோ. வேலுக்கு தினமும் பால் அபிஷேகம் பண்ணச் சொன்னேன்
இல்லையா? அந்தப் பாலையும் அர்ச்சனை பண்ணின அப்புறம் செம்பருத்திப் பூவையும்
உன்னோட மாமியாருக்கு குடுத்துடு. அவாளை தெனமும் ரெண்டு மூணு செம்பருத்திப்
பூவை சாப்டுட்டு அந்தப் பாலையும் குடிக்கச் சொல்லு. அவாளோட சிரமத்துக்கு
அதுதான் தீர்வு” பரமாசார்யா சொல்லச் சொல்ல, அப்படியே திகைச்சுப் போய் நின்னா,
அந்தத் தம்பதி. அவா ரெண்டுபேரோட உடம்பும் சிலிர்த்துண்டு அந்த ஆச்சரியத்துல
லேசா நடுங்கினதுகூட அங்கே இருந்தவா எல்லாருக்கும் தெரிஞ்சுது.

கொஞ்சநாழி கழிச்சு,சுயபிரக்ஞைக்கு வந்தவா, ஆசார்யாளை நமஸ்காரம் பண்ணினா.
சாத்துக்குடி பழம் ஒண்ணைத் தந்து அவாளை ஆசிர்வாதம் பண்ணினார் ஆசார்யா.

வரிசையில் நின்ற பலரும் அவளுடைய திகைப்புக்கு காரணம் கேட்க; “என்னோட
மாமியாருக்கு ரெண்டு மூணு வருஷமாவே அடிக்கடி
வயத்துவலி வந்து பாடாப் படுத்திண்டு இருந்தது. சமீபகாலமா
அந்த வலி அவாளுக்கு நிரந்தரமாவே ஆயிடுத்து. பார்க்காத
வைத்தியம் இல்லை. வேண்டாத சுவாமி இல்லை. ஆனாலும்
தினமும் அவா துடிக்கறதைப் பார்க்கறச்சே எனக்கே தாள முடியலை.
தாயாரோட கஷ்டத்தைப் பார்க்க சகிக்காம இவரும் வேதனைப் பட்டுண்டு
இருக்கார்.பெரியவாகிட்டே சொன்னா, தீர்வு கிடைக்கும்னு
தெரிஞ்சவா சொன்னா. அதான் வந்தோம். பரமாசார்யா எங்களைப் பேசவிடாம
தடுத்தப்போ,மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது!. ஆனா
இப்போ..” பேசமுடியாம நாக்கு தழுதழுக்க கொஞ்சம் நிறுத்தினா. “இப்போ நாங்க
எதையும் சொல்லாம அவராவே என் மாமியாரோட பிரச்னைக்கு தீர்வு சொல்லியிருக்கார்.
இப்படிக் கண்ணுக்கு முன்னால
நடமாடற தெய்வத்தை, நாம சொன்னதைக் கேட்கலையேன்னு தப்பா
நினைச்சுட்டோமேங்கறதை நினைச்சா அழுகை அழுகையா வருது!”
சொல்லி முடிச்சா. அப்புறம் பெரியவா இருந்த திசைப்பக்கமா திரும்பி
நமஸ்காரம் செஞ்சுட்டு புறப்பட்டா.

கொஞ்ச நாள் கழிச்சு அந்தத் தம்பதி திரும்ப வந்தா, “பெரியவா உங்க அனுகிரகத்தால
என் மாமியாரோட வயத்து வலி பரிபூரணமா குணமாயிடுத்து”ன்னு பெரியவாகிட்டே சொன்னா
அந்தப் பெண்மணி.

“இதெல்லாம் என்னோட வேலை இல்லை. எல்லாம் பரமேஸ்வரனோட கிருபை. முருகனை
நினைச்சுண்டு நீ பண்ணின பூஜையோட பலன்!” அப்படின்னு சொன்ன பரமாசார்யா,அவாளை
பரிபூரண சௌக்யமா இருங்கோன்னு ஆசிர்வாதம் செஞ்சு அனுப்பினார்.