தென்காசி அருகேயுள்ள திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி 9வது
நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மாதிரி கிராமசபை
கூட்டம் நடத்தினர்.அண்மையில்திப்பணம்பட்டி கிராமசபை கூட்டத்தில் டாஸ்மாக்
கடையை அகற்றக்கோரி இயற்றிய தீர்மானத்தில் சிலர் திருத்தும் செய்ய சிலர்
உடன்தையாக இருந்தாக பொதுமக்கள் குற்றம்சாற்றி வருகின்றனர் அதை நினைவு
படுத்தும் வகையில் இந்தப்போரரட்டம் நடைபெற்றது
திப்பணம்பட்டியில் பிராதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை
நிரந்தரமாக மூடக்கோரி திப்பணம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த
பொதுமக்கள் கடந்த 1ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுக்கடை அருகில் பந்தல் அமைத்து சமையல் செய்து சாப்பிட்டு வரும் பொதுமக்கள்
தினந்தோறும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
போராட்டத்தின் 8வது நாளான நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்
பொதுமக்கள் வாயில் கறுப்பு துணி கட்டி மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டத்தின் 9வது நாளான நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள்
மாதிரி கிராம சபை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் அதிகாரிகள் தங்களது
அதிகாரத்தை எவ்வாறு தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை நடித்து காட்டினர்.
ஏற்கனவே பொதுமக்கள் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் திருத்தப்பட்டதாக
கலெக்டரிடம் புகார் தெரிவித்த நிலையில் போராட்டக்காரர்கள் தீர்மானத்தை
திருத்திய அதிகாரிகளை கண்டிக்கும் வகையில் மாதிரி கிராம சபை கூட்டம் நடத்தி
நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதிரி கிராமசபை நடத்தி டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம்
ஓபிஎஸ் அணியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி!
அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தனது ஆதவாளர்களுடன் சென்று ஓபிஎஸ் அணியில்
இணைந்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி,
தனது ஆதவாளர்கள் 300 பேருடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில்
சந்தித்து அவரது அணியில் இணைந்தார்.
இவர் 2011-2016 ஆண்டில் திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து தேர்வு
செய்யப்பட்டு, அறநிலையம், சட்டம், நீதித்துறை அமைச்சராக பணியாற்றியவர். 2006
ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
வில்பவரும் வில்லின் பவரும்!
நச்சுடை வடிக்கண்மலர் நங்கை இவள் என்றால்
இச்சிலை கிடக்கமலை ஏழையும் இறானோ?
கம்பன் காட்டிய
ஐயன் உலகநண்பன்
ஆச்சரியப்பட்டது சரியே!
அவள் அன்பில்
கடைக்கண் காட்டினாள்..
இவன் ’பவரில்’
உடைந்தது வில்..
அடடே…
கடைக்கண் வீச்சில்லாக் காரணமோ…
உடைந்து போகிறது என் ’வில்பவர்’!

இந்தக் கவிதைக்கு Thiruvenkadam Sunderajan கொடுத்த பதில் கருத்து…
பெண்ணை தேர்தெடுக்க இலக்கு நிர்ணயக்கப்பட்டது, சிவதணுசுவை நான் ஏற்றுதல் அதில் ஶ்ரீ ராமன் வெற்றியும் பெற்று விட்டார், ஆனாலும் ஏன் சிவதணுசு உடைந்தது.
சீதையை ஶ்ரீ ராமனும் கரம்மும் பிடித்தார்.
சிவதணுசு உடையாமலிருந்தால் பின்னாளில் யாராவது ,நான் ஏற்றுகிறேன் என்று வந்தால் சீதா ராமர்க்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்தும்.
ஶ்ரீ ராமர் விட்ட அம்பு இராவணணின் இதயத்தில் சீதையை நினைத்த எண்ணத்தை தேடி அழித்தது.
தாயாருக்கு எதனாலும் அபகீர்த்தி வந்துவிடக்கூடாது என்பதற்காக வில் உடைபட்டதா?
இவரின் கருத்துக்கு இப்போது ஒரு பதில் கருத்து…
எல்லாம் திருவடி மகிமைதான்!
ராமன் சிவதனுசில் நாணேற்ற தனுசை நிலை நிறுத்தினான்..
தனுசின் கீழ்ப் பகுதி நிலத்தில் ஊன்றப்பட, அதில் தன் பாதங்களால் நகராமல் பிடித்துக்கொண்டான் ராமன். தனுசின் கீழ்ப் பகுதிக்கு ராமனின் திருவடி தீட்சை கிடைத்தது கண்டு மேல் பகுதி நுனிக்கு பொறாமை வந்துவிட்டது. கூடவே, தானும் அவன் கதியை அடைய வேண்டும் எனும் சத் சிந்தனை மேலோங்கியது. கீழோன் கதி அடைகிறான். மேலோன், நான் மேலேயே உயர்வாய் இருப்பேன் என்று இருந்து கொண்டிருந்தால் ராமன் திருவடி அடையும் பாக்கியம் பெறாமல் போவோமே என்று நினைந்து, பணிவும் சரணாகதியும்தான் பகவானை அடையும் வழி எனப் புரிந்து கொண்டது…
ராமன் வில்லை வளைத்து நாணேற்றத் தொடங்கும்போதே, படக்கென முறிந்து அவன் பாதத்தை எட்டிப் பிடித்து தானும் கதியடைந்தது…
“உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!”
“உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!”
(பார்வை பறிபோன கேரளப் பெண்மணி-பெரியவாளிடம்)
(“என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன்னோட பூர்வ ஜன்மப்
பலன்,தெய்வங்கள் மேல் நீ வைச்ச நம்பிக்கை. நான் தினம்
தினம் தியானம் பண்ணற அம்பாள் காமாக்ஷியோட கடாட்சம்
இதெல்லாம்தான் உனக்குப் பார்வையை கிடைக்கப்
பண்ணியிருக்கு!”-பெரியவா)
கட்டுரையாளர்-வைத்யநாதன்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் லைஃப்-புதன் வெளியான
(14-06-2017 தேதியிட்ட-இதழ்)
ஒரு சமயம் கேரளாவுல இருந்து ஒரு பெண் தன்
ஆத்துக்காரரோட சேர்ந்து பெரியவாளை தரிசிக்க வந்தா.
அவ கர்ப்பமா இருந்தபோது, தடுக்கி விழுந்ததுல தலையில
அடிபட்டுடுத்தாம். நல்ல வேளையா கருவுல இருந்த
சிசுவுக்கு எந்த ஆபத்தும் வரலை.ஆனா, அதுலேர்ந்து
அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பு அவளுக்கு
வரத்தொடங்கிடுத்தாம். போதாக்குறைக்கு கண்ணுலயும்
பார்வை மங்கத்தொடங்கி கடைசீல முழுசா
பறிபோயிடுத்தாம்.குழந்தை பிறந்ததும் பிரச்னை தீர்ந்துட
வாய்ப்பு இருக்குன்னு சிலர் சொல்லி இருக்கா.
ஆனா,உரிய காலத்துல குழந்தை பிறந்தும் அவளுக்குப்
பார்வை திரும்பலை. ஏதாவது தெய்வக் குத்தமா
இருக்குமோன்னு, அவா குடும்பத்துக்குப் பரிச்சயமான
ஒருத்தர்கிட்டே பிரஸ்னம் பார்க்கலாம்னு சொல்லி,
நம்பூதிரி ஒருத்தரை அழைச்சுண்டு வந்திருக்கா.
பெண்ணோட ஜாதகத்தை அலசி ஆராய்ஞ்ச நம்பூதிரி,
“கவலைப்படாதீங்கோ, உங்களுக்கு நிச்சயமா கண்பார்வை
கிடைச்சுடும்.அதுக்கு முன்னால, நீங்க க்ஷேத்திராடனம்
செய்யணும். குருவாயூரில் துவங்கி,கும்பகோணம்,
திருவிடைமருதூர்னு புண்ணியத்தலங்களுக்கெல்லாம்
போய் அங்கே இருக்கிற தீர்த்தங்கள்ல ஸ்நானம் பண்ணிட்டு
சுவாமியை வேண்டிக்கோங்கோ.அதிசயமான முறையில
உங்களுக்குப் பார்வை கிடைக்கும்!” அப்படின்னு சொன்னாராம்.
அவர் சொன்னபடியே செய்யலாம்னுட்டு,திருத்தல யாத்திரை
புறப்பட்ட அந்தத் தம்பதி, பல கோயில்களுக்குப் போயிட்டு,
அந்த வரிசையில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கும் போய்
சுவாமி கும்பிட்டிருக்கா. குருக்கள் அர்ச்சனை பண்ணிட்டு,
தீபாராதனை காட்டிட்டு வந்தாராம். ஆரத்தியை தட்டுத்
தடுமாறி தொட்டு கண்ணுல ஒத்திண்டவ, நூறு ரூபாயை
தட்சணையா வைச்சாளாம்.
அந்தக்காலத்துல அது ரொம்பப் பெரிய தொகைங்கறதால,
குருக்களுக்கு ஆச்சரியம்! அதே சமயம் பார்வை தெரியாததால,
தெரியாம வைச்சுட்டாளோன்னு சந்தேகப்பட்டவர், “அம்மா…
இது பத்து ரூபாய் இல்லை. நூறு ரூபாய் நோட்டு!”ன்னு
சொல்லியிருக்கார்.
“பரவாயில்லை…அதை நீங்களே எடுத்துக்கோங்கோ!
உங்களுக்கு இது கிடைக்கணும்கறது பகவானோட விருப்பம்!”
என்று சொன்னாளாம். நெகிழ்ந்துபோன அந்த குருக்கள்,
“நீங்க மகா பெரியவாளைப் பார்த்ததில்லையா?” அப்படின்னு
கேட்டாராம்.
அவர் யாரைச் சொல்றார்னு புரியாத அந்தக் கேரள பெண்மணி,
“நீங்க யாரைச் சொல்றேள்னு தெரியலையே!ன்னு குருக்கள்
கிட்டேயே விசாரிச்சிரிக்கா.
“காஞ்சிபுரத்துல ஸ்ரீசங்கர மடத்துல இருக்காரே,அவர்தான்
மகாபெரியவர்.அவரை தரிசனம் பண்ணுங்கோ..”அப்படின்னு
அறிவுறுத்தியிருக்கார் குருக்கள்.
அப்போதான் முதன் முதலா காஞ்சிமகானைப் பத்தி
கேள்விப்பட்டாளாம், அந்த கேரளத் தம்பதி.இருந்தாலும்
அவரை உடனே தரிசிக்கணும்னு உள்ளுணர்வு தோணினதால,
உடனே புறப்பட்டு மடத்துக்கு வந்துட்டா.
கொண்டு வந்திருந்த பழங்களை பெரியவாளுக்குப் பக்கத்துல
வைச்சுட்டு, தன்னோட நிலைமையை பெரியவாகிட்டே
விவரிச்சா. வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள்
சொன்னதுனாலதான், மகாபெரியவாளைப்பத்தி
தெரிஞ்சுண்டதாகவும்,உடனே தரிசிக்கப் புறப்பட்டு
வந்துட்டதாகவும் கண்கலங்கச்சொன்னா.
எல்லாத்தையும் பொறுமையா கேட்டுண்ட ஆசார்யா,
அவளோட புருஷனைக் கூப்பிட்டார்.அவரிடம்
“நீ உன்னோட பார்யாள்கிட்டே,என்னைத் தெரியறதான்னு
கேளு!” அப்படின்னு சொல்லிட்டு பக்கத்தில இருந்த டார்ச்
லைட்டை எடுத்து, தன்னோட முகத்துல வெளிச்சம்
படறமாதிரி அடிச்சுண்டார்.
“உனக்கு இந்த ஆசார்யாளை தெரி..!” அவ புருஷன் கேட்டு
முடிக்கறதுக்கு முன்னாலயே,”குருக்கள் சொன்ன சந்நியாஸி
இதோ இருக்காரே.என் கண்ணுக்கு நன்னா தெரியறார்!”
அப்படின்னு குரல்ல பரவசம் தெறிக்க,உரக்கச் சொன்னார்.
ஆமாம்.ஆச்சர்யமான முறையில் பார்வை வரும்னு நம்பூதிரி
சொன்ன மாதிரியே, காஞ்சி முனிவரோட சந்நிதானத்தில்
அந்த கேரளப் பெண்ணுக்குப் பார்வை கிடைச்சுடுத்து.
தெய்வங்கள் மேல நம்பிக்கை வைச்சு கோயில்கோயிலா
போன அவாளுக்கு வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள்
சொன்னதைக் கேட்டதும் மகாபெரியவா மேல் ஏற்பட்ட
அதீத நம்பிக்கை வீண் போகலை.
பார்வை வந்ததும் அந்தப் பெண் பரம சந்தோஷமா
மகாபெரியவாளை நமஸ்காரம் பண்ணிட்டு,”உங்களாலதான்
இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!”னு உருக்கமா
சொன்னதுக்கு , மகாபெரியவா என்ன சொன்னார் தெரியுமா?
“என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன்னோட பூர்வ ஜன்மப்
பலன்,தெய்வங்கள் மேல் நீ வைச்ச நம்பிக்கை. நான் தினம்
தினம் தியானம் பண்ணற அம்பாள் காமாக்ஷியோட கடாட்சம்
இதெல்லாம்தான் உனக்குப் பார்வையை கிடைக்கப்
பண்ணியிருக்கு!” சொன்ன மகா பெரியவாளை மறுபடியும்
நமஸ்காரம் செஞ்சா அந்தத் தம்பதி.
குங்குமப் பிரசாதம் குடுத்து,”ஒரு குறையும் இல்லாம
க்ஷேமமா இருங்கோன்னு ஆசிர்வாதம் பண்ணினார் ஆசார்யா,
மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் வில்லிசை நிகழ்ச்சி
தென்காசியை அடுத்த திப்பணம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி
தொடர்ந்து 7வது நாளாக போராட்டமும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மதுபான
கடைக்கு பூட்டு போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கடந்த 1ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பொதுமக்கள்
மதுக்கடைக்கு
அருகில் பந்தல் அமைத்து, சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர்; தினந்தோறும்
நூதன போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
போராட்டத்தின் 7வது நாளாக நேற்று மதுவால் குடும்பம் சீரழிவதை சித்தரிக்கும்
வகையில் வில்லிசை நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு பெண்கள்
பூட்டு போடும் போராட்டம் நடத்தினர். பல்வகையான போராட்டம் நடத்தியும் நேற்று
அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை.
ஆனாலும் மதுக்கடையை நிரந்தரமாக அகற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தபோவதாக
போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
பாதிரிகளால் நல்லவனான ஆஷ் துரையும் தமிழர் பெயரால் கெட்டவனான வாஞ்சியும்!

ஜூன் மாதம் இன்று 7ம் தேதி … இதோ வருகிறது 17 ஆம் தேதி.
வழக்கம்போல், கிறிஸ்துவ மிஷனரிகளின் உதவி பெற்ற நாய்கள் வாலாட்டத் துவங்கிவிடும். அவர்களில் சில தமிழர், ஆதி தமிழர் பெயர் போட்டுக்கொள்ளும் லெட்டர் பேட் இயக்கங்களும் ஆஷ் துரை சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தி, அப்படியே கொஞ்சம் கவர் கொடுத்து, பிரதான ஊடகங்களில் கவர் செய்யப்படும் வாய்ப்பைப் பெற்று விடும்!
ஆனால்…
தேச பக்தர்களோ தாங்கள் சமூக விரோத கும்பல்களின் டேஷ் பக்தாஸ் என்ற கிண்டல்களையும் கேலிகளையும் தாங்கிக் கொண்டு, நாயினும் கடையேனாவேன் என்று தங்களைத் தாழ்த்தி வழக்கம் போல் தங்கள் தங்கள் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். உயிரைத் துச்சமென மதித்து, தங்கள் உடல் சுகம், வாழ்வின் சுவை எல்லாவற்றையும் துறந்து, அடியும் வலியும் நிறைந்ததாய் வாழ்ந்து முடிவு கண்ட வாஞ்சி போன்ற தியாகத் திருவுள்ளங்களுக்கு, கல்லடியும் சொல்லடியும் பட்டு கரைந்து போகும் நிலையிலும் தேச பக்தர்கள், தங்கள் மனமார்ந்த அஞ்சலியை செலுத்தி மனநிறைவு எய்துவார்கள்!
அவரவர் மனப்பாங்குக்கு ஒப்ப அவர்களின் செயல்கள் அமையும்!
வாஞ்சி என்றதும், நட்பு வட்டத்தில் இருந்து என்னிடம் தனிப்பட்ட வகையில் ஒரு செய்தியை அனுப்பி, இது எப்படி பரவுகிறது பாருங்கள் என்று கேட்பார்கள்…
அதாவது, ஆஷ் துரை, அருந்ததியர் இனத்தை சமமாக மதித்தவன் என்றும், தாழ்த்தப் பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருத்தியை அக்ரஹாரத்தின் வழியே கொண்டு செல்ல இருந்த தடையை உடைத்து ஆஷ் கொண்டு சென்றான் என்றும், அதனால் ஜாதி வெறியில் கோபப்பட்டு ஆஷ்துரையை வாஞ்சி சுட்டுக் கொன்றான் என்றும் கிறிஸ்துவ பாதிரிகளின் தூண்டுதலில் கதைகளைப் பரப்பி வைத்திருக்கிறார்கள். இந்தக் கதை எப்படிப்பட்ட புனைகதை என்பதை நான் முன்பேயே குறித்திருக்கிறேன்…
அதை இங்கே காண்க…
https://www.dhinasari.com/news/7410-சாதி-வெறியாளர்-யார்-2.html
அதாவது மறைக்கப்பட்ட உண்மைகள் என்று அதற்கு தலைப்பிட்டு கதை புனைந்திருக்கிறார்கள். அப்படி என்றாலே அது கட்டுக் கதை என்பது நன்றாக வெளித்தெரிகிறதே!
அடுத்து இவர்களின் புனைகதையில், ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் தென்காசி, செங்கோட்டையைச் சார்ந்த வெள்ளாளர்கள் அதாவது பிள்ளைமார்கள், பார்ப்பனர்கள் ஆகிய உயர்சாதியினர் மட்டும்தானாம்!
//வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் பார்ப்பனர்கள், வெள்ளாளர்கள் (பிள்ளைமார்கள்) மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே ஆஷ் துரை தீண்டாமைக்கு எதிராக செயல்பட்ட தென்காசி, செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஹரிஹரன், வேம்பு, மகாதேவர், பிச்சுமணி என்ற வெங்கடாசலம், தரும ராசன், வெங்கடேசுவரன் ஆகிய அனைவரும் பார்ப்பனர்கள். குற்றம் சாட்டப்பட்ட டி.என்.சிதம்பரம், முத்துக்குமாரசாமி, சாவடி அருணாச்சலம், அழகப்பன் ஆகியோர் தென்காசி, செங்கோட்டையைச் சேர்ந்த வெள்ளாளர்கள். இதுவே ஆஷ் துரையின் மீதான வெறுப்புக்கு காரணம் சாதி வெறிதான் என்பதை தெள்ள தெளிவாக புரிந்து கொள்ளளாம்…//
என்று எழுதிச் செல்கிறார்கள். பரப்புகிறார்கள்.
இதுவே உண்மை என்று கொண்டால், 1900களில் நெல்லை ஜில்லாவை மையமாகக் கொண்டு தென் தமிழகத்தில் தோன்றிய புரட்சிகர தேச விடுதலை இயக்கம்… பாரத மாதா சங்கம்… முழுக்கவும் உயர்சாதியினர் என்று ஆகிவிடும். அப்படி என்றால், அவர்களின் முக்கிய நோக்கம், பாளையங்கோட்டையில் மதமாற்றத்தில் ஈடுபட்டிருந்த பாதிரிகளின் மனிதநேயமற்ற அடாவடிச் செயல்களுக்கும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் பெரும் தடைக்கல்லாக அமைந்திருத்தல் என்பதுதான்!
அதனால்தானே, பாதிரிகள், ஆங்கிலேய அதிகாரிகளுடன் இணைந்து இவர்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள்! விடுதலை போராளிகள் மீது, புனைகதைகளை வரன்முறையின்றிக் கட்டவிழ்த்து விட்டார்கள்!
இவர்களின் கூற்றுப்படி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து போராடியது எல்லாம் உயர்சாதியினரான பிள்ளைமார்களும், பார்ப்பனர்களும் மட்டுமே என்றாகிவிடுமே! இப்படி ஒரு சாரார் மட்டும் கஷ்டங்களை அனுபவித்து, சுதந்திரம் வந்ததென்னவோ எல்லாருக்கும்தானே! இப்படி தங்களுக்கே சுதந்திரம் கிடைக்கக் காரணமாக இருந்த போராளிகளை, சாதியின் பெயரால் வசைபாடுவதுதான் நியாயமான செயலா? இதற்காக ஒரு வெறி பிடித்த ஆங்கிலேயனை தேவதூதன் போன்று நியாயவான் ஆக்கி, அவனது சமாதியைத் தொழுதுவிட்டு வருபவர்களை என்னவென்று சொல்வது?
ஆனால், இதே உயர் சாதியினரின் தர்ம நெறி எப்படி இருந்தது தெரியுமா?
அதை பாரதியின் வாக்கில் இருந்து பார்க்கலாம்.
வாஞ்சிநாதன், மணியாச்சி ரயில் நிலையத்தில், ஆஷ் துரை தூத்துக்குடியில் இருந்து வந்த மெயிலில் இருந்து இறங்கி, கொடைக்கானல் செல்லும் ரயிலுக்கு மாறி பயணம் செய்கிறான். அவன் விடுப்பில், தனது மனைவியுடன் சேர்ந்து பயணிக்கிறான். அந்த நேரத்தில் வாஞ்சி, ஆஷைச் சுட்டு விடுகிறான். இது எல்லோருக்கும் தெரிந்த நிகழ்வுதான்!
இதன் பின்னர் இந்தச் சம்பவத்தைக் குறித்து கருத்துப் பதிவு செய்த மகாகவி பாரதியார், தன் தர்மச் சிந்தையை எப்படி வெளிப்படுத்தினார் தெரியுமா?
வ.உ.சிதம்பரம் பிள்ளையை சிறையில் தள்ளி, செக்கிழுக்க வைத்து, அவரை அடித்துத் துன்புறுத்தி உடலை நார் நாராகக் கிழித்து, சுதேசி கப்பல் கம்பெனியை நசுக்கி, ஒன்றுமில்லாத வறியவனாக சிறையில் இருந்து வெளியில் தள்ளக் காரணமாக இருந்த ஒரு கொடூரனை….
திருநெல்வேலி ஜில்லாவில் பொதுமக்களை தாங்கவொண்ணாக் கொடுமைக்கு ஆளாக்கிய அதிகார வெறி பிடித்த ஓர் ஆங்கிலேயனை….
இந்தியர்கள் என்ற கறுப்புத் தோல்காரர்களை கேவலமாக மதித்து, அவமானப் படுத்தி அசிங்கப்படுத்திய அதிகார மமதையில் திளைத்த ஒரு அதிகாரியை….
சுட்டுக் கொன்ற வாஞ்சியின் செயலை விமர்சித்து எழுதினார் பாரதி.
அதுவும் எப்படி என்றால்… இந்து தர்ம சாஸ்திரங்களைப் படித்து அறிந்து அதன்படி ஒழுகும் ஒரு சனாதன தர்ம வாலிபன், ஆஷைச் சுட தேர்ந்தெடுத்த நேரம் தவறு என்று குறிப்பிட்டார். இரு பட்சிகள் சுகித்திருக்கும்போது, அவற்றைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தைக் கழுவ ராமாயணத்தை எழுதினான் ஒரு வேடன் வால்மீகி.
அதுபோல், நாம் நம் தர்ம சாஸ்திரத்தில் பட்சிகளும் விலங்குகளும் தனியே தங்கள் இணைகளுடன் சுகித்திருக்கும் காலத்தில் அவற்றைப் பிரித்து விடக் கூடாது, அது மகாபாவம் என்று நம்பும் போது, ஆஷ் தன் இளம் மனைவியுடன் கொடைக்கானலுக்கு மகிழ்ச்சியாக விடுமுறையைக் கழிக்கச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அதுவும் தன் மனைவியுடன் அவன் இருக்கும் நேரத்தில் தர்ம சாஸ்திரம் அறிந்த வைதீக இளைஞன் இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கக் கூடாது என்று எழுதி வைத்தான்.
பாரதியின் பார்வை, அப்படி இருந்தது. இத்தனைக்கும், இந்த பாரத மாதா சங்கத்தில் இருந்த நீலகண்ட பிரமசாரியும், வ.வே.சு. ஐயரும், சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோரும் பாரதியுடன் நெருக்கம் கொண்டிருந்தனர். சங்கத்தில், ரத்தத்தைக் கண்டால் பயந்து போகும் பாரதியும் உறுப்பினராய் இருந்தாராம்.
இதுதான் சனாதன தர்மத்தின் வெளிப்பாடு. போர் என வந்துவிட்ட நிலையில், கொடூரன் ஒருவனைக் கொலை செய்யப் போகும்போதும் தர்மத்தை உபதேசித்த மனிதநேயர்கள் நிறைந்த குழு இது!
ஆனால், சாதி வெறி ஒன்றையே கட்டவிழ்த்து, பிரிவினைவாதத்தால் தங்களுக்கு அடிமைகளைச் சேர்த்துக் கொண்டே சென்ற பாதிரிமார்களுக்கு இந்த தர்ம நெறியெல்லாம் என்றைக்கு இருந்தது? மருந்தும், ரொட்டியும் கல்வியும் கூட அடுத்து அடிமையாய் ஊழியம் செய்வதற்கு என்றே வகுத்துச் செயல்பட்ட அவர்களுக்கு தர்மமாவது நியாயமாவது?
அதன் விளைவு, பாரத மாதா சங்கத்தில் இருந்த மாடசாமி போன்றவர்கள் மறைக்கப் பட்டார்கள். சாதி வெறியுடன் ஒரு அடிமை வம்சத்தை அவர்கள் தோற்றுவித்துக் கொண்டார்கள். இன்றும் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள். அடிமைகளை வலைவீசித் தேடிப் பிடிக்க, தங்கள் நபர்களையே தமிழர் எனும் போர்வையில் ஆட்டுமந்தையில் கலந்துவிட ஆடுகள் வேஷமிட்ட குள்ளநரிகளை தமிழர் பெயரில் கிடாயில் புகுத்துகிறார்கள். அவை அவ்வப்போது, ஆடுகளை இனம் காட்டிக் கொடுக்கின்றன கசாப்புக் கடைகளுக்கு!
“நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே.”– கேள்வி கேட்ட -குருவிடம் பெரியவா
“நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே.” –
கேள்வி கேட்ட -குருவிடம் பெரியவா (உடனே குரு,”நீங்கள் அருமையாக பதில்
சொன்னீர்கள்.உங்களடமிருந்து நான்தான் நிறையத் தெரிந்து கொள்ளணும் இனி எனக்கு
இங்கு வேலையே இல்லை! உத்தரவு கொடுங்கள் என்றார்) வைகாசி அனுஷம் ஸ்பெஷல்
போஸ்ட்-08-06-2017
புத்தகம்–கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்.
கட்டுரையாளர் எஸ்.கணேச சர்மா.
தட்டச்சு வரகூரான் நாராயாணன்.
காமகோடி பீடம் ஸர்வக்ஞ பீடம் எனப்படும். இதன் பொருள் எல்லாம் தெரிந்தவர்
என்பது. ஐந்து ஆண்டுகள் வேத,வேதாந்தம் முதல் தெரிந்து கொள்ள வேண்டிய
அனைத்தையும் நம் ஆசார்யர் கற்றறிந்தார். திருச்சிக்கு அருகிலுள்ள
மகேந்திரமங்கலம் என்ற இடத்தில் பெரியவாளுக்கு படிப்பு தொடர்ந்தது..
இறைவனே இறங்கி வந்திருக்கிறார் என்ற உண்மை தெரிந்தவர்களுக்கு பெரியவா
படித்துத்தான் எதையும் தெரிந்து கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி எழுவது
நியாயமே.உலக மரியாதையை ஒட்டித்தான் அவர் இந்த ஏற்பாட்டுக்கு
உட்பட்டிருக்கவேண்டும்.ஆனால் படித்த முறையில் அவர் தன்னை மறைக்க முடியாமல்
வெளிப்படுத்திய சம்பவங்கள் உண்டு.
இவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள் அந்தக் காலகட்டத்தில் பெரிய மேதைகள்.
அவர்கள் மற்றஇடங்களிலிருந்து கும்பகோணத்திலும், மகேந்திரமங்கலத்திலும்
பெரியவாளுக்குப் பாடம் சொல்லித் தருவதற்கென்றே வந்து தங்கினார்கள்.
ஒருநாள் வழக்கம்போல் மடத்துக்குப் பின்னால் இருந்த தோட்டத்தில் கொட்டகை
அமைத்து அதில் காவேரி மணலைப் பரப்பிய இடத்தில் [வேறு சாதனங்கள்
இல்லாதகாலம்]பாடம் தொடங்கியது.
இதில் வேடிக்கை என்னவென்றால்,சொல்லித் தர வந்த குரு,சீடரான பெரியவாளை
நமஸ்கரித்து விட்டுத்தான் பாடம் தொடங்குவார். [தலை கீழ்ப் பாடம்].ஏனென்றால்
கற்றுக் கொள்பவர் ஜகத்குரு ஆயிற்றே!
ஒருநாள் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது சீடர் மணலை அளைந்து கொண்டேயிருப்பதை
குரு பார்த்தார்.எதுவும் சொல்லாமல் தொடர்ந்து பாடத்தை எடுத்து முடித்தார்
.மறுநாளும் அப்படியே நடக்கவே குரு பாடத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு எழுந்து,
“நான் ஊருக்குப் போகிறேன்!” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். சீடருக்கு
ஒன்றும் புரியவில்லை.
“பாடம் நடந்து கொண்டிருக்கிறதே…” என்று நயமாகி சொல்லிப் பார்த்தார். என்ன
பிரச்னை என்பதை எப்படிக் கேட்பது?
குருவே சொன்னார்,”இப்போது படிப்பது சாதாரணப் படிப்பு அல்ல. மனம்,புத்தி
முழுவதையும் ஒருமுகப்படுத்த வேண்டிய படிப்பு கவனம் எங்கேயும் திசை
திரும்பக்கூடாது.”
ஆத்மார்த்தமாகப் பாடம் நடத்துகிற அந்த குரு முதல் நாள் முதல் தன் சீடர்,தான்
சொல்வதை கவனமாகக் கேட்கவில்லை என்ற மனத்தாங்கலுடன் இருந்தார்.பதினைந்து வயதான
சீடர் பாடம் நடக்கையில் மணலில் விரலை அளைந்து விளையாடிக்கொண்டிருந்தது,
அவருக்குப் பொறுக்கவில்லை. ஆனால், கண்டிக்கவும் முடியவில்லை.அந்த சீடர்
ஜகத்குரு’ஆயிற்றே!
என்ன செய்வது? ‘பாடம் கேட்கப் பிடிக்காதவருக்காக நான் ஏன் சிரமப்பட்டு
ஊரைவிட்டு ஊர்வந்து காத்துக் கொண்டிருக்க வேண்டும்?’ என்று
தோன்றிவிட்டது.அதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட பெரியவா அடக்கமாக,
“கோபித்துக் கொள்ளாதீர்கள்; நான் நேற்று மணலில் விளையாடிக்கொண்டிருந்தது
உண்மைதான் என்றாலும் நீங்கள் சொன்னதில்தான் என் முழு கவனமும் இருந்தது!” என்று
சமாதனப்படுத்த முயன்றார்.
குருவின் கோபம் குறையவேயில்லை.இதை எப்படி நம்புவது என்றும் புரியவில்லை
அதையும் தெரிந்து கொண்ட பெரியவா,”நான் சொன்னதில் நம்பிக்கையில்லை என்றால்
சோதித்துப் பாருங்களேன்…”என்றுகேட்டுக்கொண்டார்.
அதன்படியே முதல் நாள்நடந்த பாடத்தில் சில கடினமான கேள்விகளை குரு
எழுப்பினார்.அவர் முடிக்குமுன் பதில் பிரமாதமாக பெரியவாளின் வாயிலிருந்து
வந்தது.அவர் கேட்டதற்கு மட்டுமில்லாமல் அதற்கு முன்னால் நடந்த
செய்திகளையும்பின்னால் வரப் போகிற செய்திகளையும் கூடப் பொழிந்து
தள்ளினார்.இதைக் கேட்ட குரு ஸ்தம்பித்துப் போய்-
“மன்னிக்க வேண்டும்..மன்னிக்க வேண்டும்!” என்று மனமுருகிக் கண்ணீர்விட்டார்.
நெடுஞ்சாண் கிடையாய்க் காலில் விழுந்தார்.”எனக்கு உத்தரவு தரணும்; நான்
ஊருக்குப் போகிறேன் என்றார்.
“மறுபடியும் புதிராக இருக்கிறதே!” என்று பெரியவர் திகைத்தார்,
‘முதலில் நான் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று கோபித்துக்கொண்டு
புறப்பட்டது நியாயம். இப்போது நான் எல்லாம் சரியாகச் சொல்லியும் ஏன்
கிளம்புகிறார்?’ என்று நினைத்த பெரியவா கேட்டே விடுகிறார்.
“நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே..” என்று தயங்கிபடி
பேசினார்.
உடனே குரு,”நீங்கள் அருமையாக பதில் சொன்னீர்கள்.உங்களடமிருந்து நான்தான்
நிறையத் தெரிந்து கொள்ளணும் இனி எனக்கு இங்கு வேலையே இல்லை! உத்தரவு கொடுங்கள்
என்றார்.
எட்டு வயதில் நாலு வேதத்தையும் படித்து,12 வயதில் கற்க வேண்டிய அனைத்தையும்
கற்றுவிட்டவர் ஆதிசங்கரர் அவரது மறு அவதாரம்தானே பெரியவா! இருவரும் எல்லா
வற்றிலும் கரை கண்டிருப்பதில் எந்த அதிசயமும் இல்லை
இந்துஸ்தானத்தின் மீதான பாகிஸ்தானின் நயவஞ்சக தாக்குதல்!

இந்துஸ்தானை நேருக்கு நேராக சந்தித்து போர் புரிய இயலாத பாகிஸ்தான், காஷ்மீரத்தை கைப்பற்ற நயவஞ்சக “OPERATION TOPAC” (1990களில்) என்ற திட்டத்தின் கீழ் செயல்பட்டது என்பதை தெரிந்து கொள்வோமா?
(இது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யால் பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப்படும் தீவிரவாதிகளுக்கான 14 கட்டளைகள் – தீவிரவாத பயிற்சி Syllabus)
பயத்தையும் பயங்கரவாதத்தையும் பரப்பு
பொய், புரட்டுகளை கட்டவிழ்த்துவிடு, பாதி உண்மைகலந்த பொய்களை பரப்பு
3. நேர்மையாளர்கள், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்களை கலவரப்படுத்து
4. அரசாங்கத்தில் உள்ள முஸ்லீம் போலீஸ், அதிகாரிகளின் நம்பிக்கையை பெறு
5. மிரட்டல்கள், கொலைவெறித் தாக்குதல்கள், வெடிகுண்டு வீச்சுகளின் மூலம் எதிர்ப்பாளர்களை அழித்துவிடு
6. முஸ்லீம் அல்லாதவர்களை (காஷ“மீர் பண்டிட்களை) தேர்ந்தெடுத்து கொலைசெய்,
7. ஒயின் ஷாப்புகள், பார்கள், வீடியோ பார்லர்கள், கிளப்புகள் போன்ற இஸ்லாத்திற்கு ஒவ்வாதவற்றை கொள்ளையடி, திருடு, நாசப்படுத்து
8. இஸ்லாமிய மத தீவிரவாதத்தை கடைபிடி. குறிப்பாக பெண்களாக இருந்தால் பர்தா அணிவது கட்டாயம்.
9. இந்திய புலன் பிரிவைச் சேர்ந்தவர்களை, குறிப்பாக முஸ்லீம் அல்லாதவர்களை கொலை செய்.
10. முஸ்லீம் நிறுவனம் அல்லாத, ஜமாத் நிர்வகிக்காத அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லுாரிகளை தீக்கிரையாக்கு
11. பாகிஸ்தான் ஆதரவு இல்லாத எந்த அரசியல் நடவடிக்கையையும் ஏற்காதே.
12. காஷ்மீரத்தில் உள்ள அனைத்து மசூதிகள் மற்றும் முல்லாக்களை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவா
13. முக்கியஸ்தர்கள் மற்றும் அவ்களது உறவினர்களை ஆள்கடத்தல் செய்
14. அரசியல் பிரபலங்கள், எதிரிகள், நம்மை வி்ட்டு பிரிந்து சென்றவர்களை ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்.
பாகிஸ்தானின் இந்த மறைமுக “Operation TOPAC” திட்டத்தின் விளைவே இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சினை…
கட்டுரை: சுப்ரமணியன் ரமேஷ்
பாரதத்துடன் ஜம்மு காஷ்மீர் இணைந்ததற்கு முழுமுதற் காரணமாக இருந்தது ஆர.எஸ்.எஸ்.

காஷ்மீரின் சோக வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்ததும் காரணகர்த்தாவாக இருந்ததும் பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் மகாராஜா ஹரிசிங் ஆகியோரின் ஈகோ மட்டுமே. நேருவுக்கு காஷ்மீரின் மகாராஜா ஹரிசிங்கை எள்ளளவும் பிடிக்காது. 1946 ஜூன் 20ந்தேதி காஷ்மீர் செல்ல முயன்ற நேருவை மகாராஜா ஹரிசிங் அனுமதிக்கவில்லை மேலும் மீறிய நேருவை கைதும் செய்தார். அப்போது இராமச்சந்திர காக் என்பவர் காஷ்மீரத்தின் பிரதமராக இருந்த தருணம். அவரது மனைவி ஒரு ஆங்கிலேய பெண்மணி.
இராமச்சந்திர காக் மகாராஜா ஹரிசிங்கிடம் காஷ்மீரம் தனி நாடாகவே இருக்கட்டும் என்று சொல்கிறார். ஆனால் சமயோசிதமாக சர்தார் பட்டேல் அவர்கள், காஷ்மீரத்து பிரதமரை மாற்ற செய்து அவருக்கு பதிலாக ஸ்ரீ மெஹர் சந்த் மகாஜன் என்பவரை பிரதமராக்குகிறார். (அப்போது காஷ்மீரம் தனி நாடாகவும், ஏனைய பாரதம் தனி நாடாகவும் இருந்தது என்பதை புரிந்து கொள்க)
ஸ்ரீ மகாஜன் மகாராஜா ஹரிசிங்கிடம் பாரதத்தோடு இணைந்துவிட வலியுறுத்தியும்கூட, மகாராஜா ஹரிசிங்கிற்கு மிகுந்த மனஉளைச்சலும் குழப்பமுமே தொடர்ந்தது. தன்னால் முடிந்தவரை காஷ்மீரத்தை தனி நாடாக தொடரச்செய்ய வேண்டும், ஆனால் அதற்கான வழிமுறை அவருக்கு தெரியவில்லை. ஒருபுறம் பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீரத்திற்குள் அத்துமீறிக் கொண்டிருக்கிறது, வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிறது, மிகச்சிறிய படைபலத்தோடு பாகிஸ்தானை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை.
இந்நிலையில், மகாராஜா ஹரிசிங் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் ஸ்ரீ குருஜி எம்.எஸ்.கோல்வால்கர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் உள்ளது என்பதை உணர்ந்த சர்தார் பட்டேல், மகாஜ்ன் மூலமாக குருஜியும் ஹரிசிங்கும் சந்தித்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். முதலில் குருஜி அவர்கள் ராய் பகதுார் தேவன் பத்ரிநாத் என்பவரை மகாராஜாவை சந்தித்து பாரதத்துடன் இணையக் கோரிக்கை வைக்கிறார், ஆனால் மகாராஜா ஹரிசிங் அதற்கு உடன்படவில்லை.
அதன் பிறகு திரு.மகாஜன் அவர்கள் ஸ்ரீகுருஜி அவர்களே மகாராஜாவை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்க, அதனை ஏற்று 1947 அக்டோபர் மாதம் 17ந்தேதி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். அவருடன் ஸ்ரீ அபாஜி தட்டே, பாரிஸ்டர் நரிந்தர்ஜித்சிங் (அப்போதைய உ.பி.மாநிலத்தின் சங்கசாலக் மற்றும் மகாராஜாவின் திவான் அவர்களின் மருமகனுமான) , ஸ்ரீ வசந்தராவ் ஓக் மற்றும் ஸ்ரீ மாதவராவ் மூலே ஆகியோரும் எடனிருந்தனர்.
அக்டோபர் 18ந்தேதி ஸ்ரீ குருஜி மற்றும் மகாராஜா ஹரிசிங்குடனான சந்திப்பு காலை 10.30 மணிக்கு மகாராஜாவின் கரண் அரண்மனையில் நடந்தது. மகாராஜாவும் மகாராணி தாராவும் உற்சாகமான வரவேற்பு நல்கினர். மகாராஜா ஹரிசிங்
ஸ்ரீகுருஜியின் பாதங்களைப் பணிய முற்பட்ட போது, குருஜி அவர்கள் அவரை தடுத்து அவரது கைகளைப் பற்றி அன்பு காட்டுகிறார்.
அந்த சந்திப்பின்போது இருந்த முக்கியமானவர்கள் என்று சொன்னால் யுவராஜா கரண்சிங் (பின்னாளில்
வாஜ்பாய் காலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்) தன்னுடைய வாலிப வயதில் இருந்தவர், ஸ்ரீ மேஹர்சந்த் மகாஜன் மற்றும் ஸ்ரீ அபாஜி தட்டே ஆகியோர்.
மகாராஜா ஹரிசிங் தன் தரப்பு வாதங்களை ஒவ்வொன்றாக எடுத்துரைக்கிறார். பாகிஸ்தானின் காட்டுமிராண்டி படைகளுக்கு தன்னுடைய படைகள் ஈடாகாது, இருந்தாலும் என் தேசம் காக்க இறுதிவரை போராட துணிந்துவிட்டோம். நாங்கள் போராடுவோம். துரதிருஷ்டவசமாக நாங்கள் பாகிஸ்தானை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. சியால்கோட் ராவல்பிண்டி வழியாக எனது நாட்டிற்குள் நுழைய வேண்டியிருக்கிறது, இரயில்வேயும் சியால்கோட் வழியாகவே உள்ளது, விமான நிலையமோ லாகூரில் உள்ளது. இந்நிலையில் எப்படி பாரத நாட்டோடு எங்களது காஷ்மீரத்தை இணைப்பது சாத்தியம் என்று புரியவில்லை என்று புலம்புகிறார்.
குருஜி மிகவும் அமைதியாக இதையெல்லாம் கேட்டுக் கொண்டார். நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் பாரத நாட்டோடு இணைவது மட்டுமே தங்களது கொளரவத்திற்கும் பாதுகாப்பிற்கும் நன்மை பயக்கும். நீங்கள் கூறிய ஏனைய விஷயங்கள் நாளடைவில் சரி செய்யப்படக் கூடியதே. தயக்கம் தேவையில்லை என்று கனிவாக புரிய வைக்கிறார்.
ஸ்ரீ மெஹர்சந்த் மகாஜன் அவர்களும் குருஜி அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறார். மகாராஜா ஹரிசிங் அவர்களே பாகிஸ்தானின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ள இந்தியாவுடன் சேருவதே சாலச்சிறந்தது என்று கூறுகிறார்.
இருந்தும் மகாராஜாவிற்கு உடன்பாடில்லை. ஸ்ரீ குருஜி அவர்கள் தன்னுடைய கருத்துக்கள் பிடித்திருக்கிறதா என்று கேட்க, பிடித்திருக்கிறது ஆனால் என்னால் முடிவெடுக்க முடியவில்லை என்பதாக சொல்கிறார். (காரணம் நேருவுடனான கசப்பான அனுபவம்)
மகாராஜா மீண்டும் ஸ்ரீகுருஜி அவர்களிடம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தனக்கு எந்த வகையில் உதவ முடியும் என்று கேட்க, தற்போதைய சூழ்நிலையில் சங்கம் அந்தளவிற்கு ஒன்றும் செய்துவிட முடியாது, ஆயுதப் போருக்கு சங்கம் துணைபோக முடியாது என்று சொல்ல, மகாராஜா தன்னுடைய ஈகோ (பிடிவாதம்)வை துறந்தால் தீர்வு கிடைக்கும் என்று சொல்ல, மகாராஜா கண்களிலி்ருந்து கண்ணீர் பொலபொலவென்று வருகிறது. தங்களது கோரிக்கையை நிச்சயம் பரிசீலிக்கிறேன் என்று உத்தரவாதமும் தருகிறார்.
ஸ்ரீகுருஜி விடைபெறும் போது மகாராஜா காஷ்மீரத்து ஷால்களை பரிசாக கொடுத்து கௌரவிக்கிறார்.
கிளம்பும்போது ஸ்ரீ குருஜி மகாராஜாவிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். தங்களது மக்கள் மனதில் நம்பிக்கை தளரக்கூடாது, வீரர்களும் உத்வேகம் பெற வேண்டும். அதற்கு முக்கியமாக தாங்கள் செய்ய வேண்டியது, யுவராஜா கரண்சிங்கை ஜம்மு பகுதிக்கு அனுப்பி வையுங்கள் என்பதாக.
அடுத்த 8 நாட்களுக்குள் ஜம்மு காஷ்மீரம் பாரதத்தின் அங்கமாக மாறியது.
பாகிஸ்தான் படையெடுத்து, வன்முறையை கட்டவிழ்த்து, கைப்பற்ற முயன்ற ஜம்மு காஷ்மீர், ஸ்ரீ குருஜி அவர்களின் மகாராஜாவுடனான சந்திப்பால், தீர்க்கமான, தெளிவான உரையாடலின் மூலம் பாரதத்தோடு இணைக்கப்பட்ட நாள் 26-10-1947.
நன்றி – ஆர்கனைசர்
(ஆர்கனைசரில் வந்த Thiru. R.C. Batura அவர்களின் கட்டுரயின் தமிழாக்கம்)
தமிழில்…: சுப்ரமணியன் ரமேஷ்
“திருச்செந்தில் வேலா”

(காவடிச் சிந்து)
வேல்முருகா என்றுசொல்லும் போது – நல்
வித்துடனே சேதிதரும் தூது – ஒரு
சேவலுடை நற்கொடியை
காவலுடன் தந்தவனைத்
தேடு -மனத்
தோடு.
பால்குடங்கள் ஏந்திவரும் வேளை – குகன்
பாசத்தினால் மறக்கிறேன் நாளை – சுவைப்
பானகமாய் வாய்மணக்க
ஞானமொழி சொன்னவனைப்
பாடு- சுருதி
யோடு.
மாலவனின் சோதரியாம் சக்தி – தன்
மகனுக்காய்த் தந்தவேலே சக்தி – வீண்
மாகவலை தீர்ப்பதற்கு
மோகவலை வெல்வதற்கு
மண்ணில் – இல்லை
எண்ணில்.
ஆலமரம் போலவுண்டு வம்சம் – அதன்
ஆணிவேரே வேலவனின் அம்சம் – அந்த
அற்புதத்தின் தீப்பிழம்பைச்
சொற்பிடித்து வாழ்த்திடத்தான்
ஆசை – நப்
பாசை .
– மீ.விசுவநாதன்
(இன்று (07.06.2017) திருமுருகனுக்கு உகந்த வைகாசி விசாகத் திருநாள்)






