Home Blog Page 5618

தமிழகத்தில் பிரிவினைவாதக் குரல் ஒலிக்க அரசு துணை போகிறதா?

காஷ்மீர் பிரச்சினையை ஈழப்பிரச்சினை போல் அணுக வேண்டும் !

திராவிடப் பிரிவினைவாதமும் காஷ்மீர் பிரிவினைவாதம் போன்றது !

பிரிவினைவாதிகள் சேர்ந்து செயல்பட வேண்டும் !

இந்திய இராணுவம் அடக்கு முறையில் ஈடுபடுகிறது !

இவை எல்லாம், சென்னை கீழ்ப்பாக்கம் working people trade union council வளாகத்தில் ஒலித்த குரல்கள்!

நிகழ்சியை ஏற்பாடு செய்தது all India people’s federation என்ற அமைப்பு !

தமிழகத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்ட காஷ்மீர் அமைப்புக்களுடன் கைகோர்க்கின்றனர்தேசத் துரோகிகள் !

அரசும் காவல்துறையும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது ?

தமிழகத்தை பிரிவினைவாத , பயங்கரவாதக் கூடாரமாக்க அரசும் , காவல்துறையும் துணை போகிறதா ?


Making a case for tense Kashmir on Tamil soil

kashmir-separatisOn a sultry afternoon earlier this week, a group of men and women walked into a small room at the Working Peoples Trade Union Council’s (WPTUC) office at Kilpauk to talk about strife-torn Kashmir. The meeting was organised by the All India People’s Federation (AIPF) and WPTUC to discuss the citizen report on ‘why people are protesting in Kashmir’. “It was an attempt to sensitise democratic organisations here about what is happening in Kashmir, who can then take these stories to the public,” says R Vidyasagar, convener of AIPF’s Tamil Nadu unit.

Driven by the belief that news about the war-torn valley is mostly met with silence or indifference in other parts of the nation, Khurram Parvez+ , a well-known human rights defender from Kashmir, was invited to the event to offer a perspective. He was joined by Gautam Mody, general secretary of New Trade Union Initiative, who was part of the civil society group that visited Kashmir in 2016 and formulated the report.

Sharing stories of Army atrocities on Kashmiris, Parvez said, they bore resemblance to what happened in Sri Lanka during the Civil War. “There was an enquiry by the UN, probing allegations of genocidal violence against Sri Lankan Tamils, despite opposition from the Lankan government. A lot of what happened in Sri Lanka is still being scrutinised at the international level, even when the LTTE is no more. Several resolutions to restore peace and order in Kashmir have been passed by the UN since 1947, but the approach of the Indian government to them has been that of denial,” he added.

Although disputing that there is any commonality between the Kashmir struggle and the Sri Lankan war, political analyst Badri Seshadri says that in many ways, this meeting could be a significant step in creating awareness in Tamil Nadu about Kashmir and possibly even mobilising locals towards the problems in the valley.

“There had been demands for a separate Dravida country in Tamil Nadu, well before independence. There was a strong feeling that we are a separate race and people, and not part of the so-called Aryan India. And therefore, if you get a Kashmiri separatist to talk about their problem, you will find resonance here,” says Seshadri.

Parvez ended his speech on a more cautious note. “Whatever they (government) learn in the laboratory of violence in Jammu and Kashmir will be implemented in other places as well. We recently saw how the Kudankulam protests+ were dealt with by the Centre. Hundreds of people were jailed and sedition cases filed against them. This is how dissent will be dealt with in the future too. And they (government) will become increasingly violent and intolerant like it has happened in Kashmir,” he said.

Source: Times of India

நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்

வைகாசி விசாகம் … நம்மாழ்வார் திருஅவதார தினம் ..

பழைய நூல்களில் இவர் கலியுகம் பிறந்து நாற்பத்து மூன்றாம் நாள் பிரமாதி
வருடம் வைகாசி மாதம் பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய
கற்கடக லகனத்தில் ” சேனைமுதலியார் ” அம்சத்தில் , திருக்குருகூரில் “காரி”
என்பருக்கு மகனாக பிறந்தார் ..

நமது சனாதன மதம், ஜீவர்கள் பல பிறவிகள் எடுத்து அந்த பரம புருஷனை அடைய
கூடிய பாதையில் சென்று கொண்டே இருக்கும் என்பதாக அறிகிறோம் ..

ஒரு ஜீவன் இந்த பூமியில் பிறவி எடுக்கும் போது தனது முந்தைய பல பிறவி
பற்றிய அறிவை கொண்டே பிறக்கும்.

பிறந்த குழநதையின் உச்சி மண்டையில் கபால எலும்புகள் இணையாமல் ஒரு வித ஓட்டை
போல இருக்கும் … (கையை வைத்தால் தெரியும் ) இந்த மாறி அமைப்பு இருக்கும்
போது குழந்தை பேசாது , Sensory nerves and motor nerves இவைகள் முழுமையாக
இயங்காது … (பேனாவை நீட்டினால் அதனால் அதை பிடிக்க முயற்சி செய்தாலும் தடுமாறும் )

இந்த நிலையில் அந்த ஜீவன் தனது முந்தைய பிறவியின் முழுமையான உணர்வுடன்
இருப்பான் .. நமது (அந்த குழந்தையை பார்க்க செல்லுகின்ற நபர்களை கூட ) பல
பிறவிகளின் விசயங்களை உணரக்கூடியவனாக இருப்பான் (அதன உயர்வு மற்றும் திறன்
அவனது முந்தைய பிறவியின் ஆத்மா பலனை பொறுத்தது !!)

பிறந்த குழந்தையின் கண்கள் மட்டும் இவைகளை வெளிப்படுத்தும் .. (வந்து
இருப்பவன் நல்லவனா இல்லையா என்று ) நான் நிறைய இந்த ஆராய்சிகளை செய்வேன் !!!

சரி இதற்கும் நம்மாழ்வாருக்கும் என்ன தொடர்பு ???

இந்த முந்தைய பிறவிகளின் எண்ணங்களை மறைப்பதான வேலையை செய்வது ஒரு வித வாயு
என்பதாக நம் பெரியோர்கள் கண்டு வைத்தார்கள் ..

அதன் பெயர் “சட வாயு ” .. இந்த வாயுவை தொடர்ந்து சுவாசிக்கும் குழந்தையின்
“சட நாடி ” (இதுதான் நமது பூர்வ ஜன்ம ஞாபங்களை தாங்கி இருக்கும் மூளை
பகுதியை கட்டுப்படுத்தும் ) ஒடுங்கி , தன்னை மறந்து இந்த பிறவியில் தன்னை
மனதளவில் இணைத்து கொள்ளும் .

இங்கே … நம்மாழ்வார் பிறந்த சுமார் 12 நாட்கள் தனது தாயின் பாலை கூட
அருந்த வில்லை, அழவும் இல்லை ..

பின்னர் இவரது பெற்றோர் இவருக்கு “மாறன் ” என பெயரிட்டு திருக்குருகூர்
நம்பி கோவிலுக்கு அழைத்து செல்ல ..

அங்கு இருந்த புளிய மரத்தின் போந்தின் உள்ளே தவழ்ந்து சென்று மௌனமாக அமர்ந்து கொண்டார் ..

இவர் பிறவியிலே சட வாயுவை சூழாமல் தன்னை காத்துக்கொண்டதால் … இவர் அந்த
வாயுவை கோபம் கொண்டு தடுத்து எதிர் கொண்டதால் இவர் …

“சட கோபர் ” என பெயர் பெற்றார் ..

வைணவ கோவில்களில் பட்டர் ஒரு தொப்பி போன்று பெருமாள் பாதங்கள் கொண்ட “சடாரி
” என்கிற ஒன்றை தலையில் வைப்பார்களே .. அதன் பெயர் “சட கோபம் “தான் ..
அதுதான் மருவி சடாரி என்று ஆகி விட்டது ..

அது நீங்கள் வணங்க போகும் இறை மூர்த்தத்தின் பாதங்களை உங்கள் தலையில் வைத்துக்கொண்டு ..

“அடேய் நீ இப்போது ஜீவனாக இந்த பெயர் கொண்டு பெருமை கொண்டு இருக்கிறாய் ,
உனது உண்மையான சொரூபம் வேறு ” என்று நமது சட நாடியை திறந்து காட்டவே ..

நமது உச்சி மண்டையில் அதை தலை வணங்கி பொருத்தி கொள்கிறோம் …

இந்த பிறவியில் கர்வம் கொண்டு பல விஷயதிகளில் நாட்டம் கொண்டு அலையும் நமது
ஜீவன் தன்னிலை உணர்ந்து உய்விக்க வந்த

சடகோபரை போற்றுவோம் …

விஜயராகவன் கிருஷ்ணன்
no.32, Sanakar nagar
mangamma nagar , srirangam
Trichy – 620006

72000 72010

9443386259

சென்னையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்டைல் படுகொலை !

murder

51 வயதான வாசுதேவன் என்ற மன நலம் குன்றியவரை மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று கல்லால் அடித்துக் கொன்றனர் முஸ்லீம் இளைஞர்கள் !

அசாருதீன் , தமீம் அன்சாரி , ஆசிக் , ஆசிக் அலி , இப்ராகிம் ஆகிய 20 முதல் 21 வயது கொண்ட இளைஞர்கள் இந்தப் படுகொலையைச் செய்துள்ளனர் . இதில் இப்ராகிம் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறான்

https://www.newindianexpress.com/…/mentally-challenged-man-s…

 

முன்விரோதம் இல்லை என்கிறது காவல்துறை ஆனால் வாசுதேவன் மறைவான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் !

மன நலம் குன்றியவரைத் தனியாக அழைத்துச் சென்று கல்லெறிந்து கொலை செய்துள்ளது , சிரியா , அப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடக்கும் முஸ்லீம் ஸ்டைல் தண்டனை வழங்கும் முறையை நினைவு படுத்துகிறது !

2007 ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில் மும்தாஜ் என்ற பெண்ணைக் கல்லெறிந்து கொன்றனர் முஸ்லீம் பயங்கரவாதிகள் !

இதை நியாயப்படுத்திப் பேசியவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவரணிச் செயலாளர் அப்துல் சுபான் !

https://archive.indianexpress.com/…/in-tamil-nadu-to…/26668/0

இந்த படுகொலை நடந்த இடத்திற்கு அருகே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக அலுவலகம் உள்ளது என்பது கூடுதல் தகவல் !

பி.எப்.ஐ , தெளகீத் ஜமாத் , த.மு.மு.க போன்ற அமைப்புக்கள் முஸ்லீம் இளைஞர்களுக்காக கோடைக்கால பயிற்சி முகாம்களை தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தியுள்ளது !

இந்தப் படுகொலை நடத்தப்பட்ட நுட்பததையும் , இடத்தையும் , முன்விரோதமில்லை என்ற போலீசாரின் கோணத்தின் அடிப்படையையும் வைத்துப் பார்த்தால் இது ஐ.எஸ்.ஐ.எஸ் செயல்முறையை தமிழகத்தில் இஸ்லாமியர்கள் நடைமுறைப் படுத்தி வருவதாகவும் , வேறு பெரும் கலவரங்களைச் செய்யவும் , படுகொலைகளை அரங்கேற்றவும் ஒத்திகை பார்க்கும் செயலாகவே இந்த நிகழ்வு நமக்குத் தோன்றுகிறது!

ஆம்பூர் தாக்குதலைப் போல தேனி மாவட்டம் கம்பத்தில் ஜீன் 1 கலவரம் செய்து போலீசாரின் மண்டையை உடைத்தது தமிழகத்தில் தொடரும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்டைல் தாக்குதல்களே !

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மீது சந்தேகத்தைத் தூண்டும் வகையிலான சென்னை சில்க்ஸ் தீ விபத்து மற்றும் தீ அணைப்புத் துறையில் பணியாற்றிய இஸ்லாமிய அதிகாரியின் செயல்பாடும் பயங்கரவாதக் கோணத்தில் விபத்து விசாரிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் அளவில் உள்ளது !

தொடர் இஸ்லாமிய பயங்கரவாத நிகழ்வுகளின் அடிப்படையில் ,தமிழகம் தாலிபான் நாடாக மாறி வருகிறது என்பதை ஒத்துக் கொண்டு காவல்துறையும் , அரசும் , அரசியல் கட்சிகளும் சுதாகரிப்புடன் செயல்படுவார்களா ?

அமைதிப் பூங்கா தமிழகம் என்று சொல்லி அவர்களையும் , நாட்டு மக்களையும் தொடர்ந்து ஏமாற்றப் போகிறார்களா ?

Mentally challenged man stoned to death by youth in Chennai

murder - 2026

CHENNAI: A 51-year-old mentally challenged man, allegedly attacked with stones by a group of five youth, including a college student, at Aminjikarai in the city died in the wee hours of Tuesday.

Despite many locals witnessing the Sunday night incident, none had come forward to save the victim, he later told his relatives in the hospital.

Vasudevan (51), of Choolaimedu, was reportedly walking around 7 pm on Sunday at Aminjikarai when the group of youth, sitting on a wall on the roadside, apparently passed some comments on him. “This had led to a fight and the group dragged him to a secluded spot at Govindan Street at Collectorate Colony and assaulted him with stones. They also threw a huge stone on his stomach,” said Purushotaman, a relative of the victim, while waiting at the government hospital mortuary to receive Vasudevan’s body on Tuesday.

With none coming forward to help, Vasudevan had himself managed to walk for nearly 500 metres and reached another relative’s house. He was taken to the nearby hospital and later referred to the Rajiv Gandhi Government General Hospital where he died in the wee hours of Tuesday due to severe injuries.

Police subsequently booked the five youth on charges of murder and arrested them on Tuesday. They were identified as S Azaruddieen (21), Z Tamin Anzari (21), M Aasic (20), A Yasic Ali (20) and S Ibrahim (20).

Ibrahim is a second year BCom student of a private college and the rest were said to have discontinued education. They all are residents of Aminjikarai.

“One of the boys is a college student while the others are all doing some odd jobs. They were familiar to the victim, but had no previous enmity,” police said.

“My cousin from a very young age has been mentally disturbed. But he would never disturb anyone. Though his house is at Choolaimedu, he would often visit Amjikarai as he was born and brought up in that locality. So most locals are familiar to him. He told that a few residents had witnessed the incident, but did not come forward to help,” said Babu.

“Even if he finds a paper littered on the streets, he would make sure it is put in the dustbin,” said Purushotaman. Vasudevan’s body was handed over to the relatives after autopsy on Tuesday.

Source: The New Indian Express 

வைகாசி விசாகம்: நம்மாழ்வார் திருஅவதார தினம்!

- 2026

வைகாசி விசாகம் … நம்மாழ்வார் திருஅவதார தினம் ..

பழைய நூல்களில் இவர் கலியுகம் பிறந்து நாற்பத்து மூன்றாம் நாள் பிரமாதி வருடம்
வைகாசி மாதம் பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய கற்கடக
லகனத்தில் ” சேனைமுதலியார் ” அம்சத்தில் , திருக்குருகூரில் “காரி” என்பருக்கு
மகனாக பிறந்தார் ..

நமது சனாதன மதம், ஜீவர்கள் பல பிறவிகள் எடுத்து அந்த பரம புருஷனை அடைய கூடிய
பாதையில் சென்று கொண்டே இருக்கும் என்பதாக அறிகிறோம் ..

ஒரு ஜீவன் இந்த பூமியில் பிறவி எடுக்கும் போது தனது முந்தைய பல பிறவி பற்றிய
அறிவை கொண்டே பிறக்கும்.

பிறந்த குழநதையின் உச்சி மண்டையில் கபால எலும்புகள் இணையாமல் ஒரு வித ஓட்டை
போல இருக்கும் … (கையை வைத்தால் தெரியும் ) இந்த மாறி அமைப்பு இருக்கும்
போது குழந்தை பேசாது , Sensory nerves and motor nerves இவைகள் முழுமையாக
இயங்காது … (பேனாவை நீட்டினால் அதனால் அதை பிடிக்க முயற்சி செய்தாலும்
தடுமாறும் )

இந்த நிலையில் அந்த ஜீவன் தனது முந்தைய பிறவியின் முழுமையான உணர்வுடன்
இருப்பான் .. நமது (அந்த குழந்தையை பார்க்க செல்லுகின்ற நபர்களை கூட ) பல
பிறவிகளின் விசயங்களை உணரக்கூடியவனாக இருப்பான் (அதன உயர்வு மற்றும் திறன்
அவனது முந்தைய பிறவியின் ஆத்மா பலனை பொறுத்தது !!)

பிறந்த குழந்தையின் கண்கள் மட்டும் இவைகளை வெளிப்படுத்தும் .. (வந்து
இருப்பவன் நல்லவனா இல்லையா என்று ) நான் நிறைய இந்த ஆராய்சிகளை செய்வேன் !!!

சரி இதற்கும் நம்மாழ்வாருக்கும் என்ன தொடர்பு ???

இந்த முந்தைய பிறவிகளின் எண்ணங்களை மறைப்பதான வேலையை செய்வது ஒரு வித வாயு
என்பதாக நம் பெரியோர்கள் கண்டு வைத்தார்கள் ..

அதன் பெயர் “சட வாயு ” .. இந்த வாயுவை தொடர்ந்து சுவாசிக்கும் குழந்தையின் “சட
நாடி ” (இதுதான் நமது பூர்வ ஜன்ம ஞாபங்களை தாங்கி இருக்கும் மூளை பகுதியை
கட்டுப்படுத்தும் ) ஒடுங்கி , தன்னை மறந்து இந்த பிறவியில் தன்னை மனதளவில்
இணைத்து கொள்ளும் .

இங்கே … நம்மாழ்வார் பிறந்த சுமார் 12 நாட்கள் தனது தாயின் பாலை கூட அருந்த
வில்லை, அழவும் இல்லை ..

பின்னர் இவரது பெற்றோர் இவருக்கு “மாறன் ” என பெயரிட்டு திருக்குருகூர்
நம்பி கோவிலுக்கு அழைத்து செல்ல ..

அங்கு இருந்த புளிய மரத்தின் போந்தின் உள்ளே தவழ்ந்து சென்று மௌனமாக அமர்ந்து
கொண்டார் ..

இவர் பிறவியிலே சட வாயுவை சூழாமல் தன்னை காத்துக்கொண்டதால் … இவர் அந்த
வாயுவை கோபம் கொண்டு தடுத்து எதிர் கொண்டதால் இவர் …

“சட கோபர் ” என பெயர் பெற்றார் ..

வைணவ கோவில்களில் பட்டர் ஒரு தொப்பி போன்று பெருமாள் பாதங்கள் கொண்ட “சடாரி “
என்கிற ஒன்றை தலையில் வைப்பார்களே .. அதன் பெயர் “சட கோபம் “தான் .. அதுதான்
மருவி சடாரி என்று ஆகி விட்டது ..

அது நீங்கள் வணங்க போகும் இறை மூர்த்தத்தின் பாதங்களை உங்கள் தலையில்
வைத்துக்கொண்டு ..

“அடேய் நீ இப்போது ஜீவனாக இந்த பெயர் கொண்டு பெருமை கொண்டு இருக்கிறாய் , உனது
உண்மையான சொரூபம் வேறு ” என்று நமது சட நாடியை திறந்து காட்டவே ..

நமது உச்சி மண்டையில் அதை தலை வணங்கி பொருத்தி கொள்கிறோம் …

இந்த பிறவியில் கர்வம் கொண்டு பல விஷயதிகளில் நாட்டம் கொண்டு அலையும் நமது
ஜீவன் தன்னிலை உணர்ந்து உய்விக்க வந்த

சடகோபரை போற்றுவோம் …

– விஜயராகவன் கிருஷ்ணன்

வைகாசி விசாகத்துக்கு ஒரு கோயில்: திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

thirupparankundram murugan - 2026

சூரபத்மனை வெற்றிகொண்ட முருகப் பெருமானுக்கு இந்திரன் தன் மகளான தெய்வானையைத் திருமணம் செய்து தருவதாக வாக்களித்தான். அதன்படி திருப்பரங்குன்றத்தில் அவர்களது திருமணம் கோலாகாலமாக நடைபெற்றது. நாரதர் முன்னிலையில் தெய்வங்களும் ரிஷி முனிவர்களும் தேவர்களும் புடை சூழ முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்தக் கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி இந்தத் தலத்தே எழுந்தருளினார்.

இந்தத் தலத்தை நக்கீரர், அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடியுள்ளனர்.

கோயில் ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது. பரம்பொருளாகிய சிவன் குன்றுவடிவில் அருளுவதால் சுவாமி, “பரங்குன்றநாதர்’ என்றும், தலம் “பரங்குன்றம்’ என்றும் அழைக்கப்படுகிறது. கோயில் மண்டப முகப்பில் நந்திகேஸ்வரர், மனைவி காலகண்டியுடன் காட்சி தருகிறார்.

சிவன் கிழக்கு பார்த்து தனிக்கருவறையில் இருக்கிறார். இவருக்கு நேரே மகாவிஷ்ணு, பவளக்கனிவாய் பெருமாளாக மகாலட்சுமியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் மதங்க மகரிஷியும் இருக்கிறார். பொதுவாக சிவனுக்கு நேரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு இருக்கிறார். இது அபூர்வமான அமைப்பாகும். எனவே இக்கோயிலை “மால்விடை கோயில்’ (மால் – திருமால், விடை – நந்தி) என்கின்றனர். பெருமாள் தன் மைத்துனராகிய சிவனுக்கு சேவை செய்வதற்காக நந்தியின் இடத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தின்போது, இவரே பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கச் செல்கிறார்.

நக்கீரர் சன்னதி :சிவபக்தரான நக்கீரர், சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவம் நீங்க, திருப்பரங்குன்றத்தில் தவம் செய்தார். அப்போது அருகிலிருந்த குளத்தில் இலை ஒன்று பாதி மீனாகவும், மீதி பறவையாகவும் இருந்ததைக் கண்டு அதிசயித்தார். இதனால் அவரது தவம் கலைந்தது. அச்சமயத்தில் பூதம் ஒன்று சிவ வழிபாட்டிலிருந்து தவறிய 999 பேரை சிறை பிடித்திருந்தது. நக்கீரரின் தவம் கலையவும் அவரையும் பிடித்து குகையில் அடைத்தது. நக்கீரர், பூதத்திடம் சிக்கியவர்களை காப்பதற்காக திருமுருகாற்றுப்படை பாடினார். அவருக்கு காட்சி தந்த முருகன் பூதத்தை சம்ஹாரம் செய்து, தனது வேலால் குகையை தகர்த்து அனைவரையும் காத்தருளினார். அப்போது நக்கீரர் முருகனிடம் தன்னை பூதம் தீண்டியதால் கங்கையில் நீராடி பாவத்தை போக்கிக்கொள்ள வேண்டும் என்றார். முருகன் வேலால் பாறையில் ஊன்றி கங்கை நதியை பொங்கச்செய்தார். நக்கீரர் அதில் நீராடி பாவம் நீங்கப்பெற்றார். வற்றாத இந்த காசி தீர்த்தம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கிறது. இதற்கு அருகில் மேற்கு நோக்கிய காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதியும், எதிரே சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. இந்த சன்னதியில் நக்கீரர் இருக்கிறார். தீர்த்தத்தை ஒட்டியுள்ள பாறையில் நான்கு லிங்கங்களும், ஒரு சிவ வடிவமும், காசிவிஸ்வநாதர், சுப்பிரமணியர், அம்பிகை, பைரவர், கற்பகவிநாயகர் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. நக்கீரர் அடைக்கப்பட்ட பஞ்சாட்சர குகை சரவணப்பொய்கை அருகில் இருக்கிறது.

அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர்

திருமண கோலத்தில் முருகன்: அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடு. மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்த படி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே அவரது வாகனமான யானை, ஆடும் உள்ளது. முருகன் குடவரை மூர்த்தியாக இருப்பதால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் குடைவறைக் கோயிலில் உள்ளதால், அவருக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கும். புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.
அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

சத்தியகிரீஸ்வரர் :
மகிஷாசுரன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், நவநாயகிகளாக வடிவம் எடுத்து ஒன்பது நாட்கள் அவனுடன் போரிட்டாள். ஒன்பதாம் நாளில் அவள் துர்க்கையம்மனாக மாறி அவனை வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க சிவனை வணங்கினாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தான் இத்தலத்தில் மலையின் வடிவில் இருப்பதாகவும், இங்கு தன்னை வணங்கிவர சாபம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி துர்க்கையம்மன் இங்கு வந்து லிங்க வடிவ மலையாக இருக்கும் சிவனை தவம் செய்து வணங்கினாள். மேலும் மலையிலேயே ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன் தோஷத்தை போக்கியருளினார்.
அம்பாள் ஆவுடைநாயகி தனிச் சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறாள். கொடிமரத்தின் அருகே மலையை நோக்கி, அதன் அளவிற்கேற்ப பெரியநந்தி இருக்கிறது. இதற்கு அருகிலேயே மூஞ்சூறு, மயில் வாகனங்களும் உள்ளது. மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், தன் மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். மகாமண்டபத்தில் நடராஜர், சுற்றிலும் ரிஷிகளுடன் பார்வதியின் அம்சத்தில் அன்னபூரணி, சிவசூரியன், சந்திரன் ஆகியோர் இருக்கின்றனர். குடவறைக்கு வலது புறத்தில் பஞ்சலிங்கங்கள், அம்பாள்களுடன் திருமணக்கோலத்தில் இருக்கிறது. அருகில் கார்த்திகை முருகன், வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவருக்கு அருகில் கருடாழ்வார் நின்றகோலத்தில் இருப்பது விசேஷ தரிசனம். இக்கோயிலுக்கென மொத்தம் 11 தீர்த்தங்கள் இருக்கின்றன. தோல் வியாதிகள் உள்ளவர்கள் லட்சுமி தீர்த்தத்தில் உப்பு, மிளகு போட்டு வேண்டிக்கொள்கின்றனர். இக்கோயில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. எனவே, கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை. பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்கின்றனர்.

முருகன் அருகில் கருடாழ்வார் : சிவன் கோயில்களில் நந்தி, விநாயகர் தலங்களில் மூஞ்சூறு, முருகன் சன்னதியில் மயில் என அந்தந்த சுவாமிகளுக்குரிய வாகனங்கள்தான் சுவாமி எதிரில் இருக்கும். ஆனால் இத்தலத்தில் சிவன், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ளன. ஒரு பீடத்தின் நடுவில் நந்தியும், வலதுபுறத்தில் மூஞ்சூறும், இடப்புறம் மயில் வாகனமும் இருக்கிறது. இம்மூன்று வாகனங்களும் தெற்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு. மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார்.

தெட்சிணாமூர்த்திக்கு ருத்ராபிஷேகம்: இங்குள்ள தெட்சிணாமூர்த்தி, இடது கையை தன் காலுக்கு கீழே உள்ள நாகத்தின் தலை மீது வைத்துள்ளபடி இருக்கிறார். ஜாதகத்தில் தோஷம் இருப்பவர்கள், நீண்டநாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவரது சன்னதி முன்பாக “ருத்ராபிஷேகம்’ செய்து வழிபடுகின்றனர். இதற்காக ஒரு “வெள்ளிக்குடத்தில்’ சுவாமியை ஆவாகனம் (சுவாமியை குடத்தில் எழுந்தருள வைத்து) செய்து 11 வேத விற்பன்னர்கள் சிவனுக்குரிய உயர்ந்த மந்திரங்களாகிய ருத்ரம், சமஹம் ஆகிய மந்திரங்கள் சொல்லி வழிபடுகின்றனர். இது விசேஷ பலன்களைத் தரக்கூடிய அபிஷேகம் ஆகும்.

மால்விடை கோயில்: இக்கோயிலில் ஒரே குடவறையில் சிவன், பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர் மற்றும் துர்க்கை ஆகிய ஐந்து பேரும் அருள்கின்றனர். துர்க்கையம்மன் ராஜகோபுரத்திற்கு நேரே வடக்கு பார்த்து, காலுக்கு கீழே மகிஷாசுரனுடன் நின்றகோலத்தில் இருக்கிறாள். இவளுக்கு இடப்புறத்தில் கற்பக விநாயகர் கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். துர்க்கைக்கு வலது புறம் தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் சுப்பிரமணியர் வடக்கு நோக்கி இருக்கிறார். இவருக்கு அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர்.

தவறுக்கு பரிகாரம்
கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார். பிரணவ மந்திரத்தை குரு மூலமாக கற்பதுதான் முறை. தற்செயலாக முருகன் மந்திர உபதேசம் கேட்டுவிட்டாலும் அதை தவறாகவே கருதி பரிகாரத்திற்காகவும், சிவனே தனக்கு குருவாக இருந்து மந்திரம் உபதேசிக்க வேண்டுமென்றும் வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். சிவன், அவருக்கு ஒரு தைப்பூசத்தன்று காட்சி தந்து மன்னித்தார். இவர், சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். திருப்பரங்குன்றத்திற்கு செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

தந்தைக்கு பதில் மகன்
திருப்பரங்குன்றம் கோயிலில் விழாக்களின்போது, சிவனுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், முருகன் வீதியுலா செல்கிறார். முருகன், சிவ அம்சமானவர் என்பதால் இவ்வாறு செல்வதாக சொல்கிறார்கள். இங்கு முருகனுக்கு “சோமசுப்பிரமணியர்’ என்று பெயர். சோமன் என்பது சிவனின் ஒரு பெயர்.

துர்க்கை சன்னதி
கோயில்களில் துர்க்கை, பரிவார தெய்வமாகவே இருப்பாள். ஆனால், திருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். ஆம்! இவளது சன்னதி எதிரிலேயே கொடிரம், கோபுரம் இருக்கிறது. மகிஷாசுரனை வதம் செய்த பின்பு, துர்க்கை இங்கு சிவனை வழிபட்டதோடு, ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து மனம் அமைதியடைந்தாள். சிவனும் இங்கேயே அவளை தங்கும்படி அருள் செய்தார். எனவே, இத்தலத்தில் அவளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

பிரார்த்தனை: திருமண, புத்திர தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்: வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, புரட்டாசியில் வேல் திருவிழா, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை இங்கே முக்கியத் திருவிழாக்கள்.

நேர்த்திக்கடன்: இக்கோயிலில் அதிகளவில் அன்னதானம் செய்து நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

இருப்பிடம்: மதுரையில் இருந்து திருமங்கலம் செல்லும் வழி.

திறக்கும் நேரம்: காலை 5.30-1 வரை; மாலை 4-9 வரை

போன்: 0452-2482248 / 2482648

“அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன் என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான்

246400 479182102136836 1433845875 n - 2026

“அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன்
என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான் என்று
வைத்துக்கொள்ளேன்” என்றான்-சுவாமிநாதன்.

(யானை மாலை போட்டதால் சக்ரவர்த்தி ஆவான் என்று
நினைத்த தாய்க்கு சந்நியாசி பெரியவாளின் பதில் மேலே
​)

கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

மடத்திலிருந்து திடீரென்று ஒரு நாள் ஒரு தந்தி வந்தது.
குருநாதர் ஸாரத்தைவிட்டு ஆற்காட்டுக்கு அருகில் உள்ள
கலவை என்ற இடத்துக்குச் சென்று விட்டார்.

அங்கிருக்கையில்,’குழந்தை சுவாமிநாதனை அழைச்சுண்டு
உடனே மடத்துக்கு வரவும்!’ என்றது தந்தியின் வாசகம்.
அந்த சமயம் சுப்ரமண்யம் ஊரில் இல்லை.’மடத்திலிருந்து
தந்தி என்றால்,உடனே கிளம்புங்கள்!’ என்று மாதா
மகாலட்சுமியை ஊரார் தூண்டினர்.அவரும் எல்லாக்
குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்று,
அங்கிருந்து கலவைக்குச் செல்ல நினைத்தார்.

அதற்குள் தந்தி கொடுத்த பரமகுரு ஸித்தியாகி விட்டார்.
அவர் ஏன் தந்தி கொடுத்தார்? தான் மறையப்போவது தெரிந்தும்
அதற்குள் சுவாமிநாதனை அந்த பீடாதிபதியாக்க
வேண்டுமென்று அவசரப்பட்டார் போலும்! அது நடக்கவில்லை.

எனவே, மடத்துக்காரர்கள் சுவாமிகள் இல்லாமல் மடம்
இருக்கமுடியாது என்று,கைங்கரியம் பண்ணிக் கொண்டிருந்த
லக்ஷ்மிகாந்தன் என்ற வேத வித்துக்கு சந்நியாசம் கொடுத்து
67-வது பீடாதிபதியாக நியமனம் பண்ணிவிட்டனர்.

‘சுவாமிநாதன் மடாதிபதியாக்க வேண்டும்!’ என்ற குருவின்
ஆசையைத் தெரிந்து வைத்திருந்த இந்த 67-வது பீடாதிபதி,
தான் அந்த இடத்துக்கு வந்துவிட்டாலும், குரு நினைத்த அதே
சுவாமிநாதன் தான் இந்த இடத்துக்கு உரியவர் என்று
நினைத்ததுபோல் எட்டாம் நாளே ஸித்தியாகிவிட்டார்.அதற்கு
முன்,”சுவாமிநாதனை உடனே அழைத்து வாருங்கள்” என்று
சொல்லி வண்டியுடன் ஆள் அனுப்பினார். மடத்துக்காரர்கள்
காஞ்சிபுரம் சென்று சுவாமிநாதனை அழைத்துக்கொண்டு
வந்தனர்.

பின்னாலே பெற்றோர் கலவைக்குச் சென்று நிலைமையை
அறிந்தார்கள்.செல்லப் பிள்ளையைக் கொடுக்க எந்த அப்பா,
அம்மா சம்மதிப்பார்கள். அதனால் அம்மாவை
சமாதானப்படுத்தவே முடியவில்லை. பெற்றெடுத்த
அம்மாவை சுவாமிநாதனே சமாதானப்படுத்தினார்.

சில நாட்களுக்கு முன் இந்த அதிசயக் குழந்தைக்கு ஒரு
யானை வந்து மாலை போடுவதுபோல் சொப்பனம். யானை
பெரிய சக்ரவர்த்திகளுக்குத்தானே மாலை போடும்?
பிள்ளையின் கனவைப் பற்றிக் கேள்விப்பட்ட அன்னை
அப்படித்தான் நினைத்துப் பூரித்தாள். “என் கண்ணே…”
என்று சுற்றிப் போட்டாள் குழந்தை அம்மாவுக்கு அந்தக்
கனவை நினைவூட்டினான்.

“அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன்
என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான் என்று
வைத்துக்கொள்ளேன்” என்றான்.பெரியவாளிடம் பேசி
ஜெயிக்க முடியுமா என்ன? பெற்றோர் மௌனமாகச்
சம்மதம் கொடுத்தனர்.

பராபவ வருடம் மாசி மாதம் 2-ம் தேதி அதாவது 1907-ம்
வருடம் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி, ஸ்ரீமத்
சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற திருநாமத்துடன்
அவருக்கு சந்நியாச ஆசிரமம் கொடுக்கப்பட்டது. பிறகு
தன் குரு,பரமகுரு இருவருக்கும் செய்ய வேண்டிய
காரியமெல்லாம் கிரமமாகச் செய்து முடித்த பின்
கும்பகோணம் சென்றார். அங்கு அவருக்கு காஞ்சி
காமகோடி பீடாதிபதியாகப் பிலவங்க வருடம் சித்திரை
மாதம்,27-ம் தேதி, குருவாரம் பட்டாபிஷேகம்
செய்யப்பட்டது.

தென்காசி அருகே குடிகாரர்களை துடைப்பம் கொண்டு துவைத்த பெண்கள்

tasmak11 - 2026

தென்காசியை அடுத்த திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் நாள் தோறும் புதிய நூதன உத்திகளை
கையாண்டு வருகின்றனர் இன்று 6 வது நாள் போரரட்டத்தில் குடிமகன்களை விளக்குமாறு
கொண்டு அடிக்கும் போராட்டம் நடத்தினர் இதில் மகளிடம் குடிக்க பணம் கேட்க்கும்
தந்தையை மகள் அடிப்பது போலவும் ,குடித்துவிட்டு வந்து பெண்களிடம் தகராறு
செய்யும் ஆண்களை பெண்கள் ஒன்று சேர்ந்து அடிப்பது போன்று உணர்ச்சிப்பூர்வமாக
பெண்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்

.

என்ன ஆகும் கத்தார்?

qatar-people-rush-mall

கத்தார் நாட்டின் மீதான சவுதி, அமீரக, தடையால் என்ன ஆகும். இதற்கு முன்.. சவுதிக்கு வட கிழக்கில், ஒரு துக்குணியூண்டு நாடு கத்தார். தோஹா தலைநகரம். பிரதான தொழில், பெட்ரோலிய வாயு ஏற்றுமதி, உப தொழில் மற்ற ரௌடிகளைப்போல் தீவிரவாத ஏற்றுமதி.

இந்த நாடு முஸ்லிம் ப்ரதர்ஹூட என்கிற இத்துப்போன தீவிரவாத கும்பலை ஆதரித்து தொலைத்ததால்.. சவுதியும், அதன் அடியாட்களும் கடுப்பாகிப்போனார்கள். முஸ்லிம் ப்ரதர்ஹூட் ஏற்கெனவே எகிப்தை முடிந்தளவு நாசமாக்கி விட்டிருந்தது. இதைப்போய் சப்போர்ட் பண்ணி கத்தார் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறது. மு ப் க்கு சவுதி எதிரி.

85 சத உணவு பொருட்களர சவுதி பார்டர் வழியாகத்தான் போகிறது. இந்த கேட்டை இறுக்க போட்டபடியால், இனி எல்லாம் கடல் மற்றும் விமான மூலம் வரும் என்றால், விலை கிடுகிடுவென உயரும். ஏற்கெனவே கத்தார் சூப்பர் மார்க்கெட்டில் panic buying. விளக்குமாறைக்கூட விட்டு வைக்கவில்லை.
ஏழை கத்தாரிகள், பார்டர் தாண்டி சவுதிக்குள் வந்து பர்சேஸ் பண்ணுவதெல்லாம் இனி நடக்காது.

முக்கியமாய், கத்தார் ஏர்வேய்ஸுக்கு இந்த நாடுகள் வான் வெளியை மூடிவிட்டது. மும்பையிலிருந்து போக ஈரான் மீதும், அரேபியன் சீ மேல் போய்தான் சேரவேண்டியிருக்கும். இதனால் டிக்கட் விலை கூடும். இதன் சவுதி, அமீரக சேவைகளில் காசை அள்ளியது ஒரு காலம். இனி கஷ்டம்தான். இந்த ஏர்லைன் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் ஹப் ஏர்லைன்ஸ். இதன்பாடு இனி கஷ்டம்தான்.

மூன்றாவது அடி வாங்கியிருப்பது ஃபைனான்ஸ். எல்லா வங்கிகளும் இப்போது புதிய கிளைகள், அல்லது பாண்டுகளை விட முயற்சி பண்ணியிருக்கும் நேரத்தில்.. தேவையில்லாத விஷயத்தில் கத்தார் சிக்கி சீக்கியடித்துக்கொண்டிருக்கிறது.

ஈரான் மீது டரம்ப் விதித்த பயணத்தடை தவறு என்று அங்கத்து ராஜா சொன்னதாய் ஒரு நியூஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த கத்தார் ராஜா அது நானில்லை, ஹேக் ஆகிவிட்டது என்று அலற ஆரம்பித்து இருக்கிறார். அல் ஜஸீரா, கொஞ்சம் பொத்திக்கொண்டால், மற்ற தலப்பாகட்டுக்கள், தொலைந்துபோ என்று கத்தாரை விட வாய்ப்புண்டு. அதைவிட முக்கியமாய், முஸ்லிம் பரதர்ஹூட்டை கை கழவவேண்டும்.

சவுதியின் அல் அஹிலி டீம் கத்தார் ஏர்வேய்ஸை ஸ்பான்ஸரிலிருந்து நீக்கிவிட்டது. ரேட்டிங் நிறுவனங்கள், இதன் ரேட்டிங்கை கீழிறக்கிவிட்டது. இதனால், கடன் விலை அதிகமாகும் கத்தாருக்கு.

கத்தாரிகள்..சவுதி, குவைத்திகளைவிட தேவலாம் என்கிற மாதிரி ஆட்கள்தான். ஆனால் ஒருத்தனும் இந்த மிடில் ஈஸ்ட்ல சும்மா இருக்கவே மாட்டானுங்க. சவுதி, யெமன்ல குண்டுபோட்டான்யான்னு கத்தார் சொன்னா.. இவன் வேற ஆரம்பிப்பான். இது தொடர்கதைதான். எவனும் முன்னறமாட்டானுங்க, முன்னேற விடவும் மாட்டானுங்க. சண்டையெல்லாம் வராது. 2022இல் ஃபுட்பால் கூட வராது போல

 

கட்டுரை : பிரகாஷ் ராமசாமி

ஓபிஎஸ்., வழியில் ஈபிஎஸ்.,?: தினகரன் தலைமையில் ஓர் அணி: ஆட்சி என்ன ஆகும்?

edappadi dinakaran panneerselvam - 2026

சென்னை:

சிறையில் இருந்து வெளியே வந்த டிடிவி., தினகரன் ஆதரவில் ஓர் அணி உருவாகியுள்ளதால், அதிமுக.,வில் மேலும் ஒரு பிளவு தவிர்க்க முடியாததாகியுள்ளது. இது, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு தலைவலியாக அமைந்துள்ளது. ஏற்கெனவே எடப்பாடி ஆதரவாளர்கள் தினகரனை ஒதுக்கி வைப்பது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, எழுந்துள்ள நிலைமை குறித்து விவாதித்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏ, எம்.பி.க்களுடன் புதன் கிழமை நாளை ஆலோசனை நடத்துகிறார்.

அதிமுகவில் தற்போது தினகரன் தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளது. இந்த அணிகளால் முதல்வர் கே.பழனிசாமியின் அரசு பெரும்பான்மை பலத்தை இழக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. முதல்வர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டதால், அவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். இதனால் ஓபிஎஸ், சசிகலா என இருவரின் தலைமையிலும் இரு அணிகளாக அதிமுக பிரிந்தது. சசிகலா அணிக்கு எம்எல்ஏக்கள் பலம் அதிகமிருந்ததால் அவரது ஆதரவுடன், சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அவரது தலைமையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இரட்டை இலை சின்னத்துக்கு இரு அணிகளும் சொந்தம் கொண்டாடின. அதனால், அதிமுக கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் தாற்காலிகமாக முடக்கி வைத்தது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் கடைசி நேரத்தில் ரத்தானது. அதன்பின்னர், இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் திட்டமிட்டனர். ஆனால், சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும் என ஓபிஎஸ்., தரப்பு நிபந்தனை விதித்தது. இதனால், இது குறித்து ஆலோசிக்க ஏப்ரல் 17ஆம் தேதி அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கூடி ஆலோசித்தனர். அப்போது, தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தைச் சார்ந்தவர்களை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். இதை அடுத்து, கட்சியின் நலன் கருதி, தாம் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக தினகரனும் தெரிவித்தார். இருப்பினும், இரு அணிகளின் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கப் படவில்லை.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், தினகரனை தில்லி போலீஸார் கைது செய்தனர். பின் ஜூன் 2ஆம் தேதி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானார் தினகரன். அவர் வெளியில் வந்ததும், தாம் மீண்டும் கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என அறிவித்தார். மேலும் 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தில்லி சென்று தினகரனை வரவேற்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் சென்னையில் தினகரனுடன் ஆலோசனை நடத்தியதுடன், பெங்களூரு சென்று சசிகலாவையும் சந்தித்தனர். இதனால், தினகரன் ஆதரவு அணி என ஒன்று அங்கே உருவானது வெளியில் தெரிந்தது.

இதனிடையே, தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய எடப்பாடி அணியின் டி.ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘கட்சியை விட்டு தினகரனை ஒதுக்கி வைத்துள்ள முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். யாரும் தினகரனைச் சென்று பார்க்க மாட்டோம்’’ எனக் கூறினார்.

இந்நிலையில், தினகரனை வரவேற்க தில்லி சென்று அவரின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வரும் எம்எல்ஏ, க்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால், தற்போது, அதிமுகவில் ஓபிஎஸ்., அணி, முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் என மூன்றாக அணிகள் உருவாகியுள்ளன.

ஓபிஎஸ்., அணியில் 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். தற்போது, தினகரனுக்கு ஆதரவாக 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் குரல் கொடுத்துள்ளனர்.எனவே, தற்போது முதல்வர் கே.பழனிசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. முதல்வர் பழனிசாமிக்கு 121 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்திருந்தனர். அவர்களில் தற்போது தினகரனுக்கு ஆதரவாக 10க்கும் மேற்பட்டோர் செயல்பட்டு வருவதால் பழனிசாமியின் அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களில் சிலர், திவாகரனின் ஆதரவாளர்கள் என்பதால், முதல்வர் பழனிசாமி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், திவாகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 14ஆம் தேதி கூடுகிறது. அதிமுக.,வில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பம், பேரவைக் கூட்டத்திலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தற்போது டிடிவி தினகரன் அணிக்கு 22 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர் என்றும், எடப்பாடி பழனிச்சாமிக்கு 99 பேர் ஆதரவும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 12 பேர் ஆதரவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, ஓ.பன்னீர்செல்வம் பாணியில், எடப்பாடி பழனிச்சாமியும் ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் அமரும் நாள் வெகு  தொலைவில் இல்லை என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.