Home Blog Page 5619

ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநரா? பொறுப்புள்ள நிர்வாகியா?: புதுவையில் வலுக்கும் கிரண் பேடி-நாராயணசாமி மோதல் !

kiran bedi - 2026

புதுச்சேரி:

துணை நிலை ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பா? அல்லது பொறுப்புள்ள நிர்வாகியா? உங்கள் முன் உள்ள தேர்வு மிகத் தெளிவானது என்று கூறியுள்ளார் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. அவர் தமது டிவிட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.

புதுவை யூனியன் பிரதேசம் என்பதால், தனக்கு அதிக அதிகாரம் உள்ளது என்று கூறி ஆளுநர் கிரண் பேடி அரசின் நிர்வாக வி‌ஷயங்களில் தலையிட்டு கருத்து கூறி வருகிறார். இதனால் ஆளுநருக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில் உயர் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கிரண் பேடி தலையிட்டதால் நாராயணசாமி ஆளுநருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார். அவர் வரம்பு மீறி செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் கிரண்பேடி டிவிட்டரில் கருத்து வெளியிட்டார். அதில் நாராயணசாமியின் நிர்வாகம் தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.

இந்தப் பிரச்னை சட்டசபையில் எதிரொலித்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்தராமன், தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் சட்டசபையில் பூஜ்ய நேரத்தின் போது இந்த பிரச்னையை எழுப்பிப் பேசினர். ஆளுநர் கிரண்பேடியின் போக்குக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

அதற்கு முதலமைச்சர் நாராயணசாமி பதில் அளித்துப் பேசியபோது,

ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து இப்படித்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார். நான் ஒரு வருடமாக அவரைப் பற்றி எதுவும் பேசாமல் மவுனம் காத்து வந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து அத்துமீறி, கட்டுப்பாடுகளை மீறி செயல்படுகிறார். வேறு வழியில்லாமல் இதை எதிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். புதுவை ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. தில்லி ஆளுநருக்கும், புதுவை ஆளுநருக்கும் உள்ள அதிகாரங்கள் வெவ்வேறானவை. புதுவை ஆளுநரைப் பொறுத்தவரை அமைச்சரவை என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு செயல்பட வேண்டும். ஆனால் கிரண்பேடி இதை உணர்ந்து கொள்ளாமல் இஷ்டப்படி செயல்படுகிறார். இதுகுறித்து மத்திய அரசிடம் ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளேன்.

குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு இது குறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் செயலை செய்கிறார். அமைச்சரவை அனுப்பும் கோப்புகளை உடனடியாக தீர்வு கண்டு அனுப்புவதாகவும், தன்னிடம் எந்த கோப்பும் தேங்கிக் கிடக்கவில்லை என்கிறார். ஆனால் பல கோப்புகளை அங்கும், இங்கும் அனுப்பி சுற்ற விடுகிறார்.

உதாரணத்திற்கு விவசாயிகளுக்கு கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோப்பு அனுப்பினோம். அந்தக் கோப்பினை சட்டத்துறைக்கு அனுப்பினார். அவர்கள் இது மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டது. அதற்கு ஒப்புதல் அளிக்கலாம் என்றார்கள். ஆனால் அந்தக் கோப்பினை அவர் தில்லிக்கு அனுப்பிவிட்டார்.


ஆதிதிராவிட மாணவர்களுக்கான கடன் உள்ளிட்ட பல கோப்புகளும் இதே நிலையில்தான் உள்ளன. அவருடைய செயல்பாடுகளால் இப்படி ஒரு ஆளுநர் நமக்கு தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் தனது வரம்புக்குள் செயல்பட வேண்டும். இல்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார். இனி அவரை எம்.எல்.ஏ.க்கள் தொகுதிக்குள் நுழைய விடக்கூடாது. மக்களை திரட்டி அவரைத் தடுக்க வேண்டும்.

ஆளுநரை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சென்று சந்திக்க கூடாது. அமைச்சர்கள் உத்தரவு இல்லாமல் இனி யாரும் ஆளுநரை சந்தித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்… என்று அவர் பேசினார்.

இதனிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் இப்பிரச்சனை தொடர்ந்து நீடித்து கொண்டு இருக்கிறது. அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவரை திரும்பப் பெறாவிட்டால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றார். இதே கருத்தை தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோரும் வலியுறுத்தினார்கள். அப்போது என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்தப் பிரச்னைக்கு அரசுதான் காரணம் என்று கூறி விவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களைப் பேச அனுமதிக்காததால் அவர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

BREITBART EDITOR FIRED FOR ANTI-MUSLIM TWEETS AFTER LONDON ATTACK

0

Katie McHugh

A Breitbart editor has been sacked after posting anti-Muslim tweets following the London terror attack.

The editor, Katie McHugh, who previously worked at The Daily Caller, said in a tweet Monday that “Breitbart News fired me for telling the truth about Islam and Muslim immigration.”

 

 

McHugh was criticized for a tweet Saturday, in which she wrote “there would be no deadly terror attacks in the U.K. if Muslims didn’t live there.” She then became involved in a twitter spat with actor Pej Vahdat. “You’re a real moron,” Vahdat responded to her tweet about Muslims.

 

“You’re an Indian,” replied McHugh, with Vadhat responding that his ethnicity was in fact Iranian-American.

McHugh also posted a link to a fundraising page set up for her on fringe right-wing site  WeSearchr, for donations to cover McHugh’s living expenses during her unemployment.

In a statement posted on the site, McHugh was unrepentant.

“Breitbart News fired an editor for speaking frankly about Islam and Muslim immigration. If there were no Muslims in London, there would be no Muslim terror attacks, period,” she wrote.

“I said nothing wrong. As President Donald Trump says, if we don’t get smart, it will only get worse.”

McHugh’s colleagues at Breitbart joined criticism of her on Sunday, characterizing her remarks as  “appalling,” “terrible,” and “dumb” to CNN.

Breitbart backed Donald Trump’s anti-immigration policies and “Muslim ban” during the presidential election campaign, and Trump hired the website’s CEO Steve Bannon as his campaign director in August, appointing him as his chief strategist after his victory.

Bannon has described the site as a “platform” for the alt-right, a movement of anti-establishment conservatives and white nationalists.

 

The site’s writers frequently court controversy. In February, Breitbart writer and alt-right controversialist Milo Yiannopoulos resigned from the site after making comments seemingly defending pedophilia.

Charles Johnson, who formerly worked at Breitbart News, acting as a spokesperson for McHugh, told the New York Times: “Why was she singled out for criticism or punishment when Milo Yiannopoulos and others said far worse things and yet retained their jobs?”

source: https://www.newsweek.com

லண்டன் தாக்குதலையடுத்து இஸ்லாமிய எதிர்ப்பு கருத்து சொன்ன பத்திரிகையாளர் பணி நீக்கம்!

Katie McHugh - 2026

ப்ரிட்பர்ட் தளத்தின் எடிட்டராகப் பணியாற்றும் கேத்தெ மெக்ஹக், லண்டன் தாக்குதலை அடுத்து குறிப்பிட்ட இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துகளுக்காக பணி விலக நேர்ந்துள்ளது.

அவர், முஸ்லிம்கள் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதமும் இல்லை என்று தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்தார். மேலும், முஸ்லிம் குடியேற்றம், இஸ்லாம் குறித்து நான் சொன்ன உண்மைகளுக்காக, ப்ரிட்பர்ட் நியூஸ் என்னை பலிவாங்கியிருக்கிறது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சனிக்கிழமை அவர் பதிவிட்ட டிவிட்டரில், “இங்கிலாந்தில் முஸ்லிம்கள் இல்லை என்றால், இது போன்ற மோசமான பயங்கரவாத தாக்குதல்களும் இருக்காது” என்று கூறியிருந்தார்.

இதை அடுத்து பேஜ் வாஹ்தா என்பவருடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட மெக்ஹக், நாம் ஸ்மார்ட்டாக இல்லாவிட்டால் மோசமான நிலைக்குப் போய்விடுவோம் என்று ட்ரம்ப் குறிப்பிட்டதைக் கூறியுள்ளார்.

முன்னதாக இதே போல் மிலோ இயன்னோபோலஸ் எனும் எடிட்டரும் கடந்த பிப்ரவரியில் இந்தத் தளத்தில் இருந்து பணி விலகியது குறிப்பிடத்தக்கது.

கத்தாரில் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடால் தவிக்கும் மக்கள்: இந்தியர்கள் நிலை என்ன?

qatar-people-rush-mall
தோஹா:

வளைகுடா நாடுகளில் ஒன்றான காத்தாரில், அதன் அண்டை நாடுகளுடனான உறவு மோசமடைந்து சீர்கெட்டுள்ளது. கத்தாருடன் மற்ற வளைகுடா நாடுகள் பிணக்கம் காட்டியதால், கத்தார் தனிமைப்பட்டுள்ளது. இதை அடுத்து அங்கே அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்ற அச்சத்தால், முன்னதாகவே தயார் செய்து கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக சூப்பர் மார்கெட்களுக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே, அங்கே பொருள்கள் வேகமாக காலியாகி வருகின்றன. கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருள்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. எனவே, சூபர் மார்க்கெட்டுகளுக்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

கத்தார் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் பெரும்பாலும் சவூதி அரேபியா வழியாகவே வரும். இந்நிலையில், கத்தாருடன் உறவை துண்டித்துள்ள சவூதி அரேபியா, அந்நாட்டுடனான சாலை, கடல், விமான வழித்தடங்களை நிறுத்தி விட்டதால் பொருள்கள் வரத்து நின்று போயுள்ளது. வழக்கமாக பரபரப்பாகக் காணப்படும் தோகாவின் ஹம்தா சர்வதேச விமான நிலையம் இப்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தங்கள் நாட்டு வான் எல்லையில், கத்தார் விமானங்கள் பறக்கக்கூடாது என்று கத்தார் ஏர்வேஸுக்கு சவூதி அரசு தடை விதித்துள்ளது. இதனால் ரியாத் உள்ளிட்ட விமான நிலையங்களில் மக்கள் பலர் தவித்து வருகின்றனர். தற்போது, கத்தாரில் சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நாணயங்கள் செல்லாக்காசாகி விட்டன. இந்நிலையில் கத்தார் நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் நாடுகளில் இருந்து இன்னும் 2 வார காலத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் கெடு விதித்துள்ளனர்.

கத்தாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அடுத்து துபையில் பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் பலர் அங்கே பின் வாங்கியுள்ளதால் பங்குச் சந்தை 7.5% வீழ்ச்சி கண்டுள்ளது.

கத்தார் நாட்டில் மொத்தமுள்ள 6.5 லட்சம் இந்தியர்களில் 3.5 லட்சம் பேர் கேரள மாநிலத்தவர்கள். இங்கிருந்து இந்தியாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு இரு நகர விமான நிலையங்களுக்கும் தினசரி விமான சேவையும், கொச்சினுக்கு வாராந்திர சேவைகளும் உண்டு. விமான சேவைகள் முடங்கியுள்ளதால், கத்தாரில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப பலரும் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இதனிடையே இந்தப் பிரச்னைக்கு மூலகாரணமே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் என்று வளைகுடா நாடுகளில் விமர்சனம் எழுந்துள்ளது. அண்மையில் சவூதி அரேபியா பயணம் செய்த ட்ரம்பின் தூண்டுதலின் பேரிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மேற்காசிய விவகாரங்களை அலசுபவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

ஜிஎஸ்டி.,: ஜூன் 11ல் விடுபட்ட பொருள்களுக்கான வரியை இறுதி செய்யும் கூட்டம்

gst

புது தில்லி:
ஜூன் 11ம் தேதி, இதுவரை விடுபட்ட பொருள்களுக்கான ஜிஎஸ்டி., வரியை இறுதி செய்யும் கூட்டம் நடைபெறுகிறது.

ஜூலை 1ஆம் தேதி முதல், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக, அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி., சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும். ஜிஎஸ்டி., வரி விதிப்பில், 5, 12, 14, 28 சதவீதம் என நான்கு விதமாத வரிவிதிப்பு முறைகள் உள்ளன.

ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாகவுள்ள ஜிஎஸ்டி., இந்திய பொருளாதாரத்தில் ஒரு திருப்பு முனையாக அமையும்; ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி என்பது சாமானிய மனிதனுக்கு பெரிதும் பயனளிக்கும் – என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜி.எஸ்.டி வரியை இறுதி செய்வதற்கான கவுன்சில் கூட்டம் தில்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
இந்நிலையில், இந்தக் கவுன்சில் கூட்டத்தில் குறிப்பிடப்பட்ட பொருள்களில் இருந்து விடுபட்டவற்றுக்கான வரிகளை இறுதி செய்யும் அடுத்த கூட்டம் வரும் ஜூன் 11ஆம் தேதி நடைபெறுகிறது.

நரேந்திர மோடி: 3 ஆண்டுகளில் 150 சாதனைகள்!

modi n - 2026

பாஜகவின் மோடி அரசின் மூன்றாண்டு கால சாதனைகள் என்ன?

பாஜக.,வின் நரேந்திர மோடி பாரதப் பிரதமராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவர் தலைமையிலான அரசின் சாதனைகள் என்ன என்று பட்டியலிட்டுள்ளார்கள்…

அந்தப் பட்டியல்…

1)ஆப்கானிஸ்தானில் தமிழ்நாட்டை சேர்ந்த பாதிரியார் அலெக்ஸ் பிரேம் குமார் அவர்களை தலிபான் தீவிரவாதிகள் பிடியில் இருந்து பத்திரமாக மீட்டது மோடி அரசு

2)ஈராக்கில் உள்நாட்டு போரில் சிக்கி தவித்த 168 இந்தியர்கள் மீட்பு

3)வெறும் 15 நிலகரி சுரங்கங்களை 75000 கோடி ரூபாய்க்கு ஏலம் விட்டு சாதனை

4)தனக்கு பரிசாக கிடைத்த அனைத்து பொருட்களையும் ஏலம் விட்டு கிட்ட தட்ட 8 கோடி ரூபாய் திரட்டி மத்திய அரசின் கருவூலத்தில் சேர்த்துள்ளார் பிரதமர் மோடி அவர்கள்

5) ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சார கட்டணம் விலை ரூபாய் 20 இல் இருந்து ரூபாய் 7 ஆக குறைப்பு

6) டில்லியில் வடகிழக்கு மாணவர்களுக்காக அனைத்து வசதிகளையும் உடைய தங்கும்விடுதிகளை கட்டி தர மத்திய அரசு நாற்பது கோடி ஒதுக்கீடு

7) பாகிஸ்தான் இந்துக்கள் 20000 பேர் குடியுரிமை பெற்று மத்திய பிரதேசத்தில் குடியேறினர்

8)மூன்று ஆண்டுகளில் 250000 கிராம பஞ்சயதுக்களை டிஜிட்டல் மயமாக்க டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் மோடி அரசு முடிவு

9)மாதம் இருமுறை எட்டு அமைச்சர்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று தங்கள் துறை சார்ந்த பனி சிறப்பாக நடைபெறுகிறதா என்று ஆய்வு..இந்த முடிவிற்கு மோடி அரசிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு

10)மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க அரசு விவசாயிகளுக்கான மின்சார கட்டணத்தை குறைக்கவும் ,சோலார் பம்புகள் அமைக்கவும் முடிவு

11)தூய்மை இந்தியா திட்டத்திற்காக நாடு முழுவதும் ஜனவரி மாதம் மட்டும் 710000 கழிப்பறைகளை கட்டி உள்ளது மோடி அரசு

12)மேக் இன் இந்தியா திட்டம் மூலம் எண்ணை தொழிற்சாலைகள் அமைக்க மதிய அரசு முடிவு .இதன் மூலம் எண்ணை உற்பத்தி பெருகுவதோடு ,வேலைவாய்ப்பும் பெருகும்

13)வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணம் 3500 கோடி முதற்கட்டமாக மத்திய அரசின் வருமான வரி துறையினரால்
கைப்பற்ற பட்டுள்ளது

14)பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களும் விடுதலை

15)வங்கிகளுக்கான ரேபோ ரேட் விகிதம் 0.25%(ரேபோ ரேட் =7.50%) குறைந்துள்ளது.இதன் மூலம் குறைந்த வட்டியில் வீட்டுகடன்,வாகன கடன் பெறலாம்

16)விவசாயிகளுக்கு சாயில் ஹெல்த் கார்ட் வழங்க 568 கோடி ஒதுக்கீடு

17)நாடு முழுவதும் பதட்டமான இடங்களில் உள்ள ராணுவ வீரர்களுக்கு 50 ஆயிரம் குண்டு துளைக்காத கவசங்கள் (Bullet Proof Jacket) உடனடியாக கொள்முதல் செய்து, ராணுவ வீரர்களுக்கு அளிக்க உத்தரவிட்டிருக்கிறார், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர்.

18)52 அத்யாவசிய மருந்துகள் விலை குறைப்பு
19)நஷ்ட்டத்தில் இயங்கிவந்த ஏர் இந்தியா லாபத்தில் இயங்க ஆரம்பமாகியுள்ளது

20)ஜன்தான் யோஜனா திட்டம் (5000 கடன் வசதியை கொண்ட வங்கி கணக்கு திட்டம்) கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது

21)இலங்கையில் இந்திய உளவுத்துறையான ரா ராஜபக்ஷேவை வீழ்த்தியது

22)தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தினரின் கொட்டத்தை அடக்க எல்லையில் ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம்

23)கங்கை ஆற்றில் தேவை இல்லாத கழிவுகள் கலப்பதை தடுக்க தடுப்பு அமைக்க 1500 கோடி ஒதுக்கீடு

24)காங்கிரஸ் ஆட்சியில் நடந்த நிலகரி ஊழல் குறித்து மேலும் 17பேர் மீது வழக்கு தொடர்ந்து விசாரணையை துரிதபடுத்த திட்டம்

25)கனரக வாகனங்களுக்கு அப்ப்ரூவல் வழங்க (e-approval) திட்டம் ஆரம்பம்

26)விப்ராட் குஜாராத் மாநாட்டில் இந்தியாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய அமெரிக்காவுடன் ஒப்பந்தம்

27)சீக்கிய கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் இழப்பீடு

28)மறைமுக வரிவிதிப்பில்(INDIRECT TAX) உள்ள இடர்பாடுகளை தடுக்கவும் ஊழல்களை களையவும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா

29)இந்திய பாகிஸ்தான் எல்லைகளில் லேசர் சுவர் அமைக்க மோடி அரசு முடிவு

30)வேலை வாய்ப்புகளை அதிகரிக்க,அனைத்து மக்களுக்கும் காப்பீடு திட்டம் சென்றடைய இன்சூரன்ஸ் மசோதா

31)ராணுவம் விழிப்புடன் செயல்பட்டதால் குஜராத் எல்லையில் நுழைய முயன்ற பாகிஸ்தான் படகு தடுக்கப்பட்டது.இதன் மூலம் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மும்பை தாக்குதலை போல அசம்பாவிதங்கள் நடக்கவில்லை

32)சமயல் எரிவாயு திட்டத்திற்கான மானியத்தை வங்கி கணக்குகளில் வழங்குவதன் மூலம் வங்கிகளில் பண புழக்கம் அதிகரித்ததோடு மட்டும் அல்லாமல் பல சட்டவிரோதமான சமையல் எரிவாயு இணைப்புக்கள் துண்டிப்பு .இதன் மூலம் அரசிங்கதிர்க்கு பல கோடிரூபாய் சேமிப்பு

33)ஒவ்வொரு மாநிலத்திலும் அனைத்து வசதிகளை கொண்ட ஸ்மார்ட் காவல் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு

34) கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பென்சன் தொகையின் மதிப்பு 27000 கோடி..மோடி அரசு தொழிலாளர்களுக்கு பென்சன் தொகையை காங்கிரஸ் அரசை போல இழுத்தடிக்காமல் வழங்கியுள்ளது தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

35)சீக்கியர்களை கொன்ற காங்கிரஸ்காரர்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க பட்டுள்ளது

36)பொருளாதார வளர்ச்சியை பெருக்க வங்கித்துறையை மேம்படுத்த மோடி அரசு முடிவு

37)சூரிய வழி மின்சார உற்பத்தியை அதிகரிக்க நூறு அமெரிக்க பில்லியன் டாலர்களை 2022ஆம் ஆண்டிற்குள் முதலீடு செய்ய மத்திய அரசின் முடிவின் மூலம் விவசாயிகள் நலன் காக்கபடுவதில் தாமதம் ஏற்படாமலும் அதே நேரத்தில் வளர்ச்சியை பெருக்கவும் நிலம் கையகபடுதுதல் மசோதா

38)தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை உயிருடன் பத்திரமாக நாடு திரும்ப செய்தது

39)அரசு பணிஇடங்களில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுக்க புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது மோடி அரசு

40)அனைத்து பா.ஜ.க எம்பிக்களும் தங்களது சொத்து கணக்குகளை வெளியிட செய்தார் மோடி

41) “Juvenile Justice Act” என்ற சட்டத்தை மாற்றியமைத்ததன் மூலம் பதினாறு வயதிற்கு மேல உள்ள யாரையும் கொலை,கற்பழிப்பு,ஆசிட் வீச்சு போன்ற குற்றங்களுக்கு தண்டிக்கலாம்.

42)பழம்பெரும் திட்டமான ஐந்தாண்டு திட்டத்திற்கு முடிவு கட்டி நிதி ஆயாக் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது (இது மாநில முதலமைச்சர்களை ,யூனிய பிரதேச ஆளுநர்களை உள்ளடக்கியது).

43)மத்திய அமைச்சர்களின் விமான சொகுசு பயணம் (FIRST CLASS TRAVEL)ரத்து.ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் தங்கவும் தடை.வெளிநாடு செல்வதற்கு முன்பு பிரதமரிடம் அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும்

44)திட்டமிடாத செலவுகளையும் பத்து சதவீதம் குறைக்க மோடி அரசு இலக்கு வைத்து செயல் படுகிறது

45)வடகிழக்கு மாநிலங்களையும் தேசிய நீரோட்டத்திற்கு கொண்டு வர இந்த நிதியாண்டில் 50000 கொடி ஒதுக்கப்பட்டது .”அருண் பிரபா “ என்ற விளையாட்டு பல்கலைகலகத்தையும் ,தரமான சாலைகள் மற்றும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தவும் முடிவு

46)“make in india” என்ற திட்டத்தின் மூலம் பல தொழிற்சாலைகளை உருவாக்கி,வேலை வாய்ப்பை பெருக்கவும் ,ஏற்றுமதியை அதிகரிக்கவும் முடிவு

47)வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க 5111 கோடி மதிப்பில் மின்சார திட்டங்களை செயல்படுத்த முடிவு

48)கடந்த ஆட்சி போல நிலகரி விவகாரத்தில் ஊழல் ஏற்படாமல் தடுக்க ,நிலகரி ஏலத்தை மிகவும் வெளிபடையாக நடத்த முடிவு

49)யோகாசனம் ,ஆயிர்வேதம் போன்றவற்றை மக்களிடம் கொண்டுசெல்ல “ஆயுஷ் அமைச்சகம்” உருவாக்கப்பட்டுள்ளது

50)டிஜிட்டல் புரட்சி :–ஈ-கிராண்டி (e-kranti) என்ற திட்டத்திற்கு 113000 கோடி பணம் செலவு செய்ததன் மூலம் கல்வித்துறை,பொது சேவை,அதிகாரத்துவம் போன்ற அனைத்தையும் ஆன்லைன் மயமாக்க திட்டம்

51)சென்னை –டில்லி இடையே புல்லட்ரயில் செயல்படுத்த முடிவு .மும்பை- ஆமெதாபாத் இடையே புல்லட்ரயில் செயல்படுத்த முடிவு.

52)ராணுவ அமைச்சராக பதவியேற்ற உடனே 15750 கோடி ரூபாய் செலவில் 814 பீரங்கிகள் வாங்கும் திட்டத்திற்கு கையோப்பம் இட்டார் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர்

53)யோகாவை தனிப்பாடமாக ஜூன் 2015 ஆம் ஆண்டு பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு

54)பா ஜ க எம்.பி தருண் விஜய்-ன் கோரிக்கை ஏற்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி உத்தரவில் திருவள்ளுவர் பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கொண்டாடப்பட்டுள்ளது.

55) “தூய்மையான பாரதம்” என்ற பேரில் நாடு முழுவதும் தெரு வீதிகளை கூட்டி சுத்தப்படுத்தும் பணி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது

56) சீன பட்டாசுகளுக்கு நிரந்தர தடை விதித்து உள்ளூர் பட்டாசு உற்பதியார்களுக்கு உதவி

57) மானியமில்லாத சமையல் எரிவாயு விலை 21 ரூபாய் குறைக்கப்பட்டது

58) வீட்டு காஸ் சிலிண்டர் வருடத்திற்கு 12 எந்த நேரமும் எத்தனைவேண்டுமானாலும் வாங்கலாம் மாதம் 1 தான் என்கிற கட்டுப்பாடு இனி இல்லை என்றநிலையை கொண்டு வந்து சமயம் எரிவாயு மீதான தடையை நீக்கியது

59) குறைந்தபட்ச ஊதிய உயர்வை 1000 ரூபாயாக உயர்த்தியது

60) ஆட்சிக்கு வந்த முதல் நாளே வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புபணத்தை மீட்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது .இந்திய வரலாற்றில் முதல் முறையாக கருப்ப பணம் வைத்துஇருபவர்களின் ஒரு சில பேர்களை வெளியிட்டது .அனைத்து பெயர்களையும் உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது

61) ஆராய்ச்சி துறைகளில் இந்தியா –இஸ்ரேல் கூட்டு சேர்ந்து செயல்பட முடிவு

62) நாடு முழுவதும் அனைத்து வசதிகளுடன் நூறு பெரும் நகரங்களை உருவாக்குவது .தமிழகத்தில் பொன்னேரி ஸ்மார்ட் சிட்டி

63) கங்கை சுத்தப் படுத்த ஆரம்பக்கட்ட நடவடிக்கை .,மூன்று ஆண்டுகளில்கங்கை முழுவதும் சுத்தப்படுத்தப்படும் என்று நீர்வள துறை அமைச்சர் உமாபாரதிவாக்குறுதி

64 ) வைர நாற்கர அதிவேக ரயில் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

65) எம்.பி க்கள் தங்கள் மீதுள்ள வழக்குகளை துரிதப் படுத்தி விசாரிக்க உத்தரவு

66) வருமான வரி உச்ச வரம்பை இரண்டில் இருந்து இரண்டரை லட்சமாக ஏற்றியது

67) சீனாவுடன் எல்லை பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தை.சீன ஊடுருவலைதடுக்க அருணாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் அதிகமான மக்கள் குடியேற்றம்

68) அனைத்து மாநிலங்களிலும், ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்.,கள் போன்றஉயர்கல்வி நிறுவனங்கள் அமைக்க முடிவு .முதல் கட்டமாக ஐந்து மாநிலங்களில்ஐ.ஐ.டி.ஐந்து மாநிலங்களில் ஐ.ஐ.எம்.ஐந்து மாநிலங்களின் ஏ.ஐ.ஐ.எம்.எஸ்நிறுவும் பனி தொடக்கம்

69) பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க முடிவு

70) ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில், உள்கட்டமைப்பு வசதிகள்மேம்படுத்தப்படும். பயங்கரவாதி களின் ஊடுருவல்கள் தடுக்கப்பட்டு, காஷ்மீர்பண்டிட்கள், அவர்களின் சொந்த ஊரில், குடியேற நடவடிக்கை எடுத்து வருகிறது.

71) வேலைவாய்ப்புகள் மற்றும் சொத்துகளை உருவாக்கும் துறைகளில், நேரடி அன்னிய முதலீடு அதிகரிக்க முடிவு

72) புதிய மின்சாரக் கொள்கை அமல்படுத்த முடிவு

73 )சர்வதேச அணுசக்தி ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

74) 50 சுற்றுலா தளங்களை உள்ளடக்கிய வளையம் ஏற்படுத்த முடிவு

75) ஊழல் மற்றும் கருப்புப் பண அபாயம் ஒழித்துக் கட்ட முடிவு

76) ஒவ்வொரு வயலுக்கும் தண்ணீர்’ என்ற நோக்கில், ‘பிரதமர் விவசாய நீர்ப்பாசன திட்டம்’ என்ற புதிய திட்டம், செயல்படுத்தப்படும்

77) இளைஞர் மேம்பாட்டு திட்டம் என்பது மாற்றப்பட்டு, ‘இளைஞர்களேவழிநடத்தும் மேம்பாட்டு திட்டம்’ கொண்டு வரப்படும். அதன் மூலம், நிறைய ‘ஆன் – லைன்’ படிப்புகள் நடத்த முடிவு

78) விளையாட்டு வீரர்களைஇனம் கண்டுபிடிக்க, தேசிய அளவில், திட்டம் கொண்டு வரப்படும். புதிய தேசியசுகாதாரக் கொள்கை உருவாக்க முடிவு

79) தேசிய சுகாதாரகாப்பீட்டுத் திட்டம்அறிமுகம் செய்யப்படும்.’குப்பை இல்லாத நாடு’ என்றநோக்கில், புதிய திட்டம் அமல்படுத்த முடிவு

80) பெண்கள் பாதுகாப்பு மற்றும் -பெண்கள் கல்வி’ என்ற புதிய முழக்கத்தோடு, பெண்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு

81) அதிகாரிகள் மத்தியில், நம்பிக்கை ஏற்படுத்தவும், நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுஆவணங்கள் அனைத்தும், ‘டிஜிட்டல்’ மயமாக்க முடிவு

82) மழைநீரைச் சேமிக்கவும், சாத்தியம் உள்ள நதிகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்க முடிவு

83) விடுதலை புலிகள் இயக்கத்துக்கு காங்கிரஸ் கட்சி விதித்துள்ளஐந்தாண்டு தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில்குழு அமைத்தது

84) முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளாமுதல்வர் உமன் சாண்டி வற்புறுத்தலையும்மீறி கண்காணிப்பு குழு அமைத்துதமிழத்தின் ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

85) வட கிழக்கு வறட்சி மாநிலங்களை பசுமை நிறைந்த மாநிலங்ககளாக மாற்ற ,ஓடிஸா,பீகார்,மேற்குவங்கம்,கிழக்கு உத்தர் பிரதேசம் போன்ற மாநிலங்களை விவாசய சந்தையாக மாற்ற ,லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின்
வருமானத்தை பெருக்க மத்திய அரசுதீவிர நடவடிக்கை

86) பிறப்பில் இருந்து இறப்பு வரை மனிதனுக்கு தேவைப்படும் 50 அத்யாவசிய மருந்துகளை அனைவருக்கும் இலவசமாக கொடுக்க திட்டம்

87) இராக்கில் தீவிரவாதிகளிடம் பிடிபட்ட நர்சுகளை ஒரு கீறல் கூட விழாமால்எந்த நாட்டில் உதவியும் இன்றி தீவிரவாதிகளிடம் நேரடியாக பேச்சு வார்த்தைநடத்தி மீட்டது

88) பொதுமக்களும் அரசுக்கு ஆலோசனை வழங்கhttps://mygov.nic.in/என்ற இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

89) தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் மட்டும் வெற்றி பெற்ற ஒரே பா.ஜ.க எம்பி போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து தனது தொகுதிக்கு புதிய சாலையைஉருவாக்க ,பழைய சாலைகள சீரமைக்க கேட்டுகொண்டதன் பேரில் அந்த தொகுதியில்சீரமைப்பு மற்றும் புதிய சாலையை உருவாக்கும் பணிகள் நடை பெறுகிறது

90) தமிழ்நாட்டை புறக்கணிக்காமல் ரயில் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 1,233 கோடி ஒதுக்கப்பட்டது .சென்னை ரயில் நிலையத்தில் இலவச wifiவசதி மத்தியரயில்வே துறை அமைச்சர் சதானந்த கௌடாவால் தொடங்கப்பட்டது

91) வட கிழக்கு மாநில ரயில்களுக்கு wifiஇன்டர்னட் வசதி

92) குமரியில் பேர் மருத்துவ சிகிச்சைக்கு பிரதமர் நிவாரண நிதியில்இருந்து ரூ6.50 லட்சம் தமிழக பா.ஜ.க தலைவர் பொன்னர் பெற்று தந்து உள்ளார்

93) தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி இஸ்லாமிய மதராசாக்களை நவீனபடுத்த ரூ100 கோடி ஒதுக்கீடு

94) சுஷ்மா சுவராஜ் முயற்சியால் சவுதி அரேபிய சிறையில் வாடிய 40 இந்தியர்கள் விடுதலை.

95) விவசாய கடன்கள் வழங்க, எட்டு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

96) இந்திய உணவு கழகத்தை சீரமைக்கவும் முடிவு.

97) நிலமற்ற விவசாயிகள், ஐந்து லட்சம் பேருக்கு நபார்டு கடனுதவி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

98) அனைத்து மாநிலங்களிலும், உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என, அறிவிப்பு

99) வறட்சி பாதிப்பிற்காக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

100) நீர் பாசன வசதிகளை மேம்படுத்த, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

101) இராக்கில் உள்நாட்டு போர் நடைபெற்றாலும் சமையல் எரிவாயு ,மண்ணெண்ணெய் விலை உயார்த்தாமல் பார்த்து கொண்டது

102) வங்கதேசத்தோடுவிசா முறைகளை கடுமையாகிய இந்திய அரசு..இனி சட்டவிரோத குடியேற்றங்களும்,ஊடுருவல்களும் இருக்காது

103) பிரதமர் நரேந்திர மோடி, தனது அமைச்சரவை சகாக்களை அரசு செலவில் புதிய கார்கள் வாங்க தடை விதித்தார்.

104) சட்டத்தை மதிக்காமல் ஆட்டம் போட்ட அம்பானி கூட்டத்திற்கு 578 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது

105) டில்லி ஆக்ரா இடையே அதிவேக செமி புல்லட் ரயில் சோதனை வெற்றி வேகம் 160KM/H

106) இந்திய விமான படையை வலிமையாக்கும் 56 புதிய விமானங்கள் வாங்கியது

107) வருமான வரி வரம்பை 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தியது

108) ப்ரீமியம் பெட்ரோல் விலை ரூ 5 குறைந்தது

109) காசநோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க 2 நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஏஜிங்துவங்கப்படுகிறது. இதில் ஒன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும்மற்றொன்று சென்னையில் உள்ள மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியிலும்அமைக்கப்படுகிறது.

110) தூத்துக்குடியில் வெளிவிட்ட துறைமுக திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்காக ரூ.11 ஆயிரத்து 635 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

111) தேசிய புராதான நகர மேம்பாடு மற்றும் அதிகரித்தல் திட்டம்அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் முதல்கட்டமாக ரூ.200 கோடி செலவில்மதுரா, அமிர்தசரஸ், கயா, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி மற்றும் அஜ்மீர் ஆகியநகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

112) சூரிய ஒளியில்இருந்து மின்சாரம் தயாரிப்பதை ஊக்குவிக்க அல்ட்ரா மெகா சோலார் பவர்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இத்திட்டம் தமிழகம், குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும்.இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

113) புதுவை வெள்ளம், புயல், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சமாளிக்க புதுச்சேரிக்கு ரூ.188 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

114) ஜவுளி உற்பத்தியை மேம்படுத்த 6 ஜவுளி குழுமங்கள்அமைக்கப்படுகிறது. அவை பரேலி, லக்னோ, சூரத், கட்ச், பகல்பூர், மைசூர்மற்றும் தமிழகத்தில் அமைக்கப்படுகின்றன.

115) முதியோருக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
116) கிராமங்களில் விவசாய விளைப்பொருள்களைச் சேமித்து வைக்க குளிர்பதன கிட்டங்கிகள் அமைக்க ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கல்

117) குட்கா, பான்மசாலா,சிகிரட் மற்றும் மெல்லக்கூடிய புகையிலை,

118) ஜர்தா வாசனை சேர்க்கப்பட்ட புகையிலை சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விலை உயர்த்தியது

119) வீட்டுக்கடனுக்கான வரிச் சலுகை ரூ.1½ லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

120) பாசன வசதிகளை மேம்படுத்த 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, நாடுமுழுவதும் புதிய திட்டங்களைச் செயல்படுத்த இரண்டரை லட்சம் கோடி நிதிஒதுக்கீடு, நிலம் இல்லாத ரூ.5 லட்சம் விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம்கடன் உதவி, கிராமங்களில் மின் வசதியை மேம்படுத்த ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 4 சதவிகித வட்டியில் கடன் வசதிநீடிப்பு, ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ.33 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு, சென்னை மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவம் மற்றும் காச நோய்சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும்

121) ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு ஒரு சல்யூட்… போர் நினைவிடங்கள் கட்ட ரூ 100 கோடி ஒதுக்கீடு!

122) விவசாயிகளுக்கென 24 மணி நேர தனி தொலைக்காட்சி ‘கிஸான்’!

123) நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

124) தூத்துக்குடியில் வெளிப்புறத் துறைமுகம் 11000 கோடி ஒதுக்கீடு

125) வீட்டுக் கடன் வாங்கியோருக்கு ரூ. 2 லட்சம் வரை வரி விலக்கு!

126) வரி குறைப்பு: எல்சிடி, எல்இடி, கலர் டி.வி., பிரிட்ஜ், டெஸ்க்டாப், மடிக்கணினிகள், டேப்லட் கணினிகள், சோப்பு, ரூ.500 முதல் ரூ.1,000வரை, ஆர்ஓ அடிப்படையிலான தண்ணீர் சுத்திகரிக்கும் சாதனங்கள்,
எல்இடி விளக்குகள், மின்விளக்குகள்,விளையாட்டுக் கையுறைகள்,தீப்பெட்டி,
டிடிடி பூச்சிமருந்துகள்,ஹெச்ஐவி/ எய்ட்ஸ் மருந்துகள் மற்றும் நோய் கண்டறியும் சாதனங்கள் விலை குறைந்தது

127) நாட்டில் உள்ள கிராமங்களில் குளிர்பதன கிட்டங்கிகள் அமைக்க மத்திய பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

128) தேசிய வீட்டு வசதி திட்டத்துக்கு 8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

129) வருமான வரிச்சட்டத்தின் 80சி, 80சிசி, 80சிசிசி ஆகிய பிரிவுகளின்கீழான முதலீடுகளுக்கு வழங்கப்படும் வரி விலக்குச் சலுகை, தற்போதுள்ள ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

130) குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

131) வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டுவரும் உடைமைகளுக்கான வரிவிலக்குஉச்சவரம்பு ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரமாக உயர்த்தப்படும்.

132) ஹிமாசலப் பிரதேசம், பிகார், பஞ்சாப், ஒடிஸா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 5 ஐஐஎம்கள் தொடங்கப்படும்.

133) ஜம்மு, சத்தீஸ்கர், கோவா, ஆந்திரப்பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களில் 5 ஐஐடி கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

134) மத்திய அரசு அதிகாரிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் நரேந்திர மோடி அரசு அதிரடி உத்தரவு

135) பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு முதற்கட்டமாக அனைத்து கிராமங்களுக்கு ப்ராட்பாண்ட் இன்டர்ன்ட்வசதி ,அரசு துறை சேவைகள் இணையதள மையம் ,இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்பபயிற்சி

136) கைத்தறி நெசவாளர்களின் நேசவுகளை ஆன்லைனில் விற்க FLIPKART இணையதளத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

137) பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் தாங்கள்விரும்பும் ஊருக்கு பணியிட மாற்றம் பெறும் வகையில் விரைவில் அறிமுகப்படுத்தஉள்ளது

138) தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில், இரண்டு சபைகளிலும், 14 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

139) தமிழக விவசாயிகளின் நலன் என்றுமே காக்கப் படும் – இது மோதி சர்கார். .தமிழகம் முழுவதம் 49 ஏரிகளை சீரமைக்க 300 கோடி ஒதுக்கீடு

140) சுதந்திர தின உரையில் மோடி அவர்கல் இந்தியாவில் உள்ள அனைத்து பெண்கள்பள்ளிக்கும் கழிப்பறை கட்ட படும் என்று அறிவித்த மாதிரதிலயே பல கார்பரேட்நிறுவனங்கள் தாமாக முன்வந்து நிதியுதவி

141) பொருளாதாரநெருக்கடியால் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் மீண்டும்பள்ளியில் சேர்ந்து Ph.dவரை படிக்க மத்திய அரசு உதவி செய்யும் திட்டம்அறிமுகம்

142) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிஎதிர்ப்புப் போர்க் கப்பலான ஐஎன்எஸ் கமோர்த்தாவை மத்திய பாதுகாப்புத் துறைஅமைச்சர் அருண் ஜேட்லி இன்று முறைப்படி கடற்படைக்கு அர்ப்பணித்தார்.

143) முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மேற்பார்வை குழு அமைத்து 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தி விவசாயிகளின் துயர் துடைத்த பிரதமர் மோடி க்கும் ,தொடர்ந்து வலியுறுத்தி சாதித்து காட்டிய பொன் ராதா கிருஷ்ணன்

144) கன்னியாகுமரி -கிளியகாவிளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க 13.29 கோடி ஒதுக்கீடு செய்து பணிகை துவக்கிய பொன்.ராதாகிருஷ்ணன்

145) காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எண்ணிக்கை குறைந்துஉள்ளது

146) நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தது மோடி ஆட்சியில்பாதுகாப்பாக இருகிறோம் என்று 76%மக்கள் இந்தியா டுடே கருத்து கணிப்பில்தெரிவித்து உள்ளனர்

147) இந்திய எல்லையில் சோலார் தகடுகள்அமைத்து மின்சார உற்பத்தியை பெருக்கவும் வெளி அமைக்கவும் திட்டம் .இதன்மூலம் அதிக அளவு டீஸல் பயன்படுத்தப் படும் ராணுவத்துக்கு 1000 mw மின்சாரத்தை ஒரு யூனிட் 5.50 ரூபாய் என்ற வீதம் 25 ஆண்டுகளுக்கு வழங்கமுடிவு

148) மாவோயிஸ்ட் பகுதிகளில் வளர்ச்சி பணிகளை ஏற்படுத்துவதன் மூலம் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் படிபடியாக குறைப்பு

149) . 2019 ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பம்,தொலைதொடர்ப்பு வசதிகளை மேம்படுத்த ரூபாய் 69500 கோடி ஒதுக்கீடு

150) ஆர்.டி.வோ அலுவுலகங்களில் லஞ்சம் முத்திபோய்உள்ளதால் அந்ததிட்டத்தையே அறவே ஒழித்து அதற்க்கு இணையான மற்றஒரு திட்டத்தை செயல் படுத்தும்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கத்காரி முடிவு

151) மானியம் இ ல்லாமல் சமையல் எரிவாயு வாங்க வசதி…….!!!

முன்னாள் எம்.பி., இரா.செழியன் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

era_sezhiyan

சென்னை:

மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.செழியன் உடல் நலக்குறைவால் வேலூரில் செய்வாய்க்கிழமை இன்று காலமானார். அவருக்கு வயது 95.

மூத்த அரசியல்வாதி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர் எனப் பன்முகங்களைக் கொண்டவர் இரா.செழியன். திருவாரூரில் பிறந்த வர். ஜனநாயக உரிமைகளைப் பேணிக் காத்தவர். ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். மறைந்த அமைச்சர் நெடுஞ்செழியனின் தம்பி. சிறுகதைகள், நாடகங்கள் பல எழுதியுள்ளார்.

மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கத்தில் சேர்ந்து, திமுக., தொடங்கப்பட்டபோது, அண்ணாதுரையுடன் நெருக்கமாகப் பழகினார். 1962, 1967 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். 1977ஆம் ஆண்டு தி.மு.க-விலிருந்து விலகி, ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். 1978ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

1988ஆம் ஆண்டு ஜனதா கட்சி உடைந்து, ஜனதா தளம் தோன்றியது. வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளத்தில் செழியன் முக்கியப் பொறுப்பு வகித்தார். ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் லோக் தளம் உருவான போது, செழியன் அதில் துணைத் தலைவர் ஆனார். பின்னர் 2001ஆம் ஆண்டு அரசியலிலிருந்து விலகினார்.

இரா. செழியனின் மறைவு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தன் இரங்கல் செய்தியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு. இரா.செழியன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்தேன். ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக பணி செய்தவரை தேசம் இழந்தது. அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா நற்கதியடைய அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன். என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மூத்தத் தலைவரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் காலமான செய்தி அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தை அளித்துள்ளது. எளிமையும், பண்பாடும் நிறைந்தவர். இந்திய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய பணி குறிப்பாக அவசர நிலை காலத்தில் அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் துணிகரமாக அவர் ஆற்றிய உரை என்றென்றும் நினைவுகூரப்படும். அவரின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது” என்று கூறியுள்ளார்.

பாமக., நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல்:

இரா.செழியன் மறைவுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்,

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தலைசிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் வேலூரில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

திராவிய இயக்கத்தின் அறிவுச்சுரங்கங்களில் இரா. செழியன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். 4 முறை மக்களவை உறுப்பினராகவும், ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய செழியன் ஒவ்வொரு அவையிலும் தமது முத்திரையை பதித்தார். அண்ணாவின் அன்பைப் பெற்ற செழியன், திராவிட இயக்கத்தின் சீரழிவை உணர்ந்து கொண்டு 1977-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி ஜனதாக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். நான் போற்றும் தலைவரான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அன்புக்கு பாத்திரமான செழியன், 1988-ஆம் ஆண்டு வி.பி.சிங் அவர்கள் ஜனதா தளம் கட்சியை ஒருங்கிணைக்க உதவியாக இருந்தார். அரசியலில் தூய்மையை கடைபிடித்த செழியன், பொதுவாழ்வில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு, அதற்காக போராடினார்.

செழியன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான Parliament for The People (மக்களுக்காக நாடாளுமன்றம்) என்ற நூல் நிகழ்கால நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் படித்து, பின்பற்ற வேண்டிய வழிகாட்டி ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
– என்று கூறியுள்ளார்.

அணுசக்தி விநியோக நாடுகள் குழுமத்தில் இந்தியா உறுப்பினராவதில் கடும் சிக்கல்: சீனா

indian-national-flag759
national flag floating on the eve of republic day in capital on Thursday,photo/RAVI BATRA 25 JAN 2007

பீஜிங்:

என்எஸ்ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில் இந்தியா உறுப்பினராகும் பிரச்னை, மேலும் சிக்கலாகி உள்ளது என்று சீனா கூறியுள்ளது. அமெரிக்கா, சீனா உட்பட 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள, என்எஸ்ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தின் உறுப்பினராக இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு, தென் கொரியாவின் சியோலில் நடந்த, என்எஸ்ஜி., கூட்டத்தில், இந்தியாவின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இதற்கு அண்டை நாடான சீனா தடையாக இருந்தது. சீனாவின் துாண்டுதலில் பாகிஸ்தானும் இதற்கு விண்ணப்பித்திருந்தது.

‘இந்தியா போன்ற அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை குழுமத்தில் சேர்க்கக் கூடாது’ என சீனா வலியுறுத்தியது. அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக முடிவு செய்தால்தான் உறுப்பினராக முடியும் என்ற நிலையில், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவு இருந்தபோதும், சீனாவின் எதிர்ப்பால் இந்த அமைப்பில் உறுப்பினராகும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

என்எஸ்ஜி.,யின் கூட்டம், இந்த மாதத்தில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னில் நடக்க உள்ளது. இம்முறையாவது இந்தியா உறுப்பினராக வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் லி ஹூய்லாய், என்எஸ்ஜி, உறுப்பினர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை உறுப்பினராக சேர்க்கக் கூடாது என்ற விதி உள்ளது. அதை மாற்றி அமைக்கலாம் என, என்எஸ்ஜி.,யில் உள்ள அனைத்து நாடுகளும் முடிவு செய்தால், அதை ஏற்கத் தயாராக உள்ளோம். ஆனால், தற்போதைய சூழ்நிலை, இந்தியாவுக்கு எதிராக சிக்கலாகவே உள்ளது என்று கூறினார்.

பால்கொடுத்து மார்பில் இரட்டைப் பெண் குழந்தைகளை இறுக்கிக் கொன்ற தாய்!

murder

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, பால் கொடுத்தபடியே தன் மார்பில் இறுக்கி, இரட்டை பெண் குழந்தைகளைக் கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.

நாகர்கோயில் அருகே காற்றாடிதட்டுவிளை பகுதியில் பிறந்து 10 நாட்களே ஆன இரட்டைப் பெண் குழந்தைகள், ஒரே நேரத்தில் உயிரிழந்தன. இது குறித்து சந்தேகம் தெரிவித்து புகார் வந்ததால் வழக்குப் பதிவு செய்த போலீஸார், புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு நடத்த முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில், புதைக்கப்பட்ட அந்தக் குழந்தைகளின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன.

பின்னர் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மேற்கொண்ட உடற்கூறு ஆய்வில், குழந்தைகள் இயற்கையாக உயிரிழக்கவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், கழுத்தை நெரித்து அக்குழந்தைகள் கொல்லப்பட்டதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, குழந்தைகளின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் விசாரணையில், தாயே அந்தக் குழந்தைகளைக் கொன்றது தெரியவந்தது. இரட்டைக் குழந்தைகளைக் கொன்ற குழந்தைகளின் தாய் திவ்யாவை போலீஸார் கைது செய்தனர். ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் அவர்களை, தாயே கொலை செய்துள்ளார் என்று போலீஸார் கூறினர்.

இந்தியா -பாக்., போட்டியும், உருவான சர்ச்சைகளும்!

cricketers-indian

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை இந்திய ரசிகர்கள் கொண்டாடினர். பாகிஸ்தான் ரசிகர்கள் அணியை திட்டித் தீர்த்தனர். பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தானில் பல இடங்களில் இந்தப் போட்டியைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. போட்டியைக் கண்டு கொண்டிருந்த ரசிகர்கள், பெரும் டென்ஷன் அடைந்தனர். அதுவும், பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததும் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அவர்கள், பல இடங்களில் டிவி.,க்களை அடித்து உடைத்தனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி, அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். டுவிட்டரில் தொடர்ச்சியாக கருத்துகளை பதிவிட்ட இம்ரான் கான், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை சரமாரியாக சாடினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் மாற்றம் கொண்டுவரவில்லை என்றால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான இடைவெளி மேலும் நீடிக்கும் என குறிப்பிட்டார். மேலும், தோல்வியும், வெற்றியும் விளையாட்டின் அங்கம் என ஒரு விளையாட்டு வீரரான எனக்கும் தெரியும். ஆனால் பாகிஸ்தான் எந்த ஒரு நெருக்கடியும் கொடுக்காமல் இந்தியாவால் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டு வருவது பெரும் வலியைத் தருகிறது என தெரிவித்துள்ளார்.

இந்தத் தோல்விக்குப் பின் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் குறித்து சரமாரியாக விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி. இது குறித்து கருத்து தெரிவித்த அப்ரிடி, ‘இந்தியா – பாகிஸ்தான் இடையில் ஒரு போட்டி நடக்கிறது என்றால், நம்மை அறியாமல் ஒரு ஆர்வம் தொற்றிக் கொள்ளும். ஆனால் எதிர்பார்ப்புகளைத் தகர்த்தெறிவது போல்தான் போட்டி அமைந்தது. ஒரு பாகிஸ்தான் ஆதரவாளராக இந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இந்தியா முதலிலிருந்தே போட்டியை வெல்வது போல்தான் ஆடியது. கடைசி வரையிலும் அதை அப்படியே தக்கவைத்துக் கொண்டது. என்று கூறியுள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தானுடன் ராணுவ உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் இப்படி ஒரு போட்டி தேவையா என்று கேள்வி எழுப்பினர் பலரும். இந்திய ராணுவம், இனி இந்திய கிரிக்கெட்டர்களுக்கு மரியாதை அளித்து, அவர்களின் உடையை அணிவித்து அழகு பார்க்கக் கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. இதனை ராணுவம் பரிசீலிக்கிறது என்று சிலர் டிவிட்டரில் கூறியிருந்தனர்.