Home Blog Page 5622

“ஒருநாள் நீ காத்திருப்பே பார்” (முறுக்குப்பாட்டியிடம் முறுக்கின பெரியவா)

7794a463b646f934fa03eda49e3650ba - 2026

“ஒருநாள் நீ காத்திருப்பே பார்”
(முறுக்குப்பாட்டியிடம் முறுக்கின பெரியவா)

((பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம்
சில நிகழ்ச்சிகள் சில நாட்கள் தொடரும்)

ஸ்வாரஸ்யமான பல உதாரணங்கள் கொடுத்து
பெரியவரின் வரலாற்று சம்பவங்களை எழுதுகிறார்
‘இந்திரா சௌந்தர்ராஜன்’.

புத்தகம்–மகா பெரியவர்-16 & 17 (ஒரு பகுதி சுருக்கம்)
கட்டுரையாளர்-இந்திரா சௌந்தர்ராஜன்
(ஆசிரியர் அனுமதியுடன்)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

(பால்ய பிராயத்தில் நடந்த ஒரு சம்பவம்)

பெரியவர் திண்டிவனத்தில் பள்ளி மாணவனாக இருந்த
தருணத்தில் அவர் வசித்த தெருவில் ஒரு பாட்டி முறுக்கு
செய்து விற்று வந்தாள். பாட்டியின் வயிற்றுப்பாடே அதில்
தான் இருந்தது.பாட்டியின் கைப்பக்குவம் அலாதியானது.
பெரியவர் அப்போது அப்பாவிடம் முறுக்கு சாப்பிட
‘அரையணா’ பெற்றுச் சென்று அதில் முறுக்கு வாங்கிச்
சாப்பிடுவதோடு, தன் நண்பர்களையும் வாங்கச் சொல்லி
ஊக்கப்படுத்துவார்.இதனால் பாட்டிக்கு வியாபாரம் நன்கு
நடந்தது.

ஒருநாள் பெரியவர் பாட்டியிடம் பெருமையாக
தன்னால்தான் பாட்டிக்கு நல்ல வியாபாரம் என்று கூற
பாட்டியும் ஒப்புக்கொண்டு சிரித்தாள்.

அப்படியே, “என் கைப்பக்குவமும் எல்லாரும் வாங்கிச்
சாப்பிட காரணம்” என்றாள்.

“அப்ப நான் காரணம் இல்லையா?” என்று கேட்கவும் பாட்டி,
“நீயும் ஒரு காரணம்.இப்ப அதுக்கு என்னடா வந்தது?”
என்று கேட்டாள்.

“அதுக்கென்ன வந்ததா? ஒரு தடவையாவது ஒரு
முறுக்கையாவது நீ எனக்கு சும்மா தந்துருக்கியா?” என்று
பெரியவர் கேட்கவும் பாட்டிக்கு கோபம் வந்துவிட்டது.

“நான் அப்படி எல்லாம் தரமாட்டேன்.இஷ்டமிருந்தா வாங்கு.
இல்லாவிட்டால் வாங்காதே” என்று பாட்டி கூற பெரியவரும்
சளைக்காமல்,”அப்புறம் நான் நிஜமாலுமே வாங்க மாட்டேன்
தெரிஞ்சுக்கோ” என்றார்.

“சரிதான் போடா…நீ வாங்கலேன்னுதான் நான் அழறேனாக்கும்”
என்றாள் பாட்டியும்.

“பாட்டி யோசித்து பேசு..”

“இதுல யோசிக்க என்ன இருக்கு? நீ பெரிய கலெக்டரு பாரு..”

“அப்ப கலெக்டரா இருந்தாதான் மதிப்பியா?”

“நான் கலெக்டரையே கூட என்னை மதிச்சாண்டா மதிப்பேன்.”

“சரி..இனி நான் உன் கடைல முறுக்கு வாங்கவே மாட்டேன்”

“ரொம்ப முறுக்கிக்காதே…நீ வரணும்னு நான் ஒண்ணும் இங்க
பூர்ண கும்பத்தோட காத்திருக்கல..” பாட்டி அப்படி சொல்லவும்
பெரியவருக்குள் ஒரு இனம் தெரியாத வேகம்…

“ஒருநாள் காத்திருப்பே பார்..” என்றவராக விடை பெற்றார்.

பாட்டியும் அதை அன்று விளையாட்டாகத்தான் எடுத்துக்
கொண்டாள்.

காலம் சில வருடங்களிலேயே பாட்டியை பூர்ணகும்பம்
எடுக்க வைத்துவிட்டது. ஒரு மடாதிபதியாக காசியாத்திரை
எல்லாம் முடிந்து கும்பகோணம் நோக்கி பெரியவர் திரும்பிய
சமயம் திண்டிவனம் குறுக்கிட்டது.

தான் ஓடியாடித் திரிந்த ஊர்…பள்ளிப் பிராயத்தில் எவ்வளவோ
நண்பர்கள்! ஆசிரியர்கள்! எல்லோரும் பெரியவர் பல்லக்கில்
அமர்ந்து வருவதைப் பார்த்தபடி இருக்க பெரியவாளுக்குள்ளும்
அந்த நாள் ஞாபகங்கள்.

பல்லக்கை விட்டு இறங்கி நடந்தே வந்தவராய் நண்பர்களை
எல்லாம் சந்தித்தார். எல்லாருடைய பெயரையும் ஞாபகம்
வைத்திருந்து சொல்லி அழைத்தார்.

பெரியவர் படித்தது ஒரு கிறிஸ்தவப் பள்ளியில்.. அதன்
ஆசிரியர்கள் சிலர் பாதிரியார்கள். அவர்களும் பெரியவரை
காண வந்தனர். அவர்களுக்கெல்லாம் தங்களிடம் பயின்ற
மாணவன் ‘ஜெகத்குரு’வாக திகழ்கிறான் என்பதில் பெருமை.

அப்படியே தான் வசித்த தெருப்பக்கமும் பெரியவர் சென்றார்.

தெருவே விழாக்கோலம் பூண்டிருந்தது.வாசலில் கோலம்
போட்டு எல்லோரும் பயபக்தியுடன் காத்திருந்தனர்.-இதில்
தாய்,தந்தை, சகோதரர்க்கு மட்டும் இடமில்லை.சன்யாச
தர்மப்படி சன்யாசிகிவிட்ட நிலையிலேயே குடும்ப உறவுகள்
நீங்கி விடுகின்றன. உறவோடு இருந்தவர்களுக்கும் ஜெகத்
குருவாகி விடுகிறார்அவர்களும் குரு என்றே சொல்ல வேண்டும்.

அப்போது பாட்டி வீட்டை கடந்த போது அப்படியே வாசலில்
நின்று உள்ளே பார்வையை விட்டு, “பாட்டி எங்கே?” என்று
கேட்டார். பாட்டியை அழைக்க சிலர் உள்ளே சென்றனர்.

பாட்டியோ பூர்ணகும்பம் சகிதம், தயக்கத்தோடு உள்ளேயே
முடங்கியிருந்தாள். காரணம்?

அன்று பேசிய பேச்சு..அன்று “ஒருநாள் நீ காத்திருப்பே பார்”
என்று பெரியவர் சொன்னதும் பலித்துவிட்டது.

பூர்ணகும்பத்துடன் பாட்டி தயங்கித் தயங்கி வெளியே வந்தாள்.
பெரியவரை நேருக்குநேர் பார்க்க அவளுக்கு கூச்சமாக இருந்தது

பெரியவரிடமோ புன்னகை.,பூர்ணகும்பத்தை வாங்கிக்கொண்டே
“பாட்டி சவுக்கியமா இருக்கியா?” என்று பழசைக் கிளராமல்
கேட்கவும், பாட்டி, “சர்வேஸ்வரா” என்று காலில் விழுந்தாள்.

அதன்பின் பாட்டிக்கு விசேஷமான ஆசிகளை வழங்கியதோடு
“பாட்டி முறுக்குன்னா எனக்கு உசுரு.பாட்டி கைப்பக்குவம்
யாருக்கும் வராது” என்று பாராட்டி மகிழ்ந்தார்.

GSAT-19 Mission is scheduled to be launched on June 05

0

1 5thefullyintegratedgslv mkiii d1carryinggsat 19atthesecondlaunchpad frontview - 2026

Mission Readiness Review (MRR) committee and Launch Authorisation Board (LAB) have cleared the 25 and half hr countdown of GSLV MkIII D1 / GSAT-19 mission for Sunday, June 04,2017 starting at 15:58 hr IST

And launch of GSLV MkIII D1 /  GSAT-19 mission for Monday, June 05, 2017 at 17:28 ht IST

GSAT-19 satellite with a lift-off mass of 3136 kg, is the communication satellite of India, configured around the ISRO’s standard I-3K bus.

GSAT-19 carries Ka/Ku-band high throughput communication transponders. Besides, it carries a Geostationary Radiation Spectrometer (GRASP) payload to monitor and study the nature of charged particles and the influence of space radiation on satellites and their electronic components. GSAT-19 also features certain advanced spacecraft technologies including miniaturised heat pipe, fibre optic gyro, Micro Electro-Mechanical Systems (MEMS) accelerometer, Ku-band TTC transponder, as well an indigenous Lithium-ion Battery.

GSLV Mk III-D1/GSAT-19 Mission is scheduled to be launched on June 05, 2017 at 17:28 Hrs (IST) from the Second Launch Pad at SDSC SHAR, Sriharikota

Type of Satellite:
Communication

ஜிஎஸ்டி., குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்; இனி கள்ளக் கணக்குதான்: மிரட்டும் கமல் ஹாசன்

kamalhasan - 2026

சென்னை:
ஜிஎஸ்டி., வரியைக் குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்; இனி முறையான கணக்கு சமர்ப்பிக்க வழி இல்லாத நிலை உருவாகும் (கள்ளக் கணக்குதான்) என்று நடிகர் கமல் ஹாசன் மிரட்டியுள்ளார்.

28 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ள சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை 12 முதல் 18 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சென்னை திரைப்பட வர்த்தக சபையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது…

ஹாலிவுட் சினிமாவுக்கு இணையாக இந்திய சினிமாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வந்திருப்பது சரியதல்ல. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், இந்தியப் படங்களையும் ஒரே அடிப்படையில் வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? அதேபோல் இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்தி பேசும் மக்களுக்காக எடுக்கும் இந்திப் படங்களுக்கும், தமிழ்ப் படங்களுக்கும் ஒரே வரி என்பது எந்த விதத்தில் நியாயம்?

ஒரு பிராந்திய மொழியின் வீச்சு மற்றும் பலம் என்பது அதன் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது. ஆனால், உலகளாவிய ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஹாலிவுட் படங்களுக்கும் இந்திய அளவில் ரசிக்கப்படும் இந்திப் படங்களுக்கும் ஒரே அளவில் வரி என்பது சரியல்ல. பிராந்திய மொழி பேசும் மக்கள் உலகில் வேறு எந்த பகுதியில் வசித்தாலும், அவர்களது எண்ணிக்கை மிகக் குறைவானதுதான். அவர்களால் திரைப்பட டிக்கெட்டுகளுக்கான விலை அதிகரிப்பை சமாளிக்க இயலாது. ஆனால் உலக அளவில் விருதுகளைப் பெற்று பெருமை சேர்ப்பது பிராந்திய மொழி படங்கள்தான். இவ்வாறான சிரமங்களை சிறிய படங்களால் எதிர்கொள்ள முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசுடன் உரையாடல் நடைபெற்று வருகிறது. யாரால் எது சாத்தியம் என்பதை அரசு தெரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். சினிமாவை தனியாகப் பிரித்து பார்க்க வேண்டாம். இந்த வரி அதிகரிப்பால் முறையான கணக்கை சமர்ப்பிக்கவும் வழியில்லாத நிலை உருவாகும்.

சினிமாவை சூதாட்டமாகக் கருத வேண்டாம். கலையாகப் பார்க்க வேண்டும். என் மழலை மொழி மாறியதே இந்த சினிமாவில்தான். இதுதான் என் வாழ்க்கை. நாம் தொழில் செய்ய வேண்டும். சினிமா துறை மீதான இந்த ஜிஎஸ்டி வரியை குறைக்கா விட்டால் சினிமாவை விட்டு நானும் வெளியேற வேண்டியதுதான். ஆகவே, அரசு இதை புரிந்துகொண்டு எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று மறுபரிசீலனை செய்ய வேண்டும்… என்று பேசினார்.

ஜிஎஸ்டி வரி அதிகரிப்பால் முறையான கணக்கை சமர்ப்பிக்க வழியில்லாத நிலை உருவாகும் என்று அவர் பேசியதும், நான் சினிமாவை விட்டே விலகுவேன் என்று கூறியதும் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.

பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு பலத்த வரவேற்பு

modi in france - 2026

பாரீஸ்:

அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து தனது நன்றியை அவர் டிவிட்டரில் தெரிவித்துக் கொண்டார். பின் பாரீஸ் நகரில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் பயணமாக ஜெர்மனி, ரஷியா, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா பயணத்தை முடித்து நேற்றிரவு புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு பிரான்சு புறப்பட்ட மோடி, அவரது டுவிட்டர் பக்கத்தில் ரஷ்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் பல திட்டங்கள் மற்றும் பயனுள்ள கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். இது இந்தியா – ரஷியா நட்புக்கு உறுதுணையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் புதிதாகப் பொறுப்பேற்றுள்ளார். அவரை இன்று சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே பல துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. பாதுகாப்பு, அணுஆயுதம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நகர்ப்புற வளர்ச்சி, ரயில்வே உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியாவில் முதலீடு செய்துள்ள பிரான்ஸ், இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளில் 9-வது இடத்தில் உள்ளது.

பிரான்ஸ் பயணம் குறித்து, இந்தியாவுடனான முக்கிய நட்பு நாடான பிரான்சுடனான உறவை மேம்படுத்துவதற்காக வந்துள்ளேன் என தனது டிவிட்டர் பதிவில் மோடி தெரிவித்தார்.

கனடா நாட்டில் தமிழில் ஒலிக்கும் தேசியகீதம்

Canada national anthem In Tamil - 2026

கனடா நாட்டின் 150 வது சுதந்திர தினம் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ் மொழி உள்ளிட்ட 12 மொழிகளில் கனடாவின் தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்த கனடா தேசிய கீதம், தற்போது நாடு தழுவிய நிலையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மற்றும் பேசப்படும் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் , அரபி, அமெரிக்க சைகை மொழி, கிரேக்கம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜேர்மன், இத்தாலியன், சீன மான்டரின், பஞ்சாபி, ஸ்பானிஷ், டாகாலோக் ஆகிய 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது.

கனடா நாட்டின் தேசியகீதத்தை தமிழ் மொழியாக்கம் செய்தவர் கவிஞர் கந்தவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

[su_youtube url=”https://youtu.be/1Ws7b5F1W-Q” autoplay=”yes”]

தமிழக அரசு நெல் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் -விஜயகாந்த் அறிக்கை

result 1487093151605 - 2026

தமிழக அரசு நெல் உற்பத்தியில் கவனம்செலுத்தாதது குறித்து
தேசிய முற்போக்கு திராவிட கழக
தலைவர் விஜயகாந்த்
அறிக்கை
நெல் உற்பத்தியில் நடப்பு நடப்பாண்டில் தமிழ்நாடு 85 % சதவீதம் வீழ்ச்சி
அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் 8 லட்சத்து 83 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி
செய்யப்பட்டது. கடந்த ஆண்டைவிட, நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக்
டன்னாக குறைந்துள்ளது. ஏறக்குறைய நெல் உற்பத்தியில் சுமார் 85% சதவீதம்
வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் நெல் அதிகமாக உற்பத்தி செய்யும் டெல்டா
பகுதிகளில், இந்த ஆண்டு கடும் வறட்சியை சந்தித்ததன் விளைவாகவும், தமிழகம்
முழுவதும் எங்கும் தூர்வாராத நிலையும், காவிரியில் இருந்து உரிய தண்ணீர்
பெற்றுத்தராத நிலையும், அதேபோல் தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்யும்
நிலையும் அதிகரித்துள்ளதை நாம் பார்க்கமுடிகிறது. இதன்விளைவாக ஒட்டுமொத்தமாக
85% சதவீதம் நெல் உற்பத்தி குறைந்துள்ளதை, மிகப்பெரிய அபாயகரமான எச்சரிக்கையாக
நாம் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. உணவு உற்பத்தியில் முதல் இடத்தில் இருந்த
தமிழகம், இன்றைக்கு இந்தியாவிலேயே கடைசி இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
ஆளும் கட்சியை குறைகூறினால் “குப்புற விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டல என்ற
பழமொழிக்கு ஏற்ப வாய்ஜாலம் பேசாமல் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு, நெல்
உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு முயற்ச்சி மேற்கொள்ள வேண்டும்.

மேட்டூர் டேம் உட்பட பல இடங்களில், பல ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுவதாக
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். மேட்டூர் டேமில் 83
ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுதுதான் தூர்வாரப்படுகிறது. எத்தனையோ முறை தேமுதிக
சார்பாக தூர்வரப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இப்பொழுது தூர்வாரப்படும்
மண் 83 ஆண்டுகளுக்கு பிறகு அள்ளப்படுவதால் மிகவும் வளம்மிக்க மண்ணாக
இருக்கும். எடப்பாடி அவர்கள் விவசாயிகளுக்கு இலவசமாக தூர்வாரப்படும் மண்ணை
வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் தூர்வாரப்படும் மண் முறைகேடாக,
ஆளும் கட்சி தன் அதிகாரத்தை பயன்படுத்தி, செங்கல் சூளை
வைத்திருப்பவர்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் மட்டுமே லஞ்சத்தை
வாங்கிக்கொண்டு வழங்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணமாக உள்ளது. ஏற்கனவே
தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை, செம்மரக்கட்டை கொள்ளை, கிரானைட்
கொள்ளை என்று அனைத்து இயற்கை வளங்களையும் பல ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகள்
அழித்து விட்டனர். இப்பொழுது புதிதாக தூர்வாரப்படும் மண்ணும்
கொள்ளையடிக்கப்படுகிறது என்ற செய்தி, பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும்
தருகிறது. எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சொல்வது ஒன்றும், செய்வது
ஒன்றுமாக, இரட்டை நிலைப்பாடுடன் இந்த ஆட்சியை செயல்படுத்துகிறார். எனவே
உடனடியாக கொள்ளையடிக்கும் செயல்களை நிறுத்தி, விவசாயிகளுக்கு பயனளிக்கும்
வண்ணம், தூர்வாரப்படும் மண்ணை பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால்
வெளிப்படையாக ஏலம் விட்டு, அதன் வருவாயை அரசுடமையாக்கப்படவேண்டும் என
கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்

Pooja Kumar has a tailor-made role in ‘PSV Garuda Vega’

pooja kumar - 2026

‘PSV Garuda Vega’, the Praveen Sattaru-directed entertainer, has got well-written characters at its forte.  If George (played by Kishore) is a menacing villain, this big-budgeted movie has more such author-backed roles.

 One such character is that of Swathi, played by the super-choosy Pooja Kumar.  The versatile actress, who comes with a theatre background and a Hollywood stint, is playing a working mother of a 6-year-old child in this film.  The director has it that she has nailed it with her realistic performance.
 While the ‘Vishwaroopam’ and ‘Uttama Villain’ actress has been flooded with several films in recent past, she has always waited for well-written and unique roles.  When she was given a narration by Praveen Sattaru, she knew it’s a kind of role and film she should do.
“It’s a tailor-made character for the talented actress,” the makers aver.
Well, one can’t wait to watch Pooja in this Dr. Rajasekhar-starrer, which is being made at a huge budge

35 வயது நடிகையை மணந்த 60 வயது திரைப்பட இயக்குனர்

velu prabakaran shelli doss marriage - 2026

சென்னை:

60 வயது நிறைந்த திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன், 35 வயது நடிகை ஷெர்லி தாஸை இன்று திருமணம் செய்து கொண்டார்.

இயக்குனர் வேலு பிரபாகரன் – நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் இன்று (3 ஜூன்) காலை 10.25 மணியளவில் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் இனிதே நடைபெற்றது.

நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கிய ஒரு இயக்குனரின் காதல் டைரி திரைப்படம் நேற்று வெளியானது குறிப்படத்தக்கது.

மணமகள் – நடிகை ஷெர்லி தாஸ் வேலு பிரபாகரன் இயக்கிய வேலு பிரபாகரனின் காதல் கதை படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

மன்மதனை உயிர்ப்பித்த மகேசன் தோற்றம்!

dakshinamurthi - 2026

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கோபுரத்தைக் கடக்கும் போதெல்லாம் விரும்பி ஒரு கணமேனும் பார்த்து ரசித்து, மனத்தில் தியானிக்கும் சிற்பம் இது.

கபாலீஸ்வரர் கோவில் கோபுரத்தின் பக்கவாட்டுப் பகுதியில் இந்தச் சிற்பத்தைக் காணலாம்.

தட்சிணாமூர்த்தி வழிபாடு என்ற புத்தகத்தை அடியேன் எழுதியபோது, பல தலங்களில் உள்ள வித்தியாசமான தட்சிணாமூர்த்தி திருவுருவங்களை புகைப்படம் எடுத்து நூலில் பதிவு செய்தேன். அப்படி அந்த நூலுக்காக அடியேன் எடுத்த புகைப்படம் இது.

இதன் சிறப்பு – முனிவர்கள் புடைசூழ கல்லால மரத்தினடியில் சிவபெருமான் தியானத்தில் இருக்கிறார். கால் மீது கால் போட்டு ஆசனத்தின் இருந்தபடி இரு கைகளை ஒரு கால் முட்டியில் வைத்து நோக்கியபடி…

மன்மதன் சிவனாரின் தவம் கலைக்க மலர்க்கணை தொடுத்தான். இரு கண் விழித்துப் பார்த்த சிவனாருக்கு தனது முக்கண் நினைவு வந்தது. மூன்றாம் கண்ணைத் திறக்க, பெருநெருப்பு சூழ்ந்து மன்மதனைத் தகித்தது. தாபத்தால் மற்றோரைத் தகிக்கச் செய்யும் மன்மதனை கோபத்தால் தகிக்கச் செய்தாரே ஈசன்! கணவன் கண் முன் மாய்வது கண்டு மடிப்பிச்சை ஏந்தி நின்றாள் ரதிதேவி! உலக இயக்கத்துக்கு மன்மதனும் ரதியும் முக்கியமாயிற்றே! மன்மதனை எரித்தால் உலக இயக்கச் சுழற்சி என்னாவது?

இந்தக்காட்சியை தத்ரூபமாகக் காட்டும், இந்தச் சிற்பத் தொகுப்பு!
பின்னர் ரதியின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து, அவன் உருவத்தை இழந்தாலும் அரூபமாக ரதியுடன் உயிர்வாழ வழிசெய்தாராம்….

என்ன செய்வது…?

அரூபமாக இருந்து அவ்வப்போது
மலர்க்கணை தொடுக்கிறாயே மன்மதா!
உருவம் தலைக்காட்டி எதிர்நின்றாய் என்றால்
உனை எரிக்க முக்கண்ணன் துணை நாடி
நிற்போம் என்று எண்ணினாயா..?
நிச்சயம் மாட்டோம்!

நாச்சியார் திருமொழியில்
“தையொரு திங்களும் தரை விலக்கி”
அனங்கதேவனைத் துணைக்கழைத்த
ஆண்டாளம்மையை நாடி யாம் நிற்போம்!
எனவே உருக்காட்டி உடன் நிற்பாய்!
ரதியையும் யாம் கண்டதில்லையே!

கருணாநிதி வயிர விழா வாழ்த்து

முத்தமிழ் வித்தவராம்
முத்தத் தமிழ் வித்தகராம்
சத்தமிட்டே வெறி சாதியம் வளர்த்தவராம்
மூத்த மூளைகளை பேதலிக்க விட்டவராம்

ஒத்தை வேளை மட்டும் உண்ணா நோன்பிருந்து
ஒத்தை இனத்தையே ஒழித்தழித்து விட்டவராம்
செத்த வீடாயினும் சேர்மங்கல வீடாயினும்
அத்தனையிலும் தனக்கே அதிபராசனம் வேண்டியவராம்

தனக்கு ஏதும் நடந்தால்தான் தன் மகனே
எனக்குப் பின் முதல்வரென பதவிப் பித்து பிடித்தவராம்
திருட்டுத் தனத்தை திராவிடம் எனச் சொல்லி
பசப்பு வார்த்தைகளால் பண்பு நாட்டைச் சிதைத்தவராம்

இட்ட தமிழ் வடிவை எமக்கு இக்கட்டில் தந்துவிட்டு
கெட்ட தமிழைக் கைக்கொண்ட கெட்டிக்காரக் கெழுதகையே!
அத்தனை இழப்புகளுக்கும் சாட்சியாய் அமைந்தும்
அக்கறை காட்டுவதாய்க் காட்டவே பிறந்த

எங்கள் குவளை மலரே குதூகலக் குவியலே …

தொகுத்தளித்த தமிழனையும் தொல்காப்பியனையும்
வகுத்தளித்த வள்ளுவனையும் வள்ளலார் கூட்டத்தையும்
சகுனித்தனமாய்ச் சாடிநின்று சாதியக்கட்டுக்குள் திணித்த
தகுதிக்கு வாராத நடிப்புத் தமிழனே பகுத்தறிவுப் பகலவனே !

உடன்பிறப்புக் கடிதமென கடனாற்ற அழைத்துவிட்டு
மடல் வரைந்தே மக்களைநல் மடையராக்கி விட்டுவிட்டு
மடத்தில் உண்டியல் நிரம்பியதும் அடிமைகளை மறந்துவிட்ட
அறிவாலய மடத்தின் சந்ததி வளர்த்த சங்கட அதிபதியே !

தமிழ்தமிழென்று தட்டிவிழுந்தும் தட்டாமாலை சுற்றிவந்தும்
தமிழ்நாள் மறந்து ஆங்கிலநாளைப் பிடித்துக் கொண்ட
வந்தேறித் தெலுங்கரே வசதியாய்க் கொண்டாட
வந்துவிட்டதும் பிறந்த நாளின்று… வாழ்த்துகிறோம்!

தொன்னூற்று நான்கெல்லாமொரு வயதாஐய
நீவிர் 120 ஆண்டெனும் முழு வட்ட வாழ்வை வாழ்ந்தெம்
முக வாட்டம் போக்கவேணும்
மு.க. வாட்டம் சந்ததியை வாழ வைக்க
முக மூளை காட்ட வேணும்
முகமே மூளை ஆக வேணும்!

வைர விழாவென வகையாய்ச் சொல்லியொரு சாதியை
வைகிற விழாவென வசதியாய் மாற்றிக் கொண்டுவிட்ட
வைரத்தின் வைரமே தங்கமே பித்தளையே பிளாட்டினமே
வாழ்க நீவிர் வளத்தோடு! வளர்க நீவிர் நலத்தோடு!