Home Blog Page 5623

இந்து என்று ஆங்கிலேயன் அழைத்தது ஏன்?

8 write down8 - 2026

இந்து என்ற பெயரே வெளிநாட்டினர் கொடுக்கப்பட்டதுதானே என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. நிச்சயமாக வெளிநாட்டினரால் கொடுக்கப்பட்டது. ஆனால் ஏன் ஒரே பெயரைக் கொடுத்தார்கள்? அவர்கள் இந்து மக்களின் மதப் பழக்க வழக்கங்களில் வித்தியாசம் கண்டிருந்தால் வேறு பெயர் கொடுத்திருப்பார்களே? புத்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் ஜைனர்களுக்கும் வேறு பெயர்கள் ஏன் வந்தன?
ஒரு மதத்தின் பெயர் எப்படி வந்தது என்பது முக்கியமல்ல. இன்றைய இந்தியாவில் இந்துக்கள் என்று அழைக்கப்படுகிறவர்களில் மிகச் சிலரைத் தவிர மற்ற அனைவரும் தங்களை இந்துக்களாகவே கருதிக் கொள்கிறார்கள்.

இன்னொரு எளிய உதாரணம் கூறுகிறேன். தலித் என்ற பெயர் எப்போது வந்தது? ஒரு அம்பது வருடங்களுக்குள்ளாகத்தானே? அதற்கு முன்பு அவர்கள் அரிசனம் என்று அடையாளப்படுத்தப் பட்டார்கள். அதற்கும் முன்னால் சாதிகளின் பெயர்களினால்தானே அடையாளப்படுத்தப் பட்டார்கள்? இன்று கூட அவ்வாறுதானே பல கிராமங்களில் அடையாளப் படுத்தப் படுகிறார்கள்?

இதனால் தலித் என்று ஒரு அடையாளமே இல்லை என்று சொல்லிவிட முடியுமா?

அதே போல் இந்துக்களுக்குள் வித்தியாசங்கள் இருந்தாலும் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் அவர்களை இந்துக்களாகத்தான் பார்ப்பார்கள். முஸ்லிம்களின் ஷியா, ஸுன்னி வித்தியாசம் வெளியில் உள்ளவ்ர்களுக்குத் தெரியாதது போலவும், கத்தோலிக், பிராடஸ்டன்ட் பெந்தகோஸ்து, ஜெஹோவா சாட்சியாளர் போன்ற கிறிஸ்தவ வித்தியாசங்கள் பலருக்குத் தெரியாதது போலவும் தான் இதுவும்.

– Ananthakrishnan Pakshirajan

“ஆதிசங்கரர் வகுத்துத் தந்த ஷண்மதக்கோட்பாடு பெரியவரின் குடும்பத்தில் தற்செயலாகவே அமைந்து விட்டதை பெயர்கள் புலப்படுத்தும்!”

10482143 599228513527816 46027082804070919 n - 2026

“ஆதிசங்கரர் வகுத்துத் தந்த ஷண்மதக்கோட்பாடு
பெரியவரின் குடும்பத்தில் தற்செயலாகவே
அமைந்து விட்டதை பெயர்கள் புலப்படுத்தும்!”
(பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம்
சில நாட்கள் தொடரும்)

(இது தற்செயலாக அமைந்த அதிசய ஒற்றுமையாகும்)

ஸ்வாரஸ்யமான பல உதாரணங்கள் கொடுத்து
பெரியவரின் வரலாற்று சம்பவங்களை எழுதுகிறார்
‘இந்திரா சௌந்தர்ராஜன்’.

புத்தகம்–மகா பெரியவர்-2
கட்டுரையாளர்-இந்திரா சௌந்தர்ராஜன்
(ஆசிரியர் அனுமதியுடன்)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்,

பதிமூன்று வயதில் துறவு மேற்கொண்டதில் இருந்து
87 ஆண்டுகால சன்யாச வாழ்வை வாழ்ந்த அந்த மகான்
இந்த பாரதபூமியில் செல்லாத இடம் இல்லை. அவர் கால்
படாத மாநிலம் என்று ஒன்றைக்கூடச் சொல்ல முடியாது.

ஆதிசங்கரரின் அடியொற்றி அத்வைதக் கருத்துகளோடு
அவர் மேற்கொண்ட யாத்திரைகள்..அதில் அவருக்கு கிடைத்த
அனுபவங்கள்..அப்போதெல்லாம் அவர் ஆற்றிய பேருரைகள்..

அதில் நாம் தெரிந்து தெளிய மின்னிடும் கருத்துக்கள்
என்று அவர் வாழ்வே ஒரு இறைகொடை.

அவர் ‘இறைவன் ஒருவனே’ என்கிற கருத்தை வழிமொழிந்த
ஓர் அத்வைதியாக இருக்கலாம். ஆனால் அந்த ஒருவன்தான்
நாம் உண்ர பலவாக இருக்கின்றான் என்பதை அவர்
நமக்கெல்லாம் உணர்த்திய விதம் அற்புதமானது.

பெரியவரின் பின்புலம் இந்து மரபாக இருக்கலாம். ஆனால்
அவரை மதம் கடந்து மற்ற மதத்தவர்களும் நேசித்தார்கள்.
கடவுள் இல்லை என்னும் நாத்திகர்கள் கூட பெரியவரின்
தவத்தையும் அவர் கருணையையும் கண்டு வியந்தார்கள்.

இந்த தொடர் அவர் பிறப்பில் இருந்தே ஆரம்பமாகிறது.
அப்போதுதான் அவரது தெய்வீகச் சிறப்பை பாமரர்களாலும்
புரிந்து கொள்ள முடியும்.

கடந்த நூற்றாண்டு மனிதரில் ஒரு மகாத்மா காந்தியை
நமக்குத் தந்தது.கவிஞர்களில் ஒரு பாரதி கிடைத்தார்.
அதுபோல ஓவியத்துக்கு ஒரு ரவிவர்மா,இசைக்கு ஒரு
எம்.எஸ்.சுப்புலட்சுமி,சமூக சேவைக்கு ஒரு தெரசா என்று
கடந்த நூற்றாண்டு பல மனிதர்களை நமக்கு தந்தது.

அது ஆன்மீகத்துக்கும் சன்யாசத்துக்கும் இலக்கணமாக
தந்தது பெரியவரைத்தான்.

பெரியவர் பிறந்த இடம் விழுப்புரம்.

விழுப்பங்கள் நிறைந்த புரம் என்பதே விழுப்புரம் என்பதாக
கூறுவர்.விழுப்பம் என்றால் உயர்வு,உன்னதம்,தூய்மை,
மேன்மை என்று பல பொருள் தரும் ஒரு சொல்லாகும்.
திருவள்ளுவர்கூட இச்சொல்லை பயன்படுத்தி குறள்
ஒன்றை படைத்துள்ளார்.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான்;ஒழுக்கம்
.உயிரினும் ஓம்பப்படும்”

என்கிறார் வள்ளுவர்.அவர் கூற்றுப்படி இங்கே விழுப்பம்
எனும் சொல்லுக்கு மேன்மை என்பது பொருளாகும். அந்த்
பொருள்படி பார்த்தால் விழுப்புரம் எனும் பெயர்
மேன்மைகளைத் தரும் இடம் என்றாகிறது

அது உண்மை என்பது போல நம் பெரியவரும் விழுப்புரத்தில்
பிறந்தார்.பெரியவரின் பெற்றோர் பெயர் சுப்ரமண்ய சாஸ்திரி
மகா லட்சுமி அம்மாள். 1894ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி
அனுஷ நட்சத்திரத்தில் பிரதமை திதியில் பிறந்த பெரியவர்
தன் பெற்றோருக்கு இரண்டாவது மகன்.

இவருக்கு முன் பிறந்தவர் பெயர் கணபதி. எனவே இவருக்கு
பெற்றோர் சுவாமிநாதன் என்ற பெயரை வைத்தனர்.
பெரியவருக்குப் பின்னர் ஒரு பெண்ணும்,அதற்குப் பின்னர்
3 ஆண் குழந்தைகளும் உண்டு.ஆக பெரியவரின்
பெற்றோருக்கு மொத்தம் 6 பிள்ளைகள்.

அவர்கள் பெயர்களை வரிசைப்படுத்தினால், அதில் ஓர்
அபூர்வ ஒற்றுமை தெரியும்.

முதலாமவர் பெயர் கணபதி

அடுத்து நம் பெரியவர் சுவாமிநாதன்

மூன்றாவதாக லலிதாம்பாள்

நான்காவதாக சாம்பமூர்த்தி.

ஐந்தாவதாக சதாசிவம்.

ஆறாவது கிருஷ்ணமூர்த்தி.

இந்தப் பெயர்களே நம் இந்த மரபில் ஆதிசங்கரர் வகுத்துத்
தந்த ஆறு விதமான வழிமுறைகளைக் கொண்டிருப்பது
புலன் ஆகும். ஒன்றாகிய இறைவனை இந்த ஆறு வழிகளில்
எந்த ஒன்றில் சென்றாலும் அடையலாம் என்பதே
ஆதிசங்கரர் வகுத்துத் தந்த ஷண்மதக்கோட்பாடு ஆகும்.

அந்த கோட்பாடு பெரியவரின் குடும்பத்தில் தற்செயலாகவே
அமைந்து விட்டதை பெயர்கள் புலப்படுத்தும்.

கணபதி–காணாபத்யம் என்னும் வழிமுறையையும்
சுவாமிநாதன்—கவுமாரம் எனும் வழிமுறையையும்
லலிதா–சாக்த வழிமுறையையும்
சாம்பமூர்த்தி–சௌரம் எனும் ஆரிய வழிபாட்டையும்
சதாசிவம்–சைவ நெறிமுறைகளையும்
கிருஷ்ணமூர்த்தி–வைணவ நெறிமுறைகளையும்
நமக்கு உணர்த்துகிறது.

இது தற்செயலாக அமைந்த அதிசய ஒற்றுமையாகும்.

ஐஐடி.,யை விட்டு வெளியேறுங்கள்: அரசியலில் ஈடுபடும் மாணவர்களுக்கு தில்லி ஐஐடி அலுமினி தலைவர் கடிதம்

IIT Madras PhD scholar who participated in beef fest beaten - 2026

சென்னை:
அரசியலில் ஈடுபடும் மாணவர்கள், ஐஐடி., வளாகத்தில் இருந்து வெளியேறி விடுங்கள், ஐஐடியின் தன்மையை கலைக்காதீர்கள் என்று தில்லி ஐஐடி அலுமினி தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

தில்லி ஐஐடி., அலுமினி அசோஷியேஷன் தலைவர் பிரபாத் குமார், எழுதியுள்ள கடிதத்தில், ஐஐடி வளாகத்தில் அரசியல் நடவடிக்கைகள் தவறானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது கடிதத்தில் குறிப்பிட்டவை:

அண்மைக்காலமாக சென்னை ஐஐடி.,யில் நிகழ்ந்து வருபவை கண்டனத்துக்குரியவை. நாட்டுக்கு உண்மையில் நல்லது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் விரும்பினால், அவர்கள் ஐஐடி வளாகத்தில் அரசியல் கருத்து ரீதியான திணிப்பு நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று, நாட்டின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் மாட்டிறைச்சித் திருவிழா நடத்தியிருப்பதும், அடுத்து மற்ற மாணவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கியிருப்பதும் தவறானது. மாணவர்கள் அரசியலில் ஈடுபட விரும்பினால், அவர்கள் ஐஐடி., வளாகத்தை விட்டு வெளியேறவேண்டும். ஐஐடியன்கள், தேசத்தின் சொத்து. அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி ரீதியாக எல்லைகளைக் கடந்து நாட்டுக்கு தொண்டாற்றவும், சமூகத்தில் இணக்கமும் அமைதியும் நிலவ பணியாற்ற வேண்டும்.
தில்லி ஐஐடி அலும்னி அசோஷியன் சார்பாக, ஐஐடியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள், நாலாந்தர கேடுகெட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், கனவுப் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்பதுதான்!
– என்று, கடிதம் எழுதியுள்ளார்.

iit delhi letter - 2026

முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்த விலங்குகள் நல சட்ட திருத்தத்தில், மாடுகளை சந்தைகளில் இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு விதித்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, சென்னை ஐஐடி.,யில் பயிலும் கம்யூனிச, இஸ்லாமிய மாணவர்கள் மாட்டுக்கறி விழா நடத்தினர். அதற்கு மறுநாள் ஜெயின் மாணவர்கள் உணவு உண்ணும் ஐஐடி., கேண்டீனில், அங்கே சென்ற சூரஜ் என்ற கேரள கம்யூனிஸ இயக்கத்தைச் சேர்ந்த மாணவர், மாட்டுக்கறியை நீங்களும் சாப்பிட வேண்டும் என்று மிரட்டி, ஜெயின் சமூக மாணவர் வாயில் திணிக்க முயன்றுள்ளார். அவருடன் சென்ற மேலும் இருவர் ஜெயின் சமூக மாணவர்களை மிரட்டியுள்ளனர்.

இதனால், அங்கே உணவருந்திக் கொண்டிருந்த மணிஷ் குமார் ஜெயின் என்ற மாணவருக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் சூரஜ் மற்றும் மணிஷ் குமார் ஜெயின் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மூவரால் கண்மூடித் தனமாகத் தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்து கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், மணீஷ் குமார் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

கைத் தகராறில் கீழே விழுந்த சூரஜ்க்கு அங்கிருந்த நாற்காலி பட்டு கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில், சூரஜ் மட்டுமே காயம் பட்டதாகவும், இந்து இயக்க பின்னணி கொண்ட மாணவர்கள் சூரஜ்ஜை தாக்கியுள்ளனர் என்றும் தமிழக, தேசிய ஊடகங்களில் செய்திகள் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கேரள முதல்வர், தமிழக முதல்வருக்கு டிவிட்டரில் கண்டனம் தெரிவித்தார். தமிழக எதிர்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சூரஜ்ஜை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இவற்றை எல்லாம் பார்த்த ஐஐடி சக மாணவர்கள், ஊடகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஐஐடியில் பாஜக., தலைவர் சுப்பிரமணிய சுவாமி சொன்னதுபோல், கம்யூனிஸ, இஸ்லாமிய பொறுக்கீஸ்களின் காட்டுமிராண்டித்தனம் அதிகரித்து விட்டதாகவும் கோஷம் எழுப்பியதுடன், சமூக வலைதளங்களில் பெருமளவில் பதிவிட்டனர். இந்நிலையில், ஐஐடி.,யின் மாண்பு காக்கப் பட வேண்டும் என்றும், ஐஐடி., தேசத்தின் சொத்து, அதில், நாட்டுக்கு பயனளிக்கும் மாணவர்கள் உருவாக வகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

அண்ணனைத் தள்ளிவிட்டு பெண்ணின் கழுத்தில் தம்பி தாலி கட்டியதால் மண நிகழ்ச்சியில் அதிர்ச்சி!

temple marriage - 2026

வேலூர்:

அண்ணனைத் தள்ளி விட்டு திடீரென மணப் பெண்ணுக்கு தம்பி தாலி கட்டியதால் மண வீட்டார் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த செல்லரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ்(54). இவருக்கு ரஞ்சித், ராஜேஷ், வினோத் என 3 மகன்கள். இவர்களில் ராஜேஷ், வினோத் ஆகியோர், திருப்பத்தூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம், விருதுநகரைச் சேர்ந்த மாலாவுக்கும்(22) ராஜேஷூக்கும்(25) திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி திருமணம், திருப்பத்தூரை அடுத்த வெண்கல்குன்றம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் நேற்று காலை 11 மணிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது இதற்காக பெண் வீட்டார் செல்லரைபட்டியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று காலை அனைவரும் வெண்கல்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்தனர். மண மேடையில், கோவில் குருக்கள் சாமிநாதன் மணமகனிடம் தாலியை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கி ராஜேஷ், மாலாவுக்குக் கட்ட முயன்றபோது, பின்னால் நின்று கொண்டிருந்த அவரது தம்பி வினோத்(23) திடீரென ராஜேஷை தள்ளி விட்டு, தன் ஏற்கெனவே வைத்திருந்த தாலியை எடுத்து மாலாவுக்குக் கட்டினார்.

திடீரென நிகந்த இந் நிகழ்வைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மணமகன் ராஜேஷ் செய்வதறியாமல் திகைத்து நின்றார். இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள் வினோத்தை தாக்கினர். பின் மணப்பெண்ணுக்குக் கட்டிய தாலியை கழற்றிவிட்டு, ராஜேஷே மீண்டும் தாலி கட்டும்படி வந்திருந்தவர்கள் கூறினர். ஆனால் அதற்கு அவர், தம்பி தாலி கட்டிய பிறகு, தன்னால் எப்படி மறு தாலி கட்ட முடியும் அழுது கொண்டே கேட்டவர், பின் தான் அணிந்திருந்த முகூர்த்த வேட்டி, சட்டையை கழற்றி எறிந்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினார். இதனால் மணப்பெண்ணின் உறவினர்கள், ஊர் பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்டனர்.

மாலை நடந்த ஊர் பஞ்சாயத்தில், தான் அப்பெண்ணை விரும்பியதாக வினோத் கூறினார். அண்ணனுக்கு பெண் பார்க்க, விருதுநகருக்கு நானும் உடன் சென்றேன். அங்கு மாலாவைப் பார்த்ததும், எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இதனால் நானே மாலாவை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என முடிவு செய்தேன். இதனை பின்னர் மாலாவிடம் மொபைல்போன் மூலம் கூறினேன். முதலில் மறுத்த மாலா, பின்னர் சம்மதித்தார். நாங்கள் போட்ட திட்டப்படிதான் மாலாவுக்கு நான் தாலி கட்டினேன். ஆனால், இந்த விஷயத்தை, என் அண்ணன், தந்தையிடம் நான் கூறவில்லை என்றார்.

எனக்கு வினோத்தைப் பிடித்திருந்ததால், நானும் இந்த திட்டத்துக்கு சம்மதித்தேன். எனக்கு கணவர் வினோத்தான் என்று கூறினார் மாலா. ஆனால் மாலாவின் கருத்தை அவரது வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், மாலாவுக்கு வினோத் கட்டிய தாலியைக் கழற்றி, பஞ்சாயத்தாரிடம் கொடுத்து விட்டுச் சென்று விட்டனர். இது குறித்த தகவல் பரவியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தில்லியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவு

earth quake tremer - 2026

புது தில்லி:

தில்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

தில்லி மற்றும் வடமாநில பகுதிகளில் இன்று அதி காலை 4.20க்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு நிமிடம் வரை இது நீடித்தது. ஹரியானா மாநிலத்தின் ரோட்டக் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டன. இதனால் பீதியடைந்த மக்கள் பதறி அடித்து, வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

காட்டு யானை தாக்கி 4 பேர் பலி: கோவை அருகே சோகம்!

flashnews - 2026

கோவை :
கோவை அருகே போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை தாக்கியதில் இதுவரை சிறுமி உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.
போத்தனூர் கணேசபுரத்தில் காட்டு யானை தாக்கி, வீட்டின் வெளியே படுத்திருந்த சிறுமி மற்றும் மூதாட்டி உயிரிழந்தனர். முன்னதாக இயற்கை உபாதை கழிக்கச் சென்ற ஜோதி, நாகரத்தினம் ஆகிய 2 பேரும் யானை தாக்கி உயிரிழந்தனர். எனவே இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர் யானை ஊருக்குள் சுற்றுவதால் போத்தனூர், மதுக்கரை, சுந்தராபுரம், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

யானையை பிடிப்பதற்காக யானைகள் முகாமில் இருந்து 4 யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. யானையை துப்பாக்கியால் சுட்டு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் தயாராக வனத்துறையினர் மற்றும் போலீசார் குழு போத்தனூரில் முகாமிட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி சேவையின் 10 கட்டுப்பாடுகள் என்னென்ன?

SBI bank atm - 2026

புது தில்லி:

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள புதிய சேவைக் கட்டுப்பாடுகள் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவைகள் குறித்த குழப்பங்கள் பல நிலவி வரும் நிலையில், எஸ்பிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ., சேவையில் எதற்கெல்லாம் கட்டணம் :

1. ‘எஸ்பிஐ பேங்க் பட்டி’ (SBI Bank Buddy) எனப்படும் வங்கி ஆப்சை பயன்படுத்தி மொபைல் வாலட் மூலம் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

2. மற்ற அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் மாதம் 8 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.3. இதில் மெட்ரோ நகரங்களில் வசிப்போர் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்.,களிலும்

3 முறை மற்ற வங்கி ஏடிஎம்.,களிலும் பணம் எடுக்கலாம். மெட்ரோ நகரங்களில் இல்லாதவர்கள் மாதம் 10 முறை வரை சேவை கட்டணம் இல்லாமல் ஏடிஎம்.,ல் பணம் எடுக்கலாம்.

4. அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை மட்டும் ஏடிஎம்.,ல் இருந்து கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம் என்ற வரைமுறை பொருந்தும்.

5. ஏழ்மை நிலையில் இருப்போர் வங்கிக் கணக்கில் அதிகம் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 4 முறை மட்டுமே பணம் எடுக்கமுடியும் என்ற வரையறை வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இவர்களிடம் இருந்து ஆண்டு பராமரிப்பு தொகை பிடித்தம் செய்யப்படுவதில்லை.

6. ஜூன் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி, ஐஎம்பிஎஸ் வழியாக ஆன்லைனின் பணம் பரிமாற்றம் செய்பவர்கள், ரூ.1 லட்சம் வரை பரிமாற்றம் செய்தால் ரூ.5 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணபரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.15 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.25 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.

7. அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டு பரிமாற்றம் : 20 க்கும் மேற்பட்ட அழுக்கு அல்லது கிழிந்த நோட்டுக்களையோ வாடிக்கையாளர் மாற்றினால்அவர்களிடம் ரூ.2 உடன் சேவை கட்டணம் ஒவ்வொரு நோட்டுக்கும் வசூலிக்கப்படும். ரூ.5000 க்கும் மேலான மதிப்புடைய அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டுக்களுக்கும் இது பொருந்தும்.

8. அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 10 செக் தாள்கள் கொண்ட புக்கிற்கு ரூ.30 உடன் சேவை வரியும், 25 செக் தாள்கள் கொண்ட புக்கிற்கு ரூ.75 உடன் சேவை வரியும், 50 செக் தாள்கள் கொண்ட செக் புக்கிற்கு ரூ.150 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

9. ஏடிஎம்., கார்டுகளுக்கு கட்டணம் : ஜூன் 1 ம் தேதியிலிருந்து புதிய டெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். ரூபே கிளாசிக் கார்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.

10. பணம் எடுப்பதற்கான கட்டணம் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்பிஐ வங்கியில் ரூ.50 உடன் சேவை வரியும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்.,களில் பணம் எடுத்தால் ரூ.20 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

குட்டைப் பாவாடை; முழங்கால் காட்டி விமர்சனத்துக்கு உள்ளான பிரியங்கா சோப்ரா

priyanka chopra narendra modi - 2026

குட்டைப் பாவாடை போடுவது என் உரிமை, என் கால்களைக் காட்டுவது என் உரிமை, நான் என்ன உடை போடுவது என்பதை நானே முடிவு செய்ய வேண்டும், அதை இந்த சமூகம் முடிவு செய்யக்கூடாது என்று கூறும் வகையில், தான் குட்டைப்பாவாடை அணிந்து முழங்கால் காட்டிப் பதிவிட்ட போட்டோவுக்கு, சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்புக்கு பதிலடியாக மேலும் ஒரு குட்டைப் பாவாடை படத்தைப் பதிவிட்டிருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

தான் நடிக்கும் ஹாலிவுட் படமான பே வாச் படத்தை விளம்பரப் படுத்துவதற்காக ஜெர்மனி சென்றிருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

அப்போது, ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடியை அங்கே சந்தித்தார் நடிகை பிரியங்கா சோப்ரா. அப்போது அவர், குட்டைப் பாவாடை அணிந்து, முழங்கால் தெரிய அமர்ந்திருந்தார். இந்தப் படத்தை தனது இன்ஸ்டாக்ராம் பதிவில் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் பலத்த கண்டனத்துக்கு உள்ளாயிற்று. பிரதமர் முன் கால் மேல் கால் போட்டு, மரியாதை இன்றி அவர் அவமதித்ததாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்தியாவில் என்றால், பிரதமரைச் சந்திப்பதற்கு உடைக் கட்டுபாடு எல்லாம் உண்டு. ஆனால், வெளிநாட்டில் சந்தித்ததால், இதனை கவனக்குறைவாக பாதுகாப்பு அதிகாரிகள் விட்டதாகக் கூறப்பட்டது.

priyanka chopra mother - 2026

இருப்பினும் தன் மீதான விமர்சனங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, மேலும் ஒரு குட்டைப் பாவாடை படத்தை இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டார் பிரியங்கா. அதில், தன்னுடன் தன் தாயாரும் முழங்கால் காட்டி இருப்பதைப் பதிவிட்டார். இதுவும் இப்போது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

தீ விபத்தில் இடிந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் இன்று இடிப்பு? ரூ.300 கோடி சேதம்!

chennai silks building collapsed - 2026

சென்னை:

தீவிபத்தில் இடிந்து விழுந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் இன்று முழுமையாக இடிக்கும் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் தீவிபத்தில் சுமார் ரூ.300 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, துயரமான இந்தச் சூழலிலும், தி.நகர் கிளையில் வேலை பார்த்து வந்த ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்தை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் பட்டுவாடா செய்துவிட்டதாகவும், அவர்களை சென்னையில் உள்ள மற்ற கிளைக் கடைகளுக்கு பணிகளைப் பிரித்து வழங்கி அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள 7 மாடிகளைக் கொண்ட சென்னை சில்க்ஸ் கடையில் புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள 12 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 35 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. 250-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க போராடி சுமார் 30 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், கட்டடத்தின் முன்பகுதி முழுமையாக இடிந்து விழுந்தது. நேற்று அதிகாலை 3.20 மணிக்கு கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்த இரும்பு கூரைகள் சரிந்தன. அந்நேரம் கட்டடத்தில் விரிசல் அதிகமானது. அடுத்த 2 நிமிடங்களில் கட்டடத்தின் உள்பகுதி பயங்கர சத்தத்துடன் சரியத் தொடங்கியது. மேல் தளத்தில் இருந்து 3-வது தளம் வரை இடிந்து விழுந்ததால் அந்தப் பகுதி முழுவதும் தூசியுடன் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. இதனால் கட்டடத்தை முழுமையாக இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பணி இன்று துவங்கி ஓரிரு நாட்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற இருப்பதால், பாதுகாப்பு பணிக்காக அந்த பகுதியில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து மாற்றம் இன்னும் 2 நாட்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கர தீ விபத்தில் கடையில் இருந்து துணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. சேத மதிப்பு ரூ.300 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அறநிலையத்துறை அராஜகத்தால் நின்று போன பிரம்மோத்ஸவம்

hrce office chennai - 2026

என் பெயர் ரங்கராஜன் நரசிம்மன். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவன். என் கையாலாகாத தனத்தினை நான் உலகிற்குக் கூறிக்கொள்ளும் பதிவு.

ஆஸ்திகர்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் அனைவரும், வாட்ஸப்பில் வரும் ஏதேதோ வீடியோக்களையும், செய்திகளையும் விடாமல் படித்து முடிக்கும் நாம் ஒரு சில நிமிடங்கள் இந்த பதிவை படித்து நம் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவு செய்யப்படுகின்றது. எவ்வளவு பேர் படிப்பீர்கள். எவ்வளவு பேர், ஒரு இரண்டு வரி படித்துவிட்டு இதை டிலீட் செய்வீர்கள். எவ்வளவு பேர் படிக்காமல் பார்வேர்டு செய்வீர்கள் என்பது அவரவர்களுக்கு வெளிச்சம்

விருப்பமுள்ளவர்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீரஙகம்

ஸ்ரீரங்கத்தில் பெருமாளுக்கு நித்ய பூஜைகளில் தடை.

ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் இரண்டாம் ப்ராகாரத்தில் ப்ரதக்ஷிணம் (வலம் வருதல்) செய்வதற்குத் தடை

ஸ்ரீரங்கத்தில் (மூலவர்) பெருமாளின் திருமேனியையே மாற்றினர்.

ஸ்ரீரங்கத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதியின் உள்ளே இருக்கும் திருவரங்கத்தமுதனார் சன்னதியில் இருந்த மூலவர் பெருமாள் காணாமல் போனார்.

ஸ்ரீரங்கத்தில் பெரியோர்களால் நிர்மாணிக்கப்பட்ட பழைய கதவுகளும் அனைத்தும் மாற்றப்பட்டு (உயர் நீதிமன்ற தடையை மீறி) தொலைக்கப்பட்டன.

ஸ்ரீரங்கத்தில் இன்றும், பெரிய பெருமாள் (ரங்கநாதரின் பெயர்தான்) திருமடப்பள்ளியில் இன்றும் மல மூத்ரங்கள் கழிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீரங்கத்தில் பலவிதமான ஆகம விதிமுறை மீறல்கள் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவ்வனைத்தையும் இதுநாள் வரையில் கண்டும் காணாமல் இருந்தேன் நான். பாவியேன்!

*இப்பொழுது திருக்கண்ணபுரம்*.

நேற்று நடக்க வேண்டிய ப்ரஹ்மோத்ஸவம் இன்று நிருத்தப்பட்டது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எந்த ஒரு விக்னமும் (தடையும்) இல்லாமல் நடைபெற்று வந்த ப்ரஹ்மோத்ஸவம் இன்று இந்து அறமில்லாத் துறை நாஸ்திகர்களால் நிறுத்தப்பட்டது.

ஸ்ரீராமாயணத்தில், ஸ்ரீ ராமரின் பட்டாபிஷேகம் இனிதே நடைபெற்றது. விபீஷ்ணாழ்வானுக்கு ஸ்ரீராமன் தன் திருவாராதன பெருமாளாகிய ஸ்ரீரங்கநாதனை ப்ரணவாகார விமானத்தோடு பரிசாக அளித்தான். விபீஷணன் பெருமாளை இலங்கைக்கு எழுந்தருளப்பண்ணிக்கொண்டு சென்று கொண்டிருக்கு நேரத்தில் ப்ரஹ்மோத்ஸவத்தின் முஹூர்த்தம் வந்ததால், இரண்டு காவிர்க்கரைக்கு இடையில் ஸ்ரீரங்கத்தில் இறங்கி ப்ரஹ்மோத்ஸவத்தை நடத்தினான் என்பது ஸ்ரீ ராமாயணம் அறிந்த குழந்தைக்குக் கூடத் தெரியும்.

ஆனால் இன்று சௌரிராஜப்பெருமாளின் ப்ரஹ்மோத்ஸவம் எந்தக் காரணமும் இன்றி திட்டமிட்டு இந்து அறமில்லாத்துறையால் நிறுத்தப்பட்டது. இதை ஆஸ்திகர்கள் எவரும் தடுக்க ஒரு முயற்சியும் எடுக்காத அவல நிலை.

மற்றவர்களின் அராஜகத்தால் இது நடந்தது என்று அரசியல் பேசுவதற்காகவும், மற்ற மதங்களை தாக்கி, லஞ்ச ஊழல்களின் பேரில் இந்தப் பழியைப் போட்டுவிட்டு மூன்று வேளையும் மூக்கைப்பிடிக்க தின்பவன் நானல்ல.

இது என்னுடைய கையாலாகாத தனத்தாலும், மெத்தனப் போக்காலும், திருக்கண்ணபுரத்து எம்பெருமானின் மீது எனக்கு இருக்கும் அலட்சியத்தாலும், என் சுயநலத்தால் கோவிலில் என்ன நடந்தால் எனக்கென்ன என்று, நான் கோவிலுக்கு நன்கொடையாகக் கொடுக்கும் பணத்தினை நான்கு பேருக்குச் சொல்லி, நான் செய்தேன் நான் செய்தேன் என்று சந்தர்பவாதியாக சுயநலமாக மார் தட்டிக்கொண்டு வெட்டியாக காலத்தை கழிக்கும் *என்னாலேயே* இது நடந்தது.

உபன்யாஸங்கள் கேட்டு என்ன பயன்?! ஸ்வாமி ராமாநுஜரின் ஆயிரமாவது பிறந்தநாளை, பல கோடி ரூபாய் செலவுசெய்து, தங்கக்குடம் வெள்ளிக்குடம், தங்க வட்டில், வைர பூணூல், தங்கக் க்ரீடம், வைரக் க்ரீடம், 108 உயரமான ராமாநுஜர் உருவச் சிலை, ராமாநுஜர் மணிமண்டபம் என்று படாடோபம் செய்வதனால் என்ன பலன்?

ஒரு நான்கு ஆத்மாக்கள் திருக்கண்ணபுரம் ஸவுரிராஜப்பெருமாளின் ப்ரஹ்மோத்ஸவத்திற்காக இல்லாமல் இவ்வளவு படாடோபம் செய்வது ஸ்வாமி ராமாநுஜரின் திருவுள்ளத்தையும், ஆழ்வார் ஆசார்யர்களின் திருவுள்ளத்தையும் எவ்வளவு வேதனை அடையச் செய்யும் என்பது நினைத்துக்குட்ட பார்க்கமுடியாததாக இருக்கின்றது.

நடந்தது என்ன? சென்ற மாதம் ஒரு நாள் இந்த கோவிலின் செயல் அலுவலர், இந்தக் கோவிலில் ஜூன் மாதம் 1ஆம் தேதி பாலாலயம் நடக்க இருப்பதால், அன்றையதினம் துடங்க இருக்கும் ப்ரஹ்மோத்ஸவம் ரத்து செய்யப்படுகின்றது என்று தன்னிச்சையாக அறிவிப்புப் பலகை வைத்தார்.

27 மே வரை இது குறித்து எந்தவித மறுப்போ, புகாரோ இந்து அறங்கெட்ட துறைக்கு நான் அனுப்பவில்லை. ஏன் என்றால், ஸ்ரீரங்கத்திலேயே இருக்கும் எனக்கு இங்கு நடக்கும் அவல நிலையைப் பற்றி கண்டும் காணாமல் இருக்கும் எனக்கு திருக்கண்ணபுரத்தில் என்ன நடக்கின்றது என்று எப்படித் தெரியப் போகின்றது?! தெரிந்தாலும் நான் எதாவது செய்துவிடவா போகிறேன்!

ஏதோ ஒரு ஆத்மா இது தெரிந்து இந்து அறங்கெட்ட துறைக்கு புகார் கொடுத்ததன் பேரில் பாலாலயம் நிறுத்தப்பட்டது.

ஆகமங்கள், எக்காரணம் கொண்டும் உத்ஸ்வங்களை கோவில்களில் நிறுத்தக்கூடாது என்றும் அவ்வாறு நிருத்தப்பட்டால், அது அரசுக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் பெரும் கேடு விளைவிக்கும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இதெல்லாம் நம்பிக்கை உடைய ஆஸ்திகனுக்காக எழுதப்பட்டது. இது எல்லாம் பத்தாம் பசலித்தனம் என்று அலட்சியப்போக்காகவும் நமக்கு இன்று பொழுது இனிதே நடந்தால் போதும் என்று இருப்பவர்களுக்கும் அல்ல. இப்படி இருக்கும் என்னால் தானே இன்று உத்ஸவம் நடக்காமல் போனது!?

கோவில்களை சிதைப்பதற்கும், கோவில்களின் ஸம்ப்ரதாய முறைகளில் தடைசெய்வதற்கும், கோவில்களின் சான்னித்யத்தைக் கெடுப்பதற்கும், நம் ஸ்வாமி மீது நமக்கு அவநம்பிக்கை பிறப்பதற்கும் கங்கணம் கட்டிக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய யுக்தியை கையாளும் இந்த அறங்கெட்ட துறை ராக்ஷசர்களை பெருமாள் பார்த்துக்கொள்வான் என்று சௌகரியமாகக் கூறி ஒதுக்கிப் போகிம் பேடையாக நான் இருக்கும்வரையில் இந்த அசுரர்களின் பலம் ஓங்கிக்கொண்டே போகும்,

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்றால், சாதுக்களுக்கு ஒரு கஷ்டம் வரும்போது, அது குறித்து எம்பெருமான் மிரளும் போது காடு என்ன, ஈரேழு லோகமும் அழியும்.

பரித்ராணாய சாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே!

என்று க்ருஷ்ணன் கூறியுள்ளான். நாம் உதாசீனர்களாக இருந்தாலும், அவன் ஒருபோது அடியார்களுக்கு கிடைக்கும் துன்பத்தைப் பொருத்துக்கொள்ள மாட்டான். அதற்காக நான் கூப்பிடாமல் அவன் வரமாட்டான் அல்லவா? நான் கூப்பிடுவேனா?!

அடியேன் ராமாநுஜ தாஸன்
ரங்கராஜன்