Home Blog Page 5654

சிபிஎஸ்இ பாடத்தில் விளக்கம்: அழகான பெண்ணின் உடல் அளவு என்ன?

12ம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்தில் புதுவிளக்கம் அழகான பெண்ணின் உடலமைப்பு எது? என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
'சிபிஎஸ்இயுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் சிலவற்றில் நடத்தப்படும் ‘ஹெல்த் அண்ட் பிசிக்கல் எஜூகேசன்’ என்ற பாடப்புத்தகத்தில், ‘36-24-36’ என்ற அளவுதான் அழகான பெண்ணின் உடல் அமைப்பு என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை நீக்க வேண்டும் என சமூக இணையதளங்களில் விமர்சகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
டெல்லியைச் சேர்ந்த நியூ சரஸ்வதி ஹவுஸ் என்ற புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள ‘ஹெல்த் அண்ட் பிசிக்கல் எஜூகேசன்’ என்ற புத்தகத்தை டாக்டர் வி.கே.சர்மா என்பவர் எழுதியுள்ளார். சிபிஎஸ்சிஇயுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் சிலவற்றில் இந்த புத்தகம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
அதில், ‘சைக்காலஜி மற்றும் விளையாட்டு’ என்ற பிரிவு உள்ளது. இந்த பாடத்தில் பெண்களின் உடல் அளவுகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. ‘36-24-36’ என்ற அளவுதான் பெண்களின் சிறந்த உடல் அமைப்பு.
உலக அழகி போட்டிகளில் இந்த அளவுதான் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதி தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தனித்துப் போகும் இந்திய இஸ்லாமியர்கள்: காரணம் என்ன?

தனித்துப் போய்க் கொண்டிருக்கும் இந்திய இஸ்லாமியர்கள்: ஒரு தமிழனின் பார்வையில்!

கட்டுரை: – ஆர். கோபிநாத்

நம்முடைய பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் பல இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. முன்பெல்லாம் பலரின் வீடுகளுக்கு நேரம் காலம் பார்க்காமல் செல்வோம். அந்த நண்பர்கள் எங்களுடன் முழு நேரமும் சுற்றுவார்கள். கிரிக்கெட் விளையாடுவோம். பல மணி நேரங்கள் அரட்டை அடித்துக்கொண்டு இருப்போம். இன்று மெல்ல அவர்களில் பலர் நட்பு வட்டத்தில் இருந்து விலகி விட்டார்கள். சிலர் வெறும் ஹலோ நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.

என்னை விட வயது முதிர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் கூட என்னிடம் நல்ல உறவு கொண்டிருந்தார்கள். இன்று அவர்களே சிறிது தள்ளி தான் இருக்கிறார்கள்.

பொதுவாகவே இஸ்லாமியர்கள் ஹிந்துக்களிடம் இருந்து விலகி போக ஆரம்பித்து விட்டார்கள். தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் இது நடக்கும் என்று நாம் கற்பனை கூட செய்திருக்க முடியாது.
என்னுடன் பள்ளியில் படித்த இஸ்லாமிய நண்பன் இன்று பிரான்சில் இருக்கிறான். அவன் குடும்பத்துடன். அவன் மனைவி காரைக்காலை சேர்ந்தவர். அதனால் பிரெஞ்சு குடியுரிமை பெற்று விட்டான். சென்ற மாதம் ஒரு விடுமுறைக்கு வந்திருந்தான். சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போது, ”என்னடா பிரான்சில் அங்கங்கே ஆப்பிரிக்காவின் முன்னாள் பிரெஞ்சு காலனிகளான அல்ஜீரியா, மொராக்கோ,துனிசியா போன்ற நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் வன்முறையிலும், குண்டு வைப்பது, துப்பாக்கியால் சுடுவது, பெட்ரோல் குண்டு வீசுவது, பெண்களை மானபங்கம் செய்வது போன்ற எல்லா அடிப்படைவாத தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுகிறார்களே” என்றேன்.
பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தான். ”அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் நாளை இஸ்லாமிய பெயர் தாங்கிய உனக்கும் பிரச்சனை ஏற்படும். பார்த்து ஜாக்கிரதையாக இரு” என்று கூறினேன்.

அதற்கு அவன், ”இதை எல்லாம் இஸ்லாமியர்கள் செய்யவில்லை. யூதர்கள் தான் செய்கிறார்கள். இங்கிலாந்திலும் செய்யப் பார்த்தார்கள். ஆனால் அங்கு முடியவில்லை. இன்று பிரிட்டன் இஸ்லாமிய நாடாக ஆகிக்கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் பார், பிரான்சும் ஆகிவிடும்” என்று அலட்சியமாக கூறினான்.
பிரான்ஸ் இஸ்லாமிய நாடாகிவிடும் என்று அவன் சொன்னதில் வியப்பில்லை. நான் அதற்குள்ளும் செல்லவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளிலும் பின்பு இப்போது பிரான்சிலும் இருக்கும் அவன், அவ்வப்போது விடுமுறைக்கு 15 நாளோ ஒரு மாதமோ மட்டும் வரும்போது இங்கு பெரிதாக எவ்வித மதம் சார்ந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அவன், 4.5 லட்சம் மக்கள் மட்டுமே இருக்கும் ஒரு மிகச் சிறுபான்மை குழுவான பிரான்சு நாட்டு யூதர்களின் மேல் குற்றம் சாட்டுகிறான். இது அவன் தானாக பேசும் பேச்சல்ல. வாட்ஸப் முகநூல் போன்றவற்றில் வெகு சாதாரணமாக வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு இது.

பெரும்பான்மை இஸ்லாமியர்களால் தங்கள் மேல் எவ்விதமான குற்றமும் இல்லை என்பதற்காக வைக்கப்படும் வாதம்.

அல்ஜீரியாவிலும் துனிசியாவிலும் இருந்து வந்த பயங்கரவாதிகளுக்காக, தான் என்றும் பார்த்திராத ஒரு இனக்குழுவின் மேல் ஒரு கடுமையான ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வைப்பது – இதை எப்படி செய்ய முடிகிறது என்று தெரியவில்லை. அவர்களை ஏன் காக்க வேண்டும்? அவர்களுடன் என்ன உறவு மத ரீதியிலானதை தவிர?
இன்னொரு முஸ்லீம் நண்பர். என்னை விட வயதில் பெரியவர். அவரின் மகளுக்கு பொடுகு தொல்லை என்று என் நண்பரான ஒரு நாட்டு வைத்தியரிடம் மருந்து வாங்க வந்தார். நானும் அப்போது அங்கு இருந்தேன். அந்த பெண் மூன்றாவது படிக்கிறாள்.
என் நண்பர், ”என்ன பாப்பா தலைக்கெல்லாம் குளிப்பதில்லையா? அம்மா குளிப்பாட்டி விட மாட்டார்களா? வாரம் ஒரு முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். இந்த எண்ணையை தேய்த்து குளி” என்று ஒரு பாட்டிலை கொடுத்தார்.

அதற்கு அந்தக் குழந்தை, ”தலைக்கெல்லாம் குளிக்கிறேன். நன்றாகத் தான் இருக்கிறேன். இந்த அங்கியை அணிந்தால்தான் தலை வேர்த்து கசகசவென்று ஆகி இப்படி நடக்கிறது. தலை வேறு வலிக்கிறது” என்று அழாக்குறையாக தன் ஹிஜாப் என்னும் அந்த தலையை சுற்றி அணியப்படும் அங்கியை காட்டி சொன்னது எனக்கு சுருக்கென்று தைத்தது.
ஆனால் பெண்ணின் தந்தையோ கண்டும் காணாமல் இருந்தார்.
7 வயது குழந்தைக்கு அதை அணிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன? யார் இவர்களுக்கு அப்படிச் சொன்னது? எந்த மதநூலில் இருக்கிறது?
முன்பெல்லாம் இஸ்லாமியர் வீட்டுப் பெண்கள் புடவையை தலைப்பாகச் சுற்றியிருப்பார்கள். இல்லை வெள்ளையாக ஒரு அங்கி இருக்கும், அதை மேலே சுற்றிக்கொண்டு இருப்பார்கள். இளம் பெண்கள் நம் வீட்டு பெண்களை போல் தான் இருந்தார்கள். அவர்கள் எல்லா சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள்.

அயத்துல்லா கொமேனி ஈரானில் கல்லூரி படிக்கும் பெண்களை கருப்பு அங்கியால் மூடியபோது கூட நம் ஊர் பெண்கள் சாதாரண ஆடைதான் அணிந்திருந்தார்கள்.

பாரதவிலாஸ் என்ற ஒரு சிவாஜி படம் நினைவிருக்கும். அதில் வி.கே.ராமசாமி மற்றும் ராஜசுலோச்சனா ஒரு கேரளா மாப்பிளா முஸ்லீம் ஜோடியாக நடித்திருப்பார்கள். அதில் கூட ராஜசுலோச்சனா பாவாடை சட்டை போன்ற ஒரு உடை தான் அணிந்திருப்பார். பின்னந் தலையில் ஒரு அங்கி தொங்கும். அவ்வளவு தான். இன்று கேரள முஸ்லிம்கள் முழு கருப்பு உடையில் தான் தங்கள் வீட்டு பெண்களை வைத்திருக்கிறார்கள்.

பல வருடங்களாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இஸ்லாமிய இளைஞர்கள் நீண்ட ஜிப்பாவும் மார்பு வரை புரளும் தாடியும் முக்கால் காலிற்கு கைலியும் அணிந்தெல்லாம் பார்த்தது கிடையாது. இன்று 20 வயது பையன்கள் கூட அதை போல் திரிகிறார்கள். கல்லூரி படிக்கும் பையன்கள் கூட லேசாக தாடி வைத்துக்கொள்கிறார்கள். கேட்டால் மார்க்கம் என்கிறார்கள். திடீரென்று இவர்கள் இப்படி மாற காரணம் என்ன?

மௌல்விகளும் முல்லாக்களும் இருக்கும் தோரணையில் சாதாரண மக்கள் இருக்க என்ன காரணம்? இவர்கள் நமக்கு எதை உணர்த்துகிறார்கள்?
ஈரான் ஈராக் சண்டை நடந்த போதும், அமெரிக்காவின் டெல்டா போர்ஸ் படை ஈரானில் தன்னுடைய தூதரகத்தில் மாட்டிக் கொண்டிருந்தவர்களை மீட்க தாக்குதல் நடத்தியபோதும், சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்ரமித்தபோதும், சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போதும் எந்த சலனமும் காட்டாதவர்கள் இவர்கள். ஆனால் இன்று இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனையில் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். அமெரிக்கா ஆப்கானை ஆக்ரமித்துவிட்டது என்று புலம்புகிறார்கள். இவர்கள் எப்படி சர்வதேசமயமானார்கள்?

இன்று உலகின் இரண்டாவது பெரிய மதம் எப்படி தன்னை மற்றவர்கள் வஞ்சிக்கிறார்கள் என்று குற்றம் சொல்லி தன்னை பாதிக்கப்பட்டவனாக ஆக்குகிறது? சோவியத் ரஷ்யா ஆப்கானை ஆக்ரமித்தபோது வாளாவிருந்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள், இன்று இஸ்ரேல் பாலஸ்தீனில் குண்டு போடுகிறது என்று பாராளுமன்றத்தை முடக்குகிறார்கள். என்ன நடக்கிறது இங்கே?
இஸ்ரேலில் 20% அரேபிய முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். உயர் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால் ஈரானிலோ ஈராக்கிலோ சவுதியிலோ ஒரு சதவீதம் யூதர்கள் கூட கிடையாது. ஆனால் இந்த நிலங்களில் அவர்கள் வரலாற்று காலம் தொட்டே பல்கி பெருகி வாழ்ந்தவர்கள். துருக்கிய ஆட்டமன் அரசு காலத்தில் வாழ்ந்த அவர்களால் இந்த நவநாகரீக உலகில் இதே இடங்களில் வாழமுடியாமல் போன காரணம் என்ன? சவுதியின் வாஹாபி இஸ்லாமின் நீட்சியா இது?

இன்று பாரூக் என்ற இஸ்லாமியர் கோவையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் பெரியார் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர், கடுமையான நாத்திகம் பேசினார் என்று சொல்கிறார்கள். அதற்காக அவரின் நண்பர்களே அவரை கொலை செய்யும் வரை சென்றிருக்கிறார்கள்.
ஹிந்து கடவுள்களைப் பற்றி இந்த பெரியார் திராவிட கும்பல் பேசாத பேச்சா? அதற்காக அவர்கள் படுகொலையா செய்யப்பட்டார்கள்? என்னிடமே சண்டைக்கு வந்த திராவிட கழக நண்பர்கள் இருக்கிறார்கள். கைகலப்பு கூட நடந்திருக்கிறது. அதற்காக யாரும் இந்த எல்லைக்கு போனதில்லையே.

கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தை பற்றி வைக்காத விமர்சனமா? அவர்களின் சீர்திருத்தவாதிகள் அவர்களில் இருந்தே எழுந்தல்லவா வந்தார்கள்? இஸ்லாம் மட்டும் மீண்டும் மீண்டும் தன்னை ஒரு கூட்டுக்குள் அடைத்துக்கொள்ளும் காரணம் என்ன? மற்றவர்களிடம் நேசக்கரம் நீட்டாமல் மறுப்பதன் நோக்கம் என்ன? 1000 வருடங்கள் பழமைக்கு செல்வேன் என்று இந்த நவீன யுகத்தில் அடம்பிடிப்பதன் காரணம் தான் என்ன?
முன்பெல்லாம் தஞ்சாவூர் போன்ற பெரு நகரங்களிலேயே புர்கா விற்கும் கடைகள் கிடையாது. இன்று சிறு டவுன்களில் கூட அப்படிப்பட்ட கடைகள் பல்கி பெருகிவிட்டன. கைபேசியிலேயே முத்தலாக் என்கிறார்கள். பல தார மணம் என்று புதிது புதிதாக ஏதேதோ கிளம்பி வருகிறது. இந்தியாவின் பன்முகத் தன்மையை காக்கும் அதே வேளையில் இதன் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காக்கும் பொறுப்பும் இஸ்லாமியர்களுக்கும் இருக்கிறது. அவர்கள் இந்த நாட்டில் இதன் வரலாற்றில் ஒரு அங்கம் தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.

அவர்கள் உற்றார்கள் நண்பர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஏமனிலும் மொராக்கோவிலும் இல்லை. மாறாக இந்த மண்ணில் காலம் காலமாக பல்கி பெருகி வாழ்ந்தவர்கள், இந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள், இங்கே தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

அவர்கள் மதம் வேண்டுமானால் மெக்காவில் இருந்து வந்திருக்கலாம். மனிதர்கள் இங்கு இருந்து தான் சென்றார்கள் என்பதை மறக்கலாகாது.
இன்று உலகம் முழுக்க தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களாகவும், பலரின் பயத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளானவர்களாகவும் அவர்கள் மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இது அவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. இன்று அமெரிக்கா ஐரோப்பாவில் கூட இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பேசுபவர்கள்தான் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலை வந்திருக்கிறது. இது அவர்களுக்கு நல்லதல்ல.

இன்று நம் அறிவுஜீவிகள் கடைபிடிக்கும் கள்ள மௌனத்தின் மூலம் இதை கண்டும் காணாமலும் இருந்துவிட்டால் மறுமையில் கூட இதற்கு மன்னிப்பு கிடையாது என்பதே நிதர்சனம்.

ஆளுநரை சந்தித்து திமுகவினர் வைத்த 3 கோரிக்கைகள்!

ஆளுநரிடம் தி.மு.க. வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகள் இவைதான்!
தி.மு.க.வைச் சேர்ந்த எம்பி-க்கள், இன்று தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மும்பையில் சந்தித்தனர். 
துரைமுருகன், திருச்சி சிவா உள்ளிட்டோர் அடங்கிய குழு, ஆளுநரைச் சந்தித்து மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. 
காவிரி மேலாண்மை அமைப்பது, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 30 நாள்களாகப் போராடிவரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் தி.மு.க எம்பி-க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். வருமான வரித்துறையின் சோதனையில், வாக்காளர் பட்டியலை வைத்து பணம் தந்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. தமிழகத்தில் 50 இடங்களில் நடந்த சோதனையில், 4.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
விஜயபாஸ்கரின் உதவியாளர் நயினார் முகமது வீட்டில், 3.5 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. மற்றொரு உதவியாளர் கல்பேஷ் வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது. வருமானவரி சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்குமாறு, தி.மு.க எம்பி-க்கள் ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளனர். பணப் பட்டுவாடாவால் ரத்தான ஆர்.கே.நகர் தேர்தல் பற்றியும் தி.மு.க எம்பி-க்கள் முறையிட்டுள்ளனர்.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு!

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் வழக்கு:
உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் சுற்றுச் சூழலை நாசமாக்கி, கால்நடைகளின் இனப்பெருக்கத்திற்குக் கேடு செய்து, விவசாய நிலங்களை அடியோடு பாழாக்கி வரும் சீமைக் கருவேல மரங்கள் உயிர்க்காற்றை உறிஞ்சிக்கொண்டு, கரிக்காற்றை வெளியிடுகின்றன; வேர்கள் மண்ணுக்குள்  ஆழமாக  ஊடுருவி நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சிக் கொள்கின்றன; இதனால்,  மனித வாழ்க்கைக்கும் கால்நடைகளுக்கும், பெரும் கேடு விளைவதால் சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 2015 செப்டெம்பர் 9 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது, தொடர்ந்து பல அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது.

நிறைவாக, 2017 ஜனவரி 10 ஆம் தேதியன்று  நீதியரசர் செல்வம், நீதியரசர் கலையரசன் அமர்வில், 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

அதுபோலவே, தமிழ்நாட்டின் இதர 19 மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அடியோடு வெட்டி அகற்ற ஆணை பிறப்பிக்கக் கோரி வைகோ அவர்கள் வேண்டுகோள் விடுத்தபோது, அதற்குத் தனியாக ரிட் மனு தாக்கல் செய்யுமாறு, நீதியரசர் செல்வம் அறிவித்தார். அதன்படி, வைகோ அவர்கள் தாக்கல் செய்த ரிட் மனு, 10.2.2017 நீதியரசர் செல்வம், நீதியரசர் கலையரசன் அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

19 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் தாக்கீது அனுப்ப நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.   மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்தப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐந்து வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவையும் அமைத்தது. தற்போது அந்தப் பணிகள் வெகு வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிக்குத் தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடருமானால், தனது தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

காவிரி நீரை திசைத் திருப்பி திருடும் கர்நாடகம்: ராமதாஸ்


காவிரி நீரை திசைத் திருப்பி திருடும் கர்நாடகம்: தடுக்க நடவடிக்கை தேவை என்று  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக, பாசனத்திற்காக காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுத்துவிட்ட கர்நாடக அரசு, இப்போது இயற்கையாக தமிழகத்திற்கு காவிரியில் வரும் தண்ணீரையும் திசைத் திருப்பி தொழிற்சாலைகள், குடியிருப்புகள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்கு அனுப்பி வருகிறது. இதை தமிழக ஆட்சியாளர்கள் கண்டும், காணாமலும் இருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் என்ன தான் கடுமையான வறட்சி நிலவினாலும் ஓகனேக்கல் மலைப் பகுதியில் ஓரளவு வருவது வழக்கம். கர்நாடக அணைகளில் இருந்து வெளியேறும் குறைந்த அளவிலான தண்ணீரும், தமிழகத்திற்கும், கர்நாடக அணைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில்  கிடைக்கும் தண்ணீரும் தான் இதற்கு காரணமாகும். இப்போதும் கூட கர்நாடகத்தில் ஹேமாவதி அணையிலிருந்து 150 கன அடி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 873 கன அடி, கபினி அணையிலிருந்து 100 கன அடி, ஹாரங்கி அணையிலிருந்து 9 கன அடி வீதம் மொத்தம் வினாடிக்கு 1132 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் ஓகனேக்கல் பகுதியில் அருவி அளவுக்கு தண்ணீர் கொட்டாவிட்டாலும் கண்ணுக்கு தெரியும் அளவுக்காவது தண்ணீர் கொட்டும்.
 
-ஆனால், கடந்த சில வாரங்களாகவே ஓகனேக்கலில் ஒரு சொட்டுக்கூட தண்ணீர் வரவில்லை. இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்த போது தான் காவிரி நீரை கர்நாடகம் கிணறுகள் அமைத்து  திருடுவது தெரியவந்திருக்கிறது. மாதேஸ்வரன் மலையிலிருந்து கொள்ளேகால் செல்லும் பாதையில்  சரியாக 18-ஆவது கிலோமீட்டரில் பண்ணூர் என்ற இடம் உள்ளது. கர்நாடக எல்லையில் உள்ள இந்த ஊரில் காவிரி ஆறு சற்று வளைந்து செல்லும். அந்த இடத்தில் காவிரியை ஒட்டிய வனப்பகுதியில்  80 மீட்டர் (266 அடி) விட்டமும், 60 அடி ஆழமும் கொண்ட 6 கிணறுகளை வெட்டியுள்ள கர்நாடக அதிகாரிகள், காவிரியில் வரும் தண்ணீரை இந்தக் கிணறுகளுக்கு திருப்பி விட்டுள்ளனர். அவற்றில்  3 கிணறுகளில் சேரும் தண்ணீர் கொள்ளேகால் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இரு கிணறுகளில் சேரும் தண்ணீர் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும், ஒரு கிணற்றின் நீர் கொள்ளேகால் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கும் அனுப்பப் படுகிறது. வழக்கமாக வனப்பகுதியில் கிணறு தோண்ட வேண்டுமானால் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அத்தகைய அனுமதியை பெறாமலேயே கர்நாடகம் கிணறுகளை வெட்டியுள்ளது.

பிலிகுண்டுலு பகுதிக்கு முன்பாக உள்ள கர்நாடகப் பகுதிகள் பயனடைய வேண்டும் என்பதற்காக  தண்ணீரை திறந்து விடும் கர்நாடக அரசு, கர்நாடகப் பகுதிகளின் தேவை தீர்ந்த பிறகு மீதமுள்ள  நீர் கூட தமிழகத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக கிணறு வெட்டி திருப்பி விடுகிறது. தமிழகத்திற்கு   வந்து சேர வேண்டிய தண்ணீரை தமிழகத்தின் அனுமதி பெறாமல் கர்நாடக அரசு கிணறு வெட்டி திருப்பி விடுவது தண்ணீரை திருடுவதற்கு ஒப்பானதாகும். அதுமட்டுமின்றி, ஏப்ரல் மாதத்தில் காவிரியில் தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும் என்ற நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும், காவிரி வழக்கில் மறு உத்தரவு வரும்வரை வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் தர வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் இது எதிரானதாகும். கர்நாடகத்தின் தண்ணீர் திருட்டு கடந்த சில வாரங்களாகவே நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த அநீதியை தமிழக அரசு தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், மூடப்பட்ட மதுக்கடைகளை திறப்பதையே முதன்மைப் பணியாகக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு, அவை குறித்தெல்லாம் அக்கறை இல்லாததால் கர்நாடகத்தின் தண்ணீர் கொள்ளை தொடர்கிறது. இதனால் காவிரி மேலும் காய்ந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு காவிரியும் முக்கியக் காரணியாகும். எனவே, மதுக்கடைகளை  திறப்பதை விட்டுவிட்டு, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிணறுகளை மூட தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் வரும் ஆண்டிலாவது குறுவை, சம்பா, தாளடி போன்ற 3 போகங்களும் நன்றாக விளையும் அளவுக்கு கர்நாடகத்திடமிருந்து காவிரியில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தண்ணீர் பெறுவதற்கான நடவடிக்கைகளையும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடை திறந்தால் மக்கள் புரட்சி : அன்புமணி


குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை திறந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று – பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

என்ன தான் முயன்றாலும் சில விஷயங்களை மாற்ற முடியாது என்பது மதுக்கடைகளை மூடும் விஷயத்தில் தமிழக அரசுக்கு முழுமையாக பொருந்துகிறது. தமிழகத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், அதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல், நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறக்கும் முயற்சியில் அரசு முரட்டுத்தனமாக ஈடுபட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்கறிஞர் க. பாலு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பயனாக தமிழகத்தில்  3321 மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எத்தனைக் கடைகள் மூடப்பட்டன என்பது குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை. உச்சநீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் உள்ள பல மதுக்கடைகள் மூடப்படவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி எவரேனும் போராட்டம் நடத்தினால் அதன்பின்னர் கடையை மூடுவது குறித்து தீர்மானிக்கலாம் என்று டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மேலிடம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக  கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மூடப்பட்ட மதுக்கடைகள் அனைத்தையும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் திறக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருப்பதாகவும், அதனால் தான் குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் தீவிரம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களிடம்  9-ஆம் தேதி வரை ஓரளவு மென்மையாக நடந்து கொண்ட காவல்துறையினர் 10-ஆம் தேதி முதல் காட்டுமிரண்டித்தனமாக நடந்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். அதன்விளைவு தான் திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறையினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாகும்.  இந்த வன்முறையைக் கண்டித்து விடியவிடிய போராட்டம் நடத்திய பெண்களும், மக்களும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை அடக்குமுறைக்கு இது ஓர் உதாரணம் மட்டுமே. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போராடும் மக்களுக்கு எதிராக இத்தகைய அடக்குமுறைகளை காவல்துறை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த புளியம்பட்டி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து  220 மீட்டருக்குள் அமைந்துள்ள மதுக்கடையை மூடவேண்டும் என்று வலியுறுத்தி அத்தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பா.ம.க. துணைப்பொதுச்செயலாளருமான ஓமலூர் தமிழரசு  தலைமையில் மக்கள் ஒன்றுதிரண்டு கோரிக்கை வைத்துள்ளனர். முழக்கமிடுதல், ஆர்ப்பாட்டம் செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடாமல் அவர்கள் அமைதியாக இருந்த நிலையில், அவர்களிடம் ஓமலூர் வட்டாட்சியர் இராஜேந்திரன், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் ஆகியோர் பேச்சு நடத்தினர். அதன்படி மேட்டூர் கோட்டாட்சியர் முன்னிலையில் இதுகுறித்து பேசி தீர்வு காணலாம் என வட்டாட்சியர் வாக்குறுதி அளித்தார். அதையேற்று பொதுமக்களும் கலைந்து சென்று விட்ட நிலையில்,  அவர்களை பழிவாங்கும் நோக்குடன் ஓமலூர் தமிழரசு உள்ளிட்ட 100 பேர் மீது  மிரட்டல் விடுத்தல்,  அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ஓமலூர் வட்டத்திற்குட்பட்ட மேலும் 3 இடங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்திய மக்கள் மீதும் இதேபோன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பட்டி சக்தி நகரில் குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் மதுக்கடை திறக்கப்பட்டு வணிகம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய பல்லாயிரக்கணக்கானோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.  மதுக்கடைகள் என்ற சமூகத்தீமைக்காக போராடும் மக்களை பாராட்டுவதற்கு பதிலாக, அவர்களை தாக்குவதும், பொய்வழக்குப் பதிவு செய்வதும் ஆட்சியாளர்களின் ஒப்புதலின்றி நடக்காத விஷயங்களாகும்.

மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அவற்றை அதிரடியாக ஒடுக்காவிட்டால் மற்ற இடங்களில் மதுக்கடைகளை திறக்க முடியாது  என்ற எண்ணத்தில் தமிழக அரசு இந்த வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவையான அச்சிக்கலை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் மதுக்கடைகளை திறப்பதில் தான் எடப்பாடி பழனிச்சாமி அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதன்மூலம் இது மக்கள் அரசு அல்ல… மிடாஸ் அதிபர்களின் பினாமி அரசு என்பதை நிரூபித்துள்ளது.

மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர பெண்கள் தாங்கள் வாழும் பகுதியில் மதுக்கடை வந்தால் தங்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் தான் போராடுகிறார்கள். மதுவால் கடுமையாக பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் தான். தந்தை, கணவன், சகோதரன், மகன் என மதுவுக்கு  அடிமையான ஆண்களால் துயரத்திற்கு ஆளாவது அவர்களே. அதனால் தான் அவர்கள் போராடுகின்றனர். அதை உணர்ந்து குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

மாறாக, மதுக்கடைகளை திறக்கும் பணியை தொடர்ந்தால் அதை எதிர்த்து சட்டப் போராட்டம் மற்றும் அரசியல் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும். ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக வெடித்தது போன்று மிகப்பெரிய மக்கள் புரட்சி வெடிக்கும். அந்த புரட்சியில் மதுவுக்காக நடத்தப்படும் இந்த மக்கள் விரோத ஆட்சி தூள்தூளாக தகர்க்கப்பட்டு தூக்கி வீசப்படும் என்று எச்சரிக்கிறேன்.

ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஜாதவை விடுவிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எனக்கூறிய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், விளைவுகளை பாகிஸ்தானில் கருத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில், இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பார்லிமென்டில் எதிரொலித்தது.
*கோரிக்கை:*
காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே கூறியதாவது: ஜாதவை பாகிஸ்தான் தூக்கில் போட்டால், அது கொலையாக தான் இருக்கும். அவரை விடுவிக்காவிட்டால், மத்திய அரசு பலவீனமான அரசாக மாறிவிடும் என்றார்.
எம்ஐஎம் கட்சியின் ஓவாய்சி கூறியதாவது: அரசுக்கு அனைத்து அதிகாரமும் செல்வாக்கும் உள்ளது. அதனை அரசு பயன்படுத்த வேண்டும். ஜாதவை அரசு காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்குமா? அவரை காப்பாற்ற வேண்டியது நமது கூட்டு பொறுப்பு. இவ்வாறு அவர் பேசினார்.
*கடத்தல்:*
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் பேசுகையில், ஜாதவ் விவகாரத்தில், அடிப்படை சட்டம் மற்றும் நீதி மீறப்பட்டுள்ளது. குல்பூஷன் ஜாதவுக்கு நீதி கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும். ஜாதவ், முறையான பாஸ்போர்ட் வைத்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது. அவர் ஈரானில் சிறு தொழில் செய்து வந்தார். அங்கு ஜாதவ் கடத்தப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
*கேலிக்கூத்து:*
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கூறுகையில், ஜாதவ் பெற்றோருடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. அவரை விடுதலை செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஜாதவ் இந்தியாவின் மகன். அவரை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முட்டாள்தனமாகவும், விசாரணை கேலிக்கூத்தாகவும் உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளுங்கள். ஜாதவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது, முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. எந்த விலை கொடுத்தாவது அவரை மீட்டு கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழிசையை பார்த்தாலே ஜோதிடர்களுக்கு பயம்

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து குறித்து பேசிய திருநாவுக்கரசர், 'இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என தமிழிசை சொன்னார். அதுபோல நடந்தது. 
ஆர்.கே நகர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றார். அதுவும் நடந்திருக்கிறது.
இதனால் தமிழிசையை பார்த்து ஜோதிடர்களும், கேரள நம்பூதிரிகளும் தொழில் போட்டி அச்சத்தில் உள்ளனர்', என்றார்

“தூ” விவகாரம்:மன்னிப்பு கேட்டார் விஜயகாந்த்.

பத்திரிகையாளர்களை நோக்கிய "தூ.." என்று துப்பிய விவகாரம் தொடர்பாக டில்லி இந்தியன் பிரஸ் கவுன்சிலிடம் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.
கடந்த, 2015 ம் ஆண்டு டிசம்பர் மாதம் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவர்களை நோக்கி தூ என துப்பினார். இதையடுத்து விஜயகாந்த் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜயகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டதுடன், இந்திய பிரஸ் கவுன்சிலில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில் இன்று டில்லியில் இந்திய பிரஸ் கவுன்சில் முன்பு விஜயகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜரானார். அப்போது அவர், பத்திரிகையாளர்களை நோக்கி எச்சில் துப்பியதற்காக விஜயகாந்த் சார்பில் மன்னிப்பு கோரினார். மேலும், சேலத்தில் பத்திரிகையாளருக்கு மிரட்டல் விட்டதற்காகவும் வருத்தம் தெரிவித்தார். விஜயகாந்த்தின் மன்னிப்பு மற்றும் வருத்தத்தை ஏற்று, அவர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக இந்திய பிரஸ் கவுன்சில் தெரிவித்துள்ளது.

நான் பணம் வாங்கியது உண்மைதான்: டாக்டர் பாலாஜி!

ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போது நடந்த இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி அதற்கான விண்ணப்பத்தில் கைநாட்டு வைத்தார். அதை உறுதி செய்தவர் அரசு மருத்துவர் டாக்டர் பாலாஜி.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் பாலாஜி ₹5 இலட்சம் பெற்றதாக கூறப்பட்டிருந்தது. இது பொய் சாட்சி சொன்னதற்காக கொடுக்கபட்டது என பரபரப்பு கிளம்பியது.

இதை மறுத்த டாக்டர் பாலாஜி “அந்த பணம் வாங்கியது உண்மை தான் ஆனால் அது இலண்டன் மருத்துவர் தங்கும் செலவிற்காக தரப்பட்டது” என கூறியுள்ளார்.

வெளிவந்த ஆவணங்கள் அனைத்தும் போலி என தினகரன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி வந்த நிலையில் டாக்டரின் இந்த கருத்தால் சசிகலா தரப்பிற்கு நெருக்கடி கூடியுள்ளது.