டி.டி.வி தினகரன் கைது செய்யப்படலாம்
யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை: தினகரன்
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: தினகரன் மீது தில்லியில் வழக்கு பதிவு
ஆதிராஜன் இயக்கத்தில் விஜய ராகவேந்திரா: ஹரிப்பிரியா நடிக்கும் சிலந்தி-2
தென்னிந்திய திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான சிலந்தி படத்தை எழுதி இயக்கி வெற்றிபெற்ற ஆதிராஜன் தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனம் மூலம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ”சிலந்தி-2”
கை நிறைய சம்பாதிக்கும் வேகத்தில் நாகரீக மோகத்தில் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காற்றில் பறக்கவிட்டு..சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறி சிறகடிக்கத் துடிக்கும் பெண்களால் ஏற்படும் விபரீத விளைவுகளும் அதனால் அந்த பெண்களுக்கு உருவாகும் ஆபத்துக்களையும் மையப்படுத்தி பரபரப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது..
ரசனையான காதல்.. நாகரீகமான நகைச்சுவை.. அதிரடி சண்டைக் காட்சிகளுடன்.. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் இந்த த்ரில்லர் படத்தில் விஜய ராகவேந்திரா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.. இவர் கன்னடத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவர். நட்சத்திர குடும்ப வாரிசு.
அர்ஜுனுடன் வல்லக்கோட்டை.. கரனுடன் கனகவேல் காக்க.. சேரனுடன் முரண்.. அட்டக்கத்தி தினேஷுடன் வாராயோ வெண்ணிலவே.. நானியுடன் ஜமீன் உட்பட தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மொழிகளில் 30 படங்களில் நடித்திருக்கும் ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.. ஒரு ஸ்பெஷலான குத்துப்பாடலுக்கு சிறுத்தை புகழ் மேக்னா நாயுடு செமத்தியாக ஆட்டம் போட்டிருக்கிறார்.. இவர்களுடன் ஜஸ்வர்யா விஷால் ஹெக்டே.. சத்யஜித்.. ரங்கா உட்பட பலர் நடித்துள்ளனர்..
இசை-பெ.கார்த்திக்.. மழை..லீ..பொக்கிஷம்..ராமன் தேடிய சீதை.. சென்னை 28 பார்ட்-2.. உட்பட பல படங்களில் பணியாற்றிய ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. எடிட்டிங் ஸ்ரீகாந்த்-வி.ஜே.சாபு.. பாடல்கள் சினேகன்.. நெல்லைபாரதி.. ஆதிராஜன்.. நடனம் ராதிகா..கலைக்குமார்.. ஸ்டண்ட் மாஸ் மாதா..
படத்தின் தலைப்பு மாற்றம் பற்றி இயக்குநர் ஆதிராஜனிடம் கேட்டபோது, பெங்களூர், கோவா, மைசூர் சாமுண்டி ஹில்ஸ் உட்பட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.. தமிழ், கன்னட மொழிகளில் உருவான ’ரணதந்திரா’ தமிழில் ’அதர்வனம்’; என பெயரிடப்பட்டிருந்தது. இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த பலர் ’அதர்வனம்’ என்ற தலைப்பு அவ்வளவு புரியவில்லை எனவும், ’சிலந்தி பார்ட் 2’ என்பதே இப்படத்திற்கு சரியாக இருக்கும் என்று சொன்னதால் தற்போது சிலந்தி-2 என்ற பெயரில் தயாராகி வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
நானும் அவளும்! : உங்கள் சிந்தனைக்கு!
நானும் அவளும்!
*
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி… – என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள். அந்தப் பார்வையில் ஏக்கமா? ஏளனமா? அனுமானிப்பதில் அப்படி ஒன்றும் பிரம்மப் பிரயத் தனம் இல்லைதான்! திருமணம் ஆனவராயிருந்தால் ஏக்கப் பார்வை! ஆகாதவராயிருந்தால் ஏளனப் பார்வை!
புறநகர் மின்சார ரயில் வண்டிப் பயணத்தில் ஒரே பெட்டியில் தினமும் வந்துபோனதில், ஒரு நட்பு வட்டம் சேர்ந்திருந்தது! ஒவ்வொரு நாளும் இண்டர் நேஷனல் லெவலில் டீப் டிஸ்கஷனெல்லாம் நடக்கும். சில நேரம் காரசாரமாக! சில நேரம் யம்மியா கிரிஸ்பியா!
அன்று இந்த ரிங்டோனே விவாதத்தை தொடங்கி வைத்தது. ஒருவர் அப்படி என்ன இதில் சிறப்பு என்றார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருக்காதா? அது மாதிரி இது என் கல்யாணக் கனவு ஆசை என்றேன்! பிடித்துக் கொண்டார்கள். அங்கே கனவுகளின் கோட்டை ஒவ்வொரு கல்லாக வைத்துக் கட்டப்பட்டது!
சார்… இது 20 வருடம் முந்தைய ப்ளாஷ்பேக். நான் திருச்சி காலேஜில் படித்த போது இந்த ‘மீண்டும் கோகிலா’ படத்தை கெயிட்டி தியேட்டரில் ரசித்துப் பார்த்தேன். கமல்ஹாசன் ஸ்ரீதேவியை பெண் பார்க்கும் ஸீன்! ஸ்ரீதேவியின் அந்த முகபாவம், அழகா நீலக் கலர் பட்டுப் புடவை கட்டி, நெற்றியில் ரொம்ப அழகா குங்குமப் பொட்டு வைத்து, தலை நிறைய பூ வெச்சி, வீணையை லாகவமா மடியில் வெச்சி… அதெல்லாம்விட சுத்தி வர சொந்தக்கார பெண்மணி கள், பாக்கு இடிக்கிற பொக்கைவாய்ப் பாட்டி, மடியில ஒண்ணுக்கு அடிக்கிற குழந்தைன்னு… அட இந்த மாதிரி நம்ம வாழ்க்கையிலயும் ஒரு பெண் பார்க்கும் படலம் இருக்கணும், இதே மாதிரியான ஸீன் நடக்கணும்னு கனவெல்லாம் இருந்துது சார்…
“என்னாது..? அப்டில்லாம் நடந்ததா என்ன?” நண்பர் இடைமறித்தார்.
“அட போங்க சார்… இந்தக் காலத்துல அப்டில்லாம் நடக்குமா? பாட்டு, வீணை, புடவை, பூன்னு… எல்லாம் ஒரு கனவு; ஆசை..! ஆனா, இப்டி ஆசைஇருக்கக் கூடாதா என்ன?” – கேட்டு வைத்தேன்!
“சார்… உங்க ஆசை என்ன சார் ஆசை..! போன வாரம் பாத்தோமே ஒரு புரோக்கிராம்! நீயா நானான்னு! உண்மையிலயே அப்டி ஆக்கிப்புட்டாங்க! நீயா நானான்னுதான்!”
“அட அதெல்லாம் நான் பாக்கலையே சார்…” என்று சொன்னதுதான் தாமதம், இன்னொருவர் தன் செல்போனில் யுடியூப்பை இயக்கி, என் முகத்துக்கு நேரே நீட்டினார்.
நாலைந்து பேராக சற்று நேரம் கேட்டுக் கொண்டே வந்தோம். ரயில் ஆட்டத்தைவிட உடன் வந்த ஓரிருவரின் மனம் கொந்தளிக்க, கை கால்கள் ஆடத் தொடங்கின. “சார்.. கூல் கூல்! கொஞ்சம் இருங்க. ஏன் இப்படி கோவப் படறீங்க! என்னதான் பேசறாங்கன்னு கேப்பமே!” என்றேன்.
பெண்கள் என்னமாய் ஆசைகளை வெளிப்படுத்து கிறார்கள்! பிரமிப்பாய் இருந்தது! நான் ஏதோ மீண்டும் கோகிலா ரேஞ்சுக்கு இருக்க, பெண்களோ ஹாலிவுட்டுக்கு ஐடியா கொடுப்பார்கள் போலிருக் கிறதே! ஒரு பெண் சொல்கிறாள்… ‘மாப்பிள்ளை சும்மா கார்ல வந்து போர் அடிச்சிடிச்சி; அப்டியே ஜம்னு ஹெலிகாப்டர்ல வந்து இறங்கணும்!’
‘கல்யாண மண்டபம் அப்டி சும்மா நச்னு… 100 பவுனுக்கு குறைஞ்சி ம்ஹும்… அந்த வீடு, அதே வீடு, அதுவும் ரோட்டடில இருக்கற வீடு, எனக்கு கல்யா ணத்துக்கு முன்னாடியே எழுதிக் கொடுத்திடணும்… அப்பா கடன கட்டுவாரு; தம்பி கடன்காரனா ஆயிட்டுப் போறான்..!’
இப்படியாக எவ்வளவோ கருத்துகள்! அருகிருந்த வர்கள் கொந்தளிக்க நான் சொன்னேன்… ‘சார் பெண்கள் எவ்ளோ அழகா ஆசையை வெளிப்படுத்த றாங்க! ஆசைப் படறதுல, கனவு காணுறதுல ஒன்னும் தப்பில்லையே சார்! ஆனா… இந்த கடன்காரன், அப்பா தம்பி, நூறு பவுன், வீடு, கல்யாண மண்டபம்ங் கிற இந்த டிமாண்டுகளும் மனப்பாங்கும் தான் சார் இடிக்குது! இது ஏதோ இந்தப் பெண்களா பாத்து பேசின மாதிரி தெரில…!’ என்று இழுத்தேன்.
நகைச்சுவையாகப் போன டிஸ்கஷன் அப்படியே கொஞ்சம் சீரியஸாகிவிட்டது.
அந்தக் காலத்துல… என்று இழுத்தாலே, யோவ் இதெல்லாம் இப்போ பேசாதே! இப்ப உள்ளதைப் பேசு என்று வாயடைத்து விடுகிறார்கள். இருந்தாலும் நாம் அறிந்ததைச் சொல்லித்தானே ஆகணும்!
வழக்கம்போல் ராமாயணத்தில் இருந்து ஒரு கருத்தை சொன்னேன். ஒரு பெண்ணின் கடமையை, உரிமையை சீதை எப்படிச் சொல்கிறாள் தெரியுமா? தான் மட்டும் காட்டுக்குப் போகிறேன் என்று ராமன் சொன்னபோது, சீதை, “மனைவி, கணவன் உடலில் சரிபாதி என சுருதிகள் சொல்கின்றன? எனவே உம்மை காடு செல்லும்படி கட்டளையிட்டால் அது எனக்கும் பொருந்தும். இகலோகத்திலும் பரலோகத்திலும் ஒரு பெண்ணுக்கு கதி யார்? பிதாவா, மாதாவா, புத்திரனா, தேகமா, தோழிகளா? இல்லவே இல்லை! கணவன் ஒருவனே!
ந பிதா ந ஆத்மஜ: ந ஆத்மா ந மாதா ந சகிஜனா:
இஹப்ரீத்ய ச நாரீணாம் பதி: ஏகோ கதி: சதா
என்று கணவனே பெண்ணுக்கு கதி என்கிறாள். அது பின்னாளில் பொருளாதார ரீதியாக ஒரு பெண் ஆணைச் சார்ந்திருக்கும் நிலைக்குக் கொண்டு வந்தது. சிறு வயதில் தந்தை, பின் சகோதரன், மணமான பின் கணவன், வயதான காலத்தில் மகன் என்று ஆனது. இப்போதைய சமூகம், ஒற்றைக் குழந்தை சமூகம். அல்லது பெண்பிள்ளைகளே கொண்ட குடும்பம். அப்போது, பொருளாதார சுயசார்பு என்று பெண்ணின் சார்பு பரிணாமம் பெற்றது. அதற்காக பணிக்குச் செல் கிறார்கள். தங்களுக்கு வேண்டியதை தாங்களே சம்பாதித்து, பெற்றுக் கொள்கிறார்கள். பெற்றோரை சார்ந்திருக்கும் பெண்கள் மிகக் குறைவு. இப்படியான ஒரு பரிணாம வளர்ச்சி பெற்ற சமூகத்தில் பெண்கள் தந்தையை, சகோதரனை கடன்காரன் ஆக்குவேன் என்பது, குடும்பத்திலும், சமூகத்திலும் பிரிவினையை ஏற்படுத்தும் கருத்தாக்க செயலன்றி வேறல்ல; பெண் வாரிசு மட்டுமே உள்ள குடும்பத்தில் பெற்றோரைப் பேணும் பொறுப்பை பெண்ணே ஏற்கிறாள்! பெற்றோர் வசதி இல்லாதவர்கள் எனில், பெண்ணே உழைத்து கடமையைச் செய்கிறாள்! ஆனால் ஊடகத்தில் காட்சிப் படுத்தப் படுவது, பொருளாதார ரீதியில் உயர் வகுப்பினர்தான். அவர்களின் எண்ணங் கள் சமூகத்தின் பொது எண்ணம் அல்ல!” என்றேன்.
உண்மைதான்! என் நெருங்கிய உறவுப் பெண் ஒருத்தி. வயதாகிக் கொண்டே போகிறதே! ஏனம்மா இன்னும் திருமணத்துக்கு சம்மதிக்க மறுக்கிறாய்! அம்மா வருத்தப் படுகிறாரே! என்று கேட்டால், தெளிவாகச் சொல்கிறாள்… ‘கஷ்டப் பட்டு படிக்க வைத்து வளர்த்த அம்மாவின் எதிர்காலத்துக்கு பேங்க் பேலன்ஸ் கௌரவமாகச் சேர்த்து வைத்துவிட்டு பிறகு யோசிக்கிறேன்….!’ அவளே இந்த சமூகத்தின் பெண்ணினத்தின் அடையாளம்!
வரதட்சிணை கேட்பது தவறு என ஆன்மிகப் பெரியவர்களும் சமூகவாதிகளும் சொல்லி வந்துள் ளார்கள். அதையும் மீறி கௌரவம் என்ற பெயரில் இதை நாம் அனுமதித்துதான் வருகிறோம். ஆண் வீட்டார் கேட்கும் வரதட்சிணையைப் போல், சீர் செனத்தி என, பெண் வீட்டாரே தம் சக்தியை மீறிச் செய்வதும், பெண் பிள்ளைகளின் இந்தப் போக்குக்கு வழி வகுத்துள்ளது என்று சொல்லலாம்!
சொன்னபடி நகை பணம் கொடுக்காததால், வீடு எழுதி வைக்காததால் திருமணம் நின்றது என்று இதே நாட்களில் செய்திகளும் வரத்தான் செய்தன.
எல்லாப் பெண்களும் பெற்றோரை சுரண்டிப் பிழைப்பவர்கள் இல்லை. திருமணம் ஆகியும், தன் சம்பளத்தில் ஒரு பகுதியை பெற்றோருக்கு அனுப்பி வைக்கும் பெண்கள் அதிகம்! தங்களுக்கு வேண்டியவாறு பேசும் 25 பேரைக் காட்டி, இதுவே ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வை எனக் காட்டுவது அபத்தம், ஆபத்து!
ஆனால் ஒன்று! கல்யாணத்துக்கு நிற்கும் நம் நாட்டின் இளம்பெண்களை இவ்வளவு கேவலமாக யாராலும் சித்திரிக்க முடியாது. ஊடகங்களில் எதிர்ப்பும் அதிருப்தியும் தலைதூக்கியதும், தமது செயலை நியாயப் படுத்தும் விதத்தில் மீண்டும் ஒரு நிகழ்ச்சியை இதேபோல் நடத்தி, அடம் பிடிப்பது என்ன மாதிரியான டிஸைன்?!
இவர்கள், அண்ணனுக்கும் தங்கைக்கும் சண்டை மூட்டுகிறார்கள்; சகோதர பாசத்தை கொச்சைப் படுத்துகிறார்கள். சகோதரிகளுக்குள்ளே பிரிவினை உண்டாக்குகிறார்கள்! வீடு, பணம், நகை, புடவை, அப்ளையன்ஸஸ், நுகர்பொருள்கள் இவற்றில் மோகம் கொண்டவர்கள் பெண்கள் என நிலைநிறுத்துகிறார்கள்! இதை எல்லாம் கொடுப்பார்கள் என்றுதான் நான் அம்மா அப்பா பார்த்து வைக்கும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்.. இல்லாவிட்டால்… என்று ஒரு பெண் சொல்கிறாள். இதைக் கேட்கும் மனநிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம்!
உண்மையில், கன்ஸ்யூமரிசம் எனும் நுகர்பொருள் ஆசை கொண்டது, ஒரு மதம். இது, இந்துயிசத்தை, கிறிஸ்துவிசத்தை, இஸ்லாமிசத்தை என இசங்களை தூக்கிச் சாப்பிட்டுவிடும் தன்மை கொண்டது!
இந்த நிகழ்ச்சியில் இத்தகைய பெண்களின் ஆசைகளை, கண்டிஷன்களை அவர்களின் வாயால் கேட்ட ஆண், அவர்களைத் திருமணம் செய்யத் தயங்குவான் என்பது ஒருபுறமிருக்க, பெற்றோர்களின் நிலையை யோசித்தால் கவலைதான் மிஞ்சுகிறது!
இந்த நிகழ்ச்சியில் பேசிய பெண்களின் பேச்சுகளும் ஜோடனைகளும் நிச்சயம் அவர்களின் கருத்தோட்டங்கள் இல்லை என்றே தோன்றுகிறது. யாரே ஒருவரின் பேச்சை அவர்கள் தங்கள் முகங்களின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்!
ஒரு பவுன் நகையை சம்பாதிக்க, நேர்மையான வழியில் வியாபாரத்திலோ, மாசச் சம்பளமோ, கூலியோ பெறும் இவர்களின் தந்தை எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்? இந்த நகை, புடைவை ஆசைகளையெல்லாம் ஈடு செய்ய வேண்டுமானால், நிச்சயமாக அவர் நேர்மையற்ற வழியில்தான் சம்பாதித் தாக வேண்டும். லஞ்சம் ஊழல் குறித்து தெருவுக்கு கொடிபிடிக்க வருபவர்கள், தங்கள் தந்தை அதே ஊழலில் திளைக்க தாங்களே காரணமாவதை உணர்வார்களா? ஆடம்பரமும், தேவைக்கு மீறிய படாடோபங்களும் தங்களை மட்டுமல்ல, சார்ந்தோ ரையும் படுகுழியில் விழ வைக்கிறது!
இவர்களைப் போல், சொத்து எனக்கு, எல்லாம் எனக்கு என்று ஒவ்வொரு அண்ணன்களும் தம்பிகளும் சண்டை போட்டால், பெண்கள் பாடு மேலும் திண்டாட்டமாகும். அத்தகைய கொடூர விதையை இவர்களின் பேச்சுக்கள் தங்கள் சகோதர்களின் மனத்தில் விதைக்கும் விளைவை அவர்கள் பிற் காலத்தில் உணர்வார்கள்!
ஊடகங்களுக்கு பொறுப்பு உணர்வு வேண்டும். ரேட்டிங்குக்காக சமூகத்தில் தெரிந்தே தாங்கள் எண்ணும் நச்சுக் கருத்துகளை பிறர் எண்ணம் என்ற ரீதியில் பரப்புவது தவறு!
ஒருவர் சொன்னார், அட போங்க சார்…இதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காம, அந்த நிகழ்ச்சிய கண்டுக்காம விடறதுதான் இவங்களுக்கு ட்ரீட்மெண்ட்! இவர்களது தேவை, விளம்பரம். அது நெகடிவ்வா கிடச்சாலும் மதிப்பு உண்டு. மக்களை திசை திருப்ப நினைப்பவர்களை ஒதுக்குவதுதான் புத்திசாலித்தனம். இதுக்கு பதில் சொல்றாதை விட, நாலு ஜோக் சொன்னா, நண்பர்கள் சிரிச்சுட்டு போவாங்க… என்றார்!
– செங்கோட்டை ஸ்ரீராம்
துரத்தும் ஜெயலலிதா ஆவி: மந்திரவாதிகளிடம் ஓடும் சசிகலா குடும்பம்!
சென்னை:
ஜெயலலிதாவின் ஆவி சசிகலா குடும்பத்தினரைத் துரத்துவதாக பரவலாகப் பேச்சு எழுந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் மறைந்த சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் உயிரிழந்த விவகாரத்தைச் சொல்லி, இது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
அன்று மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவைப் பார்க்க வந்த அவரின் சொந்த அண்ணன் மகளைப் பார்க்க விடவில்லை!
இன்று தனது சொந்த அண்ணன் மகன் இறப்புக்குக் கூட வந்து பார்க்க சிறைத்துறை விடவில்லை! வாழ்க்கை ஒரு வட்டம்! – என்று சமூக வலைத்தளங்களில் சசிகலா குறித்து செய்திகள் உலாவருகின்றன.
ஜெயலலிதா இறப்புக்குக் காரணம் சசிகலா குடும்பத்தினரே என குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைத்தனர். இருந்தபோதும், அதை எல்லாம் ஒரு பொருட்டாகவே சசிகலா எடுத்துக் கொள்ளவில்லை. பன்னீர்செல்வத்தை ஆட்சியமைக்க வைத்தசில நாட்களில், தானே ஆட்சியில் அமர வேண்டும் என்று என்னவெல்லாமோ செய்தார். ஆனால் அது இயலவில்லை. கட்சி இரண்டானது. கட்சிக்கு கௌரவத்தைத் தந்த இரட்டை இலைச் சின்னமும் இப்போது முடங்கிப் போனது!
முதலமைச்சராகியே தீருவேன் என்று பன்னீர்செல்வத்தைத் தூக்கி அடித்தார். ஆனால், அவரைத் தூக்கி அடித்தது சொத்துக் குவிப்பு வழக்கில் வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.
இருப்பினும் ஜெயலலிதா சமாதி முன் நின்று, மீண்டுவருவேன் என்று சமாதியை அடித்து சத்தியம் செய்து கிளம்பினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் சிறையில் சலுகை எதுவும் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது!
இருப்பினும் ஆட்சியும், கட்சியும் தன் குடும்பத்தினரின் கையை விட்டுப் போய்விடக் கூடாது என்று குறியாக நின்றார். அதனால், ஜெயலலிதா ஒரு காலத்தில் கட்சியை விட்டுத் துரத்தி விட்ட தன் உறவினர் தினகரனை கட்சியில் து.பொ.செ. ஆக்கி, பின் ஜெயலலிதா நின்று வென்று, அவரது இறப்பால் காலியான அதே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களம் இறக்கினார். பண பலத்தால் வெற்றி பெற்று விடலாம் என நினைத்த இவர்களின் எண்ணம், தவிடுபொடியானது. தேர்தல் தள்ளிப் போனது மட்டுமல்ல, தினகரனுக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சசிகலா கணவர் எம்.நடராஜனோ, கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் காலம் தள்ளி வருகிறார்.
சசிகலாவை மட்டுமின்றி, அவர் சார்ந்த ஊழலுக்குத் துணைநின்று ஊழல் செய்த கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களையும் வருமான வரித்துறை உருவில் ஜெயாவின் ஆவி துரத்தி வருகிறது.
இதனிடையே அதிமுகவில் ஒரு குழு, சமரசம் என்ற பெயரில், தினகரனை கட்சியில் தலையிடாமல் ஒதுங்கி இருக்குமாறு கோரியுள்ளது. இவ்வாறு, ஒவ்வொரு முடிவும் தமக்கும் தம் குடும்பத்துக்கும் எதிராக வருவதை அறிந்த சசிகலா குடும்பத்தினர் போயஸ் கார்டனை விட்டே வெளியேறிவிட்டனர்.
இந்நிலையில் சசிகலாவின் உறவினர்கள் ரகசியமாக மந்திரவாதிகளை சந்திப்பதும், கோவில்களில் ரகசியமாக யாகங்களை நடத்திவருவதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது. துரத்தும் ஜெயலலிதா ஆவியின் கோபத்தைத் தணிக்க எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்று இறங்கியுள்ளதாகவே பேசப் படுகிறது. இருப்பினும் இவர்கள் செய்துவரும் யாகங்களும் பூஜைகளும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லையாம்!
இந்தச் சூழ்நிலையில்தான், சசிகலாவின் அக்கா மகன் மகாதேவன் திருவாவடுதுறைக்கு வந்த வழியில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். ஜெயலலிதாவால் ஒரு கட்டத்தில் கட்சியில் இருந்தே துரத்தியடிக்கப்பட்டவர் இந்த மகாதேவன். அவர் உயிரிழந்த விவகாரத்தை நினைத்து, சசிகலா குடும்பத்தினர் மிகவும் பயந்து போனதாகவே பேசப்படுகிறது. இவ்வாறு சசிகலா குடும்பத்தினர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களுக்கு அபசகுனமாகவே இருப்பதால், ஜெயலலிதா ஆவியின் பிடியில் இருந்து தப்ப என்ன செய்வது என்று அவர்கள் யோசித்து வருகின்றனராம்! இருப்பினும் ஜெயலலிதா மரணத்தில் விளைந்த மர்மங்களும், அவர் கொடுத்த சாபமும் கட்சியின் உண்மையான விசுவாரிகள், மக்களின் சாபமும் சசிகலா குடும்பத்தாரை சும்மா இருக்க விடாது என்று பொங்குகின்றனர் மக்கள். இதனால் பொதுமக்களிடையே, ஜெயலலிதா ஆவி குறித்த பேச்சு இப்போது பரவலாகி வருகிறது.
உருவானது ’மாருதா’ புயல்: தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‛‛ மாருதா” புயலால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, பின் இன்று அதிகாலை 2.30 மணிக்கு புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு மாருதா என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர். ஆனால் இந்தப் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை இருக்காதுஎன்றாலும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசியலுக்கு வர தயாராகும் விவிஐபி
நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் அறிவுரைகள்
- பால் உணவு உட்கொள்ளுங்கள்.
- எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளியுங்கள்.
- படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்து படுங்கள்.
- புளித்த தயிர் உணவை விருப்பி உட்கொள்ளுங்கள்.
- பசிக்கும்போது மட்டுமே உணவை உட்கொள்ளுங்கள்.
- ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.
- இரவில் நன்றாக தூங்குங்கள்.
- பெண்ணுடன் மாதம் ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.
- வாழைக்காயை உணவுக்கு பயன்படுத்தும்போது பிஞ்சிக் காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் . முற்றிய காய்களை கறி சமைத்து உண்ணக்கூடாது.
- உணவு உட்கொண்ட உடனேயே சிறிது தூரம் நடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும்.
- 6 மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்ள வேண்டும்.
- 4 மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிடுங்கள்.
- 1 1/2 மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டு சளி போன்ற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்துகொள்ள வேண்டும். ( இது ஆண்களுக்கு மட்டும் )
- 4 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
- 3 நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இட வேண்டும். (பெண்களுக்கு மட்டும்)
- விரும்பிய தெய்வங்கள், குருவை வணங்குங்கள்.
- பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்த்து விடுங்கள்.
- கரும்பு போன்ற இனிப்பவர்களாக இருந்தாலும் வயதில் மூத்த பெண்களுடனும் இனிய வாசம் தரும் தலைமுடியைக் கொண்ட விலைமாதர்களுடன் உடலுறவு கொள்ளாதீர்கள்.
- காலை இளம் வெயிலில் அலையாதீகள்.
- மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்கி வைத்திருக்காதீர்கள்.
- முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்று இருந்தாலும் அதை மறுநாள் உண்ணவேண்டாம்.
- உலகமே பரிசாக கிடைக்கிறது என்ற போதும், பசிக்காத போது உணவு உட்கொள்ளாதீர்கள்.
- உணவு உட்கொள்ளும்போது தாகம் அதிகம் எடுத்தாலும், இடைஇடையே தண்ணீர் குடிக்கக்கூடாது.
- மயக்கும் மனம் வீசும் கந்தம், மலர்கள் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகரக்கூடாது .
- மாத விலக்கான பெண்கள், ஆடு, கழுதை போன்றவை வரும் பாதையில் எழும் புழுதி உடல்மேல் படும்படி நெருங்கி நடந்து செல்லாதீர்கள்.
- இரவில், விளக்கு வெளிச்சத்தில் நிற்பவர் நிழலிலும், மர நிழலிலும் நிற்பதை தவிர்த்திடுங்கள்.
- பசியின் போது உணவு உட்கொண்ட உடனேயும் உடலுறவு வைத்துக்கொள்ளாதீர்கள்.
- மாலை நேரத்தில் தூங்குதல், உணவு உட்கொள்ளுதல், அளவுக்கு மீறிய காமச் செயல்களில் ஈடுபடுதல், அழுக்கான ஆடை அணிந்திருத்தல், தலையை வாரி முடி உதிரச்செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.
- மற்றவர்கள் கை உதறும்போது அவர்களது நகத்திலிருந்து விழும் தண்ணீரும், குளித்து தலை துவட்டும் போது உதிரும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்காதீர்கள்.

