Home Blog Page 5652

நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பா.ஜ.க போராட்டம்: 700 பேர் கைது

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை–வல்லம் ரோட்டில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடந்த சாலைமறியல் போராட்டத்துக்கு, நகர தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பார்வையாளர் பாலகிருஷ்ணன், செயலாளர் வாசன், தென்காசி ஒன்றிய பொதுச் செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் முத்து, செங்கோட்டை ஒன்றிய தலைவர் சரவணன், தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி பேச்சுமுத்து, நகர இந்து முன்னணி செயலாளர் மாசாணம் உள்ளிட்ட  ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கோ‌ஷங்கள் போட்டனர். 
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை கைது செய்தனர்.
இதே போல நெல்லை மாவட்டத்தில் நெல்லை டவுன், பாளையங்கோட்டை, ராதாபுரம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், களக்காடு, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் 
உள்ள டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர். 
இதில் 184 பெண்கள் உள்பட 700 பேரை போலீசார் கைது செய்தனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் ஏராளமானோர் பங்கேற்பு!

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் பூச்சொரிதல் விழா, சித்திரை பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 
அதன்படி பூச்சொரிதல் விழாவை தொடர்ந்து சித்திரை பெருந்திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. 
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

விஜய் மல்லையா லண்டனில் கைது

புது தில்லி:
வங்கிக் கடன் ஏய்ப்பு விவகாரத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாட்டில் வாழ்ந்து வந்த கிஷ்பிஷர்  நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா இன்று லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். 
ஸ்காட்லாண்ட் யார்ட் போலீசார் லண்டனில் செவ்வாய்க்கிழமை இன்று கைது செய்யப்பட்டார். வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தின் அவர் இன்று ஆஜர்படுத்தப் படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கார்பரேட் மோடி அரசின் வேண்டுகோளின் அடிப்படையில் ஏழை விவசாயி விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கழற்றி விடப்படலாம்!

தமிழக அமைச்சரவையில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
வருமான வரித்துறை சோதனையில் குறிவைத்து வளைக்கப்பட்டவர் விஜயபாஸ்கர்.
 
 _அவரை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய கூடாது என்பதில் தினகரன் பிடிவாதமாக இருக்கிறார். இதனை மத்திய அரசு விரும்பவில்லை. தம்பிதுரை மூலமாக விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய நெருக்கடி கொடுத்து வருகிறது.
இதனால் அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் விஜயபாஸ்கர் டிஸ்மிஸ் செய்யப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவே கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுநரும் சென்னையில் இருப்பதால் அமைச்சரவை மாற்றத்துக்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

அன்னிய செலாவணி மோசடி: கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ்

ரூ.45 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ்
புது தில்லி: ரூ.45 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரூ.45 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விளக்கம் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரூ.2,262 கோடி முறைகேடு வழக்கில் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (ஏப்-18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (ஏப்-18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 இதன்காரணமாக நாளை (ஏப்-18) பகல் 12 மணியிலிருந்து மாலை 3 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
18 மாவட்டங்கள் பின்வருமாறு:
1. சென்னை
2. திருவள்ளூர்
3. காஞ்சிபுரம்
4. அரியலுார்
5. கடலூர்
6. விழுப்புரம்
7. கிருஷ்ணகிரி
8. திருவண்ணாமலை
9. கரூர்
10. திருச்சி
11. தர்மபுரி
12. வேலூர்
13. நாகை
14. புதுக்கோட்டை
15. நாமக்கல்
16. பெரம்பலூர்
17. சேலம்
18. ஈரோடு
பகலில் தேவையின்றி வெளியில் வருவதை மக்கள் தவிர்க்கவேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் முன்னச்சரிக்கை தேவை.

இரட்டை இலை மீட்புக்கு லஞ்சம்: தினகரன் முதல் குற்றவாளி!

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயற்சி மேற்கொண்டதாகப் பதியப்பட்ட வழக்கில்,  டி.டி.வி தினகரன் முதல் குற்றவாளி என்று சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஜாமீனில் வெளிவரமுடியாத லஞ்ச ஊழல் தடுப்பு சட்டம் IPC Sec 170 and 120(b). Sec 8 of Prevention of Corruption Act. பிரிவுகளின் கீழ் T.T.V தினகரன் மீது வழக்கு பதிவு செய்தது தில்லி போலீஸ்.

முன்னதாக அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி. டி.வி. தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துதது. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியது .

இரட்டை இலை சின்னத்தைப் பெற சுபாஷ் சந்திரா என்ற இடைத்தரகருக்கு ரூ.1.30 கோடி லஞ்சம் முன்பணமாகக் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பேச்சைக் குறைங்கப்பா: பாஜக., தலைவர்களுக்கு மோடி அறிவுரை!

புவனேஸ்வர் : 

பா.ஜ., தலைவர்கள் பேச்சை குறைப்பது எப்படி என பாடம் கற்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

ஒடிசாவில் நடந்த பா.ஜ., செயற்குழுவின் 2வது நாளில் பேசிய பிரதமர் மோடி, கட்சி தலைவர்கள் எங்கு, எப்படி அமைதி காக்க வேண்டும் என சில அறிவுரைகளை வழங்கினார். அப்போது,  பா.ஜ., தலைவர்கள் பேச்சில் கவனம் செலுத்துவது அவசியம் என்று கூறினார்.

மேலும்,  நான் ஒவ்வொரு முறை டிவி பார்க்கும் போதும் யாராவது ஒரு பா.ஜ., தலைவர் பேட்டி கொடுக்கிறார். சில சமயங்களில் அவர்கள் பேசுவது சர்ச்சை ஏற்படுத்தும் விதத்திலேயே உள்ளது. எப்படி அமைதி காப்பது என்பது பற்றி நீங்கள் பாடம் கற்க வேண்டும்.

யார் மைக்கை நீட்டினாலும் எப்போதும் ஏதாவது சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை.

சர்ச்சைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் பேசுவதை கட்சியால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

தலைவர்கள் தங்களின் வாய்க்கு பூட்டு போட கற்றுக் கொண்டு, கட்சி வேலைகளை மட்டும் பார்த்தால் போதும் என்று எச்சரிக்கும் வகையில் அறிவுரை வழங்கியுள்ளார். 

மதுரை வாடிப்பட்டி பகுதியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

வாடிப்பட்டி:
வங்கக்கடலில் காற்றழுத்ததாழ்வுநிலை உருவாகி உள்ளதால் பாம்பன்துறைமுகத்தில் 2ம்எண் புயல்எச்சரிக்கைகூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. 
இது குறைந்த காற்றழுத்ததாழ்வு மண்டலமாக மாறம் வாய்ப்பு உள்ளது. அது வடக்கு, வடகிழக்குபகுதியில் நகர்ந்து நாளை பர்மா அருகே கரையை கடக்கிறது. இதனால் தமிழகத்திற்கு எந்தவிதபாதிப்பும் இல்லை. மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழையில்லாததாலும் தற்போது பங்குனி மாதம் முதல் கோடைவெப்பம் கொளுத்துவதாலும் ஏரி, கண்மாய், குளங்கள் எல்லாம் வறண்டு காணப்படுகிறது. 
இந்நிலையில் நேற்று மாலை 3.30மணிக்கு வாடிப்பட்டி அருகே சிறுமலை பகுதியில் மேகங்கள் திடீர் என்று ஒன்றுதிரண்டு நெருப்பைகக்கும் சூரியகதிர்களை மறைத்தன. மேலும் மிதமாக தொடங்கி சூறைகாற்றுடன் கூடிய பலத்தமழை 4மணியிலிருந்து 5மணிவரை பெய்தது. இந்தமழை சிறுமலை கிராமங்கள் குலசேகரன்கோட்டை, விராலிப்பட்டி, செம்மினிப்பட்டி, கச்சைகட்டி, குட்லாடம்பட்டி பகுதியிலும் வாடிப்பட்டி பஸ்நிலையம் மற்றும் நகர்புறபகுதிகளில் மட்டும் பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழ்நிலை உருவானது. மேலும் தாதம்பட்டி மந்தை, சந்தை, பேரூராட்சிஅலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கிநின்றது.
செய்தி: ரவிசந்திரன், மதுரை

தினகரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் : தலைவர்கள் கண்டனம்

சென்னை : அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி. டி.வி. தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ.1.30 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த செயலை கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
*ஜி.ராமகிருஷ்ணன் கருத்து*
லஞ்சம் கொடுத்த தினகரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கே பணம் கொடுத்தவர் தான் டி.டி.வி. தினகரன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி அளித்தார். 
*திருமாவளவன் பேட்டி*
தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறினார். தேர்தல் ஆணையத்தை ஊழல்மயப்படுத்த தினகரன் முயற்சிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தையே விலைபேச முடியும் என டி.டி.வி. தினகரன் நினைப்பது வருத்தம் அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.
*முத்தரசன் பேட்டி*
தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் தரமுடியும் என்ற செய்தி கவலை அளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை எனவும் கூறியுள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்குவது ஜனநாயகத்துக்கு வேட்டு வைக்கும் செயல் என்று கூறினார்.
*கோபண்ணா கருத்து*
அதிமுகவே ஒரு ஊழல் கட்சிதான் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா கருத்து தெரிவித்துள்ளார். ஊழல் வழிவந்த தினகரனின் செயல் வெட்கக்கேடான செயல் என்று தெரிவித்தார்.மேலும் ஊழல் பணம்தான் அதிமுகவின் பலம் என கோபண்ணா குற்றம் சாட்டியுள்ளார். 
*திமுக வழக்கறிஞர் பேட்டி*
பண பலத்தை மட்டும் நம்பியே அதிமுக செயல்படுகிறது என திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளனர்.