Home Blog Page 5651

சோதனை முயற்சியில் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ஹோம் பிராட்பேண்ட்

மும்பை:

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் கடந்த ஆண்டு அறிமுகமாகி இந்தியாவில் முன்னணி இடத்தை பிடித்துள்ள நிலையில் ஜியோவின் அடுத்த கட்ட அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஜியோ ஃபைபர் ஹோம் பிராட்பேண்ட் சேவை கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அதன் சேவைகள் சார்ந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், ஜியோ ஃபைபர் ஹோம் பிராட்பேண்ட் சேவையின் சோதனைகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ள நகரங்கள் ஜியோ வாடிக்கையாளர் சேவை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ட்விட்டரில் ஒரு கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகை முதற்கட்டமாக மும்பை, டெல்லி, ஆமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா உள்ளிட்ட நகரங்களில் துவங்கும் என தெரிவித்துள்ளது. மற்ற நகரங்களிலும் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

ஜியோ ஃபைபர் பிரீவியூ பிராட்பேண்ட் சேவைகளை பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் பிராட்பேண்ட் வேகம் குறித்து பலமுறை ட்வீட் செய்துள்ளனர். அதன்படி 1Gbps இணைப்பில் 70Mbps முதல் 100Gbps வரையிலான வேகம் கிடைத்ததாக தெரிவித்திருந்தனர், எனினும் அதிகபட்சம் பூனேவில் 743.28Mbps வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். சேவையை துவங்கிய முதல் 90 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்பட்டு அதன் பின் ஒருமுறை கட்டணமாக ரூ.4000 – ரூ.4500 வரை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கட்டணம் ஜியோ ஃபைபர் ரவுட்டருக்கானது என்றும் இந்த கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளியானது விவேகம் டீசர்: அஜித் ரசிகர்கள் உற்சாகம்

vivegam - 2026

சென்னை:

இயக்குனர் சிவா கைவண்ணத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் திரைப்படத்தின் முதல் டீசர், நேற்று வெளியானது. நள்ளிரவு 12.01க்கு வெளியான டீசரை அதிகம் பேர் யுடியூபில் கண்டு ரசித்தனர்.

சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் படம் விவேகம். அஜீத்தின் மனைவியாக காஜல் அகர்வாலும், முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாஸனும் நடித்துள்ளார்கள். விவேகம் படத்தின் டீஸர் எப்பொழுது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு தனது ட்வீட் மூலம் பதில் கூறியிருந்தார் சிவா. மே 18ம் தேதி டீஸர் வெளியிடப்படும் என்று கூறியிருந்த நிலையில், ’தல’ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக டீஸர் ரிலீஸ் தேதியை மே 11ம் தேதிக்கு மாற்றுகிறோம் என தெரிவித்திருந்தார் சிவா.

இந்நிலையில் தயாரிப்பாளரான சத்யஜோதி நிறுவனம், இதற்கென யுட்யூபில் லைவ் கவுன்ட்டவுன் பக்கத்தைத் நேற்று காலையே தொடங்கியது. அந்தப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் சரியாக இரவு சரியாக 12.01 மணிக்கு விவேகம் டீஸர் வெளியிடப்பட்டது. ஒரு தமிழ்ப் படத்தின் டீசருக்கு இதுபோல லைவ் கவுன்ட்டவுன் பக்கம் தொடங்கப்பட்டது அஜித்தின் விவேகத்துக்குத்தான் என்பது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தது.

விவேகம் படத்தின் டீசர் இது…

மே 15 முதல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி

வருகிற 15ந் தேதி முதல் 19ந் தேதி வரை 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொள்ள இருக்கிறார்.

இந்த 5 நாட்களும் திருச்சி, திண்டுக்கல், கரூர், அரியலூர், தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். மற்ற மாவட்டங்களுக்கான தேதி பின்னர் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. இதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்ப்பட்டுள்ளதாக ரஜினி ரசிகர் மன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது

மங்கலதேவி கண்ணகிக்கோட்ட வழக்கு

இன்று 10-05-2017சித்திரா பௌர்ணமி.
மங்கலதேவி கண்ணகி கோட்டம்.
சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு .

சித்திரா பௌர்ணமி யொட்டி கம்பம் பள்ளத்தாக்கில் வண்ணாத்திப் பாறை அருகே அமைந்துள்ள “கண்ணகி கோட்டத்திற்கு” தமிழகத்திலிருந்து பயணிகள் செல்வது வாடிக்கை.

1975லிருந்து கேரளா கண்ணகி கோட்டத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, இங்கே வழிபடச் செல்லும் தமிழக மக்களை கேரள காவல் துறையினர் தாக்குவதும், தடுப்பதுமாக தமிழர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருந்தனர்.

தேவையில்லாத பதட்டங்களை உருவாக்கி, வழிபடச் செல்லும் தமிழர்களை பீதிக்கு உட்படுத்தி கடந்த 40 ஆண்டுகளாக கேரள காவல்துறையினர் அலைக்கழித்து வருகின்றனர்.

30 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்சனை தீவிரத்தை அடைந்த போது, கண்ணகி கோட்டம் அமைந்துள்ள இடம் தமிழகத்திற்குச் சொந்தமானது என்ற தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தேன்.

சென்னை உயர்நீதிமன்றமும் என்னுடைய வழக்கை விசாரித்து,
“அங்கு செல்லும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு, அமைதியாக வழிபாடு நடத்தவும் உரிய நடவடிக்கைகள் இருக்கவேண்டும் ” என்று கருத்தைத் தெரிவித்தது. இதன்பின் கேரள காவல்துறையினர் தங்கள் அத்துமீறல்களை நிறுத்திவிட்டு அடக்கி வாசித்தனர்.

அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், அப்போதைய குடியரசுத் தலைவர் ஜெயில்சிங்கிற்கு இந்தப் பிரச்சனையில் தலையிடும்படி கடிதம் எழுதினார்.

இந்த சமயத்தில் பழ.நெடுமாறன் அவர்களோடு நானும் கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள, கண்ணகி கோட்டத்திற்கே சென்று சேதாரமான கண்ணகி சிலையினை தூக்கி நிறுத்தி, வழிபாட்டுக்கு உரிய தேவைகளை சீர்செய்தோம். இந்நிகழ்வில் குமரி அனந்தனும் திடீரென எங்களோடு இடையில் வந்து கலந்துகொண்டார்.
இந்த செய்தி அன்றைய பத்திரிகைகளில் முக்கியச் செய்திகளாக வெளிவந்தன.

இன்றைக்கும் கண்ணகி கோட்டம் அமைந்துள்ள இப்பகுதி தமிழகத்தின் எல்லைக்குள் இருந்தும், கேரளா அது தங்களுடைய மாநில எல்கைக்குட்பட்ட பகுதி என்று நாட்டாண்மை செய்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இதில் வேதனை என்னவென்றால், இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் கடந்த 07-04-15 அன்று தேக்கடி வனத்துறை விருந்தினர் விடுதியில் நடத்திய கண்ணகி கோட்டம் சம்பந்தமான கூட்டத்தில், தேனி மாவட்ட ஆட்சித் தலைவரும், தமிழக அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த கூட்டத்தில், இடுக்கி மாவட்ட ஆட்சியர் சதீஷ், கண்ணகி கோட்டம் கேரளாவுக்குச் சொந்தமானது என்று சொன்னபோது, தேனி மாவட்ட ஆட்சியர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்தது இன்னும் வேதனையைத் தருகின்றது.

1965 காலகட்டத்திலிருந்து சிரமமில்லாமல் கண்ணகி கோட்டத்திற்குச் சென்று ஏழு நாட்கள் தமிழர்கள் விழா நடத்தினார்கள். 1980லிருந்து கேரள அரசு ஏழுநாட்கள் நடைபெற்ற விழாவை மூன்று நாட்களாகக் குறைத்தது. 1986லிருந்து ஒருநாள் விழாவாகக் குறைத்து கடுமையான சோதனைகளை மேற்கொண்டு, ஒருகட்டத்தில் தமிழர்கள் மீது லத்தி சார்ஜும் செய்தார்கள் கேரள காவல்துறையினர்.

இப்படியாக தொடர்ந்து முறையற்ற தன்மையில் நடந்துகொள்ளும் கேரளக் காவல் துறையோடு தமிழகம் ஏன் இணங்கிப் போகவேண்டும்?. இது மேலும் நம் உரிமைகளை இழக்கின்ற நிலைப்பாட்டுக்கே இட்டுச் செல்லும்.

பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் எடுக்கப்பட்ட சர்வேகளில் கூட கண்ணகி கோட்டம் தமிழகத்தைச் சேர்ந்த பூமி என்றே கணக்கில் காட்டப்பட்டுள்ளது. 1913 மற்றும் 1915ம் ஆண்டுகளில் ஆங்கில அரசு வெளியிட்ட வரைபடங்களிலும் தமிழகத்தில் எல்லைகளிலேயே கண்ணகி கோட்டம் அமைந்துள்ளது.

நாடு விடுதலைக்குப்பின் 1976ம் ஆண்டு தமிழக, கேரளா அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயில் கூட, கண்ணகி கோட்டம் தமிழக எல்கைக்குள் அமைந்தது என்றுதான் முடிவெடுத்தனர்.

இவ்வளவு அடிப்படை ஆதாரங்கள் இருந்தும், கேரளா அரசு முல்லைப்பெரியாரிலும், நெய்யாறிலும், பம்பாறு போன்ற நீராதாரப் பிரச்சனைகளில் காட்டுகின்ற அராஜகப் போக்கையே கண்ணகிக் கோட்டத்திலும் காட்டுகின்றது.

சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் ஆவணங்களையும் இந்தப் பதிவில் இணைத்துள்ளேன்.

#சித்திராபெளர்ணமி
#கண்ணகிகோட்டம்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-05-2017

பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்: மதுரையில் உற்சாகம்

மதுரை:
பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் வந்த கள்ளழகர், வைகை ஆற்றில் இன்று காலை 6 மணிக்கு இறங்கி, பக்தர் வெள்ளத்தில் மிதந்தார்.

ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, பரியட்டம் அணிந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதைக் காண இரவு முதலே பக்தர்கள் வெள்ளம் போல் திரண்டிருந்தனர். அவர்களின் உற்சாகத்தைக் காணவே தாம் வந்தது போல், அழகர்மலை திருமாலிருஞ்சோலை கள்ளழகர் பிரான், வைகை ஆற்றில் இறங்கி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா, தேரோட்டத்துடன் நிறைவடைந்ததையடுத்து, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக திங்கள்கிழமை அழகர்மலையிலிருந்து புறப்பட்டு அப்பன்திருப்பதி, கள்ளந்திரி என வழிநெடுக பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த கள்ளழகர் செவ்வாய்க்கிழமை நேற்று காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வந்தார்.

அங்கே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை கோவிந்தா, கோவிந்தா என கோஷங்களை எழுப்பி, அழகரை எதிர்கொண்டு அழைத்தனர். பின் செவ்வாய் நேற்று மாலை 5 மணிக்கு அழகர் புறப்பாடு கண்டு, அம்பலக்காரர் மண்டபத்துக்கு வந்தார். அழகர் தாம் வந்த வழி யெங்கிலும் அன்பர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, தல்லாகுளம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவிலிலுக்கு இரவு 9.30 மணிக்கு வந்தடைந்தார். அங்கே திருமஞ்சனம் கண்டு, தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். நள்ளிரவு 12 மணிக்கு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, தமுக்கம் கருப்பணசாமி கோவிலுக்குப் புறப்பட்ட அழகர் வெட்டிவேர் சப்பரத்திலும், 3 மணிக்கு தமுக்கம் எதிரில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளினார்.

தொடர்ந்து அதிர்வேட்டுகள் முழங்க தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு’ உடுத்தி அதிகாலை வைகை ஆற்றுக்கு வந்தார். அங்கே வீரராகவப் பெருமாள் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றார். இதன் பின் காலை 6 மணி அளவில் வைகை ஆற்றில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார்.

அழகரை எதிர்கொண்டழைக்க மதுரையே விழாக்கோலம் பூண்டிருந்தது. மதுரை நகர் முழுவதும் எங்கே நோக்கினும் பக்தர் கூட்டம்தான். பச்சைப் பட்டுடுத்தி வந்த கள்ளழகர் தம் வாழ்வில் சுபிட்சத்தையும் செழுமையையும் வழங்குவார் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறினர். சித்திரை மாத வெயிற்காலம் என்பதால், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, குளிர்வித்தனர். விசிறிகள் கொண்டு வீசி, அன்பர்களுக்கு பலர் தொண்டு புரிந்தனர்.

 

ஜெயலலிதா உயில் என்னிடம்: சொல்கிறார் தீபக்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், *ஜெயலலிதாவின் உயில் தன்னிடம் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்* 
*உயில்படி சென்னை போயஸ் கார்டன் பங்களா, சென்னை பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டடங்கள், சென்னை, செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள ஜெயலலிதா வீடு, கோடநாடு எஸ்டேட், ஐ தராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட எட்டு சொத்துக்கள் எனக்கு சொந்தம்* என்கிறார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற சித்திரை தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதே போல இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தோளுக்கினியானில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 4.15 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைதார். பின்னர் 5 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார்.சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.
திருத்தேர் ஸ்ரீரங்கம் சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்தது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா கோவிந்தா’ என்று கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து  இழுத்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் செய்து இருந்தார்.

பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா

பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது 
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிராபகரன் தலைமையேற்று கல்வியில்  சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார் ,கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்ற தலைவர் செல்வன் திருக்குறள் இசை ,நடனம், ,உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பரிசு வழங்கினார் ,முன்னதாக 
பள்ளி நிர்வாகி தேவி வரவேற்றார் ஆசிரியர் சந்தாணம் நன்றியுரை ஆற்றினார்

சத்யராஜ்க்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்க கூடாது: ராமதாஸ்

சத்யராஜ்க்கு எதிரான போராட்டத்தை அனுமதிக்க கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை
காவி ரி பிரச்சினையில் கன்னடர்களை நடிகர் சத்யராஜ் தாக்கிப் பேசியதாகவும், அதைக் கண்டித்து அவர் நடித்த பாகுபலி-2 படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன. அதுமட்டுமின்றி, திரைப்படத்தின் வெளியீட்டு நாளான 28-ஆம் தேதி கர்நாடகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன. இது கண்டிக்கத்தக்கது.
பாகுபலி -2 திரைப்படம் ஆந்திரத்தைச் சேர்ந்த இயக்குனரால் அம்மாநிலத்தை மையமாகக் கொண்ட கற்பனை கலந்த கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழி பேசும் கலைஞர்கள் நடித்துள்ளனர். இதை ஒரு பிரமாண்டமான கலைப் படைப்பாக மட்டும் தான் பார்க்க வேண்டும்; இரசிக்க வேண்டும். அதற்கு மாறாக, கன்னடர்களை கடுமையாக விமர்சித்த தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் நடித்திருக்கிறார்… அதனால் அந்தப் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்பதும், அதற்காக முழு அடைப்பு போராட்டம் நடத்துவோம் என மிரட்டுவதும் சகிப்பற்ற, குறுகிய மனப்பான்மை கொண்ட, வெறுப்பு அரசியலின் அடையாளங்களாகும்.
காவிரிப் பிரச்சினைக்கான போராட்டம் கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதில் நடிகர் சத்யராஜ் கன்னடர்களை இழிவுபடுத்தியோ, தரக்குறைவாகவோ பேசவில்லை. காவிரிப்பிரச்சினையில் தமிழகத்திற்கு உள்ள நியாயங்களைத் தான் எடுத்துக் கூறினார். இதை சத்யராஜின் கருத்தாக பார்க்கக்கூடாது. ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாகத் தான் பார்க்க வேண்டும். காவிரிப் பிரச்சினை குறித்து ஒரு நடிகர் கூறிய கருத்துக்களை அவர் நடித்த திரைப்படங்களுடன் இணைத்துப் பார்த்து சர்ச்சைகளை எழுப்புவது முறையல்ல. 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு சத்யராஜ் நடித்த சுமார் 30 திரைப்படங்கள் கர்நாடகத்தில் வெளியாகியுள்ளன. பாகுபலி -1 திரைப்படத்தில் கூட நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். அத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு கர்நாடகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அவ்வாறு இருக்கும் போது சத்யராஜ் காவிரிப் பிரச்சினைக்காக குரல் கொடுத்ததைக் காரணம் காட்டி அவருக்கும், அவர் நடித்த திரைப்படத்திற்கும் சிக்கல் ஏற்படுத்துவது நல்லதல்ல. இது கெட்ட நோக்கம் கொண்ட அரசியலாகும். தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க முயற்சிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராகவும், தில்லியில் 38 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்களை திசைத் திருப்பும் நோக்குடன் தான் கர்நாடகத்தில் இப்படி ஒரு சிக்கலை சில கட்சிகள் தூண்டிவிடுவதாக தோன்றுகிறது. இத்தகைய போராட்டங்கள் ஊக்குவிக்கப்பட்டால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கர்நாடகத்தில் பாகுபலி-2 திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக கன்னட மக்கள் குறித்து பேசிய பேச்சுக்களுக்காக நடிகர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். இது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. அதேநேரத்தில் காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இது அவரது துணிச்சலையும், கொள்கை உறுதியையும் காட்டுகிறது. இதற்காக நடிகர் சத்யராஜுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். சத்யராஜின் விளக்கத்திற்குப் பிறகும் கர்நாடகத்தில் பல இனவாத அமைப்புகள் அவரது உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 
தமிழ் திரையுலகில் கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகர்களும், கலைஞர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள் பல நேரங்களில் சொந்த மாநில உணர்வுடன் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். சத்யராஜ் விவகாரத்தில் கன்னட அமைப்புகள் கடைபிடிக்கும் அதே அணுகுமுறையை தமிழகமும் கடைபிடித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழர்களும் அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி ஆகியவற்றை விரும்புபவர்கள் என்பதால் இதுபோன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள். இந்தியாவில் அனைத்து மொழி பேசுபவர்களும் சகோதரர்கள்; அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். பா.ம.க.வும், தமிழர்களும் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் நம்பிக்கைக் கொண்டிருக்கும் நிலையில் அதை சிதைக்கும் வகையில் கன்னட அமைப்புகள் செயல்படக்கூடாது.
கன்னட அமைப்புகளின் வன்முறை மற்றும் மிரட்டல்களை அம்மாநில அரசு கண்டும் காணாமலும் இருப்பது வருத்தமளிக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் காவிரிக்கு எதிரான போராட்டத்தை கண்டும் காணாமலும் விட்டதன் விளைவாக நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளும், சரக்குந்துகளும் தீயிட்டு எரிக்கப்பட்டன. தமிழர்கள் கடுமையான இன்னலுக்குள்ளானார்கள். மீண்டும் அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட அனுமதிக்கக்கூடாது. நடிகர் சத்யராஜ், பாகுபலி திரைப்படம் ஆகியவற்றுக்கு எதிரான கன்னட அமைப்புகளின் போராட்டங்களை கர்நாடக அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

எனக்கு எதிர்பார்ப்பில்லை; ஏமாற்றமுமில்லை: ‘தியாகி’ தினகரன்!

dinakaran 1 - 2026
எனக்கு எதிர்பார்ப்பு இல்லாததால் ஏமாற்றம் இல்லை என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன். 
இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், நடப்பு நிகழ்வுகள் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர்,  
அமைச்சர்களுக்கு ஏதோ பயம் ஏற்பட்டுள்ளது. 
நான் ஒதுங்குவதால் சிலருக்கு நன்மை என்றால் அதை செய்ய நான் தயங்க மாட்டேன்.
எக்காரணத்தை கொண்டும் இயக்கம் பிளவு படக்கூடாது
என் பலத்தை காட்ட நான் கூட்டம் நடத்தவில்லை. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தினேன்
அமைச்சர்களின் இந்த திடீர்  முடிவிற்கு என்ன காரணம் ? தெரியவில்லை! 
பொதுச் செயலாளர் கொடுத்த பதவியில் இருந்து நான் எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும்?
துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து பொதுச் செயலாளரிடம் பேசி முடிவு எடுக்கப்படும்
தொண்டர்களுக்கு விரோதமாக நான் நடக்கமாட்டேன். 
எனக்கு ஆதரவு என தனியாக எம்எல்ஏக்கள் இல்லை. 
கட்சியை களங்கப்படுத்தி விடக்கூடாது 
எனக்கு எதிர்பார்ப்பு இல்லாததால், ஏமாற்றம் கிடையாது. 
சலசலப்பால் கட்சி, ஆட்சிக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என உறுதியாக உள்ளேன்.
கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்குமாறு என்னிடம் செங்கோட்டையன் கூறியிருந்தால் நானே ஒதுங்குவதாக கூறியிருப்பேன்
சசிகலா கூறுவதை ஏற்று நான் முடிவு எடுப்பேன்
ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதால் கட்சிக்கு பலம் என்றால் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கை நல்லது தான்
துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக சொன்னால் விலகுவேன்.
அ.தி.மு.க.வின் இரு பிரிவினரும் இணைந்து செயல்படுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை 
அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எனது ஆதரவாளர்களை கேட்டுக் கொள்கிறேன்
கட்சியிலிருந்து நேற்றே நான் ஒதுங்கிவிட்டேன்.
கட்சி நலன் கருதி முதலமைச்சர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
என் பலத்தை காண்பிக்க, சண்டைபோட வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை.
கட்சிக்கு இடையூறு வருமாறு நடந்துகொள்ள மாட்டேன்: 
பிரச்னைக்கான காரணம் பற்றி கணிக்க நான் குருமூர்த்தி இல்லை…
சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் என்னை நீக்க பார்க்கிறார்கள்…
 – இவ்வாறு அவர் கூறினார்.