ராம்கோ நிறுவன தலைவர் ராம சுப்பிரமணிய ராஜா காலமானார்
ஸ்ரீ ராமானுஜருக்கு காஞ்சி வரதன் அருளிய ஆறு வார்த்தைகள்
ஸ்ரீ ராமானுஜருக்கு காஞ்சி வரதன் அருளிய ஆறு வார்த்தைகள்
ராமானுஜர் தன் இல்லத்திற்குக்கூட எப்பொழுதாவதுதான் செல்வது என்று தன்னை மாற்றிக் கொண்டிந்தார். காரணம், தன் மனைவியான தஞ்சம்மாளே பாகவதர்களை மதிக்க வில்லையே! அதனாலேயே சதாகாலமும் காஞ்சி வரதனுக்கே தன்னை ஆட்படுத்திக்கொண்டு அங்கேயே தொண்டு செய்து தனது காலத்தைக் கழித்து வந்தார். இப்படி காலத்தைக் கழித்துக்கொண்டிருந்த ராமானுஜர் திருக்கச்சி நம்பிகள் மூலமாக தன் தூது விஷயத்தைச் உரைத்தார். எம்பெருமாள் பேரருளாளனும் நம்பிகள் மூலமாக ஆறு வார்த்தைகளை அனுக்கிரகமாகப் பொழிந்தார்.
அஹமேவ பரம் தத்வம்
க்ஷேத்ரங்ஞ ஈச்வரயோர் பேத:
மோக்ஷ உபாய: ந்யாஸ ஏவ
ந அந்திம ஸ்ம்ருதிரிஷ்யதே
தேஹாலஸானே பரமம் பதம்
பூர்ணாசார்யம் ஸமாச்ரய
என்று ஆறு நல் வார்த்தைகளை அருளினார். இவற்றின் தேரிய பொருள் வருமாறு:
நானே உலகிற்குக் காரணமான தத்துவங்களுக்கும் காரணமான பரதத்துவமாவேன்.
அறிவாளியான நம்பிகளே! ஜீவனுக்கும், ஈசுவரனுக்கும் வேற்றுமை (எல்லா பிரமாணங்களாலும் தேறியே நிற்கிறது)
மோட்சத்தை விரும்பும் ஜனங்களுக்கு என்னை சரணமாக (உபாயமாக) அடைவதாகிற ந்யாஸமே மோட்ச உபாயமாகும்.
இப்படி என்னை உபாயமாகக் கொண்ட பக்தர்களுக்கு அந்திம ஸ்ம்ருதி என்கிற கடைசி நினைவு அவசியமில்லை.
இத்தகைய பக்தர்களுக்கு இந்த ஜென்மத்தின் முடிவிலேயே பரமபதத்தை நானே அருளுகிறேன்; மேலும்,
நற்குணநிதியான மஹாபுருஷரான பெரிய நம்பியை அடைவீர்.
இங்ஙனம் என்று நான் கூறிய ஆறு வார்த்தைகளை ராமானுஜருக்கு தெரிவிப்பீர் என்று காஞ்சி வரதன் அத்திகிரிப் பெருமாள் தெரிவித்தார். பகவானால் இங்ஙனம் அருளப்பட்ட அந்த வாக்கியங்களைக்கேட்ட திருக்கச்சிநம்பியும், வரதனால் சொல்லப்பட்ட அந்த ஆறு வார்த்தைகளையும் ராமானுஜருக்கு கூறினார். இவ்வாறு கூறக்கேட்ட ராமானுஜரோ “நாம் ஏற்கனவே ஆராய்ந்து முடிவு கண்ட அர்த்தங்களோடு இதுவும் ஒத்திருக்கிறதே!’’ என்று வியப்புற்றார். அதன் பிறகு ராமானுஜர், தேவப் பெருமாளையும், திருக்கச்சி நம்பியையும் மிகவும் பக்தியுடன் சேவித்து விட்டு பெரிய நம்பியைக் காண விரும்பி காஞ்சியை விட்டு ஸ்ரீரங்கத்தை நோக்கிச் சென்றார் ராமானுஜர்.
இதற்கிடையே திருவரங்கத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூற விழைகிறேன். ஸ்ரீரங்கத்தில் பரமபதமடைந்த பரமாத்மாவான, தம், ஆசார்யரான ஆளவந்தாருக்கு கடைசி சரம கைங்கர்யங்களை (கடைசி கருமங்களை) பெரிய நம்பிகள் முதலிய அந்தணர் தலைவர்களான முக்கிய வைணவ சிஷ்யர்கள் பரம பக்தியோடு நன்றாக செய்து முடித்தனர். அந்த யாமுனாசார்யரின் (ஆளவந்தாரின்) பெருமைகளையும், அருமைகளையும், கல்யாண குணங்களையும் அடிக்கடி பேசிக் கொண்டே இருந்தனர். அவரது பிரிவுக் கடலில் மூழ்கி கரையேற முடியாமல் தவித்தனர். அழுத கண்ணீரும் கம்பலையுமாக, சோகமே உருவாகக் காணப்பட்டனர்.
அப்போதுதான் ராமானுஜரை எல்லோருமே நினைவு கூர்ந்தனர்.
ஸ்ரீரங்கத்திலுள்ள சில வைணவ பெருமக்கள், ‘‘மஹாபுருஷரான ஆளவந்தார் பரலோகமடைந்தது குறித்து வருந்தாதீர்கள். ஸ்ரீமத் ராமானுஜர் என்று பெயர் பெற்றவராய் நமக்குத் தஞ்சமாயிருக்கும் தலைவர், இப்போது மங்களமான ஸத்ய வ்ரத க்ஷேத்ரமான காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வருகிறார். ஆளவந்தாருக்குப் பிறகு மிகச் சிறந்தவரான ராமானுஜரைத் தவிர வேறு எவரும் நம் வைணவ அருமை பெருமைகளை கட்டிக்காக்கக் கூடியவர் இவ்வுலகில் இல்லை. அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?
திருவுடையவராய், அறிவாளியாய், மிகமிக அழகானவராய், ஆளவந்தாரோடு ஒத்தவராய், சீலம் முதலிய குணங்கள் உடையவராய், அறிவில் ப்ருஹஸ்பதிக்கு (ப்ரஹ்மாவிற்கு) சமானமானவராய், ஒளியில் சூரியனை ஒத்தவராய், பக்தியில் ப்ரஹ்லாதனுக்கு சமமானவராய், பொறுமையில் பூமியை ஒத்தவராய், பிறரை வெல்லும் (வாதங்களில்) திறமை படைத்தவராய், எல்லா ஞானமும் உடையவராய், விவேகமுள்ளவராய் (அதாவது, பகுத்து அறிபவராய்) எல்லா சாஸ்த்ர அர்த்தங்களின் உட்பொருளை உணர்ந்தவராய், கருணை மிக்கவராய், அறத்தில் நிலை நிற்பவராய், உலகினரை காப்பதில் (ரட்சிப்பதில்) வல்லவராயுள்ள இந்த ராமானுஜரே நமது வைணவ மதத்தைக் கொண்டு உலகினரை உய்விக்கத்தக்கவர்’’ என்று மிகவும் விஸ்தாரமாக ராமானுஜரின் அருமை பெருமைகளை எடுத்துரைத்தனர்.
பிறகு பெரிய நம்பிகளைப் பார்த்து எல்லா பெரியவர்களும் ஒருமுகமாக பின்வருமாறு கூறினர். “மகா பாக்கியசாலியான பெரிய நம்பியே! மங்களமான காஞ்சிபுரத்திற்கு வெகு சீக்கிரம் சென்றடைவீராக! ராமானுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்கள் (ஐந்து முக்கிய கருமங்கள்) செய்வித்து, சிறப்புடையவராகச் செய்து, சிலகாலம் மகாத்மாவான அவரோடுகூட அங்கேயே வாழ்ந்து சிறுகச்சிறுக வசப்படுத்தி, ஏதாவதொரு உபாயத்தாலே விரைவில் இங்கு அழைத்து வருவீராக’’ என்று கூறி முடித்தனர்.
இப்படி சொன்னதன் கருத்து யாதெனில் பகவத் ராமானுஜர், காஞ்சி தேவப்பெருமாளுக்கு மிகவும் உகந்தவர். தம் பிள்ளையாகவே, பெருந்தேவித்தாயாரும், தேவராஜனும் நினைக்கின்றனர். மேலும் திருக்கச்சிநம்பிகள் உகந்த உத்தம சீலர் ராமானு ஜர். ஆகையால் இவர்களிடமிருந்து தனியே பிரிக்க முடியாது. எனவே, ஏதாவதொரு உபாயத்தாலே அழைத்து வரவேணும் என்று கூறினர். அந்த பெரியவர்களின் வார்த்தைகளைக் கேட்ட கருணைக் கடலான பெரிய நம்பி, பரம புருஷனான ரங்கநாதனிடம் அனுமதி பெற்றவராய், குடும்பத்தோடு காஞ்சிபுரத்தை நோக்கி விரைவாகச் சென்றார். பல கிராமங்கள், மலைகள், நதிகள், காடுகள் ஆகியவற்றைக் கடந்து மதுராந்தகம் வந்து சேர்ந்தார். காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்ட ராமானுஜரும் இத்தலத்தைத் தாண்டிதான் திருவரங்கம் செல்ல வேண்டும்.
அப்படி செல்ல எத்தனிக்கையில், யாரைத் தேடிச் சென்று பார்க்க நினைத்தாரோ அவரே மதுராந்தகத்தில் எழுந்தருளியுள்ளார் என்று கேள்விப்பட்டு அவரை வணங்கி வழிபட உடனே ஆயத்தமானார். இப்படி இருவரையும், (பெரிய நம்பியையும், ராமானுஜரையும்) மேலே, முறையே காஞ்சிபுரம், திருவரங்கம் செல்ல விடாமல் கட்டிக்காத்தமையாலே ஏரி காத்த ராமர் என்றும் மதுராந்தக எம்பெருமானுக்கு பெயர் வழங்கலாயிற்று. இருவருமே ஞானத்திலே பெரிய ஏரிக்குச் சமமானவர்கள். அப்படியாகில் இந்த ஏரி அளவே ஞானமா என்று கேள்வி கூடாது. அதாவது, இதற்கு நியாய சாஸ்திரத்தில் லக்ஷித வக்ஷணை என்று பெயர். அதாவது, சிறிய விஷயங்களைக் காட்டி பெரியவற்றை புரிய வைத்து நிரூபித்தல் என்று அர்த்தம். இருவருமே ஞானத்தின் கொள்கலங்கள் என்றால் மிகையாகாது.
ஸ்ரீராமானுஜர் பெரிய நம்பிகளை தரிசித்தார். அவர் திருவடிகளை உகப்புடன் வணங்கி பணிவுடன், ‘‘ஸ்ரீரங்கம் என்னும் க்ஷேத்திரத்தையும், போக மோக்ஷங்களை அளிக்கும் மங்களமான ரங்கநாதனுடைய சேவையையும் விட்டு குடும்பத்தோடு எங்கு செல்கிறீர்? பேரறிவாளரான பெரிய நம்பியே! அதன் காரணத்தை எனக்குக் கூறுங்கள்’’ என வினவினார். இந்த வார்த்தையைக் கேட்ட வைணவப் பெரியவரான பெரிய நம்பி தாம் புறப்பட்டு வந்த காரணத்தை ஒன்று விடாமல் திருவரங்கத்தில் நடந்த விஷயங்களை கூறினார். உடனே, ‘‘நீவிர் எங்கு புறப்பட்டுச் செல்கிறீர்’’ என்று பெரிய நம்பிகள் வினவ, ராமானுஜர், காஞ்சிபுரத்தில் நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் கூறவே, பெரிய நம்பிகள் பொல பொலவென்று கண்ணீர் உகுத்தார். காரணம் காஞ்சி பேரருளாளன் இதயத்தில் எனக்கு ஒரு இடமா? பகவான் ஆணையாகில் அப்படியே செய்வோம்.’’ என்று கண்களில் நீர் பொங்க கூறினார்.
‘‘ராமானுஜரே! இன்றே உமக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்விப்போம்.’’ (கைகளில் சங்கும், சக்கரம் என்கிற திருவிலச்சினை பொறிக்கப் பெறுதல், பன்னிரு நாமங்கள் உடம்பில் பகவத் திருநாமங்களோடு சாற்றும்படி செய்தல், தாஸ்ய நாமம் பெறுதல், திருமந்திர உபதேசம் பெறுதல், சரணாகதி செய்துவித்தல் என்பது ஐந்து வகையான ஸம்ஸ்காரங்கள் ஒவ்வொரு வைணவனுக்கும் இன்றும் நடைபெற்று வருகிறது.) ‘‘பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்வித்து ஸம்ஸாரமாகிய கிணற்றில் விழுந்திருக்கும் அடியேனைக் கைதூக்கி விடவேண்டும்’’ என்று கூறிய ராமானுஜரைப் பார்த்து கூறியருளினார். ‘‘புண்ணியமான காஞ்சிபுரத்திலேயே உமக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்யப் பெறும்’’ என்றார்.
உடனே ராமானுஜரும், தெளிந்த சிந்தையராய், புன்சிரிப்புடன் கூறத் தொடங்கினார். ‘‘பேரறிவாளரே, அறிவாளிகளில் தலைவரே, சரீரம் நிலையற்றது, என்று அறியும் அடியேன் இன்று திடீரென்று உம்முடைய நியமனப்படி எப்படி நடக்க விரும்புவேன்? முன்பு ஆளவந்தாரைக்காண விரும்பி உம்மோடு காஞ்சிபுரத்திலிருந்து வந்தேன். ஆனால், நடந்தது என்ன? அவர் பரமபதித்து விட்டார் (காலகதியடைந்தார்) பொதுவாகவே, தூங்கும்போதும், உண்ணும்போதும், வழி நடக்கும்போதும், வாலிபனாய் இருக்கும்போதும், குழந்தையாய் இருக்கும்போதும் விதியானது மனிதனை மரணமடையச் செய்து, தன் வசப்படுத்துகிறது. இன்று இந்த காரியம் (இவனால்) செய்யப்பட்டது; அல்லது (இவன்) நாளை வேறொரு காரியத்தைச் செய்யப் போகிறான் என்று யமன் காத்திருப்பதில்லை.
ஆகையால் நன்மையை விரும்புகிறவன் நல்ல காரியத்தை தாமதித்துச் செய்வது எப்படிப் பொருந்தும்?’’ என்று விரிவாக உரைத்தார். ராமானுஜருக்கு இருக்கும் ஆர்வத்தைக் கண்டு, ‘‘உமக்கு இப்பொழுதே சக்ராங்கனம் பஞ்ச சம்ஸ்காரங்களை செய்கின்றேன். இங்கேயுள்ள குளத்தில் நீராடி வாரும். நாமும் நீராடி பரிசுத்தமாக ஆகி உமக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களை செய்விக்கிறோம்’’ என்றார். ராமானுஜரும் அவ்வாறே செய்தார். பெரியநம்பிகளும் காலையில் செய்ய வேண்டிய கர்மங்களைச்செய்து, அங்குள்ள வைணவ பெருமக்களோடுகூட மங்களமான விஷ்ணுவின் கோயிலையடைந்து, அக்னி பிரதிஷ்டை செய்து, முறைப்படி ஹோமங்களை அன்போடு செய்தார். அங்குள்ள, சக்ரத்தாழ்வாரையும், பாஞ்ச ஜன்யத்தையும் முறைப்படி ஆராதனம் செய்தார்.
கோதண்டத்தையும், அம்பையும் ஏந்தியவரான ராமபிரானின் சந்நதியில், சிஷ்யர்களிடம் அன்புடைய கருணைக்கடலான பெரிய நம்பி, முறைப்படி ஹோமம் செய்த அக்னியில் காய்ச்சிய சங்கு, சக்ரங்களைக் கொண்டு, எல்லா லக்ஷ்ணங்களும் பொருந்திய ராமானுஜருடைய தோள்களில் அடையாளம் செய்து, (அதாவது வலது தோளில் சக்கரப்பொறியும், இடதுதோளில் சங்குப் பொறியும்), மேலும், அந்த இளையாழ்வார்க்கு சம்ஸார ஆபத்தை அடைந்தவர்களை ரக்ஷிக்கும் த்வயம் என்னும் மந்திரத்தையும் அதன் உட்பொருளையும், தாஸ்ய நாமம் முதலியவற்றையும் அளித்தார். ஆசார்யரான பெரிய நம்பியால் இப்படி பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யப்பெற்ற ஸ்ரீமானான ராமானுஜர் சரத்கால சந்திரனைப்போல் பிரகாசித்தார்.
ஆசார்யரான பெரிய நம்பிகள், ராமானுஜரை ஸ்ரீவைஷ்ணவச் செல்வம் நிரம்பியவராகச் செய்து, எம்பெருமாளின் தாஸ்ய ஸாம்ராஜ்யத்தில் நாயகனாகப் பட்டாபிஷேகம் செய்வித்தார். பிறகு, அவரைக் குறித்து பெரிய நம்பி நல்வார்த்தைகளை அருளினார். ‘‘வைணவர் தலைவரே! இவ்வுலகில் யாமுனாசார்யருக்குப் பிறகு (ஆளவந்தாருக்குப் பிறகு) வைணவ தரிசனத்தை உருவாக்கும் ஆசார்யரான நீர் அனைவருக்கும் எல்லா விதத்திலும் ரட்சகராக விளங்கப் போகிறீர். அந்தந்த தேசங்களில் ஏற்பட்ட அவைதிக மதங்கள் (வேதத்தை ஒத்துக்கொள்ளாத மதங்கள்) பலவற்றையும் கண்டித்து, பகவானை ஸர்வ சேஷியாக நிலை நிறுத்துவதற்கு உமக்கே சக்தி உண்டு. உமது அதி ஆச்சர்யமான தேஜஸைக் கண்டதாலேயே நான் இவ்வாறு கூறுகிறேன். நீரே நம் வைணவ குல ரட்சகர்’’ என்று பலவாறு கூறியருளினார் பெரிய நம்பிகள்.
இந்திய நீதித்துறையை இயங்க வைத்த மோடி
பிஜேபி அரசின் இரண்டாண்டு முடிவின்போது, நாடு மாறி வருகிறது; புதிய பாதையில் செல்கிறது’ என்று மோடிகூறியது இப்பொழுது இந்திய நீதித்துறையிலும் எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது.அதாவது காலத்து க்கு தகுந்த மாதிரி கோர்ட்டும் மாற ஆரம்பித்து விட்ட தை நேற்று விடுமுறை தினத்திலும் கோர்ட்டை இயங் கவைத்து மோடி சாதித்து விட்டார்.
உலகத்திலேயே படு கேவலமாக செயல்படும் நீதித்து றை இந்தியாவில் தான் உள்ளது. நம் நாட்டில் சுமார் மூன்று கோடி வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் முடிய எவ்வளவு நாட்கள் ஆகும் தெரியுமா? கேட்டால் மூச்சே நின்று விடும் நமக்கு மட்டுமல்ல கோர்ட்டுக்கு செல்பவர்களுக்கும் தான்
இந்தியா முழுவதும் சுமார்மூன்று கோடி வழக்குகள்
பென்டிங்கில் உள்ளது.இதில் சுப்ரீம் கோர்ட்டில் மட்டு ம் 61 ஆயிரம் வழக்குகள்பென்டிங்கில் உள்ளதாம் சுமா ர் 17,000 நீதிபதிகளை வைத்துள்ள இந்திய நீதித்து றை குறைந்தது 460 வருஷம் தொடர்ந்து விசாரித்தால் தா ன் இந்தியாவில் இப்பொழுது இருக்கிற வழக்குகளே முடிவிற்கு வருமாம்.
ஸ் ஸ் ஸ் படிக்கும் போதே நமக்கே கண்ணை கட்டு தே. வழக்கு நடத்தும் மக்கள் என்னாவார்கள் யோசித் து பாருங்கள் இப்படி படு கேவலமான நிலையில் இந்தி ய நீதித்துறை உள்ளது. இப்படிக்கும் இந்தியாவில் உச்ச நீதிமன்றம் அடுத்து 24 உயர்நீதிமன்றங்கள்,14 உயர்நீதி மன்ற கிளைகள்,420 மாவட்ட நீதிமன்றங்கள் என்று இந்திய நீதித்துறை பரந்து விரிந்துள்ளது.
நம்ம ஸ்கூல் பசங்களுக்குத்தான் காலாண்டு லீவு அ ரை யாண்டு லீவு,முழு பரிட்சை லீவு என்று விடு வா ர் கள். அது மாதிரி உலகத்திலேயே குளிர் கால விடுமு றை அடுத்து கோடை கால விடுமுறை அடுத்து பண்டி கை கால விடுமுறை என்று ஸ்கூல் பசங்களுக்கு லீவு விடு வது மாதிரி லீவில் இருக்கும் ஒரே இந்திய அமை ப்பு இந்திய நீதித்துறை தான்
எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு இருக்கும் மோடி
நீதித்துறையை மட்டும் விட்டுவிடுவாரா? நீதித்துறை யையும் மாற்ற ஆரம்பித்து விட்டார்.நேற்று புத்த பூர்ணி மா தினம் கோர்ட் டுக்கு விடுமுறை நாள் தான் இருந் தாலும் கோர்ட்டை இயங்க வைத்துவிட்டார்.
இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால்
முந்தைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் நீதிபதி அதிகமாக இருந்தால் தான் கேஸ் பெண்டிங் குறையும் அதனால் நீதிபதிகள் வேண்டும் என்று கண் ணீர் மிரட்ட ல் என்று மத்திய அரசிடம் ஸீன் போட் டுக் கொண்டு இருந்தார்.
ஆனால் இப்பொழுது உள்ள தலைமை நீதிபதி கேஹ ரோ பென்டிங்கில் உள்ள வழக்குகளை குறைக்கும் வகையில், லீவு நாட்களிலும் எக்ஸ்ட் ராவாக வேலை
செய்வோம் என்று மோடியின் ஆசையின்’ படி அறிவி த்துள்ளார்.அதோடு விடுமுறை யில் பணியாற் றும்படி, ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக் கும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மூலம் உத்தரவு போகவைத்து விட் டார் மோடி.
அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதை, டிஜிட் டல் மயமாக்கும் வகையிலான, ஒருங்கிணைந் த வழக்கு நிர்வாக தகவல் திட்டத்தை, நேற்று மோடி துவக்கி வைத் தார்.அதாவது சுப்ரீம்கோர்ட்டை டிஜிட்ட ல் மயமாக்கும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார்.
இதன் மூலம் சுப்ரீம்கோர்ட்டில் உள்ள வழக்குகள் அனை த்தும் கணினி மயமாக்கப்படுவதால் பேப்பர் இல்லாத கோர்ட்டு,கேஸ் கட்டு இல்லாத வக்கீல்கள் என்று ஒரு புதிய அத்தியாயம் துவங்கப்பட்டுள்ளது. அடுத்து 24 உயர் நீதிமன்றங்கள்,14 உயர்நீதிமன்ற கி ளை கள்,420 மாவட்ட நீதிமன்றங்கள் கணினி மயமா க்கும் முயற்சிகள் துவங்கப்பட உள்ளது.
இதன் மூலம் ஒரு வழக்கின் வரலாற்றைஎந்த நேரத் திலும் எங்கிருந்து வேண்டுமானாலும் தெரிந்து கொள் ளலாம். இந்த நடவடிக்கையின் மூலம், வழக்குகள் அதிக காலம் தேங்குவதை தவிர்க்க முடியும்.மக்களின் நேரமும் பண மும் மிச்சமாகி சந்தோசமாக இருப்பார் கள்.
நீதிபதி கர்ணன் கடந்து வந்த பாதை
ஆரம்பத்தில் அதிமுக பூத் ஏஜெண்ட்: 8 ஆண்டுகால நீதிபதி பயணத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கர்ணன்உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தற்போது மேற்கு வங்க மற்றும் தமிழக போலீஸாரால் தேடப்பட்டு வரும் நீதிபதி சி.எஸ்.கர்ணனின் வாழ்க்கைப் பயணம் பரபரப்புக்கு பஞ்சமில்லாததாக இருந்துள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி யாக பதவி வகிக்கும் சி.எஸ்.கர்ணனின் இயற்பெயர் கருணாநிதி. கடந்த 1991-ல் தன்னுடைய பெயரை சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன் என அவரே மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கர்ணநத்தம்தான் அவரது சொந்த ஊர். கடந்த 1955 ஜூ ன் 12-ம் தேதி பிறந்த கர்ணனின் தந்தை சுவாமிநாதன் குடியரசுத் தலைவரிடமிருந்து நல்லாசிரியர் விருது பெற்றவர். ஆனால் கர்ணனுக்கு ஆரம்பக் கல்வியை புகட்டியது அவரது தாயார் கமலம் அம்மாள்தான்.
மங்கலம்பேட்டை பேரூராட்சி உயர் நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப் பையும், விருத்தாச்சலம் கலைக் கல்லூரியில் ஓராண்டு புதுமுக வகுப்பையும், சென்னை புதுக்கல்லூரி யில் மூன்றாண்டு அறிவியல் பட்டப்படிப்பையும் முடித்த கர்ணன், அதன்பிறகு 1983-ல் சென்னை சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டம் பயின்று, அதே ஆண்டு வழக்கறிஞராகவும் பதிவு செய்தார்.
ஆரம்பத்தில் அரசியலில் தீவிரம் காட்டிய கர்ணன் 2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பூத் ஏஜெண்டாக செயல் பட்டுள்ளார். அதன்பிறகு அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸிலும் கால் பதித்துள்ளார்.
சுமார் 23 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் புரிந்த கர்ணன், சிவில் வழக்குகளில் அதிகமாக வாதாடி வந்துள்ளார். சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தின் சட்ட ஆலோசகராகவும், தமிழக மற்றும் மத்திய அரசு வழக்கறிஞராகவும் பதவி வகித்துள்ளார். ஆனால் வெளிவட்டாரத்தில் கர்ணனின் முகம் அதிகம் தெரிய ஆரம்பித்தது 2005-ல் தான். வாழ்வில் படிப்படியாக உயர்ந்து கடந்த 2009 மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அன்று முதல் தற்போது வரை நீதிபதி கர்ணனின் தடாலடி நடவடிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை.
உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் தேர்வு தொடர்பான வழக்கை நீதிபதிகள் விசாரித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கர்ணன், நீதிபதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். பின்னர் சிவில் நீதிபதிகள் நேர்முகத் தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடாது என தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தடை பிறப்பித்தார். ஆணும், பெண்ணும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தால், அவர்களை கணவன் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
கடந்த 2015-ல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.கே.கவுல் மீது பனிப்போரைத் தொடுத்த கர்ணன், தான் ஒரு தலித் நீதிபதி என்பதால் தன்னை எஸ்.கே.கவுல் மற்றும் சக நீதிபதிகள் ஒதுக்கி வைப்பதாகக் கூறி அவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆணையத்துக்கு பரிந்துரைத்தார். மேலும் எஸ்.கே.கவுல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் மீது ஊழல் குற்றம் சுமத்தி ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், சிபிஐ இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பினார்.
இதை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய உச்ச நீதிமன்றம், அவர் மீது தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதன்காரணமாக அவரை கடந்த 2016 பிப்ரவரி மாதம் சென்னையில் இருந்து கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடமாற்றத்துக்கு கடந்த 2016 பிப்ரவரி 15-ம் தேதி தனக்குத்தானே தடை விதித்து பரபரப்பு ஏற்படுத்திய கர்ணன், அன்று முதல் இன்று வரை உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான தனது உரசல் போக்கை தொடர்ந்து வருகிறார்.
2016 மார்ச் முதல் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வரும் நீதிபதி சி.எஸ்.கர்ணன், வரும் ஜூன் 12-ம் தேதியோடு ஓய்வுபெற உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 6 மாத சிறை தண்டனையால் சிறை செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தொடர்புடையவை
கொல்கத்தா போலீஸார் சென்னையில் முகாம்: நீதிபதி கர்ணனை கைது செய்ய தீவிரம் – செல்போன் சிக்னலை வைத்து ஆந்திராவிலும் தேடுகின்றனர்.
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன்: தமிழில் டிவிட்டிய மோடி

புது தில்லி :
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கைப் பயணம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவிட்டியுள்ளார்.
புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் வெசாக் (புத்த பூர்ணிமா) தினம் என்ற பெயரில் இலங்கையில் புத்த மதத்தினர் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
புத்த பூர்ணிமா இலங்கையில் சிறப்பாகக் கொண்டாடப் படுவது வழக்கம். நாளை முதல் 3 நாட்கள் இலங்கையில் இவ்விழா நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
புத்த பூர்ணிமா திருவிழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக அவர் இன்று கொழும்பு நகருக்கு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள மோடி இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன். இதன் போது வெசாக் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பேன் என்று டுவிட்டியுள்ளார்.
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன். https://t.co/MHGfTxALih
— Narendra Modi (@narendramodi) May 11, 2017
இதன் போது வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இணைந்து கொள்வேன்.
— Narendra Modi (@narendramodi) May 11, 2017
ஆதார் எண் – பான் எண் இணைப்பு: வருமான வரித்துறை அறிமுகப் படுத்தியது

வருமான வரித்துறை https://incometaxindiaefiling.gov.in/ என்ற இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் பக்கத்தை தொடர்பு கொண்டு பயனாளர்கள் தங்கள் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம்.
இதுகுறித்து வருமான வரித்துறை தரப்பில், “பயனாளர்கள் https://incometaxindiaefiling.gov.in/ கிளிக் செய்து அதில் இடது பக்கத்திலுள்ள ஆதார் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் அதில் பயனாளர்கள் தங்களது ஆதார் எண், பான் எண் மற்றும் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள பயனாளர் பெயரை சரியாக பதிவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த நிதி மசோதா 2017-ன் படி, பான் எண் பெறவும் வருமான வரி தாக்கல் செய்யவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறப்பட்டது. அதன்படி, வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம். மேலும் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும்.
வரும் ஜூலை 1, 2017 பான் எண் விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாளை (மே 12) வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்!
சென்னை:
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை நாளை வெளியிடப்படுகிறது. 9 லட்சம் மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வு எழுதியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6,737 பள்ளிகளில் 8,98,753 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்களை விட 62,843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினர். மொத்தத்தில் 9,30,000 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். புதுச்சேரியில் 143 பள்ளிகளில் 33 தேர்வு மையங்களில் 15,660 பேர் தேர்வு எழுதினர்.
விடைத்தாள்கள் மதிப்பீடு முடிவடைந்து மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் மதிப்பெண்கள் சரியாக பதிவு செய்யப்பட்டதா என்று அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். தேர்வு முடிவுகள் 3 நாட்களுக்கு முன்பாகவே தயார் நிலையில் உள்ள நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் வெளியிடப்படுகிறது.
இந்த முடிவுகளை மாணவர்கள் www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய 3 இணையதளங்களில் பார்க்கலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
15-ந் தேதி முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
வரும்17-ந் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வு எழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
தலைமறைவான நீதிபதி கர்ணனைக் கைது செய்ய வலை வீசித் தேடும் மேற்கு வங்க போலீஸ்!
சென்னை:
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான தகவலை அடுத்து, கொல்கத்தாவில் இருந்த நீதிபதி கர்ணன் சென்னை வந்தார். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த அவர், உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பாக மூத்த வக்கீல்களுடன் செல்போன் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தனக்கு அநீதி இழைத்து விட்டதாக குடியரசுத் தலைவர், தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினாராம்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மேற்கு வங்க போலீஸ் டி.ஜி.பி. சுரஜித்கர் புர்கயஷா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சுக்மால் காந்திதாஸ், ராஜ் கனோஜியா, ரன்பீர்குமார், சுதாகர் ஆகியோர் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர். பின்னர் மேற்கு வங்க டி.ஜி.பி., பகல் 12 மணிக்கு போலீஸ் கமிஷனர் கரன்சின்காவை சந்தித்து சுமார் ½ மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே தன்னை கைது செய்ய மேற்கு வங்க போலீசார் வருவதை அறிந்த நீதிபதி கர்ணன், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற முடிவு செய்தார். அதன்படி நேற்று அதிகாலை 5 மணிக்கு அறையில் இருந்து வெளியேறிய அவர், வாக்கிங் சென்று விட்டு வருவதாக தனது பாதுகாவலர்களிடம் கூறினாராம். அதற்கு அவர்கள், தாங்களும் உடன் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் மறுத்த நீதிபதி கர்ணன், தன்னுடன் யாரும் வர வேண்டாம் என்றும், தான் மட்டும் சென்று வருவதாகவும் கூறிச் சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் தன் அறைக்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் அவர், தன்னுடன் தங்கி இருந்த மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஒருவருடன் காரில் தலைமறைவானது தெரியவந்தது.
பரபரப்பான இந்தச் சூழலில், பாதுகாவலர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கர்ணன், தான் காளஹஸ்தி செல்வதாகக் கூறி உள்ளார். இருப்பினும் அவர் திரும்பவில்லை. இந்நிலையில் அவர் தமிழகத்தில் எங்காவது பதுங்கி இருந்தால் அவரை கைது செய்ய தேவையான உதவிகளை செய்யும்படி மேற்கு வங்க போலீஸ் அதிகாரிகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக்கொண்டனர். அதன்படி மேற்கு வங்க போலீசாருக்கு உதவி செய்வதற்காக தமிழக போலீஸ் அதிகாரிகள் சிலரை கமிஷனர் நியமித்துள்ளார்.
இந்நிலையில் நீதிபதி கர்ணனைத் தேடி வந்த மேற்கு வங்க போலீஸ் அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்கும் விடுதியில் ஆலோசனை நடத்தினர். தனது பாதுகாவலர்களிடம் காளஹஸ்தி செல்வதாக கூறிச் சென்ற நீதிபதி கர்ணன், உண்மையிலேயே காளஹஸ்திக்குதான் சென்றாரா? அல்லது போலீசாரின் கவனத்தை திசை திருப்ப தனது பாதுகாவலர்களிடம் காளஹஸ்தி செல்வதாக கூறி விட்டுச் சென்றாரா என விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் நீதிபதி கர்ணன், காளஹஸ்தி சென்றதாகத் தெரியவில்லை. இருப்பினும் காளஹஸ்திக்கும் மேற்கு வங்க தனிப்படை போலீசார் சென்றனர். அதேநேரம், தமிழகத்தில் நீதிபதி கர்ணனுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களின் வீடுகளை தமிழக போலீசார் உதவியுடன் மேற்கு வங்க போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நீதிபதி கர்ணன் கடலூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்துக்கு சென்றிருக்கலாம் என்று கருதி அங்கேயும் தமிழக போலீசார் உதவியுடன் மேற்கு வங்க போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது உச்ச நீதிமன்ற உத்தரவு என்பதால், விரைந்து செயல்படுத்த வேண்டிய நிலை மேற்கு வங்க போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு வக்கீல்கள் சிலர், நீதிபதி கர்ணனை கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிநிரந்தரத்துக்கு பெண் அதிகாரியிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்ட பெண் அமைச்சர்!
சென்னை:
தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பெண் அதிகாரியாக இருப்பவர் மீனாட்சி. இவரை பணி நிரந்தரம் செய்ய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார் என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெண் அதிகாரி மீனாட்சி கூறியபோது, பணி நிரந்தரம் தொடர்பாக அமைச்சர் சரோஜாவை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். அதற்கு அவர் ரூ.30 லட்சம் எனக்குத் தர வேண்டும் என்று கேட்டார். அப்படி லஞ்சம் கொடுக்க மறுத்ததால் என் தனிப்பட்ட வாழ்க்கையை கேவலமாக விமர்சித்தார். மேலும் வேலையை விட்டு தானாக ஓடி விடு; இல்லாவிட்டால் உன் நடத்தை சரியில்லை என்று அசிங்கப்படுத்துவேன் என என்னை மிரட்டினார். சரோஜாவும் அவரது கணவரும் சேர்ந்து என்னை மிரட்டினர். நான் அங்கிருந்து உயிர் பிழைத்து வந்ததே பெரிய விஷயம். அமைச்சர் சரோஜா லஞ்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தகுந்த ஆதாரங்களுடன் ஆளுநர் முதல் பிரதமர் வரை புகார் அளிக்க உள்ளேன் என்றார்.
பெண் அதிகாரியை பெண் அமைச்சர் நடத்தை தொடர்பாக அசிங்கப்படுத்துவேன் என்று மிரட்டியதாக செய்தி வெளியானது சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.
மோடி யாழ்ப்பாணத்துக்குச் செல்ல வேண்டும்: பழ.நெடுமாறன்
சென்னை:
புத்த மத மாநாட்டில் கலந்து கொள்ள கொழும்பு செல்லவிருக்கும் பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கும் சென்று அங்குள்ள தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய வேண்டும் என தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கை:
2012ஆம் ஆண்டில் காமன்வெல்த் அதிபர்கள் மாநாடு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் யாழ்ப்பாணம் சென்று தமிழர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து இலங்கை அதிபரிடம் தனது கண்டனத்தை நேரில் தெரிவித்தார்.
அதைப்போல பிரதமர் மோடியும் ஈழத் தமிழர்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை நேரில் கேட்டறிந்து இலங்கை அரசிடம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வற்புறுத்த வேண்டும்.
சிங்கள நட்புறவுக்காக ஈழத் தமிழர்களை பலிகடா ஆக்கக்கூடாது. அதைப்போல தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுடுவதையும் தாக்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு கண்டிப்பாகக் கூறவேண்டும்.
இவற்றையெல்லாம் செய்வதற்கு சிங்கள அரசு முன்வராவிட்டால் அந்த நாட்டிற்கு எத்தகைய பொருளாதார மற்றும் இராணுவ ரீதியான எந்த உதவிகளையும் இந்திய அரசு செய்யக்கூடாது
– என்று கூறியுள்ளார்.

