ஆதார் எண் – பான் எண்னை இணைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைய பக்கம்
ஆதார் எண் – பான் எண்னை இணைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைய பக்கம்
ஆதார் எண்ணையும் – பான் எண்ணையும் இணைப்பதற்கான வசதியை வருமான வரித்துறை இணையதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறை  https://incometaxindiaefiling.gov.in/ என்ற இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் பக்கத்தை தொடர்பு கொண்டு பயனாளர்கள் தங்கள் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம்.

இதுகுறித்து வருமான வரித்துறை தரப்பில், “பயனாளர்கள் https://incometaxindiaefiling.gov.in/ கிளிக் செய்து அதில் இடது பக்கத்திலுள்ள ஆதார் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் அதில் பயனாளர்கள் தங்களது ஆதார் எண், பான் எண் மற்றும் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள பயனாளர் பெயரை சரியாக பதிவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்த நிதி மசோதா 2017-ன் படி, பான் எண் பெறவும் வருமான வரி தாக்கல் செய்யவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறப்பட்டது. அதன்படி, வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம். மேலும் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

வரும்  ஜூலை 1, 2017 பான் எண் விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending