Home Blog Page 5655

சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்: பஸ் கவிழ்ந்து விபத்து

சென்னை : அமெரிக்க தூதரகம் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய மாநகரப் பேருந்தில் இருந்து 25 பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்

காற்று வெளியிடை: விமர்சனம்

தமிழ் சினிமாவில் மணிரத்னம் ஒரு ட்ரென்ட்செட்டர் என்பதை யாரும் மறுக்க முடியாது . தமிழ் சினிமா வை நாயகனுக்கு முன் நாயகனுக்கு பின் என்று கூட பிரிக்கலாம் . இந்த வயதிலும் இவர் எடுத்த ஓகே.கண்மணி இளைஞர்கள் மனதில் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டது . இரைக்கு போராடும் ஒரு கிழட்டு சிங்கத்தின் மனோபாவத்தை இவரது காதல் படங்களில் காணமுடிகிறது . எல்லா நேரத்திலும் வேட்டை வெற்றி பெறுமா என்ன ? …
katruveLiyitai - 2026
ஃபைட்டர் பைலட் வி.சி ( கார்த்தி ) அண்ட் டாக்டர் லீலா (அதிதி ராவ்) இருவருக்குமிடையே வேகமாக டேக் ஆஃப் ஆகும் காதல் விமானம் நீண்ட நேரம் சுற்றி சுற்றி  எப்படா தரைக்கு வருவீங்க என்று நம் பொறுமையை சோதிப்பதே காற்று வெளியிடை. இயற்கையிலேயே ஆணும் பெண்ணும் இருவேறு துருவங்கள் . அந்த துருவங்களின்  காதல் , மோதல் , பிரிவு இதையெல்லாம் நல்ல விசுவல் , லொகேஷன் ,ஆர்.ஆர் , ஆங்காங்கே மணி டச் இவற்றோடு காத்து வாங்க சாவகாசமாக சொல்லியிருக்கிறார் மணிரத்னம் …

கார்த்தி க்கு பைலட்டுக்கு ஏற்ற தோற்றம் . படத்தின் களம்  ஸ்ரீநகரில் நடப்பதாலோ என்னமோ மீசையை மழித்து ஒரு நார்த் இந்தியன் லுக் கொடுத்திருக்கிறார்கள் . பாவம் நம்ம பருத்தி வீரனுக்கு அது செட்டே ஆவல . போக போக  பழகி விட்டாலும் அவர் ரொமான்டிக்காக பார்ப்பதாக நினைத்து ஒரு சிரிப்பு சிரிக்கும் போது நமக்கு வெறுப்பு தான் வருகிறது . அதிதி ராவ் அழகாக  இருக்கிறார் . அவரை ஒளிப்பதிவு இன்னும் அழகாக காட்டுகிறது . காதலுக்கும் , தன்மானத்துக்கும் இடையே தவிக்கும் கேரக்டரில் ராவ் ரணகளம் செய்கிறார் . ஆர்,ஜே.பாலாஜி  சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் . மற்றபடி பொதுவாக வளவளவென்று பேசி எல்லோரையும் கலாய்ப்பவர்  இதில் காயடிக்கப்பட்ட காளை  போல உம்மென்று இருப்பது வேதனை …

படத்தில் ரவிவர்மனின் கேமரா தனி கேரக்டர் போலவே கூட வருகிறது . பனிமலைகளை காட்டும் விதத்திலேயே நமக்கு லேசாக குளிருகிறது .
” அழகியே ” பாடலை  அதிகமாக முணுமுணுக்க வைக்கும் ஏ.ஆர்.ஆர் படம் நெடுக ஆர்.ஆர் மூலம் மென்மையாக வருடுகிறார் . ஆஸ் யூசுவல் டெக்கனிகலாக எந்த குறையும் வைக்காமல் விருந்து படைக்கிறார்  மணி …

ஃப்லைட்டில் சாகசம் காட்டி புதுப் பெண்ணை இம்ப்ரெஸ் செய்வது , ஒரு சீனிலேயே இருவருக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகளை எஸ்டாபிளிஷ் பண்ணுவது  , ஹாஸ்பிடலில் வைத்து நடக்கும் சண்டையில் மொத்த குடும்பத்தின் குணாதிசியங்களை சொல்வது , ” நீ என்னை  செல்ல நாய்க்குட்டி மாதிரி ட்ரீட் பண்ற ” என்று ஈகுவல் ரிலேஷன்ஷிப் புக்கு ஏங்கும் அதிதியின் குரல் ஆண்களே நோக்கி பாயும் பெண்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்க வைப்பது என மணியின் மேஜிக் படத்தில் தெளிக்க விடப்பட்டிருக்கிறது …

ரெண்டரை  மணி நேர படத்துக்கு இது மட்டும் போதுமா ? அலைபாயுதே , ஓ.கே வில் கையாண்ட அதே காதல் , காதலில் பிரிவு , பிறகு சேர்வது வைகையறா கதை தான் என்றாலும் முதலிரண்டில் காதலர்கள் சேர்வார்களா என்று நமக்கிருந்த பதைபதைப்பு இதில் டோட்டலி மிஸ்ஸிங் . இதில் கார்த்தி கார்கில் போரில் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு தப்பித்து வரும் போது அவர் குழந்தைக்கே மூன்று வயது ஆகி விடுகிறது . மணி யின் படங்களில் காதலர்கள் கல்யாணம் செய்து கொள்கிறார்களோ இல்லையோ மறக்காமல் மேட்டர் செய்து விடுகிறார்கள் . காதலில் இருக்கும் ஆண் மேலாதிக்கத்தை சுட்டிக் காட்டிய விதத்தில் படம் கவர்கிறது . மற்றபடி படம் பார்ப்பவர்கள் போலவே மணியும் ரொம்ப க்ரிப்பாக இல்லாமல்  கேர்லெஸ்ஸாகவே இருந்திருப்பர் போல . பெட்டெர் லக் நெஸ்ட் டைம் மணி சார் …

ரேட்டிங்க் : 2.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 40

விமர்சனம்: ஆனந்த் நாராயணன்

ஆளுக்கு ரூ.4,000; ரூ.89 கோடி விநியோகிக்க ஏற்பாடு! : வருமான வரித்துறை ஆவணம் வெளியீடு

சென்னை:
சென்னை, ஆர்.கே.நகரில் ரூ.89 கோடியை வாரி இறைக்க டிடிவி தினகரன் குழு திட்டமிட்டது அம்பலம் ஆகியுள்ளது. வாக்காளர் ஒவ்வொருவருக்கும் ரூ.4 ஆயிரம் வீதம், சுமார் ரூ.89 கோடிக்கு வாக்காளர்களை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளனர்.

நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் கசிந்துள்ளன.
இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட 6 அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.

ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணப் பட்டுவாடா செய்ய ரூ.89.65 கோடி வழங்க இருந்தது தெரிய வந்துள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான ஆவணங்களும் வெளியாகின; எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் பெயர்கள் ஆவணங்களில் உள்ளன.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 85% வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனிடையே தேர்தல் தள்ளிப் போகுமா என்பது நாளை தெரியவரும். வருமான வரித்துறை யினர் தாங்கள் நடத்திய சோதனை குறித்து இன்று இரவு தேர்தல் ஆணையத்துக்கு தகவலை அனுப்பி வைக்கும் என்றும், அதன் அடிப்படையில் நாளை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது.

வருமான வரித்துறை மூலம் கசிந்த ஆவணங்கள்:

rknagar election pattuvada - 2026

rknagar itraid1 - 2026rknagar itraid3 - 2026rknagar itraid2 - 2026rknagar itraid3 - 2026

பெருமையுறுவது நானல்ல; மொழிதான்: கவிஞர் வைரமுத்து

இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய விருதை ஏழாவது முறையாகப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதில் நானடையும் மகிழ்ச்சியைவிட நாடு அடையும் மகிழ்ச்சியே பெரிதென்று கருதுகிறேன்.

அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது. பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே.

தர்மதுரை படத்தின் இயக்குநர் சீனுராமசாமி, இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சுகுமார், நடித்த விஜய்சேதுபதி – தமன்னா, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், குரல் கொடுத்த பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்வதில் நாகரிகம் அடைகிறேன்.

இந்தப் பாடல் தற்கொலைக்கு முயன்றவனைத் தாங்கிப் பிடிக்கும் பாடலாகும்.

தற்கொலை என்பது தேசத்தின் நோயாகப் பெருகிவருகிறது. காதல் தோல்வி – மன அழுத்தம்- அச்சம்- வறுமை என்ற காரணங்களே மனிதர்களைத் தற்கொலைக்கு தள்ளுகின்றன. எந்த ஒரு தோல்வியிலும் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை.

தோல்வி என்பது அடுத்த வாசலுக்கான கதவு என்று உணர்த்தவேண்டும். அதைத்தான் இந்தப்பாடலை பாடும் நாயகி நாயகனுக்கு நினைவுறுத்துகிறாள்

“எந்தப்பக்கம் காணும் போதும்

வானம் ஒன்று – நீ

எந்தப் பாதை ஏகும் போதும்

ஊர்கள் உண்டு

ஒரு காதல் தோல்வி காணும் போதும்

காதல் உண்டு – சிறு

கரப்பான் பூச்சி தலைபோனாலும்

வாழ்வதுண்டு

உன் சுவாசப் பையை மாற்று – அதில்

சுத்தக் காற்றை ஏற்று – நீ

இன்னோர் உயிரில் இன்னோர் பெயரில்

வாழ்ந்துவிடு”

– என்று பாடுகிறாள்.

பொழுதுபோக்கு மட்டுமே நோக்கமல்ல. தன்முனைப்பும் தன்னெழுச்சியும் தன்னம்பிக்கையும் ஊட்டுவதே கலையின் நோக்கம். இதைச் சொல்லும் படங்களும் பாடல்களும் களிப்பூட்டுவதோடு மக்களுக்குக் கற்பிக்கவும் செய்கின்ற ன நல்ல சிந்தனைக்கும் மொழிவளத்துக்கும் இடமளிக்கிற பாடல்கள் எல்லாப் படங்களிலும் இடம் பெறுவது நிகழ்காலக் கலையின் கடமையாகிறது.

இந்த விருது என் எதிர்காலப் பொறுப்பையே அதிகமாக்குகிறது. புதிய பொறுப்போடும் விருப்போடும் என் பயணத்தைத் தொடரத் தமிழ்மக்களின் வாழ்த்துக்களையே வரமாய்க் கேட்கிறேன்.

கவிஞர் வைரமுத்து தேசிய விருது பெற்ற படங்கள்:

ஆண்டு படம்

1986 முதல் மரியாதை

1993 ரோஜா

1995 கருத்தம்மா மற்றும் பவித்ரா

2000 சங்கமம்

2003 கன்னத்தில் முத்தமிட்டால்

2011 தென்மேற்குப் பருவக்காற்று

2017 தர்மதுரை

ராதிகா குளித்துக் கொண்டிருந்தபோது கதவைத் தட்டினர்: சரத் குமார்

சென்னை:
ராதிகா குளித்துக் கொண்டிருந்தபோது வருமானவரித்துறையினர் கதவைத் தட்டினர் என்று சரத் குமார் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் விநியோகம் நடைபெறுவது தொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், இன்று காலை முதலே அதிமுக., வினர், சரத்குமார் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சரத்குமார் வீட்டிற்கு வந்த அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆர்.கே.நகர் பிரச்சாரத்திற்கு சரத்தை அனுப்ப கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிகாரிகள் அதை நிராகரித்து விட்டனர்.

இந்நிலையில், வருமான வரித்துறை சோதனையை கிண்டல்செய்துள்ளார் சரத்குமார்!

என் வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. வருமான வரித்துறையினர் எடுத்துச்செல்ல இங்கு எதுவும் இல்லை. அவர்கள் எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நலம்’ என்று கிண்டலாகக் கூறினார், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

மேலும், சோதனை நடத்துவதில் தனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்று கூறிய சரத்குமார், அதிகாலை 5.45 மணி முதல் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்துவதாகவும், கதவை உடைத்து உள்ளே வரட்டுமா என கேட்டனர் ஐடி அதிகாரிகள்; ஐடி அதிகாரிகள் சோதனை என்பது சதி; அலுவலகத்தில், வங்கி கணக்குகள் குறித்து ஆய்வு நடத்தினர்; தேர்தல் பிரசாரத்தின்போது ரெய்டு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியே! ராடன் மீடியா அலுவலகத்திலும் ஐடி சோதனை நடத்தினர். ராதிகா குளித்துக் கொண்டிருந்தபோது கதவை தட்டினர் என்று கூறினார்.

வருமான வரி சோதனை: நடந்தது என்ன? சொல்வது என்ன?

சென்னை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் நன்கு விளையாடுவதாலும், வாக்காளர்க்கு ரூ.4 ஆயிரம் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாலும், பண முறைகேட்டைத் தடுக்க, அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக., நிர்வாகிகள், அதிகாரிகள் சிலரின் வீடுகளில் இன்று காலை முதலே வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது,. இதில், சரத்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டது.
இது குறித்த தகவல்கள்:

* வருமான வரி சோதனைக்குள்ளான அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த சோதனையில் இதுவரை ரூ.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்ஹா தெரிவித்தார். மேலும் தேர்தல் பாதுகாப்பிற்கு கூடுதலாக 5 கம்பெனி படைகளை கோரியுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

* அரசியல் உள்நோக்கத்தோடு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் – அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம்

காலை 6 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை – முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம்

வருமான வரித்துறையினரின் சோதனைகளுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சமாட்டோம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தளவாய் சுந்தரம், “தினகரன் வெற்றி வாய்ப்பு உறுதியானதால் ஓபிஎஸ் தூண்டுதலால் மத்திய அரசு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

தனியறையில் வைத்து விஜயபாஸ்கரை மிரட்டி வருகின்றனர்!

மாநில அமைச்சர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர் என்று தளவாய் சுந்தரம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவரது இடத்துக்கு

அதிமுக தொண்டர்களின் வருகையால் பரபரப்பு ஏற்பட்டது.

வலை விரித்த தேர்தல் கமிஷன்; சிக்கிய தினகரன்:

அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரன் வகையாக சிக்கி கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. நடப்பதை எல்லாம் கண்டுகொண்டும் கண்டுகொள்ளாதது போல் இருந்த கமிஷன் அதிகாரிகள் முழு பலத்தையும் பயன்படுத்தி தங்கள் ஆளுமையை நிரூபிக்க முனைந்துள்ளனர்.
ஒரு பல்கலை வேந்தர், மருத்துவத்துறை உயர் அதிகாரி, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி, அதிமுக எம்பிக்கள் உள்ளிட்ட ஏராளமான நபர்களை சுற்றி வளைத்துவிட்டது வருமான வரித்துறை!

இந்நிலையில், தினகரன் மற்றும் அதிமுக அம்மா பிரிவை தேர்தல் தகுதி நீக்கம் செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இன்று காலை மேற்கொள்ளப்பட்ட வருமான வரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்:

அதிமுக எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் இல்லத்தில் சோதனை!

பொது சுகாதாரத்துறை அதிகாரி குழந்தைசாமி வீட்டிலும் சோதனை!

துணை வேந்தர் விஜயலட்சுமியின் இல்லத்திலும் சோதனை!

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கட்டுகட்டாக பணம் சிக்கியதாக தகவல்!
காரிலிரிந்து டோக்கன்களை கைப்பற்றிய அதிகாரிகளிடம் யார் யார் எவ்வளவு பணம் பெற்றனர் என்ற விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கியது!

ரூ.2000 நோட்டுகள் மதுரையிலுள்ள ஒரு குவாரி அதிபர் வீட்டிலிருந்து வந்ததாக தகவல்!

தேர்தல் செலவாக தினகரன் அணி ரூ.120 கோடி செலவு செய்துள்ளதாக வந்த தகவலால் இந்திய அளவில் அதிர்ச்சி!

இந்நிலையில், டிடிவி.தினகரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி, தேர்தல் கமிஷனில் சசிகலா புஷ்பா புகார் ஒன்று கொடுத்துள்ளார்.

வருமான வரித் துறை சோதனையில் இதுவரை 3 கோடியே 20 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் என தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரித் துறை இணை இயக்குநர் அளித்த தகவல்படி,

அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர் வீடுகள் உட்பட 36 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறதாம்.

சரத்குமார் வீட்டிற்கு வந்த அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆர்.கே.நகர் பிரச்சாரத்திற்கு சரத்தை அனுப்ப கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிகாரிகள் அதை நிராகரித்து விட்டனர்.

இந்நிலையில், வருமான வரித்துறை சோதனையை கிண்டல்செய்துள்ளார் சரத்குமார்!

என் வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. வருமான வரித்துறையினர் எடுத்துச்செல்ல இங்கு எதுவும் இல்லை. அவர்கள் எனக்கு ஏதாவது கொடுத்துச் சென்றால் நலம்’ என்று கிண்டலாகக் கூறினார், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

மேலும், சோதனை நடத்துவதில் தனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்று கூறிய சரத்குமார், அதிகாலை 5.45 மணி முதல் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்துவதாகவும்,
கதவை உடைத்து உள்ளே வரட்டுமா என கேட்டனர் ஐடி அதிகாரிகள்;
ஐடி அதிகாரிகள் சோதனை என்பது சதி ;
அலுவலகத்தில், வங்கி கணக்குகள் குறித்து ஆய்வு நடத்தினர்;
தேர்தல் பிரசாரத்தின்போது ரெய்டு என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியே!ராடன் மீடியா அலுவலகத்திலும் ஐடி சோதனைநடத்தினர்.
ராதிகா குளித்துக் கொண்டிருந்தபோது கதவை தட்டினர் என்று கூறினார்.

அம்மா உணவகம் மூலம் பண விநியோகம்: அதிர்ந்த அதிகாரிகள்!

சென்னை :
சென்னையில் அம்மா உணவகம் மூலம் பண விநியோகம் நடைபெற்றுள்ளது, அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. இந்ததேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலை இருப்பதால் பணப்பட்டுவாடா தாராளமாக நடைபெறலாம் என்று தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே தகவல் வெளியானது.

தேர்தல் கமி‌ஷன் தொடர்ந்து பாதுகாப்பை அதிகரித்து வருவதால் முன்கூட்டியே ஆர்.கே.நகர் தொகுதியில் பணபட்டுவாடா தொடங்கி விட்டது. நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பணபட்டுவாடா நடந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. லட்சக்கணக்கான பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையமும் மிகவும் விழிப்பாக கண்காணிப்பதால் வீடு தேடிச் சென்று பணபட்டுவாடா நடப்பது தவிர்க்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து திருமண மண்டபங்கள், திரையரங்குகள், சமூக நலக்கூடங்கள் போன்ற பொதுவான இடங்களில் வாக்காளர்களை வரவழைத்து ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதை எல்லாம் விட கொடுமையாக, வாக்காளர்களுக்கு கூப்பன்கள் வழங்கி அம்மா உணவகங்களில் ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் வினியோகம் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு, விதவிதமான முறையில் பணப்பட்டுவாடா நடப்பது அதிகாரிகளை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

தேர்தல் ரத்தாகுமா? தினகரன் வேட்பாளர் தகுதி நீக்கமா?

தங்களுக்கு தினகரன் ஆள்கள் ரூ.4000/- பணத்தை கொடுத்தனர் என ஆர்.கே.நகர் மக்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான பெண்கள் சாட்சி சொல்லவும் தயார் என கூறியுள்ளதால் முடிவெடுக்க நிர்பந்தத்தில் தேர்தல் கமிஷன் உள்ளது.எனவே இது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது என ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஆர்கே நகரில் பண வினியோகம்: முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை : 

சென்னை எழும்பூரில் தனியார் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பல கோடி ரூபாய் அளவிற்கு பணப்பட்டுவாடா நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் தனியார் விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 

அதில்வரவு செலவு கணக்கு ஆவணங்கள் சிக்கின. 

சுமார்ரூ.120 கோடி பணப்பட்டுவாடா செய்ய திட்டமிடப்பட்டிருந்தது… என அதிகாரிகள் தெரிவித்துளர்..

ஆர்கே நகர் இடைதேர்தல் ரத்து?… இன்று மதியம் அறிவிப்பு?

_தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் அதிகமாக பணம் விளையாடியதால் கடந்த பொதுத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல ஆர்கே நகர் தேர்தலும் ரத்து செய்யப்படலாம். இன்று மதியம் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.

கீழ்த்தரமாகும் தேர்தல் பிரசாரம்; சவப்பெட்டியில் ஜெ. உருவ பொம்மை; முகம் சுளிக்கும் மக்கள்!

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கீழ்த்தரமான வகையில் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
சவப்பெட்டியில் ஜெ. உருவ பொம்மை வைத்து ஓபிஎஸ் அணியினர் மேற்கொண்டு வரும்  பிரசாரத்தைக் கண்டு மக்கள் முகம் சுளிக்கின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் என்பது பல வகைகளிலும் கீழ் மட்டத்திற்கு இறங்கிவிட்டது. டிடிவி தினகரன் தரப்பு பணத்தை அள்ளி வீசுவதாக புகார்கள் வரும் நிலையில், ஓ.பி.எஸ் தரப்போ இன்னொரு வகையில் கீழே போய்விட்டது.

ஜெயலலிதாவின் மர்ம மரணத்தையே அடிப்படையாக கொண்டு பிரசாரம் செய்து வருகிறது ஓ.பி.எஸ் அணி. அதன் ஒரு கட்டமாக, ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு எப்படி வைக்கப் பட்டிருந்ததோ அதேபோல சவப்பெட்டியுடன் கூடிய மாதிரி ஒன்றை உருவாக்கி அதை பிரசார ஜீப்பின் முன்னால் வைத்துக்கொண்டு தெரு, தெருவாக போய் வாக்கு கேட்கிறது ஓ.பி.எஸ் அணி.

அந்தத் தொகுதியில் உள்ள பாரதி நகரில் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தலைமையில் அழகு தமிழ்செல்வி, அந்தத் தொகுதியில் ஓ.பி.எஸ். அணியின் சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாகப் பிரசாரத்தைத் துவங்கினார். அப்போது, நின்று கொண்டிருந்த ஜீப்பின் முன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சடலம் போன்ற ஒரு பொம்மை வைக்கப்பட்டது.

சென்டிமென்டாக ஆர்.கே.நகர் மக்கள் மனதை வெல்ல வேண்டும் என்பதற்காக இவ்வளவு கீழ் மட்டத்திற்கு அரசியல் நாகரீகத்தை ஓ.பி.எஸ் அணி கொண்டு சென்றுள்ளது நடுநிலையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் சவப்பெட்டி மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டதற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த நூதன பிரசாரத்திற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து சவப்பெட்டி பிரசாரத்தை ஓபிஎஸ் அணியினர் நிறுத்தியுள்ளனர். தற்போது ஜெயலலிதா உருவபொம்மை உள்ள சவப்பெட்டி ஆர்.கே.நகரில் உள்ள ஓபிஎஸ் அணியினரின் தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிணத்தை வைத்து அரசியல் செய்வதாக ஓ.பி.எஸ் அணியினர் மீதும், பணத்தை வைத்து அரசியல் செய்வதாக சசிகலா அணியினர் மீதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது டிவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.