Home Blog Page 5681

ஜெயலலிதா சமாதியில் அடித்து சபதம் செய்த சசிகலா

sasikala jaya memorial - 2026

பெங்களூரு சிறைக்கு செல்லும் முன் ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா அங்கு தனது கையால் அடித்து சபதம் ஏற்றார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, உடல்நிலையை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் சரண்டைய 2 வாரங்கள் அவகாசம் கேட்டார். சசிகலா தரப்பில் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.டி.எஸ்.துல்சி வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், பெங்களூரு நீதிமன்றத்தில் உடனடியாக சரணடைய உத்தரவிட்டது. இதையடுத்து பெங்களூரு நீதிமன்றத்துக்கு சாலைமார்க்கமாக பயணிக்க சசிகலா முடிவு செய்தார். பெங்களூரு செல்லும்முன், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்ற சசிகலா, அவரது சமாதியின் மீது கையால் அடித்து சபதமேற்ற பின்னர் கிளம்பினார்.

104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி உலக சாதனை படைத்தது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி உலக சாதனை படைத்தது இஸ்ரோ.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வர்த்தக ரீதியாகவும் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.

பூமியை கண்காணிப்பதற்காக, 714 கிலோ எடை கொண்ட இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

மேலும் கார்டோசாட்-2 செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ்-1பி என 2 நானோ வகை 3 செயற்கைகோள்களும், அமெரிக்கா, இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாண்ட்  மற்றும் அரபு உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த 101 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டுள்ளன.

104 செயற்கைக்கோள்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

ரஷ்யா ஓரே ராக்கெட் மூலம் 37 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதே இதுவரை உலக சாதனையாக இருந்தது.

தற்போது பிஎஸ்எல்வி -சி37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை அனுப்பி உலக சாதனை படைத்துள்ளது இஸ்ரோ.

இந்த செயற்கைகோள்கள் சட்டவிரோதமாக மீன்பிடித்தல், கடற் கொள்ளை ஆகியவற்றை கண்காணிக்க பயன்படுத்தப்பட உள்ளன.

சசிகலா குற்றவாளி; 4 வருட சிறை; தேர்தலில் நிற்க 10 ஆண்டு தடை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுதில்லி:

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கியது. மேலும் ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. இதனால், சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து, அவரை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. இந்தத் தீர்ப்பு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்குமே பொருந்தும். ஆனால் அவர் இறந்ததால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று மாலையே சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் மீதான தண்டனையை உச்சநீதிமன்றம், இன்று உறுதி செய்தது. பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம், சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் சிறைக்கு செல்வது உறுதியாகி உள்ளது.ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, 1996ல் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீதிபதி குன்ஹா, 2014 செப்., 27 ல் தீர்ப்பு அளித்தார். ஜெ.,க்கு 4 ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம்; மற்ற மூன்று பேருக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை, தலா, 10 கோடி ரூபாய் அபராதம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. உடனே நான்கு பேரும், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 21 நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கில் ஜெ., உள்ளிட்ட நான்கு பேர் மூலம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நான்கு பேரையும் விடுவித்து, 2015 மே, 11ம் தேதி தீர்ப்பு அளித்தார்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தீர்ப்பு அளிப்பதை, 2016 ஜூன், 7 ம் தேதி ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் இன்று, இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நீதி வென்றுள்ளது. இனி அவர்கள் மேல் முறையீடு செய்ய வா ய்ப்பு இல்லை என கர்நாடகா அரசு வக்கீல் ஆச்சார்யா கருத்து தெரிவித்தார்.

சசிக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாபோது, 21 வருடங்களுக்கு பின் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. ஊழல் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது என்பதற்கு இந்த தண்டனை உறுதி செய்துள்ளது. தமிழகத்தில்நிலையான ஆட்சி ஏற்பட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைக்கு தீர்வ காண நிலையான ஆட்சி வேண்டும் என்றார்.

இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் போலீசார் நுழைந்தனர். அந்த ரிசார்ட்டிற்குள் 200க்கம் மேற்பட்ட அதிவிரைவுப்படை போலீசார் உள்ளே சென்று தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து, அங்கு கலவரம் வெடித்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிதறி ஓடினர்.

சசிகலாவுக்கு எதிராகப் பேசிய எம்.எல்.ஏ.,வுக்கு அடி உதை: ஆம்புலன்ஸ் விரைந்த மர்மம்

சென்னை:
மன உளைச்சல் காரணமாக கூவத்தூர் சொகுசு விடுதியில் சிறைவைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ., சசிகலாவுக்கு எதிராகப் பேசி முரண்டு பிடித்ததால், அவருக்கு அடி உதை விழுந்தது. இதனால் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க விரைந்தனர். இதைக் கண்ட அதிர்ச்சியில்  உறைந்தனர் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்.

கூவத்தூரில் முதல் நாள் , 3.48 மணிக்கும், இரண்டாம் நாள்  5.00 மணிக்கும் 3ம் நாளான இன்று மாலை  5.45 மணிக்கும் சசிகலா வந்திருக்கிறார். இன்று இரவு எம்.எல்.ஏக்களோடு அங்கேயே தங்குவதற்கான முன்னேற்பாடுகளோடு தான் சசிகலா வந்திருக்கிறார்.

எம்.எல்.ஏக்கள் இங்கே கடந்த 6 நாட்களாக கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏக்களுக்கு பல வகையான உணவுகளும், சிற்றுண்டிகளும் டான்ஸ் போதை என்று உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியிலே வைக்கப்பட்டிருந்தாலும், தகவல் தொடர்புகள் எல்லாம் துண்டிக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அங்கே பாதுகாப்புக்கு இருக்கும் செந்தில்பாலாஜி, ஓ.எஸ்.மணியன், ஜெயக்குமார் ஆகியோர் அவர்களிடம் சசிகலாவுக்கு ஆதரவு தரும்படி தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதால் சிலர் எரிச்சல் அடைந்தார்களாம்.

இதன் காரணமாகத்தான், செய்யாறு எம்.எல்.ஏ மோகன் சசிகலாவுக்கு எதிராகப் பேசியதாகவும், நான் எப்படியும் மாற்றித்தான் ஓட்டு போடுவேன் என்று முரண்டு பிடித்ததால். செம்மையாக அவரைக் கவனித்ததாகவும் கூறப்படுகிறது.  இது மற்ற அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பிறகே முதல் உதவிக்கு ஆம்புலன்ஸ், டாக்டர்களை வரவழைத்தி ருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்துதான், சசிகலா இரவு கூவத்தூரில் தங்கும் ஏற்பாடுகளோடு வந்திருக்கிறாராம். மேலும், நாளை உச்ச நீதிமன்றத்தில் வரும் தீர்ப்பைப் பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வசதியாக அங்கே அவர் தங்குவதாகவும் கூறப்படுகிறது.

கூவத்தூர்வாசிகளை கவர்ந்திழுக்க சசிகலா மேற்கொள்ளும் தந்திரம்

பள்ளி குழந்தைகளுக்கு சாக்லெட், குடிசை வீட்டிற்குள் நுழைந்து போஸ் என சசிகலா இன்று பட்டையை கிளப்பினார். ஒபிஎஸ் அணி காலை முதல் மிகுந்த அமைதியாக இருந்தது. தற்போது ஒரு எம்எல்ஏ, ஒரு எம்பியையும் தங்கள் பக்கம் வரவழைத்து சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிவிட்டனர்.
சசிகலா கூவத்தூர் சென்று அங்கேயே தங்கி இருக்க போவதாக அறிவித்தார். அங்கு தங்க காரணம் தீர்ப்பு வெளி வரும் போது தனக்கு பாதகமாக வந்தால் தினகரனையோ அல்லது கட்சியில் யாரையோ உடனடியாக பதவி ஏற்க செய்யும் வகையில் அங்கேயே சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவரை தேர்தெடுக்க வசதியாக தான் அவர் தங்கியுள்ளார்.
குறிப்பு: சசிகலா தற்போது அதிமுக ஆட்சி அமையும் என்று தான் கூறிவருகிறாரே தவிர தான் முதல்வராவேன் என சொல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூவத்தூர் விடுதியில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்துள்ளேன் : எம்.எல்.ஏ. சரவணன்

சென்னை: கூவத்தூர் விடுதியில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்துள்ளேன் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. சரவணன் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஓ.பன்னீர்செல்வமே முதல்வராக நீடிக்க வேண்டும் என விரும்புகின்றனர் என்று சரவணன் தெரிவித்தார். மேலும் தாம் மட்டும் அல்ல; அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு வருவார்கள் என்றும் சரவணன் தெரிவித்தார்.*

நான் ஒன்றும் சசிகலாவை ஆதரிக்கவில்லையே: சுப்ரமணிய சாமி

நான் சசிகலாவை ஆதரிக்கவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி, அதன் அடிப்படையிலேயே கருத்து தெரிவித்துள்ளேன் என பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், சில தொலைக்காட்சிகள் அரசியல் செய்வதற்காக நான் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி வருகின்றனர். நான் அரசியலமைப்பை பின்பற்றுகிறேன். அதன் அடிப்படையிலேயே கருத்து கூறினேன். சசிகலாவை ஆதரிப்பதாக நான் கூறியதே இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்._

சிறப்பு சட்டசபையைக் கூட்ட மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் யோசனை

சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்க, தமிழகத்தில் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டலாம் என மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல் ) முகுல் ரோத்தகி கவர்னருக்கு யோசனை தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் இதுவே தீர்வாகும் என்றும், பெரும்பான்மையை நிரூபிக்க இருவரையும் அழைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியிடப்படும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுதில்லி: சசிகலா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. 
கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளனர். தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெ. மரணத்தின்பின் மன உளைச்சல் :ஓபிஎஸ் வீட்டுக்கு ராஜினமா கடிதத்துடன் வந்த எஸ்.ஐ

முதல்வர் ஜெயலலிதா மரணத்தால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதால் தான் பணியிலிருந்து விலகுவதாக முதலமைச்சர் ஓபிஎஸ் வீட்டுக்கு ராஜினமா கடிதத்துடன் வந்த உதவி ஆய்வாளரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா மரணம் கட்சி தொண்டர்களை மட்டுமல்ல காவல் துறையினரையும் பாதித்துள்ளது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளது.
ஜெ மேல் தங்களுடைய காவல் பணியையும் மறந்து பாசம் வைக்கின்ற காவலர்கள் தங்கள் பணியே போனாலும் பரவாயில்லை என்று நடந்து கொண்ட பல சந்தர்பங்கள் உண்டு.
ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன விரலை வெட்டி கொண்ட காவலர் உண்டு.
தன நாக்கை துண்டித்து கொண்ட காவலர் உண்டு.
ஜெ பதவியேற்ற சந்தோசத்தை கொண்டாட சீருடையுடன் மொட்டை போட்ட காவலர் உண்டு.
ஜெ மறைந்தபோது தன வீட்டில் துக்கம் நிகழ்ந்ததுபோல் சீருடையில் மொட்டையடித்து கொண்ட காவலர் உண்டு.
சமீபத்தில் கட்சி இரண்டாக பிரிந்ததை அடுத்து தேனீ மாவட்டத்தை சேர்ந்த காவலர் ஒருவர் அரசியல் பற்றி பேசி சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்திற்கு இன்று வந்த எஸ்எஸ்ஐ ஒருவர் திடீரென சத்தமாக அம்மாவுக்காக நான் ராஜினாமா செய்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை அங்குள்ள செய்தியாளர்களிடம் விநியோகித்தார்.
இது பற்றி கேட்ட பொது இது தன்னுடைய ராஜினமா கடிதம் என தெரிவித்தார்.
முதல்வர் ஓபிஎஸ் இல்லத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நூற்றுகணக்கான பத்திரிக்கையாளர்கள் குவிந்துள்ளனர்.
ராஜினமா கடிதத்தை எஸ்எஸ்ஐ கொடுத்தவுடன் அந்த இடமே பரபரப்பானது.
அவர் பெயர் உமாபதி என்பதும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
உடனடியாக அவரிடமிருந்து ராஜினமா கடிதத்தை மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் பறிமுதல் செய்தார்.
அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். ஒரு செய்தியாளரிடம் பேசிய அவர் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தன பதவியை ராஜினமா செய்வதாக தெரிவித்தார். முதல்வர் இறந்து 2 மாதம் கழித்து ராஜினமா செய்கிறீர்களே வேறு எதாவது காரணமா இருக்கிறதா? அதிகாரிகள் டார்ச்சர்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
அதெல்லாம் ஒன்றுமில்லை முதல்வர் இறந்ததிலிருந்து என் மனது சரியில்லை என்று கூறினார்.
அவரது ராஜினாமா கடிதத்தில் நான் 20.0.1986 அன்று காவல்துறையில் இணைந்து இன்று வரை எந்த வித தண்டனையுமில்லாமல் பணி செய்து வருகிறேன்.
முதல்வர் அம்மா இறந்ததிலிருந்து என் மனது சரியில்லை. அதனால் நான் ராஜினமா செய்கிறேன் என்று எழுதியுள்ளார்.
முதல்வர் ஓபிஎஸ் இல்லத்தில் காவல் அதிகாரி ஒருவர் ராஜினமா கடிதத்தை கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.