Home Blog Page 5680

சொத்துக்குவிப்பு வழக்குச் செலவு ரூ.12.4 கோடியை கோரி தமிழக அரசுக்கு கர்நாடகா கடிதம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குக்கு செலவான தொகையை கோரி தமிழக அரசுக்கு கர்நாடகா கடிதம் எழுதியுள்ளது. 2004 முதல் 2016 வரை ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கை நடத்த 12.4 கோடி செலவாகியுள்ளது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வழக்கால் பல்வேறு இனங்களில் செலவிட்ட தொகையின் கணக்கை கர்நாடகம் அனுப்பியுள்ளது.

பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறார் மயிலை உறுப்பினர் நட்ராஜ்

சென்னை:
பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவு என்று தெரிவித்துள்ளார் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர்.

முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை சட்டசபையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசுக்கு எதிராக மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் வாக்களிப்பேன் என்று கூறியதாக தகவல் பரவியது. ஆனால் நட்ராஜ் தரப்பில் சரியான பதில் ஏதும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நட்ராஜ் பேசுகையில்,
இது போன்ற பிரிவினை ஓட்டெடுப்பு என்பதில் உடன்பாடு இல்லை. இரு பிரிவினரையும் இணைக்க முயற்சிப்பேன். அதிமுக ஓ.பி.ஸ்., தலைமையில் இயங்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். என் தொகுதி மக்களின் எண்ணமும் அதுதான். நேர்மையும், சத்தியமும் எனது உணர்வு. மக்கள் உணர்வுகளை மதிப்பேன். நான் ஓ.பி.எஸ்சு.,க்கு ஆதரவாக ஓட்டளிப்பேன் என்பது உண்மை.
– என்று கூறினார்.

நாட்டு நடப்பு: தீர்ப்பும் அரசியல் கட்சிகளும்

     சொத்துக் குவிப்பு வழக்கில்  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது இல்லத்தில் அவருக்கு உதவியாக இருந்த சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளிகளாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
     இந்தத் தீர்ப்பை பல அரசியல் கட்சிகள் நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாடி வருகின்றனர்.
     தி.மு.க.வும் தாங்கள் ஒரு புனித புத்தர் போலத் தங்களைக் காட்டிக் கொண்டு இது ஊழலுக்கு எதிரான நல்ல தீர்ப்பு என்று அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
     தனது சகோதரி கனிமொழி, 2G ராஜா, மாறன் சகோதரர்கள், மற்றும் இன்னும் எத்தனையோ ஊழல் பெருச்சாளிகளையும், எலிகளையும், சிறுசிறு பூச்சிகளையும் தன் மடியில் கட்டிக் கொண்டுதான் அவர் இப்படிச் சொல்லுகிறார். தனது சகோதரர் மு.க அழகிரி செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமா. அவரது கழகத் தலைவர் தி(ரு).மு.கருணாநிதியே ஊழலின் ஊற்றுக் கண்தானே. சர்க்காரியா கமிஷனே அவரது ஊழலை “விஞ்ஞான முறையில் செய்த ஊழல்” என்று சிறப்புப் பட்டமே கொடுத்ததே.மக்களின் மறதி உங்களைப்போன்ற அரசியல் வியாதிகளுக்கு ஊக்க மருந்தாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் பகுத்தறிவாளர்களாக வேடம் போட்டாலும் தெய்வம் நின்று கொல்லும் என்பது சத்தியம். தவறு செய்தவர்கள் வலியில்லாமல் செத்தது கிடையாது என்னும் போது தப்பு செய்தவர்களுக்கு இறைவன் தண்டனை எப்படி இருக்கும் என்பது ஒவ்வொரு முறையும் காலம் நிரூபித்துக் கொண்டு வருகிறது. (“தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது”…பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்).
     இப்போதிருக்கும் காங்கிரஸ் ஊழலிலேயே ஊறிக்கிடக்கிறது. அவர்களுக்கு திரு. கே.காமராஜரின்  பெயரை உச்சரிக்கவே யோக்கியதை கிடையாது.
     மற்ற உதிரிக் கட்ச்சிகள் எல்லாம் ஊழல் கட்சியான அ.இ.அ.தி.மு.க., தி.மு.க.வின் கூட்டணிக்காகக் கதவைத் தட்டித்தட்டி காப்பி, டீ, குடித்தவைதான்.
     இந்த மிகப் பெரிய ஊழல் ஆலமரம் தானே வளரும் என்றாலும், தன் பங்கிற்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்தவர் திரு. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சார்யார் என்ற இராஜாஜி அவர்கள் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவர்தான் 1967ம் வருடப் பொதுத்தேர்தலில் தனது சுதந்திராக் கட்சியை தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து,”நான் சொல்லுகிறேன் நீங்கள் இந்தக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று தன் மார்பில் உள்ள பூணூலைத் தொட்டு தமிழக மக்களிடம் ஓட்டுக் கேட்டார்”. அப்பொழுதே கரையான் புற்றில் கருநாகம் புகுந்து விட்டது. அதன் பலனை இன்றும் நாம் அனுபவிக்கிறோம்.
     இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உண்மையிலேயே நெஞ்சில் உரமும், நேர்மையும், எளிமையும் கொண்ட நல்ல தலைவர்கள் வருவார்கள்.அவர்களின் தலைமையில் தமிழ்நாடு தன்னுடைய அவமானங்களைத் துடைத்துத் தூய்மை பெரும்.
    அம்மாவின் ஆட்சியும் வேண்டாம், அப்பாவின் ஆட்சியும் வேண்டாம். சுயநலம் இல்லாத நல்லவர்கள் ஆட்சியே வேண்டும்.
கட்டுரை: மீ.விஸ்வநாதன்

பூஜை அறை தெய்வங்கள்

பூஜை அறை தெய்வங்கள்
ஹிந்து மதத்தைப் பொருத்தவரை ஆண்டவனை அந்நியமாக பார்க்கவில்லை.  நம்மில் ஒருவராகத்தான் பார்க்கிறது. நாம் இருக்கும் வீட்டிலேயே அவருக்கு என்று இடம் ஒதுக்கிக் கொடுத்து, நாம் உண்ணும் உணவையே அவருக்கும் நைவேத்தியம் செய்கிறோம் என்றால், ஆண்டவன்பால் இருக்கும் தூய அன்பின் வெளிப்பாடுதான் இது.
அனைத்து வீடுகளிலும் பூஜையறை இருக்கிறது. சின்னதோ பெரியதோ, அலமாரியில் மாட்டி வைத்திருக்கிறோமோ அனைவரின் வீட்டிலும் இருக்கிறது. எந்த வேறுபாடும் இல்லாமல் பல தெய்வப்படங்களை வைத்திருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தினசரி  துடைத்து அலங்காரம் செய்வது சிரமம். 
சிலர் போகும் இடமெல்லாம் கண்ணில் காணும் படங்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் மாட்டி வைத்து விடுவார்கள். பராமரிக்க நேரம் இல்லாதபட்சத்தில் இதுபோன்ற செயல்களை தவிர்ப்பதே நல்லது. அதனால் ஒரு இஷ்ட தெய்வத்தை முடிவு செய்து கொண்டு அதற்கு தினமும் அலங்காரம் செய்வது நல்லது. 
விக்கரகங்களாக இருந்தால் மட்டும் அபிஷேகம் செய்ய வேண்டும். அதுவும் விஷேச காலங்கள், பௌர்ணமி, வெள்ளி செவ்வாய் போன்ற நாட்களில் செய்தால் போதும். மற்றபடி படங்களாக இருந்தால் மாலைப் போட்டு, சந்தனம் குங்குமம் வைத்து, பத்தி ஏற்றி, பழம் கனிகள், இனிப்புகள் வைத்து நைவேத்தியம் செய்தால் போதுமானது. 
 பூஜை அறை என்பது நம் வீட்டில் உள்ள கோவில். பூஜையறையில் முதலில் தெய்வ படங்களை சுவரில் மாட்டும் பொழுது தெய்வத்தின் கண்கள் தரையில் படும்படியாக படங்களை மாட்ட வேண்டும். படங்கள் பூமியை நோக்கி இருக்க வேண்டும். சாந்தமான தெய்வங்களே வீட்டுக்கு நல்லது. 
துஷ்டமான தெய்வங்களை, மண்டையோடு மாட்டிய காளியை, அரக்கனை வதம் செய்யும் துர்க்கையை, நெஞ்சை கிழிக்கும் ஆஞ்சநேயர் இப்படி எந்த தெய்வப்படத்தையும் வீட்டில் வைக்கக் கூடாது.  குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் இருக்கிறார்கள். அந்த குலதெய்வத்தின் படத்தை வீட்டின் பூஜையறையில் வைக்கலமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு.
குலதெய்வ படம் என்றால் எந்த மாதிரியான தெய்வம். அந்த தெய்வத்திற்கு எந்த மாதிரியான நைவேந்தியங்கள் வைப்பீர்கள் என்பதை பொறுத்தே பூஜையறையில் வைப்பதா? தனியே ஒரிடத்தில் வைப்பதா என்பதை முடிவு செய்ய முடியும். உக்ர தெய்வங்களை வீட்டினுள் வழிபடுவது உகந்தது அல்ல. உக்ர தெய்வங்களை வழிபடுவது என்றால் அதற்கு சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 
இறந்துபோன முன்னோர்கள் நம் தெய்வங்கள்தான்.  நம்மை வளர்த்து ஆளாக்கி, மனிதனாக உருவாக்கி, நம் கண் முன்னே நடமாடி மறைந்த பெற்றோர்கள் தெய்வங்கள்தான். ஆனாலும் அவர்கள் படத்தை பூஜையறையில் வைக்கக் கூடாது.  அவர்கள் தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றுவார்களே தவிர அவர்கள் தெய்வம் அல்ல. அதனால் இறந்தவர்கள் படங்கள் தனியாக வைத்து பூஜை செய்வது நல்லது. 
வீட்டில் சிலை வழிபாடு செய்வதாக இருந்தால் அளவில் மிகப் பெரியதாக இருக்கக் கூடாது. பீடத்துடன் சேர்த்து அதிகபட்சம் ஒருஅடிக்கு மேல் இருக்கக் கூடாது.  இந்த அளவு சிலை வைத்திருந்தால் கூட, அபிஷேகம் செய்து வழிபட்டால் மட்டுமே பூரணப்பலனை பெற முடியம்.
வீட்டில் கருங்கல் சிலைகள் வைக்கக் கூடாது. ஆலய வழிபாட்டிற்கு மட்டுமே அது உகந்தது.  மாவு பொருட்களால் செய்யப்படும் சாமி சிலைகள் அலங்காரமாக பயன்படுத்தலாமே தவிர பூஜிக்க உகந்தது இல்லை.  அலங்காரமாக பயன்படுத்துகிறோம் என்பதால் கண்ட இடத்திலும் சாமிசிலைகளை வைக்கக் கூடாது. தீட்டு தொடக்கு இருக்கும் என்பதால் அதில் கவனமாக இருக்க வேண்டும்.
பூஜை அறை என்று தனியாக இருந்தால் பூஜை முடிந்தவுடன் கதவுகளை சாத்தி வைக்க வேண்டும். பெண்கள் சுத்தமாக இருக்கும் பொழுது மட்டுமே வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்தால் போதும். ஒரு படம்வைத்து பூஜை செய்தாலும் அதை முறையாக செய்ய வேண்டும்.
அடிக்கடி பூஜை அறையை, சாமி படங்களை சுத்தம் செய்ய வேண்டும்.  தூசி, ஓட்டடை படிந்து சுத்தம் செய்யாமல் வைத்திருக்கக் கூடாது. 
பழைய படங்கள், உடைந்த பொம்மைகள் மற்றும் கறைபடிந்த உடைந்த கண்ணாடியுடன் இருக்கும் படங்கள் கண்டிப்பாக பூஜை அறையில் வீட்டிலேயே இருக்கக் கூடாது. அப்படி இருக்கும் படங்களை ஆற்றில் கடலில் விட்டுவிடுவது நல்லது.
வீட்டில் பூஜை அறையில் ஒற்றை குத்து விளக்கு ஏற்றக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு என்றால் அதை மட்டும் ஏற்றலாம், குத்து விளக்கு என்றால்  இரண்டு குத்து விளக்குகள்தான் ஏற்ற வேண்டும் மூன்று அடுக்கு வைத்த விளக்கு மிகச் சிறப்பானது. 
விளக்கு பூஜை செய்பவர்கள் ஒரு முகம் மட்டும் ஏற்றி செய்வது அவ்வளவு உகந்தது அல்ல. வீட்டில் பூஜை அறையில் எப்பொழுதும் ஒரு சொம்பு தண்ணீர் இருப்பது நல்லது. அதே போல் கற்பூரம் ஆரத்திக்குப் பதிலாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆரத்தி செய்வது நல்லது. சுத்தமாக வீட்டை வைத்திருந்து பூஜை செய்தாலே எல்லா நலனும் நம்மைத் தேடிவரும்.

சசிகலாவின் மூன்று கட்டளைகள்: எடப்பாடி கலக்கம்!

சென்னை:
முதல்வராகப் பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுகவின் தாற்காலிக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா மூன்று முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளாராம். இதனை தாற்காலிகப் பொதுச் செயலாளரால் நியமிகப்பட்டுள்ள துணைப் பொதுச் செயலாளர் தினகரன், எடப்பாடியின் வலியுறுத்திச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

சசிகலாவின் முக்கிய மூன்று கட்டளைகள் என தினகரன் கூறியவை:

1. முக்கியமான பொறுப்புகள் அனைத்தையும் உங்களிமே கொடுக்க வேண்டும் என்பதால்தான் சசிகலா இவ்வாறு செய்திருக்கிறார். பொதுச் செயலர், ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கு உங்களை நியமித்திருந்தாலும், அதை நீங்கள் மட்டுமே தனித்து செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

2. ஆட்சி நிர்வாகத்தில் எடுக்க வேண்டிய எந்த முக்கிய முடிவானாலும், என்னிடமும், திவாகரனிடமும், நடராஜனிடமும் தெரிவித்து ஒப்புதல் பெற்றே, அதை செயல்படுத்த அறிவுறுத்தி இருக்கிறார். அதனால், ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் மூவரிடமும் அப்டேட் செய்து, மூவரின் வழிகாட்டுதலோடு ஆட்சியை நடத்துங்கள். இதற்கு யார் இடையூறாக இருந்தாலும், அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

3. நீங்கள் முதல்வராக இருந்தாலும், வாரத்தில் ஒரு நாள், பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சசிகலாவை கட்டாயம் சந்தித்தாக வேண்டும். ஆட்சி நிர்வாகத்தில் நடக்கும் அத்தனை முக்கிய விஷயங்களையும் அவரிடமும் சொல்லி, ஒப்புதல் பெற வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இப்படி மூன்று முக்கியக் கட்டளைகளை விதித்து, ஆட்சி நிர்வாகப் பொறுப்பை கொடுத்திருப்பதால், முதல்வராக பதவியேற்ற சந்தோஷத்தைக் காட்டிலும், நிபந்தனைகளை நினைத்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு

சென்னை:

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை வியாழன் அன்று (பிப். 16) பதவியேற்றது. முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிதி , உள்துறை , நிர்வாகம், வருவாய் , பொதுப்பணி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளை கவனிப்பார்.

முதல் வரிசையில் சசிகலா சகோதரர் திவாகரன் , தினகரன் , தம்பித்துரை உள்ளிட்டோர் இருந்தனர்.

தான் சேலம் செல்லும் வழியில், இந்தப் பதவி ஏற்பு விழா குறித்த தகவல் வந்ததால், தம்மால் கலந்து கொள்ள இயலவில்லை என்று மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். எனவே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதில் பங்கேற்கவில்லை.

பதவியேற்றுக் கொள்பவர்களின் பெயர்களை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பட்டியல் பிரகாரம் வாசித்தார்.

பதவியேற்ற பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், தினகரன் உள்ளிட்டோர் மெரினாவில் உள்ள ஜெ., மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

என்ன செய்யும் சூரியதோஷம்?

என்ன செய்யும் சூரியதோஷம்?
H.ஸ்ரீகிருஷ்ணர்
எந்த ஜாதகமாக இருந்தாலும் லக்ன பாவத்திற்கு காரகம் வகிப்பவர் சூரியன். அது மட்டுமல்ல அதிகாரிகள், நிர்வாகிகள், ஊழியர்கள் இவர்களுக்கு அதிதேவதையும் சூரியனே. மேலும் ஜாதகரின் அப்பாவைப் பற்றி தெரிந்து கொள்ளவும் சூரியனே சூத்திரதாரி. அதனால்தான் பிதுர்காரகன் என்று அழைக்கப்படுகிறார்.
ஜீவன் என்று அழைக்கப்படும் உயிருக்கும். எலும்புக்கும், வலது கண்களுக்கும் பொறுப்பு வகிக்கக் கூடியவர். தலைக்கும் காரகம், தலைமுடிக்கும் காரம் வகிப்பவர். அறிவாற்றல், செல்வாக்கு, கௌரவம், வீரம், விவேகம், என்று நீளமான பட்டியலே சூரியனுக்கு உண்டு.
ஒரு ஆணின் ஜாதகத்தில் சூரியன் வலுப்பெற்று நின்றால் இங்கே சொல்லிய அனைத்து நிலைகளிலும் ஜாகதர் சிறப்புற்று திகழ்வார். அதுவே ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் வலுப்பெற்று நின்றால் நன்நடத்தை, கற்பு நெறியில் சிறந்து விளங்குவார் என்பது சாஸ்த்திர சம்மதம். ஆனால் சூரியன் நீச்சம் பெற்று விட்டாலும், சனியோடு சேர்க்கைப் பெற்றிருந்தாலும், ராகுகேது தொடர்பில் இருந்தாலும் சூரிய தோஷம் என்பார்கள்.
அந்த வகையில் சூரியன் தந்தைக்கு காரண கிரகமாக வருவதால் தந்தைவழி உறவுகளில் பிரச்சனையை ஏற்படுத்துவார். தந்தையோடு இணக்கமான உறவை வைத்துக் கொள்ள முடியாத  நிலையை ஏற்படுத்துவார். பூர்வீக சொத்தில் பிரச்சனைகள் தோன்றும்.
ஒருவரின் அரசு வெகுமதி, அரசாங்க உதவி மற்றும் பதவிக்கு காரணமான கிரகம் சூரியன். அந்தவகையில் சூரியன் பலவீனமடைந்தால் அரசாங்க நன்மைகள் பெற முடியாது. சில வில்லங்க விவகாரங்கள் வர காரணமாக அமைந்து விடும்.  அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்யம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம். அங்கு பலன்கள் பாதிக்கப்படும்.
தலை வழுக்கையாதல், ஒற்றைத்தலைவலி, கண்ணாடி அணிய வேண்டிய நிலை, வயிறு சம்பந்தப்பட்ட குறைபாடுகள், பித்தம் அதிகரித்தல், இதயநோய் போன்றவை ஏற்படவும் காரணமாக மாறிவிடுவார். சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.
சூரியதோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், தினமும் கேளுங்கள். மேஷம், விருச்சிகம், தனுசு, மீணம், சிம்ம ராசியில் பிறந்தவர்கள் என்றால் ரத்தன கற்களில் மாணிக்கத்தை மோதிரமாகவோ, டாலராவோ செய்து அணிவித்துக் கொள்ளுங்கள். 
தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.
நிறம் : சிகப்பு
ஜாதி : சத்திரியன்
வடிவம் : சம உயரம்
மனித அவயம் : தலை
உலோகம : தாமிரம்
ரத்தினம் : மாணிக்கம்
வஸ்திரம் : சிகப்பு
சமித்துக்கள் : எருக்கு
தூபதீபம் : சந்தணம்
மலர் : செந்தாமரை
தாணியம் : கோதுமை
திசை : கிழக்கு
அதிதேவதை : சிவன்
ஆட்சிவீடு : சிம்மம்
உச்சவீடு : மேஷம்
நீச்சவீடு : துலாம்
பெயர்ச்சிகாலம் : ஒரு மாதம்
நட்சத்திரங்கள் : கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
உபகிரகம் : காலன்
வேறுபெயர்கள் : ஞாயிறு, ரவி, பானு, ஆதவன், கதிரவன், அருக்கன், அலரி
சூரிய மந்திரம்
ஜபா குஸீம சங்காசம்
காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம்
பரணதோஸ்மி திவாகரம்

என்னப் பாத்து சிரிச்சிடாதீங்க: எடப்பாடிக்கு ஸ்டாலின் அட்வைஸ்

சென்னை:

சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதிய முதல்வர் குறித்து அவர் கூறுகையில், தற்போது மக்கள் விரோத ஆட்சி அமைந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், சட்டசபையில் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்றார். 

நீட் தேர்வும், நீடிக்கும் குழப்பமும்! – புதிய முதலமைச்சர் கவனம் செலுத்துவாரா?

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் (NEET – NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்படும் தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வின் அடிப்படையில்தான், இனி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற சூழலில், அதிலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறி இருக்கிறது. இதன்மூலம் தமிழக மாணவர்கள் இனி நீட் தேர்வு எழுத தேவையில்லை என்றும், +2 இறுதித்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அரசு கூறுகிறது. சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகப் போகிறதே தவிர, அதற்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கப் பெறாததால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.

நீட் தேர்வுக்கு விலக்கு ஏன்?

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மாநில பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம் போன்ற பல்வேறு பாடத் திட்டங்களில், நாடு முழுவதும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில், சி.பி.எஸ்.இ., என்.சி.ஆர்.டி., ஆகிய பாடத் திட்டத்தின் அடிப்படையிலே நுழைவுத் தேர்வு நடைபெறும். இதனால், மற்ற பாடத் திட்டங்களில் பயின்றவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்தாக்கம் எழுந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான சட்டம் மத்திய அரசால் முதலில் அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சில் திருத்தச் சட்டம்-2016 என அழைக்கப்படும் அந்தச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் மருத்துவக் கல்வி இருப்பதால், அதில் உள்ள உயர்கல்வியின் தரத்தை நிர்ணயிக்கும் 66-வது பிரிவின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் இந்திய மருத்துவுக் கவுன்சிலின் பரிந்துரைகளின் படியும் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் அதிகார வரம்பில் பொதுப்பட்டியலில் கல்வி இருந்தாலும், அதில் சட்டத்திருத்தம் செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமையும், அதிகாரமும் உள்ளது. அதன்படிதான், பொதுப்பட்டியலில் உள்ள ”மிருகவதை தடுப்புச் சட்டத்தில்” திருத்தம் செய்து, மத்திய அரசு உதவியுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு வழிவகுத்தது. இதே வழியின்படிதான், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்களிக்கும் வகையில் பேரவையில் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது

ஆனால், தமிழக அரசின் சட்டமும், மத்திய அரசின் நீட் தேர்வு சட்டமும், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் திருத்தச் சட்டம் 2016-க்கு முரண்பாடாக இருப்பதை சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால், நீட் நுழைவுத் தேர்விலிருந்து மாணவர்கள் விலக்குபெற முடியாது என்றும், நீதிமன்றத்தை நாடினாலும்கூட, மத்திய அரசின் பக்கமே சாதகமான தீர்ப்பு வரும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

வரும் மே 7-ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு ஜனவரி 31-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில், கால அவகாசம் குறைவாக இருப்பதால், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் ஒருவித குழப்பமும், கவலையும் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்கு எப்படி மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு சட்ட அங்கீகாரம் பெற்றதோ, அப்படி தற்போதைய நீட் தேர்வு சட்டத்திற்கும் சட்ட அங்கீகாரம் பெற்றால்தான், நுழைவுத் தேர்விலிருந்து மாணவர்கள் பயன்பெற முடியும் என்கிறார்கள் சட்ட நுணுக்கங்களை அறிந்தோர். அதற்கு முதலில் பிரதமர் நரேந்திர மோடி சம்மதம் தெரிவிக்க வேண்டும். பிறகு மத்திய சட்ட அமைச்சகம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகங்களின் ஒப்புதலோடு, குடியரசுத்தலைவர் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டத்தை 24 மணி நேரத்திலும், நிரந்தரச் சட்டத்தை ஒரு வாரத்திலும் இயற்றியது போல், இதையும் பெற்று விடலாம் என்று நினைத்தால், தமிழகம் மீண்டுமொரு மக்கள் போராட்டத்தை சந்தித்தால் ஒழிய சாத்தியமில்லை. மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக பல்வேறு அழுத்தங்களை தமிழக அரசு தந்தால்தான் நீட் நுழைவுத் தேர்வு சட்டம் நிறைவேறும். ஆனால் அதை செய்யும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு இப்போதைக்கு இருக்கிறதா என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி. தற்போதைய நிலையில், பேரவையில் நாளை மறுநாள் பெரும்பான்மையை நிரூபிக்கவே பெரும் பாடுபட்டு கொண்டிருக்கும் சூழலில், இது சாத்தியமாகுமா?¬

தமிழக அரசின் நடவடிக்கையை நம்பி, மாணவர்கள் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதும், தேர்வுக்கு தயாராகமல் இருப்பதும் பெரும் பின்விளைவுகளையே மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்கொள்ள நேரிடும். எனவே, நீட் தேர்வுக்கு மனதளவிலும், பயிற்சி அளவிலும் மாணவர்கள் தயாராவதும், அவர்களை பெற்றோர்கள் தயார்படுத்துவதும்தான் நம்முன் இருக்கும் வாய்ப்பு.

கட்டுரை: – ஜி.எஸ்.பாலமுருகன், மயிலாடுதுறை. 9842940657

காலம் தாழ்த்திய நீதியின் விளைவு!

 
 
இதற்கெல்லாம் குற்றங்களைத் தெரிந்தே செய்வதும், அதிலிருந்து மீண்டுவரத் தங்களுக்காக கட்சியிலேயே வழக்கறிஞர் குழுக்களை வைத்துக் கொள்வதும், பொய் சொல்லியே வழக்குகளுக்கு வாய்த்தாக்கள் வாங்குவதும், அதற்காகவே பட்டப்படிப்புப் படித்த பண்பாடற்ற கல்வியாளர்களின் (பணத்திற்கோ, பதவிக்கோ, விருதிற்கோ ஆசைப்படும்) அறிவுரைகளும், பாரம்பரியமான ஊடகங்களின், குறிப்பாக தார்மிக உணர்வும், தன்மானமும் இல்லாத பத்திரிக்கை ஆரிசியர்களின் ஈனப் பிழைப்பும், போலி மதவாதிகளும், போலி நாத்திகர்களும் அடிக்கும் கொட்டங்களும், நேர்மையற்ற, ஆடம்பர அரசியல்வாதிகளுக்குப் பல்லக்குத் தூக்கும் அப்பாவித் தொண்டர்களுமே முழு முதற்காரணம்.
 
குலகல்வி முறை வேண்டாம் என்று கொத்தித்த அரசியல் வாதிகளின் குடும்பத்தினரே அரசியல் வாதியாக வர விரும்புவதும், குலத்தை முன்னிறுத்தியே தேசத்தின் சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதும் என்று அனைத்துத்துறையிலும் நேர்மை இல்லாதவர்கள் அதிகமாகப் பரவிக்கிடக்கிற தேசமாகிப் போனதைத்தான் இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எளிமையான, நேர்மையானவர்களின் குரல் மக்களின் செவிகளின் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.
 
தன்குலதைச் சேர்ந்தவர்கள் தேசத் துரோகம் செய்தால் அதற்கு நியாயம் கற்பிப்பதும், மற்றவர்கள் செய்தால் நிந்திப்பதுமான குணம் மாறவேண்டும். ஊழல் செய்தவர்கள் நல்ல தமிழில் பேசினால் அவர்கள் நல்லவர்கள் அல்ல, பக்திமான் போல வேடம் போட்டாலும் தீயவர்கள்தான் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் தேசம் தலை நிமிர்ந்து நிற்கும்.
 
மனச்சாட்சியும், நீதித்துறையும் நேர்மையாகச் செயல்பட வேண்டும். எத்துணை சாவுகளைப் பார்த்தாலும், ஒரு ஒட்டுத் துணிகூடக் கூடவரப் போவதில்லை என்ற பக்குவம் பிறர் பொருளையோ, தேசத்தின் சொத்துக் களையோ கொள்ளை அடிப்பவர்களின் நினைவுக்கு வருவதே இல்லை. பிடிபட்டவுடன் அவர்களுக்கு திடீர் நெஞ்சுவலி நாடகக் காட்சிகள் வந்து விடுகிறது. போலிச் சான்றிதழ் கொடுக்க மருத்துவர்கள் இருக்கவே இருக்கிறார்கள். சிறைச் சாலைகளின் கதவுகளுக்கு அத்தனை பலம் இருக்கிறது.
 
“பிடிபட்ட பின்தானே கள்வன், அதுமட்டும் அவன்கூடத் தலைவன்” என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகள்தான் இன்றுவரை உண்மை.
 
படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்ற மகாகவி பாரதியின் வாக்குப் பொய்க்காது.
 
அரசியல் வாதிகளே..நீங்கள் பொதுச் சொத்தைத் திருடநினைக்கும் முன்பாக ஒரு நிமிடம் உங்கனின் தீவினையால் துன்பப்படப் போகும் உங்கள் பிள்ளைகளை நினையுங்கள். சந்ததி இல்லாதவர்கள் உங்கள் மனச்சாட்சியைக் கேளுங்கள். மனச்சாட்சியே இல்லாதவர்களை இன்னும் இறைவன் படைக்க வில்லை என்று நம்புகிறேன்.
 
“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.” – தமிழ் மறை.
 
கட்டுரை: மீ.விசுவநாதன்