என்ன விட்ருங்க, நான் வீட்டுக்கு போகணும்!: கெஞ்சும் கருணாஸ்
தமிழகம் மறக்க முடியாத நாள் பிப்ரவரி 14 : ராம.கோபாலன்
தமிழகம் மறக்க முடியாத நாள் அந்த கோவை தொடர் குண்டுவெடிப்பு நாள் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
1998 பிப்ரவரி 14 அன்று பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் 13 இடங்களில் வைத்த 21 குண்டுகள் வெடித்து, 58 பேர்கள் பலியாகினர், ஏராளமானோர் உடல் ஊனமாகியும், உடல் நலம் பாதிப்பிற்கும் உள்ளானார்கள்.
முஸ்லீம் பயங்கரவாதம் ஈவிரக்கமற்றது என்பதும் ஓர் உதாரணம் கோவை தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வாகும். மருத்துவமனை, கடைத் தெரு, பேருந்து நிலையம் என மக்கள் எங்கெல்லாம் கூடுவார்களோ, எங்கு தஞ்சம் அடைவார்களோ அங்கெல்லாம் குண்டு வைத்து கொன்று குவித்தார்கள். கடந்த 19 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இன்னமும் கொங்கு மண்டலத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகளின் சதி செயல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வில்லை.
அதைவிட கொடுமையானது, அந்தக் கொடூர கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் ஜனநாயக விரோதிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.
தற்போது தமிழகத்தில் அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள போட்டி அரசியலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முஸ்லீம் அரசியல் கட்சிகள், அமைப்புகள் முனைந்துள்ளன. தலா ஒரு சட்டமன்ற உறுப்பினரை வைத்துள்ள வைத்துள்ள முஸ்லீம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி ஆகிய இந்த இரண்டு கட்சிகள், சசிகலா, ஓ. பன்னீர் செல்வம், இரண்டு பேருக்கும் வைத்த கோரிக்கை, சிறையில் இருக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகள் எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே.
இப்படி கோரிக்கை வைக்கும் முஸ்லீம் கட்சிகளை புரிந்துகொள்ளலாம். ஆனால், கொங்கு மண்டலத்தில் அரசியல் செய்யும் தனியரசு போன்றவர்கள் பதவிக்காக தான் பிறந்த பூமிக்குத் துரோகம் செய்வதை நினைக்கும்போது, இன்றும் எட்டப்பன்கள் தமிழகத்தில் நீடிக்கிறார்களோ எனத் தோன்றுகிறது.
தங்களுக்கு கிடைக்கும் இரண்டு உறுப்பினர் ஆதரவிற்காக குண்டு வைத்த முஸ்லீம் குற்றவாளிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டாலும், அல்லது முஸ்லீம் கட்சியினர் ஆதரவை பெற்றாலும் அதன் பின்புலத்தில் கொலைக்காரர்களுக்குத் துணைபோவதாகத்தான் இருக்கும் என்பதை கொங்கு மண்டல மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நமது உரிமைக்காக்க, பாதுகாப்பை உறுதி செய்ய முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு யார் துணைபோனாலும் அவர்களை புறந்தள்ள முடிவு எடுக்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஈவிரக்கமற்ற குற்றவாளிகளை தங்கள் பதவிக்காக விடுதலை செய்ய ஏற்றுக்கொண்டால், அந்த சம்பவத்தில் கொடூரமாக கொல்லப்பட்டவர்களின் ஆன்மா இவர்களை மன்னிக்காது. பதவிக்காக இறையாண்மையை தூக்கி எறியும் எவரையும் இறைவனும் தண்டித்தே தீருவான் என எச்சரிக்கிறோம்.
19ஆம் ஆண்டு நினைவு நாளில் அந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்த அந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்த அரசு மனிதாபிமான முறையில் அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. இத்தகைய கொடூர நிகழ்விலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்த பலிதானி நினைவாக நினைவு ஸ்தூபி (தூண்) பிரதான சாலையில் நிறுவப்பட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
பொது இடங்களில் ஆபாசமாக நடந்தால் மக்கள் தடுக்க வேண்டும்: ராம.கோபாலன்
சென்னை:
பிப்.14ம் தேதி அன்று பொது இடங்களில் ஆபாசமாக நடந்தால், பொதுமக்கள் தடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று இது குறித்து ராம.கோபாலன் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை:
கலாச்சாரத்தை, பண்பாட்டைக் காக்க இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும். பண்பாட்டுச் சீர்குலைவை அரசு தடுக்க வேண்டும்..
நமது பண்பாடு, கலாச்சாரம் ஒருபுறம் முடக்க நடவடிக்கை எடுக்கும் மேற்கத்திய நாடுகள், நாகரிகம் என்ற பெயரில் அவர்களின் கலாச்சாரத் திணிக்க பலவிதமான தகிடுதத்தங்களில் ஈடுபடுகிறார்கள். ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என ஒரு கிளர்ச்சியை மாணவர்களிடம் ஏற்படுத்தி, அதன் மூலம் மற்றவர்களை முட்டாள்களாக நினைக்கும் கேவலமான, கொடிய நஞ்சை மாணவப் பருவத்தில் விதைத்தார்கள். அதன் தாக்கம் தற்போது நீர்த்துப் போன நிலையில், காதல் தினம் என்ற கழிசடைத்தனத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். இதற்கு வியாபாரத்தனமான ஊடகங்கள் துணை போகின்றன.
சமீபத்தில் மாணவர்கள், இளைஞர்கள் நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டைத் தடை செய்ததை எதிர்த்து, நமது பண்பாடு, பாரம்பரியம் காக்கும் மிகப் பெரிய அறப்போராட்டத்தில் ஈடுபட்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர். ஆனால், அதனையும் நாசப்படுத்த சில நாசகார சக்திகள் உட்புகுந்தன, மத்திய, மாநில அரசுகள் திறம்பட சமாளித்தும், மாணவர்கள், இளைஞர்கள் விழிப்புடன் செயல்பட்டும் அந்தத் தீய சக்திகளை தனிமைப்படுத்தவும், ஜல்லிக்கட்டு நடந்திடவும் தீர்வு கண்டனர்.
மேற்கத்திய கலாச்சார திணிப்பு என்பது வியாபார நோக்கம் கொண்டது என்பதை இளைஞர்கள், மாணவர்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுபோல, காதலர் தினம் எனும் நச்சு பிரச்சாரத்தை முறியடிக்க முன் வர வேண்டும்.
பொது இடங்களில், ஆலயங்கள் போன்ற புனித இடங்களில் காதலர் என்ற பெயரில் அநாகரிகமாக நடந்துகொள்வோரை பொதுமக்கள் தடுக்க வேண்டும். காவல்துறையினர் மிகுந்த விழிப்புடன் இருந்து இந்த அநாகரிக கிளர்ச்சியைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
அப்படி மீறி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்பவர்களை இந்து முன்னணி தொண்டர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைப்பார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறோம். பண்பாட்டைக் காக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தேமுதிக தொண்டர் மகன்களின் படிப்பு செலவை ஏற்றார் விஜயகாந்த
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆண்டு தோறும் ஏழை எளியோருக்கு மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில் மாவட்டம் தோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த ஆண்டு மக்களுக்காக மக்கள் பணி திண்டுக்கல் மாவட்ட நிகழ்ச்சியின் போது விஜயகாந்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் என திண்டுகல் நகர நிர்வாகி கஜேந்திர பிரபு ஆசைப்பட, அது முடியாமல் போக வருத்தமடைந்த அவர் தனக்கு தானே தீயிட்டு கொண்டார், உடனே மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை தரப்பட,விஷயம் கேள்விப்பட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் அவரது மனைவியும் மருத்துவமனை சென்று ஆறுதல் கூறினார்கள் இந்நிலையில்
கஜேந்திர பிரபு சிகிச்சை பலனின்றி இறந்து போக அவரது மகன்கன் படிப்பு செலவை தேமுதிக ஏற்கும் என விஜயகாந்த் அறிவித்தார்
அதன்படி தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்கள் இருவரது படிப்பிற்காகவும் 2 இலட்சம் ரூபாயை அவர்களை வரவழைத்து இன்று வழங்கினார்
சசிகலா Vs பன்னீர் : ஒப்பிடுகிறார் ராமதாஸ்
சென்னை:
தலைமைப் பஞ்சத்தில் தவிக்கும் தமிழகத்தில், கட்டாயத்தின் பேரில் தலைவனைத் தேர்ந்தெடுக்கும் நிலை குறித்து தனது முக நூல் பக்கத்தில், ”ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!” என்ற தலைப்பிலான கட்டுரையில் பாமக., ராமதாஸ் கூறிய கருத்துகள்…
தமிழ்நாட்டில் இன்று மிகப்பெரிய ‘‘தலைவர் தேடல்’’ போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று வரை பணியாளராய், சில நேரங்களில் துரோகியாய் அறியப்பட்டவருக்கும், நேற்று முன்நாள் வரை அம்மாவுக்கும், நேற்று வரை சின்னம்மாவுக்கும் துதிபாடி பாத பூசை செய்து வந்தவருக்கும் இடையே அரசியல் முதலாளியின் இடத்தைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. நேற்று வரை சின்னம்மா என்றும், அன்புச் சகோதரர் என்றும் வாழ்த்துப்பா பாடிக்கொண்டிருந்த வாய்கள் இப்போது தாழ்த்துப்பா பாடிக்கொண்டிருக்கின்றன.
அந்தக் கட்சியில் இதுவரை விசுவாசம் என்று வெளியில் சொல்லிக்கொண்டு அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருந்த நிர்வாகிகளும் கூட, இப்போது ‘இசை நாற்காலி’ போட்டியில் திடீரென பாட்டு நிறுத்தப்பட்டவுடன் எந்த நாற்காலியில் இடம் கிடைக்கும் என்று தேடும் போட்டியாளர்களைப் போல, எந்த அணிக்குச் சென்றால் பதவி நாற்காலி கிடைக்கும் என்று அலையத் தொடங்கியிருக்கின்றனர்.
அந்தக் கட்சியில் உள்ள தொண்டர்களும், மற்றவர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு தங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அம்மாவுக்கு உடன்பிறவா சகோதரியாக இருந்ததால் சசிகலா தான் எங்கள் தலைவி என்று ஒரு தரப்பினர் முழங்க, இன்னொரு தரப்பினரோ மன்னார்குடி மாஃபியாவை எதிர்க்கும் ஓ.பி.எஸ் தான் எங்கள் தலைவர் என்று இன்னொரு தரப்பினர் கொண்டாடுகின்றனர். இந்த இரு தரப்பினருமே தலைவர் போட்டியில் களமிறங்கியுள்ள இருவரின் பின்னணியை அறியாதவர்களாக உள்ளனர். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் நல்ல தலைவர்கள் உள்ளனர் என்ற உணர்வே இல்லாதவர்களாக உள்ளனர் என்பது தான் கொடுமை.
சசிகலாவையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் தராசுத் தட்டுகளில் வைத்தால் முள் வேண்டுமானால் முறிந்து போகுமே தவிர எந்தத் தட்டும் தாழவோ, உயரவோ செய்யாது. அந்த அளவுக்கு அனைத்திலும் இருவரும் சமமானவர்கள்.
* இவர்களில் முதலாமவர் மூன்று ஆட்சிகளிலும் ஊழல் ராஜ்ஜியம் நடத்தியவர். இரண்டாமவர் இரு ஆட்சிகளில் ஊழல் ராஜ்ஜியம் நடத்தியவர்.
* முதலாமவர் 1991-96 ஆட்சியில் சென்னையில் கண்ணில் கண்ட சொத்துக்களையெல்லாம் வளைத்து மிரட்டிப் பறித்தவர் என்றால், இரண்டாமவர் தேனியில் தொடங்கி கேரளத்தின் மையம் வரை ஏராளமான சொத்துக்களை இனிக்கப் பேசி பணத்தால் அடித்துப் பிடுங்கியவர்.
* சசிகலாவும் அவரது சொந்தங்களும் 10 நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என்றால், பன்னீர்செல்வமும், அவரது சொந்தங்களும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள்.
* ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது கூலிப்படையை ஏவி அமிலம் வீசியது சசிகலாவின் சாதனை என்றால், பெரியகுளம் கோவிலின் தலித் பூசாரி நாகமுத்துவை மிரட்டி, அவமானப்படுத்தி தற்கொலை செய்து கொள்ள வைத்தது பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவின் சாதனை.
* சசிகலா குடும்பத்தில் தினகரன், டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன் ஆகியோர் ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தினார்கள். தினகரன் அதிமுக பொருளாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். வெங்கடேஷ் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலராக இருந்தவர். மகாதேவன் ஜெயலலிதா பேரவையில் கோலோச்சியவர்.
* ஆனால், பன்னீரின் குடும்பம் அனுபவித்த அதிகாரமோ இன்னும் பெரியது. ஜெயலலிதா உயிருடன் இருந்த போதும் கூட தேனி உள்ளிட்ட மதுரை மண்டல அதிமுக ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரகுமாரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. தவிர முன்னாள் காவல் துறை அதிகாரியான ரவீந்திரநாத் குமாரின் மாமனார் கந்தசாமி ஓய்வுக்குப் பிறகும் காவல்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஓ.பி.எஸ் தங்கை கணவர் சரவணன் பல்வேறு அரசு ஒப்பந்தங்களைப் பார்ப்பவர். பன்னீர் செல்வத்தின் மகளை திருமணம் செய்த காசிராஜன் வீட்டு வசதி வாரிய அரசு வழக்கறிஞர். காசிராஜன் அப்பாவான செல்லப்பாண்டியன் மதுரை உயர் நீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர். இளைய மகன் பிரதீப் மனைவியின் உறவினர் தங்கராஜ், வங்கி விவகாரங்களைப் பார்க்கும் அரசு வழக்கறிஞர் என ஒரு பட்டாளமே ஓ.பி.எஸ் பெயரைச் சொல்லி அதிகார மட்டத்தில் ஆட்டம் காட்டியவர்கள்.
* தமக்கும் கட்சிக்கும் துரோகம் செய்ததாகக் கூறி சசிகலாவையும், அவரது சொந்தங்களையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. இவர்களில் இராவணன் உள்ளிட்ட சிலரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி பணம் மற்றும் சொத்துக்களும் கைப்பற்றப்பட்டன.
* கட்சிக்கும், தமக்கும் துரோகம் செய்ததாக பன்னீர்செல்வம் குடும்பமும், அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் தண்டிக்கப்பட்டது. பன்னீர் செல்வம் போயஸ் தோட்டத்துக்கு அழைக்கப்பட்டு அவர் பெயரிலும், அவருக்கு தெரிந்தவர்கள் பெயரில் இருந்த சொத்துக்களும் எழுதி வாங்கப்பட்டன. பன்னீர்செல்வத்தின் மகன் இரவீந்திரநாத் சென்னையில் ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு அவர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களின் விவரங்கள் வாங்கப்பட்டன.
* சசிகலா குடும்பத்திற்காக ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வளைக்கப்பட்டது என்றால், பன்னீரின் மகன் இரவீந்திரநாத் வணிகம் செய்வதற்காக தமிழ் திரைப்படங்களை வெளிநாடுகளில் வினியோகிக்கும் உரிமை அவரைத் தவிர வேறு எவருக்கும் வழங்கப்படக்கூடாது என்று எழுதப்படாத சட்டம் இயற்றப்பட்டது.
* சசிகலாவுக்காக மணல் வணிகம் செய்ய ஆறுமுகசாமி இருந்தால், பன்னீருக்காக மணல் வணிகம் செய்ய சேகர் ரெட்டி உருவாக்கப்பட்டார்.
இவற்றையெல்லாம் கூடுதல் தகுதிகளாக சசிகலா குடும்பத்தினருக்கு வேறு பதவிகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், பன்னீரில் ஆதரவாளரான சேகர் ரெட்டிக்கு தமிழக அரசின் பரிந்துரையில் திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் பதவி வழங்கப்பட்டது.
சசிகலா குடும்பத்திற்கு கருப்பு பணத்தை வெள்ளையாக்கித் தர வேறு ஆட்கள் இல்லாத நிலையில், ஏராளமான ஃபெரா வழக்குகளை சுமந்து கொண்டு இருக்கும் நிலையில், பன்னீர் செல்வம் தரப்போ அன்புநாதன் என்ற தரகரை இதற்காகவே நியமித்து அவர் மூலம் பல்லாயிரம் கோடி சொத்துக்களை பத்திரமாக வெளிநாடுகளில் முதலீடு செய்தது.
இப்படியாக பார்த்தால் ஊரை அடித்து உலையில் போடுவதில் சசிகலாவை விட ஒரு படி மேலே இருக்கிறார் மிஸ்டர் பணிவு பன்னீர் செல்வம். இவரது புன்னகைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோதங்கள் தெரியாமல் வெளுத்ததெல்லாம் பன்னீர்…. மன்னிக்கவும் பால் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது அப்பாவிகள் கூட்டம்.
தலைவர் யார்… நல்லவர் யார்? என்பதை கெட்டவர்களுடன் ஒப்பிட்டு முடிவு செய்யக்கூடாது. கொள்கைகள் மற்றும் சாதனைகளுடன் ஒப்பிட்டு தீர்மானிக்க வேண்டும்.
ஓ.பி.எஸ்.ஸுக்கு ஏன் ஆதரவு: வீணை காயத்ரி விளக்கம்
சென்னை:
அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகள் உட்பட பல தரப் பினரும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வீணை காயத்ரியும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து விட்டு வந்திருக்கிறார். அரசியல் அரங்கம் எதிலும் தலைகாட்டாத அவர் இப்போது ஓபிஎஸ் இல்லத்துக்கே வந்து ஆதரவு தெரிவித்தது ஏன்? அவரே அதனை விளக்குகிறார்…
அதிமுக ஆட்சியில் இல்லாத போது, மறைந்த முதல்வர் ஜெய லலிதாவை போயஸ் தோட்டத்தில் 2 முறை சந்தித்துள்ளேன். 2011-ல் முதல்வரான பிறகு, அவரே என்னை அழைத்து அரசு இசைக் கல்லூரிகளின் இயக்குநர் பதவியை அளித்தார். என் கோரிக்கையை ஏற்று 2013-ல் இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம் அமைக்க உத்தரவிட்ட ஜெயலலிதா, அதன் துணைவேந்தராகவும் என்னை நியமித்தார்.
முதல்வர்தான் வேந்தர் என்பதால், பல்கலைக்கழகம் சிறப்பாக வளரும் என நம்பினேன். என் நினைப்புக்கு மாறாகவே எல்லாம் நடந்தது. துணைவேந்தரான பிறகு, பல் கலைக்கழக வளர்ச்சிக்காக முதல் வரின் தனிச் செயலராக இருந்த ராமமோகன ராவை சந்திக்க நேரிட்டது. பல்கலைக்கழகம் வந் ததையே விரும்பாத அவர், என்னைச் சந்திப்பதையும் தவிர்த்தார்.
பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினர்கள் பதவிக்கு நான் பரிந்துரைத்த 6 பேரை தேர்வு செய்யாமல், வேறு 6 பேரை பட்டியலில் சேர்த்தனர். ‘இப்பதவியில் பொம்மையாக இருக்க விரும்பவில்லை. நான் சிறுமைப்படுத்தப்படுவதை அம்மா விடம் சொல்லிவிட்டு ஒதுங்கி விடுகிறேன்’ என்று துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கூறினேன். அவர் என்னை சமாதானம் செய்து, நான் சிபாரிசு செய்தவர்களை பட்டியலில் சேர்த்தார். அப்படியும், துறைச் செயலரிடம் இருந்து அதற்கான ஒப்புதல் வரவில்லை.
ஜெயலலிதாவே ஆரம்பித்து, அவரே வேந்தராக இருக்கும் பல் கலைக்கழகத்தின் வளர்ச்சியை அதிகாரிகள் திட்டமிட்டே தடுக் கிறார்கள் என்பது தாமதமாகத்தான் எனக்கு தெரியவந்தது. முக்கிய முடிவுகளை எடுப்பதற்குக்கூட வேந்த ரான ஜெயலலிதாவைச் சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை.
இந்த சதிகள் பற்றி ஜெயலலிதா விடம் சொல்லவும் முடியாமல் நான் தவித்தபோது, எனக்கு வந்த கொலைமிரட்டல் தொடர்பாக விசா ரிக்க 2016 ஜூலையில் என்னை அழைத்தார் ஜெயலலிதா. அன்று அதிகாலையில் என்னை தொடர்பு கொண்ட கலை பண்பாட்டுத் துறை உயரதிகாரி, ‘முதல்வரிடம் என்ன கூறப்போகிறீர்கள்? என்று தலைமைச் செயலாளர் கேட்கிறார்’ என்றார். அப்போது ராமமோகன ராவ்தான் தலைமைச் செயலாளர். ‘அதை அவருக்குச் சொல்ல அவசியம் இல்லை’ என்றேன். மீண்டும் மீண்டும் கேட்டு நச்சரித்தார். ‘பணிகளைச் செய்யவிடாமல், இந்த வேலையை விட்டே ஓடும் அள வுக்கு எப்படி எல்லாம் எனக்கு டார்ச்சர் தரப்படுகிறது என்பதை சொல்லப்போகிறேன்’ என்றேன்.
தலைமைச் செயலகத்தில் முதல் வரை சந்திக்கச் சென்றபோது, ராம மோகன ராவ் உள்ளிட்டவர்களும் அங்கு இருந்ததால், முதல்வரிடம் நேரடியாகச் சொல்ல முடியவில்லை. ‘தனி ஆளாக போராடுகிறேன். அது பற்றி உங்களிடம் நிறைய பேசவேண் டும்’ என்று மட்டும் சொன்னேன். என் நிலையைப் புரிந்துகொண்ட முதல்வர், இனிமேல் நுண்கலைப் பல்கலைக் கழகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை சாந்தா ஷீலா நாயர், ஜெய முரளீ தரன் கவனிப்பார்கள் என்றார். என் பத விக் காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பதாகவும் சொன்னார். இது எனக்கு பெரிய சந்தோஷத் தைக் கொடுக்கவில்லை. முதல்வர் என்ன உத்தரவிட்டாலும், வெளியில் அதை செயல்படுத்தும் நிலையில் அதிகாரிகள் இல்லை என்பதே அதற்கு காரணம். இந்த சந்திப்புக்குப் பிறகு சில வாரங்கள் பல்கலைக்கழக கோப்பு கள் வேகமாக நகர்ந்தன. முதல் வர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டதும் மீண்டும் கிடப்பில் போட்டார்கள்.
ராமமோகன ராவின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது, என் கண்ணுக்குதான் தெரியாதே தவிர, மனதுக்கு நன்றாக தெரியும். மொத்தத்தில், கடந்த 3 ஆண்டுகளில் நான் தெரிந்துகொண்டது இதுதான்.. ஜெயலலிதாவிடம் நல்லவர் போல நாடகம் போட்ட எல்லோருமே வெளியில் அவரது எண்ணங்களுக்கு எதிராக செயல்பட்டார்கள்.
எனக்குத் தெரிந்தவரை, ஜெய லலிதாவின் உண்மையான விசுவாசி ஓபிஎஸ்தான். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, எங்கள் பல்கலைக்கழக விழாவில் வேந்தர் என்ற முறை யில் கலந்துகொண்ட முதல்வர் ஓபிஎஸ்-க்கு கேடயம் வழங்கினோம். ‘அம்மா சொன்னதாலதான் முதல்வர் பதவியில் இருக்கிறேன். இதெல்லாம் அம்மாவுக்குத்தான் தரணும்’ என்று சொல்லி வாங்க மறுத்துவிட்டார். அதே விசுவாசத்துடன் கடைசி வரை இருந்தார். அவருக்கு அருகில் நிற்கும்போது ஜெயலலிதாவுடன் இருக்கிற உணர்வு ஏற்படுகிறது. ஜெயலலிதாவின் எண்ணங்கள் செயல்வடிவம் பெற வேண்டுமானால், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமானால் ஓபிஎஸ்தான் முதல் வராக வேண்டும். இதன் அடிப் படையில்தான் அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு வந்தேன்.
இவ்வாறு வீணை காயத்ரி கூறியுள்ளார்.
தொழிலதிபர் வி.கே.என்.கண்ணப்பன் மறைவு: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணைவேந்தரும், தொழிலதிபருமான திருச்சி வி.கே.கண்ணப்பன் (72)
கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது உடல் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
திமுக செயல் தலைவர் மு.க்.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் மறைந்த வி.கே.என். கண்ணப்பன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அவருடன் திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, எம்.பி.சிவா ஆகியோர் உடனிருந்தனர்.
திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

