Home Blog Page 5689

ஜெயலலிதா கால் அகற்றப்படவில்லை; உடல் பதப்படுத்தப் பட்டது உண்மை!: மருத்துவர்கள் விளக்கம்

சென்னை:

அதிமுக., பொதுச் செயலராக சசிகலா பதவியேற்கவுள்ள நிலையில், சசிகலா குறித்து பொதுமக்களிடம் பரவியுள்ள சந்தேகத்தைப் போக்க வேண்டும் என்ற ரீதியில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரை வைத்து செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜெயலலிதாவை மெல்லக் கொல்லும் விஷம் வைத்து சசிகலா கொன்றுவிட்டார் என்றும், அவரது மரணம் இயற்கையானது அல்ல என்றும், ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டன என்றும், ஜெயலலிதாவின் புகைப்படம் ஒன்று கூட வெளியாகாமல் தடுக்கப்பட்டது; அவரை யாரையும் சந்திக்கவே விடவில்லை; அவரது உடல் முன்பே பதப்படுத்தப் பட்டது என்றெல்லாம் செய்திகள் உலவிக் கொண்டிருப்பதால், இவற்றை தெளிவாக்க வேண்டும் என்ற ரீதியில் இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே சென்னை ஓட்டலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், ஜெயலலிதாவுக்கு மருத்துவ முறைகளுக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நோய்த் தொற்றால் ஜெயலலிதா கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு விடுவதில் சிரப்பட்டு வந்தார்.

நுரையீரல் தொற்று இருந்தது. நோய்த் தொற்றுக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்தோம். ரத்தத்தில் பாக்ட்ரீயா கலந்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ரத்தத்தில் இருந்த பாக்ட்ரீயா மற்ற உறுப்புகளுக்கும் பரவியது. செப்சிஸ் உறுப்புகளை செயலிழக்க செய்தது. இதனால் பாதிப்பு அதிகமானது. சிகிச்சைக்குக் கொண்டு வரும் போது ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்தார்.

ரத்த அழுத்தம் சர்க்கரை பாதிப்பு அதிக அளவு இருந்தது. தேர்தலுக்காக கை ரேகை பதிவு செய்தோம். அப்போது அவர் சுய நினைவுடன் இருந்தார். கையில் டிரிப் ஏறியதால் கைரேகை பதிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதா எங்களிடம் சைகை செய்தார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஜெயலலிதா அறிந்து இருந்தார்.

டிரிக்கியோஸ்டோமி செய்தபின் அவருக்கு சுயநினைவு திரும்பியது. சுய நினைவு திரும்பியதால்தான் பிசியோதெரபிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் கால் உள்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை. அவருக்கு எந்த உறுப்புமாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை. எங்களிடம் ஜெயலலிதா சைகை செய்தார். சிகிச்சை அறையில் ஜெயலலிதா சில அடி தூரம் நடந்தார். நோயாளிக்கு பிரச்னை என்றால் முதலில் மருத்துவர்தான் கவலைப்படுவார். கையில் வீக்கம் இருந்ததால் அவர் கைரேகை வைத்தார். எதிர்பாராதபோது திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டதால் உடல்நிலை முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கான சிகிச்சை அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. எனது குடும்பத்தைப் பற்றி ஜெயலலிதா விசாரித்தார். ஜெயலலிதாவிடம் நான் நேரடியாகப் பேசினேன். உணவை பற்றியும், எனது குழந்தைகளை பற்றியும் ஜெயலலிதாவிடம் பேசினேன். சிகிச்சை முறை பற்றி சசிகலாவிடம் தினமும் விளக்கினோம். பிசியோதெரபி சிகிச்சைக்கு ஜெயலலிதா ஒத்துழைத்தார்.

சசிகலாவை தவிர ஜெயலலிதாவின் உறவினர்களும் அவரிடம் பேசினர்.  அருகில் இருந்தவர்கள் பற்றி ஜெயலலிதா அதிகம் அறியவில்லை. உயர் சிகிச்சைக்காக லண்டனுக்கு கொண்டு செல்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால் உலகத்தரமான சிகிச்சை அப்போலோவில் இருந்ததால் லண்டன் செல்லவில்லை. சிறந்த மருத்துவக்குழுவினர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். அதிநவீன சோதனைகள் மூலம் பிரச்னைகள் கண்டறிந்து சிகிச்சை அளித்தோம். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது டாக்டர்கள் இருந்தனர். ஜெயலலிதாவால் பேச முடிந்தது. ஆனால், தெளிவாக அவரால் பேசமுடியவில்லை.

இந்த நேரத்தில், நோயாளியின் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளியை புகைப்படம் எடுப்பது வழக்கமில்லை என்று கூறினார் ரிச்சர்ட் பீலே.

தொடர்ந்து, டாக்டர் பாலாஜி கூறும் போது:- தேர்தல் தொடர்பான ஆவணத்தை ஜெயலலிதா படித்துப் பார்த்தார். 22 ஆம் தேதி கைரேகை பெறும் போது ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்தார். ஆரம்பத்தில் அவர் காய்ச்சலுக்காகத்தான் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில்தான் மற்ற பிரச்னைகள் இருப்பது தெரிய வந்தது. மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது லேசான மயக்கத்துடன்தான் வந்தார். பின்னர் மருத்துவமனையில் ஒரு வார காலத்தில் எழுந்து பேசினார். வழக்கமாக உணவு உட்கொண்டார். முதன் முறை ஆளுநர் மருத்துவமனைக்கு வந்த போது, அவரிடம் சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக ஆளுநர் வந்த போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக ஆளுநர் பார்த்தார் – என்றார்.

பின்னர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறியபோது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப் பட்டது என்பது உண்மைதான். டிசம்பர் 6ம் தேதி அதிகாலைதான் பதப்படுத்தப்பட்டது. 15 முதல் 20 நிமிடம் வரை பதப்படுத்தும் பணி நடைபெற்றது. பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டி இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எம்.ஜி.ஆர். உடலும் இதேபோல் தான் பதப்படுத்தப்பட்டது என்று கூறினார்

மேலும், சசிகலா, தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு சிகிச்சை குறித்து தினமும் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 5.5 கோடி செலவானது என்றும், ஜெயலலிதா டிவி பார்த்தது, தயிர் சாதம் சாப்பிட்டது எல்லாம் உண்மைதான் என்றும் டாக்டர் பாபு கூறினார்.

ஜெயலலிதா டிச. 5ஆம் தேதி தான் மரணம் அடைந்தார் ஜெயலலிதாவுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றும் மருத்துவர்கள் கூறினர்.

இவ்வாறெல்லாம் மருத்துவர்களைக் கொண்டு விளக்கம் அளிக்க வைப்பது, தாம் செய்த செயலை மக்களிடம் நியாயப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று சசிகலாவை குறை கூறும் மக்கள், இவற்றாலெல்லாம் அவர் மீது படிந்துள்ள கறையை எளிதில் அகற்றிவிட முடியாது என்றும் கூறியுள்ளனர்.

அலிகாரை அலற வைத்த மோடி

மோடி அரசுக்கு டெல்லி மேல்-சபையில் பெரும்பான்மை கிடைத்துவிட்டால், அவர் சட்ட விதிகளை கடுமையாக்கி ஊழல்வாதிகளை பிடித்து விடுவார் என்று பயந்து போய் தான் சமாஜ்வாடியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து இருக்கிறது. அதனால்தான் கருப்பு பணத்தை ஆதரிப்போ ருக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிட்டு பாடம் கற்பித்து வருகிறேன்.

காங்கிரஸ் எத்தனை பெரிய கூட்ட ணி அமைத்தாலும் உங்களால் உத்தரபிரதேசத்தில் வீசும் பிஜேபி என்னும் பலத்த புயலில் காங்கிரசும், சமாஜ் வாடியும் ஊதித் தள்ள ப்படும் என்று அலிகாரில் நேற்று நடந்த மாபெரும் கூட்ட த்தில் முழங்கியுள்ளார் மோடி.

அலிகார் என்றவுடன் எல்லோருக்கும் தெரிவது அங்குள் ள முஸ்லிம் யுனிவர்சிட்டி தான்.இந்த முஸ்லிம் யூனி வர் சிட்டியை தன்னுடைய ஓட்டு வசதிக்காக காங்கிரஸ்
திருட்டுக்கூட்டம் எப்படி எல்லாம் வளைத்துள்ளது என்று
பார்த்ததால் இந்துக்கள் யாரும் எக்காலத்திலும் காங்கிரசுக்கு ஓட்டுப்
போட மாட்டார்கள்.

எப்படி கல்வித் துறையில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்தது என்பதற்கு இந்த அலிகார் முஸ்லிம் யுனிவர் சிட்டியே சாட்சி.இந்த பல்கலைக்கழகம் பிரிட்டிஸ் ஆட்சி யில் உத்தர பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டு1920 முதல் இயங்கி வருகின் றது.இது ஒரு சிறுபான்மை பல்கலைகழகம் என்கிற
பெயரில் தன்னாட்சி பெற்று முஸ்லிம் மாணவர்களுக்கு
மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து செயல் பட்டு வருகிறது.

ஆனால் இந்த பல்கலைகழகம் பாராளுமன்றத்தில் சட்டம்
கொண்டு வரப்பட்டு மக்களின் வரிப்பணத்தினால் உருவா க்கப்பட்டது எனவே இதற்கு சிறுபான்மை அந்தஸ்து அளி க்க கூடாது என்று வழக்கு தொடரப்பட்டு அதில் உச்சநீதி
மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.அதாவது…

அலிகார் பல்கலைக்கழகம் மத்தியஅரசினால் நாடாளு மன்றத்தில் சட்டம் இயற்றிக் கொண்டுவரப்பட்டதாலும், சிறுபான்மை முஸ்லிம்களால் உருவாக்கப்படாததாலும் அதற்கு சிறுபான்மை அந்த ஸ்து அளிக்கக் கூடாது என்று 1968 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அஜீஸ் பாஷா வழக்கி ல் ஒரு தீர்ப்பு அளித்திருந்தது.எப்படிஎன்றால்…

ஓர் அரசு மக்கள்ப் பணத்தை வைத்துக்கொண்டு கட்டும் கல்வி நிறுவனத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தைத் தர முடி யாது அதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை என்று தீர்ப்பு கூறியிருந்தது.

இதை எல்லாம் காங்கிரஸ் அரசுகள் கண்டு கொள்ளுமா?

அதனால் 1981ல் இந்திரா காந்தி காலத்தில் மத்திய காங்கிரஸ் அரசு ஒரு சட்டத் திருத்தத்தின் மூலம் அந்தப் பல்கலைக் கழகத்தை மீண்டும் சிறுபான்மை அந்தஸ்து உடையது என்று மாற்றியது. அதை 2005ல் நரேஷ் அகர் வால் என்பவர் தொடர்ந்த வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இருந்தாலும் காங்கிரஸ் அரசு அதை மைனாரிட்டி ஓட்டு க்களுக்காக கண்டு கொள்ளவில்லை.அதோடு உச்ச நீதி மன்றத்தில்இதற்கு தடை கேட்டு உச்சநீதி மன்றத்தில் நடந்து வரும் வழக்கில் மீண்டும் காங்கிரஸ் அலிகார் யூனிவர்சிட்டிக்கே சப்போர்ட் தெரிவித்து மனு தாக்கல் செய்து இருந்தது.
.
ஆனால் இப்போதைய மத்திய அரசு இதை கண்டு கொள் ளாமல் இருப்பார்களா.. அதனால் உச்சநீதிமன்றத்தில் அலிகார் யுனிவர்சிட்டி சிறுபான்மை யுனிவர்சிட்டி அல்ல
என்று என்று கூறி காங்கிரஸ் அரசு கொடுத்த மனுவை
வாபஸ் வாங்கிவிட்டது.அதனால் எப்பொழுது வேண்டு மானாலும் அலிகார் யூனிவர்சிட்டியின் நிறம் மாற ஆரம் பிக்கும்.

இந்த மைனாரிட்டி யுனிவர்சிட்டி என்ற அடையாளத் துடன் அலிகார் யுனிவர்சிட்டி இருப்பதால் எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி கோட்டாக்களில் இந்துக்களுக்கு இடம் கிடையாது.ஆனால் முஸ்லிம்களுக்கு உயர் மருத்துவ படிப்பு முதல்இளநிலை கல்வி வரை 25% இடங்கள் பல் கலைகழக நிர்வாகத்திற்கு உட்பட்டு அலிகார் யுனிவர் சிட்டி பரிட்சைவைத்து தேர்ந்தெடுக்கும்.

அடுத்த 50% இடங்கள் இந்தியா முழுவதும் உள்ள முஸ் லிம் மானவர்களுக்குஅலிகார் யுனிவர்சிட்டி பரிட்சை வைத்து முஸ்லிம் மாணவர்களை மட்டும் தேர்ந்தெடு த்து இடங்களை அளிப்பார்கள்.எஞ்சிய 25% இடங்கள் மட்டும் எய்ம்ஸ் மூலம் தேர்வு வைத்து இடங்களை நிரப்புவார் களாம்.

முழுக்க முழுக்க அரசின் கட்டுபாட்டில் உள்ள யுனிவர் சிட்டிக்கு சிறுபான்மையினர் யுனிவர்சிட்டி என்று தகுதி கொடுத்து அதில் இந்திய அரசு அளிக்கும் எந்த இட ஒதுக் கீ டும் செல்லுபடியாகாது என்று சொல்லும் ஒரு அரசாங் கம் உலகத்திலேயே இந்தியாவில் மட்டும் தான் இருக்க முடியும்

எப்படியாவது மோடியை சந்தித்து அலிகார் யுனிவர்சிட்டி க்கு அலிகார் யுனிவர் சிட்டிக்கு சிறுபான்மை அந்தஸ்து தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று அலிகார் முஸ்லிம் யுனிவர்சிட்டி துணை வேந்தர் சமீர் உதின் ஷா.கேட்டுப் பார்த்தார் .ஆனால் உச்சநீதிமன்றத்தை கை காட்டி விட்டு ஒதுங்கி விட்டார்.

உத்தரபிரதேச உயர்நீதிமன்றம் மற்றும் நாட்டின் உச்ச நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை காங்கிரஸ் அரசு தன்னு டை ய ஓட்டு அரசியலுக்காக எப்படியெல்லாம் கேவல ப்படுத்தியது என்பதை நினைத்து பார்த்தால் மானமுள்ள இந்தியன் யாரும் காங்கிரசுக்கு ஓட்டுப்போடமாட்டான்.

சசிகலாவை முதல்வராக்கவா வாக்களித்தோம்? அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு காத்திருக்கு சூடு!

சென்னை:

அதிமுக பொதுச் செயலராக ஆன சசிகலாவை, முதல்வராகவும் தேர்ந்தெடுத்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது வாக்காளர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர். சசிகலாவை முதல்வராகத் தேர்ந்தெடுக்க ஒப்புதல் தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது அவர்களது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். சசிகலாவை முதல்வர் ஆக்குவதற்கு ஒன்றும் நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. அதனால் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று திடீரென எழுந்துள்ள எதிர்ப்பு முழக்கத்தால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெயலலிதா முதல்வர் என்ற காரணத்தால்தான் அதிமுக.,வுக்கு தமிழக மக்கள் வாக்களித்தனர். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆளும் அதிமுகவையே மீண்டும் அரியாசனத்தில் அமரவைத்து, ஜெயலலிதாவுக்கு ஒரு சாதனைப் பக்கத்தை எழுதி வைத்தனர். ஆனால் உடல்நலக் குறைவால் ஜெயலலிதா காலமாகிவிட்டார். இதையடுத்து முதல்வராக ஏற்கெனவே ஜெயலலிதாவால் முதல்வராக அமர்த்தப் பட்ட ஓ. பன்னீர்செல்வமே இம்முறையும் அமரவைக்கப்பட்டார். இதை தமிழக மக்களும் ஏற்றுக் கொண்டனர்.

அதேநேரத்தில் தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராக அதிமுக பொதுச் செயலர் பொறுப்பை சசிகலா கைப்பற்றினார். அத்துடன் பேராசை பிடித்தவராக மக்கள் விருப்பத்துக்கு எதிராக முதல்வர் பதவியில் உட்காரவும் முடிவு செய்திருக்கிறார் சசிகலா. சசிகலாவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்துள்ளனர். சசிகலா ஓரிருநாட்களில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் சசிகலா முதல்வராக நீங்கள் எப்படி ஆதரவு கொடுக்கலாம்? கட்சிப் பதவி உங்கள் கட்சியின் உள்விவகாரம் என்று நாங்கள் கருதினோம். ஆனால், முதல்வர் நாற்காலி என்பது, பொதுமக்களின் விருப்பத்தைப் பொறுத்தது. அவரை எப்படி நீங்கள் முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கலாம்? என அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது பொதுமக்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சசிகலாவை முதல்வர் ஆக்கத்தான் நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோமா? எங்கள் வாக்குகளை வாங்கி சசிகலாவை முதல்வர் ஆக்க வேண்டாம்; அதற்கு நீங்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள். இதனால், நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஓட்டு போடலைன்னா, அரசை கேள்வி கேக்குற உரிமை கிடையாது: உச்ச நீதிமன்றம்

புது தில்லி:

தேர்தலில் வாக்களிக்காவிட்டால் அரசை கேள்வி கேட்க எந்த உரிமையும் கிடையாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

தில்லியைச் சேர்ந்த ‘இந்தியாவின் குரல்’ என்ற என்ஜிஓ அமைப்பு சார்பில் தனேஷ் லெஷ்தான் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் ‘நாடு முழுவதும் சாலையோரங்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே அவற்றை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் டி.ஓய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், என்ஜிஓ சார்பில் ஆஜரான தனேஷ் லெஷ்தானிடம், தேர்தலில் வாக்களித்தீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘நேர்மையாக சொல்வதென்றால் எனது வாழ்நாளில் ஒருமுறை கூட வாக்களித்தது இல்லை’’ என்றார்.

இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த நீதிபதிகள், ‘‘தேர்தலில் வாக்களிக்காத பட்சத்தில் அரசை கேள்வி கேட்கவோ, குற்றம்சாட்டவோ உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றும்படி உத்தரவிடுவதற்கு நீதிமன்றத்துக்கு போதிய அதிகாரம் இல்லை.

ஒருவேளை அப்படி உத்தரவு பிறப்பித்தாலும், அதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் குவிந்துவிடும். எனவே இது சாத்தியமற்றது. தவிர அந்தந்த உயர் நீதிமன்றங்களை அணுகாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு இந்தப் பிரச்சினையை கொண்டு வந்திருப்பதன் மூலம் மக்கள் மத்தியில் விளம்பரத்தை தேடிக் கொள்ளத்தானோ என தோன்றுகிறது. ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக முதலில் உயர் நீதிமன்றங்களை அணுகி தீர்வைத் தேடிக் கொள்ளுங்கள்’’ என உத்தரவிட்டனர்.

இதேபோல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி இதே போன்ற பொதுநல மனு ஒன்றை விசாரித்த நீதிபதிகள், ‘‘உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் எல்லாமே நடந்து விடுமா? ஒரேயொரு உத்தரவால் நாட்டில் ஊழல் ஒழிந்துவிடுமா? நாடு முழுவதும் ராம ராஜ்யம் மலர்ந்து விடுமா?’’ என அடுக்கடுக் காக கேள்வி எழுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பை வேகப்படுத்திய தவே!

புது தில்லி: அதிமுக பொதுச்செயலாளர் ஆன கையுடன், தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள வி.கே.சசிகலா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்த வாரமே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு விரைந்திடக் காரணமாக இருந்தவர் கர்நாடக தரப்பு, சீனியர் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே.

தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 1996ம் ஆண்டில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி ஜெயலலிதா உட்பட நால்வருக்கும் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். இதன் பின்னர், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து பல மாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கப் போகும் முடிவுக்கு வர, கர்நாடக அரசுத் தரப்பின் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவேயின் கோரிக்கை ஒரு முக்கியமான காரணமாகும். சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு தரப்புக்காக மூத்த வழக்கறிஞரான ஆச்சாரியாவுடன் இணைந்து வாதிட்ட மற்றொரு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே என்பது குறிப்பிடத் தக்கது.

உச்ச நீதிமன்ற பெஞ்ச்சை இன்று அணுகினார் தவே. “சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு 3 மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தீர்ப்பு குறித்து நினைவு படுத்த விரும்புகிறேன்” என்று தவே நீதிபதிகள் பெஞ்சிடம் தெரிவித்தார். இவரது நினைவூட்டலுக்கு பிறகே, இன்னும் ஒரு வாரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இந்த வாரத்தில் தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ள நிலையில், தவே கொடுத்த கோரிக்கையும், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவலும், தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

234 இடங்கள்ல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: அஸ்வின் பகீர்

சென்னை:
தமிழகத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தலுக்கு வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சூசகமாக தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக உள்ள சூழ்நிலையில், அவருக்கு எதிராக தமிழகம் முழுக்க ஆண்கள், பெண்கள், இளைஞர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தானும் ஒரு இளைஞராக ஒரு எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின். சென்னையை சேர்ந்த இவர் சசிகலாவுக்கு எதிரான எதிர்ப்பை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

‘தமிழக இளைஞர்களுக்கு 234 வேலைவாய்ப்புகள் விரைவில் கிடைக்க உள்ளது’ என்று அஸ்வின் டிவிட் செய்துள்ளார். 234 தொகுதிகள் தமிழகத்தில் இருப்பதையும், விரைவில் ஆட்சி கலைந்து தேர்தல் நடைபெறும், என்பதையும் அஸ்வின் பூடகமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், 234 இடங்களிலும் இளைஞர்கள் போட்டியிட முன்வர வேண்டும் என்ற தனது ஆசையையும் பூடகமாக குறிப்பிட்டுள்ளார் அஸ்வின். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் எழுச்சியுடன் போராடிய நிலையில் அஸ்வின் இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது வேலை வாய்ப்பு அழைப்புதான், அரசியல் அல்ல என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நடிகர் கமல்ஹாசனும், சூசகமாக தனது டிவிட்டில் இதனை கிண்டல் செய்து குறிப்பிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, ‘சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்போது சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்ட நிலையில் கமல் அவரது டுவிட்டர் பக்கத்தில் தனது டுவிட்டரில் “பீலிபெய் சாகாடும் அச்சிறும்அப்பண்டம் சால மிகுத்துப்பெறின்” என்ற திருக்குறளை வெளியிட்டிருந்தார். பின் குறளைத் திருத்தி, பீலிப்பேய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டஞ் சால மிகுத்து பெயின்.. என்னும் திருக்குறளை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது சசிகலாவை பற்றி மறைமுகமாக கமல்சாடுவதை போல உள்ளதாக நெட்டிசன்கள் பேசிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

சசிகலா முதல்வராக தேர்வு: மாணவர்களை அழைக்கிறார் குஷ்பு

சென்னை:
அதிமுகவின் பொதுச் செயலராக ஆன சசிகலா, தமிழகத்தின் முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு சபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஜனநாயக படுகொலை. எது எப்படி நடந்து இருந்தாலும் முறைப் படி தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள்தான் முதல்- அமைச்சர் ஆக வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் போராடினார்கள். அது போன்று இதற்கும் அழைப்பு விடுக்க வேண்டும்! இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கு… அடுத்த வாரம் தீர்ப்பு

*சொத்து குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்

சசிகலா முதல்வர்: ப.சிதம்பரம் கருத்து

ராஜாஜி, காமராஜர், அண்ணா போன்றோர் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் யார் அமரபோகிறார்கள் என்பது வேதனையளிக்கிறது. ஆட்சியில் யார் அமர இருக்கிறார்கள் என்பது குறித்து கேள்வி கேட்க மக்களுக்கு அதிகாரம் உள்ளது.
அதிமுகவினரின் தேர்வு சசிகலாவாக இருக்கலாம் ஆனால் சசிகலா முதல்வராக தேர்தெடுக்கப்பட்டதில் மக்கள் ஒரு பக்கமும், அதிமுக மறு பக்கத்திலும் உள்ளது. இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளார்.

சசிகல முதல்வர்: இவங்க சொல்றத கேளுங்க

*இவங்க இப்படிதான் சொல்றாங்க….*
*என்னிடம் கருத்து இல்லை… சசிகலா தேர்வு குறித்து முகமலர்ச்சியுன் வைகோ கருத்து*
*வேலுநாச்சியார் ஆட்சியை இனி பார்ப்பீர்கள் – அமைச்சர் 'கே.டி' ராஜேந்திர பாலாஜி*
*மக்கள் ஏத்துக்கிட்டதா சொல்றீங்க.. அப்போ தேர்தல்ல நின்னு ஜெயிச்சு வாங்க… ஜெ. நண்பர் கீதா சவால்*
*தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்… ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்கள்… அழகிரி மகன் கிண்டல்*
*சசி முதல்வராவதால் சோழர் காலம் மீண்டும் திரும்பிருச்சாம்.. இனோவா சம்பத் ஜால்ரா கமெண்ட்*
*ஆணாதிக்கம் கோலோச்சும் உலகில் மீண்டும் ஒரு பெண்- சசிகலாவிற்கு கி. வீரமணி வாழ்த்து
*அதிசயம் நிகழும்… நிகழ்த்திக் காட்டுவார்கள் மக்கள்!*
*குறித்துக் கொள்ளுங்கள், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அந்த அதிசயம் உறுதியாய் நிகழும். நிகழ்த்திக் காட்டுவார்கள் நம் மக்கள்*
– *பேராசிரியர் சுப.வீ.*