Home Blog Page 5835

பிப்.5ம் தேதி முதல் தேமுதிக., சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கல்: விஜயகாந்த்

சென்னை:

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தேமுதிக.,வில் வரும் பிப்.5ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் விருப்ப மனு வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் சட்டமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 5-2-2016 வெள்ளிக்கிழமை காலை 10 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

14-2-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குள் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், தமிழ்நாடு சட்டமன்ற தனித்தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.5 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.5ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற தனித் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.2,500-ம் செலுத்தி விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

தே.மு.தி.க. மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும் மற்றும் கட்சித் தொண்டர்களும் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாம் மாபெரும் வெற்றியடைய பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுவிலக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மீது “ஷூ’ வீச்சு: இளைஞர் கைது

பாட்னா:

பீகர் முதல்வர் நிதிஷ் குமார் மீது செருப்பு வீசிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று தனது சொந்த ஊரான பக்தியார்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து, நிதிஷ் குமாரை நோக்கி ‘ஷூ’ ஒன்றை வீசினார். அது மேடை அருகில் விழுந்தது. திடீரென நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

அங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து முன்னேறி அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்த பி.கே.ராய் என்றும், ஏப்.1ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள பூரண மதுவிலக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை அடுத்து அவர் பக்தியார்பூர் காவல் நிலையத்துக்கு அந்த நபர் கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக, வரும் ஏப்.1ம் தேதி மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப் படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார்.

 

விருதும் கரு(த்)தும்

“குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருக்கும் திறனாய்வு அவருடையது என்பது எனது கருத்து. மேலும், நல்ல விமர்சகனுக்குத் தனிப்பட்ட மனமாச்சரியங்கள் இருக்கக்கூடாது.

க.நா.சு.வுக்கு அது உண்டு.

நான் தில்லியில் இருந்த நேரம். தனக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைப்பதற்கு, க.நா.சு. கையாண்ட வழிகளும், மேற்கொண்ட பிரயத்னங்களும் அப்போது சாகித்ய அகாதெமியில்
சந்தி சிரித்தது.

“சாகித்ய அகாதெமி’ விருதுக்கு முழுக்க முழுக்கத் தகுதியானவர் அவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இலக்கியத் திறனாய்வுக்காக அல்ல; படைப்பிலக்கியத்துக்காக
விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
***
– மேற்கண்ட இந்தக் கருத்தை எழுதியிருப்பவர், தினமணியின் கலாரசிகன்! தேதி: 2013 ஜூன் 1, ஞாயிறு வரும் தமிழ்மணியில் – இந்த வாரம் பகுதியில்!

அவருக்கு க.நா.சு.,வை விமர்சிப்பதில் என்ன உரிமை இருக்கிறதோ… அதே உரிமை, அவரைப் பற்றி விமர்சிப்பதில் ஓர் இதழாளனான எனக்கும் உண்டு.!

இலக்கிய விருதுகளைப் பெறுபவர்கள், இலக்கிய உலகின் இதழாளர்களாக அல்லது, இலக்கியப் பத்திரிகையாளராக இருக்க வேண்டும்! அரசியல் எழுதும் நாளிதழ் பணியில் இருக்கக் கூடாது! அமுதசுரபி, கலைமகள், கணையாழி, என அரசியல் சார்பற்ற, இலக்கியம் மட்டுமேயான தளத்தில் இயங்கும் பத்திரிகாசிரியர்களுக்கு அரசின் விருதுகள் வழங்கப்பட்டால்… அதில் ஓரளவு நியாயம் கற்பிக்கலாம்…!

நாள் தொடங்கினால்… தலையங்கம் மூலம், அதிமுக.,வுக்கு வால் பிடிக்கும், அல்லது எதிர் நிலை எடுக்கும், அல்லது விமர்சனம் ஒன்றால் மட்டுமே அரசியல் நிலைப்பாட்டை வாசகருக்கு எடுத்து முன்வைக்கும் நாளிதழின் ஆசிரியர்கள், அரசின் விருதுகளுக்கு முன் நிற்பது… நாளிதழ் உலகுக்கே அவமானம்!

சரி போகட்டும்.. அதிமுகவின் முதன்மை கட்சிப் பத்திரிகை ஆகிவிட்டதால்… வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது!

ஆனாலும்…

உடன் இருக்கும் ஒருசிலரே… அல்லது, இதே திரு.வி.க., விருதுக்காக அரசுத் தரப்புக்கும் ஆசிரியத் தரப்புக்கும் இடைத்தரகு வேலை பார்த்த ஒருவரே கூட… நாளை எழுத்தாளராகி, அல்லது பத்திரிகையாளராகி…
இதே வார்த்தை நடையில், “சந்தி சிரித்தது” என்று எழுதாமல் போவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லைதான்!

என்ன இருந்தாலும் ’குரு‘ எண்ணெய்ச் சட்டியில் பொரித்து எடுத்த சீடைகள்தானே!

அலையில் சிக்கிய நாயகி அலறியடித்த படக்குழு

சினிமாவில் பால பாடம் கற்றதும் பயிற்சிகள் பெற்றதும் மலையாளத்தில்தான் என்றாலும் இயக்குநராக அறிமுகமாவது தமிழ்சினிமாவாகதான் இருக்கவேண்டும் என்ற கோலிவுட் காதலுடன் களமிறங்கியிருக்கிறார் ‘இரண்டு மனம் வேண்டும்’ இயக்குநர் பிரதீப் சுந்தர்.

“மலையாள சினிமாவில் பாலச்சந்திரமேனனின் சிஷ்யரான ஷாஷியம், ஏ.ஆர்.காசிம் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் வேலை செய்திருக்கிறேன். இயக்குநராக இது எனக்கு முதல் படம்” என அறிமுகப்படுத்திக்கொண்டவரிடம் படம் பற்றி பேசினோம்.

’வசந்தமாளிகை’ படத்தில் சிவாஜி பாடிய பாடலின் வரியை படத்தின் தலைப்பாக வைத்ததன் காரணம் என்ன?

“நடிப்புக்கு உதாரணமாக இருக்கும் நடிகர்திலகம் நடித்த பாடலின் வரியை அறியாத ரசிகர்கள் இங்கே குறைவுதான். அப்படி பிரபலமான பாடலின் வரி எங்களுக்கு தலைப்பாக கிடைத்ததில் மகிழ்ச்சியே. தவிர கதைக்கு பொருத்தமாகவும் இருந்ததால் வைத்தோம்.”

என்ன கதை, எப்படி பொருந்தி வருகிறது?

ஒரு சுனாமியில் தொலைந்து போகும் ஒரு குழந்தையை தேடி அலையும் நாயகன். சூழ்நிலையின் பொருட்டு தன்னிடம் வந்து சேரும் அந்த குழந்தையை வளர்க்கும் நீதிபதி. குழந்தைக்கு சொந்தம் கொண்டாடும் இந்த இருவருக்குள்ளும் நடக்கும் பாசப்போராட்டமும் அதைச்சுற்றிய சம்பவங்களுமே கதை. ஹீரோ, நீதிபதி தவிர கதையோட்டத்தில் டிராவல் ஆகும் அத்தனை கதாபாத்திரங்களுக்குள்ளும் அலையடிக்கும் இரண்டு குணங்களின் குறியீடாகவும் இருக்கும் என்பதாலேயே ‘இரண்டு மனம் வேண்டும்’ என்ற தலைப்பை வைத்தோம்.”

ஹீரோ, ஹீரோயின் பற்றி?

“ஷஜித் சுரேந்தர் என்ற புதுமுகம்தான் நாயகன். நாயகிகளாக நடித்திருக்கும் சிலங்கா, சைனாவும் புதுமுகங்களே. நீதிபதியாக மோகன் சர்மா, அரசியல்வாதியாக அழகு, காமெடியும் குணச்சித்திரமும் கலந்த கதாபாத்திரத்தில் கிரேண்மனோகர், சப் இன்ஸ்பெக்டராக படத்தின் தயாரிப்பாளர் அனில், வில்லனாக மணிமாறன், அருள்மணி, பழம்பெரும் மலையாள நடிகை ஸ்ரீமாஜிநாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தில் வேறென்ன ஸ்பெஷல்?

“நாகர்கோயிலில் உள்ள ஒரு கிராமத்து கடற்கரைதான் கதைக்களம். படத்தின் முக்கிய கதாபாத்திரமாகவும் இந்த கடற்கரை இருக்கும். ஒரு சோகப் பாடல் காட்சியை இந்த கடற்கரையில் எடுத்திருக்கிறோம். நாயகிகளில் ஒருவரான சிலங்கா, கடற்கரையை ஒட்டி நடந்துவருவது போன்ற காட்சியை எடுத்துக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென ராட்சத அலை ஒன்று வந்து நாயகியை கடலுக்குள் இழுத்துச்சென்றது. நாங்களெல்லாம் அதிர்ச்சியாகி நின்றோம். அலையடித்து நின்றபோது கரையில் இருந்து சில மீட்டர் தொலைவில் கடலில் போராடிக்கொண்டிருந்த நாயகியை நீச்சல் தெரிந்த தொழிலாளர்கள் சிலர் அவரை காப்பாற்றி கரை சேர்த்தபோதுதான் எங்களுக்கு உயிரே வந்தது.”

எந்த நம்பிக்கையில் புதுமுகங்களை வைத்து படம் எடுத்தீர்கள்?

“அந்த நம்பிக்கையை கொடுத்தது கதைதான். பிரபல நடிகர்கள் நடித்தால் கதையில் நிறைய சமரசம் செய்துகொள்ளவேண்டி இருக்கும் என்பதால் புதுமுகங்களை நம்பினோம். இன்றைக்கு பெரிய நடிகர்களாக இருப்பவர்கள் எல்லோருமே ஒரு காலத்தில் புது முகங்களாக இருந்தவர்கள்தானே.”

கவர்ச்சி, கமர்ஷியல் உண்டா? “கமர்ஷியலா இருக்கும் கவர்ச்சி இருக்காது. குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருந்ததால்தான் சென்சாரில் ஒரு கட்கூட வாங்கவில்லை. படத்துக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பதில் எனக்கு இரண்டாவது சிந்தனை இல்லை” என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார் பிரதீப் சுந்தர்.

அதிமுக அரசின் வேதனைகளை கூற 71 நாட்களும் போதாதது ! : சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் தகவல் !

 
இந்தியாவின் நான்காவது தூண் என மார்தட்டி கொண்டுள்ள ஊடகங்கள் (ஒரு சில தவிர ) சுயநல நோக்கில் அரசியல்கட்சிகள் , வணிக நிறுவணங்கள் மற்றும் அரசாங்கதிற்கு ஆதரவு செய்திகளையே வெளியிட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
 
 
இந்தியாவில் சமூக ஊடகங்கள் அறிமுகம் ஆன பின் ஊடகங்கள் மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என சொல்வது தான் சரியானதாக இருக்கும்.
 
ஊடகங்கள் மீது நம்பிக்கையை இழந்தவர்கள் பொது நல நோக்கத்தை கருத்தில் கொண்டு எதை கண்டும் அஞ்சாமல் மிக தைரியமாக லஞ்சம்.!! ஊழல்.!! அநீதி.!! குற்றங்களுக்கு எதிரான செய்திகளை சமூக ஊடகங்களை பயன்படுத்தி பலர் பதிவிட்டுகின்றனர்.
 
இந்த நிலையில் அரசியல் உண்மைகள் எனும் முகனூல் குழுவின் பக்கத்தில் ஜெயலலிதா மிக கடுமையாக விமர்சித்து அதிமுக அரசின் வேதனைகளை கூற 71 நாட்களும் போதாதது எனும் தலைப்பில் ஒரு பதிவை 28-01-2016 இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவை சுமார் 750க்கும் மேற்பட்டடோர் விரும்பி அதை பகிர்ந்துள்ளனர். மேலும் அந்த பதிவானது வாட்ஸ்ஆப்பிலும் வைரலாக பரவிவருகிறது .
 
அரசியல் உண்மைகள் எனும் முகனூல் குழுவின் பக்கத்தில்அரசின் வேதனைகளை கூற 71 நாட்களும் போதாதது எனும் பதவில் கூறியுள்ளதாவது :-
 
என் அரசின் சாதனைகள் கூற 36 நாட்கள் தேவை ஜெயலலிதா
மன்னிக்கவும் உங்கள் அரசின் வேதனைகளை கூற 71 நாட்களும் போதாதது:-
 
1, வெற்றி பெற்ற முதல் நாள் உங்கள் அரசு என்ற வார்த்தை மறுநாள் நான், எனது அரசு என்றானதே……
2 .சமச்சீர்கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது.
3 , பாட புத்தகங்களை அச்சடித்து 450 கோடியை வீணடித்தது.
4, அண்ணா நூலகத்தை நாசபடுத்தியது .
5, கூடங்குளம் மக்களை ஏமாற்றியது.
6, பஸ் கட்டணம் உயர்தியது.
7, பால் விலையை உயர்த்தியது.
8, மின்சார கட்டணத்தை உயர்த்தியது.
9, கடுமையான மின் தட்டுபாடை ஏற்படுத்தியது.
10, ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காது.
11, தொழில் வளர்ச்சியை முடக்கியது .
12, தொழில் நிறுவணங்கள் தமிழகத்தை விட்டே ஒடியது.
13, சட்டசபையை ” பெஞ்ச் தட்டும் சபையாக ” மாற்றியது.
14, கரும்பு விவசாயிகளை கதற விட்டது .
14, நெல் விவசாயிகளை நெம்பியெடுத்தது.
15, கெயில் விவகாரத்தில் விவசாயிகளை வாட்டியது.
16, முல்லை பெரியாரில் மக்களின் முட்டியை உடைத்தது.
17, வில்லேஜ் & தாலுக் அலுவலங்களில் இலவசமாக வழங்கபட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.
18, சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.
19, உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்து!
 
20, அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.
21, தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
22, எதிர்கட்சியை உடைத்தது.
23, கொடநாட்டில் உல்லாச வாசம்.
24, அரசு ஊழியர்களை தற்கொலை செய்ய வைத்தது.
25, பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.
26, மீனவர்களை ஜெயிலில் தவிக்க விட்டது.
27, கச்சதீவு மீட்பை கனவாக்கியது.
28, படகுகளை பறிகொடுக்க வைத்தது.
29, மாற்றுதிரணாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
30, மக்கள் நல பணியாளர்களை மரணத்தை நோக்கி உந்தியது.
31, இலக்கு வைத்து மது விற்றது.
32, தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
33, காவல் துறையை ஏவல் துறையாக்கியது.
34, ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.
35, நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.
36, மந்திரிகள் மண் சோறு தின்றது.
37, ஊழலில் திளைப்பது.
38, தாது மணலை கொள்ளையடித்தது.
39, ஆவின் ஊழல் .
40, கமல்ஹாசனை கலங்கடித்தது.
41, விஜயை வியர்க்க வைத்தது .
42, சினிமா விழாவை சின்னாபின்னாமாக்கியது.
42, சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.
43, கனிமவளத்தை களவாடியது.
44, அப்துல் கலாமை அவமதித்தது.
45, ஊழல் IAS அதிகாரிகள் பட்டியல் வெளியானது.
46, 25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.
47, முட்டை, பருப்பு என அனைத்திலும் ஊழல்.
48, மின்சாரத்தில் கமிஷன் .
49, மணல் கொள்ளை.
50, லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது .
51 , பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.
52, நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது.
55, ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
56, தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.
57, திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர்.
58, பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.
59, செவிலியரை சொல்லியடித்தது.
60, உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம்.
61, ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.
62 ,RK நகரில் இமாலய கள்ள ஓட்டு.
63, செம்பர பாக்கத்தம்மா என விருது வாங்கியது.
64, ஸ்டிக்கர் ஒட்டியது.
65, கோவனை கைது.
.
66, பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது.
67, மிடாஸில் மிதக்கும் தமிழகம்.
68, ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.
69, வெற்று வார்தைகளில் வர்ணஜாலம் காட்டியது.
70, விஷன் 2023 வெளியே வராமலே போனது …..
71, உபி சகோதரி உலகையே வாங்கி குவிப்பு .
இது வெறும் சேம்பிள் தான் ஆத்தா இதுக்கே 71 நாள் முழுசா போட்டா எத்தனை வருசம் ஆகும்
என்று அரசியல் உண்மைகள் எனும் முகனூல் குழுவின் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மேற்படி போன்ற பல்வேறான பதிவுகள் சமூக ஊடகங்களின் அதிகமாக வைரலாக பரவும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது .

தினகரன் அலுவலகப் படுகொலை மறு விசாரணை வழக்கில் சிபிஐக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

 
கடந்த 2007-ம் ஆண்டு திமுகவின் அடுத்த கட்ட தலைவர்கள் குறித்த கருத்துக் கணிப்பை திமுக குடும்பப் பத்திரிகையான தினகரன் வெளியிட்டது.
 
இதில் ஆத்திரமடைந்த திமுகவின் அழகிரி கோஷ்டியினர் மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசி அப்பாவி ஊழியர்கள் மூன்று பேரைக் கொன்று வெறியாட்டம் ஆடினார்கள்.
 
”கொலைக்குக் காரணமான அழகிரி மற்றும் ரெளடிகளை சட்டத்தின் முன் நிறுத்து தண்டனை வாங்கித் தருவோம்” என்று தினகரன் பத்திரிகை உரிமையாளரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன் கூறியிருந்தார். ஆனால் பிறகு அதனைப் பற்றி அவர் வாயே திறக்கவில்லை.
 
அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேரின் மீது வழக்கு தொடரப்பட்டது. பிறகு அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர்.
 
அதனை எதிர்த்து தமிழக அரசும், கொல்லப்பட்டவர்களின் ஒருவரான வினோத் என்பவரின் தாயாரும் மறுவிசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
 
அந்த மனு தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்காத திமுக தரப்பு ரெளடிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழ.கருப்பையா முழுவதுமாக அரசியலுக்கு முழுக்கு போட போகிறாரா ?

 
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை துறைமுகம் தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தான் நீக்கப்பட்டது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது,சட்டமன்ற உறுப்பினர் ஆக வருவதற்கு காரணமான முதலமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாக கூறிய அவர், தன்னை கட்சியில் இருந்து நீக்கியது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
“நிகழ்ச்சியில் நான் பொதுவாக பேசியது முதலமைச்சருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் என நினைக்கிறேன். கட்சியில் இருந்து நீக்கியதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறன். அதேசமயம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதே நெறிசார்ந்த அரசியல். அதனால் நான் ராஜினாமா செய்துவிட்டேன். இதுதொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிவிட்டேன்” என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பேசிய அதிமுக-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா. பொதுவாக அனைத்து கட்சி பொதுக்குழுக்களில் ஏகமனதாகவே தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். மந்திரிகள் கொள்ளையடிக்கிறார்கள், கீப் வீட்டுக்கு போவதுகூட பொதுப்பணி என்பதாகிவிடுகிறது என சரவெடியாக தாக்கிப் பேசியிருந்தார். இந்த நிலையில் அவர் இன்னமும் அதிமுக-வில் தொடர்ந்து நீடிக்கிறார் என்பதுதான் அதிசயமாகவும் அனைவராலும் பார்க்கப்படுகிறது.
சென்னையில் துக்ளக் ஆண்டுவிழாவில் பழ. கருப்பையா பேசியதாவது :-
 
இந்த நாட்டில் பெரிய கேடு வந்ததற்குக் காரணம் அரசியல்வாதியும், அதிகாரவர்க்கமும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்ததன் விளைவுதான். அரசியல்வாதிகள் இன்று ஊழல் செய்யக் காரணம், அவர்களை அதிகாரிகள் வளைத்துப்போட்டு ருசி காண்பித்துவிட்டார்கள்.
 
இன்று மந்திரியும், தலைமைச்செயலாளரும் கூட்டுச் சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலை வந்துவிட்டது சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அவர்கள் எவ்வளவு பேச உரிமை உள்ளவரோ, அவ்வளவு உரிமையோடு பேசுவதற்கு உரிமை உடையவர் சரத்குமார். இப்போது, அமைச்சர்கள் என்றால் அடாவடித்தனம் வந்துவிடுகிறது.
 
ஐந்தாறு பி.ஏ-க்கள் வைத்துக்கொள்கிறார்கள். சால்வை எடுக்கக்கூட ஒரு பி.ஏ இருக்கிறார். இன்றைக்கு, பதவிகளில் இருப்பவர்கள், தங்களுடைய கீப் வீடுகளுக்குப் போகும்போதுகூட பாதுகாப்பு வண்டிகளோடு செல்கிறார்கள். காரணம், அதுவும் பொதுப்பணிதான் என்கிறார்கள். எஸ்கார்ட் வண்டியையும், சர்க்யூட் ஹவுஸையும் எடுத்துவிட்டால் ஒருவரும் அமைச்சராக இருக்க விரும்பமாட்டார்கள்.
 
ஒரு கூட்டம் கூட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். இப்போது, யாருக்கும் கூட்டம் வருவது இல்லை. கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். மாவட்டம், வட்டம் எல்லாம் எதற்கு இருக்கிறார்கள்? வாகனங்களில் கூட்டத்தை அழைத்து வரத்தானே? எந்தப் பொதுக்குழுவில் எந்தத் தீர்மானம் விவாதிக்கப்படுகிறது? எல்லாம் ஏக மனதாகத்தானே நிறைவேற்றம் நடக்கிறது.
 
புருசன் பொண்டாட்டியே ஒத்துப்போகாத காலத்தில், இத்தனை பேர் எப்படி ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்? அதனால்தான், நாட்டில் வளர்ச்சி இல்லை. எந்தக் கருத்தும் எதிர் கருத்தால்தான் வளர்ச்சி பெறும். முதல் கருத்தும், எதிர் கருத்தும் மோதும்போது புதிய கருத்து பிறக்கும். அந்தப் புதிய கருத்துக்கும் எதிர் கருத்து உருவாகி, மீண்டும் புதிய கருத்து உருவாகும். இதுதான் வளர்ச்சி. ஆனால், இங்கு எதிர் கருத்து என்பதே கிடையாது. இங்கு எந்த அரசியல் கட்சியின் பொதுக்குழுவிலும் தீர்மானத்தை விவாதிப்பது இல்லை. தீர்மானத்தைப் படிக்கிறார்கள். பிறகு எதற்கு ஜனநாயகம்? ஒரு குடைக்குள் ஆளும் மன்னர்களாகத்தான் எல்லாக் கட்சித் தலைவர்களும் இருக்கிறார்கள். சமுதாயம் சந்தைப்பொருளாகி, கடவுளையும் சந்தைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். கடவுள் நம்பிக்கை கெட்டுப் போய்விட்டது.
 
மதங்கள் நிறுவனங்களாகிவிட்டன. உண்டியல் பணமே மந்திரிகளுக்குப் போகிறது. அதிகார வர்க்கம் ஒத்துழைக்காமல் இவர்கள் ஓர் அணாகூட கொள்ளையடிக்க முடியாது. சுடுகாட்டில் படுத்து உறங்கும் நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நாடு கெஜ்ரிவாலைத் தேடி அலைகிறது என்றால், நாடு எந்த நிலையில் உள்ளது என்று பாருங்கள். நல்லவன் என்று யாரைக் கண்டாலும் நாட்டை ஆளக் கூப்பிடுகிறார்கள்.
 
சங்ககாலத்தில் பா வீடு என்று உள்ளது. அதாவது, ஒரு நாட்டு மன்னன் பக்கத்து நாடு படையெடுத்து அங்கிருக்கும் ஆநிறை உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்து, அதை தனது படை வீரர்கள் முதல் ஜோதிடர் வரை பிரித்துக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. அந்த நிலை இந்த நாட்டில் மீண்டும் திரும்பியுள்ளது. மந்திரி கொள்ளையடித்து தொண்டர்கள் முதல் மாவட்டம், வட்டம் என அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு பழ. கருப்பையா பேசினார்.
 
இவ்வளவு விமர்சித்த பின்னரும் பழ. கருப்பையா, அதிமுகவில்தான் நீடிக்கிறார். துக்ளக் ஆண்டுவிழா விழா என்பதால் அதன் ஆசிரியர் ‘சோ’ சங்கடப்படுவாரோ என நினைத்து பழ. கருப்பையா மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா? எனும் கேள்வியும் எழுந்தது.
அந்த செய்தியை தமிழக சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையாவை கண்டு அதிமுக தலைமைக்கு அச்சமா ? எனும் தலைப்பில் 21-01-2016 அன்று நமது dhinasari.com இணைய தமிழ்ச் செய்தித் தளத்திலும் வெளியிட்டு இருந்ததை அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் நேற்று ஜெயலலிதா அ.தி.மு.க. வில் இருந்து பழ. கருப்பையா நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
என்னதான் தற்போது பழ. கருப்பையா. மிக நாகரிகமாக முதலமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாக கூறினாலும் அவருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க.சேர்ந்த கட்சியினர், தமிழக அமைச்சர்கள் செய்யும் ஊழல் அட்டகாச அராஜகங்களை பொறுத்து கொள்ள முடியாமல் தான் இருந்து வந்தாக அவரது நெருங்கய நட்பு வாட்டர தகவல்கள் கூறுகிறது.
இன்றைய காலத்தில் நடைபெறும் அரசியல் மற்றும் மேற்படி காரணகங்களால் பழ. கருப்பையா அ.தி.மு.க. வில் இருந்தும் அரசியலில் இருந்து இன்னும் சில தினங்களில் விலகி விடலாம் என நினைத்து அறிவிப்பு செய்ய ரகசியமாக திட்டமும் போட்டுவந்தாரம். அந்த தகவலும் எப்படியோ முதலமைச்சர் ஜெயலலிதாவும் கசிந்து போயிருக்க கூடும் என்றே சொல்லப்படுகின்றது
மேற்படியான ரகசிய தகவலை அடுத்தும், தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் பழம் பெரும் அரசியல்வாதியான பழ. கருப்பையா அவராக அ.தி.மு.க. வில் இருந்து விலகுவதாக அறிவித்தால் அதனால் ஏதேனும் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு உருவாகுமோ என ஜெயலலிதா நினைத்து இருக்க கூடும் .
அதனால் முதலமைச்சர் ஜெயலலிதா பழம் பெரும் அரசியல்வாதியான பழ. கருப்பையாவை கட்சியிலிருந்து நீக்கி இருக்கலாம் என்றும் பேசப் படுகிறது .
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள இந்த நிலையில் அரசியலுக்கு முழுவதுமாக முழுக்கு போட்டு அரசியல் வாழ்கையை விட்டு ஒதுங்கி விடுவார் என்றும் கூறப்படுகின்றது.
மேலும் தற்போது பழ. கருப்பையாவை சைவ சித்தார்ந்த பணிகளிலும் . நூல்கள் எழுதி வெளியிடுவதிலும் அவரது நாட்டம் அதிகமாக சென்று கொண்டு இருக்கிறது . அதனால் மேற்படியான பணிகளுக்காகவே அவரது நேரத்தை இன்னும் அதிக மாக செலவிடுவார் என தெரிகிறது .
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் எத்தனையோ பேர் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாதவர்கள் சட்டத்திற்கு விரோதமாக சுயநல நோக்கத்தில் மக்களின் வரி பணத்தை முறைகேடுகள் செய்து கொள்ளை அடிக்கவே உலகை சுற்றி வலம் வந்து கொண்டுள்ளனர் .
அதற்காக மானம் மரியாதையை இழந்து அவர்கள் உள்ள கட்சி தலைமைக்கு ஜால்ரா தட்டிக் கொண்டு கொத்தடிமைகளாக இருந்து வரும் இன்றைய காலத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு அந்த கட்சியினர் செய்யும் அராஜகங்களை எதை கண்டும் அஞ்சாமல் மிக தைரியமாக பழ.கருப்பையா சரவெடியாக உலகினருக்கு வெட்ட
வெளுச்சமாக காட்டிய பழ.கருப்பையாவை அனைவரும் பராட்டாமல் இருபார்களா என்ன ?
எது எப்படியோ அ.தி.மு.க.வில் இருந்து விலகிய பழ.கருப்பையா வரும் நாட்களில் நாடும் சமூகமும் வளர்ச்சி அடைய லஞ்சம்.!! ஊழல்.!! அநீதி.!! குற்றங்களுக்கு எதிராகவே செயல்படுவார் என அனைவரும் கருதுவார்கள் !
 
அ.தி.மு.க.வில் இருந்து விலகிய பழ.கருப்பையா
வெளியில் எவருக்கும் தெரியாத அ.தி.மு.க.வில் நடைபெற்ற அவருக்கும் மட்டும் தெரிந்த அராஜகங்களை இன்னும் சில தகவலை வரும் நாட்களில் சொல்லாமல்
இருக்கவா போகிறார்?

ஊழல் அட்டகாசத்தால் தனியார் கல்வியில் உருவான மாணவர்களின் மரண ஓலங்கள் !

 
அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பெரும்பாலானோர் பண வெறி பிடித்து சுயநல நோக்கத்தில் தன்னிச்சையாக பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வரும் ஊழல் அட்டகாசத்தால் தனியார் கல்வியில் மாணவர்களின் மரண ஓலங்கள் உருவாகியுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, எஸ்.வி.எஸ்., யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரியை சேர்ந்த, மூன்று மாணவியர், மர்மமான முறையில் இறந்தனர்.
எஸ்.வி.எஸ்., கல்லுாரியை, சட்டவிரோதமாக இயங்க வைத்த துறை அதிகாரிகளை தண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு நஷ்ட ஈடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும்’ என, எஸ்.வி.எஸ்., கல்லுாரி மாணவர்கள், நேற்று கோரிக்கை விடுத்தனர்.
இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர்களின் மரண ஓலங்கள் தனியார் கல்வி மயம் ஊழல் உச்சத்துக்குக் சென்றுள்ளது என்பதையே வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது .
 
இந்த நிலையில் மதுரையில் “மாணவர்களின் மரண ஓலங்களும் அரசின் கொள்கைளும்: தொடரும் உரிமை மீறல்கள் – நமது பதிலென்ன?” என்ற தலைப்பில் சமம் குடிமக்கள் சார்பில் கலந்தாய்வு கூட்டம். 27-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும்
நிறைவேற்றப் பட்டது.
கூட்டத்துக்கு மூட்டா அமைப்பின் முன்னாள் தலைவர் பேராசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சி.சே. இராசன் முன்னிலை வகித்தார். முனைவர் வ. அருள்ராஜ் அகில இந்திய மாணவர் சங்கத்தின் ஹரி, சட்டப்பஞ்சாயத்து அமைப்பின்சார்பில் ஜெகநேசன், சமம் குடிமக்கள் இயக்கத்தின் மண்டல அமைப்பாளர் சசிகலா உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் ஹைதராபாத் பல்கலை மாணவர் ரோஹித் மற்றும் விழுப்புரம் தனியார் யோகா மருத்துவக்கல்லூரி மாணவிகள் பிரியங்கா. மோனிஷா, சரண்யா ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்வர்கள் பேசியதாவது :-
மாணவ, மாணவியர் தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சமூக மாற்றத்துக்கான கருவி எனக் கருதப்படும் கல்வியை காசுக்கு விற்கும் போக்கு ஒரு சமூகத்தை, நாட்டைச் சீரழித்துவிடும். கல்வியை தனியார் மயமாக்கியதால் ஊழலும் உச்சத்துக்குச் சென்றுள்ளது.
சாதிய பாகுபாடும் கல்வி வியாபாரமாகுதலுமே இன்றைக்கு மாணவ, மாணவியரைத் தற்கொலையின் விளிம்புக்குக் கொண்டு போய் நிறுத்துகிறது. கல்வி வியாபாரமானதால் சமூக சீரழிவும் மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்றதாழ்வும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாறவேண்டும் எனப் பேசியவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களாவது :-
இறந்த மாணவர் ரோஹித்துடன் பல்கலைகழகத்தை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் நிபந்தனையின்றி சேர்த்துக் கொள்ளவேண்டும்.
பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதன் மூலம் மாணவர் ரோஹித்தின் மரணத்துக்குக் காரணமான மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
கல்வியில் தனியார் மயம் வலுப்பெற்று வருவதால் ஊழல் மலிந்து ஏழைகளும் அடித்தட்டு மக்களும் உரிய கல்வியை இலவசமாக பெற இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.
விழுப்புரம் யோகா மருத்துவக் கல்லூரி மாணவிகள் தற்கொலைக்கு தார்மீகப் பொறுப்பு சுமத்தி தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பணிநீக்கம் செய்யப்படவேண்டும்.
எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு சாதகமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கல்வியை அனைத்து மட்டத்திலும் அரசு இலவசமாக வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் தீர்மானங்களை வலியுறுத்தி பிப். 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டத்தில் சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சண்முகவேல் நன்றி கூறினார்

உயர் நீதிமன்றத்தின் கண்டனம் பாராட்டு அல்ல: தமிழக அரசு திருந்த வேண்டும் என்கிறார் ராமதாஸ்

சென்னை:
உயர் நீதிமன்றத்தின் கண்டனம் பாராட்டு அல்ல; தமிழக அரசு திருந்த வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ, சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு தமிழக அரசு ஆளாவது மட்டும் தவறாமல் நடந்து விடுகிறது. ஆனாலும், உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்காக வருத்தப்படாத தமிழக அரசு, மீண்டும், மீண்டும் நீதிமன்றங்களை அவமதிப்பதையே செய்து வருகிறது.

தமிழக அரசுத்துறைகளில் பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பதவி உயர்வு தொடர்பாகத் தான் இந்த வழக்குத் தொடரப்பட்டது என்பதால் இதற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித் துறை ஆகியவற்றுக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு ஆணையிட்டது. ஆனால், பல முறை அவகாசம் கொடுத்தும் இவ்வழக்கில் இரு துறைகளும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பதில்மனு தாக்கல் செய்யப்படாததால் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் 2 துறைகளுக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதித்தனர். அடுத்த முறை கண்டிப்பாக பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர். இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உயர்கல்வித்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதைக்கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் விதித்தனர். தமிழக உயர்கல்வித்துறைக்கு மீண்டும் ரூ.10,000 அபராதம் விதிப்பதாகவும் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும், உயர்நீதிமன்றத்தின் ஆணைகளுக்கும்  தமிழக அரசு எந்தளவுக்கு மரியாதை அளிக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். தமிழக அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடரும் போது, அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ள குற்றச்சாற்றுகளுக்கு பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், 6 மாதங்களுக்கு மேலாக  அதையே செய்யாமல் அரசு காலம் தாழ்த்துகிறது என்றால் அதைவிட முக்கியமான வேறு வேலை என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு தடைகளைத் தாண்டி படித்து முடிக்கும் நிலையில் அவர்களுக்கு தகுதியான பணிகளை வழங்குவதும், பணிகளை பெற்றவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு அளிப்பதும் அரசின் அடிப்படையான கடமையாகும்.

ஆனால், உரிமை கேட்டு போராடுகிறார்கள் என்பதற்காகவே முந்தைய அரசும், இப்போதும் அரசும் மாற்றுத்திறனாளிகளை எதிரிகளைப் போல கருதி பழி வாங்குகின்றன. 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திய பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை கைது செய்த காவல்துறை அவர்களை கிழக்குக் கடற்கரைச்சாலை உத்தண்டியில் உள்ள சுடுகாட்டில் இறக்கிவிட்டது. அடுத்த சில நாட்களுக்கு பிறகு போராடியவர்களை கைது செய்து மதுராந்தகத்தில் இறக்கிவிட்டது. நேற்று கூட வேலை கோரி தலைமைச்செயலகம் முன் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளை கைது செய்து கொடுமைப்படுத்தியுள்ளது காவல்துறை. இவ்வாறாக மாற்றுத்திறனாளிகள் மீதான பழிவாங்கும் எண்ணம் காரணமாகவே அவர்கள் தொடர்ந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்யவில்லை.

ஏதேனும் ஒரு வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தால் அதை மிகப் பெரிய அவமானமாக ஆட்சியாளர்கள் கருத வேண்டும். நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது என்பதற்காகவே  ஆட்சியாளர்கள் பதவி விலகிய நிகழ்வுகள் இந்தியாவில் நடந்துள்ளன. ஆனால், கீழ்நீதிமன்றங்கள் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை யார் கண்டனம் தெரிவித்தாலும் அதை துடைத்து எறிந்து விட்டு செல்வதை அ.தி.மு.க. அரசு வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 100 முறையாவது தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றமும், அதன் மதுரைக் கிளையும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி பலமுறை அரசுக்கு அபராதமும் விதித்துள்ளன. 2014 ஆம் ஆண்டில் கிரானைட் ஊழல் விசாரணைக்காக அதிகாரி சகாயத்தை விடுவிக்காததற்காக ரூ.10,000 அபராதம் விதித்தது, நீதித்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளாதது தொடர்பான வழக்கில் ரூ.25,000 தண்டம் விதித்தது, கதர் கிராமத் தொழில் வாரிய ஊழியர்கள் 20 பேருக்கு ஊதியம் வழங்கப்படாத வழக்கில் ரூ.20,000 அபராதம் விதித்தது என அரசு பட்ட அவமானங்களை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம்.

ஆனால், இதற்காக தமிழக அரசு ஒருபோதும் கவலைப்படவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை என்ற எண்ணத்துடனேயே செயல்படுகிறது. தமிழக அரசுக்கு எதிராக 21,000 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இதில் தமிழகத்திற்கு தான் முதலிடம் என்றும்   உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும் அதை அரசு கண்டுகொள்ளவில்லை. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறையை இன்னொரு தூணான அரசு நிர்வாகம்  மதிக்காமல் செயல்பட்டால் அது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தாக முடியும். எனவே, ஜனநாயகத்தை காப்பதற்காக இனியாவது தமிழக அரசு திருந்தி நீதிமன்றங்களை மதித்து நடக்க முன்வர வேண்டும்.

திருச்சி விமான நிலைய அதிகாரிகளை சரி செய்வது யார்?

திருச்சி விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் விமான பயணிகளிடம் நடந்து வருகிறார்கள்.

1. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தென்பகுதி ஏழை ஆண், பெண் இருபாலரிடம் இவர்கள் நடத்தை விதிமுறைகளை மீறி அதிகபிரசிங்கிதனமான கேள்விகளை கேட்டு மனக்கஸடத்தை ஏற்படுத்தி அசிங்கபடுத்துகின்றனர்.

2. விமான பயணிகள் ஏதேனும் புரியாமல் விளக்கம் கேட்டால் இங்கேயே இப்படி ? அங்கே போய் என்ன புடுங்கபோற என்கிறார் ஒரு அதிகாரி

3. வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று அவர்கள் ஈட்டும் சிறுசேமிப்பில் வாங்கும் 4 அல்லது 5 பவுனை சோதனை செய்த பின் இது பொண்டாட்டிக்கா இல்லை வப்பாட்டிக்கா என கேட்கும் கஸ்டம்ஸ் அதிகாரிகள்.

4. அதுவும் இவர்கள் மலேசிய குடியுரிமை தமிழர்களிடம் பழகும் பாங்கு இருக்கிறதே ? நல்ல வேலை நம்ம தாத்தா காலத்திலேயே நாம இங்கிருந்து போய்விட்டோம் என்று அவர்கள் வாயலயே சொல்லுற அளவுக்கு இருக்கு…

5. இது எல்லாம் முடிந்த பிறகு ஏதாவது குடுத்துட்டு போயான்னு கேட்கும் கடைநிலை காவலர்கள், பணம் கையில் இல்லை என்றால் குழந்தைகளுக்கு சாக்லெட் வாங்க மறந்தயா ? சரக்கு வாங்க மறந்தயா ? என அநாகரிகமான கேள்விகள்…

6. உள்ளயே வரும் கரண்சி புரோக்கர்கள்…

7. தரம் குறைந்த தண்ணீரே வராத கழிப்பறைகள்…

8. மரியாதை இல்லாத காவலர்கள்…

இப்படி மிகவும் கீழ்த்தரமாக திருச்சி விமான நிலைய நிர்வாகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.