Home Blog Page 5836

திமுக., ஆட்சிக்கு வந்தால் மீனவர் நலம் காக்க முழு மதுவிலக்கு: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:

மீனவர் நலம் காக்க முழு மதுவிலக்கு தேவை, கச்சத்தீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்’ மேற்கொண்டுள்ள ஸ்டாலின், சென்னை திருவல்லிக்கேணி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மீன் வியபாரிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

மதுவை ஒழிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவிக்கிறார். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என்று கேட்டால் அதுவும் முடியாது என்கிறார். முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல் அமைச்சரால் இப்படி அறிவிக்க முடியாது.

திமுக ஆட்சிக்கு வந்தால் போடப்படும் முதல் கையெழுத்து மதுவிலக்கு அறிவிப்பாக இருக்கும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். நாங்கள் செய்வதைத்தான் சொல்வோம். திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம், மீனவர்களுக்கு கடன் தள்ளுபடி, மீன்பிடி துறைமுக மேம்பாடு, புதிய துறைமுகங்கள், கடன் வசதி, மீனவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை என திமுக ஆட்சியில் மீனவர்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் மீனவர்கள் நலனுக்காக எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

கச்சத்தீவை மீட்போம் என 1991-ல் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், பிரதமருக்கு கடிதம் எழுதியதைத் தவிர அதற்காக எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. கடந்த வாரம் சட்டப்பேரவையில் 75 நிமிடங்கள் பேசியபோதும் கச்சத்தீவு பற்றியும், மீனவர்கள் பற்றியும் அவர் எதுவும் பேசவில்லை.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிமுக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசுக்கு போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை.

சட்டப்பேரவையிலும், சென்னை மாநகராட்சி மன்றத்திலும் மக்கள் பிரச்சினைகளை பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி பேசுபவர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது.

சென்னை மாநகரில் மீன் வியாபாரம் செய்துவரும் பெண்கள் உட்பட 152 பேர் இதில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பெண் வியாபாரிகள் பேசும்போது, ‘‘மீன் வியாபாரத்தில் வருமானம் வந்தாலும் குடிப்பழக்கத்தில் எல்லாம் கரைந்து விடுகிறது. இதனால் குடும்பங்கள் சீரழிகின்றன. எனவே, தமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டுவர வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர்.

சிந்தாரிப்பேட்டை பகுதி மீனவர்கள் பேசும்போது, ‘‘சென்னையின் பழமையான மீன் சந்தையான சிந்தாதிரிப்பேட்டை சந்தை இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. எனவே, அருகிலேயே இட வசதியுடன் புதிய மீன் சந்தை அமைக்க வேண்டும்’’ என்றனர்.

 

Today, as part of the Namakku Naame payanam, I met with the fishermen community who shared their concerns with me. The…

Posted by M. K. Stalin on Wednesday, January 27, 2016

சமூக சேவகி தமிழ்ச்செல்விக்கு குடியரசுத் தலைவர் விருது

பொதுவாழ்வில் பயணிக்கும் சமூக சேவகி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்- க்கு தன்னலமற்ற சேவைகள் செய்பவர் என்ற சிறந்த சமூக சேவகி எனும் ஜனாதிபதி விருதை குடியரசு தலைவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.  
இந்தியவில் பல்வேறு துறைகள் மற்றும் தாமாக முன்வந்து சமூக சேவையில் மிக சிறப்பாக பணியாற்றி வருபவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து அவர்களை கெளரவபடுத்தும் விதத்தில் உயரிய விருதுகள் ஒன்றான குடியரசு தலைவர் விருது பலருக்கு வழங்கபட்டு வருகிறது. 
 
இந்த ஆண்டு நடைபெற்ற இந்திய குடியரசு தினத்தையொட்டி பொதுவாழ்வில் பெண்கள் எனும் தலைப்பில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை நாடுமுழுதிலும் இருந்து 100 பெண்களை தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்களுக்கு தன்னலமற்ற சேவைகள் செய்பவர் என்ற சிறந்த சமூக சேவகி எனும் ஜனாதிபதி விருதை இந்த 2016ஆண்டு
புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தினத்தில் 100 பெண்களுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.  
தன்னலமற்ற சேவைகள் செய்பவர் என்றும் சிறந்த சமூக சேவகி எனும் ஜனாதிபதி விருது பெற்ற சமூக சேவகி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் நமது செய்தியாளருக்கு அளித்த பேட்டியின் போது கூறியுள்ளதாவது :-. 
தாய்மொழியை என் பெயரின் முதலெழுத்தாக வைத்து தமிழை எனக்குள் கொண்டுவந்த என் தந்தை பிறந்த ஊர் “வடங்கம்பட்டி”டேனீஷ்பேட்(சேலம்) என்றாலும் எங்கள் தந்தை சென்னைக்கு அருகே பெருங்களத்தூரில் குடியமர்ந்ததனால் என்னுடைய பூர்வீகம் சதானந்தபுரம் கிராமம் பெருங்களத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்)என்றாகிப்போனது. 
பள்ளி படிப்பில் சாதாரண அளவில் மதிப்பெண் பெறும் கொஞ்ச புத்திசாலித்தனம் கொண்ட மாணவி வீடு பெருங்களத்தூர் என்றாலும், படிப்பு தொடர்ந்தது பல்லாவரம் “புனித தெரசா பெண்கள் “மேல்நிலைப்பள்ளியில் நான் படித்த வகுப்பு ஆசிரியர் இல்லை என்றால் நானும் இல்லை என் படிப்பும் இல்லை என்கிறார். இவர் உடன்படிக்கும் தோழிக்கு பென்சில் கொடுத்து உதவுவதில் ஆரம்பித்த குணம் இன்றுவரை தொடரக்காரணம் அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட தன்னுடைய அப்பா கி.அயோத்திராமன் அவர்கள்தான் என சொல்கிறார். 
அதுமட்டுமின்றி நேசவிழுதுகள் எனும் நண்பர்குழு வை உருவாக்கி அதன்வழியாக பயணிக்கிறார் இவர் ஒவ்வொரு நட்பும் “ஒற்றை இறகாயிருக்க,அதை இணைத்து முழு சிறகாய் “.இந்த முழு சிறகுடன் நாங்கள் ஒவ்வொருவரும் பயணித்து சமூகத்தில் சாதனை படைப்போம் நல்லதை செய்வோம் சாதி மதம் இனம் பாராமல் உதவிகளை செய்வோம்..என்று பெருமையுடன் சொல்கிறார்.இல்லையென்றோர்க்கு உதவணும் நம்மால் முடிந்ததை ” எனும் சொல்லிற்கேற்ப முடிந்த உதவிகள் படிக்க கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு உதவிக்கொண்டிருக்கிறேன்.
 
சமீபத்து சென்னை வெள்ளத்தில் நேச விழுதுகள் மற்றும் shine treechy” என்ற அமைப்புடன் இணைந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டதில. நேரிடையாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உதவிய மனத்திருப்தியும் மகிழ்ச்சியும் சொல்லொண்ணா நிறைவான மனநிலையும் அதன் மூலம் கிடைத்தது என சொல்கின்றார்
 
நிச வாழ்வில் நடக்கின்ற செயல்கள் நம்மை ஸதம்பித்து இருக்க செய்கிறது ,சில நிமிடங்கள். இப்படி ஒரு சமூதாய பார்வை பார்க்க காரணம் தன் தந்தை கி.அயோத்திராமன் எனவும் ,அவர்கள் இன்று உயிருடன் இல்லை ,அவர் பெரியாரின் சீடர் நாத்திகவாதி ,சம்பிரதாயங்கள் உள்ள குடும்பத்தில் பிறந்து வாழ்ந்த நாள்முதல் இறக்கின்ற வரை பெரியாரிஸ்ட் டாகவே வாழ்ந்து மறைந்தவர்.அவர் பெண்களை வளர்த்த விதம் முழு சுதந்திரம் கொடுத்தது நிறைய சாதிக்கணும் என்றது,
 
இந்த சமூகத்தில் எப்படி வாழணும் மற்றவர்களுக்கு எப்படி மரியாதை தரவேண்டும் என்று கற்பித்தது இப்படி பெற்றோர்களின் வளர்ப்பே பிள்ளைகளை சீர்தூக்கிகாட்டும் அந்த வகையில் இந்த உயர்திரு ஜனாதிபதி மாளிகயின் வரவேற்பையும் கிடைக்கின்ற விருதையும் தன்னுடைய தந்தை கி.அயோத்திராமன் அவர்களுக்கு நெகிழ்வுடன் சமர்பிப்பதாக ஜனாதிபதி விருது பெற்ற திருமதி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் நமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி விருது பெற்ற சமூக சேவகி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் தற்போது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL ) எனும் தொலைப்பேசித் (அரசாங்க) துறையில் சென்னை பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
 
சமூக சேவகி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் ஜனாதிபதி விருது பெற்றமைக்கு www.dhinasari.com இணைய தமிழ்ச் செய்தித் தளம் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும், அவருக்கு தெரிவிக்கிறது. மேலும் அவரது சமூக சேவை தொடர வாழ்த்துகிறது.

ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளைக் கண்டால் 1098 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம்!

சென்னை:
ஆதரவின்றி சுற்றித் திரியும் குழந்தைகளைக் கண்டால், 1098 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை கண்டுபிடிக்க ‘‘புன்னகையை தேடி’’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நலனோடு தொடர்புடைய துறைகள் மற்றும் காவல்துறை அலுவலர்களை உள்ளடக்கிய ஐந்து குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு காணாமல் போன குழந்தைகள் தேடப்பட்டனர்.

அந்த வகையில் இந்தியா முழுவதும் சுமார் 3 ஆயிரம் குழந்தைகள் பேருந்து நிலையம், கோவில்கள், சுற்றுலா தலங்கள், சாலையோரங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர். அதில் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ‘‘புன்னகையை தேடி’’ திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை தேடும் பணியாக ‘‘புன்னகையை தேடி’’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியது. அப்போது சென்னையில் 122 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, ‘‘புன்னகையை தேடி’’ திட்டமானது கடந்த 1-ந் தேதி முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தமிழகத்தில் காவல் துறை மற்றும் அரசு சாரா அலுவலர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவில்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஆதரவின்றி திரியும் குழந்தைகள் இருப்பின் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆதரவற்ற மற்றும் காணாமல் போன குழந்தைகளின் வாழ்வு ஒளிமயமானதாக அமைய பொதுமக்கள் தங்கள் பகுதியிலோ அல்லது பொது இடங்களிலோ ஆதரவற்ற குழந்தைகளை கண்டால் உடனடியாக ‘1098’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் கொடுக்கலாம் அல்லது அருகே உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இயற்கை மருத்துவ கல்லூரி அனுமதி விவகாரம்: சிபிஐ விசாரணை கோருகிறார் ராமதாஸ்

 

சென்னை:
இயற்கை மருத்துவ கல்லூரி அனுமதி வழங்கியது யார் என்றும், அதில் சிபிஐ விசாரணை தேவை என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த பங்காரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரியில் பயின்று வந்த சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகிய மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மாணவிகளை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் செயல்பட்டு வந்ததாகவும், கல்லூரியின் நிறுவனரான வாசுகி தமது சமுதாயத்தைச் சேர்ந்த  அதிகாரிகள் உதவியுடன் அரசு நிர்வாகத்தை சரி கட்டியும், சமூக விரோதிகள் மூலம் மாணவர்களை மிரட்டியும் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய அக்கல்லூரிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது  நான் தான் அனுமதி அளித்ததாக சில வீணர்கள் கூறிய அர்த்தமற்ற உளறல்களின் அடிப்படையில் ஊடகங்கள் விஷமத்தனமாக செய்தி வெளியிட்டுள்ளன. ஊடக அறத்தை மறந்து அவதூறு புகார்களை கூறும் சிலரது சதிக்கு பாரம்பரியமிக்க ஊடகங்கள் துணை போவது வருத்தமும், வேதனையும் தருகிறது.
சர்ச்சைக்குரிய கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான எழுப்பப்படும் ஐயங்களை தெளிவு படுத்துவது தான் இந்த அறிக்கையின் நோக்கம். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி தொடங்க வேண்டும் என்றால் கல்லூரிக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பின்னர், அக்கல்லூரி மாநிலத்திற்கு தேவை என்ற சான்றிதழ் (Essentiality Certificate)  கோரி தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  அதன்பின் இணைப்பு நிலை (Affiliation) கோரி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசின் சுகாதாரத்துறையும், மருத்துவப் பல்கலைக்கழகமும் தனித்தனியாக ஆய்வு நடத்தி அனைத்து வசதிகளும் இருந்தால் மட்டுமே  அத்தியாவசியத் தேவை சான்றிதழும், இணைப்பு நிலையும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த கல்லூரி கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக கூறப்படுவதால் அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு தான் அத்தியாவசியத் தேவை சான்றிதழை வழங்கியிருக்க வேண்டும்.
மாநில அரசிடமிருந்து இத்தகைய இரு சான்றிதழ்களையும் பெற்ற பிறகு தான் மத்திய ஆயுஷ் துறையின் அனுமதி (கிஜீஜீக்ஷீஷீஸ்ணீறீ) கோரி விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பித்தால் அத்துறையால் அமைக்கப்படும் குழுவினர் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு சென்று ஆய்வு நடத்தி அதுகுறித்த அறிக்கையை ஆயுஷ் துறையிடம் தாக்கல்  செய்வார்கள். அந்த அறிக்கையை துறையில் உள்ள துணை செயலர் முதல் செயலாளர் நிலை வரை உள்ள 4 அல்லது 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுப்பார்கள். நான் மத்திய அமைச்சராக இருந்த போது, ஆயுஷ் துறை அப்போதைய மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திருமதி. பனபாக லட்சுமி அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அத்துறை சம்பந்தப்பட்ட எந்த கோப்பும் எனது பார்வைக்கு வராது. மத்திய சுகாதாரத்துறை கேபினட் அமைச்சர் என்ற முறையில் ஆயுஷ் துறை குறித்த கொள்கை முடிவுகளை எடுத்து அறிவிப்பது மட்டும் தான்  எனது பணி ஆகும். எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் வந்தது குறித்தோ, அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்தோ எதுவும் எனக்கு தெரியாது. நானும் அனுமதி அளிக்கவில்லை. அக்கல்லூரிக்கு எந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது என்பதைக் கூட ஊடகங்கள் மூலம் தான் அறிந்துகொண்டேன். ஒருவேளை பனபாக லட்சுமி தான் அனுமதி அளித்ததாக வைத்துக் கொண்டாலும், அவரே நேரடியாக சென்று அனைத்துக் கல்லூரியையும் ஆய்வு செய்ய முடியாது. இது தொடர்பாக ஆய்வு செய்த குழுவினரும், அதிகாரிகளும் அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் தான் இறுதி முடிவை எடுக்க முடியும்.
அதுமட்டுமின்றி, சர்ச்சைக்குரிய கல்லூரிக்கு அனுமதியை புதுப்பிக்க மத்திய அரசு மறுத்த போது சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு, அக்கல்லூரியில் மீண்டும் ஆய்வு செய்து அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கும்படி ஆணையிட்டதாகவும் அறிகிறேன். இதையெல்லாம் அறியாமல், நிதானமின்றி நடந்து கொள்ளும் ஒரு தலைவர் வாய் போன போக்கில் உளறியிருக்கிறார். இறந்தவர் வீட்டில் நின்று கொண்டு உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த நன்றிகளை தெரிவிப்பது, புகழ்பெற்ற மூத்த இசையமைப்பாளர் மறைந்த போது அவரது வீட்டில் நின்று அவருக்கு இசையமைக்கவே தெரியாது எனக் கூறுவது போன்ற உளறல்களுக்கு ஒப்பானது தான் அவர் கூறியுள்ள இந்த குற்றச்சாற்றும். அந்த தலைவரின் நெருங்கிய உறவினர் நடத்தும் மருத்துவக் கல்லூரியில் கோடிக்கணக்கில் நன்கொடை பிடுங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதைத் தடுப்பதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.  அடிப்படை இல்லாமல் இவரைப் போன்றவர்கள் எழுப்பும் குற்றச்சாற்றுகள் உண்மையானவையா? என்று உறுதி செய்துகொண்டு அதன் பின் ஊடகங்கள் செய்தி வெளியிடுவது தான் ஊடகஅறமாக இருக்கும்.
மாணவிகளின் உயிரிழப்புக்கு காரணமான கல்லூரிக்கு நான் அனுமதி வழங்கவில்லை. அதுகுறித்த எந்த கோப்பிலும் நான் கையெழுத்திடவில்லை. இந்த விஷயத்தில் நடந்த உண்மை என்ன? என்பதை கண்டுபிடிப்பதற்காக இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தேர்தல் பணி தொடர்பாக அதிகாரிகளுடன் ராஜேஷ் லக்கானி இன்று ஆலோசனை

சென்னை:
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக, சென்னை உள்பட எட்டு மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், அலுவலர்களுடன் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வியாழக்கிழமை இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் நடைபெறும். இருப்பினும் இந்த ஆண்டு சற்று முன்னரே நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.அதிமுக, திமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதான கட்சிகளில் ஏராளமானோர் விருப்ப மனுக்களையும் கொடுத்து வருகின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. வாக்காளர் இறுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னை உள்பட 8 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், அலுவலர்களுடன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.

‘தேக தான’ விழிப்புணர்வை ஏற்படுத்திய மோகன்லால் உடல் ராமசந்திரா மருத்துவமனைக்கு வழங்கல்

 

சென்னை சவுகார்பேட்டை ஸ்வயம்சேவகரும் சேவாபாரதியின் பணிகளில் தொடக்க காலம் முதல் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றி வந்தவருமான மோகன்லால் இன்று விடியற்காலை 2-30 மணியளவில் காலமானார்.

அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. அவரது உடல் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மனை கல்லூரிக்கு ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தானமாக அளிக்கப்பட்டது.
இந்த தேக தானம் குறித்து தன் வாழ்நாள் காலத்திலேயே பதிவு செய்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லோர் வட்டம், ஆதரவற்றோர்க்கான விடுதி சேவை,  சேவாபாரதி, கண்தான திட்டம்,  உறுப்புகள் தான திட்டம், தேக தான திட்டம், நியூரோதெரபி சிகிச்சை, ஆரோக்ய பாரதி,  ஸ்வாமி நாராயண் ஆன்மீக அமைப்பு, ஜெயின் சேவா சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மருத்துவமனை தொண்டு திட்டங்கள் மற்றும் ஆர் எஸ் எஸ் தொடர்புடைய அனைத்து அமைப்புகளிலும் அவர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டாற்றி வந்துள்ளார்.

மறைந்த மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரசாரக் ஸ்ரீசிவராம்ஜி வழிகாட்டுதலில் மோகன்லால் சேவைகள் செய்துவந்தார்.

அவரது மறைவு பேரிழப்பு என்று சேவாபாரதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவரம் பெற: ராம.ராஜசேகர்,
சேவாபாரதி, 94451 29386

மனக்குழப்பம், மன அழுத்தம் அகல..,

இந்த அவசரமான உலகில் எல்லோரையும் அதிக மன அழுத்தமும்,மனக்குழப்பமும் தடுமாற வைக்கும்.

அலைபாயும் மனம்

சில நேரம் அதிக குழப்பத்தையும்,எதிர்மறை சிந்தனையையும் கொடுக்கும்.

பொதுவாக மனதை செயல்படுத்தும் கிரகம் சந்திரன் ஆகும்.

இவர்தான் நம் மனதை ஆட்கொள்பவர்.

மேலும் நம்முடைய ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து அல்லது பகை கிரகத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும்.

இதற்கு..,

ஒவ்வொரு திங்கள் கிழமை அதிகாலை குளித்து பூஜையறையில் அருகில் அமர்ந்து ”ஓம் சந்திராய நமஹ’ என்று ஒன்பது முறை சொல்வது நல்லதாகும் அதேபோல் பௌர்ணமி அன்றும் சொல்லலாம்.

சந்திரனுக்குரிய பச்சரிசியில் சாதம் வடித்து ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

மேலும் சந்திரன் வலு குறைந்து இருப்பவர்கள், கடக ராசியில் பிறந்தவர்கள், இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள், திங்கட்கிழமை பிறந்தவர்கள் ஆகியோர் முத்து மாலை, மற்றும் முத்து மோதிரம் அணியலாம்.

மேற்கண்டவைகளை செய்தால் மன அழுத்தமும்,மனக்குழப்பமும் படிபடியாக குறையும்.

லஞ்சம், ஊழல் : உலக அளவில் 76–வது இடத்தை பெற்ற இந்தியா

ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 76–வது இடம் கிடைத்து உள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறியுள்ளார் .
 
ஊழல் நாடுகள் குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறியதாவது:–
 
ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கையைப் பொறுத்தவரை ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தலைவர்கள் அறிவித்த எதிர்பார்ப்புகள் அவ்வளவாக நிறைவேறவில்லை.
 
வங்காளதேசம், கம்போடியா ஆகிய 2 நாடுகளும் ஊழலால் மிகுந்த தாக்குதலுக்கு உள்ளாகின. ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் ஊழலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. ஊழலுக்கு எதிராக சீனா எடுத்து வரும் நடவடிக்கைகளால் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.
 
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015–ல் 64 நாடுகள் ஊழலை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளன. 53 நாடுகள் இதில் பின்தங்கின. மற்ற நாடுகளின் நிலையில் ஏற்ற, இறக்கம் எதுவும் இல்லை என்று ஜோஸ் உகாஸ் தெரிவித்துள்ளார்
 
உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் அந்த நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது. 2015–ம் ஆண்டு இந்த தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டுக்கு 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
 
இதில் 2014–ம் ஆண்டைப் போலவே ஐரோப்பிய நாடான டென்மார்க் ஊழலற்ற நாடாக முதலிடத்தை பெற்றது. பின்லாந்துக்கு 2–வது இடமும், சுவீடனுக்கு 3–வது இடமும் கிடைத்தன. ஆப்பிரிக்க நாடான சோமாலியாவும், ஆசியா நாடான வடகொரியாவும் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் கடைசி 2 இடங்களைப் பிடித்தன. இந்தியாவுக்கு 76–வது இடம் கிடைத்து உள்ளது. 2014–ம் ஆண்டு 85–வது இடத்தில் இருந்த இந்தியா 9 இடங்கள் முன்னேறி இருக்கிறது. 2014–ல் இருந்ததைவிட இந்தியாவில் 2015–ல் ஊழல் சற்று குறைந்து காணப்படுகிறது. எனினும், இதில் இந்தியா பெற்றுள்ள மொத்த மதிப்பு 2014–ம் ஆண்டைப் போலவே 100–க்கு 38 ஆக இருக்கிறது.
 
இந்தியாவின் அண்டை நாடான பூடான் ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் 27–வது இடம் வகிக்கிறது. இந்த நாடு 100–க்கு 65 மதிப்பை பெற்று இருக்கிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவுக்கு ஊழல் பட்டியலில் 83–வது இடமும், வங்காளதேசத்துக்கு 139–வது இடமும் கிடைத்தது.
 
பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் 2014–ம் ஆண்டு இருந்ததைவிட ஊழல் மலிந்து காணப்படுகிறது. இதனால் இந்த நாடுகள் ஊழல் தரவரிசை பட்டியலில் தங்களது இடங்களை சற்று உயர்த்திக் கொண்டு உள்ளன என்று ஜோஸ் உகாஸ் கூறியுள்ளார் .

மமக.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள்

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று சிலர் பெயரைத் தெரிவித்து, மமக சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மனிதநேய மக்கள் கட்சி கொள்கைக்கும் கட்சிக் கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்படுவதாலும் கட்சிக்குள் குழப்பம் விளைவிப்பதாலும் திருச்சியைச் சேர்ந்த எஸ்.இப்ராம்ஷா, எம். ஜாபர் அலி, எஸ்.எம். ரபீக், என். இப்ராஹிம்ஷா, செய்யது கரீம், எச். லியாக்கத் அலி, முபாரக் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

இதேபோல் மனிதநேய மக்கள் கட்சி கொள்கைக்கும் கட்சிக் கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்படுவதாலும் கட்சிக்குள் குழப்பம் விளைவிப்பதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நெல்லை கிழக்கு மாவட்டப் பொருளாளராக இருந்த அப்துல் வாஹித் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார்.
 என்று மமக தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து எர்ணாவூர் நாராயணன் நீக்கம்

சென்னை:
சமத்துவ மக்கள் கட்சியில்  இருந்து, அக்கட்சியின் எம்.எல்.ஏ., எர்ணாவூர் நாராயணன் அதிரடியாக நீக்கப் பட்டுள்ளார்.
இது குறித்து எர்ணாவூர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசியபோது,
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனக் கூறியதை சரத்குமார் ஏற்கவில்லை. அதிமுகவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் என் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார். கட்சியில் 50 சதவீதம் பேர் எனது ஆதரவாளர்களே என்று கூறியுள்ளார்.