தேமுதிக வழக்குரைஞர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !
ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு ஊழல் மேல்முறையீட்டு வழக்கின் முக்கிய அம்சங்கள் : கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
தமிழகம் முழுதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை:
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை இன்று வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி,
“சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு குறித்து மண்டலம் வாரியாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. கோவையைத் தொடர்ந்து, இப்போது மதுரையில் 8 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, சென்னை, திருச்சியில் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பத்தில் (படிவம்-6) செல்லிடப்பேசி எண் கொடுத்தவர்களுக்கு, பட்டியலில் சேர்க்கப்பட்டதன் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும். மேலும், இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், தங்களது பெயரைச் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம். கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று வாக்காளர் பட்டியலில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட அடுத்த இரு நாள்களில், புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை அச்சிடும் பணி நிறைவுபெறும். அதன் பிறகு, வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு 10 நாள்களுக்குள் வழங்கப்படும். புதிய வாக்காளர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இதன்மூலம், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வது எளிதாக இருக்கும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 82 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. தமிழகத்தில் 8 ஆயிரம் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. பிகாரில் இருந்து 50 ஆயிரம் இயந்திரங்களும், குஜராத்திலிருந்து 15 ஆயிரம் இயந்திரங்களும், மகாராஷ்டிரத்திலிருந்து 10 ஆயிரம் இயந்திரங்களும் கொண்டு வரப்படுகின்றன. இந்த இயந்திரங்களை வாக்குப் பதிவுக்காகத் தயார் செய்யும் பணி, பிப்ரவரி 1 முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை நடைபெறும்… என்றார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மீண்டும் வாய்ப்பு ; தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி
காவல்துறைக்கு தெரிந்து தங்கும் விடுதிகளில் விபசாரம் அமோகம் : அச்சத்தில் பெண்கள்!
விபசாரத்தைக் கட்டுப்படுத்த விபசாரக் கும்பல் மற்றும் விபசாரம் நடைபெற ஆதரவாக செயல்படும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறையினர் சிலர் குற்றச் செயலில் ஈடுபடுவோர்களிடம் கல்லா கட்டி பங்கு பிரித்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கோவையைச் சேர்ந்தவர்கள் பிரான்சிலிஸ் ஜான் மற்றும் இவரது மனைவி கிளாரா ஜாய்ஸ் இருவரும் சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அப்போது ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் விபசாரம் நடப்பதை அறிந்த அந்த தம்பதி, விபசாரக் கும்பலை காவல் துறையினரிடம் சிக்க வைக்க முடிவு செய்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
புகார் செய்த அவர்கள் காவல் நிலையத்தினரை அந்த தங்கும் விடுதிக்கு சோதனைக்காக கையோடு அழைத்துக் கொண்டு நேரில் சென்றனர். காவல் துறையினர் நடத்திய சோதனையில் அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது. விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள், லாட்ஜ் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனை நடந்தபோது தப்பிச் செல்ல முயன்றவர்களை பிரான்சிலிஸ் ஜான், கிளாரா ஜாய்ஸ் தம்பதியினர் காவல் துறையினருடன் இணைந்து விரட்டி பிடித்தனர். இந்த விபசார வேட்டை முழுவதையும் அவர்கள் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர். மேலும் இதேபோல கன்னியாகுமரி மாநகர காவல் கட்டுப்பாட்டிலுள்ள பல பகுதிகளில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி நேற்று அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்துள்ளனர்.
அந்தப் புகார் மனுவில் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் டோல்கேட்டில் நின்று சிலர் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எங்கள் காரை வழிமறித்து தகராறு செய்து தகாத முறையில் பேசினர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி இருந்தனர். புகாரின் பேரில் டோல்கேட் ஊழியர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மட்டும் நடத்தினராம். ஆனால் தங்கும் விடுதியில் நடத்திய விபசார வேட்டையின்போது சிக்கிய விபசாரக் கும்பல்மீதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் அந்த கும்பலிடம் வழக்கத்தை காட்டிலும் வலுவான பெரும் தொகையைக் கறந்துவிட்டு அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்துவிட்டனராம்.
விபசார வேட்டையின்போது சிக்கிய விபசார கும்பலுக்கும், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியமான அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்படி தகவல் அறிந்த விபசார கும்பலை காவல் துறையில் சிக்க வைத்த கோவையைச் சேர்ந்த தம்பதியினர், தாங்கள் பதிவு செய்த காணொளியை வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டுள்ளனர்.
மேலும் அவர்களிடம் கைவசமுள்ள அனைத்து ஆவணங்களையும் வைத்து கன்னியாகுமரி மாநகர காவல் துறையினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வாட்ஸ் ஆப்பில் வைரலாகப் பரவி வரும் விபசார வேட்டையின் போது பதிவு செய்யப்பட்ட அந்தக் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் தெரியாவிடில் வெளிநாட்டினர் இங்கிலாந்தை விட்டு அனுப்பப் படுவார்கள்: கேமரூன்
லண்டன்:
இங்கிலாந்தில் குடியேறும் வெளிநாட்டினருக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் நாட்டை விட்டு வெளியே அனுப்பப்பட வேண்டிருவரும் என இங்கிலாந்து பிரதமர் கேமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் தற்போது வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறியுள்ளனர். அவர்கள் இங்கிலாந்து குடியேற்ற உரிமை பெற்றுள்ளனர். தங்களது வாழ்க்கைத் துணை அதாவது கணவன் அல்லது மனைவியின் மூலம் குடியுரிமை விசா பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலான பெண்களுக்கு ஆங்கிலம் தெரிவதில்லை. அதனால் அவர்கள் வெளி மனிதர்களுடன் தொடர்பு அற்றுக் கிடக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க, இங்கிலாந்தில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘வாழ்க்கைத்துணை விசா’’ மூலம் இங்கிலாந்தில் 5 ஆண்டுகள் தங்கியிருப்பவர்கள் ஆங்கில அறிவில் மிகவும் பின் தங்கியுள்ளனர். அவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், திறமையை வளர்த்துக் கொள்ளவும் அரசு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு வீடுகள், பள்ளிகள் மற்றும் சமுதாய மையங்களில் ஆங்கில வகுப்புகள் நடத்தப்படும். அதில் அவர்கள் கற்றுத் தேர்ச்சி பெறலாம். அவர்களின் ஆங்கிலத் திறமை அறிய 2½ ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படும். அதில் அவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்’’ என எச்சரித்துள்ளார்.
ரவிதேஜா-ஸ்ருதி ஹாசனின் ‘எவன்டா’
ரவிதேஜா, ஸ்ருதி ஹாசன், அஞ்சலி, ராய் லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் பழுப்பு என்ற பெயரில் தெலுங்கில் வெளியான படத்தை தற்போது தமிழில் டப் செய்து பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் வெளியிடுகிறார். பிரகாஷ்ராஜ், நாசர், பிரம்மானந்தா, ஜெய் ஜெயபிரகாஷ், ஆதித்யா மேனன், பரமாஜி ஆகியோர் நடிக்கிறார்கள். வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். படம் பற்றி தமிழ் உருவாக்கம் செய்திருக்கும் A.R.K.ராஜராஜாவிடம் கேட்டோம்… இது முழுக்க முழுக்க காமெடி கலாட்ட படம். படம் பார்க்கும் அனைவரும் நிச்சயமாக வயிறுகுலுங்க சிரிப்பார்கள். நாயகனுக்கு அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ் தனது மகன் யாரையும் கல்யாணம் செய்ய மறுப்பதால். பிரகாஷ்ராஜே பெண்களிடம் அவரது மகனுக்காக லவ் புரபோஸ் சொல்லி போலீசில் பல முறை அடி வாங்குவார். அப்படி ஒருமுறை காசுக்காக தினமும் பசங்களை ஏமாற்றும் ஸ்ருதிஹாசனிடம் தனது மகனை காதலிக்குமாறு சொல்ல ..அவரும் காதலிப்பது போல் நடிக்க இடையில் ஸ்ருதிஹாசனால் பாதிக்க பட்ட நாயகனின் நண்பன் ஒருவன் அவளைப்பற்றி அணைத்து உண்மைகளையும் சொன்னதால் ரவிதேஜாவும் காதலிப்பது போல் நடிக்கிறார். இதற்கிடையில் வில்லன் கும்பல் பிரகாஷ்ராஜையும் ரவிதேஜாவையும் கொள்ளுவதற்காக ஊரெல்லாம் தேடி வருகிறார்கள். இறுதியில் நாயகன் யாரை திருமணம் செய்தார், வில்லன்கள் எதற்காக அப்பா மகனை தேடி வருகிறார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை. காமெடி ஆக்ஷன் படமாக உருவாகிறது எவன்டா என்றார்.
முஸ்லிம் பெண்கள் புர்காவை விலக்கிக் காட்ட வேண்டும்; ஆங்கிலத் தேர்ச்சி தேவை: டேவிட் கேமரூன்
லண்டன்:
பாதுகாப்பு அதிகாரிகளிடம் முஸ்லிம் பெண்கள் தங்கள் புர்காவை விலக்கி முகம் காட்ட வேண்டும்; மேலும் இங்கிலாந்தில் குடியேறும் முஸ்லிம் பெண்கள் தங்கள் ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும், இல்லாவிடில் வெளியேற வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.
பிபிசியின் ரேடியோ 4-க்கு அளித்த பேட்டியில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த கருத்து:
“முஸ்லிம் பெண்கள் புர்காவை விலக்கி, தங்களது முகத்தை பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் காட்டி, உதவி புரிய வேண்டும். பயங்கரவாதத்தை சமாளிக்கும் நம் நாட்டின் முயற்சிக்கு நீங்கள் உதவ வேண்டும்.
நீதிமன்றங்கள், குடியேற்ற சோதனை மையங்கள் போன்ற இடங்களில் இதனைக் கடைபிடியுங்கள். இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கு அவர்கள் விரும்பும் ஆடையை சுதந்திரமாக அணிய உரிமை உள்ளது. ஆடை சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது.
நாட்டில் குடியேறியும், ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்ளாத முஸ்லிம் பெண்களுக்கான குடியுரிமையை நீட்டிப்பதில் சிக்கல் ஏற்படும்.
– இவ்வாறு டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் பெண்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை ஊக்குவிக்க 28 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது அரசு. இங்கிலாந்தில் உள்ள 1,90,000 முஸ்லிம் பெண்கள் ஆங்கிலத் திறனில் பேச குறைந்த அளவோ அல்லது தெரியாமலோ உள்ளனர் என அந்நாட்டு அரசுப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், டேவிட் கேமரூன் கருத்துக்கு அந்நாட்டில் சிலரிடம் எதிர்ப்பு கிளம்பாமலும் இல்லை. விமர்சனங்களையும் சிலர் முன்வைத்துள்ளனர்.
இது குறித்த செய்தித் தொகுப்பு காணொலி:
மோடியைக் கொல்வோம்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் கடிதம்
புது தில்லி:
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோரைக் கொலை செய்யப்போவதாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கோவா மாநில தலைமைச் செயலகத்திற்கு கடந்த வாரம் வந்த மிரட்டல் கடிதத்தில், “நாங்கள் இந்திய பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரைக் கொலை செய்வோம்” என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு கீழ் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மாட்டிறைச்சி மீதான தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில வாசகங்கள் அந்தக் கடிதத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்தக் கடிதத்தின் நகல்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கும் இது தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த காவல் துறை அதிகாரிகள், “இந்தக் கடிதத்தை அனுப்பியவர் யார் என்பதை விரைவில் கண்டு பிடித்துவிடுவோம்” என்று கூறினர்.
ஹாலிவுட் பேய் படங்கள் வரிசையில் ‘பயம் ஒரு பயணம்’
Octospider என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் எஸ் துரை மற்றும் எஸ் சண்முகம் தயாரிக்கும் ‘பயம் ஒரு பயணம்’ படத்தை மற்றுமொரு பேய் படம் என்று ஒதுக்கி விட முடியாது என்கிறார் இயக்குனர் மணிஷர்மா. ‘உன்னை போல் ஒருவன்’ பரத், விசாகா சிங், மீனாக்ஷி டிக்ஷிட், சிங்கம் புலி, ஊர்வசி, ஞானவேல், யோகி பாபு, ‘லொள்ளு சபா’ மனோகர் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கும் ‘பயம் ஒரு பயணம்’ படத்தை இயக்குபவர் புதிய இயக்குனர் மணிஷர்மா. இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் முடிந்தது.
பேய் படங்கள் எண்ணிக்கையில் அடங்கா அளவுக்கு வெளிவந்து உள்ளதையும், வெளி வர உள்ளதையும் நான் அறிவேன். ‘பயம் ஒரு பயணம்’ மற்ற பேய் படங்களில் இருந்து நிச்சயம் மாறுப்பட்டதாக இருக்கும். பேய் படங்கள் என்றப் பெயரில் எடுக்கப் படும் படங்கள் நகைசுவை படங்களாகவோ, அல்லது செண்டிமெண்ட் படமாகவோ தான் இருக்கிறது முழுக்க முழுக்க பயமுறுத்தும், பயத்தை பிரதானமாக வைத்து எடுக்கப் பட்ட படமாக ‘பயம் ஒரு பயணம்’ இருக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை. ஆங்கிலத்தில் வெளி வந்த தி எக்சோர்சிஸ்ட், தி ஓமன், Evil Death, Conjuring ஆகியப் படங்களைப் போலவே முழுக்க முழுக்க பேய் படமாகவே இருக்கும்.
இதய மருத்துவரும், உன்னை போல் ஒருவன் படத்தில் ஒரு பிரதானக் கதாப் பாத்திரத்தில் நடித்தவருமான பரத் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பேயாக நடிக்கும் கதாநாயகி பாத்திரத்துக்கு பலரை சிந்தித்தோம், சிலரை சந்தித்தோம் விசாக சிங்கை பார்க்கும் வரை. கதை கேட்ட மாத்திரத்திலே படத்தில் நடிக்கஒப்புக் கொண்டார். இவ்வளவு அழகான பேய் இருக்குமா என்பதிலும் எங்களுக்கு சந்தேகம் தான். அந்த அளவுக்கு அவர் அழகு.
பாத்திரத்துக்கு ஏற்ப தன்னை அவர் அகோரப் படுத்த ஒப்புக் கொண்டதே அவர் தொழில் மீது அவருக்கு உள்ள மரியாதையை புரிய வைத்தது. மூணாறில் இடை விடாத 20 நாட்கள் இரவு பகல் என்றுப் பாராமல், அட்டை கடி, விஷப் பூச்சி, மழை என்று எல்லா சவாலையும் அவர் எதிர்க்கொண்டு அவர் நடித்தது அவர் மேல் உள்ள மரியாதையை கூட்டியது. தனது தோற்றத்தையும், படபிடிப்பின் போது இருந்த அசாதாரண சவாலையும் அவர் மேற்கொண்ட விதத்தை கண்டு படப்பிடிப்பு குழுவில் இருந்த அனைவரும் அசந்து போனோம். வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கு அவரைப் போன்ற நடிகைகள் கிடைப்பது அதிஷ்டமே என்பேன்.
ஊர்வசி மேடம் போன்ற வாழும் சாதனையாளருடன் பணியாற்றுவது எங்களைப் போன்ற புதிய கலைஞர்களுக்கு ஒரு வரப்ரசாதம் எனலாம். ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் மிக பெரிய பலமே படத்தின் இசை தான் என்றுக் கூறலாம்.புதிய இசை அமைப்பாளர் ஒய்.ஆர்.பிரசாத் பின்னணியில் மட்டுமின்றி, பாடல்களிலும் பட்டை கிளப்பி இருக்கிறார். பொதுவாகவே பேய் படங்கள் என்றாலே பின்னணி இசைக்கு தான் முக்கியத் துவம் இருக்கும். ஆனால் பயம் ஒரு பயணம்’ படத்தின் பாடல்கள் நிச்சயம் ஹிட் ஆகும்.
ஒளிப்பதிவை செய்பவர் ஆண்ட்ரு. என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு நான் காலம் முழுவதும் கடமைப் பட்டு உள்ளேன். படத்தை மேம்படுத்த ஒரு இயக்குனராக் நான் எதைக் கேட்டாலும் அவர்கள் அதைத் தர தயங்குவதே இல்லை. ஒரு புதிய இயக்குனராக இதை விட வேறு என்ன வேண்டும்’ என்று உவகையோடு வினவினார் இயக்குனர் மணிஷர்மா.

