அரசியல் கட்சியை தொடங்கிய அணு உலை எதிர்ப்பாளர் !
பிரதமர் மோடி அலுவலக உதவி செக்ஷன் அதிகாரிகள் 12 பேர் அதிரடியாக பணியிட மாற்றம்
நாட்டு மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
ராகுல்காந்தி அழைப்பால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் டெல்லி விரைவு
தை கிருத்திகை – திருப்பரங்குன்றம் கோபுர தரிசனம்
தை கிருத்திகையான இன்று, திருப்பரங்குன்றம் கோபுரங்களின் தரிசனம்:
திருப்பரங்குன்றம்
#1
கோபுர தரிசனம்
#2
‘குன்றிருக்கும் இடமெல்லாம்..
குமரன் இருப்பான்..’
#3
மேலும் படங்கள்.. மயில் வாகனமும், முருகப் பெருமானும்.. இங்கே: https://tamilamudam.blogspot.com/2015/11/blog-post_15.html
ஜனவரி 27முதல் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு பெறப்படும் : பா.ம.க
வானதி பதிப்பக உரிமையாளர் ‘வானதி திருநாவுக்கரசு’ காலமானார்
Y. Thirunavukkarasu Proprietor of Vanathi Pathippakam aged about 88yrs expired on 19/01/2016 Tuesday at 00.30am at his residence New No.6, Krishnaswamy street Abhiramapuram Chennai 600 018.
Funeral on 19/01/2016 at Nagarathar Viduthi South Mada street, opp to MSM theater thiruvottiyur Chennai 600 019 at 3.30 pm
.
Contact: Son TR. Ramanathan
9884809246 /
044-24996344
வானதி பதிப்பக உரிமையாளர் ‘வானதி திருநாவுக்கரசு’ காலமானார்
Y. Thirunavukkarasu Proprietor of Vanathi Pathippakam aged about 88yrs expired on 19/01/2016 Tuesday at 00.30am at his residence New No.6, Krishnaswamy street Abhiramapuram Chennai 600 018.
Funeral on 19/01/2016 at Nagarathar Viduthi South Mada street, opp to MSM theater thiruvottiyur Chennai 600 019 at 3.30 pm
.
Contact: Son TR. Ramanathan 9884809246 / 044-24996344
பழம்பெரும் பதிப்பக உரிமையாளர் வானதி திருநாவுக்கரசு காலமானார் சென்னை: தமிழ்ப் பதிப்பக உலகில் முக்கியப் பங்கு வகித்தவரும் பழம்பெரும் பதிப்பக உரிமையாளருமான வானதி திருநாவுக்கரசு ஜன.19 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை 12.30 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 88. சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை இன்று மாலை 3.30க்கு சென்னை திருவொற்றியூர் எம்.எஸ்.எம். தியேட்டர் எதிரில் உள்ள தெற்கு மாட வீதி, நகரத்தார் விடுதியில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
தகவலுக்கு: டி.ஆர். ராமநாதன், 98848 09246 / 044-24996344
REGARDS…
VANATHI PATHIPPAKAM 23,Deenadayalu street,T.nagar, Chennai-17 Ph-no-044-24342810/24310769
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி
சென்னை:
சென்னையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தை அடுத்த காரப்பாக்கத்தில் தலப்பாகட்டி பிரியாணி ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த ஓட்டல் நிர்வாகம் அழைத்ததின் பேரில், குமார், சரவணன், வேல்முருகன் உள்பட 3 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இதில் முதலில் குமார் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கினார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததால் அவரது தம்பி சரவணனும் அடுத்து வேல்முருகனும் உள்ளே இறங்கினர். 3 பேரும் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால், ஓட்டல் ஊழியர்கள் கழிவு நீர் தொட்டியின் அருகில் நின்று சத்தமிட்டனர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதனால், ஓட்டல் ஊழியர் ராஜேஷ் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கினார். சிறிது நேரம் ஆனதும், அவரும் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில், அடையாறு துணை ஆணையர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். கழிவு நீர்த் தொட்டிக்குள் சிக்கிக் கொண்ட குமார், சரவணன், வேல்முருகன், ராஜேஷ் ஆகியோரை மீட்கும் பணியில் போலீசாரும் அங்கிருந்தவர்களும் ஈடுபட் டனர். அப்போது, 4 பேரும் விஷவாயு தாக்கி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரின் உடலையும் மீட்ட போலீசார், அவர்களின் உடல்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.
சர்ச்சையைக் கிளப்பிய விஜய் ஆண்டனியின் “பிச்சைக்காரன்”!
விரைவில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகவிருக்கும் பிச்சைக்காரன் படத்தின் விளம்பரப்பாடலில் இடம்பெற்ற வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாடலின் சில வரிகள் இட ஒதுக்கீடு குறித்தும், மருத்துவர்கள் மீதான நம்பிக்கை பற்றியும் மிகவும் தவறான பார்வையை முன் வைப்பதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
விஜய், அஜித் உள்ளிட்ட நட்சித்திர ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்த விஜய் ஆண்டனி, நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் நடித்த சில படங்களும் வெற்றியடைந்தது. இவர், வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், அவருடைய சொந்த நிறுவனம் தயாரிக்கும் பிச்சைக்காரன் எனும் படத்தில் அவர் ஹீரோவாக நடித்தும், இசையமைத்தும் உள்ளார். இந்தப் படம் சில நாட்களில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் கிளாமர் சாங் என்னும் விளம்பரப் பாடலில் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.
அந்தப் படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகியது. அதில் கிளாமர் சாங் என்ற அடைமொழியுடன் விளம்பரப்பாடல் வெளியாகியுள்ளது.
அந்தப் பாடலில் இட ஒதுக்கீடு குறித்தும், மருத்துவர்கள் குறித்தும் சர்ச்சையை ஏற்படுத்தும் வார்த்தைகள் அதில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலைக் கேட்ட மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் விஜய் ஆண்டனிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.




