Home Blog Page 5850

நீதிபோதனை வகுப்புகளை வரும் கல்வியாண்டில் இருந்தாவது துவக்க ராம.கோபாலன் வேண்டுகோள்

சென்னை:
நீதிபோதனை வகுப்புகளை வரும் கல்வியாண்டில் இருந்தாவது துவக்கவேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

பள்ளி, கல்லூரிகளில் நல்லொழுக்கம் குறைந்து வருவது, பலவிதமான குற்றங்கள் மலிந்து வருவது சமூக அக்கறையுள்ளோரை பெரிதும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.
சமீபத்தில் கூடிய ஜேக்டோ எனும் ஆசிரியர் கூட்டமைப்பு பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்திட தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. இதனை இந்து முன்னணி முழு மனதோடு வரவேற்கிறது.

தற்காலத்தில் பள்ளிகளில் படிப்பும் வளரவில்லை, பண்பும் வளரவில்லை என்ற நிலை இருக்கிறது. பண்பு வளர்வதற்கு, தன்னம்பிக்கை வளர்ப்பதற்கு எந்த ஏற்பாடும் பள்ளிகளில் இல்லை. இதனால் மாணவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். மாணவர்கள் தவறானப் பாதையில் செல்லவோ இன்று பல காரணிகள் உள்ளன. அதில் ஒன்று கணிணி, கைபேசி முதாலனவை முதலிடம் பிடிக்கின்றன. திரைப்படங்களும் மாணவப் பருவத்தில் தவறான பாதையில் செல்ல தூண்டுகிறது.

இத்தனை சோதனைகளுக்குப் பிறகும் ஒரு மாணவன் தன்னார்வத்தால் மட்டுமே நல்லவனாக, நல்ல குடிமகனாக வளர முடிந்தால் அதுவே ஒரு சாதனை என்று சொல்லலாம். மாணவர்களிடையே நற்சிந்தனை உருவாக்க எந்த முயற்சி எடுக்காத அரசு இலவச பொருட்கள் கொடுத்து ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது.
குடித்துவிட்டு வரும் ஆசிரியர்கள், பாலியல் தொந்தரவு தரும் ஆசிரியர்கள், மாணவர்கள் படிக்காமல் காப்பி அடித்து பாஸ் செய்ய வைக்கும் பள்ளி நிர்வாகம், அதற்குத் துணைபோகும் அதிகாரிகள், மதிப்பெண் பெறாவிட்டாலும் தேர்ச்சி விகிதத்தை கூட்டிக்காட்ட வேண்டிய கட்டாயத்தால் பாஸ் போடும் அதிகாரிகள், இதனையெல்லாம் சாதனையாகக் காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் என்று பண்பாட்டுச் சீர்கேடு கொடி கட்டிப் பறக்கிறது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்தில் ஆசிரியர்கள் ஸ்டிரைக் செய்ததற்கு அவர் பத்திரிகையாளர்களிடம் வேதனையோடு குறிப்பிட்டார், இவர்களிடம் படிப்பு இருக்கிறது, மாணவர்களுக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற பண்பு இல்லையே என்று கூறினார்.

இந்நிலை மாற வேண்டும். மதிப்பெண் பெறுவதில் காட்டும் ஆர்வத்தோடு, நல்ல மாணவனாக உயர வேண்டும் என்ற கனவையும் விதைக்க வேண்டும். படிப்பில் தோல்வி  அடைவதால் அவன் வாழ்வு சீரழிந்துவிடாது. பிறகு எந்த வயதிலும் திறமையை வளர்த்துக்கொண்டு ஒருவன் உயர்வை அடையலாம், அப்படி அவன் உயர்வை பெறும்போது அதனை சமூகம் அங்கிகரிக்க நல்ல பண்புடன் அவன் வாழ்வு அமைய வேண்டும் என்பது மிக முக்கியம்.

எனவே, மாணவர்கள் வளரும் பருவத்திலேயே நல்ல நம்பிக்கைகளை வளர்த்து, பண்புள்ளவனாக, அன்பு உள்ளம் கொண்டவனாக உயர கல்வித்துறை வழிகாட்ட வேண்டும். பாடத்திலும், பண்பிலும் தேர்ச்சி பெற்றால்தான் வாழ்வில் நிலையான உச்சத்தை அடைய முடியும் என்பதை பதிய வைக்கும் வகையில் நீதிபோதனை வகுப்புகள் நடத்திட வேண்டும்.

இதற்கு சேவபாரதி உள்ளிட்ட சமூக அமைப்புகளின் உதவியை கல்வித்துறை நாடலாம். இதன் மூலம் நல்ல பண்பாடுள்ள வருங்கால சமூகத்தை, தன்னம்பிக்கை உள்ள தலைமுறையை உருவாக்க முடியும்.

எனவே வரும் கல்வி ஆண்டில் நீதிபோதனை வகுப்புகளை நடத்திட இப்போதே திட்டமிட தமிழக அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

பாலாற்றின் கரையில் பார்வேட்டை: வரதன் தனியனாய் வருவது ஏனோ?

பொங்கல் விழா களை கட்ட, தன் அரசாங்கத்தில் உள்ள குடிமக்களைக் கண்டு அருள வரதராஜன் புறப்பாடு கண்டருளினான். அவன் ராஜாங்கத்தில் இருந்துகொண்டு அவனை வரவேற்காது இருக்கலாமோ என்று அடியேனும் கிளம்பிவிட்டேன் பழையசீவரத்துக்கு!

ஸ்ரீரங்கத்து ராஜா ரங்கராஜன். குடிமக்கள் எல்லாம் அவனை அரசனாகவே கருதி பணிவிடை செய்ததுண்டு. அவன் குடிகொண்ட கோவில், அவனது அரண்மனை. நம் தென்னகத்து ராஜாக்கள் எல்லாம் தனக்கும் தன் வசதிக்காகவும் அரண்மனைகளைக் கட்டிக் கொண்டதைவிட அந்த அந்த ஊரில் ஆட்சி புரியும் ஆண்டவனுக்கே அரண்மனைகள் போல் ஆலயங்களைக் கட்டிக் கொடுத்தார்கள்.  

இப்படியாக பாலாற்றின் கரையினிலே கச்சிப் பதியை ஆளும் அரசனான வரதராஜன் தன் குடிமக்களைக் கண்டு நலம் விசாரிக்கவும், விழாக் கொண்டாட்டத்தின் மூலம் மக்களை ஒன்று கூட்டி, மகிழ்ச்சியடையச் செய்யவும்… எத்தனை தொலைவு கடந்து எழுந்தருள்கிறான்.

எவருக்கும் உள்ளர்த்தமும் காரணமும் புரியாத எழுந்தருளல்தான் இது!

கொட்டும் பனி, நடுக்கும் குளிர், கரடுமுரடு பாதை, பாலாற்றின் மணல்வெளி, அச்ச இரவு… எல்லாம் கடந்து, அவன் எழுந்தருளும் காரணம் யாருக்கும் தெரியாது! கிட்டத்தட்ட 40 கி.மீ. தொலைவு. அவனடியார் குழாம் அவனை எழுந்தருளச் செய்துகொண்டு, அவன் நாமம் பாடி, பஜனை பாடல்கள் என உற்சாகம் மிகக் கொண்டு வரும் அழகே தனி!

இந்த நாகரிக யுகத்திலும் இவ்வளவு பேர் திரண்டு இத்தனை விசுவாச பக்தியுடன் அவனை வரவேற்கிறார்கள் எனில்… சற்று கால ஓட்டத்தின் பின்நோக்கிப் பார்த்தால், கற்பனை சிறகு விரிகிறது. சரித்திரத்தின் பக்கங்களில் காலங்காலமாக வரதனின் இந்தப் புறப்பாட்டுச் சரித்திரம் எழுதப் பட்டுள்ளது. ஆயினும் காரணம் இதுவென்ற புரிதலின்றி!
***
சிந்தனை ஓட்டம் வரதனைப் பற்றியே இருந்தது. கேள்விப்பட்ட சங்கதிதான்! ஆயினும் கண்ணாரக் கண்டு உணர்வில் கலந்ததில்லை! எப்படியும் இன்று சென்றுவிடலாம். எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் ஓர் அழைப்பு! எடுத்தால்… நான் முன்னர் பணிபுரிந்த நாளிதழில் தற்போதும் பணிபுரியும் ஒரு நண்பர். கட்டாயத்தின் பேரில் தான் விருதாவாகத் தான் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியதைச் சொன்னார். நான் திருமுக்கூடல் சென்று, பாலாற்றின் கரையில் பொழுது போக்கச் செல்லவதாகச் சொன்னேன்!  “நீங்க கொடுத்து வெச்சவர்ண்ணா” என்ற வாசகத்தோடு முடித்துக் கொண்டார்.

வாளுக்கு ஆட்பட்டவன் பரம்பரைப் பெருமை மறந்து வாழ்க்கையின் உன்னதம் மறந்தான்; கூழுக்கு ஆட்பட்டவன் கொண்ட கொள்கை துறந்து வாழ்க்கையின் உட்பொருள் மறந்தான்!

வாழ்க்கையின் உள்ளர்த்தம் புரியாத கோட்பாடுகள் என்னைச் சுற்றிச் சுற்றி உழலத் தொடங்கின. இயற்கையின் விளையாடல் எத்தனையோ அத்தனையும் புரிந்து கொள்ளும் திறன் நமக்கு இல்லைதான்! ஏன்… சிறு துளிகூட நம் மனத்தில் ஏறுவதில்லைதான்! ஆனாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
***
வரதனின் விழாக் கற்பனைகள் ஒரு புறமும், கசந்த காலத்தைக் கடந்து வாழ்க்கையின் வசந்த காலத்தை எதிர்நோக்கிச் செல்லும் கற்பனைகள் ஒரு புறமுமாய்… வழக்கம்போல் பைக் பறந்து கொண்டிருந்தது. காட்டாங்குளத்தூர், மறமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் கடந்து பாலார் செல்லும் காட்டுப் பாதையினூடே தனியனாய் பயணம். ஆளரவமற்ற பகுதி என்பார்களே… அதன் வடிவத்தைக் கண்டுகொள்ளும் சாலைதான்! இடையில் இரு கிராமங்கள். ஆனாலும் அமைதியாய் அடங்கிக் கிடந்தன. காஞ்சிபுரத்தின் பழைமைச் செழுமையைக் கண்ணுக்குள் நிரப்பலாம். எல்லாம் வரதனின் ராஜாங்கம் ஆயிற்றே!

அண்மையில் பெய்த அடைமழையில் நிரம்பி, அதற்குள் தன் இயல்புக்கு வந்துவிட்ட சாலையோர ஏரிப் பரப்பில் இளைஞர்கள் கிரிக்கெட்டிக் கொண்டிருந்தார்கள். இருபுறமும் சிறு குன்று. நடுவே செல்லும் பாதை. இரவில் திரும்பி வரும்போது இந்தப் பாதையின் இயல்பை கற்பனை செய்து கொண்டே சீவரம் அடைந்தேன்.

மக்கள் வெள்ளம்தான்! சுற்றுப் பகுதி கிராமத்து மக்களின் பக்தியும் அன்பும்தான் பெருமிதத்தைத் தரும். எத்தனை சிறுவர்களும், பெண்களுமாய் வரதனின் உற்ஸவத்தைக் கண்ணுற அங்கே கூடிருந்தார்கள்! போட்டிக்கு கார்களும் பைக்-களும் சாலையின் இருமருங்கும் ஆக்கிரமித்திருந்தன.

ஹஸ்திகிரி எனும் சிறுகுன்றில் வீற்றிருக்கும் வரதன், இன்று பழைய சீவரம் மலைக்கு எழுந்தருளி மண்டபத்தில் காட்சியளித்தான். பணிவிடைகள் அவனுக்கு ஏராளம். பளிச்செனத் திகழும் படிகள். பக்தர் குழாம் புடைசூழ அந்த அத்திரிகி வரதன், இந்த மலையில் இருந்து இறங்கிவரும் அழகே அழகுதான்!

மலையில் இருந்து இறங்கி பாலாற்றின் மணல் வெளியில் இறங்கிச் செல்கிறான் வரதன். துணைக்கு உடன் வருகிறார் சீவரம் பெருமாள். இருவரும் பாலாற்றின் மணல் வெளியில், ஓரளவு ஓடைபோல் ஓடிக் கொண்டிருக்கும் நீரில் கால நனைத்து திருமுக்கூடல் செல்லும் போது, பாகவத பக்தர் குழாம் பின்னே பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் வருகிறது.
***
திருமுக்கூடல் – மூன்று ஆறுகள் கூடும் இடம்! பெருமான் அந்தக் கரையில் எழுந்தருளியதால் ‘திரு’ சேர்ந்து கொண்டுள்ளது. நீர் இன்றி ஏதோ ஆற்றின் பெயரைத் தன்னளவில் கொண்டுள்ள பாலாறு. ஒருவேளை பால் போல் வெண்மை என்பதால் வெண்மணல் சேர்ந்து வெளித் தெரிகிறதோ? இடப்புறத்தே ஓடிவந்து கலந்துவிடும் செய்யாறு மட்டும் தன்னில் நீர் தாங்கி அங்கே நிரம்புகிறது! வேகவதி ஒரு சிற்றோடையாகி அங்கே சங்கமித்து விடுகிறது.

சென்ற வருடம் பிரயாகையில் திரிவேணிசங்கமத்தில் எத்தகைய உணர்வுடன் நதியில் கால் நனைத்தேனோ அதே உணர்வு இங்கே! புண்ணியத்தைப் பெருகச் செய்வதில் இந்த மூன்று ஆறுகளும் பின்வாங்கியதல்ல! ஆயினும் அவற்றில் நீர் பெருகச் செய்யத்தான் நாம் மறுத்துவிடுகிறோம்; மறந்துவிடுகிறோம்!
***
திருமுக்கூடல் தலத்தைப் பற்றி என்றோ படித்தும் எழுதியும் இருக்கிறேன் என்றாலும், முதல்முறை நேரில் காணும் பரவசம்! தொல்லியல் துறைப் பராமரிப்பின் வெளித்தோற்றம் பளிச்செனப் படுகிறது. கோபுரமற்ற புகுவாசல் வெண்மைக் கற்கள் தாங்கி நெடிது நிற்கிறது! உள்ளே ஒரு பசுமைப் பூங்காவின் தோற்றம். செதுக்கப்பட்ட பாதைகள். புல்வெளி. ஈரடிக்கு வளர்ந்து பராமரிக்கப்படும் செடிகள். பூக்களைத் தாங்கி நந்தவனத்தின் அருமை காட்டுறது.

கோயிலில் அப்பன் வேங்கடேசப் பெருமாள் சந்நிதி அழகு. பெருமாள் கரிய நிற வண்ணனாய் விளக்குகளின் ஒளி முகத்தில் பட்டு மின்ன பளிச்சென்று திருமேனி கொண்டு சேவை சாதிக்கிறான். நெடிதுயர் உருவம். தாயார் சந்நிதி, வரதன் சந்நிதியிலும் பக்தர்கள் வரிசை கட்டி ஒழுங்காகச் சென்று தரிசித்து எந்தவித நெருக்கடியும் குழப்பமும் இன்று அமைதியாகத் திரும்பிக் கொண்டிருந்தனர். கோயிலினுள் மொத்தம் 4 காவலர்களே நின்றிருந்தனர்! சந்நிதிகளின் பராமரிப்பு அவ்வளவு தூய்மை!

ஒவ்வொரு மண்டபத்திலும் ஒவ்வொரு பெருமாள். எல்லோரையும் ஸேவித்து இறங்கி, மணல்வெளியில் கலக்கிறது பக்தர் வெள்ளம். அந்த வெள்ளத்தினூடே அடியேன் பெயர் சொல்லி அழைத்த சிலர். நண்பர்களான ஸ்ரீ உ.வே. அனந்தபத்மநாபன் ஸ்வாமி, ஆசார்ய லட்சுமிநரசிம்மன், முகநூலில் மட்டுமே அடியேன் முகம் கண்டு பழகிய உப்பிலி ஸ்வாமி… இப்படியாக!

பெருமாள்கள் ஐவரும் இதை அடுத்து திருமுக்கூடல் கிராமத்துக்குச் செல்கிறார்கள். பின்னே சென்றேன். தெரு மிகத் தூய்மை. வாசலில் கோலமிட்டு, தங்கள் ராஜாவை வரவேற்கும் உற்சாகத்துடன்!

கிராமத்தின் கடைக்கோடி வரை சென்று பெருமாள் அங்கேயே எழுந்தருளி, சற்று நேரம் அந்தக் காலனிவாசிகளின் பூஜையையும் அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் வழங்கியதையும் ஏற்றுக் கொண்டு மீண்டும் திரும்புகிறார். சிலிர்ப்பூட்டும் அனுபவம்தான்! பெருமாள் தனியாக வந்தால் இராது! பாகவத  கோஷ்டியும், இத்தகைய பக்த கோஷ்டியும்தான் இந்த உற்ஸவத்துக்கு வலு, அழகு!

பெருமாளை எழுந்தருளச் செய்துகொண்டு காஞ்சிக்குத் திரும்பும் அந்தக் கைங்கர்ய கோஷ்டியைப் பார்த்தால், அதைவிட சிலிர்ப்பு. வரதனுக்காக அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, அவனுடனேயே நடந்து, இரவெல்லாம் விழித்து, பத்திரமாக அவன் அரண்மனையில் அவனை சேர்ப்பிக்கும் வரை இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு! நிச்சயம் அரங்க நகர் கோஷ்டிக்கு சளைத்ததல்ல!
***
இரவு 8 மணி ஆயிற்று! சீவரம் பெருமாளை தரிசித்துவிட்டு, திரும்பினேன். சீவரத்தை அடுத்த பெட்ரோல் பங்கில் திரும்பினேன். யாருமே இல்லாதது போன்ற நிலை. ஆனால், ஒரு ஓரத்தில் நின்று செல்லில் சினுங்கிக் கொண்டிருந்த ஒருவர், ஒற்றை ஆளாய் எனைக் கண்டதும் அசைந்து வந்தார். அவரை மெதுவாகப் பேசிவிட்டு பிறகு வருமாறு சைகை செய்தேன். சில நொடிகளில் வந்தார். அவரை நிதானமாக வருமாறு சைகை காட்டியதாலோ என்னவோ… பெட்ரோல் நிரப்பிக் கொண்டே வெகுநாள் பழகிய சிநேகத்துடன் பேசினார்… “வண்டிங்க வந்துட்டு இருக்கு சார். வீட்ல இருந்து பேசினாங்க. கோயிலுக்கு கூட்டிட்டுப் போகணும்னு காலைல இருந்தே சொல்லிக்கிட்டிருந்தாங்க! ஆனா பாருங்க இன்னிக்குன்னு நெறய பேர் லீவு. சிலர் சாப்ட போய்ட்டாங்க. பெட்ரோல் போட ஆளில்ல. அதான் வீட்ல சொல்லி புரியவெச்சிட்டிருந்தேன். இப்பவாவது 9 மணிக்குள்ள வீட்டுக்கு போய் கூட்டிட்டு சீவரம் பெருமாளயாச்சும் பாத்துட்டு வந்துடணும்… ஆனா… நீங்க கொடுத்து வெச்சவங்க சார்…!”

அடடே!  ஒரே மாதிரியான வாசகம்! சீவரம் செல்லும் முன்பு அந்த நாளிதழ் பணியில் இருக்கும் நண்பரும், இந்த நபருமாக!  
***
அதே காட்டுப் பாதையில் திரும்பினேன். இரவுப் பொழுதுக்கேயுரிய வண்டுகள் பூச்சிகளின் சப்தங்கள் நிசப்தத்தைக் கடந்து கொண்டு கேட்கிறது! பாலார் ஊர் கடந்து, ரெட்டிப்பாளையம் காட்டுப் பகுதியினூடே செல்கையில், சாலையின் ஓரத்தில் இருந்த புதரில் இருந்து மர அணில் போன்ற ஏதோ ஒன்று… பைக் விளக்கின் வெளிச்சத்துக்கு அப்படியே கீழிருந்து தாவி சரியாக என் வலது தோளில் பாய்ந்து கீழே விழுந்தது! நள்ளிரவும் காட்டுப் பாதையும் தனிமையும் எனக்குப் புதிதல்ல. பொதிகை மலைப் பகுதியின் காட்டுப் பாதைகளில் சிறுவயது முதலே தனித்துச் சென்று பழகிய பழக்கம்தான்! பள்ளிப் பருவத்துக்குப் பிறகான வாழ்க்கையிலும் வருடம் பல தனித்திருந்தே கடந்து விட்டவனுக்கு, காட்டுப் பாதையில் மட்டும் தனிமைப் பயணம் அச்சத்தைத் தந்துவிடவில்லை!

ஆனாலும்… இப்போதும் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. பெருந்தேவித் தாயாரைத் துறந்து, உபய நாச்சிமாரான தேவியர் இருவரைத் துறந்து, ராஜ மாளிகை துறந்து, எந்த உற்சவமானாலும் எல்லோரும் துணையிருக்க நடத்திக் கொண்டு, இந்த ஒரு உற்ஸவம் காண மட்டும் வரதன் ஏன் தன்னந் தனியனாக இங்கே வருகிறான்!?

***

இந்த உற்ஸவம் குறித்து தினசரியில் வெளியிட்ட செய்தி:

காஞ்சிபுரம்:
செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழியில் திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்ஸவம் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.

திருமுக்கூடலில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடுகின்றன. இந்தக் கூடுதுறையில், ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயில். இங்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு பார்வேட்டை உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், பழையசீவரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள், சாலவாக்கம் சீனிவாச பெருமாள், காவான்தண்டலம் லட்சுமி நாராயண ஸ்வாமி, திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் என ஐந்து பெருமாள்களும் பக்தர்களுக்கு ஒரே நேரத்தில் தரிசனம் அளித்தனர்.
 
இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர். இவ் விழாவின்போது பக்தர்கள் கோயிலுக்கு செல்லவும், திரும்ப வெளியே வரவும் ஏதுவாக இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இவ் விழாவையொட்டி முன்னதாக வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் இருந்து வரதராஜ பெருமாள் பழையசீவரம் லட்சுமி நரசிம்மர் கோயிலை வந்தடைந்தார். அங்கு வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்மருடன் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து திருமுக்கூடல் சென்று பார்வேட்டை உற்ஸவத்தில் பங்கேற்றார்.

இவ் விழா முடிந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டு அவளூர், ஏரிவாய், படப்பம், தேனம்பாக்கம், அம்மன்காரத் தெரு வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை வரதராஜ பெருமாள் காஞ்சிபுரம் கோயிலை சென்றடைந்தார்.

{gallery}kanji-varathan-seevaram-parvettai:::1:1{/gallery}

திருமுக்கூடலில் பார்வேட்டை உற்ஸவம் கோலாகலம்!

காஞ்சிபுரம்:
செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழியில் திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்ஸவம் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.

திருமுக்கூடலில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடுகின்றன. இந்தக் கூடுதுறையில், ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயில். இங்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு பார்வேட்டை உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், பழையசீவரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள், சாலவாக்கம் சீனிவாச பெருமாள், காவான்தண்டலம் லட்சுமி நாராயண ஸ்வாமி, திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் என ஐந்து பெருமாள்களும் பக்தர்களுக்கு ஒரே நேரத்தில் தரிசனம் அளித்தனர்.

இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர். இவ் விழாவின்போது பக்தர்கள் கோயிலுக்கு செல்லவும், திரும்ப வெளியே வரவும் ஏதுவாக இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இவ் விழாவையொட்டி முன்னதாக வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் இருந்து வரதராஜ பெருமாள் பழையசீவரம் லட்சுமி நரசிம்மர் கோயிலை வந்தடைந்தார். அங்கு வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்மருடன் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து திருமுக்கூடல் சென்று பார்வேட்டை உற்ஸவத்தில் பங்கேற்றார்.

இவ் விழா முடிந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டு அவளூர், ஏரிவாய், படப்பம், தேனம்பாக்கம், அம்மன்காரத் தெரு வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை வரதராஜ பெருமாள் காஞ்சிபுரம் கோயிலை சென்றடைந்தார்.

ஜெயலலிதாவின் அர்ப்பணிப்பு வாழ்வை பொதுமக்களுக்கு விளக்கி சொல்ல அதிமுகவினருக்கு வேண்டுகோள்

 
தேர்தல் பணியின் போது என் அர்ப்பணிப்பு வாழ்வை பொதுமக்களுக்கு விளக்கி சொல்ல அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்ததுள்ளார் .
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தையொட்டி, கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது :-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 99-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இந்த மடல் வழியாக என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளைச் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
 
தமிழக அரசியல் மற்றும் கலை உலகின் கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றில் பெரும்பாலான ஆண்டுகள் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் ஆண்டுகளாகவே கடந்திருக்கின்றன. அதற்கு காரணம் அரசியலிலும், கலைத் துறையிலும், தனது கடின உழைப்பாலும், தன்னலம் மறந்த பொதுநலம் நோக்கிய செயல் திட்டங்களாலும் அவர் செய்து முடித்த சாதனைகளேயாகும்.
 
எம்.ஜி.ஆர். வகுத்துத் தந்த கொள்கைகள் தமிழகத்தில் இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்குகளாகத் திகழும். கலைத் துறையிலும், அரசியலிலும், மக்களுக்கு பணியாற்றும் பொதுத் தொண்டுகளிலும் என்னை ஈடுபடுத்தியது எம்.ஜி.ஆர்.தான். அதற்குத் தேவையான பயிற்சிகளையும், பாடங்களையும் எனக்கு அளித்தார். எனவே தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று எம்.ஜி.ஆரை நான் மனதாரப் போற்றி வருகிறேன். அவரைப் பின்பற்றி தமிழக மக்களுக்காக என்னையே அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறேன்.
 
இரட்டை இலக்கில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை நாம் கொண்டாடும் இறுதி ஆண்டு இந்த ஆண்டு. இனி வரும் பன்னெடுங் காலங்களுக்கு அவருடைய பிறந்த நாள் மூன்று இலக்க ஆண்டுகளாகக் கொண்டாடப்படும். அடுத்து வரும் ஆண்டு அவரது பிறந்த நாள் நூற்றாண்டாக அமையப் போகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் ஆண்டிலும், அவர் கண்ட மக்கள் பேரியக்கமான ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்னுடைய தலைமையில் ஆட்சி நடத்தும் இயக்கமாகத் திகழப் போகிறது என்பது நம் இதயமெல்லாம் இனிக்கும் செய்தி.
 
இந்த ஆண்டு நடைபெறப் போகும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில், இதற்கு முன்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றிருந்த வெற்றிகள் எல்லாவற்றையும் விட சிறப்பான வெற்றியைப் பெற்றிட வேண்டும். இந்திய வரலாற்றில் இப்படி ஒரு வெற்றியை வேறு எந்த அரசியல் இயக்கமும் பெற்றதில்லை என்று பார் போற்றும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவது எம்.ஜி.ஆர். புகழுக்கு பொன்மகுடம் சேர்க்கும்.
 
இப்பொழுது என்னுடைய தலைமையில் நடைபெற்று வரும் அரசு, தமிழக மக்களுக்கு ஆற்றி இருக்கும் தொண்டு அத்தகைய வெற்றியை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும், அந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அரசாங்கத்தின் உதவியும், சலுகையும் பல வகைகளில் கிடைத்திடும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு, `வீடு உயர்ந்தால் நாடு உயரும், நாடு உயர்ந்தால் உலகம் உயரும்’ என்ற தீர்க்கமான பாதையில் என் அரசு தமிழக மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்து, வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தை இட்டுச் செல்கிறது.
 
இருள் மண்டிய தீய சக்தியின் ஆட்சிக் காலத்தை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டார்கள்; மறக்கவும் மாட்டார்கள். ஜனநாயகத்தின் அடிப்படைகளையே வேரறுக்கும் வகையில் “என் குடும்பம் மட்டும் எல்லாமும் பெற வேண்டும்; என் மக்களே எந்நாளும் ஆள வேண்டும்” என்ற கயமையும், கீழ்மைத்தனமும் கொண்ட சிந்தனையுடைய தீய சக்தியும், அதன் நச்சு விழுதுகளும் இயங்குவதைத் தமிழகம் ஒரு போதும் ஏற்காது.
 
எம்.ஜி.ஆரின் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றிக் கனியை, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலிலும் பரிசளிக்கத் தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள். அப்பரிசினைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற வகையில் கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் ஒவ்வொருவருடைய தேர்தல் பணியும் அமைய வேண்டிய நேரமிது என்பதை மறவாதீர்கள்.
 
இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டாக, அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தொடர்ந்து வழங்கி வரும் எனது தலைமையிலான அரசு, மக்களுக்கு ஆற்றி இருக்கும் பணிகளை வீடு வீடாக எடுத்துச் சொல்லி, மக்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, என் அர்ப்பணிப்பு வாழ்வை விளக்கிக் கூறி தேர்தல் பணி ஆற்றுங்கள்.
பொன் குடத்திற்கு பொட்டிட்டவாறு மக்களின் பேராதரவு பெற்ற என் அரசுக்கு உங்கள் களப்பணி சிறப்பினை சேர்க்கட்டும். அது, எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவினை நோக்கிய நமது பயணத்தை இந்திய தேசத்தின் திருவிழாவாக மாற்ற வேண்டும் என்பது எனது ஆவல்.
 
எனவே, என்னுடைய அன்புக் கட்டளையை ஏற்று, கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து, தேர்தல் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் இப்பொழுதே தொடங்கிட வேண்டும். மக்களுக்கு ஆற்றி இருக்கும் பணிகளை வீடு வீடாக எடுத்துச் சொல்லி, மக்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, என் அர்ப்பணிப்பு வாழ்வை விளக்கிக் கூறி தேர்தல் பணி ஆற்றுங்கள்” என்று அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராகுல் காந்தி மாணவர்கள் மத்தியில் அரசியல் பற்றியே பேசியதாக குற்றச்சாட்டு.!

 
மும்பையில் மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி கலந்துரையாடிய போது மாணவர்களுக்கு நலன் தரும் தகவலை பற்றி பேசாமல் அரசியல் பற்றியே பேசியதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்னர்.
மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடிய போது ராகுல் பேசியதாவது :-
 
ஜிஎஸ்டி மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கவலைகளை மோடி அரசு கண்டுகொள்வது இல்லை. அனைவரும் அமர்ந்து பேசுவதன் மூலம் ஜிஎஸ்டி தொடர்பான பொதுவான கருத்தை எட்ட முடியும். ஆனால் மோடியின் மத்திய அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை.
 
ஜிஎஸ்டி தொடர்பான காங்கிரஸின் நிபந்தனைகளை மோடி அரசு ஏற்கும் நாளில் நாடாளுமன்றத்தில் 15 நிமிடங்களில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறிவிடும். ஜிஎஸ்டி-யில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டுமென்றுதான் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
 
ஜிஎஸ்டி-யைத் தடுத்தவர்கள் யார்?: காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றவிடாமல் 7 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது பாஜகதான். முன்பு ஜிஎஸ்டியைத் தடுப்பதில் முன்னிலையில் இருந்தவர் அருண் ஜேட்லி. குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது ஜிஎஸ்டியை தீவிரமாக எதிர்த்து வந்தார்.
 
எனவே, இப்போது ஜேட்லி போன்றவர்கள் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறினால் நாட்டுக்கு நல்லது என்று காங்கிரஸ் கட்சிக்கு கூறத் தேவையில்லை. ஜிஎஸ்டி சிறப்பானது என்பது எங்களுக்குத் தெரியும். இப்போதும் அது குறைபாட்டுடன் நிறைவேறக் கூடாது என்பதைத்தான் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.முக்கியமாக ஜிஎஸ்டி வரி அதிகபட்சமாக இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.
 
குறுகிய மனப்பான்மை: “ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அதே நேரத்தில் சகிப்பின்மையுடன் நடந்து கொள்கிறது. பிறகு எப்படி வெற்றி பெற முடியும்? நாங்கள் எண்ணுவதுபோலத்தான் இந்தியாவும் இருக்க வேண்டும்; முடிந்தால் உலகமும் அப்படியே இருக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் குறுகிய மனப்பான்மை கொண்ட கொள்கை. நீங்கள் பெண்கள்; உங்களுக்கான இடம் சமையலறை என்று நான் கூறினால், அது உங்களை கட்டிப்போடும் செயல்தானே?
 
இவர்கள் ஹிந்துக்கள்; இவர்கள் முஸ்லிம்கள்; இவர்கள் பெண்கள் என முத்திரை குத்துவது பாஜகவின் கொள்கை. ஆனால் அனைவரும் நம் மக்கள் என்பது காங்கிரஸின் கொள்கை என்று மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடிய போது ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி கலந்துரையாடிய போது மாணவர்களுக்கு நலன் தரும் தகவலை பற்றி பேசாமல் அரசியல் பற்றியே பேசியதாக மாணவர்கள் குற்றம்
சாட்டியுள்னர்.

திடீர் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி !

 
மும்பையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திடீர் என்று நடைபயணம் மேற்கொண்டார்.காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மும்பை வந்தார். அங்கு நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.
 
மும்பையில் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ள ஹாலுக்கு மறைந்த முன்னாள் நகர தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி தியோரா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை ராகுல்காந்தி தொடங்கி வைத்தார்.இன்று ராகுல்காந்தி மும்பையில் உள்ள நிர்வாகவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளிடையே உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில் மாணவர்கள் தங்களுக்கு எந்தவித எல்லையும் வகுத்து கொள்ளக் கூடாது,
 
 
மாணவர்களின் நடவடிக்கைகளால் நாட்டிற்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் ராகுல்காந்தி மும்பையில் பந்த்ராவில் பிரசார நடைபயணம் தொடங்கினார். தாராவி வரை 6 கி.மீ. தூரத்துக்கு அவர் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுடன் நடை பயணம் சென்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

மரத்தின் மீது கார் மோதி விபத்து : கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் பலி

 
கடலூர் மாவட்டம் அருகே நேற்று மரத்தின் கார் மோதி ஏற்ப்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள நடுவீரப்பட்டு வான்ராசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் வெங்கட்ராமன் மேட்டூரில் உள்ள தனியார் தொழிநுட்ப்ப கல்லூரியில் படித்து வருகிறார்.
பொங்கல் பண்டிகை மற்றும் சி.என்.பாளையத்தில் நடைபெறும் மலைப் பிள்ளையார் கோயில் விழாவில் பங்கேற்பதற்காக, வெங்கட்ராமன் சொந்த ஊருக்கு வந்தார்.
அவருடன், கல்லூரியில் பயிலும் நண்பர்களான ஈரோட்டைச் சேர்ந்த முனியன் மகன் தினகரன் (20), திருச்செங்கோட்டைச் சேர்ந்த முருகன் மகன் மோகன் (20), சென்னையைச் சேர்ந்த லோகேஸ்வரன் (21), திருவள்ளூர் மாவட்டம், ராமபுரத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் திவாகர், மேட்டூரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கார்த்திக் (21), கெளரிசங்கர் ஆகியோரும் வந்திருந்தனர்.
வெங்கட்ராமன் தனது காரில் கல்லூரி நண்பர்கள் மற்றும் சி.என்.பாளையம் புத்திரன்குப்பத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் சசிக்குமார் (20), சொக்கநாதன்பேட்டை சம்மந்தம் மகன் முத்து (20) ஆகியோருடன் சனிக்கிழமை காலை புறப்பட்டார். கடலூர் மற்றும் சில இடங்களுக்குச் சென்றவர்கள் மதியம் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
பாலூரை அடுத்துள்ள குச்சிப்பாளையம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.
இதில் காரிலிருந்த வெங்கட்ராமன், தினகரன், மோகன், லோகேஸ்வரன், கெளரிசங்கர், திவாகர், சசிக்குமார், முத்து ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லேசான காயத்துடன் கார்த்திக் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயக்குமார், மற்றும் காவல் துறையினர் போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கார் உருக்குலைந்ததால் சடலங்கள் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. காரை உடைத்து சடலங்களை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நவீனக் குறள் பத்து

வள்ளுவர் நாளில் நவீனக் குறள்பத்து

நல்லோர்மன் னித்தருள்வீ   ரே !


பொதுமக்களியல் – குடிமையியல் – ஆட்சியியல் – குடிசெயல்வகையியல்


மலையளவு ஊழல் எனினும் மறப்போம்

அலைக்கற்றை அவ்வளவு தான். (1)


கற்பனையில் தோன்றியதாய்க் கட்டவிழ்த்துக் காட்டிடுவோம்

விற்பனையில் பார்த்ததைத் தான் (2)


விலைவாசி ஏன்கவலை விற்பவற்றின் பங்காய்

நிலையாக நோட்டுவரும் போது? (3)


இலவசம் இல்லை இவன்வசம் இல்லை

பலமிழந்த பார்வையிது காண்  (4)


தைதான் சுயமரியா தைதான் சிதைந்தாலும்

வைவேனே வையத்தைத் தான் (5)


வெங்காயக் கேள்வி வெறுங்கேள்வி கேட்டக்கால்

பொங்காதோ எந்தன் உளம் (6)


செய்தவற்றில் செய்தவற்றை சேர்ந்தேதான் கண்டிட்டால்

செய்யாச் செயலெனவே புகல் (7)


இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்

மனத்தை உறக்கத்தில் வை  (8)


புதிதாகச் செய்வோம் புதிராகச் செய்வோம்

எதிர்க்கேள்வி கேட்டால் வழக்கு (9)


புத்தாண்டு பூத்ததுவாய் புன்சிரிப்பைக் காட்டிடுவோம்

வித்தாச்சே எங்கள்கொள் ‘கை’ (10)


© தினக் குரலன் – சரிக் குறளன்

பாசிடிவ் என்பது உண்மையாய் இருப்பது

பாசிடிவ் என்பது உண்மையாய் இருப்பது

ஆச்சர்யமோ ஆத்திரமோ
அழுகையோ அலுப்போ
துக்கமோ துடிப்போ
உணர்ச்சியது எதுவானாலும்
உணர்த்துவதில் தவறில்லை
உரைப்பதால் பலவீனம் இல்லை;

எத்தனை அடித்தாலும் அழாது மரம்;
எத்தனை இடித்தாலும் ஆத்திரப்படாது கல்;
அதனால் அவை சிறப்பாகிவிடுமா??

மனிதன் என்றால் உணர்ச்சி உண்டு .

பாசிடிவ் பாசிடிவ் என்றே
பதுக்கி வைக்க முனைய வேண்டாம்;
இயல்புணர்வை மறுப்பதில்
இன்னலே மிகும்;

mirror

மனிதன் என்றால் உணர்ச்சி உண்டு;
மறைப்பதால் மகிமை இல்லை;

உங்களுக்கு உண்மையாக இருந்திடுங்கள்;
உள்ளதை மறுக்காமல் ஏற்றிடுங்கள்

தனக்குத் தானே உண்மையாய் இருந்திடுங்கள்.

பாசிடிவ் என்பது உண்மையாக இருத்தலே.

திரு வ ரங்கநாதன்

2வது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்திய அணி 308 ரன்கள் எடுத்து சவாலான இலக்கை நிர்ணயித்திருந்த போதும், மோசமான பந்துவீச்சால் தோல்வியடைந்தது. 309 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியைப் போல் இந்தப் போட்டியிலும் ரோஹித் சர்மா சதம் விளாசினார். அவரது சதம் வெற்றிக்குக் கைகொடுக்கவில்லை.