Home Blog Page 5849

லோக்பால் நிறைவேற்றாததைக் கண்டித்து ஜன.30ல் போராட்டம்: அன்னா ஹஸாரே அறிவிப்பு

புது தில்லி:

லோக்பால் மசோதா நிறைவேற்றுவதில் மத்திய  அரசு மெத்தனமாக செயல்படுவதாகக் கூறியுள்ள  அன்னா ஹஸாரே, இதை கண்டித்து ஜன.30ல் தில்லியில் போராட்டம் நடத்தப் போவதாகக் கூறியுள்ளார்.

தன் சொந்த கிராமமான ராலேகான் ஸித்தியில் அன்னா ஹஸாரே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  

லஞ்ச, ஊழலைத் தடுக்க வகை செய்யும் லோக்பால் மசோதா விவகாரத்தில் போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கெனவே நான்  7 மாநிலங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களைச் சந்தித்து பேசியுள்ளேன்.  லோக்பால் மசோதா நிறைவேற்றும் விவகாரத்தில், மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து வருகிற ஜன.30 ஆம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவுள்ளளேன்.
 
இந்த மசோதாவை பொறுத்தவரையில், அரசின் தாமதப்படுத்தும் தந்திரம், அதன் நோக்கம் மற்றும் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுந்துள்ளது. அரசியலில் நடுநிலை வகிக்கும் சமூக ஆர்வலர்கள், தில்லியில் நடைபெறும் அமைதி போராட்டத்தில் கலந்து கொள்ளலாம். இதற்கு நான் தார்மீக ஆதரவு தெரிவிக்கிறேன்.
 
ஆரம்பத்தில் தில்லி ஆம் ஆத்மி அரசால் முன்மொழியப்பட்ட லோக்பால் மசோதா, பலவீனமாக இருந்தது. என்னுடைய குறுக்கீட்டைத் தொடர்ந்து, அந்த மசோதா வலுவானதாக மாற்றப்பட்டது.
 
நான் பரிந்துரைத்த 4 உட்பிரிவுகளும் அத்துடன் இணைக்கப்பட்டன. இந்த தொடக்கத்தை நாம் வரவேற்க வேண்டும். மசோதா நிறைவேறும் சமயத்தில், அதில் தேவையான மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
 
கேஜ்ரிவால் ஒரு முதலமைச்சராக அவர் எந்தவொரு தவறான முடிவையும் எடுத்ததை நான் பார்த்தது இல்லை. அரசியல் மீதான சாமானிய மனிதனின் எண்ணத்தை அவர் மாற்றிக் காட்டிவிட்டார்.
 
பணபலத்தில் இருந்து அரசியல் விடுபட்டிருப்பதை பார்க்க நான் விரும்புகிறேன். அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மரியாதை இல்லை என்பதை என்னால் ஏற்க முடியாது.
 
சத்தியாகிரகத்தை மேற்கொள்வது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது அல்ல. அமைப்பு முறைகளை மாற்றுவதற்காக நக்சலைட்டுகளை போல், வன்முறையை கேஜ்ரிவால் தூண்டியதில்லை” என்று கூறினார்.

டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரியவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்த தமிழக காவல் துறை !

 
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முற்றுகை போராட்டம் நடத்திய ஜனநாயக மாதர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தி 55 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
டாஸ்மாக் மதுக்கடை கடையின் அருகே பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. எனவே, இந்த மதுக்கடையை அகற்றக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் மதுக்கடை அகற்றப்படவில்லை.
 
எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலையில் ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஏராளமானோர் டாஸ்மாக் கடை அருகே திரண்டனர்.
அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் ஜோதிலட்சுமி உள்பட நிர்வாகிகள் பலர் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கோஷமிட்டவாறே கடையை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அஸ்தம்பட்டி போலீஸ் உதவி ஆணையாளர் உதயகுமார் மற்றும் காவல் துறையினர்போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யப்போவதாக கூறினர்.
ஆனால் மதுக்கடையை இடமாற்றம் செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 
உடனே போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும், தரையில் அமர்ந்து காவல் துறையினரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் கைகளை கோர்த்தபடி ஆண்கள் சாலையில் படுத்தும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதும், சில பெண்கள் மீதும் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினரையும், பெண்களையும் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றிய போலீசார் அவர்களை கைது செய்தனர். இவ்வாறு 7 பெண்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாநகராட்சி ஆணையாளரை தாக்கினாரா கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ?

 
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, நிகழ்ச்சி ஒனறில் பங்கேற்க வந்த போது அரசு அதிகாரியை தாக்கியதாக சமூக ஊடகங்களில் காணொளி வரைலாக பரவிவருகிறது
 
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தார் அம்மாநில காங்கிரஸ்.முதலமைச்சர் சித்தராமையா, அவரை சுற்றி மக்கள் கூட்டம் மொய்த்தது,
பாதுகாப்பு அதிகாரிகள் அவரை நெருங்க விடாமல் தடுத்தபடி வந்தனர். ஒரு கட்டத்தில் தன் மீது சிலர் நெருக்கியும், உரசியும் வருவதையறிந்து எரிச்சலடைந்த சித்தராமையா திடீரென ஒருவரை தாக்கினார்.
இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. தாக்கப்பட்டவர் பெல்லாரி மாநகராட்சி ஆணையாளர் பி.ஜி.ரமேஷ் என கூறப்படுகிறது. எனினும் அடிவாங்கியது தானில்லை என ரமேஷ் மறுத்துள்ளார். அடிவாங்கியது கட்சி தொண்டர் எனவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
 
இது குறித்து சித்தராமையா அவரது முகனூல் பதிவின் மூலம் தெரிவித்துள்ளதாவது :-
 
நான் யாரையும் தாக்கவில்லை. தொண்டர்களை பார்த்து கையசைத்தேன். என் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. இதனை ஊடகங்கள் தவறாக சித்திரித்து வெளியிட்டுள்ளது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்

விமான நிலைய அதிகாரியை தாக்கிய பாராளுமன்ற உறுப்பினர் கைது

 
விமான நிலைய அதிகாரியை தாக்கிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
 
ஆந்திர மாநிலம் ராஜம்பேட் பாராளுமன்ற தொகுதியில் இருந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மிதுன் ரெட்டி. இவர் தனது ஆதரவாளர்களுடன் கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதி திருப்பதி சென்றார்.
 
அப்போது திருப்பதி விமான நிலையத்தில் பணியில் இருந்த ஏர் இந்தியா நிறுவன அதிகாரியுடன் ஏற்பட்ட தகராறில், பாராளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி அந்த அதிகாரியை தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக மிதுன்ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் மதுசூதன் ரெட்டி உள்பட 19 பேர் மீது ஆந்திர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மிதுன் ரெட்டி எம்.பி.யின் உதவியாளர் முன்ஜாமீன் பெற்றார். ஆனால் முக்கிய குற்றவாளியான மிதுன் ரெட்டியும், மதுசூதன் ரெட்டியும் தலைமறைவாகி விட்டனர்.
 
இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்த மிதுன் ரெட்டி, முன்ஜாமீன் கேட்டு ஆந்திர நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை ஐகோர்ட்டு கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்ய காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கிடையே அவர் தாய்லாந்துக்கு சென்றிருந்தார். எனவே அவர் நாடு திரும்பும் போது கைது செய்யும் நோக்கில் உள்துறை அமைச்சகம் மூலமாக அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை 1 மணிக்கு வந்த விமானத்தில், பாராளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி மற்றும் மதுசூதன் ரெட்டி ஆகியோர் வந்து இறங்கினர். இதை கண்டுபிடித்த குடிமைத்துறை அதிகாரிகள், இருவரையும் பிடித்து வைத்து ஆந்திர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆந்திர காவல் துறையினர் சென்னைக்கு வந்து இருவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
பாராளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி மற்றும் மதுசூதன் ரெட்டி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பதி நோக்கி கண்டன பேரணி நடத்தினர். அவர் களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெளூரு பகுதியில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
 
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர் .பிறந்த நாள் விழா

திருநெல்வேலி .

எம்.ஜி.ஆரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு கீழப்பாவூரில் கே.ஆர்.பி .பிரபாகரன் எம்.பி கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் நிகழ்சியில் கூட்டுறவு சங்க தலைவர் கே.ஆர்.பால்துரை ,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர்  மு.சேர்மபாண்டியன் ,பேரூர் கழக செயலாளர் பாஸ்கர் ,தீப்பொறி அப்பாதுரை,தொழிலதிபர் கணேசன்,பி.எஸ்.என்.எல்.ஆலோசனைக்குழு மதியழகன்,மேலவைப் பிரதிநிதிகள் ஜெயராமன்,சாமிநாதன்,கப்பல்  உட்பட பலர் கலந்துகொண்டனர்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உச்ச நீதிமன்றம் விதித்த தடையை மீறி நடைபெற்ற ஜல்லிக்கட்டு !

 
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உச்ச நீதிமன்றம் விதித்த தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
 
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. இந்த நிலையில், மத்திய அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்த மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. தடையை கண்டித்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்தன.
 
நேற்று ஜல்லிக்கட்டு நடைபெறாததால் பாலமேட்டில் ஏராளமானோர் கருப்புச்சின்னம் அணிந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று வாடிவாசல் முன்பு குவிந்தனர். அங்கு ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினார்கள். விலங்குகள் நல அமைப்பின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. வாடிவாசல் பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைத்து துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
ரகசிய கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. இதே போன்று, அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் முற்றுகை போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு நடைபெறவேண்டி சில நிமிடம் அமைதி வழிபாடு நடத்தினர். வாடிவாசல் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை கருப்பு கொடியுடன் அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். அந்த பகுதி முழுவதும் கருப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
 
அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நேற்று 5-வது நாளாக அரசு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. அழகர்கோவில் அருகில் உள்ள பொய்கைக்கரைப்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலமேடு அருகே உள்ள ராஜாக்கள்பட்டியில் சிலர் ஜல்லிக்கட்டு காளைகளை கயிற்றில் கட்டி தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தினர். இதை பார்ப்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திரண்டனர்.
 
இதேபோல் மேலும் சில பகுதிகளிலும் காளைகளை ஆங்காங்கே அவிழ்த்துவிட்டனர். காவல் துறையினர் அவர்களை விரட்டி அடித்தனர். அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினருடன் ஊர் பொதுமக்கள் இணைந்து வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காளைகளுடன் வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். தங்கள் மாடுகளை குளிப்பாட்டுவதற்காக கொண்டு செல்வதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் துறையினர் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.
 
இதுதொடர்பாக 10 பேரை காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். அவனியாபுரம் பகுதியில் ஒரு நகர பேருந்து மீது கல் வீசப்பட்டதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் ஜல்லிக்கட்டு பேரவையினர் கருப்பு கொடி பேரணி நடத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்ட காளைமாடுகள், குதிரை, ரேக்ளா வண்டிகளும் கலந்து கொண்டன. பேருந்து நிலையத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
 
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கசிநாயக்கன்பட்டியில் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கலைந்து போகும்படி கூறினார்கள். அங்கிருந்து ஊருக்குள் சென்ற அவர்கள் தடையை மீறி எருது விட்டு வீரவிளையாட்டில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போல், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டும் பிரசித்தி பெற்றதாகும்.
 
நேற்று சிங்கம்புணரியில் தடையை மீறி சுற்றுவட்டார கிராம மக்கள் அலங்கரிக்கப்பட்ட காளைகளுடன் வந்து அவற்றை அவிழ்த்துவிட்டனர். காளைகளின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்த துண்டு, ரூபாய் நோட்டு மாலை, கரும்பு ஆகியவற்றை எடுக்க மாடுபிடி வீரர்களும் களத்தில் இறங்கினர். இதேபோல் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று காளைகளின் கழுத்தில் கரும்பு, ரூபாய் நோட்டு மாலைகள் அணிவித்து அவிழ்த்துவிட்டனர். ஏராளமான கிராமங்களில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் தடையை மீறி நடந்தன.
 
நூற்றுக்கணக்கான காளைகள் இதில் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடிக்க போட்டி போட்டு களத்தில் இறங்கினர். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து மாடுகளை அவிழ்த்துவிட்டனர். இதேபோல், வேலூரை அடுத்த சாத்துமதுரை பகுதியிலும் காளை விடும் திருவிழா உற்சாகமாக நடந்தது .இதனால் விருதம்பட்டு பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
 
இதனால் காளைகள் சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி, விருதம்பட்டு திடலில் நேற்று மாலை காளை விடும் திருவிழா நடந்தது. காளைகளை ஓடவிட்டு அதன் பின்னே இளைஞர்கள் விரட்டிக்கொண்டு ஓடினர். பெரும்பாலான காளைகள் சீறிப்பாய்ந்து இளைஞர்களை கீழே தள்ளிவிட்டு வேகமாக ஓடிவிட்டன. இந்த காளை விடும் விழாவை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.

போலியோ சொட்டு மருந்து முகாம் கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி துவக்கிவைத்தார்

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாமினை திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி பிரபாகரன் துவக்கிவைத்தார்  உடன் திருநெல்வேலி மாவட்ட துணை இயக்குனர் ராம்கணேஷ்,கொள்ளை நோய் தடுப்பு மருத்துவ அலுவலர் பாலாஜி ,வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார்,வட்டார மேற்பார்வையாளர்  இசக்கியப்பா ,நேர்முக உதவியாளர் அருணகிரி ,கூட்டுறவு சங்க தலைவர் கே.ஆர்.பால்துரை ,மாவட்ட கவுன்சிலர் மு.சேர்மபாண்டியன் ,மேலவைப் பிரதிநிதிகள்  ஜெயராமன்,வி,கே.கணபதி உட்பட பலர் கலந்துகொண்டனர் கீழப்பாவூர் ஒன்றியத்தில் 111 மையத்தில் மொத்தம் 15,185 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்ப்கபட்டது

ஜல்லிக்கட்டு பற்றி நக்மாவுக்கு எதுவும் தெரியாது : ஈவிகேஎஸ் இளங்கோவன்

 
தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நக்மாவுக்கு எதுவும் தெரியாது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். விளையாட்டு விலங்குகள் நலவாரியத்தின் சட்ட போராட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கு தடை விழுந்துள்ளது.
 
அதை நீக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த விஷயத்தில் கட்சி பேதமின்றி அனைத்து கட்சிகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.ல் தேசிய கட்சிகளின் தமிழக நிர்வாகிகள் மற்றும் தேசிய நிர்வாகிகளின் கருத்துக்கள் வேறுபடுவது உண்டு.அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை நக்மா ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துக்களையே கொண்டுள்ளார்.
 
கடந்த வாரம் மகளிர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நக்மா ‘ஜல்லிக்கட்டு நடத்துவதில் தனக்கு உடன்பாடு இல்லை. மாடுகளை வதைப்பதற்கு சமம்’ என்று கருத்து தெரிவித்தார்.இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட போது, நக்மாவுக்கு ‘பாட்ஷா’வை தெரிந்த அளவுக்கு ஜல்லிக்கட்டை தெரியவில்லை.
காங்கிரசை பொறுத்தவரை மன்மோகன்சிங், ஜெய்ராம் ரமேஸ் ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு எதிரான எண்ணம் கொண்டுள்ளார்கள்.காங்கிரசில் குஷ்புவும், நக்மாவும் தனி தனியாகவுவும், குஷ்பு இளங்கோவனின் ஆதரவாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இளங்கோவன் நக்மாவை சாடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி கீழப்புலியூரில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

தென்காசி:
தென்காசி கீழப்புலியூரில் சுவாமி விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில் விளையாட்டு தை பொங்கல் விளையாட்டு போட்டிகள் ஜன.16 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்காகவும் அனைத்து சமுதாய தலைவர்களையும் அழைத்து போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் திருக்குற்றாலம் ஐந்தருவி சுவாமி விவேகானந்தா ஆஸ்ரமம் தலைவர் சுவாமி அகிலானந்தா மகராஜ் அவர்கள் ஆசியுரை வழங்கினார்கள்.
விழா ஏற்பாடுகளை R.பாலசுப்பிரமணியன் K. முத்து கிருஷ்னன் M. ராஜா P. இசக்கி முத்து P.சுப்பிரமணியன் S. சுப்பையா மற்றும் தென்காசி நகர பாஜக நிர்வாகிகளின் ஒத்துழைப்போடும் சின்னையாடார்கட் துரை தேவனின் நண்பர்கள் மற்றும் தம்பிமார்கள் பாலகண்ணன் மணிகண்டன் தலைமையிலான வேதாளம் பாய்ஸ் நன்பர்கள் செய்திருந்தனர்.  தென்காசி நகர் மன்ற உறுப்பினர் பதவி மூலம் அமர்வு படியாக கிடைக்கப்பட்ட தொகை முழுவதையும் விளையாட்டு போட்டிக்காக செலவு செய்ததாக பாஜக., கவுன்சிலர் சாமி தெரிவித்தார்.

“ஆத்துப் பாலக் கச்சேரி”

“எலேய்…அது யாரு..கோமதிநாயகம் புள்ளயா…எங்கலே ஆத்துக்கு குளிக்கவா….இங்க நாங்க நல்லுபேரு ஒக்காந்திருக்கோமுல்லா…காண்ணுல தெரியலையா…அதுக்குள்ளாலயால மறந்திட்டாயா…”

“அதெல்லாம் ஒண்ணுமில்லையா…வேலைக்குப் போணும்…அதான் ஓடுதேன்…ஒங்கள மறப்பேனா”
 
“அட…அப்படி போடுறா…இந்த நாட்டுல நாமெல்லாம் எல்லாத்தையும் மறந்திட்டிலா திரியுதோம்….”
 
“ஆசிரியரே….எங்கவே கயத்த நீட்டுதீறு”
 
“ஆமா…பூச்சி மருந்து ஊழல மறந்துட்டோம், கோதுமை பேர ஊழல மறந்துட்டோம், வீராணம் ஊழல மறந்துட்டோம், விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் ஊழல் விஞ்ஞானி என்று “சர்க்காரியா கமிஷன” காட்டி என்ன உள்ள தள்ளிடாதீங்கனு அம்மா கால்ல..அதான் இந்திராகாந்தி கால்ல விழுந்தத மறந்துட்டோம், அந்தம்மா செய்த அவசரச்சட்டக் கொடுமைகள மறந்துட்டோம், அந்த அம்மாவ மதுரைல தி.மு.க. தாக்கியத மறந்துட்டோம், அப்ப அந்த அம்மா புடவைல இருந்த “ரத்தத்துக்கு” நம்ம கலியுக டாக்டர் கலைஞரு சொன்ன விளக்கத்த மறந்துட்டோம்,காமராஜர மறந்துட்டோம், காமராஜர் இறந்த பொழுது, “காமராஜர் என்னைக் கட்டிக்கொண்டு தேசம் போச்சு..தேசம்போச்சு..நீங்கதான் அதக்காப்பாத்தணும்”னு டாக்டரு, கலைஞரு சொன்ன பொய்யும் மறந்துட்டோம்,

மருமகனின் கு”மாறன்கள்” செய்த ஊழலும் மறந்தாச்சு, 2G ஊழல மறந்தாச்சு, மதுரையில தினகரன் அலுவலகத்துல தீ வைச்சு கொளுத்தி,அங்கு் மூணு இளைஞர்கள் சாவுக்கு காரணமான அஞ்சா நெஞ்சக் கொடுமைகளையும் மறந்தாச்சு, தா. கிருஷ்ணன் கொலைய மறந்தாச்சு, “ஈ.வி,கே. சம்பத்த” ஆள வைச்சு அடிச்சத மறந்தாச்சு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தனக்கு டாக்டர் பட்டம் கிடைக்கச் செய்து,அப்பொழுது நிகழ்ந்த மாணவர்களின் இறப்பை மறந்தாச்சு, மத்திய அரசில் பங்கு கேட்க டெல்லிக்குப் பறந்து போய் முரண்டு பிடித்து “கப்பல் துறை” மந்திரிப்பதவியை வாங்கி்ி அடித்த கொள்ளையையும் மறந்தாச்சு, கள்ளுக்கடையைத் திறந்து விட்டு தனது கட்சி சகாக்களையே மதுபான தொழிற்சாலைகளைத் திறக்கவைத்து தமிழக மக்களைக் குடிகாரர்களாக்கி, இன்று மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் “மதுவிலக்கு” கொண்டுவருவோம் என்று சொன்ன நாடகத்தையும் மறந்தாச்சு, சொத்து வழக்க மறந்தாச்சு, திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றி ஊழல மறந்தாச்சு, தமிழ் நாட்டில் உள்ள நிலங்களை, ஏரிகளை கபளீகரம் செய்த “யோக்கியர்களை” மறந்தாச்சு, ஆற்று மணற் கொள்ளையரின் அட்டகாசங்களை மறந்தாச்சு, இந்த வருடம் பெய்த பேய் மழைச் சேதங்களை மறந்தாச்சு, இப்ப புதுசா “ஜல்லிக்கட்டு” ஓடிக்கிட்டிருக்கு..அதுவும் இன்னிக்கு காணும் பொங்கல் முடிஞ்சிட்டா மறந்துர வேண்டியதுதான்….”
 
“ஆசிரியரே…மறந்தாச்சு…மறந்தாச்சுன்னு…என்தன செய்திய நினைச்சுட்டிருக்கீறு…நீறு கல்லுணி மங்கான்வே”
 
” வே…நினைக்க வேண்டிய “காந்திய” மறந்துட்டோம்…மறக்கவேண்டிய “காந்திகள” நெனச்சுட்டு திரியறோம்” …சத்தியமூர்த்திய மறந்துட்டோம்,லால்பகதூர் சாஸ்திரிய மறந்துட்டோம், ராஜாஜிய மறந்துட்டோம், காமராஜர மறந்துட்டோம், ஏன்…அண்ணாத்துரையவே மறந்துட்டோம்…இன்னும் இப்படி நெறயக் கெடக்கு மனசுக்குள்ள….”
 
“வே…நீறு சொல்லுதப் பாத்தா…நேர்மையா, எளிமையா இருந்து, ஊருக்கு நல்லது பண்ணின தலைவர்கள மறந்துட்டோம்..ஊழல் பண்ணின பேர்வழிகளத்தான் நெனைச்சிட்டிருக்கோங்கீரா….”
 
“சரி..போவோம் வாரும்…இன்னிக்கி இது போதும்..ஆத்து மணல இவக கொள்ளை கொண்டு போறதுக்கு முன்னாடி “ஆத்துல” ஒரு முங்கு போட்டு வீட்டுக்குப் போவோம்…நேரமாயிட்டா பொஞ்சாதி பொரட்டி எடுத்துருவால்ல….”
 
” வெவரமான ஆளுவே நீறு”

– மீ.விசுவநாதன்