Home Blog Page 5851

சிட்னி டென்னிஸ்: சானியா இணை சாதனை

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா – சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை  வெற்றி பெற்றது. பிரான்ஸின் கிரேஸியா – மெல்டிநோவிக் இணையை 1-6, 7-15, 10-5 என் செட் கணக்கில் வென்றது சானியா இணை.

முதலில் சற்று பின்னடைவைச் சந்தித்தது சானியா-ஹிங்கிஸ் இணை. முதல் செட்டை 1-6 என்ற கணக்கில் இழந்த அந்த இணை,  இரண்டாவது செட்டிலும் சற்று பின்தங்கியது. பின்னர் அதிரடியாக விளையாடி அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் வென்றது.

வெற்றியை தீர்மானிக்கும் சூப்பர் டை-பிரேக் போட்டிக்கு முன்னதாக திடீரென்று மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் சானியா-ஹிங்கிஸ் இணை 10-5 என்ற கணக்கில் வென்று கோப்பையை வென்றது.

சானியா-ஹிங்கிஸ் இணை இதுவரை 10 பட்டங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

அவசரச் சட்டம் கொண்டுவந்தால் நிரந்தரத் தடை வந்துவிடும்: தமிழிசை

திருவள்ளூர்:
மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால் ஜல்லிக்கட்டுக்கான தடை நிரந்தரமாக வந்துவிடும் என்று கூறினார் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காங்கிரஸுக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, தூண்டிவிடுபவரும் அவர்தான் என்று கூறினார்.
மேலும், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், நிரந்தர தடை வந்துவிடும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  ஜல்லிக்கட்டு தடையை நீக்க அடுத்த ஆண்டு பா.ஜ.க, முயற்சி மேற்கொள்ளும். ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வர பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறினார்.

சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானதல்ல: தொடர்ந்து விசாரணை

புது தில்லி:

காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானதல்ல, இருப்பினும் அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தில்லி காவல் ஆணையர் பி.எஸ். பஸ்ஸி கூறினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தில்லியில் உள்ல ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் சசி தருரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். 4 முறை சசி தரூரிடம் விசாரணை நடத்தினர்.

சுனந்தாவுக்கு ‘ரேடியம்’ அளிக்கப்பட்டு அவர் கொலை செய்யப் பட்டிருக்காலம் என தகவல் வெளியானதையடுத்து அவரது உள்ளுறுப்புகளின் மாதிரிகள் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள எப்பிஐ ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. எப்பிஐ, சுனந்தா மரணம் குறித்த ஆய்வறிக்கையை இரண்டு மாதங்களுக்கு முன்பாக தில்லி போலீஸாருக்கு அனுப்பி வைத்தது. அதில் சுனந்தா உடலில் விஷதன்மையுள்ள எவ்வித ரேடியோ பொருள்களும் இல்லை என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த அறிக்கையை ஆய்ந்து உரிய அறிக்கை தருமாறு தில்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவை தில்லி போலீஸார் கேட்டுக் கொண்டனர்.

எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் தங்களது அறிக்கையை தில்லி போலீஸாருக்கு வழங்கிய நிலையில், அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தில்லி காவல் ஆணையர் பஸ்ஸி, “சுனந்தா மரணம் இயற்கையான முறையில் நடைபெறவில்லை. இதுவரை கிடைத்த தடயங்கள் அடிப்படையில் அது உறுதியாகியுள்ளது. எப்பிஐ அறிக்கையின்படி, வேறு விதமான வேதியியல் கூட்டுப் பொருள்கள் சுனந்தாவின் உடலில் இருந்துள்ளன.  எய்ம்ஸ் மருத்துவ குழுவும் சில முடிவுகளை அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.

பெட்ரோல் லிட்டருக்கு 32 காசுகள்; டீசல் 85 காசுகள் விலைக் குறைப்பு

புது தில்லி:

பெட்ரோல் லிட்டருக்கு 32 காசுகளும் டீசல் 85 காசுகளும் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்  குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தங்களது விருப்பத்திற்கு நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற, இறக்கத்தை அடுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

தற்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிக்ச் சந்தித்துள்ளன. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை இன்று குறைத்துள்ளன. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 85 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

தாரை தப்பட்டை – விமர்சனம்

டிகர்களின் கையில் இருக்கும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மிக சில இயக்குனர்களுள் முக்கியமானவர்பாலா. அவருடைய படங்கள் ஒரே டெம்ப்ளேட்டுடன் இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் பார்க்கத் தூண்டி விடும் . இசைஞானியின்1000மாவது படம் என்பது படத்திற்கு மற்றுமொறு மைல்கல்…

தஞ்சாவூரில்தாரை தப்பட்டைகுழு வைத்து நடத்தி வரும் சன்னாசி (சசிகுமார்) , அவரை தீவிரமாக ( துணிக்கடையில் என் ப்ரா சைஸ் சொல்லு மாமா என்று கேட்குமளவுக்கு ) காதலிக்கும் அந்த குழுவின் முக்கிய ஆட்டக்காரி சூறாவளி ( வரலக்ஷ்மி ) இவர்களின் காதல் , பிரிவு , கிராமியக் கலைஞர்களின் சரிவு இவற்றை தனக்கே உரிய பட்டவர்த்தனமான ஸ்டைலில் அதே சமயம் வில்லனின் சைக்கோத்தனமான டார்ச்சர்கள் மற்றும் க்ளைமேக்ஸில் வில்லனின் சங்கை அறுக்கும் ஹீரோவின் வெறியாட்டத்துடன் படத்தை முடித்து வீட்டுக்கு போனா முதல்ல குளிக்கனும்டா சாமி என்கிற அளவுக்கு நம்மை வெறியேற்றி அனுப்பி வைக்கிறார் பாலா …

சசிகுமார் தனது குருவுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும் . மற்ற ஹீரோக்களை போல இவருக்கு பெரிய டார்ச்சர் இல்லை . கரகாட்டம் சம்பந்தப்பட்ட படமென்பதால் சசிகுமாரை ஆட வைத்து விடுவாரோ என்கிற பயத்திலிருந்து நம்மை விடுவித்ததற்கு நாமும் கூட நன்றி சொல்லலாம் . மற்றபடி முடிந்தவரை நன்றாக நடித்திருக்கிறார் சசிகுமார் . படத்தின் மையப்புள்ளியேவரலக்ஷ்மிதான் . கொஞ்சூண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு  குத்தாட்டம் போடுவதாகட்டும் , மாமா மாமா என்று சசிக்குமாரை கொஞ்சுவதாகட்டும் , சரக்கடித்து விட்டு ஜி.குமாரை கலாய்ப்பதாகட்டும் , சசி தன்னை மறுத்தவுடன் அழுவதாகட்டும் இந்த படத்துல பொண்ணு நடிக்கல , வாழ்ந்திருக்கு . ஆனால் எப்போதுமே சரக்கை போட்டு விட்டு கவுச்சியாக பேசும் அம்மணி ஒருத்தன் படுக்க கூப்புட்டவுடன் அவனை பொளந்து  எடுப்பதும் , துணிக்கடையில் வைத்து படு விரசமாக பேசுவதும் ஓவர் டோஸ் போலவே படுகிறது …


வாழ்ந்து கேட்ட கலைஞனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்ஜி.குமார்.சசி திட்டியவுடன் ஒரு பக்கமாய் படுத்துக்கொண்டு அழும் இடம் அருமை . மற்றபடி ஒரு பாடலை மட்டும் பாட விட்டு இவர் பெருமையை முடித்துக்கொள்கிறார்கள் . இவர் எந்தவிதமான கலைஞர் என்பதற்கு பெரிய டீட்டைளிங் இல்லை . வில்லனாக நடித்திருக்கும்சுரேஷ்அந்த ரோலுக்கு பொருத்தமாக இருக்கிறார் . ஆனால் பாலா  வின் மற்ற வில்லன்களோடு ஒப்பிடும் போது ஒரு மாற்று குறைவு தான் . இன்னும் சொல்லப்போனால் கிராமியக் கலைஞர்கள் பற்றிய வாழ்க்கைப் பதிவில் சைக்கோத்தனமான இவருடைய கேரெக்டர் இடைச்செருகல் போல இருந்து நம்மை  நிறையவே இம்சிக்கிறது …

பொதுவாக பாலா படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்கள் கூட நம்மை நிறைய கவர்வார்கள் . அதே போல இந்த படத்தில் வரும் அண்ணன் – தங்கை கேரக்டரும் , வயிற்றுப் பொழைப்புக்காக ரெட்டை அர்த்த வசனம் பேசி அவர்கள் பாடும் பாடலும் படம் முடிந்து நீண்ட நேரம் ஆகியும் நம் மனதை ஏதோ செய்கிறது . ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போடும் காயத்ரி ரகுராமும் , அவருடைய அம்மாவாக நடித்திருப்பவரும் கவனிக்க வைக்கிறார்கள் …

ஹீரோ அறிமுக காட்சியில் இருந்து , க்ளைமேக்ஸ் சண்டை வரைஇசைஞானியின் பின்னணி இசை படத்தில் ஒரு கேரக்டராகவே வலம் வருகிறது . மாணிக்கவாசகர் வரிகளில் பாருருவாய பாடல் உயிருக்குள் புகுந்து ஏதோ செய்கிறது . அந்த பாடலில் சசிகுமார் – வரு காதல் காட்சிகள் நெஞ்சை பிசைகின்றன . இந்த காட்சிகளில் இளையராஜா – பாலா இருவரும் தாங்கள் ஜீனியஸ் என்று நிரூபிக்கிறார்கள் . இசைஞானி யால் மட்டும் தான்  காதல் , சோகம் , கோபம் , ஏக்கம் என்று எல்லா உணர்ச்சிகளையும் இசையால்  நமக்கு தர முடியுமென்பதற்கு தாரை தப்பட்டை  மற்றுமொரு உதாரணம் …

விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை எந்தவித காம்ப்ரமைசும் இல்லாமல் நம்  முன்னே விரிய விடுவதற்கு பாலா வைப் போல யாராலும் முடியாது . படம் நெடுக நிறைய விரச வசனங்கள் இருந்தாலும் அதை குறையாக சொல்லாமல் படத்தோடு நம்மை ஒன்ற வைப்பதென்பது பாலா வால்  மட்டுமே முடியும் . பொழப்புக்கு ஆட்டம் , பாட்டை தவிர ஒன்றுமே தெரியாத கும்பலின் வாழ்க்கை சினிமா டேன்ஸ் வருகையால் எப்படி பாதிக்கிறது என்பதை தெளிவாகவே பதிய வைக்கிறார் பாலா . இப்படி படத்தின் பலத்துக்கு எப்படி அவர் காரணமோ பலவீனங்களுக்கு அவரே முழுப்பொறுப்பு …

2.bp.blogspot.com Rqq0uk4bTUQ VpkRMbC9myI AAAAAAAAC8Y bLUSy4k5OV0 s640 VARU - 2026


ஜட்டியை விட கொஞ்சம் பெரிய சைஸ் டவுசரைப் போட்டுக்கொண்டு ஆடும் கும்பல் சினிமா பாடலை வைத்து ரெட்டை அர்த்த வசனம் பேசி  ஆடுபவர்களை கேவலமாக பார்ப்பதும் , குடிகாரக் கும்பலுக்கு முன் கர்னாடக  சங்கீதம் பாடிவிட்டு விட்டு வரும் ஜி.குமார் தன்னை பெரிய சாதனையாளர் போல பேசிக்கொள்வதும் மனதில் ஒட்டவில்லை . முதலில் இது எந்த மாதிரியான கதை என்பதே விளங்கவில்லை . வாழ்ந்து கெட்ட கலைஞனின் கதையா ? தனது வாழ்வாதாரத்தை காக்க முடியாத ஆட்டக்காரனின் கதையா ? காதலியின் வாழ்க்கை சீரழிவிற்கு தெரிந்தோ தெரியாமலோ காரணமான காதலனின் கதையா ? பெண்களை வைத்து தொழில் பண்ணும் ஒரு கொடூரனின் கதையா ? ஆட்டம் என்ற பெயரில் உடலை வைத்து காட்சி விபச்சாரம் செய்யும் பெண்களின் கதையா ? என்பது பாலாவுக்கே வெளிச்சம் …

ஆட்டம் , பாட்டத்தை வைத்து பொழைப்பு நடத்தும் கும்பலின் வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகளை மட்டும் வைத்து பாலா வின் அழுத்தமான ஸ்டைலில் படம் பண்ணியிருந்தால் நிச்சயம் தாரை தப்பட்டை  அதிரியிருக்கும் . அதில் தேவையில்லாமல் சைக்கோ வில்லனை விட்டு  வழக்கம்  போல வக்கிர எண்ணங்களை  காட்சிகளாக வகைப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் .  படத்தில் இப்படி  குறைகள் இருந்தாலும் இசைஞானியின் இசை , வருவின் நடிப்பு , மனதை  பிசையும் சில அழுத்தமான காட்சிகள் இவற்றால் படம் நம்மை பாதிக்காமல் இல்லை . ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களுடன் இணைந்து பணியாற்றி இப்படத்தில் சொந்த கதை ?வசனத்தில் இறங்கியிருக்கும்  பாலா  ஒரே ட்ராக்கில் பயணித்து தேவையில்லாத ஆபாசம் , வன்முறை இரண்டிலும் அடக்கி வாசித்திருந்தால்
( என்னதான் படத்துக்குசான்றிதழ் கொடுத்திருந்தாலும் ) ஒருவேளை தாரை தப்பட்டை நன்றாக ஒலித்திருக்கும் …

ரேட்டிங் :2.75 * / 5 *

ஸ்கோர் கார்ட் :41

விமர்சனம்: வாங்க ப்ளாக்கலாம் அனந்து

ராமானுஜர் சந்நிதியில் திகழும் சடாரிக்கு என்ன பெயர்?

உடையவர் ஸந்நிதியில் “முதலியாண்டான்” எதைக் குறிக்கும்?
அருளாளப்பெருமாள் எம்பெருமானார் தாம் மிகச் சிறந்த சாஸ்திரப்பண்டிதராய்த் திகழ்ந்தபோதிலும் அழகிய வெண்பாவில் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த கோட்பாடுகளை யெல்லாம் தன்னுள்ளே கொண்டதாய் அமையப்பெற்ற ஞானசாரம், ப்ரமேய சாரம் என்ற இரண்டு நூல்களை அருளிச் செய்திட அதனால் மகிழ்வுற்ற இராமானுசர் தம்முடைய திருவாராதனப்பெருமாளான “பேரருளாளரை திருவாராதனம் பண்ணிக்கொண்டிரும்” என்று நியமித்தருளினார்.
கிடாம்பியாச்சானும், கிடாம்பிப்பெருமாளும் திருமடைப் பள்ளி கைங்கர்யத்திற்கு கடவராய் இருப்பர்கள். வடுகநம்பி, பசுக்களுக்கு புல் இடுவதற்கும், உடையவருக்கு எண்ணெய்க் காப்பு சாற்றுகைக்கும், உரிய வேளைகளில் பாலமுது ஸமர்ப்பிப்பதற்கும் கடவர்.

திருமண்காப்பு சாற்றிக்கொள்ளும்போது, அதற்கான பணிவிடைகளைச் செய்வார். அருளாளப்பெருமாள் எம்பெருமா னார் திருவாராதனம் ஸமர்ப்பிக்கும்போது அவருக்கு அந்த கைங்கர்யத்தில் முதலியாண்டான் உதவி செய்திடுவார். எம்பெருமானார் திரு வீதிகளில் எழுந்தருளுவதற்கு முன்பாக முதலியாண்டான்அவருக்குத் திருவடி நிலைகளை (பாதுகைகளை) ஸமர்ப்பித்திடுவார்.

இந்தக் காரணம் பற்றியே உடையவரது திருவடிநிலை களுக்கு முதலியாண்டான் என்ற பெயர் நிலை கொண்டுள்ளது. இக்காரணத்தாலேயே எம்பெருமானார் ஸந்நிதியில் ஸ்ரீசடாரிக்கு ‘முதலியாண்டான்’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது

திமுகவை மீண்டும் உயிர்பெறச் செய்யக்கூடாது : துக்ளக் ஆசிரியர் சோ

 
திமுகவை மீண்டும் உயிர்பெறச் செய்யக்கூடாது என்றும் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பொது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். திமுகவின் மீண்டும் குடும்ப ஆட்சி வரக்கூடாது என துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.துக்ளக் இதழின் 46-ஆவது ஆண்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது. உடல் நலம் குன்றியிருந்தும் இந்த விழாவில் அவர் கலந்து கொண்டார். இதில், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர்
விழாவில் கலந்து கொண்ட துக்ளக் ஆசிரியர் சோ பேசியதாவது :-
திமுக ஆட்சியில் சினிமா, அரசியல் என அனைத்திலும் குடும்ப ஆட்சி நடைபெற்றது. மூத்த மகன், இளைய மகன், பேரன், பேத்தி என ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவர் அதிகாரமிக்கவர்களாக இருந்து வந்தனர். அந்த நிலை இப்போது இல்லை.தமிழகத்தில் குடும்ப ஆட்சி போனதற்கு அதிமுகதான் காரணம் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது.
அதிமுக ஆட்சியில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதேசமயம் சில நிறைகள் இருக்கின்றன. தமிழகத்தில் ஏற்ப்பட்ட வெள்ளத்துக்கு ஜெயலலிதாதான் காரணம் என்று சொல்ல முடியாததால், நிவாரண உதவிகள் வழங்குவதில் குறைகள் கூறுகின்றனர். ஆனால், அதிலும் போகப் போக ஒரு வரைமுறை வந்து எல்லா இடங்களிலும் திருப்திகரமான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குடும்ப ஆட்சி போனதற்கு தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் பணியை முதல்வர் ஜெயலலிதா ஆற்றி வருகிறார். மத்திய அரசிடம் இருந்து போராடி பெற வேண்டியதைப் பெற்று வருகின்றனர். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சிரத்தையுடன் போராடி நீதிமன்றம் மூலம் தமிழகத்துக்குச் சாதகமான உத்தரவுகளை அதிமுக பெற்றுள்ளது.மேலும், தமிழகத்தில் திமுகவை மீண்டும் உயிர்பெறச் செய்யக்கூடாது என சோ தனது உரையில் வலியுறுத்தினார்.
விழாவில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்கள் பேசியதாவது :-
த.மா. கா மூத்த தலைவ எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
 
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்
அரசியல் கட்சிகள் மீது பொதுமக்கள் சாதிச்சாயம் பூசவேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தார்.
 
பா.ம. க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் சினிமா கலாச்சாரம் ஊறி திளைத்திருப்பதாகவும், வளர்ச்சிப்பணிகள் தேக்கமடைந்துள்ளதால் மாற்றத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், தெரிவித்தார்.
 
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
இளைஞர்கள் அரசியலுக்கு வருவதைக் கைவிட்டு கல்வியில் கவனத்தை செலுத்த வேண்டும் என்றார். மேலும்
ஆசிரியர்.சோ. மீது தான் நல்ல அபிமானம் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா,
இன்றைய அரசியலில் எதிர் கருத்துக்கள் விவாதிக்கப்படுவதில்லை என்றும், தீர்மானங்கள் விவாதங்களின்றியே நிறைவேற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.
பா.ஜ.க அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
குஜராத்தைப் போல் பாரதிய ஜனதாவின் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் என்பது தனது விருப்பம் என்றும், 1967ம் ஆண்டு செய்த தவறை தமிழக மக்கள் மீண்டும் செய்யக்கூடாது எனவும் தெரிவித்தார்.
துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில் நிறைவுரை ஆற்றிய சோ. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இளையராஜா ஆன்லைன் டிவி, ராஜா எஃப்.எம்., துவக்கம்

சென்னை:
இளையராஜாவின் இசை ரசிகர்களுக்காக, இளையராஜா ஆன் லைன் டிவி மற்றும் ராஜா எஃப்.எம்., ஆகியவை இந்தப் பொங்கல் நாளில் துவங்கப் பட்டன.
 
இசைஞானி இளையராஜாவின் பொங்கல் பிரத்யேக பேட்டியை இளையராஜா டிவி யில் www.ilaiyaraaja.tv என்ற இணையதளத்தில் பார்த்தும், இளையராஜா ரேடியோ வில் www.raajafm.com என்ற இணையதளத்தில் கேட்டும் மகிழலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த இணையத்தில், இசைஞானி ரசிகர்களுக்கு பொங்கல் திரு நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார் மேலும், ரசிகர்களுக்கு இன்டர்நெட் டிவி, ரேடியோ மற்றும் டிஜிட்டல் ஸ்டோர்ஸ் தொடங்குவது தொடர்பாக வெளியிடும் அறிக்கை ஒன்றும் அதில் வெளியிடப்பட்டிருந்தது.

 

ஜல்லிக்கட்டு தடை விஷயத்தின் உண்மை நிலை உங்களுக்கே தெரியும் ! : பொன்.இராதாகிருஷ்ணன்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுக்க மறுத்தது உச்ச நீதிமன்றம். இதனால் தென் மாவட்டங்களில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் நேற்று நடை பெற்ற ரயில்வே மேம்பால இணைப்புப் பால திட்டப் பணி களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனிடம் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கருத்து கேட்டனர். 

அதற்க்கு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது :-
ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசு மீது பலரும் விமர்சனம் செய்கிறார்கள். ஜல்லிக்கட்டு விஷயத்தின் உண்மை நிலை என்னவென்று பொது மக்களாகிய உங்களுக்கும், ஜல்லிக்கட்டு விளையாட்டு வீரர்களுக்கும் தெரியும் என அவர் கூறினார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஒட்டுமொத்தமாய் தடை கிடைக்க தமிழகத்தில் சில அமைப்புகள் முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக மீனவர்களை விடுதலை செய்த இலங்கை அதிபர் !

 
எல்லையை கடந்து அத்துமீறி மீன் பிடிக்கின்றனர் என கூறி இலங்கை கப்பற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 55 தமிழக மீனவர்கள் பொங்கல் பண்டிகையையட்டி நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை அடுத்து நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுவிக்க விடுவிக்க கூறி இலங்கை நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று உத்தரவிட்டுள்ளார்