Home Blog Page 59

தாம்பரம் – செங்கோட்டை தீபாவளி சிறப்பு ரயில்… நாளை தவற விட்டுடாதீங்க!

railway news - 2026
#image_title

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவையாக, தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு ரயில் எண் 06013 / 6014 இயக்கப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை நாளை மாலை தாம்பரத்தில் புறப்பட்டு, சனிக்கிழமை காலை செங்கோட்டைக்கு நேர் வழியில் வந்து சேரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முன்பதிவு செய்யும் வகையிலான 11 இரண்டாம் வகுப்பு அமரும் பெட்டிகள், ஒரு குளிர்சாதன பெட்டி, நான்கு முன்பதிவில்லா அமரும் பொதுப்பெட்டிகளுடன் கூடிய 18 பெட்டி வண்டி. இதனால் தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பின் படி, வண்டி எண் 06013 – அக்டோபர் 17ம் தேதி வெள்ளிக்கிழமை தாம்பரத்தில் இரவு 7.30க்குப் புறப்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல்,  மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு மறு நாள் காலை 7.3க்கு வந்து சேரும். 

அதுபோல், வண்டி எண் 06014 அக்டோபர் 20ம் தேதி திங்கள் கிழமை இரவு 8.45க்கு செங்கோட்டையில் புறப்பட்டு, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக மறுநாள் செவ்வாய்க் கிழமை காலை 9:45க்கு தாம்பரம் சென்றடைகிறது.

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் நன்றி

செங்கோட்டைக்கு தாம்பரத்திலிருந்தும் தாம்பரத்திற்கு செங்கோட்டையிலிருந்தும் தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க ஆணை பிறப்பித்த தெற்கு ரயில்வே அதிகாரிகள் அனைவருக்கும் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் மனமார்ந்த நன்றிகளையும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றனர். இதற்காக உதவிய பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் நிர்வாகிகள், தென்காசி விருதுநகர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் இனிய நன்றி கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
07/10/25 அன்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் தெற்கு ரயில்வே அதிகாரிகள் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய கீழ்கண்ட மின்னஞ்சல் கடிதம்தான் தீபாவளி சிறப்பு ரயிலை பெற முக்கிய காரணியாக அமைந்தது என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்த ரயில் அறிவிக்கப்பட்டு செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே ஏசி பெட்டி முன்பதிவு நிறைவடைந்தது. அடுத்த சில நிமிடங்களில் அமரும் பெட்டிகளின் முன்பதிவும் முழுமையாக நிறைவடைந்து காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது.

பட்டாசுகளை விபத்தில்லாமல் பயன்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரம்!

thiruchuzhi fireworks awareness program - 2026

திருச்சுழியில் பட்டாசுகளை விபத்தில்லாமல் பயன்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

விருதுநகர், காரியாபட்டியில் பட்டாசுகளை பாதுகாப்பாக பயன்படுத்த வலியுறுத்து பள்ளி மாணவர்கள், மற்றும் பொது மக்களிடம் பிரச்சாரம்
செய்யப் பட்டது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டிகை யை முன்னிட்டு, பட்டாசுகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடை பெற்றது.

தமிழ் பாடி அரசு மேல்நிலைப்பள்ளி அல்லி முத்து நாடார் நர்சரி பிரைமரி பள்ளி மற்றும் பேருந்து நிலையம், மற்றும் பொது நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

குடிசைb பகுதியில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து திறந்த வெளிப் பகுதியில் பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் , எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் உடனையாக தண்ணீர் ஊற்றி அனைக்க வேண்டும். பட்டாசுகளை டின் பாட்டில்களில் வைத்து வெடிக்கg கூடாது, பட்டாசு வெடிக்கும் போது இறுக்கமான உடைகள் அணிய வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை உடனடியாக அகற்றி விட வேண்டும், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அருகில் இருந்து கண்காணிக் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாணவர்களுக்கும், பொது மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது

நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வீரர்கள் பிரச்சாரம் செய்தனர்.

மேலக்கால் காளியம்மன் கோவில் திருவிழா; முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்!

melakkal mari amman temple mulaippari - 2026

சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது திருவிழாவில் சுமார் 600க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து மேலக்கால் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக வந்து காளியம்மன் கோவிலை வந்தடைந்தனர்

பின்னர் கோவில் முன்பு வைத்து கும்மி பாட்டு பாடினர் தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது இன்று காலை கோவிலில் இருந்து வைகை ஆற்றிற்கு ஊர்வலமாக சென்று முளைப்பாரியை கரைத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர் முளைப்பாரியுடன் பொதுமக்கள் மஞ்சள் நீராடியும் பல்வேறு வேஷங்கள் போட்டும் ஊர்வலத்தில் சென்றனர்

திருவிழாவில் மேலக் கால் மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை மேலக்கால் கிராம பொதுமக்கள் கிராம கமிட்டியாளர்கள் செய்திருந்தனர் இதே போல் விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது திருவிழாவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்

தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது விக்கிரமங்கலம் மற்றும் எட்டூர் கிராம பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்

கரூரில் சுயசார்பு பாரத சங்கல்ப நாள்!

karur bjp swadeshi day - 2026

பாரதிய ஜனதா கட்சி இன்றைய தினம் நாடு முழுவதும் சுயசார்பு பாரதம் சங்கல்பம் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கரூர் மத்திய நகரம், வாக்கு சாவடி எண் 117 ல் கரூர் மாவட்ட தலைவர் V.V. செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் வீடு தோறும் சுதேசி எனது பெருமை, சுதேசி பொருள்களை பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் பொறுப்பாளர், மாவட்ட துணை தலைவர் சக்திவேல் முருகன் முன்னிலை வைத்தார்.

மாவட்டச் செயலாளர்கள் முருகேசன், வெங்கடாசலம், கரூர் மத்திய மாநகரத் தலைவர் சரண்ராஜ் மற்றும் நகர, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

‘ஜனசேவா டிரஸ்ட்’ சார்பில் தீபாவளி புத்தாடைகள் வழங்கல்!

janaseva trust free deepavali distributions - 2026

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஜனசேவா டிரஸ்ட் சார்பில் தீபாவளி புத்தாடை வழங்கல் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா பாஜக மாவட்ட தலைவா் ஆனந்தன் அய்யாசாமி பயனாளிகளுக்கு வழங்கினர்.

செங்கோட்டை வல்லம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து செங்கோட்டை ஜனசேவா டிரஸ்ட் சார்பில் ஏழை, எளிய முதியோர்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது.

செங்கோட்டை நகரில் ஜனசேவா டிரஸ்ட் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. கொரோனா காலம் தொட்டு கபசுர குடிநீர், ஆறு துாய்மை படுத்துதல், இரத்த தானம் வழங்கல் உள்பட பல்வேறு சமூகநல பணிகளைச் செய்து வருகிறது. அதேபோல் கடந்த 5 வருடங்களாக ஏழை,எளிய ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு தீபாவளி பண்டிகை காலங்களில் இலவச வேஷ்டி, சேலை வழங்கி வருகிறது.

இந்தாண்டு இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஜனசேவா டிரஸ்ட் பொருளாளா் டாக்டர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். டிரஸ்ட் கௌரவ ஆலோசகர் ஆசிரியா் முருகன் முன்னிலை வகித்தார். டிரஸ்ட் நிறுவனா் சமூக சேவகர் நாணயம் கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

டிரஸ்ட் சட்ட ஆலோசகர் வழக்கறிஞா் சுபசேகர், ஸ்ரீ நர்சரி பள்ளி முதல்வர் மீனாகுமாரி, டிரஸ்ட் செயலாளா் ஐயப்பன் 14வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் (எ)சுதன் சமூக ஆர்வலா் ஹரிஹரகிருஷ்ணய்யர் பாஜக மாவட்ட மகளிரணி செயலாளா் ரேவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.

நிகழச்சிக்கு சிறப்பு விருந்தினராக கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா, வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வேஷ்டி, சேலை வழங்கி வாழ்த்தி பேசினா்.

நிறைவாக செங்கோட்டை நகராட்சி 24 வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் செண்பகராஜன் நன்றி கூறினார்.

IND Vs WI Test: இரண்டாம் டெஸ்டையும் வென்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!

shumbam gill test series cup - 2026

இந்தியா – மே.இ. தீவுகள் அணிகளுக்கு இடையிலான  இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று, இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. 

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

(இடம்: டெல்லி; சுருக்கமான ஸ்கோர்: இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் -518/5 டிக்ளேர், இரண்டாவது இன்னிங்க்ஸ் – 124/3 ; மேற்கு இந்திய தீவுகள் முதல் இன்னிங்க்ஸ் – 248, இரண்டாவது இன்னிங்க்ஸ் –  390) 

போட்டியின் முதல் நாள் முழுக்க முழுக்க இந்திய அணியின் தினம். முதல் நாள் முடிவில் எடுத்த இரண்டு விக்கட் இழப்பிற்கு 318 ரன் என்பது தரமான ஸ்கோர். ஜெய்ஸ்வாலின் 173 ரன் ஒரு தவறான ஷாட் இல்லாத ஸ்கோர். ராகுல் விரைவாக அவுட் ஆனதால் சாய் சுதர்ஷன் சீக்கிரமாகவே விளையாட வந்து விட்டார். இரண்டே முக்கால் மணி நேரம், 57 ஓவர்கள் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து விளையாடி 87 ரன்கள் எடுத்தார். அவர் மூன்று தவறான ஷாட்டுகள் விளையாடினார். முதல் ஷாட்டில் மே.இ. தீவுகள் ஒரு கேட்சை கோட்டைவிட்டது. மூன்றாவது தவறான ஷாட்டில் அவர் ஆட்டமிழந்தார். 

மே.இ. தீவுகள் பந்துவீச்சில் விசேஷமாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர்களுடைய பந்துவீச்சில் அவர்கள் ஒரு எக்ஸ்ட்ரா கூட கொடுக்கவில்லை. ஆனால் ரன்னைத் தடுக்கும் வகையிலோ, அல்லது, விக்கட் எடுக்கும் வகையிலோ அவர்கள் பந்து வீசவில்லை. எனவே இந்திய அணி மேலும் ரன் எடுக்க வசதியாக அமைந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில், இந்தியா விரைவாக இரு விக்கெட்களை இழந்தது. என்றாலும் இரண்டாம் நாள் ஆட்டத்திலும் இந்திய அணி திறமையாக விளையாடியது. நாளின் தொடக்கத்தில் நிச்சயமாக இரட்டைச் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னிற்கு ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் நிதீஷ் குமாருக்கு இன்று பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் 43 ரன் கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில் ஷுப்மன் கில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். அடுத்த மட்டையாளர் துருவ் ஜுரல் 44 ரன்னில் இருக்கும்போது ரோஸ்டன் சேஸ் பந்தில் போல்ட் அவுட் ஆனார். அச்சமயத்தில் கில் இந்திய அணியின் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். மொத்தத்தில் இன்று, இந்திய அணி 44.2 ஓவர் விளையாடி 200 ரன்கள் சேர்த்தது.

(இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 134.2 ஓவர்களில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 518 டிக்ளேர்டு; கே.எல். ராகுல் 38, யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 175, சாய் சுதர்ஷன் 87, ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 129, நிதீஷ்குமார் ரெட்ட் ஜோமல் வாரிகன் 3/98, ரோஸ்டன் சேஸ் 1/83) 

இதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸைத் தொடங்கிய மே.இ. தீவுகள் அணி பும்ரா மற்றும் சிராஜ் ஓவர்களை நன்கு சமாளித்தனர். ஆனால் ஜதேஜா பந்துவீச வந்ததும் முதல் விக்கட் விழுந்தது. இரண்டாவது விக்கட்டிற்கு சந்தரபாலும் அதனாசேயும் 50 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். பின்னர் சந்தரபால் மற்றும் ரோஸ்டன் சேஸ் இருவரும் ஜதேஜாவின் சுழலில் ஆட்டமிழந்தனர். குல்தீப் தன் பங்கிற்கு அதனாசேயின் விக்கட்டை வீழ்த்தினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மே.இ. தீவுகள் அணி 43 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 140 ரன் எடுத்திருந்தது. ஃபாலோ ஆனைத் தவிர்க்க அந்த அணி இன்னமும் 179 ரன்கள் எடுக்கவேண்டும். 

மே.இ. தீவுகள் அணி முதல் இன்னிங்க்ஸ் (43 ஓவர்களில் 140/4, ஜான் கேம்ப்பெல் 10, சந்த்ரபால் 34, அதனசே 41, ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 31, ரோஸ்டன் சேஸ் பூஜ்யம், டெவின் இம்ல்ச் ஆட்டமிழக்காமல் 14, ஜதேஜா 3/37, குல்தீப் யாதவ் 1/45)

இந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நடுத்தர வரிசை ஆட்டக்காரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்ததால், அந்த அணி 248க்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து, ஃபாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆட்டக்காரர்கள் இம்முறை சிறப்பாக நின்று ஆடினார்கள். சந்தர்பால், அதனாஸ் என இரு தொடக்க வரிசை ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து 35க்கு 2 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்து 3வது விக்கெட்டுக்கு 177 ரன்கள் பாட்னர்ஷிப் போட்டு,  212க்கு 3 என்ற நிலை வரை அழைத்து வந்தனர் காம்பெல், ஹோப் இருவரும்.  காம்பெல் 115 ரன்னும் ஹோப் 103 ரன்னும் எடுத்தனர். அதன் பின்னர் கேப்டன் சேஸ் 40 ரன்னும் கிரீஸ் 50 ரன்னும் எடுத்தனர். கடைசி விக்கெட்டுக்கு நின்று நிதானித்து விளையாடி 79 ரன் பார்ட்னர்ஷிப் போட்டு சீல்ஸ் 32 ரன் எடுத்து கை கொடுத்தார். இதனால் அந்த அணி 390க்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 

இதன் பின்னர் தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடத் தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன் எடுத்திருந்தது இந்திய அணி.

நான்காம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு போட்டிகளிலும் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. 

இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் இரு இன்னிங்க்ஸிலும் சேர்த்து (5/80, 3/104) 8 விக்கெட்கள் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர் நாயகன் விருது ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.

செங்கோட்டையில் ஆர்எஸ்எஸ்., நூற்றாண்டு விழா!

rss centenary in sngottai - 2026

விஜயதசமி அன்று தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு, அக்.12 ஞாயிறு மாலை, செங்கோட்டை பூத்திரம் தெரு நாகம்மன் கோவில் அருகில் வைத்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பணிநிறைவு பெற்ற சிஆர்பிஎப் கண்காணிப்பாளா் நடராஜன் தலைமை தாங்கினார். எஸ்கே.சங்கரன் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி கோட்ட பொறுப்பாளா் சிவா பஞ்ச பரிவர்த்தனை குறித்து விளக்கினார்.

அதில் குடும்ப நலன், சமுதாய நலன் மற்றும் கட்டமைப்பு, சுற்றுச்சூழல் இயற்கை வளம், ஆறு, குளம், ஏரி பாதுகாத்தல், குடிமக்கள் கடமை, சுதேசிய பொருட்கள் பயன்பாடு மற்றும் ஆதரவு அளித்தல் குறித்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் ஏராளமான ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினா்கள் சீருடை அணிந்து கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை செங்கோட்டை நகரச் செயலாளா் அயோத்தி முருகேசன் சிறப்பாக செய்திருந்தார்.

‘தாயின் மடியில்’ அறக்கட்டளை சார்பில் எளியோருக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கல்!

thayin madiyil trust free distributions function - 2026

செங்கோட்டையில் அக்.12 ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தாயின் மடியில் அறக்கட்டளை சார்பில் 6ஆம் ஆண்டு தீபாவளி புத்தாடைகள் எம்எல்ஏ., கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா வழங்கினார்.

செங்கோட்டை தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை சார்பில் கொரோனா பெருந்தொற்று காலம் தொட்டு ஏழை, எளிய ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இருப்பிடம் தேடி உணவு வழங்கி சேவை செய்தும் ஆண்டுதோறும் ஏழை,எளிய ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேஷ்டி, சேலை வழங்கி வருகிறது.

6ஆம் ஆண்டு தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ஸ்ரீஜெயேந்தரா மெட்ரிக் பள்ளி நிர்வாகி ராணி ராம்மோகன் தலைமை தாங்கினார். பிஎல்எம் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிர்வாகி பிரபாமுரளி முன்னிலை வகித்தார். குற்றாலம் பராசக்தி வித்யாலயா ஆசிரியை ராஜகுமாரி சக்திவேல் அனைவரையும் வரவேற்று பேசினார்.

திருக்குற்றாலம் ஐந்தருவி ஸ்ரீசுவாமி விவேகானந்தா ஆஸ்ரம ஸ்தாபகர் ஸ்ரீமத் சுவாமி அகிலானந்த மஹராஜ், ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் ஸ்ரீஆத்மப்ரியா மாதாஜி ஆகியோர் ஆசியுரை வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி (எ)குட்டியப்பா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் பாஜக மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலாளா் மருதுபாண்டியன், விஜிசி. மாநில பொதுச்செயலாளா் குமரேசன், பசிபோக்கும் தென்பொதிகை அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளா் மாரியப்பன், பெரியபிள்ளைவலசை பஞ்சாயத்து தலைவா் வேல்சாமி, கட்டளைகுடியிருப்பு பஞ்சாயத்து தலைவா் முத்துப்பாண்டி, பணிநிறைவு பெற்ற வேளாண் துணை அலுவலா் ஷேக்முகைதீன், சீனியா் ஹோம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுகன்யா, வழக்கறிஞா் கணேசபாண்டியன், முருகன், சங்கர்ரவி ஸ்தபதியார், ஹரிஹரகிருஷ்ண்ணயர், பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிங்கப்பூர்தங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முடிவில் தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை நிறுவனா் கோமதிநாயகம் நன்றி கூறினார்.

முன்னதாக செங்கோட்டை நகராட்சி , புதுார் பேரூராட்சி, பெரியபிள்ளைவலசை, கற்குடி உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியம் துாய்மை பணியாளா்கள் அனைவருக்கும் மதிய உணவும், இலவச வேஷ்டி சேலையும் வழங்கப்பட்டது.

‘ஓஹோ’ என உயரத்தில் ‘ஸோஹோ’; அர்த்தம் கற்பித்த ‘அரட்டை’!

arattai zoho app - 2026

ஸோஹோ Zoho – நிறுவனம் அறிமுகப்படுத்திய மெசேஜிங் ஆப் – அரட்டை – என்ற பிராண்ட் பெயர் இப்போது  நிலைபெறத் தொடங்கிவிட்டது. இதென்ன பெயர் என்று பாரதத்தின் பிற மாநில மக்கள் சிலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பழகப் பழக ஒரு சொல் பலருடைய மனத்திலும் நின்று விடும் என்பதற்கு ஏற்ப ஒரு தமிழ்ச் சொல் இன்று பல மொழிகளில் அந்த அந்த உள்ளூர் மொழிகளின் அர்த்தத்துடன் சென்று அடைந்திருக்கிறது. 

பிரதமர் நரேந்திர மோடி, சுதேசி மயத்தை வலியுறுத்தி உள்ளூர் பொருள்களையே பயன்படுத்துங்கள் என்று கோரியிருந்தார். அதே நேரம் தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில், நான் அரட்டையை டவுன்லோட் செய்தேன் என்று பதிவிட்டார். அதனையொட்டி,  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தாமும் அரட்டையை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார். இந்நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட சிலரும்  உள்நாட்டில் தயாரான மென்பொருள்களையே பயன்படுத்துவதாகக்  கூறி சோஹோ நிறுவனத்தின் மெயில் உள்ளிட்டவற்றை தாங்கள் பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.

இதன் பின்னணியில் அமெரிக்காவின் அண்மைக்கால வர்த்தகப் போரும், அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சும் இருந்தது. இந்தியாவை வீழ்ந்த பொருளாதாரம் என்று அவர் கருத்துரைத்ததும், இந்தியா மீது 50 சத வரி விதித்ததுடன், அதற்குக் காரணமாக உக்ரைன் போர் நீடிப்பதற்கு, இந்தியாதான் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி அதன் பொருளாதாரத்துக்கு உதவுகிறது என்றும் குறிப்பிட்டவை, இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவில் அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணியுங்கள் என்ற சுதேசிய கோஷம் மக்களிடம் எழுந்தது.

இந்நிலையில் அது மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள சமூகத் தளம், மென்பொருள்களிலும் எதிரொலித்தது. வேறு மாற்று இல்லாத சூழலில் பேஸ்புக், யுடியூப் போன்றவற்றை பயன்படுத்தி வரும் இந்தியர்கள், தங்களது அன்றாட பயன்பாட்டு மெசேஜிங் ஆப் வாட்ஸப்புக்கு மாற்றாக அரட்டை எனும் செயலியை ஸோஹோ நிறுவனம் அறிமுகப் படுத்தியிருந்ததை அறிந்து, அதற்கு மாறத் தொடங்கினர். சுமார் 3 ஆண்டுகள் முன் தொடங்கப்பட்ட அரட்டை ஆப், 3 ஆயிரம் டவுன்லோட் என்ற நிலையில் இருந்து தினமும் மூன்று லட்சம் டவுன்லோட் எனும் அதிவேக தரவிறக்கத்துக்கு உள்ளாகி, இன்று ஒரு கோடி தரவிறக்கத்துக்கும் அதிகமாகச் சென்றிருக்கிறது.

அரட்டை செயலியில் வாட்ஸ் அப்பைக் காட்டிலும் மேலும் பல வசதிகள் இருப்பதால், அதன் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இது குறித்த தொழில்நுட்ப விவரங்களை பலரும் சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டு, அரட்டை செயலிக்கு மாறுமாறு விருப்பங்களைத் தெரிவித்தனர்.

இதனிடையே, அரட்டை செயலியை பிரதமர் மோடி தனது சமூகத் தளப் பக்கத்தில் குறிப்பிட்டு, அதை மேலும் பிரபலமாக்க வேண்டும் என்று சிலர் கருத்துகளை பதிவிட, அதற்கு ஸ்ரீதர் வேம்பு, இப்போதைக்கு வேண்டாம். நாங்களே இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் நாங்கள் முழுமையாக அரட்டையைத் தயார் செய்து வெளியில் கொண்டு வர திட்டமிட்டிருந்தோம். அதற்குள் அது இப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றிருக்கிறது – என்று குறிப்பிட்டார்.

மேலும், அரட்டை ஆப்புடன் ஸோஹோ பேமெண்ட்ஸ் எனும் பணம் செலுத்திப் பெறும் வசதியை விரைவில் இணைக்கவிருப்பதாகவும் மேலும் எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் எனும் தனிநபர் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அரட்டை எனும் தமிழ்ச் சொல்லை உலகம் கற்கட்டுமே!

#அரட்டை #Arattai ஆப் ப்ளேஸ்டோரில் ஒரு கோடி தரவிறக்கத்துக்கும் மேல் சென்றிருக்கிறது. பாரதத்தில் மட்டுமல்ல, சிங்கப்பூர் மற்றும், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் தரவிறக்கம் செய்யப்பட்டதில் முதலிடத்தில் உள்ளது.

அப்படியே ப்ளேஸ்டோரில் அரட்டை செயலிக்கான கருத்துகளில் பார்த்தால், பலரும் இந்தப் பெயர் வேண்டாம். வேறு புரியும் வகையில் உலகளாவிய பெயரில் கொண்டு வருக என்று கருத்திட்டிருக்கிறார்கள்.

இன்று நாம் காணும் பல தொழில்நுட்பப் பெயர்கள், நிறுவனப் பெயர்கள் இங்க்ளீஷில் இருப்பதைப் பார்க்கிறோம். இது தமிழகத்தில் இருந்து உருவான ஒரு செயலியின் பெயர் என்பதால் தமிழில் இருந்தாலென்ன? ஒரு தமிழ்ச் சொல்லைக் கற்றுக் கொள்ளட்டுமே! இட்லி வடை ஆப்பம் எல்லாம் தமிழில் பெயர் இருக்கிறது என்பதால் உண்ணாமல் இருக்கிறார்களா? அவை எல்லாம் வாயில் நுழைந்து வயிற்றிலும் நுழையவில்லையா என்ன?! மத்திய அரசு திட்டங்களை எல்லாம் யோஜனா யோஜனா என யோஜனை செய்து பெயரிட்டுப் போடும்போது, அவற்றை நாம் ஏற்காமலா இருக்கிறோம்?! என்ற கருத்துகளும் உலா வந்தன.

பிரதமர் மோடி தமிழுக்கான பிரசாரகராக உலகம் முழுதும் திருக்குறள், பாரதியின் பாடல்களை எடுத்துச் செல்கிறாரே..! மேலும் ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறாரே! ஒரு வார்த்தையைக் கற்று அதை பிரபலப் படுத்த முடியாதா என்ன?! வாட்ஸ் அப்? என்பதற்கும் மெசேஜிங் செயலுக்கும் என்ன நேரடித் தொடர்பு? அதை நாம் சரளமாகப் பாவிக்கவில்லையா!? அடிப்படித்தான் அரட்டை என்பதும்! என்ற விளக்கங்களும் பகிரப்பட்டன.

அரட்டை ஆப் குறித்த ஒரு சமூகத்தளப் பதிவு…

“அரட்டை” செயலியின் அம்சங்கள் மற்றும் அதை பயன்படுத்துவது எப்படி என்ற விவரங்கள்

அரட்டை.

இந்தியாவின் உள்நாட்டு மெசஞ்சர் செயலி – ஒரு விரிவான பார்வை

இந்தியா – வாட்ஸ்அப் போன்ற உலகளாவிய மெசஞ்சர் செயலிகளுக்குப் போட்டியாக, தமிழ்நாட்டில் “அரட்டை” என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்திய உள்நாட்டுச் செயலி பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. Zoho கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி, பயனர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளித்து, இந்திய பயனர்களுக்கென பிரத்யேக அம்சங்களைக் கொண்டுள்ளது. அரட்டையின் முக்கிய அம்சங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விரிவான வழிகாட்டி இதோ.

அரட்டையின் முக்கிய அம்சங்கள்.

ஒரு நவீன மெசஞ்சர் செயலியில் எதிர்பார்க்கப்படும் அனைத்து அடிப்படை வசதிகளுடன், சில தனித்துவமான அம்சங்களையும் அரட்டை கொண்டுள்ளது.

1. மெசேஜிங் மற்றும் அழைப்புகள்: பயனர்கள் தனிப்பட்ட மற்றும் குழு உரையாடல்களை மேற்கொள்ளலாம். இதில் டெக்ஸ்ட் மெசேஜ்கள், வாய்ஸ் நோட்ஸ், மற்றும் உயர்தர ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் அடங்கும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் தொடர்புகள் போன்ற பல்வேறு மீடியா கோப்புகளையும் பகிர முடியும்.

2. மேம்படுத்தப்பட்ட குழு அரட்டைகள் (Groups): அரட்டையில் 1000 உறுப்பினர்கள் வரை கொண்ட பெரிய குழுக்களை உருவாக்கலாம். இது பல செயலிகளை விட மிக அதிகம். பெரிய சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

3. சேனல்கள் (Channels): டெலிகிராம் செயலியைப் போலவே, அரட்டையிலும் “சேனல்கள்” அம்சம் உள்ளது. இதன் மூலம் ஒருவழித் தகவல்தொடர்பு மூலம் ஒரே நேரத்தில் பலருக்கு செய்திகளை அனுப்ப முடியும். செய்தி நிறுவனங்கள், உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் தங்கள் தகவல்களை சந்தாதாரர்களுக்கு பரப்புவதற்கு இது மிகவும் ஏற்றது.

4. ஒருங்கிணைந்த “மீட்டிங்ஸ்” (Meetings): அரட்டையின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, செயலியிலேயே உள்ள “மீட்டிங்ஸ்” வசதி. இதன் மூலம் பயனர்கள் பல பங்கேற்பாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ்களை திட்டமிடவும் நடத்தவும் முடியும். இதில் ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் ரெக்கார்டிங் போன்ற வசதிகளும் உள்ளன. இதனால், தனியாக ஒரு வீடியோ கான்பரன்சிங் செயலியின் தேவை இல்லை.

5. “பாக்கெட்” (Pocket) எனும் தனிப்பட்ட சேமிப்பு வசதி: “பாக்கெட்” என்ற தனித்துவமான அம்சத்தை அரட்டை கொண்டுள்ளது. இது செயலிக்குள் ஒரு தனிப்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் போல செயல்படுகிறது. பயனர்கள் தங்களுக்கு முக்கியமான செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற தகவல்களை தங்கள் பாக்கெட்டில் சேமித்து வைத்து, பின்னர் எளிதாக மீட்டெடுக்கலாம்.

6. ஸ்டேட்டஸ் (Status): பயனர்கள் தங்கள் தொடர்புகளுடன் 24 மணிநேரம் மட்டுமே இருக்கக்கூடிய தற்காலிக அப்டேட்களை “ஸ்டேட்டஸ்” மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

7. முழுமையான என்கிரிப்ஷன் (End-to-End Encryption): அரட்டை செயலி, பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து தனிப்பட்ட அரட்டைகள் மற்றும் அழைப்புகள் முழுமையாக என்கிரிப்ட் செய்யப்படுவதால், அனுப்புநர் மற்றும் பெறுநரைத் தவிர வேறு யாரும் அந்த உரையாடல்களைப் பார்க்கவோ கேட்கவோ முடியாது.

அரட்டையின் அம்சங்களை பயன்படுத்துவது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி

அரட்டை செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் அம்சங்களைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது.

தொடங்குவது எப்படி?

பதிவிறக்கம்: கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து “Arattai” செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

பதிவு: செயலியைத் திறந்து, உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும். சரிபார்ப்பதற்காக உங்களுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்.

சுயவிவரம் (Profile): உங்கள் பெயர் மற்றும் சுயவிவரப் படத்தைச் சேர்த்து உங்கள் சுயவிவரத்தை அமைக்கவும்.

முக்கிய அம்சங்களைப் பயன்படுத்துதல்:

செய்தி அனுப்புதல்: ஒருவரின் உரையாடல் பக்கத்தைத் திறந்து, டெக்ஸ்ட் பாக்ஸில் உங்கள் செய்தியைத் தட்டச்சு செய்யவும். மைக்ரோஃபோன் ஐகானைத் தட்டிப் பிடிப்பதன் மூலம் வாய்ஸ் நோட் அனுப்பலாம். மீடியா கோப்புகளைப் பகிர, அட்டாச்மென்ட் ஐகானைத் தட்டி, தேவையான கோப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.

அழைப்புகளை மேற்கொள்ளுதல்: உரையாடல் பக்கத்தின் மேலே உள்ள போன் அல்லது வீடியோ ஐகானைத் தட்டுவதன் மூலம் முறையே ஆடியோ அல்லது வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம்.

குழுவை உருவாக்குதல்:

“புதிய அரட்டை” ஐகானைத் தட்டவும்.

“புதிய குழு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

குழுவில் சேர்க்க விரும்பும் தொடர்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.

குழுவிற்கு ஒரு பெயர் மற்றும் விருப்பப்பட்டால் ஒரு படத்தையும் வைக்கவும்.

“உருவாக்கு” (Create) என்பதைக் கிளிக் செய்யவும்.

சேனலை உருவாக்குதல்:

“சேனல்கள்” பகுதிக்குச் செல்லவும்.

,”சேனலை உருவாக்கு” (Create Channel) பொத்தானைத் தட்டவும்.

உங்கள் சேனலுக்கு ஒரு பெயர், விளக்கம் மற்றும் ஒரு படத்தைக் கொடுக்கவும்.

அதன் பிறகு உங்கள் சந்தாதாரர்களுக்கு செய்திகளை அனுப்பத் தொடங்கலாம்.

“மீட்டிங்ஸ்” அம்சத்தைப் பயன்படுத்துதல்:

“மீட்டிங்ஸ்” பகுதிக்குச் செல்லவும்.

உடனடி மீட்டிங்கைத் தொடங்க, “மீட்டிங்கைத் தொடங்கு” (Start a Meeting) என்பதைத் தட்டவும்.

எதிர்கால மீட்டிங்கைத் திட்டமிட, “மீட்டிங்கைத் திட்டமிடு” (Schedule a Meeting) என்பதைத் தட்டி, தலைப்பு, தேதி, நேரம் மற்றும் பங்கேற்பாளர்கள் போன்ற விவரங்களை நிரப்பவும்.

பங்கேற்பாளர்கள் சேர்வதற்காக மீட்டிங் இணைப்பை (link) நீங்கள் பகிரலாம்.

“பாக்கெட்” அம்சத்தைப் பயன்படுத்துதல்:

நீங்கள் சேமிக்க விரும்பும் எந்தவொரு செய்தி அல்லது மீடியாவையும் நீண்ட நேரம் அழுத்தவும்.

“பகிர்” (Forward) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் தொடர்புப் பட்டியலிலிருந்து “எனது பாக்கெட்” (My Pocket) என்பதைத் தேர்ந்தெடுத்து அந்த உருப்படியைச் சேமிக்கவும்.

உங்கள் அரட்டைப் பட்டியலில் உள்ள “பாக்கெட்” உரையாடலைத் திறப்பதன் மூலம் நீங்கள் சேமித்த அனைத்தையும் அணுகலாம்.

ஸ்டேட்டஸ் அப்டேட் செய்தல்:

“ஸ்டேட்டஸ்” பகுதிக்குச் செல்லவும்.

“எனது ஸ்டேட்டஸில் சேர்” (Add to my status) பொத்தானைத் தட்டவும்.

நீங்கள் ஒரு டெக்ஸ்ட் ஸ்டேட்டஸை தட்டச்சு செய்யலாம் அல்லது உங்கள் கேலரியில் இருந்து புகைப்படம் அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்திற்கு உங்கள் தொடர்புகளுக்குத் தெரியும்.

பயனர் நட்பு இடைமுகம் மற்றும் வலுவான அம்சங்களுடன், பாதுகாப்பான மற்றும் அம்சம் நிறைந்த மெசேஜிங் அனுபவத்தை விரும்பும் இந்திய பயனர்களுக்கு அரட்டை ஒரு சிறந்த தேர்வாக விளங்குகிறது.

தே .ஜ .கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்-ஸ்ரீவிலியில் நயினார் பேட்டி..

1001001204 - 2026

வதந்தியை பொய்யாக்கி தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என இன்று
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் வந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திமுக கூட்டணி பலமாக உள்ளதால் அவர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள் என்ற வதந்தி தமிழகத்தில் பரவுகிறது. அதை பொய்யாக்கி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும், என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற கோசத்துடன் 2026ஐ சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை இன்று(அக்டோபர் 12) மதுரையில் தொடங்குகிறார். இதற்காக சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் பாஜக மாநில துணை தலைவர் கோபால்சாமி, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சுவாமி தரிசனத்திற்கு பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : தமிழக அரசின் முத்திரை சின்னமாக உள்ள ஆண்டாள் சந்நிதியில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என வேண்டினேன். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பாஜக சார்பில் நான் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் பிரச்சார பயணத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். பேரணி மதுரையில் தொடங்கினாலும் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து முறையாக இங்கிருந்தே எனது பயணத்தை தொடங்குகிறேன். கண்டிப்பாக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

அதிமுக மீது டிடிவி தினகரனுக்கு என்ன வெறுப்பு என தெரியவில்லை. என் மீதும் வெறுப்பாக தான் பேசினார்கள். இப்போது அமைதியாக உள்ளனர். அவர்களது சொந்த பிரச்சனைக்காக கட்சிகளைப் பற்றி தவறாக பேசுவது சரியாக இருக்காது என்பது எனது கருத்து. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். ஜனவரி மாதத்தில் கூட்டணி இறுதி வடிவத்தை எட்டும். திமுக கூட்டணி பலமாக உள்ளத அவர்கள்தான் ஆட்சி அமைப்பார்கள் என்கிற வதந்தி தமிழகத்தில் பரவி வருகிறது. அதை பொய்யாக்கி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும், என்றார். உடன் பாஜக மாநில துணைத்தலைவர் ராஜகோபால் Ex எம்எல்ஏ. பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரைராஜா மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்