வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
“வேயர் புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம் மேன்மேலும் மிக விளங்க…” என்று ஸ்ரீ வேதாந்த தேசிகனும், “இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்…” என்று ஸ்ரீ மணவாள மாமுனிகளும் “திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே!…” என்று வாழி திரு நாமத்திலும் திருவாடிப் பூரத்தை கொண்டாடுகிறார்கள்.
இன்றைய திருவாடிப்பூரத்தில் ஆண்டாள் குறித்து சில விஷயங்களை அனுபவிக்கலாம்.
நாச்சியார் திருமொழியை அனுபவிப்பதற்கு சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வது குறிப்பாக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மிக அவசியம்.
எம்பெருமான் ஒருவனே புருஷன் – ‘புருஷோத்தமன்’. மற்ற எல்லா ஜீவாத்மாக்கள் அவனுக்கு நாயகியே என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படை சித்தாந்தம். ஸ்ரீமத் ராமாயணத்தில் புலன்களை அடக்கிய ரிஷிகளும், முனிவர்களுமே ஸ்ரீராமர் மீதும் காதல் கொண்டார்கள். வால்மீகி ஸ்ரீராமர் அழகில் மோகித்துப் பேச முடியாமல் தவித்தார்.
ஸ்ரீராமருக்கே இப்படி என்றால் கண்ணன் பற்றிக் கேட்கவே வேண்டாம். மேகம், ஆறு,செடி, கொடி. மரங்கள் கூட கண்ணனிடம் மோகித்தது என்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
பக்தியில் பல தரம்(grade) இருக்கிறது. அதில் மிக உயர்ந்தது கோபிகைகள் செய்த பக்தி. அதற்குப் பெயர் பிரேமை இல்லை பரம பிரேமை ( Intense deep love ). இதைத் தான் ஆழ்வார்கள் பின்பற்றினார்கள்.
பெரியாழ்வார் யசோதையாக மாறி கண்ணனுக்குத் தாய் போலப் பிரேமை செய்தார். பெருமாளை நாயகனாக அடைய வேண்டும் என்று நம்மாழ்வார் ‘கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்’ என்று பராங்குச நாயகியாக உருகினாள். அதே போல் பரகால நாயகியாக திருமங்கை ஆழ்வார்.
ஆனால் இவர்கள் எல்லோரும் ஆண். அதனால் தங்களிடம் உள்ள ஆண்மைத் தன்மையை முதலில் அகற்றி(unlearn செய்து), பிறகு கோபிகையாகத் தங்களை (learn) பாவித்துக்கொண்டார்கள்.
ஆனால் ஆழ்வார்களில் நம் ஆண்டாளோ பிறவியிலேயே பெண். அவளுக்கு ‘unlearn’ செய்ய எதுவும் இல்லை. அதனால் கண்ணனைச் சுலபமாக, வேகமாக அணுக முடிந்தது.
கீதையில் கண்ணன் என்னிடத்தில் பக்தி செய்யும் முதல் அதிகாரி “ஸ்திரிகள்” என்று பதில் கூறுகிறான். அப்படிக் கூற காரணம் என்ன ? இதற்கு அபலை, அஞ்ஞானம் என்ற இரண்டு வார்த்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாச்சியார் திருமொழியின் முழுச் சாரத்தையும் இந்த இரண்டு வார்த்தைகளில் அடக்கிவிடலாம்.
’அபலை’ என்ற பிரயோகம் ஒரு பெண்ணுக்கு மட்டுமே பொருந்தும். ஆண்களை அப்படி அழைப்பதில்லை. ஆண்கள் எப்போதும் ஆண்மை என்ற பலம் உள்ளவர்களாகவே கருதப்படுகிறார்கள். பலம் இல்லாதவர்கள் பெண்கள் அதனால் அ-பலம் – அபலை என்கிறோம். இந்த அபலை என்ற தகுதி தான் கண்ணனை அணுக முதல் தகுதி.
அபலையாகக் கண்ணனை அணுகிய பெருமை ஆண்டாளையே சாரும்.
நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் மன்மதனை வழிபடுகிறாள். ஸ்ரீ வைஷ்ணவத்தில் பெருமாளைத் தவிர்த்து மற்ற தேவதைகளை எல்லாம் வழிபடும் வழக்கம் இல்லாத போது ஆண்டாள் அப்படிச் செய்யலாமா ? என்ற எண்ணம் நமக்குத் தோன்றாமல் இருப்பதில்லை. பெரியவாச்சான் பிள்ளை இதற்குப் பதில் கூறுகிறார்.
அயோத்தியில் ராமரைத் தவிர மற்றவை எதுவும் தெரியாத அந்த ஊர் மக்கள் இரவு பகலாக எல்லா தேவதாந்த்ர கோயிலுக்குச் செல்வார்கள்( வால்மீகி ராமாயணம்). காரணம் – ராமருடைய நலனுக்காக அங்கே வேண்டிக்கொள்கிறார்கள்.
ஞானம் இருப்பவர்கள் இப்படிச் செய்ய மாட்டார்கள். கலங்கிய ஞானமே பக்தி. அ-ஞானம் – அஞ்ஞானம். ஒரு தாய் தன் குழந்தையிடம் உள்ள பிரேமையினால் எது வேண்டும் என்றாலும் செய்வாள். ஜுரம் வந்தால் மந்திரித்த கயிற்றை கட்டுவாள். கண்மூடித்தனமாக எதையாவது தன் அஞ்ஞானத்தால் செய்வாள். அயோத்தி மக்கள் தேவதைகளை வேண்டிக்கொண்டது போல, ஆண்டாளும் மன்மதனைக் கொண்டாள் அஞ்ஞானத்தால்.
அயோத்தி மக்கள் ஸ்ரீராமரின் நலனுக்காக வேண்டிக்கொண்டார்கள், ஆனால் கண்ணன் நலம் வேண்டி ஆண்டாள் மன்மதனை வேண்டிக்கொள்ள வில்லையே ” கண்ணனுக்காக என்னை விதி’ என்று கூறுவது எப்படிக் கண்ணனின் நலம் வேண்டுதலில் வரும் என்ற சந்தேகம் எழலாம்.
இளைய பெருமாள் என்ற லக்ஷ்மணர் ஸ்ரீராமர், பிராட்டியுடன் காட்டுக்குச் சென்றார். ஸ்ரீராமருக்காகத் தன்னை விதித்துக்கொண்டு அவருக்குக் கைங்கரியம் செய்ய வேண்டும் என்று கூட சென்றார். ஸ்ரீராமர் நலம் வேண்டிச் சென்றார்!
அது போல இங்கே ஆண்டாள் ’ மன்மதன் காலில் விழுந்தாவது கேசவ நம்பியைக் கால் பிடிக்கும்’ கைங்கரியம் கிடைக்குமா என்று தவிக்கிறாள். அவ்வளவு intense deep love அதனால் வரும் அஞ்ஞானம்.
அனுமார் எப்பேர்ப்பட்ட ஸ்ரீராம பக்தர் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் வைகுண்டம் கூட வேண்டாம் என்றவர், சுந்தரக் காண்டத்தில் அவர் கைகளைக் கூப்பிக்கொண்டு ருத்திரன், யமன், வாயு என்று இந்தத் தேவதைகளிடம் சீதையைக் காட்டிக்கொடு என்று வேண்டிக்கொள்கிறார். அது போல ஆண்டாள் நாச்சியார் கண்ணனைக் காட்டிக்கொடு என்று மன்மதனை வேண்டிக்கொள்கிறாள்.
அனுமார், அயோத்தி வாசிகளுக்கு பெரியாழ்வார் தந்தையாகக் கிடைக்கவில்லை. ஆனால் ஆண்டாளுக்கு விஷ்ணுவைத் தன் சித்தத்தில் வைத்திருக்கும் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் தந்தை. பரத்துவத்தை நிர்ணயம் செய்தவர், அவர் மகள் ’விட்டுசித்தர் கோதை’ என்று தன்னை கூறிக்கொள்பவள், எப்படி மன்மதனை வேண்டலாமா ? என்றும் தோன்றும்.
பராங்குச நாயகியாக நம்மாழ்வார் கதறிவிட்டு கடைசியில் ’தெய்வங்காள் என் செய்வேன்?’ என்று மற்ற தெய்வங்களை பார்த்துக் கூறியது போல ஆண்டாளும் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று மன்மதன் காலில் விழுகிறாள். ஆண்டாளுக்கு பெரியாழ்வார் அப்பா என்றால் நம்மாழ்வார் பெரியப்பா!
இந்த தவிக்கும் வெளிப்பாடு அபலையாக அஞ்ஞானம் இருந்தால் மட்டுமே சாத்தியம். இதைப் புரிந்துகொண்டால் மட்டுமே நாச்சியார் திருமொழியை ஓர் அளவு புரிந்துகொள்ளலாம். இதைப் புரிந்துகொள்ள ஆண்டாளே அருள் புரிய வேண்டும்.
பிகு: அ- என்பது விஷ்ணுவைக் குறிக்கும். அ-பலை – விஷ்ணுவே பலம் என்றும், அ-ஞானம் விஷ்ணுவே ஞானம் என்றும் பொருள் கூறலாம்.
நீதித்துறையை தங்கள் போக்குக்கு வளைக்க திட்டமிட்டு செயல்படும் விபரீத முயற்சி இது என்றும், சாதீய வெறுப்புணர்வைத் தூண்டும் அவலம் நடக்கிறது, அதற்கு ஆதரவாய் ஆளும் வர்க்கம் செயல்படுகிறது, இது ஜனநாயகத்திற்கு மாபெரும் களங்கம் என்றும் கூறி, இதனை இந்து முன்னணி கடுமையாக கண்டிப்பதாக, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது தெரிவித்த குற்றச்சாட்டில் இந்து முன்னணி மதுரையில் நடத்திய முருக பக்தர்கள் மாநாடு நடத்த அனுமதி அளித்த உத்தரவை குறிப்பிட்டுள்ளார்.
அந்த வழக்கில் அரசு தரப்பு மற்றும் காவல்துறை தரப்பு வாதங்களையும்; இந்து முன்னணி வாதங்களையும் முழுமையாகக் கேட்டறிந்து ஜனநாயக கோட்பாடுகள் அடிப்படையில் மாநாடு நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்தது. அதன்படி இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் நீதிமன்ற உத்தரவு மற்றும் காவல்துறை, அரசு அதிகாரிகள் வழிகாட்டுதலை முறையாக செயல்படுத்தவும் பட்டது.
விதிகளைப் பின்பற்றி கட்டுக்கோப்பாக அந்த மாநாடு நடத்தபட்டது குறித்து அனைத்து ஊடகங்கள் மாத்திரமல்லாது பல்வேறு அமைப்புகளும் கூட பாராட்டுதல்களைப் பதிவு செய்தன. மாநாட்டில் கலந்து கொண்ட ஐந்து லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் அதற்கு சாட்சி.
இப்படி இருக்கையில் அந்த மாநாட்டை நடத்த அனுமதி அளித்த உத்தரவை மேற்கோள் காட்டி நீதியரசர்களை இழிவு படுத்தும் வழக்கறிஞர் திரு. வாஞ்சிநாதன் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் ஒய்வு பெற்ற சில நீதிபதிகள் மற்றும் திமுக; விசிக உட்பட்ட சில கட்சிகளுக்கும் இந்து முன்னணி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சமீபத்தில் மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் உத்தரவுகளுக்கு உள்நோக்கம் கற்பித்து சாதிய மற்றும் சமய சார்பாக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக அவதூறை சமூக ஊடகத்தில் பதிவிட்டும் அதையே உச்சநீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்ததாகவும் செய்திகள் வாயிலாக தெரியவருகிறது.
இது குறித்து நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களை நேரில் ஆஜராகி விளக்கம் கேட்ட நிலையில் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கவும் உத்திரவிட்டுள்ளதாக செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
அரசு தரப்பு மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டறிந்து நமது அரசியல் அமைப்பு சட்ட படி பிறப்பிக்கபட்ட உத்தரவுக்கு ஜாதி, சமய உள்நோக்கம் கற்பித்து அவதூறு பரப்பும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு ஆதரவாக அவர் அளித்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என்று 8 முன்னாள் நீதிபதிகள் கையெழுத்திட்ட பெட்டிஷன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
அதே சமயத்தில் வாஞ்சினாதனுக்கு ஆதரவு மனு பற்றி யாரும் என்னிடம் பேசவில்லை, நான் அந்த மனுவில் கையெழுத்திடவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதி கே.கே. சசிதரன் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் நீதிபதி கே.கே. சசிதரன் கையெழுத்தை மனுவில் போலியாக போட்டது எந்தளவு மோசமான சட்டவிரோத செயல் என்பதையும் வாஞ்சினாதனும் அவருக்கு ஆதரவு தெரிவிப்போர்களும் எப்படியானவர்கள் என்பதற்கு எடுத்துகாட்டாகும்.
அந்த வகையில் நீதிபதிகள் மீதான அவதூறு பரப்பும் பின்னணியில் திமுகவினர் செயல்படுகிறார்கள் என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலாது.
இதற்கு காரணம் சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுகவின் மூத்த அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு, கனிம வள கொள்ளை வழக்குகள் தீர்ப்பு தொடர்ந்து வர இருக்கின்றன. இந்நிலையில் அந்த வழக்குகளின் தீர்ப்பை முடக்க அல்லது நீதிதுறையை அச்சுறுத்த இதுபோன்ற அவதூறுகளை பின்புலத்தில் இருந்து திமுக தூண்டி வருகிறது என்றால் மிகையில்லை.
இதுபோல் அமைச்சராக இருந்த பொன்முடி இந்து மதத்தை பெண்களை இழிவுபடுத்திய குற்றச்சாட்டு மற்றும் கன்னியாகுமரி சர்ச் பிரச்சினையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர். இதுவும் திமுகவை எரிச்சலடைய செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நீதித்துறைக்கு எதிராக, நீதிபதிகள் குறித்து அவதூறு பரப்பிய அட்வகேட் வாஞ்சிநாதனுக்கு ஆதரவு என்ற பெயரில் ஒய்வு பெற்ற நீதிபதிகள் லாபி செய்வது நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.
மேலும் இதைப்போன்ற குற்றச்சாட்டை நீதிபதி புகழேந்தி மீதும் கம்யூனிஸ்ட் ஊடகமான வினவு மின் இதழ் வெளியிட்டுள்ளது, அந்த வகையில் திக, திமுக, கம்யூனிஸ்ட் போன்றவர்களின் விருப்பு வெறுப்புக்கு உடன்படாத நீதிபதிகளை அவதூறு கருத்துகளை பரப்பி மிரட்டி பணிய வைக்கும் முயற்சியாகவே வாஞ்சினாதன் போன்றோரின் செயல்களை பார்க்க வேண்டியுள்ளது.
மேலும் அட்வகேட் வாஞ்சிநாதன் நீதித்துறைக்கு எதிராக செயல்பட்டவர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தைத் தூண்டி அதனை கலவரமாக்கி 11 பேர் உயிழக்க காரணமாக இருந்தவர். அதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். மேலும் நீதித்துறைக்கு எதிராக செயல்பட்டதால் வழக்கறிஞராக இருக்கவே தகுதியற்றவர் என்பதை குறிப்பிட்டே இந்திய பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யபட்டவர். இதுமட்டுமால்லாம வாஞ்சிநாதன் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரியவருகிறது.
ஆகவே பொதுமக்களும் வழக்கறிஞர்கள் சமுதாயமும் இதுபோன்ற தவறானவர்களின் கருத்துகளை புறக்கணித்து அவர்களுக்கு எவ்விதமான ஆதரவையும் கொடுக்ககூடாது என்பதை இதன் மூலம் கேட்டுகொள்கிறோம். அதேபோல வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக கையெழுத்திட்ட ஒய்வு பெற்ற நீதிபதிகள் அரிபரந்தாமன், சந்துரு முதலானவர்கள் பகிரங்கமாக தேசவிரோத கம்யூனிஸ்ட் திராவிட கூட்டங்களில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை பார்க்கிறோம். இவ்வாறான சர்ச்சைகுரிய கருத்தினை கொண்ட இவர்கள் நீதிபதிகளாக பணியாற்றியபோது உள்நோக்கத்துடன் ஒருசார்பாக செயல்பட்டு இருக்கமாட்டார்கள் என்பதை எவ்வாறு ஏற்பது. எனவே இவர்கள் வழங்கிய தீர்ப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் செய்ய சாதி, சமயத்தை குறிப்பிட்டு கூறி நீதியரசர்களை இழிவுப்படுத்த்துவதை உச்ச நீதிமன்றம் கடுமையான விஷயமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
நீதிபதிகள் மீது அவதூறு பரப்பி நீதித்துறை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர பிளாக்மெயில் அரசியல் செய்யும் அட்வகேட் வாஞ்சிநாதன் மற்றும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஒய்வு பெற்ற நீதிபதிகள் மீது உச்ச நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து செல்ல கோலாகலமாக நடைபெற்றது.
கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ரெங்கமன்னாரை மணந்து கொண்டார்.
பெரியாழ்வாரின் அவதார விழாவான ஆனி சுவாதி திருவிழா மற்றும் பங்குனி திருக்கல்யாண விழாவில் செப்பு தேரோட்டமும், ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூர தேரோட்டமும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் 16 வண்டி சப்பரமும், 5ம் நாள் காலையில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு பெரியபெருமாள், ரெங்கமன்னார், திருவண்ணாமலை ஶ்ரீனிவாசபெருமாள், காட்டழகர் கோயில் சுந்தரராஜபெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளும் 5 கருட சேவை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 7-ம் நாள் இரவு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனித்திருக்கும் சயன சேவை உற்சவமும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ரங்கம் அழகர்கோவில் மங்கலம் பொருட்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் கங்கு கொண்டு வரப்பட்டது.இரவு ஆண்டாள் பூப்பல்லக்கிலும், ரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இரவு தேர் கடாட்சித்தல் வைபவம் நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு புஷ்பாஞ்சலியும், கண்ணாடி மாளிகையில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனமும் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் மஞ்சள் பட்டு உடுத்தியும், ரெங்கமன்னார் வெண்பட்டு உடுத்தியும் தனித்தனி தோளுக்கினியானியில் புறப்பாடாகி தேரில் எழுந்தருளினர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து செல்ல ரதவீதிகளில் ஆண்டாள் ரெங்கமன்னார் வலம் வந்து தரிசனம் கொடுத்தனர்.
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்? ஒரு நீதிபதிக்கு எதிராக இத்தனை முன்னாள் நீதி அரசர்களா ? ஏதோ சதித்திட்டம் இருக்கிறது!!
ஒரு நீதிபதி, ஒரு தீர்ப்பை கொடுத்துவிட்டால், அதைப் பற்றி யாரும் வாய் திறக்க கூடாது என்பது தற்போது பொது புத்தியாக இருக்கிறது .ஆனால் தாராளமாக தீர்ப்பை விமர்சிக்கலாம் . அது மட்டுமல்ல எங்களையும் விமர்சிக்கலாம்என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தவர் தமிழக நீதித்துறையில் கவனிக்கப்படும் நீதிபதிகளில் ஒருவராக இருக்கும் திரு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் .
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசராக பணிபுரிகிறார். மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவரிடம் நீங்கள் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து விமர்சிப்பதோடு “நான் மதரீதியாக ,சாதி ரீதியாக தீர்ப்புகள் வழங்கி வருவதாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறிவருகிறீர்கள். இது குறித்து தங்களின் தற்போதைய நிலை என்ன ? எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில் மதரீதியில் உள்ளதாக சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார் .
அதற்கு வாஞ்சிநாதன் உங்கள் குற்றச்சாட்டு எது தொடர்பானது என தெரியவில்லை அப்படி இருக்கும்போது இதற்கு எப்படி பதில் அளிக்க முடியும் நீங்கள் எழுத்துப்பூர்வமாக கூட கேள்வி எழுப்பினால் நான் எடுத்து பூர்வமாக பதில் அளிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் .
நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதன் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய விவகாரம் சூடு பிடித்துள்ளது .
தற்போது வாஞ்சிநாதனுக்கு ஆதரவாகவும், ஜி ஆர் சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராகவும் ஓய்வு பெற்ற நீதி அரசர்கள் சந்துரு, சிடி செல்வம் கலையரசன் சசிதரன் அரி பரந்தாமன் அக்பர் அலி விமலா எஸ் எஸ் சுந்தர் உள்ளிட்ட பலர் கடிதம் எழுதி இருக்கிறார்கள் .
ஜி ஆர் சுவாமிநாதன் அவர்களின் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை என்று வலியுறுத்தி திங்கள்கிழமை தமிழக முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படபோவதாக அறிவித்திருக்கிறார்கள் .
நீதி அரசர் ஜி ஆர் சுவாமிநாதன் உண்மையில் வலதுசாரிகளுக்கு ஆதரவானவர், குறிப்பிட்ட சாதி, இனங்களுக்கு ,ஆதரவானவர் என்று குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன்.
திருவாரூர் மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து வழக்கறிஞராக படித்து சென்னையில் திரு கண்ணன் என்ற மூத்த வழக்கறிஞரிடம் பணிபுரிந்தவர் . இந்த வழக்கறிஞர் கண்ணன் என்பவர்தான் பிற்காலத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணிபுரிந்தார் . முதன் முதலில் “நீதிபதியாக இருந்த காலத்தில் தனது சொத்துக்களை பகிரங்கமாக வெளியிட்ட முதல் நீதிபதி இவர் தான் .
திரு ஜி.ஆர்.சுவாமிநாதன் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற 7 வருட காலத்தில் சுமார் 1,03,685 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
நீதிபதி சந்துரு அவர்கள் 95,607 வழக்குக்கு தீர்ப்பு வழங்கியதை விட அதிகம் .
“வழக்கறிஞர்கள் மீது நீதிபதிகளின் கோபம் தற்காலிகமானது தான் வழக்கு முடிவில் நியாயத்தின் பக்கம் தீர்ப்பு இருக்கும் என்று சொன்னவர் ஜி ஆர் சுவாமிநாதன்.
” நீதிமன்றங்கள் நீதியின் கோவில்கள், நீதி அரசர்கள் ஒன்றும் கடவுள்கள் அல்ல ;நீதியே கடவுள் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னவர் .
இப்படி எல்லாம் சொன்ன நீதி அரசர் ஜி ஆர் சுவாமிநாதன் மீது ஒட்டுமொத்தமாக நீதித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் எதிர்ப்பதன் பின்னணியில் பல சந்தேகங்கள் எழுகிறது.
தாங்கள் விரும்பிய தீர்ப்புகளை வழங்கினால் அவரை நீதி காவலர் என்று சொல்லுவதும் ,நியாயத்தின் பக்கம் தீர்ப்பு வழங்கினால் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தவாதி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று அவதூறு பரப்புவதும் எந்த வகையில் நியாயம் ?
ஒருவர் வழக்கறிஞராக படித்து பணியாற்றி குறிப்பிட்ட சித்தாந்தம் உடைய கட்சிகளின் வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளராகி , அரசு வழக்கறிஞராகபணிபுரிந்து, பின்னர் நீதிபதிகளாக மாறிய பின்னரும் “உடை மாறினாலும் உணர்வில் கலந்த சித்தாந்தத்தின் பக்கம் இருந்து சிந்தையில் இருந்த சித்தாந்தத்தை தீர்ப்புகளாக வழங்கிய பெருமக்கள், பல தீர்ப்புகளை அரசுக்கு ஆதரவாக வழங்கிய நீதி பெருமக்களை நாடே அறியும் .
குறிப்பிட்ட பல வழக்குகளுக்கு நள்ளிரவில் நீதிமன்ற நீதிபதிகளின் வீட்டு கதவுகள் திறக்கப்படுவது, ஒரே இரவில் அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படுவது சாதாரண ஏழை குடிமக்கள் வழக்காடிகளுக்கு கிடைக்குமா என்றால் இல்லை என்பது நிதர்சன உண்மை .
நீதித்துறையையும் காவல்துறையையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆட்சியில் இருந்தவர்கள் அழுத்தங்களை கொடுத்து எப்படி நடத்தினார்கள் என்பதற்கு பல உதாரணங்களை நாம் சொல்ல முடியும்.
பிரேமானந்தா சுவாமி வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் கிறிஸ்தவ மத அதிகப்பற்று கொண்ட ஒருவர் . அப்பொழுது அந்தப் பெண் நீதிபதியின் மதம் குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை.
பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த திரு கண்ணன் அவர்கள் போல தற்பொழுது எத்தனை முன்னாள் என்னால் நீதிபதிகள் தங்களது சொத்து பட்டியலை வெளியிட்டார்கள்?அல்லதுவெளியிட விரும்புவார்கள்?
அப்படி அவர்கள் வெளியிடுவார்களே ஆனால் அவர்களை பெருமதிப்போடு வரவேற்பேன் . திரு ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக போர் குரல் எழுப்பும் முன்னாள் நீதியரசர்கள் தங்களது சொத்து பட்டியலை வெளியிடுவார்களா ?
ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக குரல் கொடுத்த முன்னாள் நீதி அரசர்கள் மீதும், அவர்கள் கொடுத்த தீர்ப்பின் மீதும் பல விமர்சனங்கள் இருந்தாலும் அது குறித்து எல்லாம் எனக்கு கோபம் இல்லை .
தமிழ்நாட்டில் தற்போது நடக்கக்கூடிய படுகொலைகள் போதை கலாச்சாரம் குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராக குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது , இயற்கை வளச்சுரண்டல்கள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், அதிகரித்து வரும் பாலியல் வக்கிரங்கள், என எவ்வளவோ நடப்பதை எல்லாம் தங்கள் கண்ணில் படாதது போல, காதுகளில் கேட்காதது போல வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்களே என்ற வருத்தத்தில் தான் இதை எழுதுகிறேன் .
சரி விஷயத்திற்கு வருகிறேன் .
நீதியரசர் ஜி ஆர் சாமிநாதன் உண்மையில் வலதுசாரி ஆதரவாளரா? ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவரா என்றால் இல்லை.
பல இடங்களில் கம்யூனிச சித்தாந்தங்களையும் ஈவேரா போன்றவர்களையும் குர்ஆன் பைபிள் போன்ற மத நூல் கருத்துக்களையும் உயர்வாக பேசி இருக்கிறார்.
பெருமாள் முருகன் என்கின்ற எழுத்தாளர்” மாதொருபாகன்” என்ற நூலை எழுதியது கொங்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் ஒரு பிரிவினர் குறித்து அவதூறாக நூல் எழுதுகிறார் .
பல்வேறு சாதி,சமூக அமைப்புகள் வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் பெருமாள் முருகனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி கடையடைப்பு என கொந்தளிப்பான நேரத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்2015 – ஜனவரி – 12ல் பெருமாள் முருகனை கூட்டத்திற்கு வரவைத்து ,DRO அவர்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறார் .
கூட்டத்தில் மாதொருபாகன் நூல் பிற்காலத்தில் அச்சிடக் கூடாது அப்படி அச்சிட்டாலும் திருச்செங்கோடு குறித்தும், குறிப்பிட்ட சமூக மக்கள் குறித்து அவதூறாக எழுதிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெறக்கூடாது . ஏற்கனவே அச்சிட்ட நூல்களை திரும்ப பெற வேண்டும் என்று கூறி கையெழுத்து பெருமாள் முருகைனிடம் வாங்கியது குறித்து பெருமாள் முருகன் இறந்துவிட்டான் என்று வருத்தத்தோடு பதிவு செய்த நேரத்தில் பெருமாள் முருகனுக்கு எதிரான நடவடிக்கை, கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது , சமாதான கூட்டம் என்கின்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து போல் அரசு நிர்வாகம் செயல்படக்கூடாது . அவருக்கு துப்பாக்கி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பெருமாள் முருகனுக்கு ஆதரவாக வழக்காடியது இந்த ஜி.ஆர் சுவாமிநாதன். பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நின்ற ஆ.ரா .வெங்கடாசலபதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் இவற்றை மறுக்க மாட்டார்கள் .
சேக் முகமது என்கின்ற யானை பாகன் “லலிதா “என்கின்ற யானையை வளர்க்கிறார் . வயதான யானை உடன் நலன் பாதிக்கப்படுகிறது . வனத்துறையினர் தனி நபர்கள் யானையை வளர்க்கக்கூடாது. லலிதா என்கின்ற யானை உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடிய போது, “லலிதா “என்ற யானையை சேக் முகமது என்ற பாகனிடமிருந்து பிரித்து செல்ல வேண்டாம்.பாகன் பராமரிப்பில் யானை இருக்க வேண்டும். 60 வயதாக இருக்கும் யானைக்கு காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு முறையாக மருத்துவங்கள் பார்க்க வேண்டும் .இனிவரும் காலங்களில் யானையை வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்தக்கூடாது முறையாக உணவு வழங்கி ஓய்வெடுக்க செய்ய வேண்டும். தனி நபர்கள் யானைகள் வளர்க்கக்கூடாது என்ற உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தார் .
“ஒரு நபர் இந்துவாக இருந்து இஸ்லாமியராக மதம் மாறி விடுகிறார். இந்துவாக இருந்தபோது இந்து பெண்மணியோடு திருமணம்; பின்னர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பிறகு இஸ்லாமிய பெண்மணியோடும் திருமணம் செய்கிறார். இஸ்லாமிய மத மனைவியோடுவாழ்ந்து கொண்டிருக்கும் போது இறந்து விடுகிறார் . இறந்த பிறகு இந்து முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று இந்து மதத்தை சார்ந்த மனைவி உரிமை கோருகிறார். இஸ்லாமிய மனைவி இஸ்லாமிய முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று உரிமை கோருகிறார். எந்த மத சம்பிரதாய முறையில் அடக்கம் செய்வது என்று உரிமை கோரக்கூடியவிஷயத்தில் ,இந்து மனைவி வீட்டில் இறந்த கணவரை வைத்து ஒரு குறிப்பிட்ட நேரம் வரை சடங்கு சம்பிரதாயங்கள் செய்து கொள்ளுங்கள்; பின்னர் இறந்த கணவர் உடலை இஸ்லாமிய மத மனைவியிடம் ஒப்படைத்து விடுங்கள் .இஸ்லாமிய மதப் பழக்கத்தின்படி அவர்கள் சடங்கு சம்பிரதாயங்கள் நடத்தி கொள்ளட்டும், அடக்கம் செய்து கொள்ளட்டும் என்று தீர்ப்பு கொடுத்தவரும் இவரே .
சவுக்கு சங்கர் விஷயத்தில் வழக்குப் பதிந்து விசாரணை செய்து ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கொடுத்த திரு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் தான் , திரு சவுக்கு சங்கர் நில மோசடி விசாரணை தொடர்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தார் .
மனுதாரர் எஃப் ஐ ஆர் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறவில்லை .ஜாமீன் மட்டுமே கேட்கிறார் .அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது எப்படி என புரிந்து கொள்ள முடியவில்லை .கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்க ஏன் மறுத்தது என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
சில கருத்துக்களை தெரிவித்ததற்காக சிலர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுவதை பார்க்கிறோம்.
போலீசார் தீய நோக்கத்துடன் முன்கூட்டியே செயல்படுவதை தடுக்க முடியாத சூழலில் நிலைமை படு மோசமாவதற்கு முன்னர் நீதித்துறை மாஜிஸ்திரேட் மற்றும் நீதிமன்றங்கள் தலையிட்டு தடுக்கலாம்.அதற்கு எளிதாக ரிமாண்டு செய்ய மறுக்கலாம் மனுதாரர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தால் அதனை வழங்கலாம்.
சில கருத்துக்களை சொன்னார் என்பதற்காக ஒருவர் மீது வழக்கு போடுவது என்பது சர்வாதிகார அணுகுமுறையின் அறிகுறி. யார் மீது வேண்டுமானாலும் வாய்மொழி விமர்சனம் இருக்கலாம் .இதில் விசாரணை என்பது ஒரு பொருளும் கைது என்பது முற்றிலும் வேறு மாதிரியானது தேவையில்லாமல் கைது செய்யக்கூடாது என்று பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் கூறுகின்றது என்றார். அதிகாரம் மிக்கவர்கள் தன்னிடம் பேசியதால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்று சொல்லி குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார் .
என்னை நீதிமன்ற அறையில் யாரும் சந்திக்க வர வேண்டாம்; நீதிமன்றத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்தவர் திரு ஜி ஆர் சுவாமிநாதன்.
வலதுசாரி இயக்கத்தை சார்ந்தவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் திரு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் தான் நாளை திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் போன்றவர்கள் அழைத்தாலும் அந்த கூட்டங்களில் கலந்து கொள்வேன் என்று தெரிவித்த கருத்தை லாவகமாக இவர்கள் மறந்து விடுகிறார்கள் .
தப்லிக் ஜமாத் அமைப்பு நடத்தியமாநாடுதான் கொரோனா நோய் பரவலுக்கு காரணம் என்று பல வெளிநாட்டைச் சார்ந்த இஸ்லாமிய மதத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த போது அவர்களுக்கு பிணைவழங்கியது இவரே.
ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட 70 வழக்குகளை ரத்து செய்தார் . கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்தவர் .
ஸ்ரீரங்கத்தில் பிராமணாள் ஹோட்டல் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் திராவிடர் கழக உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்தார்
ஜார்ஜ் பொன்னையா என்ற கிறிஸ்தவ பாதிரியார் ” திமுக ஆட்சிக்கு வந்தது நாங்கள் போட்ட பிச்சை . அமைச்சர் சேகரர் பாபு ,மனோ தங்கராஜ் போன்றவர்கள் சுசீந்திரம் கோவிலுக்குள் போனால் சட்டை இல்லாமல் போக வேண்டும், ஆனால் நாங்கள் சர்ச்சுக்கு போகும் போது கோட்டு சூட், டை அணிந்து செல்வோம். MRகாந்தி என்கின்ற எம்எல்ஏ பாரதமாதா மீது செருப்பு போட்டு நடக்க மாட்டாராம் ஆனால் பாரத மாதாவால் நாங்கள் அசிங்கங்களில் இருந்து பாதுகாக்க சாக்ஸ் ஷூ அணிந்து செல்வோம் என்று பேசியவுடன் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் . தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்று பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நீதிமன்றம் நாடிய போது கொரோனா வந்த சூழலில் 269,143,506(1) மற்றும் தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டப்பிரிவு 3-ன் கீழ் வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்தார்.மற்றபடி மத நம்பிக்கை சீர்குலைத்தல் இரு பிரிவினருடைய மோதல் உருவாக்குதல் பிரிவினை தூண்டுதல் 295 (ஏ), 153 (ஏ) மற்றும் 505 (2) இவற்றை ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்டு வெறும் காலுடன் நடப்பவர்களை கேலி செய்வது,இந்ததேசத்தைஅவமதிப்பது போன்ற வற்றை ஏற்றுக்கொள்ள இயலாது என்றார் .
திருநெல்வேலி தாமிரபரணிநதியில் கழிவு நீர் கலக்குகிறது என்று தாமிரபரணிநதியை பாதுகாக்க வேண்டும் என்று முத்தாலங்குறிச்சி காமராஜ் என்ற எழுத்தாளர் வழக்கு தாக்கல் செய்கிறார். வழக்கு விசாரணைக்கு வருகிறது . திரு ஜி ஆர் சுவாமிநாதன் புகழேந்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் Nov 11.2024 அன்று தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கை குறித்து நேரடியாக ஆய்வுக்கு செல்கிறார்கள் .
மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் நீதி அரசர்கள் ஆய்வுக்கு வருகிறார்கள் என்றவுடன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தற்காலிகமாக தூய்மைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் .
ஆய்வுக்கு சென்ற நீதி அரசர்களோ அங்கு செல்லாமல் மீனாட்சிபுரம் சிந்து பூந்துறை, சத்திரம் பொது குடியிருப்பு, குறுக்குத்துறை முருகன் கோவில் என்ற பகுதிகளுக்கு சென்று கழிவுநீர் கலப்பதை பார்வையிட்டு இராமயன்பட்டி தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ,யாரை ஏமாற்ற இப்படி எல்லாம் செய்கிறீர்கள்; தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கி வந்தனர்
இதேபோல தமிழக அரசு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம், கொத்தையம் அருகே வெடிக்காரன் வலசு”அரளிகுத்து குளம் “என்ற நீர் நிலையில் தமிழக அரசு சிப்காட் அமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்கிறது .
இரு விவசாயிகள் நீர் நிலையை பாதுகாக்க வேண்டும் அரளிகுத்து குளத்தை பாதுகாத்து இந்த பகுதி விவசாயத்திற்கு உதவி புரிய வேண்டும் என்று வழக்கு தொடுக்க, இதே நீதிபதிகள் நேரடியாக ” கள ஆய்வு-குள ஆய்வு” செய்கிறார்கள். உடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் பதிவுத்துறை ஐஜி அரசுத்துறை அதிகாரிகள் செல்கிறார்கள். கண்ணுக்கு முன்னால் தெரியும் நீர்நிலை அரளிக்குத்து குளத்தை தரிசு நிலம் என்று மாற்றப்பட்டது எப்படி?
பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்போது சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்யாமல் பொய்யாக ஆவணம் எப்படி தாக்கல் செய்தீர்கள் என்று மாவட்ட ஆட்சியரை கண்டித்து நீதிமன்றம் “அரசாங்கத்துடைய “சிப்காட் “திட்டத்திற்கு எதிரானது அல்ல ,அதே நேரத்தில் நீர் நிலையை பாதுகாக்க வேண்டியது அவசியம் இருக்கிறது. உடனடியாக அரளி குத்து குளத்தை தூர்வாரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் சரி செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய ” நீர்நிலை காவலர்கள்” இவர்கள் .
ஆறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பழனியில் புனிதமான வையாபுரி குளத்தில் ஆஸ்பத்திரி ஹோட்டல்கள் மற்றும் நகராட்சி கழிவுகள் எல்லாம் கலக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் வையாபுரி குளத்தை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பக்தர்கள் புனித நீராடும் வகையில் வையாபுரி குளத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் யாரும் சொல்ல முடியாத தைரியமான உத்தரவை பிறப்பித்தவர் திரு ஜி ஆர் சுவாமிநாதன் .
போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்த வழக்கு – டேவிட்சன் ஆசிர்வாதம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டிய போது அந்த வழக்கை முழுமையாக விசாரித்து பாஸ்போர்ட் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் காவல் ஆணையராக மதுரையில் இருந்து டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர் . பாஜகவின் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. அவர் இல்லையென்றால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது என்று கூறியவர் .
மதுரை மாவட்டம் உத்தபுரம் ஜாதி ரீதியான பிரச்சனை-பட்டியல் மக்களுக்கு எதிராகதீண்டாமை சுவர் கட்டியிருக்கிறார்கள். கோவிலுக்கு பட்டியல் மக்களை அனுமதிக்க வேண்டும். உத்தப்புரம் முத்தாலம்மன் கோவிலில் பட்டியல் மக்களை அனுமதிக்க வேண்டும் . இது இரண்டாவது வைக்கம் போராட்டம் என்று நீதியரசர் சந்துரு குறிப்பிட்டார்.அந்த சமயத்தில் அஸ்ரா கர்க் IPS மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தார் . சின்மயா சோமசுந்தரம், பொன் கருணாநிதி ஆவின் முன்னாள் மேலாளர் ஆதிமூலம் ஆகியோரோடு பட்டியல் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்ற நபர்களில் ஒருவன் நான் என்கின்ற அடிப்படையில் இந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் .
பட்டியல் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்ற பின்னர் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிராகமுத்தாலம்மன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது . பல ஆண்டு மூடப்பட்ட கோவில் திறக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட பிரிவினர் நீதிமன்றத்தை நாடும்போது” கோவிலை பூட்டி வைப்பது என்பது கடவுளை சிறையில் வைப்பதற்கு சமம் கோவில் திறக்கப்பட வேண்டும். வழிபாடு நடத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தீர்ப்பு கொடுத்தவர் திரு ஜி ஆர் சுவாமிநாதன். மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு வாகனங்களில் வருபவர்கள் பாஸ் குறித்து வழக்கு விசாரிக்கும் போது மற்ற கட்சி மாநாடுகளில் பங்கேற்பவர்களுக்கு இதுபோல் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறீர்களா ? அப்படி வண்டி வாகனங்களில் வருபவர்களை அனுமதிப்பது குறித்து காவல்துறை மதுரைக்கு வந்த பிறகு தேவையான விவரங்கள் கேட்கலாமே என்று கேட்டார் உடனே சங்கிகளின் முருகன் மாநாட்டிற்கு அனுமதி கொடுத்துவிட்டார் என்று அவதூறு கிளப்பியவர்களும் இவர்களே . சமீபத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சொல்லப்பட்ட தீர்ப்பில் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு முன்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு கருத்து கேட்டு அகற்றியிருக்கலாமே, அரசியல் கட்சிகளுக்கான ஜனநாயக மறுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னவர் திரு ஜி ஆர் சுவாமிநாதன்.
இயற்கையை பாதுகாப்பது, விலங்குகள் நலனில் அக்கறை, மதங்களைக் கடந்து மனிதத்தோடு தீர்ப்புவழங்குதல், மத மோதல் தடுப்பது, நாட்டுப்பற்று வெளிப்படுத்துவது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அடிபணிய மறுப்பது என நீதியின் பக்கம் நின்று தீர்ப்பு வழங்கிய “நீதி காவலரை” பதவியில் இருந்த போதும் , பதவிஓய்வின் பிறகும் சிந்தையில் இருந்த சித்தாந்தத்தை செயல்படுத்திய முன்னாள் நீதி அரசர்கள்GR சுவாமிநாதனுக்கு எதிராக வன்மத்தோடு மிரட்டும் தொணியில் அவதூறு கிளப்புவதில் ஏதோ சதித்திட்டம் இருப்பதாக சந்தேகிக்கிறேன் .
திராவிட கம்யூனிச இந்து மத வெறுப்பு என எண்ணம் கொண்டவர்களின் கூட்டங்களில் கலந்துகொண்டு பாரதப் பிரதமர் இந்து மத நம்பிக்கை தேச மதிப்பு மீது கொச்சைப்படுத்தல் என பேசிய பெருமக்கள் வாஞ்சிநாதன் என்ற வழக்கறிஞரே முன் முகமாக வைத்து செய்யும் அரசியல் , முன்னாள் நீதி அரசர்கள் மீதான மதிப்பை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கிறது . இவர்கள் நீதிபதியாக இருந்த போது எந்த எண்ணத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியிருப்பார்கள் என்று யோசிக்கத் தோன்றுகிறது .
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மதுரை ஆதீனம் குறித்து மற்றும் இந்து மதத்திற்கு எதிராக மட்டும் போராட்டம் நடத்துவதை முன்னெடுத்துச் செல்லும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவருக்கு ஆதரவாக பின்னணியில் இருப்பவர்கள் குறித்து மத்திய மாநில அரசுகள் சந்தேக கண் கொண்டு பார்க்க வேண்டும் .
நீதி அரசர் ஜி ஆர் சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்பால் பயனடைந்தவர்கள் மற்றும் நீதியின் பக்கம் நின்று வழக்காடிய வழக்கறிஞர்கள் , பதவியில் இருந்த முன்னாள் நீதி அரசர்கள் மற்றும் பொது மனிதர்கள் திரு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டாம். அதே நேரத்தில் ஜி ஆர் சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராக முன்னாள் நீதி அரசர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது கண்டனத்திற்குரியது என்று கூறாதது ;அநீதிக்கு மறைமுகமாக மௌனமாக இருந்து ஆதரவு தெரிவிப்பது போல் இருக்கிறது .
ஒரு நபரை எதிர்த்து இத்துணை பேர் குரல் கொடுப்பதிலிருந்து தெரிகிறது, ஏதோ விஷயத்தை மடைமாற்றம் செய்வதற்கு அரச ஆதரவுடன் இவர்கள் செயல் படுகிறார்களோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது.
திரு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு ஒரு சார்பாக உள்ளது. ஒரு சித்தாந்தக்காரர்களுக்கு ஆதரவாக உள்ளது. ஒரு ஜாதிக்காரர்களுக்கு ஆதரவாக உள்ளது என்பது போல திரு வாஞ்சிநாதன் வழக்கறிஞர் பேசுவாரே ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் இவரால் வழங்கப்பட்ட ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வழக்கு நியாயம் பெற்றவர்கள் எல்லாம் திரு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் சமூகத்தவரா அல்லது சித்தாந்தக்காரர்களா என்பதற்கு அவர்கள் விடை அளிக்க வேண்டும் .
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் . உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் வல்லவர் எல்லாம் நல்லவரானால் இல்லாதவனே பொல்லாதவனாம் பூமியிலே…. நன்மை தீமை என்பது என்ன பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே…. என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
‘மேலுக்கு பசுவைப் போலத் தோற்றமளித்தாலும் (பசுவைப் போல ‘அம்பா’ என்று கத்தினாலும்) உள்ளுக்குள் புலியைப் போன்ற கொடூர குணம் கொண்டிருப்பது’ என்ற பொருளில் இந்த நியாயத்தை எடுத்துக்காட்டுவார்கள்.
பொருள்: வெளியில் பசுவைப் போன்று அமைதியான முகத்தோடு சாது குணத்தைக் காட்டி, உள்ளே புலியின் கொடூரமான குணத்தை மறைத்திருப்பவரோடு நட்போ, பகையோ கூடாது. இரண்டுமே ஆபத்து.
நம்மிடம் யாராவது மிகப் பணிவோடு இருந்து, அதிகமாக நம்மைப் புகழ்ந்து, செயற்கையாக நடந்து கொண்டு, இனிமையாகப் பேசி, நட்பு பாராட்டினால், ஏதோ தீங்கு நடக்கப் போகிறது என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது இந்த நியாயம்.
மேலுக்கு சாதுவைப் போலவும், பரோபகாரியைப் போலவும் ரொம்ப நல்லவனாகவும் காட்டிக் கொள்வார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் அதற்கு மாறாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் வஞ்சிக்கும் எண்ணத்தோடு நண்பனாக நடிப்பார்கள். இது ‘கோமுக வ்யாக்ர நியாயம்’ காட்டும் பார்வை. அவர்களுடைய நைச்சியமான (நீச்சம்) பேச்சில் மயங்கி, அவர்களை நம்பி, அவர்களிடம் நெருங்கி, புலிக்கு பலி ஆவதோ, அல்லது புரிந்து கொண்டு தப்பி ஓடுவதோ நம் கையில் தான் இருக்கிறது. ஏமாற்றப்பட்டபின் வருந்தி என்ன பயன்? ஏன் இப்படி நடந்தது என்று அழுது என்ன பிரயோஜனம்?
மின்னுவதெல்லாம் பொன்னல்ல. வெள்ளையாக இருப்பதெல்லாம் பாலல்ல என்ற புரிதல் தேவை. விழிப்போடு இருக்க வேண்டும். இது இந்த நியாயம் புகட்டும் பாடம்.
புராணங்களில் புலிகள்:
மாய மான் வேடத்தில் வந்த மாரீசன் ராமனின் அம்புக்கு இரையானான். தெய்வ லீலையாக சீதாதேவி பேசிய கடுஞ்சொற்களைக் கேட்ட லட்சுமணன் அண்ணன் ஸ்ரீராமனைத் தேடிக் கொண்டு சென்றார். அந்த நேரத்தில் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தனியாக இருந்த சீதையை சிறைப்பிடிக்கும் நோக்கத்தில் ராவண அசுரன் பசுந்தோல் போர்த்திய புலியாக அவளைக் கவர்ந்து சென்றதை வால்மீகி மகரிஷி விளக்குகிறார்.
(வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், 46 வது சர்க்கம்)
பொருள்: ராவணன் மென்மையான காவி உடை, தலையில் சிகை, கையில் குடை, கால்களில் பாதணிகள், இடது தோளில் தொங்கிய தண்டம், கமண்டலம் ஆகியவற்றோடு சீதா தேவியை நெருங்கினான்.
“காஷாய தண்ட மாத்ரேண யதி: பூஜ்ய ந சம்சய:” என்பது உலகில் புழங்கும் வழக்கமான கூற்று. சாதுக்களின் அடையாளமான காஷாய உடையைப் பார்த்து சீதா தேவி ஏமாந்தாள். சுபமான வேடம் தரித்து வஞ்சிக்க வேண்டும் என்று வந்ததை வால்மீகி மகரிஷி, “த்ருணை: கூப இவாவ்ருத:” என்று குறிப்பிடுகிறார். ‘புல்லால் மூடப்பட்ட கிணறு போல’ என்று வஞ்சகத்தை வர்ணிக்கிறார்.
உண்மையில் புலி என்றுமே பசுவின் முகத்தை அணியாது. பசுவைப் போல ‘அம்பா’ என்று கத்தாது. பலவித முகமூடிகளை அணிவதும், வேடங்கள் தரிப்பதும், மோசங்கள் செய்வதும் மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான கலை. அப்படிப்பட்ட மனிதர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உபதேசமாக அளிப்பதே இந்த ‘கோமுக வயாக்ர’ நியாயத்தின் நோக்கம்.
வரலாற்றில் பசுந்தோல் போர்த்திய புலிகள்:
நாட்டுப் பிரிவினையின் போதும், ரஜாக்கர்களின் தாக்குதல் நேரத்திலும், காஷ்மீர் பண்டிதர்களைக் கொன்றழித்த வேளையிலும், பெங்கால் மற்றும் பஞ்சாப் பிரிவினைகளின் போதும் நேர்ந்த சோகக் கதைகள் இந்த நியாயத்தை நினைவூட்டுகின்றன.
அருகிலேயே வசித்து, கொடுக்கல் வாங்கல்ளில் ஈடுபட்டு, ‘அங்கிள் ஆன்ட்டி, சித்தப்பா, சித்தி, பாய் பெஹன்’ என்று அழைத்துக் கொண்டு பசுவைப் போல் நடித்த சில புலிகள் பாய்ந்தெழுந்து நம் கோவில்களையும், குருத்வாராக்களையும் இடித்து, விக்ரகங்களைப் பூஜிக்கும் ஹிந்துக்களின் மேல் பாய்ந்த பயங்கரமான கதைகளை சரித்திரம் கூறுகிறது. ‘காஃபீர்’ பெண்கள் யாரும் இந்தியாவுக்குச் செல்லமட்டாகள். அவர்களை நாங்கள் எடுத்துக் கொள்வோம். “காஃப்ரான் கட்னா அசி திகாலேங்கே” (காஃபீர்களா உங்களை நாங்கள் கத்தரித்துக் காட்டுவோம்), “கிசே மந்திர் விச் கண்ட்டி நஹி வஜ்ஜுகீ ஹூன்” (எந்தக் கோவிலும் இருக்காது. கோவிலில் மணி ஒலிக்காது) என்று மசூதிகளில் இருந்து கூச்சலிட்டுக் கொண்டு ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் கழுவில் ஏற்றினார்கள். பெண்களை கூட்டு வன்முறை செய்தனர். அவர்களை ஆடையின்றி ஊர்வலம் விட்டார்கள், (இன்றைய பாகிஸ்தானில் அண்மையில் நடந்த இதே போன்ற சோகக் கதையை நேரடியாகப் பார்த்த பிரபல வரலாற்று ஓவியர் கெ.சி.ஆர்யன் வரைந்த படத்தை இன்டர்நெட்டில் பார்க்கலாம். அதே போல் vashisharma.com ல் இருக்கும் நூல்களையும் சோதிக்கலாம். புலிக்கு பலியான பசுக்களைப் பற்றிய கதைகளைப் படித்து அழலாம்).
நிகழ்காலத்தில் பசுந்தோல் போர்த்திய புலிகள்:
அண்மைக் காலத்தில் இந்தியாவில் பல இடங்களில் இந்த ‘கோமுக வ்யாக்ர” கதைகள் நடப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதம் கொடுக்கும் ஆதரவால் பெற்ற கல்லூரி சீட், பைக், பணம் ஆகியவற்றின் மூலம் அப்பாவிகளான ஹிந்து பெண்களை காதல் என்ற பெயரில் வஞ்சித்து, அவர்களைத் துண்டுதுண்டாக வெட்டி வீசிய செய்திகள், பிள்ளை பெறும் இயந்திராமாகவோ, மனித வெடி குண்டாகவோ மாற்றிய சம்பவங்கள் இந்த ‘கோமுக வயாக்ர’ நியாயத்திற்கு எடுத்துக் காட்டுகள்.
தன்னை ஒரு ஹிந்துவாக அறிமுகம் செய்து கொண்டு, பெயர், வேடம் எல்லாம் மாற்றிக் கொண்டு ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் அக்கிரமங்கள் செய்து போலீசாருக்கு வசமாகச் சிக்கி தற்போது சிறையில் இருக்கும் ‘வ்யாக்ரம்’ இம்ரான் என்ற ஆட்டோ டிரைவரின் கதை அண்மையில் இந்தியா டிவிவில் ஒளிபரப்பானது. மதுரா, பிருந்தாவன், போன்ற புனிதத் தலங்களைச் சேர்ந்த மாணவிகளும், திருமணமான பெண்களும் ஒரு ‘கோமுக வ்யாக்ர’த்திற்கு பலியானார்கள். இதுவரை இருபத்து மூன்று ஹிந்து பெண்களை அனுபவித்ததாக வெட்கமின்றி அவன் கூறிக் கொண்டது கொடுமை. ஐம்பது ஹிந்து பெண்களை வலையில் சிக்க வைக்க வேண்டும் என்பது தன் லட்சியம் என்று இம்ரான் போலீசாரிடம் கூறினானாம்.
தேச முன்னேற்றத்திற்குத் தடை:
சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சமுதாய நலன் என்ற பெயரில் அக்கிரமங்களில் ஈடுபடும் பசுந்தோல் போர்த்திய புலிகளுக்கு நம் தேசத்தில் பஞ்சமே இல்லை. குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ் மாநிலங்களுக்கு நன்மை தரும் ‘சர்தார் சரோவர் டாம்’ கட்டமைப்பு தாமதமானதின் பின்னால் தேச விரோத இடது சாரியும் வெளிநாட்டு ஏஜெண்டுகளும் செய்த சதி உள்ளது. சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்று முழங்கி மேதாவிகள் இந்த ப்ராஜெக்டிற்கு தடை விளைவித்தார்கள். 1961ல் அஸ்திவாரம் போட்டு, 1987 ல் தொடங்கி, ஒருவழியாக 2017 ல் முழுமையடைந்தது. அதன் பின்னால் இருந்த புலிகளின் முகமூடி விலகியது. இப்படிப்பட்ட முயற்சிகளைக் கொண்டே தோரியம், தாமிரம் போன்ற கனிமங்களைத் தோண்டுவதிலும் தேசதுரோக இயக்கத்தினர் தடை ஏற்படுத்தினர்.
கிறிஸ்தவ சங்கங்களின் பெயரில் பத்திரிக்கையாளர்களைப் போலவும், மனித உரிமைப் பாதுகாவலர்களைப் போலவும் இந்த பசுந்தோல் போர்த்திய புலிகள் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்துகிறார்கள். ‘ஷாஹின்பாக்’ விவசாயிகள் போரரட்டத்தின் பின்னால் இருக்கும் சதி உலகம் அறிந்ததே.
எப்போதாவது மட்டுமே வாயைத் திறக்கும் அப்போதைய பிரதமர் திரு மன்மோகன் சிங் ஒரு கடினமான விமரிசனம் செய்தார். “உரிமைச் சங்கங்களின் பெயரிலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பின் பெயரிலும் நடைபெறும் போராட்டங்களின் பின்னால் தேச முன்னேற்றத்தைத் தடுக்கும் சதி உள்ளது” என்றார். இது ‘அட்சர சத்தியமான’ கூற்று.
மனதின் குரல் 124ஆம் பகுதி ஒலிபரப்பு நாள் : 27.07.2025 தமிழில் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் திவலைகள் தாண்டவமாடின. தேசமே பெருமிதத்தில் பொங்கியது. ஆகஸ்ட் மாதம் 2023ஆம் தேதியன்று சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் தேசத்தில் ஒரு புதிய, அலாதியான சூழல் நிலவியது எனக்கு நினைவிருக்கிறது. அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறார்கள் மனதிலே புதியதொரு ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம்-விண்வெளி விஞ்ஞானியாக ஆவோம் என்று இப்போதெல்லாம் சின்னச்சின்ன பிள்ளைகளும் கூறி வருகிறார்கள்.
நண்பர்களே, நீங்கள் INSPIRE-MANAK என்ற இயக்கத்தின் பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குழந்தைகளின் புதுமைகள் படைத்தல் திறனை மேம்படுத்தும் இயக்கம் இது. இதிலே அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் ஐந்து குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோவொரு புதிய கருத்தை முன்வைப்பார்கள். இந்த இயக்கத்தோடு இதுவரை இலட்சக்கணக்கான குழந்தைகள் இணைந்துவிட்டார்கள். மேலும் சந்திரயான் – 3க்கும் பிறகு இவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகிவிட்டது. தேசத்தில் விண்வெளித்துறையில் ஸ்டார்ட் அப்புகளும் விரைவுகதியில் அதிகரித்து வருகின்றன. ஐந்தாண்டுகள் முன்பாக 50ற்கும் குறைவான ஸ்டார்ட் அப்புகளே இருந்த நிலையில் இன்று, 200க்கும் மேற்பட்டவை இருக்கின்றன, விண்வெளித்துறையில் மட்டும். நண்பர்களே, அடுத்த மாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று தேசிய விண்வெளி தினம் வரவிருக்கிறது. நீங்கள் இதை எப்படிக் கொண்டாட இருக்கிறீர்கள் என்பது குறித்து எனக்கு நமோ செயலியில் கண்டிப்பாகச் செய்தி அனுப்புங்கள்.
நண்பர்களே, 21ஆம் நூற்றாண்டு பாரதத்தில் இன்று அறிவியல் ஒரு புதிய சக்தியோடு முன்னேறி வருகிறது. சில நாட்கள் முன்பாக நமது மாணவர்கள், சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்றார்கள். தேவேஷ் பங்கஜ், சந்தீப் குசி, தேவதத்த பிரியதர்ஷி, உஜ்வல் கேசரி ஆகிய நால்வரும் நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்கள். கணித உலகிலே பாரதம் தனது முத்திரையை மேலும் வளமாக்கியது. ஆஸ்ட்ரேலியாவிலே நடந்த சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் நமது மாணவர்கள் 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள்.
நண்பர்களே, அடுத்த மாதம் மும்பையிலே வானியல் மற்றும் வான் இயற்பியல் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதிலே 60க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள், விஞ்ஞானிகளும் வருவார்கள். இதுவரை நடந்ததிலேயே மிகப்பெரிய ஒலிம்பியாட் போட்டியாக இது இருக்கும். ஒருவகையிலே பார்த்தால், பாரதம் இப்போது ஒலிம்பிக் மற்றும் ஒலிம்பியாட் போட்டிகள், இரண்டிலுமே முன்னேறி வருகின்றது.
எனதருமை நாட்டுமக்களே, நம்மனைவரையும் பெருமையில் ஆழ்த்தவல்ல மேலும் ஒரு செய்தி யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வந்திருக்கிறது. யுனெஸ்கோ அமைப்பானது 12 மராட்டியக் கோட்டைகளுக்கு உலக மரபுச் சின்னங்களாக அங்கீகாரம் அளித்திருக்கிறது. இவற்றில் 11 கோட்டைகள் மஹாராஷ்டிரத்திலும், ஒரு கோட்டை தமிழ்நாட்டிலும் இருக்கின்றது. இந்தக் கோட்டைகள் வெறும் கட்டிடங்கள் அல்ல, இவை பாரதநாட்டின் ஆன்மா, பிரும்மாண்டமானவை, உயரமானவை, வெல்லக் கடினமானவை. ஒவ்வொரு கோட்டையின் வரலாற்றோடும் ஒருஒரு புத்தகமே அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு கல்லும் ஏதோ ஒரு வரலாற்று நிகழ்வுக்குச் சான்று பகர்கிறது. சல்ஹேர் கோட்டையில்தான் முகலாயர்களின் தோல்வி அரங்கேறியது. ஷிவனேரி, சத்ரபதி சிவாஜி மகராஜா பிறந்த இடம், எதிரிகளால் தகர்க்க முடியாத ஒன்று. காந்தேரிக்கோட்டை, கடலின் நடுவில் அமைக்கப்பட்ட அற்புதமான கோட்டை. எதிரிகள் அவரைத் தடுக்க நினைத்தாலும், சிவாஜி மஹராஜ், அசாத்தியமானவற்றையும் சாத்தியமாக்கிக் காட்டினார். பிரதாப்கட் கோட்டை, அஃப்ஸல் கான் வெற்றி கொள்ளப்பட்ட இடம், இந்த வெற்றிக் காதையின் எதிரொலி இன்றும்கூட கோட்டைச் சுவர்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. விஜய்துர்க், இதன் ரகசியச் சுரங்கங்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜின் தொலைநோக்கிற்குக் கட்டியம் கூறுகின்றன. நான் சில ஆண்டுகள் முன்பு ராய்கடைச் சுற்றிப் பார்த்தேன். சத்ரபதி சிவாஜி மஹராஜின் உருவச்சிலைக்கு முன்பாக பிரார்த்தனை செய்தேன். இந்த அனுபவம் என் வாழ்க்கை முழுவதும் எனக்குள்ளேயே இருக்கும்.
நண்பர்களே, தேசத்தின் இன்னும்பிற பகுதிகளிலும் கூட இப்படிப்பட்ட அற்புதமான கோட்டைகள் இருக்கின்றன, இவை தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கின்றன, மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், சுயமரியாதையை-சுயகௌரவத்தை என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை. இராஜஸ்தானத்தின் சித்தௌட்கட் கோட்டை, கும்பல்கட் கோட்டை, ரண்தம்பௌர் கோட்டை, ஆமேர் கோட்டை, ஜைசால்மேர் கோட்டை எல்லாம் உலகப் பிரசித்தி பெற்றவை. கர்நாடகத்தின் குல்பர்கா கோட்டையும் கூட மிகப்பெரியது. சித்ரதுர்க்கா கோட்டையின் பிரும்மாண்டம்….. உங்களுக்குள்ளே குதூகலத்தை நிரப்பிவிடும், அந்தக் காலத்தில் எப்படி நமது முன்னோர்கள் இப்படிப்பட்டக் கோடைகளை உருவாக்கினார்கள் என்று வியப்பில் ஆழ்த்தி விடும்.
நண்பர்களே, உத்தர பிரதேசத்தின் பாந்தாவில் இருப்பது காலிஞ்ஜர் கோட்டை. கஜினி முகமது பலமுறை இந்தக் கோட்டையின் மீது தாக்குதல் தொடுத்தாலும், ஒவ்வொரு முறையும் தோல்வியையே தழுவி இருக்கிறான். புந்தேல்கண்டிலே இப்படிப்பட்ட பல கோட்டைகள் இருக்கின்றன-குவாலியர், ஜான்சி, ததியா, அஜய்கட், கட்குண்டார், சந்தேரி எனப்பல. இந்தக் கோட்டைகள் வெறும் செங்கற்கள்-கற்களாலானவை மட்டுமல்ல, இவை நமது கலாச்சாரத்தின் அடையாளங்கள். நற்பண்புகள் மற்றும் சுயமரியாதை – இன்றும் கூட இந்தக் கோட்டைகளின் வானுயர் சுவர்களிலிருந்து இவை உற்றுப் பார்க்கின்றன. இந்தக் கோட்டைகளுக்குப் பயணம் மேற்கொள்ளுங்கள், நம்முடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள், கௌரவத்தை உணர்ந்து பாருங்கள் என்று நான் நாட்டுமக்கள் அனைவரிடமும் வேண்டிக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, சற்றே கற்பனை செய்து பாருங்கள்!! விடியற்காலை வேளை, பிஹாரின் முஜஃப்ஃபர்புர் நகரம், 1908ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி, ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு நாற்சந்தியும், அனைத்து ஒலிகளும் ஊரும் அடங்கி, நிசப்தமாக இருந்தது. மக்களின் கண்களில் கண்ணீர், ஆனால் இதயங்களில் கனன்று கொண்டிருந்ததோ ஜுவாலை. மக்கள் சிறைச்சாலையைச் சூழ்ந்து விட்டார்கள், அங்கே 18 வயதேயான ஒரு இளைஞன், ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தனது தேசபக்தியை வெளிப்படுத்தியமைக்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருந்தான். சிறைக்குள்ளே, பரங்கி அதிகாரிகள், ஒரு இளைஞனைத் தூக்கிலிடும் முஸ்தீபுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இளைஞனின் முகத்திலே அச்சமேதும் இல்லை, மாறாக பெருமிதம் பொங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பெருமிதம், தேசத்திற்காக உயிர் துறப்போரிடத்தில் குடிகொண்டிருக்கும் பெருமிதம். அந்த வீரன், அந்த சாகஸம் நிரம்பிய இளைஞன்…… குதிராம் போஸ். வெறும் 18 வயதே நிரம்பிய அந்த இளைஞன் வெளிப்படுத்திய துணிச்சல், ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிப் போட்டது. “குதிராம் போஸ் தூக்குக்கயிற்றை நோக்கி நடந்த போது, அவருடைய முகத்திலே புன்முறுவல் பூத்திருந்தது”, என்று அப்போது செய்தித்தாள்கள் கூட எழுதின. இப்படிப்பட்ட கணக்கேயில்லாத உயிர்த்தியாகங்கள் புரிந்த பிறகு, பல நூற்றாண்டுக்காலத் தவத்திற்குப் பிறகு, நமக்குச் சுதந்திரம் கிடைத்தது. தேசப்பற்றாளர்கள் தங்கள் உதிரத்தால் சுதந்திரப் போராட்ட வயலில் பாசனம் செய்தார்கள்.
நண்பர்களே, ஆகஸ்ட் மாதம் புரட்சி மாதம் என்று அழைக்கப்படுவதற்கு மேலும் ஒரு காரணம் உண்டு. ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி லோக்மான்ய பால் கங்காதர் திலகரின் நினைவுநாளும் கூட. இந்த மாதத்திலேயே, ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று காந்தியடிகளின் தலைமையின் கீழ், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் தான் ஆங்கிலேயர் ஆட்சியின் அஸ்திவாரத்தை ஆட்டி வைத்தது. பிறகு வருவது ஆகஸ்ட் 15, நமது சுதந்திரத் திருநாள், நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுபடுத்திக் கொள்வோம், அவர்களிடமிருந்து உள்ளெழுச்சி பெறுவோம்; ஆனால் நண்பர்களே, நமது சுதந்திரத்தோடு கூடவே, தேசப்பிரிவினையின் வலியும் துயரும் இணைந்தே இருக்கிறது. ஆகையால் தான் ஆகஸ்ட் 14ஆம் தேதியை தேசப்பிரிவினை பயங்கரத்தின் நினைவுநாள் என்ற வகையிலே நாம் கடைப்பிடிக்கிறோம். ஆகஸ்ட் மாதத்தின் ஒவ்வொரு நாளும், சும்மா ஒன்றும் வரவில்லை சுதந்திரம் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது. இந்தச் சுதந்திரத்தின் பின்னே இலட்சக்கணக்கான-கோடிக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தவம் இருக்கின்றது. நாம் இதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும், நமது உறுதிப்பாடுகள் மூலம் இதை மேலும் வலுவுடையதாக ஆக்க வேண்டும்.
என் கனிவான நாட்டுமக்களே, 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று மேலும் ஒரு புரட்சியின் தொடக்கம் ஏற்பட்டது. சுதேசி இயக்கமானது, உள்ளூர் உற்பத்திக்கு, குறிப்பாக கைத்தறிக்குப் புதிய உந்துசக்தியை அளித்தது. இந்த நினைவைப் போற்றும் வகையிலே தேசம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக கொண்டாடுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியோடு, தேசிய கைத்தறி தினமாக நாம் கொண்டாட ஆரம்பித்து பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. சுதந்திரப் போராட்டக் காலத்தில் நமது கதர்ப்பொருட்கள் எப்படி சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய பலத்தை அளித்தனவோ, அதே போல இன்றும் கூட, வளர்ச்சியடைந்த பாரதமாக ஆகும் திசையில் நாம் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கும் வேளையிலே, ஜவுளித்துறையானது தேசத்தின் பலமாக உருவாக்கம் பெற்று வருகின்றது. இந்தப் பத்தாண்டுகளிலே தேசத்தின் பல்வேறு இடங்களில் இந்தத் துறையோடு இணைந்த இலட்சக்கணக்கானவர்கள் தாம் வெற்றியின் பல படிகளைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். மஹாராஷ்டிரத்தின் பைட்டண் கிராமத்தின் கவிதா தவலே அவர்கள், முன்பெல்லாம் ஒரு சிறு அறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார், இடமோ, வசதிகளோ ஏதும் இருக்கவில்லை. அரசாங்க உதவி கிடைத்த பிறகு, இப்போது இவருடைய திறமைகள் சிறகு விரிக்கத் தொடங்கி விட்டன. இவர் மூன்று மடங்கு அதிகம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். ஒடீஷாவின் மயூர்பஞ்ஜிலும் இதே மாதிரியான வெற்றிக் கதை தான். இங்கே 650ற்கும் அதிகமான பழங்குடியினப் பெண்கள், சந்தாலீ புடவைகளுக்கு மீண்டும் உயிரூட்டி இருக்கிறார்கள். இப்போது இந்தப் பெண்கள், ஒவ்வோர் மாதமும் ஆயிரக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்கள். இவர்கள் வெறும் துணியை மட்டும் நெசவு செய்யவில்லை, தங்களுடைய அடையாளத்தையே நெய்கிறார்கள். பிஹாரின் நாலந்தாவைச் சேர்ந்த நவீன் குமார் அவர்களின் சாதனை உத்வேகம் அளிக்கவல்லது. இவருடைய குடும்பத்தார், பல தலைமுறைகளாக இந்தப் பணியோடு தொடர்புடையவர்கள். ஆனால் மிகவும் அருமையான விஷயம் என்னவென்றால், இவருடைய குடும்பத்தார் இப்போது இந்தத் துறையில் நவீனத்துவத்தையும் இணைத்திருக்கிறார்கள். இப்போது இவர்களுடைய குழந்தைகள் கைத்தறித் தொழில்நுட்பத்தைப் படிக்கிறார்கள். பெரிய ப்ராண்டுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த மாற்றம் ஏதோ ஒன்றிரண்டு குடும்பங்களில் மட்டுமல்ல, இது அக்கம்பக்கம் அநேக குடும்பங்களையும் முன்னேற்றிக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே, ஜவுளித்துறை, பாரதத்தின் ஒரு துறை மட்டுமல்ல, இது நமது கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கான எடுத்துக்காட்டு. இன்று ஜவுளித்துறை மற்றும் ஆயத்த ஆடைகள் சந்தை வெகு விரைவாக முன்னேறி வருகிறது, இந்த முன்னேற்றத்தின் மிக அழகான விஷயம் என்னவென்றால், கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், நகரங்களின் ஆடை வடிவமைப்பாளர்கள், மூத்த நெசவாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப்புகளைத் தொடங்கும் நமது இளைஞர்கள் என அனைவரும் இணைந்து இதை முன்னெடுத்துக் கொண்டு வருகிறார்கள். இன்று பாரதத்தில் 3000த்திற்கும் மேற்பட்ட ஜவுளித்துறை ஸ்டார்ட் அப்புகள் செயல்பட்டு வருகின்றன. பல ஸ்டார்ட் அப்புகள், பாரதத்தின் கைத்தறித் துணிகளின் அடையாளத்துக்கு, உலகளாவிய உயரங்களை அளித்திருக்கின்றன.
நண்பர்களே, 2047இன் வளர்ச்சியடைந்த பாரதத்தின் பாதை, தற்சார்பைக் கடந்து பயணிக்கிறது, உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் உணர்வுக்கு, தற்சார்பு பாரதம் தான் மிகப்பெரிய ஆதாரம். பாரதத்தில் தயாராகும் பொருட்களாக இருக்க வேண்டும், அவற்றை உருவாக்குவதில் நம்மவர்களின் வியர்வை சிந்தப்பட்டிருக்க வேண்டும், உள்ளூரிலேயே வாங்குங்கள், உள்ளூரிலேயே விற்பனை செய்யுங்கள். இதுவே நமது உளவுறுதிப்பாடாக இருக்க வேண்டும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, பாரதத்தின் பன்முகத்தன்மையின் மிக அழகான காட்சியை நமது நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பாரம்பரியங்களில் காணலாம், இதன் அங்கம் தான் நமது பஜனைப் பாடல்களும், நமது கீர்த்தனங்களும். ஆனால் கீர்த்தனைப் பாடல்கள் வாயிலாக காட்டுத்தீ பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறித்து நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா? நீங்கள் ஒருவேளை நம்பாமல் போகலாம் ஆனால், ஓடிஷாவின் கியோஞ்ஜார் மாவட்டத்தில் ஒரு அற்புதமான செயல் நடந்தேறி வருகிறது. இங்கே ராதாகிருஷ்ண சங்கீர்த்தன மண்டலி என்ற பெயர்கொண்ட ஒரு குழு இருக்கிறது. பக்தியோடு கூடவே, இந்தக் குழுவானது, இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற மந்திரத்தையும் கூடவே சேர்த்து ஜபித்து வருகிறது. இந்த முன்னெடுப்புக்கான உத்வேகக் காரணியாக இருந்தவர் பிரமீலா பிரதான் அவர்கள். காடுகள் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பிற்காக இவர் பாரம்பரியமான பாடல்ளோடு புதிய சொற்களை இணைத்தார், புதிய செய்திகளை இழைத்தார். இவரது குழுவானது கிராமங்கள்தோறும் சென்றது. பாடல்கள் வாயிலாக காட்டுத்தீயால் எத்தனை அழிவு ஏற்படுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைத்தார். இந்த எடுத்துக்காட்டு, நமது மக்கள் பாரம்பரியங்கள் என்னவோ கடந்த போன காலங்களின் எச்சங்கள் அல்ல, இவற்றிலே சமூகத்திற்கு நல்வழிகாட்டும் சக்தி இன்னமும் இன்றும் இருக்கின்றன என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
என் இனிமையான நாட்டுமக்களே, பாரதத்தின் கலாச்சாரத்தின் மிகப்பெரிய ஆதாரம் நமது பண்டிகைகளும், நமது பாரம்பரியங்களும் தான், ஆனால் நமது கலாச்சாரத்தின் உயிர்ப்புத்தன்மையுடைய மேலும் ஒரு பக்கம் இருக்கிறது – நமது நிகழ்காலம் மற்றும் நமது வரலாற்றை நாம் ஆவணப்படுத்திக்க் கொண்டே வரவேண்டும் என்பதுதான் அந்தப் பக்கம். பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகள் வடிவிலே பாதுகாக்கப்பட்டிருக்கும் ஞானம்தான் நமது மெய்யான சக்தியாகும். இந்த ஓலைச்சுவடிகளிலே விஞ்ஞானம் உள்ளது, சிகிச்சைமுறைகள் இருக்கின்றன, இசை இருக்கிறது, தத்துவம் உள்ளது, அனைத்திலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், மனித சமூகத்தின் எதிர்காலத்தை எப்படி ஒளிமயமானதாக ஆக்கமுடியும் என்பதைப் பற்றிய சிந்தனைதான் அது. நண்பர்களே, இப்படிப்பட்ட அசாதாரணமான ஞானத்தை, இந்த மரபினைப் போற்றிப் பாதுகாப்பதுதான் நமது மிகப்பெரிய பொறுப்பாகும். நமது தேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும், தங்களுடைய சாதனையாகவே ஆக்கியவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கருத்தூக்கம் அளிக்கும் ஆளுமைகளில் ஒருவர் தான் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த மணிமாறன் அவர்கள். இன்றைய தலைமுறையினர் தமிழில் இருக்கும் ஓலைச்சுவடிகளைப் படிக்க கற்றுக் கொள்ளவில்லை என்றால், வருங்காலத் தலைமுறையினரின் காலத்தில் இந்த விலைமதிப்பில்லாத மரபுச்செல்வத்தை நாம் இழக்க நேரிடும் என்று அவர் கருதினார். ஆகையால் அவர் மாலைநேர வகுப்புகளைத் தொடங்கினார். அதிலே மாணவர்கள், வேலைபார்க்கும் இளைஞர்கள், ஆய்வாளர்கள் என பலர் அங்கே கற்கத் தொடங்கினார்கள். மணிமாறன் அவர்கள், தமிழ்ச் சுவடிகளை எவ்வாறு படிப்பது, புரிந்துகொள்வது என்பதன் விதிமுறைகள் பற்றிக் கற்பித்தார். இன்று பல முயற்சிகளுக்குப் பிறகு பல மாணவர்கள் இந்த வழிமுறையில் தேர்ச்சி பெற்று விட்டார்கள். சில மாணவர்கள், இந்தச் சுவடிகளின் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவமுறை மீதான ஆய்வுகளையும் மேற்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். நண்பர்களே, இப்படிப்பட்ட முயற்சிகள் நாடெங்கிலும் நடைபெற்றால், நமது பண்டைய ஞானம் நான்கு சுவர்களுக்குள்ளே மட்டும் அடைந்து கிடக்காமல், புதிய தலைமுறையினருக்கு விழிப்பேற்படுத்தும் பணியை ஆற்றும் இல்லையா? இந்த எண்ணத்தால் உத்வேகம் அடைந்து, பாரத அரசு, இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்ட அறிக்கையில், ’ஞான பாரத இயக்கம்’ என்ற ஒரு வரலாற்று முன்னெடுப்பை அறிவித்திருக்கிறது. இந்த இயக்கத்தின்படி, பண்டைய சுவடிகள் டிஜிட்டல்மயமாக்கப்படும். பிறகு ஒரு தேசிய டிஜிட்டல் சேமிப்பகம் உருவாக்கப்பட்டு, உலகெங்கிலுமிருந்தும் மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் பாரதத்தின் ஞானப் பாரம்பரியத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள இயலும். நீங்களும் இப்படிப்பட்ட முயற்சியோடு இணைந்திருந்தாலோ, இணைய விரும்பினாலோ, மைகவ் அல்லது கலாச்சார அமைச்சகத்தைக் கண்டிப்பாகத் தொடர்பு கொள்ளுங்கள்; ஏனென்றால் இவை சுவடிகள் மட்டுமல்ல, இவை இனிவரும் சந்ததிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய பாரதத்தின் ஆன்மாவின் அத்தியாயங்கள்.
என் இதயம்நிறை நாட்டுமக்களே, உங்களிடம் எத்தனை வகையான புள்ளினங்கள் இருக்கின்றன என்று கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோமே, நீங்கள் என்ன கூறுவீர்கள்? தினமும் ஒரு 5-6 பறவைகளை என்னால் பார்க்க முடிகிறது, சிலவற்றை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது, சில பறவைகளைப் பற்றித் தெரியவில்லை. ஆனால், நமக்கு அக்கம்பக்கத்தில் இருக்கும் பறவையினங்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அண்மையில் இப்படிப்பட்ட ஒரு அருமையான முயற்சி, அசாமில் உள்ள காசிராங்கா தேசியப்பூங்காவில் நடந்தது. பொதுவாகப் பார்த்தால், இந்த இடம் காண்டாமிருகங்களுக்குப் பெயர் போனது என்றாலும் இந்த முறை இங்கே இருக்கும் புல்வெளியும், அதில் வசிக்கும் புள்ளினங்களும் தான் விவாதப் பொருளானது. இங்கே முதன்முறையாக புல்வெளிப் புள்ளினங்களின் கணக்கெடுப்பு நடந்தது. இந்தக் கணக்கெடுப்பு காரணமாக பறவைகளின் 40க்கும் மேற்பட்ட புள்ளின வகைகள் அடையாளம் கண்டறியப்பட்டன என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். இவற்றிலே மிக அரியவகைப் பறவைகளும் அடக்கம். இத்தனை பறவைகளை எப்படி அடையாளம் காண முடிந்தது என்ற வியப்பு உங்களுக்கு ஏற்படலாம். இங்கே தான் தொழில்நுட்பம் தன் வித்தையைக் காட்டியது. கணக்கெடுப்பில் ஈடுபட்ட குழுவானது, ஒலிகளைப் பதிவுசெய்யும் கருவியைப் பொருத்தியது. பிறகு, கணிப்பொறி வாயிலாக அந்த ஒலிகள் ஆய்ந்து அலசப்பட்டு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்த ஒலிகள் மூலம் மட்டுமே பறவைகள் அடையாளம் காணப்பட்டன, அதுவும் எந்தவொரு தொந்திரவும் கொடுக்காமலேயே. சிந்தித்துப் பாருங்கள்!! தொழில்நுட்பமும், புரிந்துணர்வும் ஒன்றிணைந்து செயல்படும்போது, இயற்கையைப் புரிந்து கொள்ளுதல் எத்தனை எளிதாகவும், ஆழமாகவும் ஆகிவிடுகிறது பாருங்கள்!! நாம் இத்தகைய முயற்சிகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும், அப்போது தான், நாம் நமது உயிரினப் பன்முகத்தன்மையை அடையாளம் காண முடிவதோடு, அடுத்த தலைமுறையையும் இதோடு இணைக்க இயலும்.
எனதருமை நாட்டுமக்களே, சில வேளைகளில் எங்கே மிக அதிகமான இருள் கவிந்திருக்கிறதோ, அங்கிருந்துதான் பேரொளி பீறிட்டுக் கொண்டு புறப்படும். இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுத் தான் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் காணப்படுகிறது. ஒரு காலத்தில், இந்தப் பகுதியில் மாவோவாதிகளின் வன்முறை நடைபெற்றுவந்தது. பாசியா வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்கள் வெறிச்சோடிப் போகத் தொடங்கியிருந்தன, மக்கள் பீதியோடு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வேலைவாய்பிற்கான எந்த சாத்தியமும் தென்படாமல் இருந்தது, நிலங்கள் ஆளரவமற்றுப் போயின, இளைஞர்கள் புலம்பெயரத் தொடங்கினார்கள். ஆனால், மிகவும் அமைதியான, நிதானம் நிறைந்த மாற்றம் ஒன்றின் தொடக்கம் ஏற்பட்டது. ஓம்பிரகாஷ் சாஹு என்ற பெயர் கொண்ட இளைஞர் ஒருவர், வன்முறைப் பாதையைத் துறந்தார். இவர் மீன்வளர்ப்பினை மேற்கொண்டார். பிறகு தன்னைப் போன்ற இன்னம்பிற கூட்டாளிகளையும் இப்படிச் செய்ய ஊக்கப்படுத்தினார். இவருடைய இந்த முயற்சி பலனளிக்கத் தொடங்கியது. முன்னர் துப்பாக்கியைத் தாங்கியவர்கள் எல்லாம் இப்போதோ மீன்பிடி வலையைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நண்பர்களே, ஓம்பிரகாஷ் சாஹு அவர்களின் தொடக்கம் எளிதாக இருக்கவில்லை. எதிர்ப்பு இருந்தது, மிரட்டல்கள் விடப்பட்டன என்றாலும், அவரது நம்பிக்கை தகரவில்லை. பிரதம மந்திரி மீன்வளத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அவர்களுக்குப் புதிய பலம் கிடைத்தது. அரசிடமிருந்து பயிற்சி கிடைத்தது, குளங்களை அமைக்க உதவி கிடைத்தது, பார்த்துக் கொண்டே இருக்கும் நேரத்தில், கும்லாவில் மீன்பிடிப் புரட்சி உருவானது. இன்று பாசியா வட்டாரத்தின் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன்வளர்ப்போடு இணைந்திருக்கின்றன. ஒருகாலத்தில் நக்சல் அமைப்புக்களோடு இருந்தவர்கள் இப்போது, கிராமத்திலேயே கௌரவமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள், மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்து வருகிறார்கள். பாதை சரியாக இருந்தால், மனதில் நம்பிக்கை நிறைந்தால், மிகக்கடினமான சூழ்நிலைகளிலும் கூட வளர்ச்சியின் விளக்கு பிரகாசமாக ஒளிவிட்டெரியும் என்பதைத் தான் கும்லாவின் இந்தப் பயணம் நமக்குக் கற்பிக்கிறது.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, ஒலிம்பிக்ஸிற்குப் பிறகு மிகப்பெரிய விளையாட்டு ஏற்பாடு எது என்று உங்களுக்குத் தெரியுமா? ”உலகக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் விளையாட்டுக்கள்” என்பதுதான் விடை. உலகெங்கும் இருக்கும் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்போடு தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு இடையே நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் தாம் இவை. இந்த முறை இந்தப் போட்டிகள் அமெரிக்காவில் நடந்தன, இதிலே பாரதம் வரலாறு படைத்திருக்கிறது. பாரதம் கிட்டத்தட்ட 600 பதக்கங்களை வென்றது. பங்கெடுத்த 71 நாடுகளிலே நாம் முன்னணி மூன்று நாடுகளில் இடம் பிடித்தோம். இரவுபகலாக தேசத்தின் பொருட்டு சேவையாற்றுவோரின் கடின உழைப்பு பலனளித்தது. நமது இந்த நண்பர்கள் இப்போது விளையாட்டு மைதானத்திலும்கூட நாட்டின் பெயரை உயர்த்திப் பிடிக்கிறார்கள். நானும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களின் பயிற்றுநர் குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். 2029ஆம் ஆண்டு இந்த விளையாட்டுப் போட்டிகள் பாரதத்திலே நடைபெறும் என்ற சுவாரசியமான விஷயத்தையும் உங்களோடு பகிர்கிறேன் நண்பர்களே. உலகெங்கிலுமிருந்தும் விளையாட்டு வீரர்கள் பாரதம் வரும்போது நாம் நம் நாட்டிலே அவர்களை உபசரிப்போம், நமது விளையாட்டுக் கலாச்சாரத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்வோம்.
நண்பர்களே, கடந்த நாட்களிலே பல இளம் விளையாட்டு வீரர்களும் அவர்களின் பெற்றோரும் அனுப்பிய செய்தி என்னை வந்தடைந்தது. இதிலே கேலோ பாரத் 2025 வழிமுறையை மிகவும் பாராட்டி இருந்தார்கள். இந்தக் கொள்கையின் இலக்கு தெளிவாக ஒன்று தான் – பாரதம் விளையாட்டு உலகிலே சூப்பர் பவராக ஆக வேண்டும் என்பதுதான். கிராமங்கள், ஏழைகள், பெண்கள் தாம் இந்தக் கொள்கையின் முதன்மைகள். பள்ளிகள், கல்லூரிகள் ஆகியன இப்போது விளையாட்டுக்களை அன்றாட வாழ்க்கையின் அங்கமாக ஆக்கும். விளையாட்டுக்களோடு தொடர்புடைய ஸ்டார்ட் அப்புகள், அவை விளையாட்டுக்களின் மேலாண்மையோடு அல்லது தயாரிப்போடு தொடர்புடையதாக இருந்தாலும், அவர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளும் கிடைக்கும். தேசத்தின் இளைஞர்கள் சுயதயாரிப்பான ரேக்கட், மட்டை மற்றும் பந்தோடு விளையாடும்போது தற்சார்பு நோக்கிற்கு எந்த அளவுக்கு பலம் கிடைக்கும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள். நண்பர்களே, விளையாட்டுக்கள் குழுவுணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த உடலுறுதி, தன்னம்பிக்கை மற்றும் ஒரு பலமான பாரதத்தை நிர்மாணிக்கும் பாதையாகும். ஆகையால் நன்றாக விளையாடுங்கள், நன்றாக விளையாடுங்கள்.
எனதருமை நாட்டுமக்களே, சிலருக்கு சில வேளைகளில் சில வேலைகள் சாத்தியமில்லாதவையாகத் தோன்றும். இது நடக்குமா என்ற நினைவு எழும். ஆனால், தேசம் ஒரே சிந்தனையில் ஒன்றுபட்டு நிற்கும் போது, சாத்தியமில்லாதவையும் சாத்தியப்படும். தூய்மை பாரதம் இயக்கம்தான் இதற்கான மிகச் சிறப்பான எடுத்துக்காட்டு. விரைவிலேயே இந்த இயக்கம் 11 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறது. இந்த 11 ஆண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிமளித்துவிட்டது. மக்கள் இதை தங்களுடைய கடமையாகவே கருதுகிறார்கள், இது தானே மெய்யான மக்கள் பங்கெடுப்பு.
நண்பர்களே, ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் தூய்மை ஆய்வு இந்த உணர்வை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு தேசத்தின் 4500க்கும் மேற்பட்ட நகரங்களும், சிறுநகரங்களும் இதில் கலந்து கொண்டன. 15 கோடிக்கும் அதிகமானோர் இதிலே பங்கு பெற்றார்கள். இது சாதாரணமான எண்ணிக்கை அல்ல. இதுவே தூய்மை பாரதத்தின் குரல்.
நண்பர்களே, தூய்மை விஷயத்தில் நமது நகரங்களும், சிறுநகரங்களும் தங்கள் தேவைகள் மற்றும் சூழல் தொடர்பாக பல்வேறு வழிமுறைகளின்படி பணியாற்றி வருகின்றன. இவற்றின் தாக்கம் நகரங்களோடு மட்டும் நின்று போகவில்லை, தேசமெங்கும் இந்த வழிமுறைகளை தங்களுடையதாக்கிக் கொண்டிருக்கின்றது. உத்தராகண்டின் கீர்த்திநகரைச் சேர்ந்தவர்கள், மலைகளில் கழிவுப்பொருள் மேலாண்மைக்கான புதிய எடுத்துக்காட்டை அமைத்திருக்கிறார்கள். இது போலவே மங்களூருவிலே தொழில்நுட்பத்தின் துணையோடு உயிரிக் கழிவுப் பொருள் மேலாண்மை விஷயத்தில் பணிகள் நடந்து வருகின்றன. அருணாச்சலிலே ஒரு சிறிய நகரத்தின் பெயர் ரோயிங். ஒரு காலத்தில் இங்கிருக்கும் மக்களின் உடல்நலத்திற்கு கழிவுப் பொருள் மேலாண்மை மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருந்தது. இந்த மக்கள் பொறுப்பை ஏற்றார்கள், Green Roing முன்னெடுப்பைத் தொடக்கினார்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுப்பொருட்களைக் கொண்டு ஒரு பூங்காவையே உருவாக்கிவிட்டார்கள். இதைப் போன்றே கராடிலே, விஜயவாடாவிலே, நீர் மேலாண்மைக்கான பல உதாரணங்களைக் காண முடியும். அஹமதாபாதின் ஆற்றுக்கரையிலே உள்ள கட்டுமான அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்பணிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
நண்பர்களே, போபாலில் ஒரு குழுவின் பெயர் சகாராத்மக் சோச், அதாவது ஆக்கபூர்வமான சிந்தனை. இதிலே 200 பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தூய்மைப் பணியை மட்டும் மேற்கொள்வதில்லை, சிந்தனையையும் மாற்றுகிறார்கள். ஒன்றாக இணைந்து நகரின் 17 பூங்காக்களைத் தூய்மைப்படுத்துவது, துணிப்பைகளை விநியோகம் செய்வது என, இவர்களின் அனைத்துப் பணிகளிலும் ஒரு செய்தி இருக்கிறது. இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாகவே போபாலிலும் கூட இப்போது தூய்மைப்பணி ஆய்விலும் கணிசமான முன்னேற்றம் வந்திருக்கிறது. லக்னௌவின் கோமதி நதிக்குழு பற்றிப் பேசுவதும் அவசியமானது. பத்தாண்டுகளாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், சற்றும் சளைக்காமல், தடைப்படாமல் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சத்திஸ்கட்டின் பில்ஹாவின் எடுத்துக்காட்டும் அருமையானது. இங்கே பெண்களுக்கு கழிவுப்பொருள் மேலாண்மைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது, இவர்கள் ஒன்றிணைந்து நகரத்தின் தோற்றத்தையே மாற்றி விட்டார்கள். கோவாவின் பணஜி நகர்தரும் உதாரணமும் உத்வேகம் அளிக்கவல்லது. இங்கே குப்பைகள் 16 வகையாகப் பிரிக்கப்பட்டு, இதற்கான தலைமைப் பொறுப்பையும் பெண்களே ஏற்றிருக்கிறார்கள். பணஜிக்கு குடியரசுத் தலைவர் விருதும் கிடைத்திருக்கிறது. நாம் ஆண்டிலே ஒவ்வோர் நாளும் ஒவ்வொரு கணமும் தூய்மைக்கு முதன்மை அளிக்கும்போது, தேசத்தால் தூய்மையாக இருக்க இயலும்.
நண்பர்களே, மழைக்காலத் தூரல்களுக்கு இடையே, தேசம் மீண்டும் ஒருமுறை பண்டிகைகளின் வண்ணங்களால் வண்ணமயமாக இருக்கிறது. இன்று ஹரியாலி தீஜ் பண்டிகை, அடுத்து நாக பஞ்சமி, ரக்ஷா பந்தன், பிறகு ஜன்மாஷ்டமி….. நமது விஷமக்காரக் கண்ணன் அவதரித்த நாள் கொண்டாட்டம். இந்தத் திருநாட்கள் அனைத்திலும் நமது உணர்வுகள் கலந்திருக்கின்றன, இவை நம்மை இயற்கையோடு இணைத்து வைப்பதோடு, சமநிலை பற்றிய செய்தியையும் அளிக்கின்றன. உங்கள் அனைவருக்கும் இந்தப் புனிதமான திருநாட்களுக்கான ஏராளமான நல்வாழ்த்துக்கள். பிரியமான என் நண்பர்களே, உங்களுடைய அனுபவங்களையும், கருத்துக்களையும் எனக்குத் தொடர்ந்து அனுப்பி வாருங்கள். அடுத்த மாதம் மீண்டும் சந்திப்போம், நாட்டுமக்களின் மேலும் சில, புதிய சாதனைகள் மற்றும் உள்ளெழுச்சிகளை அறிந்துணர்வோம். உங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். பலப்பல நன்றிகள்.
சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் ஒரு சார்பாக நடந்து கொள்வதாக கூறி அவர் மீது சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து வாஞ்சிநாதன் என்ற வழக்கறிஞர் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கு மனு அளித்ததாகவும், ஆனால் தற்போது நீதியரசர் ஜி.ஆர் சுவாமிநாதன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் அந்த கடிதம் குறித்து கேள்வி கேட்பதாகவும், நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முனைவதாகவும், உச்சநீதி மன்றம் முடிவெடுக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் முன்னாள் நீதிபதி கே.சந்துரு அவர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த கடிதத்தில் திரு.சந்துரு அவர்கள் உட்பட எட்டு முன்னாள் நீதிபதிகளின் ஒப்புதலோடு இந்த கடிதம் அனுப்பப்படுவதாகவும், எழுத்து மூலமாக மற்றவர்கள் தனக்கு இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு அதிகாரம் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் குறிப்பிட்டிருந்த எட்டு பேரில் முன்னாள் நீதிபதி கே.கே.சசிதரன் அவர்கள் திரு.சந்துரு அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல தாம் எழுத்து மூலமாக எந்த அதிகாரத்தையம் யாருக்கும் அளிக்கவில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து தன்னிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை என்றும் திரு.சந்துரு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவாகரத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக தான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் சிறந்த நீதிபதிகளில் ஒருவர் ‘என்று சொல்லப்பட்ட’ திரு. சந்துரு அவர்களின் இந்த ‘போலி, பொய்’ அறிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. மற்றொரு நீதிபதியின் பெயரை தவறாக பயன்படுத்தும் அவசியமும், அவசரமும் அவருக்கு ஏன் ஏற்பட்டது என்பதை விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அவருக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்பில்லாத ஒருவரை தொடர்புபடுத்துகிற அழுத்தத்தை கொடுத்தது யார் என்கிற விவரங்களை திரு.சந்துரு அவர்கள் வெளியிடுவதோடு, முன்னாள் நீதிபதி கே.கே. சசிதரன் அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டதற்கு அவரிடத்திலும், நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களிடத்திலும் மன்னிப்பு கேட்பாரா?
மேலும், கடந்த மாதத்தில் நடைபெற்ற காவல் நிலைய ‘லாக்-அப்’ கொலைகளிலோ, கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்தோ எந்த கருத்தும் சொல்லாத நிலையில், இந்த விவகாரத்தில் முன்னாள்.நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் திரு.சந்துரு அவர்கள் கொண்டுள்ள அக்கறை வியப்பளிக்கிறது. அது ஒருபுறம் இருந்தாலும், உச்சநீதி மன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியதாக சொல்லப்படுகிற வாஞ்சிநாதன் என்கிற வழக்கறிஞரின் உள்நோக்கத்தை நாம் சந்தேகிக்க வேண்டிய கட்டாயம் பல்வேறு காரணங்களால் எழுகிறது.
கடந்த மாதம், மதுரை அவுட்-போஸ்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை ‘பார்ப்பனீய’ என்ற ஜாதி குறியீட்டை சொல்லி வாஞ்சிநாதன் தடுத்து நிறுத்திய பின்னர், காவல் துறையினர் தலையிட்டு அவரை அப்புறப்படுத்தியது உண்மையா இல்லையா?
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஹிந்து நம்பிக்கைகளுக்கு எதிராக திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடலாம் என வாஞ்சிநாதன் வாதிட்டது உண்மையா இல்லையா?
மதுரை ஆதீனம் விவகாரத்தில் மதுரை ஆதீனத்தை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வாஞ்சிநாதன் ஆதின மடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தது உண்மையா இல்லையா?
4.ஈஷா யோகா சத்குரு மீது ஆதாரமற்ற புகார்களை அடுக்கி மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில், வாஞ்சிநாதன் புகார் கொடுத்தது உண்மையா இல்லையா?
முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பார் கவுன்சிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது உண்மையா இல்லையா?
மேலும், 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் விவகாரத்தில் 100வது நாள் போராட்டத்தில் வாஞ்சிநாதன் மீது சட்ட பிரிவு-147 (கலவரம் செய்யும் குற்றம்), சட்ட பிரிவு- 148 (சட்ட விரோதமான கூட்டத்தில் பயங்கரமான ஆயுதம் வைத்திருத்தல்), சட்ட பிரிவு -188 (ஒரு பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை பின்பற்றாதது), சட்ட பிரிவு 353 (பொது ஊழியரை அவரது சட்டப்பூர்வ கடமையை செய்யவிடாமல் தடுப்பது), சட்ட பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல்) உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு ஜூன் 20, 2018 அன்று கைது செய்யப்பட்டது உண்மையா இல்லையா?
(இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட வாஞ்சிநாதனுக்கு பின்னர் பிணை அளித்ததும் இதே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் தான், அதையும் உள்நோக்கத்தோடு தான் தீர்ப்பளித்தார் என்று சொல்வார்களா?)
இது போன்று ஹிந்து மதத்திற்கு எதிராக, அரசுக்கு எதிராக, மத நம்பிக்கைகளுக்கு எதிராக, பிராமண சமுதாயத்திற்கு எதிராக குறை சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், பிறப்பால் பிராமண சமுதாயத்தை சேர்ந்த நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை குறை சொல்வது வியப்பளிக்கவில்லை. ஆனால், பல்லாண்டு காலம் நீதிபதிகளாக வீற்றிருந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக, கொள்கைகளுக்கு எதிராக, கலாச்சாரத்திற்கு எதிராக, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக இருப்பவருக்கு ஆதரவாக செயல்படுவது தான் அதிர்ச்சியளிக்கிறது, வியப்பளிக்கிறது.
முன்னாள் நீதிபதி பரந்தாமன் அவர்களுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் எப்படி தீர்ப்பளிக்க வேண்டும், எப்படி செயல்படவேண்டும் என்றெல்லாம் வகுப்பு எடுத்தது அவரின் எண்ண ஓட்டத்தை, உள்நோக்கத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது. இந்த சந்தேகத்தை தவறான தகவலை வெளிப்படுத்திய கடிதம் திரு. சந்துரு அவர்களின் கடிதம் உறுதி செய்கிறது.
‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே” என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. இந்த விவகாரத்தில் திராவிடர் கழகத்தினர், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டோரின் புலம்பல்களை பார்க்கும் போது, ‘திராவிட மாடலின்’ ஒரு அங்கம் தான் இந்த விவகாரம் என்பது தெளிவாகிறது. நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் செயல்களை தொடர்புடையவர்கள் நிறுத்தி கொள்வது நல்லது!
நாளை திங்கட்கிழமை திருஆடிபூரம் நாளில் தேரில் பவனி வந்து தரிசனம் தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம், மங்களப் பொருட்கள் மதுரை அழகர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தது.நாளை திங்கட்கிழமை ஒன்பதாம் திருநாளாம் . காலை 2:00 மணி க்கு ஏகாந்த திருமஞ்சனம் காலை புறப்பாடு: தனித்தனி தோளுக்கினியான்களில் காலை 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் கடக லக்னத்தில் திருத்தேர் எழுந்தருளலும் திருவாடிப்பூரத் தேரோட்டம் காலை 9.10 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுத்தலுடன் துவங்குகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழா 28ஆம் தேதி காலை சிறப்பாக நடைபெறுகிறது. முன்னதாக சனிக்கிழமை இரவு சயன கோலத்தில் ஆண்டாள் காட்சிதரும் நிகழ்வு கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் மங்களப் பொருட்கள் பரிவர்த்தனை செய்யும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத்தன்று நடைபெறும் தேர் திருவிழாவின் போது ஆண்டாளுக்கு மரியாதையாக ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருள்கள் கொண்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து மங்களப் பொருட்களை கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாக அதிகாரியும் இணை ஆணையுருயமான சிவ ராம்குமார் தலைமையில் குழுவினர் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் மாட வீதிகள் வழியே மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதனை ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் சௌ.சக்கரையம்மாள் பெற்றுக் கொண்டார். அப்பொழுது ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாலை மதுரை அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் மரியாதைகளை கள்ளழகர் திருக்கோவில் அதிகாரிகள் கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.
நண்பர்களே, சிவதரிசனத்தால் அற்புதமான சக்தி….. இளையராஜா அவர்களின் இசை….. ஓதுவார்தம் மந்திர உச்சாடனம்… உண்மையிலேயே…. இந்த ஆன்மீக அனுபவம் என் ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டது.
நண்பர்களே, பவித்திரமான பருவமழைக்காலம்….. அதோடு கூட, பிருஹதேஸ்வரர் சிவாலய நிர்மாணம் தொடங்கி, ஓராயிரம் ஆண்டுகள் வரலாற்றுப்பூர்வமான சந்தர்ப்பம்…….. இப்படிப்பட்ட அற்புதமான வேளையிலே, சிவனவன் பிருஹதேஸ்வரனின் பாதாரவிந்தங்களிலே சிரம் தாழ்த்த, அவரை வழிபாடு செய்யக்கூடிய பெரும்பேறு எனக்குக் கிடைத்தது.
நான் இந்த சரித்திர பூர்வமான ஆலயத்திலே, 140 கோடி நாட்டுமக்களின் நலனுக்காகவும், பாரதநாட்டின் நிரந்தர வளர்ச்சிக்காகவும் என் வேண்டுதல்களை முன்வைத்தேன். என் விருப்பமெல்லாம் – இறைவன் சிவனாரின் நல்லாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்…….. நம: பார்வதி பதயே, ஹர ஹர மஹாதேவ!!
நண்பர்களே, சின்மயா மிஷனுடைய முயற்சிகள் காரணமாக, தமிழ் மொழியில் பகவத் கீதை இசைத் தொகுப்பை வெளியிடும் வாய்ப்பும் இங்கு கிடைத்தது. இந்த முயற்சியும் கூட, நமது பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் நமது மனவுறுதிக்கு, சக்திகூட்டுகிறது. இந்த முயற்சியோடு இணைந்திருக்கும் அனைவருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, சோழ அரசர்கள் தங்களுடைய அரசியல் மற்றும் வியாபாரத் தொடர்புகளின் விரிவாக்கத்தை, இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை செய்திருந்தார்கள். நான் நேற்றுத்தான் மாலத்தீவுகளிலிருந்து திரும்பி வந்தேன், இன்று தமிழ்நாட்டிலே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.
நண்பர்களே, சிவனை வழிபாடு செய்பவனும், சிவபெருமானிலேயே கலந்து விடுகிறான், அவரைப் போலவே அழிவற்றவனாகி விடுகிறான் என்று நமது சாத்திரங்கள் ஓங்கி உரைக்கின்றன. ஆகையால் தான் சிவபெருமானிடத்திலே ஆழ்ந்த பக்தி கொண்ட பாரதத்தின் சோழர்களின் பாரம்பரியமும் கூட இன்று அமரத்துவம் அடைந்து விட்டது.
இராஜராஜ சோழன்…….இராஜேந்திர சோழன்….. இந்தப் பெயர்கள், பாரதத்தின் அடையாளங்கள், கௌரவத்தின் இணைச்சொல். சோழப்பேரரசு…. சோழ சாம்ராஜ்ஜியத்தின் வரலாறு, மற்றும் பாரம்பரியம்….. இவை பாரதத்தின் மெய்யான வல்லமையின், இயலாற்றலின் பிரகடனம்.
பாரதத்தின் அந்தக் கனவு அளிக்கும் உத்வேகத்தால் உந்தப்பட்டு, இன்று நாம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகின்றோம். நான் இந்த உள்ளெழுச்சி காரணமாக, பெரும் பராக்கிரமன் இராஜேந்திர சோழனை வழுத்துகிறேன்.
கடந்த சில தினங்களில் நீங்கள் அனைவரும் ஆடி திருவாதிரை உற்சவத்தைக் கொண்டாடினீர்கள். இன்று அதன் நிறைவு, இந்த மகத்தான நிகழ்ச்சி வாயிலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் இதற்குத் தோள்கொடுத்த அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம், பாரதத்தின் பொற்காலங்களின் ஒன்றாக இருந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். இந்த காலகட்டம், அவர்களுடைய போர்த்திறன் – வலிமையால் அளக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் தாய் என்ற வகையிலேயும் கூட பாரதத்தின் பாரம்பரியத்தை, சோழ சாம்ராஜ்ஜியம் முன்னெடுத்துச் சென்றது. வரலாற்று ஆய்வாளர்கள், மக்களாட்சி என்றால், பிரிட்டனுடைய மேக்னா கார்டாவைப் பற்றிப் பேசத் தொடங்கி விடுவார்கள். ஆனால் பல நூற்றாண்டுகள் முன்பாகவே, சோழ சாம்ராஜ்ஜியத்தில் குடவோலை முறை வாயிலாக, ஜனநாயக வழிமுறைகள்படி, தேர்தல்கள் நடந்தன.
இன்று உலகெங்கிலும் நீர் மேலாண்மை, சூழலியல் பாதுகாப்பு ஆகியவை பற்றிய விவாதங்கள் நடக்கின்றன. நமது முன்னோர்களோ, மிகப் பழமையான காலத்திலேயே கூட இவற்றின் மகத்துவத்தை நன்கு அறிந்திருந்தார்கள். மற்ற இடங்களிலிருந்து தங்கம்-வெள்ளி அல்லது பசுக்களைக் கவர்ந்துவந்த பல அரசர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இராஜேந்திர சோழனுடைய அடையாளமோ, புனித கங்கை நீரைக் கொண்டு வந்ததோடு இருக்கிறது.
இராஜேந்திர சோழன் வடபாரதத்திலிருந்து புனித கங்கை நீரைக் கொண்டு வந்து, தெற்கிலே நிறுவினான். கங்கா ஜலம்யம் ஜயஸ்தம்பம். இந்த நீரைக் கொண்டு இங்கே சோழகங்க ஏரியிலே இட்டு நிரப்பினான். இது இன்று பொன்னேரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தை நிர்மாணமும் செய்தான். இந்த ஆலயம், இன்றும்கூட, உலகின் ஒரு கட்டிடவியல் அற்புதமாகத் திகழ்கிறது. அன்னை காவிரி பெருகிப்பாயும் இந்த பூமியிலே, அன்னை கங்கைக்கு திருவிழா எடுக்கப்படுவது என்பதும் கூட, சோழ சாம்ராஜ்ஜியத்தின் நற்கொடையாகும்.
அந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பின்புலத்தின் நினைவிலே, மீண்டும் ஒருமுறை, கங்கை நீரை, காசியிலிருந்து இங்கே கொண்டு வந்திருப்பது எனக்கு மிகுந்த உவகையை அளிக்கிறது. தற்போது இங்கே நெறிப்படி அனுஷ்டானங்கள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. நான் காசியின் மக்கள் பிரதிநிதி, கங்கை அன்னையிடம் எனக்கு ஆன்மரீதியிலான அன்பு உள்ளது. சோழ அரசர்களின் இந்தச் செயல்…… அதோடு இணைந்த இந்த ஏற்பாடு….. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற பெருவேள்வியைப் போன்றது இது.
சகோதர சகோதரிகளே, சோழ அரசர்கள் பாரதத்தை கலாச்சார ஒற்றுமை என்ற இழைகொண்டு இணைத்தார்கள். இன்று நம்முடைய அரசாங்கம், சோழர்களுடைய இதே கருத்துக்களை-எண்ணங்களை முன்னெடுத்துச் செல்கின்றது. நாங்கள் காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற ஏற்பாடுகள் வாயிலாக, ஒற்றுமையின், ஒருமைப்பாட்டின் பல நூற்றாண்டுக்காலப் பழமையான கோட்பாடுகளை பலப்படுத்தி வருகின்றோம். கங்கைகொண்ட சோழபுரம் போன்ற தமிழகத்தின் பண்டைய ஆலயங்களையும் கூட இந்திய தொல்லியல் ஆய்வகம் வாயிலாக பரமரிக்கப்பட்டு வருகின்றன.
தேசத்தின் புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட போது, நமது சிவாதீனங்கள்-புனிதர்கள், அந்த நிகழ்ச்சியின் ஆன்மீகத் தலைமையை ஏற்றார்கள். தமிழ் கலாச்சாரத்தோடு இணைந்த புனிதமன செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. அந்தக் கணங்களை நான் இன்று நினைத்துப் பார்த்தால் கூட, என் நெஞ்சம் பெருமிதத்தில் பொங்குகிறது.
நண்பர்களே, நான் இப்போது தான் சிதம்பரம் நடராஜா ஆலயத்தின் சில தீக்ஷிதர்களைச் சந்தித்தேன். சிவபெருமான் நடராஜராக வழிபடக்கூடிய அந்த திவ்வியமான ஆலயத்தின் பவித்திரமான பிரசாதத்தை அவர்கள் எனக்கு அளித்தார்கள். நடராஜரின் இந்த சொரூபம், இது நமது தத்துவம், அறிவியல் வேர்கள் ஆகியவற்றின் அடையாளம்.
நடராஜ ஸ்வாமியின் இதே போன்ற ஆனந்த தாண்டவ மூர்த்தி, தில்லியின் பாரத் மண்டபத்தின் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கிறது. இதே பாரத் மண்டபத்தில், ஜி-20யின் போது, உலகெங்கிலுமிருந்தும் உலகமகா தலைவர்கள் எல்லாம் குழுமினார்கள்.
நமது சைவ பாரம்பரியம், பாரதத்தின் கலாச்சார நிர்மாணத்திலே மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியிருக்கிறது. சோழப் பேரரசர்கள், இந்த நிர்மாணத்தின் முக்கியமான சிற்பிகளாக விளங்கினார்கள். ஆகையால் தான் இன்றும் கூட சைவ பாரம்பரியத்தின் உயிர்ப்புடைய மையங்களில், தமிழ்நாடு மிகவும் முக்கியமானது.
பெருமைமிகு நாயன்மார் புனிதர்களின் சீர்மரபு…. அவர்கள் யாத்த பக்திக் காப்பியங்கள்…. தமிழ் இலக்கியம்……. நமது போற்றுதலுக்குரிய ஆதீனங்களின் பங்களிப்பு…… அவர்கள் சமூக மற்றும் ஆன்மீகக் களங்களில் ஒரு9 புதிய யுகத்திற்குப் பிறப்பளித்திருக்கிறார்கள்.
நண்பர்களே, இன்று உலகம் நிலையில்லாத்தன்மை, வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்றா பிரச்சனைகளில் உழன்று வரும் வேளையிலே….. சைவ சித்தாந்தம் நமக்கு தீர்வளிக்கும் பாதையைத் துலக்கிக் காட்டுகிறது.
நீங்கள் பாருங்கள்…… அன்பே சிவம் என்றார் சித்தர் திருமூலர். இன்று இந்தக் கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைப்பிடித்தால், பெரும்பாலான சங்கடங்கள் தாமாகவே தீர்ந்து போய்விடும். இந்த எண்ணத்தைத் தான் பாரதம் இன்று ஒரே உலக்ம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்றா வகையிலே முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
நண்பர்களே, இன்று பாரதம், வளர்ச்சியோடு கூடவே மரபும் என்ற மந்திரத்தை அட்யொற்றிப் பயணித்து வருகிறது. இன்றைய பாரதம், தனது வரலாற்றின் மீது பெருமிதம் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் நாம் தேசத்தின் பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் பணியில் மிகுந்த உருத்தோடும், கருத்தோடும் பணியாற்றி வருகின்றது. தேசத்தின் பண்டைய சிலைகள் மற்றும் கலைச்சின்னங்கள்…. இவை களவாடப்பட்டு, அயல்நாடுகளில் விற்கப்பட்டு விட்டன, இவற்றை நாங்கள் மீட்டெடுத்துக் கொண்டு வருகிறோம்.
2014ஆம் ஆண்டிற்குப் பிறகு, 600க்கும் அதிகமான தொன்மையான கலைப்படைப்புகள், உலகின் பல்வேறு தேசங்களிலிருந்தும் பாரதம் வந்தன. இவற்றில் 36 கலைப்பொருட்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இன்று நடராஜர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், நந்திகேஸ்வரர், உமா பரமேஸ்வரி, பார்வதி, சம்பந்தர்….. இப்படி பல மகத்துவம் வாய்ந்த பாரம்பரியங்கள், இப்போது இந்த பூமியிலே மீண்டும் அழகு சேர்த்து வருகின்றன.
நண்பர்களே, நமது மரபும், சைவ தத்துவத்தின் முத்திரையும், பாரதம் வரை மட்டுமோ, அல்லது இந்த பூமியுடனோ மட்டும் நின்று போய் விடவில்லை. பாரதம் நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் தேசம் ஆனது……….. அப்போது நாம் நிலவின் அந்த இடத்திற்கு சிவசக்தி என்று பெயரிட்டோம். நிலவின் அந்த முக்கியமான பாகம், இனி சிவசக்தி என்ற பெயரால் அடையாளம் காணப்படும்.
நண்பர்களே, எந்த பொருளாதார, போர்த்திற உன்னத உயரங்களை பாரதம் தொட்டதோ, அவை இன்றும்கூட நமது கருத்தூக்கங்கள். இராஜராஜ சோழன் ஒரு சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். இராஜேந்திர சோழன் இதை மேலும் உறுதிப்படுத்தினார்.
அவருடைய காலகட்டத்தில் பல்வேறு நிர்வாக மேம்பாடுகள் புரியப்பட்டன. அவர் உள்ளூர் நிர்வாக அமைப்பினை சக்தியுடையதாக ஆக்கினார். ஒரு பலமான நிதிவழிமுறையை அமல் செய்தார். வியாபார உயர்வு…. கடல்மார்க்கங்களின் பயன்பாடு…… கலை மற்றும் கலாச்சாரத்தின் பிரச்சாரம்…….. பாரதம் அனைத்துத் திசைகளிலும் விரைவாக முன்னேறிக் கொண்டிருந்தது.
நண்பர்களே, சோழ சாம்ராஜ்ஜியம், புதிய பாரதத்தின் நிர்மாணத்திற்கான, பழமையான சாலை வரைபடம் போன்றது. நாம் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க வேண்டுமென்றால், நாம் ஒற்றுமையின் மீது அழுத்தம் அளிக்க வேண்டும். நாம் நமது கடற்படையினை, நமது பாதுகாப்புப் படைகளை பலமுள்ளவையாக ஆக்க வேண்டும். நாம் புதிய சந்தர்ப்பங்களைத் தேடிக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் இவை அனைத்தோடு கூடவே, நமது விழுமியங்களையும் நன்கு பாதுகாத்துப் பேண வேண்டும். இன்று தேசம், இந்த உத்வேகத்தைத் தாங்கி முன்னேறி வருகின்றது என்பது எனக்கு பேருவகையை அளிக்கிறது.
நண்பர்களே, இன்றைய பாரதம், தனது பாதுகாப்பை அனைத்தையும்விடப் பெரியதாகக் கருதுகிறது. யாராவது பாரதத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீது தாக்குதல் தொடுத்தால், பாரதம் எப்படிப்பட்ட பதிலடியைக் கொடுக்கும் என்பதை, ஆப்பரேஷன் சிந்தூரின் போது உலகமே கவனித்தது. பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்தவொரு மறைவிடமும் பாதுகாப்பானது கிடையாது என்பதை ஆப்பரேஷன் சிந்தூர் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
நண்பர்களே, இராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணம் செய்தாலும், அதனுடைய கோபுரத்தை, தஞ்சாவூர் பிருஹதீஸ்வரர் ஆலய கோபுரத்தை விடக் குறைவானதாக வைத்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தனது தந்தையாரால் கட்டியெழுப்பப்பட்ட ஆலயத்தின் கோபுரத்தை அனைத்தையும் விட உயரமானதாக தக்கவைக்கவே அவர் விரும்பினார். தனது மகத்துவத்திற்கு இடையேயும் கூட, இராஜேந்திர சோழன் மிகுந்த பணிவை வெளிப்படுத்தினார்.
இன்றைய புதிய பாரதம், இதே உணர்வின் ஆதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாம் தொடர்ந்து பலமடைந்து கொண்டிருக்கிறோம் என்றாலும் கூட, நமது உணர்வுகள் உலகத்தின் நண்பனுடையவை, உலகநலனுக்கானவை.
நண்பர்களே, நம்முடைய பாரம்பரியத்தின் மீது பெருமித உணர்வை முன்னெடுக்கும் வேளையில், இன்று இங்கு மேலும் ஒரு உறுதிப்பாட்டை நான் எடுத்துக் கொள்கிறேன். வரவிருக்கும் காலத்தில் நாம் தமிழ்நாட்டிலே இராஜராஜ சோழன், அவருடைய மகனும், மகத்தன ஆட்சியாளருமான முதலாம் இராஜேந்திர சோழனுடைய பிரமாதமான உருவச்சிலையை நிர்மாணம் செய்வோம். இந்த உருவச்சிலைகள், நமது வரலாற்று விழிப்புணர்வின் நவீன கொடிமரங்களாகும்.
நண்பர்களே, இன்று டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவுதினம். வளர்ச்சியடைந்த பாரதத்திற்குத் தலைமை தாங்க, டாக்டர் கலம்….. சோழப் பேரரசர்களைப் போன்று, இலட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை. சக்தியும், பக்தியும் நிறைந்த இப்படிப்பட்ட இளைஞர்கள், 140 கோடி நாட்டுமக்களின் கனவுகளை நிறைவேற்றுவார்கள். நாமனைவரும் இணைந்து, ஒரே பாரதம், உன்னத பாரதத்திற்கான உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்வோம். இந்த உணர்வோடு கூடவே, மீண்டுமொருமுறை, இன்று இந்த வேளையிலே உங்களனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலப்பல நன்றிகள்.
வணக்கம். இன்று கார்கில் வெற்றித் திருநாள். நான் முதன்மையாக கார்கில் வீரர்களுக்குத் தலை வணங்குகிறேன், உயிர்த்தியாகிகளுக்கு என் சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்.
நண்பர்களே, நான்கு நாட்கள் அயல்நாடுகள் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு…… பகவான் இராமேஸ்வரனுடைய புனிதமான மண்ணில் நேரடியாக கால் பதிக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. அயல்நாடுகள் பயணத்தின் போது, பாரதம் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே வரலாற்றுப்பூர்வமான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
பாரதம் மீது உலகின் அதிகரித்துவரும் நம்பிக்கை, பாரதத்தின் புதிய தன்னம்பிக்கை ஆகியவற்றின் அடையாளம் இது. இந்த தன்னம்பிக்கையோடு நாம், வளர்ச்சியடைந்த பாரதத்தைப் படைப்போம்…… வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
இன்றும்கூட, பகவான் இராமேஸ்வரன், அறுபடைவீட்டின் இரண்டாம் படைவீடாம் திருச்செந்தி நகருறையும் செந்தூர் முருகன் ஆகிய தெய்வங்களின் நல்லாசியோடு, தூத்துக்குடியில் வளர்ச்சிப்பணிகளின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு தமிழ்நாட்டை வளர்ச்சியின் சிகரங்களுக்குக் கொண்டு செல்லும் குறிக்கோள் தொடங்கப்பட்டது…… தொடர்ந்து அதன் சாட்சியாக தூத்துக்குடி ஆகிக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் இங்கே வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் வெளிப்புற துறைமுக சரக்குப்பெட்டி முனையத்திற்கான அடிக்கல் நாட்டினேன். பல நூற்றுக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள திட்டங்களை அப்போது தான் தொடக்கி வைத்தேன். செப்டம்பரிலே புதிய தூத்துக்குடி சர்வதேச சரக்குப்பெட்டி முனையத்தை குடிமக்களுக்கு அர்ப்பணித்து வைத்தேன்.
இன்று ஒரே முறையிலேயே, 4,800 கோடி ரூபாய் பெறுமானமுள்ள திட்டங்கள் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படவும் இருக்கின்றன, அடிக்கல் நாட்டப்படவும் இருக்கின்றன. இவற்றில் விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் ரயில்வே துறையின் திட்டங்களோடு, எரிசக்தித் துறைசார்ந்த முக்கியமான முன்னெடுப்புகள் இருக்கின்றன. நான் உங்கள் அனைவருக்கும், தமிழ்நாட்டின் மக்களுக்கும் இதன் பொருட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி…… இவை எந்த ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பு போன்றவை. இந்த பதினோரு ஆண்டுகளில், உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் துறைகளின் மீது நமது முனைப்பான கவனம் நமக்கு என்ன தெரிவிக்கிறது என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சி நமக்கு எத்தனை முதன்மையானது என்பதைத் தான். இன்றைய அனைத்துத் திட்டங்களும், இணைப்புத்திறன், மாசேற்படுத்தா எரிசக்தி மற்றும் புதிய வாய்ப்புகள் ஆகியவற்றின் மையப்புள்ளியாக, தூத்துக்குடியையும், தமிழ்நாட்டையும் உருவாக்கும்.
நண்பர்களே, தமிழ்நாடு மற்றும் தூத்துக்குடியின் மண்ணும், இங்கிருக்கும் மக்களும், பலநூற்றாண்டுக்காலமாக, பல நூற்றாண்டுகளாக தன்னிறைவான, சக்திபடைத்த பாரதத்திற்காகத் தங்களுடைய பங்களிப்பை அளித்து வந்திருக்கிறார்கள். இதே மண்ணில் தான் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களைப் போன்ற தொலைநோக்காளர்கள் தோன்றினார்கள். அடிமைப்பட்டிருந்த காலத்திலேயே கூட, கடல்வழி வாணிபத்தின் சக்தியைப் புரிந்தவர் அவர்….. ஆழ்கடல்களின் மீது சுதேசிக் கப்பலைச் செலுத்தி, ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டவர் வ.உ.சி அவர்கள்.
இந்த மண்ணில் தான், வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துக்கோன் போன்ற மாமனிதர்கள், சுதந்திரமான, வல்லமைமிகு பாரதம் படைக்கும் கனவைக் காணச் செய்தார்கள்.
சுப்பிரமணிய பாரதி போன்ற தேசியக்கவியும் கூட இங்கே அருகே தான் பிறந்தார். நீங்கள் அனைவரும் அறிவீர்கள்……. சுப்பிரமணிய பாரதிக்கு எத்தனை பலமான உறவு தூத்துக்குடியோடு இருக்கிறதோ, அதே அளவு பலமான உறவு என்னுடைய நாடாளுமன்றத் தொகுதியான காசியோடும் இருக்கிறது. காசி தமிழ் சங்கமம் போன்ற ஏற்பாடுகள் வாயிலாக நமது கலாச்சார மரபுகளை, நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்திக் கொண்டு வருகிறோம்.
நண்பர்களே, கடந்த ஆண்டு தான், நான் தூத்துக்குடியின் பிரபலமான முத்துக்களை, பில் கேட்ஸுக்கு பரிசாக அளித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவருக்கு அந்த நல்முத்துக்கள் மிகவும் பிடித்திருந்தது. நமது பாண்டிநாட்டு முத்துக்கள்….. ஒருகாலத்தில் உலகம் முழுவதிலும் பாரதத்தின் பொருளாதார சக்தியின் அடையாளமாக இருந்து வந்தது.
நண்பர்களே, இன்று நாம் நமது முயற்சிகளின் காரணமாக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கினை முன்னெடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம். பிரிட்டன் மற்றும் பாரதத்திற்கு இடையே நடந்த FTA, தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் கூட, இந்த தொலைநோக்கிற்கு வேகம் அளிக்கிறது.
இன்று பாரதத்தின் வளர்ச்சியிலே….. உலகம் தனது வளர்ச்சியைக் காண்கிறது. இந்த ஒப்பந்தமும் கூட, பாரதத்தின் பொருளாதாரத்திற்குப் புதிய பலத்தை அளிக்கும். இதனால், உலகத்தின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஆகும் நமது வேகம் இன்னும் விரைவாகும்.
நண்பர்களே, இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பிரிட்டனில் விற்பனையாகும் 99 சதவீத பாரதநாட்டுப் பொருட்களின் மீது எந்தவொரு வரியும் விதிக்கப்படாது. பிரிட்டனில் பாரதநாட்டுப் பொருட்கள் விலைமலிவானவையாக இருக்கும், அங்கே அவற்றுக்கான தேவை அதிகரிக்கும், அதே வேளையில் இங்கே பாரதத்திலே அந்தப் பொருட்களை உருவாக்க அதிக வாய்ப்புகள் உருவாகும்.
நண்பர்களே, பாரதம்-பிரிட்டன் நாடுகளின் தடையில்லா வணிக ஒப்பந்தம்….. நம் நாட்டு இளைஞர்களுக்கு, நமது சிறுகுறுநடுத்தரத் தொழில்துறைக்கு, நம்முடைய ஸ்டார்ட் அப்புகளுக்கு மிகுந்த ஆதாயத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இதனால் தொழில்துறையாகட்டும், நமது மீனவர்களாகட்டும், அல்லது ஆய்வுகள் மற்றும் புதுமைகள் படைத்தலாகட்டும், அனைவருக்கும் ஆதாயங்கள் ஏற்படும்.
நண்பர்களே, இன்று மேக் இன் இண்டியா, இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் மிஷன் மேனுஃபேக்சரிங், இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்துக்கும் பாரத அரசு அதிக வலு சேர்க்கிறது. ஆப்பரேஷன் சிந்தூரின் போது, இந்தியாவில் தயாரிப்போம் குறிக்கோளின் பலத்தைக் கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்களை மண்ணோடு மண்ணாக்கியதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களினி பெரும் பங்களிப்பு இருந்தது. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், இன்றும் கூட, பயங்கரவாதத்தை ஆதரித்தவர்களைத் தூங்க விடாமல் செய்திருக்கிறது.
நண்பர்களே, நமது தமிழ்நாட்டின் ஆற்றல்வளத்தை முழுமையாகப் பயன்படுத்த, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்தும் முயற்சிகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலே நாங்கள் துறைமுகக் கட்டமைப்பை உயர்தொழில்நுட்பம் உடையதாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். இதோடு கூடவே, விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே துறை ஆகியவற்றுக்கு இடையேயும் கூட, பரஸ்பர ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம்.
இன்று தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட முனையத்தின் தொடக்க விழா இந்தத் திசையில் மேலும் ஒரு பெரிய முன்னெடுப்பாகும். 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த முனையம் இப்போது, ஒவ்வோர் ஆண்டும், 20 இலட்சத்திற்கும் அதிகமான பயணிகளை வரவேற்கும். முன்பு, ஆண்டுக்கு வெறும் மூன்று இலட்சம் பயணிகளை மட்டும் கையாளும் திறன் கொண்டதாக இருந்தது இது.
நண்பர்களே, வரவிருக்கும் காலத்தில், தேசதின் மேலும் பல வழிகள் வரை தூத்துக்குடியின் இணைப்பு அதிகரிக்கும், அப்போது இங்கிருக்கும் வியாபாரத்துக்கும், தொழில்களுக்கும் ஊக்கம் கிடைக்கும். தமிழ்நாட்டின் பெருநிறுவன பயணங்கள், கல்வித்துறை மையங்கள், உடல்நல கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இதனால் ஆதாயங்கள் உருவாகும். இதோடு கூடவே, இந்தப் பகுதியில் சுற்றுலாவுக்கான சாத்தியக்கூறுகளுக்கும் புதிய ஆற்றல் கிடைக்கும்.
நண்பர்களே, இன்று நாம் தமிழ்நாட்டின் இரண்டு பெரிய சாலை கட்டமைப்புகளையும் கூட மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறோம். கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தச் சாலைகள், இரண்டு பெரிய வளர்ச்சிப் பகுதிகளை சென்னையோடு இணைக்க இருக்கின்றன. இந்தச் சாலைகள், டெல்டா மாவட்டங்களைச் சென்னையோடு சிறப்பாக இணைக்கும் பணியை ஆற்றும்.
நண்பர்களே, இந்தத் திட்டங்களின் உதவியோடு, தூத்துக்குடி துறைமுகத்தின் இணைப்பும் கூட, இன்னும் சிறப்பாக ஆகியிருக்கிறது. இந்தச் சாலைகள், இந்த மொத்தப் பகுதியின், வாழ்க்கையைச் சுலபமாக வாழும் தன்மையை மேலும் சிறப்படையச் செய்யும். இதுகூடவே, வர்த்தகம், வேலைவாய்ப்புக்குமான புதிய பாதையும் திறக்கும்.
நண்பர்களே, நமது அரசாங்கம், தேசத்தின் ரயில்வே துறையை தொழில்துறை வளர்ச்சி மற்றும் தற்சார்பு பாரதத்தின் உயிர்நாடியாக கருதுகிறது. ஆகையால் தான், கடந்த 11 ஆண்டுகளிலே, தேசத்தின் ரயில்வேதுறைக் கட்டமைப்பு நவீனமயமாக்கம் என்ற புதிய போக்கைக் கடந்து வருகிறது. தமிழ்நாட்டின் ரயில்வே துறை கட்டமைப்பு, நவீனமயமாக்கல் இயக்கத்தின் ஒரு முக்கியமான மையமாகும்.
நமது அரசாங்கம் அமுத பாரதம் நிலையங்கள் திட்டத்தின்படி, தமிழ்நாட்டின் 77 நிலையங்களின் மறுமேம்பாட்டை மேற்கொண்டு வருகிறது. நவீன வந்தே பாரத் ரயில்கள் வரிசையில், தமிழ்நாட்டினி மக்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்து வருகிறது. தேசத்தின் முதல் மற்றும் தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்கு ரயில் பாலமான பாம்பன் பாலமும் கூட, தமிழ்நாட்டில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாம்பன் பாலத்தால் வியாபாரம் செய்வதில் சுலபத்தன்மை மற்றும் பயணிப்பதில் சுலபத்தன்மை இரண்டுமே அதிகரித்திருக்கிறது.
நண்பர்களே இன்று தேசத்தில் மிகப்பெரிய மற்றும் நவீன கட்டமைப்புகளை மேம்படுத்தும் மாபெரும் வேள்வி நடைபெற்று வருகிறது. சில நாட்கள் முன்பாகத் தொடங்கப்பட்ட ஜம்மு கஷ்மீரத்தின் சினாப் பாலம், பொறியியல் அற்புதமாக கருதப்படுகிறது. இந்தப் பாலம் காரணமாக முதன்முறையாக ஜம்மு பகுதி, ஸ்ரீநகரோடு இணைக்கப்பட்டது.
இதைத் தவிர தேசத்தின் மிகவும் நீளமான பாலம் அடல் பாலம் உருவாக்கப்பட்டது….. அசாமிலே போகிபீல் பாலம் கட்டப்பட்டது. 7 கிலோம்கீட்டருக்கும் அதிக நீளம் ஆன சோன்மர்க் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டது…. இப்படி எத்தனையோ திட்டங்களை பாரத அரசு நிறைவேற்றி இருக்கிறது. இவை அனைத்தும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்திருக்கிறது.
நண்பர்களே, இன்றும்கூட, தமிழ்நாட்டிற்காக நாம் எந்த ரயில்துறைத் திட்டங்களை அர்ப்பணித்திருக்கிறோமோ, இவற்றால் தென் தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆதாயங்கள் ஏற்படும். மதுரை-போடிநாயக்கனூர் வழிப்பாதை மின்மயமாக்கப்பட்ட பிறகு இப்போது, இங்கே வந்தே பாரத் போன்ற ரயில்கள் பய்ணிக்கும் பாதை திறக்கப்பட்டு விட்டது. இந்த ரயில்வே திட்டங்கள் தமிழ்நாட்டின் வேகத்தை…. மற்றும் அதன் வளர்ச்சியின் வீச்சு இரண்டுக்குமே……….. ஒரு புதிய சக்தியை அளிக்க இருக்கிறது.
நண்பர்களே, இன்று இங்கே 2000 மெகாவாட் கூடங்குளம் அணுமின்சக்தித் திட்டத்திலிருந்து மின்சாரத்தைக் கொண்டு செல்லும் திட்டங்களுக்கான அடித்தளமும் நாட்டப்பட்டது. சுமார் 550 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகிவரும் இந்த அமைப்பு, வரவிருக்கும் ஆண்டுகளில் தேசத்திற்குத் தூய்மையான எரிசக்தியை அளிக்கும் பெரிய பங்களிப்பை ஆற்ற இருக்கிறது.
இந்த எரிசக்தி, பாரதத்தை உலக எரிசக்தி இலக்குகளையும், சுற்றுச்சூழல் உறுதிப்பாடுகளையும் நிறைவேற்றும் ஊடகமாக ஆகும். மின்சாரதி தயாரிப்பு அதிகரிக்கும் போது, தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு, உள்ளூர் நுகர்வோர் ஆகிய அனைவருக்கும் இதனால் இலாபம் ஏற்படும்.
நண்பர்களே, தமிழ்நாட்டில் பிரதம மந்திர் சூரியசக்தி வீடு இலவச மின்னாற்றல் திட்டமும் கூட, விரைவான கதியிலே செயல்பட்டு வருகின்றது. இதுவரை சுமார் ஒரு இலட்சம் விண்ணப்பங்கள் வந்து விட்டன, 40,000 சூரியசக்தி கூரை மீதான கருவிகள் பொருத்தப்பட்டு விட்டன. இந்தத் திட்டம் இலவசமானது, மாசேற்படுத்தா மின்சக்தியை அளிப்பது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே, தமிழ்நாட்டின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழ்நாடு என்ற கனவு….. இவை நமது முக்கியமான உறுதியாகும். நாங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கே தொடர்ந்து முதன்மையை அளித்து வந்திருக்கிறோம்.
கடந்த தசாப்தத்திலே, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு என்ற வகையிலே தமிழ்நாட்டிற்கு 3 இலட்சம் கோடி ரூபாயை அனுப்பியிருக்கிறது. இந்தத் தொகை, கடந்த யுபிஏ அரசாங்கம் வாயிலாக அளிக்கப்பட்ட தொகையோடு ஒப்பீடு செய்யும் போது மூன்று மடங்குக்கும் அதிகமானது.
இந்தப் பதினோரு ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பதினோரு புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்திருக்கின்றன. முதன்முறையாக, கரையோரப் பகுதிகளின் மீன்பிடித் துறையோடு தொடர்புடைய சமூகங்களுக்கு, எந்தவொரு அரசும் இத்தனை கரிசனத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்தியதில்லை. நீலப் புரட்சி வாயிலாக நாங்கள் கரையோரப் பொருளாதாரத்திற்கு விரிவாக்கம் அளித்து வருகிறோம்.
நண்பர்களே, தூத்துக்குடியின் இந்த மண், ஒரு புதிய புரட்சியின் சாட்சியாக ஆகிவருகிறது. இணைப்பு, மின்பரிமாற்றம், கட்டமைப்பு என இந்த அனைத்துத் திட்டங்களும், வளர்ச்சியடைந்த தமிழ்நாடு-வளர்ச்சியடைந்த பாரதத்தின் பலம்வாய்ந்த ஆதாரங்களாக ஆகவிருக்கின்றன. நான் மீண்டுமொரு முறை, தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும், இந்த அனைத்துத் திட்டங்களுக்குமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலப்பல நன்றிகள்.
பிரதமர் நரேந்திர மோடியின் உரை தமிழில் மொழிபெயர்த்து குரல் கொடுத்தவர்: ராமஸ்வாமி சுதர்ஸன்