Home Blog Page 5902

சகாயம் ஐ.ஏ.எஸ். ஒரு விளம்பர வெறியர் : முருகன் ஐ.ஏ.எஸ். ஓய்வு பெற்ற அதிகாரி

காயம் ஐ.ஏ.எஸ்., முதல்வராக வேண்டும் என்று கோரி, சென்னையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட பேரணியே நேற்று நடந்தது. சமூகவலைதளங்களிலும் அவரை ஆதரித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சகாயம் முதல்வராக வேண்டும் என்று பேரணி நடந்தது குறித்து இப்போது எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம், மதுரை பகுதியில் நடந்த கிராணைட் முறைகேடுகளை ஆய்வு செய்ய, சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

பெரும் நெருக்கடிக்கிடையில் ஆய்வை முடித்து கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தார்.

அவரது கிராணைட் ஊழல் ஆய்வின் போது, நரபலி நடந்ததாக கூறப்பட்டது குறித்தும் ஆய்வு செய்தார். “அவர் அரசியலுக்கு வரவேண்டும்” என்று சமூகவலைதளங்களில் பலர் எழுதத்தொடங்கினர்.

இந்த நிலையில் “சகாயம் முதல்வராக வேண்டும்” என்ற கோரிக்கையோடு, நேற்று சென்னையில் பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.   ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிகமானோர் வந்ததால், பேரணி திட்டம் மாற்றப்பட்டு, கூட்டமாக நடத்தப்பட்டது. இதில் சில ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள்.

பூமொழி

இந்த நிலையில் சகாயம் முதல்வராக வேண்டும் என்று நடத்தப்பட்ட பேரணிக்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. அப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் ஒருவரான மனித உரிமை செயற்பாட்டாளர் பூமொழி கருத்து இது:

“சகாயம் முதல்வராக சென்னையில் பேரணி……. இந்த கூத்தை வாய்பொத்திக்கொண்டு சகாயம் ரசிக்கிறாரு போல!

நேர்மையான அரசு அதிகாரியாக சகாயம் இருந்தால், தன் பெயரால் நடக்கும் இதுபோன்ற காமெடிகளை கண்டிக்க வேண்டும். அதைவிட, தனது பெயரில் பேரணி நடத்திய அவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவைக்க வேண்டும். அப்போதுதான், சகாயத்தை நேர்மைமிக்க அரசு ஊழியராக நம்பமுடியும்: ஏற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறு இல்லையெனில், சகாயம் அவர்களும் மூன்றாம்தர விளம்பர பிரியர்தான்” என்று குறிப்பிடும் இவர், பேரணி நடத்தியவர்கள் குறித்தும் கருத்து தெரிவிக்கிறார்:

“பேரணிவான்களே!
சகாயம் ரசிகர் மன்றத்தினரே!
சகாயம் போன்று… ஏன், ஊடக வெளிச்சத்தில் முகம் காட்டாமல்… அவரைவிட மேலாக திகழ்கின்ற எண்ணற்ற அரசு ஊழியர்கள், தமிழக அரசில் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி பார்த்தால், தமிழகத்தில் எத்தனை முதல்வர்களை தேர்ந்தெடுக்கப் போகிறோம்…….? இது சாத்தியமாகுமா……..? என்பதையும், சகாயம் அரசு ஊழியர் அவர் அவரின் கடமையை செய்கிறார் என்பதையும் உணர்ந்து, சகாயம் அவர்களை தொடர்ந்து அரசு பணியாற்ற வழியை விடுங்கள்” என்றும் கூறுகிறார் பூமொழி.

destop_photo

தே போல ஓய்வு பெற்ற முருகன் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர் நம்மிடம் கூறியதாவது:

“சகாயம் உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால், தான் முதல்வர் ஆகவேண்டும் என்று பேரணி நடத்தியவர்களை கண்டிக்க வேண்டும். அவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும்.

ஏனென்றால், அரசு அதிகாரி, அரசியலில் ஈடுபடக்கூடாது என்பது விதி. ஆனால் சகாயத்தை முதல்வராக்குவோம் என்று வெளிப்படையாக ஊர்வலம் போவதாக அறிவிக்கிறார்கள். கூட்டம் நடத்துகிறார்கள்.

இதற்காகவே சகாயம் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், தேர்தல் நெருங்கும் வேளையில், நடவடிக்கை எடுப்பார்களோ இல்லையோ..!

சகாயம் ஒரு விளம்பர வெறியர் என்று நான் ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கிறேன்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு என்று கடமை, பொறுப்பு இருக்கிறது. தனது பணியை நேர்மையுடன் செய்வதோடு, வீண் விளம்பரம் இன்றியும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி செயல்பட வேண்டும். ஆனால் சகாயம் அப்படி இல்லை. கிராணைட் ஊழல் குறித்து விசாரணை நடத்தம்போது, உள்நோக்கத்தோடு, தரையில உட்கார்ந்து இட்லி சாப்பிடுவது, ஊடகங்களை வரவைத்து போஸ் கொடுப்பது போன்றவைகளை செய்தார். இது தவறான செயல்கள்.

அப்போதே நான், “சகாயத்துக்கு கோர்ட் கொடுத்த வேலையை செய்வதை விட்டுவிட்டு, ஏதேதோ செய்து விளம்பரம் தேடறார். ஒரு நல்ல ஐ.ஏ.எஸ். அதிகாரி இப்படி செயல்பட மாட்டார்.

சகாயம் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மாதிரி செயல்படவில்லை. அரசியல்வாதி மாதிரி, “இது சரியில்ல அது சரியில்லை” என்று பேட்டி மேல் பேட்டி கொடுக்கிறார்” என்று கூறினேன்.இப்போது அதுதான் நடக்கிறது. தனது அரசியல் ஆசைகளை, யாரையோ தூண்டிவிட்டு கூட்டம் நடத்தச் சொல்லி ரசிக்கிறார் சகாயம்.

அவர் அமைதியாக, தனக்கான கூட்டத்தை ரசிப்பதில் இருந்து அனைவரும் புரிந்துகொள்ளலாம்.  வேண்டுமானால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இறங்கி முதல்வர் என்ன… பிரதமர்கூட ஆகட்டுமே…!

அதைவிடுத்து சிலரை தூண்டிவிட்டு இப்படி பேரணி நடத்தவைக்கக்கூடாது..இது ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு அழகல்ல” என்று காட்டமாக நம்மிடம் சொன்னார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன்.

ஆதரவு, எதிர்ப்பு.. இரண்டுக்கும் இடையில் தனது மவுனத்தைத் தொடர்கிறார் சகாயம்.. அவர் மனதில் என்ன இருக்கிறதோ?

COURTESY & SOURCE :
டி.வி.எஸ். சோமு
patrikai.com

நெகடிவ் விமர்சனம் தராமதல் இருந்ததற்கு நன்றி: ஈட்டி சக்சஸ் மீட்டில் அதர்வா நெகிழ்ச்சி!

அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான ஈட்டி படத்தின் வெற்றி விழா பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் திரு. மைகேல் ராயப்பன் , நாயகன் அதர்வா முரளி , இயக்குநர் ரவி அரசு , ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு , படத்தொகுப்பாளர் ராஜா முகமது மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் ரவிஅரசு பேசியது, ஈட்டி திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மக்களிடையே “ மௌத் டாக்கால்” படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை என்றே சொல்ல வேண்டும். எனக்கு படத்தை பற்றி வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் மிகச்சிறந்த விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளது. நிஜமாகவே எனக்கு இது மனதுக்கு நெருக்கமான விமர்சனங்களாக அமைந்துள்ளது. படத்தை பற்றி ஒரு “ நெகடிவ் விமர்சனம்” கூட வரவில்லைஎன்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர் மற்றும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. படத்தின் தயாரிப்பாளர் திரு. மைகேல் ராயப்பன் அவர்கள் படம் வெளியாகும் சமயத்தில் படத்துக்கு மிகப்பெரிய அளவில் விளம்பர பணிகளில் ஈடுபட்டு படத்தின் வெற்றிக்கு வித்திட்டார். தயாரிப்பாளருக்கு நன்றி.

விழாவில் நாயகன் அதர்வா முரளி அவர்கள் பேசியது, நான் இந்த படத்துக்காக இரண்டு வருடங்களாக மிகப்பெரிய அளவில் உழைத்துள்ளேன். அந்த உழைப்பு சாதாரணமானது அல்ல. பல நாட்களாக ஈட்டி படத்தின் வெளியீடு தள்ளி கொண்டே சென்றது. படம் வெளியாக போகிறது என்று எதிர்பார்த்து கொண்டு இருந்த போது திடீர் என்று படம் மழை காரணமாக தள்ளி சென்றது. அதன் பின்பு மக்கள் மழையின் பிடியில் இருந்து மீண்டால் போதும் என்று நினைத்து கொண்டு இருந்தோம். அப்போது தயாரிப்பாளர் திரு. மைகேல் ராயப்பன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு படத்தை பதினோராம் தேதி வெளியிட போவதாக கூறினார். அது சரியான முடிவு என்பது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை சுவைத்த பிறகு தான் எனக்கு புரிந்தது. மழையின் பிடியில் இருந்து மீண்ட மக்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு படமாக ஈட்டி அமைந்தது என்பதில் மாற்று கருத்தே இல்லை. படத்துக்கு எந்த ஒரு நெகடிவ் விமர்சனமும் அளிக்கமால் படத்தை பற்றி சிறப்பாக மட்டும் எழுதிய பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களுக்கு நன்றி என்றார் நாயகன் அதர்வா முரளி.

விழாவில் தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன் அவர்கள் பேசியது, நாங்கள் எப்போதும் தரமான படங்களையே எங்களுடைய நிறுவனத்தில் தயாரித்து வருகிறோம். நாடோடிகள் படத்துக்கு பின்னர் எங்கள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்டது. அதை போல் தான் நாயகன் அதர்வா அவர்களும் மிகப்பெரிய வெற்றியை சுவைக்க காத்துகொண்டு இருந்தார். எங்கள் நிறுவனம் மற்றும் நாயகனாகிய அதர்வா ஆகிய இருவருக்கும் இப்படம் மிகப்பெரிய பெயர் சொல்லும் படியான வெற்றியாக அமைந்திருந்தது. எல்லோரும் கூறியது போல் ஈட்டி திரைப்படத்துக்கு மாபெரும் வரவேற்ப்பை மக்கள் தந்தது போல் , பத்திரிக்கையாளர் மற்றும் மீடியா நண்பர்கள் படத்தை பற்றி துளி கூட நெகடிவ் விமர்சனம் எழுதாமல் , படத்தை மிகச்சிறந்த படமாக மட்டும் எழுதி வெற்றிக்கு வித்திட்டமைக்கு நன்றி என்று கூறி தயாரிப்பாளர் திரு. மைகேல் ராயப்பன் அவர்கள் உரையை முடித்தார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் பக்தர்களை செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய டி எஸ் பி

 
 
பூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 10-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
 
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் பணியாற்றிய டி எஸ் பி பக்தர்களை கோவிலில் செல்ல அனுமதிக்காமல் பெரும்பாலான ஆளும் கட்சியை சேர்ந்த மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளுடன் கோவிலுக்கு வந்த முக்கிய நபர்களை மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதி அளித்தாக ஸ்ரீரங்கம் பக்தர்களால் கூறப்படுகிறது .
 
கோவிலுக்குள் பக்தர்களை செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய டி எஸ் பி பக்தர்களிடம் மனிதனாக இருந்தால் உங்களிடம் பேசமுடியும் என்றும் அநாகரிகமான வார்த்தைகளை பயன் படுத்தி திட்டியதாகவும்
சொல்லபடுகிறது.
 
மாண்புமிகு அம்மாவின் ஆணைக்கிணங்க டி எஸ் பி வேலை செய்கிறார்… அவர் பக்தர்களுக்காக பணியாற்றவில்லை… என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
 
பன்னிரு ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாருக்கு மோட்சம் என அழைக்கப்படும் வைகுண்ட பதவி அளிப்பதே வைகுண்ட ஏகாதசி விழாவின் சிறப்பாகும். வைகுண்ட ஏகாதசி விழாக்கள் முக்கிய வைணவ திருத்தலங்கள் அனைத்திலும் நடைபெற்றாலும் பூலோகமான ஸ்ரீரங்கத்தில் தான் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த முதல் வைபவம் என்பதால் ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் புராதனமாக கருதப்படுகிறது.
 
திருநெடுந்தாண்டகத்தை தொடர்ந்து நடைபெற்ற பகல் பத்து உற்சவங்களில் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் இன்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதற்காக இன்று அதிகாலை 3.45 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் நம்பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் பாண்டியன் கொண்டை, கிளி மாலை அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டார்.
 
பரமபதவாசலை கடந்து திருக்கொட்டகையில் பிரவேசித்த நம்பெருமாள், திருமாமணி மண்டபம் என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தை சென்றடைந்தார். ஆயிரங்கால் மண்டபத்தில் சாதரா மரியாதை, அலங்காரம் அமுது செய்வதை தொடர்ந்து காலை 8.15 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்யலாம்.
 
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரையர் சேவையும், 8 மணி முதல் 9 மணி வரை திருப்பாவாடை கோஷ்டி நிகழ்ச்சியும், 9 மணி முதல் 10 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையும், இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை உபயகாரர் மரியாதையும் செய்யப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார்.
 
இன்று இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்து இருக்கும். நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 26-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும் பரமபதவாசல் திறந்து இருக்கும். 27-ந் தேதி மாலை 4.15 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்து இருக்கும். ராப்பத்து உற்சவத்தின் எட்டாம் நாளான 28-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அன்றைய தினம் பரமபதவாசல் திறப்பு கிடையாது.
 
29-ந் தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான 30-ந் தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் பரமபதவாசல் திறந்து இருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் பரமபதவாசலை கடந்து செல்லலாம். 31-ந் தேதி நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
 
மறுநாள் இயற்பா நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொண்டு சொர்க்கவாசல் திறப்பின்போதோ அல்லது நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்து சென்ற பின்னரோ சொர்க்கவாசல் வழியாக சென்றால் நம்மாழ்வாரை போன்று வைகுண்ட பதவியை அடையலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
 
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள் முக்கிய நபர்களை மட்டுமே செல்ல அனுமதி அளித்து பெரும்பாலான பக்தர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காமல் டி எஸ் பி தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது .
 
 

 

கஞ்சா கடத்தலில் பிடிபட்ட நபருடன் தொடர்பு : காவல் ஆய்வாளர் தாற்காலிக பணி நீக்கம்

 
 
கஞ்சா கடத்தலில் பிடிபட்ட நபருடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து மண்டபம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர் தனபாலனை தாற்காலிக பணி நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.ஆனந்தகுமார் சோமானி உத்தரவிட்டார்.
 
ராமநாதபுரம் அருகே பட்டினம்காத்தான் சோதனைச் சாவடியில் கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசலிங்க பாண்டியன் தலைமையிலான போலீஸார் கடந்த 11 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
 
அப்போது ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு சென்ற காரில் 5 கிலோ கஞ்சாவைக் கடத்தியதாக ராமேசுவரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த செல்வக்குமாரை(32)க் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா,7 கைப்பேசிகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
 
செல்வக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செல்வகுமார் கடத்தலில் ஈடுபடவும், காவல்துறையினரிடம் சிக்காமல் இருக்கவும் காவல்துறையினரே துணை போனது தெரியவந்தது. இதையடுத்து செல்வகுமாரின் கைபேசியினை ஆய்வு செய்தபோது அதில் மண்டபம் காவல் நிலைய ஆய்வாளர் தனபாலனுடன் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது. மேலும், வழக்குகளில் இருந்து விடுவிக்க ஆய்வாளர் தனபாலன் பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது.ஆய்வாளரான தனபாலனுக்கும் கஞ்சா கடத்தும் தொழிலில் தொடர்பு இருப்பதாக செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
 
காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருந்த ஆய்வாளர் தனபாலன் குறித்த தகவல்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஆய்வாளர் தனபாலனை பணியிடை நீக்கம் செய்ய டி.ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) அனந்தகுமார் சோமானி, தனபாலனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
 
கஞ்சா கடத்தலில் தொடர்புடையதாக செல்வக்குமார் தெரிவித்த மேலும் சிலரிடமும் காவல்துறையினர் ரகசிய விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
 
மேலும், கடத்தல் பேர்வழி செல்வகுமாருடன் தொடர்பு வைத்திருந்த இன்னும் சில போலீஸார் மற்றும் காவல்துறையில் பணியாற்றும் க்யூ பிரிவு போலீஸார் பற்றிய தகவல்களும் தெரியவந்திருப்பதாக தெரிகிறது. அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
 
நடைபெற்ற சம்பவத்தால் ராமநாதபுரம் மாநகர காவல் வாட்டாரத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
 

 

 

” எங்களின் முதல்வர் சகாயம் ” : அரசியலில் மாற்றத்தை உருவாக்க சிந்திக்கும் இன்றைய இளைய தலைமுறையினர்

 
அரசியலில் மாற்றத்தை உருவாக்க சிந்திக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் ” எங்களின் முதல்வர் சகாயம் ” என்ற கோஷத்துடன் இளைய தலைமுறையினர் நடத்திய எழுச்சிப் பேரணி இன்று காலை சென்னை எழும்பூரில் நடைபெற்றது.
 
சமூக வலை தளங்களை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்திய இன்றைய இளைய தலைமுறையினர் கடந்த சில நாட்களாக முகனூல்,வாட்ஸ்ஆப் மற்றும், பிற சமூக வலைதளங்களிலும் நடைபெற்ற எழுச்சிப் பேரணியில் பங்குபெற 
வெள்ளை உடையில் அணி திரளும் படி பதிவுகள் பகிரப்பட்டன
 
அதன்படி இன்று (20-ம் தேதி) சுமார் 1500 பேர் வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தார்கள் நிகழ்ச்சியை எற்பாடு செய்து இருந்த அமைப்பினர். ஆனால், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இதனால் பின்னி ரோடு வரை எற்பாடு செய்யப்பட்டு இருந்த பேரணி ரத்து செய்யப்பட்டு, கூட்டமாக மாற்றப்பட்டது.
 
அதேபோல் இளைஞர்களை மட்டுமின்றி, 6 வயது முதல் 60 வயது வரையிலான மக்களும் இதில் கலந்து கொண்டனர். அனைவரின் முகத்திலும் ஒரு ஊழலற்ற நல்லாட்சி அமைய வேண்டும் என்ற ஏக்கம், கோஷமாக எதிரொலிக்கத் தொடங்கியது. சிறுவர்கள் கூட மாற்றத்தை எதிர்நோக்கி பலகையை பிடித்தப்படி கூட்டத்தில் நின்றனர்.லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்தி நேர்மைக்காக எத்தனையோ இன்னல்களை சந்தித்த சகாயம் ஐ.ஏ.எஸ் நாட்டை ஆள வேண்டும் என குரல்கள் ஒலிக்க துவங்கின.
 
அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த கூட்டத்திற்குள், திடீரென ரோஸ் நிற துண்டு அணிந்த சிலர் புகுந்து, எதிரான கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.
 
கூட்டத்தில் பங்கேற்ற பல இளைய தலைமுறையினர்
செய்தியாளர்களிடம்கூறியதாவது ;-
 
50 வருஷமா மாறி மாறி தமிழ்நாட்டை சூறையாடினது போதும். இனிமேலாவது தமிழ்நாடு உருப்படணும். நேர்மையான இளைஞர்கள் கையில் நாடு போகணும். அப்படி நம்ம கண்ணு முன்னாடி இருக்குற ஒருத்தர்தான் சகாயம்.
 
இந்த கூட்டம் காசுக்காகவோ அல்லது பிரியாணிக்காகவோ சேர்ந்த கூட்டம் இல்லை. மாச கணக்காக போஸ்டர் அடிச்சு கூட்டின கூட்டம் இல்லை. வெறும் 4 நாட்கள்ல சேர்ந்த கூட்டம். அதுவும் அரசியல்ல இருக்குற ஒருத்தருக்காக இல்லை.அரசியலுக்கு ஒருவர் வரணும் என்பதற்காக என்றனர்.
சகாயம் ஐயா எங்கள காப்பாத்த வாங்க.. தயவு செஞ்சு வராமல் மட்டும் இருந்துடாதீங்க…! என்றும் கோரிக்கை விடுத்தனர் .
 
அரசியலில் மாற்றத்தை உருவாக்க சிந்தித்து இன்றைய இளைய தலைமுறையினர் அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள்மீது வெறுப்படைந்த தமிழக மாணவர்கள் நேர்மையான அரசாங்க ( அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க மாணவர்கள் திட்டம் போட்டு முகநூலில் பல பெயரில் சமூக பக்கத்தை உருவாக்கி பெயரில் தொடர்ந்து பல பதிவினை பதிவிட்டு பகிர்ந்து குறிப்பிடத்தக்கது.
 
 
அரசியலில் மாற்றத்தை உருவாக்க இன்றைய இளைய தலைமுறையினர் சிந்திக்க வைத்தமைக்கு முக்கிய காரணம்
என்னவென்றால் இந்த நிலை ஏற்பட்டதற்கு முக்கியக் காரணமே பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை அரசாங்க பொதுநல திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந் து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்களே என கூறப்படுகிறது.
 
மக்களின் வரிப் பணத்தில்அரசாங்கம் பொதுமக்களுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளுக்காக செலவிட பெரும் தொகையை ஒதுக்குகிறது.
 
அவ்வாறு ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய்களை பெரும்பாலான அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும், ஊழல் செய்தும், பொதுநலத் திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந்து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்கள் அரசியலை குலத் தொழிலாக செய்து வருகின்றனர்.
 
சாதாரணமாக சாப்பிடவே வழியின்றி பெரும்பாலானவர்கள் அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகளின் ஆதரவால் அவர்களுக்காக பல சமூக விரோத செயல்களை செய்து பரவலாக தமிழகத்தில் தொடர்ந்து சுற்றி திரிந்து வருவதாக தமிழக மக்களால் பரவலாக பேசப்படுகிறது.
 
சாப்பிடவே வழியின்றி சுற்றி திரிந்த பலர் அரசியல் கட்சியில் இணைந்து அந்த கட்சியில் வட்டம், சதுரம், முக்கோணம் என பதவிகளைப் பெற்று கட்டப் பஞ்சாயத்து செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்தும் அரசியலை குலத் தொழிலாக மாற்றி சொத்து சேர்த்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
 
தமிழகத்தில் நல்லாட்சி மலர நடைபெறவுள்ள 2016ம் வருட சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் நேர்மையான அரசாங்க (அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளுக்கு ஆதரவாக அனைவரும் வாக்களித்து கட்டாயம் வெற்றி பெற செய்வார்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
 
எது எப்படியோ பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களின் வரிப் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் ஒழிந்தால் சரி .
 
தமிழகத்தில் நல்லாட்சி மலர மாணவர்கள் எடுத்துள்ள முயற்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.!
 
 
 

 

திமுக, அதிமுக அஸ்திவாரத்தை அசைத்து ஆடச்செய்தவர் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்!

 
 
திமுக, அதிமுகவின் அஸ்திவாரத்தை அசைத்ததோடு ஆடச்செய்தது தேமுதிக என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்.
 
மேலும் மாலிக் அன்சாரியின் முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-
 
25 ஆண்டுகளில் எத்தனையோ இயக்கங்கள் உருவானாலும், எவையும் திமுக அதிமுகவை சிறு கீறல் கூட ஏற்படுத்தவில்லை…
 
தேமுதிக உருவான பின்பு தான் திமுக இலவசத்தை கையில் எடுத்து தேர்தலை சந்தித்ததும், மைனாரிட்டி அரசாக அமர்ந்ததும்…
 
திமுகவின் அஸ்திவாரத்தை அசைத்ததோடு அல்லாமல், அதிமுகவையும் ஆடச்செய்தது தேமுதிக, இடைத்தேர்தலில் டெப்பாசீட்டையே இழந்ததும், இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்ததும் தேமுதிக தேர்தல் களத்திற்கு வந்த பின்பு நடந்த வரலாறு…
 
எத்தனை தலைவர்கள் உருவானாலும், சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தது கேப்டன் மட்டும் தான்.
இன்னொரு சரித்திர சாதனை சத்தமின்றி நிகழ்ந்தது, ஆம்…
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் முதல்வர் ஜெயலலிதா முன்னாள் முதல்வர் ஆனார்,
 
கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரு சேர முன்னாள் முதல்வர்கள், கேப்டன் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர்…
பாராளுமன்றத்திற்கு திமுக அதிமுக ஆதரவு இல்லாமல் எவரும் செல்லமுடியாது என்ற மாயை உடைக்கப்பட்டு சென்ற பாராளுமன்ற தேர்தலில் 2 எம்பிக்களை அனுப்பினோம்,
 
மூன்றாவது அணி உருவாக காரணமே தேமுதிகவை மையமாக வைத்துதான்…
 
திமுக அதிமுக வேண்டாம் என்று நாம் உருவாக்கிய தனி இயக்கம் தேமுதிக…
 
அதே மனநிலையில் பெருவாரியான மக்கள் “ரெண்டு பேருமே வரக்கூடாது!” என்பதில் உறுதியாகியுள்ளனர்…
 
மாற்றத்திற்கான “நேரம்” இது தான், இது “மட்டும்” தான், மக்களுக்கான இயக்கம் மக்கள் நலனை காக்கும் இயக்கம் தேமுதிக தான்…
 
அரக்கர்களை அழிப்பது சுலபம் அல்லாததுதான், ஆனால் நம்மால் முடியாதது எதுவும் இல்லை…
 
நம்மால் முடியும்
நம்மால் மட்டுமே முடியும்…
‪#‎WeSupport_Vijayakanth‬ என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்

ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

 
 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
மேலும் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வீடுகளில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர்களும் அடித்து செல்லப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மீண்டும் சிலிண்டர் வழங்க பெட்ரோலியத்துறைக்கு மத்திய அரசு பரிந்துரை செய்து உள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இல்லாதவர்களுக்கு விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
ஜல்லிக்கட்டு தமிழகத்தின் வீரவிளையாட்டு. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இது பற்றி அத்துறை அமைச்சகத்துக்கு மத்திய அரசு பரிந்துரை செய்து உள்ளது.
 
அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த எல்லா பணிகளும் நடப்பதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இவற்றை சரி செய்து தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு கொடுத்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததார்
 

 

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்திப்பு

 
 
முதலமைச்சர் ஜெயலலிதாவை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேசினார்.
 
தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள், நிவாரணம் குறித்து ஆலோசனை செய்தனர். கடந்த அக்டோபர் மாத இறுதியில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இம்மாதம் 1ம் மற்றும் 2ம் தேதி கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
 
குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். ஆனாலும் இன்னும் பல இடங்களில் வெள்ளம் இன்னும் கூட வடியாமல் உள்ளது. வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வட தமிழகப் பகுதிகளை பிரதமர் மோடி வந்து பார்வையிட்டார்.
அதன் பின்னர் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் தமிழகம் வந்து ஆய்வு நடத்தினர். அப்போது முதலமைச்சர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சந்தித்து பேசினார்.
 
இந்நிலையில், தற்போது தமிழக வெள்ள சேதத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக சென்னை வந்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. முன்னதாக வெள்ள நிவாரணப் பணிகளை நேரில் பார்வையிட்ட அவர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஜெயலலிதாவைச் சந்தித்துள்ளார்.அப்போது, தமிழகத்தில் வெள்ள சேத விபரம் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகின்றது
 

முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை பாஜக அறிவிக்க திட்டம் ?

 
தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
விஜயகாந்த் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க.வை மக்கள் நல கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஈடுபட்டுள்ளார். விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பது உள்பட தே.மு.தி.க.வின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாக மக்கள் நல கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
 
இதை கருத்தில் கொண்டே சில மாதங்களுக்கு முன்பே தே.மு.தி.க.வை ஈர்க்கும் செயல்பாடுகளில் தி.மு.க. இறங்கியது. ஆனால் 2016 தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க இரு கட்சிகளையும் ஆதரிக்கப் போவதில்லை என்று விஜயகாந்த் அறிவித்தார்.
 
இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் எஸ்.மோகன் ராஜூலு ஆகியோர் விஜயகாந்தை தேமுதிக அலுவலகத்தில் நேற்று பகல் 12.30 மணிக்கு சந்தித்துப் பேசினர்.
 
தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. இதற்கான பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டிருந்த நிலையில், மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நின்று போயிருந்த தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
 
கடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து 3-வது அணியை பாஜக அமைத்தது. இக்கூட்டணிக்கு 19 சதவீத வாக்கு களும், 2 தொகுதிகளில் வெற்றியும் கிடைத்தன. அதுபோல வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுக, இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற புதிய அணியை அமைத்துள்ளது. இதில் விடுதலைச் சிறுத்தை கள் கட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணிக்கு வரவேண்டும் என தேமுதிக தலைவர் விஜய காந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோருக்கு வைகோ உள்ளிட்டோர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில், தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழக பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், எஸ்.மோகன்ராஜூலு, கேசவ விநாயகம், தமிழக பொறுப்பாளர்களான தேசிய பொதுச்செயலாளர் பி.முரளிதர ராவ், இணை அமைப் புப் பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆகியோருடன் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, அமைப்புப் பொதுச்செயலாளர் ராம்லால் ஆகி யோர் கடந்த 16-ம் தேதி டெல்லி யில் ஆலோசனை நடத்தினர்.
 
அபோது அமித்ஷாவிடம் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க திமுகவும், மக்கள் நலக் கூட்டணியும் செய்துவரும் முயற்சி களை எடுத்துக் கூறிய தமிழக தலைவர்கள், விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே அவர் கூட்டணிக்கு வருவார் என்பதையும் தெரிவித்துள்ளனர்.
 
எனவே விஜயகாந்துடன் பேச்சு நடத்துமாறு அமித்ஷா கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்தே தமிழக பாஜக தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பு குறித்து தேமுதிக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக தயாராக உள்ளது. அது தொடர்பாக பேசவே பாஜக தலை வர்கள் வந்தனர் என தெரிவித்தனர்.
 
விஜயகாந்தை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பாஜக-வை சேர்ந்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொதுவான அரசியல் நில வரங்கள் குறித்து பேசினோம் என்று கூறினார்.
 
விஜயகாந்தை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பாஜக-வை சேர்ந்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் என
 
கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் மரியாதை நிமித்த மாக விஜயகாந்தை சந்தித்துப் பேசி னோம். பொதுவான நடப்பு அரசி யல் நிலவரங்கள், வெள்ள நிவா ரணப் பணிகள். சட்டப்பேரவைத் தேர்தல் என பல விஷயங்கள் குறித்து நட்பு முறையில் பேசி னோம் தெரிவித்தனர்.

பீப் பாடல் மற்றும் இளையராஜா குறித்த விமர்சனம்: ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

சிம்பு பாடிய பாடல் ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச வார்த்தைகளுடன் இருந்ததால், கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது.

பீப் பாடல் குறித்து இளையராஜாவிடம் ஒரு நிருபர் கேள்வி எழுப்பியபோது அவர் மிகவும் கோபமடைந்து நிருபரைச் சாடினார். இதனால் இளையராஜா பேசியது சரியா என்கிற ரீதியில் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இளையராஜா, நிருபரைக் கண்டித்தது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தனது ட்விட்டர் பக்கத்தில், ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிகையாளனைப் பாராட்ட வேண்டும் என்று ட்வீட் செய்தார்.

இதற்கு இளையராஜாவின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் அந்த ட்வீட்டைப் பிறகு நீக்கினார் ஜேம்ஸ் வசந்தன்.

இப்போது தனது வலைத்தளத்தில், இளையராஜாவை விமரிசனம் செய்தது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இளையராஜாவிடம் விவேகமில்லாத நிருபர் ஒருவர், பீப் பாடல் குறித்து கேட்கிறார். முதிர்ச்சியில்லாத விதத்தில் நிருபர் கேள்வி கேட்டார் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால், இளையராஜா இச்சம்பவத்தை இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் கையாண்டிருக்கலாம். (அரைவேக்காட்டுத்தனமான சில நிருபர்களின் அதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பொறுமையுடன் இருப்பது எவ்வளவு கடினம் என்பதும் எனக்குத் தெரியும்.)

எனக்கு நிறைய கோபமான கடிதங்கள் வரலாம். அதற்காக நான் எண்ணியதைப் பகிராமல் இருக்கமுடியாது. இளையராஜாவின் இசையின் ரசிகன் நான். அதற்காக நான் ஒப்புக்கொள்ள முடியாத நடவடிக்கையைக் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. நான் அவருடைய ரசிகன். வெறியன் அல்ல.

30 துறைகளைச் சார்ந்த சினிமாவை அதைப் பற்றிய அறிவு இல்லாமல் ஒருவர் விமரிசனம் செய்ய முடிகிறபோது, பொது இடத்தில் நடந்த சம்பவத்தைப் பற்றி யார் வேண்டுமானாலும் கருத்து கூறமுடியும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். 

images cinema illayaraja james vasanth m vert - 2026