Home Blog Page 5949

தீண்டாமையான மாதவிடாய்

 

 
 ‘மாதவிலக்கு ஆண்’
மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்திருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனைகளையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள, “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்னும் தொடர், நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.

3.bp.blogspot.com 26V5T767Nz0 VQQGpPtN1HI AAAAAAAADXA drhvz1dWG4 s1600 IrregularMenstruation - 2026

பெண்ணின் உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு மாதாந்திர நிகழ்வைக் குறித்து, 21ஆம் நூற்றாண்டிலும் மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் வேதனையுடன் கீதா பதிவு செய்திருக்கிறார். சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய, பெரும்பான்மையும் சொல்லத் தயங்குகின்ற செய்தியைச் சிறப்பாகச் சொன்ன மாதவிடாய் படத்தின் இயக்குனர் மற்றும் அவருடைய குழுவினருக்கு நம்முடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

ஓர் உயர் நிலைப்பள்ளி மாணவியிடம், ‘மாதவிடாய்னா என்னம்மா?’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள்? இத்தனை ஆண்டுகள் அவளுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வி வேறு என்னதான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது?

மற்றொரு மாணவியிடம், “வயசுக்கு வந்தப்போ உங்கம்மா, என்ன சொல்லிக் கொடுத்தாங்க?” என்று கேட்கப்படுகிறது. ‘வெளியில போக்கூடாது, பூஜ ரூம் பக்கமா வரக்கூடாது, குங்குமம் வச்சிக்கக்கூடாது, வெறும் பொட்டுதான் வச்சிக்கணும், ஆடாம, ஓடாம, பொம்பளப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அந்த மாதிரி நாள்ல பள்ளிக்கூடம் வரும்போது, கையில இரும்புத் துண்டு, இல்லன்னா துடைப் பத்தை மடிச்சிக் கையில கொடுத்தனுப்புவாங்க’ என்று பதில் வருகிறது. ஆக, பள்ளிக் கூடத்திலும், மாதவிடாய் பற்றி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு கிடைப்பதில்லை, வீடுகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த கருத்துகளே திணிக்கப்படு கின்றன.

அறிவியல் பயிற்சியாளர், ‘மாதவிடாய் பத்தி விளக்கமா சொல்லும்போது, பிள்ளைங்க வெக்கப்படுதுக. 10, 11, 12ஆம் வகுப்புலயே, அறிவியல் பாடத்துல, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மண்டலங்கள் இதெல்லாம் படத்தோட வருது. ஆனா டீச்சருங்களே நடத்த அசிங்கப்பட்டுட்டு, நீங்களே வாசிச்சி தெரிஞ்சிக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க அப்படீன்னு அந்தப் பிள்ளைக சொல்லுதுக’ என்கிறார். பிறகு எப்படி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்?

தொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். கலாச்சாரக் காவலர்கள் கூச்சலிடுவதுபோல், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று, பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி பாலியல் கல்வி.

இந்தப் படத்தில், பெண்கள், இளம்பெண்கள், ஆண்கள் சொல்லி யிருக்கின்ற மாதவிடாய் குறித்த கற்பிதங்கள், உடலியல் கல்வி பாலியல் கல்வியின் தேவைக்குச் சான்றுகளாக இருக்கின்றன.

கூவிலபுரம் என்னும் ஊரில், மாதவிலக்கின் போது பெண்கள் நடத்தப்படும் விதம், தீண்டாமைக் கொடுமையின் உச்சம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், மாதவிலக்கானவர்கள், பிள்ளை பெற்றவர்கள் தங்குவதற்காகத் தனி வீடே வைத்திருக்கிறார்கள். கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்கூட, மாதவிலக்கின் போது, பச்சைக் குழந்தையைப் பிரிந்து, தனியாக அந்த வீட்டில்தான் இருக்க வேண்டுமாம். ‘வீட்டிற்குள்ளேயே இருந்து விட்டால், யாருக்கும் தெரியாமல் போய்விடும். இப்படித் தனி வீட்டில் வைப்பதால், ஊருக்கே தெரிந்துவிடுகிறது. பசித்தாலும், தாகம் எடுத்தாலும், யாராவது அந்தப் பக்கமாக வந்தால்தான் சோறோ, தண்ணீரோ கிடைக்கும்.

பிச்சை எடுப்பதுபோல, கையேந்திச் சாப்பிட வேண்டியிருக்கிறது’ என்று அவமானத்தில் குமுறுகிறார் ஓர் இளம்பெண். அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை மூட்டையில் கட்டி, ஒரு மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் நமக்கு, பெண்களின் தன்மானத்தைத் தூக்கில் தொங்கவிட்டது போலத் தெரிகிறது.

மருத்துவ ரீதியான விளக்கங்களும், எளிமையான சொற்களில், துறை சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள விதமும் அருமை. பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் கருத்துகளும் விழிப்புணர்வூட்டுபவையாக உள்ளன.

மாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தத்தில் உள்ள ஸ்டெம்செல்கள் 78 வகையான இரத்த சம்பந்தபபட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று கண்டறியப் பட்டுள்ளது. மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் இருக்கின்றன என்ற செய்தியையும் தருகிறது இப்படம்.

மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சுவதற்குத் துணிகளைப் பயன்படுத்திய நிலை மாறி, இன்று பஞ்சுப் பட்டைகள் கடை களில் கிடைக்கின்றன. ஆனாலும் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால், இச்சமயங்களில் பெண்களின் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.

சமூகத்தில் ஆண்கள் பெண்கள், படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும், மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளும், அறியாமையும் மண்டிக் கிடப்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வ தில்லை.

மருந்துக்கடைகளில் ஆணுறையை எந்தத் தாளிலும் மறைக்காமல் எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார். இரண்டையுமே மறைக்க வேண்டியதில்லை. உடம்பிலிருந்து வெளியேறுகின்ற ரத்தக் கழிவுகள் சம்பந்தப்பட்டவைதானே இவைகள்.

நம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன. இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். மாதவிடாயின் மீது கட்டப்பட்டுள்ள கற்பிதங்களை உடைக்கின்ற சிற்றுளியாக இப்படம் இருக்கிறது.

பத்திரிக்கை துறையைச் சார்ந்த நண்பர் ஒருவர் இந்த செய்தியை எனக்கு அனுப்பி வெளியிடும்படி கேட்டுக்கொண்டார். நல்ல ஒரு தகவல் என்பதால் பதிவிட்டுள்ளேன்.

ஒரு இரவுக்கு ரூ.50 லட்சம்

 

 
உலகில் உள்ள சில ஹோட்டல்களில் ஓர் இரவு தங்குவதற்கு செலவழிக்கும் கட்டணத் தொகையில் நம்மூரில் ஒரு வீடே வாங்கிவிடலாம். நம்மை ஆச்சர்யத்தில் உறைய வைக்கும் காஸ்ட்லி ஹோட்டல்கள் சில இங்கே…
உலகின் முக்கியஸ்தர்கள் எல்லாம் இங்குதான் தங்குகிறார்கள். நீங்களும் ஒரு முக்கியஸ்தர் என்றால் இந்த ஹோட்டல்களில் தங்கலாம்..! மகிழ்ச்சியில் திளைக்கலாம்..!

1.பிரஸிடென்ட் வில்சன் ஹோட்டல்,
ஜெனிவா, ஸ்விட்சர்லாந்த்.
கட்டணம் ரூ.50,22,000.

இந்த ஹோட்டலில் இருக்கும் ‘ராயல் பென்த் ஹவுஸ் சூட்’ தான் உலகிலே மிக அதிகமான கட்டணம். இங்கு ஓர் இரவு தங்குவதற்கு ரூ.50,22,000.

1.bp.blogspot.com 7NcYPScDZyU VQUXiLtRNvI AAAAAAAADXg QZJ3Xw2M SA s1600 8621 - 2026

இந்த சூட்டில் தங்கி ஜெனிவா ஏரியின் அழகைப் பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். மொத்தம் 12 அறைகள் உள்ளன. அதனுடன் இணைந்த 12 மார்பிள் பாத்ரூம்கள். 103 அங்குல எல்.இ.டி. டி.வி., டால்பி சவுண்ட் சிஸ்டம், பில்லியர்ட்ஸ் விளையாட்டுத் தளம், லைப்பரரி, பார் எல்லாம் இருக்கிறது.

 
2.bp.blogspot.com XxWfjR0WQ4w VQUZ2uVHpII AAAAAAAADXs h1GCpTj2YTI s1600 President Wilson Hotel - 2026

வி.ஐ.பி.க்கள் என்றாலே எதிரிகள் ரவுண்டு கட்டி நிற்பார்கள். அதனால் இந்த ரூம் முழுவதும் குண்டு துளைக்காத புல்லட் ப்ரூப் கொண்டு அமைத்திருக்கிறார்கள். முற்றிலும் பாதுகாப்பான அறை. இந்த அறையில் ஒரே நேரத்தில் 40 பேர் வரை தங்கலாம். இங்கிருக்கும் டைனிங் டேபிளில் 26 பேர் அமர்ந்து சாப்பிடலாம்.

பெரிய மனுஷங்க மத்தியில இந்த ராயல் பென்த் ஹவுஸ் மிகப்பிரபலம். ரஷ்ய அதிபர் புடினுக்கு பிடித்த அறை இதுதான்.
===

2.ராஜ் பேலஸ்,
ஜெய்ப்பூர், இந்தியா.
கட்டணம் ரூ.48,12,000

இந்தியாவை ஏழை நாடு என்று யார் சொன்னது? கோடீஸ்வரர்கள் வாழும் நாடு என்று சொல்கிறது இந்த ஹோட்டல். இங்கு ஒரு இரவு தங்குவதற்கு கட்டணம் ரூ.48,12,000.

2.bp.blogspot.com trQf0KUnero VQUeb3UhJhI AAAAAAAADYA dLrTFt7CNp4 s1600 04jai23 - 2026

ராஜாக்கள் ஆண்ட காலமெல்லாம் போய்விட்டது. ஆனால், அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் பல நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன. சில அரண்மனைகள் மட்டும் இன்றைக்கும் பல கோடி ரூபாய்களை சம்பாதித்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. 1995 வரை சும்மா கிடந்த ஜெய்ப்பூர் அரண்மனையை அமர்களமான ஹோட்டலாக மாற்றிவிட்டார், மன்னர் பரம்பரையின் தற்போதைய இளவரசி ஜெயேந்தர குமாரி.

4.bp.blogspot.com TrPdKCslr5M VQUdJvE cBI AAAAAAAADX4 CGUdNW0u 8E s1600 11 - 2026

இங்கிருக்கும் ‘த பிரஸிடென்சியல் சூட்’தான் ஆசியாவிலேயே பெரிய சூட். 1,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. தனி நீச்சல் குளம், தங்க இழைகளும், தந்தங்களால் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிகளும் உள்ளன. இங்கிருந்து பிங்க் சிட்டியான ஜெய்ப்பூர் நகரை முழுவதுமாக பார்க்கலாம்.
===

3. போர் சீஸன்ஸ் ஹோட்டல்,
நியூயார்க், அமெரிக்கா.
கட்டணம் ரூ.35,96,000

இந்த ஹோட்டலில் உள்ள ‘டை வார்னர் பெண்ட் ஹவுஸ் சூட்’டில் ஓர் இரவு தங்குவதற்கு கட்டணம் ரூ.35,96,000.

4.bp.blogspot.com zR96q22PaE VQUgnSBXUtI AAAAAAAADYM 6kk9OWvRfsU s1600 20031300 p 1 - 2026

நியூயார்க்கில் பெரியதும் உயரமனதுமான ஹோட்டல் இதுதான். மொத்தம் 52 மாடிகள் கொண்டது. ஒவ்வொரு அறையின் சுவரும் தங்கம் மற்றும் பிளாட்டினம் கொண்டு வேலைப்பாடு செய்திருக்கிறார்கள்.

4.bp.blogspot.com sON0reh8cao VQUhSHJJOdI AAAAAAAADYU njIoG0tdGgM s1600 cq5dam.web.580.326 - 2026

 இந்த அறையில் இருந்து 360 டிகிரி கோணத்தில் நியூயார்க் நகரை கண்டு ரசிக்கலாம். வாட்டர் பால் விளையாட்டு, லைபரரி, பியூட்டி சலூன், ஸ்பா, பெரிய பியானோ இசைக் கருவியும் இந்த அறைக்கான தனி சிறப்பு.
===

4. ஹோட்டல்  மார்டினேஸ்,
 கேன்ஸ், பிரான்ஸ்.
கட்டணம் ரூ.23,25,000

3.bp.blogspot.com ubQoMniNbhE VQUqQBHINbI AAAAAAAADYw 8WpCpB5o3yM s1600 martinez depuis la mer - 2026

சர்வதேச திரைப்பட விழாவை வருடம் தவறாமல் கொண்டாடி குதுகலிக்கும் நகரம் கேன்ஸ். இங்கிருக்கும் மார்டினேஸ் ஹோட்டலில் உள்ள ‘பெண்ட் ஹவுஸ் சூட்’ உலகிலேயே அதிக கட்டணம் கொண்ட அறைகளில் நான்காவது இடத்தைப் பிடிக்கிறது. இந்த அறையில் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.23,25,000.

 
2.bp.blogspot.com AadQoGiKcVQ VQUwXiwv oI AAAAAAAADZA 0a7qDhTPdbY s1600 Hi LW0602 36704158 Prestige Sea View Rooms 3 - 2026

தனியார் பீச், பியானோ பார், சிட்டி ரூம், டைனிங் ரூம், இரண்டு பெட்ரூம், ஸ்பா பாத் போன்ற பல வசதிகள் இருக்கின்றன. டெரஸில் நின்றபடி கேன்ஸ் வளைகுடாவை பார்த்து ரசிக்கலாம்.
===

5. பாம்ஸ் கேஸினோ ரிஸார்ட்,
லாஸ் வேகாஸ், அமேரிக்கா.
கட்டணம் ரூ.22,00,194.

3.bp.blogspot.com - 2026

இந்த ஹோட்டலில் இருக்கும் ‘ஹக் ஹெப்னர் ஸ்கை வில்லா’வில் தங்க கட்டணம் ரூ.22,00,194. மூன்று பெட்ரூமுடன் கூடிய இரண்டு தளங்கள் கொண்ட ரூம். டாப் அப் பிளாஸ்மா டிவி, ஜிம், மசாஜ், பயர் பிளேஸ், போக்கர் டேபிள் என சகலவிதமான சந்தோஷங்களும் இந்த ஹோட்டலில் நிரம்பிருப்பதால், இது பேச்சுலர்களின் சாய்ஸாக இருக்கிறது.

3.bp.blogspot.com I8QHjJEZHfc VQU5NaVy3FI AAAAAAAADZY wj T2sXNA E s1600 Drifts Spa Palms Big e1372806396278 - 2026

லாஸ் வேகாஸ் என்றாலே சூதாட்ட நகரம்தான். அதன்பின் அங்கு தங்குபவர்களுக்கு எல்லா வசதியும் இல்லாவிட்டால் எப்படி? விலையுயர்ந்த மது வகைகள், அனைத்து நாடுகளின்‘கால் கேர்ள்ஸ்’ 
என்று பிரமாண்டமாக இருக்கும். அதனால்தான் இந்த ஹோட்டலை ‘ஒரிஜினல் ப்ளேபாய் மேன்சன்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

சுவடிகளைச் சேகரித்தவர்

 

 
கடந்த வாரம் ‘சுவடிகளைத் தேடி’ என்ற தலைப்பில் கரந்தையார் எழுதிய போதே இவரைப் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

பிரான்சிஸ் வைட் எல்லீஸ் என்ற பெயர் கொண்ட இந்த ஆங்கிலேயத் தமிழறிஞரை யாருக்கும் தெரியாது. தமிழகத்தின் பெரு நகரங்களில் கே.கே.நகர், அண்ணா நகர் போல எல்லீஸ் நகரும் இருக்கும்.

அதுவும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உருவாக்கிய குடியிருப்புகளுக்கு இந்த பெயரை வைத்திருப்பார்கள். வைத்தவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.

1.bp.blogspot.com - 2026

எல்லீஸ் என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் ஒருவர் இருந்தார். ‘சகுந்தலை’ போன்ற படங்களை  இயக்கியவர். எல்லீஸ் ஆர் டங்கன்  அவர் பெயர். அவருடைய பெயரில் தான் இந்த நகரங்கள் அமைந்திருக்கின்றன என்பதுதான் பலரின் எண்ணம். அந்தளவுக்கு இந்த அறிஞரை யாருக்கும் தெரியாது.

இங்கிலாந்தில் பிறந்த பிரான்சிஸ் வைட் எல்லீஸ் ஒரு ஆங்கிலேயர். சிறு வயதில் இருந்தே புத்திசாலியாக விளங்கியவர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருவாய்த் துறை செயலாளராக சென்னைக்கு வந்தார்.

எட்டாண்டுகள் அந்த வேலையைச் செய்தார். அதன்பின் சென்னை கலெக்டராக பதவி உயர்வு பெற்று 10 ஆண்டுகள் பணியாற்றினார். சென்னையின் குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதற்காக பல இடங்களில் கிணறுகளை தோண்டினார். அந்த கிணற்றின் அருகே தமிழில் கல்வெட்டு அமைத்தார். அதில் ‘இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு’ என்ற நீரின் பெருமையை உணர்த்தும் திருக்குறளை பொறித்திருந்தார்.

இவரது பொறுப்பின் கீழ் இருந்த நாணயச்சாலையில் திருவள்ளுவர் உருவம் பதித்த இரண்டு நாணயங்களை வெளியிட்டார். பிரிட்டிஷ் மகாராணிகளின் உருவம் மட்டுமே பதித்து வரும் அந்தக் காலக்கட்டத்தில் இது பெரும் புரட்சி.

  கலெக்டரான பின் அவர் பல இந்திய மொழிகளை கற்றார். அந்த மொழிகளில் அவருக்கு தமிழே மிகவும் பிடித்திருந்தது. ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தை முதலில் உருவாக்கியவர் இவர்தான்.

தமிழ் மொழியை தெரிந்து கொண்டதோடு அவர் நின்று விடவில்லை. தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். அவற்றை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். திருக்குறளுக்கு விரிவான விளக்கம் எழுதினார். அதை முழுதாக முடிக்கும் முன்னே மரணத்தைத் தழுவினார்.

அவரின் திருக்குறள் விளக்கவுரை அரைகுறையாகவே அச்சிட்டு வெளியிடப்பட்டது.  யாரும் சொல்லாத பல விளக்கங்களை புதுமையாக சொன்ன அறிஞர் என்று தமிழறிஞர்கள் இவரை பாராட்டினர்.

தமிழ் மீது தணியாத தாகம் கொண்ட எல்லீஸ், பண்டைய இலக்கியங்களை சேகரித்து பாதுகாக்கவும் செய்தார். குறிப்பாக வீரமாமுனிவர் எழுதிய நூல்களை சேகரிப்பதற்காக தனது சொத்துக்களின் பெரும்பகுதியை விற்று செலவு செய்தார். அப்படி அவர் தேடும் போது கிடைத்த பொக்கிஷம்தான் ‘தேம்பாவணி’ என்ற காவியம். இவரது முயற்சி இல்லையென்றால் இந்த காப்பியம் நமக்கு கிடைக்காமலே போயிருக்கும்.

தமிழரின் சிறப்புகள் பற்றி பல ஆய்வுக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். அந்தக் காலக்கட்டத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரை பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. அதற்காகவே சென்னையிலிருந்து மதுரை வந்தார்.  தமிழோடு தொடர்பு கொண்ட பல இடங்களைப் பார்த்தார். இங்கும் ஏராளமான சுவடிகளைச் சேகரித்தார்.

அதன்பின் ராமநாதபுரம் சென்றார். அங்கிருந்த தாயுமானவர் சமாதியை கண்டுருகினார். அப்போது அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது. அது எதிரிகளால் வைக்கப்பட்டதா என்ற விவரம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக சுய உணர்வை இழந்தார்.

மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் மதுரைக்கு வரும் முன்னே மரணம் அவரைத் தழுவிக்கொண்டது. 1819 மார்ச் 10-ல் மதுரையைப் பார்க்க வந்த எல்லீஸ் மீண்டும் சென்னை திரும்பவே இல்லை.

சென்னையிலும் மதுரையிலும் அவர் சேகரித்து வைத்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் கேட்பாரற்று கிடந்தன. பெரிய அறைகளில் மலை போல் குவிந்திருந்த ஓலைச் சுவடிகளை ஏலம் விட ஆங்கிலேய அரசு முடிவு செய்தது.

அந்த சுவடிகளின் மகத்துவம் அறியாத தமிழர்கள் யாரும் அவற்றை  விலை கேட்க முன்வரவில்லை. பல மாதங்கள் பயனற்றுக் கிடந்த சுவடிகளை செல்லரிக்கத் தொடங்கின.

பல ஆண்டுகள் அலைந்து திரிந்து, சொத்தை விற்று, சேகரித்த பொக்கிஷங்கள் எல்லாம் சென்னையிலும் மதுரை கலெக்டர் பங்களாவிலும் பல மாதங்கள் விறகாக எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

தமிழின் பெருமை உணர்ந்து, அதற்கு தொண்டாற்றிய எல்லீஸின் கனவும் சுவடிகளோடு சுவடியாக எரிந்து போனது. அவரை மறக்கக் கூடாது என்பதற்கு தான் எல்லீஸ் நகர் என்று அரசு பெயர் வைத்தது. ஆனால் யார் அந்த எல்லீஸ் என்று யாருக்குமே தெரியாததுதான் வேதனையின் உச்சம்..!

உலகின் முதல் போலி டாக்டர் கட்டிய மருத்துவக்கோயில்

 

 
போலிகள் எல்லா காலத்திலுமே உலகில் இருந்திருக்கிறார்கள். அதிலும் போலி டாக்டர்கள் சரித்திரத்திற்கு முந்தைய காலத்தில் இருந்தே மக்களை மயக்கி வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களைப் பற்றி எந்த குறிப்பும் கிடைக்கவில்லை.

ஆதாரப்பூர்வமான முதல் போலி டாக்டர் ஜேம்ஸ் கிரஹாம் என்பவர்தான். பிரிட்டனைச் சேர்ந்த இவர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும், பாதியிலே படிப்பை விட்டு விட்டவர்.

அவர் வாழ்ந்த காலம் 18-ம் நூற்றாண்டு. மின்சாரம் என்ற அற்புதம் கண்டுபிடிக்கப்பட்ட புதிது. அந்த மின்சாரத்தை வைத்துத்தான் மோசடி செய்யத் தொடங்கினார். அதற்காக அமெரிக்கா பக்கம் ஒதுங்கினார். அங்குதான் மின்சாரம் பரவலாக உபயோகத்தில் இருந்தது.

மின்சாரம் மூலம் எல்லோரும் விளக்கு எரிய வைக்க, கிரஹாமோ எல்லா நோய்களுக்கும் மின்சாரம்தான் சிறந்த மருந்து என்ற புது யுக்தியை பயன்படுத்தி ஏமாற்ற தொடங்கினார். மின்சாரத்தின் சூட்சுமங்களை தெரிந்துக் கொண்டார்.

3.bp.blogspot.com - 2026

அதன்பின் 1775-ல் அமெரிக்காவிலிருந்து மீண்டும் பிரிட்டன் திரும்பினார். லண்டனில்‘மருத்துவக்கோயில்’ என்ற மாளிகை ஒன்றைக் கட்டினார். அதில் பிரமாண்டமான ஒரு அறையை உருவாக்கினார். அதற்கு ‘விண்ணுலக படுக்கை’ என்று பெயரிட்டார்.

அந்த படுக்கை 12 அடி நீளமும், 9 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. அந்த படுக்கையில் குறைந்த அளவில் அதிர்வை தரும்  வகையில் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருக்கும்படி செய்தார்.

குதிரையின் வாலில் உள்ள முடியை கொண்டு மெத்தை செய்து அதன் மீது ரோஜாப்பூக்களை பரப்பி வைத்தார். அதன் மீது பட்டு விரிப்பும் விரித்தார். இந்த படுக்கையில் இருப்பவர்களை எல்லா பக்கங்களிலும் இருந்தும் பிரதிபலிக்கும் வகையில் நிலைக்கண்ணாடிகளை அமைத்தார். நறுமணம் கமழும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு, உணர்வைத் தூண்டும் வகையில் கிளர்ச்சியூட்டும் இசை அந்த அறையில் ஒளித்துக்கொண்டு இருக்கும்படி செய்தார்.

இந்த படுக்கையில் ஆணும் பெண்ணும் உறவு கொண்டால் இதுவரை அவர்கள் வாழ்வில் அடையாத உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிப்பார்கள் என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கிரஹாம் விளம்பரம் செய்தார். எதிபார்த்ததைவிட விளம்பரம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

கிரஹாம் கட்டியிருந்த மருத்துவக்கோயில் முன் ஏராளமான ஆண்களும் பெண்களும் கண்களில் இன்பக் கனவுகளோடு கூடினர். போட்டிப் போட்டுக்கொண்டு அறையை முன்பதிவு செய்தனர். உறவு கொள்ள வரும் ஜோடிகளிடம் ‘எப்படி உறவுக் கொள்ள வேண்டும்?’ என்று அவர் எழுதிய புத்தகத்தையும் சந்தடி சாக்கில் விற்பனை செய்து வந்தார். கொஞ்ச காலத்திற்கு இதை வைத்தே ஓட்டினார்.

எதிர்ப்பார்த்தபடி எந்த மாற்றமும் இல்லாததால் கிரஹாமின் சாயம் வெளுக்கத் தொடங்கியது. லண்டன் வாசிகள் வெகு சீக்கிரத்திலே உண்மையை உணர்ந்தார்கள். இன்றைக்கும் கூட போலி டாக்டர்கள் ஆண்மைக்குறைவு, நீண்ட நேர இன்பம் என்ற போர்வையில்தான் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

ஆனாலும் முதல் போலி டாக்டரே பிரமாண்டமாக ஏமாற்றியிருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது இப்போது இருப்பவர்கள் சாதாரணமாகத் தோன்றுகிறார்கள்.

கடல்நீரைக் குடித்து மனிதன் உயிர் வாழ முடியுமா?

 

 
கடல்நீரைக் குடித்து மனிதன் உயிர் வாழ முடியுமா? என்றொரு ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மனிதன் குடிக்கும் நீரெல்லாம் வியர்வை, சிறுநீர் என வெளியேறிக் கொண்டே இருக்கிறது. அதனால் மேலும் மேலும் நீரைக் குடிக்கிறான். மனிதர்களின் நீர் தேவை பெருகிக் கொண்டே போகின்றன. இப்படியே போனால் ஒரு நாளில் குடிப்பதற்கு நல்ல தண்ணீரே இல்லாத நிலை ஏற்படும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

2.bp.blogspot.com JWujOaj1cUo VQq yP4hOI AAAAAAAADa8 GhEHkKacgio s1600 sea water - 2026

 

ஒருவேளை அப்படி ஏற்பட்டு விட்டால் மனிதன் கடல் நீரை குடித்து உயிர் வாழ முடியுமா? சிருநீரகம்தான் நமது உடலில் நீரை தனியாக பிரித்தெடுக்கிறது. இது சுத்தப்படுத்தும் கருவியாக செயல்படுகிறது. 

 
நம் உடலில் உள்ள கால்சியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஏனைய கழிவு உப்புகளையும் வெளியேற்றி சிறுநீர் வழியாக அனுப்புகிறது. சிறுநீர் உப்பு கரித்த சுவையில் இருப்பதற்கு இதுவே காரணம். இந்த உப்புகள் சிறுநீரைவிட கடல்நீரில் அதிக விகிதத்தில் இருப்பதால் தான் கடல் நீரை நம்மால் குடித்து பழகி கொள்ள முடியவில்லை. நம் உடலும் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. 
 
ஆனாலும், ஏ.பாம்பார்ட் என்ற பிரெஞ்ச் விஞ்ஞானி தனந்தனியாக படகில் நடுக்கடலில் நல்ல நீரை எடுத்துக்கொள்ளாமல் கடல் நீரை குடித்தே எந்த நோயும் வராமல் 45 நாட்கள் வரை தாக்குபிடித்தார். அத்தோடு தன் பரிசோதனையை முடித்துக்கொண்டார்.

2.bp.blogspot.com 3PgVQeQDGWI VQq Akheb3I AAAAAAAADbE 1l34jn9LeDA s1600 drinking water with sea salt - 2026

அப்படியானால் கடல் நீரில் வாழும் மீன் இனங்கள் உப்பு நீரை உட்கொண்டா வாழ்கின்றன என்ற கேள்வி எழுகிறது. மீனின் சிறுநீரகங்கள் மிகமிகச் சிறியவை அதோடு அசுத்தங்களை பிரித்தெடுக்கும் திறனும் அற்றவை. மாறாக மீன்களின் கழுத்து செதில்களில் நீரை சுத்தப்படுத்தும் மிகச் சிறந்த அமைப்பு ஒன்று உள்ளது. 
 
இது மீன்களின் ரத்தத்தில் உள்ள கழிவு உப்புகளை கூட பிரித்து எடுத்து சளி பொருளாக செதில் வழியாக வெளியேற்றி விடுகிறது. மீன்களின் செதில்களில் இத்தகைய சளிப்பொருள் அதிகம் தங்கியிருந்தால் நாம் அந்த மீன்களை உணவுக்காக வாங்குவதில்லை. கழிவுகள் அதிகமாக செதில் பகுதியில் சேர்ந்திருப்பது மீன் இறந்து அதிக நேரம் ஆகிவிட்டதை குறிக்கும். 
 
சரி, கடல்நீரை குடிக்கலாமா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

பேயோடு வாழ்க்கை நடத்தும் பெண்கள்

 

 
‘பேயை பார்த்ததுண்டா?’ என்று ஆண்களிடம் கேட்டுப் பாருங்களேன்.
உடனே ‘பேயை பார்ப்பதா..? 20 வருஷமா அதோடுதானே குடும்பம் நடத்துறேன்..!’ என்று அபத்தமான ஜோக் அடிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால், நிஜமாகவே பேயோடு குடும்பம் நடத்தும் பெண்கள் இருக்கிறர்கள்.

இறந்து போனவர்களை உயிரோடு இருப்பவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் சீனாவிலும் சூடானிலும் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் இந்த பழக்கம் இன்றும் தொடர்வதுதான் வேடிக்கை. இவர்கள் இப்படி பேயை திருமணம் செய்து  கொள்வதற்கும்  பல காரணங்களை வைத்திருக்கிறார்கள்.

 

 

1.bp.blogspot.com QUEf8QdCb6Y VQsmxM1PV0I AAAAAAAADbk QRVgbO - 2026

ஒருவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணம் நடக்கும் முன்பே மணமகனோ அல்லது மணமகளோ இறந்து விட்டால், அவர்களின் சொத்தும் உறவுமுறைகளும் கை விட்டு போய் விடக்கூடாது என்பதற்காக இறந்து போனவரின் ஆவியோடு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

நம்மூரைப் போலவே இந்த மூடநம்பிக்கை திருமணங்களில் அதிகம் பாதிக்கப்படுவது அங்குள்ள பெண்கள்தான். ஊரைக்கூட்டி, விருந்து வைத்து, இறந்து போனவர்களோடு திருமணம் முடிந்த கையோடு, அந்த பெண்ணை விதவையாக்கி மூலையில் உட்கார வைத்து விடுவார்கள். வாழ்நாள் முழுவதும் விதவையாக மணமகனின் குடும்பத்தோடு, இல்லாத புருஷனை நினைத்துக்கொண்டு கண்ணீர் மல்க வாழ வேண்டும்.

4.bp.blogspot.com HfuQQNOHid8 VQsmhlW9emI AAAAAAAADbU 57m2UruCTfY s1600 82acf739a8db4bf99909307cf3190b2b d5iy3he - 2026

இதுவே இறந்து போன மணமகளை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இப்படி சட்டங்களோ சடங்குகளோ கிடையாது. ஆவியோடு திருமணம் நடந்து முடிந்த நாலு நாட்கள் கழித்து உயிரோடு இருக்கும் இன்னொரு  பெண்ணுடனான திருமணத்திற்கு நாள் குறித்து விடுவார்கள்.

விதவைப்பெண்கள் வாழ்வதற்காகவே ஊரின் ஒதுக்குப்புறமாக ஒரு விடுதி இருக்கும். அங்குதான் விதவைப்பெண்கள் தங்களின் கடைசி காலம் வரை வாழ்வை கழிக்க வேண்டும். சீனர்களின் குடும்ப அமைப்புப்படி திருமணம் ஆகாத பெண்களுக்கு சமூகத்தில் எந்த அந்தஸ்த்தும் கிடையாது.

வசதியற்று, ஏழ்மை காரணமாக திருமணம் ஆகாமலேயே இருக்கும். பெண்களை இதுபோன்று இறந்து போனவர்களோடு திருமணம் முடித்து மணமகன் குடும்பத்து உறுப்பினர் ஆக்கிவிடுவார்கள்.

இறந்து போனவர்களின் ஆவிகள் அவர்களின் குடும்பத்தினரின் கனவிலோ, அல்லது ஆள் மூலமாகவோ, “இங்கே நான் தனிமையில் தவிக்கிறேன். எனக்கு உடனே திருமணம் செய்து வையுங்கள்!” என்று கேட்குமாம். ஆவியின் வேண்டுகோளை தட்டாது, உடனே யாரவது ஒரு ஏழை அபலைப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

4.bp.blogspot.com 7P74Do8zUE4 VQsmnx UZ9I AAAAAAAADbc vVv8C7mwjbA s1600 Chinese Man Married Dead Bride 9 - 2026

ஏதோ பேயக்குதானே திருமணம் செய்து வைக்கிறோம் என்று ஏனோதானோ திருமணம் நடத்தி விடமாட்டார்கள். பேய் திருமணங்களிலும் ஜாதகம் பார்த்தல், பொருத்தம் பார்த்தல், நிச்சயதார்த்தம், திருமண சடங்கு, வரதட்சணை என்று அத்தனை அம்சங்களும் உண்டு.

திருமணத்தின் போது  மணப்பெண்ணின் அருகில் இறந்துபோனவரின் அடையாளமாக அருகில் துணியால் செய்யப்பட்ட ஒரு ஆண் பொம்மை இருக்கும். அதுதான் மணமகன். காலம் பூராவும் உயிரற்ற அந்த பொம்மையொடுதான் வாழவேண்டும். இதுதான் பேயை கட்டிக்கொண்டு வாழும் பெண்களின் நிலைமை..!

மேலப்பாவூரில் மனுநீதி நாள் முகாம்

மேலப்பாவூரில் மனுநீதி நாள் முகாம்
பாவூர்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் மாவட்ட வருவாய் அலுவலரின் மனுநீதி நாள் முகாம்  நடைபெற்றது.
 முகாமிற்கு திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேலு தலைமை வகித்து முன்னோடி மனுநீதி நாள் முகாமிற்காக  மனுக்களுக்கு உரிய பதில் அளித்தார்.
  முகாமில் 10 முதியோருக்கு ஓய்வூதிய ஆணையும், 2 பேருக்கு உழவர் அடையாள அட்டையும் வழங்கினார் . முன்னதாக முகாமில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறையின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க உரையாற்றினர்.
  முகாமில் கீழப்பாவூர் ஒன்றியக்குழுத் தலைவர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசி கோட்டாட்சியர் வெங்கடேசன், தனித்துணை ஆட்சியர் ஷேக் முகம்மது, துணை வட்டாட்சியர்கள் ராஜேந்திரன், இருதயராஜ், அனிதா, ஒன்றியக்குழு உறுப்பினர் பாக்கியலட்சுமி முத்தையா, வேளாண்மை உதவி இயக்குனர் நல்லமுத்துராசா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா உட்பட துறை சார்ந்த அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
முகாமில் அதிகாரிகள் தங்களின் துறையின் நலத்திட்டங்களை பற்றி விரிவாக தெளிவாக எடுத்துக்கூறினார்கள் நல்ல விசயம் பாராட்டுக்கள்  முகாமில் கலந்து கொண்டவர்களில் 30 சதவீதம் துறைசார்ந்த அதிகாரிகள் 50 சதவீதம்  முதியோர் உதவித்தொகை பெற வந்தவர்கள் மீதி 20 சதவீதம் பல்வேறு குறைகளுக்காக மனுக்கள் கொடுக்க வந்தவர்கள் இவர்களின் பேச்சுக்கு பலன் இன்றி போனது காரணம் முதியவர்கள் தனக்கு ஓய்வூதியம் கிடைக்குமா என்று பார்க்க வந்தவர்கள் இவர்களுக்கு அதிகாரிகளின் பேச்சு எப்படி புரியும் மேலும் அதிகாரிகள் தான் சொல்ல நினைக்கும் திட்டங்களின் பயன்களை மட்டும் சொன்னாலே போதுமானது அதை விட்டு பலன் பெற்றவர்கள் என நீண்ட பட்டியலை வசிப்பதை தவிர்க்கலாம்  வருங்காலங்களில் அதிகாரிகள்

சதாப்தியில் ஒரு நாள்

 

 
பயணம் எப்போதுமே அலாதியானது. பயணம் தரும் பரவசம் வேறு எதிலும் கிடைக்காத புதிய அனுபவம். பயணத்தில் நாம் சென்று சேர்ந்த இடங்களை பெருமையாக பேசுகிறோம்..!

என்றைக்காவது நாம் பயணித்த வாகனங்களை பெருமை பேசியிருக்கிறோமா..?

கார், பஸ், ரயில், விமானம் என்று மாறி மாறிப் பயணிக்கிறோம். ஆனாலும், அந்த வாகனங்களை நாம் பெருமைப் படுத்தியதேயில்லை.
அதிலும் பொது வாகனங்களை நாம் கண்டு கொண்டதில்லை. பஸ்ஸும் ரயிலும் நம்மைச் சுமந்து சென்ற இடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் ரயில் எப்போதுமே ஸ்பெஷல்தான்..!

ரயில் ஒரு நகரும் வீடு. ரயிலில் ஓடியாட இடம் இருப்பதால் அது குழந்தைகளுக்குச் சொர்க்கம். கழிவறை இருப்பதால் பெண்கள், முதியவர்களுக்கு அது வசீகரம். படுப்பதற்கும், உட்கருவதற்கும், அரட்டை அடித்து, புத்தகம் வாசிப்பதற்கும் வசதியிருப்பதால் நமக்கும் அது ஆனந்தம். இது மட்டுமா ரயிலைப் பிடிப்பதற்கு… இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.

2.bp.blogspot.com 8KAo8q1h7IQ VQ0VO3ztzqI AAAAAAAADb4 fjqVQLlwjTw s1600 AVN SHATANDI 159498f - 2026

ரயிலுக்கும் எனக்கும் பால்ய வயது பந்தமுண்டு. சிறுவயதில் இருந்தே ரயில் என் வாழ்வோடு இன்னைந்தே வந்திருக்கிறது. எர்ணாகுளம், போத்தனூர், சங்ககிரி துர்க்கம், சேலம் எனச் சிறுவயதில் நான் குடியிருந்த வீடுகள் எல்லாமே ரயில்வே காலனிக்கு நடுவிலே இருந்தது. அந்த வீடுகளுக்கு முன் ரயில்வே டிராக் இருந்தததால் எப்போதும் ரயில்கள் தடதடவென ஓடிக்கொண்டே இருக்கும்.

காதைக் கிழிக்கும் ரயிலின் விசிலும், பதற வைக்கும் தண்டவாளச் சத்தமும் சிறுவனாயிருந்த எனது இரவு தூக்கத்தை விரட்டி மிரட்டின. ஆனாலும் ரயிலை மனம் விரும்பவே செய்ததது. என்னதான் யானை கரிய பெரிய உருவமாக இருந்தாலும், மிரள வைத்தாலும் சிறு வயது முதலே அதனுடனான ஈர்ப்பு நம்மை விட்டு போவதில்லை. ரயிலும் அப்படித்தான்..!

ரயிலுக்கும் எனக்குமான நெருக்கம் அதோடு நின்றுவிடவில்லை. ரயில் என்ஜினிலும் என்னை பயணிக்க வைத்தது. சிறுவயதில் ரயில் என்ஜினில் பயணிப்பது பிரமிப்பான அனுபவம். என் தந்தை ரயில்வேயில் பணிபுரிந்ததால் இவையெல்லாம் சாத்தியமானது. இப்போதெல்லாம் ரயில் என்ஜினில் டிரைவர்களை தவிர வேறு யாரும் பயணிக்கக்கூடாது என்ற விதி கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. அன்று அப்படியில்லை, அதனால் எனது சிறுவயது சாகசப் பட்டியலில் ரயில் என்ஜின் பயணமும் சேர்ந்துக்கொண்டது.

கிட்டத்தட்ட எல்லாவகையான எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணித்துவிட்டேன். ஆனாலும் ‘சதாப்தி’யில் பயணிக்க வேண்டும் என்பது எனக்கொரு கனவாகவே இருந்தது. இந்தியாவில் மிக உயர்ந்த சேவை தரும் ரயில்கள் சதாப்தியும் ராஜ்தானியும்தான்.

ராஜ்தானி நீண்ட தூரம் பயணிக்கும் ரயில். ராஜ்தானி என்ற ஹிந்தி வார்த்தைக்கு ‘த கேபிடல்’ என்று அர்த்தம். தேசத்தின் தலைநகரான நியூ டெல்லியை மாநில தலைநகரங்களுடன் இணைக்கும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்.

1969-ல் முதல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் நியூ டெல்லியிலிருந்து ஹவுராவுக்கு போகும் போது இந்தியாவின் மிக வேகமான ரயிலாக அதுதான் இருந்தது. 1.445 கி.மீ. தூரத்தை 17 மணி 20 நிமிடங்களில் அனாவசியமாக கடந்து பிரமிப்பை ஏற்படுத்தியது. இன்றைக்கு ராஜ்தானி வேகத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சதாப்தியும் துரண்டோவும் முதல் இரண்டு இடங்களை பிடித்துக்கொண்டன.

தற்போது இந்தியாவில் மிக வேகமான எக்ஸ்பிரஸ் ‘போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ்’தான். மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் அது செல்கிறது. சதாப்தி என்றால் 100 என்று அர்த்தம். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நூற்றாண்டு விழாவின் நினைவாக 1988 முதல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.

4.bp.blogspot.com NIQJGVFYqDU VQ0Vsw8dlwI AAAAAAAADcA HKBO2590RM s1600 train inside - 2026

சதாப்தி ஒரு பகல் நேர எக்ஸ்பிரஸ். இதில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும். முழுவதும் ஏஸி வசதி செய்யப்பட்ட நவீன ரயில் பெட்டிகளைக் கொண்டது. இதன் தூரம் 300 முதல் 700 கி.மீ.க்குள் இருக்கும். ஒரே நாளில் புறப்பட்ட ரயில் நிலையத்திற்கு மீண்டும் வந்து சேரும் விதமாக இயக்கப்படும்.

இப்படிப்பட்ட சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மைசூர் சென்று சேரும் எக்ஸ்பிரஸ் அது. காலை 6 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸில் 5.40-க்கே அமர்ந்துவிட்டேன்.

ஜன்னலோர சீட்.. மிகப் பெரிய கண்ணாடி ஜன்னல், வேடிக்கைப் பார்க்க வசதியாக இருந்தது. வெயில் அடித்தால் அதன் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள கனமான சிவப்பு நிற திரை இருந்தது. எனக்கு பயணத்தில் பராக்கு பார்ப்பது மிகவும் பிடிக்கும். அதனால் திரையை ஓரங்கட்டி வைத்தேன்.

ஏசியின் குளுமை அதிகமாகவே சில்லிட்டது. சரியாக 6 மணிக்கு ரயில் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் சுடச்சுட டீ, காபி வந்தது. உணவு வகைகளை பரிமாறுவதற்கென்றே ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் தனித்தனியாக ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் ஸ்நாக்ஸ், உணவு என பயணிகளின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள். இதற்கான தொகையை டிக்கெட்டோடு சேர்த்து வாங்கி விடுகிறார்கள்.

 

காலை நேரம் என்பதால் டீ குடித்து முடித்த கையோடு அன்றைய நாளிதழ்களை தந்தார்கள். தமிழ், கன்னடம், ஆங்கிலம், இந்தி நாளிதழ்களில் நமக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ரயிலில் இருக்கும் அனைவர் கையிலும் அன்றைய நாளிதழ்கள் இருப்பது அம்சமாக இருந்தது.

ரயிலுக்கு வெளியே காட்சிகள் வெகு வேகமாக பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன. ரயிலின் அசுர வேகம் எதுவுமே உள்ளுக்குள் தெரியவில்லை. புறப்பட்டு ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. நான்-ஸ்டாப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அரக்கோணம், காட்பாடி போன்ற பெரிய ரயில் நிலையங்கள் எல்லாம் மின்னல் வேகத்தில் பின்னால் ஓடின.

வேகத்தையும் வெளிக் காட்சிகளையும் ரசித்துக் கொண்டிருந்த என்னை ‘சார்’ என்ற அழைப்பு திரும்ப வைத்தது. திரும்பிய என்னிடம் ரயில் வாட்டர் பாட்டிலை கொடுத்தார், ஒருவர். அவருக்குப் பின்னால் இன்னொருவர் காலை ப்ரேக் பாஸ்ட்டை தந்து போனார்.

 
3.bp.blogspot.com - 2026
ஏசி சேர் கார்

மற்ற ஏசி சேர் கார்களில் இருப்பதுபோலவே இதிலும் நமக்கு முன்னால் இருக்கும் இருக்கையின் பின்புறத்தில் சிறிய டேபிள் போன்ற அமைப்பு இருக்கிறது. ஆனால் அவைகளை விட சற்று மேம்பட்ட வடிவத்தில் இது இருக்கிறது. உணவை சாப்பிட வசதியாக இருந்தது.

 

சதாப்தியில் இரண்டு வகையான வகுப்புகள் உள்ளன. முதல் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் சேர் கார், இது பெரும் பணக்காரர்களுக்கு. அடுத்து வெறும் ஏசி சேர் கார் நம்மைப் போல் வசதி இல்லாதவர்களுக்கு. முதல் வகுப்பில் ஒரு வரிசைக்கு (2+2) நான்கு இருக்கைகள் இருக்கும். காலை நீட்டிக் கொள்ள நிறைய இடம் இருக்கும். சொகுசான வசதிகள் கூடுதலாக இருக்கும்.

சாதாரண ஏசி சேர் கார் கூட மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ளதுபோல் இல்லாமல் சிறப்பாக உள்ளது. மற்றவற்றில் ப்ரவுன் கலர் அல்லது நீல நிறத்தில்தான் இருக்கைகள் இருக்கும். இங்கு பச்சை வண்ணத்தில் பூ வேலைப்பாடுகளுடன் கொஞ்சம் பணக்காரத்தனத்தை காட்டியபடி இருக்கைகள் இருக்கின்றன.

1.bp.blogspot.com TG300j7rVqU VQ6iec2IpNI AAAAAAAADcs 9dWpAClB90s s1600 executive class in shatabdi - 2026
முதல் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் சேர் கார்

சதாப்தி எக்ஸ்பிரஸ் சிலவற்றில் சினிமா பார்க்கும் வசதி இருக்கிறது. இவற்றில் டிவி சேனல்களும் பார்க்கலாம். கலை உணவு முடிந்த சற்று நேரத்தில் லெமன் ஜூஸ் வந்தது. குடித்து முடித்து ரிலாக்ஸ் ஆவதற்குள் வண்டியின் வேகம் குறைந்தது.

காலை 10.45 மணி பெங்களூர் ரயில் நிலையம் வந்தது. நாலேமுக்கால் மணி நேரமாக நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த ரயில் கொஞ்சம் நின்று நிதானித்து இளைப்பாறியது.

நீண்ட தொலைவு பெரிய பெரிய ஊர்களில் கூட நிற்காமல் வந்தது. பெட்டியின் உட்புற அலங்காரம், இடையிடையே நமக்கு வேண்டியதை கொடுத்துக் கொண்டிருப்பது என்று சதாப்தியின் பயணம் சிறப்பாகவே தெரிந்தது.

பெங்களூரில் 10 நிமிடம் நின்ற சதாப்தி மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது. மறுபடியும் வாட்டர் பாட்டில், ஜூஸ், மதியம் மீல்ஸ், ஸ்வீட் என்று வரிசைக் கட்டி வந்தது கொண்டிருந்தன. ரயில் மீண்டும் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

உள்ளே எப்போதும் ஒருவிதமான அமைதி நிலவிக்கொண்டிருந்தது. எனக்குப் பக்கத்தில் ஒரு ஹை-கோர்ட் லாயர் அமர்ந்திருந்தார். பெங்களுரிலிருந்து மைசூர் போவதற்குள் கேஸ்கட்டை முழுவதும் படித்து முடித்துவிட்டார்.

சாதாரணமான மற்ற ஏசி சேர் கார்களில் கூடப் பயணிகள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்கிறார்கள். இங்கு என்னமோ இனம் புரிய மௌனம் நிலவுகிறது. யாரும் பேசிக் கொள்வதில்லை. எல்லோரும் ஒருவித இறுக்கத்தில் சிக்கிக் கொண்டது போல் இருக்கிறார்கள்.

வசதி கூடக் கூட மனிதனின் பழகும் தன்மை குறைந்து விடும் போல் தெரிகிறது. மிதமிஞ்சிய வசதியும் கூட மனிதனின் ரசனையைக் குறைத்துவிடும் போலத் தோன்றியது.

மதியம் ஒரு மணிக்கு மைசூர் வந்து சேர்ந்தேன். 500 கி.மீ. பயணம் செய்து வந்த அலுப்புக் களைப்பு சிறிதும் இல்லை. அது சதாப்தி கொடுத்த சௌகர்யம்.

1.bp.blogspot.com ylwHVcfs2aA VQ6jS0G3TCI AAAAAAAADc0 wutNtRipsGg s1600 railway museum mysore%2B%281%29 - 2026
டிக்கெட் கவுண்டர்

மைசூர் வந்த பின் அங்கிருக்கும் ரயில் மியூசியத்தைப் பார்க்கவில்லை என்றால் பயணம் முழுமையடையாது. டெல்லியில் தேசிய ரயில் மியூஸியத்தைத் தொடங்கியப் பின், மற்றொரு ரயில் மியூசியம் தொடங்க வேண்டும் என்று நினைத்தார்கள். 1979-ல் கிருஷ்ணராஜா சாகர் ரோட்டில் புதிதாக அதனை அமைத்தார்கள்.

 
1.bp.blogspot.com xrS2zEssD5g VQ6l L1FG I AAAAAAAADdg CUui4 bgGI8 s1600 railway museum mysore - 2026
நேரோகேஜ் என்ஜின்

திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மியூஸியத்தில் மைசூரில் முதன்முதலாக இயக்கப்பட்ட நீராவி என்ஜின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கடுத்து ஆஸ்டின் ரயில் மோட்டார் கார் உள்ளது. இது சாலையில் ஓடும் கார்தான். அதை விலைக்கு வாங்கி அதில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி, டயருக்குப் பதில் இரும்பு சக்கரங்களைப் பொருத்தி ரயில் தண்டவாளத்தில் ஓடும் விதமாக மாற்றியிருக்கிறார்கள். உண்மையில் ஒரு கார் தண்டவாளத்தில் ஓடுவது வியப்பான ஒன்றுதான்.

4.bp.blogspot.com - 2026
ஆஸ்டின் கார்

மைசூர் மகாராஜா பயணம் செய்த நவீன வசதி கொண்ட இரண்டு ரயில் கோச் இங்குள்ளன. மகாராணிச் செல்வதற்கென்று தனியாக மகாராணி சலூன் உள்ளது. மகாராணிக்காக அலங்கரிக்கப்பட்ட கட்டில், மேக்கப் சாதனங்கள், டைனிங் டேபிள், ராயல் டாய்லெட் எல்லாம் உள்ளன.

2.bp.blogspot.com CFSQ3Mm1Ig VQ6kqaqR3bI AAAAAAAADdM By3rerqkKys s1600 railway museum mysore%2B%283%29 - 2026
மகாராணி சலூன்  

1900-ல் பெங்களூரில் இருந்து தும்கூருக்கு இயக்கப்பட்ட நேரோகேஜ் ரயில் என்ஜின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. ரயில்வே எப்படியெல்லாம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை இந்த மியூஸியத்தில் தெரிந்துக் கொள்ளலாம். திங்கட்கிழமை விடுமுறை. மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மியூஸியம் திறந்திருக்கும். நுழைவுக் கட்டணம் ரூ.10.

3.bp.blogspot.com g m997sDKxo VQ6k R4dNUI AAAAAAAADdU 13XIbYwEyEA s1600 railway museum mysore%2B%284%29 - 2026

இந்தியாவின் இரண்டாவது ரயில் மியூசியத்தைப் பார்வையிடுவது இன்றைய தலைமுறையினருக்கு அவசியமான ஒன்றாகும்.

‘ஓசோன்’ வாசம் எனக்கு பிடிக்கலை

 

 
மதுரையில் மழை பெய்வது அபூர்வம். கடந்த வாரம் அப்படி அபூர்வமாக மதுரைக்கு மழை வந்தது . கூடவே மீன் மார்க்கெட்டுக்குள் நுழைந்தது போல் ஒரு வீச்சம்.

 

3.bp.blogspot.com MLmU3Xu6fKc VRBjWQcj8VI AAAAAAAADeA XzuPJ9f3pgA s1600 rainydayswallpapercollectionseriesone01 - 2026

“என்னப்பா, இப்படி ஒரு வாடை அடிக்கிறதே?!” என்று என் மகன் கேட்டான்.

“இதுதான் ஓசோன் வாசம்..!” என்றேன்.

அவனால் நம்பமுடியவில்லை.

“போங்கப்பா, ஓசோன் நமக்கு எவ்வளவு நன்மை செய்கிறது. அது போய் இப்படி நாத்தம் அடிக்குமா..?”

நல்லவற்றில் நல்ல மணம்தான் வரும் என்பது அவன் நம்பிக்கை.

“ஓசோன் வெறும் நன்மையை மட்டுமே செய்யவில்லை. அது தீமையையும் செய்கிறது..!” என்றேன்.

நான் சொல்ல சொல்ல அவன் கண்கள் ஆச்சர்யத்தில் அகல விரிந்தன. ஏனென்றால், ஓசோன் ஒரு நல்ல வாயு என்று மட்டுமே அவனுக்கு போதிக்கப் பட்டிருந்தது.

சூரிய ஒளியில் இருந்து வெளிப்படக்கூடிய, தீங்கு செய்யும் ‘அல்ட்ரா வைலட் ரேஸ்’-யை கட்டுப்படுத்தி, நல்ல கதிர்களை மட்டும் நமக்கு வழங்கும் வேலையைத்தான் ஓசோன் செய்கிறது.  மனிதனுக்கு தோல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய புற ஊதா கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பும் இயற்கை ‘பில்டர்’தான் ஓசோன்.

2.bp.blogspot.com Deo7hMF gQ VRBhuGSrElI AAAAAAAADd0 zM3hXhGE720 s1600 int day oznone layer - 2026

‘ஓசோன்’ ஒரு வாயு. இளநீல வண்ணம் கொண்டது. இதன் மூலக்கூறில் மூன்று ஆக்சிஜன் அணுக்கள் இருக்கின்றன. கிரேக்க மொழியில் ‘ஓசோன்’ என்றால் வாசம் என்று பொருள்.

லேசான மீன் வாடை கொண்டது. ஓசோன் இடி மின்னலுடன் கூடிய காற்று வீசும் போது மீன் வாடையை நுகரமுடியும். அதுதான் ஓசோனின் மணம். அதிகாலையில் கடற்கரையில் நடக்கும் போதும் இதை உணர முடியும்.

ஓசோன் நன்மையையும் செய்யும். தீமையையும் செய்யும். ஓசோன் தாழ்வான உயரத்தில் இருக்கும் போது காற்றை அசுத்தப்படுத்தும். மனிதர்கள், விலங்குகள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும். சில தாவரங்கள் கருகிப் போகும்.

இதே ஓசோன் பூமியை விட்டு அதிகமான உயரத்தில் இருக்கும் போது சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களை தடுத்து. பூமிக்குள் ஊடுருவாமல் தடுத்து விடும். கடல் மட்டத்திலிருந்து 13 முதல் 20 கிலோ மீட்டர் வரையிலான உயரத்தில் ஓசோன் படலம் படர்ந்திருக்கிறது.

சூரியனில் இருந்து வெளியேறும் அதிக அளவு அலைவரிசை உள்ள ‘அல்ட்ரா வயலட்’ கதிர்களில் 97 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை ஓசோன் படலம் உறிஞ்சிக்கொள்வதால், அந்த கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கிறது.

பூமியில் ஓசோன் வாயுவின் அளவு குளிர்கலங்களில் சற்றே அதிகமாக இருக்கும். அதிலும் மார்கழி மாதத்தில் மிக அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

அதிகாலையில் கோலம் போடும் பெண்களும், நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் இதை கருத்தில் கொள்வது நல்லது. இல்லையென்றால் நுரையிரலின் கொள்ளவை குறைப்பது, நெஞ்சுவலி, தொண்டைக்கரகரப்பு, இருமல் போன்றவை இதன் பாதிப்பால் வரும்.

சி.எப்.சி.எனப்படும் ‘ப்ளோரோ கார்பன்’ மற்றும் பி.எம்.சி. எனப்படும் ‘ப்ரோமொப்ளுரோ கார்பன்’ ஆகிய வேதிப் பொருட்களுடன் புற ஊதா கதிர்கள் வினைபுரியும் போது குளோரின் மற்றும் புரோமின் வாயுக்கள் தனியே வெளியிடப்படகின்றன.

இந்த வாயுக்களின் ஒரு மூலக்கூறு ஓசோன் வாயுவின் ஒரு லட்சம் மூலக்கூறுகளை சிதைக்கின்றன. அப்போது ஏற்படும் இடைவெளிகள் மூலம் உறிஞ்சப்படாத புறஊதா பூமியில் நுழைகின்றன. இதைதான் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது என்கிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு 4 % ஓசோன் படலம் குறைகிறது. இதற்கு 76 % மனிதர்களின் செயல்பாடுகள்தான் காரணம். இததான் பெரும் கொடுமை. ஒரு சதவீதம் ஓசோன் குறைந்தால் 1 முதல் 1.5 லட்சம் கண்பார்வை இழப்பு ஏற்படும். தாவரங்களின் டி.என்.எ. பாதிக்கப்படும். உணவு உற்பத்தி குறையும், ஒளிசேர்க்கை பாதிக்கப்படும். மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும், நோயெதிர்ப்பு சக்தி குறையும், கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.

அதனால் குலோரோப்ளுரோ கார்பன் கலந்துள்ள பூச்சிகொல்லிகள் மற்றும் ஸ்பிரெக்கள் பயன்படுத்துவதை விவசாயிகள் குறைத்துக்கொள்ள வேண்டும். ப்ரோமோ மீத்தேன் கலந்த ரசாயன இடு பொருட்களை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.

மோட்டார் வாகனங்களை குறைத்து கொள்ள வேண்டும். சைக்கிளில் செல்வது, நடந்து போவது உடலுக்கு நல்லது. ஒசோனுக்கும் நல்லது. ஏர் கண்டிஷனர், பிரிட்ஜ் போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்தால் ஓசோன் ஓட்டை விழுவதை தடுக்கலாம்.

இப்படி நீண்ட விளக்கத்தோடு ‘தினத்தந்தி’க்கு நான் எழுதிய ஓசோன் கட்டுரையை வாசித்துக் காட்டினேன். பிரமிப்போடு கேட்டவன், “ஆனாலும் ஓசோன் வாசம் எனக்கு பிடிக்கவேயில்லை” என்று கூறி ஓடிவிட்டான்.

அந்த மழையின் குளிர்காற்றில் ஓசோனின் மணம் இன்னும் கலந்தே இருந்தது.

இப்போதும் வாழும் ‘மாதொருபாகன்’ கலாசாரம்

 

 
மனித குலத்தின் மிக நீண்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் ‘கற்பு’ என்ற புனிதமெல்லாம், மிக சமீபத்தில் உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் என்பது ‘மானுடவியல்’ படித்தவர்களுக்கு தெரியும்.

மாதொருபாகனில் வரும் வறடிக்கல் சுற்றும், பதினாலாம் நாள் திருவிழாவும் பலவடிவங்களில் பல்வேறு சமூகங்களில் இருந்தவைதான். இன்றைக்கும் கூட இப்படிப்பட்ட சமூகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வது, சில வருடங்களுக்கு முன்பு வரை ஆணுக்கு பெருமையான சமாச்சாரமாக இருந்தது. அதைப் போலவே சில சமூகங்களில் ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்வதும் சாதாரண நிகழ்வாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு இனம் தான் ‘டுரோக்பா’.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லாடக் மாவட்டத்தில் தாணு என்ற இடத்தில்தான் இந்த இன மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் ஒரு பெண் தன் விருப்பத்துக்குகேற்ப எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இவர்கள் கொண்டாடும் ‘கர்ப்பம் தரிக்கும் திருவிழா’ மாதொருபாகனை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் வினோதம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த திருவிழா நடைபெறும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரும் பவுர்ணமி நாட்கள் தான் அதற்கென்று ஒதுக்கப்பட்ட நாட்கள். இந்த விழாவில் கருத்தரிப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.

3.bp.blogspot.com fRR0pi3nDUs VRGzhg6wX I AAAAAAAADeY trZeusy10W8 s1600 CPE00405PNG - 2026

விழா நாட்களில் திறந்தவெளியில் பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் அனைத்து ஆண்களும் பெண்களும் ஒன்று கூடுவார்கள். முதலில் இதற்கென்றே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட மதுவகையை அனைவரும் அருந்துவார்கள்.
பின்னர் இசைக்கருவிகள் இசைக்க ஆடிபாடுவார்கள். நேரம் ஆக ஆக போதை தலைக்கேறும். உடைகள் குறையும். முடிவில் நிர்வாண நடனம் ஆடுவார்கள்.

அதன்பின் ஆணும் பெண்ணும் வெட்டவெளியிலே ஒன்று கூடுவார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் என்று விடிய விடிய உறவு நீடிக்கும். இப்படி தாங்கள் உறவு கொள்வதை மற்ற இன மக்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஊர் எல்லையில் பலத்த காவல் போட்டிருப்பார்கள். அதை மீறி யாரும் உள்ளே போகமுடியாது.

இந்த இன மக்கள் இப்படி தாறுமாறாக உறவு கொள்வதால் இவர்களுக்கு பாலியல் நோய்கள் அதிகம் வருகின்றன. முறையற்ற உறவு மேலும் பல சிக்கல்களை அவர்களுக்கு தருகின்றன. இதனாலே இந்த இனம் வேகமாக அழிந்து வருவதாக ஜம்மு காஷ்மீர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

 
படங்கள்  : felix features