Home Blog Page 5951

நானும்.. எனது இந்திராணியும்.. -ஒரு நிஜ காதல்!

 

 
காதலர் தினம் என்றதும் காதலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்த போது  40 வருட காதலையும் காதல் மனைவி இறந்தப் பின் அவரது உருவத்தோடும் வாழும் கோவிந்தராஜ் நினைவுக்கு வந்தார்.

உடனே ஊட்டி பஸ்ஸில் ஏறி மேட்டுப்பாளையம் போய் இறங்கினேன். அவர் வீட்டுக்குள் நுழைந்த போதுதான் காதல் எத்தனை புனிதமானது என்று தெரிந்தது.

1.bp.blogspot.com 7CCcjzVFbeI VN8n07mTRNI AAAAAAAADE8 uATEn3HByfA s1600 IMG 2553 - 2026
கோவிந்தராஜ்

தனது காதலை உணர்வுபூர்வமாக கூறினார், கோவிந்தராஜ்.

 

“இந்த வீடு இந்திராணி ஆசைப்பட்டு கட்டியது.  
 
இதன் ஒவ்வொரு செங்கலும் அவள் பெயரைச் சொல்லும். இந்த வீட்டுக்கான இன்ஜினியரும் அவள்தான்.  
 
முன்புறம் ஒரு போர்ட்டிகோ, பெரிய ஹால், மூன்று பெட்ரூம், கிச்சன், பூஜை அறை, மார்பிள் தரை என்று வசதிப்படைத்தவர்களின் வீட்டைப் போலவே பார்த்து பார்த்து கட்டினாள்.  
 
யார் கண் பட்டதோ இந்த வீட்டில் ஒருநாள்கூட வாழும் பாக்கியம் அவளுக்கு இல்லாமல் போனது..

மேட்டுப்பாளையம் காட்டூர் பேரிங் கம்பெனி ரோட்டில்தான் எங்கள் இருவரின் வீடும் இருந்தது.  எங்களது அப்பாக்கள் இருவரும் நண்பர்கள். 

 
அதனால் சின்ன வயதிலிருந்தே இந்திராணி வீட்டுக்கு நான் போய் வருவேன்.  பால்ய சிநேகம் என்பார்களே அப்படியொரு பந்தம். எனக்கும் அவளுக்கும்..! நான் 10ம் வகுப்போடு எனது படிப்பை முடித்துக் கொண்டேன். 
 
அதே தெருவில் ஒரு டெய்லர் கடை வைத்தேன். இந்திராணி அப்போது சின்னப் பெண்.  எனக்கும் அவளுக்கும் 10 வயது வித்தியாசம். அவளது பாவாடை சட்டையெல்லாம் கூட நான் தைத்துக் கொடுத்திருக்கிறேன்.  
 
அப்போதெல்லாம் இந்திராணி சாதாரணப் பெண்ணாகத்தான் எனக்குத் தெரிந்தாள். என்னுடைய 24வது வயதில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் கிளார்க் வேலை கிடைத்தது.  அரசு வேலை கிடைத்தப் பின்பும் கூட எனது டெய்லர் தொழிலை நான் விடவில்லை.  வேலை முடிந்து வந்ததும், கடையைத் திறந்து உட்கார்ந்து விடுவேன்.  
 
இப்படியே  இரண்டு வருடம் போனது.  வேலைப் பளுவால் இந்திராணி வீட்டுக்குக் போவது கிட்டத்தட்ட நின்று போனது. இந்திராணி கொஞ்சம் கொஞ்சமாக என் நினைவிலிருந்து விலகி சென்று கொண்டிருந்தாள்.
ஒரு நாள் கடையில் இருந்தபோது, அந்த இனிமை நிகழ்ந்தது.
 
 “இந்த சட்டையை கொஞ்சம் தைச்சுக் கொடுங்க…” என்று ஒரு பெண்ணின் இனிய குரல் கேட்டது.  நிமிர்ந்து பார்த்தேன். 
 
இந்திராணி…!!! 
 
என்னால் நம்ப முடியவில்லை..! 16 வயது பருவ மங்கையாக அவள்..!
 
 பிரமித்துப் போனேன். அழகு… அழகு…. அப்படியொரு அழகு..! இந்த இரண்டு வருடத்தில் பருவம் அவள் உடலை பக்குவமாக செதுக்கி வைத்திருந்தது.  
 
மனதுக்குள் மத்தளம்  அடித்தது.  ‘எனக்கென பிறந்தவள்’ என்று மனம் பரபரத்து பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டது.
எனது கடைக்கு எதிரே இருந்த தண்ணீர் குழாய் தேவதையின் கூடாரமாக மாறியது.  
 
அங்குதான் இந்திராணி காலையும் மாலையும் தண்ணீர் பிடிக்கக் குடத்துடன் வருவாள், பள்ளிக்கூடம் போகும்போது அவளைப் பின் தொடர்வது எனது வாடிக்கையானது.
ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கடிதம் கொடுத்தேன். அதுவொரு காதல் கடிதம்!  பதில் இல்லை.  பின் நேரடியாகவே எனது விருப்பத்தை சொன்னேன். ‘முடியாது’ என்று கூறிவிட்டாள். அதற்கு காரணமும் இருந்தது.
நாங்கள் இருவரும் வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பம் வசதியான குடும்பம். அவளுடைய குடும்பமோ ஏழ்மையானது.  
 
வர்க்கப் பேதங்கள் எங்களை விலக்கி வைத்தன.  ஆனாலும், என் மனது ‘இவள் உனக்கானவள்’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் என் காதலை இந்திராணி ஏற்றுக் கொண்டாள்.  நான்கு வருடங்களாக இருவரும் உயிருக்குயிராய் காதலித்தோம்.  இந்த வி­ஷயம் அரசல் புரசலாக எங்களின் வீடுகளுக்கும் எட்டியது. இருவர் வீட்டிலும் ஏகப்பட்ட எதிர்ப்பு.
அவர்கள் வீட்டில், இந்திராணியின் அத்தை மகனுக்கு அவளைக் கட்டி வைக்க தீவிரமான ஏற்பாடுகள் நடந்தன.
“எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உங்களோடுதான். இல்லேன்னா செத்துடுவேன் ” என்று என் முன் வந்து நின்ற பெண்ணை, ஒருநாள் மட்டும் பொறுத்துக்கொள்ள சொன்னேன்.
அன்றைக்கே லீவு போட்டு தாலி, பட்டு வேட்டி, பட்டுச் சேலை எல்லாம் வாங்கினேன். இரவோடு இரவாக இந்திராணிக்கு ஜாக்கெட் தைத்து முடித்தேன். 
4.bp.blogspot.com - 2026
திருமணத்தின் போது இந்திராணி கோவிந்தராஜ் 

விடியற்காலையில் இருவரும் பழனிக்கு வந்து விட்டோம்.  முருகன் கோயிலில் திருமணம் செய்வதாக இருந்தோம்.  ஆனால் கோயிலில் அனுமதிக்கவில்லை.  அதனால் மலைக்கு கீழே உள்ள விநாயகர் கோயிலில் தாலி கட்டினேன். அங்கு வந்திருந்தவர்கள் எங்களை ஆசீர்வதித்தார்கள்.

திருமணம் முடிந்த கையோடு பெங்களூருக்கு சென்றுவிட்டோம்.  உறவினர் ஒருவரின் வீட்டில்  ஒருவாரம் தங்கியிருந்தோம். அந்த காலத்தில் போன் வசதி அதிகமாக கிடையாது. அதிலும் சாமானியர்கள் போன் பேசுவது நினைத்து பார்க்க முடியாத அதிசயம். அதனால் நண்பர்களுக்கு கடிதம் எழுதினேன்.
அவர்களே எங்களுக்கான வீட்டை வாடகைக்கு எடுத்தனர். தேவையான சாமான்களை வாங்கி வைத்தார்கள்.  திரும்பவும் மேட்டுப்பாளையம் வந்தோம். இரு வீட்டிலும் எங்களை வேப்பங்காயாய் நினைத்தார்கள். எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
எட்டு வருடமாக எங்கள் குடும்பத்தினர் யாரும் எங்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை.  தாரத்துக்கு தாரமா, தாய்க்குத் தாயாக இருந்து என் மேலே பாசத்தை கொட்டினாள் இந்துராணி.
கூடவே அதிர்ஷ்டமும் வந்தது. எனக்கு புரமோ­ஷன் கிடைத்தது.  சம்பளம் அதிகமானது. வாழ்க்கை மிக சந்தோ­ஷமாக போய்க் கொண்டிருந்தது.  
 
செந்தில்குமார் என்ற மகனும், பூர்ணிமா என்ற மகளும் பிறந்தார்கள்.
பிள்ளைகள் எங்களை பெருமைப்படுத்தும் விதமாக நன்றாகப் படித்தார்கள். செந்தில் பி.இ. முடித்து பெங்களூரில் வேலைக்குப் போனான். பூர்ணிமா எம்.பி.ஏ., எம்.பில். படித்துவிட்டு கோபியில் திருமணம் செய்து கொடுத்தோம்.
எல்லாம் இருந்தும் ஒரு சொந்த வீடு இல்லையே  என்ற குறை இந்திராணியை வாட்டிக் கொண்டே இருந்தது. என் மகனுக்கு  வெளிநாட்டில் வேலை கிடைத்து போனபோது வீடு கட்டுவதற்கான காலமும் கணிந்தது.
காரமடை ரோட்டில் இடம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தோம். எங்கள் வீட்டுக்கான இன்ஜினியர் இந்திராணிதான். அவளின் விருப்பப்படிதான் வீட்டின் அமைப்பு இருந்தது.  
 
வீட்டை ஒவ்வொரு அங்குலமாக அலங்கரித்து ரசித்தாள். பூஜை அறை இப்படி இருக்கணும், சமையலறை இப்படி இருக்கணும், பெட்ரூம் இப்படி இருக்க வேண்டும் என்று ரசித்து ரசித்து கட்டினாள்.
3.bp.blogspot.com - 2026

வீட்டு வேலையும் முழுமையாக முடிந்தது. பால் காய்ச்ச  நாளும் குறித்தோம். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்  திடீரென்று இந்திராணிக்கு தாங்க முடியாத நெஞ்சு வலி ஏற்பட்டது, ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடினோம். வழியிலேயே அவள் உயிர் பிரிந்தது.  

 
அவ்வளவுதான் என் மொத்த வாழ்க்கையும் ஒரு நொடியில் முடிந்து போனது.வாழ்க்கையே ஸ்தம்பித்துவிட்டது.
எனக்கு வாழவே பிடிக்கவில்லை. 
 
உயிரோடும் உணர்வோடும் கலந்திருந்த என் இந்திராணி போன பிறகு வாழ்வே சூனியமாக இருந்தது.  இந்த வீடு அவள் உயிரை வாங்கிவிட்டதாக எனக்குப் பட்டது. இந்த வீட்டு பக்கமே நான் வரவில்லை. அதன் பிறகு நாங்கள் இருந்த வாடகை வீட்டிலேதான் தங்கியிருந்தேன்.
1.bp.blogspot.com uXtXqL7cYLA VN8n6GWbBDI AAAAAAAADFM YR FifkNmZU s1600 IMG 2547 - 2026
போட்டோவில் இந்திராணி 

என் பிள்ளைகள் புது வீட்டுக்குப் போகப் பிரியப்பட்டார்கள். எனக்குத்தான் அவள் இல்லாத வீட்டில் இருக்க மனமில்லாமல் இருந்தது.  திடீரென்று ஒருநாள் தோன்றியது. இந்திராணியை புதுவீட்டுக்கு கூட்டிப் போனால் என்ன என்று…

4.bp.blogspot.com 1fwqQso8WWc VN8nbL5DhoI AAAAAAAADEk 4T2LbrPi1G8 s1600 IMG 2532 - 2026
சிலையாக இந்திராணி 

எனக்கு கம்பி வேலை, சிமெண்ட் வேலை எல்லாம் தெரியும். அவள் முகத்தை மனதில் நினைத்துக்  கொண்டு சிலை செய்யத் தொடங்கினேன். ஒவ்வொரு நிலையிலும் சிலையை போட்டோ எடுத்து முகம் சரியாக இருக்கிறதா என்று அவளின் ஒரிஜினல் போட்டோவோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். ஆறுமாதமாக தன்னந்தனி ஆளாக இந்த சிலையை முடித்து பார்த்தபோது எனது இந்திராணியே நேரில் உட்கார்ந்திருப்பது போல் இருந்தது.

கிரகப்பிரவேசத்திற்கு அந்த சிலையுடன்தான் வருவேன் என்று அடம்பிடித்தேன். முதலில் எதிர்த்தவர்கள் பின் ‘ஓகே’ சொல்லிவிட்டார்கள். அப்போதிருந்து என்னுடன்தான் சிலை வடிவில் இந்துராணி இந்த வீட்டில் இருக்கிறாள்.
மகன் வெளிநாட்டில், மகள் புகுந்த வீட்டில் இருக்கும் நிலையில் நானும் அவளும் மட்டும்தான் இந்த வீட்டில் இருக்கிறோம். தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு என்று எந்த ஒரு திருவிழா வந்தாலும் இந்திராணிக்கும் புதுப்புடவை உடுத்தி வழிபடுவேன்.
2.bp.blogspot.com jV - 2026
இந்திராணி உருவத்துடன் கோவிந்தராஜ்

மரணம் எங்களைப் பிரித்திருந்தாலும்…. காதல் பிரித்ததில்லை… இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அத்தனையிலும் இந்திராணிதான் என் மனைவியாக வரவேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை…!”

பாக்கர் எனும் சித்தர்

 

 
அது ஒரு சிறிய ஊர்.

அந்த ஊருக்கு வித்யாசமான ஒரு முறம் விற்கும் வியாபாரி வந்திருந்தார். அவர் முறம் விற்பனை செய்வதை பார்த்து அந்த ஊர்காரர்கள் ஏளனமாக சிரித்தனர்.

“அம்மா, தாயே..! இந்த முறத்திற்கான விலை ஒரு வெள்ளி. இந்த விலை இறைவன் எனக்கு சொன்ன விலை. யாராவது ஒரு வெள்ளி கொடுத்து முறம் வாங்கினால் மீதி இருக்கும் முறங்களை இனாமாகத் தருகிறேன்.” என்று  கூறினார்.

முதலில் அவரை ஒரு பைத்தியகாரராகத்தான் எல்லோரும் நினைத்தனர். ஆனால் அவர் சொன்னபடியே ஒரு முறத்தை தவிர மற்ற தெல்லாம் இனாமாகக் கொடுத்த போது அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

அந்த முற வியாபாரியின் பெயர் பாக்கர். ஒரு முறத்தின் விலை ஒரு வெள்ளி என்று தினமும் கூவி விற்பது அவரது வாடிக்கையாக இருந்தது. கால தேவிதான் தினமும் ஒரு வெள்ளி கொடுத்து ஒரு முறத்தை வாங்கிச் செல்வாள். மற்ற முறங்களை அந்த ஊர் மக்கள் இலவசமாகப் பெற்றுச் செல்வார்கள்.

காலதேவி கொடுத்த அந்த ஒரு வெள்ளியையும் பாக்கர் முழுதாக செலவு செய்யமாட்டார். அந்த ஒரு வெள்ளியில் கால் வெள்ளியை தனது மனைவிக்கு கொடுப்பார். கால் வெள்ளிக்கு முறம் செய்வதற்கான மூங்கில்களை வாங்குவார். மீதமிருக்கும் அரை வெள்ளியை தெருவில் வீசி விடுவார்.

மறுநாள் வழக்கம்போல் முறம் விற்கச் சென்று விடுவார். பாக்கரின் மனைவியும் கால் வெள்ளிப் பணத்தில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தார். பாக்கரும் இல்லத்தில் இருந்து கொண்டே தினமும் தியானத்தில் ஈடுபடுவார். பாக்கர் மிகச்சிறந்த சிவ பக்தர். நடராஜரின் சிலம்பு சப்தம் கேட்ட பின்தான் தனது தியானத்தை கலைப்பார்.

பாக்கரின் மனைவி ஒரு நாள், “சுவாமி! என்னை மகிழ்விக்க கால் வெள்ளி போதும். என்றாலும் கூட, நீங்கள் தினமும் அரை வெள்ளியை வீதியில் எறிவது ஏன்?” என்று கேட்டார்.

“தினமும் மனதில் ஆசை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்கான ஒரு பயிற்சி அது. என்றாவது அந்த அரை வெள்ளிக்கு நீயோ..! நானோ..! ஆசைபடுகிறோமா என்பதை கால தேவி சோதிக்கும் விளையாட்டு, என்றும் வைத்துக் கொள்ளலாம். ஆசைக்கு அடிபணியாத பயிற்சியே இது!” என்று விளக்கம் அளித்தார்.

“எல்லாம் சரி சுவாமி. அடுத்து நமது வீட்டில் ஒரு விசேஷம் வருகிறது. அதற்கு நிறைய பாத்திரங்கள் தேவைப்படுகிறது. நீங்கள் தான் ஊர் முழுவதும் இலவசமாக முறங்களைக் கொடுத்து உள்ளீர்களே. அந்த பெண்களிடம் சென்று நமது விசேசத்திற்கு வேண்டிய பாத்திரங்களை வாங்கி வாருங்கள். பயன்படுத்தி விட்டு திரும்ப தந்து விடலாம்.” என்றார்.

பாக்கரும் மனைவி கூறியபடியே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று பாத்திரங்களைக் கேட்டார். அவர்களுக்கு பாக்கர் மிகவும் மட்டமானவராகத் தெரிந்தார். என்னதான் இருந்தாலும் முறம் விற்றுப் பிழைப்பு நடுத்தபவர்தானே… இருந்தாலும் இலவசமாக முறங்களைக் கொடுப்பதால் வேண்டா வெறுப்பாக  வீட்டில் இருந்த ஓட்டை உடைசல் பாத்திரங்களை பாக்கரிடம் கொடுத்தனர். இதன் மூலம் அந்த ஊர் பெண்கள் தன்மீது எப்படி பட்ட அன்பு வைத்துள்ளார்கள் என்பதை பாக்கர் புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்பமாக அமைந்தது.

2.bp.blogspot.com QW3X5EwStiI VOH2qAl7Q1I AAAAAAAADFc bnYBDSEXH3s s1600 sidtha - 2026

மூன்று நாட்கள் கழித்து வீட்டில் விசேஷம் எல்லாம் முடிந்த பின் வாங்கிய பாத்திரங்களை அந்தந்த வீட்டில் கொண்டுபோய் திருப்பிக் கொடுத்தார். பாக்கர் திருப்பிக் கொடுத்த பாத்திரங்களில் இருந்த ஓட்டை உடைசல் எல்லாம் சரி செய்யப்பட்டு புது பாத்திரமாக இருந்தது. அது போக ஒவ்வொரு பாத்திரத்துடனும் ஏதேனும் ஒரு சிறிய பாத்திரம் கூடுதலாக இருந்தது. கூடுதலாக இருந்த பாத்திரங்களைக் கண்டு அத்தனைப் பெண்களும் ஆச்சர்யம் அடைந்தனர்.

“பாக்கரே, எங்களது பழைய பாத்திரங்களை புதிதுபோல் பளபளக்கச் செய்து விட்டீர்களே! நன்றி. அதே சமயத்தில் நாங்கள் கொடுக்காத சிறிய பாத்திரங்களும் ஒவ்வொரு பாத்திரத்துடனும் உள்ளதே அது எப்படி?” என்று எல்லோரும் ஆவலாகக் கேட்டனர்.

“அது வேறொன்றுமில்லை. நீங்கள் கொடுத்த சமையல் பாத்திரங்கள் பகலில் வேலைக்கு உதவின. இரவில் அவை எல்லாம் குட்டி போட்டு விட்டன. நீங்கள் கொடுத்த பாத்திரங்கள் தானே குட்டி போட்டது. அது உங்களுக்கு உரியது தானே. அதனால்தான் உங்களிடம் கொடுத்து விட்டேன்” என்று விளக்கம் கூறினார். ஊர் முழுக்க பாத்திரம் குட்டி போட்டதே ஒரே பேச்சாக இருந்தது.

சிறிது நாட்கள் போனபின் மீண்டும் ஒரு விசேஷம் பாக்கர் வீட்டில் வந்தது. மறுபடியும் பாக்கருக்கு பாத்திரங்கள் தேவைப்பட்டது. இந்த முறையும் அந்த பெண்கள் வீட்டு வாசலில் நின்று பாத்திரங்களைக் கேட்டார். இப்போது யாரும் அவரை உதாசினப்படுத்தவில்லை. முறம் விற்பவர்தானே என்று மட்டமாகப் பார்க்க வில்லை. மாறாக எல்லா பெண்களும் சந்தோஷத்துடன் தங்களது கணவன் மார்களுக்குத் தெரியாமல் மிக நல்ல பாத்திரங்களை விலை உயர்ந்த பாத்திரங்களைக் கொண்டுவந்து பாக்கரிடம் கொடுத்தனர். பாக்கரும் எல்லா பாத்திரங்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு போனார்.

மூன்று நாட்கள் போனது.

குட்டிபோட்ட பாத்திரங்களோடு பாக்கர் வருவார் என்று மங்கையர்கள் மனம்நிறைந்த சந்தோஷத்தோடு பாக்கரை எதிர்பார்த்து காத்திருந்தனர். பாக்கர் திரும்பி வரவே இல்லை. பெண்கள் பதறிப் போயினர். எல்லா பெண்களும் ஒன்று சேர்ந்து பாக்கர் வீட்டுக்கு படையாக கிளம்பினர்.

அங்கே பாக்கரது மனைவி மட்டுமே இருந்தார். வந்திருந்த பெண்கள் கோபத்தோடு, “பாக்கர் எங்கே?” என்று கேட்டார்கள். உடனே பாக்கரின் மனைவி கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து சிந்தியது.

“அந்த கொடுமையை நான் எப்படி சொல்வேன். நீங்கள் கொடுத்த் பாத்திரங்களை எல்லாம் திருப்பிக் கொடுக்கலாம், என்று என் கணவர் நினைத்திருந்த போதுதான் அந்த விபரீதம் நடந்தது. நீங்கள் கொடுத்த பாத்திரங்களுக்கு எல்லாம் நோய் வந்து இறந்து போய்விட்டன” என்று துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதார்.

“என்னதான் அழுதாலும் மாண்டவைகள் மீளுமா? மீளமுடியாது… வேறு வழியில்லாமல் இறந்து போன எல்லா பாத்திரங்களையும் எடுத்துப்போய் தகனம் செய்து விட்டார். நேற்றுதான் பால் ஊற்றி வந்தார். அந்த கவலையிலே பைத்தியம் பிடித்ததுபோல் இருந்தார். எங்கே சென்றாரோ தெரியவில்லை. நீங்கள் தான் என் கணவரை எப்படியாவது என்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.” என்று கூறி குலுங்கிக் குலுங்கி அழுதாள். அந்தப் பெண்கள் எல்லாம் திடுக்கிட்டு போனார்கள்.

நல்லவன்போல் நடித்து தங்களை ஏமாற்றி விட்டதாக கூறிய அவர்கள் நடந்த எல்லாவற்றையும் தங்கள் கணவன்மாரிடம் தெரிவித்தனர். எல்லோரும் ஒன்று சேர்ந்து மன்னரிடம் முறையிட்டனர்.

அந்த மன்னர் தீவிர சிவ பக்தர். பாக்கரின் அருமைகளைத் தெரிந்தவர். இருந்தாலும் மக்களுக்காக விசாரணைக்கு உத்தரவிட்டார். பாக்கர் அரசவைக்கு  வந்தார். பாக்கரை மானசீகமாக வணங்கிய மன்னர், “பாக்கரே, நடந்தவற்றைக் கூறுங்கள். அனைவரும் ஆத்திரமாக உள்ளனர்.” என்று மன்னர் கேட்க, “அரசரே! இந்த ஊர் மக்களிடம் முன்பு ஒரு முறை பாத்திரம் வாங்கினேன். திரும்ப கொடுத்து விட்டேன். உண்மையா என்று கேளுங்கள்?” என்றார்.

“ஆமாம்! அரசே, பாக்கர் சொல்லுவது உண்மையே. முன்பு கொடுத்த பாத்திரங்களைத் திருப்பிக் கொடுத்தார். கொடுத்தப் பாத்திரத்துடன் கூடுதலாக ஒரு சிறிய பாத்திரத்தையும் கொடுத்தார். என்ன இது? என்று கேட்டதற்கு பாத்திரங்கள் குட்டி போட்டதாகச் கூறினார். இரண்டாவது முறை நாங்கள் பாத்திரம் கொடுத்தோம் அதை திரும்ப தரவேயில்லை. அதை கேட்டால் பாத்திரங்கள் எல்லாம் இறந்து விட்டது என்று பொய் கூறுகிறார். பாக்கரின் இந்த ஏமாற்று வேலையை தண்டிக்க வேண்டும் மன்னா…!” என்று அனைவரும் கூறினர்.

“அரசே, மோசமான எண்ணம் நாசத்தை விளைவிக்கும். பிறந்தவை இறக்கும் என்பது உலக நியதி. பாத்திரங்கள் அன்று குட்டி போட்டன. பிறப்பும் இறப்பும் இயற்கைதானே. அன்று பாத்திரங்கள் புதியதாய் பிறந்ததை மக்கள் எப்படி நம்பினார்கள்…? இப்போது, பிறந்த பாத்திரம் இறந்துபோனதை ஏன் நம்பவில்லை!” என்று பாக்கர் கேட்டார்.

மக்களின் பேராசையை அகற்றுவதற்காக சித்தர் விளையாடிய விளையாட்டு என்பதை புரிந்து கொண்ட மன்னர் “சித்தர் பெருமானே! பக்குவப்பட்டவர் நீங்கள்! இந்த அரை வேக்காட்டு மனிதர்களிடம் குறைவில்லா மனதை எதிர்பார்க்க முடியுமா! அதனால் அவர்களின் பாத்திரங்களை அவர்களுக்கு திரும்ப அருளும்படி வேண்டுகிறேன்” என்றார் மன்னர்.

பாக்கரும் “அழுக்கடைந்த பாத்திரங்களை தூய்மையான பாத்திரங்களாக மாற்ற நினைத்தது என்றுடைய தவறுதான்” என்று கூறி தனது ஞான திருஷ்டியால் எல்லா பாத்திரங்களையும் வரவழைத்து கொடுத்து விட்டு யார் கண்ணிலும் படாமல் மாயமாய் மறைந்து போனார்.

மனிதர்களின் பேராசையை அகற்ற பாக்கரும் எவ்வளவோ செயல்களை செய்தார். அது அந்த மக்களுக்கு  தெரியாமல் போனதில் பாக்கருக்கு வருத்தமே !

பத்மஸ்ரீ விவசாயியுடன் ஒரு நாள்  

 

படிப்பு இல்லை, விவசாயம் தெரியவில்லை, கையில் பணம் இல்லை, காலம் கை கூடவில்லை,  வாழ வழியில்லை. இனி நமக்கு வாழ்வும் இல்லை என அன்று மனைவியையும் அழைத்துக் கொண்டு தற்கொலைக்கு துணிந்தவர்தான் டாக்டர் வெங்கடபதி ரெட்டியார்.

இன்றோ இந்தியாவின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானிகளில் அவர் ஒருவர். பத்மஸ்ரீ விருது பெற்ற ஒரே விவசாயி.  தொடர்ந்து விருதுகளை குவித்துக் கொண்டே இருப்பவர்.

 
ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். 100 வகையான கனகாம்பரம், சவுக்கு மரம், கொய்யா மரம் என்று கை நிறைய காப்புரிமைகளை வைத்திருப்பவர்.

புதுவை மாநிலம் கூடப்பாக்கம் கிராமத்தில் இருக்கும் அவரது இல்லத்தில்  வெங்கடபதியையும் அவரின் ஆய்வுக்குத் துணையாக நிற்கும் மகள் லட்சுமியையும் சந்தித்தேன். நிறைய பேசினார்.  பல வி­ஷயங்களைச் சொன்னார்.  

 
ஒரு முன்னோடி விவசாயி என்பதையும் கடந்து அவர் வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாய் இருக்கின்றன. 
 
 அவரது வாழ்வு மிகப் பெரிய தன்னம்பிக்கையைத் தருகிறது.  மனிதன் மனது வைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்ற உத்வேகத்தை தருகிறது.  ஒரு அருமையான பெட்டகமாக அவர் வாழ்க்கை அமைந்திருக்கிறது. அவரிடம் பேசியதிலிருந்து…

4.bp.blogspot.com 4SI577bXnw VONDvOAcZ6I AAAAAAAADGc gWjm1voZ2wg s1600 IMG 2683 - 2026
டாக்டர் வெங்கடபதி ரெட்டியார்
3.bp.blogspot.com bbrXKOurSQc VONDMD dKAI AAAAAAAADFs i2607hJGBRE s1600 IMG 2669 - 2026
மகள் லட்சுமி

“நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே விவசாயக் குடும்பத்தில்தான். சுட்டுப் போட்டாலும் எனக்கு படிப்பு வரவில்லை. 4-ம் வகுப்போடு மொத்தப் படிப்பையும் நிறுத்திக் கொண்டேன். விவசாயமும் பிடிபடவில்லை. இதற்குள் திருமணம் வேறு. 

 
வாழ்க்கை பிடிபடுவதற்குள், இறுதி கட்டத்திற்கு வந்து விட்டேன். வறுமை என்னுடன் வசதியாய் வாழ்ந்தது.  பசியோடும் பட்டினியாகவும் நாட்கள் நகர்ந்தன. இனி வாழ வழியில்லை என்று மனைவியோடு தற்கொலை செய்ய நினைத்தேன்.

“தற்கொலைதான் தீர்வுன்னா அத முன்னாடியே செஞ்சிருக்கலாமே, என்ன எதுக்கு கட்டிக்கிட்டு வரணும்’ என்றார், மனைவி. நெற்றிப் பொட்டில் ஓங்கி அடித்தன அந்த வார்த்தைகள். அவள் பேச்சால் மனம் மாறியது. வாழ வேண்டிய நிர்பந்தம் உருவானது.

மறுநாளே பெரியகுளம் போனேன். தோட்டக்கலை இயக்குநர் சம்பந்தமூர்த்தியிடம் போய் நின்றேன். “ஐயா! எனக்கு பொழைக்கத் தெரியல. ஏதாவது வழி சொல்லுங்கன்னு’ கேட்டேன். அவர் 10 கனகாம்பரம் கன்றுகளை கையில் கொடுத்து ‘பிழைத்துப் போ’ என்றார். எனக்கு எதுவும் புரியவில்லை. பிழைக்க வழி கேட்டால் கனகாம்பரம் செடியை தருகிறாரே என்று எண்ணியபடி என் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வைத்தேன். செடிகள் தளிர்த்தன.  மலர்கள் பூத்தன.

அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள் மலர்களைக் கேட்டார்கள். 10 சென்டில் 300 செடிகள் நட்டேன். வியாபாரம் சூடு பிடித்தது.  புதுவை மலர்க் கண்காட்சி நடந்தபோது 25 கனகாம்பரம் செடியைக் கொண்டு போனேன். அங்கு ஒரு செடியை ரூ.500க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். என்னால்  வெறும் ரூ.5-க்கு தரமுடியும் என்றேன். விவசாயத்துறையில்  இருந்து ஒரு லட்சம் கனகாம்பர கன்றுகளுக்கு ஆர்டர் கிடைத்தது.

ஆர்டர் கிடைத்துவிட்டது. இப்போது எப்படி கன்றுகளை உற்பத்தி செய்வது.  ஒரு செடியில் இருந்து மூன்று செடிகளைத்தான் உருவாக்க முடியும்.  மீண்டும் சம்பந்த மூர்த்தியிடம் ஓடினேன். அரசு கொடுத்த ஆர்டரை காட்டினேன். ஒரு லட்சம் செடியை எப்படி பதியம் போடுவது என்று கேட்டேன். அவர் கணு பதியம் முறை சொல்லிக் கொடுத்தார்.  செடிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கணுப் பதியம் போட்டேன்.

என் மனைவி எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகவே நினைத்தார். பெரிய செடியைப் பதியம் போட்டாலே வரமாட்டேங்குது. இது துண்டு துண்டா வெட்டிப் போட்டா எப்படி வரும்? என்றார்.  வேர் ஊசி முறையில் ஒரு லட்சம் கன்றுகளை உற்பத்தி செய்து கொடுத்தேன். அடுத்த மலர் கண்காட்சியில் அதை விற்பனை செய்தார்கள். ஒரே டிடியில் ரூ. 5 லட்சம்  தொகை கொடுத்தார்கள். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

அறியாமைதான் விவசாயின் முதல் எதிரி. கனகாம்பரம் எனக்கு நல்ல வருமானத்தை தந்து கொண்டிருந்தது.  அப்போது ஒரே கலர் கனகாம்பரத்தைத் தருகிறீர்களே, பல வண்ணங்களில் கொடுத்தால் என்ன என்று பெண்கள் கேட்டார்கள். நான் மறுபடியும் சம்பந்த மூர்த்தியிடம் போனேன். அவர் கலர் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் குரோமோசோம் மாற்ற வேண்டும் என்றார். பயோடெக்னாலஜி, டிஸ்யூ கல்சர், காமா ரேடியே­ன், கெமிக்கல் மியூட்டே­ன்  இவற்றையயல்லாம் செய்தால்தான் கலர் மாற்ற முடியும் என்றார்.

 சம்பந்த மூர்த்தியின் பேச்சை அப்படியே  டேப் ரெக்கார்டரில் பதிவு செய்து மீண்டும் மீண்டும்  கேட்டு தொழில்நுட்பத்தைக் கற்றேன்.
காமா ரேடியே­ன் என்ற கதிர் வீச்சு சமாசாரம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது.  அந்த வேளையில் ஒரு டிவி  சேனல் எனது பேட்டியை ஒளிபரப்பியது. அதில் நான் காமாரேடியே­ன் மட்டும் கிடைத்தால் 100  வண்ணங்களில் கனகாம்பரம் செடியை உருவாக்கி விடுவேன் என்றேன்.  இதை கேட்ட கல்பாக்கத்தினர் எனக்கு அனுமதியளித்தனர். செடிகளைக் கொண்டு ரேடியே­ன் கொடுத்தேன்.  திரும்பி வீட்டுக்கு வருவதற்குள் எல்லா செடிகளும் செத்துவிட்டன.

அப்போதுதான் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனிடம் இதுபற்றி கேட்டேன். காமா ரேடியே­ன் போன்ற பெரிய வி­யங்கள் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ‘ஃபார்மர்  ஜீனியஸ் வித்தவுட் ஃபார்மல் எஜூகே­ன்’ என்று பாராட்டினார். பின் செடி தாங்கும் அளவுக்கு காமா ரேடியே­ன் கொடுங்கள் என்றார். கனகாம்பரத்திற்கு 1கே.ஆர். கிலோரேட்ஸ் 5 வரை கதிர்வீச்சு செலுத்தி புதிய இனம் உருவாக்கினேன்.

அதன்பிறகு காப்புரிமை பற்றி அன்றயை ஜனாதிபதி அப்துல்கலாமிடம் கேட்டேன். ஒரு வருடத்தில் எனக்கு காப்புரிமை கிடைத்தது. தாய், தந்தை, எப்படி குரோமோசோம்களை மாற்றினீர்கள். டிஎன்ஏ எடுத்து கொடுப்பது என்று நிறைய வேலைகள் காப்புரிமை பெறுவதில் உள்ளன.  ஒரு வழியாக அதையும் பெற்றேன்.

கனகாம்பரத்தில் பல வகைகளை உருவாக்கியப்பின், சவுக்கு மரம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். என்னுடைய புதிய சவுக்கு மரம் 5 ஆண்டுகளில் 200 டன்  விளைச்சல் தரக்கூடியது. புயல், வறட்சி, மழை போன்ற எல்லா இயற்கை சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடியது. மற்ற மரங்களைப் போல் இல்லாமல் இந்த மரத்தை இலையில் இருந்து வீரிய ரகமாக உற்பத்தி செய்தேன். அதன்பின் கொய்யா, இப்போது மிளகாய்.

3.bp.blogspot.com ss y2Van7sE VONDPg 8sGI AAAAAAAADF8 LZoJ7 2eI18 s1600 IMG 2656 - 2026
நெய் மணம் கமழும் மிளகாய்
 

மிளகாயில் நெய் மணம் கமழும் மிளகாய் இயற்கையாகவே கிடைக்கிறது. தென் ஆப்பிரிக்கா, அமேசான் காடுகளில் 6,000 அடி உயரத்திற்கு மேல் உள்ள அடர்ந்த காடுகளில் இது இயற்கையாக விளைகிறது.

இந்த மிளகாய் எனக்கு கிடைத்தது ஒரு சுவாரசியமான அனுபவம். காடுகளில் வளரும் கனகாம்பர இனங்களைக் கண்டுபிடிப்பதற்காக மலைப் பகுதிக்குச் சென்றேன். மலைவாழ் மக்கள் உதவியில்லாமல்  அங்கு செல்லமுடியாது. அப்படி போகும்போது பழங்குடியினர் வீட்டில் புதுவிதமான ஒரு மிளகாய் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அந்த மிளகாய் பற்றி விசாரித்தேன்.
அவர்கள் இந்த மிளகாயை நீண்ட வாக்கில் நான்காக பிளந்து குழம்பில் போட்டால், குழம்பு கொதித்தப்பின் சோற்றில் பிசைந்து சாப்பிடும்போது நெய் மணம் வீசுகிறது என்கிறார்கள். இதை நான் நம்ப மறுத்ததால் என் எதிரே குழம்பு வைத்து அதில் ஒரு மிளகாயை பிளந்து போட்டு  இறக்கினார்கள். குழும்பில் நெய் மணம் வீசியது.

பின் எங்கு விளைகிறது, எங்கு கிடைத்திருக்கிறது என்று கேட்டேன். அவர்கள் பதில் கூறவில்லை. ஒரு கிலோ மிளகாயை ரூ.350க்கு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.  மனைவியிடம் இதை கூறினேன். நம்ப முடியாமல் அரை மனதோடு சமைத்தார்கள். நெய் மணம் கமழ்ந்தது. அதன் பின்னே நம்பினார்கள்.

இந்த மிளகாய் நமது மேற்கு மலைத் தொடர்ச்சி மலையில் மூணாறுக்கு பக்கத்தில் உள்ள வனப் பகுதியில் இயற்கையாக வளர்கிறது.  அந்த மிளகாயை சாதாரண நிலப்பரப்பில் கடல் மட்டத்திற்கு இணையாக விளைவித்து மகசூல் எடுத்ததுதான் சமீபத்தில் நான் கண்டு பிடித்தது.

நெய் மிளகாயில் இரண்டு பலன்கள் உண்டு. உணவில் காரமும்  நெய் மணமும் ஒரே மிளகாயில் கிடைத்துவிடும். உண்மையான நெய்யை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பயன்படுத்த முடியாது. இது அவர்களுக்கு ஒரு சுவையான உணவைத் தரும்.

4.bp.blogspot.com FkRGDAi kQo VONDNu97wMI AAAAAAAADF0 XiHcJTbJFTk s1600 IMG 2665 - 2026
பரமக்குடி மிளகாய் ரகத்தில் உருவாக்கிய நெய் மிளகாய்

நமது மிளகாயில் நம்பர் ஒன் ரகம் பரமக்குடி மிளகாய்தான். இந்த மிளகாய்தான் குண்டாக பார்ப்பதற்கு அழகாய் இருக்கும். அதிக காரம் இருக்காது, விதையும் குறைவு இந்த மிளகாயில் நெய் வாசம் வரும் விதமாக புதிய மிளகாயை உருவாக்கியுள்ளேன்.

இந்த மிளகாயைப் பொங்கல், ரவா பொங்கல், உப்புமா, கிச்சடி, பூரி குருமா போன்றவற்றை தயாரிக்கும்போது ஒரு நெய் மணம் கமழும் மிளகாயை சேர்த்து சமைத்தால் நெய் மணம் கமழும், சுவையும் கூடும். மசால் வடை, உளுந்து வடை, சம்சா, பஜ்ஜி, பப்ஸ், போண்ட இவைகளை தயாரிக்கும்போது ஒரு மிளகாயை மிக்ஸியில் நன்கு அரைத்து மாவுடன் அல்லது மசாலாவில் சேர்த்து சமைத்தால் சுவை கூடும்.

3.bp.blogspot.com - 2026
நெய் மிளகாய் நாற்று

கதம்ப சாம்பார், மோர்குழம்பு, வத்த குழம்பு, கூட்டு வகைகள் தயாரிக்கும்போது ஒரு மிளகாயை நான்காக பிளந்து பருப்புடன் வேக வைத்து சமைத்தால் நெய் மணம் கமழும். சுவையும் கூடும். பிரியாணி, சிக்கன் 65, கோழிக்குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு போன்றவற்றிலே இதை பயன்படுத்தலாம்.

ஐந்து நபர்களுக்குத் தேவையான அளவிற்கு சமைக்கும்போது ஒரு மிளகாய் பயன்படுத்தினால் போதும். சாதாரணமாக பயன்படுத்தும் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டாம்.

ஃபிரிட்ஜில் வைத்தால் 50 நாள் வரை  கெடாமல் இருக்கும். இந்த  மிளகாய் குடை மிளகாய் இனத்தைச் சேர்ந்தது. ஆனாலும் காரம் 10 மடங்கு அதிகம். மலையில் விளையும் இந்த மிளகாயை  இங்கு விளைவிக்க பல ஆராய்ச்சி செய்துள்ளோம்.  இதற்கு என் மகள் லட்சுமியின் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமானது. அதனால் தான் எல்லா விழாக்களிலும் என் மகளையே முன்னிறுத்துகிறேன்.

நெய் மிளகாய் புதுவை கடைகளில் கிடைக்கிறது.மக்கள் சுவைத்து பாராட்டியிருக்கிறார்கள். விரைவில் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் விளைவித்து விற்கப் போகிறார்கள் ” என்று கூறி முடித்தார் பத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார்.

4.bp.blogspot.com wXgsLrxzVfU VONDm6npA I AAAAAAAADGM wmJR9UT wGs s1600 IMG 2679%2B %2Bfinal - 2026
நெய் மிளகாயை கையில் ஏந்தியபடி லட்சுமி

விவசாயத் தொழில் நுட்பங்கள் குறித்து பத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியாரிடம் பேச அவரது கைப்பேசி எண்  94432 26611

இனி பெண்கள் ‘அதற்கு’ கவலைப் படவேண்டியதில்லை

 

 
வெளியூர் பயணம் என்றாலே பெண்கள் கூச்சத்தோடு நெளிவார்கள்.
பயணம் செய்யும் பெண்களுக்கும் சரி…! பாத்ரூம் வசதியில்லாத கடைகளில் வேலைப் பார்க்கும் பெண்களுக்கும் சரி..! இருக்கும் மிகப் பெரிய தொந்தரவு இயற்கை உபதைதான். இதற்கு பயந்து பல பெண்கள் வெளியில் சென்றால் தண்ணீர் கூட குடிப்பதில்லை.

1.bp.blogspot.com ZPrUDmfx I4 VOahaklTPtI AAAAAAAADIQ YAblNCJhJjo s1600 perfect girl - 2026

தேவையான அளவு தண்ணீர் குடிக்காததால் உடலில் நீர் பற்றாக்குறையும் தொடர்ந்து பல மணி நேரம் சிறுநீரை அடக்குவதால் சிறுநீர்ப்பாதையில் தொற்று நோயும் ஏற்படுகிறது.

பெண்களின் இந்த அடக்க முடியா பிரச்சனைக்கு தீர்வு வந்துவிட்டது. ‘ஈவா டிண்டர்’ என்ற ஜெர்மானியப் பெண் அதை கண்டுபிடித்துள்ளார். அதற்கு ‘பாக்கெட் யூரினல்’ என்று பெயர். இதை டயபர் போல அணிந்து கொள்ள வேண்டும்.

இது சிறுநீரை ஜெல்லாக மாற்றி சேர்த்து வைக்கிறது. பெண்ணின் பிறப்புறுப்பில் இது கச்சிதமாக ஒட்டிக்கொள்கிறது. இதில் இருக்கும் ‘பாலிமர் கிரிஸ்டல்’ சிறுநீர் வெளியேறும் வேகத்தை விட 30 மடங்கு விரைவாக உறிஞ்சி சிறுநீரை கெட்டியான ஜெல்லாக மாற்றிவிடும்.

ஒருமுறைக்கு 300 மில்லியில் இருந்து 500 மில்லி வரை சிறுநீர் வெளியேறுகிறது. இதன் கொள்ளளவு ஒரு லிட்டர். தேங்கிய சிறுநீர் வெளியே கசிந்து விடுமோ என்ற பயமும் தேவையில்லை. துர்நாற்றம் வருமோ என்ற கவலையும் இதில் இல்லை.

ஒரு லிட்டர் நீர் உறிஞ்சப்பட்ட ஜெல் பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக ஒரு பைவ் ஸ்டார் சாக்லேட் அளவில் தான் இருக்கும். 52 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

நிற்கும்போது, அமரும்போது, படுக்கும்போது என்று எல்லா சூழ்நிலையிலும் இதை அணிந்து கொள்ளலாம். கார் ஓட்டும் போது மட்டும் இதை அணிய வேண்டாம் என்று இதை தயாரிக்கும் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

இதை உபயோகிப்பது போலவே அழிப்பதும் சுலபம். குப்பைதொட்டியில் போட்டுவிடலாம். சுற்றுசூழல் பதிப்பு ஏற்படாது.

சரி, ஆண்களுக்கு எதுவும் இல்லையா? என்ற கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ஆண்களுக்கும் இது உள்ளது. பெண்களுக்கு ‘லேடி பேக்’ என்றும், ஆண்களுக்கு ‘ரோடு பேக்’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். இது பெண்களின் பயணத்தை இனிமையாக்குகிறது என்று இப்போதே பெண்கள் சொல்ல தொடங்கி விட்டார்கள். 

மாமனாக வந்து வழக்குரைத்த மகேசன்

 

மதுரை மாநகரில் தனபதி என்ற வணிகன் சிறப்போடு வாழ்ந்து வந்தான். வணிகத்தை தொழிலாகக் கொண்ட அவனுக்கு குபேர யோகம் வாய்த்திருந்தது. அவனின் மனைவி சுசீலைக்கு அழகும் நற்குணங்களும் நிறைந்திருந்தது. ஆனாலும் அவளுக்கு குழந்தை பாக்கியம் மட்டும் கைகூடவில்லை. எல்லா செல்வங்கள் இருந்தும் கொஞ்சி மகிழ ஒரு மழலைச் செல்வம் இல்லையே என்ற வருத்தம் அவர்களை வாட்டி எடுத்தது.

    ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர். தனபதி தனது தங்கை மகனையே தனது மகனாக ஏற்று கொண்டான். அவனின் மனைவி சுசீலையும் அவனை அன்போடு வளர்த்து வந்தாள். பலவகையான ஆபரணங்களை அவனுக்கு அணிவித்து அழகுறச் செய்தான்.

4.bp.blogspot.com P2clfynjNrc VOgEv3QlJkI AAAAAAAADJM bsHK7IZY0U8 s1600 TN 151846000000 - 2026

    நாட்கள் செல்ல செல்ல தனபதி நன்றி மறக்கத் தொடங்கினான். தன் மனைவி மீது கொண்ட காதல் மயக்கத்தில் தன் தங்கையுடன் அடிக்கடி சண்டையிட்டான். இது தங்கைக்கு கோபத்தை உண்டாக்கியது.

    ஒரு நாள் கடுமையான கோபம் கொண்ட தங்கை “நீ எல்லாம் என்ன மனிதன்? குழந்தையில்லாத பாவிதானே நீ! என் குழந்தையினால்தானே நீ பிறவிப் பயனை அடைந்தாய், நன்றி கெட்டவனே!” என்று கூறி திட்டி விட்டாள்.

    இது தனபதியை மிகவும் வெட்கப்பட வைத்தது. ரோஷம் கொண்ட அவன் அடுத்த பிறவியிலாவது தனக்கு குழந்தை பேறு கிடைக்க வேண்டும். அதற்காக தவம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான். தனது சொத்து முழுவதையும் தனது மருமகனுக்கு உரிமையாக்கிவிட்டு தனது மனைவியுடன் வனவாசம் சென்றான்.

    தனபதி வனவாசம் சென்ற சிறிது நாட்களிலே அவருக்கு வேண்டாத தாயாதிக்கார்கள் பொய் வழக்கு செய்து, மருமகனிடமிருந்து எல்லா சொத்துக்களையும் பறித்துக் கொண்டார்கள். வயல்கள், தோட்டங்கள், நன்செய் நிலங்கள், நகைகள், அடிமையாட்கள், பசுமாடுகள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டனர். என்னசெய்வதென்று தெரியாத தாயும் மகனும் வீதியில் நின்றனர்.

    போகும் திசை தெரியாமல் திக்கற்று இருப்பவர்களுக்கு தெய்வம் மட்டுமே துணை. அந்த தெய்வத்திடமே சரண் அடைவோம் என்று சோமசுந்தரப் பெருமான் கோவில் சென்று வணங்கினார். “எல்லாம் வல்ல இறைவனே! எங்களின் அவல நிலையை பார்த்தாயா! இருந்தவையெல்லாம் பறி கொடுத்துவிட்டு உன் முன் நாதியற்று நிற்கிறோம். நானோ ஆதரவற்ற பெண் எனக்கு இருப்பதோ ஒரே மகன். அவனும் சிறுவன். விவரம் தெரியாதவன். சாமான்யர்களான எங்களை காப்பது உனது கடமை. எங்களை காத்தருள்வாய் தேவனே!” என்று கூறி விழுந்து புரண்டு பலவாறு அழுதாள் தனபதியின் தங்கை.

    அழுகையின் அயர்ச்சி அவளை அங்கேயே உறக்கம் கொள்ள வைத்தது. உறக்கத்தில் சிவனின் திருவருளால் கனவு வந்தது. பிரமணரின் உருவில் சிவபெருமான் எழுந்தருளினார். “பெண்ணே! இன்று இரவு கடந்து, பொழுது விடிந்ததும். உன் செல்வத்தை அபகரித்தவர்களை அரசன் மீது ஆணையிட்டு தர்மசபைக்கு கொண்டுவந்து விடு. அங்கு யாமே வருவோம். தர்மசீலர்களும், அறிவில் சிறந்து விளங்கும் பெரியவர்களும் ஒப்புக் கொள்ளும்படியான, பொய் வழக்கை தீர்த்துவைத்து பொருள்கள் எல்லாவற்றையும் மீட்டுத் தருவோம்” என்று கூறினார்.

    இதைக் கேட்டு விழித்துக் கொண்ட பெண் வியப்பும் மன மகிழ்வும் கொண்டாள். சோமசுந்தரரை வாழ்த்தினாள். தனது மகனை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள்.

    மறுநாளும் விடிந்தது.

    தனது சொத்தை அபகரித்தவர்கள் இருப்பிடம் சென்ற பெண் “தர்மநெறி தவறியவர்களே! பொய்வழக்கில் நீங்கள் வெற்றிபெற அனுமதிக்கமாட்டேன். இங்கு இருக்கும் அனைவரையும் சாட்சியாகக் கொண்டு அரசன் மீது ஆணையிட்டேன். தர்ம சபைக்கு நீங்கள் வரவேண்டும். பெரியவர்கள் சொல்லும் தீர்ப்பைக் கேட்க வேண்டும். எங்களின் பொருளை திரும்ப தரவேண்டும்” என்று கூறி பாதையில் சென்ற அவர்களை மறித்து நின்றாள்.

    அவர்களோ முரடர்கள். வலிமை மிக்கவர்கள் அவள் சொல்வதை கேட்காமல் அவளை அடித்தார்கள். “பாவிகளா! எனது செல்வத்தை ஏமாற்றி அபகரித்தது மட்டுமல்லாமல், நியாயம் கேட்டு தர்மசபைக்கு அழைத்தால் என்னை தாக்குறீர்களே.. இது முறையா?” என்று கத்திக் கொண்டே தனது மகனோடு தர்மசபைக்கு சென்று வழக்கை முறையிட்டாள். தர்மசபையோர் காவலர்களையும் ஏவலர்களையும் அனுப்பி வைத்தனர். தனபதியின் தங்கை அவர்களுடன் சென்று ஏமாற்றுக்காரர்களை அடையாளம் காட்ட ஏவலர்கள் நியாய சபைக்கு இழுத்துவந்தனர்.

 

    சோமசுந்தரப் பெருமானோ, வனவாசம் சென்றிருந்த தனபதியைப் போல உருவம் கொண்டு சபைக்கு வந்தார். அவர் கண்களில் கோபம் அனலாக வீசியது. மகனைப் பார்க்கும் போது முகம் மலர்ந்தது.

    “இந்த நாட்டில் மன்னன் இல்லையா? நியாயவழி நடக்கும் பெரியவர்கள் இல்லையோ? இறைவன் என்ற ஒருவன் இருக்கிறானா? இல்லையா? தர்மமும் நியாயமும் பாண்டிய மண்ணில் செத்துப் போய்விட்டதா? என்று தனபதிப் பெருமான் முறையிட்டார்.

    தனபதியே நேராக வந்ததால் தாயாதிக்காரர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இனி எதுவும் செய்ய முடியாது என்று மனம் தளர்ந்துவிட்டனர். மனவலிமையை இழந்துவிட்டனர். தாங்கள் ஏமாற்றியதை நினைத்து வெட்கமும் பயமும் கொண்டனர்.

    மாமனாக வடிவம் கொண்டு வந்திருந்த சிவன் தனது மருமகனையும் தங்கையையும் அணைத்துக்கொண்டார். ‘ஜயோ! செல்வ செழிப்பில் இருந்த நீங்கள் பரம ஏழைகளாக மாறிவிட்டீர்களா?’ என்று வருந்தினார். தாயும் மகனும் தனபதிப் பெருமானின் காலில்விழுந்து கண்ணீர்விட்டு அழுதனர்.

    மருமகனை மார்போடு அனைத்துக் கொண்ட தனபதிப் பெருமான் அவன் முன்பு அணிந்திருந்த பொன் ஆபரணங்களை ஒவ்வொன்றாகப் பெயர் சொல்லி ‘எல்லாம் இழந்தாயோ?! என்று வாய்விட்டு அழுதார். கேட்பவர்களின் மனம் இரங்கியது. கண்கள் கலங்கின. பின்னர் சோமசுந்தரர் குடிகொண்டிருக்கும் கோவிலை நோக்கி “மாணிக்கம் விற்ற பெருமானே! பெண்களுக்கு வளையல் அணிவித்து சாபவிமோசனம் தந்த எங்கள் குலத்தெய்வமே! இந்த வழக்கைத் தீர்த்துவைத்து என் தங்கை இழந்த பொருளை மீட்டுத் தருவாயா…? என்று வேண்டினார். சபையை நோக்கி “நாலும் தெரிந்த நல் அறிஞர்களைக் கொண்ட இந்த தர்மசபை அறிஞர்களே! எங்களுக்கு நியாயம் வழங்குங்கள்” என்று விண்ணப்பித்தார்.

    இருதரப்பினரின் வழக்குகளையெல்லாம் நன்கு கேட்டு ஆராய்ந்த நீதிநூல் வல்லுநர்கள் “தாயாதிக்காரர்களின் வழக்குப் பொய்யானது” என்று தீர்ப்புக் கூறினர். இந்த தீர்ப்பை அவர்கள் ஏற்கவில்லை. அதற்கு பதிலாக “வழக்காட வந்திருப்பவர் தனபதி வணிகரே இல்லை. இவர் வேறு யாரோ…? என்று வாதிட்டனர்.

    இதனைக் கேட்ட தனபதிப் பெருமான் கைகொட்டிச் சிரிந்தார். தனக்கு எதிராக வாதிட்ட அத்தனை தாயாதிக்காரர்களையும் ஒருவர் விடாமல் பெயர் சொல்லி அழைத்தார். அதோடு விட்டுவிடவில்லை. அவர்களின் குடிப்பெயர், பட்டம், காணி, தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் சொந்தக்காரர்கள், குணங்கள், செய்கின்ற தொழில், செய்த பிழை என்று எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கூறிமுடித்தார்.

    இதனைக் கேட்ட நீதிபதிகள் “வந்திருப்பது தனபதிச்செட்டியர் தான்” என்று முடிவாக கூறினர். தங்களின் வழக்கு தோற்றது. இதனை அறிந்தால் பாண்டிய மன்னன் தங்களை தண்டித்துவிடுவானே! என்ற பயம் அவர்கள் எல்லோருக்கும் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொருவம் ஏதேதோ காரணங்களைக் கூறியபடி சிதறி ஓடினார்கள்.

    அவர்கள் ஓடிச்சென்றதும் நீதிமான்கள் தனபதி வணிகர் முதலில் கொடுத்திருந்த பொருள்களை எல்லாம் தத்துப்புத்திரனுக்கே உரியவை. அவற்றை திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பு சாசனத்தை வணிகராக வந்திருந்த தனபதிப் பெருமானிடம் தந்தனர். எல்லாம் சுபமாக முடிய வணிகராகத் தோன்றிய சிவபெருமான் மறைந்தருளினார்.

    இந்த வழக்கைப்பற்றி கேள்விப்பட்ட பாண்டிய மன்னனான சுந்தரேச பாதசேகர பாண்டியன் மிகுந்த வியப்பு கொண்டார். வணிகராகத் தோன்றிய சிவபெருமானின் அற்புதங்களை நினைத்து உள்ளம் பூரித்தார். தனபதியின் தத்துப் பிள்ளையான தங்கையின் மகனுக்கு மேலும் பல பரிசுகளை வழங்கினான் மன்னன். சிவபெருமானின் திருக்கோவிலை தங்கத்தால் புதுப்பித்தான்.

சரித்திரம் படைத்த விவசாயி

 

“முடியாது…இது நடக்காது..!” என்று எடுத்த காரியத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்பவர்கள் பல பேர். ‘ஏன் முடியாது? ஏன் நடக்காது? என்னால் முடியும்…!’ என்று தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கி வெற்றிகரமாக முடித்துக் காட்டுபவர்கள் சில பேர். அந்த சில பேரில் ஒருவர் முருகேசன். இவரிடம் முடியாது என்று ‘சவால்’ விட்டது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்!

பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட பின்தான் ஒரு முடிவை வேளாண் துறை அறிவிக்கிறது. அப்படி தமிழகத்தில் இதை விளைவிக்கவே முடியாது என்று அறிவித்த ஒன்றை, அதே தமிழகத்தில் அதுவும் வறட்சியின் உச்சம் நிலவும் பூமியில் விளைவித்து, தமிழகத்தை மட்டுமல்ல… இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார், இவர்.

 
தனது விளைபொருளை தரத்தில் இந்தியாவில் ‘நம்பர் ஒன்’ என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார். அந்த விளைபொருள் அல்போன்ஸா மாம்பழம். 
“எப்படி உங்களால் இந்த சரித்திர சாதனையை செய்ய முடிந்தது?” என்ற கேள்வியோடு சிவகங்கை மாவட்டம் எ.கருங்குளம் எம்.எம்.பண்ணையின் உரிமையாளர் எம்.முருகேசனை சந்தித்தேன்.

3.bp.blogspot.com wzbTYx4pnQk VONOwJ X - 2026
எம்.முருகேசன்

சிரித்துக் கொண்டே “வாங்க! நிலத்தில் மரக்கன்று நட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து விட்டு வருவோம்” என்று தனது டாடா சஃபாரியில் என்னையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். தென்னந்தோப்பு, பண்ணைக்குட்டைகள் என்று நான்கு கிலோமீட்டர் தூரம் கடந்து வெட்ட வெளியான ஓர் இடத்தில் சஃபாரி நின்றது.

வனத்துறை இலவசமாகக் கொடுத்த மரக்கன்றுகளை 300 ஏக்கர் நிலத்தில் நடும் பணி மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. தொழிலாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்த பின் மீண்டும் சஃபாரி புறப்பட்டது. அவரின் மகன் மதிபாலன் காரை ஓட்டி வந்தார். கிட்டத்தட்ட 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட அவரது பண்ணையில் 15 கி.மீ. நீளத்துக்கு கனரக வாகனங்கள் போய்வரும் அளவிற்கு தரமான சாலைகளை அமைத்துள்ளார் முருகேசன்.

4.bp.blogspot.com 5Yw9yS3KOsI VONO87ranEI AAAAAAAADHk FMtpRl c eE s1600 IMG 1237 - 2026
பண்ணைக்குள் செல்லும் சாலை

இந்தியாவில் மிகப்பெரிய பண்ணை வைத்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரின் நிலத்தில் கூட இப்படி சாலைகள் அமைக்கப்படவில்லை என்று தன் நிலத்தை பார்வையிட்ட வட இந்திய ஆய்வாளர்கள் கூறியதாக பெருமிதத்துடன் கூறுகிறார் முருகேசன். 

 
தொடர்ந்து கட்டாந்தரையை பொன்விளையும் பூமியாக மாற்றிய அந்த ரகசியத்தையும், தான்பட்ட கஷ்டங்களையும் ஒருசேர சொன்னார்.

“இந்தக் கருங்குளம்தான் நான் பிறந்து வளர்ந்த மண். விவசாயக் குடும்பம்தான் எங்களுடையது. தண்ணீர் இல்லாமல் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த காலம் அது. இந்த மண்ணுக்கே உரிய வறட்சி மற்றவர்களைப் போலவே என்னையும் பிழைப்பு தேடி வேறு ஊருக்குத் துரத்தியது. 

 
நானும் போனேன். 10-ம் வகுப்பு வரை படித்திருந்த எனக்கு கிளார்க் வேலை கிடைத்தது. நான்கு  வருடம் கழித்து 1974-ல் ஒரத்த நாட்டில் ‘முருகன் ஜூவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை ஒன்றை தொடங்கினேன். பரிச்சயம் இல்லாத தொழில். எங்கள் இன மக்கள் யாருமே நகைக்கடை வைத்ததில்லை. ஆனாலும் வெற்றி கிடைத்தது. 
 
அடுத்து, 1980-ல் பொள்ளாச்சியில் ‘ஸ்ரீதிருமலை ஸ்டீல்ஸ் கார்ப்பரேஷ­ன்’ என்ற பெயரில் இரும்பு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். கடின உழைப்பு என்னை மிக உயரத்துக்கு கொண்டு போனது. சிறந்த தொழில் அதிபர் என்ற தமிழக அரசின் விருது என்னைத் தேடி வந்தது. என்னதான் தொழிலில் சாதித்தாலும் விவசாயத்தின் மீது இருந்த ஈர்ப்பு என்னை தூங்க விடாமல் அதன் பக்கம் இழுத்துக் கொண்டே இருந்தது.

அந்த சமயத்தில்தான் எங்கள் மக்கள் இந்த மண்ணைவிட்டு கொத்து கொத்தாக பஞ்சம் பிழைக்க தஞ்சாவூர் பக்கம் வந்து கொண்டு இருந்தார்கள். இது என் மனதை ரணமாக மாற்றியது விவசாயம் மிகவும் பின்தங்கியிருந்த காலகட்டம் அது. அதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சொந்த ஊரான கருங்குளத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினேன். தென்னந்தோப்பும், மாந்தோப்பும் உருவாக்கினேன். 

அப்போதுதான் அல்போன்ஸா மாம்பழம் நல்ல விலைக்குப் போவது தெரிய வந்தது. உடனே வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை அணுகினேன். அவர்கள் தமிழகத்தில் இது வராது என்றார்கள். அதற்கான மண்வளம் நம்மிடம் இல்லை என்றார்கள். இதைக்கேட்ட பின்பு அல்போன்ஸா மீது தீவிர பிடிப்பு ஏற்பட்டது. எப்பாடு பட்டாவது நமது பண்ணையில் அல்போன்ஸாவை விளைவித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன்.

4.bp.blogspot.com lX otuNBAkc VONN nWNtuI AAAAAAAADG8 CZCgF2JOHgo s1600 IMG 1217 - 2026
அல்போன்ஸா மாமரங்கள்

முதலில் எனது நிலத்தின் மண்ணை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தேன். 

 
இதுதான் விவசாயத்தின் மிக முக்கியமான பணி. அதற்கடுத்து நிலத்தடி நீரை டெஸ்ட் செய்தேன். இரண்டுமே மாம்பழ விவசாயத்துக்கு சாதகமாக இருந்தது. முதலில் சோதனை அடிப்படையில் 20 ஏக்கர் நிலத்தில் மாந்தோப்பு அமைத்தேன். மாம்பழத்தின் முதல் தரமான ரத்தினகிரி மாங்கன்றுகளை மஹாராஷ்டிராவில் இருந்து வாங்கி வந்தேன்.

செயற்கை உரங்கள் மண்வளத்தை பாழ்படுத்தும் என்பதை 25 வருடங்களுக்கு முன்பே நான் உணர்ந்து இருந்தேன். அதனால் செயற்கை உரங்களைப் பயன்படுத்துவது இல்லை என்ற முடிவை அப்போதே எடுத்தேன். அதற்காக 15 டன் மண்புழுக்களை வாங்கி வந்து நிலத்தில் விட்டேன். 10 மீட்டருக்கு ஒரு மரம் என்ற விகிதத்தில் ஒரு ஏக்கருக்கு 40 மரங்கள், 8 மீட்டருக்கு ஒரு மரம் என்ற விகிதத்தில் ஒரு ஏக்கருக்கு 66 மரங்கள் நட்டேன். மண்புழுக்களால் மண்வளம் செழித்தது.

நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ள மாவட்டம் என்பதால் 4 பண்ணைக் குட்டைகளை அமைத்தேன். அதன்மூலம் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் வற்றாமல் பார்த்து கொண்டேன். சொட்டுநீர் பாசனம் செய்தேன். இதிலும் இரண்டு மரத்துக்கு ஒரு கேட் வால்வு என்ற கணக்கில் பண்ணை முழுவதும் கேட் வால்வு அமைத்திருந்தேன். இதனால் கடைக்கோடியில் இருக்கும் மரத்துக்கும் போதிய அளவு தண்ணீர் கிடைத்தது. அதனால் விளைச்சல் ஒரே விதமாக இருந்தது.

பின்னர் மரத்துக்கு இடையே களைகள் வளர்ந்து விடாமல் இருப்பதற்காக 3 வாரங்களுக்கு ஒருமுறை உழுது கொண்டே இருப்போம். களை சுத்தமாக அழிக்கப்படுவதால் மரம் செழித்து வளர்ந்தது. நல்ல ஊட்டச்சத்து கிடைப்பதால் தரமான மாம்பழத்தை உருவாக்க முடிந்தது. இப்படி விளைவிப்பதோடு ஒரு விவசாயி தனது வேலையை முடித்துக் கொள்ளக்கூடாது. அதை சந்தைப்படுத்த வேண்டும். ஒரு விவசாயி வியாபாரியாக மாறும்போது அவனுக்கு 90 சதவீதம் லாபம் கிடைக்கிறது. இந்த சந்தைப்படுத்துதல் தான் எங்கள் வளர்ச்சியின் புதிய அணுகுமுறை. 

இதை மனதில் வைத்து தான் சந்தைப்படுத்துவதற்கு தீவிர முயற்சி எடுத்தோம். இதில் எனது மகன் மதிபாலன் எடுத்துக்கொண்ட முயற்சி பிரமிப்பானது. மும்பையில் ஒரு அல்போன்சா மாம்பழம் ரூ.60-க்கு விற்கிறது. வெளிநாடுகளில் ஒரு பழமோ 500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அப்படியென்றால் வெளிநாட்டுக்கும் வட இந்தியாவிற்கும் மாம்பழத்தை அனுப்பி வைப்பதுதான் கூடுதல் லாபம் என்று நினைத்தேன்.

1.bp.blogspot.com pI67ArTpMHs VONO3QlPIgI AAAAAAAADHc 6fz8dfMYHb8 s1600 IMG 1234 - 2026

முதலில் வட இந்திய வியாபாரிகள் இதை ரத்தினகிரி மாம்பழம் என்று சொல்லி விற்கலாம். நன்றாக விற்பனை ஆகும் என்றார்கள். நாங்கள்தான் எங்களின் சொந்த பிராண்டில் தான் விற்பனை செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தோம். அதன் பலன்தான் இன்றைக்கு ரத்தினகிரி மாம்பழத்தை விட தரத்திலும் சுவையிலும் சிறப்பான மாம்பழமாக இந்தியாவில் நம்பர் ஒன்னாக எங்களின் மாம்பழம் இருக்கிறது.

இதற்கு காரணம் நாங்கள் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்ததுதான். ரத்தினகிரி மாம்பழம் என்று கூறி விற்பனை செய்திருந்தால் எடுத்தவுடனேயே நன்றாக விற்பனை நடந்திருக்கும். அதே வேளையில் எங்களின் தனித்தன்மை வெளியே தெரியாமல் போயிருக்கும். அன்று பொறுமை காத்தோம். இன்று பெருமை கொண்டோம்” என்று நீண்ட விளக்கத்தை கூறி முடித்தார் முருகேசன்.

“வட இந்தியாவிற்கு மாம்பழங்கள் போய் சேர ஐந்தாறு நாட்கள் ஆகிவிடுமே…? அதுவரை மாம்பழம் கெட்டுப் போகாமல் இருக்குமா…?” என்று கேட்டதற்கு நாங்கள் மாம்பழத்தை பறிப்பது இல்லை. காம்போடு சேர்த்து கட் செய்து விடுவோம். ஒவ்வொரு மாம்பழத்திலும் 3 அங்குலம் நீளம் கொண்ட காம்பு இருக்கும். 

 
இந்த மாம்பழங்களை மூன்று வகையாக நாங்கள் பிரிப்போம். ஒரு பெட்டியில் 48 மாம்பழங்கள் வைப்பது பெரிய வகை. நடுத்தர வகையில் 60 மாம்பழங்கள் வைக்கலாம். சிறிய வகையில் 72 மாம்பழங்கள் வைக்கலாம். பெட்டியில் வைக்கோலும், பேப்பரும் வைத்து பேக் செய்வோம். இவற்றை பேக் செய்வதற்காகவே ஜார்க்கண்டில் இருந்து ஆட்கள் வருவார்கள். வைக்கோலின் கதகதப்பால் மாம்பழம் மெதுவாக பழுக்கத் தொடங்கும். 5 நாட்கள் கழித்து அங்கு போய் இறங்கும்போது இயற்கையான முறையில் மாம்பழம் பழுத்திருக்கும். சுவையும் அலாதியாக இருக்கும்.

3.bp.blogspot.com Glm0tSDQBnE VONPA0wH6QI AAAAAAAADHs sFpVG1 oy6o s1600 IMG 1239 - 2026
மகன் மதிபாலன் மற்றும் தோட்ட தொழிலாளியுடன் முருகேசன்

விவசாயம் நமது நாட்டின் முக்கியத் தொழிலாகும். விவசாயத்தில் புரட்சியும், புதுமைகளும் செய்பவர்கள் வரலாற்று ஏடுகளில் பதியப்படுகிறார்கள். காலத்துக்கு ஏற்ப வேளாண்மை துறையில் மாற்றங்கள் கொண்டு வருவது ஒவ்வொரு விவசாயியின் கடமை. பணப்பயிர் சாகுபடி பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்தரக்கூடிய ஒன்று. 

 
இளைய தலைமுறையினர் விவசாயத்தில் இருந்து தடம் புரண்டு சென்று விடாமல் இதில் சாதிப்பதற்கு பல சாதகமான வாய்ப்புகள் உள்ளது என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.” என்று கூறும் முருகேசன் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி ஒன்றை சொந்தமாக உருவாக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்து வருகிறது. அவரது கனவு கூடிய விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.

வேளாண்மை துறையில்  சரித்திரம் படைத்த விவசாயி முருகேசனிடம் பேச அவரது கைப்பேசி எண்  :  94865 61677
 

படைவீரர்களுக்கு தண்ணீர் தந்த பெருமான்

 

 
    ராஜேந்திரப்பாண்டியன் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம். தனது தந்தை குலபூஷண் பாண்டியன் காலத்தில் சோமசுந்தரப் பெருமானின் திருவிளையாடலாக காஞ்சியை ஆட்சி செய்து வந்த காடுவெட்டிய சோழன் மதுரை வந்து சொக்கநாதரை தரிசனம் செய்துவிட்டு சென்றான். அதன்பின் பலமுறை சொக்கரை தரிசனம் செய்ய விரும்பினான்.

    அதற்காக பாண்டியனிடம் தோழமைக் கொள்ள விரும்பினான். தோழமைக்காக அவ்வப்போது பல பொருட்களை காணிக்கையாக ராஜேந்திரப் பாண்டியனுக்கு அனுப்பிவந்தான். சோழன் அனுப்பிய சுகர்ணாபரணம் பொன்னாடை முதலியவற்றை பாண்டியன் ஏற்று மகிழ்ந்தான். அதற்கு ஈடாக பாண்டியனும் பல வகையான பொருட்களை பரிசாக அனுப்பி வைத்தான். இதனால் சோழன் மிகவும் மனம் மகிழ்ந்தான். தனது மகளை பாண்டியனுக்கு கொடுத்து பாண்டியனை தன் மருமகனாக ஆக்கிக் கொள்ள முடிவு செய்தான்.

    அந்த திருமண முடிவு பாண்டிய மன்னனின் தம்பியான ராஜசிம்மனுக்கு தெரியவந்தது. தம்பி பழிபாவத்துக்கு அஞ்சுபவன் அல்ல. வஞ்சக நெஞ்சகம் கொண்டவன். அவனுக்கு சோழ மன்னனின் மகள் அழகில் ஒரு கிறக்கம் இருந்தது. எப்படியாவது அந்த அழகு மங்கையை அடைந்தாக வேண்டும் என்று மாறாத விருப்பமும் இருந்தது.

இந்த எண்ணத்தோடு காஞ்சிபுரம் சென்று சேர்ந்தான். தன்னை நாடிவந்த ராஜசிம்மனுக்கு சோழன் தனது பரிவாரங்களுடன் சென்று வரவேற்றான். அரண்மனை சேர்ந்த ராஜசிம்மன் தனது ஆசையையும் சோழனின் மகள் மீது கொண்ட காதலையும் மன்னனுக்கு தெரிவித்தான். இதைக் கேட்ட சோழன் அண்ணனுக்கு திருமணம் செய்ய நினைத்த தனது மகளை தன்னை தேடி வந்து தன் மகள் மீது விருப்பம் கொண்ட தம்பிக்கே கொடுக்க முன் வந்தான்.

திருமணமும் நடந்தது. ராஜசிம்மன் சோழனின் மருமகன் ஆனான். திருமணம் முடிந்த சில மாதங்களிலே சோழனின் மனமும் சிந்தனையும் விபரீதமாக மாறியது. பாண்டியனை வெற்றிக்கொண்டு பாண்டிய நாட்டையும் தன் மருமகனுக்கு கொடுக்க நினைத்தான்.

    அதை நிறைவேற்றும் பொருட்டு தனது பெரும்படையுடனும்; தனது மருமகனின் யுத்த தந்திரமுடனும் பாண்டிய நாடு நோக்கிச் சென்றான். யுத்த பேரிகைகள் முழங்க படைகள் சென்றன. மதுரை மாநகரை நெருங்கி விட்டன சோழனின் படைகள். படைகள் நெருங்கும் செய்தி ஒற்றர்கள் மூலம் ராஜேந்திரப் பாண்டியனுக்கு தெரிவிக்கப்பட்டது.

    சூழ்ச்சியால் நெருங்கிவரும் இந்த படையை எப்படி எதிர்கொள்வது என்று பாண்டியனுக்கு தெரியவில்லை. குழப்பமான மனநிலையில் தெய்வ நம்பிக்கைதான் சரியான வழிகாட்டுதலை வழங்கும் என்று நினைத்த பாண்டிய மன்னன் சோமசுந்தரக் கடவுளின் சன்னதிக்கு சென்று முறையிட்டான்.

1.bp.blogspot.com F1aoH3sX1 s VO9OF pEEVI AAAAAAAADJo cGP56YsjCRk s1600 neelkanth%5B1%5D - 2026

    “அனைவரையும் காக்கும் அற்புதப் பெருமானே! அன்றொரு நாள் இரவு நேரம் தங்களை தரிசிக்கும் எண்ணத்தோடு வந்து தங்களின் கருணையால் தங்களின் தரிசனம் கிடைக்கப் பெற்ற காடுவெட்டிய சோழன் இன்றைக்கும் வந்துள்ளான். இப்போது அவன் உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யும் பாதகனாக வந்துள்ளான். போர்க்கோலம் பூண்டு மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறான். அவன் தங்களின் பக்தன். அன்று அவனது பக்திக்கு ஈடு செய்த பெருமானாகிய தாங்கள்தான் அவனது பகைமைக்கும் ஈடு செய்து அருள வேண்டும்!” என்று சிவபெருமானிடம் வேண்டி நின்றான்.

    “பாண்டிய மன்னனே! பயப்படாதே! உனது படையுடன் செல். சோழனை எதிர்த்துப் போரிடு! போரில் உனக்கு வெற்றி கிடைக்கும்படி யாம் செய்வோம்!” என்று அசரீரி எழுந்தது. அதனைக் கேட்டு ஆனந்தம் கொண்ட அரசன், இறைவனின் காலடியில் விழுந்து வணங்கினான். பின் தன் அரண்மனை சென்று சேர்ந்தான்.
   
    அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து சிவபூஜைகளை செய்து முடித்தான். தனது படைகளை அழைத்துக் கொண்டு சோழனை எதிர்த்துப் போரிடப் புறப்பட்டான். சோழனின் படையும், பாண்டியனின் படையும் எதிரெதிரே நின்றன. சோழனின் படை சமுத்திரம் என்றால், பாண்டியனின் படை ஒரு சிறு ஓடை என்று சொல்லும் அளவுக்கு சிறியதாக இருந்தது.

    போர் தொடங்கியது.

    இரண்டு படைகளும் கடுமையாக மோதின. இடி முழக்கம் போல ஒலியும், புயல் போல புழுதியும் கிளம்பின. சண்டமாருதம் போன்ற வேகம் உண்டானது. பாண்டியனின் சிறிய படை சோமசுந்தரப் பெருமானின் திருவருளால் பெரிய படை போல் தெரிந்தது. பாண்டிய மன்னனின் வீரர்கள் ஒவ்வொருவரும் சோழ வீரர்களுக்கு பல வீரர்களாகத் தெரிந்தார்கள்.

    தாக்குதல், அந்த தாக்குதலைத் தடுத்தல், எதிர்தாக்குதலுக்கு வியூகம் அளித்தல், எதிர்தாக்குதல் செய்தல், பிரயோகம், அதற்கு எதிர்ப்பிரயோகம் என்று போர் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

 
விடியற்காலையில் தொடங்கியப் போர் நண்பகல் உச்சி வெயிலில் மிகவும் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. சூரியனின் கடுமையான கிரணங்களால் வீரர்கள் களைப்படைந்தனர். தாகமெடுத்தது. தண்ணீர் கிடைக்காமல் திண்டாடினர். பெரும் தாகத்தால் பரிதவித்தனர்.

    பாண்டிய படைவீரர்கள் இப்படி வாடி வதங்குவதைக் கண்ட சிவபெருமான் அந்த படைகளுக்கு நடுவே நான்கு கால்களைக் கொண்ட ஒரு தண்ணீர்ப் பந்தலை அமைத்தார். பந்தலுக்கு நடுவே மையப்பகுதியில் விபூதி அணிந்த தவக்கோலத்தோடு நின்றிருந்தார். பந்தலுக்கு நடுவே பெரும் பானைகளில் ஆற்று நீர் நிரம்பியிருந்தது. பானையில் இருக்கும் நீரை ஒரு கமண்டலத்தில் எடுத்து, தாகத்தோடு தன்னை நாடிவரும் வீரர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தார்.

    தாகம் தீர்ந்து புத்துணர்ச்சிப் பெற்ற பாண்டிய வீரர்கள் அசுர பலம் பெற்றவர்களாக சோழனின் படையை பலமடங்கு உக்கிரத்தோடு தாக்கினர். இந்த எதிர்தாக்குதலை அவர்களால் தாங்க முடியவில்லை. போதாக்குறைக்கு தாகத்தால் சோழப் படைகள் களைப்புற்றன. தொடர்ந்து போராட, யுத்தம் செய்ய தெம்பு இல்லாமல் துவண்டு போயின. பாண்டிய சேனைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சின்னாபின்னப்பட்டுப் போய் நாலுபக்கமும் சிதைந்து ஒடின.

    வெற்றி வாகை சூடிய பாண்டிய படைகள் சோழனின் படையை புறமுதுகிட்டு ஓட வைத்தன. படை வீரர்கள் காடுவெட்டிய சோழனையும் அவனது மருமகனாகிய ராஜசிம்மனையும் கைது செய்தார்கள். அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு மதுரை நகர் நோக்கி வீர நடை போட்டது பாண்டியபடைகள். இருவரையும் பாண்டிய மன்னன் ராஜேந்திர பாண்டியனிடம் கொண்டு வந்து நிறுத்தினர்.

    பாண்டிய மன்னனுக்கு ஒரே குழப்பம். தன் முன் சிறைப்பட்டு நிற்கும் காடுவெட்டிய சோழன் நீண்ட நாட்களாக நட்பை பாராட்டிய மன்னன். ராஜசிம்மனோ உடன் பிறந்த தம்பி இவர்களை எப்படி தண்டிப்பது? என்று யோசனை செய்த மன்னன் ராஜேந்திர பாண்டியன் இருவரையும் அழைத்துக் கொண்டு சோமசுந்தரப் பெருமான் முன் கொண்டு போய் நிறுத்தினார். 

 
“எம் பெருமானே! இவர்களுக்கு தண்டனைத்தரவோ சிறையில் அடைக்கவோ என் மனம் இடம் கொடுக்கவில்லை. எல்லாம் அறிந்த இறைவனே! தங்களது திருவுள்ளம்தான் என்ன என்பதை எனக்கு எடுத்துரைப்பீர்களா?” என்று வேண்டி வணங்கி நின்றான்.
    பாண்டியனின் வேண்டுகோளுக்கு செவிசாய்ந்த பெருமான் “பாண்டியனே! நீ அறவழி தெரிந்தவன். தர்மத்தின் வழிநடப்பவன். இறைபக்தி கொண்டவன். உன் இஷ்டம் எதுவோ? அதன்படியே செய். நான் என்றும் உன்னுடன் இருப்பேன்” என்று அசரீரியாக ஒலித்தது சிவபெருமானின் குரல்.

    இதனைக் கேட்டு மகிழ்வு பெற்ற மன்னன் தெய்வ வாக்கை மனதில் நிறுத்தி, தான் விரும்பியபடியே தர்மசாஸ்திரங்களின் நெறிதவறாமல் காடுவெட்டிய சோழனுக்கு சில தேர்கள், யானைகள், குதிரைகள், வீரர்கள், தங்க ஆபரணங்களை கொடுத்து வழியனுப்பிவைத்தான். 

 
தனது தம்பியான ராஜசிம்மனுக்கு தனது நாட்டில் சிறு பகுதியை தனியாகப் பிரித்துக் கொடுத்து அந்தப் பகுதிக்கு அரசனாக முடிசூட்டினான். எல்லா உயிர்களையும் காப்பவனாகிய கடவுள் அருளாலே பல வளமும் பெருக அரசாட்சி செய்து நல்லதொரு மன்னனாக பிற்காலத்தில் பெரும் பெயரெடுத்தான் ராஜேந்திரபாண்டியன்.

சித்தர்கள் பூமியில் சிலிர்ப்பான பயணம்

 

இந்திய ஆன்மிக தளத்தில் தவிர்க்க முடியாத பெரும் பங்கு சித்தர்கள்! அவர்கள் இல்லையென்றால் நாம் இன்று வணங்கும் நிறைய கோயில்கள் உருவாகியிருக்காது.

 
அவர்கள் சொல்லாத கருத்துக்கள் இல்லை. ஈடுபடாத துறைகள் கிடையாது. ஆன்மிகம், மருத்துவம், ஜோதிடம் என எல்லாம் உணர்ந்த ஞானிகளாகத்தான் சித்தர்கள் இருந்தார்கள்.

 

கடவுளைக் காண முற்படுபவர்கள் பக்தர்கள்; கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். 

 
இறைவனை கண்டுணர்ந்த சித்தர்கள் வாழும் பூமிக்கு ஒருமுறையேனும் போய் வந்தால்தான் ஜென்மம் முக்தி அடையும். அந்த இடம் சதுரகிரி.
 
சதுரகிரி தான் சித்தர்களின் தலைமைப்பீடம். சித்தர்கள் எதைப்பற்றியாவது விவாதம் நடத்த வேண்டும் என்றால் அவர்கள் ஒன்று கூடுவது இந்த சதுரகிரியில் தான்.

1.bp.blogspot.com 7 G1t1rdjgM VKVqgnkpvUI AAAAAAAACvg ycNY GcFXSs s1600 IMG 3790 - 2026

 
சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்தகிரி என்ற நான்கு மலைகள் சதுரம் போல் அமைந்து அதற்கு மத்தியில் இருப்பதால் இந்த மலைப்பகுதிக்கு சதுரகிரி என்று பெயர். கிட்டத்தட்ட 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சதுரகிரியின் மையத்தில் சஞ்சீவி மலை உள்ளது.
சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் தூக்கிப் போகும்போது அதன் ஒரு பகுதி இங்கே விழுந்தது என்றும், அதனால்தான் இந்த மலை மூலிகைகள் நிறைந்த வனமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

 

சதுரகிரி பயணம் சற்று கடினமான பயணம் தான். அனுபவம் வாய்ந்தவர்கள் துணையோடு பயணம் செய்வதே நல்லது. 

 
எங்களுக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் டவாலியாக பணிபுரியும் சக்திவேல் சாமியார் துணையாக வந்தார். இவரை சாமி என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். 60 முறை சதுரகிரி சென்ற பழுத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டபடி எங்கள் பயணம் தொடர்ந்தது. என்னுடன் நண்பர் முரளி கிருஷ்ணனும் வந்திருந்தார். சொல்லப் போனால் அவர்தான் எனது சதுரகிரிப் பயணத்தின் மூலகர்த்தா!
 
மதுரையில் இருந்து ஒரு மதிய வேளையில் பஸ்ஸில் எங்கள் பயணம் தொடங்கியது. திருமங்கலம், கல்லுப்பட்டி, கிருஷ்ணன் கோவில், பேரையூர் வழியாக சதுரகிரியின் மலையடிவாரமான தாணிப்பாறைக்கு வந்து சேர்ந்தேன்.
 
சதுரகிரி பயணத்தின் துவக்கம் தாணிப்பாறை. இது மலை அடிவாரம். இங்கிருந்து சதுரகிரிக்கு 8 கி.மீ. நீண்ட மலைப்பாதையில் நடந்தே போக வேண்டும். நான்கைந்து மலைகளைக் கடந்து சதுரகிரி அடைய வேண்டும். அதனால் மலைப்பாதை ஏற்ற இறக்கம் கொண்டதாக இருக்கும்.

4.bp.blogspot.com - 2026

பதட்டமில்லாமல் இயல்பான வேகத்தில் நடக்கக் கூடிய ஒருவர் சதுரகிரியை அடைய சுமார் நான்கு மணி நேரம் ஆகும். மழைக்காலங்களில் இந்தப் பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
மலைப்பாதையின் துவக்கத்தில் ஆசீர்வாத விநாயகர் கோவில் உள்ளது. இவரிடம் ஆசிப் பெற்றுதான் புனிதப் பயணத்தை தொடங்க வேண்டும். 
 
அதன் பின்னர் ராஜயோக தங்க காளியம்மன், பேச்சியம்மன், அத்திரி மகரிஷி, கருப்பண சாமி, கோரக்கர் குகை, இரட்டை சிவலிங்கம், நாவல் ஊத்து, சின்ன பசுகடை, பெரிய பசுகடை நடந்து இறுதியாக பிலாவடிக் கருப்பர் ஆலயத்தில் இந்த யாத்திரை முடிவடையும்.

 

மழைக்காலங்களில் இந்த ஆலயத்திற்கு முன்பாக காலாங்கிநாதர் உருவாக்கிய பிரம்மதீர்த்தம் ஓடிக் கொண்டிருக்கும். இதில் நீராடி எழுந்து பிலாவடிக்கருப்பரை வணங்கினால், பாவம் தொலைந்து புண்ணியம் வந்து சேரும் என்று புராணம் கூறுகிறது.

1.bp.blogspot.com DUqrVrVDuvU VKVqq 43hFI AAAAAAAACvs 4HTYA P5p4E s1600 31 - 2026
பிலாவடி கருப்பர்
சதுரகிரி யாத்திரை என்பது இரட்டை மகாலிங்கம் பிலாவடி கருப்பர், சுந்தர மூர்த்தி, சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய எல்லா தெய்வங்களையும் தரிசித்தால்தான் பூர்த்தியடையும். 
பிலாவடி கருப்பரை தரிசித்தப்பின் சுந்தர மூர்த்தியை வணங்க வேண்டும். சதுரகிரியில் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் சுந்தர மூர்த்திதான்.

 இதை பிரதிஷ்டை செய்தவர் மகாசித்தர் அகத்தியர். அவரைத் தொடர்ந்து பல சித்தர்கள் பூஜித்து வழிப்பட்ட லிங்கம் என்பதால் இதன் சக்தி அபரிவிதமானது. இவரிடம் வைக்கும் எந்தவொரு பிரார்த்தனையும் வீண் போவதில்லை.

 

சுந்தர மூர்த்தியை தரிசித்தப்பின் சிறிது தூரம் நடந்தால் சுந்தர மகாலிங்கம் சந்நிதி வருகிறது. இந்த ஆலயத்தில் தினமும் நான்கு வேளை பூஜை நடை பெறுகிறது. காலசந்தி (காலை 6 மணி), உச்சி காலம் (நண்பகல் 12 மணி), சாயரட்சை (மாலை 4 மணி), அர்த்த ஜாமம் (மாலை 6 மணி) பூஜைகள் நடக்கின்றன. அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் அபிஷேகங்களும், அலங்காரங்களும் விமரிசையாக  இருக்கும். ஆடி அமாவாசை மிக ­விஷேசமானது.

2.bp.blogspot.com - 2026
சுந்தர மகாலிங்கம்
 

சுந்தரமகாலிங்கத்தை தரிசித்தப்பின் அடுத்து பக்தர்கள் குவிவது சந்தன மகாலிங்கம் கோயிலுக்குத்தான். 1990-வரை நாணல் செடிகள் அடர்ந்து நிற்கும் வனப்பகுதியாகவே இது இருந்தது. யானை, புலி, கரடி போன்ற விலங்குகள் அடிக்கடி வந்து போகும் பகுதி. அதனால் பல பக்தர்கள் சுந்தர மகாலிங்கத்தை தரிசித்த கையோடு ஊர் திரும்பி விடுவார்கள்.

இப்போது சந்தன மகாலிங்க கோயிலுக்கு படிக்கட்டுகள் அமைந்த அருமையான பாதை அமைத்திருக்கிறார்கள். எந்த வித பயமுமில்லாமல் சந்தன மகாலிங்கத்தை தரிசித்து மகிழலாம். இங்குதான் சட்டநாத சித்தர் வாழ்ந்து தவம் புரிந்த குகை இருக்கிறது. அருகிலேயே ஸ்ரீசந்தன மகாதேவி அம்மன் சந்நிதி உள்ளது.

 

இங்கிருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தூரம் நடந்தால் வனக்காளி, பரவைக்காளி என்று அழைக்கப்படும் காளிதேவி சிலை இருக்கிறது.

1.bp.blogspot.com - 2026
காளிதேவியை வணங்கும் டவாலி சக்திவேல்

 இதன் அருகில் அகத்தியர் மரம் உள்ளது. அந்த மரத்தில் அகத்தியர் நிற்பது போல் இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்தக் காளிதேவியை வணங்கி வேண்டிக் கொண்டால் மலைப்பாதையில் நமக்கு துணையாக வருவாள் என்பது ஐதீகம்.

4.bp.blogspot.com - 2026
மரத்தில் அகத்தியர்

சதுரகிரியில் இந்த தெய்வங்களையெல்லாம் தரிசித்தப் பிறகு மீண்டும் மலையேற வேண்டும். இந்த மலையேற்றத்துக்கு அனுபவம் நிறைந்தவர்களை துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பாதை மாறிப்போகும். மலைமீது சுமார் 4 கி.மீ. தூரம் நடந்தால் தவசிப்பாறை வருகிறது. கடினமான பாதை இது. எங்களுக்கு துணையாக டவாலி சக்தி வேல் வந்தார்.

4.bp.blogspot.com fjUd3fvwjro VKVrGgeBzbI AAAAAAAACwo Jg49c1g FT4 s1600 IMG 3822 - 2026
தவசி பாறை போகும் பாதை
 

சந்தன மகாலிங்கம் கோவிலில் இருந்து பார்த்தால் தவசிப் பாறை சிறியதாகத் தெரியும். தவசிப் பாறைக்கு கீழே தவசி குகை இருக்கிறது. இதில் சித்தர்கள் கண்ணுக்கு தெரியாமல் சூட்சுமமாக வந்து போகிறார்களாம்.

4.bp.blogspot.com Vy1nx33k2m0 VKVq80xkTNI AAAAAAAACwU 7ugMl1 rPwE s1600 IMG 3801 - 2026
தவசிப் பாறை

இரண்டடி உயரம் கொண்ட குகை என்பதால் பத்தடி தூரத்துக்கு தவழ்ந்துதான் போக வேண்டும். அதை கடந்தால் 5 அடி தூரத்துக்கு அமர்ந்தபடி முழங்காலிட்டுப் போகலாம். அதையும் கடந்தால் நின்றபடி நடக்கலாம்.

4.bp.blogspot.com 18W1chvbdJo VKVq8uD7GgI AAAAAAAACwQ uo vFkDFJTE s1600 IMG 3820 - 2026
தவசிக் குகையில் நான்

 சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன் கொண்டவர்கள் உள்ளே செல்வதை தவிர்ப்பது நல்லது. 

 
தவசிப் பாறைக்கு கீழே ஒரு பாறை உள்ளது. இதை ‘குளிர் பாறை’ என்கிறார்கள். அபாயம் நிறைந்த இந்த பாறையில் அமர்ந்தால் சிலு சிலுவென ஏஸியில் இருப்பது போல் குளிர்ந்த காற்று நம்மை தாக்கும்.
 
தவசிப்பாறையை சென்ற பின் கீழே இறங்கும் மற்றொரு வழியில் வந்தால் பெரிய மகாலிங்கம், வெள்ளை விநாயகர், மாவூத்து போன்றவற்றை வணங்கி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வந்து சேரலாம்.

 

இதில் பெரிய மகாலிங்கம் என்பது மிகப் பெரிய பாறையில் இயற்கையாக உருவானது. பார்ப்பதற்கு சிவலிங்கம் போலவே காட்சி தருவதால், பெரிய மகாலிங்கம் என்கிறார்கள். இந்த பாறை கீழே விழுந்துவிடாமல் மரத்தின் வேர்கள் சடை போல் பின்பக்கம் பிடித்து பாதுகாக்கின்றன.

2.bp.blogspot.com - 2026
 

பெரிய மகாலிங்கம்

பெரிய மகாலிங்கம் இருக்கும் மலைப் பகுதியில் ஏராளமான குகைகள் இருக்கின்றன. இங்கு மனிதர்கள் அலையக்கூடாது. சித்தர்கள் அடிக்கடி ஒன்று கூடி சத்சங்கம் நடத்துவார்கள். இதைக் கேட்டதும் சிலிர்த்துப் போனேன். சித்தர்கள் உலாவிய இடத்தில் நானும் உலாவிக் கொண்டிருக்கிறேன்.

 
சதுரகிரியின் அனைத்து இடங்களையும் பார்த்து முடிக்க குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் தேவை.  இங்கு ஹோட்டல்களோ, தங்கும் விடுதிகளோ கிடையாது. மடங்கள் மட்டும் இருக்கின்றன.
 வத்திராயிருப்பில் இருக்கும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் செயல் அலுவலரிடம் இருந்து கடிதம் பெற்று வந்தால் இந்த மடங்களில் இலவசமாக தங்கலாம். அதுவும் விசேஷ­ம் இல்லாத சாதாரண நாட்களில் தான் அனுமதி கிடைக்கும்.

1.bp.blogspot.com VFuPm9M6JkY VKVrFHs55VI AAAAAAAACwg dsJUg6o hv0 s1600 IMG 3835 - 2026
நாகக் கன்னி

சதுரகிரியில் ஹோட்டல்கள் இல்லையென்றாலும் உணவுக்கு பஞ்சம் கிடையாது. காளிமுத்து கஞ்சிமடம் மிகப் பழமையான மடம். விசே­ஷ­ நாட்களில் இரவு 8 மணி வரை இங்கு அன்னதானம் நடைபெறும்.

அதன்பின் மலையேறி வருபவர்கள் உணவின்றி பசியால் தவித்திருக்கிறார்கள். இந்த அனுபவம் மதுரையைச் சேர்ந்த ஆர்.ஆர் என்கிற ராஜரத்தினத்துக்கும் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் எண்ணத்தில் உதித்ததுதான் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கும் அமைப்பு.

‘அருள்மிகு சுந்தரமகாலிங்கம் யாத்திரிகர் சேவை அறக்கட்டளை’ என்ற பெயரில் 2007-ம் ஆண்டு துவங்கப்பட்டது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை தொடர்ந்து உணவு வழங்கப் படுகிறது. 12 மணிக்கு மேல் பக்தர்கள் வந்தால், உடனடியாக உணவு தயார் செய்து பரிமாறுகிறார்கள்.

 இதனால் சதுரகிரியில் சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை. சதுரகிரி மலைக்கு நடந்து சென்று தரிசிக்க முடியாதவர்களுக்காக ‘டோலி’ வசதியும் இருக்கிறது. இதற்காக தாணிப்பாறையில் சில ஆட்கள் இருக்கிறார்கள். சதுரகிரிக்கு போக வர இரண்டுக்கும் சேர்த்து ரூபாய் 4,000 கூலியாக பெறுகிறார்கள். இதன் மூலம் வயதானவர் களும், நடக்க முடியாதவர்களும் மகாலிங்கத்தை தரிசிக்க முடியும்.

சித்தர்கள் உலவும் இந்த மலையில் ஏறி இறங்குவதே ஆரோக்கியம் நிறைந்த சுக அனுபவத்தை தரும்.

 
 

சதுரகிரியில் நமக்கு தெரியாத மர்மமான பல பகுதிகள் இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது.

மன்னன் மனம் வென்ற முதல் சித்தர்

 

அது மதுரை மாநகர், பாண்டிய மன்னனின் அரண்மனை, அந்தப்புரத்து நந்தவனத்தில் மன்னன் அபிஷேக பாண்டியன் தன் காதல் மனைவிகளோடு ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

    நந்தவனத்தில் உள்ள தென்னை மரங்கள் திடீரென்று பனைமரங்களாக மாறின. பின்னர் தென்னை மரமாக பழைய வடிவத்திற்கே வந்தன. பறவைகள் விலங்காகவும், விலங்குகள் பறவைகளாகவும் மாறி மாறி அதிசயம் செய்தன. ஒன்று மற்றொன்றாக மாறிக்கொண்டிருந்தது. மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை.

    மறுநாள். அரசவையைக் கூட்டினான்.

    “அமைச்சரே, அந்தபுர நந்தவனத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவும் என்னை குழப்பமடைய செய்துள்ளன.. இதற்கு என்ன காரணம்?

   
    “மன்னா! நந்தவனம் என்றில்லை. நாடு முழுவதுமே இந்த விபரீத நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. நீண்ட சடையும், நெற்றி நிறைய விபூதியும் அதன் மீது திலகமும், இரண்டு செவிகளில் குண்டலங்களும், படிக மாலையும், புலித்தோல் ஆடையும் அணிந்து, ஆண்மை வடிவம் கொண்ட ஒரு மனிதர் பல அற்புதங்களை செய்து வருகிறார். பருவப் பெண்கள் அவரை பார்த்த மாத்திரத்தில் மையல் கொள்கிறார்கள். இளைஞர்களோ தாம் பெண்ணாகப் பிறக்க வில்லையே என்று ஏக்கம் கொள்கிறார்கள்”.

    “அவர் திடீரென்று ஓரிடத்தில் இருந்து மறைந்து மற்ற இடத்தில் காட்சியளிப்பார். தூரத்தில் இருக்கும் மலையை பக்கத்தில் கொண்டு வருவார். அருகில் இருக்கும் மலையை தூரத்தில் மாற்றியமைப்பார். மழலை மொழி பேசும் குழந்தைகளை முதியவர்களாக மாற்றிக்காட்டுவார். கிழவர்களை குழந்தையாக மாற்றுவார். ஆணை பெண்ணாக்குவார், பெண்ணை ஆணாக்குவார். மலட்டுப் பெண்ணுக்கு மகப்பேறு தருவார். கூன், குருடு, செவிடு, ஊமை போன்ற குறைகளை போக்கிடுவார்.”

    “வைகை ஆற்றில் வெள்ளம் நிரம்பி ஓடச் செய்வார். மீண்டும் ஆற்றை வற்ற வைப்பார். சுவையான நீர் கொண்ட பொய்கையை உப்பு நீராக மாற்றுவார். கடல் நீரை நன்னீராக்குவார். மந்திரக் கோலை அந்தரங்கத்தில் மிதக்க வைத்து, அதன்மீது ஒரு ஊசியை நிலை நிறுத்தி வைப்பார். அந்த ஊசி மீது கால் பெருவிரலை ஊன்றி ஆடுவார். சூரியனை இரவில் வரவைப்பார். சந்திரனை பகலில் தோன்றச் செய்வார். வயோதிகர்களைத் தன் கைப்பிரம்பால் தடவி வாலிபனாக மாற்றுவார். அதற்கு ஏற்ப அவர்களின் முதுமை மனைவிகளையும் இளம்பெண்ணாக மாற்றி, அவர்கள் கர்ப்பம் தரிக்க விபூதியும் அளிப்பார்” என்று அமைச்சர் நீண்ட பட்டியல் போட்டு சொல்லச் சொல்ல.. அபிஷேகப் பாண்டியனுக்கு அந்த அற்புத மனிதனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பெருக்கொடுத்தது.

    உடனே அரண்மனை காவலர்களை அழைத்து “அந்த வித்தக மனிதரை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்!” என்று ஆணையிட்டு அனுப்பிவைத்தார். அவர்களும் அந்த மாமனிதரைப் பார்க்க வேண்டும் என்று அடக்கமுடியாத ஆவலோடு சென்றனர்.

    சென்றவர்கள் நெடுந்நேரம் கடந்தும் வராததைக் கண்ட பாண்டிய மன்னன் சில அமைச்சர்களை அனுப்பி வைத்தான். அமைச்சர்கள் அவரை தேடி வந்த போதுதான் தெரிந்தது அந்த மனிதரை அழைக்க வந்த காவலர்கள், அவரின் திருவிளையாடலில் தன்னை மறந்து நின்றுவிட்டனர்.

    அமைச்சர்கள் அந்த மனிதரை சந்தித்து வணங்கினர். “தங்களைக் காண மன்னர் மிகவும் ஆர்வமுடன் இருக்கிறார். தாங்கள் மன்னர் இருப்பிடம் வரவேண்டும்” என்றனர். “எனக்கு மன்னரிடத்தில் ஆக வேண்டிய காரியம் ஒன்றுமில்லையே? நான் ஏன் மன்னரைப் பார்க்க வேண்டும்?” என்று கூறி வர மறுத்துவிட்டார்.

1.bp.blogspot.com JfEnFB4AQqc VLTtqypQbsI AAAAAAAACyM a7NQSlG0CDo s1600 IMG 20150113 151008 1 - 2026

    அமைச்சர்கள் சோகத்தோடு மன்னனிடம் சென்றனர். நடந்ததை கூறினர். “உண்மைதான் இறைவனின் திருவருளைப் பெற்றவர்கள், இந்திரன், பிரம்மன், திருமால் போன்றவர்களையே மதிக்க மாட்டார்கள். அப்படியிருக்கையில் சாதாரணமாக மண்ணாளும் இந்த மன்னனையா மதிக்கப் போகிறார்கள். நான் அது தெரியாமல் அவரை அவமதித்துவிட்டேன். இது என் அறியாமையால் நேர்ந்துவிட்டது. அவர் என்னைத் தேடிவர அவருக்கு என்ன குறை இருக்கிறது? எனவே, நானே அவரை நாடிச் சென்று காண்கிறேன்” என்று மனதில் நினைத்த அபிஷேகப்பாண்டியன் நேராக கோவிலுக்கு சென்றான்.

    மதுரையின் நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளை வணக்கினான். வணங்கி முடித்த மன்னன் இறைவனை வலம் வந்தார். அந்த பாதையில் புலித்தோல் ஆசனத்தில் ஐம்புலன்களையும் வென்ற அந்த மனிதர் இறுமாப்புடன் அமர்ந்திருந்தார்.

    அரசன் அருகில் வரவர வழியில் இருந்தவர் விலகி வழிவிட்டனர். அந்த மனிதர் மட்டும் சிறிதும் அச்சமின்றி மரியாதை கூட கொடுக்காமல் அமர்ந்திருந்தார். காவலர்கள் அவரை அப்பால் போகும்படி கூறினர். அவர் சிரித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தார்.

    அந்தப் புன்னகை பாண்டியனை சிந்திக்கத் தூண்டியது. மெதுவாக அவர் அருகில் வந்த மன்னன் “உன் பெயர் என்ன? எதற்காக இங்கு வந்திருக்கிறாய்? உன் நாடு எது? ஊர் பெயர் என்ன?” என்று அதிகாரமாகக் கேட்டான்.

    “அப்பா! நாம் எந்த நாட்டிலும் இருப்போம். எந்த நகரிலும் திரிவோம். எல்லா ஊரும் நம்மூரே. எல்லா மக்களும் நம் மக்களே! ஆனாலும் இப்போது யாம் இருக்கும் தலம் காசி மாநகரமாகும். வாழ்வில் எந்த பற்றும் இல்லாமல் பிச்சை வாழ்வு மேற்கொள்ளும் அடியார்களே நமது சொந்த பந்தங்கள். வித்தைகள் பல செய்து சித்து வேலை காட்சித் திரியும் சித்தர் யாம். இங்குள்ள சிவத்தலங்களை தரிசிக்கவே வந்தோம்”

    “ஞான ஒளி பரவும் மதுரை மாநகரில் வாழ்பவர்களுக்கு எமது திருவிளையாடல்களை நிகழ்த்தி, அவர்கள் விரும்பும் சித்திகள் பலவற்றையும் அருளுவோம். வேதம் முதலான அறுபத்து நான்கு கலைகளையும் கைவரப் பெற்றோம். உன்னிடத்தில் நாம் பெறக்கூடியது ஒன்றுமில்லை பாண்டியனே!” என்று கூறி புன்னகைத்தார்.

    அந்த மனிதனின் செருக்கும், இறுமாப்பும், பெருமிதமும் அபிஷேகபாண்டியனை சினம் கொள்ளச் செய்தது. அந்த நேரம் பார்த்து கிராமத்து விவசாயி ஒருவர் நன்கு விளைத்த ஒரு கரும்பினை கொண்டு வந்து மன்னிடம் கொடுத்து வணங்கி நின்றார். நல்ல விளைச்சல் கண்ட பொருளை மன்னனுக்கு கொடுத்து பரிசு பெறுவது அந்தக் கால மரபு. அதற்காகவே அந்த விவசாயியும் வந்திருந்தார்.

    “உலகில் உள்ள தெய்வங்கள் அனைத்தையும் விட நீயே உயர்ந்தவன் என்பது போல் பேசும் மனிதனே! உமக்கு வல்லமை இருந்தால், இந்த தூணில் இருக்கும் கல்யானையிடம் இந்த கரும்பினைக் கொடுத்து உண்ணச் செய் பார்ப்போம். அவ்வாறு நீ செய்தால் உன்னை எல்லாம் வல்ல சித்தர் என்று நான் ஒத்துக்கொள்கிறேன். அது மட்டுமல்ல மதுரையை அருளாட்சி செய்து வரும் சோமசுந்தரர் கடவுளும் நீயே என்பதை ஒப்புக்கொண்டு நீ விரும்பியதெல்லாம் தருவேன்” என்று மன்னன் உரைத்தான்.

    “பாண்டியனே, என்னருகே வா. நீ கொடுத்து பெறும் நிலையில் நானில்லை. உனக்கு என்ன தேவையோ தயங்காமல் கேள். நான் உனக்குத் தருகிறேன். இதோ உன் கண் முன்பே இந்தக் கல்யானை கரும்பு தின்பதை பார்த்து பரவசம் கொள்!”

    அந்த மனிதரின் அருகில் இருந்த மண்டபத்தூணில் கல்லிலே ஒரு யானை கம்பீரமாக செதுக்கப்பட்டிருந்தது. அந்த கல்யாணையை கடைக்கண்ணால் பார்த்தர். எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்தக் கல்யானையின் கண் திறந்தது. மண்டபமே அதிரும் வண்ணம் வாய்திறந்து பிளிறியது. துதிக்கையை மேலே நீட்டி பாண்டியன் கையில் இருந்த கரும்பினை பிடித்து இழுத்து கடைவாயில் இட்டு சாறு ஒழுகுமாறு கடித்து மென்று தின்றது. கரும்பினை முழுவதுமாக தின்றதும். கல்யானை பாண்டியன் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை எட்டிப்பிடித்து இழுத்தது. இதனைக் கண்டு கோபம் கொண்ட காவலர்கள் யானையை அடிப்பதற்காக வந்தனர். அதற்குள் யானை முத்து மாலையை வாயில் போட்டு விழுங்கிவிட்டது. மன்னன் அந்த மனிதர் மீது கோபம் கொண்டான். மன்னனின் மெய் காப்பாளர்கள் அந்த மனிதரை அடிக்க ஓடிவந்தார்கள். மென்மையான புன்னகைப் புரிந்த அவர் தன் கையை மேலே தூக்கி…

    “நில்லுங்கள்….!” என்று ஆணையிட்டார். ஓடி வந்த வீரர்கள் அப்படியே சிலையாக நின்றனர்.

    பாண்டியன் நெடுஞ்சான் கிடையாக அந்த மனிதரின் காலில் விழுந்து “அறியாமல் நான் செய்த பிழையை பொறுத்தருள வேண்டும்” என்று மனமுருக வேண்டினான்.

    அன்புக்கு அடிபணியும் கருணைக் கடவுளாகிய அவர் சித்தர்களுக்கெல்லாம் முதன்மை சித்தரான, சித்தர்களின் தலைவரான சிவபெருமான் என்பது யாருக்கும் தெரியவில்லை.

    பாண்டியனைப் பார்த்து முதல் சித்தரான அவர் “வேண்டும் வரம் கேள்!” என்றார். உடனே அபிஷேகப்பாண்டியன் “நல்ல புத்திரர்கள் கிடைக்க வரம் தர வேண்டும்” என்று வேண்டினான். சித்தரும் அவ்வண்ணமே அருள்புரிந்தார்.

 

    தனது கரத்தை யானை மீது வைக்க… உடனே அந்த யானை தனது துதிக்கையை நீட்டி முத்து மாலையைப் பாண்டியனிடம் கொடுத்தது. பாண்டியனும் அதைப் பெற்றுக் கொண்டான். அப்படி பெறும் போது இவ்வளவு நேரமும் அங்கிருந்த சித்தரை காணவில்லை. மாலையை பெற்றுக்கொண்டதும் யானையும் கல்லாக மாறியது.

    “முற்றும் உணர்ந்த முதல்வனே! அறியாமையால் உம்முடைய திருவிளையாடலை நான் அளந்தறியத் தொடங்கினேன். நான் எவ்வளவு பெரிய முட்டாள்” என்று மனமுருக மன்னிப்பு கேட்டு வணங்கினார்

    சித்தரின் அருளாள் அபிஷேகபாண்டியன் விக்கிரமன் என்ற மகனை பெற்றெடுத்தான். உரிய காலத்தில் வந்ததும் விக்கிரமனுக்கு முடிசூட்டி, அரசினையும் அளித்து சித்தரின் திருவருளில் கலந்து பேரின்பம் அடைத்தான்.

எழுத்து ஒரு தவம் – மனுஷ்ய புத்திரன்

 

 
பதினாறு வயதில் முதல் கவிதை தொகுப்பு வெளியீடு; அதன் பின் தேசிய அளவில் இளம் படைப்பளிகளுக்கான ‘சன்ஸ்கிருதி சம்மான் விருது‘; ஏழு கவிதை தொகுப்புகள்; எட்டு ஆண்டுகளாக ‘காலச்சுவடு’ இதழின் ஆசிரியர்; ‘உன்னை போல் ஒருவன்’ படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகம்; தமிழகத்தின் செல்வாக்கு மிக்க 10 பேர்களில் ஒருவராக ‘இந்திய டுடே’ தேர்வு; இப்படி மனுஷ்ய புத்திரனை பற்றி சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம், அரசியல் என பன்முக திறனை வெளிப்படுத்தும் இந்த படைப்பாளிக்குள்ளும் ஒரு முதலாளி ஒளிந்திருக்கிறார். அந்த முதலாளி பதிப்பக உரிமையாளர், மாத இதழ் வெளியீட்டாளர் என்ற இரட்டை குதிரையில் வெற்றியுடன் பயணிக்கிறார். ‘பயணம் கடினமானதுதான். ஆனால், தொடர்ந்து பயணிப்பதில் தான் வெற்றியின் சூட்சுமம் மறைந்திருக்கிறது’ என்று கூறும் மனுஷ்ய புத்திரனை ‘தினவணிகம்’நாளிதழுக்காக சந்தித்தேன்.

அரசியல், இலக்கியம் இல்லாமல் முழுக்க முழுக்க தொழில் சமந்தமாக அவருடன் உரையாடியதில் இருந்து சில பகுதிகள்…

 

3.bp.blogspot.com - 2026
மனுஷ்யபுத்திரன்

 

 “திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிதான் எனது சொந்த ஊர். படித்தது எம்.ஏ., தொடர்பியல். சிறு வயது முதலே பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் சிந்தனையால் ஈர்க்கப்பட்டேன்.

அதனாலே ஜாதி மதத்துக்கு அப்பால் மனித குளத்தின் மகன் என்ற அர்த்தத்தில் ‘மனுஷ்ய புத்திரன்’ என்ற புனைப் பெயரை வைத்துக் கொண்டேன். இந்த பெயரைக் கொண்டே‘மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்‘ என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பை 16 வயதில் வெளியிட்டேன்.

2002-ம் ஆண்டு உயிர்மை பதிப்பகம் தொடங்கினேன். முதன் முதலாக சுஜாதாவின் 6 புத்தகங்களை வெளியிட்டேன். 2003-ம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் ‘உயிர்மை’ பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் ‘திரைகதை எழுதுவது எப்படி?’ என்ற புத்தகம் கண்காட்சி முடிவதற்குள்ளாகவே விற்றுத் தீர்ந்து சாதனை படைத்தது.

இதுவரை 800-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எமது பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சுஜாதா, சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது.

உயிர்மை…

2003-ம் ஆண்டில் ‘உயிர்மை’ மாத இதழ் துவக்கம் பெற்றது. கலை, இலக்கியம், அரசியல், சினிமா, அறிவியல், சுற்றுச்சுழல் போன்ற தலைப்புகளில் ஏராளமான படைப்புகளை இந்த இதழ் தந்து கொண்டிருக்கிறது. தற்போது தமிழின் முதன்மையான இடைநிலை இதழ் என்ற இடத்தை பெற்றிருக்கிறது.

‘காலச்சுவடு’ இதழில் இருந்து வெளிவந்த போது எழுத்தாளர் சுஜாதா இந்த விதையை என்னுள் விதைத்தார். எழுத்து, படிப்பு இரண்டை மட்டுமே என்னுடைய வாழ்க்கை முறையாக கொண்ட நான் மிகுந்த மன வலிமையுடனே இந்த தொழிலை தேர்வு செய்தேன்.

4.bp.blogspot.com f284QQ HlL8 VLXuICGwAfI AAAAAAAACys De4G7EScpLw s1600 uyirmai manusyaputhiran magazines tamil journals cover arr naan kadavul 4 - 2026

மிகவும் சவால் நிறைந்த காலக்கட்டம். மிகச் சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்டு, எங்களுடைய கடும் உழைப்பையும், எழுத்தாளர்களின் அன்பையும் ஆதாரமாகக் கொண்டே இந்த பதிப்பகம் உருவானது.

என் வாழ்வில் மறக்கமுடியாத நபர் சுஜாதாதான். நான் எழுதிய ‘கால்களின் ஆல்பம்’ என்ற கவிதையை பத்திரிகையில் படித்த அவர் பல இதழ்களில் அதைப்பற்றி எழுதினார். கூட்டங்களில் பேசினார். அவருக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன்.

அப்போதுதான் எனக்கும் அவருக்கும் பரிச்சயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் என்னுடைய கவிதைகளைப் பற்றி தொடர்ந்து எழுதினார்.

என்னைப் பெரிதும் ஈர்த்த ஒரு மாபெரும் எழுத்தாளரின் அன்பும் அக்கறையும் என்னை தொடர்ந்து எழுத தூண்டியது.

2000-த்தில் சென்னை வந்த போது அவருடைய நட்பும் நெருக்கமும் மிகவும் அதிகரித்தது. என் வாழ்வில் அதிக துயரமும் நெருக்கடியும் கொண்ட கள்ளக் கட்டத்தில் எல்லாம் அரவணைத்து வழிநடத்தும் ஆசானாக இருந்திருக்கிறார்.

பதிப்பக தொழில்…

 தமிழ்நாட்டில் புத்தக தொழில் சம்பதமாக நிறைய மாயைகளும் சில உண்மைகளும் நிலவுகின்றன. கடந்த 10 வருடங்களில் ஒரு தொழில்துறை என்று சொல்லக்கூடிய விதத்தில் பதிப்பு தொழில் கவனம் பெற்றிருக்கிறது. அது ஒரு குடிசைத் தொழிலாக மட்டுமே தமிழகத்தில் கருதப்பட்டு வந்தது.

சில ஆண்டுகளாக கார்பரேட் தன்மை கொண்ட பெரிய நிறுவனங்களும், இடைநிலை நிறுவனங்களும் பெரிய அளவிலான மூலதனத்தை பதிப்பு துறைக்கு கொண்டு வருவதைப் பார்க்கிறோம்.

இதன் காரணமாக ஏராளமான நூல்கள் தொடர்ந்து தமிழில் பதிப்பிக்கப் படுகின்றன. பல்வேறு துறை சார்ந்த நூல்கள் முன் எப்போதையும் விட பரவலாக பதிப்பிக்கப் படுவதை காண்கிறோம்.

ஆண்டிற்கு சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ் புத்தகங்கள் விற்பனை ஆகிறது. 80 கோடி பணப்புழக்கம் என்பதை இன்றைய காலக்கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட துறையில் பெரிய வளர்ச்சியாக கருத முடியாது. அதே வேளையில் இதற்கு முந்தைய சூழலோடு ஒப்பிட்டால் இது ஒரு வளர்ச்சி என்றே கருத வேண்டும்.

புத்தக விற்பனை…

புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை ஆவதற்கு குறிப்பிட்ட சில காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, கல்வி வளர்ச்சி காரணமாக படித்தவர்கள், வாசகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இரண்டாவதாக, புத்தகங்களை உருவாக்குவது; கணினி, அச்சுத் தொழில் நுட்பம், மிகவும் எளிதாக்கியிருக்கிறது.

மூன்றாவதாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் புத்தகக் கண்காட்சிகள் பொது மக்களின் ஆர்வத்தை புத்தகம் பக்கம் திருப்பியிருக்கிறது.

நான்கவதாக, இணைய தளத்தின் வளர்ச்சி காரணமாக இணையத்தில் எழுத்தாளர்கள், படிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதில் ஒரு பகுதி புத்தகம் வாங்கக்கூடிய வாசகர்களாக மாறுகிறார்கள்.

ஐந்தாவதாக, சில தீவிர எழுத்தாளர்கள் வெகு ஜன இதழ்களிலும் எழுதுவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். அந்த பிரபலத்தின் மூலம் அவர்கள் எழுதும் புத்தகங்கள் விற்பனை வாய்ப்பை பெறுகின்றன.

இந்த சூழ்நிலைகள் எல்லாம் சேர்ந்து புத்தகங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்பதில் சந்தேகமே இல்லை.

2.bp.blogspot.com kvrr6VweHdE VLXuBHjJibI AAAAAAAACyc 4vm26uU55Aw s1600 manushya%2Bputhiran%2B9 - 2026

அரசின் உதவி…

தமிழக அரசும் பொது நூலகத் துறைக்கு நூல்கள் வாங்குவதற்கான நிதியை கணிசமாக அதிகரிப்பதுடன் ஒரு நூலின் 1000 பிரதிகளை வாங்க உத்தரவிட்டுள்ளது. ஆண்டிற்கு சுமார் 15 கோடி ரூபாய் செலவில் அரசு பொது நூலகத்திற்கு நூல்களை வாங்கி வருகிறது.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமப்புற நூலகங்களுக்காக ஒரு நூல் 5000 பிரதிகள் வாங்கும் திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை செயல்படுத்தி வருகிறது. இந்த இரண்டு திட்டங்களும் சேர்ந்து தமிழில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

பிரச்சனைகள்…

ஒரு புதிய வாய்ப்பு பதிப்பு துறையில் ஏற்பட்டுள்ளதைக் கண்டு, அந்த துறையோடு தொடர்பற்ற பலர் இதற்கு வரும் போக்கு காணப்படுகிறது.

முதலாவதாக, புத்தகங்கள் அறிவு மற்றும் பண்பாடு சார்ந்த ஒரு பொருள் என்பதால் அதனோடு தொடர்பற்ற நபர்கள் இதற்குள் வரும் போது தரமற்ற நூல்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் போக்கு நிலவுகிறது. வாசகர்களுக்கு தேவையான நூல்களை உருவாக்குவதில்  உடனடி விற்பனை வாய்ப்பை கருத்தில் கொண்ட மேலோட்டமான பிழையான நூல்கள் அச்சிடப்படுவதைக் காண்கிறோம்.

இரண்டாவதாக, நம்முடைய பத்திரிகைகள் சில வெகுஜன ஊடகங்கள் நூல்களுக்கு எந்த முக்கியத்துவம் தருவதில்லை. இதனால், பல முக்கியமான நூல்கள் வாசகர்கள் கவனத்தை பெறாமலேயே போய்விடுகின்றன.

போதிய விற்பனை மையங்கள் இல்லாமை பெரிய பிரச்சனை, தமிழகத்தில் சுமார் 500 புத்தக கடைகள் உள்ளன. அதில் 90 சதவித கடைகள் மிகச் சிறிய இடவசதி கொண்டது. அவற்றால் தமிழில் வெளிவரும் சில புத்தகங்களை மட்டுமே காட்சிக்கு வைக்க முடியும். அதிலும் வர்த்தக ரீதியிலான புத்தகங்களே முன்னிலைப் படுத்தப் படுகின்றன. நல்ல நூல்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.

புதிய முயற்சி…

இந்த கடைகளால் முழுமையான அளவில் விநியோகத்தை மேற்கொள்ளக் கூடிய அடிப்படை கட்டமைப்போ, ஆள் பலமோ தமிழகத்தில் எந்த பதிப்பகங்களும் இல்லை. ஒவ்வொரு பதிப்பகமும் ஏதேனும் சில கடைகள் வழியாகவே தங்கள் புத்தகங்களை விற்கின்றன. மற்றபடி பெரும்பாலும் பொது நூலகங்களை நம்பி இருக்கின்றன. இது மிகவும் சிக்கலான சூழல்.

ஒருபுறம் நூல்கள் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இன்னொருபுறம் அவற்றை விநியோகிக்க எந்த கட்டமைப்பும் இல்லை. இந்த சூழலை எதிர் கொள்வதற்காக இப்போது நாங்கள் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

தமிழில் நல்ல நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்கள் ஒன்றிணைந்து ஒரு புத்தக விநியோக ஏஜெண்டுகளைக் கொண்டு அவர்கள் மூலமாக தமிழ்நாட்டில்  உள்ள சில்லறை விற்பனையாளர்களை ஒருங்கிணைத்து நூல்களை பரவலாக கொண்டு செல்லுதல், இதற்கான செலவுகளை கூட்டாக பகிர்ந்து கொள்வது என்ற அடிப்படையில் திட்டமிட்டுள்ளோம்.

எங்களின் நோக்கம் புத்தக விநியோகத்தில் மட்டுமல்ல, இந்த தொழிலுக்கு தேவையான தகுதி வாய்ந்த பணியாளர்களை பயிற்சியளித்து உருவாக்கவும் திட்டமிட்டு வருகிறோம். பதிப்புத் தொழில் மின்னச்சு செய்தல், மெய்ப்பு நோக்குதல்(ப்ரூப் ரீடிங்) மற்றும் விநியோகம் சார்ந்த துறைக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. இதைப் போக்க நாங்கள் விரிவான பயிற்சிகளை அளிக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.

ஒரு புத்தகத்தை பதிப்பிக்க உற்பத்தி செலவு; புத்தக விலையில் மூன்றில் ஒரு பகுதி உற்பத்தி செலவு. இன்னொரு பகுதி சில்லறை விற்பனை கழிவு தொகையாகவும், மீதமிருக்கும் பகுதி எழுத்தாளரின் காப்புரிமை தொகை, பதிப்பாளரின் லாபமாகவும் பிரித்து கொள்ளலாம். பொதுவாக பதிப்பகங்கள் எழுத்தாளருக்கு 10 சதவித தொகை காப்புரிமையாக கொடுக்கின்றன. உயிர்மை பதிப்பகம் 12.5 சதவிகித தொகையை கொடுக்கிறது.

 

பதிப்பகத்துக்கு புதியவர்கள்…

புதிதாக பதிப்பகத் துறைக்கு வருபவர்கள் ரூ.3 லட்சம் இருந்தால் தொடங்கிவிடலாம். கடந்த சில ஆண்டுகளில் பெரிய மூலதனத்தில் உள்ளே வந்தவர்கள்  காணமல் போய்விட்டார்கள்.

அதற்கு காரணம் இந்த தொழிலின் இயல்பு பற்றிய அறிவின்மையே ஆகும். தொடர்ச்சியாக போரடக்கூடியவர்களும் உடனடியாக ஆதாயத்தை எதிர் பார்க்காதவர்கள் மட்டுமே இதில் தொடர்ந்து இருக்க முடியும்.

நவீன வாசிப்பு…

நவீன வாசிப்பு மீது எந்த ஈர்ப்பும் சிந்தனையும் இல்லாத ஒரு நிலையை உருவாக்கிவிட்டோம். தமிழின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு எதிரான ஒரு கல்வியை கொடுத்துள்ளோம்.

வெகுஜன பத்திரிகைகளுக்கு சினிமா, அரசியல் தவிர வேறு எந்த அக்கறையும் இல்லை. வாசகர்களின் மூளைக்குள் இந்த இரண்டையும் திரும்ப திரும்ப நிரப்புகிறார்கள். பண்பாடு, வாழ்வியல் சார்ந்த எந்த அக்கறையும் அவர்களுக்கு கிடையாது.

நவீன வாசிப்புக்கு எதிராக பெற்றோர் மனோபாவமும் உள்ளது. குழந்தைகள் பாட புத்தகத்தை தவிர வேறு எதையும் படிக்கக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள்.

2.bp.blogspot.com Tc9QMICty80 VLXuKBXsrsI AAAAAAAACy0 ue6u1Tei8qM s1600 7 painting of ilayarajatamil artist 1374897548 b - 2026

குழந்தைகளை மணி மேக்கிங் மெஷினாக நினைக்கிறார்கள். குழந்தைகளுக்கு கற்பனைத் திறனை வளர்க்கக்கூடிய எந்த நூலையும் அறிமுகப்படுத்துவதில்லை. இவையெல்லாம் சேர்ந்து மேலோட்டமான வாசகர்கள் தான் தமிழில் அதிகம் உருவாவதை பார்க்கிறோம். ஆழமான விஷயங்களை படிப்பதற்க்கான மொழியறிவு கொண்ட வாசகர்கள் உருவாகவே இல்லை.

எழுத்து தொழில்…

இளைஞர்களின் எழுத்து ஒரு தொழிலாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால், நிலைமை அப்படியில்லை. 1960-களில் ஒரு புத்தகத்தின் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டன என்றால், இப்போதும் அதே 1000 பிரதிகள் தான் அச்சிடப்படுகின்றன. அறிவியல், பொருளாதாரம், வர்த்தகம் என எத்தனையோ மடங்கு வளர்ந்துள்ளது. ஆனால், புத்தகம் மட்டும் 1000 பிரதிகளைத் தாண்டவே இல்லை.

வெளிநாடுகளில் ஒரு சில புத்தகங்கள் எழுதிய ஆசிரியர்கள் கூட அதன்   வருமானத்தை வைத்துக் கொண்டு வாழமுடிகிறது. எழுத்தை மட்டுமே தொழிலாக கொண்டு வாழ்கிறார்கள்.

தமிழில் பிரபல எழுத்தாளர்கள் கூட முழு நேர தொழிலாக மேற்கொள்ள முடியாத அவலமே நிகழ்கிறது. தமிழில் முழு நேர நகைசுவை நடிகர்கள் இருக்கிறார்கள். முழு நேர எழுத்தாளர்கள் இல்லை என்பதுதான் உண்மை.

எழுத்து ஒரு தவம். எழுத்து ஜீவிதமாக இருந்தால் மட்டுமே எழுத்துக்கும் ஜீவிதம் இருக்கும். நல்ல எழுத்துக்கு நிறைய படிக்க வேண்டும். பல்வேறு இடங்களுக்கு சென்று தகவல் சேகரிக்க வேண்டும்.
தமிழில் சிறந்த படைப்புகள் வராததற்கு அதுவும் ஒரு காரணம். எழுத்தை முழுநேர தொழிலாக கொண்டால் மட்டுமே ஜீவிதமான படைப்புகள் உருவாகும்.”

மனுஷ்ய புத்திரனிடம் இருந்து எழும் உன்னத படைபாளியின் ஆதங்கமும், பதிப்பு தொழிலின் சாதக பதாக அம்சங்களையும் தெளிவுபட எடுத்துரைத்த அவரிடம் நன்றி கூறி விடைபெற்றேன்.

அதிரடி அரசியல் பேசும் மனுஷ்ய புத்திரனிடமிருந்து தொழில் குறித்து பேட்டி எடுத்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.