Home Blog Page 6006

துக்ளக்ஆசிரியரும்,அரசியல் விமர்சகருமான சோ மரணம் அடைந்ததாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட குஷ்பு ஆயிரம் முறை மன்னிப்பு !

துக்ளக்’ ஆசிரியரும், நடிகரும், அரசியல் விமர்சகருமான சோ மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்த சோவின் உடல் நிலை நேற்று திடீர் என்று மோசம் அடைந்து கவலைக்கிடமாகவும் இருந்தது.

இந்த நிலையில், நேற்றிரவு சோ ராமசாமி மரணம் அடைந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரவியது.

இதே தகவலை நடிகை குஷ்பும் அவரது ட்விட்டர் பக்கத்தில்,” சோ ராமசாமி அவர்கள் இறந்துவிட்டார். அவருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று வெளியிட்டார்

இதை பார்த்த பலரும் குஷ்புக்கு, சோ நலமாக இருப்பதாக ட்வீட் மூலம் கூறியுள்ளனர்.பொய்யான செய்தியை வெளியிட்டுவிட்டோம் என்று உணர்ந்த குஷ்பு, அதற்காக ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.என் தவறுக்காக நான் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்கிறேன். அவர் நீண்டகாலம் வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

சர்வாதிகாரியாக செயல்படும் கவர்னர் : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் டில்லி கவர்னர் நஜீப் ஜங் ஆம் ஆத்மி அரசிற்கு சர்வாதிகாரியாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

அர்விந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து மேலும்தெரிவித்ததாவது, நஜீப் ஜங் நல்ல மனிதர். ஆனால், அவரது தலைமையின் குணம் சரியில்லை. பிரதமர் அலுவலகம் என்ன் சொல்கிறதோ, அதை மட்டுமே, கவர்னர் செய்கிறார். டில்லி அரசின் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த விஷயங்களை, கவர்னர் காதுகொடுத்து கேட்பதில்லை என்று அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி கிரிமினல்களுக்கு பணத்துக்காக சீட் விற்பனை : அந்த கட்சியின் எம்பி. ஆர்.கே.சிங் குற்றசாட்டு

கிரிமினல்களுக்கு பணத்துக்காக பீகாரில் சீட்டை பாரதீய ஜனதா கட்சியினரே விற்கிறார்கள்” என அந்த கட்சியின் எம்பி ஆர்.கே.சிங் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

மத்திய அரசின் முன்னாள் உயர் அதிகாரியாக இருந்து, பாரதீய ஜனதா சார்பில் எம்பியானவர் ஆர்.கே.சிங். இவர் தான் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் தெரிவித்ததாவது:

பீகாரில் சில பாரதீய ஜனதா கட்சியினரே பணத்தை வாங்கிக்கொண்டு சீட்டுகளை விற்கின்றனர். உண்மையான கட்சியினருக்கு சீட் கிடைக்கவில்லை.

நன்றாக செயல்பட்டுக்கொண்டு இருந்த எம்எல்ஏக்களுக்கு தற்போது சீட் தரப்படவில்லை. கிரிமினல்களுக்கு சீட் விற்கப்பட்டுள்ளது. இதனால் கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை.இப்படி கிரிமினல்களுக்கு சீட் கொடுத்தால், லாலு பிரசாத்துக்கும் நமக்கும் (பாஜ) என்ன வித்தியாசம்?.

பீகார் மக்களுக்கு இதனால் அநீதி இழைக்கப்படுகிறது. நாம் நல்ல ஆட்சி தருவோம் என பொதுமக்கள் நம்பினால், அதற்கு தகுந்தாற்போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். கிரிமினல்களை விட, ஊழலற்றவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்..

‘டூ வீலர்’ பெண்களா..! இடுப்பு பத்திரம்..!

பெண்கள் சைக்கிள் ஓட்டுவதையே அதிசயமாக பார்த்த காலம் ஒன்றிருந்தது. இன்றைய நவீன பெண்கள் டூ வீலரில் பறக்கிறார்கள். ஸ்பீட் பிரேக்கரில் கூட வேகத்தை குறைக்க மறுக்கிறார்கள்.

 

இப்படி வண்டியை பள்ளம் மேட்டில் விட்டு ஓட்டும் போது ‘ஷாக்-அப்சபர்’ சேதமடைகிறதோ இல்லையோ..! மனித முதுகெலும்பின் ‘ஷாக்-அப்சபர்’ போய்விடும். இந்த ஷாக்-அப்சபருக்கு ‘காக்சிக்ஸ்’ என்று பெயர்.

 

 

https%3A 1.bp.blogspot.com 5BH4aE236ho VPipXDhIqMI AAAAAAAADOQ xZIfOYAkIQE s1600 22541108 326b 4767 9fb3 8202c90d6fb1HiRes - 2026

 

மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் என்பதற்கு இதுதான் அழுத்தமான அடையாளம். ‘காக்சிக்ஸ்’ முதுகெலும்பு தொடரின் வால்பகுதி. நான்கு எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பார்ப்பதற்கு ஒரே எலும்பு போல் தோற்றம் தரும். இந்த எலும்புகளுக்கு எந்தவித அசைவும் கிடையாது.

 

ஆண்களுக்கு மிகச் சிறியதாக இருக்கும் ‘காக்சிக்ஸ்’ பெண்களுக்கு ஒரு ‘ஹாக்கி ஸ்டிக்’ வளைவு போல் உள்பக்கமாக வளைந்து முடியும். பெண்கள் தாய்மை அடைவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு. குழந்தையை சுமக்கும் கர்ப்பபையை இது கொஞ்சம் தாங்கி பிடிக்கும். மற்றபடி இதனால் எந்த பயனும் இல்லை. சில தொந்தரவுகள் மட்டும் உண்டு.

 

உட்காரும்போது முதுகெலும்பும் ‘காக்சிக்ஸும் இணையும் இடம் இயல்பாகவே நெகிழ்ந்து கொடுக்கும். சிலருக்கு ‘காக்சிக்ஸ்’ நீளமாக இருந்தால் நெகிழ்ந்து கொடுக்காமல் அழுத்தப்படும். அதனால், அந்தப் பகுதியில் வலி எடுக்கும். லேசான வலி என்றால் கவலைப் படவேண்டியதில்லை. ஆனால், தொடர்ந்து வலித்தலோ, உட்கார்ந்திருக்கும் போது அதிகம் வலித்தலோ கண்டிப்பாக டாக்டரை பார்க்க வேண்டும்.

 

இந்த வில்லங்கமான ‘காக்சிக்ஸ்’ ஆண்களை விட பெண்களுக்கு நீளமாக இருப்பதால், பெண்களை அதிகம் தாக்குகிறது. அதிலும் இருச் சக்கர வாகனம் ஓட்டும் பெண்களுக்கு கூடுதல் தாக்குதல்..! ‘ஷாக்-அப்சர்பர்’ நல்ல நிலையில் இருப்பதும், ஸீட்டில் அதிக ‘குஷன்’ இருப்பதும், ‘காக்சிக்ஸ்’ மீதான பாதிப்பை சற்று குறைக்கலாம்.

 

https%3A 2.bp.blogspot.com kQpNkZ9Grcc VPioprjwlaI AAAAAAAADN8 8d9eTuzHTFU s1600 article 2737189 20E1F71700000578 - 2026

பெண்கள் இப்படி அமரக் கூடாது

 

டூ வீலரில் பெண்கள் புடவை அணிந்து பின்னால் அமர்ந்து பயணம் செய்யும் போது கால்களை ஒரே பக்கமாக தொங்கப் போட்டு பயணித்தால், அது முதுகெலும்பை கஷ்டப்படுத்தும். இந்த மாதிரி பயணத்தை 10 கி.மீ.-க்குள் முடித்துக் கொள்ள வேண்டும். அதுவும் இப்போது வருகிறதே பின் ஸீட்டில் ஸ்டூல் இருப்பதுபோல் உயரமான பைக்(150-250 சி.சி.) அது முற்றிலுமாக பெண்களுக்கு ஒத்து வராத வாகனம். அதில் பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள்.

 

https%3A 2.bp.blogspot.com Xu bGLcAIX0 VPkPklV QYI AAAAAAAADOg 9HE9lBXKMeo s1600 couple 0052 - 2026

இப்படியும் அமரலாம்..!

பெண்கள் இப்படி ஒரே பக்கமாக கால் போட்டு அமர்ந்து சென்றாலும் பல பெண்கள் தங்கள் உடலைத் திருப்பி கணவனின் தோள் வழியாக சாலையைப் பார்க்க முயற்சிக்கிறார்கள். இது தவறான முறையாகும். பின்னால் அமரும்போது சாலையைப் பார்க்க முயலாமல், வண்டியையோ, கணவரையோ இறுக்கமாக பிடித்துக் கொண்டு நேராக உட்காரவேண்டும். இன்று சுடிதார், ஜீன்ஸ் பெண்கள் அதிகமாகிவிட்டதால் இருப் புறமும் கால் போட்டு  அமருவது சாலச் சிறந்தது.

 

https%3A 3.bp.blogspot.com 2GDE2WhOF8A VPio pJWmiI AAAAAAAADOE 4MVdgKP65YU s1600 1006724 - 2026

இதுதான் சரியான ரைடிங் பொசிஷன்

பெண்கள் டூ வீலரை ஓட்டும் போது நேராக முதுகெலும்பு ஒரு நேர்க்கோட்டில் இருப்பதுபோல் அமர்ந்து ஓட்ட வேண்டும். பள்ளம் மேட்டில் விடாமல் மெதுவாக செல்லவேண்டும். எல்லா விஷயத்திலும் ஆண்களோடு போட்டி போடும் பெண்கள் இந்த விஷயத்தில் விட்டு கொடுத்தால் அவர்கள் முதுகுக்குத் தான் நல்லது. மெதுவாக சென்றால் ‘காக்சிக்ஸ்’ வலியில் இருந்து தப்பிக்கலாம்!

 

இடுப்ப பத்திரமா பாத்துக்கோங்க..!

 

 

மன்மோகன் சிங் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

பாரத முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் க்கொண்டுள்ளார்.

83 வது பிறந்த நாளைக் கொண்டாடும் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் வாழ்த்தில், ‘டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

 

உண்மைக்கு மாறான தகவலை சட்டசபையில் தெரிவிக்கலாமா.? : கருணாநிதி

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை நிலவிவரும் நிலையில், தமிழகம் மி்ன்மிகை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் சட்டசபையில் கூறியுள்ளார்.

உண்மைக்கு மாறான தகவலை சட்டசபையில் தெரிவிக்கலாமா என்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பி உள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, தமிழக சட்டசபையில் மாநிலம், மின்மிகை மாநிலமாக உள்ளதாக, மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியிருக்கும் நிலையில், பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

சென்னையைத்தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு 2 மணிநேர மின்தடைக்கு வாய்மொழி உத்தரவு தமிழகஅரசு பிறப்பித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பாதாமி பயணம் – குகைக் கோயில்கள்

சாளுக்கிய மன்னர்களின் கடைசி தலைநகரான பாதாமியில் நான் இறங்கிய போது விடியற்காலை 5 மணி. குளிர் அரக்கன் மனிதர்கள் அனைவரையும் கம்பளிப் போர்வைக்குள் புதைத்து வைத்திருந்த நேரம்.

 

அந்தக் குளிரிலும் பஸ் நிலையம் அருகே ஒரு இளம் தம்பதியினர் தள்ளுவண்டியில் இட்லியும், டீயும் சுடச்சுட விற்றுக் கொண்டிருந்தார்கள். குளிருக்கு இதமாக நானும் ஒரு ‘அர்தா’ சாய் குடித்தேன்.

 

கர்நாடகாவில் டீ காபியிலும், ‘ஃபுல்’, ‘ஹாஃப்’ உண்டு. ‘அர்தா’ என்றால் பாதி!  பெரும்பாலும் அங்குள்ள மக்கள் ‘அர்தா சாய்’தான் குடிப்பார்கள்.

 

‘அர்தா’வில் ஒரு மடக்கு டீ இருக்கும். அதுதான் அளவு.‘ஃபுல்’லில் இரு மடக்கு டீ இருக்கும். அவ்வளவுதான்!

 

சுடச்சுட சுவையான டீ குளிருக்கு இதம் தந்தது. ‘எஷ்டூ?’(எவ்வளவு) என்றேன். ‘மூறு ரூபா கொடி’ (மூன்று ரூபாய் கொடுங்கள்) என்றார்கள். மூன்று ரூபாய்க்கு அது அற்புதமான டீ. நமது தமிழ்நாடாக இருந்திருந்தால் அந்த டீக்கு 10 ரூபாய் கறந்திருப்பார்கள்.

 

டீ விலையே பாதாமியை ஒரு நியாயமான ஊராக காட்டியது. ஒரு சாம்ராஜ்யத்தின் தலைநகரில் காலாற நடப்பதே அருமையான அனுபவம்தான். அதுவும் கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ படித்தவர்களுக்கு பாதாமி மறக்கமுடியாத இடம்.

 

ஒரு நல்ல ஹோட்டல் தேடி அலைந்தேன். ஆனால் குளிர் தான் உடலை ஊசியாக குத்தியது. மொபைலில் டெம்பரேச்சர் பார்த்தேன்; 11 டிகிரி என்று காட்டியது. அந்த பேய்க்குளிருக்கான காரணம் அப்போதுதான் புரிந்தது.

 

நமது கொடைக்கானல், ஊட்டி குளிரை விட இங்கு அதிகம். குளிரைப் போலவே பாதாமியில் ஹோட்டல்களும் அதிகம். குளிரில் இருந்து தப்பிக்க ஒரு பட்ஜெட் ஹோட்டல் அறைக்குள் தஞ்சமடைந்தேன்.

 

https%3A 4.bp.blogspot.com - 2026

பாதாமி நகரம்

பாதாமியின் பழைய பெயர் ‘வாதாபி’. சித்தர்கள் காலத்தில் இருந்து புகழ் பெற்ற இடம் இது. வாதாபி,  இல்வலன் என்ற இரண்டு அரக்கர்கள் ஒரு காலத்தில் இங்கு சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்த வழியாக போகும் முனிவர்களைக் கொன்று சாப்பிட்டு வந்தார்கள்.

 

முனிவர்களை ஏமாற்றி விருந்துக்கு அழைத்து, அந்த விருந்தில் வாதாபியே உணவாக மாறி முனிவர்கள் வயிற்றுக்குள் சென்று விடுவான். அதன்பின் இல்வலன் ‘வாதாபியே! வெளியே வா!’ என்று சொல்வான். உடனே முனிவரின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான் வாதாபி. பிறகு இருவரும் சேர்ந்து இறந்த முனிவரை சாப்பிட்டு விடுவார்கள்.

 

இப்படித்தான் ஒருமுறை அகத்திய மாமுனி தென்திசை நோக்கி வரும்போது வாதாபி அவரை விருந்துக்கு அழைத்தான். விருந்தை உண்ட அகத்தியரிடம் வாதாபியின் மாயாஜாலம் பலிக்கவில்லை. வாதாபியை வயிற்றுக்குள்ளே ஜீரணித்து விட்டார். வெளியே இருந்த இல்வலனையும் சாம்பலாக்கி விட்டார்.

 

அகத்தியரின் அற்புத செயலால் அரக்கர்கள் தொல்லையில் இருந்து மக்கள் விடுபட்டனர். ஆனாலும் ‘வாதாபி’ என்ற அவன் பெயரே ஊருக்கு நிலைத்து விட்டது. பின்னாளில் வந்த மக்கள் ஒரு கொடிய அரக்கனின் பெயரிலா நம் ஊர் இருப்பது என்று நினைத்து, வாதாபியை பாதாமி என்று மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது.

 

https%3A 3.bp.blogspot.com - 2026

முதல் குகைக் கோயில்

 

கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் (கி.பி.543 – 757) சாளுக்கிய மன்னர்களின் தலைநகரம் இந்த பாதாமி தான். ‘சாளுக்கியா’ என்பது சலுகம் என்ற கன்னட வார்த்தையில் இருந்து வந்தது. ‘சலுகம்’ என்றால் உள்ளங்கை; பிரம்மாவின் உள்ளங்கையில் இருந்து தோன்றியவர்கள் சாளுக்கியர்கள்; இப்படி தங்களை பெருமையாக அழைத்துக் கொண்டது மன்னர் பரம்பரை.

 

சாளுக்கியர்கள் கலையில் சளைத்தவர்கள் அல்ல. பாதாமி குகைக் கோயில்களை பார்ப்பதற்கு முன்பு வரை சாளுக்கியர்கள் எனக்கு வரலாற்று பாட புத்தகங்களில் மட்டுமே அறிமுகமாகியிருந்த ஒரு வம்சம். ஆனால் பாதாமி நகரில் அமைந்திருந்த பாதாமி குகை கோயில்கள், கோட்டைகளை பார்த்தப்பின் என் மனதில் சாளுக்கியர்கள் விஸ்வரூபம் எடுத்தார்கள். என்னவொரு கலையம்சம்!  எல்லாமே கலைகளின் உச்சம்!

 

https%3A 2.bp.blogspot.com rFcp - 2026

அகஸ்திய ஏரி

கோட்டையும் குகைக் கோயில்களும் அமைந்திருக்கும் இடமே மனதை அள்ளிப் போகிறது. மூன்று பக்கமும் உயர்ந்து நிற்கும் மலைகள். நாலாவது பக்கம் பாதாமி நகரம். நடுவில் பிரமாண்டமான அகஸ்திய தீர்த்தம், அதுவே அசத்தல்தான்!

 

குளத்தில்  இறங்கிச் செல்ல நீண்ட படிக்கட்டுகள் எல்லா பக்கங்களிலும் அமைந்திருந்தன. இப்படி ஒரு அழகு மிக்க இடமாக இது இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

 

 

பாறைகள் செம்மண் நிறத்தில் இருக்கின்றன. இப்படிப்பட்ட பாறைகளை தமிழ்நாட்டில் பார்ப்பது அபூர்வம். இந்த செந்நிற மலைகளைக் குடைந்து குடைந்தே நான்கு குகைக்கோயில்களை உருவாக்கியிருக்கிறார்கள் சாளுக்கியர்கள். ஒவ்வொன்றுமே பொக்கிஷ­ம்தான்!

 

குளத்தின் தென்பகுதி மலையில் குகைக்கோயில்கள் வரிசையாக உள்ளன. முதல் குகைக்கோயில் சிவாலயம், மற்ற மூன்று குகைக்கோயில்களோடு ஒப்பிடுகையில் இதுதான் உயரம் குறைவானது. வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து அப்படியே கோயிலுக்குள் செல்லும் விதமாக மிக அருகில் இருக்கிறது. இந்த குகையின் முகப்பில் ஒரு நடராஜர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே வேறு எங்கும் பார்க்க முடியாத வடிவம் அது.

 

https%3A 3.bp.blogspot.com uDGvbVu4640 VP206OzzghI AAAAAAAADSU LRr8k46Q4GY s1600 badami cave inside 2 - 2026

84 முத்திரைகள் கொண்ட நடராஜர் சிற்பம் 

ஒரு பக்கத்துக்கு 8 கரங்கள் என்று மொத்தம் 16 கரங்களுடன் பலவித பரத நாட்டிய முத்திரைகளை வெளிப்படுத்தி நிற்கிறார். எந்த இரு கரங்களை ஒன்று சேர்த்தாலும் நாட்டியத்தின் ஒரு முத்திரை கிடைக்கும். இப்படி 84 முத்திரைகளை வெளிப்படுத்தும் சிற்பம் உலகில் வேறு எங்கும் இல்லை.

 

மண்டபத்துக்குள் சென்றால் மகிஷாசுர மர்த்தினி, கணபதி, கார்த்திகேயன் சிற்பங்கள் உள்ளன. சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை ஒரு பக்கமும் சிவனும் விஷ்ணுவும் இணைந்த ஹரிஹரன் சிற்பம் மறுபுறமும் உள்ளன. எல்லாமே கலையழகு!

 

இரண்டாவது குகைக்கோயில் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை நமக்கு விளக்குகிறது. வராக அவதாரம், திரிவிக்ரம அவதாரம் பிரமாதமாக செதுக்கப்பட்டுள்ளன.

 

https%3A 1.bp.blogspot.com - 2026

மூன்றாவது குகைக்கோயில்

மூன்றாவது குகைக்கோயில்தான். நான்கிலும் மிகப்பெரியது; பரவாசுதேவா குகைக்கோயில். கி.பி. 578-ல் முதலாம் புலிகேசியின் மகன் மங்கலேசன் இந்தக் கோயிலை கட்டியிருக்கிறார். முகப்பிலேயே எட்டு கரங்களுடன் மகாவிஷ்ணு நிற்கிறார். அதைக் கடந்து உள்ளே போனால் ஆதிகேசவனின் நாக இருக்கை மேல் பரவாசுதேவர் அமர்ந்திருக்கிறார்.

 

https%3A 3.bp.blogspot.com dYUGDRtL7YM VP22KKXqNdI AAAAAAAADSc hRXQDI71Gw4 s1600 DSC 3656 - 2026

தூண்களில் தம்பதியர் சிற்பம்

https%3A 2.bp.blogspot.com R3 f CbCdoM VP23OOfbRzI AAAAAAAADSs lOFcv1aI m4 s1600 6426206481 3370733596 z - 2026

மேற்கூரையில் தம்பதியர் சிற்பம்

தூண்களில் காதல் ரசம் சொட்டும் தம்பதியினரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதனால்தான் இந்தக் குகைக்கோயில்கள் காதலர்களையும் தங்கள் பக்கம் ஈர்த்து விடுகிறது. இங்கு நிறைய காதலர்களைக் காண முடிகிறது.

 

https%3A 3.bp.blogspot.com e4Lsjp2kZxM VP22sSbDnvI AAAAAAAADSk JZen2nhPAWE s1600 13travel badami10 - 2026

மகாவீரர்

நான்காவது குகைக்கோயில் தீர்த்தங்கரர் கோயில். சைவ, வைணவ கோயில்களை அமைத்த சாளுக்கியர்கள் சமணத்தையும் விட்டுவிடவில்லை. இந்தக் குகைக் கோயில்தான் இருப்பவற்றில் அளவில் சிறியது. பாகுபலி, பார்ஸ்வா, சிற்பங்களுடன் பெரிய மகாவீரர், சிற்பமும் இங்கு அழகாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த குகைக்கோயில்தான் இருப்பதிலேயே உயரமானது.

 

https%3A 2.bp.blogspot.com iZpiPrl8Ujo VP24jeRUIMI AAAAAAAADS0 GukoL8iBihQ s1600 Badami Cave Temple Columns - 2026

குகைக்கோயிலின் உட்புற கலையழகு

குடைந்து உருவாக்கப்பட்ட இந்த குகைக்கோயில்களுக்கு நடுவே இயற்கையாக உருவான ஒரு குகையும் உள்ளது. இந்தக் குகையில் புத்த பிட்சுகள் தியானம் செய்து வந்தனர்.

 

https%3A 2.bp.blogspot.com ZHoKGxV3L 4 VP25JOPanUI AAAAAAAADS8 AV9R riKcto s1600 dsc 0007 - 2026

இப்படியொரு கற்தூணை வேறெங்கும் பார்த்ததில்லை 

சமண குகைக் கோயிலுக்கு முன்னே அமைந்துள்ள இடத்தில் இருந்து கீழே தெரியும் பிரமமாண்டமான அகஸ்திய தீர்த்தக் குளமும், இயற்கை அரணாக அமைந்த மலைகளும் பாதாமி நகரையும் பார்ப்பது பேரெழில்! ஏதோ சினிமாவில் வரும் கனவுக்காட்சி போல் அழகோ அழகு!

 

பாரதிராஜாவின் ‘தாஜ்மஹால்’, ஜீவா நடித்த ‘வந்தான் வென்றான்’ படத்தில் வரும் ‘காஞ்சன மாலா’ பாடல், விஜய் சேதுபதி நடித்த ‘ரம்மி’ போன்ற சினிமா படங்கள் இந்த எழில் பிரதேசத்தில் எடுக்கப்பட்டது தான்.

 

https%3A 4.bp.blogspot.com 8x8EGNO0J9U VP26aRaRoRI AAAAAAAADTI oNYAme00g6o s1600 malegitti shivalaya temple - 2026

மலை மீதுள்ள சிவாலயம்

குகைக்கோயில்கள் அமைந்துள்ள மலைக்கு எதிரேயுள்ள மலைக்குன்றின் உச்சியிலும் மையத்திலும் அடிவாரத்திலும் மொத்தம் நான்கு கோயில்கள் உள்ளன. எல்லாமே சிவாலயங்கள்தான்.

 

https%3A 1.bp.blogspot.com oQ98s8EPU8Y VP28KMn3N4I AAAAAAAADTg Mwtghw BxmU s1600 badami temples - 2026

பூத நாத சிவன் கோயில் ஏரியிலிருந்து

 

https%3A 4.bp.blogspot.com AAfN5eRUy6E VP26 wn9S6I AAAAAAAADTQ dm1o0Fc77t4 s1600 Agastya Theertha Badami - 2026

பூத நாத சிவன் கோயில் கோட்டையிலிருந்து

https%3A 4.bp.blogspot.com 43 wadHagV8 VP29D wtheI AAAAAAAADTo b6Q3qsUyNOs s1600 800px Mallikarjuna group of temples at Badami - 2026

மலை அடிவாரத்திலுள்ள சிவாலயம்

 குளத்தின் வலது புறத்தில் மலையின் அடிவாரத்தில் குளக்கரையில் அமைந்துள்ள பூத நாத சிவன் கோயில் திராவிட கலையில் அமைக்கப்பட்ட அற்புதமான கோயில். இங்கிருக்கும் எந்தக் கோயிலிலும் வழிபாடுகள் நடைபெறவில்லை. எல்லாமே ஒரு அழிந்து போன அரசாட்சியின் கலை எச்சங்களாகவே இருக்கின்றன.

 

 

https%3A 1.bp.blogspot.com fE1BF1RWx g VP2 c NzRvI AAAAAAAADT0 CPNVHvEDF14 s1600 DSC07137 - 2026

கோட்டையின் கண்காணிப்பு கோபுரம்

கோயில்களைப் போலவே சாளுக்கிய மன்னர்களின் கோட்டையும் இந்த மலைக்குன்றில் இருக்கின்றன. சாளுக்கிய மன்னர்களின் இந்தக் கோட்டையை பின்னர் பாமினி சுல்தான்களும், 17-ம் நூற்றாண்டில் திப்பு சுல்தானும் விரிவுபடுத்தியுள்ளனர். மலைமீது திப்பு பயன்படுத்திய பீரங்கிகள் உள்ளன. குகைக்கோயில்களுக்கு செல்லும் வழியில் மலையின் அடிவாரத்தில் திப்புசுல்தான் காலத்தில் கட்டப்பட்ட பழமையான மசூதி ஒன்றும் உள்ளது.

 

https%3A 1.bp.blogspot.com vsLjBJoA6dg VP3AiijljyI AAAAAAAADUM b SZ1LhvH5s s1600 badami caves - 2026

திப்பு சுல்தான் கட்டிய மசூதி

 

https%3A 3.bp.blogspot.com 90m0h kBjh4 VP2 U6HtqfI AAAAAAAADT8 VqMMF9SuS4s s1600 6545534905 d3dca84cc2 z - 2026

பாதாமி அருங்காட்சியகம்

குளத்தின் கரையில் பாதாமி அருங்காட்சியகம் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள சாசனங்களும் சிற்பங்களும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 6-ம் நூற்றாண்டில் நரசிம்மவர்ம பல்லவன் இரண்டாம் புலிகேசியை வீழ்த்தி வாதாபியை வென்று, ‘வாதாபி கொண்டான்’ என்ற பெயர் பொறித்த கல்வெட்டும் இங்குள்ளன.

 

வாதாபியில் இரண்டு வித்தியாசமான சிற்பங்கள் இருந்திருக்கின்றன. ஒன்று கணபதி, மற்றொன்று லஜ்ஜாகெளரி. வாதாபி கணபதியை பல்லவ மன்னன்  தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்.. ஆனால் லஜ்ஜாகெளரி கொண்டு வரப்படவில்லை.

 

https%3A 2.bp.blogspot.com t2nK25TTglk VP2 zkDsnWI AAAAAAAADUE ofv xpehOeY s1600 Aditi.Lotus Headed.Goddess of - 2026

லஜ்ஜாகெளரி

லஜ்ஜாகெளரியின் சிற்பம் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. பிறப்புக் கடவுள் என்று இதை போற்றுகிறார்கள். நிர்வாணக் கோலத்தில் இருக்கும் இந்த பெண் தெய்வம். குழந்தை பிறக்கும் வடிவத்தில் காலை தூக்கிய வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முகத்திற்கு பதிலாக தாமரை மலர் உள்ளது. தாமரை பிறப்பை உயிர்ப்பிக்கும் அம்சமாக இதில்  காட்டப்பட்டுள்ளது.

 

 

https%3A 1.bp.blogspot.com yGVdOlna U4 VP3Bd83GBEI AAAAAAAADUY 6VBOTZDnanQ s1600 badami sandstone - 2026

கோட்டையிலுள்ள தூண்கள்

பாதாமியில் உள்ள குகைக்கோயில்கள், மலைக்கோயில்கள், கோட்டை, அருங்காட்சியகம் எல்லாவற்றையும் ஏறி இறங்க இரண்டு நாட்கள் வேண்டும். அந்த இரண்டு நாட்களும் கலையும் அழகும் உங்களுடனே பயணிக்கும்.

எப்படி போவது?

பெங்களூரிலிருந்து 480 கி.மீ. தொலைவில் பாதாமி அமைந்துள்ளது. அருகிலிருக்கும் ஹூப்ளி நகரம் 105 கி.மீ. தொலைவில் உள்ளது. பாதாமி சாலை மற்றும் ரெயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து பாதாமிக்கு நேரடி எக்ஸ்பரஸ் ரயில்கள் உள்ளன. அருகில் இருக்கும் விமான நிலையம் ஹூப்ளி.

எங்கு தங்குவது?

பாதாமியில் தங்குவதற்கு ஏகப்பட்ட ஹோட்டல்கள் இருக்கின்றன. ‘ஹோட்டல் மயூரா சாளுக்கியா’ (0835 – 7220046) சொகுசாக தங்குவதற்கு ஏற்ற இடம். இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.1,500. ‘ஹோட்டல் ஆனந்த் டீலக்ஸ்’ (08357 – 220074) பஸ் நிலையம் அருகில் உள்ளது. இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.800.

 

சோ குறித்த செய்தி: ஆயிரம் முறை மன்னிப்பு கேட்ட குஷ்பு

பத்திரிகையாளர் சோ ராமசாமி குறித்த தவறான தகவலை வெளியிட்டதற்காக நடிகை குஷ்பு ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.
 
பத்திரிகையாளர் சோ ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சோ ராமசாமி குறித்து வதந்திகள் பரவின. இந்தத் தகவலை உறுதி செய்யாமல், நடிகை குஷ்புவும் வருத்தம் தெரிவித்து தகவல் வெளியிட்டார்.  அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சோ ராமசாமி குறித்துக் கூறி, இரங்கல் தெரிவித்திருந்தார். ஆனால், பின்னூட்டம் அளித்த பலரும் சோ நலமாக உள்ளார் என  ரீ- டுவீட் செய்தனர்.
 
தனது செயலுக்காக குஷ்பு தற்போது டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், ”சோ ராமசாமி குறித்த ஒரு பதிவை போட்டிருந்தேன். அதை நான் உறுதிப் படுத்தாமல் செய்துவிட்டேன். என் தவறுக்காக நான் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்கிறேன். அவர் நீண்ட காலம் வாழ வேண்டும்” என்று கூறியுள்ளார்.

 

மனைவியின் பேச்சை நான் கேட்காததால் இப்போது அனுபவிக்கிறோம் : விஜயகாந்த்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி அமைப்பது குறித்து மனைவி அளித்த அறிவுரையை கேட்காததால் அதற்கான பலனை அனுபவித்து வருகிறேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், தே.மு.தி.க., சார்பில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
 
பொதுக் கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் “சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதால் தமிழ்நாடு சுத்தமாகாது. துப்புரவுத் தொழிலாளர்கள் நன்றாக இருந்தால்தான் நாடு சுத்தமாகும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலே இல்லை  என்று அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். ஆனால், டெங்கு காய்ச்சலால் கிரமாங்களில் மக்கள் இறந்து கொண்டே உள்ளனர். தற்போது அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுகவால் ஆட்சிக்கு வர முடிந்தது. இல்லையென்றால் அதிமுக படுதோல்வி அடைந்து திமுக ஆட்சியைப் பிடித்திருக்கும். அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று என் மணைவி பிரேமலதா கூறினார். ஆனால் அந்த அறிவுரையை அவர் ஏன் அப்போது வழங்கினார் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது. அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டுள்ளோம்.
 
பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிடும் அறிவிப்புகள் எல்லாம் பட்டை நாமம் போடும் செயல் படுத்தப்படாத அறிவிப்புகளாகவே உள்ளது. வருகின்ற சட்ட மன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் மாதம் அறவிப்பேன்” என்று பேசினார்.

கோடையிலும் நடு நடுங்க வைக்கும் குளிர்

 

 

https%3A 3.bp.blogspot.com HqqI4i33tRw VYr eHJrILI AAAAAAAAEpk PIR4bCItlt0 s400 00201 174898 - 2026

குலும்பன், குலும்பி தம்பதி

 

ட்ஜெட் சுற்றுலாவுக்கும், ஒரு நாள் பிக்னிக்கிற்கும் ஏற்ற இடம் ராமக்கல் மெட்டு. வருடம் முழுவதும் நடு நடுங்க வைக்கும் குளிர்தான் இதன் சிறப்பு.

 

தமிழ்நாடு – கேரளா வன எல்லைக்குள் கேரளா பகுதியில் அமைந்துள்ள மிக உயர்ந்த முகடுதான் ராமக்கல் மெட்டு. தேக்கடி, மூணாறு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு தவறாமல் வந்து இந்த குளிரை அனுபவித்துவிட்டு போவார்கள்.

 

18 ஹேர்பின் வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதையில் பயணிப்பதே ஒரு சுகமான அனுபவம்தான். காபி, மிளகு என நறுமணம் கமழும் மலைப்பயிர்களை ரசித்தப்படி பயணம் செய்தால் ராமக்கல் மெட்டு வந்துவிடும். காற்றாலைகளையும் பார்க்காலாம்

 

https%3A 1.bp.blogspot.com FZHIF5Bnhn8 VYr kQTQoLI AAAAAAAAEpw 4XpTdnrvngI s400 1430127642 Ramakkalmedu wind farm - 2026

 

அங்கு முதலில் நம்மை வரவேற்பது 60 அடி உயர ஆதிவாசி தம்பதிகள் சிலைதான். இம் மலையில் வாழ்ந்த குலும்பன், குலும்பி தம்பதிகளின் சிமெண்ட் சிலைதான் இந்த இடத்தின் ஹைலைட். சிலையை சுற்றியுள்ள பாறைகளில் நின்று கீழே பார்த்தால் ஆகாயத்தில் பறந்து கொண்டே பார்ப்பது போல் இருக்கும்.

 

நம் கண்ணெதிரே பாதத்தின் கீழே கம்பம், உத்தமபாளையம், பண்ணைபுரம், கோம்பை ஆகிய ஊர்களைப் பார்த்து ரசிக்கலாம். கேரளாவின் மலைகளின் வனப்பையும் அழகையும் பார்க்க ரசிக்க சிறந்த இடம். 

 

https%3A 1.bp.blogspot.com LsV7zQn1Yo VYr fjzjkkI AAAAAAAAEp0 kXFtA gOg1U s400 ramakkalmedu19 - 2026

 

தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து 13 கி.மீ. மலை வழிப் பயணம் செய்தால் கம்பம் மெட்டு வருகிறது. அங்கிருந்து 10 கி.மீ. பயணித்தால் ராமக்கல் மெட்டு வந்துவிடும். ராமக்கல் மெட்டில் வீடுகள், கடைகள் உண்டு. இரவில் தாங்கும் விடுதிகள் இல்லை. கம்பம் நகரம் தான் தங்குவதற்கு ஏற்றது.  

 

குளிரையும் வேகமாக வீசும் காற்றையும் அனுபவிக்க நினைப்பவர்களுக்கு ராமக்கல் மெட்டு அருமையான இடம்..!!! 

 

https%3A 3.bp.blogspot.com er6qZz53zF8 VYr vQSdFYI AAAAAAAAEqA h0VqJyremKQ s640 Ramakkalmedu - 2026