Home Blog Page 6046

மீனவர் வலையில் தண்ணீரில் மிதக்கும் அதிசயக் கல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற போது மீனவர் வலையில் தண்ணீரில் மிதக்கும் அதிசயக் கல் ஒன்று சிக்கியது. மணமேல்குடி அருகே உள்ளது பொன்னகரம் மீனவர் கிராமம். இங்கு தினசரி 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கடலுக்கு சென்று மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீனவர் ஒருவர் வலையில், மீன்களுடன் சேர்ந்து ஒரு கல்லும் வந்தது. அந்தக் கல்லை எடுத்து அவர் தண்ணீரில் வீசியபோது அந்தக் கல் மிதந்தது. இதனால் ஆச்சரியம் அடைந்த அவர் அந்தக் கல்லை படகில் தூக்கிப் போட்டுக் கொண்டு கரைக்கு வந்தார். பின்னர் பொதுமக்களிடம் தண்ணீரில் கடலில் கண்டெடுக்கப்பட்ட மிதக்கும் கல் குறித்த அதிசயத்தை கூறினார். பின்னர் அந்தக் கல் அவ்வூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவில் வாசலில் உள்ள தெப்பக்குளத்தில் போடப்பட்டது. குளத்தில் போடப்பட்ட அந்தக் கல் தண்ணீரில் மூழ்காமல் மிதந்தது. இந்த அதிசயத்தைக் கேள்விப்பட்ட சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்து குளத்தில் மிதந்து கொண்டிருக்கும் அதிசயக் கல்லை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். செய்தி: பொ.ஜெயச்சந்திரன், புதுக்கோட்டை 321ec5002072e6aed0e9798d3fd58ad2 - 2026

சுங்கத்துறைக் கண்காணிப்பாளருக்கு 3 வருட சிறை; சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு

மதுரை: திருச்சி சுங்க துறை கண்காணிப்பாளராக இருந்தவர் ஜெயராஜ், இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக CBI வழக்கு பதிந்து மதுரை CBI நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் இவருக்கு 3 வருடம் சிறை தண்டனையும் 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், 35 லட்ச மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

வாய்ப்புக்காக அஜித் பின்னாடி ஓட மாட்டேன்: சமந்தா

samantha26விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்கர்களின் படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடிந்து வருகிறார் சமந்தா. இன்று தனது 28வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, விஜய், சூர்யா, விக்ரம், தனுஷுடன் நடிக்கிறேன். அஜித்துடன் நடிப்பதாக வந்த தகவல் பற்றி கேட்கிறார்கள். நான் பேராசைக்காரி அல்ல. இப்போதே நான் மகிழ்ச்சியாகதான் இருக்கிறேன். ஏதாவது ஒன்று அடையவேண்டும் என்பதற்காக அதன்பின்னால் ஒருபோதும் நான் ஓடமாட்டேன். நான் தலை எழுத்தை நம்புகிறேன். என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும் எள்று கூறியுள்ளார்.

பிசிசிஐ ரூ.1.90 கோடி தரவேண்டும்: கவாஸ்கர்

மும்பை: ஐபிஎல் சூதாட்டப் புகார் காரணமாக கடந்த ஆண்டு கிரிக்கெட் வாரிய தலைவராக தாற்காலிக பொறுப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். அப்போது, கவாஸ்கருக்கு, அவரது பிற பணிகளைக் கணக்கில் கொண்டு சம்பளத்தைக் கணக்கிட்டுக் கொடுக்கும்படி பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து கவாஸ்கர், பிசிசிஐக்கு எழுதியுள்ள கடிதத்தில், தான் ஐபிஎல் பணிகளைக் கவனித்துக் கொண்டதற்கான ஊதியமாக ரூ.1.90 கோடி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தான் பிசிசிஐ தலைவராகப் பணியாற்றிய போது, தனது பிற பணிகளான டிவி வர்ணனை, மீடியாக்களுக்கு பேட்டி, கட்டுரை விமர்சனம் எழுதுவது உள்ளிட்டவற்றை நிறுத்தியதால் ஏற்பட்ட இழப்பீடாக இந்தத் தொகையை அவர் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு: ஈ.வி.கே.எஸ் ஆ ஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த அவதூறு வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூன் 10ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காசநோய் மருத்துவர் அறிவொளி மரணத்தில் அமைச்சருக்கு தொடர்பு என ஈவிகேஎஸ் பேசியிருந்தார். ஈவிகேஎஸ் பேச்சு தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளது என விஜயபாஸ்கர் வழக்கு தாக்கல் செய்தார்.

நியூயார்க் குற்றவியல் நீதிபதியாகப் பொறுப்பேற்றார் சென்னைப் பெண் ராஜராஜேஸ்வரி

நியூயார்க், ஏப்.28- சென்னையில் பிறந்து தனது 16ஆவது வயதில் அமெரிக்காவுக்கு சென்ற ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். இதன் மூலம் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நீதிபதியாகப் பதவி ஏற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் அடைந்துள்ளார்.

வளர்ப்பு நாய்களாம்…: ஆந்திர தெலங்கானா மு தல்வர்கள் குடுமிப்பிடிச் சண்டை

ஹைதராபாத்: வளர்ப்பு நாய்களை விட்டுச் சென்றுள்ளார் சந்திரபாபு நாயுடு என்று கூறியுள்ளார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சர்ச்சைப் பேச்சு செகந்திராபாத்தில் நடைபெற்ற தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிப் பொதுக் கூட்டத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நம் பக்கத்தில் இருக்கும் ஒரு முதல்வர் கிருக்கிடு நாயுடு, மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தவர். பெற்ற தாய்க்கே சோறுபோடாதவர்கள், சித்திக்கு தங்க வளையல் வாங்கித் தருவதாகக் கூறுவது போல உள்ளது அவரது வாக்குறுதிகள். தெலங்கானாவில் அவரது வளர்ப்பு நாய்கள் சில உள்ளன. அவை நம்மைப் பார்த்து குரைக்கின்றன என்று பேசியுள்ளார்.

நிலநடுக்கத்தால் காத்மாண்டு 10 அடி நகர்ந்த து

காத்மாண்டு: நிலநடுக்கத்தால் நேபாளத் தலைநகர் காத்மாண்டு நகரம், தனது புவித் தளத்திலிருந்து சுமார் 10 அடி நகர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூகம்பம் குறித்து ஆய்வு செய்து வரும் லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நில ஆய்வியல் மைய நிபுணர்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். காத்மாண்டு பகுதியில் ஒலி அலைகளை ஆய்வு செய்த போது, தரைத்தளத்தில் தற்போதுள்ள நிலையிலிருந்து காத்மாண்டு தென்பகுதியில் சுமார் 10 அடி நகர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழக இயற்பியல் துறைப் பேராசிரியர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டின் பூமி தள அடுக்குகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளரையே எதிர்கொள்ள முடியாதவர் எதி ர்க்கட்சித் தலைவரா? : சீமான்

செய்தியாளர் கேள்வியையே எதிர் கொள்ள முடியாத விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவர் என்று ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளை மூடும் வரை நாங்கள் போராடுவோம்… சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானால் மகிழ்ச்சி அடைவேன். செய்தியாளர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாதவர் எப்படி எதிர்க்கட்சி தலைவராக முடியும். எனவே விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவர் என்று ஏற்க முடியாது. 20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்த எதிர்க்கட்சித் தலைவர் ஏன் அனைத்து கட்சியினருடன் பிரதமரை சந்திக்கவில்லை என்றார்.

அஜித் எதையும் வாங்கல: கார் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

ajith75நடிப்பு தவிர அஜித் பைக் மற்றும் கார் ரேஸ் மீது ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இன்று காலை முதலே சமூக வலைத்தளத்தில் அஜித் புதிதாக பி.எம்.டப்ள்யூ ஹைபிரிட் ஐ8 என அழைக்கப்படும் உயர் ரக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார் என்று தகவல்கள் பரவின. காரின் புகைப்படங்களோடு இச்செய்தி வேகமாக பரவியது. இதுகுறித்து அஜித்தின் மேனேஜரிடம் விசாரித்ததில் அதுபோன்ற எந்த காரையும் அஜித் வாங்கவில்லை. அந்த செய்திகள் வெறும் வந்ததிகள் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார். அஜித் தற்போது நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பை சண்டைக்காட்சிகளுடன் ஆரம்பிக்கவிருக்கிறதாம். இச்செய்தி பற்றிய தங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யவும்